தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

நேர்காணல்: சேக்கிழான்

ramagopalji_011ஹிந்து முன்னணியின் நிறுவனர் திரு.ராம.கோபாலன், ஹிந்துக்களின் ஒற்றுமைக்காகவும்,  மேம்பாட்டுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர்.   ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட நாளைய பிரச்சாரகர். ஹிந்துக்களின் தன்மானத்தைக் காக்க, 1980 ல் தமிழகத்தில் ஹிந்து முன்னணியைத் துவக்கினார் திரு. ராம.கோபாலன்.

gopalji-7தன் மீதான கொலைவெறித் தாக்குதலில் (1982) தெய்வாதீனமாக  உயிர் தப்பிய ராம.கோபாலன், 80  வயதைத் தாண்டிய நிலையிலும் தளராது, மாநிலத்தின் பட்டிதொட்டிகள் எல்லாம்  சென்று சமுதாயத்தை  ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஒரு மாதமாக, சட்டசபை தேர்தலில் ஹிந்துக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று விளக்கி, தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் பிரசாரம் செய்து வருகிறார். மிகவும் மும்முரமான பிரசாரத்தில் இருந்த ராம.கோபாலன், தமிழ் ஹிந்து நேயர்களுக்கு (தொலைபேசி வழியாக) அளித்த பிரத்யேக நேர்காணல் இது…

கேள்வி: இத்தேர்தலில் ஹிந்துக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? ஏன்?
 
பதில்: இந்தத் தேர்தலில் தமிழக ஹிந்துக்கள் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.  இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி பிரசாரம் செய்கிறது.  ஏனெனில், இதுவரை பாஜக தவிர வேறு எந்தக் கட்சியும் ஹிந்துக்களின் நலன் காப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளுவதற்காக அவர்களைக் கவர வாக்குறுதிகளை அள்ளி வீசும் எந்தக் கட்சியும் ஹிந்துக்களின் கோரிக்கைகளை மதிக்கவில்லை. ஹிந்துக்களை கிள்ளுக்கீரையாகக்   கருதும் இந்த போலி மதச்சார்பற்ற கட்சிகளுக்கு படிப்பினை அளிக்கும் விதமாக, ஹிந்துக்களின் கோரிக்கைகளுக்கு தேர்தல் அறிக்கையில் இடம் அளித்துள்ள பாஜகவுக்கே தமிழக ஹிந்துக்கள் வாக்களிக்க வேண்டும்.

கேள்வி: இவ்வாறு  கூறுவது மதரீதியாக மக்களை  பிளவுபடுத்துவதாகாதா?  பாஜக மீது மதவாத முத்திரை பதிய இது காரணம் ஆகாதா?

பதில்:  இந்தக் கேள்வியை ஹிந்துக்களைப் பார்த்துத்தான் அரசியல்வாதிகள்   கேட்கின்றனர்.  உண்மையில் இந்தப் பிரச்னையைத் துவக்கி வைத்தவர்களே மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் தான். திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன.

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது; அதிமுக கூட்டணியில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி உள்ளது. பெயரிலேயே மதத்தைக் கொண்டுள்ள இக்கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்றும், பாஜகவை மதவாதி என்றும் இரு கழகங்களும் பிரசாரம் செய்வது வினோதம்.

குமரி மாவட்டம் அருமனையில்  நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அதிமுக தலைவி ஜெயலலிதா, கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு மானிய உதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். கிறிஸ்தவ மதத்திற்கு  மாறிய  தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடு,  குமரியில் கட்டுப்பாடின்றி சர்ச் கட்ட அனுமதி உள்ளிட்ட பல அபாயகரமான கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக ஜெயலலிதா அறிவித்தார்.

அதே நாளில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார். மதமாற்றத் தடைச் சட்டம் வராது என்றும் அவர் கூறி இருக்கிறார். சிறுபான்மை மாணவர்களுக்கு கடனுதவி வழங்குவதாக அவர் பெருமிதத்துடன்  முழங்கினார்.

இந்த காட்சிகளுக்கு மாறாக,  அனைத்து மாணவர்களையும் மத வேறுபாடின்றி சமமாகக் கருத வேண்டும்; பொருளாதார அடிப்படையில் பரிசீலித்து அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரி, மாநிலம் முழுவதும் பிரசார யாத்திரை சென்றார் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்று கூறும் பொன்.ராதாகிருஷ்ணன் மதவாதி; கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் வாக்குகளுக்காக தவறான வாக்குறுதிகளை அளித்து மக்களைப் பிளவுபடுத்தும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மதச்சார்பற்றவர்கள்! என்ன முட்டாள்தனம் இது?

hindu_munnani_02

கேள்வி: எனினும் இத்தேர்தல் ஊழலுக்கு எதிரான போராட்டமாக உள்ளது. கருணாநிதியின் திமுகவுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலை உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறதே?

பதில்: உண்மைதான். பல லட்சம் கோடி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி வீட்டிற்கு அனுப்பப்பட  வேண்டியவர் தான். ஆனால், கருணாநிதிக்கு மாற்றாக முன்னிற்கும் ஜெயலலிதாவும் ஊழல் கறை படியாதவர் அல்லவே?  ஊழல் குறித்துப் பேச இரு கழகங்களுக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது.  தவிர, பாஜக மட்டுமே தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது. இரு கழகங்களுக்கும் மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும்; இம்முறை பாஜகவுக்கு வாக்களித்து இரு கழகங்களுக்கும் தமிழக மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.

கேள்வி: இருப்பினும் ஜெயலலிதா கடவுள் நம்பிக்கை உடையவர். கருணாநிதியின் நாத்திகவாத பிரசாரத்திற்கு அவர்தானே சரியான பதிலடியாக  இருப்பார்?

பதில்: கோயிலுக்குப் போவதும் சாமி கும்பிடுவதும் இந்துக்களின் நம்பிக்கைகளை மதிப்பதாக ஆகிவிடாது. ஜெயலலிதா கோயிலுக்குப் போவது அவரது வேண்டுதலுக்காக. கடவுள் நம்பிக்கையுள்ள ஜெயலலிதா ஆட்சியில் தான் ஹிந்துக்களின் பிரதான மடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சுவாமிகள் பொய்யான வழக்கில் (விரைவில் இது நிரூபணமாகும்) கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். போலி பகுத்தறிவுவாதியான கருணாநிதி கூட செய்யத் துணியாத காரியம் அது.  இதனை ஹிந்துக்கள் மறக்க முடியாது. தவிர ஜெயலலிதா உறுதியான மனநிலை கொண்டவரல்ல என்பதை தனது  நடவடிக்கைகளில் நிரூபித்திருக்கிறார். தனது சுயநலனுக்காக எந்த நடவடிக்கை எடுக்கவும் தயங்காதவர் அவர்.

உண்மையில், கருணாநிதி ஹிந்துக்களின் விரோதி என்றால், ஜெயலலிதா ஹிந்துக்களின் துரோகி. விரோதியைவிட துரோகி மோசமானவர். எனவே தான், ஹிந்துக்களின் வாக்கு விரோதிக்கும் இல்லை; துரோகிக்கும் இல்லை என்று கூறுகிறோம்.

ஹிந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கக் கூடிய, ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்கக் கூடிய, ஹிந்துக்களின் எதிர்காலத்திற்கு நன்மை தரக்கூடிய கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்பதே ஹிந்து முன்னணியின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில் தான், பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுகிறேன்.

தவிர, பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்; கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும்;

ஹிந்துக்களின் கோயில்கள் அனைத்தும் அரசின் கட்டுபாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆன்மிகப் பெரியோர் அடங்கிய  தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்;

ஹிந்துக்களின் புனித யாத்திரைகளுக்கும் அரசு உதவி வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை ஹிந்து முன்னணி பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறது. இக்கோரிக்கைகளை பாஜக மட்டுமே ஏற்று தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. ஹிந்துக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் ஏமாற்றும் இரு கழகங்களுக்கும் வாக்களிக்காது, ஹிந்துக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக அறிவித்துள்ள பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும். 

malaysia_hindus

கேள்வி: கைலாய யாத்திரைக்கும் நேபாள யாத்திரைக்கும் செல்லும் ஹிந்துக்களின் புனிதப்பயண  செலவுகளை அரசு ஏற்கும் என்று ஜெயலலிதா வாக்களித்திருக்கிறாரே?

பதில்: ஹிந்துக்களைப் பொருத்த வரை, கைலாய யாத்திரையும் நேபாள யாத்திரையும் மட்டுமே புனித யாத்திரைகளல்ல.  ஹிந்துக்களுக்கு எண்ணற்ற புனிதத்  தலங்கள் நாடு முழுவதும் உள்ளன. இஸ்லாமியர் ஹஜ் யாத்திரை செல்வது போலவோ, கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வது (இது சமீபகாலமாகத்தான் பிரமாதப்படுத்தப்படுகிறது) போலவோ, ஹிந்துக்களின் புனித யாத்திரையை சில இடங்களுக்குள் கட்டுப்படுத்த முடியாது. அனைத்து தல யாத்திரைகளுக்கும் ஹிந்துக்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும்.

மாறாக, புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹிந்துக்களிடம் வரி வசூலிப்பதில்தான் நமது அரசாங்கங்கள் ஆர்வம் காட்டுகின்றன. சபரிமலை செல்லும் பக்தர்களிடம் வசூலிக்கும் பலகோடி  பணத்தில் சிறிதளவு செலவு செய்திருந்தால் கூட புல்மேடு அசம்பாவிதம் நேரிட்டிருக்காது.

ஜெயலலிதாவின் அறிவிப்பு ஒப்புக்கு கூறியிருப்பதாகவே உள்ளது. இது ஏமாற்று வித்தை; இதை நம்ப முடியாது. இது வரையிலும் ஜெயலலிதா ஹிந்துக்களுக்கு எந்த நன்மையையும் செய்ததில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்ததாக கூறிய அதே ஜெயலலிதா, இன்று அதற்கு எதிராகப் பேசுகிறார்.

திமுக, அதிமுக- இரு கட்சிகளுக்குமே சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டுமே முக்கியமாகத் தெரிகின்றன. அவர்களுக்கு பெரும்பான்மையினரான  ஹிந்துக்களின் வாக்குகள் பற்றிய கவலையில்லை. மக்களை சிறுபான்மை- பெரும்பான்மை என்று இரு கூறாகப் பிரிக்கும் கட்சிகள் இவை. ஹிந்துக்களின் வாக்குக்களை நாடாத கட்சிகளுக்கு ஹிந்துக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? எனவே, நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.

hindu_munnani_03

 கேள்வி: இரு கழகங்களின் வலிமை முன்னால் பாஜக எடுபடுமா?

பதில்: மாற்றம் விரும்புபவர்கள், ஜெயிக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தமிழகம் கடந்த 1967  முதல் கழகங்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சிந்தனைப்போக்கு கொண்ட திராவிட இயக்கங்களால் தமிழகத்தின் இரண்டு தலைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக தேசிய சிந்தனை கொண்ட கட்சி தமிழகத்தில் வலுவானதாக மாற வேண்டும். இந்தத் தேர்தல் அதற்கான வாய்ப்பை அளிக்கிறது.

இரு கழகங்களும் வெறுப்பின் அடிப்படையில் அரசியல் நடத்தி தமிழகத்தின் அரசியல் நாகரிகத்தை நாசமாக்கி விட்டார்கள். இரு கட்சிகளும் விஞ்ஞான ரீதியான ஊழலில் சளைத்தவர்கள் அல்ல. இரு கட்சிகளுமே சிறுபான்மை வாக்குகளுக்காக நாட்டுநலனை விலை பேசும் கட்சிகள் தான். எனவே இரு கட்சிகளுமே புறக்கணிக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் பணபலம், அரசியல் பலம், கூட்டணி பலத்தைக் கண்டு மிரண்டு விடக் கூடாது. நாட்டை நேசிக்கும் நல்லவர்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டுமானால்,  அதிகார பலத்தையும் அநியாய பலத்தையும் மீறிப் போராடித்தான் ஆக வேண்டும்.  தேர்தல் களத்தில்  நாட்டுநலனுக்காகப் போராடும் பாஜகவுக்கு வாக்களிப்பது தமிழ் ஹிந்துக்களின் கடமை.
 

rama_gopalan_02

13 Replies to “தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி”

  1. அற்புதமான கட்டுரை.

    தமிழன் படித்து திருந்துவானா?

    இந்த கட்டுரையில் ஏராளமான உண்மைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்து சமூகத்தை பிளவு படுத்துவதிலேயே கழகங்கள் குறிக்கோளாக வைத்து வாழ்ந்து வருகின்றன.

    விலைவாசி உயர்வு, மின்தடை, குடும்ப ஆட்சி, ௨ ஜி என்று பல பாதிப்புகளை கண்ட தமிழகம் விடிவுக்காக ஏங்குகிறது.

    கலைஞரின் டாஸ்மாக்கால் மதிமயங்கிய தமிழன் இன்றைய நிலையில் ஒரு நல்ல மாற்றை தேர்வு செய்ய மாட்டான் . தேர்தல் முடிந்தவுடன் தமிழனுக்கு பெரியவரின் அர்ச்சனை, அசிங்கமான திட்டு ஜூன் மூன்றாம் நாள் அன்று கிடைக்கும்.

    இந்துக்களின் மத்தியில் சமூக சீர்திருத்தங்கள் மத தலைவர்கள் மூலம் வரவேண்டும். ஈ வே ரா , போன்றோரின் பொய் பிரச்சாரங்களை நம்பி மதி மயக்கத்தில் உள்ள தமிழன் பாஜக போன்ற நல்ல கட்சிக்கு ஒரு பத்து சதவீத ஓட்டாவது போட்டால் நன்றாக இருக்கும். செய்வானா என்று தெரியவில்லை.

    பாஜக தொடர்ந்து இன்னும் இரு தேர்தல்களில் போட்டியிட்டு இருநூற்று முப்பத்து நாலு தொகுதியிலும் தனித்து நின்றால், மூன்றாவது தேர்தலில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். முயற்சிகள் வெல்ல , எல்லாம் வல்லானை பிரார்த்திப்போம்.

  2. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க. பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்கும் வரை, நாம் இரு கொள்ளிகளில் ஒரு கொள்ளியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை இல்லை இருவரும் எதிரியும், துரோகியுமாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால், தோற்கும் கட்சியில் நம் வாக்கு சங்கமமாகி விடும். மேலும் ஒழிக்கப்பட வேண்டியதான தி.மு.க. வெற்றி பெற நாம் வழி வகுத்ததாகி விடும். பா.ஜ.க. சார்பில் நிற்பவர்களில் எத்தனை பேருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. நம் வாக்கை வீணாக்குவதைக் காட்டிலும், தி.மு.க. எனும் சமூக விரோத கட்சி தோற்க நாம் வாக்களிப்பதே சரியாக இருக்கும்.

  3. அருமையான கருத்துக்கள் தான், ஆனால் சாமானிய மனிதர்களை ஒருங்கிணைக்கும் செயலை பா ஜ க சரியாக செய்ய வில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
    தாங்கள் அதிகம் படித்தவர்கள் வசதியான வாழ்கையை வாழும் வாய்ப்பை பெற்றவர்கள் என்று நினைக்கும் மேல்தட்டு மக்களை வாக்களிக்கச் செய்து வெற்றி பெறலாம்.
    பா ஜ க சரியான மாற்று என்று சாதாரண மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் இன்னும் தமிழகத்தில் போராட்டங்களை நடத்தாமல் இருந்தது குறைவோ!
    பல தரப்பினரும் தொலைக் காட்சி ஊடகங்களை பயன் படுத்திக் கொண்டு இருக்கும்போது ஏன் பா ஜ க தனக்கென்று ஒரு சேனலை துவக்க முயற்சி செய்யவில்லை.
    பெரிய அளவில் மக்களை சென்று அடைய மக்கள் எந்த ஊடகங்களை பார்க்கின்றார்களோ அதன் மூலமாக மக்களை இன்னும் அதிக அளவில் சென்று அடையலாமே!
    நன்றி!

  4. ஊடகங்கள் மூலம் பெரும்பாலும் திரைப்படம் சம்பந்தமான காட்சிகளையே பெரும்பான்மையாக காட்டி தமிழர்களை போதையில் ஆழ்த்தி வைத்து விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்கும் வழக்கம் இருக்கும் வரை பி ஜே பிக்கு என்று தனி தொலைகாட்சி சாத்தியமில்லை . டாஸ்மாக் சினிமா கிரிக்கட் போதையிலிருந்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது தான் அவசியமாக உள்ளது. ஸ்ரீ கோபால்ஜி அவர்களும் அதைத்தான் வற்புறுத்தி உழைத்து வருகிறார். அது வரை தஞ்சை ஸ்ரீ கோபாலன் அவர்கள் சொல்வது ஓரளவுக்கு சரி. அதே சமயம் பி ஜே பிக்கு வோட்டு அளித்தால் வோட்டு சதவீதத்தின் மூலம் விழிப்புணர்ச்சி எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

  5. Pingback: Indli.com
  6. நானும் சந்திரமௌலி கட்சிதான். என் தொகுதியில் ப.ஜ.க நின்றால் என்னுடைய வாக்குகள் ப.ஜ.கவுக்குத்தான். என்னைச் அர்ர்ந்தவர்கலையும் அவ்வாறே வாக்களிக்க வேண்டுவேன். விரோதியும் வேண்டாம். துரோகியும் வேண்டாம்

  7. 1990 களில் ஸ்ரீ கோபால்ஜி மற்றும் ஸ்ரீ ஸ்தாணுலிங்க நாடார் இவர்களிருவரும் ராம லக்ஷ்மணர்கள் போல் தமிழகமெங்கும் திக்விஜயம் செய்து பட்டி தொட்டியெங்கும் ஆப்ரஹாமிய மதங்களால் ஹிந்துக்களுக்கும் தேச்த்திற்கும் விளையும் தீமைகளை விவரித்து ஹிந்து விழிப்புணர்வு உண்டாக்கினர். ஸ்ரீ ஸ்தாணுலிங்க நாடார் அவர்களின் மறைவிற்கு பிறகு கொலைவெறித்தாக்குதல் மற்றும் பற்பல சோதனைகளை தனியே எதிர்கொண்ட ஸ்ரீ கோபால்ஜி கண்ணன் சொன்ன கர்மயோகிக்கு உதாரணமாவார். அவர் தம் கருத்துக்கு செவி சாய்ப்பது ஹிந்துக்களுக்கும் தேசத்திற்கும் நன்று.

  8. ப.ஜா.க ஆட்சிக்கு வரவேண்டும்…….. ஹ்மம்ம்மம்ம்ம்ம் ……………………. கனவுகாணும் உரிமை எல்லோருக்கும் உண்டு அது ராமகோபாலனுக்கு மட்டும் என்ன விதி விலக்கா…

  9. ஐயா உண்மை உரைப்போன் அவர்களே,

    இந்த தேர்தலில் ராமகோபாலன் காண்பது கனவாக இருக்கலாம். ஆனால் விரைவில் நனவாகும். ஏனெனில் , சில அரசியல் இயக்கங்கள் தமிழ் கற்பு குஷ்பு மீது , அவர் ஒரு பெண் என்றும் பாராது தமிழகம் முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து , (மேட்டுரிலோ வேறு ஏதோ ஒரு ஊரிலோ அவர் மீது இவர்கள் தொடுத்த ஒரு வழக்கு இன்னமும் நிலுவையில் இருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி கூறுகிறது.) அவரை ஊர் ஊராக அலைய விட்டவர்கள் , இன்று அவர் சார்ந்துள்ள கட்சியுடன் கூட்டணி சேர்ந்து , அவரும் இவர்களுக்கு ஒட்டு போடுமாறு கேட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    மேலும் திமுக கூட்டணிக்கு ஒட்டு போட்டால் என்னை போல குழந்தை பிறக்கும் என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார். இதனை , இந்த அரிய காட்சியை அவர்கள் குடும்ப தொலை காட்சி வேறு பலமுறை செய்திகளிலும் ஒளிபரப்பியது. இந்த கேடுகெட்ட கூட்டணியே வெற்றி கனவு காணும்போது, ராமகோபாலன் அவர்கள் கனவு காண்பது தவறல்ல.

    காங்கிரசுடன் கூட்டு சேர்ந்துகொள்ளுவதற்கு முன்பு , ராஜினாமா கடிதம் எடுத்துக்கொண்டு டெல்லிக்கு போவதாக சொல்லி நாடகம் ஆடி , ஷோ காண்பித்து , பிறகு சோனியா காலில் விழுந்து , தங்க தட்டில் அறுபத்து மூணு இடங்களை தாரை வார்த்தவர்கள் , வெற்றி கனவு காணும்போது , மற்றவர்கள் எவர் வேண்டுமானாலும் கனவு காண்பது தவறல்ல என்று ஆகி விட்டது.

    பாஜக ஓரிரு இடங்களில் வென்றாலே அதிசயம் தான். ஆனால் பாஜக வுக்கு ஒட்டு போட்டால் , எங்கே காங்கிரசு கூட்டணி வென்றுவிடுமோ என்ற கணக்கில் , பாஜக ஆதரவாளர்கள் அனைவரும் பெரும்பாலான தொகுதிகளில் ( கோவை, குமரி, நெல்லை மாவட்டங்களை தவிர) எம்ஜியார் கட்சி கூட்டணிக்கு ஒட்டு போடும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.

    எது எப்படி இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரசுக்கு இந்த தேர்தலில் எல்லோரும் சேர்ந்து சங்கு ஊதப்போகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகி விட்டது.

    ஊதுமினோ சங்கொலி என்று தமிழன் இனிப்பு வழங்கி மகிழப்போகிறான். இலங்கை தமிழரை, அதிலும் ஒன்றரை லட்சம் சிவிலியன்களை , இலங்கை சிங்கள கும்பலுக்கு ஆயுதம் வழங்கி, கொலை செய்ய உதவிய , காங்கிரசும், அதை மறைமுகமாக கூட எதிர்க்காமல் காலம் தள்ளிய ஆளும் திமுகவும் , இந்த தேர்தலில் நல்ல விலை கொடுக்க போகிறார்கள். ஆம் இந்த தேர்தலில் , படுகொலை செய்யப்பட தமிழர்களின் ஆவிகள் தான் ஒட்டுபோடப்போகின்றன.

  10. DURING NDA GOVERNMENT, BJP HEADED VAJPAYEE GOVERNMENT NEVER OPPRESSED THE LTTE OR TAMIL RIGHTS IN SRILANKA. VAJPAYEE SAID IN COLOMBO FOR AN INTERVIEW THAT ‘ TAMILIANS FIGHT FOR THE CAUSE OF FREEDOM. AFTERALL THEY ARE HINDUS AND WE SUPPORT THEIR CAUSES ”. HENCE BJP WAS DEPENDABLE FRIENDS OF SRILANKAN TAMILS AND EVEN VAIKOO, NEDUMARAN AGREED WITH THIS AND NEVER TALKED AGAINST BJP AND MAINTAIN GOOD RELATIONSHIP WITH BJP UNOFFICIALLY.
    WHEN MALAYSIAN HINDUS ASSOCIATION CAME TO INDIA, KARUNANIDHI AND JAYALALITHA RAN AWAY FOR COVER AVODING SUPPORT TO MALAYSIAN TAMILS SINCE THEY USE THE WORD ” MALAYSIAN HINDUS ASSOCIATION” BUT ONLY BJP LEADERS MET THEM AND SUPPORTED THEIR CAUSES BY RAISING THE ISSUE IN PARLIMENT WHICH FORCED MMS GOVT TO TAKE UP STRONG PROTEST WITH MALAYSIAN GOVERNMENT.
    BUT BJP NEVER DO POLITICS ON SUCH MATTER LIKE DMK/AIADMK LEADERS AND THAT IS WHY THEY ARE STILL SMALL AND NOT HAVING FOOTHOLD IN T N STATE WHOSE VOTERS ARE ATTRACTED TOWARDS CINE ACTRESS AND CINE ACTORS SPEECH. TILL THIS CULTURE IS PRACTICED IN T N , I AM AFRAID T N STATE WILL BE IN THE HANDS OF CHEAPERS LIKE DMK AND AIADMK.

  11. One basic question, during this time of Economic recover & double digit inflation, How come both the Dravidian parties are able to promise so many freebies….?

    கலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *