பயணம்: திரைப்பார்வை

payanam-movie-bannerநல்ல படம் என்று பத்திரிக்கைகள் சொன்னதாலும் ராதாமோகனின் படங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் இந்தப் படத்தைக் குடும்பத்துடன் பார்த்தேன். இந்தப் படத்துக்கு இணையத்தில் எழுதப்பட்ட மற்ற விமர்சனங்களும் படம் தந்த எண்ணங்களுமே என்னை இப்படத்தைப் பற்றிய என் கருத்தை எழுதத் தூண்டி விட்டிருக்கின்றன.

இப்படத்தின் கதைக்களம் சாராமல் சொல்லப்பட்டிருக்கும் கிருத்துவம் சார்ந்த காட்சிக்கருத்துகள் ஐயமூட்டுவதாகவும் யதார்த்த விரோதமாகவும் தோற்றமளிக்கின்றன. இந்து, இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்களைப் பற்றிய தயாரிப்பாளரின் கருத்துகளுக்கான பிரச்சாரப் படமோ இது என்கிற ஐயத்தை பல பேரிடம் இந்தப் படம் நிச்சயம் ஏற்படுத்தும். படமுடிவில் பாதிரியார் இறந்துபோன தீவிரவாதிகளுக்காக ஜெபிப்பது போன்றதொரு காட்சி அரங்கத்தினுள்ளே சலிப்பொலியை ஏற்படுத்துவதே இதற்கு சான்று.

’மொழி’ படத்தின் மூலம் பல பாராட்டுகளைப் பெற்ற பிரகாஷ்ராஜ் தயாரித்து ராதாமோகன் இயக்கி இருக்கும் இப்படம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் சென்னையில் செய்யும் ஒரு விமானக் கடத்தலை அதன் தொடக்கம் முதல் முடிவு வரை விவரிக்கிறது. இது தமிழ்ப்பட உலகிற்கு சற்று வித்தியாசமான களம்தான். ஒரு சில காட்சிகளைத் தவிர்த்து படம் முழுவதும் விமானத்துக்குள்ளாகவே நிகழும் காட்சிகளை அலுப்பில்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. மேலும் பாத்திரங்களுக்கேற்ற நடிகர்கள் தேர்வு, இயல்பான நடிப்பு, தத்ரூபமான காட்சியமைப்புகள், தேவையற்ற பாடல்களோ சண்டைகளோ இல்லாமலிருப்பது, நாகார்ஜுனாவின் உடல்மொழி மற்றும் பொருத்தமான நடிப்பு ஆகியவையும் பாராட்டப்படவேண்டியவை. கடத்தப்பட்ட விமானத்தில் இரண்டு கொலைகள் நிகழ்ந்தும் கூட படத்துக்கு தேவையான திகிலை இப்படம் ஏற்படுத்தவில்லை. மெலிதாய் கலக்கப்பட்டிருக்கும் நகைச்சுவை படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றது. இதுவே இப்படம் தரவேண்டிய இறுக்கத்தை இலகுவாக்கிவிடுகிறது. இந்த உத்தி வலிந்து செய்யப்பட்டதா என்பது யோசனைக்குறியதாக இருக்கிறது. ஏனென்றால் நூறு பயணிகளின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் நிகழ்வை வேளியிருந்து நோக்கும் பதட்டத்தை இயக்குனர் படம் பார்ப்பவர்களுக்குத் தரவில்லை. இயக்குனரின் நோக்கம் அது இல்லை போலிருக்கிறது.

படத்தில் பல சமூக விமர்சனங்கள் போகிற போக்கில் இயல்பாக செய்யப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்கள் பல வசனங்களில் கிண்டல் செய்யப்படுகின்றன. பஞ்ச் வசனங்கள் கேலிக்குள்ளாக்கப் படுவதை அரங்கமே அதிர்ந்து ரசிக்கின்றது. ஊடகத்தினர் பரபரப்பு செய்திகளுக்காக செய்யும் காரியங்கள் வெளிச்சம் போடப்படுகிறது. இக்கட்டான சூழலில் அரசியல்வாதிகளின் செயல்பாடு விவாதிக்கப் படுகிறது. எண்கணித ஜோதிடர் ஒருவர் கேலி செய்யப்படுகிறார். முஸ்லிம் தீவிரவாதிகளின் மூர்க்கமும் ஒரு முஸ்லிம் குழந்தையிடமே வெடிகுண்டு மறைத்து வைக்கும் குரூரமும் சொல்லப்படுகிறது. தீவிரவாதிகள் நூறு கோடி ரூபாய் கேட்பதை ஒரு தீவிரவாத அமைப்பு மதவிரோதம் என்று கூறியதும் அக்கோரிக்கையை கைவிடுகின்ற தீவிரவாத மத நியாயமும் காட்டப்படுகின்றது. ஆனால் பாபர் ‘மசூதி’ இடிப்புக்குப் பிறகுதான் தீவிரவாதம் தலைதூக்கியது என்ற உண்மையற்ற வாதத்தை அள்ளித் தெளிப்பதும், கிருத்துவம் கருணை மற்றும் தியாகத்தின் மறு உருவம் என்று சாதிப்பதும், படத்தின் நோக்கங்களை ஐயத்துக்குள்ளாக்குகிறது.

payanam-movie-stills-9வணிகப் படங்களில் சில பொருட்களை சந்தைப்படுத்துவது என்பது வழக்கம்தான். ஆங்கிலம் மட்டுமல்லாது எல்லா மொழிப் படங்களிலும் இது வாடிக்கைதான். படத்தின் போக்குக்கு ஊறு செய்யாமல் சாமர்த்தியமாக பல பொருட்களின் விளம்பரம் செய்யப்படும். ஆனால் இப்படத்திலோ கிருத்தவ மதபோதனை அவ்வாறு செய்யப்படுகிறதோ என்ற எண்ணம் இயல்பாகத் தோன்றுகிறது. திருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள். படத்தில் இது பின்னால் ஒரு முக்கிய சமிக்ஞையாகவும் பயன்படுகிறது. மூடிய விமானத்துக்குள்ளாக எங்கோ இருக்கும் மாதாக்கோயில் மணியோசை கேட்பது என்பது என் விமானப் பயண அனுபவத்தின் படி சாத்தியமற்ற ஒன்று. பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது. தீவிரவாதிகள் அரைமணிக்கு ஒருவராகக் கொல்லத் துணிகையில் தன்னை பாதிரியார் கொல்லச் சொல்லும் போது அப்பட்டமான கிறிஸ்தவப் பிரச்சாரம் தலைதூக்கி, இறுதியில் கொல்ல்லப்பட்ட தீவிரவாதிகளுக்காக ஜெபிக்கும் காட்சியில் முழுமையாக உறுதி செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு இயல்பாகத் தோன்றும் காட்சிகளை நான் வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பதாக உங்களுக்கு ஓர் எண்ணம் தோன்றலாம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயென்று தோன்றுவதைப் போல் உங்களுக்குத் தோன்றலாம். உண்மைதான். கிருத்துவ மதபோதனையாலும் பிரச்சாரத்தாலும் அரண்டு போயிருப்பவனுக்கு இப்படத்தில் இருண்டுபோன இடங்கள் பிரச்சனைதான்.

haranprasanna… ராதா மோகன் இப்படி எல்லாம் எடுக்கமாட்டாரே என்று இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்வைத்து ஹிந்துத்துவாதிகளும், அதே இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பை முன்வைத்து முற்போக்காளர்களும் குழம்பும்போது, கிறித்துவர்கள் மட்டும்தான், மீட்பர் அனுப்பியிருக்கும் புதிய சீடரின் வருகையை நினைத்து மயிர்க்கூச்செறிதலுடன் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள். இதில் படத்தின் கடைசி சட்டகத்தில் உறையும் காட்சி முக்கியமானது. அதுவரை நமக்கு இருந்துவரும் சந்தேகங்களை எல்லாம் அறவே நீக்குவது. படத்தில் வரும் ஹிந்து நிந்தனைக் காட்சிகள்கூட சப்பைக்கட்டுத்தானோ என்று சந்தேகம் கொள்ள வைப்பது…

… எல்லாப் படத்திலும் மெல்லிய கிறித்துவச் சார்பை பின்னணியில் வைத்து பார்வையாளர்களை, அவர்கள் அறியாமலே தன்னரசியலுக்குப் பயன்படுத்தும் அல்லது தான் நம்பும் சூடோ செக்யூலரிசத்துக்கும் பயன்படுத்தும் ராதா மோகனின் முகமூடி கிழிகிறது. அவர் இனி நேரடியாகவே கிறித்துவ ஆதரவுத் திரைப்படம் எடுக்கலாம்…

“பயணம்: மீட்பரின் புதிய சீடர் வருகை”:   ஹரன்பிரசன்னா விமர்சனம்

48 Replies to “பயணம்: திரைப்பார்வை”

  1. Pingback: Indli.com
  2. The babri masjid reference dialogue was censored (but can be easily guessed) and the anti hindu bias is reflected in the portrayal of the astrologer played by manobala.

    When I watched the film, the christian priest praying for the dead in the last scene drew giggles from the audience.

    Another point which has gone unnoticed in this article is that nagarjuna’s assistant in the film is a muslim.

    I agree that a church bell in the airport premises is not realistic but the sound is heard by the passengers only after they get off the plane.

  3. எந்த துறையில் உள்ள கிறிஸ்துவர்களாக இருந்தாலும் இதே மன நிலையில் தான் உள்ளார்கள், இவர்களின் நோக்கம் மக்கள் துன்பமற்று வாழ வேண்டும் என்பதல்ல, மாறாக மக்கள் துன்பம், பிரச்சினை மற்றும் கவலையுடன் இருக்க வேண்டும் என்பதும் அதன் மூலம் அறுவடை நிகழ்த்த வேண்டும் என்பதுமே நோக்கம். சுனாமி வந்தாலும் ஆண்டவரின் கோபம் என்பார்கள், ஒரிசாவில் பூகம்பம் வந்தாலும் ஆண்டவரின் கோபம் என்பார்கள், குஜராத்தில் நிலநடுக்கம் வந்தாலும் ஆண்டவரின் கோபம் என்பார்கள், கோபம் கொள்ளும் ஆண்டவர் எப்படி மன்னிக்கும் தன்மையுடையவராக இருப்பார்? எப்படி அனைவரையும் ரட்சிப்பார்? என்று எவரும் கேள்வி எழுப்புவதில்லை. வேலை வாய்ப்பு வேண்டிய ஜப்க்கூட்டங்களும், மதிப்பெண் வேண்டிய ஜப்க்கூட்டங்களும், நோய் தீர்க்கும் மற்றும் பேய்(?) விரட்டும் ஜப்க்கூட்டங்களும், உலகம் சமாதானம் வேண்டிய ஜப்கூட்டங்களும் என்னிக்கையிலடன்காமல் நடந்து கொண்டே வருகிறது, ஆனால் இந்த பிரச்சினைகள் அதிகரித்து கொண்டே வருகிறது, ஆண்டவர் இவர்களின் ஜபத்தை கேட்க வில்லையோ? இதை எவரும் கேட்க வில்லை.

  4. இந்து சமுதாயம் (நகரத்தில் வாழும்) முக்கியமாக இன்னும் விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும், ஓன்று ஜனுவரி மாத பிறப்பை புத்தாண்டாக கொண்டாட கூடாது. 2 ) கிருஸ்துமஸ் தாத்தா விவகாரம்- இந்து மாணவ மாணவிகளே அந்த வேடம் தாங்கி வருவது கொடுமையிலும் கொடுமை. நாம் செய்யும் உதவிகளை அந்த வேடம் போட்டுதான் செய்ய முடியுமா?

    ஆமா இத்தனை இந்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளனரே! இந்து தர்மத்தை சார்ந்து ஏன் செய்திகளை படத்தில் வைக்க முன் வர வில்லை? இந்துக்கள் மத உணர்வற்று இருப்பது தான். இந்துக்களை பற்றி எப்படி கிண்டலடித்து படம் எடுத்தாலும் ஓடுகிறது. ஆனால் வரலாற்றின் அடிப்படையில் எடுத்த டாவின்சி கோட் படத்துக்கு நம் நாட்டிலேயே எதிர்ப்பு வந்தது, அந்த படத்தை நாம் அனைவரும் பார்க்க வேண்டும், பட்டி தொட்டி எல்லாம் போட்டு பாமரர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் செய்ய வேண்டும், இது மாதிரி இன்னொரு படம் வரும் வரை ஆண்டுக்கு ஒருமுறை வீதி தோறும் அந்த படத்தை திரையிட வேண்டும். இது நம்மால் முடியும் தானே!
    இந்த படத்தின் தமிழ் வடிவம் மற்றும் இந்தி வடிவம் வலைதளங்களில் கிடைக்கிறது. நமக்குண்டான ஒரு பிரச்சார ஆயுதமாக இதை பயன் படுத்தலாம். நன்றி!

  5. பக்குவமான எழுத்து.

    இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி இந்துக்கள் பேசக் கூடாது என்று சொல்லும் முகமதியர்களுக்கு இந்தப் படத்தை எதிர்க்கும் தைரியம் இருக்கிறதா ?

    கிருத்துவர்களைப் பகைத்துக் கொள்ள முகமதியர்கள் விரும்ப மாட்டார்கள். ஈராக்கில் வாங்கிய அடி மறந்திருக்காது.

  6. உண்மை தான். மொழி படத்திலும் அன்னை தெரேசா இல்லத்திற்கு கதாநாயகன் 50000 ருபாய் நன்கொடை கொடுப்பார்.
    ” நீங்களெல்லாம் எவ்வளவோ [உண்மை தானே !] செய்றீங்க. நான் இது கொடுக்கக்கூடாதா!” என்பார். நல்ல மனசுக்கார பிரகாஷ் ராஜோ கிறிஸ்துவ பெண்ணின் பெற்றோர் ஆசைப்படி சர்ச்சில் திருமணம் செய்வார்.
    இவை பிரசார பட வகையை சேர்ந்தவை தான்.
    காதல் படம் மட்டுமென்ன? திருமணம் செய்து வைத்த ஸ்டீபன் முன் தம்பதிகள் வணங்க [ பிள்ளையார் கோவிலுக்கு முன்] ஸ்டீபன் மார்பில் தொங்கும் ஏசு டாலரை போகஸ் செய்வார்கள்.
    கொஞ்சம் கொஞ்சம் விஷம் இங்கும் அங்கும். தேவைப்பட்டால் அளவு அதிகப்படுத்தப்படும். அறியாமல் பலர் ஆசையாய் விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் .
    சரவணன் .

  7. நன்றி! மீண்டும் மீண்டும் ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு சவால் விடும் செயல்களில் அனைவருமே ஈடுபடுகிறார்கள்!
    ஹிந்துகளை ஒன்று படுத்தி அவர்களின் தன்னம்பிக்கை சார்ந்த ஹிந்து கருத்துக்களை அனைவரும் அறியச்செய்ய வேண்டும்!
    நன்றி!

  8. ஆனால் ஒரு கருணை உள்ளதுறவியைக் காட்ட வேண்டுமென்றால் பாதிரியார் தான் வரவேண்டுமா என்ன? அன்பே சிவம் என்று படம் எடுத்து விட்டு சிவனைக் கும்பிடுபவனை வில்லனாகவும் கன்னியாஸ்திரியை அன்பொழுகும் கருணைக்கடலாகவும் காண்பித்த கமலஹாசனின் செய்க்யூலரிச மனப்பான்மைக்கு இந்த இயக்குனரும் தப்பவில்லை என்றே தோன்றுகிறது. ஏன் ஒரு காவித்துறவி என்னுயிரை எடுத்துக்கொள் என்று கூறும்படி காண்பித்திருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன? காவி உடையில் போலிச்சாமியாரை காட்சிப்படுத்தவும் கேலிபண்ணவும் ஆளாய்ப்பறக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் கருணையுள்ளவராக காட்ட கஞ்சப்படுவது ஏனோ தெரியவில்லை. எல்லாவற்றிலும் செக்யூலரிசம்.

    கருணைக்கு ஏசுதான் முதல் ஆளா என்ன? ஏசுவுக்கும் முன்னாடி ரந்தி தேவன் பற்றி கேள்விப்படாத நம் மக்கள் இருந்தால் இதோ…!

    https://hayyram.blogspot.com/2010/03/blog-post_09.html

  9. அப்பட்டமான கிறித்தவ படங்களோ, முஸ்லிம் படங்களோ ஓடியதாக சரித்திரமே இல்லை. இந்துக்களை வைத்து எடுக்கப் பட்டால் தான் ஓடும்.

    மலையாளப் பெண் என்றால் கொச்சினிலும், திருவனந்த புறத்தில் இருந்தாலும், அவர்கள் மாராப்பு போடாமல் தான் இருக்க வேண்டும் என்பது தமிழ் சினாமாவின் எழுதப் படாத விதி.

    அதே போல பாதிரியார் என்றால் ஜெபம் மட்டுமே செய்து கொண்டு இருப்பார். சாமியார் என்றால் பெண்களை தடவிக் கொண்டே இருப்பார் என்று விதி எழுதப் பட்டு விட்டது.

    கண்ணியாச்த்ரிகளை ரேப் பண்ணுகிற, பையன்களை வைத்து ஹோமோ செக்ஸ் செய்கிற பாதிரி பயல்களைப் பற்றி எத்தனையோ ந்யூஸ் வருகிறது.. எழில் என்பவரின் பிளாக்கை பார்த்தாலே தெரியும். அதையெல்லாம் படமாக எடுக்க எவனுக்கும் தைரியம் இல்லையா, அல்லது அறிவில்லையா என்று தெரியவில்லை.

  10. நடிகர்களில் மதசார்பை வைத்து வகைப் படுத்தினால் இப்படி சொல்லலாம்:

    கிறிஸ்தவ சார்புடையவர்கள்:
    விவேக்
    விஜய்
    அஜீத்

    இந்து சார்புடையவர்கள்:
    ரஜினி
    வடிவேலு
    சரத்குமார்
    சூர்யா

    இசுலாமிய சார்புடையவர்கள்
    விஜயகாந்த் (திம்மி)

    கமலஹாசன் பொதுவான இந்து எதிரி. அதற்காக எந்த கொஷ்டியுடனும் அவர் சேர தயார். அவர்களும் இந்த கோமாளியை பயன்படுத்திக் கொள்வார்.

    இதே போல டைறேக்டர்களிலும் லிஸ்ட் போடலாம்.

  11. நமது தமிழ் ஹிந்து தளத்தில் “இவர்களை தெரிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில், ஒரு வலை தேவை என்று நினைக்கிறன். இதில், ராதாமோகன் போன்ற நபர்களின் பின்கதை பற்றி சொன்னால் நமக்கும் அவர்களுடைய நோக்கம் தெளிவாகும்.

  12. //I agree that a church bell in the airport premises is not realistic but the sound is heard by the passengers only after they get off the plane.//

    Yes, they may hear the bell sound when they are out of the plane, but I meant a previous scene inside the plane they all hear the bell sound and the father utters a dialog on this.

  13. அட போங்கப்பா உங்களுக்கு இதே வேலைய போச்சி . எல்லாத்துக்கும் மத சாயம் பூச நினைப்பது ..இந்த விசியத்துக்கு இப்படி பேசுறிங்களே ?? இந்து கடவுளை பெருசா காட்டுற தமிழ் படங்கள் 1000 கணக்குல இருக்கு . மக்களிடம் வேட்டுரமையை வளர்த்து ,மதத்தை வளர்ப்பதை விட . மக்களுக்கு சேவை செய்து மதத்தை வளர்க பாருங்கள் ..

  14. மோகன் அவர்களே உங்கள் நல்ல எண்ணம் புரிகிறது. ஆனால் உங்க கமென்ட்
    //அட போங்கப்பா உங்களுக்கு இதே வேலைய போச்சி . எல்லாத்துக்கும் மத சாயம் பூச நினைப்பது ..இந்த விசியத்துக்கு இப்படி பேசுறிங்களே ?? //
    கட்டுரையின் கடைசியில் வரும்
    //கிருத்துவ மதபோதனையாலும் பிரச்சாரத்தாலும் அரண்டு போயிருப்பவனுக்கு இப்படத்தில் இருண்டுபோன இடங்கள் பிரச்சனைதான்.//
    என்ற வரிகளை பார்க்காமல் போடப்பட்டதோ?
    ஆனால் உங்கள் கடைசி வரிகள் “மக்களிடம் வேட்டுரமையை வளர்த்து ,மதத்தை வளர்ப்பதை விட . மக்களுக்கு சேவை செய்து மதத்தை வளர்க பாருங்கள் ..” கட்டுரையின் கருத்தைதான் வலியுறுத்துகிறது, இல்லையா? ஏனென்றால் வேற்றுமையை வளர்த்து மதத்தை வளர்ப்பதில் கை தேர்ந்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியுமே.

  15. @ Mohan

    மதச் சாயம் பூசுவதற்கும், பூசப்பட்ட மதச் சாயத்தை வெளியே சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

    இந்தக் கட்டுரை பார்வையாளர்கள் மீது திணிக்கப்படும் கிருத்துவ பிரச்சாரத்தையும், இசுலாமிய மதம் மீதான வெறுப்பைக் காட்டும் காட்சிகளையும் பற்றிப் பேசுகிறது.

  16. விவரமாக எழுதிய ஒகையாருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
    திரையரங்கில் தொடக்கத்தில் பாதிரியாரின் வார்த்தைகளுக்கு வரவேற்ப்பு இருந்தது. பிறகு கிருத்தவ பாச்சா பலிக்கவில்லை. மக்கள் இதை ரசிக்கவில்லை. இறுதிக்காட்சியில் ரசிகர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.

  17. Indian Secularism was exposed when the Ayodhya verdict and the Godhra verdict were pronounced by the courts. No politician, Media welcomed it..everyone doubts the judiciary and the judgement. If the judgement were against Hindus, the same people will say, judgement prevails and they have faith in the judiciary..blah blah….

    Indians who are such fools to fall prey to these false people dont deserve better…

  18. கீர்த்தி,
    மற்ற நடிகர்களை எவ்வாறு பட்டியலிட்டீர்களோ எனக்குத் தெரியாது? ஆனால் ரஜினியை எவ்வாறு இந்து சார்பு என்கிறீர்கள்? ராகவேந்திரா படத்தில் நடித்ததாலா? ஒரு நாத்திகரை அந்தப் படத்தை இயக்க அனுமதித்தனர். குத்துப் பாட்டுடன் ராகவேந்திரருக்கு முதலிரவுக் காட்சி வேறு.

    அடிக்கடி ஆண்டவன் அரைக்கைச் சட்டைப்பையில் இருப்பது போல் அறிக்கை விடுவதாலா? பக்தி என்ற எளிய வார்த்தை விடுத்து ஆன்மிகம் என்ற மேம்பூச்சு அடையாளம் கொள்வதாலா? அல்லது ராமரை இழித்துப் பேசிய தமிழக முதல்வரை அந்த மேடையிலேயே ஆமோதித்து அடிவருடியதாலா?

    பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா போன்றவர்கள் மத்தியில் வாழ்கிறோம். அதிலும் ரஜினிக்கு இளையராஜாவை ஆகாது? என்னே இந்து சார்பு!!

  19. DEAR ALL,

    Pl be informed that Prakash Raj is a converted christian which he doesn’t reveal much in public.

    So obviously he shall propogate his religion only….

    WE HINDU IDIOTS ARE BUYING TICKETS FOR THIS AND PATRONIZING THESE FELLOWS.

    JAI HIND

  20. பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கும்பலை உடனடியாக ஏதேனும் இஸ்லாமிய நாட்டுக்கு அடித்து விரட்டி, அங்கு போய் கிறிஸ்தவப் பிரசாரம் செய்யச் சொல்ல வேண்டும்.

  21. \\ மக்களுக்கு சேவை செய்து மதத்தை வளர்க பாருங்கள் .. \\

    விலை போகாத சரக்குக்கு தான் இலவசமாக எதாவது செய்து விற்க வேண்டும். சரக்கு நன்றாக இருக்கும் பொழுது எதற்காக இலவசமாக சேவை என்ற பெயரில் ஒரு போலி செயல் பாடு. மக்களுக்கு சேவை செய்வது அரசின் செயல்பாடு. ஒரு நல்ல மனிதனை உருவாகுவது சமுதாயத்தின் செயல்பாடு. தயவு செய்து மேற்கத்திய முறையில் சனாதன தர்மமான ஹிந்து மதத்தை நோக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். மேலும், 1000 கணக்கான ஹிந்து சேவை அமைப்புகள் காலம் காலமாக செய்து வருகின்றன. ஆனால் சேவை எதையும் எதிர் பார்த்து செய்வது கிடையாது. அவ்வாறு செய்தல் அதன் பெயர் வியாபாரம். நாங்கள் வியாபாரிகள் அல்ல.

  22. //அட போங்கப்பா உங்களுக்கு இதே வேலைய போச்சி . எல்லாத்துக்கும் மத சாயம் பூச நினைப்பது ..இந்த விசியத்துக்கு இப்படி பேசுறிங்களே ?? இந்து கடவுளை பெருசா காட்டுற தமிழ் படங்கள் 1000 கணக்குல இருக்கு . மக்களிடம் வேட்டுரமையை வளர்த்து ,மதத்தை வளர்ப்பதை விட . மக்களுக்கு சேவை செய்து மதத்தை வளர்க பாருங்கள் ..//

    மோகன்,

    இந்து மதம் சார்ந்த புராணப் படங்கள் ஆன்மிகம் சார்ந்த படங்கள் மற்றும் தெய்வ நம்பிக்கை வளர்க்கும் குடும்பப் படங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. இதேப் போல் கிருத்துவ மதத்திலும் பல படங்கள் வந்திருக்கின்றன. மதசார்பற்ற நமது நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மதத்தைப் போற்றவும் மதநம்பிக்கை வளர்க்கவும் படங்கள் எடுக்கலாம். அதை யார் ஆட்சேபித்தார்கள்? ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு.

    கதைப் படங்களில் பொருட்களை விளம்பரம் செய்வதும் சகஜம்தான். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் BMW கார்கள் அவ்வாறு விளம்பரப்படுத்தப்படுவது ஓர் உதாரணம். ஆனால் அப்போதெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் பொருள் உயர்த்திச் சொல்லப்படுமேயன்றி போட்டியாளர்களின் பொருள்கள் தாழ்த்திச் சொல்லப்படமாட்டாது. அதற்கு சட்டமும் இடம் கொடுக்காது.

    இப்படத்தில் மதம் ஓர் வணிகப் பொருள் போல விளம்பரப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற மதங்கள் தாழ்த்திச் சொல்லப்படுகின்றன.

  23. //இப்படத்தில் மதம் ஓர் வணிகப் பொருள் போல விளம்பரப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற மதங்கள் தாழ்த்திச் சொல்லப்படுகின்றன.// This is called ‘kamalhassan effect’ in Kollywood!

  24. மற்ற மதங்களில் உள்ள குறைகளைச் சொல்லுவது தவறல்ல. ஆனால், மற்ற மதங்களை வெறுக்கிற ஆபிரகாமியத்தார், நாங்கள் மற்ற மதங்களைக் குறை சொல்ல மாட்டோம் என்று காட்டிக் கொள்வதுதான் தவறு.

  25. Keerthi,

    Wonder how U call vadivelu, sarath kumar & surya as pro hindu?

    Just bcos sarath kumar had an alliance with BJP in the last elections?

    No actor has the guts to stand & fight for hindu rights.

  26. @ களிமிகு கணபதி
    இந்தக் கட்டுரை பார்வையாளர்கள் மீது திணிக்கப்படும் கிருத்துவ பிரச்சாரத்தையும், இசுலாமிய மதம் மீதான வெறுப்பைக் காட்டும் காட்சிகளையும் பற்றிப் பேசுகிறது.

    நன்றி கணபதி .. நானும் இங்கு ஒரு மதத்தின் மீது வெறுப்பை காட்டும் கருத்துகளை பற்றி தான் பேசுகிறேன் . கீழே உள்ள நண்பரின் கருத்தை படிக்கவும் ..
    இதே படத்தில் ஒரு முஸ்லிம் குழந்தை இந்தியர்களை பற்றி நன்றாக சொல்லும் காட்சி பற்ற்றிய தங்கள் கருது என்ன …

    armchaircritic : “ஏனென்றால் வேற்றுமையை வளர்த்து மதத்தை வளர்ப்பதில் கை தேர்ந்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியுமே.” .
    —————-
    @களிமிகு கணபதி :
    மற்ற மதங்களில் உள்ள குறைகளைச் சொல்லுவது தவறல்ல. ஆனால், மற்ற மதங்களை வெறுக்கிற ஆபிரகாமியத்தார், நாங்கள் மற்ற மதங்களைக் குறை சொல்ல மாட்டோம் என்று காட்டிக் கொள்வதுதான் தவறு.

    இங்கு நீங்கள் மற்ற மதங்களை குறை சொல்வதை ஒத்து கொள்வதோடு மட்டும் இன்றி . நீங்கள் சார்ந்த மதத்தையும் இழிவு படுத்துகிறிர்கள் . உங்கள் பெயர் நான் சார்ந்த மதத்தை ஒத்து இர்ருப்பதால் . என்னை உங்கள் கருத்து மன வருத்த பட செய்கிறது .

  27. ஓகை நடராஜன் (author)
    இப்படத்தில் மதம் ஓர் வணிகப் பொருள் போல விளம்பரப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற மதங்கள் தாழ்த்திச் சொல்லப்படுகின்றன.

    மேலே கணபதி அவர்களுக்கு சொன்ன பதில் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன் .

    உங்களை போல் ஒரு வேடிக்கை கதை சொல்கிறேன் :

    பால வருடங்களுக்கு முன் Badsa என்று ஒரு படம் வந்தது . அதில் எப்போதும் தவறு செய்யும் கெட்டவனாக ஓர் கிருத்துவ மதத்தை சேர்த்தவரும் .. எப்போதும் நல்லதே செய்யும் . என்ன நடந்தாலும் பொறுமையாக இறக்கும் ஒரு இந்து மதத்தை சேர்த்தவரும் … அவரே கடத்தல் , கொலை (நன்மைகே) செய்யும் பொது இஸ்லாம் மதத்தை சேர்த்தவரக காட்டுவதை மத பிரச்சாரமாக என்னலாம ?

  28. @ மோகன்

    விவரமாகச் சொல்ல முயல்கிறேன். குழப்பம் தவிர்க்க.

    ஆபிரகாமிய மதத்தார் மற்ற மதங்களை, தெய்வ நம்பிக்கைகளைக் கேவலப்படுத்துவதும், அவை அழிக்கப்பட வேண்டியவை என்று போதிப்பதும் நான்கு சுவர்களுக்குள் நடைபெறுகின்றன. மசூதிகள், சர்ச்சுகள், பொலிட்பீரோ நடத்தும் உட்கட்சி மீட்டிங்குகள் இவற்றில் இத்தகையப் பேச்சுக்களைக் கேட்கலாம்.

    ஆனால், வெளியில் இவர்கள் இத்தகைய கருத்தை வைக்க மாட்டார்கள். அப்படிச் செய்தால் தங்களை அன்பு மார்க்கத்தார் என்றும், அமைதி மார்க்கத்தார் என்றும் காட்டிக்கொள்ள முடியாது என்ற தெளிவான புரிதலால் அவர்கள் அப்படி நடந்துகொள்வார்கள்.

    கிறுத்துவர்கள் பிற மதங்கள் மீது தங்களுக்குள்ள வெறுப்பை “வாய்ப்பு கிடைத்தால்” வெளிப்படுத்தி விடுவார்கள். முக்கியமாக அவர்களுக்கு லேசாகவாவது அதிகார பலம் இருக்கும்போது. அவர்களைப் பொறுத்தவரை மற்ற மதங்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டியவை. எனவே, அவர்கள் வெறுப்பை சமயம் வாய்க்கும்போது வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.

    மொகமதியர்களைப் பொறுத்தவரை அதிகாரம் கிடைக்கும்வரை மெக்கத்து வசனங்கள் பேசுவார்கள். அதிகார பலம் கிடைத்தபின்னரே வெளிப்படையாக மெதினத்து வசனங்கள் பேசுவார்கள். (இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதைத் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.)

    மொகமதியர்களைப் பொறுத்தவரை மற்ற மதத்தார் எல்லாம் அடிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள். அடிமைப்பட மறுப்பவர்கள் மட்டுமே அழிக்கப்பட வேண்டியவர்கள். எனவே, அவர்கள் கிறுத்துவர்களைப் போல வெறுப்பை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அடிமையாக மறுப்பவர்களை மட்டுமே அவர்கள் வெறுப்பார்கள். அவர்களை மட்டுமே அவர்கள் கேவலமாகப் பேசுவார்கள்.

    (உதாரணமாக, இந்துக்கள் எல்லாரும் கெட்டவர்கள் என்று நாங்கள் சொல்ல மாட்டோம், ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மட்டும்தான் கெட்டவர்கள் என்று முகமதியர்கள் அடிக்கடி சொல்லுவது.)

    இந்துக்களுக்கு நிறுவனங்கள் என்ற சுவர்கள் இல்லை. இந்து மதங்களும் சுவர்களை உடைக்கும் செயல் இயல்பு கொண்டவை.

    எனவே, இந்துக்கள் எதையும் வெளிப்படையாகவே பேசுவதும், எழுதுவதும் வழக்கம். இந்த வெளிப்படைத்தன்மையை (transparencyஐ) ஆபிரகாமியத்தாரும், மெக்காலே புத்திரர்களும் மதவெறி என்று சொல்லுகிறார்கள். அதை கேள்வி கேட்காமல் பல இந்துக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதன்படித்தான் நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். உங்களைப் போல.

    ஆபிரகாமியத்தாருக்கும், தர்மத்தை முன்னிறுத்தும் இந்துக்களுக்கும் உள்ள முக்கியமான செயல்முறை வித்தியாசங்கள் இருக்கின்றன.

    ஆபிரகாமிய மதத்தார் தங்களது நம்பிக்கைகள் தவிர மற்றவை அழிய வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படுகிறார்கள். இந்துக்கள் அப்படிச் செய்வதில்லை. அப்படிச் செய்பவர்கள் இந்துக்கள் இல்லை. இது இந்துத்துவத்தின் முதல் விதி.

    இந்த முதல்விதியைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்துத்துவத்தின் இரண்டாவது விதி.

    இரண்டாம் விதியின் வெற்றிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய் என்பது மூன்றாவது விதி. தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

    இவையே இந்துத்துவத்தையும், ஆபிரகாமியத்தையும், அவற்றின் எண்ணப்போக்கையும் வித்தியாசப்படுத்துகின்றன.

    இந்த வித்தியாசத்தைச் சொல்லுவது மதவெறி இல்லை. உண்மையைச் சொல்லுவது மதவெறி கிடையாது. இது உண்மையில்லை என்று நீங்கள் கருதினால் அதற்கான ஆதாரங்களைத் தாருங்கள். திறந்த மனநிலை இந்துக்களின் காதுகள் பிள்ளையாரின் காதுகள் போலத் திறந்தே இருப்பவை.

    காதுகள் மட்டுமல்ல, இந்துக்களின் வாயும் வெளிப்படைத் தன்மை உடையது.

    அதிகார பலம் கிடைக்கும்வரைதான் ஆபிரகாமியத்தாரது மானுட நாகரீகம் எல்லாம் நீடிக்கும். அதிகார பலம் கிடைக்கும்வரை மூவகை ஆபிரகாமியத்தாரும் மறைவில் வெளிப்படையாகவும், வெளியில் மறைமுகமாகவும் தங்கள் வன்முறையை வெளிப்படுத்துவார்கள்.

    அதன் விளைவே திரைப்படங்களில் போதிக்கப்படும் இந்துமத வெறுப்பு. இதுவரை வந்த படங்களில் எத்தனைப் படங்களில் இந்து நம்பிக்கைகளும், கிராமங்களின் பெருமையும், இந்து தெய்வங்களும், இந்தியப் பண்பாடும் இழிவு படுத்தப்பட்டுள்ளன என்று பாருங்கள். மீண்டும் மீண்டும் மறைமுகமாக நம்மை நாமே வெறுக்க வேண்டும் என அவை திரும்ப திரும்ப முயல்கின்றன. அதற்காகப் பல ட்ரில்லியன் டாலர்கள் ஊடகங்களில் கொட்டப்படுகின்றன.

    திரைப்படங்கள், டிவி சேனல் நிகழ்ச்சிகள், பத்திரிக்கைகள் போன்ற ஊடகங்கள் வாயிலாக “நீங்கள் பலகீனர்கள், நீங்கள் பாவிகள், நீங்கள் காஃபிர்கள், நீங்கள் பேகன்கள், நீங்கள் ஒழுக்கமற்றவர்கள், நீங்கள் நேர்மை இல்லாதவர்கள், நீங்கள் முட்டாள்கள்” என்று அவை மீண்டும் மீண்டும் போதிக்கின்றன.

    அதை எப்போதும் கேட்கும் நாம் நம்மை நம்புவதில்லை. நம்மில் இருந்து உருவாகும் தலைவர்களையும் நம்புவதில்லை. வேட்டியை எறிந்துவிட்டு, பேண்டை உடுத்த ஆரம்பித்த போதே நாம் நம் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டோம். குடுமியை வெட்டிவிட்டு கிராப் வைத்தபோது தன்னம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டோம்.

    வெள்ளைக்காரனும், அரபியரும் உருவாக்கி வைத்தவை தவிர வேறு எதையும் நமக்காக நாம் உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்ற படைப்பூக்கமற்ற வாழ்க்கை வாழ்கிறோம்.

    தன்னை வெறுப்பவர் மிக எளிதில் பலகீனராகிப் போவார். பலகீனராகிப் போனவரை அழிப்பதும், அடிமையாக்குவதும் ஆபிரகாமியருக்கு எளிது.

    தன்னம்பிக்கையும், நன்னம்பிக்கையும் இல்லாமல் இருப்பதுதான் நமது ஒரே பலகீனம். இந்த பலகீனத்தை மெக்காலே கல்வி முறை உருவாக்கிக் காக்கிறது.

    நம் பாரதீய அறிவுக் கருவூலங்களே இந்த பலகீனத்திற்கான மாற்று மருந்து. காலையிலும் மாலையிலும் அரைமணி நேரம் விவேகானந்தரைப் படியுங்கள்.

  29. “நடிகர்களில் மதசார்பை வைத்து வகைப் படுத்தினால் இப்படி சொல்லலாம்:

    கிறிஸ்தவ சார்புடையவர்கள்:
    விவேக்
    விஜய்
    அஜீத்

    இந்து சார்புடையவர்கள்:
    ரஜினி
    வடிவேலு
    சரத்குமார்
    சூர்யா

    இசுலாமிய சார்புடையவர்கள்
    விஜயகாந்த் (திம்மி)

    கமலஹாசன் பொதுவான இந்து எதிரி. அதற்காக எந்த கொஷ்டியுடனும் அவர் சேர தயார். அவர்களும் இந்த கோமாளியை பயன்படுத்திக் கொள்வார்.

    இதே போல டைறேக்டர்களிலும் லிஸ்ட் போடலாம்.”

    இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்து சார்புடையவர்கள் என்று சொன்ன நடிகர்கள் எனக்கு தெரிந்து மற்ற மத நம்பிக்கைகளை புண்படுத்தியது இல்லை. ஆனால் மற்ற நடிகர்கள் எப்படி ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

    ஹிந்துக்கள் ஒரு விஷயம் நன்கு கவனிக்க வேண்டும். நாம் ஹிந்து மத நம்பிக்கைகளை வெளிப்படையாக சொல்வதற்கு தயங்க கூடாது. இது நாள் வரை சபை நாகரிகம் கருதி அமைதியாக இருந்தது போதும். ஒரு முறை அவ்வாறு சொல்ல ஆரம்பித்து விட்டால் குறைந்த பட்சம் நம் முன்னால் ஹிந்து மத நம்பிக்கைகளை கேவலமாக பேச தயங்குவார்கள். எல்லோரும் அப்படி பேச ஆரம்பித்தால் அவர்கள் யார் முன்னால் பேச முடியும். தங்களுக்குள்ளேயே முணங்கி கொள்ள வேண்டியதுதான்.

  30. //நாம் ஹிந்து மத நம்பிக்கைகளை வெளிப்படையாக சொல்வதற்கு தயங்க கூடாது. இது நாள் வரை சபை நாகரிகம் கருதி அமைதியாக இருந்தது போதும்.// சரியாகத்தான் சொன்னீர்கள் சிவா மற்ற மதத்தவரிடம் மட்டுமல்ல புரியாமல் உளறும் நம் மதத்தவரிடம் கூடத்தான். நம் மனத்தை mediaக்கள் எவ்வளவு தூரம் குழப்பி வைத்திருக்கிறது என்றால் அவை சொல்வதை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப ஆரம்பித்து விட்டோம். அது நான் அல்ல digitally altered image என்று நித்யானந்தா சொல்வதை நம்மில் எவ்வளவு பேர் நம்புகிறோம் Of all the channels Sun TV சொல்வதை அல்லவா நம்புகிறோம். எந்திரன் காலத்தில் நித்யானந்தா சொல்வதும் சாத்தியமே என்று remote chance அளவிற்குக்கூட நம்பத் தயாராகவில்லையே!

  31. பாதிரிகள் நல்லவர்கள் என்று கூறுவது நகைப்புக்குறியது. இவர்கள் சமாதனத்தை விரும்பினால், ஏன் இவர்கள் மாவோயிஸ்ட்க்கு ஆதரவுளிக்க வேண்டும்? மிசோரத்தில் என் பாதிரிகள் மக்களை வன்முறை பாதையில் அழைத்துச் சென்று, பிரிவினையை தூண்டுகின்றனர்? வாடிகனில், என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாதா என்ன? ஒரிசாவில் ஒன்றும் அரியாத மலைவாழ் மக்களை பொய் பிரச்சாரம் முலம் முளைச் சலவை செய்கின்றனரா, அப்படியானால், பைபிள் பொய் கூறத்தான் கற்றுத்தருகிறதா? அயோத்தி வெற்றிக்கு பின்னர் தான் இஸ்லாமியர்கள் வன்முறை பாதைக்கு வந்தார்கள் என்று கூறினால், சிறு குழந்தைக்கூட சிரித்துவிடும். அகண்ட பாரதத்தை துண்டுப்போட்டு, நவகாளியில் இந்துக்களை கொன்று குவித்தார்களே, அது வன்முறை இல்லையா? இந்துக்கள் தெய்வம் என போற்றும் பெண்களை நிர்வானப்படுத்தி ஊர்வலமாக அழைத்து கொடுமைபடுத்தினரே, அது வன்முறை இல்லையா? இவ்வளவு ஏன், ஜிகாத் என்ற திவிரவாதக் கொள்கை என்ன பாபர் கட்டிட இடிப்புக்கு பன்னரா, குராணில் இடம்பெற்றது? முட்டாத்தனமான படங்கள் தமிழில் எடுப்பது ஒன்றும் புதிதல்ல.
    ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

  32. @Mohan/////உங்களை போல் ஒரு வேடிக்கை கதை சொல்கிறேன் :

    பால வருடங்களுக்கு முன் Badsa என்று ஒரு படம் வந்தது . அதில் எப்போதும் தவறு செய்யும் கெட்டவனாக ஓர் கிருத்துவ மதத்தை சேர்த்தவரும் .. எப்போதும் நல்லதே செய்யும் . என்ன நடந்தாலும் பொறுமையாக இறக்கும் ஒரு இந்து மதத்தை சேர்த்தவரும் … அவரே கடத்தல் , கொலை (நன்மைகே) செய்யும் பொது இஸ்லாம் மதத்தை சேர்த்தவரக காட்டுவதை மத பிரச்சாரமாக என்னலாம ?////
    .
    […].. அதே பாஷா படத்தில் ஒரு லோக்கல் தாதாவாக ஆனந்தராஜ் காண்பிக்க படுவார்…அவர் ஒரு சக்தி பக்தராகவும் கான்பிக்கபடுவார்..அதை ஏன் ராசா கவனிக்கவில்லை??

    ஒரு படத்தில் ஒரு ஜாதியோ, மத அடையாளமோ தூக்கிபிடிகபட்டு, மற்றவை மட்டும் இழிவு படுத்டபடுதல் தான் இங்கு வாதம்..இதை நியாயமான யார் வேண்டுமானாலும் சுலபமாக புரிந்துகொள்ளலாம். உங்களுக்கு மட்டும் ஏனோ அது புரியவில்லை. அது செரி, சும்மாவா சொன்னான் துங்க்ரவண தான் எழுப்ப முடியும்னு..!

    ஆமாம் ‘மோகன்” என்ற பெயரால் மட்டும் நீங்கள் எந்த கூட்டத்தை சேர்ந்தவர் என்பதை இனம்காணமுடியா வெள்ளந்திகள் இந்துக்கள் என்று திரியும் பல பேரில் நீங்களும் ஒருவர் தானே…!

    இறந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இந்து என்று பினாத்தும் இந்துக்கள் இருக்கும் வரை உங்களுக்கு நல்ல ‘அறுவடை’ தான்…

    [Edited and published]

  33. திரைப்பட உலகின் ஆணி வேரான பாம்பே எனப்பட்ட மும்பை, பலகாலங்களாக அண்டர்கிரவுண்ட் தாதாக்களிடம் இருந்து வந்தது. இதில் வளம் பெற்றவர்கள் பல கேவலமான உறவுமுறைகளி ஏற்படுத்திக்கொண்டு, இந்துவா, துலுக்கனா,கிறித்துவனா என்று வகைபடுத்தமுடியாதபடி பின்னிப்பிணைந்து இருந்து, பாம்பாட்டிக்கு பாம்பினால் மரணம் என்னுமாறு, அதே அண்டர்கிரவுண்ட் தாதாக்களால் கொலை விழும் அளவுக்கு மிரட்டப்பட்ட போது, அரசியல் தலைவர்களால் காப்பாற்றப்பட்டு, தற்போது அதே அண்டர் கிரவுண்ட் தாதாக்கள் தமிழகத்தில் பேணப்படுகிறார்கள். அதன் விளைவே இம்மாதிரியான திரைப்படங்களும், ஒரே குடும்பத்தினரால் கட்டுப்பாடு செய்யப்படும் நிலைகளும்.திரைப்படங்களைத் தவிர இந்த அண்டர் கிரவுண்ட் தாதாக்கள், கிரிகெட்டிலும் நுழைந்துள்ள நிலையே, ஏல முறை கொள்ளை அடிப்புக்களும். சரத் பவார், தாவூத் இப்ராஹீம் ஆட்கள், கருணாநிதி சம்பந்தப்பட்ட பல்வேறு “நிதிகள்”, ரஜினி காந்த் போன்றோர் இவற்றில் முக்கியப்புள்ளிகள் .

  34. Ganapati,

    I differ with your views in a few aspects. U say that christians do not indulge in anti hindu bashing openly. That is not totally correct.

    A few years back, christian pamplets denigrating hindu Gods & Godesses were openly cicrculated in front of the Kapalieeswarar temple in chennai. When some persons objected & compalined to the police, it was withdrawn.

    I think this incident has been mentioned in this website.

    In christian schools, during the assy time in the mornings, some speeches openly denigrate hinduism. I have personaly seen this.

    Regarding films denigrating hinduism, the producers & directors are hindus, so who is to blame here? Everyone does not get funded by christian missionaries.

    So, we hindus should first stop making fun of our own religion & only then we can unitedly fight these evil forces.

  35. ஒன்றை யாரும் புரிந்து கொள்வதில்லை கிருத்துவர்களை பொறுத்தவரை இந்துக்களை மதம் மாற்றுவது ஒன்று தான் வேலை அதற்கு அனைத்து விதமான தந்திரங்களையும் கையாள்வர்கள் இப்போது கிருத்துவர்கள கவனம் கலையுலகில் உள்ள பிரபலங்களை மாற்ற அவர்களை வைத்து படமெடுத்தால்,அவர்களைவைத்து கச்சேரி செய்தல்,புகழ்பெற்ற கர்நாடக கலைஜர்களை வைத்து கிருத்துவ பிரச்சார பாடல்களை பாடி பரப்புவது மெல்ல மெல்ல அந்தக் கலைஞ்சர்களை மதம் மாற்றுவது இப்படி நடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள்.இந்து கலைஞ்சர்களை உஷார் படுத்தினால் நல்லது.

  36. IT IS TRUE THAT THERE IS A COLLEGE IN THIRUCHI KNOWN AS ”KAVERAI KALAI KALVI’ IN WHICH BHARATHANATIYAM AND CARNATIC MUSIC IS TAUGHT- THIS IS RUN BY A CHRISTIAN MISSIONARIES AND THEY OBJECTIVE IS TO MAKE CHRISTIANITY DANCE AND MIX CARNATIC MUSIC WITH JESUS SONS. THEY BROUGHT MANY CDS ON JESUS SONS RENDERED BY FAMOUS CARNATIC MUSICIAN BOMBAY JAYSHREE WHO WAS AWARDED SOME TITLES BY FATHER GASPER RAJ , CLOSE ASSOCIATE OF KANIMOZHI. THEY ROBED OTHER CARNATIC MUSICIANS LIKE SRIRAM PARTHASARATHY, O S ARUN ECT TO RENDER SOME SONGS FOR HUGE MONEY PRIZE WHICH THEY DID FOR THE SAKE OF POLITICAL PRESSURE FROM KANIMOZHI.
    SIMILARLY THEY OFFERED TO BHARATHANATIYAM DANCEUS, BIG MONEY TO DANCE FOR JESUS SONGS WHICH THEY COULD NOT SUCCEED SINCE WHATEVER EFFORTS THEY CAN PUT, IT WILL NOT RECEIVED AMONG PEOPLE AND RASIKAS.
    SO HINDUS MUST BE V CAREFULL AND WATCHFULL ABOUT THE FOX TRICKS OF MISSIONARIES WHO ARE BENT UPON TO PENETRATE IN EVERY FIELD OF HINDU ARTS
    HOWEVER, LORD KRISHNA WILL DEFEAT THEIR EVIL DESIGNS.
    BOYCOT THE MOVIES OF CHRISTIANS AND ANTI HINDU MOVIES TO TEACH A LESSON TO THE HINDU HATERS.

  37. பேராண்மை என்று ஒரு படம்… மேலோட்டமான பார்வைக்கு ஏதோ சோசியலிச, கம்யுனிச கொள்கை பரப்பும் படமாக தெரியும். ஆனால் கூர்ந்து கவனித்தால் இது டைரக்டர் ஜனநாதனின் இந்து மத வெறுப்பும், கிறிஸ்துவ மத பற்றும் வெளிபடுத்தும் படைப்பு என்று தெளிவாக புரியும். இவர் படங்கள் எல்லாவற்றிலுமே ஒரு சின்ன கிறிஸ்தவ சாயல் இருக்கத்தான் செய்யும்….பேராண்மையின் உள்குத்தை பாப்போம்..!

    கதைபடி ஹீரோ, நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன்…இது எல்லா தமிழ் சினிமாவின் எழுதபடாத விதி, ஒன்றும் புதிதுஅல்ல. ஆனால் இந்த படத்தில் இவர் ஒரு பழங்குடி இனத்தவர்(SC /ST ) என்று காட்ட படுவார், இவர் சீனியர் ஒரு இந்து, பெயர் கணபதி ராம், அதுவும், ஒரு ஜாதி வெறி பிடித்த, பழங்குடி மக்களை கொடுமை படுத்தும், வெறியர். so called மேல் ஜாதி வெறியர்..!

    ஹீரோவை கேவலபடுத்தும் மேல் ஜாதி பெண்கள். சூசை என்கிற நண்பர் ஹீரோவுக்கு. இவரும் நல்லவர்! (கிறிஸ்தவர் ஆயிற்றே!) எந்த நேரத்திலும் ஹீரோவின் நல்ல குணத்தை பற்றி செர்டிபிகாடே தரும் கிறிஸ்தவ கண்னியாய்ஸ்திரி, விக்டோரியா.!! நாட்டையே காபட்ட்ரும் சுயநலம் இல்லாத ஹீரோ. அவர் செய்த சாதனைக்கு அவார்ட் வாங்கும் சுயநலவாதி, எமத்துகாரர் இந்து கணபதி ராம்..!

    இதில் மறைமுக செய்தி என்ன என்றால், எல்லா பழங்குடி மக்களுக்கும் இந்தியாவில் ஆறுதல் என்றால், ஒன்று மாவோயிஸ்டுகள், இல்லை கிறிஸ்தவர்கள். இந்தியா என்கிற வல்லரசாக துடிக்கும் நாடு, அந்த ஒரு இல்லக்கை அடைய பழங்குடி மக்களை நசுக்குகிறது…! இந்து மேல் ஜாதியினர் அப்பட்டமான ஜாதி வெறியர்கள், reservation இருந்தாலும் sc , st களுக்கு இந்தியாவில் விடியல் இல்லை. இந்தியாவில் மேல் ஜாதி இந்துக்கள் மட்டும் தான் ஆதரிக்க படுகிறார்கள்..!

    அட ஒரு சாதாரண சினிமா பார்க்கும் சாமானியனுக்கு புரிவது சென்சர் போர்டுக்கு புரியவில்லையா?? இது முழுக்க இந்தியா தேசியத்துக்கு எதிரான செய்தி கொண்ட படமாக இருக்கிறதே என்ற கேள்வி எழுவது நியாயம் தான்…

    இப்படி பட்ட படம் ஒரு பக்கம் இருக்க, சோனியாவின் ஆட்சியில் மாவோயிஸ்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, இந்த மாவோயிஸ்டுகளுடன் அணி திரண்டு நிற்கும் பாதிரிமார்கள், அருந்ததி ராய் போன்ற அரை வேக்காடுகள் பேசும் பேச்சு, மாவோயிஸ்டு தலைவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாய் இருக்கும் சுட்ட்சமம், (இவர்களின் பெயரை மட்டும் பார்து இந்து என்று எமாரக்குடாது) பொதுஜனங்களை மட்டுமே தாக்கும் இந்த ‘அரசுக்கு எதிரான’ போராளிகள்…இதை எல்லாம் சேர்த்து பார்தால் புரியும் இப்படி பட்ட சினிமா படங்களின் உள்நோக்கம்..!

    இவர்கள் (பாதிரிகள்) வெறிகொண்டு பரப்பும், இந்து மதத்திற்கு எதிரான பொய்கள் உடைக்க படவேண்டும். திருச்சியில் கிறிஸ்தவ மயானத்தில், ஜாதி சுவர் எழுப்பியவர்கள் தானே இவர்கள். உலகம் எங்கும், பாதிரிகள் செய்யும் பாலியல் கொடுமைகள் இன்னும் வெளிச்சம் போட்டு காட்டப்படவேண்டும்…சர்சுகளில் தலித்துகளுக்கு காட்டப்படும் பாரபட்சம் குறித்து செய்தி பரப்பவேண்டும். இதை போர் பண்டவரே ஒப்புகொண்டார் அல்லவா..?

    சிஸ்டர் ஜெச்மீ எழுதிய ‘அமென்’ எல்லா மீனவ கிராமங்களுக்கும் மொழிபெயர்த்து வழங்கப்பட வேண்டும்..! அப்போ தான் அடங்குவார்கள் இந்த ‘அறுவடை’ அசுரர்கள்… !!

  38. In almost all tamil movies we can see a hindu temple but mosque and church are rarely seen. In this film payanam hero is hindu he does very good job to rescue the passengers, that christian father role is very small when compare to hero, I don’t know why you peoples make this as a big issue? We have Christians and Muslims in Tamil Nadu let dedicate this film to them. India means “UNITY IN DIVERSITY” plz don’t destroy it… We want saffron in our national flag but we don’t want saffron as a national flag… Try to avoid this type of articles. In India Hinduism is majority but in the world it is minority (i.e 3rd place) so, plz keep this in mind before writting this type of articles…

    JAI HIND

  39. Tamilian,

    You are accusing we are intolerant. Can you show any other religion more tolerant than us? Can you show any other religion more accommodative than us? Our govt bans Satanic verses book and Davinci code movie. We tolerate. But when doubts rose for Christian preaching in a movie meant for public viewing I felt an aberration and pointed out. Your comment will be useful if you say anything about my observation, but you preach me not to observe at all.

  40. Sir (author) first of all i am not a religious leader to preach!!! For past 2000 years we can see only a church in Rome city but now they allow muslims to built there mosque and USA is a christian dominate country they allow hindus to built there temples there – This is also called as tolerant. In kuwait we can see church but in saudi arabia we can’t. Tolerant is differ by country not by religion. As an indian i request you to built a SECULAR INDIA – This is the meaning of my comment…

  41. Dear Friends,
    we should understand the real problem to our society.There is no doubt that the christian missionaries are doing mass conversions to change our indian cultural face that means to destroy the hindu culture.But in other countries our hindus are not trying to change their cultural identity with the help of indian hindus. where as lot of crore money is being pumped by christian missoinieries in to india for christian invasion on hindus..What is the neccesity ?
    Simply we should not ignore the facts that in christian countries they are permitting to bulid temples etc.

  42. வணக்கம்.

    ///As an indian i request you to built a SECULAR INDIA – This is the meaning of my comment…/// தமிழன்.

    அருமை தமிழ் சகோதர, நாம் இந்து என்ற மதம் சார்ந்தவர் இல்லை, இங்கே இந்து மதம் என்று அந்நியரால் அழைக்கப் பட்டுள்ளோம். இந்து தன்மை என்பதுவே நமது பழமையான, பன்மையான கலாசாரம். அந்நிய வருகையால் இது மதம் என்றாகியதால் இன்னமும் நம்மை நாமே அவர்களின் பார்வையிலேயே பார்த்துக் கொண்டு இருப்பது வெட்கப் பட வேண்டிய விஷயம்,

    ஆம் நமது கலாசாரமே பன்மையானது, ஆயினும் பன்மையிலும் ஒருமையானது. அப்படியிருக்க ஒரு இந்துக் கலாசாரம் சார்ந்த ஒருவன் இயல்பாகவே ஒரு செக்கியூலிரச வாதிதான். இந்த அடிப்படை மனோபாவம்தான் மத மாற்றிகளுக்கும் ஒரு பலம் . ஆனாலும் அதிலும் நமது மக்களுக்கு சரியான புரிதல் இல்லாததுதான் நமது பலவீனம் என்பதை புரிந்து கொண்டு விடுவீர்கள் என நம்புகிறேன். நாம் இப்போது வாழ்வது ‘check”ularisam பேசுவோருக்கு நடுவே என்பதையும் உணருங்கள். நன்றி.

  43. கிருஷ்த்துவர்களையும் முஸ்லீம்களையும் நல்லவர்கலாகமட்டும் காட்டும் சினிமாபோக்கு இன்றுநேட்ட்றல்ல சினிமா ஆரம்பிதநாள்முதலே இருந்து வருகிறது.ஏழைபடும்பாடு ஐம்பதில் வெளிவந்தபடம்.கதாநாயகன் படு ஏழை எந்த ஹிந்துவும் காப்பாற்றமாட்டான்.ஒரு பாதிரியார்வந்து அவனை மனிதாக்குவதுபோல் கதை.அந்தகாலத்தில் சக்கைபோடு போட்டபடம். அறுபதில் வெளிவந்த “பாவமன்னிப்பு” படத்தில் கிருஷ்துவனாகவரும் வரும் சுப்பையா,முஸ்லிமகவரும் சிவாஜிகனேஷன் இருவரும் ரோம்பனள்ளவர்களாக வருவார்கள்,ஆனால் ஹிந்துவாக வரும் எம்.ஆர்.ராதா படு அயோக்கியனாக காட்டப்படுவார்.பெரும் புகழ்பெற்ற இயக்குனர்கள் ஸ்ரீதர்,கே.எஸ்.கோபாலக்ருஷ்ணன்,கே.பாலச்சந்தர்,எ.சி,திரிலோகசந்தர் அனைவருமே தங்கள் படத்தில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் நல்லவர்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள்,மேலும் அதே படங்களில் கெட்டவனாக கண்டிப்பாக ஒரு ஹிந்துவாகத்தான் இருப்பான்.இந்த லாஜிக் தமிழ்படங்களில்மட்டும்தான் என்று எண்ணிவிடாதீர்கள்,ஹிந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இன்னும் எல்லா இன்டியமொளிப்படங்களிலும் இப்படித்தான்.

  44. Ramesh,

    U are spot on. Even in the films where a muslim is portrayed as a villain, there will be a good muslim to counter him, who will say dialogues like ” Islam does not permit vioelnce, no true muslim will do these thiengs etc., etc.,

  45. சமீபத்தில் உத்தமபுத்திரன் என்று ஒரு படம் வந்தது. அதில் ஒரு மனைவி தன கணவனை முட்டாள் கவுண்டா என்று திட்டுவாள். உடனே கவுண்டர் கட்சிகள் பொங்கி எழுந்து அந்த காட்சியை நீக்க வைத்தன. நீக்க வைத்தவர்கள் உண்மையிலே முட்டாள்கள்தான் என்று தோன்றியது.

    இந்த கட்டுரையும் அதே மாதிரி கண்ணோட்டத்தில்தான் எழுதுகிறீர்கள். அது எப்படி ஒரு பாதிரியாரை நல்லவனாக காட்டலாம் என்கிறீர்கள். அந்த கர்னலும் டாக்டரும், ஏர் ஹோஸ்டசும் நாகார்ஜுன் காரக்டரும் ஹிந்துவாக வருகிறார்களே, அவர்களுக்கும் மத அடையாளம் இருக்கக் கூடாதா? எல்லாருக்கும் என்ன #1 , #2 என்றா பெயர் வைக்க முடியும்? படம் பூரா முஸ்லிம் தீவிரவாதிகள், அதுவும் குழந்தை கையில் குண்டு கொடுத்தனுப்பும் அளவுக்கு குரூரமானவர்கள், புனிதப் போர் புனிதப் போர் என்கிறார்கள், அப்படி ஒரு மதத்தை இழிவுபடுத்தலாமா என்று கேட்பீர்களா? அந்தக் காலத்தில் திரைப்படத்தில் (பாவமன்னிப்பு திரைப்படத்தைப் பற்றி யாரோ மறுமொழியில் எழுதி இருந்தார்கள்) பாதிரியார் உத்தமர் என்கிறார்கள்; சரி அடியாள் எல்லாருக்கும் ராபர்ட் என்று பேர் இருக்கும், அது ஏன் சார் கண்ணில் பட மாட்டேன் என்கிறது?

  46. > சரி அடியாள் எல்லாருக்கும் ராபர்ட் என்று பேர் இருக்கும், அது ஏன் சார் கண்ணில் பட மாட்டேன் என்கிறது?

    RV,

    I am a fan of your comments which most times reach the height of intelligence, and a few times towards the opposite. I admire your openness despite implications of your questions.

    Now about calling the gundas (adiyaaL) in christian names…

    I have heard these bollocks before. It is one of the Xian propaganda.

    As per this propaganda, the adiyaals, the caberrette dancers in Tamil cinema are given christian names.

    But, people who say this will not name the films, or give statistics comparing other adiyaals given Hindu or Islamic names. It is just a goebbalsian.

    PS: Although I am a christian by birth, I am a proud practising Hindu.

  47. மன்னிக்கவும் ராபர்ட், ராபர்ட் ஹிந்திப்பட அடியாளுக்கு ஒரு காலத்தில் வழக்கமாக வைக்கப்பட்ட பெயர். ராபர்ட் என்று ஆரம்பிக்கும் அஜீத் ஜோக்குகள் இன்றும் பிரபலம். தமிழ்பட அடியாளுக்கு ஒரு காலத்தில் ஜம்பு என்றுதான் பேர். நான் தவறுதலாக எழுதிவிட்டேன். 🙂

  48. கிருஸ்துவ மதப்ப்ரசரம் என்பது நிறைய காலமாக தமிழ் சினிமாவில் தொடரந்துகொண்டு தான் இருக்கு. இன்று இந்து மக்களை எப்படி எல்லாம் மாற்றலாம் என்பதற்கு சினிமாவை ஒரு ஊடகமாக அவர்கள் பயன் படுத்தி வருகீறார்கள். பிரபல நகைச்சுவை ஜோடி கணேஷ் ஆர்த்தி இன்று கிருத்துவ மதத்துக்கு மாறி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். Every second sunday Prabhu solomon maina film director is conducting gospels for all directors, artists and all film personalities in a place here in chennai. He is doing convertion in public we hindu directors and film personalities are also attenting it. What to do u say ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *