இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!

kashmir_omar_anti-india‘தமிழர் இறையாண்மை மாநாடு’ என்ற பெயரில் ‘இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் மாநாடு’  ஒன்றை நடத்தியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கடந்த டிசம்பர் 26 – ம் தேதி நடைபெற்ற இம்மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “விடுதலைச் சிறுத்தைகள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைக்கவுமில்லை, கைவிடவுமில்லை. அதேநேரத்தில் தனித்தமிழ்நாடு கோருவதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்பதை மாத்திரம் சுட்டிக்காட்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.

இயற்கைக்கும், எதார்த்தத்திற்கும், ஆராய்ச்சி முடிவுகளுக்கும் விரோதமான கூற்றை – நாட்டின் ஒவ்வொரு மாநில மக்களும் தனித்தனி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று – கூறும் இக்கட்சி, ‘இந்தியா என்பது ஆங்கிலேயர்களின் சுரண்டலுக்கு வசதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாகக் கூட்டமைப்பே. வெள்ளையனால் உருவாக்கப்பட்ட இன்றைய இந்தியாவில், தேசிய இன உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. அதன் அடையாளமாகவே இங்கு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தேசிய இனங்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்து, ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மையுள்ள தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் முழு அதிகாரம் பெற்ற மாநில அரசுகளைக் கொண்ட கூட்டரசாக இந்திய அரசு – அமெரிக்காவில் உள்ளதுபோல் – அமைந்திட மத்தியில் கூட்டாட்சி முறையைக் கொண்டு வர வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

breaking_indiaதேச ஒற்றுமையின் அடித்தளத்தை ஆட்டிப் பார்க்க முனையும் வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி (தேசிய) கொடி   அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறது இக்கட்சியின் மற்றொரு தீர்மானம். ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசுகள் இந்தியப் பேரரசின் கீழ் இயங்குகின்றன என்றாலும், அம்மாநில அரசுகள் வெவ்வேறு தேசிய இனங்களின் அரசுகளாகவே விளங்குகின்றன. அத்துடன் சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு அடையாளங்களுடன் தமது தனித்தன்மைகளையும் பாதுகாத்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இனமும் தம்முடைய உரிமைகளையும் அதிகாரங்களையும் தக்க வைத்திட அல்லது மீட்டெடுத்திட வேண்டுமென்பதில் அக்கரை செலுத்துகின்றன. அதாவது மைய அரசின் குறுக்கீடுகளின்றி சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் ஆட்சி நிர்வாகத்தை நடத்திட அவை விரும்புகின்றன. இத்தகைய பண்புகளே தேசிய இனங்களின் இறையாண்மைக்கான அடையாளங்களாகும். எனவே தேசிய இனங்களுக்கான அல்லது மாநில அரசுக்கான இறையாண்மையை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்கக் கூட்டரசின் நடைமுறையில் உள்ளதைப் போல் இந்தியாவிலும் மாநில அரசுகள் தமக்கான தனிக் கொடியினை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்கிறது அத்தீர்மானம்.

mughalstan1அதுமட்டுமல்லாது, கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்குகே உரிமை வழங்க வேண்டும், மாநில போலீசாரின் அதிகாரத்தைப் பறிப்பதால் தேசிய புலனாய்வு நிறுவனம் கலைக்கப்பட வேண்டும், கல்வி தொடர்பான தனது அதிகாரங்களை மத்திய அரசு பெருக்கிக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் அக்கட்சி தேசிய சிந்தனைக்கு கிஞ்சித்தும் இடம் இல்லாமல் இஷ்டம்போல் தீர்மானங்கள நிறைவேற்றியிருக்கிறது. எண்ணிலடங்கா காலம் தொட்டு இருந்து வரும் இந்த தேசத்தின் கலாச்சார ஒற்றுமை குறித்தோ, அதை பிரதிபலித்துவிட்டுச் சென்ற மகான்கள் குறித்தோ,  பழம்பெரும் நூல்கள் குறித்தோ, நமது முன்னோர் குறித்தோ, இன்றும் இதை பிரதிபலித்து வரும் எண்ணற்ற பெரியவர்கள் குறித்தோ, சாமான்ய மக்கள் குறித்தோ ஏதும் அறியாத வன்முறைக்குப் பெயர்போன இச்சிறு கூட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே தங்களது பேச்சின் மூலம் சவால் விட்டிருக்கிறது.

arundhati_roy1இதில் ஆச்சரியம் என்னவென்றால், இப்படி அப்பட்டமாக இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் இக்கட்சியைத்தான் தனது கூட்டணி சகாவாக காங்கிரஸ் வைத்துக்கொண்டிருக்கிறது.  அதுமட்டுமல்ல இக்கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான திருமாவளவனைத்தான் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கான எம்.பி. க்கள் குழுவில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இடம் பெறச்செய்தது. அவரும் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற ஒரு தேசிய தலைவரைப் போல் அவர்களுடன் காஷ்மீருக்குச் சென்று திரும்பினார். திரும்பிய பிறகு அவர் கூறியது, ‘காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்பதுதான்.

பாரதத்தின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாகத் திகழும் தமிழ்நாட்டையே பிரித்துவிட வேண்டும் என்று கூறும் இந்த அப்பட்டமான பிரிவினைவாதியிடம் இருந்து வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும் ? இதுபோன்ற தேசவிரோத பேச்சுக்கள் தேசப்பற்றுள்ள மக்களின் சகிப்புத்தன்மைக்கு சவால் விடக்கூடியதாக இருக்கின்றன; தேசபக்தர்களின் ரத்தத்தை கொதிப்படையச் செய்கின்றன. ஆனால் ஒரு சுரணையற்ற அரசாக மத்திய அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிக்கிறது. இவர்களைக் கண்டிக்க மறுக்கிறது. அதோடு இத்தகையவர்களுடன் கூட்டணி காண்கிறது மத்திய அரசின் பிரதான கட்சியான காங்கிரஸ். தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து ஒரே குட்டையில் ஊறும் மட்டையாக காங்கிரஸ் மாறி வருவதையே இவை காட்டுகின்றன.

iedசுதந்திரத் தினத்தின்போதோ, குடியரசு தினத்தின்போதோ பாகிஸ்தானின் கைக்கூலிகள் ஜம்மு – காஷ்மீரின் லால் சௌக்கில் பாகிஸ்தானின் தேசிய கொடியை ஏற்றலாம் அதை மத்திய அரசு கண்டுகொள்ளாது; ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நமது மண்ணில் நமது உரிமையை நிலைநாட்டும் வகையிலும் தேசபக்தியுடன் இந்திய தேசிய கொடியை ஏற்ற பா.ஜ.க. முயன்றால் அதை முழுமையாக எதிர்க்கும், எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தும் என்று மத்திய அரசே சொல்வது அதன் அடிமை மனோபாவத்தையே காட்டுகிறது.

பேடித்தனம் நிறைந்த ஒருவர் பிரதமராகவும், நமது நாட்டின் மீது தேசபக்தி இல்லாத விதேசி நாட்டைச் சேர்ந்த ஒருவர் காங்கிரசின் தலைவராகவும், இவர்களோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதையே கொள்கையாகக் கொண்டிருப்பவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்களாகவும் – இவர்களே இந்த தேசத்தின் எதிர்காலத்தை, இறையாண்மையை, மக்களை பாதுகாப்பவர்களாகவும்  – வாய்த்திருக்கிறார்கள். இதைவிட கெட்ட காலம் நாட்டிற்கு வேறு என்ன இருக்க முடியும்?

9 Replies to “இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!”

  1. அவன் ஒரு லூசு பா.. அவன் பேச்சுக்கெல்லாம் ஒரு போஸ்டா ?

  2. மக்கள் சரியாக இந்த தேச விரோத சக்திகளைப் புரிந்து கொள்ள வேண்டும்!
    தேர்தல்களில் சரியான படி வாக்குப் பதிவு செய்து தேச ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் அனைவருக்கும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்!

  3. திருமாவளவனின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. ஏனெனில் மத்திய அரசு தமிழக மீனவர்களின் பிரச்சினையை இந்திய மீனவர்களின் பிரச்சினையாக கருதவில்லை. அதேபோல் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் பிரபாகரனின் மேல் உள்ள கழ்ப்புனர்சியில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பதில் கோட்டை விட்டு விட்டது. மேலும் சுதந்திர இந்தியாவில் 862 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. படேல் தன் சமஸ்தானங்களை இந்தியாவுடன் பல்வேறு உபாயங்களை கொண்டு இணைத்தார். சமஸ்தான மன்னர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களாகவும், கேளிக்கை விரும்பிகளாகவும் இருந்ததால் தான் மக்களே மாற்றத்தை விரும்பினார்கள். ஆனால் அதற்காக இந்திய அரசு இன்று மக்களை அவர்தம் வழ்வாதரங்களிளிருந்து வாழ வழிவகை செய்யாமல் திரளான இடபெயர்வுக்கு வழி வகை செய்யும்போது (சுமார் 23 கோடி பேர் இந்தியாவில் அவர்தம் சொந்த மண்ணைவிட்டு வாழ வழியில்லாமல் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். மேலும் பன்னாட்டு கம்பனிகளின் தொழிற்சாலைகளுக்கும், சுரங்கங்களுக்க்காகவும் அரசின் கட்டாய வன் பெயர்வுக்கு ஆளானவர்கள் சுமார் 8 கோடி பேர் ) திருமாவளவன் போன்றவர்களின் எண்ணங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகும். 53 சதவீதம் பேர் இந்தியாவில் ஒருவேளை சோற்றுக்கும் கஷ்டப்படுகின்றான் நிலையில் இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் சென்று பிழைத்துக்கொள்ளும் வசதியும், படிப்பும் உள்ளவர்கள் வேண்டுமானால் தேச ஒற்றுமையை பற்றி வலியுறுத்தலாம். ஆனால் தங்கள் வழ்வதரங்களிலேயே தங்களால் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் படிக்காத, ஏழை இந்தியன் அரசிடமிருந்து எதிர்பார்ப்பதை ஆட்சியாளர்களும், மெத்த படித்த அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் கவனிக்க தவறியதால் தான் இன்றைக்கு இந்தியாவில் லட்சோப லட்சம் கட்சிகள் உருவாகிவிட்டன. படித்தவர்கலலேயே மெய்ப்பொருளை காண இயலவில்லை எனும்போது படிக்காத பாமரர்களை கட்சி தலைவர்கள் தங்கள் சுய லாபத்திற்கு பயன் படுத்துவதை தவிர்க்க இயலாது.

  4. //////திருமாவளவனின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. ஏனெனில் மத்திய அரசு தமிழக மீனவர்களின் பிரச்சினையை இந்திய மீனவர்களின் …………………………/////////
    இவர் புதிதாக எழுத ஆரம்பித்துள்ள பாபு, புதியவர், இனி அவர் பாபு என எழுத ஆரம்பித்துவிட்டதால் நான் என் மறுமொழிகளை பாபு என்று எழுதபோவதில்லை (குழப்பங்களை தவிர்ப்பதற்காக).

  5. அட என்னமோ போங்கப்பா !!! வேற்றுமையில் ஒட்ற்றுமை வெளில பேசி கைத்தட்டு வாங்கத்தான்…. உள்ளுக்குள்ள எல்லாத்தையும் பிரிச்சி பிச்சி போட்டுட்டு என்னத்த ஒற்றுமையா வாழ போறாங்களோ…..?

  6. கருணாநிதியின் கையாள்கள் பலரில் திருமாவும் ஒருவர். எனவே திருமாவின் வசனங்கள், மத்தியில் கொள்ளையடிக்கும் அரசில் பங்கு எடுக்கும் கருணாநிதியின், கைவிடநேர்ந்த மாநில சுயாட்சிக் கத்தலின், மறைமுகப் பிரதிபலிப்பே.

  7. இது ஒரு ஆபத்தான விளையாட்டு, இன்று மத்தியிலும் மாநிலத்திலும்/தமிழ் நாட்டிலும் ஆட்சியிலும், எதிர் கட்சியாகவும் இருபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, அகண்ட பாரதத்தை ஏற்காதவர்கள். இவர்கள் புறகணிக்க கூடியவர்கள் அல்ல, அதைவிட சக்தி வாய்ந்தவர்கள், கவனிக்கபடவேண்டியவர்கள்.

    இன்று இந்த சக்திகளுக்கு எதிராக தேசிய குரல் பலவீனம்கவே ஒளிகிறது, பரவலான பிரசாரம் இந்த சுயநலவாதிகளின் சுயரூபத்தை அம்பலபடுத்த அவசியம். தேசியத்யம் இந்த “உலக கிராம” (Global Village) சூழலில் அவசியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு முழுநேர பணியாளர்கள் அவசியம்.

  8. என்னுடைய நெடு நாளைய சந்தேகம், தீர்பவர்களுக்கு ஆயிரம் பாராட்டுக்கள்.
    இந்திய நாடு ஒரு மத சார்பற்ற நாடு என்கிறார்கள். ஆனால் எப்படி மதத்தின் அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை என்கிறர்கள்? மத அடிப்படையில் சட்டங்கள் எப்படி இருக்கின்றன? அனைவருக்கும் பொதுச் சட்டம் தானே இருக்க வேண்டும்.
    வெளிநாட்டிலிருந்து வந்த மதங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் மதக் கடவுள்கள் மட்டுமே உண்மையான தெய்வம் மற்றதெல்லாம் தவறு என்று கற்பிக்கின்றன. அதனால் மதக் கலவரங்கள் ஏற்படுகின்றன. ஆனால் ஹிந்துக்கள் அனைத்து கடவுள்களையும் வழிபாட்டு முறைகளையும் மதிக்கின்றான். ஆனால் அவனை மத வாதி எனவும் முஸ்லீம் கிருத்துவர்களை மதச் சார்பற்றவர்கள் போலவும் இந்த அரசியல் கட்சிகள் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாத்திக கட்சிகள் பழிக்கின்றன.
    இக்கட்சிகள் மதசார்பற்ற தன்மை என கூறிக்கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்த மதங்களைச் சார்ந்தவர்களுக்கு சலுகைகள் தருகின்றன.
    இந்த கம்யூனிஸ்ட் கட்சி காரர்கள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் அவர்களின் ஓட்டுக்காக செய்கின்ற அநியாயங்கள் நாடே அறியும், இவர்களெல்லோரும் எப்பொழுது தான் திருந்துவார்கள்?

  9. மதச்சார்பின்மைவாதிகள் என்போர் வெறும் வேடதாரிகள். பசுதோல் போர்த்திய புலிகள். மேடை ஏறினாலே பிஜேபி ஒரு மதவாத கட்சி என்றும் மசூதியை இடித்த அராஜக கட்சி என்போர் எனது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்வார்களா? மசூதி இடிக்கப்பட்டது தவறு என்றால் 12.3.1993 அன்று இந்திய பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் சொல்லிய தகவல்படி 1989 இல் 13 கோவில்களும் 1990 இல் 9 கோவில்களும் 1991 இல் 16 கோவில்களும் காஷ்மீரில் இடிக்கப்பட்டன, இடித்தவர்கள் யார் என்று நான் சொல்லத்தேவை இல்லை.(குறிப்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது 6.12.1992). அதற்கு முன்னாக அதாவது 1989 முதல் 1991 வரை 38 கோவில்கள் இடிக்கப்பட்டதை பற்றி ஏன் இந்த பசு தோல் போர்த்திய புலிகள் பேசுவதில்லை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *