புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 03

முந்தைய பாகங்கள் – 01 | 02

dr-ambedkarமதமாற்ற முடிவுக்கு முன், இந்து மதத்தை சீர்திருத்திவிடலாம் என்றுதான் அம்பேத்கரின் எண்ணம் இருந்தது. அதற்கான செயல்பாடுகளே சௌதார் குள சத்தியாகிரகமும், கோயில் நுழைவுப் போராட்டங்களும்.

சௌதார் குள சத்தியாகிர மாநாட்டில் அம்பேத்கர் பேசிய போது இப்படிக் குறிப்பிட்டார்:

‘‘நமது இயக்கம் எப்படிப்பட்டது? நமக்குள்ள சக்தியற்ற நிலைமையை அகற்றுவது மட்டுமே அதன் குறிக்கோளல்ல. ஒரு சமூகப்புரட்சியைத் தோற்றுவிப்பதும் அதன் நோக்கமாகும். சமூகப்புரட்சி என்பது மனிதன் தோற்றுவித்த சாதித்தடைகள் அனைத்தையும் அகற்றுவதைக் குறிக்கிறது. எல்லோரும் உயர்நிலையை அடைவதற்கு சமத்துவ வாய்ப்புகள் அளிப்பதைக் குறிக்கிறது. குடியுரிமைகள் விஷயத்தில் மனிதனுக்கு மனிதன் பேதம் காட்டாததைக் குறிக்கிறது. இந்துக்கள் அனைவரையும் ஒரே சாதியில் ஒன்றுபடுத்தும் நமது இயக்கத்தில் நாம் வெற்றி பெறவோமேயானால் பொதுவாக இந்திய நாட்டிற்கும், குறிப்பாக இந்து சமூகத்துக்கும் மிகப்பெரிய சேவை செய்தவர்களாவோம்.’’

என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இந்து மதத்தைச் சீர்த்திருத்தத் தேவையான வழிமுறைகளைக் கூறியது.  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமான தீர்மானங்கள் இவை:

1) மனுஸ்மிருதியிலும், இவை போன்ற இதர நூல்களிலும் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நாகரிகமற்றவையாகவும் மிகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இந்தக்கூட்டம் அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றைத் தீயிலிட்டுக் கொளுத்தத்  தீர்மானிக்கிறது. இந்து சமுதாயத்தை சீர்திருத்துவதற்கு அடிப்படையாகப் பின்கண்ட உரிமைப் பிரகடனத்தை வெளியிடுகிறது.

2) அனைத்து இந்துக்களும் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட வேண்டும். இதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும். பிராமணன், சத்திரியன் போன்ற வருண இனச் சொற்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட வேண்டும்.

3) இந்து சமயக் குருக்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பரீட்சை நடத்தப்பட வேண்டும். இத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கே தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

அம்பேத்கரின் தளபதிகளான தியோராவ் நாயக்கும், கதிரேக்கரும் ஜனதா (மக்கள்) என்ற பெயரில் புதிய மாதம் இருமுறை இதழைத் தொடங்கினார்கள்.

சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தீண்டப்படாத வகுப்பு மக்கள் இந்துச் சமூகத்தில் இணைந்து இருந்திடவே விரும்புகின்றனர்  என்று  எடுத்துரைத்தது ஜனதா பத்திரிக்கை.

பஹிஷ்க்ருத் பாரத் பத்திரிகையில் 26-6-1927 இதழில் எழுதுகையில் ‘‘நமது இந்து சமூகத்தின் மீது படிந்துள்ள தீண்டாமைக் களங்கத்தைக் கழுவி நீக்க, தீவிர விருப்பமுள்ளவர்கள் இதற்கான (சௌதார் குளம்) சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள, ஒதுக்கப்பட்டோர் நலச்சபை அலுவலகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்று அழைப்புவிடுத்தார் அம்பேத்கர்.

“மனிதனுக்காக மதமா, அல்லது மதத்துக்காக மனிதனா? தீண்டத்தகாதவர்களெனப்படும் நாம் இந்து மதத்தின் ஓர் அங்கமா, இல்லையா? இம்மாதிரிக் கேள்விகளுக்கு நாம் இறுதியான முடிவு எடுத்தேயாக வேண்டும்” என்று தன் கட்டுரையில் அவர் எழுதியிருந்தார்.

மகாராஷ்டிர பிராமணரல்லாத சமூகங்களின் தலைவர்களான ஜேதே, ஜவல்கர் என்பவர்கள் அம்பேத்கரைச் சந்தித்து, சௌதார் குள சத்தியாகிரக போராட்டத்தில் பிராமணர்கள் யாரும் கலந்து கொள்ளவிடாதபடிச் செய்தால், பிராமணரல்லாத மற்ற அனைத்து சமூகத்தினரும் அவருடைய போராட்டங்களில் பங்கேற்க வருவார்கள் என்று கூறிப்பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு அம்பேத்கர் அளித்த பதிலில்தான் அம்பேத்கரின் தூய எண்ணத்தையும் அவர் எதன்மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதையும், எதை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

அவர்களின் ஆலோசனையை ஏற்க மறுத்த அம்பேத்கர் அவர்களுக்குப் பின்வருமாறு பதிலளித்தார்  –

‘‘நான் நடத்தும் இயக்கம் பிராமணர்களுக்கு எதிரானதல்ல. பிராமணர்கள் எல்லோரும் தலித்துகளுக்கு எதிரிகள் என்று கூறமுடியாது.  எனது இயக்கம் பிராமணீயத்தைத்தான் எதிர்க்கிறது. பார்ப்பனிய மனப்பான்மை கொண்டிருப்பவர்களே வெறுக்கப்படத் தக்கவர்கள். உயர்ந்த சாதி, தாழ்த்த சாதி என்று வேறுபடுத்துவது பிராமணியம். இதுதான் மனிதனைத் தொட்டால் தீட்டு என்ற சிந்தனையை வளர்த்தெடுத்தது. சமூகத்தில் சிலருக்கு இதுதான் சிறப்பு உரிமைகளை அளித்தது. சமனற்ற நிலையைத் தோற்றுவித்தது.”

மேலும் கூறுகையில்

“சாதியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனப்பான்மை கொண்ட பார்ப்பனரல்லாதவரை நான் வெறுக்கின்ற அதே நேரத்தில், இந்த உயர்வு தாழ்வு உணர்வு இல்லாமல் சிறப்பு உரிமைகளையும் அதிகாரத்தையும் விட்டொழித்த பார்ப்பனரை வரவேற்கிறேன்.’’

என்று பதிலளித்தார்.

savarkarஅம்பேத்கர் இவ்வாறு பதிலளிக்க பல காரணங்கள் இருக்கின்றன. அம்பேத்கருடைய போராட்டங்களுக்கு வீர சாவர்க்கர் ஆதரவு அளித்தார். பல பிராமணர்களும், உயர்சாதி இந்துக்களும் ஆதரவு அளித்தனர்.

1929ம் ஆண்டு ரத்தினகிரி மாவட்ட பஹிஷ்கிருத் சமாஜ் கூட்டம் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது. அதில் தீண்டத்தகாதவர்களுக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கு நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அந்த சமயம் அம்பேத்கர் உடலளவிலும் ஆன்மீக நோக்கிலும் பூணூல் அணிவதன் சிறப்பை விளக்கினார். இதன் மூலம் வேதங்களை ஓதுகின்ற உரிமையை மீண்டும் பெற்றுவிட்டதாகத் தீண்டத்தகாத சமூகத்தினரைப் பாராட்டினார். அவருடைய பிராமண நண்பரான தேவராவ் நாயக் 6471 பேர்களுக்குப் பூணூல் அணிவித்துக் காயத்திரி மந்திரம் உபதேசித்தார்.

தீண்டத்தகாதவர்கள் இந்து மதத்தின் பிரிக்கமுடியாத அங்கம் போன்றவர்கள் என்று நிரூபிப்பதற்காகப் பலமுறை அம்பேத்கர் முயற்சியெடுத்தார். தன்னுடன் தொண்டாற்றி வந்த ஆட்ரேகர் என்பவரின் மகனின் திருமணத்தை வைதீக முறைப்படி நடத்தச் செய்தார். இந்த நிகழ்ச்சியை வைத் என்ற பிராமணர் புரோகிதராக வந்து நடத்திக்கொடுத்தார்.

1929ல் ஆலயப்பிரவேச சத்தியாகிரகத்தை பரவலாக ஒரே சமயத்தில் எல்லா  இடங்களிலும் ஆரம்பிப்பது எப்படி என்று சிந்தித்து அம்பேத்கர் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். ஆலயப்பிரவேசம் மூலம் தீண்டத்தகாதவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படுத்த முடியுமென அவர் நினைத்தார். இந்த இயக்கத்தில் லட்சம் பேராவது பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சமயம் மீரஜ் நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர் மகாதேவ சாஸ்திரி திவேகர் மும்பையில் அம்பேத்கரை சந்தித்தார். அவருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ‘‘உண்மையான இந்துக்கள் நாங்கள்தான். ஏனெனில் மதத்தின் உண்மையான நுணுக்கம் எங்களுக்குத்தான் தெளிவாகப் புரிகிறது. நாங்கள் சுதந்திரமான நாட்டினர்” என்று அம்பேத்கர் கூறினார்.

அதற்கு என்ன அர்த்தம் என்று திவேகர் சாஸ்திரி கேட்டதற்கு, அம்பேத்கர் இவ்வாறு பதிலளித்தார் – ‘‘அரசியல் கண்ணோட்டத்தின்படித் தனியான வாக்காளர் தொகுதிகள், தனிப்பட்ட வசதிகள், தனிச்சலுகைகள் என்ற முறையில் சுதந்திரமான என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். இந்து சமூகத்தில் சமபந்தி போஜனமும் கலப்புத் திருமணமும் அதாவது உணவையும் பெண்ணையும் சாதி வேறுபாடின்றி ஏற்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆலயப்பிரவேசம் தீண்டாமை ஒழிப்பிற்கு முதல் படி போன்றது. மக்களுடைய கருத்துக்களில் மாறுதல் கொண்டு வருவதற்காக முதலடி எடுத்துவைப்பது போன்றது இந்த சத்தியாகிரகம். நாம் எங்கும் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். நான் ஒரு ஜனநாயகவாதி. ஆனால் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தைக் கொடுமைப்படுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்’’.

நாங்களும் இந்துக்கள்தான், நாங்களும் மனிதர்கள்தாம் என்பதை நிலைநாட்ட 1930 மார்ச் 2ம் தேதி அன்று காலாராம் கோயில் நுழைவு சத்தியாகிரகத்தை துவக்குவதற்கான வழிமுறைகள் பற்றி முடிவு செய்ய அம்பேத்கர் தலைமையில் மாநாடு நடைபெற்றது. அதில் அவர் பேசிய உரை முக்கியமானதாகும். அவ்வுரையில் அம்பேத்கர் முழங்கினார் –

‘‘இன்றுநாம் ஆலயத்தில் நுழைய இருக்கிறோம். இந்தக் கோயிலில் நுழைவது, பிரச்சினை முழுவதையும் தீர்த்து வைக்காது. நமது பிரச்சினை பன்முகத்தன்மை கொண்டது. நமது பிரச்சினை அரசியல், சமூக, மத, பொருளாதார, கல்வி முதலியவை கொண்டது. காலாராம் கோயிலில் நுழைவு இந்து மனதிற்கு ஒரு வேண்டுகோள் ஆகும். காலம் காலமாகச் சாதி இந்துக்கள் நமது உரிமையைப் பறித்தனர். இந்தக் கோயில் நுழைவுச் சத்தியாகிரகம் எழுப்பும் பிரச்சினை இந்துக்கள் நமது மனிதாபிமான உரிமையை அளிப்பார்களா என்பது குறித்தது.  உயர்சாதி இந்துக்கள் நம்மை கேவலப்படுத்தி பூனை, நாய்களைவிடவும் மோசமாக நடத்தினர். மனிதன் என்ற உரிமையை இந்துக்கள் நமக்கு அளிப்பார்களா என்று நாம் அறிந்துகொள்ள யிரும்புகிறோம். இந்தக் கேள்விக்கு சத்தியாகிரகம் பதில் அளிக்கும். உயர்சாதி இந்துக்களிடையே ஒரு மன மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக செய்யப்படும் முயற்சிகளில் சத்தியாகிரகமும் ஒன்று. எனவே இந்த முயற்சி வெற்றி பெறுவது இந்து மனோநிலையைப் பொறுத்து இருக்கும்.’’

தீண்டத்தகாதவர்களும் இந்துக்கள்தான் என்ற அடிப்படையில் சமூக ஏற்பு பெறுவதற்காகவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் பொதுச் செயலாளரான தாக்கருக்கு 1932 நவம்பர் 14ம் நாள் இலண்டன் செல்லும் வழியில் போர்ட் செயிட் துறைமுகத்திலிருந்து காந்தியின் அறிக்கைகளைப் பற்றி ஒரு கடிதம் எழுதினார் அம்பேத்கர். அக்கடிதம் மிகவும் மதிப்பு வாய்ந்த ஆவணமாகக் கருதப்படுகிறது. எரிச்சலடையும் படியான, புண்படுத்தும்படியான பாணியில் இல்லாமல் நடைமுறை சார்ந்த இயல்பான இணக்கமான தன்மையில் தீண்டாமையை ஒழித்தல் பற்றி இந்துச் சமூக ஊழியர்களுக்கு ஆக்கப்பூர்வமான யோசனைகளை அம்மடலில் எழுதியிருந்தார்.

‘‘சட்டத்தினாலோ, தனி வாக்காளர் தொகுதிக்குப் பதிலாகக் கூட்டு வாக்காளர் தொகுதியைத் தேர்தல் சட்டத்தின்மூலம் கொண்டுவருவதாலோ தீண்டப் படாதவர்களையும் சாதி இந்துக்களையும் ஒன்றுபடுத்திவிட முடியாது. அன்பு ஒன்றே அவர்களை ஒற்றுமையுடன் வைத்திருக்க வல்லதாகும். தன்னுடைய வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சாதி இந்துவை உணரச் செய்யாதவரை, பிணைக்கச் செய்யாதவரை தீண்டப்படாத மக்களுக்கு விடிவே இல்லை. சாதி இந்துக்களின் சிந்தனையில் ஒரு புரட்சி தோன்ற வேண்டும் என நான் எதிர்பாக்கிறேன்.’’

என்று அக்கடிதத்தில் அம்பேத்கர் எழுதியிருந்தார்.

மேலும் அக்கடிதத்தில்  ‘‘தீண்டப்படாத வகுப்பு மக்கள் கிராமங்களில் கிணற்றில் தண்ணீர் எடுத்தல், ஊர்ப்பள்ளிகளில் சேர்ந்து படிக்க இடம் பெறல், சத்திரங்களில் தங்கிட உரிமை பெறல், பொதுவழிகளைப் பயன்படுத்தல் போன்ற குடியுரிமைகளைப் பெறுவதற்காகத் தீண்டாமை எதிர்ப்புக் கழகம் இந்தியா முழுவதும் தீவிரமாகப் போராட வேண்டும். அதுதான் இந்துச் சமூகத்தில் ஒரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தும்’’ என்று தாம்  நம்புவதாக அம்பேத்கர் குறிப்பிட்டார்.

1932 செப்டம்பர் 25ல்  பூனா ஒப்பந்தத்தை ஊர்ஜிதம் செய்ய நடந்த  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அம்பேத்கரின் இடையிடா போராட்டத்தின் விளைவுதான். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்லியது:

hindus_and_ambedkar”இந்துக்களில் எவர் ஒருவரையும் அவரது பிறப்பின் காரணமாகத் தீண்டத்தகாதவர் என்று கருதக்கூடாது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. இதுவரை அவ்வாறு கருதப்பட்டவர்கள் பொதுக்கிணறு, பொதுப்பள்ளி, பொதுச்சாலைகள் மற்றும் ஏனைய பொது அமைப்புகளைப் பயன்படுத்த மற்ற இந்துக்களைப்போல் அதே உரிமை பெறுவர். வெகுவிரையில் இந்த உரிமை சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். அவ்வாறு அங்கீகாரம் பெறவில்லை எனில் நாடாளுமன்றம் இயற்றும் முதல் சட்டங்களில் ஒன்றாக இது இருக்கும்.”

தீண்டத்தகாத வர்க்கத்தினர் என்று அழைக்கப்படுபவர்கள் மீது பழக்கவழக்கத்தால் சுமத்தப்பட்டுள்ள ஆலயங்களில் நுழைவதைத் தடுப்பது உள்ளிட்ட எல்லாத் தகுதியின்மைகளையும் விரைவில் நீக்க அனைத்துச்  சட்டப்பூர்வமான சமாதான வழிகளில் பாடுபட வேண்டியது எல்லா இந்துத் தலைவர்களின் கடமையாகும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பூனா ஒப்பந்தத்தை ஊர்ஜிதம் செய்யும் தீர்மானத்தை ஆதரித்து அம்பேத்கர் பேசினார்:

‘‘இந்து சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரை ஈர்த்துக் கொள்ளும் பிரச்சினைக்கு கூட்டுத்தொகுதிகள் இறுதியான தீர்வாக இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

…. எந்தத் தேர்தல் ஏற்பாடும் பரந்த சமுதாயப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்க முடியாது என நான் கருதுகிறேன். இன்று நாம் செய்துவரும் அரசியல் ஏற்பாட்டிற்கு அப்பாலும் சென்று, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இந்து சமுதாயத்தின் பிரிக்க முடியாத பகுதியினராக ஆவதற்கு மட்டுமின்றி, சமுதாயத்தில் அவர்கள் ஒரு கௌரவமான இடத்தை, சமத்துவ அந்தÞதைப் பெறுவதற்கு வழிமுறைகளைக் கண்டறிவது சாத்தியம் என்றும் நான் நம்புகிறேன்.

…. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அறியாமையில் மூழ்கி இருக்கும்வரை, சுயமரியாதை உணர்வைப் பெறாதவரை, இந்தச் சட்டம் அவர்களுக்கு சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் கல்வி அறிவு பெறப்பெற இந்த சமூகச் சட்டங்களின்கீழ் சாமர்த்தியமாக நடந்துகொள்ளத் துவங்குவர். இந்து சமுதாயத்திலிருந்து அவர்கள் பிரிந்து போகும் ஒரு பேரபாயமும் உள்ளது. இதை உங்கள் மனதில் இருத்திக்கொள்ளும்படி உங்களை வேண்டிக் கொள்கிறேன். இது விஷயத்தில் ஆவன செய்வீர்களென நம்புகிறேன்’’ என்று தெளிவாகக் கூறினார்.

1933 பிப்ரவரி 14ல் கோயில் நுழைவுக்கான போராட்டத்திற்கு அம்பேத்கரின் ஆதரவை அளிக்கும்படி காந்தி கோரினார். அவ்வாறு செய்ய அம்பேத்கர் மறுத்து இந்த விஷயம் பற்றி பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை தயாரித்து அளித்தார். அதில்

“இந்து மதம் தீண்டப்படாதவர்களின் மதமாக இருக்க வேண்டுமெனில் சமூக சமத்துவம் கொண்ட ஒரு மதமாக அது மாற வேண்டும். இந்துமதச் சட்டத்தொகுப்பில் எல்லோரையும் கோயிலில் நுழைய அனுமதிக்கும் ஒரு திருத்தத்தை உட்படுத்தினால் மட்டுமே சமூக அந்தஸ்தில் சமத்துவம் கிடைக்கும்.

…. சமூக சமத்துவம் கொண்ட ஒரு மதமாக இந்துமதம் இருக்க வேண்டுமானால், சட்டத்தொகுப்பில் கோயில் நுழைவுக்கு வகை செய்யும் திருத்தம் போதாது. தேவைப்படுவது என்னவெனில், சதுர்வர்ணம் என்ற கோட்பாட்டை அதனின்று அகற்றி தூய்மைப்படுத்துவதுதான். எல்லா சமத்துவமின்மைக்கும் சாதி அமைப்புமுறைக்கும் தீண்டாமைக்கும் ஆதிவேர் அதுதான். இவையெல்லாம் சமத்துவமின்மையின் உருவங்களே. இதைச் செய்யாவிடில், ஒடுக்கப்பட்ட சாதியினர் கோயில் நுழைவை நிராகரிப்பது மட்டுமல்லாமல் இந்துமத நம்பிக்கையையும் நிராகரிப்பர். சதுர்வர்ணமும் சாதி அமைப்பு முறையும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் சுயகௌரவத்திற்கு ஒவ்வாதவை. அதனுடைய அடிப்படைச் சித்தாந்தமாக அது தொடர்ந்தால், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கீழானவர்களாகவே கருதப்படுவர். சதுர்வர்ணம் மற்றும் சாதி அமைப்புமுறை என்ற தத்துவம் கைவிடப்பட்டு இந்து சாஸ்திரங்களிலிருந்து அகற்றப்பட்டால் மட்டுமே தாங்கள் இந்துக்கள் என்று ஒடுக்கப்பட்ட சாதியினர் சொல்ல முடியும். இதை இந்துக்கள் லட்சியமாக மகாத்மாவும் மற்ற இந்து சீர்திருத்தவாதிகளும் ஏற்றுக்கொள்கிறார்களா?’’

என்று கேள்வி எழுப்பினார்.

1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாளில் ஹரிஜன் என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றினைக் காந்தி தொடங்கினார். அம்பேத்கரிடம் இது குறித்து கருத்துக் கேட்டபோது,

“என்னால் இது குறித்துக் கருத்துரையேதும் தர இயலாது” என்று கூறி, மேலும் அவர் தொடர்ந்தார்:  “சாதியமைப்பு முறையின் உடன் விளைவுகளில் ஒன்றுதான் சாதியால் தீண்டப்படாத மக்கள் பகுதி. சாதிகள் இருக்கும்வரை கீழ்சாதியார் எனப்படுவோர் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருப்பர். வருங்கால உய்வுக்கான போராட்டங்களைச் சமாளித்து இந்துக்கள் உய்வடைய வேண்டுமெனில், அவர்கள் தம்பால் நிலவுகின்ற கேடுகளும் தீங்கும் நிறைந்த மூடநம்பிக்கைகளை தங்கள் சமூகத்திடமிருந்து அறவே களைந்துவிடுதல் ஒன்றே உற்ற வழியாகும்’’

என்றார்.

அதற்குப்பிறகு 1933 பிப்ரவரி 18 சனிக்கிழமையன்று தாணே மாவட்ட மாநாடு கசராயில் நடைபெற்றது. தலைமை வகித்த அம்பேத்கர் ‘‘இந்து சமயத்தில் நமக்குச் சமத்துவம் தேவை. நால்வருண முறை வேரோடு துடைத்தெறியப்பட வேண்டும். உயர்சாதி மக்களுக்கே உரிமைகள் யாவுமென்றும், தாழ்சாதி மக்களுக்கு வறுமையே கதியென்றும் இருக்கும் நிலை முடிவுக்கு வரவேண்டும்’’ என்று கூறினார்.

இந்தச் சூழ்நிலையில் 1935 அக்டோபர் 26ல் நாசிக் முற்போக்கு இந்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் அம்பேத்கரிடம் ஒரு நேர்காணல் நடத்தினர். அப்போது டாக்டர் குர்ட்டகொடி சங்கராச்சாரியார் தலைமையில் நடைபெற்ற நாசிக் இந்து முற்போக்கு குடிமக்கள்,  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அம்பேத்கரின் பார்வைக்கு அளித்தனர்.

அத்தீர்மானங்கள்:

1. பொதுக்கோயில்கள், பொது யாத்திரைத் தலங்கள், தீர்த்தங்கள் குறித்து சிக்கல் மிகுந்த சர்ச்சைக் குரியனவாயிருப்பதாலும், உடனடி நடைமுறைச் சாதனைகளின் வட்டத்திற்கு அப்பாற்பட்டவையாய் இருப்பதாலும், இது குறித்து பொதுமக்கள் கருத்தில் உரிய மாற்றம் தோற்றுவிப்பதற்காக இயன்ற முயற்சிகள் யாவும் செய்யப்பட வேண்டும்.

2. இந்தச் சிக்கல்களைப் பொறுத்தமட்டில், பொது மக்களிடையே ஆதரவான கருத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையன்றியும், அரிசனங்கள் அல்லாத இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் அரிசனங்கள் வசிக்கவும், நிலையாகக் குடியமர்த்தவும் பிரச்சாரத்தின் வாயிலாகவும் ஆக்கப்பணிகள் வாயிலாகவும் தனி முயற்சிகளாகவோ, கூட்டு முயற்சிகளாகவோ இடையறாத கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், கிணறுகள், பள்ளிகள், அறச்சாலைகள், உணவு விடுதிகள் போன்ற பொது இடங்களிலெல்லாம் இந்து சமூகத்தில் நிலவும் தீண்டாமை எனும் கொடுமையை எல்லா வகையிலும் அறவே அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது குறித்து அம்பேத்கர் அவர்களிடம் பேசியதாவது:

‘‘ஒரு சமயத்தின் மெய்யியல் கோட்பாடு யாதாக இருந்தாலும், அதன் அடிப்படைக் கூறாகக் கருதத்தக்கவை ஒழுக்க நெறியையும் சமுதாய நடைமுறைகளையும் தீர்மானிக்கும் கோட்பாடுகளே. கருத்தியலில் இந்து சமயம் பரப்பிரம்மம் எனும் கருத்தின் அடியில் அமைந்துள்ளது எனக் கொண்டாலும், இந்து சமுதாயத்தின் வழக்க நடைமுறைகள் மனு ஸ்மிருதி எனும் நூலில் எடுத்துரைக்கப் பட்டுள்ளவாறு மாந்தரிடை ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படை யிலேயே அமைந்துள்ளன.

மனித சமுதாயத்திற்குச் சமயம் என்பது தேவையற்றது எனக் கருதுவோரும் உண்டு. ஆனால், நான் அத்தகைய கருத்தை ஏற்கவில்லை. சீரான வாழ்க்கைக்கும், சமுதாயத்தை நன்னெறியில் இருத்தவும் சமயத்தின் அடிப்படை தேவையென்றே கருதுகிறேன். இந்து சமுதாய அமைப்பின் வேராக விளங்குவது மனுஸ்மிருதியில் எடுத்துரைக்கப்படும் தர்மம் என்பதாகும். இவ்வாறான நிலையில் தற்போதைய ஸ்மிருதி எனும் சமய அடித்தளத்தை அடியோடு அகற்றி மாற்று அடிப்படையை நிறுவினாலன்றி, இந்து சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் இயலாதென்றே கருதுகிறேன். இந்து சமுதாயம் பிறிதொரு சிறந்த அடித்தளத்தின் மீது புத்துருவம் பெறலாகாதா என எண்ணி ஏக்கமுறுகிறேன்.’’

என்று கூறினார்.

இந்து மதத்தை சீர்திருத்தவே தாம் முயன்றதாகவும், ஆனால் துரதிருஷ்டவசமாக தாம் தோல்வியுற்றதாகவும் அம்பேத்கரே பின்னர் கூறியிருக்கிறார்.

1942 ஏப்ரல் 26ஆம் நாள் பம்பாய் காம்கார் மைதானத்தில் அவரது பொன்விழா கொண்டாட்டத்திற்காக நிதியளிப்பு நிகழ்ச்சியில் அம்பேத்கர் இவ்வாறு  பேசி முடித்தார்  –

‘‘நான் எனது பொதுவாழ்வைத் தொடங்கியபோதும், அதற்குப் பலகாலம் பின்பும் நல்லதோ கெட்டதோ நாம் இந்து சமூகத்தின் ஒரு அங்கம்தான் என்று எண்ணி வந்தேன்.

இந்து சமூகத்திலுள்ள தீங்குகளைக் களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே மஹத் சௌதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம், வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம். ஆனால் அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழ முடியாது, இந்து சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று நான் முழுமையாக இன்று நம்புகிறேன்.

இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. பிறகு நாம் என்ன செய்வது? பொருத்தமான ஒரு நேரத்தில் அதை முடிவு செய்வோம். இந்து சமூகத்தின் ஓர் அங்கமாக எந்தக் காரணம் கொண்டும் இருக்க முடியாது என்று மட்டும் இப்போதைக்கு சொல்ல விரும்புகிறேன்.’’

அம்பேத்கரின் இந்தச் செயல்பாடுகள், சொற்பொழிவுகள் எல்லாமே இந்துமதத்தைச் சீர்திருத்தம் செய்யும் விதமாகவே அமைந்திருந்தன. ஆனாலும், உயர்சாதி இந்துக்கள் மனம் மாறவில்லை. தீண்டாதோரை சகோதரர்களாக – தம் சமூகத்தவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனுடைய விளைவுதான் இயோலா மாநாட்டின் மதமாற்ற அறிவிப்பாகும்.

இந்த மதமாற்ற அறிவிப்பைப் பலர் எதிர்த்ததுபோல் தமிழ்நாட்டிலும் தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் ஏற்கவில்லை. அதையும் பார்ப்போம். (இந்தச் செய்தி இத்தொடர்கட்டுரைக்கு தேவையில்லை என்றாலும் மதமாற்ற அறிவிப்பு ஏற்படுத்திய  விளைவுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.)

(அம்பேத்கரைத் தொடர்ந்து அறிவோம்….)

23 Replies to “புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 03”

  1. அம்பேத்கர் சிந்தித்தார், அம்பேத்கர் சொன்னார் என்பதற்காகவே, அவர் சிந்தனைகளும்,சொற்களும் சரியாகத்தான் இருக்கும் என்கின்ற அடிப்படையில் பார்க்கப்பட்டு அணுகப்படும் விதமாகவே, அம்பேத்கரைப்பற்றிய அனைத்தும் இருப்பது சரியானதல்ல. “இந்து மதத்தை சீர்திருத்தவே தாம் முயன்றதாகவும், ஆனால் துரதிருஷ்டவசமாக தாம் தோல்வியுற்றதாகவும் அம்பேத்கரே பின்னர் கூறியிருக்கிறார்” என்பதே இதற்கு சான்று. இக்காலம், திருப்தி, ஸ்ரீரங்கம்,சமயபுரம் என பல கோவில்களில், எல்லா ஜாதிகளைச் சார்ந்த சாமானியர்களுக்கு, சாதாரணமான அனுமதி மறுக்கப்பட்டு, எந்த ஜாதியாக இருந்தாலும், முக்யஸ்தர்க ளாகவோ, அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாகவோ இருந்தார்களேயானால் மட்டுமே தரிசனம் சிறப்பாகக் கிடைப்பதைப்பார்த்தால், கோவில் வழிபாட்டுக்கு முக்யத்துவம் கொடுக்காமால் இருந்திருப்பதே, பிரச்சினையைத் தீர்க்கும் வழியாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு, கோவிலுக்குப் போய்தான் ஆவேன் என்றும், அதுதான் சமுதாய அந்தஸ்து என்றும் நினைத்ததுதான், இன்றும் ஜாதிச்சண்டைகளுக்குக் காரணமாகும்.

  2. well said reality

  3. @ reality

    முக்கியமானவர்களுக்கு மட்டும்தான் சிறப்புத் தரிசன வசதி என்று இருப்பது எப்படித் தவறோ, அதே போல குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் கோவில் நுழைவு என்று இருப்பதும் தவறுதான்.

    ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்திவிடாது. அம்பேத்கர் அப்படி ஒரு தவறை நியாயப்படுத்தும் வாதத்தைப் பேசவில்லை. நீங்கள்தான் பேசுகிறீர்கள்.

    உங்கள் வாதப்படி, மத வெறியர்கள் கோயில்களை இடிக்கிறார்கள் என்பதால், கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதுதான் தீர்வு. அதைவிடுத்துக் கோயிலுக்குப் போகத்தான் போவேன் அதுதான் சமுதாய அந்தஸ்து என்று சொல்லுவதுதான் மதச்சண்டைகளுக்குக் காரணம் என்றும் சொல்லலாமே.

    பீசெக்குகள் (pseudo-secularists) அப்படித்தான் சொல்கிறார்கள்.

    அவர்களுக்கு மதம் என்றால், சிலருக்கு சாதி.

    இந்த இரண்டு பேருக்கும் இந்துத்துவம் பிடிக்காமல் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

  4. திருப்பதி , ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்பது உண்மையா ? நான் அந்தக்கோவில்களுக்கு சென்ற பொது அப்படிப் பார்க்கவில்லை.

  5. ஆரியபடையெடுப்பு என்ற ஒரு பொய்யை உண்மையாக்கி மக்களிடையே பிரிவினையை தூண்டிய பிரிட்டிஷார் எழுதிவைத்த சரித்திர நிகழ்வுகளை ஆணித்தரமாக எதிர்த்த அம்பேத்கர் அதே வெள்ளையர்கள் சமஸ்கிரதம் சரியாக புரியாமல் வேண்டும் என்றே பல பொய்யான இந்துமதக் கொள்கைகளை சித்தரித்ததை அப்படியே உண்மை என்று நம்பி ஏற்றுக்கொண்டு இந்து மதத்தை தூற்றியது தான் எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  6. @ களிமிகு கணபதி!
    சாமானியர்களுக்கு சாதாரணமான அனுமதி, கால் நொடி ஜறுகு ஜறுகு முறையில் அமைவதையும், வேண்டப்பட்டவர்களுக்கு “சிறப்பு தரிசனமல்ல” ,”தரிசனம் சிறப்பாக”, அதாவது, நீண்ட நேரம், பல மணிகள், தெய்வத்தையே கட்டிப்பிடித்து வணங்கும் அளவுக்கு, மாறிய முறையையே குறிப்பிட்டேன்.

  7. இது கிருஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மதம் மாறிய மதம் மாற நினைக்கும் இந்திய தலித்துகளின் கவனத்திற்கு. அவர் சொல்லை மீறுவது அவருக்கு செய்யும் குரு துரோகம் ஆகும்.

    AS A GREAT PATRIOT-STATESMAN HE REFUSED TO CONVERT TO ISLAM SAYING THAT THE FRATERNITY IN IT IS CONFINED ONLY TO THE ‘BELIEVERS’ AND THAT IF ANY ONE CONVERTED TO CHRISTIANITY, HE CEASED TO BE AN INDIAN. Thus he spurned both Islam and Christianity and chose a religion of the soil of Bharat, Buddhism, whose appeal is universal.

    Dr. Ambedkar said emphatically that Buddhism is our indigenous religion which does not bring with it extra-territorial loyalties. Let us hear his inspiring and patriotic words uttered on that occasion: “I will choose only the least harmful way for the country. And that is the greatest benefit I am conferring on the country by embracing Buddhism; for Buddhism is a part and parcel of Bharatiya Culture. I have taken care that my conversion will not harm the tradition of the culture and history of this land.”

  8. //இது கிருஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மதம் மாறிய மதம் மாற நினைக்கும் இந்திய தலித்துகளின் கவனத்திற்கு. அவர் சொல்லை மீறுவது அவருக்கு செய்யும் குரு துரோகம் ஆகும்.//
    அப்போ புத்த மதத்திற்கு போகலாமா?
    அதே போல வார்த்தைக்கு வார்த்தை தலித் என்று கூறி எங்களை தனிமை படுத்த வேண்டாம்.

  9. சிங்கமுத்து ஐயா அம்பேத்கர் அன்று நிலவிய சூழ்நிலையில் சில திருந்தாத பிராமிணர்களையும் ஜாதி இந்துகளையும் பார்த்து வெறுப்புற்று அவர்களுக்கு பாடம் புகட்டவே தனது வாழ்நாளில் கடைசிநேரத்தில் புத்தமதத்தை தழுவினார். இருப்பினும் அரசியல் சட்டம் ஏற்றுகையில் அவர் இந்துகளுக்கு சாதகமான பல நல்ல சட்டங்களை அமூல் செய்வதில் தீவிரமாய் இருந்து அதில் வெற்றி கண்டார் என்பதிலிருந்தே அவர் முழுமனதுடன் மதம் மாறவில்லை என்பதற்க்கு சான்றாகும். இன்று சூழ்நிலை வெகுவாக முன்னேறியுள்ளது. இந்து மதத்தில் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தால் அவர்களது சந்ததிகள் வருங்காலங்களில் முதன்மை குடிகளாக விளங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை அதுதான் இந்து மதத்திற்கு பெருமை.

    ஹரிசன் என்றாலும் தவறு தலித் என்றாலும் தவறு பட்டியல் ஜாதியினர் என்று அழைக்கலாமா ?

  10. U may or may not agree with Ambedkar but the fact is even today in Tamilnadu, dalits are denied entry into tremples. We see what is happening in Cheran Mahadevi temple near madurai where the upper caste hindus (notably vanniars) deny the dalits entry into the temple.

    Also, there are about 100 villages where the 2 tumbler system is still in vogue.

  11. உயர் சாதி இந்துக்கள் தான் அதிக அளவில் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
    அந்தக்காலங்களிலும் காஷ்மீர் பண்டிட்டுகள் பாகிஸ்தானிலுள்ள பிராமணர்கள் தான் இஸ்லாத்திற்கு மதம் மாறியுள்ளனர்.
    இஸ்லாமிய மதத்திற்கு கீழ்சாதி இந்துக்களை யார் அழைக்கிறார்கள்?. அதற்க்கான அவசியம் முஸ்லிம்களுக்கு எப்போதும் இருந்ததில்லை.
    கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவை இல்லை என்பது பழ மொழி, இதை இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் முகங்களும் பாவனைகளுமே தெளிவாக காட்டிவிடும்.

  12. உயர் சாதி இந்துக்கள் தான் அதிக அளவில் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
    ——————-////////////////////////////////———————————————-

    ஆதாரம் ? நீங்கள் சொல்வது ஆதாரமற்றது,
    எனக்கு தெரிந்து இஸ்லாமுக்கு மாறிய ஒருவரும் உயர்சாதி என்று சொல்லப்படும் பிரிவினரில் இல்லை

    அந்தக்காலங்களிலும் காஷ்மீர் பண்டிட்டுகள் பாகிஸ்தானிலுள்ள பிராமணர்கள் தான் இஸ்லாத்திற்கு மதம் மாறியுள்ளனர்.
    ————————————-//////////////////////////////////////////————-
    உயிர்பயம்தான் காரணம் மாறாவிட்டால் கண்ணதிரே குடும்ப பெண்கள் கற்பழிக்கபடுவார்கள் என்ற அச்சம் தான்.

    இஸ்லாமிய மதத்திற்கு கீழ்சாதி இந்துக்களை யார் அழைக்கிறார்கள்?.
    ———————–//////////////////////////—————

    ஏன் பிடிக்கவில்லையோ?

    இஸ்லாமிய மதத்திற்கு கீழ்சாதி இந்துக்களை யார் அழைக்கிறார்கள்?. அதற்க்கான அவசியம் முஸ்லிம்களுக்கு எப்போதும் இருந்ததில்லை.
    —————————————————////////////////////////————————-
    பின்னர் கும்பகோணம், தஞ்சை பகுதிகளில் நடப்பது என்ன? அங்கு மட்டும் அவசியம் வந்துவிட்டதோ?

  13. @ Sanjay

    தவறான தகவல் தராதீர்கள். சேரன் மகாதேவியில் உள்ள பிரச்சினை கோவில் நுழைவுப் பிரச்சினை இல்லை.

  14. Ganapati,

    Thanks for the tip. Actually, the issue is this :

    The temple car festival in cheranmahadevi has not been alowed to take place in the the last 4 years simply because upper caste people (not brahmins, just to clarify) have not allowed the dalits to even touch the car. This, in spite of a court order.

  15. Sanjay,

    Thanks for the clarification.

    What I have heard from some journalists is a bit different from your clarification. As per their version,

    Traditionally, a non-dalit family has been given the respects of the temple authorities before the car festival. But, some politically motivated people demanded that this should be accorded to dalits. And, they have created an environment filled with animosity, now not only dalits, but nobody is allowed to conduct the car festival. I am told that motivated forces are using this strategy all over India to stop Hindu temples from functioning. They want all the Hindu temples to be closed down.

    I am not sure how far this news is true. People who have direct information of the ground reality can throw more light on this issue.

    .

  16. //….பிரிட்டிஷார் எழுதிவைத்த சரித்திர நிகழ்வுகளை ஆணித்தரமாக எதிர்த்த அம்பேத்கர் அதே வெள்ளையர்கள் சமஸ்கிரதம் சரியாக புரியாமல் வேண்டும் என்றே பல பொய்யான இந்துமதக் கொள்கைகளை சித்தரித்ததை அப்படியே உண்மை என்று நம்பி ஏற்றுக்கொண்டு இந்து மதத்தை தூற்றியது தான் எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது….//

    வேதம்கோபால் அவர்களே,

    உங்களுக்கு யாரோ தவறான தகவல்கள் கூறி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

    பிரிட்டிஷார் கூறிய பொய்யான இந்துமதக் கொள்கைகளை நம்பியது அம்பேத்கர் இல்லை. ஆச்சாரவாத பார்ப்பனர்களும், மற்ற உயர்த்தப்பட்ட சாதியவாதிகளும்தான்.

    அம்பேத்கர் அவருடைய புத்தகங்களில் இப்படிப்பட்ட இந்துமதக்கொள்கைகள் பொய்யானவை என்பதை மிகத் தெளிவாகவே கூறியுள்ளார்.

    அவர் தூற்றியது இந்த சாதியவாதிகளை மட்டுமே. அவர் எதிர்த்தது இத்தகைய சாதியப் போக்கிலிருந்து திருந்த விரும்பாத இந்து “சமூகத்தை”த்தான். இந்து “மதத்தை” அல்ல.

    .

  17. //…அப்போ புத்த மதத்திற்கு போகலாமா?…//

    தாராளமாகப் போகலாம் சிங்கமுத்து. புத்த மதமும் இந்து மதங்களில் ஒன்றுதான்.

    பௌத்த, சீக்கிய மதங்கள் இந்து மதங்கள் இல்லை என்ற பொய்யை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றுதான் ஆரம்பித்துவைத்தது. இந்தத் தீர்ப்பு எல்லா மாநிலங்களிலும் அமலில் இல்லை. உதாரணமாக, குஜராத்தில் பௌத்த மதத்தை இந்து மதம் என்றுதான் அரசு நிர்ணயித்திருக்கிறது.

    பௌத்தம் சரணம் கச்சாமி ! ஓம் மணி பத்மே ஹூம் !

  18. திராவிடன் (தென்னாடுடையான்)னுக்கு:

    உயர் சாதி இந்துக்கள் தான் அதிக அளவில் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
    ——————-////////////////////////////////———————————————-
    ஆதாரம் ? நீங்கள் சொல்வது ஆதாரமற்றது,
    எனக்கு தெரிந்து இஸ்லாமுக்கு மாறிய ஒருவரும் உயர்சாதி என்று சொல்லப்படும் பிரிவினரில் இல்லை /////

    இந்த ஒன்றே போதும் நீங்கள் ஒன்றுமே தெரியாதவர் என்பதற்கு!
    சேஷாசலம் என்ற பெரியார் தாசன் யார்? தலித்தா?
    இந்திரா காந்தி ஏன் பைரோஸ் கானை மணக்க வேண்டும்?
    இஸ்லாத்துக்கு மாறிய மகாத்மா காந்தி ஜி யின் மூத்த மகன் தலித்தா?
    என் வீட்டுக்கு முன்னாள் ஒரு குல்லா போட்ட ஐயர் மக்காவுக்கே போய் வந்து விட்டார்!
    /////உயிர்பயம்தான் காரணம் மாறாவிட்டால் கண்ணதிரே குடும்ப பெண்கள் கற்பழிக்கபடுவார்கள் என்ற அச்சம் தான்./////

    அப்படி நடந்திருக்குமானால் ஒரு இந்து கூட இந்தியாவில் இருந்திருக்க மாட்டான். உங்கள் பொய்க்கும் அபாண்டபழிக்கும் எல்லையே இல்லையா?

  19. 800 years India ruled by Sulthans and Mughals. Nearly 200 years India ruled by Britishers. Hindusim is not ruined. It has no religious country in this world. It is really wonderful. Hindus never compel any one to read Bhavat Geetha Ramayana and Mahabharata. Hindus never try to convert to any other religious people. It is Great.

  20. To the creator or the ones who maintain this site, the first and the second part of this article do not appear to load. Can you please look in to it?

  21. //Aryan invasion has been proven by genomic technology:

    https://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece//

    I read both this article as well as the paper that was being discussed in the above article.

    This paper as well as the article published in Hindu have been criticized for incomplete analysis. The samples taken are not from Indians living in India. But the migrants of Indian descent from foreign countries. For South India, only Telugu people’s DNA was analyzed, etc.

    We should not forget the simple fact that the newspaper ‘The Hindu’ is actually ‘Anti-Hindu’. All the articles published in that newspaper are notorious for their anti-Hindu bias. Giving that article as a proof of the Aryan invasion theory is like the blind leading the pack

  22. To Mr. Arisenan,

    What you have is Chauvinism and boastfulness of predecessors’ deeds. Unless and until we are open-minded to receive and accept hard realities, we will never be progressive.

    If we keep finding reasons to the established facts, we will perish. Remember Spartans perished due to them having had refused to change.

    Only the society that is always open minded or ready to change, will be progressive.

    With the 130 crore population, we are far and far behind when compared to those small and medium populous nations. Why is it so? Simple – Varnas.

    Unless and until we come out of religion and caste, we will never be progressive. Religion should be set aside as a faith and to the corner of our home. That is it. Being saturated in it or boastful of it or chauvinist of it or infuriated when it is questioned means we are still primitive and fundamental.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *