Monthly Archives: April 2011

அரசியல், நிகழ்வுகள், நேர்காணல்

தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

எதிரிக்கும் வேண்டாம்; துரோகிக்கும் வேண்டாம்... ஹிந்துக்களின் வாக்கு பாஜகவுக்கே! -ராம.கோபாலன் நிறுவனர், ஹிந்து முன்னணி.

மேலும் »

அரசியல், சமூகம், நிகழ்வுகள்

அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்

அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்

ஆழத்தில் இருக்கும் பெட்டியை அவரால் தான் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.... ஊழல் செய்த நபர்களை விட்டுவிட்டு வெறும் ஊழலுக்கு எதிராக எனும் வசதியான நிலைப்பாட்டை உருவாக்குவதை பார்க்கிறேன்...எல்லா பெரும்போராட்டங்களுக்கு பிண்ணணியிலும் ஒரு திரைமறைவு ஆட்டம் இருக்கத்தான் செய்யும்...சிவில் சொசைட்டி பஜனை கேட்கும் இடத்திலெல்லாம் உணர்ச்சி வசப்படாமல் உன்னிப்பாக அதன் போக்கை கவனிப்பது நல்லது..

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 10

ரமணரின் கீதாசாரம் – 10

ஒன்று கிடைக்க வேண்டும் அல்லது சேர வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே; ஒன்று கிடைக்க வேண்டாம் என்பதும் ஆசையே. அப்படி அது இருதரப்பட்டது போலவே, சேரவேண்டியது சேராவிட்டாலும், சேர வேண்டாதது சேர்ந்து விட்டாலும் வருவது கோபமே. சலனமற்ற மனமாகிய நீர்பரப்பில் தோன்றும் குமிழிகள் போல இருப்பதால், அவை எழாத இடத்தில் மனமும் அடங்கியே இருக்கும். சாதகனைப் பொறுத்தவரை அவனது ஒவ்வொரு எண்ணமும் அடங்க அடங்க அவனுக்கும் மன அமைதி கிடைக்கும்

மேலும் »

புத்தக விமர்சனம், வரலாறு, வைணவம்

ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2

April 8, 2011
-
ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2

கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மாண்டவர்களின் நினைவுச் சின்னம் இங்கே பதிவாகியிருக்கிறது, எந்தப் புரட்சி கோஷங்களும் இல்லாமல்...நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்கிறார் முதலியாண்டான். இங்கு பிராமணர் - பிராமணரல்லாதார் பற்றிய ஒரு 11ம் நூற்றாண்டு உரையாடல் பதிவு செய்யப் பட்டுள்ளதைக் காண்கிறோம்... திருவரங்கம் கோயில் விஷயத்தில் அத்தகையதொரு உணர்வினை உண்டாக்குவதில் கோயிலொழுகு நூலின் பங்களிப்பு மகத்தானது..

மேலும் »

இந்து மத மேன்மை, சமூகம்

மலருங்கள் மடாதிபதிகளே…

மலருங்கள் மடாதிபதிகளே…

பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை?

மேலும் »

அனுபவம், வரலாறு, வைணவம்

ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1

April 7, 2011
-
ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1

கருங்கல் தூண்களை எப்போது கிரானைட் போட்டு மறைத்தார்கள், அந்த மகா ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் கூட வந்த பெரியவர்... அரங்கனைப் பார்த்தவுடன் அதில் மூழ்கி நாம் திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் தத்தளித்து விடுவோம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க இந்தத் தூண் பற்றுதலாம்... ஆறாயிரத்துச் சொச்சம் பக்கங்களில், ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார்.

மேலும் »

இலக்கியம், கதைகள்

சுமைதாங்கி [சிறுகதை]

சுமைதாங்கி [சிறுகதை]

என் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான். நாட்டார்த் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்... நீங்க 'சுடலை மோட்சம்' சிறுகதை படிச்சிருக்கீங்கதானே?... ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம்...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

தேர்தல் களம்:  கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெறும் தலைகளிடையே, இரு கழகங்களின் பணபலத்திடையே, கொள்கையற்ற இரு கூட்டணிகளிடையே போராடுவது பத்மவியூகத்தில் அபிமன்யூ போராடுவது போன்றது தான். பாரத அபிமன்யூவுக்கு உதவிகள் தடுக்கப்பட்டன. ஆனால், தமிழக பாஜகவின் உதவிக்கு வந்திருக்கிறது பிற மாநில முதல்வர்கள் படை. எனவே, இந்த அபிமன்யூ களத்தில் சாதித்துக் காட்டுவான்.

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

1967 தேர்தல் வந்தது. பிடித்தது தமிழ் நாட்டுக்குச் சனியன். இல்லாத பொய், பித்தலாட்டங்கள். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள். எதிரிகள் மீது வசைமாறி பொழிதல், எதிர்கட்சிக் கூட்டங்களில் வன்முறை, வெறியாட்டம். கருணாநிதி உட்பட சிலர் அடுக்கு மொழியிலும், அலங்காரமாகவும் பேசினாலும், கண்ணியக் குறைவாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 9

ரமணரின் கீதாசாரம் – 9

சாதாரணமாக அருச்சுனன் போன்ற வீரர்கள் போர்க்களத்தில் புகுந்தால் பகைவர்களை வென்று வெற்றியைக் குவிப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் இங்கோ அருச்சுனனுக்கு ஏற்பட்ட நிலை அவனது மன சஞ்சலத்தினால் ஏற்பட்டுள்ளது. முன்னால் நிற்பவர்களைப் பகைவர்களாகப் பார்க்காது தன் சுற்றத்தினர்களாகப் பார்த்ததால் வந்த விளைவு

மேலும் »