Monthly Archives: February 2011

ஆன்மிகம், சமூகம், பொது

நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்

நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்

நமது கோவில்களில் எத்தனை வகைகள் உண்டு? பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்கள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன? பெரும் தூண்களும், மண்டபங்களும், கலை நயத்துடன் விளங்கும் ஒழுங்கின் பின்னணி என்ன? அருளொளி வீசும் தெய்வீக நிலையங்களான கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு நாம் செய்ய வேண்டியது என்ன?

மேலும் »

கலைகள், சமூகம், பொது

ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை

ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை

கோயிலின் உயரதிகாரி, கோயிலின் புராதனத் தன்மையையோ அல்லது மகிமையையோ கணக்கிலெடுக்காமல், உண்டியல் அதிக வசூல் செய்யும் கோயில் முதல் வகை, அடுத்த அதிக வசூல் செய்யும் கோயில் இரண்டாம் வகை என்றே பிரிக்கின்றனர்... அறநிலையத் துறை சட்ட திட்டங்களில், பிற மதத்தினருக்கு காண்ட்ராக்ட் தரக்கூடாது என்று உள்ளது. எங்கே போனது விதி?... ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே கடவுளாய் இருப்பவரைக் கட்டம்கட்டி, சிறப்பு வழி, பொது வழி எனப் பிரித்து, கிட்டப் பார்வையாகவும், தூரப் பார்வையாகவும் பார்க்க வைத்து, கல்லாக் கட்டுவது யார்?... பிற மதத்தினர் அரசு சார்ந்த துறைகளின் மூலமாக அவர்களது வழிபாட்டுத் தலங்களைப் பேணி...

மேலும் »

அரசியல், தொடர், பயங்கரவாதம், பிறமதங்கள்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-02

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-02

“இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை. ஓவ்வொரு இந்தியனையும் கட்டாயப் படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம். தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லீமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்”

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

காலம் கடந்த நடவடிக்கையே என்றாலும், மத்திய அரசின் முகமூடியைத் தோலுரிக்கவும், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அவசியத்தை உணர்த்தவும் ராசா கைது உதவி இருக்கிறது... ராசா தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் சி.பி.ஐ.-யிடம் சொல்லி பலிகடா ஆகாமல் தப்பிக்க வேண்டும்... கிடைத்த லாபப்பணம் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நகராச் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மத்தியில் உள்ள சோனியாவை எதிர்ப்பது ஆபத்து என்பது எம்.ஜி.ஆரையே ஏமாற்றிய கருணாநிதிக்குத் தெரியாதா?... எனவே தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி, 'ராசா (மட்டும்) குற்றவாளி இல்லை' என்று நாமும் ஏற்போம்...

மேலும் »

அரசியல்

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!

திருமாவளவனைத்தான் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கான எம்.பி. க்கள் குழுவில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இடம் பெறச்செய்தது. அவரும் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற ஒரு தேசிய தலைவரைப் போல் அவர்களுடன் காஷ்மீருக்குச் சென்று திரும்பினார். திரும்பிய பிறகு அவர் கூறியது, ‘காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்பதுதான்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 2

February 5, 2011
-
ரமணரின் கீதாசாரம் – 2

தேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே.

மேலும் »

இலக்கியம்

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6

ஆரம்பம் தொட்டு நேற்று வரை நாம் காணும் சோஷலிஸ யதார்த்த வகை எழுத்தாளர்களும் திராவிடக் கழகங்கள் சார்ந்த எழுத்தாளர்களும் கட்சிக் கொள்கைகள் சார்ந்து எழுதுபவர்களாகவும், தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்படும் வாழ்க்கை சார்ந்து எழுதுபவர்களாகவும் வேறுபடுகிறார்கள்... ஆனால் தலித் வாழ்க்கை அனுபவம் என்னவென்பதை எவ்வளவு நெருக்கமாக உணர முடியுமோ, எவ்வளவுக்கு ஒரு தலித் எழுதுதல் சாத்தியமோ அவ்வளவு நெருக்கத்தை பெருமாள் முருகன் தன் எழுத்தில் சாதித்து விடுகிறார்... தம் உயர்ஜாதி அந்தஸ்தை விட்டுவிட மனமில்லது ஜாதி பேதங்களை வந்த இடத்திலும் பேணுவதில் தீவிரமாக இருப்பதையும் அதற்கு சர்ச்சும் உதவியாக இருப்பதையும் கண்டு அதற்கு எதிரான தன் போராட்டங்களையும் அதில்,...

மேலும் »

நிகழ்வுகள், பிறமதங்கள்

விசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

February 4, 2011
-
விசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

அமெரிக்காவின் சான்ப்ரான்சிஸ்கோவில் ட்ரை-வேலி என்ற கிறிஸ்தவ பல்கலைக் கழகம் ஒன்று பல மில்லியன் டாலர்கள் பெற்றுக் கொண்டு, பலருக்கு மாணவர்கள் என்ற அங்கீகாரம் கொடுத்து விசா பெற வழி செய்து மோசடி செய்திருக்கிறது இன்றைய இணைய யுகத்தில் ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றி, அதன் தரத்தைப் பற்றி எல்லாம் வெகு எளிதாக அறிந்து கொள்ள முடியும், இதெல்லாம் தெரியாமலா அந்த மாணவர்கள் லட்ச லட்சமாக பணத்தைக் கொட்டினார்கள்?

மேலும் »

அனுபவம், ஆன்மிகம்

அமைதியின் ஓசை

February 2, 2011
-
அமைதியின் ஓசை

வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது... அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்... திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை...

மேலும் »

அரசியல், சமூகம்

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; 'கலைஞர்' என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?

மேலும் »