இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்

திரு. தெய்வமுத்து (மும்பையில் இருந்து வெளியாகும் Hindu Voice இதழ் ஆசிரியர்) ஆங்கிலத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட கையேடிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில செய்திகள்.

நீங்கள் ஓட்டுப் போடும்முன் சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்..

தங்களது பெண், பிள்ளை, பேரன், பேத்திகள் கோயிலுக்குச் செல்லும் பொழுதோ அல்லது கடைகளுக்குச் செல்லும் பொழுதோ தீவிரவாதிகளால் குண்டடிபட்டு இறந்தால் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி எப்பொழுதாவது சற்று சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? தங்களது பிள்ளைகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ நிர்பந்தத்தின் பேரில் தங்கள் இருப்பிடத்தை மாற்றவேண்டிய அவலத்தைப் பற்றிச் சிந்தித்து பார்த்துள்ளீர்களா? மேலும் அவர்கள் சனாதன தர்மத்திலிருந்து விலகி அந்நிய மதங்களுக்கு, கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டால் என்னவாகும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? இவற்றைப் பற்றி எண்ணும் பொழுது நீங்கள் கதிகலங்வில்லையா? இவை எல்லாம் புகைபோட்ட தீ போல் நடந்துகொண்டுதான் வருகின்றன இது காட்டுத் தீ போல் பரவும்முன் நாம் விழித்துக்கொள்ளவேண்டாமா? உண்மை நிலவரம் என்ன என்பதை சற்று பாருங்கள்!!!

bhajan

 1. 200 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் இந்துக்கள் சனாதன தர்மத்தி்ன்படி பூஜைகள் செய்துகொண்டும் பஜனைகள் கீர்த்தனைகளை பாடிக்கொண்டும் நேர்த்தியான தெய்வீகத் தன்மையுடன் வாழ்ந்தார்கள். இது திருதராட்டிரரின் மனைவி காந்தாரி பிறந்த ஊர் ஆகும். இப்பொழுது இங்கே ஒரு இந்துவும் இல்லை. இன்று இங்கு இருப்பவர்களெல்லாம் அல் கொய்தா, தலிபான் ஆள்கள். ஷரியா சட்டத்தின்படி கண்ணுக்குக் கண், காலுக்கு கால் என்ற பழிபாவச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள்.
 2. 100 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் கராய்ச்சியிலும் (இராமனின் பிள்ளைகளான லவ, குசா வாழ்ந்த இடம்.) இந்துக்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டு சனாதன தர்மத்தின்படி வாழ்ந்துவந்தார்கள். பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கே 24 சதவிகிதம் இந்துக்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் இன்றோ அங்கு 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள். பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், ”இஸ்லாமிக் ரிபபிளிக் ஆப் பாகிஸ்தான்” என்று பிரகடனப்படுத்தியது. ஆனால் இந்தியா, ”இந்து ரிபபிளிக் ஆப் பாரத்” என்று ஏன் பிரகடனபடுத்தவில்லை?
 3. 50 ஆண்டுகளுக்குமுன் காஷ்மீரில் இந்துக்கள் பூஜை செய்துகொண்டும் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டும் நேர்த்தியான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள். இங்கேதான் சைவம் முதன்முதலில் தோன்றியது. அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இன்று பேருக்குகூட ஓர் இந்து இல்லை. நேருவின் தவறான சுயநல அணுகுமுறையால் மிலேசர்கள் ஆக்கிரமிப்பிற்கு நாமே வழிவகுத்துக்கொடுத்தோம். அதனால் இந்துக்கள் எல்லாம் அங்கிருந்து விரட்டப்பட்டு இன்று நம் நாட்டிலேயே அகதிகளாக ஜம்முவிலும் டெல்லியிலும் அவதிப்படுகிறார்கள்.
 4. வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிஸோராம், மணிப்பூர் எல்லாம் கிருஸ்துவநாடாக மாற்றப்பட்டுவிட்டன அஸ்ஸாமிலும் மேற்கு வங்காளத்திலும் பங்களாதேசத்திலிருந்து கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை அளித்து ரேஷன் அட்டையையும் கொடுத்து வருகிறது நமது அரசு
 5. தெற்கே கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் கிருஸ்துவர்களின் ஆக்கிரமிப்பு தீவிரம் அடைந்துவருகிறது. இதைப்போல் ஆந்திராவிலும் ஒரிஸாவிலும் கிருஸ்துவ ஆக்கிரமிப்பு அதிகரித்துவருகிறது. கேரளாவில் இஸ்லாமியர்களின் ஆதீக்கம் வலுவடைந்து வருகிறது.

இந்தச் சரித்திரத் தொடர் நிகழ்வுகளைப் பார்க்கையில் இன்னும் 50 ஆண்டுகளில் நம்முடைய பிள்ளைகளும் பேரபிள்ளைகளும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்யவும் பஜனை கீர்த்தனைகள் பாடவும் அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே. இந்த நாடு ஒரு ஜனநாயக நாடாக மதச்சார்பற்ற நாடாக இருக்குமா என்பதும் சந்தேகமே. நமது குழந்தைகளுக்கு சுதந்திரமாக எண்ணங்களை வெளிப்படுத்த முடியுமா என்பதும் சந்தேகமே. யாதார்த்தத்தில் இதுவே நாம் இன்று கண்எதிரே காண்கின்ற அவலங்களாகும். மேலும் தீவிரவாத ஒருமத சமூகச்சேர்க்கை கொண்ட மக்கள் மாநிலங்களை ஆக்கிரமித்து வந்துகொண்டிருப்பது இதை மேலும் உறுதிசெய்கிறது.

இந்துக்களின் வாழ்வாதாரமான பாரதத்தின் எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கேட்பாற் இல்லாமல் குறுகிக்கொண்டே வருகிறது. உலகில் 130 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் இவர்கள் 57 இஸ்லாமிய நாடுகளில் பரவியுள்ளார்கள். அதைப்போல் 200 கோடி கிருஸ்துவர்கள் 150 கிருஸ்துவநாடுகளில் பரவியுள்ளார்கள். ஆனால் 90 கோடி இந்துக்களுக்கோ இருப்பது ஒரேநாடு- பாரதம்தான். ஆனால் அப்படிச் சொந்தம் கொண்டாடமுடியாத அவலநிலைமையை செக்யூலரிஸம் என்ற போலி வேஷத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் தலைவர்கள் இந்துக்களை நாடு இல்லாத அநாதைகளாக்க, பேயாய் அலைந்துகொண்டீருக்கிறார்கள்.

இப்படிபட்ட பாரம்பரியத்தையா நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு விட்டுச்செல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்?  நாம் எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்து நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்கவேண்டும். நமது சவால்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும்முன் நமது நாட்டின் வரலாற்றைச் சற்று பின்நோக்கிப்[ பார்க்கவேண்டும்.

பாரதம் முனிவர்களும் ரிஷிகளும் வாழ்ந்த பூமி. இந்தப் புண்ணிய பூமியில்தான் பல கடவுள் அவதாரங்களும் ஞானிகளும் தோன்றினர்; ராமர், கிருஷ்ணர், மாஹாவீரர், புத்தர், ஆதிசங்கரர், குருநானக் போன்றோர். ஆதனால்தான் பாரதம் தெய்வபூமி, புண்ணியபூமி என்று அழைக்கப்படுகிறது. இது நமது தாய்நாடு; அவளை ’பாரதமாதா’ என்று போற்றி வணங்குகிறோம்.

bharatha-matha-durgaநமது நாடு 1000 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர் கிருஸ்துவர்களால் ஆளுமைபட்டு இருந்தபோதிலும் பாரதம் இந்து நாடாகத்தான் இருந்தது. உலகச் சரித்திரத்திலேயே இவ்வாறு 1000 ஆண்டுகளுக்குமேல் அடிமைப்பட்டு பின் புத்துயிர் பெற்ற நாடு நமது பாரதம்தான். இங்கே எண்ணற்ற ஜாதி, மொழி, இன வேறுபாடுகள் இருந்தபோதிலும் நாம் பிழைத்து நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் நமது தெய்வீகக் கலாசாரமும் பண்பாடுகளுமேயாகும். இங்கு ஆன்மீகமும் அரசியலும் தொன்றுதொட்டு இணையாகவே கடைபிடிக்கப்பட்டதுதான். இந்த உண்மையேதான் (பல வேற்றுமையில் ஒற்றுமை என்ற) இந்துத்துவம் ஆகும்.. நாம் எந்த பூஜைகள் செய்தாலும் முதலில் சங்கல்பம் செய்கிறோம் அப்பொழுது நாம் சொல்லும் முதல் மந்திரம் ”பாரத வருஷே பரதகண்டே ஜம்புதீவீபே” என்று இந்தப் புண்ணியபூமியை முதலில் வணங்குகிறோம். எனவே பாரதம் இந்துத்துவம் என்ற பிணைப்பு இருந்தால்தான் ஸ்திரத் தன்மையுடன் இருக்கமுடியும். இந்துத்துவம் என்பது மனிதநேயத்தின் மொத்த உருவகமே. வேறு எந்த மதக் கோட்பாடுகளிலும் இல்லாதது இந்துத்துவம்; அதுவே தர்மம்; அதுவே சத்தியம்; அதுவே மனித நேயம். இன்றும் இந்த இந்துத்துவ பிணைப்புதான் நம்நாடு ஜனநாயக, மதச்சார்பற்ற நாடாகப் பிழைத்து இருப்பதற்கு வழிவகுத்துள்ளது.

ஆனால் தற்சமயம் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. அந்நியமத ஆதிக்க சக்திகளாலும் தேச ஒற்றுமையைக் குலைக்கும் போலிமதச்சார்பின்மை அரசியல் தலைவர்களாலும் பொறுப்பற்ற பத்திரிகைகள் தொலைகாட்சிகளாலும் சீரழிந்து அதர்மம் தலைவிரித்து நாட்டை பாடாய்ப்படுத்திவருகிறது. எனவே இந்துக்கள் ஒற்றுமையுடன் தங்களை குருஷேத்திர யுத்தத்திற்குக் காலம்தாழ்த்தாது தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். மீண்டும் ’வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பும் நேரம் நெருங்கிவிட்டது.

இன்று பாரதம் ஆறு எம கிங்கரர்களிடம் சிக்கித் தவிக்கிறது– முல்லா, மிஷினரி, மார்க்ஸிஸ்ட், மெக்காலே, மீடியா, மெய்னோ (Mulla, Missionary, Marxists, Mecaulayists, Media & Maino). இவர்களுக்கு எள்ளளவும் பாரதத்தின்மீது பற்று கிடையாது. இவர்கள் நமது காலாசாரத்தைப் பற்றியோ, நாகரிகப் பண்பாடுகள் பற்றியோ சிறிதளவும் அக்கறை இல்லாதவர்கள். இவர்களை ஒழித்துக் கட்டாதவரையில் அமைதி என்பது பாரதத்திற்கு இல்லை.  நான் முல்லா, மிஷினரி என்று சொன்னது தேசப்பற்று உள்ள முஸ்லீமையோ கிருஸ்துவனையோ அல்ல. இவர்கள் தேசப்பற்றுடன் முல்லாவுக்கும் மிஷினரிகளுக்கும் செவிசாய்க்காமல் இருப்பது ஒன்றே ஒற்றுமையை வளர்க்கும்.


முல்லா [எமகிங்கரன் நம்பர் -1]

chief-mullahமுல்லாவோ அல்லது முல்வியோ தங்களதுபிடியிலிருந்து இஸ்லாமியர்கள் விலகாமல் இருப்பதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தினம் தினம் ஃபத்வாக்கள் அறிவிப்பதை ஒரு மாற்றம் இல்லாத கொள்கையாகக் கொண்டுள்ளார்கள். இதன் தீவிரம் இஸ்லாமிய நாடுகளில் மிகவும் அதிகம். மத சார்பற்ற பாரதத்திலும் நீதிமன்றத்தைப் புறக்கணித்து தங்களது ஷரியாச் சட்டத்தை நிலைநிறுத்த முயலுகிறார்கள். (UPA) அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் ஓர் உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) பதிவுசெய்து முல்லாக்களின் ஃபத்வா, சாதாரண சட்டங்களில் தலையிடுதல் கூடாது என்று தீர்ப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால் தீர்ப்பு அளித்த நீதீமன்றமோ பல சமயங்களில் அதை மீறிச் செயல்படுகிறது.

உதாரணமாக கேரளாவில் 12 எம்.எல்.ஏ கள் மாநில அவையில் அல்லாவின் பேரால் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். இதற்கு ஒரு தனிநபர் கேராளாவின் உயர்நீதி மன்றத்தில் இது இந்தியச் சட்டப்படி தவறு என்று முறையிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம் இதைத் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே அவர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். உச்சநீதி மன்றமும் கடவுளும் அல்லாவும் ஒன்றுதான் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆனால் முல்லாக்களோ பல முறை கடவுளும் அல்லாவும் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார்கள். (அதாவது கடவுள் என்று கூறினால் அல்லாவைத் தவிர மற்ற கடவுள்கள் உள்ளார் என்று ஏற்கவேண்டும்). இது எப்படி இருக்கின்றது என்றால் ஒருவன் தன்னைத் தானே அயோக்கியன் என்று வெளிப்படுத்தியும் அவனுக்கு நன்நடத்தை சான்றிதழ் அளிப்பதுபோல் ஆகும்.

மேலும் ஒருமுறை அலகாபாத் உயர்தீதி மன்றத்தில் ஸ்ரீவஸ்தா என்ற நீதிபதி ஒரு தீர்ப்பைக் கூறுகையில் ”ஜாதி மத இன வேறுபாடு இல்லாது எல்லோரும் இந்தியச் சட்டம் 51எ படி கீதையில் கூறியுள்ள தர்ம நெறிக்கும கட்டுப்பட்டவர்கள்,” என்று கூறினார். உடனே இவ்வாறு கூறுவது தவறு என்று சட்ட அமைச்சர் பரத்வாஜ் உச்சநீதிபதி காரே போன்றோர் வாதிட்டார்கள். தங்கள் அல்லா, தங்கள் கர்த்தர் மட்டும்தான் கடவுள்; மற்றவை போலி என்று கூறும் குரானும் பைபிளும் தர்ம சாஸ்திரம் ஆகுமா?

மேலும் இந்த முல்லாக்களின் ஃபத்வாக்கள் பல சமயங்களில் இஸ்லாமியக் குடும்ப வாழ்வையே அழித்துவிடுகிறது. கணவன் மனைவியை அல்ப காரணங்களுக்கா விசாரணையே இல்லாமல் பிரிப்பது மிகவும் கொடிய பாவம் ஆகும். இதனால் அவர்களின் குழந்தைகளின் வாழ்கை பாதிக்கப்படுகிறது. மேலும் சிலர் தாசி தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இவை எல்லாவற்றையும் கண்கூடாகப் பார்த்தும் அவர்கள் ஷரியா சட்டப்படி ஃபத்வா அளிப்பதை நிறுத்தவில்லை.

முல்லாக்கள் எப்பொழுதுமே தங்கள் இனத்து மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் பின்தங்கி இருப்பவர்களாகவும் இருப்பதையே விரும்புவார்கள். அப்பொழுதுதான் அவர்கள் அறியாமையாலும் இயலாமையாலும் தாங்கள் வெளிப்படுத்தும் ஃபத்வாக்களுக்கு செவிசாய்ப்பார்கள் என்பதில் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் முன்னேறினால் எதிர் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயம். இது தவிர அடிக்க, ”இஸ்லாம் பெரிய அபாயத்தில் உள்ளது” என்று முழங்குவார்கள்.

இதனால் ஒருவித மரண பயத்தில், ‘மந்திரித்துவிட்ட கோழிபோல்’ கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் கூடி தங்களுக்குக் கீழ்ப்படிந்து இருப்பார்கள். உண்மையிலும் அதுவேதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் சில படித்த இஸ்லாமிய அறிஞர்கள் முல்லாக்களின் ஆதிக்கத்தால் அதை எதிர்த்து மறுத்துவருகிறார்கள்.

மிஷின(ந)ரி [எமகிங்கரன் நம்பர் – 2]

conversionagenda2மிஷினரி என்பவர்களும் சாதாரண கிருஸ்துவர்களும் வேறுபட்டவர்கள். மிஷினரி எப்பொழுதும் மதக் கோட்பாடுகளை வியாபாரம் செய்யும் இயக்கமாகும். அவர்கள் உலகில் எங்கு சென்றாலும் அங்கே வாழும் மக்களது பாரம்பரியக் கலாசாரத்தை உருத் தெரியாமல் கொன்று கர்த்தரின் ராஜ்ஜியத்தை நிறுவுவதே தொழில் ஆகும். டாக்டர்.டேவிட் பிராவ்லே கூற்றுப்படி மிஷினரி என்பது உலகமயமாக்கப்பட்ட மிகப்பெரிய நிறுவனம். அதற்கு பல வழிகளில் டாலர் சொத்துக்கள் முடிவு இன்றி குவிந்து கொண்டே இருக்கும். இதில் உள்ளவர்கள் கத்தோலிக்கர்கள், பிராடெஸ்டன், எவாஞ்சலிக் போன்றவர்கள். இந்தக் குழுக்களுக்கு முழுநேர ஊழியர்கள், பல கிளைக் கழகங்கள் உண்டு. இவர்களது வேலையே மதமாற்ற செய்ய, வேண்டியபணம் கொடுத்தல், சுவிஷேஷப் பிரசங்கங்களை அடிக்கடி கிராமம் கிராமமாகக் கூட்டுதல், மற்ற மதப் புத்தங்களைப் பற்றி கீழ்த்தரமாக விளக்கி பிட் நோட்டிஸ் அடித்து விநியோகம் செய்தல், மீடியா உதவியுடன் தீவிர மதமாற்றத்திற்குத் தேவையான போலி இன, மத, ஜாதி வேற்றுமைகளை பெரிதுபடுத்துதல், எல்லாவிதமான சதிவேலைகளிலும் மறைமுகமாக ஊக்குவித்து அராஜகத்தைத் தூண்டுதல் ஆகியவை ஆகும். இவர்களுடன் போட்டிபோட்டுத் தடுப்பது என்பது ஒரு பெட்டிக்கடைக்காரன் உலக அளவில் தொழில் செய்யும் ஒரு நிறுவனத்துடன் போட்டி போடுவதற்கு இணையாகும். இதில் நமது அரசாங்கமே நேரிடையாகத் தலையிட்டால் அன்றி தீர்வுகாண்பது அரிது. நமது போறாதகாலம்- எரிகிற கொள்ளியில எண்ணையை ஊற்றும் அரசாங்கமாக இருக்கிறது. மொத்தத்தில் இது உலகை ஆக்கிரமிக்க நடத்தப்படும் ‘புனித’ப் போர் ஆகும்.

மார்க்ஸிஸ்ட் [எமகிங்கரன் – நம்பர் 3]

communism

மார்க்ஸிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட்– இவர்கள் காரல் மார்க்ஸ் பெற்ற தத்துப் பிள்ளைகள். அவர், ”மதம் என்பது மயக்கத்தை ஏற்படுத்தும் ஒரு போதைப்பொருள்” என்றார். இவர்கள் எல்லோரும் பொதுவாகவே நாத்திகர்கள் என்று கூறிக்கொள்வார்கள் அதுவும் இந்து மதத்தை மட்டும் தாக்குவார்கள். மற்ற மதக்  கடவுள்கள் உண்மையில் இல்லை என்று இதுவரையில் சொன்னதில்லை. இவர்களுடைய குருமார்கள் சீனாவிலும் ரஷ்யாவிலும் இருக்கிறார்கள். இவர்கள் பாரதம் முழுவதும் ஓர் ஒருங்கிணைந்த தேசம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களது எண்ணம்- பாரதம் பல மாநிலங்களின் கூட்டுச் சேர்க்கை; அது ரஷ்யாவைப் போல் பிரிந்து பிரிந்து ஆண்டாலும் தவறு இல்லை. இவர்கள் காஷ்மீரம் பற்றிய முடிவை அந்த மக்களிடமே விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் ஆனால் அதே மாதிரி தீபெத் விஷயத்தில் கூற மறுக்கிறார்கள். (ஏன் என்றால் தீபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது). இவர்கள் பிரிட்டிஷ்காரனுக்கு சாமரம் வீசிக்கொண்டு, சுதந்திரமே வேண்டாம் என்றுகூறியவர்கள். காந்தியையும் சுபாஷ் சந்திர போஸையும் ஜெயபிரகாஷ் நாராயணனையும் ‘வெள்ளையனே வெளியேறு!’ என்ற போராட்டத்தையும் எதிர்த்தவர்கள். இந்திய சீன யுத்தத்தின் போது சீனாவை ஆதரித்த தேசத் துரோகிகள். சி.பி.எம். என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாரதக் கிளையாகும்.

ஆனால் இன்று உலகம் பூராகவும் கம்யூனிஸம் குடைசாய்ந்துவிட்டது. பாரதத்தில் இந்தக் கூட்டம் சிறிதளவில் இருந்தாலும் பல தகாத கூட்டணிச் சேர்க்கையால் குழப்பங்கள் விளைவிப்பதையும் ஸ்திர தன்மையைக் குலைப்பதிலுமே என்றும் குறியாய் இருப்பார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதோ மதச்சார்பின்மை மீதோ நம்பிக்கை கிடையாது.

இவர்கள் தங்களது ஆட்சியை வலுப்படுத்திக்கொள்ள பங்ளாதேசத்திலிருந்து அத்துமீறி நுழைந்த 3 கோடி இஸ்லாமியர்களை வரவேற்று அவர்களுக்கு ஓட்டுரிமையும் ரேஷன் அட்டையையும் அளித்துள்ளார்கள். மாவோவிஸ்ட் நக்ஸல்பாரிகள் இவர்களின் ஆயுதப் படை ஆகும். ஆனால் இவர்களின் ஆட்டம் இன்று வெகுவாக அடங்கிவிட்டது. இவர்களையும் மிஷிநரிகளையும் நாட்டைவிட்டுத் துரத்துவது இன்றியமையாத கடமையாகும்.

மீடியா [எமகிங்கரன் நம்பர் – 4]

மீடியா என்றால் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும். இதில் எல்லா ஆங்கிலப் பத்திரிகைளும் அந்நியநாட்டிற்கு மட்டுமே சாதகமாகத் தொண்டூழியம் செய்கின்றன. முஸ்லீம், கிருஸ்துவ பெரும் பணக்கார மாஃபியா கும்பல்கள்தான் இதில் பெரும் பங்குதாரர்கள். சில பத்திரிகைகளில் சோனியாவுக்கும் பங்கு உண்டு. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நாட்டின் முதுகெலும்பு; நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், ரகசியங்களைக் காப்பதற்கும் அதற்குப் பெரும்பங்கு உண்டு. இவ்வாறு அந்நியப் பங்கீட்டை பாரதம் தவிர வேறு எந்த நாடும் அனுமதித்ததில்லை. இதனால் நம்நாட்டுப் பொருளாதாரம் உயருமா அல்லது தொழில் கட்டுமான வழித்தடங்கள் அதிகரிக்குமா?  பாரதத்தில் என்ன நல்லது நடந்தாலும் அவர்கள் கண்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு சிறு தவறு நிகழ்ந்தால் அதை ஊதிப் பெரியதாக்கி உலகம் பூராவும் செய்திகளைப் பரப்பும். பாரதம் பெரும் கலவரங்கள் நடக்கும் நாடு; இங்கே எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்; இங்கே தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை இல்லை… என்றெல்லாம் மறைமுகமாகக் கூறி நம் நாட்டின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதே இதன் நோக்கம் ஆகும்.

karan-thapar-a-devils-advocate‘தி இந்து’ பத்திரிகையின் ‘ராம்’ கம்யூனிஸ்ட் கட்சியின் நிரந்தர உறுப்பினர். சீனாவிற்கு அடிக்கடி விஜயம் செய்வார். சீனாவிற்குச் சாதகமான செய்திகளை, தன் பத்திரிகை மூலம் பரப்புவார். கே.பி.எஸ்.கில் கூற்றி்ன்படி சில பத்திரிகைகள் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவை. (தெகல்கா, கம்யூனலிஸம், காம்பாட் போன்ற பத்திரிகைகள்). கரன் தாபர் என்ற பத்திரிகை ஆசிரியர் மோடியை எலிமிநேட் (கொலை) செய்தாலும் தவறு இல்லை என்கிறார். இந்துக்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டால் மௌனம் சாதிப்பது; அதுவே இஸ்லாமியருக்கோ கிருஸ்துவர்களுக்கோ நேர்ந்தால் செய்திகளைத் திரித்து பெரிதுபடுத்துவது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் கலவரம் நடந்து சிலர் இறந்தால் அதை இனப்படுகொலைகள் நிகழ்ந்துவிட்டன என்றும் அதைப்போல் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இனப்படுகொலைகள் நிகழ்ந்தாலும் அதை சிறிய கலவரம் என்றும் சித்தரிக்கும். எனவே நாம் மீடியாவில் அந்நிய முதலீடு செய்வதை முதலில் தடை செய்யவேண்டும்.

மெக்காலே [எமகிங்கரன் நம்பர் – 5]

macaulayமெகாலேயின் கல்வித் திட்டம்தான் இன்றுவரையில் நடைமுறையில் உள்ளது. அவரின் குறிக்கோள்- ஆங்கிலேயர்களுக்கு ஓர் உன்னதமான ஆங்கிலம் கற்ற மத்தியஸ்தர்கள் (Mediators) தேவை. அவர்கள் நிறத்தில் இந்தியன் போல் இருந்தாலும் அவன் சொல்லிலும் செயலிலும் எண்ணங்களிலும் நடத்தைகளிலும் ஆங்கிலேயனைப்போல் இருக்கவேண்டும் என்பதே ஆகும். அதில் அவர் பெரும் வெற்றியையும் கண்டார். பல அறிவுஜீவிகள் உற்பத்தி ஆனார்கள். எப்படி? வெறும் உடலால் இந்தியன்; மற்ற எல்லா நடவடிக்கைகளிலும் ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக இருத்தல். இப்படிப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இன்று கம்யூனிஸ்ட்களில் பலரும் காங்கிரஸில் பலரும் மனிதஉரிமைக் கழகங்களில் பலரும் சரித்திர ஆகிரியர்களில் பலரும் பத்திரிகை ஆசிரியர்களில் பலரும் நாட்டை அந்நியனுக்கு விலைபேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் போலி மதச்சார்பின்மை பேசிக்கொண்டும் சிறுபான்மையினரைத் தூண்டிவிட்டுக்கொண்டும் நாட்டின் அமைதியினைக் குலைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்து மதம், இந்துக்கள் என்றாலே எட்டிக்காயாகக் கசக்கும். எல்லா தேசவிரோத சக்திகளுக்கும் துணைபோகத் தயங்கமாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் சுயநலப் பச்சோந்திக் கூட்டம். இவர்களின் வாரிசுகளும் இதையே தொடராமல் தடுத்து நிறுத்துவது பாரத இறையாண்மைக்கு மிகவும் அவசியம்.

மெய்னோ [எமகிங்கரன் நம்பர் – 6]

யார் இந்த மெய்னோ?  அன்டோனியா மெய்னோ. இவர் ஒரு ரோம் கத்தோலிக்க கிருஸ்துவர். இத்தாலிய நாட்டில் பிறந்த இவர் தற்போது சோனியா காந்தி என்று பெயர் பெற்றுள்ளார். இவருக்கு இந்தியாவைப் பற்றிய எந்தச் சரித்திரமும் தெரியாது. அவர்தான் இன்று கொல்லைப்புறக் கதவு வழியாக நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். இவருக்குக் கடுகளவும் இந்து தர்மத்தின் மீதோ இந்துக் காலாசாரத்தி்ன் மீதோ மரியாதை கிடையாது. பதவி ஆசை பிடித்த காங்கிரஸ்காரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சாலாம் அடித்து முடிசூடா பாரத ராணிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

sonia-gandhi1

எதற்காக காங்கிரஸ்காரர்கள் வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை இங்கு இறக்குமதி செய்யவேண்டும்?  இங்கே படித்த, தேசப்பற்று உள்ள தலைவர்கள் ஒருவர்கூட இல்லையா?  ஒரு லண்டன் பாரில் எடுபிடியாக பணிசெய்து கொண்டிருந்த ஒரு பெண் இன்று முக்கியமான உலகத் தலைவர்களுள் ஒருவராகிவிட்டார் என்று 2004 லண்டனின் கார்டியன் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிடுகிறது. அவர் பள்ளிப்படிப்பைகூட முடிக்கவில்லை சேர்ந்தார்போல் சுயமாக சில வரிகள்கூட பேசத்தெரியாது. இருந்தும் மீடியாக்களின் பரபரப்பினால் திறைமைசாலி போல அரசியல் மேடைகளில் வலம் வருகிறார். பழைய லோக் சபா சபாநாயகர் பி.எ.சங்மா காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் வெளிப்படையாகவே, “உங்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது,” என்றார். இவரும் சரத்பாவாரும் சோனியாவின் வருகை பிடிக்காததால் காங்கிரஸிலிருந்து வெளிவந்து என்.சி.பி. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்கள். பின்பு பதவிமோகத்தால் தன்மானம் இழந்து அவர்களுடன் கூட்டுவைத்துள்ளார்கள். இவர் ராஜீவை மணந்தபின்பும் 18 வருடங்களுக்கும் மேலாக இந்திய பிரஜா உரிமையைப் பெறவில்லை ஆனாலும் சட்டத்தை மீறி டெல்லி ஓட்டுப் பட்டியலில் இடம்பெற்றார்.

sonia-gandhi2

இவர் தேசப்பற்று இல்லாதவர்; ‘வந்தே மாதரம்’ நூறாவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வெளிப்படையாவே மறுத்தார். இது ஒரு காங்கிரஸ்காரனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. ஆனால் போப் ஜான்பால் மரணத்திற்கு இங்கு விடுமுறை அறிவிக்கிறார். காசு கொடுத்து, கட்டாய மதமாற்றம் செய்த கிரஹாம் ஸ்டேன் அவர்களது மனைவி கிலாடி ஸ்டேனுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுக்கிறார். எதற்கு? அப்பாவி மக்களைத் தூண்டி காசு கொடுத்து மதமாற்றம் செய்து மத நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்கு!!! ‘பென்னி இன்’ என்றொரு மதபோதகர். அவர்மேல் வெளிநாட்டில் எண்ணற்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. அவருக்கு பெங்களுரில் ராணுவ விமானத்தள மைதானத்தில் மோசடி மதப்பிரசாரம் செய்ய சோனியாவின் வற்புறுத்தலால் அனுமதி கொடுத்தார்கள்.

சோனியாவைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கிருஸ்துவர்களும் நாட்டுப்பற்று இல்லாத சில இஸ்லாமியர்களும்தான். அம்பிகா சோனி, ஆஸ்கர் பெர்நான்டஸ், அந்தோனி, மார்கெரிட் ஆல்வா என்று ஒரு பெரும் தலையாட்டிக் கூட்டத்தையே ஏற்படுத்தியுள்ளார். ‘வால்சன் தம்பு’ என்ற இந்து வெறுப்பாளி (NCERTs) தலைவர் ஜான் தயாள் (National Integration committee) கன்சன் எலியா என்ற இந்து வெறுப்பாளர் (UN & US) காங்கிரஸில் (looking into the matters related to cast discrimination in India) வேண்டும் என்றே திட்டம் தீட்டி இந்து மடாதிபதிகள் மேலும் இந்துக் கோயில்கள் மேலும் களங்கம் விளைவித்து வருகிறார்கள். சாமி ராம் தேவ், காஞ்சி சங்கராசாரியார், சத்திய சாயிபாபா ஆஸ்ரம், பாபு சாமி லஷ்மணாநந்தா, சாமி நித்யானந்தா, ரவிசங்கர், மருவத்தூர் அடிகளார் மேலும் சபரிமலை, திருப்பதி, ஸ்ரீரங்கம், அமர்நாத் போன்ற கோயில்களிலும் சர்ச்சயைக் கிளப்புகிறார்கள்.

200 ஆண்டுகள் போராடி வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு, அல்பத்தனமாக ஒரு வெள்ளைக்காரியின் காலடியில் நாட்டைக் கொடுத்திருப்பது கூனிக் குருகி அவமானப்படவேண்டிய செயலே ஆகும். மகாத்மா காந்தி, ‘ராம ராஜ்ஜியத்தை’ உருவாக்கவேண்டும் என்றார். ஆனால் அந்த இராமாயணத்துக் கூனி போல் பாரதத்தில் நுழைந்த பூதகி போல் மெய்னோ, ‘ரோம் ராஜ்ஜியத்தை’ இங்கு நிறுவ சதிவேலை செய்துகொண்டிருக்கிறார். அவரையும் அவரது வாரிசுகளையும் நாடு கடத்தினால்தான் நாடு உய்யும்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

45 மறுமொழிகள் இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்

 1. SAKTHI KANNAN M on January 26, 2011 at 7:58 am

  தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தருமமே மறுபடி வெல்லும்.

  சில தடைகளை தாண்டி நிச்சயம் நம் சனாதன தர்மம் வெல்லும்

 2. reality on January 26, 2011 at 8:12 am

  எமகிங்கரர்கள் அறவாழித் தலைவன் எம தர்ம ராஜனின் ஆட்கள் என்பதனால், கட்டுரையில் கூறப்பட்டவர்களை, அந்நிய அட்-ஊழியக்காரர்கள்
  என்றே குறிப்பிடவேண்டும் இவை எல்லாமே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக் கொள்ளைக் கட்சிகளில் இருப்பாதால் காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு வியாதி, தீவிர வியாதி. .

 3. கந்தர்வன் on January 26, 2011 at 9:45 am

  சூப்பர் கட்டுரை. இதை அப்படியே நான்கு பக்கத் தாளில் அச்சடித்து பிரச்சாரம் செய்யலாம்.

  reality,

  நீங்கள் சொல்வது மிகச் சரியே. கட உபநிஷதம் தொடக்கத்தில் உள்ளது யம தர்மராஜரின் அறிவுரை வாக்கு. இவர் பிரம்ம ஞானியாக இருப்பதால் தேசத் துரோக சக்திகளை இவருக்கு ஒப்பிடுவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை.

  யஹோவா/அல்லா இவர்களின் துஷ்ட சேனைகள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.

 4. navom on January 26, 2011 at 1:52 pm

  யோவ் எழுத்தாளரே இப்படி கஷ்டப்பட்டு ஒரு பட்சமாக எழுதி உன் நிலைபாட்டை நிலை நிறுத்த முயற்சித்துள்ள நீர் கொஞ்சம் ஜாதி, மதம் ஒழிய பாடுபட்டால் உம்மை இந்திய திரு நாட்டின் பிரதமராக்கி நாங்கள் மகிழ்ந்திருப்போமே.?

 5. RV on January 26, 2011 at 5:18 pm

  // பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், ”இஸ்லாமிக் ரிபபிளிக் ஆப் பாகிஸ்தான்” என்று பிரகடனப்படுத்தியது. ஆனால் இந்தியா, ”இந்து ரிபபிளிக் ஆப் பாரத்” என்று ஏன் பிரகடனபடுத்தவில்லை? // நல்ல கேள்வி. இன்னும் சில கேள்விகள். துச்சாதனன் திரவுபதியை துகிலுரிந்தான். போரில் வென்ற பிறகாவது பீமன் ஏன் பானுமதியை துகிலயுரியவில்லை? தலித்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டார்கள். ஏன் பிராமணர்கள், பிள்ளைமார்கள், கவுண்டர்கள், வன்னியர்கள்… இப்போது தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படவேண்டும் என்று சட்டம் போடவில்லை? குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரமா? எது சரியோ அதை செய்ய வேண்டும், அடுத்தவன் சொரிந்துகொண்டால் நானும் சொறிந்துகொள்கிறேன் என்று கிளம்பக்கூடாது. சரி அப்படி அடுத்த நாடு செய்வதைத்தான் நாமும் செய்ய வேண்டும் என்று வைத்துக்கொண்டாலும் பின்பற்ற பாகிஸ்தான்தானா கிடைத்தது? அமெரிக்கா மதசார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தி இருக்கிறதே, ஏன் இந்தியா அப்படி செய்யக்கூடாது?

  // மேலும் ஒருமுறை அலகாபாத் உயர்தீதி மன்றத்தில் ஸ்ரீவஸ்தா என்ற நீதிபதி ஒரு தீர்ப்பைக் கூறுகையில் ”ஜாதி மத இன வேறுபாடு இல்லாது எல்லோரும் இந்தியச் சட்டம் 51எ படி கீதையில் கூறியுள்ள தர்ம நெறிக்கும கட்டுப்பட்டவர்கள்,” என்று கூறினார். உடனே இவ்வாறு கூறுவது தவறு என்று சட்ட அமைச்சர் பரத்வாஜ் உச்சநீதிபதி காரே போன்றோர் வாதிட்டார்கள். தங்கள் அல்லா, தங்கள் கர்த்தர் மட்டும்தான் கடவுள்; மற்றவை போலி என்று கூறும் குரானும் பைபிளும் தர்ம சாஸ்திரம் ஆகுமா? // குரானும் பைபிளும் சொன்னபடிதான் எல்லோரும் நடக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி தீர்ப்பில் சொன்னால் அது சட்டப்படி நியாயப்படி தவறுதான். அப்படி ஒரு நீதிபதி சொல்லி அதை உச்ச நீதிமன்றமும் சட்ட அமைச்சரும் கண்டிக்காவிட்டால் நானும் உங்களுடன் சேர்ந்து பொங்க வேண்டியதுதான். ஒரு முல்லாவும் மிஷனரியும் பௌராநிகரும் இப்படி சொல்வது சட்டப்படி அவர்கள் உரிமை. ஏன் சார் இப்படி ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள்?

  உங்களுக்கு சொல்ல விஷயம் இருக்கிறது. ungaL கவலைகளில் ஓரளவு அர்த்தம் இருக்கிறது. ஆனால் பதிவு பூராவும் இப்படி நிறைய திரிபுகள், வாதங்கள் இருப்பது உங்கள் கருத்தை ஒரு சின்ன வட்டத்துக்கு மேல் வெளியே கொண்டு போக உதவாது. ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் இந்த கட்டுரையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 6. snkm on January 26, 2011 at 6:14 pm

  நன்றி! ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும்!
  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
  நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!
  இதை புரிந்து கொள்ள வேண்டும்!
  வருகின்ற தேர்தல்களில் அனைவரும் ஓட்டு போட வேண்டும்!
  அனைவரின் வாக்குகளும் பதிவானாலே கட்சிகளுக்கு பயம் வரும்!
  வாழ்க பாரதம்! நம்மை நாமே இகழ்வதா! இதைத் தானே எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள்! விழிப்புடன் இருக்க வேண்டும்!
  நன்றி!

 7. ஜடாயு on January 26, 2011 at 10:52 pm

  RV
  26 January 2011 at 5:18 pm

  // உங்களுக்கு சொல்ல விஷயம் இருக்கிறது. ungaL கவலைகளில் ஓரளவு அர்த்தம் இருக்கிறது. ஆனால் பதிவு பூராவும் இப்படி நிறைய திரிபுகள், வாதங்கள் இருப்பது உங்கள் கருத்தை ஒரு சின்ன வட்டத்துக்கு மேல் வெளியே கொண்டு போக உதவாது. ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் இந்த கட்டுரையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? //

  அன்புள்ள ஆர்.வி,

  இந்தக் கட்டுரை ஹிந்து வாய்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் பிரசார pamphletன் மொழியாக்கம் என்பதைக் கவனித்திருப்பீர்கள். எனவே அதற்கேயான தொனியில், மொழியில் தான் அது இருக்கும்.. மிகக் கூர்மையான, தர்க்க பூர்வமான வாதங்களை அதில் எதிர்பார்க்க முடியாது.

  ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த பிரசார பிரசுரம் முன்வைக்கும் கருத்தாங்கள், பிரசினைகள் அடிப்படையில் நியாயமானவை என்ற கருத்து எனக்கும், அரவிந்தனுக்கும், ஏன் உங்களுக்குமே கூட உண்டு என்று நினைக்கிறேன்.

  உலகின் பல பகுதிகளில் வாழ்கின்ற இந்து சமூகங்கள் தேய்ந்து அழிந்து வருவது வரலாற்று உண்மை. இந்து தர்மத்தின் தாயகமான பாரதத்திற்கு அந்தப் பண்பாட்டை, அதைக் கடைப்பிடிக்கும் சமூகத்தை காப்பாற்றும், பேணும் தார்மீக கடமை இருக்கிறது என்ற வாதம் சரியானது – மதச்சார்பின்மை என்ற போர்வையில் இதை இந்திய அரசியல் அமைப்புகள் தட்டிக் கழிக்க முடியாது, கூடவும் கூடாது. உபநிஷதங்களையும், ஆயுர்வேதத்தையும், கம்பராமாயணத்தையும், கோயில்களையும், நாக வழிபாட்டுப் புனித காடுகளையும் இந்திய அரசும், சமூகமும் தானே காத்து, வளர்க்க வேண்டும்? – இவற்றைக் காக்க அமரிக்க, அரேபிய, ஆப்பிரிக்க அரசுகளிடமா போய் முறையிட முடியும்? இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்து தர்மம் ஏதோ பத்தோடு பதினொன்றாக உள்ள ஒரு மதம் அல்ல – இந்தியப் பண்பாட்டின் ஜீவநாடி இந்து தர்மம். இதை மறைக்கப் பார்க்கும் செக்யுலர் பாசாங்குகளைத் தான் பிரசுரம் சாடுகிறது.. சில இடங்களில் அப்பட்டமாக இருக்கிறது, politically correct பிரயோகங்களை செய்திருக்கலாம்..

  நீங்கள் கம்யூனிச, இஸ்லாமிய, திராவிட இயக்க, கடும்-கிறிஸ்தவ பிரசார பிரசுரிங்களைக் காண நேர்ந்தால், அதில் அப்பட்டமான பாசிசமும், வெறுப்புணர்வுமே பொங்குவதைக் காண்பீர்கள். ஒப்பீட்டில் இந்த பிரசுரம் ஜனநாயக, இந்திய-தேசிய பண்பாட்டு உணர்வுடன் தான் எழுதப் பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

 8. களிமிகு கணபதி on January 27, 2011 at 1:07 pm

  RV,

  //….அமெரிக்கா மதசார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தி இருக்கிறதே, ஏன் இந்தியா அப்படி செய்யக்கூடாது? …//

  வெறும் அறிக்கையால் என்ன ஆகிவிடப்போகிறது ஆர்.வி சார்?

  கத்தோலிக்கர்களும், ப்ராட்டஸ்டண்டுகளும் அதிகம் இருக்கும் அமெரிக்காவில் இந்த இரண்டு குழுமங்களுக்கு இடையே சண்டை வரக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிக்கையாகவே நடைமுறையில் இது இருக்கிறது. (ஆனால், அரசமைப்பில் செயல்படுதலில் ப்ராட்டஸ்டண்டுகளுக்குத்தான் செல்வாக்கு அதிகம். கத்தோலிக்கர்கள் கம்மிதான்.)

  உண்மையில், அமெரிக்காவின் Founding Fathers என்று சொல்லப்படுபவர்களில் சிலர் கிறுத்துவ மதத்தைக் கொடூரமானது என்றும், தடுக்க வேண்டியதும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த மதத்தைப் பின்பற்றிவிடும் அரசாக அது இருக்ககூடாது என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். (வேறு சிலர் இது ஆபிரகாமிய ஆண்டவரின் ஆட்சிதான் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.)

  ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டுமானால் அடிப்படைத் தகுதியாக இருப்பது அவர் கிறுத்துவராக இருக்க வேண்டும் என்பது.

  ஏன், செனட் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால்கூட அவர் கிறுத்துவராக இருந்தாக வேண்டும்.

  அது ரிபப்ளிக்கன் கட்சியாக இருந்தாலும் சரி, டெமாக்ரெட் கட்சியாக இருந்தாலும் சரி.

  ஆபிரகாமிய ஆண்டவராகிய ஏசுவின் பெயரால்தான் அங்கு எல்லா இடங்களிலும் உறுதிமொழிகள் எடுக்கப்படுகின்றன. டாலர்களில்கூட “In God we Trust” என்றுதான் சொல்லுகிறார்கள்.

  நடைமுறையில் செக்யூலரான நாடு என்று எதுவும் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கம்யூனிச நாடுகளில் கம்யூனிசமே மதமாக இருக்கிறது.

  பாக்கிஸ்தான் தன்னை இசுலாமிய நாடு என்று அறிவித்தது கெட்டது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். அதனால், அவர்கள் கெட்டது செய்தால் நாமும் கெட்டது செய்ய வேண்டுமா என்று கேட்கிறீர்கள்.

  ஆனால், ஒரு இசுலாமியரைக் கேட்டால் அத்தகைய அறிவிப்பு நல்லது என்றுதான் சொல்லுவார். உங்களது ஒப்பீடு தவறு என்று சொல்லுவார். அவர் மனம் வேதனைப்படவும் கூடும்.

  தங்களது நாட்டை இந்து நாடு என்று சொல்ல இந்துக்களே வெட்கப்பட்டால், ஒரு இந்து நாடு என்பதே பன்மைத்தன்மையுடைய, பல மதங்களுக்கும் சமமான இடம் தருகிற நாடு என்ற உண்மையைச் சொல்ல தயக்கம் கொண்டால், அந்த வெட்கத்திற்கும் தயக்கத்திற்கும் காரணங்கள் என்ன?

  இந்தக் கேள்வியைத்தான் மதிப்பிற்குரிய தெய்வமுத்து அவர்கள் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்விக்கான பதில் என்ன? மீண்டும் அந்தக் கேள்வியை இங்கு இடுகிறேன்:

  எதனால் இந்தியாவை ஒரு பன்மைத்தன்மை பின்பற்றும் நாடு என்று அறிவிக்காமல், செக்யூலர் நாடு என்று அறிவிக்க வேண்டும்?

  //…குரானும் பைபிளும் சொன்னபடிதான் எல்லோரும் நடக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி தீர்ப்பில் சொன்னால் அது சட்டப்படி நியாயப்படி தவறுதான். அப்படி ஒரு நீதிபதி சொல்லி அதை உச்ச நீதிமன்றமும் சட்ட அமைச்சரும் கண்டிக்காவிட்டால் நானும் உங்களுடன் சேர்ந்து பொங்க வேண்டியதுதான். ஒரு முல்லாவும் மிஷனரியும் பௌராநிகரும் இப்படி சொல்வது சட்டப்படி அவர்கள் உரிமை. ஏன் சார் இப்படி ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள்?…//

  சார், சார். என்ன சார் இது? எப்போதுமே மிகக் கூர்மையான அவதானிப்பு செய்யும் நீங்கள் இப்படி சறுக்கி விட்டீர்களே.

  கட்டுரை குறை சொல்லுவது சட்ட அமைச்சரை. அந்த சட்ட அமைச்சர் நீதிபதியைக் கண்டித்து இருக்கிறார். அங்கனம் கண்டித்தது தவறு என்கிறது கட்டுரை.

  அப்படி என்ன தவறை அந்த நீதிபதி செய்துவிட்டார்?

  ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது என்று இந்தியச் சட்டம் (constitution) சொல்லுகிறது என்று கீதையை மேற்கோள் காட்டிச் தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி. அப்படிச் சொல்லுவது தவறு என்று கண்டிக்கிறார் சட்ட அமைச்சர் பரத்வாஜ். அதாவது, ஜாதி மத இன வேறுபாடுகள் இல்லை என்று நீதிபதி சொல்லக்கூடாது என்கிறார் அவர். இத்தகைய வேறுபாடுகள் பார்கக்கூடாது என்று கீதை சொல்லுவதையும் சொல்லக்கூடாது என்கிறார்.

  அதையே கட்டுரையாசிரியர் கேள்விகேட்கிறார். ஒரு சட்ட அமைச்சர் மத சாதி இன வேறுபாடுகள் உண்டு என்று சொன்னால், அத்தகைய கருத்தை முன்வைக்கும் பைபிளும், குரானும் நீதிமன்றம் பின்பற்றவேண்டிய சாத்திரமாக ஆகிவிட்டதா? என்று அவர் கேட்கிறார்.

  மிகக் கூர்மையான, தர்க்க பூர்வமான வாதங்கள் கொண்ட கட்டுரையாகத்தான் இந்தக் கட்டுரை எனக்குப் படுகிறது. எந்தத் திரிபுகளும் இதில் இல்லை.

 9. அன்புள்ள ஆர்வி

  தங்கள் கருத்துகளை கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

  அநீ

 10. Malarmannan on January 28, 2011 at 9:35 am

  ஸ்ரீமத் பகவத் கீதையை ஒழுங்காகவும் முழுமையாகவும் படித்துப் பொருள் காணாதவர்கள்தாம் அதை பைபிளுக்கும் குரானுக்கும் ஒப்பிடுவார்கள். கீதையில் முடிவுரையாக ஞானாசிரியன் கண்ணபிரான், நான் உனக்குக் கூற வேண்டியனவற்றையெல்லாம் கூறிவிட்டேன், இனி நீ ஆராய்ந்து எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று முடிவு எடுப்பாயாக என்று அர்ச்சுனனுக்கு அவனது பகுத்தறிவை உபயோகிக்கும் உரிமையினை அளிக்கிறான். பைபிளோ குரானோ இப்படி வாய்ப்பளிப்பதாகக் கூற முடியுமா? கீதை பல விஷயங்களை விளக்குவதாக உள்ளது. திணிப்பதாக இல்லை. அனைத்து சமயத்தினருமே அதனைத் தமது வழிகாட்டியாகக் கொள்வதே அறிவுடைமை. ஹிந்துக்கள் மட்டுமே இதுவரை அதனைத் தமது வழிகாட்டு நூலாக ஏற்றுள்ளனர். அதற்காக கீதையை ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு மட்டுமே உரித்தான நூல் எனக் கூற இயலாது. வேதங்களையும் உபநிடதங்களையும் கீதையையும் ஆழ்ந்து கற்றவன் அவை மானிட சமுதாயம் அனைத்திற்கும் பொதுவானவை என்பதை உணர்வான். கீதையிலிருந்து ஒரு பெளராணிகர் கருத்துகளை எடுத்துக் கூறுகிறார் என்பதற்காக அதன் மீது ஒரு குறிப்பிட்ட மதத்தின் முத்திரையைக் குத்திவிட முடியாது. பாகவதம் மற்றும் புராணங்கள் வேறு. அவற்றுடன் இவற்றைக் குழப்பிக் கொள்ளலாகாது.

  கீதையையும் மனுஸ்மிருதியையும் அடிப்படையாகக் கொண்டு நமக்கான சட்டங்களைப் புதிதாக உருவாக்காமல் ஆங்கிலேயனின் பீனல் கோடையே கட்டிக்கொண்டு அழுவது நமது சுய மரியாதைக்கே அவமானம். மனுஸ்மிருதி என்றதும் அறியாமையின் காரணமாக உடனே கூச்சல் கிளம்பும். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உயர்நீதிமன்ற வளாக முகப்பில் மனுவின் சிலை உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று கூச்சலிட்டார்கள். ஆனால் ஏன் அகற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டபொழுது பதில் சொல்ல இயலவில்லை. முன்னுக்குப்பின் முரணாக உள்ள பகுதிகளை எல்லாம் சுட்டிக்காட்டி மூக்குடைபட்டார்கள். ஆனால் வெறும் சிலை வைத்துப் பிரயோசனம் இல்லை. நமது தொன்மையான தேசத்தின் பாரம்பரியம், மரபு, கலாசாரம், நீதி பரிபாலனம் ஆகியவற்றின் அடிப்படையில் காலத்திற்கும் ஏற்பப் பொருத்தமான முறையில் சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். நமக்கென்று பிரத்தியேகமாக உள்ள அடையாளத்தை நாம் இழந்துவிடலாகாது. இந்த அடையாளம் நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள செல்வம். அதன் மதிப்பை உணராமல் தூக்கி எறிவது அறியாமை. முக்கியமாக கீதையை விமர்சிப்பதாக இருந்தால் அதனை முழ்ழுவதும் படித்துத் தேற வேண்டும்.
  -மலர்மன்னன்

 11. karunaga on January 28, 2011 at 11:43 am

  அவரையும் அவரது வாரிசுகளையும் நாடு கடத்தினால்தான் நாடு உய்யும்.
  sabassh

 12. Malarmannan on January 28, 2011 at 11:50 am

  பாகிஸ்தான் நம் நாட்டைப்பற்றிக் குறிப்பிடுகையில் ஹிந்துஸ்தான் என்றுதான் குறிப்பிடுகிறது. வட மாநிலங்களில் அனைவர் வாயிலும் மிகவும் இயல்பாக வருவது ஹிந்துஸ்தான் என்பதுதான். இக்பால் எழுதிய ஸாரே ஜஹான்ஸே அச்சாவில்கூட ஹிந்துஸ்தான் ஹமாரா என்றுதான் உள்ளது. இதற்கு முகமதியரைத் திருப்தி செய்ய வேண்டும் எனபதற்காக ஒரு தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை செய்கிறோம். வந்தே மாதரம் கூட முழுமையாகப் பாடப்படுவதில்லை (அதில் ஹிந்துஸ்தான் என்கிற பத்ப் பிரயோகம் இல்லை என்பது வேறு விஷயம்!). ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிடெட், ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் என்றெல்லாம் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மிகவும் இயல்பாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்குக் காரணம் ந்ம் நாடு ஹிந்துஸ்தானம் என்ற பிரக்ஞை அனைவருக்கும் இருப்பதால்தான். நான் சிறுவனாக இருக்கையில், ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் நாடு இருந்தபோது படித்த வரலாற்றுப் பாடப் புத்தகத்தின் தலைப்பு ஹிந்து தேச சரித்திரம் (ஹிஸ்டரி ஆஃப் ஹிந்துஸ்தான்) என்பதுதான். மேலும் ஹிந்துஸ்தானம் ஸுன்னி-ஷியா- அஹமதியா உள்ளிட்ட சகல மதப் பிரிவினரும் எவ்விதத் தொல்லையுமின்றி அவரவர் மத நம்பிக்கையை அனுசரிக்க வாய்ப்பளித்து வந்துள்ள பிரதேசம்தான். தன் மதத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தொழுகை நடத்தும் நேரம் பார்த்தும், இறுதிச் சடங்குகள் நடைபெறும் சமயத்திலும் குண்டு வீசி மக்களைக் கொன்று குவிக்கும் அனாசாரம் இங்கு இல்லை. ஆகையால் அதிகாரப் பூர்வமாகவே நமது நாட்டை ஹிந்துஸ்தானம் என்றோ ஹிந்து ராஷ்ட்ரம் என்றோ அழைப்பதில் ஒரு குறையும் இல்லை. அண்டையில் உள்ள சிலோன் ஸ்ரீ லங்கா என்று தன் பெயரை மாற்றிக் கொள்ளவும் அதேபோல் பர்மா மியன்மர் என்று பெயர் மாற்றிக்கொள்ளவும் தயங்கவில்லை. ஆஃப்ரிக்க நாடுகளுக்குக்கூட இந்த சுய மரியாதை உள்ளது. நமக்குத்தான் சொரணை சிறிதும் இல்லை. காலனியப் பெயரான இந்தியாவை வைத்துக் கொண்டு கட்டி அழுகிறோம். ஹிந்துஸ்தானத்திலிருந்து செயற்கையாக மத அடிப்படையில் உருவான ஒரு தேசம் தன் மதச் சார்பினை பிரகடனம் செய்துங்கூட, நமக்கு சொரணை வரவில்லையே என்று வருத்தப்பட்டால பொருத்த மற்ற உதாரணங்களையா சொல்லிகொண்டிருப்பது ( யார் தவறு இழைக்க்கிறார்களோ அவர்களை தண்டிப்பதுதான் நமது மரபு. ஆகையால் வீமன் துச்சாசனன் மார்பைப் பிளந்து சபதம் நிறைவு செய்தான். அவன் எதற்காக பானுமதியின் சேலையை இழுக்க வேண்டும்? அவனுக்கு என்ன புத்திக் கோளாறா? )? முதலில் தங்களுக்கு எனத் தனி நாடு வேண்டும் என்று முஸ்லிம் லீக் ஏன் வலியுறுத்தியது? பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் கீழ் ஆளப்படுவது முகமதியரின் சுய மரியாதைக்கு இழுக்கு என்று வாதாடியது. ஆனால் தனி நாடு பெற்றபின் இருக்கிற முகமதியர்களையெல்லாம் வாருங்கள் சுய மரியாதையுடன் வாழ்வோம் என்று அழைத்துச் செல்லாமல் சாமர்த்தியமாக அவர்களைக் கை கழுவியது! இப்போது இங்கே தங்கிவிட்ட முகமதியர் சகல உரிமைகளுடன் வாழ்வது மட்டுமின்றி, பெரும்பான்மையினரான ஹிந்துக்களைவிடக் கூடுதலான உரிமைகளுடன் மசூதி வழியாக விநாயகர் ஊர்வலம் விடாதே என்று சொல்கிற அளவுக்கு அதிகாரத்துடன் வாழ்கிறார்கள். அப்படியிருக்க ஹிந்துஸ்தான் என்றோ ஹிந்து ராஷ்ட்ரம் என்றோ அதிகாரப் பூர்வமாக அழைப்பதால் என்ன சங்கடம் வந்துவிடப் போகிறது?
  -மலர்மன்னன்

 13. க்ருஷ்ணகுமார் on January 28, 2011 at 4:04 pm

  Sri Malarmannan, I agree with almost whatever you wrote above with the exception of Mohd Iqbal. Sorry to write in English, but the urdu stanzas could well be written in firangi script.

  True that Iqbal wrote in Tarana-e-hind

  Mazhab nahin sikata apas me bair rakna
  Hindi hai hum vatan hai hindostan hamara

  Yunano misr o ruma sab mit gaye jahan se
  Ab tak magar hai banki namo nishan hamara

  Meaning

  Religion does not teach us to bear ill will among ourselves. We are all hindvi and our land is Hindostan from where Greece, Rome and Egypt ( who came to rule) have vanished but our attributes remained as it is today.

  The same chittah named Iqbal changed the spots on his skin, when he came in to contact with the draculian Md.Ali jinaah and latter wrote Tarana-e-milli wherein he wrote

  Chin – o – arab hamara hindostan hamara
  Muslim hai hum vatan hai sara jahan hamara

  Meaning

  Central Asia (china) is ours. Arabia is ours. Hindostan is ours. We are muslims. The whole world is ours.

 14. vedamgopal on January 28, 2011 at 6:36 pm

  ஹலோ ஒரு நிமிடம்
  மறுபடியும் ஒருமுறை விழித்தெழுக !
  மரணமா எய்தினை – மீளவும் நீ
  தரையினில் புத்துயிர் பெற்றுவர ?
  சற்றே உறங்கினாய் அவ்வளவுதான் ! – பாரதி

  இந்தியர்கள் மீண்டும் ஒரு சுதேசி போராட்டம் துவங்கவேண்டும். நாட்டை சுரண்டும் இந்த குள்ளநரி கூட்டத்தை ஒட்டுமொத்தமாக விரட்ட நமக்கு அனுகுண்டும் துப்பாக்கிகளும் வேண்டாம். அளப்பரிய ஆற்றல் கொண்ட நம் மனம் தான் நம் ஆயுதம்.

  ”ஆனந்த பவன்” என்று ஒரு வீட்டை கொடுத்து ஒட்டு மொத்த நாட்டையே வாங்கிவிட்ட நேரு குடும்பம் இனி அரசியலுக்கு வரக்கூடாது. இந்தியாவின் அடையாளத்தை தொலைத்தவர் நேரு.

  இன்று காஷ்மீர் பற்றி எரிகிறது என்றால் அதற்கு காரணம் நேரு. ஜனநாயக படுகொலை செய்து எமர்ஜென்சி கொண்டு வந்தது நேருவின் மகள். சுதந்திர இந்தியாவில் மன்னராட்சி மலர செய்தது நேருவின் குடும்பம். முடியட்டும் இந்த ஆட்சி நமக்கு. தலை நிமிர்ந்தால் வாலும் நிமிரும். ஊழல் இன்று ஆயிரமாயிரம் கோடிகளை தாண்டிவிட்டது. இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு சோனியா அளித்திருக்கும் பரிசு – நமது பாதுகாப்பு ரகசியங்கள்.

  நாட்டுபற்று இல்லாத இத்தாலியரான சோனியாவின் அனைத்து அரசியல் தேர்வுகளம் கறை படிந்த மனிதர்கள்தான். 100 வருட வரலாறு கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று சோனியாவின் காலடியில் !

  எங்கே நம் இளைய சமுதாயம் !!!! சட்ட கல்லூரியில் சில்லறை விஷயங்களுக்கு போராட்டம் நடத்தும் மாணவர்கள் இப்போது அமைதியாக இருப்பது ஏன்?

  எங்கோ ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதையும் சட்ட கல்லூரி தொடங்குவதையும் எதிர்க்கும் மாணவ செல்வங்களே – உங்கள் ஆற்றல் எல்லையற்றது. ஏவப்பட்டுபோராடிய நீங்கள் இன்று சிந்தித்து நமது நாட்டிற்க்காக போராடுங்கள்.

  வாரிசு அரசியல் கூடாது இலவசங்கள் கூடாது.
  மதுவில் நமது குடும்பங்கள் ழூழ்கும் அவலம் கூடவே கூடாது.
  கொள்ளை கூட்டத்தை விரட்டுவோம் ! மீட்போம் நமது இந்தியாவை !

  சுதேசி இதழில் வந்த தலையங்கம் – பத்மினி ரவிச்சந்திரன்.

 15. Malarmannan on January 28, 2011 at 8:36 pm

  ஸ்ரீ க்ருஷ்ணகுமார்,
  //இக்பால் எழுதிய ஸாரே ஜஹான்ஸே அச்சாவில்கூட ஹிந்துஸ்தான் ஹமாரா என்றுதான் உள்ளது. இதற்கு முகமதியரைத் திருப்தி செய்ய வேண்டும் எனபதற்காக ஒரு தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை செய்கிறோம். வந்தே மாதரம் கூட முழுமையாகப் பாடப்படுவதில்லை//

  இக்பால் சமாசாரம் தெரிந்ததுதானே! அவர் முன்பு எழுதியதை நாம் ஏன் வைத்துகொண்டிருக்க வேண்டும், ஹிந்துஸ்தான் என்று அவர் குறிப்பிடுகிறார் என்பதற்காக என்பதைச் சுட்டுவதற்காகத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பே துக்ளக்கில் இது பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். தொடக்கத்தில் ஹிந்துஸ்தான் ஹமாரா என்று தேசப் பற்றுடன் எழுதிய இக்பால் பிறகு ஆதிபத்திய மத வெறி அகங்காரத்துடன் ஹிந்துஸ்தான் எமக்குச் சொந்தம் என்று பாடுகிறவராக மாறிப்போனார் என்கிற அர்த்தத்தில்! ஆகவே நீங்கள் என் கருத்துடன் மாறுபடவில்லை.
  -மலர்மன்னன்

 16. மலர்மன்னன் அய்யா,

  //கீதையையும் மனுஸ்மிருதியையும் அடிப்படையாகக் கொண்டு நமக்கான சட்டங்களைப் புதிதாக உருவாக்காமல் ஆங்கிலேயனின் பீனல் கோடையே கட்டிக்கொண்டு அழுவது நமது சுய மரியாதைக்கே அவமானம்.//

  நமது அரசியல் நிர்ணய சட்டம் நிச்சயமாக மனு ஸ்மிருதியைக் காட்டிலும் மானுட அறத்தில் மேலோங்கி நிற்பதாகவே கருதுகிறேன். அடிப்படை மானுடத்தன்மையற்றதான பல விஷயங்களை கொண்டிருக்கும் மனு ஸ்மிருதியை -வரலாற்று ஆவணம் என்பதற்கு அப்பால் எவ்வித மரியாதையும் அளிக்காமல்- தூக்கி எறிவதே பாரத சுயமரியாதைக்கு சரியானதாக அமையும்

 17. ரிஷி on January 28, 2011 at 9:32 pm

  Sri Krishnakumar!
  Rome has come back to rule us!

 18. RV on January 29, 2011 at 7:22 am

  ஜடாயு, இந்த விவாதத்தை இங்கே தொடரும் நிலை இல்லை என்றே கருதுகிறேன். இருந்தாலும் உங்களை ஆட்டத்துக்கு கூப்பிட்டுவிட்டு பாதியில் போகவும் முடியவில்லை. விலாவாரியாக எழுதாவிட்டால் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  இது யாரோ எழுதியதின் மொழிபெயர்ப்பு, அதில் கூர்மையான வாதங்களை எதிர்பார்க்க முடியாது என்கிறீர்கள். ஏன் தமிழ் ஹிந்து தள வாசகர்களின் அறிவை இவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? கேள்வியே கூர்மையான வாதங்கள் இல்லாத ஒரு கட்டுரையை தமிழ் ஹிந்து தளத்தில் ஏன் பதிக்கிறீர்கள் என்பதுதானே? அது மொழிபெயர்ப்பாக இருந்தால் என்ன ஸ்பெஷல்? நேரடியாக எழுதப்பட்டிருந்தால்தான் இங்கே வரும் கட்டுரைகளுக்கு தமிழ் ஹிந்து தளம் பொறுப்பேற்குமா? என்ன சார் இப்படி சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்?

  // நீங்கள் கம்யூனிச, இஸ்லாமிய, திராவிட இயக்க, கடும்-கிறிஸ்தவ பிரசார பிரசுரிங்களைக் காண நேர்ந்தால், அதில் அப்பட்டமான பாசிசமும், வெறுப்புணர்வுமே பொங்குவதைக் காண்பீர்கள். ஒப்பீட்டில் இந்த பிரசுரம் ஜனநாயக, இந்திய-தேசிய பண்பாட்டு உணர்வுடன் தான் எழுதப் பட்டிருக்கிறது என்பதை உணரலாம். // மன்னிக்கவும் சார், என் பிரச்சினையே அவர்களின் methodology-யை ஏன் இந்த தளமும் பின்பற்ற முயற்சிக்கிறது என்பதுதான். இந்த தளத்தில் உங்களுக்கு என்ன பங்கு என்று எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இந்த தளத்தின் முக்கியஸ்தரான நீங்களே “ஒப்பீட்டளவில்” என்றுதான் எழுத வேண்டி வருகிறது. இந்த கட்டுரையையே எடுத்துக் கொள்ளுங்கள் – பாகிஸ்தான் இஸ்லாமிய அரசியல் சட்டத்தை கடைப்பிடிப்பது சரி என்று இந்த தளத்தின் வாசகர்கள் அனேகமாக சொல்லமாட்டார்கள். ஆனால் இந்தியா ஹிந்து அரசியல் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று பலரும் சொல்வார்கள். பாகிஸ்தானின் வழிமுறை தவறு என்ற புரிதல் இருந்தும் இந்தியா எதற்காக ஒரு ஹிந்து பாகிஸ்தான் ஆக வேண்டும்? இதைத்தான் சார் ஜின்னாவும் முஸ்லிம் லீகும் விரும்பினார்கள், அவர்கள் ஆசையை நிறைவேற்றுவதுதான் தமிழ் ஹிந்து தளமும் விரும்புகிறதா?

  நாட்டில் போலி செக்குலரிசம் மலிந்து கிடக்கிறது. ரம்ஜான் கஞ்சி குடிப்பவர், வள்ளுவர் கோட்டம் கட்டினேன், சிலை வைத்தேன் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர் எல்லாம் ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான் என்று நாக்கூசாமல் கேட்கிறார்கள். கிழிகிழி என்று கிழிக்க ஆயிரம் விஷயம் இருக்கிறது. எதற்காக ஒரு எக்ஸ்ட்ரா மைல் போய் அனாவசிய திரிபு வாதங்கள்? வெறுப்புனர்ச்சிக்கும், அநியாயங்களை எதிர்ப்பதற்கும் இடையில் சின்ன இடைவெளிதான் இருக்கிறது. தமிழ் ஹிந்து தளம் அந்த இடைவெளியைத் தாண்டக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.

  களிமிகு கணபதி, // வெறும் அறிக்கையால் என்ன ஆகிவிடப்போகிறது ஆர்.வி சார்? // இந்த புரிதல் இருக்கும் நீங்கள் ஏன் இந்த கட்டுரை ஆசிரியரை, மொழிபெயர்ப்பாளரை இந்த கேள்வியை – ஹிந்து ராஜ்ஜியம் என்ற வெறும் அறிக்கையால் என்ன ஆகிவிடப்போகிறது வேதம் கோபால் சார்? – கேட்கவில்லை? அடப் போங்க சார்!

  மலர்மன்னன் சார், பேரில் என்ன இருக்கிறது என்கிறார் களிமிகு கணபதி. நீங்கள் ஹிந்துஸ்தான் என்று பேர் வைக்க வேண்டும் என்கிறீர்கள். 🙂 நீங்களே இதையும் சொல்லிவிடுங்கள். பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடு என்று பிரகடனப்படுதியத்தை neengaL ஆதரிக்கிறீர்களா? அதுதான் சரி என்கிறீர்களா?

  // நமது அரசியல் நிர்ணய சட்டம் நிச்சயமாக மனு ஸ்மிருதியைக் காட்டிலும் மானுட அறத்தில் மேலோங்கி நிற்பதாகவே கருதுகிறேன். அடிப்படை மானுடத்தன்மையற்றதான பல விஷயங்களை கொண்டிருக்கும் மனு ஸ்மிருதியை -வரலாற்று ஆவணம் என்பதற்கு அப்பால் எவ்வித மரியாதையும் அளிக்காமல்- தூக்கி எறிவதே பாரத சுயமரியாதைக்கு சரியானதாக அமையும் // அ.நீ. சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.

 19. babu on January 29, 2011 at 8:21 am

  could any one please explain what is the problem in manusmruthi. what it says and what is the purpose it? is it equal to vedhas or geetha.please any one explain it

 20. களிமிகு கணபதி on January 29, 2011 at 8:32 am

  //…களிமிகு கணபதி, // வெறும் அறிக்கையால் என்ன ஆகிவிடப்போகிறது ஆர்.வி சார்? / இந்த புரிதல் இருக்கும் நீங்கள் ஏன் இந்த கட்டுரை ஆசிரியரை, மொழிபெயர்ப்பாளரை இந்த கேள்வியை – ஹிந்து ராஜ்ஜியம் என்ற வெறும் அறிக்கையால் என்ன ஆகிவிடப்போகிறது வேதம் கோபால் சார்? – கேட்கவில்லை? ..//

  RV,

  1.

  சொல்லி இருப்பதில் ஒரு வரி, ஒரு பாராவை மட்டும் பற்றிக்கொண்டு அதையே நீங்கள் பேசுகிறீர்களா அல்லது நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

  முற்றிலும் மதச்சார்பற்ற அரசு என்று எதுவும் நடைமுறையில் கிடையாது என்ற வாதத்திற்காகவே “வெறும் அறிக்கையால் எதுவும் ஆகிவிடாது” என்று சொன்னேன்.

  நீங்கள் “வெறும் அறிக்கையால் எதுவும் ஆகிவிடாது” என்பதை மட்டும் பற்றிக்கொண்டு விட்டீர்கள். நான் சொல்லாத அர்த்தத்தைத் திணிக்கிறீர்கள். 🙂

  உண்மையில், நடைமுறையில் முற்றிலும் மதச்சார்பற்ற அரசு என்று எதுவும் இல்லை எனும்போது, எதற்காக அந்தப் பொய்யைச் சொல்ல வேண்டும்? பன்மைத்தன்மையுள்ள அரசு என்று அறிவித்துவிடலாமே?

  ஏன், பன்மைத்தன்மையே இந்துத்துவம் எனும்போது ஹிந்துஸ்தான் என்றும்கூட அறிவித்துவிடலாமே? அப்படி அறிவிப்பதில் என்ன தயக்கம், அப்படி அறிவிப்பது ஏன் தவறு?

  அதைத்தான், அப்படி அறிவிப்பது ஏன் கூடாது என்ற கேள்விக்கான பதிலைத்தான் மலர்மன்னன் அவர்கள் கேட்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

  அந்தக் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

  2.

  கட்டுரை ஒரு மொழிபெயர்ப்பு என்பதால் அதில் கூர்மையான வாதங்களை எதிர்பார்க்க முடியாது என்று ஜடாயு சொல்லவில்லை. இந்தக் கட்டுரையின் வடிவம் பிரச்சாரத் தன்மை வாய்ந்தது, ஆராயும் தன்மை கொண்டதல்ல. எனவே, ஒரு ஆய்வுக்கட்டுரையின் ஆழத்தையோ வடிவத்தையோ இந்தக் கட்டுரையில் எதிர்பார்க்க முடியாது, ஒரு பிரச்சாரக் கட்டுரையின் வடிவையும், ஆழத்தையும் மட்டுமே அது கொண்டிருக்கும் என்கிறார் அவர். அதே சமயம் இந்தக் கட்டுரை முன்வைக்கும் வாதங்கள் சரியானவை என்பதையும் சொல்லி விட்டார். அவர் எந்த சப்பைக்கட்டும் கொடுக்கவில்லை என்றே எனக்குப் படுகிறது.

  3.

  இந்தக் கட்டுரையாசிரியர் இந்த நாட்டில் இந்துமதப் புத்தகங்களின் அடிப்படையில்தான் சட்டங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி, இதுபோன்ற கட்டுரைகள் போடக்கூடாது என்று சொல்வது நியாயமா?

  4.

  இந்தக் கட்டுரை தெரிவிக்கும் ஆதாரங்கள் தவறு, பொய் என்று நிரூபிக்க முடியுமா?

  5.

  என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்வதே வெறுப்புணர்ச்சி என்று சொல்ல வருகிறீர்களா? என்னை கொலை செய்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள், கற்பழிக்கிறார்கள், அடிமைப்படுத்துகிறார்கள். ஆனாலும், அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்திற்காக அவர்கள் செய்யும் கொடுமைகளைச் சொல்லக்கூடாது, அப்படிச் சொல்லுவது வெறுப்புணர்ச்சி என்று சொல்கிறீர்களா?

  நீங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர். இந்தப் பிரச்சினைகளை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற உங்களது கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. எப்படிச் சொல்லலாம் என்ற ஒரு வடிவை நீங்கள் முன்வைத்தால் புரிந்துகொள்ள உபயோகமாக இருக்கும். அது இல்லாமல் நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

  6.

  இந்துமதம் என்பதே ஒரு ஓப்பன் ஸோர்ஸ் ப்ளாட்ஃபார்ம். இதில் எல்லாவகை கருத்துக்களுக்கும் இடம் உண்டு. இந்தத் தளம் அதில் இருந்து மாறுபடுவது பொறுத்தமாயிராது என்பது ஒரு வாசகனான என் கருத்து.

  இந்துக்களைத் திட்டும் சலாலுதீன் அவர்களின் கமெண்டுகளைக்கூட வெளியிடும் இந்தத் தளத்தின் இந்துத்துவப் பண்புதான் என்னை இந்தத் தளத்திற்கு இழுக்கிறது.

  நல்ல எழுத்துத் திறனும், சிந்தனைத் திறனும் மிக்க ஆர்.வி அவர்கள் இந்து மரபின் நன்மைக்கு என்ன செய்யலாம் என்று ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

  மனிதரையல்ல. அவரது தீய செயல்களையும் தீய சிந்தனைகளையும் தீய பேச்சுக்களையும் மட்டுமே வெறுக்க வேண்டும். அவற்றைச் செய்பவரையல்ல என்பதுதான் சரியான நிலையாக இருக்க முடியும். அப்போதுதான் வெறுப்பில்லாமல் உரையாட முடியும், மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய, பயில வேண்டிய உண்மையே.

 21. Malarmannan on January 29, 2011 at 10:33 am

  மொத்தமாகக் கட்டியெடுத்துத் தலையைச் சுற்றி எறியப்பட வேண்டியது தற்போது நடப்பில் உள்ள நமது அரசியல் சாசனத்தைத்தான். மிகவும் சோதனையான காலகட்டத்தில் அது உருவாக்கப்பட்டதால் சிறுபன்மையினருக்கு இங்கு வாழ்க்கையைத் தொடர நம்பிக்கையூட்ட வேண்டும் என்பதிலேயே கூடுதல் கவனம் இருந்த சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்டது அது. மேலும் சில ப்சகுதிகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் கால அவகாசம் கருதி மசோதாக்கள் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றபப்டுவதுபோல நிறைவேற்றப்பட்டன. மிக முக்கியமான தேசிய கீதத்தேர்வே அறிவிப்புபோல வெளியிடப்பட்டது. தொலை நோக்குப் பார்வையின்றி உருவானது நமது அரசியல் சாசனம். மாற்றமடைந்துள்ள இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எதிர்கால நிலைமைகளையும் கணக்கிட்டு முற்றிலும் புதிதாக ஓர் அரசியல் சாசனம் இயற்றப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

  மனு ஸ்மிருதியை முழுமையாகப் படித்து, அதில் உள்ள முரண்களுக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்து விவரம் அறிந்த ஒருவர் (மனு?) முன்னுக்குப்பின் முரணாக எழுதும் அளவுக்கு அப்பாவியாக இருப்பாரா எனவும் யோசித்து அதன் மீது கருத்துத் தெரிவிப்பதே சரியாக இருக்கும்.

  ஸ்ரீ ஆர்.வி., பாகிஸ்தானின் பிறப்பே முறையற்றது அதன் மறைவே முறையானது என்கிற கருத்து உள்ளவன் நான். பிறப்பே சரியில்லை என்னும் போது அதன் பெயர்ப் பொருத்தம் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்!
  இன்று பாகிஸ்தானைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் முகமதியர் உள்ளதாக ஹிந்துஸ்தானம் இருக்கின்ற நிலையில் நீங்கள்தான் இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும்.

  ஹிந்துஸ்தானம் பற்றி நான் சொல்ல வேண்டிய பதிலை ஸ்ரீ களிமிகு கணபதி என்னைவிட அழகாகச் சொல்லிவிட்டார். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வதற்குமுன் விமர்சனம் செய்வதைத் தவிர்ப்பதே ஆரோக்கியமானது.
  -மலர்மன்னன்

 22. vedamgopal on January 29, 2011 at 12:00 pm

  தீர்கதரிசி ஸ்ரீ காஞ்சி மஹா சுவாமிகள் தெய்வத்தின் குரல் ஏழாவது பகுதியில் ”அரசும் மதமும்” என்ற தலைப்பில் கூறியுள்ள சில செய்திகள் (1947 இல் கூறியது). ஆனால் அரசுக்கு பல தவிற்கமுடியாத காரணங்களால் அனுப்பமுடியவில்லை. பின்பு 1972 இல் தான் பத்திரிகையில் வெளிவந்தது. ஸெக்யூலரிஸம் என்பது அரசாங்கம் எந்த மதத்ததையும் சாராமல் இருப்பதாக அர்தம் கொள்ளப்பட்டிருக்கிறது சரியல்ல. அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மத தொடர்பே அற்று இருப்பதல்ல. மாறாக அரசாங்கம் எந்த மதத்தைமட்டும் சாராமல் எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே என்பதுதான் சரியான பொருள்.
  ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தைமட்டும் சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது எல்லா மதங்களையும் ஏற்ற இறக்க மின்றி சமபாவத்துடன் ஆதரித்து அவையாவும் பரஸ்பர பகையின்றி தழைத்தோங்க உதவி செய்யவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே ஸெக்யூலரிஸம் ஆகும். மேலும் அவர் விளக்கியுள்ள சில தலைப்புகள் –
  1. மத விஷயத்தில் அரசாங்கதின் பங்குகள்- வரம்பு
  2. மத கொள்கைகளுக்கு முரணான சட்டங்கள்
  3. மத கொள்கையை மீறினால் அதிலும் சம நீதி காட்டடவேண்டும்
  4. மக்களின் உள்ள உயர்வில் அரசின் பொறுப்பு (Character building )
  5. அரசின் எல்லைக்கு அப்பாற்பட்ட துறை
  6. எல்லா மதங்களின் பிரிதிநிதிகளையும் கொண்ட சுதந்திரம் பெற்ற தனியமைப்பு
  7. மத தலைவர்கள் அரசியலில் ஈடுபடல் கூடாது
  8. அரசு புரியவேண்டிய மத போஷனை அதனால் அரசுபெறும் லாபம்
  9. இந்தியாவில் சிறுபான்மை பெரும்பான்மை விசித்திர நிலை
  10. மத சுதந்திர உரிமையும் மத மாற்றமும் – பிரசாரம், துஷ்பிரசாரம் தவறான உபாயங்களுக்கு தண்டனை
  ஸெக்யூலரிஸம் இன்று பல நாடுகளில் அறிவிக்கப்பட்டாலும் அந்தந்த நாடுகளில் ” State Religion ” மகாண மதம்” என்ற ஒன்றை சட்டத்தில் சேர்த்துள்ளார்கள். இது பொதுவாக பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதமேயாகும். உதாரணமாக இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ”State Religion ” தான் முக்கியத்துவம். அதை உரிதிபடுத்தும் சில வாசகங்கள் ( God Save the King, Defender of faith, Church of England, in God we trust etc., ). இஸ்லாமிய நாடுகளில் மத சுதந்திரததை பற்றி சொல்ல தேவையில்லை. இதில் வேதனையான விஷயம் உலகில் எல்லா செக்யூலர்நாடுகளில் பெருன்பான்மையினர் சொல்படிதான் சிறபான்மையினர் நடக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் இந்த தலைகீழ் அவலநிலையுள்ளது.
  எனவே சுதந்திர பாரதத்திலும் மிக பெரும்பாலோர் பின்பற்றும் உலகின் எல்லா மதங்களுக்குமே முன்னோடியான இந்து மதத்தை ”State Religion ” என்று அறிவிக்கவேண்டும் என்றார்.
  தமிழ் இந்துவுக்கு ஒர் வேண்டுகோள் – அரசும் மதமும் என்ற தலைப்பில் சுமார் 70 பக்கங்கள் ஸ்ரீ காஞ்சி சுவாமிகள் அளித்துள்ள செய்திளை ஒரு தொடர் கட்டுரையாக தங்களது வலை தளத்தி்ல் வெளியிட வேண்டும்.

 23. Malarmannan on January 29, 2011 at 12:33 pm

  //மனிதரையல்ல. அவரது தீய செயல்களையும் தீய சிந்தனைகளையும் தீய பேச்சுக்களையும் மட்டுமே வெறுக்க வேண்டும். அவற்றைச் செய்பவரையல்ல என்பதுதான் சரியான நிலையாக இருக்க முடியும். அப்போதுதான் வெறுப்பில்லாமல் உரையாட முடியும், மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய, பயில வேண்டிய உண்மையே.-ஸ்ரீ களிமிகு கணபதி

  ஒரு மனிதன் எதன் மூலமாகத் தீய செயல்களையும் சிந்தனைகளையும் பேச்சுக்களையும் வெளியிடுகிறான்? அவனது உடல் மற்றும் புலன்கள், மனப் போக்கு ஆகியவற்றால்தான் அல்லவா? ஆகவே அவனை வெறுக்க வேண்டாம். ஆனால் உரிய முறையில் அவனது உடலை தண்டிப்பது அவசியம்.
  -மலர்மன்னன்

 24. RV on January 30, 2011 at 1:52 am

  களிமிகு கணபதி, நீங்கள் நிறைய விஷயங்களில் முடிவுக்கு வந்த்விட்டீர்கள், பேசுவதே விரயம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் இத்தனை கஷ்டப்பட்டு நீங்கள் எழுதியதை கண்டுகொள்ளாமல் நகர்வதும் சரியில்லை. என்ன செய்வது?

  1. // முற்றிலும் மதச்சார்பற்ற அரசு என்று எதுவும் நடைமுறையில் கிடையாது என்ற வாதத்திற்காகவே “வெறும் அறிக்கையால் எதுவும் ஆகிவிடாது” என்று சொன்னேன். நீங்கள் “வெறும் அறிக்கையால் எதுவும் ஆகிவிடாது” என்பதை மட்டும் பற்றிக்கொண்டு விட்டீர்கள். நான் சொல்லாத அர்த்தத்தைத் திணிக்கிறீர்கள். உண்மையில், நடைமுறையில் முற்றிலும் மதச்சார்பற்ற அரசு என்று எதுவும் இல்லை எனும்போது, எதற்காக அந்தப் பொய்யைச் சொல்ல வேண்டும்? பன்மைத்தன்மையுள்ள அரசு என்று அறிவித்துவிடலாமே? // அதுதான் அறிக்கையால் எதுவும் ஆகப்போவதில்லை, நடைமுறையில் எந்த அரசும் மதச்சார்பர்ரதாக இருக்க முடியாது என்று போன மறுமொழியிலும் சரி, இந்த பாயிண்டிலும் சரி மீண்டும் மீண்டும் விளக்குகிரீர்களே? அந்த விளக்கத்தை ஏன் இந்த கட்டுரையாளருக்கு கொடுக்கவில்லை என்றுதான் கேட்கிறேன். நான் மதசார்பில்லாத அரசு என்ற அறிக்கையால் பயனில்லை என்று கருதுபவனில்லை. நீங்கள்தான் அப்படி நினைப்பவர். நடைமுறையில் அரசு மதசார்பர்ரதாக இல்லை என்ற நிலைதான் என்கிறீர்கள். அப்புறம் ஏன் பயனில்லாத இந்த அறிக்கையைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள் என்று கட்டுரையாலரைக் கேட்க வேண்டியதுதானே?

  இந்தியா என்றாலும் ஹிந்துஸ்தானம் என்றாலும் அஜ்ஜோபுஜ்ஜோஸ்தான் என்றாலும் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை – இந்த மாதிரி பெயர் மாற்றத்தால் செலவாகும் என்ற ஒரு சின்ன தயக்கம் தவிர. உங்கள் பாஷையில் சொன்னால் “பெயர் மாற்றத்தால் எதுவும் ஆகிவிடாது.”

  2. // கட்டுரை ஒரு மொழிபெயர்ப்பு என்பதால் அதில் கூர்மையான வாதங்களை எதிர்பார்க்க முடியாது என்று ஜடாயு சொல்லவில்லை. இந்தக் கட்டுரையின் வடிவம் பிரச்சாரத் தன்மை வாய்ந்தது, ஆராயும் தன்மை கொண்டதல்ல. எனவே, ஒரு ஆய்வுக்கட்டுரையின் ஆழத்தையோ வடிவத்தையோ இந்தக் கட்டுரையில் எதிர்பார்க்க முடியாது, ஒரு பிரச்சாரக் கட்டுரையின் வடிவையும், ஆழத்தையும் மட்டுமே அது கொண்டிருக்கும் என்கிறார் அவர். அதே சமயம் இந்தக் கட்டுரை முன்வைக்கும் வாதங்கள் சரியானவை என்பதையும் சொல்லி விட்டார். அவர் எந்த சப்பைக்கட்டும் கொடுக்கவில்லை என்றே எனக்குப் படுகிறது. // ஜடாயுவின் வார்த்தைகள் – // இந்தக் கட்டுரை ஹிந்து வாய்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் பிரசார pamphletன் மொழியாக்கம் என்பதைக் கவனித்திருப்பீர்கள். எனவே அதற்கேயான தொனியில், மொழியில் தான் அது இருக்கும்.. மிகக் கூர்மையான, தர்க்க பூர்வமான வாதங்களை அதில் எதிர்பார்க்க முடியாது. // நீங்கள் நான் எழுதியதை கவனமாகப் படிக்க விருப்பப்படவில்லை என்றாலும் ஜடாயு எழுதியையாவது படிக்கலாம். அவர்தான் கூர்மையான வாதங்களை எதிர்பார்க்க முடியாது என்று தெளிவாக எழுதி இருக்கிறாரே!

  3. // இந்தக் கட்டுரையாசிரியர் இந்த நாட்டில் இந்துமதப் புத்தகங்களின் அடிப்படையில்தான் சட்டங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி, இதுபோன்ற கட்டுரைகள் போடக்கூடாது என்று சொல்வது நியாயமா? // நானும் அவர் அப்படி சொன்னதாக சொல்லவில்லையே! மலர்மன்னன் மனுஸ்மிருதியைப் பின்பற்றி சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சொன்னதை அ.நீ. ஆட்சேபித்திருக்கிறார், அதை நானும் வழிமொழிகிறேன். இந்த தளத்தில் இந்த மாதிரி கட்டுரைகள் வரக்கூடாது என்று நான் நினைக்க என்ன காரணம் என்பதை என் முதல் மறுமொழியைப் பாருங்கள். நீங்கள் இரண்டு வேறு இடங்களில் சொல்லப்பட்டவற்றை பொருத்திப் பார்த்து குழம்புகிறீர்கள்.

  4. // இந்தக் கட்டுரை தெரிவிக்கும் ஆதாரங்கள் தவறு, பொய் என்று நிரூபிக்க முடியுமா? // neengaL ஆதாரங்கள் என்று எதை சொல்கிறீர்கள்? காந்தாரி காண்டஹார்காரி, லவன் எழுப்பிய நகரம் லாகூர் போன்றவை நம்பிக்கைகள், ஆதாரங்கள் இல்லை. மேலும் நான் “data” என்று கருதக்கூடியவைக்கு அவர் காட்டும் sources பலரும் யார் என்றே எனக்கு தெரியாது. என் பிரச்சினை அவர் ஆதராம் இல்லை, அவர் வாதம். நாம் அனைவரும் “பாரத வர்ஷே பாரத கண்டே” என்று சங்கல்பம் எடுத்துக் கொள்கிறோம், அதனால் பாரத நாடு ஒரு ஹிந்து நாடாகத்தான் இருக்க முடியும் என்றெல்லாம் கேனத்தனமாக பேசுகிறார். இந்த சங்கல்பத்தை என்ன ஒரு முஸ்லிமா சொல்லப் போகிறார்?

  5. // என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்வதே வெறுப்புணர்ச்சி என்று சொல்ல வருகிறீர்களா? என்னை கொலை செய்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள், கற்பழிக்கிறார்கள், அடிமைப்படுத்துகிறார்கள். ஆனாலும், அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்திற்காக அவர்கள் செய்யும் கொடுமைகளைச் சொல்லக்கூடாது, அப்படிச் சொல்லுவது வெறுப்புணர்ச்சி என்று சொல்கிறீர்களா? நீங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர். இந்தப் பிரச்சினைகளை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற உங்களது கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. எப்படிச் சொல்லலாம் என்ற ஒரு வடிவை நீங்கள் முன்வைத்தால் புரிந்துகொள்ள உபயோகமாக இருக்கும். அது இல்லாமல் நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. // உங்கள் சிரமம் புரிகிறது. உண்மையில் இந்த கட்டுரையைப் பார்த்தபோது இவ்வளவு மோசமாக இருக்கிறதே, நாமே எழுதிக் கொடுக்கலாம், ஒரு வாதத்தின் ஆரம்பமாகவாவது இருக்கும் என்றே தோன்றியது. ஒரு இரண்டு வரி வேண்டுமானால்: // பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கே 24 சதவிகிதம் இந்துக்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் இன்றோ அங்கு 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள். பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், ”இஸ்லாமிக் ரிபபிளிக் ஆப் பாகிஸ்தான்” என்று பிரகடனப்படுத்தியது. ஆனால் இந்தியா, ”இந்து ரிபபிளிக் ஆப் பாரத்” என்று ஏன் பிரகடனபடுத்தவில்லை? // என்று எழுதி இருப்பதை நான் இப்படி எழுதி இருப்பேன். – “பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கே 24 சதவிகிதம் இந்துக்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் இன்றோ அங்கு 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள். பிளவுபட்ட இந்தியாவில் அன்றைக்கு x% முஸ்லிம்கள் இருந்தார்கள், இன்று y% இருக்கிறார்கள். இன்றே பல விஷயங்களில் ஓட்டுக்காக சிறுபான்மையினர் விருப்பத்துக்கேற்ப அரசு சட்டத்தை வளைக்கிறது. ஹிந்துக்களின் விகிதாச்சார எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்துகொண்டே போனால் இங்கே அரசு மதசார்பற்ற அரசாக செயல்படுவது கடினம். இந்தியாவும் “இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் இந்தியா” என்று ஆகும் நிலை வரலாம்.”

  6. // இந்துமதம் என்பதே ஒரு ஓப்பன் ஸோர்ஸ் ப்ளாட்ஃபார்ம். இதில் எல்லாவகை கருத்துக்களுக்கும் இடம் உண்டு. இந்தத் தளம் அதில் இருந்து மாறுபடுவது பொறுத்தமாயிராது என்பது ஒரு வாசகனான என் கருத்து. // சில விஷயங்களை (தமிழ் ஹிந்து தளத்தின் செயல்பாடு, நோக்கங்கள்) பேச இது சரியான தளம் இல்லை என்று எனக்கு தெரிகிறது. இந்த தளத்தின் நோக்கங்கள் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த மாதிரி முட்டாள்தனமான வாதங்கள் நிறைந்த கட்டுரை அவர்கள் நோக்கத்துக்கு இடையூறு என்றே கருதுகிறேன்.

  மலர்மன்னன் சார், // ஸ்ரீ ஆர்.வி., பாகிஸ்தானின் பிறப்பே முறையற்றது அதன் மறைவே முறையானது என்கிற கருத்து உள்ளவன் நான். பிறப்பே சரியில்லை என்னும் போது அதன் பெயர்ப் பொருத்தம் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்! இன்று பாகிஸ்தானைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் முகமதியர் உள்ளதாக ஹிந்துஸ்தானம் இருக்கின்ற நிலையில் நீங்கள்தான் இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும். // பாகிஸ்தான் என்ற நாடு உருவானதே தவறு என்கிறீர்கள். (அப்பாடா, சில வ்ஷயங்களிலாவது namakkuL இசைவு இருக்கிறதே!) அது இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆக இருப்பதையும் ஆட்செபிப்பீர்கள் என்று நினைக்கிறன். பாகிஸ்தான் நமக்கு நல்ல முன்னுதாரணம் இல்லை என்பதிலும் namakkuL அனேகமாக இசைவு இருக்கும். அப்புறம் ஏன் பாகிஸ்தான் செய்தது போலவே நாமும் மத சார்புள்ள அரசு என்று அறிவிக்க வேண்டும் என்கிறீர்கள்?

 25. Malarmannan on January 30, 2011 at 10:12 am

  ஸ்ரீ ஆர்.வி., சில அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் பாகிஸ்தான் என்பதாக ஒரு நாடே இருந்ததில்லை. ஐரோப்பாவில் சில புதிய தேசங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டதைப்போல் ஆனால் முற்றிலும் ஒரு குறிப்பிட்ட, சகிப்புத்தன்மையோ, ஆன்மிக முதிர்ச்சியோ இன்றி, ரோமன் கத்தோலிக்கம், கம்யூனிசம்போல் வெறும் அரசியல் ஆதிபத்தியக் குறிக்கோளுடன் அமைந்த ஒரு சமயத்தின் பெயரால் மிகவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட தேசம் அது. மேலும் ஹிந்துக்கள் சார்பில் பேச்சு வார்த்தை நடைபெறாமல் அனைத்து சமயத்தவருக்குமான அரசியல் கட்சி என்று சொல்லப்பட்ட காங்கிரசின் சார்பில் நடத்தப்பட்ட பொருத்தமற்ற பேச்சு வார்த்தையால் உருவான தேசம் அது என்பதால் அதற்கு ஹிந்துக்களின் அங்கீகாரம் இருப்பது சாத்தியம் இல்லை (யோசியுங்கள், இந்தியன் முஸ்லிம் லீக் தனது மதத்தின் அடிப்படையிலும், காங்கிரஸ் அரசியல் கண்ணோடத்துடனும் நடத்திய பேச்சு அது!). ஹிந்துக்களின் விட்டுக்கொடுக்கும் சுபாவத்தால் ஏற்பட்ட இழப்பு அது. மேற்படி கட்டுரையின் ஆசிரியர் பாகிஸ்தான் தன்னை இஸ்லாமியக் குடியரசு என்று அறிவித்துக் கொண்ட பிறகாவ்து ஹிந்து குடியரசு என்று நமது நாட்டை ஏன் அழைத்துக்கொள்ளவிலை என்று கேட்டது ஓர் ஆதங்கத்தில் கேட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறதே தவிர பாகிஸ்தானை நாம் ஏன் பின்பற்றவில்லை என்று கேட்பதான மயிர் பிளக்கும் வேலையை நான் செய்யவில்லை. நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் ஹிந்துஸ்தானத்திற்கு இஸ்லாமிஸ்தான் என்று பெயர் வைத்தால்கூட அதைப் பொருட்படுத்தாதவர் என்பதுபோலப் புலப்படுகிறது. நீங்கள் சொஸ்தமாகப் புலம் பெயர்ந்து வாழ்பவர்.என்பதால் உங்களுக்கு இப்படி எண்ணத் தோன்றுகிறதோ என்னமோ! ஆனால் நல்ல வேளையாக உங்களைப் போல் தாய்நாட்டிற்கு எந்தப் பெயர் இருந்தால் என்ன, அர்த்தமற்ற உளறலாக இருந்தாலும்தான் என்ன என்று கருதுகிறவர்கள் வெகு சிலரே இருக்கக்கூடும். போகிற போக்கைப் பார்த்தால் எமது தாயகத்திலேயே வாழும் எங்களுக்கு எமது தேசத்தை இஸ்லாமிஸ்தான் என்று அழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் வியப்பதற்கில்லை.
  அப்படியொரு நிலை வந்துவிடக் கூடாது என்றுதான் சங்கை ஊதிக்கொண்டே இருக்கிறோம். நீங்கள் எழுதுவதையெல்லாம் பார்த்தால் உங்கள் சொந்த நலன்களைத் தவிர வேறு எதையும் பொருட்படுட்தாதவர் என்றும் வெறும் பொழுது போக்கிற்காக விவாதம் என்ற பெயரில் அரட்டை அடிபபதுபோலவும் உங்களைப்பற்றி ஒரு பிம்பம் தோன்றுமாறுதான் எழுதுகிறீர்கள்! இதுபற்றியும் நீங்கள் யோசிக்க வேண்டும்.

  இறுதியாக- ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெய்ரால் உருவாகிவிட்ட செயற்கை தேசம் தன்னை அந்த மதத்தின் பெயரால் அழைத்து உறுதி செய்துகொள்வதில் வியப்பென்ன? பாகிஸ்தான் கிடைக்கும்வரை மதத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்த ஜின்னா, அது கிடைத்தபின் அது எங்கே மத குருமார்கள் கையில் போய்விடுமொ என்கிற கவலையில் ஒரு பேச்சுக்காக இது அனைவருக்குமான நாடு என்று சொன்னதை ஓர் அரசியல்வாதி தனது சுய நலத்திற்காகப் பேசிய சம்பிரதாயமான முன்னெச்சரிக்கைப் பேச்சு என்றுதான் கொள்ளமுடியும். எனவே அத்வானி பாகிஸ்தான் சென்ற்பொழுது ஜின்னாவின் பேச்சை மேற்கோள் காட்டியது சரியல்ல, அவர் வருகைப் பட்டியலில் வெறும் கையொப்பம் மட்டும் இட்டுவிட்டு வந்திருக்க வேண்டும் என்று அவருக்குக் கடிதம் எழுதினேன்,
  -மலர்மன்னன்

 26. ஆனந்தர் on January 30, 2011 at 3:56 pm

  ஆர்.வி.,

  கலக்கு கலக்கு என்று கலக்கிவிட்டீர்கள். களிமிகு கணபதி இந்நேரம் உங்களது வாதத்திற்குப் பதிலளிக்கத் தெரியாமல் கலங்கிப் போய் ஓடுவது என் மனக்கண்ணில் தெரிகிறது !! 🙂

  கொன்னுட்டீங்க. பின்னிப் பெடலெடுத்துட்டீங்க.

  //….//மனிதரையல்ல. அவரது தீய செயல்களையும் தீய சிந்தனைகளையும் தீய பேச்சுக்களையும் மட்டுமே வெறுக்க வேண்டும். அவற்றைச் செய்பவரையல்ல என்பதுதான் சரியான நிலையாக இருக்க முடியும். அப்போதுதான் வெறுப்பில்லாமல் உரையாட முடியும், மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய, பயில வேண்டிய உண்மையே…//

  ஆமாம். கசாப்பு கஸாபும் மனிதன் தான்.

  அவனது தீய செயல்களையும், தீவிரவாதச் சிந்தனையையும் தண்டிக்க வேண்டும். அவனை வெளியில் விட்டுவிட வேண்டும்.

  காந்தி என்ன செய்திருப்பார்? போப் என்ன செய்தார்?

  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகத் தேவையான தகுதிகள் இருக்கின்றன. 🙂

 27. Keerthi on January 30, 2011 at 6:52 pm

  //
  4. // இந்தக் கட்டுரை தெரிவிக்கும் ஆதாரங்கள் தவறு, பொய் என்று நிரூபிக்க முடியுமா? // neengaL ஆதாரங்கள் என்று எதை சொல்கிறீர்கள்? காந்தாரி காண்டஹார்காரி, லவன் எழுப்பிய நகரம் லாகூர் போன்றவை நம்பிக்கைகள், ஆதாரங்கள் இல்லை….
  //

  இந்த ஆர்வி என்பவரின் [..] மறுமொழிகளைப் படித்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. டூயட் என்கிற படத்தில் ஒரு ஜோக் வரும், நடிகர் செந்தில் பெண்டாட்டி ஓடிப் பொய் விட்டாள் என்று கையிலிருந்த வாட்ச் மோதிரம் எல்லாம் ஒருவரிடம் காட்டிக் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவார். பின் மனதை மாற்றிக் கொண்டு வந்து அந்த வாட்ச் மோதிரத்தைக் கேட்பார் – ஆனால் வாங்கியவர் தரமாட்டார். மத்தியஸ்தம் செய்ய ஒருவரை அழைப்பார்கள் – அவரோ வாட்ச் மோதிரத்தை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டால் “உன் பெண்டாட்டி எப்படி ஓடிப் போனாள்?” என்று அதிலேயே குறியாக இருப்பார்… “ஆமாய்யா, என் பெண்டாட்டி ஓடிப் போய்விட்டாள், அதை விடு, அந்த வாட்ச் மோதிரத்தை வாங்கி வைத்திருக்கிறான், அதை வாங்கிக் கொடுக்கத்தானே உன்னைக் கூப்பிட்டேன்” என்று அழுகை வரும் நிலையில் செந்தில் கேட்பார். அதைப் போலத்தான் இருக்கிறது.

  இந்துக்கள் பெருமளவு வாழ்ந்த பகுதிகளில் இன்று பெயருக்கு கூட இல்லை என்கிற உண்மையை சொன்னால் அதை விடுத்து, வேறு ஒரு வாசகத்தை பிடித்துக் கொண்டு பேசுவது […] – ஒரு இந்து இப்படி பேசுவது தற்கொலைக்கு சமம்.

  [Edited and Published]

 28. sanjay on January 31, 2011 at 3:07 pm

  Take the case of chennai in tamilnadu.

  Many muslim traders in burma bazar in parry’s corner have links with dawood ibrahim.

 29. babu on January 31, 2011 at 3:24 pm

  /////நீங்கள் நான் எழுதியதை கவனமாகப் படிக்க விருப்பப்படவில்லை,,,,,///

  ஆர்வி சார்,
  மேல உள்ள வரிகள் உங்களுடன் விவாதிக்கும் எல்லோரிடமும் நீங்கள் உபயோக்கிரீர்கள்.அதாவது உங்கள் கருத்துக்களை படிக்காமலே பிறர் உங்களுக்கு பதில் எழுதுவதாக குறிப்பிடுகிறீர்கள்.முந்தைய பிற கட்டுரைகளின் உங்களுடைய மறுமொழிகளில் நீங்களே பார்க்கலாம். அது எப்படி உங்கள் கருத்தை மட்டும் படிக்காமல் எல்லாரும் உங்களுக்கு பதில் சொல்கிறார்கள்.
  உங்களின் மற்ற கருத்துகளை பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை
  ////காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகத் தேவையான தகுதிகள் இருக்கின்றன.////
  திரு ஆனந்தர் கூறுவது சரிஎனபடுகிறது முயற்சிக்கவும்.
  வாழ்த்துக்கள்

 30. RV on February 1, 2011 at 12:38 am

  பாபு, நீங்கள் சொல்வது மிகச்சரி. நான் எழுதியதை அடுத்தவர் சரியாக படித்தாரா இல்லையா என்பதற்கும் நானே பொறுப்பு. களிமிகு கணபதி ஜடாயு சொல்லாததை நான் மேற்கோள் காட்டுகிறேன் என்று தவறாக சொன்னாலும் அதை நான் சுட்டிக் காட்டுவது என் தவறே. நான் எழுதியதை அடுத்தவர் கவனமாக ஏன் படிக்கவில்லை என்பதற்கு என்னிடம்தான் விடை இருக்கும். உத்தமம்!

  ஆயிரம் டென்ஷன் நடுவில் உங்கள் மறுமொழியைப் படித்து கொஞ்சம் சிரிக்க முடிந்தது. நன்றி!

 31. க்ருஷ்ணகுமார் on February 3, 2011 at 10:40 am

  ஸ்ரீ மலர்மன்னன், ஸ்ரீ ஆர்வி, நமஸ்தே

  \\\\\\\\\\\இந்தியா என்றாலும் ஹிந்துஸ்தானம் என்றாலும் அஜ்ஜோபுஜ்ஜோஸ்தான் என்றாலும் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை – இந்த மாதிரி பெயர் மாற்றத்தால் செலவாகும் என்ற ஒரு சின்ன தயக்கம் தவிர. உங்கள் பாஷையில் சொன்னால் “பெயர் மாற்றத்தால் எதுவும் ஆகிவிடாது.” \\\\\\\\\\\\

  ஹிந்துஸ்தானத்தை வேறொரு அதுவும் அர்த்தமற்ற ஒரு பெயரால் அழைப்பது தேசத்தின் ப்ரஜைகளுக்கு அறவே ஒப்பாத விஷயம்.அன்ய தேசத்தினர் இப்படியெல்லாம் நினைத்துக்கூட பார்ப்பார்களா!!!!!!!!!

  \\\\\\\\ஸ்ரீ ஆர்.வி., பாகிஸ்தானின் பிறப்பே முறையற்றது அதன் மறைவே முறையானது என்கிற கருத்து உள்ளவன் நான். \\\\\\\\\\\\

  ஸ்ரீ மலர்மன்னன், நல்லோரின் அபிலாஷையை ஏக் மாத்ர சப் கா மாலிக் மறுப்பதுண்டோ? இல்லையல்லவா?

  பாங்க்ளாதேஷ் உதயமான பின் 1971 ல் பரம் பூஜனீய ஸ்ரீ குருஜி கோல்வல்கர் அவர்களிடம் பத்திரிக்கை காரர்கள் கேட்டார்கள், ஐயா, ஒரே மதத்தை ஆதாரமாக வைத்து உருவான பாகிஸ்தான் இன்று இரண்டாக பிளந்துள்ளதே ஆச்சரியமாக இல்லையா?

  குருஜி அவர்கள் பதிலிறுத்தார், ஐயா இவர்கள் கடந்த இருபத்து நான்கு வருஷங்களாக ஒற்றுமையாக எப்படி இருந்தார்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளதே அன்றி இவர்கள் எப்படி பிரிந்தார்கள் என்பது அல்ல என்றாராம்.

  வெறுப்பில் பிறந்த பாகிஸ்தான் வெறுப்பிலேயே பிளந்தது சரித்ரம்.
  இப்போது உள்ளது பாகிஸ்தான் தேய்ந்த baqi sthan.

  சிந்த், பஞ்ஜாப், பலோசிஸ்தான் மற்றும் NWFP மாகாணங்கள் அடங்கிய baqi sthan இன்றும் பரஸ்பர வெறுப்பின் வெடிக்க காத்திருக்கும் எரிமலை.

  பரேல்வி ஸுன்னி முஸல்மானுக்கு தேவ்பந்தி ஸுன்னி முஸல்மான் ஆகாது. வேறு காஜி நிக்காஹ் செய்தால் அது செல்லுபடியாகாது என்று ஃபத்வா.

  ஸுன்னி முஸல்மானுக்கு ஷியா ஆகாது

  இவர்கள் இருவருக்கும் அஹமதியா முஸல்மான் ஆகாது.

  இவர்கள் அனைவருக்கும் ஸூஃபி முஸல்மான் ஆகாது.

  ஆகாது என்றால் வெட்டுப்பழி குத்துப்பழி. ஒருவரை ஒருவர் சுட்டுக்கொன்று தீர்ப்பது. வெடிகுண்டு வைத்து நாசம் செய்வது இத்யாதி.

  இவர்கள் அனைவரையும் தவிர மொஹஜிர்கள். ஹிந்துஸ்தான் பாகிஸ்தான் என்று பட்டுவாடா ஆன பின் தார்-உல்-ஹரப் ஆன ஹிந்துஸ்தானில் இருந்து வெளியேறி நிஜாம்-ஏ-முஸ்தஃபா தார்-உல்-இஸ்லாம் ஆன பாகிஸ்தானுக்கு பெயர்ந்தார்கள் ஹிந்துஸ்தானத்து முஸல்மான்கள் பலர். பெரும் பகுதியினர் மேற்கு பாகிஸ்தானுக்கும் பீஹாரி முஸல்மான்கள் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கும் பெயர்ந்தனர். ஸிந்தி, பஞ்ஜாபி,மூல்தானி மற்றும் பலோசி ஹிந்துக்கள் ஹிந்துஸ்தானத்திற்கு வந்தனர்.

  மொஹஜிர் என்றால் அகதி. இங்கே வந்த ஹிந்துக்களை நாம் என்றுமே அகதிகள் என்றழைத்ததில்லை. மேலும் அங்கிருந்து ஹிந்துக்கள் இங்கே வந்தது மஜ்பூரியில் வேறு கதியே இல்லாத நிலையில். ஆனால் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு பெயர்ந்த முஸல்மான்கள் தங்கள் கனவுலகான நிஜாம்-ஏ-முஸ்தஃபா வுக்கு போகிறோம் என்றே சென்றனர். இவர்களுக்கு எந்த மஜ்பூரியும் இல்லை எந்த கஷ்டங்களும் ஹிந்துஸ்தானத்தில் இல்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்ற இவர்களுக்கு முதல் பேரிடி இவர்களை அங்கிருந்த முஸல்மான் ஸஹோதரர்கள் தங்களில் ஒருவராக ஏற்கவில்லை என்பது. ஏன் இன்று வரை தங்கள் கனவுலகுக்கு சென்ற ஹிந்துஸ்தான முஸல்மான்கள் மொஹஜிர்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள்.

  இது இப்படியிருக்க அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு பெயர்ந்த பீஹாரி முஸல்மான்கள் இன்று வரை எந்தநாட்டுக்க்குடியுரிமையும் இல்லாது இன்று வரை பாங்க்ளாதேஷில் அல்லலுறுகிறார்கள். மறைந்த மோதர்மா பேனஜீர் பாங்களாதேஷ் விஜயம் செய்த போது இவர்களை பாகிஸ்தானில் ஏற்றுக்கொள்வோம் என்று அறிவிப்பு செய்தார். இவர்கள் கதி என்ன என்பது அல்லாவுக்கே வெளிச்சம்.

  பாகிஸ்தானிய சேனை முழுக்க பஞ்ஜாபி முஸல்மான்களால் நிரம்பிய சேனை. பஷ்டூன்களையும், பலோசிகளையும், மொஹஜிர்களையும் இவர்கள் செய்யும் கொடுமை கணக்கில் அடங்காது. மொஹாஜிர் க்வாமி மூவ்மெண்டின் (தற்போது முட்டாஹிடா க்வாமி மூவ்மெண்ட்) தலைவர் ஜனாப் அல்டாஃப் ஹுஸைன் தனதுயிருக்கு பயந்து இங்கிலாந்தில் வாழ்கிறார். நிஜாம்-ஏ-முஸ்தஃபா தார்-உல்-இஸ்லாம் ஆன பாகிஸ்தானுக்கு ஏகிய முஸல்மான்களின் தலைவரான ஜனாப் அல்டாஃப் ஹுஸைன் பாரத பிரிவினை சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய தவறுதல் என்று சொல்லியிருக்கிறார் என்றால் நிலைமை எவ்வளவு மோசம் என ஊகிக்கலாம்.

  இப்படி பாகிஸ்தானில் வந்தேறிய முஸல்மான் குடும்பங்களில் ஒன்றைச்சார்ந்தவர் தான் ஹிந்துஸ்தானத்துக்கு அதிக பக்ஷம் தலைவலி கொடுத்த பர்வேஸ் முஷர்ரஃப். இதே போல் இங்கு வந்த ஹிந்துக்களில் முக்யமானவர்கள் ஸ்ரீ லால் க்ருஷ்ண அத்வானி மற்றும் ஸ்ரீ மன்மோஹன்சிங். இவர்களில் நாட்டிற்கும் ஹிந்துக்களுக்கும் யார் என்ன செய்தார் என்பது எல்லோரும் அறிந்ததே.

  ஆனால்,

  பிளந்த ஜெர்மனி ஒன்று சேர்ந்த்த்து சரித்ரம் என்றால்

  தங்கள் நாட்டை விட்டு துரத்தப்பட்டு தேசம் தேசமாக திரிந்து சொல்லொணா ஹிம்ஸைகளுக்கு ஆளாக்கப்பட்டு ஆயிரத்து சொச்சம் ஆண்டுகள் கழித்து யஹூதிகள் இழந்த இஸ்ரவேல் நாட்டை மீட்டது சரித்ரம் என்றால்

  ஏசுவை கொன்றது யஹூதிகள் என்ற பொய்யை நம்பி அவர்களுக்கு சொல்லொணா துன்பங்கள் கொடுத்த அதே கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் தேசம் தோன்றவும் பின்னர் யஹூதிகள் பாலஸ்தீனத்து முஸல்மான்களுக்கு gaza wall, Freedom Foltila இத்யாதி சொல்லொணா தொல்லைகள் கொடுப்பதை கண்டும் காணாமலும் கிற்ஸ்தவ தேசங்கள் பார்த்துக் கொண்டிருப்பதும் US of A முதற்கொண்டு பற்பல ஐரோப்பிய தேசங்கள் இஸ்ரேலுக்கு ஸலாம் போடுவதும் சரித்ரம் என்றால்

  ஹிந்துஸ்தானதில் இருந்து பிளக்கப்பட்ட பாகிஸ்தானும் அதிலிருந்து பிரிந்த பாங்க்ளாதேசமும் ஒரு நாள் ஹிந்துஸ்தானத்தில் இணைவது நடந்தே தீரும்.

  ஆனால் அப்படி நடப்பதற்கு மக்களின் அவா தேவை. என் நாட்டை அஜ்ஜோபுஜ்ஜோஸ்தான் என்று அழைத்தால் எனக்கு ஒன்றுமில்லை என்ற அலக்ஷிய போக்கு அகண்ட பாரத்திற்கு என்ன இப்போது உள்ள பிளவு பட்ட பாரதத்திற்கே நல்லது அல்ல.

 32. Malarmannan on February 3, 2011 at 1:08 pm

  ஸ்ரீ க்ருஷ்ணகுமார், மிகவும் ஆறுதல் தரும் வசனங்கள் சொன்னீர். நீவிர் வாழ்க.
  1971-ல் சுதந்திர பங்களாதேஷ் உருவாக நமது ராணுவம் ரத்தம் சிந்தியது. பங்களா தேஷிலோ ஹிந்துக்கள் இன அழிப்புக்கு இலக்காயினர். இப்படுகொலை மறைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் புத்திசாலித்தனமான தொடர் நடவடிக்கை எடுக்கத் தவறினோம். அன்றே நாம் கைது செய்து வசதியாக வைத்திருந்த 90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினரை கெளரவப் பிரச்சினையாகக் கருதி அவர்களை மீட்டுச் செல்ல எதற்கும் ஒப்புக்கொள்ளச் சித்தமாயிருந்த பாகிஸ்தானிடம் கறாராக நடந்து காஷ்மீர் பிரச்சினைக்குக் கூடத் தீர்வு கண்டிருக்க முடியும். அன்று தொடர் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இன்று பங்களாதேஷிலும் வஹாபி முகமதியம் வேரூன்றி ஹிந்துஸ்தானத்தின் மீது வெறுப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது (தொடர் நடவடிக்கை என நான் குறிப்பிடுவது அங்கு முஜிபுர் ரஹ்மான் பதவி ஏற்றதும் அவருக்கும் அவரது புதிய அரசுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகச் சில ஆண்டுகள் காபந்து செய்யும் பொறுப்பை நாம் ஏற்று, அந்த நாட்டை வழிநடத்திச் சென்றிருக்க வேண்டும் என்பதே. இப்படிச் செய்திருந்தால் பங்களா தேஷ் நமது கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். அன்றைய நிலையில் நமது செயலுக்கு உலக நாடுகள் சம்மதத்தையும் எளிதாகப் பெற முடிந்திருக்கும். மாறாக, பிஹாரி முகமதியரை வங்காள முகமதியர் பழி தீர்க்கவிடாமல் காத்தோம்! ) இன்று அங்கு எஞ்சியுள்ள ஹிந்துக்கள் பலவாறான தொல்லைகளுக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டிக்கவும் நமக்குத் துணிச்சல் இல்லை. ஆனால் இங்கு ஹிந்து-முகமதியர், ஹிந்து-கிறிஸ்தவர் மோதல் ஏதேனும் நடந்தால் உடனே பாகிஸ்தான் உள்ளிட்ட முகமதிய நாடுகளும் கிறிஸ்தவ நாடுகளும் விவரம் இன்னதென்று ஆராயமலேயே கண்டனம் செய்யத் தொடங்கி விடுகின்றன.
  -மலர்மன்னன்

 33. பிரதாப் on February 3, 2011 at 8:35 pm

  பிரதாப்

  அன்புள்ள கிருஷ்ணகுமார், மற்றும் மலர்மன்னன் அவர்களுக்கு

  நன்று சொன்னீர்கள். நீங்கள் இருவரும், மேலும் இதைபோன்ற தெளிவான முறையில் உண்மைகளை சொல்லும் அனைவரும் இறைவன் அருளால் பல்லாண்டு வாழ்ந்து நம் மனித இனத்துக்கே வழிகாட்டுவீராக. தர்மமே வெல்லும்.பாக்கிஸ்தான் என்ற அசிங்க குழந்தை விரைவில் வாழ்விழந்து இறுதி மூச்சை விடும்.

  உலகில் ஒரு மொழி பேசுவோர் அல்லது ஒரு மதத்தை சேர்ந்தோர் அனைவரும் ஒரே நாடாக சேர்ந்து வாழ்வது என்பது உலகில் எங்குமே நடக்காது. ஏனெனில் மதம் அல்லது மொழி என்பது இணைக்கும் சக்தி அல்ல. அப்படி அவை இணைக்கும் சக்தியாக இருந்தால் கிரித்துவருக்கு பல நாடுகளும், இசுலாமியருக்கு பல நாடுகளும் தேவையில்லை. சன்னி, ஷியா, அகமதியா, சுபி, என்று இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் தற்கொலைப்படை மூலம் அழிக்கவேண்டாம். இங்கிலாந்தில் அயர்லாந்து மற்றும் எஞ்சிய பகுதியில் கத்தோலிக்கருக்கும் , ப்ராட்டச்டண்டுகளுக்கும் கிறித்தவ மோதல் மூலம் பேரழிவு ஏற்படவேண்டியதில்லை.

  பிற மதத்தினரை அன்பு செலுத்தி அரவணைப்போருக்கே உலகில் எதிர்காலம். பிறமதம் மற்றும் பிறநம்பிக்கை கொண்டவர்களை கொள்ளவும், எப்படியாவது அழிக்கவும் நினைக்கும் மதநூல் போதனைகளும், அந்த மதங்களும் காணாமல் போகும். இது இறைவனின் ஆணை.

 34. க்ருஷ்ணகுமார் on February 4, 2011 at 1:43 pm

  ஸ்ரீ மலர்மன்னன், நமஸ்தே

  \\\\\\\\\\90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினரை கெளரவப் பிரச்சினையாகக் கருதி அவர்களை மீட்டுச் செல்ல எதற்கும் ஒப்புக்கொள்ளச் சித்தமாயிருந்த பாகிஸ்தானிடம் கறாராக நடந்து காஷ்மீர் பிரச்சினைக்குக் கூடத் தீர்வு கண்டிருக்க முடியும். \\\\\\\

  காஷ்மீரத்தை இங்கு உள்ள ஹிந்துக்கள் சுக்ராசார்யாரின் பூமி என்னுகிறார்கள். ப்ராக்ருதிக ஸௌந்த்ர்யத்தை வைத்து இதை ஸ்வர்கம் என்று சொன்னாலும் வஹாபிஸத்தை நோக்கி ப்ரயாணிக்கும் காஷ்மீரம் உள்ளபடியே ராக்ஷஸ குருவின் பூமியாதலால் ராக்ஷஸ ப்ரக்ருதிகளால் நிரம்பி வழிகிறது. நித்ய கண்டம் பூர்ண ஆயுஸ் என்ற ரீதியில் அவ்வப்போது ரத்தக்களரிகளுடன் பூலோக நரகமாக விளங்குகிறது என்றால் மிகையில்லை.முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற ரீதியில் உள்ளது காஷ்மீர ப்ரச்சினை.ஸ்ரீ மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி, பண்டித நேரு தொடங்கி அவர் மகள் ஸ்ரீமதி இந்திரா காந்தி மற்றும் இன்றுள்ள காந்தி பரிவாரம் வரை இந்த ப்ரச்சினையை மோசமாக கையாண்டதின் விளைவுகளை பாரதம் அனுபவித்து வருகிறது. காஷ்மீர பண்டிதர்கள் காஷ்மீரத்தை விட்டு ஜம்மு தில்லி என்று பெயர்ந்து விட்டாலும் ஸர்தார்கள் விடாப்பிடியாக தீரத்துடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லாவில் காஷ்மீர முஸல்மான் ஸஹோதரர்களைத்தவிர வேறு ஹிந்துஸ்தானியரை அதிகமாக
  காணமுடியும் எனில் அங்குள்ள ஸர்தார்களைத்தான். வாழ்க இவர்களின் தீரம்.

  \\\\இன்று அங்கு எஞ்சியுள்ள ஹிந்துக்கள் பலவாறான தொல்லைகளுக்குள்ளாகி வருகின்றனர்.\\\\\\

  பாங்க்ளாதேசமென்ன, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கனிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்களும் சொல்லொணா தொல்லைகளுக்கு ஆட்படுகிறார்கள். லங்காபுரியிலும் இதே நிலை. Concerntration camp அனுப்புமுன் யஹூதிகளை பிரிக்க star of david band அணிய ஜெர்மனியின் ss ஆணையிட்டது போல் தாலிபானிய ஆஃப்கானிஸ்தானில் கைர் முஸல்மான்களுக்கு கையில் band அணிய ஆணையிட்டபோது இங்குள்ள ஸர்கார் குறட்டையல்லவோ விட்டது. நம் எல்லையில் நுழைந்து நம் மீனவர்களை லங்காபுரி சேனை சுட்டு வீழ்த்தும் போது பாரத ஸர்காரும் தமிழக ஸர்காரும் அறிக்கையும் குறட்டையுமே விடுகிறார்களன்றோ? இன்றைய பாகிஸ்தானத்து ப்ரதேசத்தில் பிறந்து பிரிவினையின் போது இங்கு வந்து ஹிந்துஸ்தானின் ஸர்தாராக இருக்கும் ஸ்ரீ மன்மோஹன் சிங் அவர்களோ ரோம் பற்றி எரிகையில் பிடில் வாசித்த நீரோ போன்று ஸதா ஸோஹம்பாவத்தில் இருக்கிறார். ப்ரதி பக்ஷமென்ன உச்ச ந்யாயாலயமென்ன யாருடைய சொல்லடிக்கும் பாதிப்பில்லாமல் நிகம்மா என்றழைக்கப்பட்ட தேவேகௌடாவுக்கு சளையில்லாமல் சிரிப்பற்ற நரசிம்ம ராவுக்கு சளையில்லாமல் அர்த்தமற்ற மௌனம் சாதித்து வருகிறார். யாரேனும் ஜாகோ மோஹன் ப்யாரே என்று இடைவிடாது கீதமிசைத்தால் இவரது துயில் கலையலாம் போலும்.

  ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் நமஸ்தே,

  ஹிந்துக்களின் தரப்பில் எழுதப்படும் விஷயங்களில் தங்களுடைய மற்றும் ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்களுடைய வ்யாசங்களை நான் கூர்ந்து படிக்கிறேன். ஸ்ரீமதி ஆர் ஆர் அவர்களின் எழுத்துகளில் total non compromise stand ம் மிக sharp ஆக சாடும் பாங்கும் பார்க்கிறேன். தங்களுடைய பதிவுகளில் இருக்கும் தெளிவு பதிவுகளை படிக்க தூண்டுகிறது. ஆனால் மனுஸ்ம்ருதி ஸம்பந்தமான தங்கள் பதிவில் தெளிவின்மை மேலோங்கி உள்ளது.

  கீழே தங்கள் கருத்து

  \\\\\\நமது அரசியல் நிர்ணய சட்டம் நிச்சயமாக மனு ஸ்மிருதியைக் காட்டிலும் மானுட அறத்தில் மேலோங்கி நிற்பதாகவே கருதுகிறேன். அடிப்படை மானுடத்தன்மையற்றதான பல விஷயங்களை கொண்டிருக்கும் மனு ஸ்மிருதியை -வரலாற்று ஆவணம் என்பதற்கு அப்பால் எவ்வித மரியாதையும் அளிக்காமல்- தூக்கி எறிவதே பாரத சுயமரியாதைக்கு சரியானதாக அமையும\\\\\\\\\

  முதல் தெளிவின்மை ஸ்ரீ மலர்மன்னன் தெரிவித்து உள்ளார். கீழே :

  \\\மனு ஸ்மிருதியை முழுமையாகப் படித்து, அதில் உள்ள முரண்களுக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்து விவரம் அறிந்த ஒருவர் (மனு?) முன்னுக்குப்பின் முரணாக எழுதும் அளவுக்கு அப்பாவியாக இருப்பாரா எனவும் யோசித்து அதன் மீது கருத்துத் தெரிவிப்பதே சரியாக இருக்கும். \\\\\\\\

  நீங்களே கூட , “அடிப்படை மானுடத்தன்மையற்றதான பல விஷயங்களை கொண்டிருக்கும் ” என்று தானே எழுதியுள்ளீர்கள். “”அடிப்படை மானுடத்தன்மையற்றதான பல விஷயங்களை மட்டிலும் கொண்டிருக்கும் ” என்றெழுதவில்லையே. காரண காரியம் ஏதும் பதிவு செய்யாது name the dog and hang it என்பது போலும் throw out the baby with the bath water என்ற ரீதியிலும் த்வனிக்கிறது தங்கள் பதிவு.

  மேலும், “மனு ஸ்மிருதியை -வரலாற்று ஆவணம் என்பதற்கு அப்பால் எவ்வித மரியாதையும் அளிக்காமல்- தூக்கி எறிவதே பாரத சுயமரியாதைக்கு சரியானதாக அமையும” என்ற பதிவில் குழப்பமே மேலோங்கி உள்ளது.

  மனு ஸ்ம்ருதி ஒரு கட்டையோ கழியோ அல்லது மண்ணோ மட்டையோ அல்லவே தூக்கி எறிந்து விஸர்ஜனம் செய்வதற்கு!!!!!!!!. it is a body of knowledge. ஸனாதன பௌத்த ஜைன சீக்கிய தர்சனங்களை உள்ளடக்கிய ஹிந்து மதத்தில் ஸனாதன தர்மத்தை சார்ந்தது மனு ஸ்ம்ருதி.

  வார்த்தைகளூம் அர்த்தங்களும் நிலையில்லாதவை என்ற பௌத்த வாதத்திற்கெதிரான (formalism)வார்த்தைகளும் அர்த்தங்களும் அழிவில்லாது நிலைத்து நிற்கும் (platonism) என்ற ஸனாதன வாதத்தை முன்னிறுத்தியவர்கள் பூர்வமீமாம்ஸகர்கள்.”வரலாற்று ஆவணம் ” என்ற படியில் இதை விஸர்ஜனம் செய்ய முடியாது என்ற யதார்த்தமும் “தூக்கி எறிதல்” என்ற படியில் இதை அழித்தொழித்தால் பரவாயில்லையே என்ற கருத்தும் ஒருசேர தொனித்து கருத்தில் குழப்பமே விஞ்சி இருக்கிறது.

  வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தங்கள் தமிழ் பேப்பரில் ஒரு நண்பரின் அவா பதிவு செய்யப்பட்ட படி திருக்குறள், தொல்காப்பியம் மற்றும் கம்ப ராமாயணம் நிராகரண லிஸ்டில் இருந்தது தெரிய வந்தது. இப்படி ஆளுக்கொன்றாக நிராகரணம் செய்யத்துவங்கினால் ஏதும் மிஞ்சுமா தெரியவில்லை!!!!!!!!!!

 35. Malarmannan on February 4, 2011 at 10:06 pm

  ஸ்ரீ க்ருஷ்ணகுமார், தங்கள் பெயருக்கு ஏற்ப மேன்மேலும் இனிய வசனங்கள் சொல்கின்றீர். மனு ஸ்மிருதி குறித்து நான் முன்பே சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். இதன் விளைவாக மிக மோசமாகப் பலரால் விமர்சிக்கப்பட்டேன்.
  கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆரிய சமாஜம் என்ற எனது நூலிலும் மனு ஸ்மிருதி பற்றி இணைப்பாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

  ஸ்ரீ பாபு என்ற வாசகர் இதே மறுமொழிப் பகுதியில் மனுஸ்மிருதி பற்றிய விவரங்கள் அறிய விருப்பம் தெரிவித்திருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
  -மலர்மன்னன்

 36. Malarmannan on February 5, 2011 at 8:00 am

  ஸ்ரீ க்ருஷ்ணகுமார்,

  சுக்ர நீதி நீங்கள் அறியாததல்ல. பீஷ்மருக்கும் அரசியல் ஞானம் புகட்டியவர்தானே ஸ்ரீ சுக்ராசாரியர். தீங்குகளையும் தீங்கிழைப்போரையும் அழிக்கவியலாத நிலையினை ப்ராரப்தம் விதித்திருக்குமானால் புருஷார்தத்தால் (செய்ல்பாட்டால்) அதனை மாற்றவியலும் என்று அவர் அறிவுறுத்தவில்லையா?

  அசுரர்களுக்கு சுக்ராசாரியர் நற்போதனைகளையே செய்துள்ளார் என்பதும் தாங்கள் அறிந்திருப்பிர்கள் அல்லவா?

  தமக்கு குருவாயிருந்த ஆங்கிரஸ் புத்ர பாசம் காரணமாக ப்ரஹஸ்பதி யிடம் பட்சம் காட்டியதாலும், ப்ரஹஸ்பதி தேவர்களின் குருவாக அங்கீகாரம் பெற்றதாலும் எரிச்சலுற்று அசுரர்களின் குருவாகப் பொறுப்பேற்ற சுக்ரர், முறைகேடான செயல்கள் செய்யுமாறு அசுரர்களை ஊக்குவிக்கவில்லையே! அவரது நீதி சாஸ்திரம் நேர்மையான வழிகளைத்தாமே உபதேசிக்கின்றன?

  காஷ்மீர் சுக்ரபூமியாகவே இருப்பினும் அதன் காரணமாகத்தான் அங்கு பயங்கரவாதிகள் கொட்டமடிப்பதாகக் கூற என் மனம் ஒப்பவில்லை.
  அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்துபவன் கொடுங்கோலன் என்று சுக்ரநீதி கூறுகிறது அல்லவா? அசுரர்களையும் நெறிப்படுத்தவே ஸ்ரீ சுக்ரர் அவர்களின் குருவாய் அமைந்தார் என்றே கருதுகிறேன்.

  பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் பகுதிகளை முழுவதுமாக மீட்கவும் நமக்கு ஓர் அரிய வாய்ப்பு 1965-ல் கிட்டியது. அப்போதைய பிரதமர் லால்பஹதூர் சாஸ்த்ரி ரஷ்யத் தாக்கத்திலிருந்து (influence) மீள மாட்டாமல் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அந்த நல்வாய்ப்பினைக் கை நழுவ விட்டார். அங்கேயே அவர் அடைந்த மரணமும் இயற்கை மரணமாகத் தோன்றவில்லை.
  வினைப்பயனை இடைவிடா செயலூக்கத்தால் மாற்றியமைக்க முடியும் என்று சுக்ரர் தமது நீதி சாஸ்திரத்தில் உறுதி கூறுகிறார். இதனை ஹிந்து சமூகம் மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ம வினையின் விளைவாகவே இன்று அது தற்கொலை நாட்டத்துடன், தனக்குச் சுபாவமான சற்குண விக்ருதியினைக் கைவிடாமல் தனக்குத் தானே அழிவைத் தேடிக்கொள்வது போல் அலட்சியத்துடன் தவறான பாதையில் விரைந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், ஹிந்துக்கள் சுக்ர நீதியைக் கற்றறிவது அவசியம் என்று கருதுகிறேன்.

  வர்ணாசிரமங்களையும் சுக்ரர் தமது நீதியில் அழகாக விவரிக்கிறார். அவரும் பிறப்பின் மூலம் அவை அமைவதாகக் கூறவில்லை அல்லவா?

  சுக்ராசாரியர் பற்றிக் குறிப்பிட்டு, அவரது சுக்ர நீதியை எனக்கு நினைவூட்ட வாய்ப்பளித்தமைக்காக ஸ்ரீ க்ருஷ்ணகுமாரரே, உங்களுக்கு மிக்க நன்றி. என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் ஏதேனும் ஒரு வகையில், எவரேனும் ஒருவர் வாயிலாக, எப்படியாவது என்னைத் தூண்டி, சக ஹிந்துக்களுக்குச் சொல்ல வேண்டியனவற்றைச் சொல்ல வைத்துவிடுகிறான் போலும்!
  -மலர்மன்னன்

 37. அருண்பிரபு on February 5, 2011 at 11:48 am

  //“மனு ஸ்மிருதியை -வரலாற்று ஆவணம் என்பதற்கு அப்பால் எவ்வித மரியாதையும் அளிக்காமல்- தூக்கி எறிவதே பாரத சுயமரியாதைக்கு சரியானதாக அமையும”//
  சுயமரியாதையும் மனுஸ்ம்ருதியும் ஒத்துப்போகாது என்கிற சமீபகால கடவுள் மறுப்புச் சித்தாந்தவாதத்தில் ஆனா நீயன்னா சிக்கிக் கொள்ள வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். It should be a knee jerk, I suppose!

  நமது சித்தாந்ந்தங்கள், கோட்பாடுகள் எவையும் பிற மதங்களின் சட்டதிட்டங்கள் போல rigid ஆனவை அல்ல. கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளத் தக்கவையே. So, தூக்கிப் போடுவது தகாது. ஒத்துவராதவற்றை இயற்கைக்கும், மனித நல்வாழ்வுக்கும் பங்கம் வராதபடி மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். ஸ்திரம் சுகம் என்று யோகாசனத்தில் சொல்வார்கள். அது போல நம் வாழ்வுக்கு ஒத்துவரும் வகையில் we may amend regulations.

  இதே போன்ற ஓரு விவாதத்தின் போது சத்ய் சாயி பாபா ஒரு உதாரணம் சொன்னார். சத்ய நாராயண பூஜை செய்யும் போது ஆந்திராவில் முன் காலங்களில் பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை முந்தைய நாளே பூஜையறையில் வைத்துவிட்டு ஒரு கூடையைப் போட்டு மூடிவிடுவார்களாம். (பூனை தின்று விடாமல் இருப்பதற்காக.) மறு நாள் அவற்றை எடுத்து வைத்து பூஜை செய்வார்களாம். சமீபகாலம் வரை சத்ய நாராயண பூஜை என்றால் முந்தைய நாளே பூஜைப் பொருட்களை கூடையில் மூடி வைக்க வேண்டும் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள். காரணம்? தெரியாது.
  வீட்டில் ஃப்ரிட்ஜ், கப்போர்ட் என்று இருந்தும் இந்தப் பழக்கம் தொடர்ந்திருக்கிறது. பிறகு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்றார்.

  அது போலத்தான் மனுஸ்ம்ருதி என்றால் தூக்கி எறிய வேண்டிய விஷயம் என்று முழங்கால் ஆட்டாமல் (knee jerk) அதைக் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதெப்படி என்று ஆராயலாம்.

 38. Malarmannan on February 5, 2011 at 5:05 pm

  மனு ஸ்மிருதியை சமஸ்க்ருத மூலப் பிரதியை வைத்துக்கொண்டு துருவித் துருவி ஆராய்ந்து, எவையெல்லாம் இடைச் செருகல்களாக இருக்கக் கூடும், உத்தேசமாக எவ்வெக் காலங்களில் அந்த இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டிருக்ககூடும் என முடிந்தவரை ஆராய்ந்து கண்டறிந்து ஒரு நூலாக எழுத விருப்பம் உள்ளது. ஏனெனில் அதில் ஏராளமான இடைச் செருகல்கள் இருப்பதாகப் பல நம்பகமான முனைகளிலிருந்தும் உறுதி கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ அரவிந்தர் உள்ளிட்ட பல தலைசிறந்த தத்துவ ஞானிகளும் ஜெர்மானிய தத்துவ ஞானி நீட்சே உள்ளிட்ட பல மேற்கத்திய அறிஞர்களும் முனு நீதி சாஸ்திரத்தை மிகவும் சிலாகித்துப் பேசியுள்ளனர். நீட்சேயை வேண்டுமானால் இனாபிமானி எனத்தள்ளிவிடலாம். ஸ்ரீ அரவிந்தரை அவ்வாறு விலக்குவது சாத்தியமா?

  மனு ஸ்மிருதி ஆய்வில் நுழைவதானால் ஒப்பு நோக்க வேறு நீதி சாஸ்திரங்களிலும் ஆழ இறங்க வேண்டும். குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது முழு நேரமும் இதே வேலையாக இருக்க வேண்டும்.
  முடியுமா?

  சமீபத்தில்தான் வந்தே மாதரம் பற்றி “வந்தே மாதரம்: எதிர்ப்பில் வளர்ந்த எழுச்சி கீதம்” என்ற ஆய்வு நூலை அதிக நேரமும் உழைப்பும் செலவிட்டு எழுதி முடித்து ஓய்ந்துள்ளேன் ( த்ரிசக்தி பதிப்பகம், சாஸ்திரிநகர், சென்னை 20 வெளியிடுகிறது). மிகவும் சோர்வாக உள்ளது.
  -மலர்மன்னன்

 39. க்ருஷ்ணகுமார் on February 5, 2011 at 5:44 pm

  ஸ்ரீ மலர்மன்னன், நமஸ்தே,

  \\\\சுக்ர நீதி நீங்கள் அறியாததல்ல.\\\\\\\\

  க்ஷமிக்கவும். நான் அறவே அறியாதது சுக்ர நீதி. தங்கள் மூலம் சுக்ரநீதியின் background and outlines அறிய நேர்ந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி.

  \\\\காஷ்மீர் சுக்ரபூமியாகவே இருப்பினும் அதன் காரணமாகத்தான் அங்கு பயங்கரவாதிகள் கொட்டமடிப்பதாகக் கூற என் மனம் ஒப்பவில்லை.\\\\\\\

  தாங்கள் சொன்னபடி சுக்ராசார்யார் நற்போதனைகள் தெரிவித்தார் என தெரிந்து கொண்டேன். பின்னிட்டும் அவருடைய பூமியிலிருந்த அவருடைய சிஷ்யர்கள் ஒன்றும் ஆதர்சர்களல்லவே (ப்ரஹ்லாதன் மற்றும் மஹாபலி தவிர்த்து). ஹிரண்யகசிபு செய்த அட்டஹாஸம் ஒரு வருஷமா இரு வருஷமா. எழுபத்து நாலு சதுர்யுகம் துராக்ஷி செய்தானல்லவா?அவருடைய சிஷ்ய ப்ரக்ருதிகள் பலர் நற்குணங்கள் குறைந்தும் துர்குணங்கள் அதிகமானவர்களாகவும் ஆக இருந்தனரன்றோ?பெருங்காயம் காலி ஆனாலும் டப்பாவில் மணம் சேஷமிருக்குமல்லவா? அதே கதை. வித்யாசம். ராக்ஷஸர்கள் துஷ்டர்கள். அதி ப்ரபாவசாலிகள். த்ரிமூர்த்திகளையே எதிர்கொண்டார்கள். இன்றைய ஜிஹாதிகள் ப்ரஷ்டர்கள். ஸாமான்ய ஜனங்களூக்கு ஹிம்சை அளிப்பதன் மூலம் தங்கள் மத கட்டளைகளையே மீறுகிறார்கள். பராக்ரம ஹீனர்கள். நேரடியாக பாரத சேனையுடன் யுத்தம் செய்ய துப்பில்லாததால் குண்டு வெடித்து பொது சொத்து நாசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

  \\\\\\\லால்பஹதூர் சாஸ்த்ரி ரஷ்யத் தாக்கத்திலிருந்து (influence) மீள மாட்டாமல் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அந்த நல்வாய்ப்பினைக் கை நழுவ விட்டார். அங்கேயே அவர் அடைந்த மரணமும் இயற்கை மரணமாகத் தோன்றவில்லை.\\\\\\\\

  பண்டித ச்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களின் ஷஹாதத்தும் மறக்க இயலாதது. அவரின் தீவிர எதிர்ப்பு இல்லாவிடில் காஷ்மீர முக்ய்மந்த்ரியை ப்ரதான் மந்த்ரி என்றும் கவர்னரை ஜனாதிபதி என்றும் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.

  \\\\\\\வினைப்பயனை இடைவிடா செயலூக்கத்தால் மாற்றியமைக்க முடியும் என்று சுக்ரர் தமது நீதி சாஸ்திரத்தில் உறுதி கூறுகிறார். \\\\\\\\

  மிக நல்ல உபதேசம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

  \\\\\\சுக்ராசாரியர் பற்றிக் குறிப்பிட்டு, அவரது சுக்ர நீதியை எனக்கு நினைவூட்ட வாய்ப்பளித்தமைக்காக ஸ்ரீ க்ருஷ்ணகுமாரரே, உங்களுக்கு மிக்க நன்றி.\\\\\\\\\

  gurur na sa syat sva-jano na sa syat
  pita na sa syaj janani na sa syat
  daivam na tat syan na patis ca sa syan
  na mocayed yah samupeta-mrtyum

  Shrimad Bhagavatham (5-5-18)

  தம்மைச்சார்ந்தவர்களை ஜனன மரணத்திலிருந்து கடையேற்றவியலாத குரு, பந்து, பிதா, மாதா, பதி மற்றும் தேவதை அந்த ஸ்தானம் வஹிக்க கூடாது என்று பகவதவதாரமான ரிஷப தேவர் தமது புத்ரர்களுக்கு உபதேசிக்கிறார். ஆக மனுஷ்யரனைவருக்கும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்றும் கடமையிருக்கிறது. ஸ்வஜனமாகிய தாங்கள் ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் என்ற படி ஹிதமாக உஜ்ஜீவிக்கும் கருத்துகள் பரிமாற்றம் மூலம் அந்த கடமையாற்றுகிறீர்கள். என் கருத்துகள் ஸ்வச்சமாக இருக்க ப்ரயாசிக்கிறேன். சில சமயம் ஸபலம். சில சமயம் விபலம்.

  ஸ்ம்ருதி முக்தாபலத்திலோ அல்லது தெய்வத்தின் குரலிலோ மனுஸ்ம்ருதி கலியுகத்திற்கானதல்ல என்று படித்ததாக நினைவுக்கு வருகிறது.

 40. அருண்பிரபு on February 6, 2011 at 10:39 am

  //அப்போதைய பிரதமர் லால்பஹதூர் சாஸ்த்ரி ரஷ்யத் தாக்கத்திலிருந்து (influence) மீள மாட்டாமல் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அந்த நல்வாய்ப்பினைக் கை நழுவ விட்டார். அங்கேயே அவர் அடைந்த மரணமும் இயற்கை மரணமாகத் தோன்றவில்லை.//

  மலர் மன்னன் ஐயா!
  ரஷ்யர்களுக்கு ஒரு puppet தேவைப்பட்ட இடத்தில் சாஸ்திரி தனித்தன்மை பேசினார். ரஷ்யர்களின் பாட்டுக்கு ஆடவில்லை. ஆட விழைந்த இந்திராகாந்தியை KGB தத்தெடுத்துக் கொண்டது. சாஸ்திரி காப்பாற்றப்பட்டிருக்கலாம், ஆனால் KGB போகட்டும் என்று விட்டுவிட்டது என்பது மித்ரோகின் தரும் உள் விவரம்.

  பாகிஸ்தானை நாம் இன்னும் விட்டு வைத்திருப்பதற்கு யாசர் அராஃபத்தும் ஒரு காரணம். என்ன இருந்தாலும் இஸ்லாமிய நாடு என்று பாகிஸ்தானை ஆதரித்தே அனைத்து அரபு நாடுகளும் செயலபட, நாமோஅதே அரபு நாடுகளை திருப்திப்படுத்த நமது இராணுவ வீரர்களின் உயிர்பலியை கேலிக்கூத்தாக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் சண்டை போட்டு வென்ற பின் தோற்றவனின் கூற்றுக்குக் கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

  என்றைக்கு இஸ்ரேலிய Diplomatic modelஐப் பின்பற்றப் போகிறோமோ அன்று தான் நாம் உருப்படுவோம்.

 41. Malarmannan on February 6, 2011 at 12:04 pm

  ஸ்ரீ க்ருஷ்ணகுமார், கலியுகம் மஹாபாரத காலத்திலேயே தொடங்கிவிட்டதல்லவா? எனினும் மனு ஸ்மிருதியை இபோதுள்ள அதன் முழுத் தொகுப்புடனேயே பார்ப்பதால்தான் அவ்வாறான விமர்சனங்கள் தவிர்க்கப்படவியலவில்லை போலும்.

  நல்லோர் தாம் சொல்ல வேண்டிய புத்திமதியைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள், கேட்போர் கேட்காவிடினும். ஸ்ரீ சுக்ராசாரியார் அதையேதான் செய்து வந்தார். நான் சுக்ராசாரியருக்குத்தான் பரிந்து சில வார்த்தைகள் சொன்னேன்; அவர் சொல் கேளாத அவர் சீடர்களையல்ல என்பதையும் கவனித்திருப்பிர்கள்
  -மலர்மன்னன்

 42. Malarmannan on February 6, 2011 at 6:03 pm

  ஸ்ரீ அருண்பிரபு,
  லால்பகதூர் ரஷ்யத் தாக்கத்திலிருந்து ’மீள’ மாட்டாமல் என்றுதானே எழுதியுள்ளேன்? அதன் காரணமாகத்தானே ஒப்பந்தத்தில் அவர் கையொப்பமிட்டார்? நமக்குக் கிடைத்த ஒரு சில நல்ல பிரதமர்களுள் அவரும் ஒருவர். ஆனால் அவரால் ஓரளவுக்கே சுயத்தனமையுடன் இயங்க முடிந்தது. அவரைச் சுற்றிலும் ’நேருவியன்’ அணுகுமுறையினரின் கூட்டமே முற்றுகையிட்டிருந்தது.

  ஒருமுறை யாசர் அரஃபா தில்லிக்கு வந்து இறங்கியதும் உலகிலேயே இரண்டாவதாக இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். இது நடந்தது தொண்ணூறுகளின் தொடக்கத்தில். மத வாத உணர்வைத் தூண்டிவிடுவதாக இப்பேச்சு உள்ளது என்று கண்டித்து தினமணிக்கு ஒரு கட்டுரை எழுதினேன். வழக்கமாக என் கட்டுரைகளை உடனுக்குடன் வெளியிட்டு வந்த தினமணி கட்டுரையை வெளியிடவில்லை! ஏன் வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, விருந்தினராக வந்திருப்பவரை வம்புக்கு இழுப்பதுபோல் உள்ளது என்றார், அப்போது ஆசிரியராக இருந்த நண்பர் கி. கஸ்தூரி ரங்கன்! பின்னர் துக்ளக்கிற்குக் கொடுத்தேன். துக்ளக்கும் வெளியிடவில்லை! நான் அப்படியொன்றும் பண்புக்குறைவாக எழுதுகிறவன் அல்ல, மிகவும் கண்ணியமாகவே எழுதுபவன் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்த போதிலும்! இதுதான் இன்று நமது நிலை!
  -மலர்மன்னன்

 43. அருண்பிரபு on February 6, 2011 at 11:44 pm

  மலர் மன்னன் ஐயா!
  நீங்கள் எழுதியதில் நான் அதில் தவறு ஏதும் காணவில்லை. அந்த பதிலில் அது சாத்தியமும் இல்லை. ஆனால் காங்கிரஸ் பிரதமர்களில் இதுவரை இருந்ததில் ஒரே ஒரு உருப்படி லால் பகதூர் சாஸ்திரி மட்டுமே. அவரும் சறுக்கினார் என்ற உண்மையை அப்படியே ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை. Justify செய்ய முயன்றேன். அவ்வளவே! என் பின்னூட்டம் தங்கள் மனதை வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்!

  அராஃபத் பேச்சு பற்றிய தங்கள் கட்டுரையை துக்ளக்கும் வெளியிடவில்லை என்பது it makes me flinch at that fact! சில விஷயங்களில் அரசுடன் ஒத்துப் போக்வில்லை என்றால் சோவும் சோகாப்பாரோ!!

 44. Malarmannan on February 7, 2011 at 11:20 am

  அன்புள்ள ஸ்ரீ அருண் பிரபு,
  இதில் நான் வருத்தப்படவோ நீங்கள் வருத்தப்படவோ என்ன இருக்கிறது? அவரவர் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறோம் அவ்வளவுதானே?
  ஸ்ரீ சோவைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டீர்கள். என்னால் மேலும் ஒரு தகவலைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை! 1970, 80 களில் நான் எழுதும் கட்டுரைகள் எல்லாம் துக்ளக்கில் வெளிவருவதுண்டு.

  ஒருமுறை அவரது பிரசித்தி பெற்ற கேள்வி-பதில் பகுதியில் ஒரு வாசகர் ஹஜ் யாத்திரைக்கு அரசு மானியம் வழங்குவது நியாயம்தானா என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சோ, கும்பமேளா கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்பும் சுகாதார ஏற்பாடுகளும் செய்வது நியாயம் என்றால் அதுவும் நியாயம்தான் என்று எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

  விவர்ம் அறிந்த் மெத்தப் படித்த சோ இப்படிப் பொருத்தமற்ற பதிலை அளிக்கலாமா? மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகளில், அது எந்த சமயம் சார்ந்த நிகழ்ச்சியாயினும் பொது நிகழ்ச்சியாயினும் உரிய பதுகாப்பும் சுகாதார வசதிகளும் செய்துகொடுப்பது அரசின் இயல்பான கடமையே. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயத்தவர் வெளிநாட்டில் உள்ள தங்களின் புனிதத் தலத்திற்கு மானியம் வழங்குவதை அதனுடன் ஒப்பிடலாமா என்று கேட்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதிலிருந்து துக்ளக்கிற்கு நான் எதுபற்றிக் கட்டுரை எழுதினாலும் அது வெளிவருவதில்லை! இதுபற்றிக் கேள்வி கேட்ககூடாது. பிரசுரிக்கத் தக்க அளவு தரமாக இல்லை என்று எளிதாகக் கூறிவிடும் வாய்ப்பு பத்திரிகைகளுக்கு உள்ளது அல்லவா?
  -மலர்மன்னன்

 45. மணிவண்ணன் on February 8, 2011 at 4:48 pm

  ///பாகிஸ்தானின் பிறப்பே முறையற்றது அதன் மறைவே முறையானது என்கிற கருத்து உள்ளவன் நான். \\\

  ungal karuthai nan varaverkirean

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*