திருப்பூரில் பாரதியார் குருகுலம்

aum

பாரில் உள்ள தேசங்களனைத்தினிலும் நமது பாரத தேசம் உயர்ந்தது. மிகப் பழமையானது. தொன்மையானது. புனிதமானது. கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்த நமது நாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அறம், கல்வி,கலைகள் மற்றும் பாரம்பரிய முறைகளில் மிகச் சிறந்ததாக விளங்கியது.

இத்தகைய மிகச்சிறப்பு வாய்ந்த கூறுகள் -ரிஷிகள், முனிவர்களின் மூலம் மக்களுக்கு பாரம்பரியமாக குருகுலங்களில் எடுத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. அத்தகைய குருகுலங்கள் அன்றைய பண்பாட்டு , கலாச்சார, ஆன்மிக ஆராய்ச்சிக் கேந்திரங்களாக விளங்கி வந்துள்ளன.

இன்றைய அவசர யுகத்தில் நாம் நமது முன்னோர் வழி வந்த பல நல்ல விஷயங்களை மறந்து வாழ்ந்து வருகின்றோம். அவைகளை மீட்டெடுக்கும் வகையிலும் , நமது இளைய தலைமுறையினர் உணரத்தக்க வகையினிலும் அவற்றை கொண்டு செல்வது நமது தலையாய கடமை.

அவ்வாறான ஒரு நல் முயற்சியின் விளைவாக உருவாகி வளர்ந்து வரும் ஒரு அமைப்பே பாரதியார் குருகுலம் ஆகும். இவ்வமைப்பு பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது.

தற்போது 15 குழந்தைகள் இங்கு தங்கி அருகிலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்று வருகின்றனர். தாய், தந்தையரில் யாராவது ஒருவரை இழந்த குழந்தைகள் இங்கு சேர்க்கப்படுகின்றனர். இதற்கென, மறைந்த தனது புதல்வன் தமிழ்ச்செல்வன் நினைவாக திரு. பழனிச்சாமி கவுண்டர், பெருந்தொழுவு பகுதியில் 4 ஏக்கர் நிலம் தந்து உதவியுள்ளார்.

தற்போது திருப்பூர் அருகிலுள்ள தாராபுரம் சாலை, வஞ்சிப்பாளையம் பிரிவில் இயங்கி வரும் தமிழ்ச்செல்வன் நினைவு அறக்கட்டளை மூலம் பாரதியார் குருகுலத்தின் புதிய, நவீன கட்டிடப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இக்கட்டிடம் நமது பாரம்பரிய பண்பாட்டு, கலாச்சார, ஆன்மிக ஆராய்ச்சிக்கேந்திரமாக செயல்பட உள்ளது.

bharathi-1

bharathi-2

bharathi-31

bharathi-4

bharathi-5

bharathi-6

bharathi-7
இந்த மையத்தின் எதிர்கால பணித் திட்டங்கள் :

 • ஆதரவற்ற குழந்தைகளுக்கான இலவச கல்விச்சாலை
 • இலவச மருத்துவ முகாம்கள்
 • இலவச சித்தா,ஆயுர்வேத, யுனானி , ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக்கூடம்
 • மூலிகைப் பண்ணைகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகள் .
 • நமது பாரம்பரிய பசுவினங்களை மீட்டெடுக்கும் வகையிலான ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புக் கூடம் .
 • பாரம்பரிய யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கூடம் .
 • கர்நாடக இசை ,பரத நாட்டியம் ,நாட்டுப்புற இசை மற்றும் கலை இலக்கிய பயிற்சி வகுப்புகள் மற்றும் அராய்ச்சிக்கூடம்.
 • மாணவர்களுக்கான பண்புப் பயிற்சி முகாம்கள் .(SUMMER CAMPS, MORAL INSTRUCTION CAMPS).
 • அனைவருக்குமான ஆளுமைப் பயிற்சி முகாம் (PERSONALITY DEVELOPMENT CAMP).
 • ஆதரவற்ற முதியோர்களைக் காக்கும், பராமரிக்கும் இல்லம்.

இது தவிர சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒற்றுமையுடன் வாழ சமுதாய ஒருங்கிணைப்புப் பணி போன்ற பன்முகத் தன்மையுடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்பட உள்ளன.இத்தகைய பணிகளுக்காக சேவை மனப்பான்மையுடன் பலர் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

இப்பெரு முயற்சிகளுக்கு அடிப்படையாய் தேவைப்படுவது பொருளாதார உதவிகளே. இப்பணிகள் தொடர்ந்து தடைபடாமல் நடைபெற பெரும்பொருள் தேவைப்படுகிறது.

இவ்வரும் பணிகளில் பங்குகொள்வது கடவுள் நமக்குக் கொடுக்கும் அரிய வாய்ப்பாகக் கருதி, நாமும் நம்மை இதில் முழு அர்பணிப்புடன், மனதார ஈடுபடுத்திக்கொள்வோம்., பொருளுதவி செய்வோம்.

நமது சேவை இவ்வாறாக இருக்கலாம்:

 • குருகுல கட்டிடத்திற்கான பொருளுதவி செய்தல்
 • குருகுலத்தின் ஒரு குழந்தைக்கான வருடாந்திர பராமரிப்பை ஏற்றுக்கொள்ளுதல் .
 • நமது பிறந்தநாள் , திருமண நாள் உள்ளிட்ட நமது வீட்டு விசேஷ சமயங்களில் குருகுல குழந்தைகளின் ஒரு நாள் பராமரிப்புச் செலவை ஏற்றுக்கொள்ளுதல்.
 • குருகுலப் பணிகளில் நம்மையும் ஈடுபடுத்திக்கொள்ளுதல்

பாரதியார் குருகுலத்திற்கு பணம் அனுப்ப விரும்புகிறவர்கள், DD/CHEQUEBHARATHIYAR GURUKULAM TRUST என்ற பெயரில் எடுத்து  கீழ்க்கண் ட முகவரிக்கு அனுப்பவும் –

எஸ்.ராஜேஷ்
பாரதியார் குருகுலம் டிரஸ்ட்,
9, செல்வி காம்ப்ளெக்ஸ்
தாராபுரம் ரோடு
திருப்பூர் – 641608

தொடர்புக்கு: R .அண்ணாதுரை 9363011783
மீரா மணி 9363015361
ச. ராஜேஷ் 9578229282
Email: bharathiyargurukulam@gmail.com

Tags: , , , , , , , , , , , , , ,

 

3 மறுமொழிகள் திருப்பூரில் பாரதியார் குருகுலம்

 1. Thanjai Ve.Gopalan on March 26, 2011 at 7:19 am

  மகா கவி பாரதியார் பெயரால் நடத்தப் படுவதனாலும், சீரிய பண்பாட்டுச் சிறப்புள்ள இயக்கத்தாரால் வழிநடத்தப் படுவதாலும் நிச்சயம் இந்த குருகுலம் மேலும் சிறந்திட இறைவனின் அருளும், மக்களின் போருளுதவிகளும் கிடைக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

 2. Rajesh on March 26, 2011 at 8:29 am

  பாரதியார் குருகுலத்தின் பணிகள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விளக்கமாக தங்கள் இணைய தளத்தில் வெயிட்டமைக்கு உளமார்ந்த நன்றிகள்.
  பல நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சியினாலே சிறந்த முறையிலே வளர்ந்து வரும் பாரதியார் குருகுலத்திற்கு அனைவரது நல ஆதரவையும் இதன் மூலம் கோருகிறோம்.

  ராஜேஷ்
  நிர்வாகி பாரதியார் குருகுலம்

 3. Anbu on March 26, 2011 at 11:45 am

  பாரதியார் குருகுலம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*