கானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்

ghana_templeகானா  மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நாடு. அதன் தலைநகர் அக்ரா ஒரு அழகிய கடற்கரை நகரம். அந்த நகரின் வடக்குபகுதியில் சர்ச் கோபரங்களைப் போல கூரான உயர்ந்த வெள்ளைக் கோபுரம். அதன் உச்சியில் ஒளிரும்  ஒம் சின்னம். உள்ளே சன்னதியில் விக்கிரகங்களுக்குப் பட்டாடை. அருகில் சிறு விளக்குகள். மாலை பூஜைக்கு முன்னதாகப் பிராத்தனைப் பாடல்கள்.

இந்தியர் வாழும் ஒரு வெளிநாட்டில் அவர்களுக்காக ஒரு இந்து கோவில் இருப்பதும் அதில் சிறப்பாக வழிபாடு நடைபெறுவதும் ஆச்சரியமான செய்தி இல்லை. ஆனால், இந்தக் கோவிலில் பிராத்தனை பாடல் பாடி வழிபாட்டுக்காகக் காத்திருப்பவர்களில் யாரும் இந்தியர் இல்லை.  அவர்களுக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது. அதுமட்டுமில்லை அவர்களில் பலர் இந்தியாவையே பார்த்ததில்லை. பின் எப்படி இந்த கோவில்?

கானா நாட்டின் ஜனத்தொகை 2.3 கோடி. அதில் 60% கிருத்துவர், 15% முஸ்லீம்கள், 25% ஆப்பிரிக்கப் பழங்குடி மதத்தின் வம்சாவளியினர். எல்லா காலனிகளையும்போல ஆங்கில ஆதிக்கத்தின் துணையுடன் மதமாற்றத்தால் கிறுத்துவ மதம் பரவிய நாடு அது.

map-ghana-africa-impஅதில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்திலில் 1937ல் பிறந்த கெவிஸி ஈஸெல் (Guide Kwesi Essel)ன் தாய் கிறுத்துவர். உண்மையை அறிய கெவிஸி மேற்கொண்ட நீண்ட பயணத்தில் 1962ல் ரிஷிகேஷிலுள்ள சிவானந்த ஆஸ்ரமத்துடன் தொடர்புகொண்டார். இந்துவழி பிராத்தனைக்காக சங்கம் ஒன்றை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தினார். இந்தியாவிற்கு 1970ல் வந்து ஆன்மீகத் தேடலில் அவர் அடைந்த இடம் ரிஷிகேஷ் சிவானந்தர் ஆஸ்ரமம்.

இரண்டாண்டு தீவிர பயிற்சிக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து தாய் நாடு செல்லும்போது இந்து மதத்தை ஏற்றுகொண்டவர்.  தன் நாட்டின் தலைநகரில் இந்து மதம் பற்றி சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார். துவக்கத்தில் படித்தவர்கள் மட்டுமே கலந்துகொண்ட கூட்டங்களுக்கு நாளடைவில் எல்லா தரப்பு மக்களும் வர துவங்கினர்.

1975ல் இந்தியாவிலிருந்த  கானா வந்த ஸ்வாமி கிருஷ்ணாநந்த ஸரஸ்வதி இவருக்கு தீட்சை வழங்கி ஸ்வாமி  கானானந்த ஸரஸ்வதி (Swami Ghananand Saraswati)  எனப் பெயரிட்டு ஆப்பிரிக்க இந்து ஆஸ்ரமத்தை துவக்க உதவி செய்து, பணியை தொடரச் சொல்லிவிட்டு இந்தியா திரும்பிவிடுகிறார்.

ஆச்சரியமான விஷயம் கிருஷ்ணானந்த ஸரஸ்வதிக்கு இவரை முன்பின் தெரியாது. அவர் கானா வந்ததும் வேறு பணிக்காக. அன்று முதல் இந்த ஆஸ்ரமத்தின் தலைமைத் துறவியாகயிருந்து இந்து மதத்திற்கு தொண்டாற்றி வருகிறார் ஸ்வாமி  கானானந்த ஸரஸ்வதி. கானாவில் இருப்பது 12, 500 இந்துக்கள். இதில் 10, 000 பேர் இவரைப்போல  ஆப்பிரிக வம்சாவழி சார்ந்தவர்கள்.

இவருடைய இந்த ஆஸ்ரம உறுப்பினர்களாகச் சேர்ந்த பல மதத்தினரும் இந்துவாகி இருக்கிறார்கள். “யாரையும் இந்து மதத்திற்கு மாற்றமுடியாது.  ஏனெனில், மற்றதைப்போல அது வெறும் மதமில்லை. அது ஒரு வாழ்க்கை முறை. ஒருவார பயிற்சிக்குப் பின்னர் இந்துவாக வாழ விரும்புவர்களை ஏற்று தொடர்ந்து இந்துவாக வாழ அவர்களுக்கு உதவி செய்கிறோம்” என்கிறார் சுவாமி. இந்து விழாக்கள், பண்டிகைகள் பற்றிய விளக்கங்கள் பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாவே  கூட்டங்களில் விளக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. முக்கியமான விஷயம் கூட்டங்களும் பாடல்களும் உள்ளூர் மொழியில் தான்.

sw2தங்கள் குழந்தைகளுக்கு ராமர், கிருஷ்ணர் எனப் பெயர் சூட்டி மகிழும் இந்த “இந்து”க்களில் பலருக்கு கிருத்துவப் பெயர்தான். இறந்தபின் உடலை ஏரியூட்டுவது என்பதை எற்றுகொண்ட இந்துகளுக்கு இறுதிக் கடன்களை செய்கிறது இந்த ஆஸ்ரமம். நாட்டின் பிற நகரங்களில் 5 கிளைகளுடன் இயங்கும் இவர்களுக்கு உள்ளூர் இந்தியர்களின் கோவில்களிலிருந்து நல்ல ஒத்துழைப்பு இல்லை என்பது தான் வருத்தம்.

எங்கோ ஆப்பிரிக்காவில் வேறுமதத்தினராக பிறந்து இந்தியா வந்து இந்துமத பெருமையை உணர்ந்து அதை தன் தாய்நாட்டில் வேறூன்றச் செய்யும்  இந்த ஸ்வாமி கானானந்த ஸரஸ்வதி இந்து மதத்தின் ஒரு பெருமையான அடையாளம்.

Tags: , , , , , , , , , , ,

 

13 மறுமொழிகள் கானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்

 1. snkm on May 2, 2011 at 8:57 am

  சுவாமி கானானந்தா சரஸ்வதிக்கு வணக்கங்கள். நன்றி!

 2. ramesh on May 2, 2011 at 2:02 pm

  இந்து மதம் உலகம் முழுவதும் விரைவில் பரவும்.. அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது…கிறுக்குதனமான கிறிஸ்துவ மதம் விரைவில் அழியும்..

 3. raja on May 2, 2011 at 3:22 pm

  மனதிற்கு மிகவும் ஆறுதலான செய்தி. எங்கு பார்த்தாலும் இந்துக்கள் மதம் மாற்றப்படுவது இந்துக்கோவில்கள் இடிப்பு, சிறுபான்மையினர் சலுகை என இந்துக்களுக்கு எதிரான செய்திகளையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இச்செய்தியைப் படித்ததும் தெம்புட்டுகிறது. இவர் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும். எம்மதமும் சம்மதம் என்று பேசி இந்துக்கள் இந்து மதத்தைப் பரப்ப எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறார்களே என்ற எண்ணம் இருந்தது. . இவரையும் விவேகானந்தரையும் போன்றவர்கள் தோன்ற வேண்டும்.

 4. GowriShanker. S on May 2, 2011 at 4:13 pm

  ஹிந்துத்வா என்பது மதம் என்பதை விட!! ஒரு சிறந்த வாழ்கை முறை!! ஹிந்து மதத்தின் வழிமுறை புரிந்தவர், உண்மை ஞானத்தையும் வாழ்வியலையும் புரிந்துகொள்வர்!

 5. Rishi on May 2, 2011 at 5:04 pm

  Ramanan please provide the address of this temple so that readers could help the Swami.

 6. Kirumi on May 2, 2011 at 6:26 pm

  அமர்நாத் யாத்திரை காலம் குறைக்கப்பட்டதன் பின்னணி என்ன? இது குறித்து ஆராய்ந்து எழுதவும். நன்றி.

 7. தங்கமணி on May 2, 2011 at 8:42 pm

  இணையதளம் இங்கே இருக்கிறது.
  உதவ விரும்புபவர்கள் உதவலாம்,
  http://hindumonasteryafrica.org/index.php

 8. Ramesh on May 2, 2011 at 10:20 pm

  The Swami also has a Facebook Page here:
  http://www.facebook.com/pages/HH-Swami-Ghananand-Saraswati/179844755381074?sk=wall
  Please go there and click on the ‘Like’ button. Right now only 20 people like this page. We need to get more people to like this page. You can also post some encouraging words to our African brother/sister Hindus.

 9. சத்தீஷ் on May 3, 2011 at 2:58 pm

  “””நாட்டின் பிற நகரங்களில் 5 கிளைகளுடன் இயங்கும் இவர்களுக்கு உள்ளூர் இந்தியர்களின் கோவில்களிலிருந்து நல்ல ஒத்துழைப்பு இல்லை என்பது தான் வருத்தம்.”
  இது தான் இந்து மதம்.இந்தியாவில் ஏன் தமிநாட்டில் எத்தனை கோவில்க்ள் உள்ளன? அவைகளில் அனைவரையும் சமமாக் நடத்தும் கோவில்கள் எத்தனை?எல்லா இடத்திலும் பார்பணர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? நாடு விட்டு நாடு போனால் குணம் மாருமா? இங்கே தலித் மற்றும் பிற்படுத்தபட்ட மக்கள்.ஆங்கே கறுபர்கள்.அதுதன் வித்யாசம்.ஆப்ப்ரிக்க நாடுகளில் வாழும் இந்துக்கள் (இதில் எல்லா இந்துக்களும் அடக்கம்)கறுப்பின மக்களை மிகவும் கேவலமாக (அலுவலகமோ அல்லது வீடோ) நடத்துவார்கள். அவர்களை “காலா” என்று சக இந்துக்க்களிடம் கூறுவார்கள்! மனிதர்களை கடவுள் என்ற பெயரால் பிரித்தாளும் சித்தாந்தமே இந்(த்)து மதம்!! கானாவில் வசிக்கும் ஒரு கறுப்பின இந்துவிற்க்கு கவலைபடும் ஆசிரியர் முதலில் இங்குள்ள சக மனிதர்களை பற்றி சற்று யோசிக்கவும்!!
  நன்றி

 10. EROTTAAN on May 3, 2011 at 10:31 pm

  உலகமெங்கும் பரவட்டும் இந்து தர்மம் .மக்களின் மனதிலுள்ள மாசு அகன்று மெய்ம்மை ஒளி விளங்கட்டும் .

 11. alkhor vaasi on May 7, 2011 at 11:10 pm

  அருமையான கட்டுரை! கோவிலை வலையில் பார்த்ததுண்டு ஆனால் அதற்குள் இவ்வளவு செய்திகள் அடங்கி இருக்கும் என நினைத்தது கூட இல்லை! அருமை தோழர்களே, நன்றி!

 12. eswaran on December 14, 2011 at 10:11 am

  அருமையானசெய்திஇது. ஸ்ரீ கானந்த சரஸ்வதி சுவாமி அவர்களின் தாள் பணிந்து வணங்குகின்றேன் .நம்மவர்கள் இவர்க்கு ஒத்துழைப்பதில்லை என்பது நமது மதத்தினுடைய சாபக்கேடு போல் உள்ளது.நம்மவர்களே நமது நாடு ,மதம் இவற்றை காட்டிக்கோடுப்பவர்களாக இருப்பதால்தான் நாம் இன்னும் மேலான நிலையை அடைய முடியாமல் இருக்கின்றோம் .என்றுதான் இந்த நிலை மாறுமோ?

  ஈஸ்வரன் ,பழனி.

 13. ஸ்ரீ பகவதிராஜ் on November 3, 2013 at 2:45 pm

  இந்து சமயமும் அதன் ரகசிய அறிவியல் வளர்ச்சியும் உலகெங்கும் பரவ ஸ்ரீ மந் நாராயணரை வேண்டிக்கொள்கிறேன்…!!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*