கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2

(க்கட்டுரையின் அனைத்துக் கருத்துக்களும் எழுதியவருடையவையே. அவற்றுடன் நாங்கள் முழுமையாக உடன்படவில்லை. ஆயினும், கலாசார பன்முகத்தன்மை பற்றிய விவாதத்தின் ஒரு அங்கமாக தமிழ்ஹிந்து தளத்தில் இக்கட்டுரையை வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு)

முந்தைய பகுதி

தொடர்ச்சி…

சேனல்-4 என்ற பிரிட்டிஷ் ஊடக நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தியோபந்தி பிரிவு இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் வெறுப்பை கக்கும் பாடத்திட்டங்களை பற்றின நிகழ்ச்சியை ஒளிபரப்பி உள்ளது. சில பள்ளிக்கூடங்களில் ரகசிய கேமராக்களை பொறுத்தி பல அதிர்ச்சியூட்டும் (புதியதாக தெளிபவர்களுக்கு) தகவல்களை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியின் பெயர் Dispatches – Lessons in Hate and Violence.

அந்த நிகழ்ச்சியில் ஒரு காட்சி. ஆசிரியர் முஸ்லீம் குழந்தைகளுக்கு கீழ்வருமாறு பாடம் நடத்துகிறார் –

(1) காஃபிர்களைப் போல் (Kuffars-disbelievers or Infidels) வாழ்வதை இஸ்லாம் ஒப்புக்கொள்ளாது. பிரிட்டனின் சமூகம் சைத்தானின் சமூகம். முஸ்லீம்கள் காஃபிர்களை வெறுக்க வேண்டும்.

(2) யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நாத்திகர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் எதையும் பின்பற்றக்கூடாது.

(3) சர்ச்சுகள் சைதானின் கூடாரம்.

(4) தாடி இல்லாமல் முஸ்லீம் ஆண்கள் இருக்கக் கூடாது. பயணம் செய்கையில் ஒரு யூதருடன் செல்வதைக் காட்டிலும் தாடி இல்லாத முஸ்லீமுடன் பயணம் செய்வது அதிக தீங்கை விளைவிக்கும்.

(5) ஹிந்துக்கள் பசுவை வழிபடுகிறார்கள். ஒரு பசுவை எவ்வாறு வழிபட முடியும்?அவர்களே பசுவின் மேல் அமர்கிறார்கள். சில சமயம் ஹிந்து தன் கடவுளை குளிப்பாட்டுகிறான். சில சமயம் கடவுள் தூங்கி விடுகிறார். சில சமயம் அந்த கடவுள் சிறுநீர் கழித்துக்கொண்டே சாப்பிடுகிறார். ஹிந்துக்களும் அந்த கடவுளின் சிறுநீரை குடிக்கவும் செய்கிறார்கள்.

ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார் – இப்பொழுது சொல்லுங்கள், ஹிந்துக்களுக்கு மூளை உள்ளதா? மாணவர்கள் கோரஸாக “இல்லை” என்கிறார்கள்.

இந்த பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்த (School Inspectors) கண்காணிப்பாளர்கள் இந்த பள்ளிக்கூடம் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதாகவும் சமூக இணக்கத்தை உருவாக்குவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

channel4-teachers-abuse-children2

இதைப்போன்றே யார்க்ஷைர் (Yorkshire) பிராந்தியத்தில் உள்ள ஒரு மதராஸாவில் குழந்தைகளுக்கு வெறுப்பை கக்கும் பாடங்களை கற்று தருகின்றனர்.இது போதாதென்று சரியாக குரானை உச்சரிக்காத குழந்தைகளை முரட்டுத்தனமாக அடிக்கவும் செய்கிறார்கள். காலால் எட்டி உதைப்பது, கையால் அடிப்பது, கன்னத்தில் பளார் என்று அறைவது, நாற்காலிகளால் அடிப்பது என்று எந்த வரையறையும் இல்லாமல் முஸ்லீம் குழந்தைகள் துவம்சம் செய்யப்படுகின்றனர்.

இந்த படத்தில் நான் ஒரு விஷயத்தையும் கவனித்தேன். வகுப்பறையில் 10 முதல் 15 மாணவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவரையுமே ஆசிரியர் அடிக்கிறார். சாதாரணமாக வகுப்பறையில் சில குழந்தைகள் புத்திசாலியாக இருக்கும். அந்த வகுப்பறையில் எந்த குழந்தையுமே புத்திசாலி இல்லையா? அல்லது அந்த ஆசிரியருக்கு பித்தம் தலைக்கேறி விட்டதோ தெரியவில்லை.

இந்த யார்க்ஷைர் பள்ளிக்கூடத்தை 2009ல் ஆய்வு செய்த கண்காணிப்பாளர்கள் இங்கு “அனைத்து மத நம்பிக்கைகளும் போதிக்கப் படுகின்றன. மற்ற மதங்களை மதிக்கவும் கற்று கொடுக்கப்படுகிறது” என்று தன் அறிக்கையில் கூறுகிறது (ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நஷ்டமே இல்லை என்று கூறிய நம் கபில் சிபலையே பிரிட்டனின் கண்காணிப்பாளர்கள் மிஞ்சி விட்டார்கள்!)

பிரிட்டனில் 2000 இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் சுமார் 1 இலட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். தியோபந்தி இஸ்லாமிய பிரிவுதான் பிரிட்டனில் பெரும்பாலான மசூதிகளையும், மதராஸாக்களையும் நடத்துகிறது. அடுத்த தலைமுறை இமாம்களையும் மத தலைவர்களையும் உருவாக்கி வருகிறது. இது ஒரு பிரசித்தி பெற்ற பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்கு மேயர், அரசாங்க உயர் அதிகாரிகள் வந்து பாராட்டி விட்டு செல்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வு.

ஆச்சரிய விஷயம் என்னவென்றால், இந்த தியோபந்தி இஸ்லாமிய பிரிவு உருவானது 1866ல் இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள தியோபந்த் என்னும் நகரத்தில். இந்தியாவில் மிகவும் செல்வாக்கு பெற்ற இஸ்லாமிய பிரிவான தியோபந்தி நம் நாட்டிலும் இதைப் போன்றே அடுத்த கட்ட ஜிகாத் தீவிரவாதிகளை உருவாக்கி வரும் என்பதில் ஐயமில்லை.

இங்கு இன்னும் ஒரு விஷயத்தையும் முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். இந்த தியோபந்தி பிரிவை எதிர்த்து பல பிரிட்டனின் முஸ்லீம்கள் குரல் கொடுக்கிறார்கள். இந்த மிதவாதிகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் சில நவீன இஸ்லாமிய பகுதிநேர வகுப்புகளை நடத்தி, அதில் எல்லா மதத்தவர்களும் சேர்ந்து வாழ்வதையே நாம் விரும்ப வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிறார்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தியோபந்தி மதராஸாக்களிலிருந்து நிறுத்தி விட்டார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஒரு முஸ்லீம் பெண்மணி. ரகசிய கேமராக்களை பல மசூதிகளிலும், மதராஸாக்களிலும் பொருத்தியவர்களும் முஸ்லீம்களே! அடிப்படைவாதம் பேசும் குழுக்களை பல மிதவாத முஸ்லீம்கள் எதிர்ப்பதும் இந்த ஆவணப்படத்திலேயே பதிவாகியுள்ளது. பிரிட்டன் இன்னும் பாகிஸ்தானைப் போல மாறவில்லையாதலால் நிலைமை இன்னும் மோசமாக வில்லை.

திரு.டேவிட் கேமரூணின் உரையைப் பற்றின செய்தியை இங்கு மறுபடியும் நினைவு கொள்ளலாம். தியோபந்தி பிரிவு முஸ்லீம்களுக்கு கொடை வழங்குவதை விட, இந்த மிதவாத முஸ்லீம்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது, கொடை வழங்குவது போன்றவற்றால் சில முன்னேற்றங்களை கண்டிப்பாக உருவாக்க முடியும்.

டென்மார்க் இந்த பிரச்சினையை அற்புதமாக கையாள்கிறது. வேற்றினத்தார்கள் குடியேறி அவர்களால் மேற்கத்திய கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து வாழ முடியவில்லையெனில் 20,000 அமேரிக்க டாலர்கள் தந்து அவர்களை தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி விடுகிறது. இதை எல்லா மேற்கத்திய நாடுகளும் பின்பற்றலாம். அதாவது ஏற்கெனவே குடியேறியுள்ளவர்களுக்கு!. புதியதாக வேற்றினத்தவர்களை குடியேற அனுமதி அளித்தால் பிற்காலத்தில் டாலர் கொடுத்து மாளாது.

வட அமேரிக்காவில் மட்டும் முன்னேற்றமில்லை. கலாச்சார பன்முகத்தன்மையின் தோல்வியைப் பற்றின விமர்சனங்கள் ஐரோப்பாவின் தலைவர்களால் எழுப்பப்பட்டு வந்தாலும், வட அமேரிக்காவில் குறிப்பாக அமேரிக்கா மற்றும் கனடாவின் அரசியல்வாதிகள் இன்னும் விழித்து கொள்ள வில்லை.ஓட்டு வங்கிகளின் உருவாக்கத்திற்காகவும், உலக அளவில் பிரசித்தி அடைவதற்கும் அமேரிக்க அதிபர் திரு.ஒபாமா உட்பட பல அரசியல்வாதிகள் வருங்கால சந்ததிகளைப் பற்றின கவலை இல்லாமல் ஹிமாலயத் தவறு புரிகின்றனர்.

obama-singhசில மாதங்களுக்கு முன் திரு. ஒபாமா இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இந்திய பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் ஆரம்பத்திலேயே கீழ்வருமாறு பேசினார்:

I bring the greetings and friendship of the world’s oldest democracy – the USA, including nearly three million proud and patriotic Indian Americans.

இந்த கட்டுரையின் முன்குறிப்பில் எழுதப்பட்டிருக்கும் உறுதிமொழியின்படி ஒவ்வொரு இந்தியனும் அமேரிக்க குடியுரிமை பெறும் சமயத்தில் தன் நாட்டுடனான உறவை முற்றிலுமாக துண்டித்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறான். அப்படி இருக்கையில் “Indian Americans” என்ற வார்த்தை பிரயோகம் எப்படி சரியாகும் என்று ஒருவரும் கேட்பதில்லை. ஒரு மனிதர் இந்தியராகவோ அல்லது அமேரிக்கராகவோ மட்டுமே இருக்க முடியும். இரண்டுமாக எப்படி இருக்க முடியும்?

“Patriotic Indian Americans” என்று கூறுகையில் திரு.ஒபாமா அமேரிக்காவிற்கான தேசப்பற்றைத்தான் குறிப்புணர்த்துகிறார். இந்தியாவிற்கு அல்ல!.

இன்று அமேரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் வாரிசுகள் சிலராவது தப்பித்தவறி வரும் காலங்களில் அமேரிக்க இராணுவத்தில் சேரலாம். ஒரு வேளை எதிர்காலத்தில் இந்தியாவிற்கும் அமேரிக்காவிற்கும் போர் மூண்டால் இந்திய நகரங்களின் மேல் வெடிகுண்டு வீசுவதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் “அமேரிக்க தேசப்பற்று”.

ஆனால் இது போன்ற கேள்விகளை தங்கள் மனசாட்சியிடம் குடியேறிகள் கேட்கிறார்களா?

அமேரிக்காவிலோ பிற மேற்கத்திய நாடுகளிலோ குடியேற விரும்பும் மக்கள் கீழ்வரும் வசதிகளையே காரணமாக கூறுவர்.

நான்குவழி வேகச்சாலைகள்;
தண்ணீர், மின்சாரம், சமையல் எரிவாயு போன்றவை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் வீட்டிற்கே வந்து சேவை செய்ய காத்திருக்கும் கம்பெனிகள்;
முழுமையான மத சுதந்திரம்;
முழுமையான எழுத்துரிமை, பேச்சுரிமை;
பெண்களுக்கான சம உரிமை;
தினசரி வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்காக லஞ்சம் என்பதே இல்லாமை;
படிப்புக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் முழுமையான அங்கீகாரம்;
தொழில் தொடங்க எல்லா உதவிகளையும் தர முன்வரும் அரசாங்கம்;
வேலைவாய்ப்பு பறிபோனால் சில மாதங்களுக்கு அரசாங்க உதவித்தொகை;
வாழ்க்கையின் அனைத்து நிலை மகிழ்ச்சிகளையும் முழுமையாக அனுபவிக்க தோதாக உள்ள அரசு மற்றும் சமூக அமைப்புகள்.

ஹிந்தியில் ஒரு வாக்கியம் வரும் – kuch pane ke liye kuch khona hi padega. ஒரு சிலவற்றை பெற சிலவற்றை இழந்தாக வேண்டும்.

மேலே குறிப்பிட்ட வசதிகளைப் பெற சில விட்டு கொடுப்புகளை குடியேறிகள் செய்தாக வேண்டும்

தங்கள் சொந்த நாட்டுடனான தொப்புள் கொடி உறவை முறித்து கொண்டாக வேண்டும். (என்ன செய்வது திராவிட கட்சிகளின் அறிக்கைகளை படித்ததால் ஏற்பட்ட விளைவு!)

மேற்கத்திய நாடுகளின் அரசியல் சட்டங்களை பின்பற்றுவது மட்டுமே போதாது; சில சமயங்களில் தாங்கள் பிறந்த சொந்த நாட்டின் கலாச்சார குறியீடுகள், மேற்கத்திய கலாச்சார குறியீட்டுடன் ஒன்றாத பொழுது, தங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள மனமுவந்து தயாராக வேண்டும்.

turkish-pm-erdoganசமீபத்தில் துருக்கிய பிரதமர் எர்டோஜன் ஜெர்மனிக்கு விஜயம் செய்தார். அவர் துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடியேறியவர்களிடம் உரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது:

“Yes, integrate yourselves into German society but don’t assimilate yourselves. No one has the right to deprive us of our culture and our identity.”

சில மாதங்களுக்கு முன்புதான் ஜெர்மானிய அதிபர் அஞ்சேலா மர்கல் கலாச்சார பன்முகத்தன்மையை விமர்சனம் செய்தார். அவர் விமர்சித்தது சரிதான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. இந்த துருக்கியின் தலைவராவது ஒருங்கிணைந்து வாழவாவது சொல்கிறார். ஒன்றிணைவதை மட்டுமே எதிர்க்கிறார். பல மதக்குழுக்கள் ஒருங்கிணைந்து வாழ்வதையே கூட எதிர்க்கின்றன.

ravindra-singh-boparaஒரு கற்பனை – ஒரு கேள்வி:

இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதி போட்டி. இந்தியா விளையாடுகிறது. கடைசி பந்து. 2 ரன்கள் எடுத்தால் இந்தியாவிற்கு வெற்றி. இந்திய வீரர் அடித்த பந்து, இங்கிலாந்து வீரரின் கைக்கு அருகில் செல்கிறது. மிகவும் எளிமையான கேட்சை இங்கிலாந்து வீரர் பிடிக்க வில்லை. இந்தியா 2 ரன்களை பெற்று வெற்றி அடைந்து விடுகிறது. இதில் என்ன விசேஷம்? ஒரு சாதாரண விளையாட்டுதானே! இங்குதான் சுவாரஸ்யம். கேட்சை கோட்டை விட்ட இங்கிலாந்து வீரரின் பெயர் ரவீந்திர சிங்க் போபாரா.

இந்த ஆட்டத்தை பார்த்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்?

வெள்ளையர்களின் வழி, தனி வழி!

பிரிட்டானிய பிரதமர் டேவிட் கேமரூண் ஜெர்மனியின் முனிச் நகரில் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றியதை பார்த்தோம். இந்த உரையை விட அவர் உரையை ஆரம்பித்த விதம் சுவாரஸ்யமானது. அவரின் பேச்சை என்னால் முடிந்தவரை தமிழ்படுத்தி எழுதுகிறேன்.

“என் மனைவி நேற்று என்னுடன் தொலைபேசியில் பேசும்போது, டார்லிங் இன்று உங்கள் நாள் எப்படி இருந்தது? என்று கேட்டாள். அதற்கு நான் கூறினேன் – இன்று என் தோழி அஞ்சேலா மர்கலுடன் (ஜெர்மானிய அதிபர்) 6 மணி நேரம் மதிய உணவு உண்டேன்”.

(மேடையில் இருந்த அஞ்சேலா சிரிக்கிறார். பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்)

“பிறகு என் மனைவிடம் நான் அதே கேள்வியைக் கேட்டேன். இன்று உன் நாள் எப்படி இருந்தது?. அவள் கூறினாள் – டார்லிங், இன்று ஒரு பெல்ஜிய மனிதர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.”

(அனைவரும் சிரிக்கின்றனர்)

இது நாமெல்லாரும் கவனமாக கவனிக்க வேண்டிய ஒரு பேச்சு. இந்த பேச்சை கேட்டு கொண்டிருந்த அரங்கில் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். ஒரு இந்திய பிரதமரோ அல்லது அரேபிய தலைவரோ இம்முறையில் நகைச்சுவையாக ஆண், பெண் அல்லது கணவன், மனைவி உறவைப் பற்றி பேச முடியுமா?

அது சரியா? தவறா? என்பது இந்த கட்டுரைக்கு அவசியமில்லாத விஷயம். வெள்ளைக்காரர்களின் கலாச்சாரம் என்பது இவ்வாறுதான் இருக்கும் என்று நன்றாக தெரிந்தபின்தான் மேற்கத்திய குடியேறிகளாக மாறுகிறார்கள். அவர்களின் நாட்டு குடிமகனாக மாறியபின் அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி குறை கூறுவது தவறு மட்டுமல்ல. அநியாயம். அக்கிரமம். அதர்மம். அவ்வாறு வாழ விருப்பமில்லையெனில் தாராளமாக தங்கள் சொந்த நாட்டிலேயே வாழலாமே! ஆனால் மேலே பட்டியலிடப்பட்ட வசதிகள் ஒன்றும் முழுமையாக கிடைக்காது.

மாறாக, கீழ்க்கண்ட தொல்லைகளுடனும் பிரசினைகளுடனும் தான் வாழவேண்டியிருக்கும்:

மேடு பள்ளங்களுடன் உள்ள சாலைகள்;
எப்பொழுது வரும் என்றே சொல்ல முடியாத மின்சாரம்;
தண்ணீர், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றிற்காக கொடுக்கப்பட வேண்டிய லஞ்சம்;
ஒரு தொழில் தொடங்க (லைசென்ஸ் பெற) பிச்சை எடுக்க வைக்கும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள்.
மிருகங்களைப் போல் நடத்தும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள்;
தகுதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அரசு அமைப்புகள்;
இடஒதுக்கீடும், சிபாரிசும் சமூகத்தையே ஆட்டி வைக்கும் நிலை;

நான் அடிக்கடி தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்ல வேண்டி இருக்கும். எல்லா நேரங்களிலும் இரயில் வசதி இல்லாததால் பஸ்ஸில் செல்லத்தான் வேண்டும். நியூயார்க்கிலிருந்து வேறொரு நகரத்திற்கு சாலை வழியில் சென்று பழக்கமுள்ள ஒருவரை எங்கள் தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்ல வைத்தால் போதும். நடு முதுகு எகிறி விடும். ஆயாசம் தீர ஒரு நாள் ஆகும்.

இத்தனைக்கும் தமிழ்நாடு ஓரளவிற்கு முன்னேற்றம் அடைந்த மாநிலம்; இந்த சாலை மாநில நெடுஞ்சாலை. பல இலட்சம் பேர் பயணிக்கும் ஒரு சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாகத்தான் கிட்டத்தட்ட 5 வருடங்களாக உள்ளது. சிறிய அளவில் பராமரிப்பு செய்யப்பட்டாலும் ஒரு மழை சாலையை நாரடித்து விடுகிறது.

வசதிகளும் வாய்ப்புகளும் மட்டுமே வேண்டும் என்று கேட்டுவிட்டு, விட்டுக்கொடுப்புகளை செய்யாத, செய்யத் துணியாத, செய்யவும் விரும்பாத வேற்றினத்தார்கள் மேற்கத்திய நாடுகளின் தேச துரோகிகள்.

ஒரு ஹிந்துவான, இந்தியனான எனக்கு எது நியாயமோ, தர்மமோ, அதே நியாயங்கள் வெள்ளையனுக்கும் பொருந்தும்.

கடந்த 500 வருடங்களாக பல தியாகங்கள் செய்து வெள்ளையர்கள் பெற்றிருக்கும் ஜனநாயகம், சுதந்திரம், பெண்களுக்கான சம உரிமை போன்றவற்றிற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். என் ஹிந்து மரபுகளை அடுத்த ஹிந்து தலைமுறை பேண வேண்டும் என்று விரும்பும் நான், அவர்களின் கலாச்சாரத்தை அனுசரிக்க, அடுத்த தலைமுறைக்கு அளித்து விட்டு செல்ல வெள்ளையர்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு என்பதை தீர்மானமாக ஏற்கிறேன்.

முடிவுரை:

1970 முதல் தற்பொழுது வரை மேற்கத்திய நாடுகளில் குடியேறியவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்துடன் ஒன்ற முடியவில்லை என்பதுடன் அதை கேவலமாக சித்தரிக்கவும் தயங்குவதில்லை. ஒரு வழியாக சில ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் மௌனத்தை கலைத்து தீரத்துடன் பேசத் துவங்கியுள்ளனர்.

தற்பொழுது வாழும் குடியேறிகளின் பிரச்சினையுடன் சமீப காலமாக அரேபிய தேசங்களில் நடைபெறும் உள்நாட்டு கலகங்களும் சேர்ந்துள்ளன. இதை வெகு ஜாக்கிரதையாக கையாள வேண்டிய அவசியம் ஐரோப்பாவிற்கு உள்ளது. குறிப்பாக லிபியா நாட்டிலிருந்து அனுதினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அருகிலிருக்கும் 6 ஐரோப்பிய தேசங்களில் அகதிகளாக நுழைந்துள்ளனர்.

libya-refugees

மனிதாபிமானம் என்பது வேறு. பைத்தியக்காரத்தனம் என்பது வேறு. அகதிகளை மனிதாபிமானத்துடன் நடத்தி தற்காலிக அனுமதிச்சீட்டு கொடுப்பது வரை ஒரு பிரச்சினையும் இல்லை. லிபியாவில் நிலைமை சீரானவுடன் அவர்கள் கண்டிப்பாக திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆனால் அதைத்தாண்டி அவர்களுக்கு ஐரோப்பாவில் குடியுரிமை கொடுப்பது அடுத்த ஐரோப்பிய தலைமுறைக்கு தற்பொழுது வாழும் வெள்ளையர்கள் புரியும் கொடூரமான பாவமாகும்.

அரேபிய லிபியர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்துடன் பல தலைமுறைகளுக்கு ஒன்றப் போவதில்லை. ஆனால் கலாச்சார பன்முகத்தன்மை என்னும் பெயரில் ஐரோப்பாவை லிபியாவாக மாற்றுவது தெரிந்தே தீராத சோகத்தை தனதாக்கிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

இஸ்லாமிய மதத்தின் பெயரால் பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பை சிதைப்பவர்களுக்கு, அதை 21ம் நூற்றாண்டிலும் நியாயப்படுத்துபவர்களுக்கு, பெண்களை குழந்தை பெற்று கொடுக்கும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு, வேற்று மதத்தாருக்கு சம உரிமை கொடுக்காதவர்களுக்கு, தங்களின் கலாச்சாரம் ஒன்றே சிறந்தது மற்றவை கேவலங்கள் என்று முழங்குபவர்களுக்கு ஐரோப்பாவும் அமேரிக்காவும் தேவையில்லை. அரேபிய பாலைவனங்களும் ஆப்கானிஸ்தானின் தோரா போரா பள்ளத்தாக்குகளும்தான் சரியான இடங்கள்.

மேற்கத்திய நாகரீகமும் மற்ற நாகரீகங்களும் தற்பொழுதுள்ள சூழலில் (வருங்காலத்திலும்தான்) ஒரு புள்ளியில் சேர வாய்ப்பே இல்லை. பன்முக கலாச்சார பார்வைக்கு மேற்கத்திய நாடுகள் இன்று சலாம் அடித்தால், வரும் காலத்தில் இனப்படுகொலைகள் நிகழும் என்பதற்கு ஜோசியம் பார்க்க வேண்டியதில்லை. எந்த நிபுணரின் கருத்தும் தேவையில்லை.

(முற்றும்)

10 Replies to “கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2”

  1. நன்றி! பல முக்கியமான கருத்துக்கள்! நன்றி!

  2. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும் நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றது என கூறுகிறாயே ஏசுநாதர் வாழ்ந்ததற்கு கூட வரலாற்று ஆதாரம் உண்டு ஆனால் நீ சொல்லக்கூடிய ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் உண்டா ஆதாரம் இல்லாத ஒரு கற்பனை சிலையை வணங்கக்கோரி மக்களிடம் கூரிகிரயே இது பகுத்தரிவுக்குட்பட்டாத பைதியகாரதனத்திர்கெல்லாம் ஒரு இணையதளமா…எனவே சகோதரர்களே பகுத்தறிவை வழர்த்து கொள்ளுங்கள்

  3. தோழர்களே,
    சற்று சிந்தித்து பாருங்கள் பல கடவுளை வணங்குகிரீர்களே உதாரணத்திற்கு அருள்புரியும் கடவுள் அளிக்கும் கடவுள் என இரண்டு கடவுள்கள் இருகிறார்கள் என வைத்து கொள்வோம் அளிக்கும் கடவுள் உம்மை அளிக்க நாடுகிறார் அனால் நீ அருள்புரியும் கடவுள் பக்தன் . அக்கடவுள் உம்மை அளிக்க நாடும் பொழுது அருள் புரியும் கடவுள் தடுக்கமாட்டாரா அப்படி தடுத்தால் இருவருக்கும் மோதல் ஏற்படுமல்லவா..சண்டை போட்டு கொள்பவர்கள் கடவுளா கடவுள் என்றால் சமாதானம் அல்லவா கூறவேண்டு……..
    உங்கள் சிந்தனைக்கு

  4. தான் வாழ பிறரைக் கெடுக்கும் கொள்கை கொண்ட, அராபிய,அயிரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைப்பற்றிய கட்டுரை முற்றுப்பெற முடியாததொன்று.

  5. ஐயா கட்டுப்பட்டவரே,

    உங்கள் கடிதம் செம ஜோக்கு.

    இந்துக்கள் ஒரே கடவுளை தான் வழிபடுகிறார்கள். அந்த கடவுள் எல்லா உருவங்களிலும் உள்ளார். உருவம் இல்லாதவரும் அவரே.

    இந்துக்களின் கடவுள் சொர்க்கத்தில் மட்டும் இருப்பவர் அன்று. அவர் எங்கும் நிறைந்தவர். அவர் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை.

    உருவங்களுக்கு பல பெயர்கள் மனிதர்களின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

    சுவாமிநாதன் என்பவர் ஒரு மனிதர். அவர் குழந்தை அவரை அப்பா என்று அழைக்கிறது. அவர் தாய் அவரை மகனே என்று அழைக்கிறார். அவர் மனைவி அவரை அன்புக்கணவரே என்று அழைக்கிறார்.

    அவர் நீதி மன்றத்திற்கு சென்று, தனது ஆசனத்தில் அமர்ந்தவுடன் , அவர் முன்பாக ஆஜராகும் அனைவரும் அவரை, கனம் நீதி அரசர் அவர்களே என்று அழைக்கிறார்கள்.

    ஆக ஒரு சாதாரண மனிதருக்கே ஒரு பெயர் போதவில்லை. எனவே இறைவனுக்கு உள்ள பெயர்களோ எண்ணிறைந்தவை. எல்லா பெயர்களும் இறைவனின் பெயர்களே.

    இந்துக்களின் கோயில்களில் இறைவனுக்கு வழங்கும் நூற்றுஎட்டு, மற்றும் ஆயிரத்தெட்டு பெயர்கள் முறையே அஷ்டோத்திரம், மற்றும் சகஸ்ர நாமம் என்று சொல்வார்கள். அவை ஒரு எல்லை அற்றவை. எல்லைஅற்ற பெயர்களில் இருந்து, ஒரு நூற்று எட்டு மற்றும் ஆயிரத்தெட்டு பெயர்களை சொல்லி வணங்குவது வழக்கம்.

    இறைவனுக்கு ஒரு பெயர் தான் உண்டு என்று சொல்வது ஒரு மோசடி. இறைவனுக்கு எத்தனையோ பெயர்களும், எத்தனையோ உருவங்களும் உண்டு. உருவமில்லாதவரும் அவரே.

    இறைவனுக்கு இது தான் பெயர், இது தான் உருவம், அல்லது அவருக்கு உருவம் கிடையாது என்று எல்லைகள் வகுப்பது காட்டுமிராண்டி தனம்.

    உங்களை போன்றவர்கள் தெளிவு பெற வேண்டுமானால், காலஞ்சென்ற நீதியரசர் ஜனாப் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் எழுதிய “அல்லாவின் அழகிய ஆயிரம் திருநாமங்கள்” போன்ற நூல்களை படித்து தெளிவு பெறுதல் நல்லது.

    எனவே இஸ்லாமிய சம்பிரதாயத்தில் , இறைவனின் குணங்களை வர்ணித்து அவருக்கு ஆயிரம் திருநாமங்களை இஸ்லாமிய பெரியவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அல்லாஹ் ஒருவரே, ஆனால் அவருக்கு அழகிய ஆயிரம் திருப்பெயர்கள் உள்ளது போல, இந்து மதத்திலும் இறைவனுக்கு பல பெயர்கள் உண்டு.

    இந்து மதம் எந்த எல்லைகளுக்குள்ளும் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இறை சக்தி என்பது வரையறைகளுக்குள் அடங்காது. எனவே தான் இந்துக்கள் யாரையும் மத தலைவர்களாக கருதுவதில்லை. நல்ல வழிகாட்ட யாரையாவது இறைவன் தேவையானபோது எல்லாம் அனுப்பிக்கொண்டே இருப்பான் என்பதே உண்மை.

    காளி, பார்வதி, துர்கா,லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன், மாரியம்மன், சிவன், விஷ்ணு, பிரம்மா நடராஜர் எல்லாமே ஒரே இறைவனின் பல்வேறு வடிவங்களும், பல்வேறு பெயர்களும் ஆகும்.

    ஒரே இறைச்சக்தி தான் பலவேறு உருவங்களிலும் , பலவேறு பெயர்களிலும் வழிபடப்படுகிறது. கடவுள் இல்லை என்று சொல்பவனும் கூட இறைவனால் படைக்கப்பட்டவனே.

  6. கலாசார பன்முகதன்மை என்பதுதானே போலி செக்யூலரிஸம் என்னும் மேற்கத்திய மாயை. சகிப்புதன்மை இல்லாமை என்பது மேற்கத்தியர்களது பிறவிகுணம். இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பதில் வல்லுனர்கள். இனவெறி அடிமைதனம் என்ற அடிதளத்தின் மேல் கட்டப்பட்ட இந்த ஆபிரமாமிய மதங்களின் கோரமுகம் இன்று உலகின் நடுசந்தையில் நாற்றம் எடுத்து வருகிறது. அவர்களது கொட்டம் இன்னும் அடங்கவில்லை அது ஒரு முடிவில்லா தொடர் கதை. இதில் கிருஸ்துவம் சற்று முன்னேரினாலும் அடிகடி ரிவர்ஸ் கியரில் தான் பயணிக்கிறது. பல கிருஸ்துவ நாடுகளில் இஸ்லாமிற்கு அளித்த முன் உரிமையால் கிருஸ்துவர்களின் வாழ்வு ஆதாரமே இன்று ஆங்காங்கே ஆட்டம் காண்கிறது என்பது உண்மையே.

    உண்மையான கலாசார பன்முகதன்மைக்கு எடுத்துகாட்டாக இன்றுவரை இருந்துவரும் நாடு நமது பாரதம்தான். ஆனால் போலி ஸெக்யூலரிசம் பேசும் இந்துகளால்தான் இன்று இந்து மதம் பல இன்னல்களை சந்தித்துவருகிறது.

    இப்படி என்றுமே திருந்தாதவர்கள் (சகிப்புதன்மை இல்லாத) நாட்டில் குடியுரிமை பெறுவது தற்காப்பின்மையே. வாரா வாரம் ஏதோ ஒரு நாட்டில் இந்தியர்கள் தாக்கபடுவதும் கொலை செய்வதும் பற்றிய செய்திகள் வந்தவண்னம் உள்ளது. பல யோகா தியான இடங்களை போலி குற்றங்களை சுமத்தி முடக்கிவிடுகிறார்கள். இன்று வழிபாட்டு தலங்கள் தாக்கபடுவதாக செய்திகள் வருகின்றன. எனவே சிறிதுகாலம் பணம் ஈட்டிவிட்டு இந்துகள் தாய் நாடு திரும்புவதுதான் உசிதம்.

    (edited and published)

  7. பாலாஜி அவர்களே,
    மிக நுணுக்கமாக பல விடயங்களை அவதானித்து சிறப்பாக கட்டுரை எழுதியுள்ளீர்கள். தங்கள் நேர்மையை பாராட்டுகிறேன். மேற்கத்திய நாடுகளில் தற்போது இஸ்லாமிய குடியேறிகள் மீது ஏற்பட்ட விழிப்புணர்வு நல்ல ஒரு மாற்றம்.அவர்களுக்கு அரேபிய பாலைவனங்களும் ஆப்கானிஸ்தானுமே பொருத்தமான இடங்கள்.

  8. ”கலாசார பன்முகதன்மை என்பதுதானே போலி செக்யூலரிஸம் என்னும் மேற்கத்திய மாயை. சகிப்புதன்மை இல்லாமை என்பது மேற்கத்தியர்களது பிறவிகுணம். இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பதில் வல்லுனர்கள். இனவெறி அடிமைதனம் என்ற அடிதளத்தின் மேல் கட்டப்பட்ட இந்த ஆபிரமாமிய மதங்களின் கோரமுகம் இன்று உலகின் நடுசந்தையில் நாற்றம் எடுத்து வருகிறது. அவர்களது கொட்டம் இன்னும் அடங்கவில்லை அது ஒரு முடிவில்லா தொடர் கதை. இதில் கிருஸ்துவம் சற்று முன்னேரினாலும் அடிகடி ரிவர்ஸ் கியரில் தான் பயணிக்கிறது. பல கிருஸ்துவ நாடுகளில் இஸ்லாமிற்கு அளித்த முன் உரிமையால் கிருஸ்துவர்களின் வாழ்வு ஆதாரமே இன்று ஆங்காங்கே ஆட்டம் காண்கிறது என்பது உண்மையே.”
    vedamgopal – லின் கருத்து மிகவும் சரியான கருத்து.

    உண்மையான கலாசார பன்முகதன்மைக்கு எடுத்துகாட்டாக இன்றுவரை இருந்துவரும் நாடு நமது பாரதம்தான். ஆனால் போலி ஸெக்யூலரிசம் பேசும் இந்துகளால்தான் இன்று இந்து மதம் பல இன்னல்களை சந்தித்துவருகிறது. – நிதர்சனமான,மறுக்க முடியாத வார்த்தைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *