அட்சய பாத்திரம்

 

பங்களூருவின் ஹரே கிருஷ்ணா கோவிலுக்குப் பின்னால் இருக்கும் அந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒரு ஹைடெக் சமையல் அறை. கட்டிடத்தின் அருகில் நிறுவப்பட்டிருக்கும் சேமிப்புக் கிடங்கில் ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசியிருக்கிறது. அதிலிருந்து கம்ப்யூட்டரின் கட்டளைப்படி பக்கெட் கன்வேயர்களின் மூலமாக அன்றையத் தேவைக்கான சுத்தப்படுத்தப்பட்ட அரிசி அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஒரு மிகப்பெரிய அறையில் இருக்கும் பிரம்மாண்டமான பிளாஸ்டிக் தொட்டிகளில் நிரப்புகிறது. அதன் கீழ் உள்ள வால்வுகளை இயக்குவதன் மூலம் அரிசி குழாய்களின் வழியே இரண்டாம் தளத்திற்குப் பாய்கிறது. இதைப் போலவே பருப்பும் மற்றொரு குழாய் மூலம் செல்லுகிறது. இரண்டாம் தளத்தில் அரிசி நீரில் கழுவப்பட்டுத் தரையிலிருக்கும் பெரிய குழாய்களில் கொட்டப்பட்டு அது முதல் தளத்திலிருக்கும் நீர் கொதித்துக் கொண்டிருக்கும் எவர்சில்வர் கொதிகலன்களில் விழுகிறது. இதே போல் மிஷின்கள் அழகாக வெட்டித் தள்ளும் காய்கறிகளும் பருப்பும் முதல் தளத்திற்கு வருகிறது. மிக அதிகமான நீராவியினால் இயங்கும் அடுப்புகளில் 110 கிலோ சாதம் 20 நிமிடங்களிலும், 1200 லிட்டர் சாம்பார் 2 மணி நேரத்திலும் சீருடை, கையுறை , மாஸ்க் அணிந்த சமையல் மேற்பார்வையாளர்களின் கண்காணிப்பில் ரெடி..முதல் தளத்திலிருந்து  தரைத் தளத்தில் சாம்பாரைப் பெற வால்வுகளுடன் கூடிய குழாய் வசதி. தரைத் தளத்தில் குழாயில் கொட்டும் சாம்பாரையும் சறுக்குமர வாய்க்காலில் சறுக்கிவரும் சாதத்தையும் ஆவி பறக்க ஹாட்கேஸ்களில் பாக் செய்யும் பணி.. வரிசையாக அணிவகுத்து நிற்கும் அவைகள் நிரப்பப்பட்டவுடன் பெல்ட் கன்வேயரில் பயணித்து முனையில் அதனைத் தொட்டுக்கொண்டிருக்கும் லாரியில் ஏறுகிறது. இந்த ஹாட்கேஸ்கள் அசையாமல் இருக்கும் வசதியுடன் அமைக்கப் பட்டிரும்க்கும் அந்த லாரிகளில் முதலில் தரவேண்டியது கடைசியில் என்ற ரீதியில் அடுக்கப்பட்டபின், ஒரு செக்யூரிட்டியுடன் பறக்கிறது. அந்த வினாடி முதல் லாரியின் போக்கு ஜீ.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. செல்லுமிடம் பெங்களூரு நகரின் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள். தயாரிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு.

தினசரி காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை பரபரப்பாக இயங்கும் இந்த நவீன சமையலறையை நிறுவி நிர்வகித்து வருபவர்கள் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர். கிடைத்த சிறிய இடத்தில்

புத்திசாலித்தனமாக அதிநவீனத் தொழில் நுட்பங்களுடன், சுகாதாரமான சூழ்நிலையில், திறமையான நிர்வாகத்தில் இயங்கும் ஒரு தொழிற்சாலையைப் போல நிறுவப்பட்டிருக்கும் இதற்கான செலவு 9 கோடி. நீராவியின் சக்தி மட்டுமே பயன்படுத்தப்படும் இந்தச் சமையலறையில் பயன்படுத்தப்படும் எரிபொருள் கார்பனை வெளியிட்டுச் சூழலை மாசு படுத்தாத குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட பாளங்கள். இந்த மாதிரியான சமையல் அறைகள் கர்நாடக மாநிலத்தில் 10 நகரங்களில் இயங்குகிறது. மாநிலம் முழுவதும் 2400க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களுக்கு உணவு அளிக்கிறது. இஸ்கான் இயக்க நிறுவனத்தினர் பிரபுபாதனந்தர் பல ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கிய இந்த அறப்பணி இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து தனி அறக்கட்டளையாகச் செயல்படுகிறது. அறக்கட்டளையின் பெயர் ‘அட்சய பாத்திரா‘. கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடையில் இயங்கும் இந்த அறக்கட்டளையின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பேற்றிருப்போர் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தினர்.

பங்களூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள 387 பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்களுக்குத் தினமும் உணவு வழங்கும் இவர்கள் முதியோர் இல்லங்கள், தனியார் நடத்தும் மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளுக்க்உம் இப்போது உதவி செய்கிறார்கள். 2000-ல் தான் கர்நாடக அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கத் திட்டமிட்டது. அப்போது சிறிய அளவில் சிறப்பாக இஸ்கான் செய்து வந்த பணியைப் பார்த்து அவர்களால் அரசுப் பள்ளிகளிலும் இணைந்து செய்ய முடியுமா என்று கேட்டதின் விளைவாகப் பிறந்தது இந்த ‘அட்சய பாத்திரம்’. இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் இவர்கள் பணி விரிந்திருக்கிறது. 2001ல் சுப்ரீம் கோர்ட் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று அறிவித்திருப்பதால் பல மாநில அரசுகளும் இன்று மதிய உணவுத் திட்டத்தைத் துவக்கியிருக்கின்றன. அந்த அரசுகளுக்கு இந்த அறக்கட்டளஇ உதவியிருக்கிறது. 8 மாநிலங்களில் 10 கிச்சன்களை நிறுவி நிர்வகித்து வருகிறார்கள். வடமாநிலங்களில் ஆயிரக்கணக்கில் சப்பாத்தி தயாரிக்க இயந்திரங்கள் உபயோகிக்கிறார்கள். மாநில அரசுகள் தரும் பணம் மொத்தச் செலவில் 30% தான். மீதியை நன்கொடைகள் மூலம் நடத்துகிறார்கள். மத்திய அரசு நன்கொடைகளுக்கு வரிச்சலுகை அளித்திருக்கிறது. இன்று நாடுமுழுவதும் 12 லட்சம் குழந்தைகளுக்குச் சுத்தமான, ஆரோக்கியமான மதிய உணவை வழங்குகிறது. ‘அட்சய பாத்திரா’ இதைத் தமிழகத்திலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ” நாங்களே சிறப்பாகச் செய்கிறோம் ( இரண்டு முட்டை சமாசாரம் ). தொண்டு நிறுவனத்தின் உதவி தேவையில்லை” எனத் தமிழக அரசு தெரிவித்து விட்டதாம்.

 

 

செய்தியும் படங்களும்:  ரமணன்.

18 Replies to “அட்சய பாத்திரம்”

  1. திரு ரமணன் அவர்களே
    கட்டுரைக்கு மிக்க நன்றி.
    இன்று காலையில் தான் ஒரு நண்பர் “நமக்கெல்லாம்” எதையும் நிர்வாகம் செய்யும் திறன் இல்லை. மேல்நாட்டினர் தான் இதில் திறமைசாலிகள் என்றார்.
    நமக்கெல்லாம் அடுத்தவர்க்கு உதவி செய்யும் எண்ணமும் இல்லை -அதுதான் நமது பலவீனம் என்றெல்லாம் தவறான எண்ணம் பலரிடையே இருக்கிறது.
    நமது டப்பாவாலாக்களை இங்கிலாந்து இளவரசர் பாராட்டினால் நாமும் பாராட்டுவோம்.
    இது போன்ற நேர்மறையான , ஆரவாரக்கூச்சல் போடாமல் செய்யும் தர்ம காரியங்களை [ 30 % போக மிச்சம் 70% பெரிதல்லவா?] பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.
    நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.
    அன்புடன்
    சரவணன்

  2. DEAR Mr.RAMANAN,

    EXCELLANT EFFORT AND WE ALL HINDUS MUST START SUCH SIMILAR ACTIVITY IN TAMILNADU ALSO.

    THIS FOR PILGRIMS AND DESTITUTES AND MAY BE WE CAN START THIS AT RAMESHWARAM FIRST …

    DEAR READERS ,
    THOSE WHO ARE READING THIS MUST UNITE OURSELVES AND FORM AN SYSTEM AND CONTRIBUTE TO THE SAME.

    REGS

  3. இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. மற்ற விசயங்களை போல சமையல் விசயத்திலும் நாம் தான் சிறந்தவர்கள்.

    ஆயிரம் வருடத்திற்கு முன்பே கடல் கடந்து நாம் வாணிபம் செய்து உள்ளோம் அப்படி என்றால், கண்டிப்பாக உணவு பதப்படுத்தல் மற்றும் அதற்கு ஏற்ற மருத்துவ முறை என அனைத்திலும் திறமைசாலிகளாக நமது மூதாதையர்கள் இருந்து இருப்பர்.

    வரலாறு இவ்வாறு இருக்க மானம் கெட்ட காங்கிரஸ் அரசு, வாஸ்கோடகாமா என்ற கடற் கொள்ளையன் பெயரில் ரெயிலை விட்டு என்னமா இவன் வந்த பின்பு தான் நமக்கு மற்ற நாடுகளுடன் கடல் வழி தொடர்பே ஏற்பட்டது என்று கூறிக் கொண்டு உள்ளனர்.

    அறிவு கெட்டத்தனமாக, இந்தியாவை கண்டுபிடித்தவர் யார் என்ற கேள்விக்கு வாஸ்கோடகாமா என்று நானும் பள்ளியில் படித்தேன். இதை நினைக்கு பொழுது எனக்கு அசிங்கமாக இருக்கிறது.

  4. தமிழகத்தில் சுமாராகத் தான் செய்கிறார்கள். நான் பள்ளியில் படிக்கும் பொழுது நேரடியாக பார்த்து இருக்கிறேன். ஆனால் தற்போதைய நிலை என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.

    நமது அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால், கும்பகோனம் போன்ற விபத்துகளை தவிற்கலாம். எல்லாவற்றிகும் மேலாக சுகாதாரமான உணவு பொருட்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

    பெரும்பாலான் நேரங்களில் சுகாதாரமற்ற காய்கறிகள் தான் குழந்தைகளுக்கு கிடைத்து கொண்டு இருந்தன. தற்போதும் அதே நிலையில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பேசாமல், இது போன்ற திட்டத்தை அரசே ஏற்படுத்தலாம். கார்பரேட் உதவியும் கிடைக்கும். குறைந்த பட்சம் கார்பரேட் பணம் மத மாற்ற வியாபாரிகள் கையில் செல்லாமல் நல்ல விசயங்களுக்கு பயன்படும்.

  5. நல்ல தகவல். நல்ல சேவை.
    ஒரு சந்தேகம். அரிசி பருப்பை சுத்தம் செய்யும் முறையை விளக்கிய மாதிரி அந்த machine , குழாய்கள் இதை எல்லாம் எப்படி சுத்தம் செய்வார்கள் என்பதையும் சொல்லி இருக்கலாம்.

  6. பசித்தோருக்கு உணவிடும் அதிலும் குழந்தைளுக்கு உணவிடும் இது போன்ற பணிகளை வரவேற்போம். வாழ்த்தி, வணங்குவோம் .

    இது போல ,பெரிய அளவில் திருப்பதி இஸ்கான் அமைப்பும் , பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குகிற பணியை தினசரி செய்து வருகிறது. அனைவருக்கும் இந்த நற்பணிகளின் விவரத்தை கொண்டு சேர்ப்போம்.

    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

  7. திராவிடன் என்னை எங்குமே எதிர்கருத்துக்களைப் போடுகிறீர்களே ஏன் ? என்றார். சரி. இக்கட்டுரைப்பெயர் வினோதமாக இருக்கிறதே என்று படித்தேன். Let me attempt a positive response. But alas, again I hav to differ as follows.

    ரமணன்!

    மதிய உணவு அரசுப்பள்ளிகளில் அரசே தருகிறது. இப்போது இஸ்கான் அரசிடமிருந்து 30 விகதப்பணமும் தாங்களாகவே 70 விகிதப்பணமும் போட்டு அவ்வுணவை பள்ளி மாணாக்கருக்கு வழங்கி வருகிறார்கள்.

    இங்குதான் இஸ்கான் தவறு செய்கிறது.

    இங்கு முதலில் பின்னூட்டமிட்டவர்; ‘நம்மை பிறருக்கு உதவி செய்யாதவர்கள் என்று சொல்பவருக்கு இஃதொரு நல்ல பதில்” என்று இறும்பூதெய்கிறார்.

    என் பார்வை இஸ்கான் இப்படிப்பட்ட செயல்களை வேறிடங்களில் செய்யலாமென்பதே. அவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அளிக்கிறார்களல்லவா? அதைப்போல பலவிடங்கள் இருக்கலாமில்லையா ? ஆனால் பள்ளிமாணவர்கள் வேண்டாம்

    ஏனென்றால் பள்ளி மாணவர்களுக்கு அளிப்பது அரசின் கடமை. அரசு மக்களிடமிருந்து வரி பிரிக்கிறது. அதையே பயன்படுத்துகிறது. நானறிந்தவரை அது புரவலர்களிடமிருந்து பெறுவதில்லை. இப்படி அரசு செய்யும்போது நீங்களும் நானும் – அதாவது வரிகொடுப்போர் – பெருமைப்பட்டுக்கொள்ளலாம். “இவ்வேழை மாணவர்களுக்கு நம்மால் ஒருவிதத்தில் உதவி செய்யமுடிகிறதே” என்று.

    In the ad released by NCT of Delhi for Sales tax payments in time, they tell the citizens how and where the proceeds are and will be sent. They put the break-up of percentages in the ad. Two years ago, when an overbridge in East Delhi, was opened for the public in a gala ceremony, in the ad for the ceremony, the govt said: This bridge has been built using only the revenue from the a/c of exice duty paid by the citizens of the Delhi. We thank them”

    சின்னஞ்சிறு மாணவர்கள் நாட்டின் எதிர்காலங்கள். அவர்கள் ஆரோக்கியம் நாட்டின் ஆரோக்கியம். இதை அரசேதான் செய்ய வேண்டும். It is the duty of every Government to perform such social welfare measures, in particular, measures involving young and poor children.

    அரசின் கடமையை இஸ்கான் எடுத்துக்கொள்வது இன்னொருவர் வேலையை – அவருக்குச் தானே செய்யவியலுமென்று தெரிந்தும் – எடுத்த்ப்போட்டுச்செயவது அந்த இன்னொருவரைச் சோம்பேறி ஆக்கும். ISKAN is making Karnataka government lazy. And that Government Govt will divert the moeny earmarked for mid day meals scheme to some other questionable purpose.
    Thank God, Government of TN has not abdicated its responsibility. It is right to have rejected the offer from ISKON.

    Why not the Karnataka Government buy the entire unit from ISKON and do the work employing their own workers; or buy the unit along with the extant workers ? ISKON can use the proceeds of the sale in financing and executing other charitiable activities, say, for example, running an asylum for lepers. Like lepers, they r many a negeleted section of society which needs succor but it is not forthcoming from any sources to them, including the govt. ISKON can go to them.

  8. அறிவுள்ள ஜோ அவர்களுக்கு

    //
    சின்னஞ்சிறு மாணவர்கள் நாட்டின் எதிர்காலங்கள். அவர்கள் ஆரோக்கியம் நாட்டின் ஆரோக்கியம். இதை அரசேதான் செய்ய வேண்டும்.
    //

    அரசு செய்யும் லட்சணம் தாங்காமல் தான் இஸ்கான் செய்கிறது. அரசு செஞ்சு தொலைச்ச ஏன் லோக்பால் தேவை.

    அதாவது இங்கு வரும் கட்டுரைகளுக்கேலாம் ஏதாவது எதிர்வினையாக உங்களின் அதி மேதாவிதனத்தை காட்டி எழுதுவது அப்புறம் பின்னூட்டங்களை திசை திருப்புவது.

    இஸ்கான் ஏன் இதை செய்கிறார்கள் என்று அவர்கலுக்கு நன்றாகவே தெரியும் – ஏன் என்று எமக்கும் தெரியும்.

    மிசனரிகள் அரசு செய்ய வேண்டிய காரியங்களை ஏன் செய்து மடமார்ரம் செய்கிறது. ஒரு நோஞ்சான் அரசு அதன் செயல் இன்மையை பயன் படுத்தி மிசனரிகள் கூட்டம் சேர்ப்பது. இதை தான் ப்ளான் பண்ணி செய்தாகிவிட்டது.

    இந்தியாவின் தர்ம கட்டமைப்புகளாக அரசர்களும், கோவில்களும், மடங்களும் இருந்தன. இம் மூன்றையும் கொள்ளை அடித்து விட்டு ஸ்தம்பிக்க செய்து இந்தியாவில் ஏழ்மையை படர விட்டு அதன் மூலம் எவ்வளவு மத மாற்றம் செய்தாகிவிட்டது. இந்தியாவை உரு குழைய வைத்தாகிவிட்டது.

    இஸ்கான் போன்ற மடம் சார்ந்த நிறுவனங்களும் கோவில்களுமே முன் காலத்தில் இங்கு நேர்மையான தர்ம காரியங்களில் ஈடு பட்டு வந்தன. அதை புனர் உத்தானம் இப்போது தான் செய்துள்ளோம் – உங்கள் அறிவுரையை இத்தாலியில் சென்று சொல்லவும். பற்ற படி பாட்டில் மேல் எதோ இருக்குமே அப்படி இரும்.

    //
    Why not the Karnataka Government buy the entire unit from ISKON and do the work employing their own workers; or buy the unit along with the extant workers
    //

    கவர் மெண்டு இதை நடைமுரை படுத்த ஒரு tender விடும். அந்த டெண்டரை ஒரு மிசனரி வாங்குவார் – அப்புறம் ஏசுவால் தான் சோறு என்று சொல்லி மத மாற்றம் ஆரம்பிக்கும். இஸ்கான் எங்கேயாவது இது கிருஷ்ணர் கொடுத்த சோறுன்னு தப்ப அடித்து கொள்கிறதா. மதம் மாறுகிறதா? இது மாதிரி ஒரு கீழ்த்தனமான வேலையே மிசனரிகள் மட்டுமே செய்யும். கவர்மெண்டு கையில் போனால் என்ன ஆகும் என்று எல்லாருக்கும் தெரியும்.

    ஒடனே சும்மா ஒரு நூறு கம்மென்ட்டு எழுத வேண்டாம்- ஒரு மாறுதலுக்கு பாட்டில் மேல் உள்ளதை கிட்டு இருங்க

  9. திரு ரமணன் அவர்களின் கட்டுரை அட்சய பாத்திரம் ஹரே கிருஷ்ண இயக்கத்தின் ஏழைக் குழந்தைகளுக்கான அன்னதான த்திட்டத்தினை சொல்கிறது. அரசு வழங்கும் சாப்பாட்டைவிட அட்சயப்பாத்திர உணவு சுத்தமாக சுவையாக உடலுக்கு ஏற்றதாக இருக்கும். அதுவும் ஸ்ரீ கிருஷ்ணப்பிரசாதம் போல இருக்கும். இப்படி இந்தியா முழுதும் கிராமபுற நகர்ப்புற வறிய குழந்தைகளுக்கு அன்னமிட அவர்கள் முயல்வது நன்று. அப்படி செய்தால் நாட்டில் ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது நன்கு படிப்பது நடக்கும். பள்ளியில் சேராமல் இருப்பது, இடைனிற்றல், தோல்வி இவை மிகமிகக் குறையும்.
    அன்னம் போதாது தான் அன்னத்திற்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலை மாற வழி செய்வது சிறந்தது எனினும். இது தாற்காலிக நிவாரணம் எனினும் உடனடி நிர்வாரணம்.
    திரு ஜோ போன்றவர்கள் இதில் குறை காணலாம் காரணம் அவர் நோக்கில் அது இருக்கிறது. இஸ்கான் தனது திட்டத்திற்கு நிதி யுதவி பெறுவது உண்மையாக இருக்கலாம் அதில் தவறென்ன. எழுபது சதம் தொழில் நிறுவனங்களிடம் பெறுகிறதே. அரசு இந்த நிதியை மற்ற சமூகப்பாதுகாப்புத்திட்டதிற்கு செல்விடுமே. தொழில் நிறுவனங்கள் அரசுக்கு பணம் தானம் தரா. மாறாக சிறப்பாக செயல் படும் சமூக அமைப்புகளுக்கு அவை ஆதரவு வழங்குகின்றன. இதில் தவறில்லை. அரசுக்கு மட்டுமல்ல கார்பரேஸன் களுக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது. அதனை அவர்கள் சிறப்புர செய்ய இஸ்கான் வழிவகுக்கிறது.
    யாருக்கு என்ன சேவை எப்படி செய்யவேண்டும் என்பதை இஸ்கான் அறியும் மிக நன்றாகவே. அந்த அமைப்புக்கு அறிவுரை பரிந்துரை வழங்க ஜோவுக்கு தகுதி, தெளிவு, பக்தி நிச்சயம் இல்லை.
    இது தமிழ் ஹிந்து இங்கே தமிழில் எழுதவேண்டும். ஆங்கிலத்தில் எழுதினால் உயர்வென்னும் மாயை அழிக. ஆங்கிலம் அறிந்தோறும் தமிழில் எழுதி ஆனந்தம் அடைக.

  10. @Jo.Amalan , நிஜமாலுமே இது ஒரு நல்ல கருத்து தான்.

    அதே மாதிரி , கல்வி கொடுக்கவேண்டியதும் அரசின் கடமையே அல்லவா? அதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து பள்ளி/கல்லூரிகளையும் அரசே நடத்தலாம். எதற்காக பாவம் கிறிஸ்துவர்கள் கஷ்டப்படவேண்டும். வாருங்கள் நாம் போராடுவோம்.

  11. உண்மை தான். இஸ்க்கான் பற்றி இறும்பூது எய்தி இருக்கக்கூடாதுதான்.
    வாஸ்- கோணல்- காமாகளைப்பற்றி, காலனீய அன்புள்ளங்களைப்பற்றி, தொழு நோயாளிகளுக்கு உதவுவதாக சொல்லி கொண்டு, தான் கோடிகளில் புரளுவோரைப்பற்றி தான் இறும்பூது எய்த வேண்டும்.இனிமேல் திருத்திக்கொள்கிறேன்.

    நல்ல டேக்-ஓவர் யோசனை தங்களது. சூப்பர் . கர்நாடகத்தில் காங்கிரஸ் வந்தால் அதை நிச்சயம் செய்யும்.
    நன்கொடை பணத்தில் ஏதும் எதிர்பாராமல் இஸ்க்கான் போன்றவர்கள் செய்வது மடமை தான். பாவம், கோயில்களை அரசாங்கம் அழகாக நிர்வாகம் செய்வது போலவே தனியார் சேவை நிறுவனங்களையும் மிக அழகாகவே நடத்துவார்கள்.

    [ஒரு சில நாட்களாக பின்னூட்டங்களை படித்து இன்ஸ்டண்டாக அறிவு ஜீவியாகி விட்டேன் பாருங்கள். ரொம்ப தேங்க்ஸ் ]

    சரவணன்

  12. ஜோ அமலன்,

    நான் உங்களைப்போல ஒரே எதிர்க்கருத்துக்களைப் பதிபவன் இல்லை. உங்கள் கருத்தில் கூட ஒன்றிரண்டை ஆதரித்து இதே தளத்தில் பதிந்திருக்கிறேன். I tend to agree with you on some more counts as well.

    And yet,

    ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையை நீங்கள் நினைவு படுத்துகிறீர்கள்.

    ///சின்னஞ்சிறு மாணவர்கள் நாட்டின் எதிர்காலங்கள். அவர்கள் ஆரோக்கியம் நாட்டின் ஆரோக்கியம். இதை அரசேதான் செய்ய வேண்டும். It is the duty of every Government to perform such social welfare measures, in particular, measures involving young and poor children.///

    இஸ்கான் செய்கிறது என்றவுடன் உங்களுக்கு ஏன் வலிக்கிறது? இதையே நீங்கள் எத்தனை தடவை மதம் மாற்றும் பல்வேறு கிறிஸ்தவ மிஷநரிகளிடம் சொல்லியிருக்கிறீர்கள் என்பதை இங்கே சொல்ல முடியுமா? அவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த உடனடி ஆண்டுகளில் பால் பவுடரில் துவங்கி, பின்னர் படிப் படியாக பிரெட், என்று பரிணாம வளர்ச்சி பெற்று போர்டிங் பள்ளி நடத்திய/ நடத்திவரும் போதெல்லாம் இதே அறிவுரையை அவர்களிடம் நீங்கள் வழங்கியிருக்கிறீர்களா? ஆமென்றால் உங்களிடம் நேர்மை இருக்கிறது. இல்லை என்றால் நீங்கள் ஹிந்து ஏழைகளுக்காகவும், தாழ்த்தப் பட்ட என்போன்றோருக்காகவும் வடிப்பது நீலிக் கண்ணீர்.

  13. என்ன அமலன்…….. நண்பர்களின் இந்த பதிலடி போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா? [ வேணும்னா சொல்லுங்க…என் பங்குக்கு நானும் கொஞ்சம் போடறேன் ]

  14. அரசு எல்லா பணிகளையும் செய்ய முடியவில்லை என்பதால் தான் , தனியாரால் நடத்தப்படும் பல சேவை அமைப்புக்கள் , பல தர்ம காரியங்களை செய்து வருகின்றன.

    அரசாங்கம் வந்து இந்த ஏழை மாணவர்களின் பசி தாகம் போக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றால் , பரலோகம் போக வேண்டியது தான்.
    திரு அமலன் அவர்களின் கருத்து வருந்தத்தக்கது.

  15. இந்தியா போன்ற பரந்த , நூறு கோடிக்குமேல் மக்கள் தொகை உள்ள நாட்டில், அரசே எல்லா பணிகளையும் செய்வது இயலாத காரணத்தால் தான், வருமானவரி சட்டத்திலேயே , தர்ம காரியங்களை செய்யும் நபர்களுக்கு, விசேஷ வரிவிலக்குகள் ஏராளமாக வழங்கப்பட்டு உள்ளன. இது தவறு என்றால், நமது நீதிமன்றங்கள் எப்போதோ, வருமானவரி சட்டம் செல்லாது என்று சொல்லி இருக்கும்.

    எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், திரு அமலன் அவர்கள் சொல்லியபடி , அரசு மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால், பாதி மாணவர்களுக்கு சாப்பாடும் கிடைக்காது, நாட்டிலேயே பெரும் எதிர்ப்பு உருவாக்கி அரசே கவிழ்ந்துவிடும். இந்த அரசு எப்படி கவிழ்ந்தாலும், நம் நாட்டுக்கு நல்லதே ஆகும். நல்லது நடக்கட்டும்.

  16. Many among our Hindu brothers still believ that most of the social service is done by Christian Missionaries. Many Hindu Religious and Social organisations like Sri Ramakrishna Mission, ISCKON etc do wonderful social projects; only thing they are not given the due publicity by the prejudiced, pseudo-secular media. My heartfelt thanks for bringing this really wonderful work done by Akshaya Patram into the public domain. Everyone of us must send this info by email to all our contacts, be they relatives or friends, in our mail list.

  17. தமிழக அரசு இந்த சேவைக்கு மறுப்பு தெரிவித்தற்கான காரணம் என்றவென்றால் சத்துணவு திட்டத்தை வைத்து (இரண்டு முட்டை) அரசியல் செய்து முடியது அல்லவா. குழந்தைகள் எக்கேடு கெட்டால் என்ன எங்களுக்கு அரசியல் நடந்தால் சரி………

  18. நான் பெங்களூரில் இருக்கிறேன் . இஸ்கான் அமைப்புக்கு நான் அடிக்கடி செல்வேன் .அட்சய பத்திரத்துக்கு என்னால் முடிந்த வரை கொடுத்துள்ளேன் .தமிழ் நாட்டில் ரொம்ப வருடங்களாக மதிய உணவு திட்டம் உள்ளது . ஆனால் கர்நாடகாவில் இது ஆரம்பிக்கவில்லை . இஸ்கான் முதலில் சில அரசு பள்ளிகளுக்கு ( எங்கே ஏழை எளிய மாணவர்கள் படிக்கிறார்களோ ) முதலில் சிறிய அளவில் ஆரம்பித்தார்கள் . கர்நாடக அரசாங்கம் பட்ஜெட் இருந்ததால் (அதற்கான organisation இல்லாததால்) சிறிது பணம் கொடுத்து எல்லா பள்ளிகளுக்கும் உணவு கொடுக்குமாறு கேட்டுகொண்டது . அரசு செய்யவேண்டியதை செய்யவேண்டும் என்பது பல விஷயங்களுக்கு பொருந்தும் . ஆனால் செய்வதில்லை . இது வரை 30% கொடுக்கிறார்களே என்று சந்தோஷ பட வேண்டும். தமிழ் நாட்டில் நான் பார்த்தவரை ஒவ்வோரரு பள்ளியும் தனியாக சமைக்கிறார்கள் . பெரிய நகரங்களில் தமிழ் நாடு அரசு இஸ்கான் போல அமைப்பை ஏற்படுத்தி நல்ல ஆரோக்யமாக கொடுக்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *