இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-03

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ந் தேதி சிமி இயக்கத்திற்கு தடை விதித்த பின் அமைப்பின் பொறுப்பில் உள்ளவர்கள் பல்வேறு அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டும் வேறு பெயர்களில் புதிய அமைப்பை துவக்கினார்கள்.  அவ்வாறு துவக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று இந்தியன் முஜாஹூதீன் என்கிற அமைப்பாகும்.

இந்தியன் முஜாஹூதீன் (Indian Mujahedeen)

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ள அமைப்புகளில் இந்தியன் முஜாஹூதீன் எனும் அமைப்பு முக்கியமான பயங்கரவாத இயக்கமாகும்.  2008ம் ஆண்டுக்கு முன் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றதா என்கிற சந்தேகம் பலர் மனதில் எழுந்தது.  2007ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி,  பைசாபாத், லக்னோ போன்ற மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வெடித்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இயக்கம் இந்தியன் முஜாஹூதீன் என தெரியவந்தது.  குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் உத்திரப் பிரதேச காவல் துறையினர் பல இடங்களில் உள்ள இஸ்லாமியர்களின் இல்லங்களில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்தை நடத்தியவர்கள் புதிய இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.  நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக வந்த Jaish-e-Muhammad அமைப்பைச் சார்ந்தவர்களை வழக்குரைஞர் சிலர் தாக்கியதற்காகப் பழி வாங்கவே நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு நடத்தியதாகப் பல்வேறு மீடியாக்களுக்குத் தகவல் கொடுத்த பின் தான் இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியன் முஜாஹூதீன் எனும் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக உளவுத் துறைக்கு தெரியவந்தது.

இந்தியன் முஜாஹூதீன் அமைப்பின் விசித்திரம் தாக்குதல் நடத்துவதற்கு முன் அனைத்து மீடியாக்களுக்கும்  தகவல் கொடுத்து விட்டுத் தாக்குதல்களை நடத்துவது.  இந்த புதிய அமைப்பில் உள்ளவர்கள், தடை செய்யப்பட்ட மூன்று முக்கிய அமைப்பினர்:

 ஒன்று சிமி, இரண்டாவது ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி(Harkat-ul-jihad-e-islami) என்ற இயக்கமும்,  மூன்றாவதாக சிறையில் உள்ள அப்டாப் அன்சாரியின் (Aftab Ansari) ஆதரவாளர்கள் அடங்கிய அமைப்பும் உள்ளடங்கிய பயங்கரவாத இயக்கம்தான் இந்தியன் முஜாஹூதீன். 

தாக்குதல் நடத்துவதற்கு முன் இ-மெயில் அனுப்பும் போது தெளிவாகக் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை விடுப்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 

நடுத்தர மற்றும் கீழ் தட்டு இஸ்லாமியர்களில் உள்ள இந்து விரோத சிந்தனை உள்ளவர்களை அணுகி அவர்களை இயக்கத்தில் இணைப்பது,  ஓசாமா பின்லேடனில் சிந்தனையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்குக் குரல் கொடுப்பது போன்றவற்றிற்காகத் துவக்கப்பட்ட இயக்கம் இந்தியன் முஜாஹூதீன்.  இவர்களுக்கு லஷ்கார்-இ-தொய்பாவூடனும் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.யுடனும் இன்னும் சில பயங்கரவாத அமைப்புடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்களும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தியன் முஜாஹூதீன் அமைப்பைப் பற்றிய முழு விவரங்கள் கிடைத்துள்ளன.  முன்னாள் சிமி இயக்கத்தின் பொறுப்பாளாரான ஸாஃப்ட்வேர் என்ஜினியரான அப்துல் சுபான் குரேஷி (Abdul Subhan Qreshi) என்பவனால் இந்த இயக்கம் துவக்கப்பட்டது.  இதற்கு முன்னரே உத்திர பிரதேச மாநிலம் ஆஸம்காட் பகுதியில் எலக்ட்ராணிக் என்ஜினியரான முன்னாள் சிமி இயக்கத்தை சார்ந்த சாதிக் இஸ்ரார் சேஷ் (Sadiq Israr Sheikh) என்பவன் இந்த இயக்கத்தின் முக்கிய தளபதியாக விளங்கியவன்.  இவனது மைத்துனர் பாகிஸ்தானைச் சார்ந்த முஜாஹித் சலீம் என்பவன் மூலம் லஷ்கர்-இ-தொய்பாவின் தொடர்பு ஏற்பட்டு, அதன் மூலம் பயங்கரவாத பயிற்சி பெற்றவன். 

2006ம் ஆண்டு ஜீலை மாதம் மும்பையில் நடந்த ரயில் தொடர் குண்டு வெடிப்பின் சூத்ரதாரியாவான். முழுமையாக இந்தியன் முஜாஹூதின் அமைப்பினர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் முன் பல்வேறு தாக்குதல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.  விசாரனையில் கிடைத்த தகவல்களில் ஆச்சரியப்படத் தக்க செய்தி இந்தியன் முஜாஹூதின் அமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் ஐ.டி யில் பணிபுரிபவர்கள். இவர்களில் பலர்  பெரும் செல்வந்தர்கள்.  குறிப்பாக அஷ்கர்  பீர்பாய் (Asghar Peerbhoy) சல்மான் காதர் ஷைகாந்த் (Salman Kadar Shaikhand) அசிப் பஸிரிதின் ஷேக் (Asif Bashiruddin Shaikh) போன்றவர்கள் குறிப்பிட தக்கவர்கள்.  யாஹூ இணைய தளத்தில் பணிபுரிந்த பீர்பாய் இந்தியன் முஜாஹூதின் அமைப்பின் மீடியாவின் முக்கிய பொறுப்பாளார்.
 
இந்தியன் முஜாஹூதீன் அமைப்பைப் பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.  கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் மும்பை காவல் துறையினர் நடத்திய 1809 பக்க விசாரணை  அறிக்கையின் அடிப்படையில் சில சம்பவங்கள் மூலம் இவர்களின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தியன் முஜாஹூதீன் நடத்திய முக்கியமான நான்கு தாக்குதல்கள் மூலம் இவர்களின் செயல்பாடுகள் முழுமையாக காவல் துறையினருக்கு தெரிய வந்தது.

13.5.2008ந் தேதி ஜெய்ப்பூரில் ஒன்பது இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளின் காரணமாக 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.  25.7.2008ந் தேதி பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமும்,  26.7.2008ந் தேதி அகமதாபாத் நகரில் 16 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பும், இதில் 38 பேர்கள் கொல்லபட்டதும், நூற்றுக்கணக்கானவர்கள் படு காயமடைந்த சம்பவமும், 23.9.2008ந் தேதி தலைநகர்  டெல்லியில் ஐந்து இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமும், இந்தியன் முஜாஹூதீனின் கொடூர செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. பல்வேறு சம்பவங்களில், குறிப்பாக 2008ம் ஆண்டு ஜீலை 26ந் தேதி அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட கோரி (Ghauri) ஹூசைனி (Husaini) இருவரும் சிமி இயக்கத்தினர்.

அகமதாபாத் மற்றும் சில இடங்களில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பயிற்சி கொடுக்கப்பட்ட இடம் கேரளத்தில் உள்ள ஆல்வா என்கிற மாவட்டம்.  இந்த மாவட்டத்தில் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம்  50 நபர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது.  இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் உஸ்மான் அகர்பாட்டிவாலாவும்(Usman Agarbattiwala) சாஜீத் மன்சூரி என்பவனும் முக்கியமானவர்கள்.  ஆல்வாவில் கொடுக்கப்பட்ட பயிற்சியைப் போலவே கேரளமாநிலத்தில் உள்ள  Halol எனும் பகுதியில் உள்ள பாவகாத் மலைப் பகுதியில் (Pavagadh hills) 2008ல் பயிற்சி அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான பயங்கரவாதி முகமது சபி (Muhammed Saif). இவனிடம் நடத்திய விசாரனையில் இந்தியன் முஜாஹூதீன் அமைப்பின் செயல்பாடுகள் நோக்கங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.  பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காகவே நான்கு விதமான பிரிவுகள் செயல்படுவதாகத் தெரிவித்தான். 

இந்த நான்கு பிரிவுகளுக்கும் ஒரு கமாண்டர் இருப்பார். அவர் லஷ்கர்-இ-தொய்பாவில் முழுப் பயிற்சி எடுத்தவர் சகாபுதீன் கோரி (Shahabuddin Ghauri) என்பவன் தலைமையில் உள்ள பிரிவு தென்னகத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதும்,  அதை செயல்படுத்துவதும், இந்தப் பிரிவின் தலைமையிடமாக இருந்த மாநிலம் கேரளமாகும். 

இரண்டாவது பிரிவுக்கு சாகீத்-அல்-சர்கவீ (Shadeed-al-zarqawi) என்பவனின் தலைமையில் அரசியல் தலைவர்களையும் சில முக்கியமானவர்களையும் கொல்லுவதற்கு ஏற்படுத்தப்பட்ட தற்கொலை பிரிவாகும்.  மூன்றாவது பிரிவு முகமது கஷ்னவி (Muhammad Ghaznavi) வட இந்தியாவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதும், தாக்குதல்களில் அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கிய இலக்காகும். நான்காவதாக பூனாவைத்  தலைமையிடமாகக் கொண்டு அனைத்து மீடியாவிற்கும் செய்திகள் அனுப்புவது.

பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடகா ஃபோரம் டிக்னிடி என்கிற இஸ்லாமிய அமைப்பும், நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் என்கிற கேரளத்தில் இயங்கிய முஸ்லீம் பயங்கரவாத அமைப்பும், தமிழகத்தில் இந்து விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் மனித நீதி பாசறையும்,   தென்னகப் பகுதியிலிருந்து வட பகுதியில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கம்யூனிடி சோஷியல் அண்ட் எஜூகேஷனல் சொஸைட்டியும், ஆந்திராவில் ஏற்கனவே உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரியும் ஆந்திரப் பிரதேஷ் அஸோஷியேஷன் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் என்கிற இயக்கமும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நகரிக் அதிகார் சுரக்ஷா சமிதியும், இறுதியாகக் கோவா பகுதியில் உள்ள கோவா ஸிடிஸன்ஸ் ஃபோரம் போன்ற இருபது அமைப்புகளின் கலவையும் சேர்த்து பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் புதிய பெயரில் துவக்கப்பட்டுள்ளது.  இவர்கள் பெண்களுக்காக,   குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக,  இமாம்களுக்காக, வழக்கறிஞர்களுக்காக,  டாக்டர்களுக்காக, பத்திரிக்கையாளார்களுக்காக என்று எல்லா பிரிவுகளிலும் உள்ள இஸ்லாமியர்களை இணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிற்கு கேரளத்தில் மட்டும் 30,000 க்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  நாடு முழுவதும் 80,000க்கும்  மேற்பட்டவர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள்.

இவர்கள் கொடுக்கும் சந்தாகையைக் கொண்டு இயக்கத்தை வளர்ப்பதாகக் கூறினாலும், உண்மையில் இவர்களுக்கு அரபு நாடுகளிலிருந்து கோடிக் கணக்கான நிதி வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக ஹவாலா முறையிலும் கேரளத்தில் குவியும் அந்நியச் செலாவணியே இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக இந்திய உளவுத் துறை தெரிவிக்கிறது.  இதில் கேரளத்தைச் சார்ந்த 25 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள். இவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ 40,000 கோடிக்கு மேல் அந்நிய செலவாணியாக அனுப்பும் தொகையில் எழுபது சதவீதம் பயங்கரவாதிகளுக்கு செல்வதாகவும் உளவுத் துறையினர் தெரிவிக்கின்றனா.

“இருபது வருடங்களில் கேரளத்தை முஸ்லீம்கள் பெரும் பான்மையினராக வாழும் மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள்.  மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற பணத்தையும் ஆசையைத் தூண்டும் வேறு வழிகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.   முஸ்லீம்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இஸ்லாமியர் அல்லாத பெண்களைக் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள்”. 

மேற்குறிய வார்த்தைகளை வெளிப்படுத்தியவர் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவரோ அல்லது சங்க பரிவார்களைச் சார்ந்தவர்களோ கிடையாது. முழுக்க முழுக்க தொழிலாளர் வர்க்கத்திற்குப் பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் என்பது வியப்பிற்குறிய செய்தியாகும்.  கேரள முதல்வர் மேலும் கூறும் போது “கேரள மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களைப் பற்றி கூறினேன்.  இது தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து விசாரித்த போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கூறிய கருத்தாகும்” என்று சொல்லி உள்ளார்.

கராச்சி புராஜெக்ட்

ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹூஜி போன்ற அமைப்புகளுக்கிடையே 2003ல் தீட்டப்பட்ட சதியின் பெயர் கராச்சி புராஜெக்ட் என்பதாகும்.  இந்த சதி திட்டத்தின் ஒரு அங்கமே புனேயில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமாகும்.  இந்தியாவில் தேடப்பட்டு பாகிஸ்தானில் தஞ்சமடைந்தோர் மூலம் இந்திய முஸ்லிம் இளைஞர்களை பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் வழியாக வரவழைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி தருகிறது.  ஆயுதப் பயிற்சி பெறுபவர்களை மூளைச் சலவை செய்வதற்கு இந்தியாவில் 1992ந் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் நடைபெற்ற சம்வத்தின் வீடியோக் காட்சிகளையும், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் காட்சிகளையும் காட்டி அவர்களை இந்துக்களுக்கு எதிராகவும், இந்தியாவின் இறையான்மைக்கு எதிராகவும் தயார் செய்கிறார்கள்.  இந்த பணிகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கு இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளான ரியாஸ்,  இக்பால் பட் போன்றவர்களைப் பயன் படுத்திக் கொள்கின்றனர். இந்த சதி திட்டத்தின் முக்கிய நோக்கமே இந்தியாவின் ராணுவ மற்றும் பொருளாதார சாதகங்களை குலைக்கும் பாகிஸ்தானின் முக்கிய நோக்கமான காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும்.

2005ம் ஆண்டு முதல் இந்த சதி திட்டத்தின் படி 10 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  இந்த தாக்குதல்களில் 500க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  திசைமாறிய இந்திய இஸ்லாமிய இளைஞர்களையூம், உள்ளுரிலேயே கிடைக்கும் வெடி மருந்துகளையும் பயன்படுத்துவது இந்தியாவின் இதயப் பகுதிகளை மட்டும் குறி வைத்து தாக்குவது.  இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நிகழும் போது பாகிஸ்தான் மீது எவ்வித சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்வது இந்த சதித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

பங்களாதேஷிலுள்ள ஹூஜி பிரிவின் தலைவனான ஷாஹித் பிலாலுக்கு  இரண்டாம் கட்டத் தலைவனான அப்துல் க்வாஜா கைதான பிறகுதான் இந்திய அரசிற்கே கராச்சி சதி பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்தன.  2009ம் ஆண்டு பங்களாதேஷில ரா நடத்திய ரகசிய நடவடிக்கையின் காரணமாகக் கைது செய்யப்பட்ட க்வாஜாவை இலங்கை வழியாக சென்னைக்கு கொண்டு வந்து ஹைதராபாதில் 2010ம் வருடம் ஜனவரியில் நடத்திய விசாரணையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தக் கூடிய இடங்களைப் பற்றிய விவரங்களை தொரிவித்தான்.  க்வாஜாவை போல இன்னும் சிலரை கைது செய்து விசாரித்த போது இந்திய இளைஞர்களுக்குப் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மறைவான மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளிப்பதாக தெரிந்தது.   2003ல் துவக்கப்பட்ட இந்தச் சதி திட்டத்திற்கு இரண்டு வருடங்களில் 40 முதல் 50 வரை ஜிகாதிக்கள் பயிற்சி பெற்று தாக்குதல் நடத்த இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்

மத மாற்றத்தின் காரணமாகவே தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் துளிர் விட துவங்கியது.  1982ம் ஆண்டு மார்ச்சு மாதம் கன்னியாகுமாரி  மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நடந்த பயங்கர கலவரத்திற்குப் பிறகு தான் தமிழகத்தில் பயங்கரவாதம் தனது பணியினை செய்ய முற்பட்டது.  1981ம் ஆண்டு கோவை ஆர்.எஸ் புரத்தில் நடந்த இந்து முன்னணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திருக்கோலிலுர் சுந்தரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். 1961ம் ஆண்டிலிருந்து 1971ம் ஆண்டு வரை தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் வகுப்பு மோதல்கள் அதிக அளவில் நடந்துள்ளதாக 1985ல் கோகுலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 1980ம் ஆண்டின் இறுதியிலிருந்து 1990ம் ஆண்டின் துவக்கத்திற்குள் தமிழகத்தில் நடந்த வகுப்புக்  கலவரங்களின் மூலமாக இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்கள் முளைத்தன.  உள்ளுர் முஸ்லீம் வியாபாரிகளாலும், அன்னிய ஏஜென்ட்களின் வழியே கிடைத்த நிதியினாலும் இந்த இயக்கங்கள் மெல்ல மெல்ல வளர்ந்தன.  தமிழகக் காவல்துறையினர்  அறிக்கையின் படி 1983ல் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைந்தது மட்டுமில்லாமல் தங்களது பயங்கரவாத செயல்பாடுகளையும் சிறப்பாகச் செய்யத்  துவங்கினார்கள்.

1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் 13க்கு மேற்பட்ட இஸ்லாமிய பங்கரவாத இயக்கங்கள் துவங்கபட்டன.  அல்-உம்மா, Muslim Defence Force, மனித நீதிப் பாசறை, தேசிய பாதுகாப்புப் பேரவை, ட்ரூத் வாய்ஸ், அகில இந்திய ஜிகாத் கமிட்டி, Deender Anjuman, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், சுன்னத் ஜமாத் பேரவை, சுன்னத் ஜமாத் இளைஞர் பேரவை, சிமி போன்ற இயக்கங்கள் துவங்கின.  1990ம் ஆண்டின் மத்தியில் இந்துக்களை தாக்குவதற்காகவே துவக்கப்பட்ட இயக்கம் அல்-உம்மா வாகும்.  துமிழகத்தில் பல் வேறு பயங்கரவாத இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தாலும் அவைகளில் அல்-உம்மா மிகவும் முக்கியமான இயக்கமாகும்.  1993ல் உருவாக்கப்பட்ட அல்-உம்மா இயக்கத்தில் முஸ்லீம் வியாபாரிகளின் நிதி உதவியுடன் தனியார் படை ஒன்றையும் அமைத்திருந்தார்கள்.  அமைப்பைத் துவக்கும் போது இஸ்லாமியர்களின் நலனை காப்பதற்காக துவக்கப்பட்டதாகக் கூறினாலும், நாளடைவில் இந்துக்களைத் தாக்குவதற்காக துவக்கப்பட்டாக மாற்றினார்கள். 

இவர்களின் திட்டத்தின் படி 1984ம் ஆண்டு கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடந்த கவவரத்தில் திரு ஜனா. கிருஷ்ணமூர்த்தி, திரு. டி.ஆர். கோபால், திரு. நாராணராவ், திரு திருகோவிலுர் சுந்தரம் ஆகியோர் மிக கொடுரமான முறையில் தாக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து 1987ல் இந்து முன்னணியின் திரு இராம. கோபாலன் அவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டார். அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் இந்த கொடுரமான செயலை செய்தவர்கள். இதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டாலும், மாநிலக் காவல் துறையினரால் நிரூபிக்க இயலாத காரணத்தில் பாட்ஷா உட்பட பலர் விடுவிக்கப்பட்டார்கள்.  1987ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்குப் பின் அல் உம்மா இயக்கத்தினர் இந்து இயக்கங்களின் தலைவர்களைத் தாக்குவதற்காகவே Islamic Youth Association எனும் புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.  இந்த அமைப்பினரின் பணியே முஸ்லீம்களை கடுமையாக யாராவது தாக்கி பேசினால் அவர்களைத் தாக்குவது.  இந்த சிந்தனையினால்தான் 30.8.1989ல் கோவையில் வீர கணேஷ் என்பவரையும், 5.9.1991ல் அதே கோவையில் வீர சிவா என்பவரையும் இந்த இயக்கத்தினர் கொலை செய்தார்கள்.

1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதிக்குப் பின் தமிழகத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியர்களின் உணர்வுகளைத் தூண்டித் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமைப்பு அல் உம்மா மட்டுமே. 

அயோத்தியில் நடந்த சம்பவங்களைப் புகைப்படங்களாக எடுத்து அனைத்து இஸ்லாமியர்கள் மத்தியில் காண்பித்து அவர்களிடம் இஸ்லாமியர்களைக் காக்க அதிக நிதி உதவி தேவைப்படுவதாக எடுத்து கூறும் காரியத்தில் ஈடுபட்டார்கள்.  1993ம் ஆண்டு அயோத்தி சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கோவையில் பெரும் கலவரத்தை உருவாக்க அங்கே சாலை மறியல்களும் கொள்ளையடித்தலும் நடைபெற்றன.

1993ம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ந் தேதி சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்து 11 பேர்கள் மாண்டார்கள்.  இந்த நிகழ்வுக்குப் பின் தமிழகம் முழுவதும் அல் உம்மா இயக்கத்தினரின் செயல்பாடுகள் வெகுவாக நிகழ துவங்கின.

1993ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளியாக அல் உம்மா வின் பாட்ஷா உட்பட 15 பேர்கள் 1980ம் ஆண்டு தேசீய பாதுகாப்பு சட்டப்படியும், 1987ல் கொண்டு வந்த தடா சட்டத்தின் படியும் கைது செய்யப்பட்டார்கள். 

1996ல் நடைபெற்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதின் காரணமாக 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் எவ்விதக் காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட பாட்ஷா உட்பட 15 பேர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள்.  விடுதலைக்குப் பின் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்கள் தங்குதடையின்றி அதிக அளவில் நடைபெற்றன.  கோவை காவல் துறையினர் கோட்டைமேடு பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை செய்த போது அங்கு பல வீடுகளில் கையெறி குண்டுகள், ஐல்லட்டின் குச்சிகள்,  நாட்டு வெடி குண்டுகள் அதிக அளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 1995ம் ஆண்டு இஸ்லாமிக் டிப்பன்ஸ் போர்ஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் சினிமா பட இயக்குநர் திரு மணிரத்தினம் வீட்டின் மீது வெடி குண்டு வீசினார்கள்.  1996ல் சென்னையில் தொடர்ச்சியாகப் பல உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தன.  மேலப்பாளையத்தில் இந்து முன்னணியின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார்.  அயோத்தியில் கும்மட்டம் இடிக்கப்பட்ட தினத்தன்று 5ம் ஆண்டு நினைவாக திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. ஈரோட்டில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. திருச்சூரில் ஆலப்புலா எக்ஸ்பிரஸ் வண்டியிலும் குண்டு வெடித்தது.  இந்த மூன்று சம்பவங்களிலும் பலர்  கொல்லப்பட்டார்கள்.

இந்த மூன்று சம்பவங்களையும் நடத்தியவர்கள் கேரளத்தில் உள்ள ஐ.டி.எப் என்கிற பயங்கரவாத இயக்கமும், தமிழகத்தில் உள்ள அகில இந்திய ஜிகாத் கமிட்டியும் ஆகும்.

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் கோவை குண்டு வெடிப்பு நிகழ்வு ஆகும். 98ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காகக் கோவையில் பிரச்சாரம் செய்ய வருகை தந்த திரு. அத்வானி அவர்களைக்  கொல்ல நடந்த சதி திட்டம். இந்தத் திட்டத்திற்கு அல் உம்மா இயக்கத்தினர் வைத்த பெயா; ‘Operation All-hu-Akbar என்பதாகும்.  அன்றைய தினம் விமானம் கால தாமதமாக கோவை வந்ததால் அத்வானி அவர்கள் உயிர் தப்பினார். ஆனால் 18இடங்களில் நடந்த குண்டு வெடிப்பின் காரணமாக 77 பேர்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள்.  இந்தத்  திட்டத்தை நிறைவேற்ற அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வெடி மருந்துகள் கொணடு வரப்பட்டன.  இந்தச் சம்பவம் கொடுத்த தெம்பின் காரணமாக தொடர்ச்சியாக மதுரையில் இந்து முன்னணியின் மாநில தலைவர் திரு ராஜகோபலன் விடியற்காலையில் கொல்லப்பட்டார். திருச்சியில் டாக்டர் ஸ்ரீதர் கொல்லபட்டார். 2000ம் ஆண்டு ஜனவாரி 31ந் தேதி சென்னையில் இந்த இரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் 10 பேரை காவல் துறையினர் கைது செய்தார்கள். இந்தக் கைது சம்பவத்தை கண்டித்து சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் குண்டு வெடித்தது.
    
நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் இந்தப் பயங்கரவாதிகள் மீது பல வழக்குகள் இருந்தாலும் சில நேரங்களில் பாரத பிரதம மந்தியே அவர்களிடம் பேச்சு வார்த்தைகள் நடத்திய சம்பவங்களும் உண்டு. 

JKLFன் பொறுப்பாளார் முகமுது யாசின் மாலிக் என்பவனுடன் பாரத பிரதம மந்திரியும் தேசீயப்  பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் பல முறை ரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளார்கள். 

இவர்களுடன் யாசின் மாலிக் ஜனவரி மாதம் 2006ல் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன் அதாவது 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ந் தேதி லஷ்கர்-இ-தொய்பாவின் சகோதர அமைப்பான Jameet-ud-Dawa வின் தலைமை பொறுப்பாளார் Hatiz Mohammad Saeed  என்பவருடன் கலந்து பேசி விட்டுத்தான் பாரத பிரதம மந்திரியை சந்திக்க முன்வந்தார்.  ஏற்கனவே யாசின் மாலிக் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. 

Awantipora விமான படைத்தளத்தின் பொறுப்பாளர்கள் நான்கு பேரைக் கொன்ற வழக்கிலும் குற்றவாளியாக உள்ள யாசின் மாலிக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுத்தது போல் அமைந்தது.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

27 மறுமொழிகள் இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-03

 1. திரிசூல சக்தி on February 16, 2011 at 11:45 pm

  காங்கிரஸ் போன்ற இஸ்லாமிய அடிவருடி கட்சிகள் உள்ள வரை, ஜிகாத்தின் ஆதிக்கம் தொடர் கதையாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கட்சி ஒழிக்கப்படும் நாள் விரைவில் வரும். இஸ்லாமிய அதிக்கமும், கிறுத்தவ குள்ள நரித்தனமும் ஒழியும் நாளே பாரத சுதந்திரத்தின் முதல் படியாகும். ஹிந்து சக்தியை ஒன்று திரட்டி, பாதகர்களால் பிரிக்கப்பட்ட நம் பாரத தாயின் அங்கங்களை ஒன்றாக சேர்ந்து, பாரதம் மீண்டும் அகண்ட பாரதம் ஆகும் நாள் தான், நம் தாய் திருநாட்டின் உண்மையான சுதந்திர நாள். ஒன்றுபடுவோம், வெற்றிபேறுவோம்! ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா!

 2. raja on February 17, 2011 at 4:42 am

  எப்படி இவ்வளவு தகவல்களை சேகரித்தீர்கள் சரவணன். நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை விட முஸ்லீம் தீவிரவாத இயக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறது. ஆனால் நாட்டிற்காக , நம் மக்களுக்காக மதவேறுபாடின்றி சமூகசேவை செய்வதற்கு ஒரு முஸ்லீம் அமைப்பு கிடையாது. முஸ்லீம்களின் சிந்தனை அப்படி இருக்கிறது. நாம் இவர்களுக்கு மைனாரிட்டி சலுகைகள் கொடு்த்து ஹஜ் யாத்திரைக்கு வாரிவழங்கி நீதிபதி, ஜனாதிபதி எம்பி எம்எல்ஏ என்று உயர்பதவிகளிலும் உட்கார வைத்து வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். அலாவுதீன் என்ற ஐஏஎஸ் அதிகாரி மதுரை கமிஷனா் ஆக இருந்தபோது பல முஸ்லீம்களுக்கு மாநகராட்சியில் வேலை போட்டு கொடுத்தார். முஸ்லீம் தீவிர வாதத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்காதவரை நாட்டில் அமைதி ஏற்படுத்துவது கடினம். ஓட்டு பொறுக்கி அரசியல் வியாதிகள் தான் இவா்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பல முஸ்லீம் கடைகள் உள்ளன. இவை அனைத்தும் இந்துக்களின் வியாபாரங்களையே நம்பி உள்ளன. ஆனால் இந்துக்களின் வியாபாரம் மூலம் சம்பாதித்து சுகபோகமாக வாழும் முஸ்லீம் வியாபாரிகள் தீவிரவாதிகளுக்குத்தான் உதவிக்கொண்டு இருக்கிறார்கள். அதே வியாபாரத்தை இந்துக்கள் இந்துக்களிடம் மட்டும் செய்தால் அந்த இந்து இந்து மதத்திற்காக செலவு செய்யாவிட்டாலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செலவிடாமலாவது இருப்பான். எனவே முஸ்லீம்களிடம் வியாபாரம் செய்வதை இந்துக்கள் நிறுத்தினால் இந்து சமுதாயத்திற்கு நல்லது. ஆனால் நாம் பாய், பாய் என்று அவர்களிடம் வியாபாரம் செய்து மறைமுகமாக வளர்க்கிறோம். ஆனால் என்னதான் பட்டாலும் இந்துக்களை திருத்த முடியாது.

 3. அம்ருதபுத்திரன் on February 17, 2011 at 9:53 pm

  “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பல முஸ்லீம் கடைகள் உள்ளன. இவை அனைத்தும் இந்துக்களின் வியாபாரங்களையே நம்பி உள்ளன. ஆனால் இந்துக்களின் வியாபாரம் மூலம் சம்பாதித்து சுகபோகமாக வாழும் முஸ்லீம் வியாபாரிகள் தீவிரவாதிகளுக்குத்தான் உதவிக்கொண்டு இருக்கிறார்கள். அதே வியாபாரத்தை இந்துக்கள் இந்துக்களிடம் மட்டும் செய்தால் அந்த இந்து இந்து மதத்திற்காக செலவு செய்யாவிட்டாலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செலவிடாமலாவது இருப்பான். எனவே முஸ்லீம்களிடம் வியாபாரம் செய்வதை இந்துக்கள் நிறுத்தினால் இந்து சமுதாயத்திற்கு நல்லது. ஆனால் நாம் பாய், பாய் என்று அவர்களிடம் வியாபாரம் செய்து மறைமுகமாக வளர்க்கிறோம்.”
  மிக அருமையான கருத்து.
  முஸ்லீம் பயங்கரவாதத்தை முடக்க மிகச் சிறந்த வழி ஹிந்துக்கள் ஹிந்து கடைகளிலேயே ஹிந்து தயாரிப்புகளையே வாங்க வேண்டும். இது மிக எளிமையானதும் கூட.

 4. sanjay on February 18, 2011 at 2:59 pm

  Tamil nadu is the state having the least number of muslims. If here, so many terrorist acts have taken place, it is not surprising that this is happening elsewhere.

  We are paying the price for pampering them endlessly.

 5. thahir on February 18, 2011 at 5:55 pm

  பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

 6. thahir on February 18, 2011 at 6:05 pm

  பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ?

 7. indian on February 21, 2011 at 6:38 pm

  முஸ்லிம் முஸ்லில்களிடம் மட்டும் வியாபாரம் செய்ய வேண்டும். இப்படி பேசினா எப்படி இந்திய வளர்ச்சி அடையும் . திரு கலாம் அவர்களை கேளுங்கள் .

 8. THAHIR on February 22, 2011 at 3:53 pm

  இந்தியன் இந்தியன் அல்லதவனால் கொல்லபடுவதை விட இந்தியனால் கொல்லபடுவது அதிகம் ஏன் ? அவனை மதத்தின் .மொழி
  சாதி இனம் என்று பிரித்து அரசியல் நடத்தும் அணைத்து இயக்கத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் மரணதன்ன்டனை குடுக்கவண்டும்

 9. ராஜா on February 24, 2011 at 4:59 am

  திரு.தாகிர் அவர்களே
  முஸ்லீம்கள் முஸ்லீம்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றனா். கடையோ வீடோ வாடகைக்கு கொடுப்பதென்றால் முதலில் முஸ்லீமுக்குத்தான் கொடுக்கின்றனர். முஸ்லீம்கள் இல்லாத பட்சத்தில்தான் பிறருக்கு கொடுக்கின்றனர். ஆனால் இந்துக்கள் அப்படி பார்ப்பதில்லை. கோவையில் குண்டு வெடித்தபின் சில நாட்கள் இந்துக்கள் முஸ்லீம்களை புறக்கணித்தார்கள். இப்போது பழையபடி மாறிவிட்டார்கள். உங்கள் மதத்தவனின் வாழ்வு பாதிக்கும் என்றால் உங்களுக்கு ஆத்திரம் வருகிறது. ஆனால் அடுத்த மதங்களையே அழித்து விடவேண்டும் உங்கள் மதத்தின் கொள்கையை எதிர்த்தால் தாங்க முடியவில்லை. உங்களை திருத்தவே முடியாது.

 10. sanjay on February 24, 2011 at 4:22 pm

  Thahir,

  U will say this & much more. Why not? U have been, are & will be pampered by our politicians.

  U will continue to kill & say that this is holy war, it is ordained in the koran etc.,

  if you are arrested, you will scream that U are victimised.

  Maanam ketta pozhappu!

 11. THAHIR on February 25, 2011 at 3:30 pm

  அஸ்ஸலாமு அழைக்கும் sanjay /ராஜா

  முஸ்லிம் என்றால் இறைவன் கட்டளைக்கு மாறு செய்யாதவன் ( இறைவனின் அடிமை )

  sanjay :- it is ordained in the koran etc

  இதுவும் குரான் வசனம் தான் / இறைவனின் கட்டளை

  யார் ஒருவன் அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்கின்றன் அவன் அணைத்து மனித இனத்தையும் கொலை செய்தவன் போல் ஆவான் யார் ஒருவன் ஒரு உயிரை வாழவைக்கிறான் அவன் அணைத்து மனித இனத்தையும் வாழவைத்தான் போல் ஆவான்

  (முஸ்லீம்கள் முஸ்லீம்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றனா். கடையோ வீடோ வாடகைக்கு கொடுப்பதென்றால் முதலில் முஸ்லீமுக்குத்தான் கொடுக்கின்றனர். முஸ்லீம்கள் இல்லாத பட்சத்தில்தான் பிறருக்கு கொடுக்கின்றனர். ஆனால் இந்துக்கள் அப்படி பார்ப்பதில்லை. கோவையில் குண்டு வெடித்தபின் சில நாட்கள் ……..இந்துக்கள் முஸ்லீம்களை புறக்கணித்தார்கள். ……………………இப்போது பழையபடி மாறிவிட்டார்கள்)

  இதில் யார் இறைவனின் அடிமை என்று நீகளே சொல்லுங்கள் ?

  அணுவளவு நன்மை செய்தாலும் அதற்குண்டான பலனை அவன் அனுபவிப்பான் அணுவளவு தீமை செய்தாலும் அதற்குண்டான பலனை அவன் அனுபவிப்பான்

  இறைவனின் தண்டனையில் இருந்து யாரும் தப்பமுடியாது

 12. Murugan on February 26, 2011 at 10:23 pm

  நாம் இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர்களிடம் இருந்து ஒரு படம் படிக்கச் வேண்டும், ஆன்மீகத்தில் நாம் நல்ல முனேற்றம் கண்டுள்ளோம், அண்ணல் சமூக மற்றும் அரசியல் விசயத்தில், இன்னும் நமக்கு விவரம் பத்து, அதை வர்களிடம் படிக்க வேண்டும். அவர்கள் சமூகமாக ஒன்று இணைந்து வாழ்கிறார்கள், அனைவரும் கண்டிப்பாக தீவிரவாதிகள் அல்ல, அனல் அவர்களால் தீவிரவாதிகளை மீரா முடியாது. இதற்கு நாம் செய்ய வேண்டியது, நம்மை அமைப்பு ரீதியாக பலபடுத்த வேண்டும் மற்றொண்டு மிதவாத மற்று மத்தது நண்பர்களை ஒன்றிணைக்க வேண்டும் அவர்களுடைய செயல்பாடுகளை ஆதரிக வேண்டும். இவை களத்தின் கட்டாயம்.

 13. Agilan on February 27, 2011 at 7:19 am

  @THAHIR
  //யார் ஒருவன் அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்கின்றன் அவன் அணைத்து மனித இனத்தையும் கொலை செய்தவன் போல் ஆவான் யார் ஒருவன் ஒரு உயிரை வாழவைக்கிறான் அவன் அணைத்து மனித இனத்தையும் வாழவைத்தான் போல் ஆவான்//

  இதை படித்துவிட்டு ஆஹா!! என்ன ஒரு கட்டுப்பாடு, மனிதநேயம் இஸ்லாமில் என்று யாரும் வாய் பிளக்கபோவதில்லை..! உங்களுக்கு காபிரை கொல்வது நியாயம் தான் என்றும் அதே குரானில் தான் பதிவாகிஇருக்கிறது..! இதை தானே எல்லா இஸ்லாமிய தீவிரவாதியும் கூறிக்கொண்டு படுகொலை செய்டுவருகிரார்கள்..!!

  காப்பிரை கொலை செய்வது “ஹராம்” என்று எங்காவது இருக்கிறதா..?? பன்றி ஹராம் என்று சொன்னவருக்கு இதை தெளிவுபடுத்த நேரம் இல்லையா??

 14. thahir on February 28, 2011 at 5:30 pm

  அஸ்ஸலாமு அழைக்கும் அகிலன்

  காபிர் என்றால் என்ன் என்பதை நான் முதலில் தெளிவுபடுத்த விரம்புகிறேன் . {நானும் நீயும் வணகுவதற்க்கு தகுதியான் இறவன் ஒருவனே ! ஏன் என்றால் இந்தியனுக்கு ஒரு இறைவனும் அமரிக்காவுக்கு ஒரு இறைவனும் அரேபியாவுக்கு ஒரு இறைவனும் இருக்க முடியாது என்று அறிந்தும் அதை நிராகரித்தவன் } காபிர் என்ற அரபி மொழியின் அர்த்தம் .

  காபிரை கொல்வது நியாயம் தான் என்று குரானில் எக்கு குரப்படுள்ளது ( உங்களுக்கு காபிரை கொல்வது நியாயம் தான் என்றும் அதே குரானில் தான் பதிவாகிஇருக்கிறது..!)

  மோலும் குரானை முழுவதுமாக கடைபிடிக்கும் உண்மையான விசுவாசி முஸ்லிம் .இறைவன் கட்டளைக்கு மாறு செய்யாதவன் ( இறைவனின் அடிமை )

  இதுவும் குரான் வசனம் தான் / இறைவனின் கட்டளை

  உன்ங்களுடைய மார்க்கம் உங்களுக்கு .எங்களுடைய மார்க்கம்
  எங்களுக்கு .

  நாம்( இறைவன் ) விரும்பாதவரை யாரும் முஸ்லிம் .இறைவன் கட்டளைக்கு மாறு செய்யாதவன் ( இறைவனின் அடிமையாக ) இருக்க இயலாது

 15. அன்பழகன் on March 1, 2011 at 1:55 pm

  //உன்ங்களுடைய மார்க்கம் உங்களுக்கு .எங்களுடைய மார்க்கம்
  எங்களுக்கு .//

  அய்யா தாஹீர்,

  இது பெரிய டுபாக்கூர். இதை இலங்கை தமிழர்கள் கிழி கிழியென்று கிழித்துப்போட்டு விட்டனர். இந்த தளத்தில் சென்று பாருங்கள்:

  http://thesamnet.co.uk/?p=24032

  அதே போல, ஒருவனை கொன்றால் எல்லோரையும் கொல்வது போல ஆகும் என்ற குராஅன் பொய்யையும் முஸ்லீம்களே ஒப்புக்கொள்வதை பற்றி அறிந்துஜ்கொள்ளுன்கள்:

  http://uk.answers.yahoo.com/question/index?qid=20100408143757AA6ts36

  அது முஸ்லீம்களை, முஸ்லீம்கள் கொல்வதை குறிப்பது. இந்துவை முஸ்லீம் கொல்வதை குராஅன் தடுக்கவில்லை.

 16. thahir on March 1, 2011 at 2:44 pm

  அஸ்ஸலாமு அழைக்கும் அன்பழகன்

  ( யார் ஒருவன் அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்கின்றன் அவன் அணைத்து மனித இனத்தையும் கொலை செய்தவன் போல் ஆவான் யார் ஒருவன் ஒரு உயிரை வாழவைக்கிறான் அவன் அணைத்து மனித இனத்தையும் வாழவைத்தான் போல் ஆவான்)

  இதில் எங்கு முஸ்லிமை அல்லது இந்துவை குறிக்கின்றது.

  அநியாயமாக ஒரு உயிரை ( இந்துவானாலும் சரி முஸ்லிம் அனாலும் சரி ) கொலை செய்கின்றன் அவன்அணைத்து மனித இனத்தையும் கொலை செய்தவன் போல் ஆவான்.

  அணுவளவு நன்மை செய்தாலும் அதற்குண்டான பலனை அவன் அனுபவிப்பான் அணுவளவு தீமை செய்தாலும் அதற்குண்டான பலனை அவன் அனுபவிப்பான்

  இறைவனின் தண்டனையில் இருந்து யாரும் தப்பமுடியாது

 17. அன்பழகன் on March 1, 2011 at 7:09 pm

  தாஹிரய்யா,

  இதை அங்கே போய் எழுதுங்கள். அவர்கள் குரானை நேரடியாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்று இஸ்லாமியர்களே சொல்லுவதாக விவாதித்து வருகின்றார்கள். ஒரு உயிரை என்று சொல்லும்போது அது மனிதர்களை மட்டும் தான் குறிப்பிடுகிறது. காபீர்களை மனிதர்களாகவே குரான் கருதவில்லை என்றும் அங்கே சிலர் எழுதி அதற்கு ஆதாரங்கலையும் சொல்லிருக்கின்றனர்.

 18. sanjay on March 2, 2011 at 1:54 pm

  Thahir,

  Whichever way you guys interpret the Koran does not matter at all.

  At the end of the day, you guys go around killing people.

  And if you say killing people is not a sin, then please tell me, what is?

  You celebrate your religion, call it the greatest religion on earth blah blah…but do not take people’s lives.

  And please do not drag God’s name (whether it is Allah or Jesus) to justify your killings.

  If indeed your God says that killing people is fine, then he is not a God at all.

 19. THAHIR on March 3, 2011 at 5:22 pm

  அஸ்ஸலாமு அழைக்கும் அன்பழகன்

  குரான் முஸ்லிம்களுக்கு மட்டும் அருளப்பட்ட வோதம் இல்லை . ஒட்டுமொத்த மனித சமுதயதிற்காக அருளப்பட்ட வோதம்.

  இதன் போயாரால் ஒருவன் ஒரு தவறு செய்கின்றார் என்றால் .அதை தடுத்து நிறுத்துவது .உன் மீதும் என் மீதும் கடமை .

  ஒன்றினைவோம் ! சக்திபோருவோம் !

 20. Agilan on March 29, 2011 at 8:49 pm

  அய்யா தாகிர், குரான் பெயரால் தான் எல்லா இசுலாமிய தீவிரவாதியும் கொலை செய்வதாக கூறுகிறான்…அது ஹராம் என்று சொல்ல ஒரு இசுலாமிய அமைப்பும் வரவில்லை…

  இந்தியா போல அரை வேக்காட்டு தனம் இல்லாமல் இந்த கொலைகரர்களை கொல்லும் அரசுகளுக்கு எதிராக தொண்டை கிழிய இங்கு மேடைபோட்டு கத்துகேரீர்கள்…ஏன் சுன்னி, வாஹப்பி அமைப்புகளிடம் பொய் முறையிடலாமே?? அவர்கள் உங்களுக்கு குரானை தெளிவுபடுத்துவார்கள்…அப்போது புரியும் இது ஏன் ஹராம் இல்லை என்று…!!

 21. Justice Jambu on August 28, 2012 at 2:01 pm

  //1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்// ஹிந்து வழிபாடு தளமாக இருந்தால் அது கோவில் இஸ்லாமிய வழிபாடு தளமாக இருந்தால் அது கட்டிடமா? நன்றாக இருக்கிறது உங்களது நேர்மை?

 22. அத்விகா on August 28, 2012 at 9:17 pm

  ஜஸ்டிஸ் ஜம்பு என்ற பெயரில் கடிதம் எழுதியுள்ள நண்பருக்கு,

  அயோத்தி ராமர் பிறந்த புனிதமான இடம்.

  கோயில் அல்லது சர்ச் அல்லது மசூதி என்பது வழிபாட்டுத்தலம். அதனை எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் பிறந்த இடம் என்பது அப்படி அல்ல. பிறந்த இடம் என்பது ஒன்றே ஒன்று தான்.எங்குவேண்டுமானாலும் இருக்க முடியாது.

  மேலும் பாபர் மசூதி இருந்த கட்டிடம் பல ஆண்டுகளாக தொழுகைக்கு பயன் படுத்தாததால் அது மசூதி அல்ல என்று தெளிவாக இஸ்லாமிய வழிகாட்டு நெறிகளே தெரிவிக்கின்றன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும். எனவே தங்கள் கருத்துக்கள் சரியல்ல என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

 23. தமிழன் on August 28, 2012 at 10:13 pm

  @Justice Jambu, உங்களுக்கு முகமதுவின் வரலாறு தெரியுமா? . அவர் மெக்காவைப்பிடித்தபின் முதலில் செய்தது. அங்கே மெக்காவாசிகள் கடவுள்ளாக வணங்கிய சிலைகளை அடித்து நொறுக்கியதுதான். அதுமட்டுமா , இங்கே பாரதத்தில் எத்தனை , எத்தனை கோயில்கள் இஸ்லாமிய கொள்ளையர்களால், படையெடுப்பாளர்களால் நிர்மூலமாக்கப்பட்டன…. இன்றும் காசியில் எங்கள் விஸ்வனாதர் ஆலையத்தை ஒட்டி ஒரு கேடுகெட்ட மசூதி. அங்கே அது எப்படி வந்தது?…. எல்லாவற்றுக்கும் வரும் காலத்தில் நியாயத்தீர்ப்பை நாங்கள் வழங்குவோம். நீங்கள் ஒரு முமின் என்று உங்களின் பின்னூட்டத்திலேயே தெரிகிறது. நான் போடும் பின்னூட்டம் இங்கே வராமல் போகலாம். ஆனால் எனது பிளாகில் இதைப்பற்றி எல்லாம் பதிவுகள் வரும், அதை ஹிந்துக்கள் படித்து தெளிவார்கள்.

 24. Justice Jambu on August 29, 2012 at 10:38 am

  \\உங்களுக்கு முகமதுவின் வரலாறு தெரியுமா? . அவர் மெக்காவைப்பிடித்தபின் முதலில் செய்தது.\\ // நீங்கள் ஒரு முமின் என்று உங்களின் பின்னூட்டத்திலேயே தெரிகிறது.// நானும் ஒரு ஹிந்து தான் ஆனால் சிலைகளை வணங்குவது இல்லை. நியாமான பின்னூட்டம் இட்டதால் முமினாக அகிவிடீர்களே?

 25. Justice Jambu on August 29, 2012 at 10:55 am

  //மெக்காவைப்பிடித்தபின் முதலில் செய்தது. அங்கே மெக்காவாசிகள் கடவுள்ளாக வணங்கிய சிலைகளை அடித்து நொறுக்கியதுதான்.// மெக்காவை அவர் சிலை வணக்கம் புரிபவர்களிடம் இருந்து மீட்டார் என்று தன வரலாற்றில் உள்ளது. அதவது நீங்கள் வரலாறை முழுவதுமாக படிக்க வேண்டும். மக்கா என்பது அவரது சொந்த தாய் மண். காபாவில் இருந்த சிலைகளை அவர் அப்புற படுத்தினர் என்பது நீங்கள் நுனி புள் மேய்ந்தார் போல் வரலாறு படித்துள்ளீர்கள் என்று புரிகிறது. நீங்கள் சொன்ன பிறகு இஸ்லாமிய சகோதரர்களையும் எனது திராவிட கழக தோழர்கையும் கேட்டேன் ஆதாரத்துடன் விலக்கினார்கள். உண்மை என்ன வென்றால்? காபா ஆபிரகாம் என்பவரால் சிலை வணங்காத மக்களுகாக கட்டப்பட்ட வழிபாடு தலமே என்பது உறுதியான வரலாறு. பின்பு அது சிறுது சிறிதாக சிலைகல் நிறுவப்பட்டது( பாபர் மஸ்ஜித் உள்ள நாம வைத்தது போல). சிலைகளை வணங்கிய அவர்களே சிலைகள் வேண்டாம் என்று அவரது முன்னோர் ஆபிரகாம் கட்டிய காபா அவர் கட்டிய பொது எப்படி சிலை இல்லாமல் இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அவர்கள் நிறுவிய சிலையை அவர்களே அப்புற படுத்தினார்கள். நாம் இந்து தர்மத்தை மதிக்க வேண்டும் நியாயமாக நடக்க வேண்டும் என்று தான் மீண்டும் மீண்டும் கூறிகிறேன். என்னை பொறுத்த வரை இஸ்லாமியனும்,ஹிந்துவும், நீயும், நானும் மனிதன் தான். நமக்குள் ஒற்றுமையை வளர்ப்போம் சகோதர்களே? நீங்கள் யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள் அவர்களும் யாரை வேண்டுமானாலும் வணங்கட்டும். ஒற்றுமையாக இருந்து இந்தியாவை உயர்த்துவம். மத மோதல் இல்லா நாட்டை உருவாக்குவோம். எனது ஏக்கம் உங்களுக்கு புரிய வேண்டும் என்று ஏங்குகிறேன். நான் உங்களுக்கோ?இஸ்லாமியாருக்கோ? எதிரி அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 26. Arivuselvan on August 29, 2012 at 9:57 pm

  ஹாய் ஜெஸ்டிசே ஜேம்பு

  //நானும் ஒரு ஹிந்து தான் ஆனால் சிலைகளை வணங்குவது இல்லை. நியாமான பின்னூட்டம் இட்டதால் முமினாக அகிவிடீர்களே//

  வேற என்னத்தை வணன்குறீங்க!

  என்ன நாடகம் பொட்டுன்னு வரங்கா இந்த முபினுங்கோ..

 27. T.S.Muralikrishnan on November 25, 2012 at 6:12 pm

  The openion of Mr Amrutha puthiran is 100% correct,if we Hindus do business only with our Hindu brothers,then you can understand gradually certain percentage Islam terrorism will come down those people who provide fund ,food and shelter to these organisation begin to understand Hindus are alert,so we have to change the present attitude.ISLAM IS ONLY LIKE THIS ” HOW A MINORITY REACHING MAJORITY,SEIZING AUTHORITY, HATES MINORITY” Muslims and Christian heads are first enter in to our land by doing some charitable work initially and attract our our poor people to there fold,first giving them a chain with a cross in it saying this will protect you at the time of emergency and instill some hope first then gradually introduce this person to there service and develop in them a faith un shakable ,gradually they become a christianor Muslim and become a number one enemy to our Hindu religion.and faith. Be alert,enemy is at our door step, This is the only caution that we can give to our people.Please give our children proper knowledge of our religion.Regular chanting of Prarthanai at our house on a particular time will give you strength and ward off all evil from our doorsteps. .

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*