இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்

இந்து மக்கள் கட்சியினரிடமிருந்து நமக்கு வந்த இந்த வேண்டுகோளை அப்படியே இங்கு தருகிறோம்.

hinduvotebank11

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் உதித்த இந்து சமய குருநாதர்களின் திருவடிகளை வணங்கி அவர்களின் நல்லாசிகளுடன் துவக்கப்பட்டுள்ள ‘இந்து ஓட்டு வங்கி’க்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தரும்படி வணங்கி வேண்டுகிறேன்.

இந்து என்று சொல்லுவோம்! ஓம் தலைநிமிர்ந்து செல்லுவோம்!!


இந்து ஓட்டு வங்கி

ஏன்? எதற்கு? எப்படி?

இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் தங்களின் ஒற்றுமை காரணமாக மதத் தலைமையின் வேண்டுகோளை ஏற்று வாக்களிக்கின்றனர். இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளை ஏற்கின்றனர்.

பெரும்பான்மை இந்து மக்களாகிய நாம் ஜாதி, சினிமாக் கவர்ச்சி, அரசியல் கட்சி என்கிற அடிப்படையில் பிரிந்து நின்றும், இலவசத் திட்டங்களில் மயங்கியும் வாக்களிக்கின்றோம். தற்போது இந்துக்களின் ஓட்டை விலைகொடுத்து வாங்கிவிட முடியும் என்கிற நிலைமையும் உள்ளது. இதன் காரணமாக எந்தவொரு அரசியல் கட்சியும், அரசாங்கமும் இந்துக்களின் நலன் குறித்துக் கவலைப்படுவதில்லை. இந்துக்களின் முன்னேற்றத்திற்காக எந்தவொரு செயலையும் செய்வதில்லை. ஏன்? இந்து என்று சொல்லிக் கொள்ளவே தயங்கும் சூழ்நிலை உள்ளது. தற்போது மதச்சார்பற்ற தன்மை என்கிற வார்த்தைக்கு அர்த்தமே இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவது என்றாகிவிட்டது.

இந்நிலையில் இந்துக்கள் ஒன்றுபட்டு இந்து தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் வாக்களிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தோன்றியுள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் தமிழகம் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கக் கூடிய சூழ்நிலையில் இந்த ‘இந்து ஓட்டு வங்கி’யை இந்து சமுதாய நலன் கருதித் துவங்கியுள்ளோம். இது இந்து மக்கள் கட்சிக்கான அல்லது பாரதீய ஜனதா கட்சிக்கான ஓட்டு வங்கி அல்ல.

இந்து மக்கள் கட்சி இந்த ஓட்டு வங்கியைத் துவங்கியிருந்தாலும், “இந்து சமுதாயத்தின் நலன் பெரிதா? கட்சி நலன் பெரிதா?” என்று வரும்போது நாங்கள் இந்து சமுதாய நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்போம் என்கிற உறுதியை உங்களுக்குத் தருகிறோம்.

 • தமிழகத்தில் இந்துக்களின் ஜனத்தொகை வெகு வேகமாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழர் கலாசாரம், பண்பாடு ஆகியவை அழிந்து வருகிறது.
 • இந்துக் கோயில்களின் நிர்வாகம் அரசு மற்றும் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. திருக்கோயில் வருமானத்தை மட்டும் அரசு அபகரித்துக் கொள்கிறது.
 • hinduvotebank2இஸ்லாமிய பயங்கரவாதம், கிறிஸ்தவ மோசடி மத மாற்றம் ஆகியவற்றின் காரணமாக தமிழக இந்துக்கள் அஞ்சு வாழும் சூழ்நிலை.
 • தமிழர்கள் கல்வி நிறுவனங்கள் துவங்கி நடத்துவதற்கு அரசு மூலம் பல்வேறு தடைகள், இஸ்லாமியர், கிறிஸ்துவர் கல்வி நிறுவனங்கள் துவக்கினால் அரசு சலுகைகள். கல்வி உதவித் தொகை வழங்குவதில்கூட இந்து மாணவர்களுக்கு அநீதி.
 • பொது இடங்களில் இந்துக் கோயில் ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்துவதற்குப் பல்வேறு விதமான தடைகள், இந்து இயக்கங்களின் மீது அடக்குமுறை நடவடிக்கைகள்.
 • இந்து துறவிகள், மடாதிபதிகள் மற்றும் இந்து சமய நம்பிக்கைகளை இழித்தும், பழித்தும், அவமதித்தும் நாள்தோறும் செய்திகள்.
 • தமிழர்கள் தெய்வமாக வணங்கும் பசுமாட்டை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அவலநிலை.
 • அரசு மதுபானக் கடைகளின் வியாபாரப் பெருக்கம் காரணமாகக் குடிப்பழக்கத்தினால் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து வரும் சூழ்நிலை.
 • இலங்கை, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்துத் தமிழர்கள் அடித்து விரட்டியடிக்கப்படும் அவலநிலை.

இந்த இழிவுநிலை மாறிட, இந்துக்களின் உரிமையை மீட்டிட, தாய்நாடு, தாய்மதம், தாய்மொழி காத்திட– இந்து ஓட்டு வங்கியில் நம்மையும், நம் குடும்பத்தாரையும் பதிவுசெய்து கொள்வோம்.

நமது ஓட்டை அரசியல்வாதிகள் கொடுக்கும் நோட்டுக்கு விற்பது பெற்ற தாயை விற்பதற்குச் சமமாகும்.

hinduvotebank_applicationform

ஜனநாயக நாட்டின் மிக வலிமையான ஆயுதம் ஓட்டு. அந்த ஓட்டைக் கையில் வைத்துள்ள நாம் தேச பக்தியோடும் தெய்வ பக்தியோடும் இந்து ஓட்டு வங்கியில் பதிவுசெய்து நாட்டு நலன் காத்திடுவோம்.

இந்துக்கள் அரசியல் அநாதைகள் ஆகி விடாமல் தடுத்திட!

இந்து சமுதாய நலன் காத்திட!

தங்கள் மேலான ஆதரவு, ஆலோசனைகள், பிரசார-விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ள விரும்பும் தனிநபர்கள் மற்றும் ஆன்மிக இந்துசமய அமைப்புகள் அனைவரும் உடனடியாகத் தொடர்பு கொள்வீர்.

தொடர்புக்கு

திரு.அர்ஜுன் சம்பத்,
நிறுவனர், இந்து ஓட்டுவங்கி,
தலைவர், இந்து மக்கள் கட்சி,

130, வீரகணேச நகர்,
கெம்பட்டி காலனி,
கோயம்புத்தூர் – 641 001.

தொலைபேசி : 0422 – 2394877
தொலைநகல் : 0422 – 2349922
கைப்பேசி    : 098422 44833094421 54833
மின் அஞ்சல் :
imkarjunsampath@yahoo.co.in
இணையத்தளம் : http://imkhindu.com/

Tags: , , , , , , , , , , , , , ,

 

42 மறுமொழிகள் இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்

 1. வித்யா நிதி on February 16, 2011 at 11:26 am

  இந்து வாக்கு வங்கியை உருவாக்கி ஜெயலலிதாவிடம் அடகு வைத்து பலன் பெற முயர்ச்சிப்பவர்களிடம் ஏமாறவேண்டாம்.

  வித்யா நிதி

 2. சஹ்ரிதயன் on February 16, 2011 at 12:23 pm

  இந்திய தேசம் என்ற பெரிய வட்டத்தில் இருந்து இறங்கி “இந்து சமுதாயம்” மட்டும் என்று கூறுகியது வருந்த தக்க நிகழ்வு ஆனால் “பாதுகாப்பு” முக்கியம் வேறு வழி தென் பட வில்லை ?!

  சஹ்ரிதயன்

 3. v.ganessan on February 16, 2011 at 1:56 pm

  pls read the nakkeeran dated dec 04 2010 issue. these narayani peedam has supported a movement to defaet bjp in tamilnadu. pls read that nakkeeran and guide us.

 4. சீனு on February 16, 2011 at 2:22 pm

  அதெல்லாம் சரிங்க. புட்டபர்த்தி பாபாவும், கல்கி பகவானும், வேலூர் ‘அம்மா’ பகவானும், பாங்காரு அடிகளாரும், இவங்கள்லாம் இந்து மதத்த காப்பாற்றுபவர்களா? அதுவும் கல்கி பகவான்(?). தமிழ் இந்து தளம் போகும் திசை முற்றிலும் மாறியிருக்கிறது. இது நல்லதற்கல்ல.

 5. Mohandas on February 16, 2011 at 2:49 pm

  ஹிந்துக்களிடம் தங்கள் மதம் சார்ந்த அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்பதை நான் வலியுறுத்துகிறேன். தங்களது மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்காத, அவற்றை எதிர்க்கும் எண்ணமும் பாரம்பரியமும் கொண்ட அரசியல் கட்சிகளை, அரசியல்வாதிகளை ஹிந்துக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும். இந்த கண்ணோட்டம் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் இந்த வேகம் போதாது. இதை இன்னும் வேகமாக பரப்ப வேண்டிய கடமை இந்த விழிப்புணர்வை பெற்றுவிட்டர்களுக்கு இருக்கிறது.
  இதை ஒருங்கிணைக்க வேண்டும் எனும் நோக்கில் ‘இந்து ஓட்டு வங்கி’ உருவாக்கப்பட்டிருக்கிறது. நோக்கத்தில் பிழை காணும் எண்ணம் ஏதும் இல்லை. ஆனாலும் வாக்களிப்பது என்பது தனி நபர் உரிமை. இந்த உரிமையை சத்தியம் செய்து வேறொருவருக்கு அளிப்பது, ஒருவரது வாக்களிக்கும் தனிப்பட்ட உரிமையை சத்தியத்தின் மூலம் பெறுவது இரண்டுமே ஏற்கக்கூடியது அல்ல. விழிப்புணர்வு பெற்றவர்கள் தங்கள் உரிமை தங்களிடம் இருப்பதையே விரும்புவார்கள். தன்னை முற்றாகச் சரணடைந்த அர்ஜூனனிடம், ‘இனி நான் சொல்வதைச் செய்’ என்று பகவான் கண்ணன் கூறவில்லை. அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த கண்ணன், ‘நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். இனி உன் முடிவை நீயே எடு’ என்றுதான் கூறினார். இந்து பாரம்பரியத்தின் இந்த அணுகுமுறையே நமது பெருமை.
  தற்போதைய தேவை பொதுக்கருத்தை உருவாக்குவதுதான். இந்த பொதுக்கருத்தை வலிமையாக உருவாக்கியதால்தான் குஜராத்தை ஹிந்து எதிரிகளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஹிந்து ஆதரவு கட்சியான பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சிக் கட்சியாக இருப்பதற்கு காரணமும் அங்கெல்லாம் ஹிந்து ஆதரவு கருத்துக்கள் மக்களிடம் வலிமை பெற்றிருப்பதுதான். அந்த மக்கள்தான் (சென்ற நூற்றாண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில்) பா.ஜ.க. – வை அறுதிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக இரண்டு முறை உருவாக்கினார்கள். பிறகு அவர்கள்தான் அந்நிலையில் இருந்து அக்கட்சியை கீழேயும் இறக்கினார்கள். இத்தகைய சுதந்திரம்தான் இந்த தேச மக்களுக்கு முக்கியம்.
  ஹிந்துக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், பொதுக்கருத்தை உருவாக்குவதில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் யார் ஹிந்துக்களுக்கு ஆதாரவாக திகழ்கிறார்களோ அவர்களை தேர்தலின்போது ஹிந்துக்கள் ஆதரிக்கப்போகிறார்கள்.
  ஏதோ தி.மு.க. – வும் ஆ.தி.மு.க. – வும்தான் தமிழ்நாட்டை காலாகாலத்திற்கும் ஆளப்போகிறார்களா என்ன? பெரும்பாலான மக்கள் ஹிந்து உணர்வுள்ளவர்களாக இருக்கும் இடங்களில் ஆட்சியாளர்களும் அவ்வாறேதான் இருக்கிறார்கள். தமிழகம் இதற்கு விதிவிலக்காக இருக்கப்போவதில்லை. இன்றைய இந்த நிலை நிச்சயம் மாறும். அப்போது ஹிந்து சிந்தனை உள்ளவர்களே இந்த மாநிலத்தை ஆள்பவர்களாக இருப்பார்கள். இன்றைய தமிழக அரசியல் சூழிலில் ‘இந்து ஓட்டு வங்கி’ எனும் இயக்கம் அவசியம் தேவை என்பதாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இது நீண்ட நெடிய நோக்கில் ஆரோக்கியமற்றது என்றே எனக்குத் தோன்றுகிறது.

 6. திரிசூல சக்தி on February 16, 2011 at 3:43 pm

  வெற்றி பெற வாழ்த்துக்கள். இதில் எப்படி பெயர்களை பதிவு செய்ய வேண்டும்?

 7. kannapiran on February 16, 2011 at 3:58 pm

  nalla muyarchi thiru sambath avarkale

  நமது ஓட்டை அரசியல்வாதிகள் கொடுக்கும் நோட்டுக்கு விற்பது பெற்ற தாயை விற்பதற்குச் சமமாகும்.

  super…….

  ethai vaasikkum ovvoruvarum kuraindhathu 2 hindu sagotharatukku forward seyyavum

  Kannapiran

 8. snkm on February 16, 2011 at 5:07 pm

  நன்று! ஹிந்துக்களை ஒற்றுமைப் படுத்த முன் வருவோருக்கு கரம் கொடுப்போம்! ஹிந்துக்களின் ஒற்றுமையை அனைவருக்கும் உணர்த்துவோம்!

 9. திரிசூல சக்தி on February 16, 2011 at 7:51 pm

  இந்துக்கள் அரசியலிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினால், கே(கோ)டி ஜிகாத்கள் வந்தாலும் சரி, கே(கோ)டி பாதிரிகள் வந்தாலம் சரி, நம் மதத்தையும் நாட்டையும் ஒன்றும் செய்துவிட முடியாது.

 10. raja on February 17, 2011 at 4:50 am

  இது நல்ல முயற்சி. திரு.அர்ஜூன் சம்பத் அவர்களைப் பாராட்டுகிறேன். திராவிட கட்சிகளிலும் , கம்யுனிஸ்ட்களிலும் உள்ள இந்துக்கள் இந்து ஓட்டு வங்கிக்கு மாறிவிட்டால் நிச்சயம் மாபெரும் மாற்றம் ஏற்படும்.

 11. vedamgopal on February 17, 2011 at 6:02 am

  இந்து தர்ம சக்தி என்ற ஒரு இயக்கத்தை சுவாமி நித்தியாநன்தா அமைப்பும் வேறு பல இந்து ஆதினமடங்களை ஒன்றாக இணைத்து இந்தமாதம் 13 ஆம் தேதி சென்னையில் ஒரு பொதுகூட்டத்தை நடத்தியது. இந்த இயக்கத்தின் கல்வெட்டை திரு.எஸ்.வி.சேகர் திறந்து வைத்தார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தவிழா தமிழகத்திலும் இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள் என்பதை உரைநிகழ்திய தலைவர்கள் பேச்சில் தெளிவாக தெரிந்தது. இப்படி தனிதனியே பல இந்து இயக்கங்கள் செயல்படுகிறது. இதில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய இயக்கம் ”இந்து ஜன ஜக்ருதி சமிதி ”. இது இந்தியாவில் பல மாநிலங்களில் சிறப்பாக செயல் படுகிறது. ஆனால் இதற்கு தமிழ் நாட்டில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இந்த இயக்கம் வரும் 20ஆம் தேதி சென்னை மயிலையில் உள்ள பி.எஸ். உயர்நிலைபள்ளியில் 5 மணியளவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் திரு.முரளிதர ஸ்சுவாமிகள் உரையாற்றுகிறார்.

  இப்படி தனிதனியே இயங்கும் இந்து சக்திகளை இணைப்பது பெரிய கேள்விகுறியாக உள்ளது ? மேலும் பாரதிய ஜனதா அரசு நடத்தும் மாநிலங்களில் இப்படி இந்துகளை ஒருகிணைக்கும் கூட்டங்கள் நடத்துவது சாத்தியமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் பல தடைகளைமீறி சில சமயங்களில் கோரட் வரையில் சென்று கூட்டம் நடத்த உத்திரவு பெறவேண்டியுள்ளது.

  என்னை பொறுத்தமட்டில் இந்து இயக்ககூட்டம் என்றால் சென்னையில் எங்கு நடந்தாலும் யார் நடத்தினாலும் பங்குகொள்கிறேன். இப்படி நம்முள் இருக்கும் வேற்றுமைகளை ஒதுக்கி இயக்கத்தை நடத்துபவரின் பின்புலன்களை பற்றியெல்லாம் சற்று மறந்து அனைவரும் அன்னிய மத ஆதிக்கத்தை ஒடுக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று தள்ளப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

 12. vedamgopal on February 17, 2011 at 7:08 am

  இந்துக்களின் குறைந்த பஷ்ச எதிர்பார்ப்பு இதுதான் ?

  1. இந்து கோவில்களை அரசாங்க பிடியிலிருந்து விடுவிக்கவேண்டும்
  2. இன்று உலகில் சிறுபான்மையினர் என்றால் அது இந்துக்கள்தான். அரபு நாடுகளிலிருந்தும் மேற்கத்திய நாடுகளிலிருந்தும் கோடி கோடியாக வெள்ளம் போல் பணம் நாம் சிறுபான்மை என்று சொல்லும் முஸ்லீம்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் வந்துகொண்டிருக்கிறது. எனவே அவர்களுக்கு எந்த ஒரு தனி சலுகைகளும் இன்று தேவையில்லை. எனவே இந்த சிறுபான்மையினர் என்ற அடையாளம் ஒழிக்கப்படவேண்டும்.
  3. மத மாற்றம் கட்டாயம் தடைசெய்யபடவேண்டும்.
  4. தீவிரவாதத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தாமதிக்காமல் தண்டிக்க வேண்டும்

  இப்படி வெளிபடையாக அறிவித்து எந்த ஒரு இந்து இயக்கமாவது தேர்தலில் போட்டியிடும் என்றால் நிச்சயம் பெருன்பான்மை இந்துக்கள் ஆதரவு தருவார்கள். இன்றுள்ள எந்த அரசியல் கட்சிக்கும் இந்த திராணி கிடையாது ?

 13. satheesh on February 17, 2011 at 8:42 am

  நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

 14. Keerthi on February 17, 2011 at 9:09 am

  இந்த ஓட்டு வங்கியில் பதிவு செய்ய ஆன்லைனில் வசதி செய்து கொடுத்தால் நன்று.

 15. ச.திருமலை on February 17, 2011 at 10:20 am

  அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு

  நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் வெளிநாட்டில் வசித்தாலும் பெற்றோர் உறவினர் அனைவரிடமும் இதைப் பரப்புகிறேன். ஒரு ஆன்லைன் தளமும் ஆரம்பித்து பெயர்களை சேகரிப்பது நல்லது.

  அன்புடன்
  ச.திருமலை

 16. virutcham on February 17, 2011 at 12:10 pm

  மதத் தலைவர்கள் குருமார்கள் சாமியார்கள் புகைப்படங்களுடன் இப்படி வாக்கு சேகரிப்பது சங்கடத்தை தருகிறது.
  இந்துக்களில் பலர் ஏதாவது சாமியார்களை நாடுபவர்களாக இருக்கலாம். ஆனால் அனைத்து இந்துக்களும் அப்படி இல்லை. இந்துக்களை ஒற்றுமைபடுத்த இன்றைக்கு சமுதாய ரீதியாக இந்துக்கள் நேரடியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் அல்லது இந்த வாக்கு சேகரிப்பவர்கள் என்ன செய்வார்கள், இந்த ஓட்டுக்களை வைத்துக் கொண்டு இதை ஆக்க பூர்வமாக முன்னெடுத்து செல்ல என்ன வகையான திட்டங்கள் இருக்கிறது என்று எதுவுமே சொல்லாமல் இப்படி ஒட்டு கேட்பது சரியா வருமா?

 17. க்ருஷ்ணகுமார் on February 17, 2011 at 2:28 pm

  வாழ்த்துக்கள் ஸ்ரீமான் அர்ஜுன் ஸம்பத். பற்பல கருத்துள்ள ஹிந்துக்கள், தங்கள் பொது நலத்திற்காகவும் தேச நலத்தையும் தேச ஒருமைப்பாட்டையும் குலைக்கும் ஆப்ரஹாமிய சக்திகளை களையறுக்கவும் வேண்டி ஒன்று சேர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

  \\\\\\\\\\என்னை பொறுத்தமட்டில் இந்து இயக்ககூட்டம் என்றால் சென்னையில் எங்கு நடந்தாலும் யார் நடத்தினாலும் பங்குகொள்கிறேன். இப்படி நம்முள் இருக்கும் வேற்றுமைகளை ஒதுக்கி இயக்கத்தை நடத்துபவரின் பின்புலன்களை பற்றியெல்லாம் சற்று மறந்து அனைவரும் அன்னிய மத ஆதிக்கத்தை ஒடுக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று தள்ளப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.\\\\\\\\\

  மிக முக்யமான கருத்து. யஹூதிகளிடமிருந்து ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று கருத்து வேற்றுமைகளுக்கிடையிலும் பொது நலத்திற்காக ஒன்று படுவது எப்படி என்று.

  பற்பல இடங்களில் ஏற்கனவே பற்பல ப்ரச்சினைகளுக்காக ஜாதி வித்யாசமின்றி ஹிந்துக்கள் ஒன்று பட்டு போராடியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் போது ஈரோடு மாரியம்மன் கோவில் நில ப்ரச்சினை, மதறாஸில் சாலையோர கோவில் இடிப்பு ப்ரச்சினை (இதற்காக ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்கள் தனியொரு பெண்மணியாக பலமுறை மதறாஸ் ந்யாயாலயப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியுள்ளார் – கீழே சுட்டிகளை அவசியம் படிக்கவும்) போன்ற பல ப்ரச்சினைகளுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்க அபேக்ஷகர்களிடம் வாக்குறுதி வாங்க வேண்டும்.

  http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1504
  http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1505

  ஸத்யமேவ ஜயதே!

 18. thayumanavan on February 18, 2011 at 11:05 pm

  ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க விழைகிறேன் …. இலங்கையில் 2009 இல் நடந்த உக்கிரமான போரில் 1 ,50 ,000 தமிழர்கள் கேள்வி கேட்பாரற்று கொடூரமாக விரட்டி விரட்டி கொல்லபட்டார்கள்.. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஹிந்துக்கள் தான்.. வேதியியல் ( phosphorous ) குண்டுகள் . பல்குழல் பிரங்கி ( multi barrel tanks ) போன்ற கொடுரமான ஆயுதங்களால் இரக்கமின்றி அப்பாவி பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் கொல்லபட்டார்கள் . இன்றும் பல ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தரம்தாழ்ந்த நிலையில் மிருகங்கள் போல் கேவலமாக நடத்த படுகிறார்கள் அவர்கள் அனைவரும் 90 விழுக்காடு ஹிந்து தமிழர்கள் தான். அங்கு இருக்கும் பெரும்பாலான ஹிந்து கோயில்கள் போரில் தரை மட்டம் ஆக்கப்பட்டு விட்டது.. ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள் அவர்கள் ( தமிழர்கள் ) கொல்லப்பட்டது இரண்டு விஷயத்திற்காக ஒன்று அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதற்காக .. இரண்டு அவர்கள் பின்பற்றியது ஹிந்து மதம் என்பதற்காக கொலைவெறி பிடித்த பவுத்த சிங்களர்களால் படுகொலை செய்ய பட்டார்கள் .. நான் கேட்பது ஒன்று தான் இப்போது ஹிந்துகள் ஒட்டு வங்கி என்று தமிழர்களிடம் கையேந்தும் இந்த ஹிந்து அமைப்புகள் அன்றும் இன்றும் இலங்கையில் தமிழர்கள் கருவருக்க படும் போது என்ன செய்து கொண்டு இருந்தது என்ன செய்து இருக்கிறது . எதனை ஹிந்து மத தலைவர்கள் அதற்காக போராடினார்கள். எந்த ஹிந்து அமைப்பு போர் நிறுத்தப்பட வேண்டும் என்று போராடியது மனசாட்சி உடன் உண்மையை சொல்லுங்கள் பார்போம் . அனால் சமஸ்கிருத மொழிக்கு முன்பாக தமிழ் உருவானது என்று ஒரு பேச்சு வந்தால் போதும் வரிந்து கட்டி கொண்டு வந்துவிடுவார்கள் இந்த ஹிந்து மத பாதுகாவலர்கள் . முதலில் நீங்கள் தமிழர்களின் உரிமைகளை மீட்டுஎடுங்கள். உலகில் எந்த மூலையில் இருக்கும் ஹிந்து தமிழனின் பாதுகாப்பிற்கு குரல் கொடுங்கள். தமிழர்களின் தனி தன்மையை ஆரியத்திற்கு அடிமை படுத்தாமல் இருங்கள் . தமிழர்களுக்கு எதாவது ஒரு உருப்படியான நன்மையை செய்து விட்டு அதன் பிறகு இது போல் நீங்கள் ஒட்டு வங்கி என்று தமிழர்களிடம் கேளுங்கள். நன்றி

 19. Tamilan on February 19, 2011 at 12:04 pm

  திரு தாயுமானவன் அவர்களுக்கு வணக்கம் , ஈழ தமிழ் ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்து வரும் அர்ஜுன் சம்பத் மற்றும் Sri ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா? இவர்கள் இருவரும் பல முறை இலங்கைக்கு நேரில் சென்று தமிழர்களுக்கு ஆதரவு மற்றும் உதவி செய்ததை தமிழ் செய்திதாள்கள் வெளிடவில்லை என்பது வருத்தமான செய்தி.

 20. திராவிடன் (தென்னாடுடையான்) on February 19, 2011 at 3:22 pm

  திரு தாயுமானவர் அவர்களே,
  இலங்கையில் அர்ஜுன் சம்பத்தும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும்,மாதா அமிர்தானந்தமாயியும்,சைவ திருத்தொண்டர் கூட்டங்களும் செய்த தொண்டுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதை தாங்கள் அறிந்திருக்கவில்லை.

  இலங்கையில் ஏற்பட்டது போல் இந்தியாவிலும் இந்துக்களை நசுக்கி சிறுபான்மை மக்களாக்கி பின் இலங்கை சம்பவம் போல் கொன்று குவிக்கும் செயல் நடந்து விடாமல் இருப்பதர்க்காகவேனும் இங்கே இந்துக்கள் அரசியல் ரீதியுலும் ஒன்று பட்டு வலிமையை காண்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
  ஒன்று பட்டு வரவிருக்கும் அபாயங்களை தடுப்பதற்காக தான் இந்த ஒட்டு வங்கி. அதனை குறை சொல்வது ஒரு சுய சிந்தயுள்ள, இந்துக்களின் நலம் விரும்பும் இந்துவுக்கு மனம் வராது. கலைஞ்சரின் வாரிசுகளுக்கும்,தொண்டர்களுக்குமே வரும்.
  உயர்வுள்ள தாயுமானவர் பெயரை கொண்டிருக்கும் தாங்களின் எண்ணம் என்னவோ?

 21. ANUSH on February 19, 2011 at 8:41 pm

  KUMARI MANATTATAI CHURCHUKAL NERINTA MAVATTAMAKA MATUVEN ENDU SONNA JEYALALITHAVAI VITU VELIA VANTU VIDU INTA MATIRI MUYARCHIKALIL IDUPADUNGAL

 22. thayumanavan on February 19, 2011 at 10:28 pm

  தமிழன் மற்றும் திராவிடன் அவர்களுக்கு …..

  எனக்கு ஹிந்து மதத்தின் மீதோ அல்லது ஹிந்து மத அமைப்புகள் மீதோ எந்த தனி பட்ட கோபமோ வெறுப்போ கிடையாது .. இன்னும் சொல்ல போனால் நான் கடவுளை மறுக்கும் நாத்திகன் அல்ல.. ஹிந்து மதத்தை ஆத்மார்த்தமாக நேசிபவர்களில் நானும் ஒருவன் .. நான் வெளிபடுத்தியது எல்லாம் என் ஆழ் மனதில் இருக்கும் வேதனைகளையும் குமுறல்களையும் தான். அனைவரும் வருத்தப்பட்டு சொல்வது ஒன்று தான் அங்கே இலங்கையில் தமிழர்கள் நாதி இல்லாமல் இனப்படுகொலை செய்யப்பட்ட போது அருகில் 6 கோடி தமிழர்கள் இருந்தும் காப்பாற்ற முடியவில்லையே என்று தான் . நான் அப்படி கூட நினைக்கவில்லை. என் என்னமோ அவ்வாறு எண்ணவில்லை . கூப்பிடும் தூரத்தில் 80 கோடி ஹிந்துக்கள் இருந்தும் 1 ,50 ,000 ஹிந்துக்களை காப்பாற்ற முடியவில்லையே என்ற கையறு நிலை வேதனையை தான் வெளிபடுத்தினேன் இதுவே ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருந்தால் இந்நேரம் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தங்கள் நாட்டு வருமானத்தை செலவுசெய்தேனும் அவர்களுக்கு ஆயுதங்களை கொட்டி கொடுத்து அவர்கள் உரிமைகளை மீட்டு எடுதிருக்கும் … அவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்தால் என்றோ இலங்கை இரண்டாக உடைந்திருக்கும் தனி ஈழம் மலர்ந்து இருக்கும் . ஆனால் அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் அவர்களுக்கு ஹிந்துக்கள் ஆகிய நாம் தான் அதற்கு உதவி செய்ய வேண்டும் இங்கே மறுமொழியில் கூறியது போல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ,அர்ஜுன் சம்பத் மற்றும் சைவ திருத்தொண்டர்கள் இலங்கைக்கு சென்று பல உதவிகள் செய்தார்கள் என்று கேள்விப்படும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது . ஆனால் அவர்கள் இப்போது வேண்டுவது உணவு, துணி போன்ற அடிப்படை உதவிகளை அல்ல. அவர்கள் கேட்பது அடிப்படை உரிமைகளை. ஹிந்து தமிழர்கள் என்ற அடையாளத்தோடு சுதந்திரமாக வாழ வேண்டும்.அவர்கள் மொழி விஷயத்திலோ, மத சுதந்திரத்திலோ அவர்கள் தாய் மண்ணிலோ சிங்களர்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க வேண்டும் அதற்கு ஹிந்துக்கள் ஆகிய நாம் ஒன்றுபட்டு உதவி செய்ய வேண்டும். சுவாமி விவேகானந்தரும் மகாத்மா காந்தியும் இலங்கை சென்றது தமிழர்களின் அழைப்பில் தான். இந்திய தமிழர்களை காட்டிலும் ஹிந்து மதத்தை மிகவும் நேசிப்பது இலங்கை தமிழர்கள் தான். இந்தியாவின் மீதும் ஹிந்து மதத்தின் மீதும் நம் ஹிந்து மகான்கள் மீதும் அளப்பரிய மரியாதையும் மதிப்பும் வைத்து இருப்பது அவர்கள் தான் . அதனால் தமிழர்களின் உரிமையை அது இந்திய தமிழர்களோ இல்லை உலக தமிழர்களோ அவர்களின் உரிமையை மீட்டு எடுப்பதில் இந்துக்கள் ஆகிய நாம் தான் குரல் குடுக்க வேண்டும் என்று என் தாழ்மையான கருத்தை நிறைவு செய்து கொள்கிறேன். நன்றி

 23. kargil_jay on February 20, 2011 at 7:15 am

  திரு தாயுமானவன்,

  சிவசேனா , நோர்வே , ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இன்னும் சில ஹிந்து ஹிந்துக்கள், வலிவில்லாத நான், நீங்கள் இலங்கைத் தமிழர்களைக் பற்றி கவலைப் பட்டோம்.

  பி.ஜே.பி, அதிமுக மற்றும் ஜனதா கட்சியினர் பொதுவாக விடுதலைப் புலிகள் அழியவேண்டும் என்று விரும்பினர். அவர்களுக்கு தமிழர்களின் மேல் பெரிய பற்று ஒன்றும் இல்லை. அதனால் எதுவும் செய்யவில்லை.

  காங்கிரசார் , திமுகவினர், இஸ்லாமியர் , கம்யூனிஸ்டுகள் விடுதலைப் புலிகள் அழிவதற்காக பெரும் பாடு பட்டனர். சிங்கள ராணுவத்திற்கு பேருதவி செய்தனர். இந்திய சாடலைட்கள் விடுதலைப் புலிகளின் ராணுவ நடமாட்டத்தை துல்லியமாக வழங்கின. சீனாவும் , வங்காளதேசமும் ராணுவ தடவாளங்களை அள்ளி வழங்கின. விடுதலைப் புலிகள் அழிந்தனர். சாதாரணத் தமிழ் மக்களும் அழிந்தனர்.

  இதில் தமிழ் ஹிந்து என்ன செய்ய முடியும்? விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதினால் சிறையில் அடைக்க சட்டம் உள்ளதே. ஹிந்துக்களும் தமிழர்களும் வேவ்வேறானவர் என்று திராவிட இயக்கங்கள் பிரித்துள்ளன. ஆதலால் ஹிந்துக்களுக்கு இலங்கைத் தமிழர்களைப் பற்றி கவலைப்படக் கூட உரிமை இல்லை. தமிழர்களுக்கு காஷ்மீரில் ஹிந்துக்கள் இறந்தாலோ, வங்காளத்தில் அடிமைப்பட்டலோ கவலை இருப்பதில்லை. இதெல்லாம் சரியில்லை.. தமிழனும் ஹிந்துவும் ஒன்றுதான்.. தமிழன் ஹிந்துவே.. புராணங்களும், இலக்கியங்களும் பக்தியைச் சொல்லிச் சொல்லி தமிழையும் , தமிழைச் சொல்லி சொல்லி பக்தியையும் வளர்த்தனர். ஆகவே தமிழ், ஹிந்து இரண்டும் ஒன்றுதான் என்பதே இந்த வெப்சைட்டின் நோக்கமே. ஆனால் திராவிட இயக்கங்கள் தமிழருக்கும், ஹிந்துக்களுக்கும் பிரக்ஞை இல்லாமல் செய்துவிட்டனவே? இதையெல்லாம் நான் இப்போது சொல்லவில்லை.. இரண்டு வருடங்களுக்கு முன்பே எழுதி இருக்கிறேன்: http://thinnai-1jaykumar.blogspot.com/2009/02/blog-post_20.html

  சரி, உங்களிடம் ஒரு கேள்வி. காஷ்மீரத்தில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டபோது தமிழர்கள் என்ன செய்தார்கள்?

 24. களிமிகு கணபதி on February 20, 2011 at 5:12 pm

  //….பி.ஜே.பி, அதிமுக மற்றும் ஜனதா கட்சியினர் பொதுவாக விடுதலைப் புலிகள் அழியவேண்டும் என்று விரும்பினர். அவர்களுக்கு தமிழர்களின் மேல் பெரிய பற்று ஒன்றும் இல்லை. …//

  பிஜேபியினர் ஆரம்ப காலங்களில் இருந்தே இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்து வந்தனர். வாஜ்பாய் தலைமையிலான குழு, இலங்கையில் உள்ள போராளி அமைப்புக்களை ஒன்றிணைக்கும் முயற்சியைச் செய்தது. அதை திமுக உள்ளிட்ட திராவிடர் கழக அமைப்புக்களும், காங்கிரஸ் கட்சியும் சிதைத்தன. பாஜபா ஆட்சிக்கு வந்தபோது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே அப்போதைய ராணுவ அமைச்சர் குரல் கொடுத்தார்.

 25. kargil_jay on February 20, 2011 at 8:33 pm

  களிமிகு கணபதி

  //பிஜேபியினர் ஆரம்ப காலங்களில் இருந்தே இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்து வந்தனர். வாஜ்பாய் தலைமையிலான குழு, இலங்கையில் உள்ள போராளி அமைப்புக்களை ஒன்றிணைக்கும் முயற்சியைச் செய்தது. அதை திமுக உள்ளிட்ட திராவிடர் கழக அமைப்புக்களும், காங்கிரஸ் கட்சியும் சிதைத்தன. பாஜபா ஆட்சிக்கு வந்தபோது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே அப்போதைய ராணுவ அமைச்சர் குரல் கொடுத்தார். //

  இது தவறான பதிவு. இரண்டு வருடம் முன்பு ஆனந்த விகடனி ஒரு இரண்டு பக்க பெட்டி வந்திருந்தது. அதில் பிஜேபியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் “ஆரம்ப காலத்திலிருந்தே விடுதலைப் புலிகளை முற்றிலும் அழித்து அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்பதே எங்கள் நிலை” என்பது மாதிரி கருத்து பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனந்த விகடன் இந்திய இளைஞர்களை தவறான பாதையில் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட பத்திரிக்கை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அந்த பேட்டி திரிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் பிஜேபி அதற்கான விளக்க அறிக்கையை அளித்திருக்கவேண்டும். பிஜேபி ‘ஹோகேநேக்கள் நம்மளுதே’ என்று கத்தி தமிழனுக்கு நியாயம் வழங்காத கட்சியே. இருந்தாலும் திமுக, காங்கிரஸ் மாதிரி அன்பாக நடித்து ரத்தம் குடித்து எதிரியின் காலில் விழும் கட்சி அல்ல : http://www.youtube.com/watch?v=zxa2d2QqDus

 26. kargil_jay on February 20, 2011 at 8:52 pm

  திரு தாயுமானவன்,
  களிமிகு கணபதி அவர்கள் எழுதியிருப்பது போல், ஒருகாலத்தில் பிஜேபியினர் சிலர் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசி இருந்தாலும், யாரும் போரின் உச்சத்தில் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழருக்காகப் போராடவில்லை.. ஒரு வேளை அந்த சமயத்தில் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறாமல் செய்யவேண்டும் அதற்கு விடுதலைப் புலிகளின்மேல் தப்பெண்ணம் உள்ளவர்களின் வோட்டு வேண்டும் என்பதற்காக இதை அமுக்கி வாசித்தர்களோ என்னவோ….

  ஆனால் இதுதான் 90 % ஹிந்துக்களின் நிலைமை :
  காஷ்மீர ஹிந்துக்கள் எண்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டாலே ‘அட பாவமே..சரி ஒலியும் ஒளியும் போடு’ என்ற அளவில்தான் இருவது வருடம் முன்பே.. இப்போது போய் இலங்கைத் தமிழனுக்காக வருத்தப் படப் போகிறார்களா? தமிழ் ஹிந்துவில் சில சான்றோர்கள் செய்துகொண்டிருப்பது அந்த 90 % ஹிந்துக்களுக்கு உணர்வளிக்கும் முயற்சியே ..

 27. thayumanavan on February 20, 2011 at 10:52 pm

  வணக்கம் திரு . கார்கில் jay .
  நீங்கள் சொல்வது போல் இங்கே தமிழ்நாட்டில் யாருக்கும் ஹிந்துகள் என்ற உணர்வு இல்லை தான். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல ஏக இந்தியாவிலும் அந்த உணர்வு கிடையாது என்பது தான் உண்மை.இல்லாமல் போனால் கர்நாடகன் காவேரியில் இருந்து நீர் தராமல் போவானா. இந்த வருடத்திற்குள் பெரியாறு அணையை உடைப்பேன் என்று கேரளா சூளுரைக்குமா . பாலாறு குறுக்கே அணையை கட்டுவேன் என்று ஆந்திரா பேசுமா .. இவர்கள் எல்லாம் சொல்லும் ஒரே வார்த்தை எங்கள் மக்களுக்கு போதுமான தண்ணீர் இல்லை அதனால் தமிழ்நாட்டிற்கு நீர் தர முடியாது என்பதுதான் . எங்கள் மக்களுக்கு என்று இவர்கள் எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் மொழியின் அடிபடையிலா. அனைவரும் இந்தியர்கள் இந்துக்கள் எனும்போது எங்கள் மக்களுக்கு என்ற சொற்பிரயோகம் எங்கே இருந்து வந்தது. யார் இந்த வஞ்சகமான மொழி பிரிவை ஏற்படுதியது. நான் தமிழன் என்பதும் மலையாளி என்பதும் கன்னடன் தெலுங்கன் என்பது தான் உண்மை என்றால் இந்தியன் என்கிற நாமம் எதற்கு. நீங்கள் சொல்வது போல் காஷ்மீரில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டபோது இங்கே இருக்கும் இந்து தமிழர்கள் வருத்த படவில்லை என்றால் அதற்கு கரணம் அந்த விஷயம் சரியாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. தமிழர்களிடம் ஹிந்துக்கள் என்ற எண்ணத்தை ஒற்றுமையை ஊட்டி வளர்க நாம் எங்கோ தவறிவிட்டோம். திராவிட கட்சிகள் மாநாடு கூட்டி நாம் ஹிந்துக்கள் அல்ல தமிழர் என்ற தனித்துவம் வாய்ந்த இனம் என்று திரும்ப திரும்ப சொல்லி மத உணர்வை இழக்க செய்து விட்டது . தமிழர்களிடம் மட்டும் இல்லை இந்தியாவில் இருக்கும் அனைத்தும் தரப்பு மக்களிடமும் அந்த என்னத்தை வளர்க்க ஹிந்து அமைப்புகள் என்று சொல்லிகொள்வோர் சரியான பாதையில் நடவடிக்கை எடுக்காமல் போனது தான் பெரிய தவறு. ஏற்கனவே இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்னும் ஒரு தேவை இல்லாத விஷமத்தை சேர்த்துவிட்டார்கள். அதை நீக்க இந்துக்களாகிய நாம் ஒன்றுபட்டு பாடு பட வேண்டும் .அதனால் இனியாவது ஹிந்து மத பாதுகாவலர்கள் என்று சொல்லிகொள்வோர் ஒன்றுபட்டு மொழிக்கு அப்பாற்பட்டு நான் ஹிந்து என்கிற அந்த எண்ணத்தை இந்தியாவின் அணைத்து தரப்பு மக்களிடமும் வளர செய்ய வேண்டும். அதற்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் இருக்கும் இந்துகளின் பறிபோன உரிமைகளை நாம் மீட்டு எடுபதன் மூலமாக தான் செய்ய முடியும். அப்பொழுதுதான் மொழிகள் கடந்த ஜாதிகள் கடந்த ஹிந்து என்கிற ஒற்றுமையை நாம் உருவாக்க இயலும். நிச்சயம் ஹிந்துராஷ்ட்ரம் என்கிற கனவு ஒருநாள் மெய்படும். வாழ்க ஹிந்துபாரதம் நன்றி.

 28. kargil_jay on February 21, 2011 at 4:12 am

  திரு தாயுமானவன்,
  மிக்க நன்றி.
  உங்கள் கருத்துக்கள் எண்ணங்களாகி, எண்ணங்கள் சொற்களாகவும், சொற்கள் செயலாக மாறி ஹிந்துராஷ்ட்ரம் அமையட்டும்.

 29. armchaircritic on February 21, 2011 at 9:27 am

  இதில் எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்றாக எனக்கு படுவது media. கிறிஸ்துவ இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுக்கவும் இந்துக்களுக்கு எதிரான பொய்களை பரப்புவதிலுமே 99% mediaக்கள் (both print and visual) செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாக தோற்றமளிக்க ஆரம்பித்துவிடும் என்ற கோயபல்ஸ் தத்துவம் இந்தியாவில் இந்துக்கள் விஷயத்தில் உண்மையாகி வருகிறது. இதை எதிர்க்க, இந்துக்களின் உண்மை நிலையை சொல்ல, இந்துக்களின் சுய பச்சாதாபத்தைப் போக்க, சனாதன தர்மத்தின் திரிபு இல்லாத அடிப்படைகளை விளக்க நல்ல ஊடகங்கள் தேவை. இதற்கு BJP போன்ற கட்சிகள் முயன்றால் நன்மை பயக்கும். ராமர் கோவில் ஆனாலும் சரி, ராமர் சேதுவானாலும் சரி தோற்றுப்போன பொய்கள்தானே சத்தமாக வலம் வருகின்றன?! மேல்விஷாரமோ, தஞ்சை புதுப்பட்டினமோ, அருணாசலபிரதேஷின் இந்து ரியாக்களோ பத்திரிகைகளில் 13ம் பக்கத்தில் ஒரு வரி செய்தியாகக்கூட வருவதில்லையே!

 30. kumari kuselan. R on February 23, 2011 at 1:00 pm

  அர்ஜுன் சம்பத் அவர்களே. உங்கள் கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நீங்கள் ஜெயலலிதாவுக்கு பாத பூஜை செய்வதுதான் தேர்தல் நேரங்களில் பிடிக்கவில்லை. ஏனென்றால் ஜெயா இப்போதும் கிறித்தவர்களை நம்பிக்கொண்டிருக்கும் இந்து துரோகி.
  நீங்கள் சொல்லலாம் கருணாநிதியை தோற்கடிக்க அவள் தான் சரியான ஆள் என்று, தவறு. அனைத்து சாமியார்களும் ஏன் ஒரு இந்து கட்சிக்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்வதில்லை. முதலில் இந்த சாமியார்களை திருத்துங்கள் அப்புறம் சமுதாயம் தானாக இந்துத்வாவுக்கு ஓட்டளிக்கும்.

 31. ரகு on February 26, 2011 at 1:06 am

  ஈழத்தில் புலிகள் தன்னாட்சி நடத்திய காலங்களை கருதிப் பார்த்தால், அது இந்திய அரசில்பாஜக ஆட்சியில் இருந்த காலமே என்று நன்றாக தெரியும். சமாதான ஒப்பந்தம் நடமுறைக்கு வர நோர்வே மூலமாக இந்திய அரசு பெரும் பங்கு வகித்தது என்பதும் உள்ளே அனைவருக்கும் தெரியும். ஈழப்பகுதியில் சிங்கள ராணுவம் வரக்கூடாது என்பதில் தெளிவாக இந்திய அரசு நிலைப்பாடு எடுத்து கட்டுக்குள் வைத்தது. அதே நேரத்தில் சிங்களப் படைகளின் மீதும் புலிகள் வன் தாக்குதல் தொடரக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தது. ஆனால், புலிகளின் நண்பர்களாக தமிழ்நாட்டில் வேஷம் போடுகிற வைகோ, திருமா, திக குழுக்கள் பாஜகவைப் பற்றிய பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன் போன்ற பிரச்சார பீரங்கிகள் மூலமாக பாஜகவுக்கு ஆதரவு சென்றுவிடக்கூடாது என்று தீவிரமாக இருந்தனர். புலிக்கு எதிரான சோ போன்றவர்களால், அந்த கருத்தும் உறுதிப்பட்டது.

  இறுதி யுத்தத்தின் போதுதான், பாஜகவின் அருமை புலி ஆதரவாளர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கும் தெரிந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது, பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றெல்லாம் கடைசிகாலத்தில் பேச ஆரம்பித்தனர். அப்போது, ஜெகத் கஸ்பார், சீமான் போன்ற கிறிஸ்துவர்கள் குறுக்குசால் ஓட்டி, பாஜக பலம் பெற்றுவிடக்கூடாது என்பதே முக்கியம், ஈழ மக்கள் கொலையானால் பரவாயில்லை என்பது போல நடந்து கொண்டனர். அவர்கள் விரும்பியது போலவே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஈழப்போராட்டமும் முடிவுக்கு வந்தது.

  இப்போதும், அவர்கள் தங்களது முதன்மை எதிர்ப்பான பாஜக எதிர்ப்பை விடுவதாக இல்லை. ஆனந்தவிகடன, ஜூனியர் விகடன் போன்றவை கடும் பாஜக எதிர்ப்பை காட்டிகொண்டே இருக்கின்றன. ஈழ ஆதரவு, பாஜக எதிர்ப்பு இரண்டையும் கூடவே செய்வதால், ஈழ ஆத்ரவாளர்கள் எல்லோரும் பாஜக எதிர்ப்பாளர்கள் என்ற பிம்பத்தையும் உருவாக்கியுள்ளார்கள்.

  ஈழத்தில் இந்துக்கள் கொலையுண்டபோது அதனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றுதான் பேசவேண்டும் என்று வற்புறுத்தியதும் இவர்கள்தான்.
  மலேசியாவில் இந்துக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டபோதும், இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டபோதும், வாயை திறக்காதவர்கள் இந்த ஜெகத் கஸ்பார் சீமான் போன்ற கிறிஸ்துவ வெறியர்கள்தான். இவர்களை நம்பித்தான் ஈழப்போராட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

  ஈழத்தமிழர்கள் தங்களை முதன்மையாக இந்துக்கள் என்று அடையாளப்படுத்தியிருந்தால், அதன் பெயரில் போராடியிருந்தால், காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை இந்துக்கள் அதற்கு ஆதரவ்ளித்திருப்பார்கள். நூறு கோடி இந்துக்களின் ஆதரவை விட, தமிழ்நாட்டிலேயே பத்துலட்சம் பேர் கூட இல்லாத திராவிட கழகத்தினர் ஆதரவு போதும் என்று நாத்திக வாதம் பேசி, கம்ப ராமாயணம் மகாபாரதம் திருப்பாவை திருவாசகம் ஆகியவற்றை இழிவு படுத்தி பேசி, கிறிஸ்துவ பாதிரிகளின் நிழலில் ஈழம் பெற்றுவிடலாம் என்று கனவு கண்டு அழிந்தார்கள். உதவி செய்யவந்த இந்துக்களையும் வெறுத்து ஒதுக்கி அழிவை தேடிகொண்டார்கள். இருப்பினும் பல இந்து தலைவர்களும் தொண்டர்களும் அன்பு காரணமாக தொடர்ந்து ஈழ மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

  நூறு கோடி இந்துக்களின் ஆதரவு பெற்றிருந்தால், சோனியா காந்தியால் கூட ஒன்றும் செய்திருக்கமுடியாது. சோனியாவுக்கும், ராஜ்பக்சேவுக்கும் அல்வா மாதிரி ஈழப் போராட்டத்தை வழி நடத்தியவர்களும் ஈழப்போராட்டத்துக்கு ஆலோசனை வழங்கியவர்களும் திராவிட இயக்கத்தினர் பின்னால் சென்றார்கள்.

  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.

 32. Murugan on February 26, 2011 at 10:03 pm

  ஹிந்துக்கள் இடையே ஒற்றுமை இல்லை என்பது முற்றிலும் உண்மை, நம்மிடம் பக்தி இருக்கிறது, சமூக சேவை தனித்தனியாக செயஹிறோம். அனல் அரசியலை பற்றி சிந்தனை இல்லை. அமைப்பு ரீதியாக ஒற்றுமை இல்லை, இருக்கும் இயக்கங்களும் ஆன்மீக பணியை மட்டும்தான் செய்கிறது. இதற்கு வேண்டியது, வாரந்திர கூடம், ஒவொரு கோவிலுக்கும் ஒரு பக்தர் சபை, மாத பங்களிப்பு, அதன் மூலம் முழுநேர ஊழியர்கள், அரசின் கட்டுபாட்டில் இருக்கும் கோவிலின் செயல்பாடுகளில் கண்காணிப்பு போன்றவை வேண்டும். இதற்கு அமைப்பை பலபடுத்த வேண்டும். வார கூடம் நடக்கிறது, அங்கு ஆன்மீகம், பூசை, சமூக சேவை நடக்கிறது, கலந்துரையாடல் நடக்கிறது என்றாலே அரசியல்வாதிகள், மாறிவிடுவார்கள்.

  இதை சிறிய அளவிலாவது மேற்கொள்ள வேண்டும், செயல் வேண்டும்.

 33. kargil_jay on February 27, 2011 at 1:02 pm

  வணக்கம் திரு முருகன்.

  நீங்கள் சொன்னது மாதிரி ‘நிறுவன அமைப்பு’ மற்றும் வாரந்திர பங்கேற்பு அவசியம்.

  பெங்களூரில் யாரோ ஒரு கார்பரேட் பெண் குடித்துவிட்டு நடனம் ஆடியதைக் கண்டித்தால் வரும் எதிர்ப்புக் கூட்டம் ஒரு ஹிந்து சாமியாரை கைது செய்தால் வருவதில்லை. அதே எதிர்ப்புக் கூட்டம் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்தும் கல்லூரிகளை எதிர்ப்பதில்லை. காரணம் நாம் எல்லோரும் கூடி நிர்காததுதான்.

  ஹிந்துக்கள் வாரந்திர பங்கேற்பு செய்தால்தான், இப்போது இல்லாதிருக்கும் ஒழுங்கு முறை, பலம், சக்தி எல்லாமே வரும்.

 34. thayumanavan on March 1, 2011 at 9:39 pm

  இன்றைய சூழலில் இந்துக்களை ஒருங்கிணைப்பது என்பது இமாலய காரியம் … ஏன் என்றல் இப்போது இருப்பது பண்டைய பாரதம் அல்ல. உலகமயமாக்கல் , தாராளமயமாக்களில் சிக்கித்தவிக்கிறது அமர பாரதம் . அதில் ஒரு பகுதி தான் இந்த multi national company களின் அடாவடிதனம். இந்திய கலாச்சாரத்தை வேரறுப்பதில் இவர்களின் பங்கு அளப்பரியது. hindu joint family என்கிற புராதன கூட்டு குடும்ப பண்பாடு உடைந்துபோனது இவர்கள்( mnc ) வந்த பிறகு தான். கணவன் மனைவி பிள்ளைகள் என்கிற புனிதமான பந்தத்தை கேள்வி குறியாக்கியது இந்த பன்னாட்டு நிறுவனங்களின் கைங்கரியம் தான். விவாகரத்து என்றாலே முகம்சுளிக்கும் இந்தியர்களை இந்துக்களை விவாகரத்தை மலிவான விஷயம் ஆக்கி பிடித்தால் வாழலாம் இல்லை என்றால் வேறு ஒரு துணையை தேடிகொள்ளலாம் என்ற கேவலமான மிருகத்தனமான அந்நிய மேல்நாட்டு கலாச்சாரத்தை புகுத்தியது இவர்கள் வந்த பின்பு தான். மொத்தத்தில் பாரம்பரிய இந்து பாரதீய கலாச்சாரத்தை வேரறுத்து அந்நிய வெளிநாட்டு கலாச்சாரத்தை புகுத்தியது இவர்கள் தான். இந்த corporate கம்பனிகளை ஒழிக்கவேண்டும் இந்து கலாச்சாரத்தை மீட்டு எடுக்க வேண்டும்.

 35. sridharan on March 2, 2011 at 8:36 am

  we must understand that the christian church identifies the leaders who have the potential to carry the people with them. It then bribes them, brings them into their fold by cunning ploys like awarding titles to them, sowing the seeds of discord between and the Hindu organisations etc.

  Jayalalitha also has been brought into their net
  so we have to be very careful and not vote for her.
  Arjun Sampath alliy with the BJP.

 36. களிமிகு கணபதி on March 2, 2011 at 1:54 pm

  .

  ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?

  அல்லது

  வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?

  என்றால்,

  பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.

  .

 37. lakshmi narayanan on March 7, 2011 at 10:43 pm

  நல்ல முயற்சி இதை ஸ்ரீ ராம கோபாலன்ஜி ரொம்ப நாளாக சொல்லி வருகிறார் .நாம் தான் கேட்பதில்லை.

 38. அருண்பிரபு on March 8, 2011 at 8:09 pm

  இந்து மக்கள் கட்சியின் இணையதளம் http://imkhindu.com/ ல் இதற்கான சுட்டி இருக்கிறது. ஆனால் அது எதையும் சுட்டவில்லை. சரி செய்யச் சொல்லுங்கள்.

 39. K.G. Ganeshan on March 13, 2011 at 10:30 am

  மிகவும் நல்லது ஆனால் காணிக்கை வாங்ககூடாது. விண்ணப்பம் மட்டும்
  பூர்த்தி செய்து தரசொலள்ளலாம்.

  நன்கொடை அவர்கள் விருபத்திற்கு விட்டுவிடனும்.

  K.G. Ganeshan

 40. lakshmi narayanan on March 25, 2011 at 10:25 pm

  ஹிந்து வாக்குவங்கி அவசியம் தேவை .அதை சரியான முறையில் பிரச்சாரம் செய்யவும்.

 41. eswaran on December 14, 2011 at 10:31 am

  இந்து வாக்கு வங்கி பற்றி கூறும் அர்ஜூன் சம்பத் அவர்களுக்கு ,
  நீங்கள் முல்லை பெரியார் அணை விசயத்தில் திராவிடக்கட்சிகக்ளின் கிளை போல செயல்படுகின்றீர்கள். முதலில் உங்களது குறுகிய கண்ணோட்டத்தை மாற்றுங்கள்.
  ஈஸ்வரன்,பழனி.

 42. உலகநாதன் on March 30, 2018 at 10:59 am

  இன்று மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் சென்றேன். கோவிலின் நிலையைக் கண்டு மனம் மிகவும் வேதனை அடைந்தேன். கோயிலில் நிறைய கெடுபிடிகள். உள்ளுர் பக்தர்கள் கூட்டம் குறைவுதான். வெளியூரில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம். டிக்கெட் வாங்கியவர் வாங்கியவர்கள் வரிசை என்று அடியார்களை அலைக்கழிக்கிறார்கள். மீனாட்சி அம்மன் சந்நிதியில் மேடை வரையில் சென்று வணங்குவதற்கும் தடை. தட்டி போட்டு தடுத்து விடுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. கண்காணிப்பு அதிகாரியிடம் முறை இட வேண்டும் என்றார்கள். அலுவலகம் சென்றபோது பொறுப்பானவர்கள் ஒருவரும் இல்லை. இதுதான் இன்றைக்குத் தமிழ் நாட்டில் அரசின் பராமரிப்பில் உள்ள நிலை. நமது ஆலயங்கள் நமது பண்பாட்டுச் சின்னங்கள். இப்படியே போனால் அவைகளை வெறும் கண்காட்சி சாலைகளாக ஆக்கி விடுவார்கள்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*