அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?

sai-baba3

Help Ever Hurt Never…  Love All Serve All என்ற தாரக மந்திரம் என்னை அவர்பால் ஈர்த்தது. Unconditional Love என்பதை அவரை தூரத்தில் நின்று பார்த்தபோது உணர்ந்தேன்.

இது அவரிடமிருந்தா அல்லது அங்கே குழுமியிருந்த பக்தர்களின் இதய துடிப்பிலிருந்தா என எனக்கு சொல்லத் தெரியவில்லை.

sai-baba-5

பசியோடிருப்பவனுக்கு ஆன்மிகம் எதற்கு? அவனுக்கு உணவைத் தா.

ஏழைக்கு கைத்தொழிலைக் கற்றுத் தா. அது அவனுக்கு உணவும் அளிக்கும்; சமூகத்தில் அந்தஸ்த்தும் அளிக்கும்.

கடவுளுக்கு ஏது தீட்டும் சடங்கும்?

கடவுளுக்கு ஏது மதமும் சாதியும்?

ஒரு இந்து நல்ல இந்து ஆகவும் ஒரு இஸ்லாமியன் நல்ல இஸ்லாமியனாகவும் ஒரு கிறித்தவன் நல்ல கிறித்தவனாகவும் இருக்கவே நான் விரும்புகிறேன்.

கடவுளை தேடி ஏன் அலைகிறீர்கள்? உங்களுள் இருக்கும் கடவுளைக் கண்டுக்கொள்ளுங்கள்

இவையெல்லாம் சாய் பாபாவின் அருளுரைகள்.

அவர் ”என்னிடம் வா உன் துயரங்களை தீர்க்கிறேன்” என என்னிடம் சொல்லவில்லை. என்னைப் பார்க்க இவ்வளவு பணம் தா என என்னிடம் கேட்கவில்லை. அவர் மீண்டும் மீண்டும் சொன்னதெல்லாம் ”Help Ever Hurt Never… Love All Serve All” என்ற வாசகங்கள் மட்டுமே. இவை மட்டுமே என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்பால் ஈர்த்தது. 
 
balavikasஅவரின் ‘பால விகாஸ்’ என்ற இயக்கம் இதிகாசம் மற்றும் இந்திய தேசப்பற்றை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தது. இதனால் உலகின் மூலைமுடுக்குகளில் உள்ள இந்தியக் குழந்தைகளுக்குக்கூட இந்துமத அறிவும் பக்தியும் பெற வாய்ப்புக் கிடைத்தது. இந்த சேவை செய்யும் பாக்கியம் சில வருடங்கள் என் மனைவிக்கும் அதனால் எனக்கும் கிடைத்தது. அந்தச் சின்னஞ்சிறு அராபிய கிராமத்தில் இந்தியக் குழந்தைகளுக்கு இதிகாசங்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொடுத்து குழந்தைகளின் அன்பும் அதனால் அவர் பெற்றோர்களின் நட்பும் எங்களுக்குக் கிடைத்தது. இந்த அருமையான சேவைக்குப் பின்னால் சாய் பாபா என்ற பெரும் சக்தி எங்களை வழிநடத்தியது என்று சொல்லிக் கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

புட்டபர்த்தி மருத்துவமனையில் ஏழைப் பெண்களுக்கு பிரசவ வார்டில் சேவை செய்த என் தாயார், “அங்கே கூலிக்கு மாரடிக்கும் டாக்டர்களோ நர்சுகளோ இல்லை. பிறக்கும் குழந்தைகள் சேவை செய்யும் நல்ல உள்ளங்களின் கைகளில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. அத்தகைய குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல குடிமகன்களாக உருவாகும். உயர்தர சிகிச்சையை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, ஓர் அரசாங்கத்தால் முடியாததை, ஒரு தனிமனிதனாகச் செய்துகாட்டிய சாய் பாபா மனித உருவில் வாழ்ந்த தெய்வம்!” என்றார்.

சில நாள்களுக்குமுன் ஒரு கல்யாண விருந்தில் என் தங்கையை வணங்கிய ஒரு பெண்மணி, “தாங்கள் சேவை செய்த வார்டில் என் மகனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை வளர்ந்து இன்று பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான். உங்கள் சேவைக்கும் ஏழைகளின் எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய சாய் பாபாவிற்கும் எங்கள் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டிருக்கிறோம்” என்றிருக்கிறார்.

prashanti-nilayam
 

சாய் பாபாவின் தன்னலமில்லா சேவை இவ்வுலகில் பலகோடி மக்களை அணுகியுள்ளது.

சாய் பாபா என்ற நம்பிக்கை, விரக்தியின் விளிம்பில் இருந்த கோடானுகோடி பக்தர்களை மீட்டிருக்கிறது.

அப்படி மீண்டவர்களின் தன்னம்பிக்கை, நோய்களைக் குணப்படுத்தியிருக்கிறது. அறிவுக்கண்ணைத் திறந்திருக்கிறது. ஏழ்மையை அகற்றியிருக்கிறது.

தண்ணீர் இல்லாத காட்டிற்கு தண்ணீர் அளித்திருக்கிறது. சென்னை நகரத்தின் தாகம் தணித்திருக்கிறது.

இதே சக்தி, கோடிக்கணக்கான குடும்பங்களை சாதி, மத வேறுபாடின்றி சாய் குடும்பத்தில் இணைத்தது. அன்பு என்ற கடல் விரிந்தது, இந்தியாவில் இந்து மதத்தினர் ஒரு குருவைத் தேடி போவதில் ஆச்சரியமில்லை.. ஆனால் உலகில் இந்துமத வாசனை இல்லாத நாடுகளிலிருந்தும் (உதாரணத்திற்கு ஈரான், சவூதி அரேபியா, ஸ்லோவேனியா, நார்வே, குரேஷியா, சில ஆப்ரிக்க நாடுகள்) மக்களை இவர்பால் ஈர்த்தது, இவரின் பொங்கி வழியும் கருணையும் அன்பும் மட்டுமே.

அவருடைய பஜனைப் பாடல்கள் இறைவனின் நாமங்களைத் துதித்துப் பாடி கோடானு கோடி உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டது. இந்த பஜனைப் பாடல்களை உலகில் சில நூறு பேர்களுக்கு அன்பளிப்பாக அளித்து அவர்களின் அன்பை நான் பெற்றுள்ளேன். உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் இந்த பஜனைப் பாடல்கள் என்வீட்டிலும் காரிலும் எப்பொழுதும் ஒலிக்கும். என்னை மிகவும் கவர்ந்த பாடலின் தமிழாக்கம் இதோ…

 

sai-baba4கோவிந்தனென்றுசொல்,
கோபலனென்றுசொல்
ராமனென்றோ ஹரியென்றோ சொல்,
அல்லா இயேசு நானக்
ஜொரஷ்டர் புத்தர் மேலும்
மகாவீரரென்ற்றுசொல்
எந்தப் பெயரானாலும் இவை
வாழ்வின் அடித்தளம் அவை
பேரின்பத்திற்கான கதவுகளைத் திறக்கும்
எந்தப் பெயர் வேண்டுமோ
அந்தப்பெயர் சொல்
ஆனால்
அன்போடு சொல் பக்தியோடு சொல்..

 
பாபா இன்று நம்மிடையே மனித உருவில் இல்லை. எங்கள் இதயத்தில் அந்த அன்புத் தெய்வம் என்றும் வாழ்கிறார்.

பாபா உனக்கேது மரணம்…

இருந்தாலும் கண்ணீருடன்….நாங்கள்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , ,

 

30 மறுமொழிகள் அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?

 1. chandramoulee on April 25, 2011 at 9:12 pm

  உண்மைதான் சாய்பாபாவிற்கு மரணம் ஏது ?

 2. களிமிகு கணபதி on April 25, 2011 at 10:05 pm

  கால்கரி சிவா இதயபூர்வமாக அஞ்சலி செய்து இருக்கிறார். உண்மையான துக்கம் நேர்மையாக வெளிப்பட்டுள்ளது.

  எனக்குத் தெரிந்த ஒரு நாயர் சாதி கணவனும், ஐயங்கார் பெண்ணும் சாயிபாபாவின் பக்தர்களாக அறிமுகமாகிக் கலப்புத் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் மூலம் அவரை அறிந்த உறவினர்களில் கணவன் மனைவி இருவரும் பாபாவினால் கவரப்பட்டு அவர் சொன்ன வழியில் சமூக சேவை செய்ய குழந்தை பெறாத பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ முடிவு செய்து, அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சேரிகளுக்குச் சென்று இலவசமாக ட்யூஷன் சொல்லித் தருகிறார்கள். சாயிபாபாவின் பள்ளிகளில் அவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் உண்டு.

  இந்து மதத்தில் ஆன்மீகப் பெரியவர்களால் சமூகப் பொறுப்பு தனிமனிதரிடம் அதிகமாவதைத்தான் நான் பெரும்பாலும் பார்க்கிறேன்.

  கொள்கை சார்ந்த பரப்புரைகளை மீறியே உண்மை இருக்கிறது. அந்த உண்மையை நமக்கு அறிவிக்கவே சிலரின் வாழ்க்கை அமைகிறது. சாயிபாபா அவர்களில் ஒருவர்.

 3. எனக்கு பாபா மீது நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால் அரசாங்கங்கள் செய்ய முடியாததை அவர் செய்தார். எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க செய்தார். அதற்காகவே அவரை வணங்கலாம். ஆத்மார்த்தமான நல்ல அஞ்சலி. நன்றி கால்கரி சிவா அவர்களே.

 4. சீனு on April 26, 2011 at 11:37 am

  எனக்கு சாய்பாபா மீது நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் அவரை நம்புபவர்களின் துக்கத்தில் பங்கு கொள்கிறேன்.

 5. பா. ரெங்கதுரை on April 26, 2011 at 4:26 pm

  பாபா அவர்கள் பலரையும் பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தியது மட்டுமல்லாமல், திறமை கொண்டவர்களை ஊக்குவித்து தொழில்முனைவோர்களாகவும் மாற்றியுள்ளார். எனக்குத் தெரிந்து, தமிழக பல்கலைக்கழகம் ஒன்றில் வீழலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த திறமைமிக்க பேராசிரியர் ஒருவரை பாபா ஊக்குவித்ததன் காரணமாக அவர் விருப்ப ஓய்வு பெற்று, காற்றின் ஈரப்பதத்திலிருந்து குடிநீர் தயாரிக்கும் புதிய தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கி அதை வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தியும் வருகிறார்.

 6. அருண்பிரபு on April 26, 2011 at 10:03 pm

  ஸத்ய ஸாயி பாபா கடவுளின் அவதாரம் என்ற கோட்பாடு விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் அவர் செய்த நற்செயல்கள் அவரது நன்மொழிகள் பலருக்கும் நன்மை பயத்துள்ளன. ஆகவே அவர் போற்றத்தக்கவர். மதங்களை ஒருங்கிணைத்து பல நதிகள் சங்கமிக்கும் கடலைக் கடவுளுக்கும் நதிகளை மதங்களுக்கும் உருவகப்படுத்தி மதசார்பின்மையை ஒத்த ஒரு பிம்பத்தை உருவாக்கினாலும், பிற மதங்கள் உயர்ந்தவை சநாதனம் எப்படியோ போகிறது என்று ஊரோடு ஒத்து வாழாமல், சநாதன தர்மத்தை ஓங்கிப் பிடித்து அதன் பெருமைகளை உலகறியச் செய்த ஒரு நல்லவர் என்ற முறையில் அவர் வணக்கத்துக்குரியவர்.

 7. பா.ரெங்கதுரை நீங்கள் சொல்லும் பேராசிரியரின் அமைப்பின் இணையதளம் இதுதானே?

  http://akashgangaindia.com/

 8. ஜடாயு on April 27, 2011 at 8:50 am

  சா’ந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்த:
  வஸந்தவத் லோகஹிதம் சரந்த: (விவேக சூடாமணி)

  அமைதியும் பெருமையும் உடைய சாதுக்கள், செல்லுமிடமெல்லாம் இன்பத்தைப் பரப்பும் வசந்தத்தைப் போல உலக நன்மைக்காகவே உலவுகிறார்கள்.

  என்ற வாக்கிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் சத்ய சாய்பாபா. லட்சக் கணக்கான உள்ளங்களில் அன்பு, கருணை, தொண்டு ஆகிய மானுடப் பண்புகளை ஏற்றி வைத்தார். அதுவே மாபெரும் சேவைப் பணிகளாக மலர்ந்தது. அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

  இதயபூர்வமானதொரு அஞ்சலி, கால்கரி சிவா. நன்றி.

 9. R Balaji on April 27, 2011 at 10:00 am

  சாதுக்கள் எவ்வாறு சமூகத்தில் வாழ்வார்கள் என்பதற்கு இலக்கணம் ஒன்றும் இல்லை.

  சுவாமி சிவானந்தா கூறும்பொழுது, ஆன்ம பலம் கொண்ட ஒரு சாது
  யோகம் செய்கையில் அந்த ஆன்ம பலம் அந்த பிராந்தியத்தின் ஆன்ம
  சக்தியை பலப்படுத்தும் என்பார்.

  கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவிற்கு வந்தவுடன் ஒரு பொதுக்கருத்தை
  உண்டாக்கி விட்டார்கள். சமூக சேவை செய்தால்தான் அவர் சாது
  இல்லையேல் அவரால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. இது நம்
  மரபுக்கு உகந்தது அல்ல. சில சாதுக்கள் சமூக தொண்டு செய்வார்கள்.
  சிலர் தன்னிடம் வரும் சிஷ்யர்களுக்கு ஆன்ம சக்தியை வென்றெடுக்க
  உதவுவார்கள்.

  இதுதான் இப்படித்தான் என்ற வரையரையில் சாதுக்களை அடக்க
  முடியாது. சத்ய சாய்பாபா போன்றவரானாலும் சரி, உலகிற்கே தெரியாமல்
  ஒரு மூலையில் யோகம் செய்தாலும் சரி, இருவராலும் சேர்த்துதான் நம்
  மரபு காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது.

 10. Kabeeranban on April 27, 2011 at 10:13 am

  எனக்கு மிகவும் பிடித்த பஜன் தாங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் ‘ கோவிந்து போலோ கோபாலு போலோ’ பாடல்தான். ஏசுவை ஏசியவர்களும் அவர் காலத்தில் உண்டு. காலப்போக்கில் அவைகள் மறைந்து விடும். கடைசியில் அவர்கள் விட்டுச்செல்லும் அன்பின் மொழி ஒன்றே நிலைக்கும்.

 11. Rama on April 27, 2011 at 10:37 am

  Anjali to Shri Satya Sai Baba.
  I beg to differ in some points made by the author, I presume, quoting Sai Baba.
  “ஒரு இந்து நல்ல இந்து ஆகவும் ஒரு இஸ்லாமியன் நல்ல இஸ்லாமியனாகவும் ஒரு கிறித்தவன் நல்ல கிறித்தவனாகவும் இருக்கவே நான் விரும்புகிறேன். ”

  If a Christian practices TRUE CHRISTIANITY as prescribed by Bible and If a Muslim practices true Islam as written in Koran, there will only be war , death and destruction of humanity.

 12. ஜடாயு on April 27, 2011 at 1:01 pm

  // சாதுக்கள் எவ்வாறு சமூகத்தில் வாழ்வார்கள் என்பதற்கு இலக்கணம் ஒன்றும் இல்லை. //

  உண்மை தான்.

  அந்த சுலோகத்தை கவனியுங்கள். வசந்தம் ஏதேனும் செய்கிறதா என்ன? அது இருப்பதே உலகத்திற்கு இன்பமளிக்கிறது இல்லையா? அது போலத் தான் சாதுக்கள் உலகில் வாழ்வதே உலக நன்மை தான். ‘லோகஹிதம் *சரந்தி* என்று கூறுகிறார். குர்வந்தி என்று கூறவில்லை.

  // கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவிற்கு வந்தவுடன் ஒரு பொதுக்கருத்தை
  உண்டாக்கி விட்டார்கள். சமூக சேவை செய்தால்தான் அவர் சாது
  இல்லையேல் அவரால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. இது நம்
  மரபுக்கு உகந்தது அல்ல. //

  இல்லை, சமூகசேவையை கிறிஸ்தவ மிஷனரிகள் தான் கற்றுக் கொடுத்தார்கள் என்று நம்மில் பலர் நம்புவதே கூட அவர்களது பிரசாரத்தின் விளைவு தான். இந்துமதத்திலும் மிகப் பெரும் சமூகசேவைப் பாரம்பரியம் உள்ளது.

  யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
  யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
  யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி

  என்றூ எல்லா உயிர்களையும் அடக்கியது அது. நமது வரலாற்றில் மன்னர்களும், சமயாசாரியர்களும், ஊர்த்தலைவர்களும் ஏராளமான மருத்துவ சாலைகளையும், ஏரி குளங்களையும், அன்ன சத்திரங்களையும், பஞ்ச கால நிவாரணங்களையும் செய்துள்ளார்கள். அதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

  // சில சாதுக்கள் சமூக தொண்டு செய்வார்கள். சிலர் தன்னிடம் வரும் சிஷ்யர்களுக்கு ஆன்ம சக்தியை வென்றெடுக்க உதவுவார்கள். //

  அதே சுலோகத்தின் அடுத்த இரண்டு அடிகளில் அந்த மார்க்கத்தையும் சொல்லிவிடுகிறார்.

  தீர்ணா: ஸ்வயம் பீமபவார்ணவம் ஜனான்
  அஹேதுனா அன்யானபி தாரயந்த: ||

  ஆசைகளும் நோக்கங்களும் ஏதுமின்றி, பயங்கரமான பிறவிக் கடலை தாங்களும் கடந்து. பிறரையும் கடத்துகிறார்கள்.

  எனவே இரண்டு மார்க்கங்களையும் சார்ந்த சாதுக்களையும் நாம் போற்ற வேண்டும். ஒருவரைப் போற்றுவது என்பது மற்றவரைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. இந்த இணையதளத்தில் ரமணரின் கீதாசாரமும் வருகிறது, சத்ய சாய்பாபா அஞ்சலியும் வருகிறது என்பதைக் கவனியுங்கள். அதுவே நம் வழி.

 13. Ravi on April 27, 2011 at 2:49 pm

  பல இந்துக்கள் மதம் மாறாமல் இருந்தததற்கு ஸ்ரீ சாய்பாபா இம் காரணம்.

  சாதி சமய பேதமின்றி பெரும்பாலும் ஹிந்டுக்களுக்கவே உழைத்தார்

  அவரது ஆசி அனைவர்க்கும் உரித்தாகுக.

  RAVI

 14. kargil_jay on April 27, 2011 at 5:55 pm

  அருமையான கட்டுரை…. எழுதிய ஆசிரியருக்கு நன்றி..

  மக்கள் சேவையே மகேசன் சேவை என்று செய்த நடமாடிய தெய்வம்.. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்னும் பொது கூடவே ஆரோக்கியத்துக்கு மருத்துவமும், வாழ்வில் நம்பிக்கையும் கொடுப்பவரை வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்?

  அரவிந்தன் நீலகண்டன், சீனு,

  உங்கள் இருவரையும் யாரும் வந்து “உங்களுக்கு சாய்பாபா மேல் நம்பிக்கை இருக்கிறதுதானே?” எனக் கேட்கவில்லை.. நீங்களும் அவர் பக்தர்களின் துக்கத்தில் இன்டர்நெட் மூலமாகப் “பங்கு???” கொள்ளுங்கள் என்றும் கோரவில்லை.

 15. raja on April 28, 2011 at 6:16 am

  ஒரு முஸ்லீம் அன்பர் சாய்பாபாவுக்கு நோய் வரலாமா என்று தனது வலைப்புவில் கட்டுரை எழுதியிருக்கிறார். முகமது அலி இறந்தது வியாதியினால்தான். முகமது நபிக்கு நோய் வரலாமா என்று இவர் ஆராயவில்லை. பிற மதங்களைக் குறைகூறுமுன் தங்களிடம் குறை இருக்கிறதா என்றுஎண்ணிப்பார்க்க வேண்டும். சாய்பாபாவினால் மக்கள் பலனடைந்துள்ளார்களே தவிர யாரும் இறந்தது இல்லை. ஆனால் முகமது நபியின் வரலாற்றை படித்துப் பாருங்கள். போர், போர் என்று தன் மதத்தைப் பரப்ப வாளைப்பிடித்துக் கொண்டு கொலைவெறியோடு மக்களைக் கொன்று குவித்திருக்கிறார். இவரை மகான் என்று போற்றுகிறார்கள். உலகில் வேறு எந்த மத மகான்களும் இவரைப்போல் கொலையாளி இல்லை. இஸ்லாம் வன்முறையை நம்பியிருப்பதற்கு காரணமே அதனைத் தோற்றுவித்தவரின் வழிநடத்தல்தான். உலகில் அமைதி தவள வேண்டும் என்றால் இஸ்லாம் இருக்கக்கூடாது. ஆனால் முட்டாள்கள் இருக்கும்வரை அது நடக்காது.

 16. Ravi on April 28, 2011 at 4:16 pm

  I agree with Kargil Jay. Persons on high esteem like Aravindan Neelakandan should not bring his personal opinions in the issues of highly respected Hindu sanyasni / Social Worker etc.,

  THis will lead to animacity within our own community.

  A RAVI

 17. kargil_jay on April 28, 2011 at 9:05 pm

  //raja
  28 April 2011 at 6:16 am
  ஒரு முஸ்லீம் அன்பர் சாய்பாபாவுக்கு நோய் வரலாமா என்று தனது வலைப்புவில் கட்டுரை எழுதியிருக்கிறார். முகமது அலி இறந்தது வியாதியினால்தான். முகமது நபிக்கு நோய் வரலாமா என்று இவர் ஆராயவில்லை.
  //

  இதற்குக் காரணம் இஸ்லாமியர் ஆன்மாவையும் உடலையும் ஒன்றாகக் கருதுவதே.. பொய்யான உடலை மெய்யென்றழைப்பதே அவர்களின் குழப்பத்துக்கு காரணம்.. இதனால்தான் அவர்களால் அல்லாவுக்கு ஒரு உருவத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.. நமக்கோ பாலமுருகனில் இருந்து பாபா வரை எல்லாம் பரம்பொருளின் உருவம்தான்..

  பாபாவின் ஆன்மாவிற்கு நோய் வருமா? உடலென்னும் சட்டை நைந்து கிழிந்தால் உண்மைக்கென்ன துன்பம்?

  ஹிந்துக்கள் பெண்களைப் புனிதமாக கருதுகிறார்கள்..ஆனால் எல்லாவற்றையும் துறப்பதே வீடு பேறு என்கிறார்கள்
  இஸ்லாமியர் பெண்களைப் பாவம், ஹாரம் என்கின்றார்கள்.. ஆனால் சேர்த்துக்கொள்வதே வாழ்க்கை என்கிறார்கள்..

  தேவையும், ஆசையும், உடலும் உயிரும் அவர்களுக்கு புரியாததுதான்..

 18. T.Mayoorakiri sharma on April 29, 2011 at 6:25 am

  சத்திய சிவ சுந்தரரான சாயி மகானைப் பார்த்து வியக்கிறோம். நானும் தனிப்பட்ட முறையில் சத்தியசாயி வழிபாட்டில் பெரிதும் ஈடுபாடு கொள்ளவில்லை என்றாலும் அவர் தம் செய்கைகளைப் பார்க்கிற பொது அவரை ‘கடவுள்’ அல்லது இறைமகன் என்று சொல்லி வழிபாடாற்றுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

  மாபெரும் சமூக சேவகரான அந்த நைமிஷ்டிக ப்ரம்மச்சாரி பாபாவின் திருவடிகளை வணங்கி அவர் தம் செய்கையும் வாழ்வியலும் என்றென்றும் தொடர வேண்டுகிறேன்.

 19. அருள் on April 29, 2011 at 1:38 pm

  சாய் பாபா – ஒரு மாறுபட்ட அனுபவம்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

 20. Sarang on April 29, 2011 at 4:40 pm

  //
  agree with Kargil Jay. Persons on high esteem like Aravindan Neelakandan should not bring his personal opinions in the issues of highly respected Hindu sanyasni / Social Worker etc.,
  //

  i guess, If he does not someone will pick what he has written here and misquote him somewhere else. So this becomes a habitual excercise to put such disclaimers.

 21. அமரன் on April 29, 2011 at 5:14 pm

  ஸ்ரீ சத்திய சாயி பாபா உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தவர். சித்து விளையாட்டை சமீப காலத்தில் அதிக அளவில் செய்து காட்டிய ஞானி அவர்.சந்நியாசிகளுக்கு பலவிதமான சக்திகள் உள்ளது. சிலர் பயன் படுத்துகிறாகள் சிலர் பயன் படுத்துவது இல்லை.
  நாத்திகரின் பார்வையில் இந்தியத் துறவிகள் எப்போழ்தும் சர்ச்சையில் சிக்கிகொள்கிறாகள்.சந்தேகக் கண்ணோடு பார்க்கப் படுகிறார்கள். சாயி பாபாவும் விதிவிலக்கல்ல.அதையும் மீறி பல கோடி பேர்களுக்கு ஆன்மிகத் துணையாக இருந்தார்.
  அவர் ஹிந்து மதத்தின் ஒரு அறத் தூண், நிர்கதியற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார், இதை விமர்சிகராலும் மறுக்க முடியாது.

 22. kuththu on April 29, 2011 at 7:03 pm

  கார்கில் ஜெய் அவர்களுக்கு
  //ஒரு முஸ்லீம் அன்பர் சாய்பாபாவுக்கு நோய் வரலாமா என்று தனது வலைப்புவில் கட்டுரை எழுதியிருக்கிறார். முகமது அலி இறந்தது வியாதியினால்தான். முகமது நபிக்கு நோய் வரலாமா என்று இவர் ஆராயவில்லை//.
  //முஹம்மது நபி தன்னை கடவுள் என்றோ அல்லது முஸ்லிம்கள் முஹம்மத் நபியை கடவுள் என்றோ இன்று வரை சொல்லாததால் தான் முஸ்லிம் சகோதரர் அப்படி கேட்டிருக்கலாம் முஹம்மத் நபியை சாய்க்கு உதாரணமாக காட்டுவது பொருத்தமாக படவில்லை. சாயோ தன்னை கடவுள் என்று தானே சொல்லிக்கொண்டிருந்தார்.

 23. raja on April 30, 2011 at 6:32 am

  முகமது நபி தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்ளாமல் அல்லாவின் தூதர் என்று சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அவரால் , அவர் பெயரால் கொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம். சாய்பாபா தன்னை கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் தன்னை கட்டாயம் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை. சாய்பாபாவால் பலனடைந்தவர்கள் ஏராளம். தன்னுள் இருக்கும் இறைவனை உணா்ந்த ஞானிகள் சில சமயங்களில் தானே கடவுள் என்று அறிவித்திருக்கிறார்கள். அதை நம்புவதும் நம்பாததும் நம் விருப்பம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம் ராமனும் நானே கிருஷ்ணனும் நானே என்று சொல்லியிருக்கிறார். என்னை வணங்காதவர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்று சொல்லவில்லை.

 24. kargil jay on April 30, 2011 at 10:58 pm

  திரு. kuththu (29 April 2011 at 7:03 pm)

  உங்கள் கருத்து, என் கருத்துக்கு எதிராகவோ துணையாகவோ என்ன சொல்லவருகிறது என்பது புரியவில்லை.

  பாபா தன்னை கடவுள் என்றார் என்கிறீர்கள்.. கட்டுரையில் ஆசிரியர் பச்சை மசியில் மேற்கோள் செய்த இதை படித்தீர்களா: //ஒரு இந்து நல்ல இந்து ஆகவும் ஒரு இஸ்லாமியன் நல்ல இஸ்லாமியனாகவும் ஒரு கிறித்தவன் நல்ல கிறித்தவனாகவும் இருக்கவே நான் விரும்புகிறேன். கடவுளை தேடி ஏன் அலைகிறீர்கள்? உங்களுள் இருக்கும் கடவுளைக் கண்டுக்கொள்ளுங்கள் //

  உங்கள் கருத்து கொஞ்சமாவது பொருந்துகிறதா?

  நபிகள் நாயகம் அல்லாவைத் தொழாமல் விட்டால் மனிதர்கள் நரகத்தில் தீயில் வைத்துப் பொசுக்கப் படுவார்கள் என்றார்.. அதற்கும் இந்த மேற்கோளுக்கும் வித்தியாசமாவது தெரிகிறதா உங்களுக்கு?
  ====
  Sri Sarang, (29 April 2011 at 4:40 pm)
  If he wants to prevent misquote, then I will quote like I did.

 25. V. Ramaswamy on May 3, 2011 at 8:57 am

  Yes, Bhagwan Sri Satya Sai Baba, “Swamy” as lovingly called by His devotees all over the world has attained Samadhi, not death for, He has no death. He has taken care of his millions of His devotees with Love and with many answers for their queries and problems which cannot be explained in letters. It is sane not to talk anything ill of not only our beloved Swamy but anything against any other person or Saint of any community or God. Belief of one’s faith on someone or God is totally individual and none can and should interfere in that belief. Those who respect Him let us pray Him only for Him, for us and for the community at large.
  Jai Sai Ram.

 26. sanjay on May 5, 2011 at 12:11 pm

  I think the best homage we can pay to Sathya Sai baba is to follow his message of “Love all Serve all”.

  Even Lord Krishna has been criticised for his acts in the mahabharatha.

  So, I think we are missing the wood for the trees by commenting on what he did when he was alive.

 27. முனைவர் கனகராஜ் ஈஸ்வரன் on May 5, 2011 at 2:16 pm

  சத்யசாயி பாபா அவர்களுக்கு அஞ்சலியாக கால்கரி சிவா அவர்கள் எழுதிய கட்டுரை அருமை.
  பாபா அவர்களை ப்பற்றி சிவா சொன்னவை மிகையல்ல. அடியேன் பாபாவின் பக்தர் அல்ல என்றாலும் ஒரு சமூகப்பணியாளனாக சனாதன தர்மத்தில் முழுமையான நம்பிக்கையுடையவனாக ஆத்மசாதகனாக அவரது பணியை கண்டு பிரமித்திருக்கிறேன். நலிந்தேருக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. தமது பக்தர்கள் சேவை செய்வதை அவர் ஊக்குவித்தார். அவர் ஆன்மீகத்தை அனைவருக்கும் சாதி வேறுபாடின்றி எளியமுறையில் வழங்கியது போற்றுதலுக்கும் பின்பற்றுவதற்கும் உரியது. கால்கரி சிவா அவர்கள் கூறுவது போல அவரது பஜனைப்பாடல்கள் சிறந்தன. இறைவனோடு நம்மை இணைக்கும் தகைமை படைத்தன. பாபா இறைவனின் அவதாரம் என்பதில் நம்மில் பலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் சனாதன தர்மத்திற்கு அவர் ஆற்றிய பணி மிக உயர்வானது.
  அவரது பணி ஜீவனதியென தொடர நாம் யாவரும் வேண்டுவோம்.
  சத்யசாயி பாபா அவர்களுக்கு எனது வணக்கங்கள்
  முனைவர் கனகராஜ் ஈஸ்வரன்

 28. அத்விகா on April 13, 2012 at 7:13 pm

  ஜடாயு on April 27, 2011 at 1:01 pm

  ” இந்துமதத்திலும் மிகப் பெரும் சமூகசேவைப் பாரம்பரியம் உள்ளது.

  யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
  யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
  யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி”-

  ஜடாயு ,

  தங்கள் மடல் மிக அருமை. நன்றி.

 29. suriyanarayanan on March 30, 2014 at 6:44 pm

  Bhagavan’s service to the humanity is excellent.He preached what he practiced.
  The inumerable services doneby Baba can be done only by
  god.Hence Bagavan always lives with us
  saranam sri sai ram
  suriyanarayanan

 30. Ramesh on December 12, 2014 at 2:47 pm

  பாபாவிற்கு என் சரணம்கள். பாபா உண்மையாகவே கடவுள் அவதாரம் தான். அவர் அவரை அறிந்ததால் வர கடவுள். நம் உள்ளத்தை கடந்து ஆசி தரும் கடவுள். ஆணவம், கன்மம், மாயை, காமம், லோபம், மத மாச்சர்யங்கள் இவைகளை வென்றவனே கடவுள். பாபாவும் கடவுளே.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*