தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க

முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க…

election_01திருமணமே ஆகவில்லை; குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ‘கூட்டணி ஆட்சிக்கு இப்போதே சம்மதம் தெரிவிக்க  வேண்டும்’ என்று தி.மு.க.வுக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ் கட்சியைக் காணும்போது இந்தப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில்  தனது பேரம் பேசும் உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்காக 80  இடங்களில் போட்டியிட விரும்புகிறது காங்கிரஸ். ஆனால், தி.மு.க. அதற்குத் தயாரில்லை. ஏற்கனவே பா.ம.க.வுக்கு 31  இடங்களை அளித்துவிட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட துக்கடா கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய நிலையில், 120  இடங்களுக்கு மேல் கண்டிப்பாக போட்டியிட நினைக்கிறது தி.மு.க. இக்கட்சியும் கூட, எந்த அடிப்படையில் தேர்தலுக்குப் பின் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகிறது எனத் தெரியவில்லை. பரவாயில்லை, கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது.

vijaykanth_electionமாறாக, எதிரணி முகாமில் திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் தெரிகின்றன. அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் கூட்டணி அமைப்பதாக அறிவித்த பிப். 24ம் தேதி, ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள். கடந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு 30 க்கு மேற்பட்ட  இடங்களில் காரணமான தே.மு.தி.க. ஜெயலலிதாவுடன் கைகோர்ப்பது இரு கட்சிகளுக்குமே லாபம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இரு கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தைக் கூட்டினால், ஆளும் கட்சியின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

போதாக்குறைக்கு, வைகோவின் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுகின்றன. இக்கட்சிகளிடையிலான தொகுதிப் பங்கீடு தான் சிரமமாக இருக்கும். எப்படியிருப்பினும், தேர்தலுக்கு முந்தைய  நிலையிலேயே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான வலிமையுடன் காட்சி அளிக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல், ஊழல் கூட்டாளிகளான தி.மு.க.வும் காங்கிரசும் பேச்சுவார்த்தையில் குழப்பிக் கொண்டிருப்பதைக் காணும்போது, அவர்கள் மீது பரிதாபமே ஏற்படுகிறது.

dmk_admk_congress_allianceகடந்த ஓராண்டாகவே  கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் அ.தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளது. சென்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சேர்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆளும் கட்சியின் அடாத செயல்களால் வெறுப்புற்று வெளியேறியதை சாதகமாகப் பிடித்துக்கொண்ட அ.தி.மு.க, முதலில் அவற்றை தமது பக்கமாக திருப்பியது. வைகோ தலைமையிலான  ம.தி.மு.க. வழக்கம் போல அ.தி.மு.கவின் வலுவான துணையாகத் தொடர்ந்தது. ஆயினும், மத்தியில் ஆளும் காங்கிரஸை எப்பாடுபட்டாவது தன்னுடன் கூட்டணி சேர்க்க ஜெயலலிதா திரைமறைவில் முயன்று வந்தார். ஆனால், அலைக்கற்றை (spectrum) ஊழல் பசையால் பிணைக்கப்பட்ட தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முடியவில்லை.

எனினும், சென்ற தேர்தலில் கூட்டாளியாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்குப் பின் ஆளும் முகாமுக்கு தாவியதை ஜெயலலிதாவால் தடுக்க முடியவில்லை. இப்போது இக்கட்சி, தி.மு.க. கூட்டணியில் 25  இடங்களை கேட்பதாகத் தகவல். ஆசைக்கும் ஓர் அளவு வேண்டாமா?

முஸ்லிம் லீக் கட்சி 10 க்கு   மேற்பட்ட இடங்களைக் கேட்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவுள்ள கட்சிகள் கோரும் இடங்களின் எண்ணிக்கையைக் கூட்டினால் எப்படியும் 150  ஐத் தாண்டுகிறது. ராசதந்திரியான கருணாநிதி இப்போது ‘கை’யைப் பிசைந்துகொண்டு அமைதி காக்கிறார்.

கருணாநிதியின் கோபம், கடந்த பிப். 25  ம் தேதி நடந்த காங்- தி.மு.க. இரண்டாவதுகட்டப் பேச்சு தோல்விக்குப் பின் வெடித்தது. ‘காங்கிரஸ் எத்தனை இடங்களை எதிர்பார்க்கிறது?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘234  இடங்களை கேட்கிறது’ என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தார். நக்கலாக அவர் பதில் அளித்ததே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் செல்லவில்லை என்பதைக் காட்டிவிட்டது.

காங்கிரஸ் தரப்பில் கூட்டணி குறித்துப் பேச அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் ப.சிதம்பரம், வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயகுமார் ஆகிய ஐவருமே தி.மு.க.வுக்கு ஆதரவானவர்கள் தான். இக்குழுவில் இளங்கோவன் இடம்பெறக் கூடாது என்ற தி.மு.க.வின் நிபந்தனையை சோனியா ஏற்றுக் கொண்டார். ஆனால், தனக்கு சாதகமாக இந்த ஐவர் குழு செயல்படும் என்று நினைத்திருந்த கருணாநிதிக்கு, காங்கிரசின் நிபந்தனைகள் பேரிடியாக அமைந்துள்ளன.

‘தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும்; குறைந்தபட்ச செயல்திட்டம் வேண்டும்; அதிகபட்ச (80?) இடங்களை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகள், கருணாநிதிக்கு மட்டுமல்லாது தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் திகைப்பை ஏற்படுத்தி உள்ளன.

negotiationநடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணியை முறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகமும் தி.மு.க.வினருக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றாற்போல, அலைக்கற்றை ஊழல் வழக்கும் அதிவேகமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஆ.ராசா கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் பெருமிதத்துடன் பேசுவதும் தி.மு.க.வை கதிகலங்கச் செய்துள்ளன. போதாக்குறைக்குக் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சி.பி.ஐ. நடத்தியுள்ள சோதனை, நம்பிக்கைத் துரோகமாகவே உடன்பிறப்புகளால் பார்க்கப்படுகிறது.

‘தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்று மாறன் இறந்தவுடன் பா.ஜ.க.வைக் கைகழுவியதன் பயனை இப்போது அறுவடை செய்கிறது தி.மு.க’. என்று மனம்  வெதும்பிக் கூறினார், மூத்த தி.மு.க. தலைவர் ஒருவர். பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்த தி.மு.க.வுக்கு காங்கிரஸ் வடிவில் இப்போது பாடம்  கற்பிக்கப் படுகிறது என்பது அவரது வாதம். எப்படி இருப்பினும், தி.மு.க- காங், கூட்டணி நிர்பந்தங்களின் அடிப்படையில் நீடிக்கவே வாய்ப்புள்ளது. எனினும் அதில், முன்பு போல தி.மு.க.வின் கரம் ஓங்கி இருக்காது  என்பது நிதர்சனம்.

கூட்டணியில் காங்கிரஸ் கை ஓங்குவதையும், அக்கட்சி திடீரென உறவை முறித்துக் கொண்டால் ஏற்படும் சிக்கல்களையும் உத்தேசித்தே பா.ம.கவுக்கு 31  இடங்களை அளித்து அவசர  ஒப்பந்தம் செய்தார் கருணாநிதி. இதன்மூலமாக, காங்கிரஸ் திடீரென ஆதரவை விலக்கிக் கொண்டாலும் கூட, பா.ம.கவின் 18 எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் தற்போதைய ‘மைனாரிட்டி’ ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம். தவிர, மீதமுள்ள இடங்கள் குறைவு என்பதைக் காரணம் காட்டி காங்கிரஸ் கோரிக்கையைப் புறந்தள்ளலாம் என்பது கருணாநிதியின் யோசனை.

பாம்பின் கால் பாம்பறிவது போல, இதை உணர்ந்துகொண்டு தான், காங்கிரஸ் கட்சியும் முறுக்கிக் கொள்கிறது. அண்மையில் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியின் (பா.ம.க) முன்னாள் செயலாளர் வீட்டில் சி.பி.ஐ. நடத்திய சோதனையை மிரட்டலாகவே கருதுகிறது தி.மு.க. முன்னதாக, பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க சோனியா எதிர்ப்பு தெரிவிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் வதந்தியைக் கிளப்பியது குறிப்பிடத் தக்கது.

இப்போதைக்கு செல்லமுத்துவின் உழவர் உழைப்பாளர் கட்சி,  ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, வாண்டையாரின் மூவேந்தர் முன்னேறக் கழகம் போன்ற துக்கடாக் கட்சிகள் மட்டுமே தி.மு.க.வுடன் உடன்பாடு கண்டுள்ளன. இன்னும் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பது உண்மையே. ஆனால், அ.தி.மு.க. அணியில் இடம் பெறும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அரசியல் காற்றின் திசையைப் புலப்படுத்துகிறது.

இன்னும் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களின் எண்ணிக்கை தீர்மானமாகா விட்டாலும், தே.மு.தி.க, ம.தி.மு.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, கார்த்திக்  தலைமையிலான பார்வர்ட் பிளாக், சேதுராமன்  தலைமயிலான மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிகள் இடம் பெறுவது உறுதியான விஷயம். தவிர, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம்,  பச்சமுத்து தலைமையில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி,  தமிழகத் தேசியவாத காங்கிரஸ் (திண்டிவனம் ராமமூர்த்தி) , மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, அம்பேத்கர் மக்கள் கட்சி, கிறிஸ்துவ மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், யாதவர் பேரவை, வன்னியர் கூட்டமைப்பு, தலித் மக்கள் முன்னணி, கிறிஸ்துவ மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய தேசியக் குடியரசு கட்சி  ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற உள்ளன. மொத்தத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் 18  கட்சிகள் இடம் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

jayalalitha_election_mummy-returnsஆளும் அணியில் கூட்டணி பேச்சுவார்த்தைகளே திண்டாட்டமாக உள்ள நிலையில், எதிரணியில் கொண்டாட்ட மனநிலை காணப்படுகிறது. இதுவே ஆளப்போகும் அணி எது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலேயே, முதல்சுற்றில் அ.தி.மு.க. அணி முந்தி வருகிறது. போதாக்குறைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் அரசிலுள்ள கட்சிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதிருப்தி ஆகியவையும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளன. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களோ இல்லையோ, அரசியல் கட்சிகள் மாற்றத்தை விரும்புகின்றன என்பதையே, தற்போதைய ‘தகுதிச் சுற்று’ தேர்தல் களம் காட்டுகிறது எனில் மிகையில்லை.

31 Replies to “தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க”

  1. பிரதாப்

    அரசியலில் கழகங்கள் நல்லாட்சி தரும் என்று நம்பி தமிழன் என்றும் ஒட்டு போட்டதே இல்லை. ஏனெனில் கழகங்களின் சுய உருவம் எல்லோரும் நன்கு அறிந்ததே. தற்போது கலைஞரின் பிரச்சினை என்னவெனில் ஊழல் அல்ல. அவரது குடும்பத்தில் மகன்கள், மகள், பேரன்கள் என்று பல உறவினர்களையும் அரசியல் மூலம் பதவிகளை கொடுத்து விட்டதால் , அவர் குடும்பம் எதிர்காலத்தில் பெரிய சர்வாதிகாரிகளாகிவிடும் என்று எல்லோரும் பயப்படும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். இது தான் அவருக்கு எதிராக வேலை செய்யும் என்று அவரே அஞ்சுகிறார்.

    காங்கிரசு என்பது 69 க்கு பிறகும் எப்போதும் ஊழலின் மற்றும் சர்வாதிகாரத்தின் உறைவிடம் ஆகும். காங்கிரசு இல்லாமல் , அவர்களின் துணை இல்லாமல் எந்த ஊழலும் பெரிய அளவில் நடைபெறமுடியாது. ஸ்பெக்ட்ரம் ௨ ஜி ஊழலை காங்கிரசு பிரதமரும், அவரது அன்னையும் கடந்த மூன்று ஆண்டு களுக்கும் மேல் மூடி மறைத்ததிலிருந்தே , அவர்களுடைய வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு போய் சேரவேண்டிய பணம் போய்ச்சேர்ந்து விட்டது என்பதை தெளிவாக காட்டவில்லையா?

    சீமான் போன்றவர்கள் காங்கிரசுக்கு எதிராக மிக கடுமையான பிரச்சாரம் செய்து வருவதால், இந்த தேர்தலில் தமிழக காங்கிரசுக்கு பாடை கட்டப்போகிறார்கள். பாவம் அதை தூக்குவதற்கு , கலைஞரும் அவரது உற்றார் உறவினர்களும் தான் வரவேண்டும். எந்த தமிழனும் காங்கிரசு பிணத்தை தூக்க மாட்டான்.

    கலைஞர் இப்போதாவது காங்கிரசை உதறி , தனியே விடுதலை, மருத்துவர் மற்றும் சில உதிரிகளுடன் சேர்ந்து போட்டியிட்டால் , சுமார் 50-60 இடங்களையாவது பிடிக்கலாம். காங்கிரசுடன் சேர்ந்துநின்றால் மிகவும் அவமானகரமான தோல்விகளை சந்திக்க நேரிடும்.

    ஊழல் வழக்குகளில் காங்கிரசுகாரன் காப்பாற்றுவான் என்று கலைஞர் நினைத்தால் அது போல அறிவீனம் ஒன்றும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்ட பொதுநல மற்றும் இதர வழக்குகளால் இந்த விசாரணைகள் நடக்கின்றனவே தவிர, காங்கிரசுக்காரர்கள் இந்த ஊழலுக்கு உடந்தை ஆனவர்களே ஆவர். காங்கிரஸ் எப்போதும் நிறைய ஊழல் செய்துவிட்டு அவர்கள் கட்சியில் ஏமாந்தவன் எவனையாவது பலி கொடுத்துவிட்டு, மற்றவர்கள் தப்பிவிடுவார்கள். இப்போதும் அதுவே நடக்கும்.

    இந்த தோல்விக்கு பின்னர், சுமார் ஐம்பது, அறுபது சட்ட மன்ற உறுப்பினர்களாவது இருந்தால் எதிர்காலத்தில் சிறிது தங்களை காப்பாற்றிக்கொள்ள கழகத்திற்கு உதவும். காங்கிரசுடன் சேர்ந்தால் முழு சமாதிதான்.

    இந்த மிக சோதனையான நேரத்தில், கலைஞர் தன்னுடைய தயக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு, அவநம்பிக்கைகளை கைவிட்டு, தடுமாறாமல் செயல்பட வேண்டும். மேலும் நேற்றைய செய்திதாளில் , அவரது இரு அரசியல் மகன்களும் இராவணனை போலவும், கும்பகர்ணனைபோலவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இராவணனும், கும்பகர்ணனும் முழு முட்டாள்கள். பிறன் மனைவிமேல் , அவளது சம்மதம் இல்லாமல் அவளை கடத்தி சீரழிந்தவன் இராவணன். பெரிய மன்னனும், இசைப்புலமையிலும், சிவபெருமானிடம் பெற்ற வரங்களாலும் , போர்த்திறமையாலும் இராமபிரானை விட பல மடங்கு பலம் பெற்றவன் இராவணன். இருந்தும் பிறன் மனையை அவள் விருப்பமின்றி கடத்தி அழிந்தான். தேர்தல் வெற்றி பெறவேண்டிய நேரம்,இந்த நேரத்தில் வெற்றியை எப்படிபெறுவது என்று சிந்திக்காமல் , தன்னுடைய இரு அரசியல் மகன்களுக்கும் தோல்வி அடைந்த முட்டாள்களின் உதாரணம் சொல்லி கலைஞர் , தன்னுடைய குழியை தானே வெட்டிக்கொள்ளப்போகிறாரா ? புராணங்களிலிருந்து நல்ல உதாரணங்கள் கூட சொல்ல தெரியவில்லையே ? என்ன பாவமோ?

  2. திமுக தேர்தலில் தோல்வியடைவது மகிழ்ச்சி தான். ஆனால், அதே சமயம் அதிமுக வெற்றியடைவது ஒன்றும் பெரிய மகிழ்ச்சியல்ல. அருமனை கிறுத்தவ பொதுக்கூட்டத்தில் ஜெ அவர்கள் ஹிந்துவின் உரிமையை விட்டுக் கொடுத்து ஓட்டுக்காக கிறுத்தவர்களுக்கு சிங்கியடித்ததை எப்படி மறக்க முடியும்? மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டுவந்து பின்பு சிறுபாண்மையின் ஓட்டுக்காக அதை வாப்பஸ் பெற்றது! திமுக அளவுக்கு அதிமுகவிடம் ஹிந்து எதிர்ப்பு இல்லை என்றாலும் சிறுபாண்மையின் ஓட்டுக்காக அதிமுகவும் ஒரு ஹிந்து எதிர்ப்பு செய்யும் கட்சி தான். பாஜக ஆட்சியை திமுக மட்டும் அல்ல அதிமுகவும் ஒரு முறை ஒரு ஓட்டில் கவுத்திருக்கிறது. ஹிந்துக்கள் தலை நிமிர்ந்து தமிழகத்தில் வாழ வேண்டும் என்றால், இன்று கண்ணியாகுமரியில் எப்படி பாஜக வலுவாக உள்ளதோ, அதே போல மற்ற மாவட்டத்திலும் பாஜக வலுவடையும் போது அது சாத்தியமாகும்.
    ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

  3. சேக்கிழான்

    நல்ல தொகுப்பு. வரும் கட்டுரைகளில் கட்சி ரீதியாகப் புள்ளி விபரங்களையும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். எப்படி பாக்கிஸ்தான் இறுதியில் ரேமாண்ட் டேவிசை அமெரிக்காவிடம் கொடுத்து விடுமோ அது போலவே கருணாநிதி காங்கிரஸ் கொள்ளைக் கும்பல் ஒரு உடன் படிக்கைக்கு வந்து விடும். கருணாநிதியிடம் எப்படியும் கொடுக்க இன்னும் 80 இடங்கள் உள்ளன. அதில் 60க் கொடுத்து விட்டு 140 தொகுதிகளில் போட்டியிட்டு விடுவார் இறுதியாக. ஸ்பெக்ட்ரம் உருவாக்கியுள்ள ஒட்டுப் பசையை அவ்வளவு எளிதாக பிரித்து விட முடியாது. அந்தக் கூட்டணியை விட அவர்களிடம் உள்ள ஸ்பெக்ட்ரம் பணக் கூட்டணியை அ தி மு க அணி வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. புள்ளி விபரக் கணக்கை பணக் கணக்கு வென்று விடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒரு ஓட்டருக்கு 5000 கொடுத்தால் கூட அவர்களிடம் உள்ள பணக் குவியலுக்கு சின்ன சேதாரம் கூடக் கிடையாது என்னும் பொழுது 5000 நிச்சயம் கொடுத்து வென்று விடவேப் போகிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் தங்களை விற்கத் தயாராகவே காத்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் பாலிஸி படி ஃப்ர்ஸ்ட் கம் வில் பி ஃபர்ஸ்ட் செர்வ்டு. கையில காசு மெஷினில் ஓட்டு.

    ச.திருமலை

  4. எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் பா ஜ க தன்னை தமிழகத்தில் வீறு கொண்டு எழும் படியான பலம் பெற தவறி விட்டது. தனியாக இருந்தாலும் சில தொகுதிகளில் மட்டும் நின்று, தன்னுடைய பலத்தை அதிகப்படித்திக் கொள்ள வேண்டும். நன்றி!

  5. காசுக்கு ஓட்டு என்ற நிலைமை இங்கு மாறும் வரை நல்லது நடக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. மேலும் நமக்கு இங்கு இருக்கும் ஊழல்களில் எது பரவாஇல்லை என்று பார்க்க முடியுமே தவிர ரொம்பவும் நல்ல ஆட்சியாளர்கள் என்று தேர்வு செய்ய வழி இல்லை என்பது வருத்தமான செய்தி. ஆனால் குடும்ப ஆட்சிக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றமில்லை. இதை மாற்று கட்சி/களும் நினைவில் வைக்க வேண்டும். எதிர்ப்பாளர்களின் வோட்டினால்தான்
    நாமும் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் வேண்டும்; நல்லதே செய்ய வேண்டும்

  6. கூட்டணிக் கணக்கு என்பது வேறு. வாக்காளர்களின் மனக் கணக்கு என்பது வேறு.
    ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி சாதரண வாக்களருக்கு ஒன்றும் பெரிய கவலையில்லை. அவர் கவலையெல்லாம் கருணாநிதி எவ்வளவு தருவார்? அது ராஜா, கனிமொழி, மூலம் வந்தப் பணமா? அல்லது கழகத்தின் சொந்தப்பணமா என்பது பற்றியும் கவலையில்லை. கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வர் ஆனால் இலவசமாக வீடியோ ப்ளேயர் கிடைக்கலாம் அல்லது டிடிஹெச் இணப்பு இலவசமாகக் கிடைக்கலாம். குடிமகன்(ள்)களாயிருந்தால் டாஸ்மாக்கில் இலவசமாக எத்தனை பாட்டில்கள் கிடைக்கும் என்பதாகயிருக்கலாம்.அரசு ஊழியர்களாயிருந்தால் கலைஞர் எவ்வளவு வாரி வழங்குவார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.(டாஸ்மாக் வருமானம் நாளும் கூடிக் கொண்டே போகிறது, அதனால் கவலையில்லை) ஜெயலலிதா வந்தால் அரசு ஊழியருக்கு ஒன்றும் செய்யமாட்டார் என்பது பொதுவான “நம்பிக்கை” உடன் பிறவா சகோதரியின் உடன் பிறப்புக்கள் செல்வாக்கு பெறுவார்கள் என்பது உணரக்கூடியதே. ஆனாலும், கழகக் குடும்பக் கண்மணிகளான மதுரை மன்னர் அழகிரி, தமிழக துணை(?!) முதல்வர், கவிஞர்(!) கனிமொழி, பேரன் மாறன் போன்றோருடன் ஒப்பிடமுடியுமாத் தெரியவில்லை. கேப்டனுடன் கூட்டணி என்று ஆன பின்னர் அவருடைய மைத்துனருக்கு மந்திரி பதவி கிடைக்குமா (அதிமுக ஆட்சியமையும் பட்சத்தில்) போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் (தேர்தல் தேதி ஏப்ரல் 13 ) மே மாதம் இவற்றுக்கெல்லாம் விடை தெரியலாம்.

    தமிழ் நாட்டு மக்கள் தங்களை விற்கத் தயாராகவே காத்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் பாலிஸி படி ஃப்ர்ஸ்ட் கம் வில் பி ஃபர்ஸ்ட் செர்வ்டு. கையில காசு மெஷினில் ஓட்டு.(நன்றி: திருமலை)

  7. //தமிழ் நாட்டு மக்கள் தங்களை விற்கத் தயாராகவே காத்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் பாலிஸி படி ஃப்ர்ஸ்ட் கம் வில் பி ஃபர்ஸ்ட் செர்வ்டு. கையில காசு மெஷினில் ஓட்டு.(நன்றி: திருமலை)//
    ராஜாவின் பாலிசி ராஜாவுக்கும் அவர் பின்னால் உள்ளவர்களுக்கும்தான் இலாபம் கொடுத்தது. ஆனால் தமிழ் நாட்டு மக்கள் முட்டாள்களா அல்லது நாட்டு நடப்பு தெரியாதவர்களா? auctionதான் நிறைய அள்ளி கொடுக்கும் என்று தினம் தினம் பத்திரிகையில் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதனால் நம் ஓட்டை ஏலத்துக்கு விடுவதுதான் இலாபகரமானது!

  8. தமிழ் நாடு ஏற்கெனவே குட்டிச்சுவர் ஆகிவிட்டது.நாட்டிற்கு பாடுபட
    யாருமே இல்லை.பதவி அல்லது பண ஆசை பிடித்து ஆடும் கட்சி
    எந்த கட்சியாய் இருந்தால் என்ன?ஒட்டு போடவே பிடிக்கல்லை.
    கட்சிகள் ஒன்றோடு ஒன்று வெட்டி சாகும் நாள் நாட்டுக்கு நல்ல நாள்.
    அப்போது கூட தலைவர்கள் தப்பித்து விடுவார்கள்.கொடி பிடித்து
    அலையும் தொண்டர் கஊட்டம் தான் சாகும்.

  9. jayalalitha who is also appeasing the so-called minorities is no friend of Hindus.She has been purchased by the church.
    So this article which gives a boost to her is unnecessary
    all the Hindus have to vote for the BJP if they have to save their future generation.
    AIADMK like many others is a single man ( woman ) party. After jayalalitha it is bound to vanish.
    So setting aside the argument of vote divsision etc we have to lay the foundations of a Nationalistic government in tamilnadu.
    Let us start it now.

  10. தமிழீனத் தலைவரும் , சொக்கவைக்கும் சோனியாவும் சேர்ந்து தேர்தலிலும் ஊழல் செய்து, வோட்டுப் பெட்டிகளை மாற்றி, எண்ணப் படுவதற்கு ஓட்டுப்பெட்டி சுமந்து செல்லும் வாகனங்களையே மாற்றி, வெற்றியை வாங்கிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

    2004 ம் ஆண்டு உக்ரேன் நாட்டில் மக்கள் செய்ததுபோல், அமைதிப் புரட்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்தால்தான் உண்டு. எல்லோரும் தத்தம் வேலையை விட்டு மெயின் ரோட்டில் வந்து ஒருநாள் நின்றால் போதும்… ஓடிவிடுவார்கள் இவர்கள்..

  11. AAIDMK IS PRO CHRISTIANS PARTY AS ITS MEDIA AND PERSONAL PHOTOGRAPHER OF JAYALALITHA ARE CHRISTIANS . SHE HERSELF DECLARED THAT SHE READ BIBLE MANYTIMES AND HAVE HIGH RECORDS FOR THEM AND OFFERED FREE SUBSIDY TO THE CHRISTIANS FOR FLYING TO JERUSALAM AND OFFERED THEM TO BE INCLUDED IN S C/S T LIST FOR THE BENEFITS PRESENTLY ACCORDED ONLY TO HINDUS – ST SC.

    SO JAYALALITHA IS NOT PRO HINDU BUT ALREADY PURCHASED BY CHURCH AND EVANGALISTS BY GIVING FUNDS TO HER PARTY. SHE MUST BE DEFEATED AT ANY COST LIKE KARUNANIDHI. HINDUS MUST VOTE FOR BJP EVEN IF THEY FACE DEFEATS BUT TO SHOW THEIR STRENGTH OF VOTE POWER, BJP MUST BE VOTED BY ALL HINDUS TO SHOW THEIR UNITY.

  12. Though JJ’s alliance seems to be strong, it is doubtful whether it will win.

    Mu.ka has lots of money (made thro’ 2G spectrum scam) to spend. He will purchase the voters.

    This trend started in the thirumangalam elections & continued even in the parliamentary elections.

    Also, since state govt officials are anti JJ, this is a factor which will favour mu.ka.

  13. .

    ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?

    அல்லது

    வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?

    என்றால், பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக

    .

  14. நேற்று ஸ்டாலினுக்கு பிறந்த நாள் என்று எங்கள் பகுதியில் அனைவருக்கும் குப்பைகூடை அன்பளிப்பு கொடுத்தார்கள்!

  15. பிரதாப்

    இன்றைய தமிழ் செய்தித்தாள்களில் திமுக மற்றும் காங்கிரசு கூட்டணி உடைந்ததாகவும் , மத்திய அரசில் இருந்து திமுக அமைச்சர்கள் ஆறு பேர்களும் திங்கள் கிழமை பிரதமரை சந்தித்து பதவி விலகல் கடிதம் கொடுக்கப்போவதாகவும் செய்தி வந்துள்ளது. இது உண்மையாகுமா அல்லது ஏதாவது நாடகமா என்று தெரியவில்லை. இது உண்மையாக இருந்தால் கலைஞரையும் , திமுகவையும் பிடித்த காங்கிரசு என்கிற ஏழரை நாட்டு சனி விலகி விட்டது என்று அர்த்தம். காங்கிரசின் பிணத்தை இனி தமிழகத்தில் தூக்க கூலிக்கு வேறு யாரையாவது தான் பிடிக்கவேண்டும்.

    காங்கிரசுடன் இனி மீண்டும் சேர்ந்தால் கலைஞர் , அவரது குடும்ப கட்சியுடன் , தமிழக மக்களால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாவார். எனவே இந்த நல்ல நேரத்தில் , கழக தலைவர் காங்கிரசை மறந்து , தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கவேண்டும். காங்கிரசுடன் இனி கூட்டு சேர்ந்தால் , கழகத்தின் கடைசி அத்தியாயம் மக்களால் எழுதப்பட்டுவிடும்.

  16. Pratap,
    Your thalaivar mu.ka is an oppurtuniust., He stayed in power in T.N thanks to the support of the congress. He refused to give state ministerial births to congress but earned 6 ministerial posts in the centre. He insisted on Raja on getting I&B protfolio.

    Now, Tamilians have become the laughing stock of the entire nation, thanks to the large scale corruption indulged in by Raja in the 2G spectrum. The entire mu.ka family has benefitted because of this.

    Now that the CBI has put Raja in jail & they may question kanimozhi anytime, mu.ka is acting tough.

    Iva[r] ellam tamizh ina thalaivara? Venkam ketta […].

    [Edited and Published]

  17. அன்புள்ள சஞ்சய்,

    என் தலைவர் இறைவன் ஒருவனே. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் ஒருவரை நான் என் வாயாலும், உள்ளத்தாலும் என்றுமே தலைவன் என்று நான் சொல்லவோ, ஏற்கவோ மாட்டேன் .

    என் கடிதத்தை தாங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் கடிதத்தில் இதனை தெளிவாக சொல்லியுள்ளேன். இரண்டு கழகங்களுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னது இன்று வரை சரியாக உள்ளது.

    இந்த தேர்தலில் சோனியா காங்கிரசுடன் சேர்ந்து திமுக தேர்தலை சந்திப்பது ஒரு தற்கொலை முடிவாகும். கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும். தனித்து நின்றால் ஒரு எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் பெரும் அளவுக்காவது சீட்டு கிடைக்கும். இல்லை என்றால் பகுத்தறிவு சொர்க்கத்தில் இடம் பிடிக்க வேண்டியது தான். சட்ட சபையில் இடம் கிடைக்காது.

    பெரியார் தேர்தல்களில் தன்னுடைய கட்சியாகிய திராவிடர் கழகத்தை ஈடு படுத்தாதது ஏனெனில் , தன்னுடைய நாத்திக கருத்து இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்று கடவுள் நம்பிக்கை உள்ள தொண்ணூற்றைந்து சதவீத மக்களாலும் நிராகரிக்கப்படும் என்று தெளிவாக தெரிந்திருந்தார்.

    அவர் கருத்து வியாபாரத்திற்கு உதவாது என்பதை அறிந்து தான் , அண்ணாதுரை “ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்று மாற்றி திமுக வியாபாரத்தை ஆரம்பித்தார். ஆனால் கலைஞர் வியாபாரத்தை குடும்ப கம்பெனிகளுடன் குறுக்கி விட்டார். எனவே திமுகவின் இறுதி அத்தியாயத்தினை கலைஞர் தான் எழுதுவார்.

    ராவணன், கும்பகர்ணன் என்று அவர் பேசியதை படித்துதான் , ஏனிந்த பாவமான பேச்சு என்று நான் எழுதினேன் ? புராணங்களிலும், இதிகாசங்களிலும் வேறு நல்ல உதாரணம் கிடைக்கவில்லையா என்று எழுதினேன். நான் இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் போதே , காங்கிரசு கேட்ட அறுபத்து மூன்று சீட்டுகளை கொடுத்து , திமுக காங்கிரசு கூட்டணி ஒப்பந்தம் முடிவு ஆகிவிட்டதாக செய்தி வந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு குறைக்க பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

    இனி மக்கள் இந்த மோசடி கூட்டணியை பரலோகம் அனுப்புவார்கள். கலைஞர் சந்தர்ப்ப வாதி என்று எல்லோருக்கும் தெரியும். அவர் மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறும் எல்லா அரசியல் கட்சிகளுமே அப்படித்தான் உள்ளன. இது காந்தி, காமராஜர், மொரார்ஜி, போன்ற தியாகிகளின் காலமல்ல. இருக்கிற தீமைகளில் எது குறைந்த தீமை என்று பார்த்து, மக்கள் மீண்டும் எம்.ஜி.ஆர் கட்சியின் கூட்டணிக்கே ஒட்டு போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  18. Pratap,

    I regret for my misunderstanding. As for the coming elections, I still think congress or no congress alliance, DMK still has a chance of coming to power. Reason : the freebies. Also, the money accumulated thro’ the 2G spectrum scam can be spent freely to purchase votes.

    General tendency is that once people receive money from a particular party, they will, in most probability vote for that party only.

    So, mu.ka still is in with a chance.

  19. //ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?

    அல்லது

    வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?

    என்றால், பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக //

    எந்த வருடத் தேர்தலில் என்று சொல்லவில்லையே களிமிகு கணபதியாரே!!
    சமீபத்திய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டால் அதீதக் கற்பனைதான் இது.

  20. பிரதாப்

    காங்கிரசு கேட்ட 63 சீட்டுகள் வழங்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரசுடன் உறவை முறித்து அமைச்சரவையிலிருந்து விலக போவதாக சொல்லியவுடன் பாராட்டி கருணாநிதிக்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் பட்டாடை போர்த்தி, பாராட்டிய தி க தலைவர் வீரமணி, மற்றும் வெட்டித்தனமாக வீர உரையாற்றிய சுப வீ பாண்டியன் மற்றும் மே 2009 தேர்தல் சமயத்திலேயே காங்கிரசு கட்சியின் உறவை முறித்து இருக்கவேண்டும் , இது காலங்கடந்த முடிவு, இருந்தாலும் இப்போதாவது காங்கிரசு உறவை ஒழித்தாரே என்று மகிழ்ந்த சினிமா நண்பர் சீமான் ஆகியோர் தங்கள் மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்ளப்போகிரார்களோ? பரிதாபம்.

    கருணாநிதியின் கணக்குகள் இப்படித்தான்:-

    காங்கிரசும், கருணாநிதி கம்பெனியை போலவே ஒரு தேசவிரோத இயக்கம் தான். எனவே இந்த கூட்டணி மிக இயல்பானதே. தன்னுடைய குடும்ப பிசினசை வீணாக விட்டுவிட்டு வெட்டி லாவணி பாட கருணாநிதி ஒன்றும் பயித்தியக்காரர் அல்ல. காங்கிரசுக்கு மத்திய அரசில் இன்னும் மூன்று வருடம் பதவிக்காலம் உள்ளது. தன்னையும், தன்னுடைய குடும்பக்கழகத்தையும் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுவதற்கு மத்திய அரசின் கொள்ளை கூட்டணி கருணாநிதிக்கு அவசியம் தேவை ஆகும்.

    மேலும் காங்கிரசை விட்டு பிரிந்து தனியாக நின்று சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் , மத்திய அரசின் உதவி இல்லை என்றால் , இவர்களின் சொத்து முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு விடும். ஆனால் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து தோற்று , ஜெயலலிதா முதல்வர் ஆனால் கூட , மத்திய அரசில் உள்ள தங்கள் பதவிகளை வைத்து, 2001- 2004 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொழுது , அவருக்கு எதிராக அரசியல் செய்ததை போல மறுபடியும் செய்யலாம். எனவே இவரை தமிழினத் தலைவர் என்று கூறி புளகாங்கிதம் அடைந்து வந்த , கோமாளிகளான வீரமணி, வீரபாண்டியன் சுப , மற்றும் சீமான் ஆகியோர் இனி என்ன செய்யப்போகிறார்கள்? இவர்களும் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்க போகிறார்களா?

  21. Everybody knows about veeramani. He is a jalra to the party in power a.ka his thalaivar EVR. When JJ was CM, he gave her the title “samuga neeti kaatha veeranganai” & she in turn awarded him the periyar award.

    Then, when mu.ka came to power, he supported him.

    As for DMK, their party workers celebrated the break up of the alliance on saturday by distributing sweets, now what are they going to do?

  22. Regarding the allotment of 63 seats to congress, mu.ka said that 63 is a lucky number since there were 63 nayanmars.

    He calls himself a rationalist but quotes from hindu religion whenever convenient.

  23. இந்திய வாக்காளர் பேரவை என்ற அமைப்பு கோயம்புத்தூரிலிருந்து கடந்த சில தேர்தல்களில் வாக்காலப்பெருமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. 2001 மற்றும் 2006 ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் , இந்த அமைப்பு நடத்தி முடித்து வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் , உண்மையான தேர்தல் முடிவுகளுடன் 95 சதவீதத்திற்கும் மேல் துல்லியமாக இருந்தன. 2001 தேர்தலில் ஜெயலலிதா அணி 190 க்கு மேலான இடங்களைப்பெறும் என்று இந்த அமைப்பு துல்லியமாக கணித்தது. 2006 சட்டசபை தேர்தலிலும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பதை துல்லியமாக கணித்தது.

    இந்த அமைப்பு சுமார் 60000 வாக்காளர்களுக்கும் மேல் தொடர்பு கொண்டு, சுமார் 25 கேள்விகளை கேட்டு , அவற்றுக்கு பதில் வாங்கி, அவற்றை தொகுத்து , வாக்காளர் விருப்பத்தை ஆராய்கிறது.இவர்கள் மக்கள் தொகையில் படித்தவர், படிக்காதவர், ஆண்,பெண் , ஏழை, பணக்காரர், பல்வேறு தொழில்புரிவோர், பல்வேறு மதம், ஜாதி ஆகியவற்றை சேர்ந்தவர்களிடம் அவர்களின் சதவீத அடிப்படையில் பங்கு பெறச்செய்து கருத்து கேட்கிறது. எனவே, இதன் கணிப்புப் தவறாது.

    இந்தமுறை, இன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை தமிழ் இதழில்( 17.3.2011 தேதியிட்டது) இந்த அமைப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி சுமார் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கணிப்பின் சில முக்கிய விவரங்கள் வருமாறு:-

    திமுக ஆட்சி நல்ல ஆட்சி என்று ஐந்து சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். தொண்ணூற்று ஐந்து சதவீதம் பேர்கள் இது நல்ல அரசு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

    ஒரே குடும்பத்தின் ஆட்சியை விரும்பவில்லை என்று தொண்ணூறு சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

    கிலோ ஒரு ரூபாய் அரிசி , அரிசியை கடத்தி விற்கும் கடத்தல் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

    திமுக ஆட்சியே மீண்டும் வரவேண்டுமா என்ற கேள்விக்கு 98 சதவீதம் பேர்கள் இல்லை என்று கூறி உள்ளனர்.

    மொத்தமுள்ள 25 கேள்விகளில் 23 கேள்விகளுக்கு 93 .4 சதவீத மக்கள் திமுகவின் மாநில அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

    திமுக ஆட்சி கூடாது என்று சொல்லுபவர்கள் ஒரே அணியில் திரள வேண்டும் என்று நூறு சதவீதம்பேர்கள் தெரிவித்துள்ளனர்.

    விலைவாசி உயர்வு, ஆ ராசா முறைகேடு, கலைஞர் குடும்பத்தினரின் அதிகார ஆதிக்கம் ஆகியவை மூன்றுமே பொதுமக்களிடம் மிக கடுமையான வெறுப்பை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே இந்தமுறை எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் , வாக்கு வித்தியாசத்தில் வேண்டுமானால் சிறிது மாறுதல் ஏற்படுத்தலாமே தவிர, அண்ணாதிமுக கூட்டணியின் வெற்றியை மாற்ற முடியாது.

    இதில் அனைவரும் மகிழ வேண்டிய ஒரே ஒரு விவரம் என்னவெனில், தமிழக சோனியா காங்கிரசு இந்தமுறை மறைந்து போகும். எல்லோரும் முன்கூட்டியே அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளலாம்.

  24. அதிமுக பாஜகவை மதித்து கூட்டணியில் சேர்த்திருந்தால், காங்கிரஸ் திமுகவிற்கு எதிரான வோட்டுக்கள் சிதறாமல் இருந்திருக்கும், இரண்டு கட்சிகளுமே பயனடைந்திருக்கும்.

  25. மக்கள் கணக்கையும் மகேசன் கணக்கையும் அறிந்தவர் எவருளர் ?எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்பது போல் தான் உள்ளது இன்றைய தமிழகத்தின் நிலைமை .விஞ்ஞான பூர்வ ஊழல் மன்னனுக்கு பயந்து ,மாதர் குல மாணிக்கம் ..,கொடநாட்டு கோமள வல்லிக்கு ஆதரவளிப்பது வாணலிக்கு பயந்து எரிகிற அடுப்பில் விழுந்த கதையாகி விடும் ,ஆனால் வேறு வழியில்லை .கண்ணிருந்தும் குருடராய் ,காதிருந்தும் செவிடராய் வாழும் தமிழ்மக்கள் திருந்தினால் ஒழிய அவர்களுக்கு விமோசனம் கிடையாது .சும்மா ,வாய் கிழிய குஜராத்தில் மோடி நிர்வாகம் சூப்பர் !!பிகாரில் நிதிஸ் ஆட்சி அமர்க்களம் என்று பேசினால் மட்டும் போதாது .தமிழகத்திலும் அது போன்ற ஒரு ஆட்சியை கொண்டு வர முன் முயற்சி செய்து பார்க்க வேண்டும் .அறுபது ஆண்டு கால நாத்திக அரசுகளையும் மீறி மாநிலம் ஓரளவு தப்பிப் பிழைதிருக்கிறது என்றால் அது நம் முன்னோர் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும் .இரண்டு கலகங்களையும் [சொற்பிழை இல்லை .தெரிந்தே தான் அடித்தேன் ]தூக்கிஎறிந்துவிட்டு தமிழக இந்துக்கள் தமது சொந்த கட்சியான,பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்பார்களேயானால் தமிழகம் தப்பிப்பிழைக்கும் .

  26. பாபா ராம்தேவ் டெல்லியில் ஊழலுக்கு எதிராக பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தை நடத்தினார். இதில் ராம்ஜெத்மாலினி சுப்பிரமணியம் சுவாமி போன்றோர் உரையாடினார்கள். இந்த செய்தியை பல ஆங்கில பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்தது.

    பாபா ராம் தேவ் – ஆள தகுதியற்றவர்கள் கையில் ஆட்சி

    1. ரூபாய் 300 லஷ்சம் கோடி கருப்புபணம் அன்னிய நாடுகளில் உள்ள வங்கிகளில் பதிக்கிவைக்கப்பட்டுள்ளது. இதை தவிர சுமார் 100 லஷ்சம் கோடி கருப்பு பணம் உள்நாட்டில் புழக்கத்தில் உள்ளது. நமது அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து இந்த பணத்தை மீட்டு எடுக்கவும் உள்நாட்டில் கருப்பு பணம் புழுங்குவதை தடுக்கவும் எந்த நடவடிக்கையும் இன்று வரை மேற்கொள்ளவில்லை. இப்பெரும் தொகையை மீட்டு எடுத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலா ரூபாய் 2.5 லஷ்சம் கொடுக்கலாம். ஒவ்வொரு மாநில மாவட்டங்களுக்கும் தலா 50 ஆயிரம் கோடி வளர்சிக்காக கொடுக்கலாம். ஒவ்வொரு கிராமத்திற்கும் 100 கோடி கொடுக்கலாம். இதை செய்தால் நம்நாடு கண்இமைக்கும் நேரத்தில் உலக முன்னேறிய நாடுகள் வரிசையில் இருப்போம்.

    2. ரூபாய் 10 லஷ்சம் கோடி மதிப்புள்ள நாட்டின் வளங்கள் ஆபத்தான அழிந்துவரும் சூழலில் உள்ளது. நமது நாட்டில் 89 வகையான கனிம வளங்கள் உள்ளன. நமது அரசாங்கம் சுமார் 200 நிறுவனங்களுக்குதான் சுரங்க கனிமம் வெட்டி எடுக்கும் பணிக்கு உரிமை வழங்கியுள்ளது. ஆனால் நடைமுறையில் சுமார் 1 லஷ்சம் பேர்களுக்குமேல் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி கொண்டிருக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்தாவிடில் நம் நாட்டின் கனிமவளம் அடியோடு வெகுவிரைவில் சுரண்டப்பட்டுவிடும்.

    3. இந்த இயற்கை கனிம வளத்தில் சுமார் 550 லஷ்சம் கோடி மதிப்பிலான இரும்பு தாதுவும் சுமார் 950 லஷ்சம் கோடி மதிப்பிலான நிலக்கரியும் இருப்பில் உள்ளது. இப்படி சட்டவிரோத கனிமம் வெட்டி எடுப்பது தடுக்கபடவில்லை என்றால் இந்த கனிமங்கள் நாம் பார்பது அரிதாகிவிடும்.

    4. தேவையை மீறிய பணபுழக்கம் – நமது நாட்டில் தற்பொழுது சுமார் 10 லஷ்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது. இது நமது பொருளாதார வளர்சியின் தேசிய குறியீட்டுடன் ஒப்பிடுகையில் (gross domestic product -GPD) இந்த புழங்கும் பணம் 15 சதவிகிதம் ஆகும். ஆனால் வளர்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த பண புழகம் 3 சதவிகிதமே. இப்படி 10 லஷ்சம் கோடி பணபுழக்கம் இருந்தால் நமது நாட்டின் பொருளாதார வளர்சியின் மதிப்பு சுமார் 330 லஷ்சம் கோடி ரூபாயாக இருக்கவேண்டும் ஆனால் அதன் மதிப்பு 60 லஷ்சம் கோடி. மீதிபணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளது.

    5. அதிகமான 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது ஏன்? – மேலே சொன்ன 10 லஷ்சம் கோடி ரூபாய் பண புழக்கத்தில் சுமார் 30 சதவிகிதம் 1000 ரூபாய் நோட்டுகள். நமது நாட்டில் 80 சதவிகித மக்கள் ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாய்தான் வருமானம் பெற்று செலவு செய்கிறார்கள். பிறகு எதற்காக இவ்வளவு 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. 2001 ஆம் ஆண்டு 1.8 சதவிகிதமாக இருந்த 1000 ரூபாய் பண புழக்கம் 10 ஆண்டுகளில் 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது ஏன். காரணம் கருப்பு பண புழக்கத்திற்கு சுலபமாக பெரும் தொகையை கைமாற்றம் செய்யலாம். முதலில் நமது அரசாங்கம் இந்த 1000 ரூபாய் நோட்டுகளை கால தவணை அறிவித்து திரும்ப பெறவேண்டும்.

    6. அரசாங்க செலவினங்களை சுரண்டும் ஊழல் – நமது அரசாங்க பட்ஜெட் மதிப்பு இது நாள் வரை சுமார் 200 லஷ்சம் கோடி. ஆனால் இந்த பெரும் தொகை செலவிடபடுவது வெளிபடையாக நமக்கு தெரிவதில்லை. காலம் சென்ற நமது பிரதம மந்திரி ராஜிவ் காந்தி கூறியதைபோல் இந்த பணத்திலிருந்து வெரும் 10 முதல் 15 சதவிகிதம் தான் மக்களிடம் போய் சேருகிறது மீதிபணம் ஊழல் பேர்வழிகளால் சுரண்டப்படுகிறது. இப்படிபட்ட அரசாங்கம் நமக்கு தேவையா?

    comment cont…

  27. 7. கணக்கிடமுடியாத ஊழல்கள் – 2ஜி ஊழலால் ரூபாய் 1.76 லஷ்சம் கோடி பணஇழப்பு ஏற்பட்டுள்ளது. இது நமது வருடாந்திர பட்ஜெட்டின் மதிபில் 25 சதவிகிதம் ஆகும் – என்ன செய்கிறது இந்த அரசாங்கம் – ஒன்றும் இல்லை !

    8. ஊழல் பேர்வழிக்கு தண்டனை – நமது நாட்டில் ஊழல் செய்பவர்களுக்கு தண்டனை என்பதே கிடையாது. ஆனால் நாங்கள் குற்றபேர்வழிகளை தண்டிப்போம் என்று இடைவிடாது குரல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். தவறி ஒரு சிலர் தண்டிக்கப்பட்டாலும் சின்ன ஊழலுக்கு 2 இல்லது 3 மாதம் ஜெயில். பெரிய குற்றத்திற்கு 3 வருடம் ஜெயில். இன்று ஊழல் நீதி மன்றம் வரையில் சென்றுள்ளது . கணக்கற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. நிறைய ஊழல் வழக்குகளில் பலர் தண்டிக்கபடாமல் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கிறார்கள்

    9. நாம் பிரிடிஷ் சட்டதிட்டங்களைதான் இன்று வரை கடைபிடிக்கிறோம் – நமது அரசியல் அமைப்பு சட்டபடி பினாயக் சென் போன்றவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் அது தேச துரோகம் ஜெயில் தண்டனை உண்டு. இந்த சட்டம் பிரிடிஷ் அரசாங்கத்தால் தங்களது ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புவதை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தியது. அதையே நாமும் தவறுதலாக பின்பற்றுகிறோம். ஆனால் ஊழல் அரசாங்கமாக இருந்தால் அதை எதிர்து குரல் கொடுத்தால் அதுவும் தேசதுரோகமாக கருதப்படகிறது. ஆனால் அரசாங்க ஊழலுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது தேச துரோகம் ஆகாது !!

    10. நிலங்களை வாங்கி விற்கும் வியாபாரியாக மாறிவரும் அரசாங்கம் – இன்று அரசாங்கம் பெரும் அளவில் நிலங்களை எல்லா இடங்களிலும் வாங்கிக்கொண்டிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் 2 கி.லோ. மீட்டர் அகலம் கொண்ட விளைச்சல் நிலத்தை 20 லஷசம் ரூபாய் செலவில் ரோடுபோட கையகப்படுத்துகிறது. ஆனால் அரசாங்கமே அந்த நிலத்தை 5 கோடி ரூபாய்க்கு தனி நபருக்கு விற்கிறது. இப்படி விளை நிலங்களை வாங்கி பின்பு உற்பத்தி கழிவுகளை வெளியேற்றி மாசுபடுத்தும் தொழிலகங்களுக்கு விற்கிறது.

    11. வெளிநாட்டு பாங்குகள் – நமது அரசு 8 இத்தாலிய வங்கி 4 சுவிஸ் (UBS) வங்கிகளுக்கு வியாபாரம் செய்ய அனுமதி அளித்துள்ளது. (Union Bank of Switzerland – deals mainly with asset, wealth & investment- now merged with other tax heavens banks) இந்த வங்கிகளுக்கும் பொது ஜனங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது கருப்பு பணத்தை மறைத்து வைக்கும் நாட்டின் வங்கிகள் இது வெட்டவெளிச்சமாக கருப்பு பணத்தை சுலபமாக பதுக்குவதற்கான வழியே என்பது எல்லோருக்கும் தெரியும்.

    12. இளைய தலைமுறைகளை ஒழுகக்கேடாக ஆக்குதல் – 450 மேற்பட்ட அரசாங்க திட்டங்கள் நாட்டில் நடைமுறையில் உள்ளது. ஆனால் அத்திட்டங்கள் அனைத்திற்கும் ஒரே குடும்பத்தில் வந்தவர்கள் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது. ஏன் தேசத்தின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த பகவத் சிங் பெயரோ அல்லது சந்திரசேகர ஆசாட் பெயரோ வைக்கவில்லை. பாட்டு பாடுபவர்களுக்கெல்லாம் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கிறார்கள் என்பது ஏற்புடையதே. ஆனால் நாட்டு விடுதலைக்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்கு ஒன்றும் கிடையாது. இப்படிப்பட்ட கீழ் தரமான செயல்களால் நமது இளை சமுதாயம் தேசபற்று வாழ்கையில் ஒரு லஷ்சிய குறிகோள் போன்ற நல்ல பண்புகளை பயில தடைசெய்படுகிறார்கள் என்பதை யாரும் சிந்திப்பதில்லை. கணகில்லாமல் பணத்தை செலவு செய்து ஏன் ஒரு குடும்பத்தில் வந்தவர்களுக்கு மட்டும் புகழாரம் சூட்டுகிறார்கள். அப்படி என்றால் அவர்கள் குடும்பம் தவிற வேறு யாருமே தேசத்திற்காக உயிர் தியாகம் செய்யவில்லையா ?

  28. Who said ” people get the government they deserve”? I do not remember. But we the Tamilnadu people will get a government that we deserve. For us, some catchy words like Tamil, Dravidam, minority upliftment, social justice, secularism (or anti Hinduism) etc is enough to vote for any party. So we will get a government we deserve. Both the fronts are full with highly corrupted and notorius parties. So in this election whichever party comes to power, we have no hope. That is what we deserve.

  29. பிரதாப்

    அ திமுக கூட்டணியில் அந்த கட்சி போட்டியிடும் 160 தொகுதிகளின் பட்டியலை ஜெயலலிதாவுக்கு தெரியாமல், யாரோ எடுத்து வெளியிட்டு விட்டதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. பொதுமக்கள் எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் , போயஸ் கார்டன் அந்த அம்மாவின் கட்டுப்பாட்டில் இல்லை, சின்னம்மாவின் கட்டுப்பாட்டில் தான் இன்னமும் இருக்கிறது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    வைகோ கோமாளியே தவிர , சுயநலவாதி அல்ல. அவருக்கு மரியாதை தர ஜெயலலிதா தவறினால் , ஜெயலலிதா வெற்றிபெற்றாலும் கூட மரியாதையை இழந்துவிடுவார். விஜயகாந்த்துக்கு நாற்பத்தொரு சீட்டு கொடுத்து , சரியாக , புத்திசாலித்தனமாக ஒப்பந்தம் செய்து கொண்ட , ஜெ , வைகோவுக்கும் இருபதாவது கொடுத்து அரவணைத்து செல்வது அவசியம்.

    இல்லையெனில் , ஒரு ராஜ்யசபா உறப்பினர் பதவி மற்றும் பதினாறு சட்டமன்ற தொகுதிகளை வழங்கி உடன்பாடு செய்துகொள்ள வேண்டும். இப்போது, என்ன கொடுமை என்றால், வல்லபாய் படேல், மொரார்ஜி, காமராஜ், எம்ஜி ஆர் போன்ற பெரியதலைவர்கள் இருந்த நம் நாட்டில் , கருணா (மஞ்சள்) மற்றும் ஜெயா போன்ற வக்கிரங்கள் தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கபடுவது தான்.

    ஏனெனில் காங்கிரசு பாடைக்கு போய்விட்டது. எஞ்சியுள்ள கோமாளிகள் கருணா-ஜெயாவை விட மோசமானவர்கள் ஆவார்கள். எனவே இருக்கும் தீமைகளில் இப்போது குறைந்த தீமை ஜெயா அணிதான் ஆகும். ( இந்த தேர்தலில்- 2011 ஏப்ரல் )

    பெரியார் போன்ற மோசமான மனிதர்களை தலைவர் என்று கூத்தாடிய தமிழனுக்கு இது போன்ற இழிநிலை காலத்தின் சாபம் ஆகும். கழகங்கள் இனியாவது திருந்தி , தங்கள் குறுகிய போக்குகளை கைவிட்டு , நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு பெருக்கம், போன்றவற்றை கவனித்து, மக்களின் நல்வாழ்வுக்கு ஏதாவது செய்யவேண்டும். நீங்கள் கொடுத்த இலவச டி.வி யை பார்ப்பதற்கு கூட , தமிழகத்தின் 75 சதவீத கிராமங்களில் தினசரி நாலு முதல் ஐந்து மணிநேரம் மின்வெட்டு காரணமாக மக்கள் சிரமப்படுகிறார்கள். மைனாரிட்டி அரசியல், ஜாதி அரசியல் இவற்றை கைவிட்டு , நம் மாநிலத்தின் வருமானம் பெருக கடுமையாக உழையுங்கள்.

    இல்லையெனில், இயற்கை தரும் கடுமையான தண்டனைகளை நீங்கள் அனுபவிக்க நேரிடும். உங்களுக்கு ( திமுக, அ திமுக) நல்ல சிந்தனைகள், இனிமேலாவது வரட்டும்.

  30. மதிப்பிற்குரிய வேதம்கோபால் ,

    உங்கள் கடிதத்தைப்படித்து சிரிப்புத்தான் வருகிறது. ஜெர்மனி அரசு இலவசமாக தருகிறேன் என்று சொல்லிய , கறுப்புப் பண விவரங்களை பெற மறுத்து , இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு சட்டத்தின் கீழ் ரகசியமாகத்தான் பெறுவோம் என்று சொல்லி ஊழல் வாதிகளை மூடிமறைக்கும் இந்தநாட்டில், நீங்கள் கேட்டுள்ள பன்னிரண்டு கேள்விகளுக்கும் எல்லோருக்கும் பதில் தெரிந்தாலும், யாரும் சொல்லமாட்டார்கள்.

    நேற்று காலை கீரை விற்கும் ஒரு பெண்மணியிடம் பேசும்போதும் , ஜெயா மற்றும் கருணா இருவரின் ஆட்சியில் எதுதேவலை என்று கேட்டபோது , அந்த அம்மா சொன்னது இதுதான்:-

    “கலைஞர் ஒரு ரூபாய் அரிசி, இலவச டி.வி , தந்துள்ளார். ஆனால் நம் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மந்திரி டெல்லியில் ஊழல் ஜெயிலில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இருக்கிறார். அவரை திமுகவின் கொள்கைபரப்பு என்ற பதவியிலும் வைத்திருக்கிறார்கள் இன்றுவரை. ஊழல்தான் திமுகவின் கொள்கைபரப்பா? நம் ஊரின் மானம் போகிறது. மிக அதிகமாக ஊழல் செய்து, நம் தமிழக மானம் போகிறது.

    இவரது குடும்பத்தில் ஸ்டாலினோடு நிறுத்திக்கொண்டு , மற்றவர்களை அரசியலைத்தவிர வேறு தொழிலில் முதல்வர் ஈடு படுத்தியிருக்கலாம். இவ்வளவு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்காது.

    எல்லா விலைவாசியும் ரொம்ப கூடிப்போச்சுங்க. வாழவே முடியாது. இவர்களால் இலங்கை தமிழன் மட்டும் லட்சக்கணக்கில் சாகவில்லை. இங்குள்ள தமிழனும், மீனவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே செத்து சுண்ணாம்பாகி கொண்டிருக்கிறான்.

    ஜெயா ஆட்சியில் கொலை, கொள்ளை இவ்வளவு நடக்காது.அந்த அம்மா ஆட்சியில்தான் வீரப்பனையே போட்டுதள்ளிவிட்டது தமிழக போலிசு.ஊழலும் கம்மி தான். அரசாங்க வேலைக்காரனுங்களை அந்த அம்மா தேவையில்லாம பகைச்சுக்கிட்டது. மத்தபடி, எம் ஜி ஆர் கட்சிதாங்க கொஞ்சம் தேவலை. இனிமே, நம் நாட்டில் கக்கன், காமராசர் என்று மேடையில் பேசுவானுன்களே தவிர நல்ல , சிம்பிளான மனுஷனைஎல்லாம் பெரிய பதவிக்கு வரவிடமாட்டானுங்கோ.

    இருக்கிற போக்கிரி குரங்குகளில் எந்த குரங்கு தேவலை என்று பார்த்து ஒட்டு போடவேண்டியது தான். இப்ப இருக்கிற காங்கிரசு என்பது கோணங்கி பயலுக கூட்டம். அவனுகளோட சேர்ந்த எவனும் கோவிந்தா கோவிந்தா தான். திமுக இனி வராதுங்கோ.

  31. பா ஜ க வுக்கு வோட்டு போடுவதால் ஏதாவது நல்லது நடக்குமா என்று சிந்திப்போம். இப்போது தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிலேயே அதுதான் சிறிது பொதுநலம் பேணும் கட்சி. அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றுக்கட்சியானபோதிலும் , தமிழகத்தில், கேரளாவில், மேற்குவங்காளத்தில் என்று பல பகுதிகளில் கட்சி வளர்ச்சி பெறவில்லை.

    பா ஜ க நல்ல பொருளாதார கண்ணோட்டம் உள்ள கட்சி. காங்கிரசை போல நாட்டுக்கே விரோதமான , தேசவிரோத கட்சி அல்ல. காங்கிரசுக்கு சமமாக பெரிய அளவு ஊழல் அவர்கள் செய்யவில்லை. ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் பெரிய ஊழல் செய்ய மாட்டார்கள் என்பது யாரும் நிச்சயம் காரண்டி கொடுக்கமுடியாது. அதே சமயம் நரேந்திரமோடி போன்ற நல்லோரும், நிதிஷ் குமார் போன்ற எளியோரின் ( simple ) கூட்டணியும் இருப்பதால் , நம் நாட்டுக்கு அந்தக்கட்சியால் சிறிது நல்ல நிர்வாகத்தை கொடுக்க முடியும்.

    தமிழகத்தில் பாஜக வுக்கு மக்கள் வோட்டு போடுவதென்றால், அந்த கட்சியின் வாக்கு சதவீதம் சிறிது கூடுவதற்கு உதவுமே தவிர, இந்த ஆட்சியை மாற்றுவதற்கு அது உதவாது. எனவே பாஜகவின் ஒட்டு சதவீதம் அதிகரிக்கவேண்டும் என்று கருதுவோர் பாஜகவுக்கும், ஆட்சிமாற்றம் வேண்டும் என்று கருதுவோர் எம் ஜி ஆர் கட்சி கூட்டணிக்கும் ஓட்டுப்போடுவது நல்லது.

    ஆனால் எல்லாவற்றையும் விட அதிமுக்கியம் என்னவெனில், தேர்தல் நாளன்று , வெயிலுக்கு முன்பு , வாக்கு சாவடிக்கு போய், க்யூவில் நின்று ஓட்டுப்போடுவது தான். ஒட்டு போடாமல் இருப்பது பாவம் ஆகும். ஓட்டுப்போடாமல் இருப்பதை விட, எவனாவது ஒரு கேடுகெட்ட வேட்பாளருக்கு ஒட்டு போடுவது கூட மிக நல்லதே ஆகும். ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சியின் வெற்றி நமது பங்களிப்பில் தான் உள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க, அதிகரிக்க, நிச்சயம் அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளின் அளவு குறைந்து , நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    குஜராத்தும், பீகாரும், ஒரிஸ்ஸாவும் இந்தியாவில் தானே உள்ளன. அங்குபோல ஒரு ஊழல் இல்லாத ஆட்சி எதிர்காலத்தில் இங்கும் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *