மூவருக்குத் தூக்குத்தண்டனை. தூக்குத்தண்டனை சரியா என உடனே கிளம்பி விட்டது சர்ச்சை.

அப்ஸலை தூக்கில் போட வேண்டும் என்று ஆரம்பித்தால் ஈடுகட்ட இதோ மூன்று தமிழ் உயிர்கள். நல்ல சமன்பாடு. காப்பாற்றப்பட்டது மதச்சார்பின்மை.
அப்ஸலுக்கும் பேரறிவாளன் குழுவுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் தவறான முடிவுகள் எடுத்து அதில் குட்டையைக் குழப்பியதில் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது.
விடுதலைப்புலிகளை ராஜீவ் தலைமையிலாலான அன்றைய இந்திய காங்கிரஸ் அரசு மிக மோசமாக குறைத்து மதிப்பிட்டது. அதன் விளைவாக பல நூறு இந்திய வீரர்களைப் பலிகொடுத்ததுடன் ராஜீவுடன் சேர்த்து 14 இந்திய உயிர்களைப் பறித்தது.
இப்படுகொலையில் இன்னும் அவிழாத முடிச்சுகள் உண்டு. ஆனால், ஒன்று தெளிவு. ராஜீவ் கொலையை அரங்கேற்றியவர்கள் விடுதலை புலிகளின் அம்புகள் என்றால் விடுதலை புலிகளே மற்றொரு சக்தியின் அம்புகளாக மாற்றப்பட்டனர் என்பதுதான் உண்மை.
ஏன் மரகதம் சந்திரசேகர் விசாரிக்கப்படவில்லை? ஏன் வேண்டுமென்றே கால தாமதம் செய்யப்பட்டு சிவராசனின் தற்கொலை அனுமதிக்கப்பட்டது? என்றெல்லாம் எழும் கேள்விகள் கேள்விகளாகவே உள்ளன.
அவற்றுக்கான பதில் இனி என்றென்றும் கிடைக்காதவாறு விடுதலைப் புலிகளும் கூடவே எண்ணிக்கை தெரியாத அளவு ஈழத் தமிழர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்.
விடுதலைப் புலிகள் ஒன்றும் யோக்கியம் இல்லை. சரியான சதவிகிதத்தில் ஜனநாயகத்தையும் ராணுவ பலத்தையும் கலந்து ஈழத்தமிழரின் நல்வாழ்வை நோக்கி முன்னேறவில்லை அவர்கள்.
மாறாக, அதிகார பலம் தங்கள் இயக்கத்துக்கு மட்டுமே இருக்க ஜனநாயக விரோதிகளாக முனைப்புடன் செயல்பட்டனர். இது அவர்களை இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளை நம்ப தூண்டியது.
தங்கள் சகோதர ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளை அழித்தனர். தங்களைத் தாங்களே அழிவுக் குழியில் தள்ளினர். தங்களுடன் ஈழத்தமிழர்களின் இறுதி நம்பிக்கைகளையும் சிங்கள பேரினவாதிகளின் கையில் காவு கொடுத்தனர்.
இங்கு சுகபோக வாழ்க்கையும் உணர்ச்சிகர நாடகமேடை கோஷங்களையும் அரங்கேற்றிய அண்ணாவிகள் புலிகளின் இந்தத் தற்கொலை நிலைப்பாட்டை வீரமென புகழ்ந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் ராஜபக்க்ஷேயை நேரில் கண்ட போது குழைந்து நின்றதை நாம் அனைவருமே கண்டோம்.
ஆக ஈழத்தமிழரின் கனவு அர்த்தமற்று சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதில் காங்கிரஸின் பங்கு என்ன என்பது தெளிவான ரகசியமாகிவிட்ட நிலையில், இந்த மூன்று தமிழர்களைக் கொல்வது மிக மோசமான வக்கிரம் மட்டுமேயான ஒருவித ரத்தவெறி.
இன்னொரு விசயத்தையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். ராஜீவ் ஒன்றும் அப்பழுக்கற்ற தேசத் தியாகியோ, ஏன் ஒரு சராசரி நேர்மையான அரசியல்வாதியோ கிடையாது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடங்கி, சீக்கியப் படுகொலையை நியாயப்படுத்தியது, ஜக்மோகனைத் திரும்ப அழைக்க வற்புறுத்தி காஷ்மீர் இந்துக்களின் இனச்சுத்திகரிப்பைச் செய்ய ஜிகாதிகளுக்கு மறைமுகமாகத் துணை போனது வரை ராஜீவின் செயல்பாடுகள் மனிதகுல விரோத போக்கு கொண்டவை.
அப்ஸலின் கதை வேறு. அப்ஸல் அந்தப் பாராளுமன்ற தாக்குதலின் மூளையாகவே செயல்பட்டவன். இதை நீதிமன்ற தீர்ப்பு மிக தெளிவாக விளக்குகிறது. அவனுக்கு ஏறக்குறைய சந்தேகத்தின் அனைத்து பலன்களையும் அளிக்க முனையும் தீர்ப்பு அது. அருந்ததிராய் இத்யாதிகள் அந்த தீர்ப்பிலிருந்து ஒரு வரியை பிய்த்துக் காட்டுவார்கள்:
“…The incident, which resulted in heavy casualties, had shaken the entire nation, and the collective conscience of the society will only be satisfied if the capital punishment is awarded to the offender…”
அதாவது, இவர்களது விளக்கத்தின்படி, இந்திய கூட்டுமனது குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுத்தாலே திருப்தி அடையும் என்று தீர்ப்பு சொல்கிறதாம். ஆக இந்திய கூட்டுமனதைத் திருப்தி செய்யத்தான் அப்ஸல் தூக்கில் தொங்க விடப்படுவதாக ஒரு பிம்பத்தை வார்த்தை ஜாலங்களால் எழுப்புவார்கள் இந்த மனித உரிமை ஆர்வலர்கள்.
ஆனால் இங்கு முக்கியமான வார்த்தை ‘offender’. அதாவது “குற்றம் சாட்டப்பட்டவர்” என்பதல்ல “குற்றம் செய்தவர்” என முடிவு செய்த பிறகே நீதிபதி இந்த முடிவுக்கு வருகிறார். இதற்குப் பல ஆதாரங்களை அந்த தீர்ப்பு அளிக்கிறது. உதாரணமாக ஒன்று:
“When the Parliament was under attack, Afzal was in touch with Mohammed. Shaukat was in touch with Afzal. He was thus in contact with the co-conspirators and the deceased terrorists at the time of attack.”
இங்கு அப்சல் பாராளுமன்ற தாக்குதலின் மூளை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் அது இந்திய தேசத்தின் இறையாண்மையின் சின்னத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
எனவே ‘கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்’ என்னும் வள்ளுவர் வாக்கு அப்ஸல் விசயத்தில் உண்மை. ஏழு பாராளுமன்ற காவல் வீரர்களை கொன்ற தாக்குதலின் மூளை என இந்திய சுப்ரீம் கோர்ட்டால் தீர்ப்பிடப்பட்ட அப்ஸல் ‘கொலையிற் கொடியான்’ என்பதில் ஐயமுமில்லை அவன் களையாக களையப்படவேண்டியவன் என்பதிலும் ஐயமில்லை.
ஆனால், ராஜீவ் இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்பதைத் தாண்டி அவர் இந்திய தேசத்தின் சின்னம் அல்ல. அவர் ஒரு ஊழல் கறையும் மானுடப் பெருங்குற்றங்களின் கறையும் படிந்த ஒரு அரசியல்வாதி.
கார்கில் போரில் நம் வீரர்கள் உயிரை கொடுத்துக் கொண்டிருந்த போது காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரித்த அமைப்பில் சக-பிரசிடெண்ட் ஆக இருந்தவர் ‘அன்னை’ சோனியா. அவர் மீது தேசத்துரோக குற்றத்துக்கான நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்துவிட்டு பிறகு பேரறிவாளன், முருகன், சாந்தன் குறித்து யோசிக்கலாமே.
அதே சமயம், எந்த பயங்கரவாத தாக்குதலும் கண்டனத்துக்குரியது என்ற முறையில் ராஜீவும் அவருடன் இறந்த பதினான்கு பேருடைய மரணங்களும் கண்டனத்துக்கும் அஞ்சலிக்கும் உரியதே.
ஆனால், அதற்கு மற்ற பயங்கரவாதச் செயல்களுக்கு இல்லாத ஒரு ஒளிவட்டத்தை அளித்து மூன்று அம்புகளின் அம்புகளை பெரும் இனப் பேரழிவுகளுக்கு பின்னர் தூக்கில் போடுவது தவறானது.
எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று பேரை தூக்கில் போடுவது அநியாயமானது.

மரணதண்டனை அரசியல்கள் – 1
ஏசுவுக்கான இந்து நரபலிகள்
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!
இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்
இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!
காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று
இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?
குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்
இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)
ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்
கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு
ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்
ஹிந்து என்னும் சொல்![இனிப்பு [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/Gandhi-in-Tolstoy_Farm-with-Naidoo-150x150.jpg)
இனிப்பு [சிறுகதை]
நிர்வாண சுகதாயினி![[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்](http://www.tamilhindu.com/wp-content/uploads/ambedkar-book-islam-jihad-pakistan.jpg)
[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்
இந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்![[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்](http://www.tamilhindu.com/wp-content/uploads/islam-women-jihad-slavery1.jpg)
[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்
இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை![அமுதம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/nectar3.jpg)
அமுதம் [சிறுகதை]
சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி
வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05
ஹிந்துத்துவமும் தாழ்த்தப் பட்டவர்களும்



ஒரு தமிழனாகவும், இந்துவாகவும் இலங்கைத் தமிழர்களின் இன ஒழிப்புப் பற்றி நாம் மிகுந்த வீச்சுடன் அடிக்கடி பேசவேண்டும். ஏனெனில், அது இந்துக்களின் மீதான இன அழிப்பே.
விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு வழங்கினால், இலங்கை அரசுக்குப் பயம் வரும். அஃப்சல் குரு உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கினால் ஜிகாதிகளுக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் பயம் வரும். இந்தியா பயப்படும் நாடாக இருந்தது போதும். இந்தியர்கள் இந்துக்களாக இருப்பதால் அழிந்தது போதும்.
பங்களாதேசத்தில் இந்துக்கள் அழிக்கப்பட்டு அவர்களது மக்கள்தொகை கடுமையாகச் சரிந்துவிட்டது. பங்களாதேச இந்துக்கள் அனாதையாய் அகதிகளாயினர். ஆனால், நாம் அதை எதிர்க்கவில்லை. அவர்களுக்குக் குரல் கொடுக்க நாம் முன்வரவில்லை.
கஷ்மீரில் இந்துக்கள் அழிக்கப்பட்டபோதும் நாம் அதை எதிர்க்கவில்லை. கஷ்மீர இந்துக்கள் அனாதையாய் அகதிகளாயினர். அவர்களுக்குக் குரல் கொடுக்க நாம் முன்வரவில்லை.
வடகிழக்கு மாநிலங்களில் ரியாங்குகளைக் கிறுத்துவத் தீவிரவாதிகள் அழித்து வருகின்றனர். யாருமற்ற அனாதையாய் அவர்கள் அகதிகளாயினர். அவர்களுக்குக் குரல் கொடுக்க நாம் முன்வரவில்லை.
இப்போது நம் தமிழினத்தை அழிக்கிறார்கள். நமக்குக் குரல் கொடுக்க வேறு யாரும் முன்வரவில்லை.
நாம் பாடாய்பட்டுப் பாடம் கற்றுக்கொள்வது போதும்.
இலங்கைத் தமிழ் இந்துக்களின் இன ஒழிப்பை எதிர்ப்பதில் இருந்து, இந்துக்களை அழிக்கும், அடிமைகளாக்கும் முயற்சிகளை எதிர்க்க ஆரம்பிப்போம்.
.
திரு குளவி இந்தக் கட்டுரையிற் காட்டியுள்ள திருக் குறளுக்கு, “கொடியாரைக் கொலையில் ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனொடு நேர்” என்று பொருள் கொள்ள வேண்டும்.
//எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று தமிழர்களை தூக்கில் போடுவது அநியாயமானது //
மிகவும் கேவலமாக இருக்கிறது. கொலைபாதகக் கொடூரர்கள் தமிழ் ஹிந்துக்களாக இருந்துவிட்டால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது கொடூரமான சிந்தனை. ஹிந்துக் கொலைகாரனை ஹிந்துக்கள் காப்பாற்றினால் முஸ்லீம் கொலைகாரனை முஸ்லீம்கள் காப்பாற்றுவார்கள். கசாப்பிற்கும், அப்சல் குருவிற்கும் முஸ்லீம்கள் ஆதரவளித்து அவர்கள் முஸ்லீம்கள் என்பதாலேயே அவர்களைக் காப்போம் என்று முஸ்லீம்கள் கூறினால் அதை எப்படி ஏற்க முடியாதோ அதே போலத்தான் கொலைபாதகன் ஹிந்துவானாலும் அவன் பொது தர்மப்படி விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்றே ஆகவேண்டும்.
இப்படி கொலைவெறி ஹிந்து உயிர் வாழ்வதற்கு சாவதே சமூகத்திற்கு நல்லது. அதைச் சட்டம் செய்யும் போது தமிழன் என்கிற கேவலமான கோஷம் வருவது அசிங்கமான செயல். ஆட்டோ சங்கர் கூடத்தான் தமிழன் அவனைத் தூக்கில் போடும்போது பாரதிராஜா, திருமா போன்ற செந்தமிழ்க்கூட்டமெல்லாம் எங்கே போனதாம். இப்போது மட்டும் புதிதாக மரண தண்டனையை எதிர்த்து இவர்கள் போராட்டம் நடத்துகிறார்களாம்.
புதிதாக திடீரென இவர்களுக்கு மனித உரிமை சிந்தனை வந்துவிட்டது.
ராஜீவின் உள் நாட்டு அரசியல் நமக்கு உவப்பானது இல்லைதான்; அது வேறு விஷயம். ஆனால் அவர் கொல்லப்பட்டது, அவர் நமது அரசின் தலைவராக இருந்து எடுத்த ஒரு முடிவிற்காக என்பதை நாம் கண்டிப்பாக நினைவில் கொண்டே இந்த விஷயத்தை அணுக வேண்டும்;
பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல், நாட்டின் பிரதமராக இருந்து எடுத்த ஒரு முடிவிற்காக ஒருவர் கொல்லப்பட்டது இரண்டுமே தேசத்தின் மீதான தாக்குதல்தான் என்பதில் சந்தேகமே இல்லை.
இதில் குற்றவாளிகளின் மதம், வயது, மொழி, இதர தகுதிகள் இதெல்லாம் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் அப்பாற்பட்ட விஷயங்கள். தேசத்திற்கெதிராக எவன் கை உயர்த்தினாலும் அவன் கை அக்கணமே இற்று விழவேண்டும் என்பது நமது பார்வை. விசாரணையே பிறகுதான்; இதில் காருண்யம் நியாய வாதங்கள் நமது அரசியல் சௌகர்யங்கள் இதற்கெல்லாம் இடமே இல்லை.
மேலும், பல நிலைகளில், பல நீதி மன்றங்களில், பலவிதமான சட்ட, நியாய வாதங்களுக்குப் பிறகு இந்த தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. எய்த கருவி, அவற்றிற்குப் பின்னே மறைந்த கரங்கள் இதெல்லாம் இருப்பதாகக் கருதினால் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்; அதனோடு இதைச் சேர்த்தல் இந்த நேரத்தில் சரியில்லை.
சட்டத்தின் மாட்சிமையைப் பற்றி நமக்கு கவலையில்லையா? மேலும் ராஜீவ் கொலையையடுத்து நடந்த தேர்தலுக்குப் பிறகு (அனுதாப அலை என்றாலும்) காங்கிரசே ஆள வந்தது. அதனால் அவர் பிரமதருக்கு நிகரே. இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலை கொச்சைப்படுத்துவது சரியல்ல. இம்மூவரும் தூக்கிலேரவேண்டியது தகுதியானதே.
//..அவர் நமது அரசின் தலைவராக இருந்து எடுத்த ஒரு முடிவிற்காக என்பதை நாம் கண்டிப்பாக நினைவில் கொண்டே இந்த விஷயத்தை அணுக வேண்டும்…//
அவர் எடுத்த அந்த முடிவிற்காகத்தான் அவர் கொல்லப்பட்டாரா ?
அந்த முடிவு அவரது கொலைக்கான ஒரு சாக்காக முன்வைக்கப்பட்டது. ஆனால், காரணம் அதுவல்ல என்று பலர் கருதுகிறார்கள்.
இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆரினால் உருவாக்கப்பட்டது எல்.டி.டி.ஈ. அதற்கு ஆதரவு தருவதுதான் இந்திய அரசின் நிலைப்பாடாக இருந்தது.
ஆனால், இந்த கொள்கையில் திடீர் மாற்றம் ஏன் ஏற்பட்டது என்பது புதிர். இந்தக் கொள்கை மாற்றத்தால் இந்தியாவிற்கும், தமிழ் இந்துக்களுக்கும் அழிவே ஏற்பட்டது. இலங்கையைக் கண்டால் இந்திய அரசு இப்போது பயந்து நடுங்கி சிறுநீர் கழிக்கிறது.
மீனவர்களைக் கொடூரமாக இலங்கைக் கடற்படை கொல்லுகிறது. ஆனால், தட்டிக் கேட்க நாதி இல்லை.
இந்த கீழான நிலை உருவாகக் காரணம் எல்.டி.டி.ஈ அமைப்பின் மேல் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட திடீர் வெறுப்பு. அவ்வமைப்பின் மேல் கட்டுப்பாட்டினை இந்திய அரசு இழந்தது எதனால்? எதனால் மற்ற தமிழ் ஈழ விடுதலை அமைப்புக்களை எல்.டி.டி.ஈ கொன்று குவித்த போது காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது ?
ராஜீவ் காந்தியின் திடீர் கொள்கை மாற்றத்தின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்?
.
ராஜிவ் காந்தி கொலையாளிகளான சிவராஜன் மற்றும் தனுவைப் பற்றித் தகவல் தருபவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் பணம் தரப்படும் என அரசு அறிவித்தது.
பெங்களூரில் அவர்கள் தங்கி இருந்த விஷயத்தை ஒரு ஏழை பால்கார அம்மாள் அரசுக்குத் தெரியப்படுத்தினார். அவரைப் பத்திரிக்கைகள் பாராட்டின. தைரியத்தை வியந்தன.
ஆனால், இன்று வரை அவருக்கு அரசு ஐந்து பைசா கூட கொடுக்கவில்லை.
ராஜீவ் கொலை செய்யப்பட்டது குறித்து அதற்கு உண்மையிலேயே வருத்தம் இருந்தால், கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இருந்தால், தீவிரவாதத்திற்கு எதிரான நிலைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால், அந்த ஏழைப் பெண்மணிக்கு தந்த வாக்குறுதியை மீறுவது சரியா ?
//….கொலைபாதகக் கொடூரர்கள் தமிழ் ஹிந்துக்களாக இருந்துவிட்டால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது கொடூரமான சிந்தனை….//
கொடூரமான என்ற வார்த்தைக்கு உங்கள் அகராதியில் என்ன பொருள் ?
அபத்தமாகப் பேசுகிறீர்கள். அவர்கள் சூழலின் கைதிகள்.
தமிழ் மரபைக் காக்க விரும்பிய அவர்கள் தவறான வழிகளில் செலுத்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் சரியான வழியில் வாழ்வதாக உறுதி தந்தால் அவர்களை விடுதலை செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும் ? திருந்துபவர்களுக்கு தண்டனை அவசியம் இல்லை.
அஃப்சல் குருவோ, கசாப்போ இதைப் போன்ற உறுதிமொழியைக் கொடுக்கப் போவதும் இல்லை. அப்படியே கொடுத்தாலும் அதன் வழி நடக்கப் போவதும் இல்லை. அவர்கள் எப்போதும் இந்தியாவிற்கு எதிரிகள்தான். திருந்தாதவருக்குத் தண்டனை நிச்சயம் தரப்பட வேண்டும்.
தமிழ் மரபைக் காக்கப் போராடுவது இந்து மரபைக் காக்கப் போராடுவதன் ஒரு பகுதிதான். ஆனால், வன்முறை மிக மிகத் தவறான வழிமுறை. இதை இந்த மூவரும் உணர்ந்திருப்பார்கள்.
மேலும், குளவி சொல்லி இருப்பது போல இவர்கள் மூவரும் கொலையில் நேரடியான குற்றவாளிகள் இல்லை. இவர்களுக்கு மரண தண்டனை என்பது மிகக் கொடூரமான தீர்ப்பாகத்தான் எனக்குப் படுகிறது.
.
//..தேசத்திற்கெதிராக எவன் கை உயர்த்தினாலும் அவன் கை அக்கணமே இற்று விழவேண்டும் என்பது நமது பார்வை..//
ராஜீவ் காந்தியைத் தாக்கியது தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலா ?
“இந்திராதான் இந்தியா” “இந்தியாதான் இந்திரா” என்று ஒரு அல்லக்கை எமர்ஜன்ஸி காலத்தில் சொன்னது உண்மையாகிவிட்டதா? ராசீவ் காந்திதான் இந்தியாவா?
.
ஏன் அப்சலை தூக்கில் போட வேண்டும் என்பதைப் பற்றிய கட்டுரையாகத்தான் இருக்கிறது. ஏன் இந்த மூவரை தூக்கில் தொங்கவிட கூடாது என்பதற்க்கு ஓரே ஒரு காரணத்தை குளவி கொட்டியிருக்கிறது, அது அவர்கள் இந்து என்பது. தமிழ் இந்துவில் இப்படியொரு கட்டுரை வருமென்று எதிர்ப்பார்க்கவில்லை.
இன்றைக்கு மரண தண்டனையே கூடது எனச் சொல்பவர்கள் நாங்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதி, பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் அதிமுக வினருக்கு முதலில் தண்டனை நிறைவேற்றட்டிருந்தால் இப்படி பேசியிருப்பாரா என்ன?
போலி மனிதர்கள், போலி மனித நேயம்!
தமிழ் ஹிந்து தளத்தில் இது போன்ற ஒரு அபத்தமான , தேச விரோத கட்டுரையை நான் எதிர் பார்க்கவில்லை……மதத்தின் பெயரால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இறங்கி விட்டால் அல்லாவின் திருப்பெயரால் என்று சொல்லிக்கொண்டு மாபாதக செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை விமர்சிக்கும் உரிமை நமக்கு எப்படி வரும்?
ராஜீவ் படுகொலை என்பது நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்……அந்நிய தேச பயங்கரவாதிகளால் ,நம் நாட்டை சேர்ந்த தேச விரோதிகளின் துணையோடு, நம் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட மாபாதகம்…..இந்த இடத்தில் ராஜீவை ஒரு கட்சித்தலைவராக பார்க்கவேண்டியதில்லை….அவர் நம் தேசத்தின் முன்னாள் பிரதமர்…..
ராஜீவின் அரசியல் மீது நமக்கு ஆயிரம் விமரிசனங்கள் இருக்கலாம்… தன்மீதான போபர்ஸ் ஊழல் குற்றச்ச்சாட்டுக்களின் மீதான மக்களின் கவனத்தை திசை திருப்பவும் அவர் இலங்கை விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம்….ஆனால் நேரு – பண்டாரநாயக காலம் தொடங்கி இன்றுவரை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரே உருப்படியான முயற்சி ராஜீவ் -ஜெயவர்தனே ஒப்பந்தம்தான்..இந்தியாவைப்போன்ற ஒரு சமஷ்டி அமைப்பின் கீழ் தமிழர்களுக்கான தனி மாநிலம் [வடக்கு - கிழக்கு பிரதேசங்களை இணைத்து ] அமைக்கும் உன்னதமான திட்டம் .அந்த நல்ல முயற்சியை தன்னுடைய சுயநலத்தால் கெடுத்து குட்டிச்சுவராக்கியவர் பிரபாகரன்….தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட சர்வாதிகார நாடாக ஈழத்தை மாற்ற முயன்றார் பிரபாகரன் ….ஒப்பந்தத்தை பராமரிக்க அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தையே தாக்கினார்….இந்திய ராணுவம் ஈழப் பெண்களை கர்ப்பழிப்பதாக அவதூறு பரப்பினார்….ஒப்பந்தத்தின் மூலம் ஒரு சமரச தீர்வை எட்ட முயன்ற சக போராளிகளை [ சிறீ சபாரத்தினம்,நீலம் திருச்செல்வம் , பத்மநாபா, மாத்தையா போன்றோர் ] கொன்று குவித்தார்.மிதவாதிகளான அமிர்தலிங்கம் ,யோகேஸ்வரன் போன்றோரையும் கொன்றார்….இன்று அந்த ஒப்பந்தத்தின் சரத்துகளைப் பற்றி இலங்கைத்தமிழர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது…
ராஜீவ் படுகொலை என்பது உணர்ச்சி வேகத்தில் நிகழ்த்தப்பட்டதல்ல …தெளிவாக திட்ட்டமிடப்பட்டு நிகழ்த்திய கொடூரம்…..அதில் ஈடுபட்டவர்கள் யாரும் அப்பாவிகளல்ல …….தாம் செய்யவிருக்கும் காரியத்தின் தீவிரத்தை உணர்ந்தே செய்தவர்கள்…..அன்று ராஜீவுக்கும் அவரோடு சேர்ந்து உயிரிழந்த பதினைந்துக்கும் மேற்ப்பட்ட அப்பாவிகளுக்காகவும் இவர்கள் பரிதாபப்படவில்லை….தாம் செய்த கொடூரச்செயலுக்காக இன்று வரை இவர்கள் வருத்தப்படவுமில்லை…..
ஒரே ஒரு விஷயம் …ராஜீவ் படுகொலையின் அரசியல் பின்னணி முழுமையாக விசாரிக்கப்படவில்லை…..மேற்படி விசாரணை தமிழக அரசியல்வாதிகளால் இடையூறு செய்யப்பட்டது…..அந்த விசாரணை உருப்படியாக நடந்திருந்தால் இன்று அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடும் பலரும் அவர்களோடு இதே தூக்கு மேடையில் நின்றிருப்பர்…….
குற்றவாளிகளை குற்றவாளிகளாக மட்டுமே பார்ப்போம்….அவர்களுக்கு இனம், மொழி, மத சாயங்களை பூச வேண்டாம்….இன்று நாம் இது போன்ற நிலையை மேற்கொண்டால், நாளை அப்சல் குருவுக்கும் ,அஜ்மல் கசாப்புக்கும் இதே நியாயம் பொருந்தும் என்பதை மறக்க வேண்டாம்…….
இந்த மூவர் ராஜீவை மட்டும் கொல்லவில்லை.. ஒரு பொது நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட ஏதுமறியாத அப்பாவி இந்திய உயிர்களையும் சேர்த்துக் கொல்லும் சதியில் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். எந்த அளவுக்கு உடந்தை என்பது இப்போது ஒரு talking point மட்டுமே, ஏனென்றால் நீதிமன்றம் இதை ஏற்கனவே ஆராய்ந்து தண்டனையும் வழங்கி விட்டது.
ராஜீவ் நல்லவரா, கெட்டவரா என்ற விவாதத்தை இதில் புகுத்துவது அபாயகரமானது, அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் ஊழல்வாதி என்பதால் அவரது கொலையாளிகள் மன்னிக்க பட வேண்டுமா? என்ன நியாயம் இது? இதே ரீதியில் தானே ஒவ்வொரு பயங்கரவாதியும் தனது செயலை நியாயப் படுத்துகிறான் (உதாரணமாக, 2007 ஜூலை மும்பை ரயில் குண்டுவெடிப்பில் முதல் வகுப்பில் பயணம் செய்தவர்களில் குஜராத்திகள் தான் அதிகம்; அவர்களைக் கொல்வது ”நியாயம்”!) மேலும், அப்போது இலங்கை பிரசினையில் நிகழ்ந்த குழப்பங்கள் ராஜீவ் என்ற ஒரு ஆள் செய்தது அல்ல, ஒட்டுமொத்த இந்திய establishment செய்தது.
ராஜீவ் கொலையில் அவிழ்க்கப் படாத முடிச்சுக்கள் இருக்கலாம்.. ஆனால் இந்த மூவரின் பங்கு நிரூபிக்கப் பட்ட ஒன்று. எனவே இவர்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும்.
// அப்ஸலை தூக்கில் போட வேண்டும் என்று ஆரம்பித்தால் ஈடுகட்ட இதோ மூன்று தமிழ் உயிர்கள். நல்ல சமன்பாடு. காப்பாற்றப்பட்டது மதச்சார்பின்மை. //
குளவியின் கட்டுரையில் இருக்கும் ஒரே நியாயமான பாயிண்ட் இது தான்.
இந்த மூவரின் கருணை மனு பல வருடங்கள் ஜனாதிபதி பார்வைக்குச் சென்று முட்டி நின்று கொண்டிருந்தது. ஒரு 2 வருடம் முன்பு அவர்களது கருணை மனுக்களை நிராகரித்து தூக்கில் போட்டிருந்தால் கூட இப்படி ஒரு வாதத்தை நம்மால் வைத்திருக்க முடியாது.
ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அப்சலின் மரண தண்டனையோடு சேர்த்து இந்த மூவரின் மரண தண்டனையும் உறுதி செய்யப் பட்டிருப்பதில் காங்கிரசின் அப்பட்டமான குரூரமும் கயமைத் தனமும் தான் வெளிப்படுகிறது..
முன்பெல்லாம் மதக்கலவரங்களில் உண்மையாகவே வன்முறை செய்த 10 முஸ்லீம்களோடு சேர்த்து கணக்குக்கு 10 இந்துக்களையும் சேர்த்து கைது செய்து உள்ளே போடுவார்கள். அடுத்த நாள் செய்தித்தாள்களில் இரு தரப்பினரையும் போலீஸ் கைது செய்தது என்று வரும்.
அதே போல, இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டி வரும்போது, அதற்கு இணை வைக்குமாறு சில சில்லறை இந்துக் குற்றவாளிகளையும் சேர்த்துக் கொல்லவேண்டும் என்பதற்கான முன்னுதாரணத்தை காங்கிரஸ் உருவாக்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
//எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று பேரை தூக்கில் போடுவது அநியாயமானது.//
இந்தக் கட்டுரைதான் அநியாயமானது. நியாத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதது. இந்திய இறையான்மைக்கு விடப்பட்ட சவால்களாக இந்திய இறையான்மைக்கு இழக்கப்பட்ட அவமானங்களாக இந்தியாவின் மீது பூசப்பட்ட இருபெரும் கறைகளாக இருக்கும் இந்த இரண்டையும் ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை.
அன்மையில் உலகளவில் நடந்த மிகக் கொடூரமான அரசியல் கொலைகளுக்கெல்லாம் சிகரமான இக்கொலைக்கு பல நீதிபதிகள் ஆராய்ந்த அளித்த தீர்ப்பை வெற்று உணர்ச்சி வேகத்தில் நிராகரித்து அக்கொலையை நியாயப்படுத்தும் தொனியில் எழுதுவது எல்லாவிதமான நியாய சிந்தனைகளையும் துடைத்தெறிந்த பிறகுதான் முடியும்.
குளவிக்கு என் கண்டனங்கள்.
கொலைபாதகக் கொடூரர்கள் தமிழ் ஹிந்துக்களாக இருந்துவிட்டால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது கொடூரமான சிந்தனை.
yes, I am a hindu, but I am completely against this article.. going by this argument even ravanan and kamsan shudve been spared coz they were hindus….
expected better from this website…
// இப்படுகொலையில் இன்னும் அவிழாத முடிச்சுகள் உண்டு. ஆனால், ஒன்று தெளிவு. ராஜீவ் கொலையை அரங்கேற்றியவர்கள் விடுதலை புலிகளின் அம்புகள் என்றால் விடுதலை புலிகளே மற்றொரு சக்தியின் அம்புகளாக மாற்றப்பட்டனர் என்பதுதான் உண்மை. //
ராஜீவ் கொலைவழக்கை விசாரித்த அதிகாரியான ரகோத்தமனே இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார், அவர் எழுதியிருக்கும் புத்தகத்தில்..
ஆனால் அவரும் கூட, தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் என்றே சொல்கிறார் – http://www.youtube.com/watch?v=AVH8gLu-IBs&feature=youtube_gdata_player
குளவியின் இந்தக் கொட்டுரையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
@ saravana kumar,
//ராஜீவ் படுகொலை என்பது நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்//
இது தவறான பார்வை. அந்த தாக்குதல் தேசத்தின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலாக இருந்தால், ஏன் அதற்குப் பிறகு எந்தத் தாக்குதலையுமே விடுதலைப் புலிகள் நிகழ்த்தவில்லை? 2001 ஜூலை மாதம் கொழும்புவில் எல்லா “ஏர்லங்கா” விமானங்களையும் அழித்த விடுதலைப் புலிகள் ஒரு பணியாளரையோ, பயணியையோ கூட கொள்ளவில்லை. இது வரை இந்திய அரசாங்கத்தின் மீதோ, இந்திய விமானத்தின் மீதோ தாக்குதல் செய்ததில்லை. ராஜீவ் ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பி நாட்டுக்கு சேவை செய்யாமல், இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வை நிர்மூலமாக்கினார்.
@ram
ஆட்டோ சங்கர், அப்சல் குரு இவர்களெல்லாம் எந்த பாதிப்புக்காக பழி வாங்கினார்கள்? அவர்கள் சுயநலத்துக்காகவும், பிறரை துன்புறுத்துவதற்காக மட்டுமே கொலைகளைச் செய்தனர். அவர்களைத் தடுக்காமல் விட்டிருந்தால் மேலும் பலரைக் கொன்றிருப்பார்கள். துப்பாக்கியால் யாரை வேண்டுமானாலும் பாரபட்சமின்றி சுடுவதும், பேட்டரி வாங்கிக் கொடுத்ததும் ஒன்றாகுமா? ஆகவே உங்கள் ஒப்பிடுதலை கண்டிக்கிறேன்.
[edited and published]
80’ களில் இலங்கையில் நடந்த தமிழர் அழித்தொழிப்பும், யாழ்நூலக எரிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த exodus’ம் என் இருபதுகளில் ஏற்படுத்திய பாதிப்பு பிறர்க்கும் இருந்திருக்கும். சுஜாதாவின் ‘பத்துலட்சம் புத்தகங்கள்’ (விகடனில் வந்தது), செ.யோகநாதனின் ‘இரவல் தாய்நாடு’ (கணையாழி குறுநாவல்) போன்றவை என் தூக்கத்தைத் தொலைத்தன.
பேரறிவாளன் 19 வயதில் என்ன வகையான முதிர்ச்சியில் இருந்திருப்பான் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் அவன் இந்தப் படுகொலையின் தீவிரத்தை அறிந்து உடன்பட்டானா என்பதும் ஐயத்திற்கிடம்.
என்னால் சிறையில் வாலிபம் தொலைத்த இந்த இளைஞனைத் தூக்கில் இடுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
குளவியின் இந்தக்கட்டுரைக்கு முழு ஆதரவையும் இங்கே பதிவு செய்கிறேன்.
மற்றபடி, கிறுத்துவர் ஊடுருவிய எந்தவொரு இயக்கத்தையும் நான் ஆதரிக்கவில்லை. சொல்லப் போனால் இருதரப்பும் மிஷனரி ஓநாய்கள் தூண்டிவிட்டு நிகழ்ந்த இனக்கலவரமே இது. யாழ்நூலகத்தை எரித்தவனும் கிறுத்துவன்தான்.
களிமிகுகணபதி: இந்தோனேசியாவில் இதே போன்றதோர் இனக்கலவரத்தைத் தூண்டி ஏராளமாய் ரத்தம் சிந்திய பின்னரும், கிழக்கு திமோரை லட்டாகப் பிரித்துக் கொடுத்தது, அவர்கள் பெரும்பான்மை கிறுத்துவர் என்பதால்தான். இலங்கைத் தமிழர்கள் பிடிவாதமாய் ஹிந்துக்களாய் இருந்து தொலைத்ததால்தான் இறுதியில் பேரழிவு நோக்கி தள்ளப்பட்டார்கள் என்பதும் வெள்ளிடைமலை.
அன்புடன்,
ஜாவா குமார்
29/8/11
இந்த் கட்டுரையும் அதன் பின்னால் வந்திருக்கும் பின்னூட்டங்களும் எந்த அளவுக்கு நாம் தாழ்ந்துவிட்டோம் என்பதைத்தான் காட்டுகின்றன.
இது வீரம் விளைந்த மண்.
ராஜீவின் கொலை ஒரு போர் முறையாகவே திட்டமிட்டு நடத்தப்பட்டது. அதில் இவர்கள் பங்கேற்றார்கள். யார் தூண்டினார்கள், யார் தண்டனை அடையவில்லை என்பதெல்லம இங்கே தேவையற்ற விஷயங்கள்.
இவர்கள் அந்த போரில் பங்கு பெற்றார்கள். அதில் பிடிபட்டார்கள்.
இவர்கள் புறமுதுகிட்டு ஓடவும், அவர்களை நாங்கள் அந்த செயலை செய்யவில்லை என்று புளுகவும் வைத்து கோழைகளாக உயிர்பிச்சைக்கு அலைபவர்களாகவும் காட்டியவர்கள் வீரம் விளைந்த மண் என்று பெருமை பேசும் தமிழ் அரசியல்வாதிகள்! இதுதான் நமது இழிந்த நிலைக்கு சான்று
ஆம் செய்தேன். தூக்கில் போடு என்று நின்றிருந்தால் அவன் தமிழன்.
அப்படித்தான் பகத்சிங் நின்றான். அப்படித்தான் வீரவாஞ்சி செயலை செய்து தன்னையே மாய்த்துகொண்டான்.
நான் செய்யவில்லை என்று பகத்சிங் புலம்பவில்லை. தனது அம்மாவையும் தனது மகளையும் விட்டு கெஞ்சவில்லை.
தன்னை தூக்கில் போடக்கூடாது என்று பெண்களை தற்கொலை செய்துகொள்ளச்சொல்லவில்லை.
இதுவா வீரம்?
இங்கே அவர்கள் செய்தது குற்றமும் அல்ல. அவர்கள் குற்றம் செய்தார்கள் தண்ட்னை அனுபவிக்கக்க்ட்டும் என்று சொல்ல.
அவர்கள் தமிழர்களாக தங்கள் செயலுக்கு பொறுப்பேற்று தூக்குக்கு செல்வதே முறை.
அவர்களை கெஞ்ச விட்டு வேடிக்கை பார்ப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?
இவர்கள் தமிழர்கள். ஆகவே விட்டுவிடுங்கள் என்று ஒரு கூட்டம் இறைஞ்சுகிறது.
இவர்கள் இந்துக்கள் ஆகவே விட்டுவிடுங்கள் என்று இன்னொரு கூட்டம் இறைஞ்சுகிறது.
கேவலம் கேவலம்.
இவர்கள் நிரபராதிகள் என்று சொல்லி பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது தமிழனின் பகுத்தறிவு. கொடுமையடா சாமி!
இவ்வாறு அழுவதன் மூலமும், கெஞ்சுவதன் மூலமும் அழிக்கப்பட்டிருப்பது இந்துக்களின் வீரம். தமிழர்களின் வீரம்.
அது இங்கே யாருக்கும் புரியவில்லை!
’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி இது பனித்துளி எழுதிய தமிழ் இந்துவின் கட்டுரை. (2001, டிசம்பர் 13 இந்தியப் பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப் பட்டது. 7 காவலர்கள் உயிர்த்தியாகம் செய்து இந்தத் தாக்குதலை முறியடித்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர். எட்டு ஆண்டுகள் கழிந்தும், சதிகார தேசவிரோத பயங்கரவாதிக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேறவில்லை என்ற நிலையில், ஜனநாயகத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு).
குளவி கொட்டியிருக்கும் அனைத்து நியாய தர்மங்களும் அப்சலுக்கும் பொருந்தும். சோடி போட்டு பாருங்க,அப்சல் குற்றவாளியில்லைன்னு தெரியும். அதனால அப்சலை தூக்கிலிடுவதும் அநியாயமானது. எப்படி தமிழ் இந்துவின் ஆசிரியக்குழு அந்தர் பல்டி அடிக்குது. அப்சல் தீர்ப்பு வந்த பிறகு முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் “Capital Punishment” க்கு எதிராக அளித்த ஒரு பேட்டியை வைத்துக் கொண்டு அவரை விமர்சித்த நீங்கள் இப்ப எப்படி இதைப் போன்ற ஒரு கட்டுரையை வெளியிட்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
களமிகு கணபதி
// விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு வழங்கினால், இலங்கை அரசுக்குப் பயம் வரும். அஃப்சல் குரு உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கினால் ஜிகாதிகளுக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் பயம் வரும். இந்தியா பயப்படும் நாடாக இருந்தது போதும். இந்தியர்கள் இந்துக்களாக இருப்பதால் அழிந்தது போதும். //
இதை படிச்சு 5 நிமிஷம் சிரிச்சேன், எப்படிங்க உங்களால இப்படி ஜோக் அடிக்க முடியுது
//தமிழ் மரபைக் காக்க விரும்பிய அவர்கள் தவறான வழிகளில் செலுத்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் சரியான வழியில் வாழ்வதாக உறுதி தந்தால் அவர்களை விடுதலை செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும் ? திருந்துபவர்களுக்கு தண்டனை அவசியம் இல்லை. //
அப்சலும், கசாபும் ஜிகாதி மரபை காப்பதற்க்காக தவறான வழிகளில் செலுத்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் சரியான வழியில் வாழ்வதாக வாக்குறுதி தந்தால் அவர்களை விடுதலை செய்ய சம்மதிப்பீர்களா.
//தமிழ் மரபைக் காக்கப் போராடுவது இந்து மரபைக் காக்கப் போராடுவதன் ஒரு பகுதிதான். //
ஜிகாதி மரபை காக்க போராடுவது இஸ்லாமிய மரபை காக்க போராடுவதன் ஒரு பகுதி என்பதையும் ஏற்பீர்களா…
//ராஜீவ் காந்தியைத் தாக்கியது தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலா ?//
அப்ப பாராளுமன்ற தாக்குதல் மட்டும் தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலா. பாராளுமன்ற உறுப்பினர்களில் 200 பேருக்கு மேல் கிரிமினல் வழக்கு உள்ளது.
மேலே சொல்லியிருப்பது சாம்பிளுக்கு நாலு. இதப்போல் உங்களின் ஒவ்வொரு வரியையும் உருவி அப்சலுக்கும், கசாபுக்கும் வாதாடலாம்.
Haranprassana
//கடைசி வரி அபத்தம். அவ்வரியை உடனே நீக்கவும்.//
கடைசி வரி மட்டுமா மொத்த கட்டுரையே அபத்தம் . மொத்த கட்டுரையும் உடனே நீக்கவும்.
படு அபத்தமனான கட்டுரை. தமிழ் ஹிந்துவுக்கு சற்றும் பொருந்தாத கட்டுரை. தமிழ் ஹிந்துவின் மாற்றம் (சிறிது நாட்களாக தெரிந்தாலும்) இந்தக் குறிப்பிட்ட கட்டுரை, முக்கியமாக கிறுத்துவ சதியாளர்களுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரை, வியப்பளிக்கிறது!
கடைசி வரி – எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று பேரை தூக்கில் போடுவது அநியாயமானது.- எப்படி அபத்தமானதோ… அதே போல் இரண்டாம் வரி – அப்ஸலை தூக்கில் போட வேண்டும் என்று ஆரம்பித்தால் ஈடுகட்ட இதோ மூன்று தமிழ் உயிர்கள். நல்ல சமன்பாடு. காப்பாற்றப்பட்டது மதச்சார்பின்மை. – கொடுமையானது.
இஸ்லாமிய பயங்கரவாதி அப்சலையும், விடுதலை புலிகள் மூவரையும் எப்படி “மதச்சார்பின்மை” பொருளில் ஒப்பிடலாம்? விடுதலைப் புலிகள் தங்களை “ஹிந்துக்கள்” என்று அடையாளப் படுத்திக் கொண்டனரா, என்ன? தூக்கை எதிர்நோக்கும் விடுதலைப் புலிகள் மூவரும், ஹிந்துக்கள் என்று குளவியால் நிரூபிக்க முடியுமா? இங்கு ஏன் ”தமிழர்கள்” என்று மொழி ஜல்லி அடிக்கிறார், அதுவும் தமிழ்-ஹிந்து இணைய தளத்தில்? மொழி ஜல்லி அடித்துவிட்டு அத்றகு மதச்சார்பின்மை சப்பை கட்டு வேறு கட்டுகிறாரே, ஏன்? குளவிக்கு எதுவும் மதச்சார்பின்மை அல்லது சிறுபான்மை கட்டாயமா?
தூக்குக் கயிற்றை எதிர்நோக்கும் மூவரும் ஹிந்துக்கள் என்று சொல்கிறாரா, குளவி? அவர்கள் ஹிந்துக்கள் என்று குளவியால் நிரூபிக்க முடியுமா? மனித உரிமை காரணத்தைக் கூறினால் கூட சரி போனால் போகிறது என்று தர்க்க ரீதியில் ஒத்துக் கொள்ளலாம்.
ஆனால் கிறுத்துவ சர்ச்சுகள், கிறுத்துவ விஷநரிகளால் ஆதரிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் நமது இந்திய இறையாண்மைக்கு எச்சரிக்கை விடும் வகையில், நமது இந்தியப் பிரதமரையும், அவருக்குப் பாதுகாப்பிற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகளையும் பயங்கரவாதச் செயலில் கொன்றதற்கு மரண தண்டனை ஒன்றே சரியானது. மேலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தமிழ் என்ற போர்வையில் வெளியே வருவது, தமிழ் நாட்டிற்கும், இந்திய தேசத்திற்கும், தீங்கு விளைவிக்கும். நாளை இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும், கிறுத்துவ பயங்கரவாதிகளுக்கும் இது ஒரு முன்னோடியாக இருந்துவிடும்.
எனவே, முன்னாள் பிரதமர் ராஜீவிடம் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், ஒரு இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப் பட்டுள்ளார் என்கிற விதத்தில், கொலை செய்தவர்களும், அதற்குத் துணையாய் இருந்தவர்களும் தூக்கில் தொங்குவதே முறை, நீதி.
விடுதலைப் புலிகள் ஒன்றும் புனிதப் பசுக்கள் அல்ல. அவர்களும் வேண்டுமென்ற அளவில் கொலை செய்துள்ளார்கள்; இலங்கையில் மட்டுமல்லாமல், இந்தியாவில் தமிழகத்திலும்கூட.
வைகோக்களும், திருமாக்களும், ராமதாசுக்களும், வீரமணிக்களும், சீமான்களும் செய்யும் அராஜகமான தேச விரோதமான பிரச்சாரங்களுக்கு முத்துக் குமார்களும், செங்கொடிகளும் முட்டாள்தனமாக அப்பாவிகளாக பலியாகலாம். தமிழ் ஹிந்து பலியாகலாமா?
குளவி தேவையில்லாமல் உணற்சிவயப்பட்டு வெறும் சுவற்றைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. சற்று தேசபக்தி எனும் தேன் காட்டினால் அது சரியாகிவிடும்.
(edited and published)
ஏதோ ஒருவர் தமிழர் என்பதாலேயே இந்த பாரத நாட்டின் நீதி மன்றங்கள் தேடித் தேடி மரண தண்டனையையும் மற்ற தண்டனைகளையும் தருவதுபோல் ஜோடிக்கும் வேலையைக் கைவிடுவது நல்லது. தேவையில்லாமல் இந்த மூவரையும் பாராளுமன்றத் தாக்குதல் வழக்கோடு ஒப்பிட வேண்டாம். இது திசை திருப்பும் முயற்சி. அப்சலுக்குத் தண்டனை தரப்படட்டும். அது வேறு விஷயம். இவர்கள் மூவருக்கும் தண்டனை தரப்படட்டும். இது வேறு விஷயம். நம் நாட்டில் தீமைகளுக்குத தண்டனை தரும் தீர்ப்பு வருவதே அதிசயம். தீமைகளைப் பரப்புவதையே தர்மமாகக் கொண்ட ஒரு சிறு கூட்டம் ஊடகங்களில் செல்வாக்கை வளர்த்து வைத்துள்ளதால், ஏதோ இந்த பாரத நாடே குரல் கொடுத்துத் தூக்குத் தண்டனையை எதிர்ப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல என்பது ஒவ்வொருவர் மனச் சாட்சிக்கும் தெரியும். ‘ஹிந்து’ என்பதற்கு முன்னால் ‘தமிழ்’ என்று அடைமொழி இருப்பதனால் இந்த வலைத் தளத்தினருக்குத் தடுமாற்றம் ஏற்பட வேண்டாம். எந்த மொழி/ஜாதி/மாநிலம்/நாடு/மதத்தினராக இருந்தாலும் தவறைத் தண்டிப்பதும் சரியை ஊக்குவித்து வளர்ப்பதும் அரசின் கடமை. எல்லா விஷயங்களிலும் அரசு ஞாயமாகச் செயல்படுகிறதா என்னும் குறுக்குக் கேள்வியும் வேண்டாம். அது எப்போதாவது சரியாகச் செயல்பட முயல்வதையும் (சிலர்) எதிர்ப்பது எதிர்க்கப்பட வேண்டியது. பெயருக்கேற்ப இந்த வலைத் தளம் தர்ம நெறியில் நடை போடட்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை எல்.டி.டி.ஈயின் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்ப்பது சுத்தமான மடத்தனம். எல்.டி.டி.ஈ அமைப்பு கிறுத்துவர்களின் அமைப்பாக ஒரு காலத்தில் மாறியது என்பது சரிதான். ஆனால், கிறுத்துவர்களின் கைக்கு அது போனது எப்படி, எப்போது, எதனால் என்ற கேள்விகளை உங்களில் யாராவது கேட்டுக் கொண்டீர்களா?
அந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தால், நீங்கள் இப்படிப்பட்ட எதிர்ப்பைக் கமெண்டுகளில் வெளியிட மாட்டீர்கள்.
இப்போது எல்.டி.டி.ஈ என்ற அமைப்பே இல்லை. ஆனால், இலங்கைப் பிரச்சினை இருக்கிறது. மீனவர்கள் சுடப்படுகிறார்கள். சீனர்களுக்கு நாங்கள் தளம் தருவோம் என்கிறார்கள். இந்தியா இலங்கையைக் கண்டு தொடை நடுங்குகிறது.
மேலும், குளவியின் இந்தக் கட்டுரை என்ன சொல்லுகிறது என்பதைப் படிக்காமல், புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு கமெண்டின் அடிப்படையில்தான் மற்ற கமெண்டுகள் வருகின்றன.
அவர்கள் இந்துக்கள் என்பதால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குளவி சொல்லவில்லை. கட்டுரையைப் படியுங்கள்.
அவர்கள், அம்புகளின் அம்புகளின் அம்புகள் என்று குளவி சொல்லுகிறது. உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்க இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்கிறது குளவி.
இந்தப் பிரச்சினையில் அழிபவர்கள் இந்துக்களாகவே இருப்பது ஏன் ? என்ற கேள்வியைத்தான் குளவி கேட்கிறது. ஏன் இந்துக்களுக்கு வேறு வாய்ப்புக்கள் உருவாகவில்லை?
இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களின் கூக்குரலைக் கையாலாகதவர்களின் கூக்குரல் என்கிறேன் நான்.
இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் என்பதால்தான் இன அழிப்புச் செய்யப்பட்டார்கள் என்பதை உங்களில் விவரம் தெரிந்த எவராலும் மறுக்க முடியாது. யாழ் நூலகம் எரித்த இன வெறி பௌத்த மதத்தினுடையதல்ல.
சாதி அடிப்படையில் இந்தியாவில் நம்மைச் சண்டைபோட வைக்கும் சதிகாரக் கும்பல்கள்தான், இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்கும் பிரச்ச்சினைகளை உருவாக்கிக் குளிர்காய்கின்றன.
அந்தச் சதிகாரக் கும்பல்களின் வரையறையின்படி, வழிகாட்டுதல்படி நாம் இந்தியாவில் சாதிச் சண்டை போடுகிறோம். இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் சண்டை போடுகிறார்கள்.
இந்தச் சட்டகத்தை விட்டு வெளியே வந்தால்தான் நம்மால் வன்முறையற்ற வளர்ச்சி நோக்கு உடைய சமூகத்தை உருவாக்க முடியும்.
சாதிச் சண்டையால் பிளவு பட்டுக் கிடப்பது போல, இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழரிடம் இருந்து பிளவு படுத்தப் பட்டு, இந்து சமூகம் அனைத்தும் பலவீனப்பட்டுக் கிடக்கிறது.
என்ன இருந்தாலும், இவர்கள் நம் பிள்ளைகள். தானாடாவிட்டாலும் சதை ஆடும். என் சதை ஆடுகிறது. அது போல அவர்கள் சதையும் நமக்காக ஆடும். இவர்களுக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளித்தால், பிளவுபட்ட குடும்பம் ஒன்றாகும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களது வாழ்வியல் தமிழ் மரபில் இருந்து எழுவது. தமிழ் மரபு இந்து மரபே. எனவே, என்னதான் விருப்பு வெறுப்புக்கள் இருந்தாலும், ஒற்றுமையாக இருந்தால், இந்து மரபு வெல்லும். அமைதி நிலவும். வளர்ச்சி ஏற்படும்.
ஆனால், அஃப்சல் போன்றவர்களோ மானுட உறவுகளைவிட அரேபிய எதேச்சதிகாரத்திற்கு விசுவாசமானவர்கள். அவர்களது வாழ்வியல் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு மன்னிப்பு அளிக்கக் கூடாது.
விடுதலைப் புலிகளின் வன்முறையைக் காரணமாகக் காட்டித் தமிழ் இந்துக்கள் அழிக்கப்பட்டனர். நேரடிப் பங்கு இல்லாத அப்பாவிகளுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.
இவர்களைத் தீவிரவாதிகள் என்று குழப்பிக் கொண்டு பலர் உணர்ச்சி வசப்படுகிறார்கள்.
இதே போலத்தான் சாதி அடிப்படையில் ஒருவரை மற்றவர் வெறுக்கவும் நமக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 800 ஆண்டுகாலச் சாதிக் கொடுமைகளைத் தண்டிக்க வேண்டும் என்று கிளம்பினால் அது எங்கு போய் முடியும் ?
யாரைத் தண்டிக்க வேண்டும், யாரைத் திருத்தி அரவணைக்க வேண்டும் என்பது நமக்குத் தெரிய வேண்டாமா?
சாதி அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்ற வெறியை நம்மிடையே உருவாக்கும் அதே தீயசக்திகள்தான், இங்கேயும் அதே வித வெறியை உருவாக்குகின்றன.
இந்த மூன்று பேரும் விடுதலை பெற வேண்டும் என்று வாய்ப்பேச்சு பேசும் அத்தனை திராவிடர் கழக மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளும் இவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றன. ஏனெனில், அவர்கள் தியாகியானால்தான் இவர்கள் பிழைப்பு நடக்கும்.
அவர்கள் பிழைப்பு நடந்தால் இந்துக்கள் மேலும் பிளவுபடுவார்கள். அழிவார்கள்.
அதாவது நாம் அழிவோம். அப்போது, இங்கே இந்த மூவரின் மரண தண்டனைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களின் குடும்பங்களும் அழியும். எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களின் குடும்பங்களும் அழியும்.
நம் சந்ததிகள் அடிமைகளாகச் சாக்கடையில் உழலும்.
மேலும், மரண தண்டனை தீர்ப்பு தரப்பட்டபோது இருந்த சூழல் வேறு. இப்போது இருக்கும் சூழல் வேறு. உலகம் போய்க்கொண்டிருக்கும் சூழல் வேறு. அதை ஒட்டி இந்த மரண தண்டனை மீள் பார்வைக்கு உள்ளாக வேண்டும்.
ஆனால், சூழலுக்கும் அதில் ஏற்படும் மாற்றத்திற்கும் தங்களைத் தயார் செய்யாத சமூகமாகிவிட்டவர்களுக்குத் தொலைதூரச் சிந்தனை இருக்காது. அதைப் பல கமெண்டுகள் நிறுவுகின்றன.
யார் விடுதலைப்புலிகளை இந்தியாவிற்கு எதிராக ஆக்கினார்களோ, அவர்களே இந்த மூன்று பேருக்கும் ஆதரவாகப் போலிக் குரல் எழுப்புகிறார்கள்.
இந்த மூன்று பேரும் அவர்களைத் தூண்டிய சக்திகளாலேயே மன்னிக்கப்படுவதாகக் காட்டப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
அப்போது நம் குடும்பத்தின் அழிவு நிச்சயமாகிவிட்டது. உங்களுக்கு இதை அறியும் திறன் இல்லாவிட்டாலும் இதைச் சொல்ல வேண்டியது என் கடமை.
..
ஜாவா குமாரரே,
உங்களைப் போன்ற தெளிந்த புத்தியும், இளகிய மனதும், தொலைதூர நோக்கும் தமிழருக்கு வாய்க்க அந்த சிவம் அருளட்டும்.
.
தமிழ்செல்வனின் வரிகளில் காணப்படும் அரசியலை நினைத்துச் சிரிக்கிறேன். சிறிது காலமாகவே மாற்றமாம், கிறித்துவ ஆதரவாம். தமிழ்செல்வன் வகையறாக்களுக்கு சீரியஸாக எழுதி அதை காமெடியாக்கும் கலை எப்போதுமே உச்சத்தில் உள்ளது ஆச்சரியம்தான். ஒரு கட்டுரை இது போலக் கிடைத்துவிடாதா என்று ஏங்கித் தவித்திருப்பது அவரது பின்னூட்டத்தில் தெரிகிறது. அதிலும் குளவிக்கு தேசப்பற்றுத் தேன் காண்பிக்கச் சொல்வது நல்ல நகைச்சுவை மையம். எனக்கென்னவோ தமிழ்செல்வனுக்குத்தான் நியாயத் தேள் கொட்டவேண்டும் என்று தோன்றுகிறது.
இந்த கட்டுரை முழுவதும் மிகவும் அபத்தமானது. இது புலி ஆதரவு கட்டுரையும் இருந்துவிடக்கூடாது, அதே நேரத்தில் தமிழர் ஜல்லியும் அடித்து விடக்கூடாது, அதே நேரத்தில் ஹிந்து ஆதரவு நிலைப்பாடும் இருக்கவேண்டும், அதே வேளையில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிர் நிலைப்பாடும் வேண்டும், அதே நேரத்தில் காங்கிரஸுக்கு எதிராகவும் இருக்கவேண்டும் என எங்கேயோ ஆரம்பித்து ஏதேதோ விஷயத்தைத் தொட்டு தத்து பித்தென்று உளறிக்கொட்டிய கட்டுரையாகவே இதை பார்க்க முடிகிறது. தெளிவில்லாத தீவிரவாத ஆதரவுக் கட்டுரை போல் இருக்கிறது. தமிழ் ஹிந்துவிற்கு தேவையில்லை.
///தூக்குக் கயிற்றை எதிர்நோக்கும் மூவரும் ஹிந்துக்கள் என்று சொல்கிறாரா, குளவி? /// நல்ல கேள்வி, தீவிரவாதிகளும் கொடூர கொலை பாதகர்களும் ஹிந்துக்களாக இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்.
கார்கில் ஜெய்!
///ராஜீவ் ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பி நாட்டுக்கு சேவை செய்யாமல், இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வை நிர்மூலமாக்கினார். ///
ஆகவே ராஜீவ் காந்தியை கொடூரமாக கொலை செய்தது ஞாயம் தான் என்று கொலைகாரர்களுக்கு துணைபோகிறீர்களா என்ன? அப்சல் மாதிரியான தீவிரவாதிகளைக் கேட்டுப்பாருங்கள். அவர்களும் இது போன்றே ஏராளமான ஞாயக்காரணங்கள் வைத்திருப்பார்கள்.
நீங்கள் சொல்வதெல்லாம் என்னவென்றால், எங்கள் கொலைகாரர்கள் ரொம்ப நல்லவர்கள். குறிவைக்கப்பட்டவரைத்தான் கொல்வார்கள். மற்றவர்களை கொல்லமாட்டார்கள். எங்கள் கொலைகாரர்கள் ஞாய தர்மம் பார்க்கும் கொலைகாரர்கள். அதனால் அவர்கள் கொலைகளும் ஞாயமானதாகவே இருக்கும். எனவே ஞாயமான கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை கூடாது என்பது போல இருக்கிறது.
கொலையில் எது ஞாயக்கொலை எது அநியாயக்கொலை? கொடூர கொலைகாரர்களில் எவன் மனிதனாக இருப்பவன் அல்லது இருந்தவன்? இப்படி வக்காலத்து வாங்குவது ஒரு பரிதாபத்தையும் அனுதாபத்தையும் தேடும் செயல் தான். இது வன்மையான தேச துரோகம்! இந்த கட்டுரையும் அப்படியே!
//நேரு – பண்டாரநாயக காலம் தொடங்கி இன்றுவரை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரே உருப்படியான முயற்சி ராஜீவ் -ஜெயவர்தனே ஒப்பந்தம்தான்..இந்தியாவைப்போன்ற ஒரு சமஷ்டி அமைப்பின் கீழ் தமிழர்களுக்கான தனி மாநிலம் [வடக்கு - கிழக்கு பிரதேசங்களை இணைத்து ] அமைக்கும் உன்னதமான திட்டம் .//
Indians, who thrusted their will on SL tamilians, will have to praise this.. no other go.. what about the reaction of SL tamils to Rajiv-Jaya accord?? No body has accepted this..
//ஒப்பந்தத்தை பராமரிக்க அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தையே தாக்கினார்….இந்திய ராணுவம் ஈழப் பெண்களை கர்ப்பழிப்பதாக அவதூறு பரப்பினார்…//.
What a blantant lie is this… only Indian establishment can feel very relieved for this..
IPKF killed SL tamils for political reasons.. If Rajiv killers are to punished, who will do justice for the killings of SL tamils by IPKF???
//ராஜீவ் காந்தியைத் தாக்கியது தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலா ?
இந்த இடத்தில் ராஜீவை ஒரு கட்சித்தலைவராக பார்க்கவேண்டியதில்லை….அவர் நம் தேசத்தின் முன்னாள் பிரதமர்…..ராஜீவ் நல்லவரா, கெட்டவரா என்ற விவாதத்தை இதில் புகுத்துவது அபாயகரமானது, அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் ஊழல்வாதி என்பதால் அவரது கொலையாளிகள் மன்னிக்க பட வேண்டுமா? என்ன நியாயம் இது?//
If individuals are to punished for their wrongdoings, what about the wrongdoings committed by the state and its leader ? who will have to be held responsible for state’s wrongdoings??
//குற்றவாளிகளை குற்றவாளிகளாக மட்டுமே பார்ப்போம்….அவர்களுக்கு இனம், மொழி, மத சாயங்களை பூச வேண்டாம்//
//…எந்த மொழி/ஜாதி/மாநிலம்/நாடு/மதத்தினராக இருந்தாலும் தவறைத் தண்டிப்பதும் சரியை ஊக்குவித்து வளர்ப்பதும் அரசின் கடமை. //
exactly, thats why, India has to come out clearly on their role in terms of logistics,financial,weaponary,training, india’s international lobbying in SL tamil genocide..
If Indian state and its political class(includes Congress,BJP,CPIM,CPI,etc) does not come out clearly, people of India should expose this..
//“இந்திராதான் இந்தியா” “இந்தியாதான் இந்திரா” என்று ஒரு அல்லக்கை எமர்ஜன்ஸி காலத்தில் சொன்னது உண்மையாகிவிட்டதா? ராசீவ் காந்திதான் இந்தியாவா?//
What a nice logic… ” India is anna and Anna is India” என்று ஒரு அல்லக்கை சொன்னது உண்மையாகிவிட்டதா–Is Anna India????
//ஏதோ இந்த பாரத நாடே குரல் கொடுத்துத் தூக்குத் தண்டனையை எதிர்ப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல என்பது ஒவ்வொருவர் மனச் சாட்சிக்கும் தெரியும்//
what about the anti-corruption compaign by self-styled Team Anna?? Has entire India come out in support of Anna? Is it not NGO-Media-MNC build up??
//பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல்..தேசத்தின் மீதான தாக்குதல்தான் என்பதில் சந்தேகமே இல்லை.//
But Team Anna and their supporters say No Parliment is supreme and only
people are supreme.. so parliment can be pressurised by people’s agitation..
Poeple of Tamilnadu are following Anna’s way..
Why we should be hypocratic?? You cannot have one standard for North Indian mobilisation and other for TamilNadu people mobilisation..