மரணதண்டனை அரசியல்கள் – 1

ராஜீவ் கொலையாளிகளுக்கான மரண தண்டனையை முன் வைத்த அரசியல் தொடர்பான குளவியாரின் கட்டுரைக்கு ஒரு விரிவான பதில் – விஸ்வாமித்ரா

பாராளுமன்றத் தாக்குதலின் முக்கிய சதிகாரனான இஸ்லாமிய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையில் துவங்கிய அரசியல் இன்று ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையில் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மரண தண்டனை என்பது சினிமாக்களில் வருவது போல அவ்வளவு எளிதாக நம் கோர்ட்டுகளில் வழங்கப் பட்டு விடுவதில்லை. கீழ்க்கோர்ட்டுகளில் விதிக்கப் படும் மரண தண்டனைகள் அதன் பின்னர் செஷன்ஸ் கோர்ட், ஹைக்கோர்ட், ஹைக்கோர்ட் பெஞ்ச், சுப்ரீம் கோர்ட், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், கருணை மனுக்கள், மத்திய மாநில அமைச்சரவைகளின் பரிந்துரைகள் என்பது போன்ற ஆயிரத்தெட்டுத் தடைகளைக் கடந்து அபூர்வமாக வெகு சிலருக்கே வழங்கப் படும் ஒரு அபூர்வமான தண்டனையாகும்.

இத்தனை கடுமையான அலசல்களுக்கும் பரீசீலனைக்கும் உட்படுத்தப் பட்டு மிகவும் முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகள் செய்த கடுமையான கொலைக்குற்றங்கள் பல நீதிபதிகளினாலும் சந்தேகத்துக்குச் சற்றும் இடமில்லை நிச்சயமாகச் செய்யப் பட்டக் குற்றமே என்று உறுதி செய்யப் பட்டே வழங்கப் படுகின்றன. இன்றும் மரண தண்டனை என்னும் ஒரு கடுமையான தண்டனை விளைவிக்கும் அச்சமே பலரையும் கொலை என்னும் கடும் குற்றத்தைச் செய்வதில் இருந்து தயங்க வைக்கிறது. சிறைத் தண்டனை எல்லாம் கடுமை குறைந்து போய் பெரும்பாலான குற்றவாளிகளிடம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை அவர்களுக்கு சிறைச்சாலை என்பது இரண்டாவது வீடு போன்றாகி விட்டது. ஆகவே இன்றைய சூழலில் கொலை போன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்கும் ஒரே கடைசி வழியாக இருப்பது இந்த மரண தண்டனையே. ஆனால் இந்த மரண தண்டனையையும் நீக்க வேண்டும் என்று மனித உரிமையாளர்களும், அரசியல்வாதிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வருகிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் வைக்கும் வாதம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தண்டனை நீக்கப் பட்டு விட்டது என்பதுவே. ஐரோப்பியாவில் நிலவும் சூழலும், அங்கு இழைக்கப் படும் குற்றங்களின் தன்மையும் பொதுவாக மக்களின் உணர்ச்சி வசப்படாத தன்மையும், சட்டத்தை மதித்து நடக்கும் பண்பும் இந்தியாவின் சூழலும் முற்றிலும் வேறானது என்பதை இந்த மரண தண்டனை எதிர்ப்பாளிகள் கருத்தில் கொள்வதில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் இதை நீக்கக் கோரும் அமைப்புகள் ஒரு புறம் என்றால் தத்தம் அரசியல் காரணங்களுக்காக இந்த மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று போராடுபவர்களே அதிகம். அப்படியான ஒரு கோரிக்கை நான் முற்றிலும் எதிர்பாராத தமிழ்ஹிந்து தளத்தில் குளவியார் என்பவரிடம் இருந்து எழுந்ததே என்னிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த நீண்ட பதில் கட்டுரையை எழுத வைத்து விட்டது:

முதலில் தமிழ் ஹிந்துவில் குளவியார் கொட்டிய சில கேள்விகளுக்குப் பதில் அளித்து விட்டு இந்த அரசியல் பின்ணணியில் கேட்கப் படும் வேறு சில கேள்விகளுக்கும் பதில் அளிக்க விரும்புகிறேன்.

குளவி கொட்டுக்கள் எப்பொழுதுமே சிறிய எரிச்சல் தருவதோடு நின்று விடுவதில்லை ஒரு சில சமயங்களில் விஷக் கொடுக்குகள் குத்தி உயிருக்கே அபாயமாகி விடுவதும் உண்டு. அது போல நாட்டுக்கே ஆபத்தான சில கருத்துகளை இந்த முறை குளவி விஷக் கொடுக்கால் கொட்டியுள்ளது. அதனால் கொட்டிய குளவியின் கொடுக்கை எடுத்து விஷ முறிவு மருந்து கொடுப்பது அவசியமாகி விட்டது.

குளவியார் சொன்னது அழுத்தமான எழுத்துருவில் இருப்பது:

அப்ஸலை தூக்கில் போட வேண்டும் என்று ஆரம்பித்தால் ஈடுகட்ட இதோ மூன்று தமிழ் உயிர்கள். நல்ல சமன்பாடு. காப்பாற்றப்பட்டது மதச்சார்பின்மை.

நான் அப்படி நினைக்கவில்லை. இது அப்சலைத் தூக்கில் போடாமல் இருக்க காங்கிரஸும் பிற முஸ்லீம் அமைப்புகளும் சேர்ந்து போட்ட ஒரு நாடகம். அதில் தமிழக முதல்வரும் குளவியும் தடுமாறி விழுந்து விட்டார்கள். எப்படி?

அப்சலை ஏன் தூக்கில் போடவில்லை என்ற கேள்வி ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பின் பொழுது எழுந்து எழுந்து அடங்குகிறது. ஆனால் ஒரு முறை போல மறுமுறை இருக்காது. அண்ணாவின் பின்னால் மக்கள் திரண்டது போல நாளை இன்னொரு குண்டு வெடிப்பின் பொழுது ஒரு சுயமரியாதை உள்ள, விலை போகாத மோடி போன்ற பா ஜ க தலைவர் ஒருவர் பின்னால் மக்கள் திரண்டு எழுந்து விட்டால் அப்பொழுது அப்சலைத் தூக்கில் போடுவதைத் தவிர்க்கவே முடியாமல் போய் விடும். ஆனால் அப்சலைத் தூக்கில் போட்டால் ஒற்றுமையாக வந்து விழும் இந்திய முஸ்லீம்களின் ஓட்டும் காங்கிரஸ் கள்ளத்தனமாக அனுமதித்துள்ள பங்களாதேசிகளின் கள்ள ஓட்டும் நாளைக்கு காங்கிரசுக்குக் கிடைக்காமல் போய் விடும் ஆபத்தும் உள்ளது. ஆக அப்சலைத் தூக்கில் போடாமல் இருக்க புத்திசாலித்தனமாக காங்கிரஸ் திருடர்கள் போட்ட திட்டமே இந்த ராஜீவ் கொலையாளிக்குத் தீடீரென்று விதிக்கப் பட்டத் தூக்குத் தண்டனை.

இவர்களுக்குத் தூக்குத் தண்டனையை அமுல் படுத்துமாறு உத்தரவு போட்டால் தமிழ் நாட்டில் உள்ள தனித் தமிழ் நாடு கோரிக்கையாளர்களும், இந்திய தேசீய விரோதிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள். ஜெயலலிதாவுக்குக் கடுமையான அழுத்தத்தைக் கொடுப்பார்கள். அவர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஒரு வித நிர்ப்பந்தத்தில் ஜெயலலிதா ஒரு தீர்மானம் எப்படியும் போடுவார். அதுவும் போக காலம் தாழ்ந்து ஜனாதிபதி கருணை மனுவை ஏற்க மறுத்திருப்பதினால் எப்படியும் வழக்கு நீதி மன்றம் போகும் மூன்று பேர்களின் தூக்குத் தண்டனை ரத்தாகி ஆயுள் தண்டனையாக மாற்றப் படும். என்று திட்டமிட்டு கணக்குப் போட்டே காய்களை நகர்த்தியுள்ளனர் குள்ளநரி காங்கிரசார். அப்படி அவர்களுக்கு தூக்கு ரத்தாகும் பொழுது உடனே காங்கிரசின் கூட்டாளியும் தேச விரோதியுமான ஓமரை வைத்து அவர்கள் சட்டசபையிலும் ஒரு தீர்மானம் போட்டு காலம் தாழ்த்தலாம்.

இப்படி ஏற்கனவே முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களையே தூக்கில் போட முடியாத பொழுது முந்நாள் பார்லிமெண்ட் தாக்குதல்காரர்களை மட்டும் எப்படி தூக்கில் போடுவது ? என்ற கேள்வி நியாயமான கேள்வி என்ற தோற்றத்துடன் எழுப்பப் படும். அதையே சாக்காக வைத்து, ஆகவே அவர்களுக்கும் தண்டனை குறைக்கப் படுகிறது என்று காங்கிரஸ் அரசு அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் ஆயுள் தண்டனையே போதுமானது என்று குறைக்கப் போகிறார்கள். ஆக மொத்தத்தில், அப்சலின் மரண தண்டனையை நீக்கிய பழி காங்கிரஸ் மீது விழாது. மாறாக குளவியார் உட்பட இந்த மூவருக்கும் தண்டனை குறைக்கக் கேட்டுப் போராடிய அனைவர் மீதும் முக்கியமாக ஜெயலலிதா மீதும் விழும். அப்சல் குருவுக்கு மரண தண்டனையில் இருந்து விலக்களிக்கப் படும் காங்கிரஸின் முஸ்லீம் ஓட்டுக்கும் எந்த வித சேதாரமும் வராது. இபப்டி ஒரு தந்திரமானக் கணக்குப் போட்டே காங்கிரஸ் காய்களை நகர்த்தியுள்ளது.

அப்சல் குருவின் மரண தண்டனையை குறைப்பதன் மூலம் முஸ்லீம் ஓட்டுக்களைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் போட்ட சகுனித்தனமான சதித் திட்டமே இந்த மூவருக்கும் உறுதி செய்யப் பட்ட மரண தண்டனை. இதை எதிர்ப்பவர்கள் அனைவரும் மறைமுகமாக அப்சல் குருவின் விடுதலைக்காகவே உழைக்கிறார்கள். குழவியார் இதற்குப் பதிலாக நேரடியாக அப்சல் குருவை விடுவிக்கச் சொல்லியே கோரிக்கை வைத்திருந்திருக்கலாம்

அடுத்ததாகக் குளவியார் சொல்கிறார்:

அப்ஸலுக்கும் பேரறிவாளன் குழுவுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் தவறான முடிவுகள் எடுத்து அதில் குட்டையைக் குழப்பியதில் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது.

விடுதலைப்புலிகளை ராஜீவ் தலைமையிலாலான அன்றைய இந்திய காங்கிரஸ் அரசு மிக மோசமாக குறைத்து மதிப்பிட்டது. அதன் விளைவாக பல நூறு இந்திய வீரர்களைப் பலிகொடுத்ததுடன் ராஜீவுடன் சேர்த்து 14 இந்திய உயிர்களைப் பறித்தது.

தெளிவு. ராஜீவ் கொலையை அரங்கேற்றியவர்கள் விடுதலை புலிகளின் அம்புகள் என்றால் விடுதலை புலிகளே மற்றொரு சக்தியின் அம்புகளாக மாற்றப்பட்டனர் என்பதுதான் உண்மை.

இந்த அலசல்கள் எல்லாம் இப்பொழுதைய பிரச்சினைக்குத் தேவையில்லாதது. ராஜீவ் காந்தி தவறு செய்திருக்கிறார் உண்மைதான். காங்கிரஸ் தவறு செய்திருக்கிறது உண்மைதான். ஏன் காந்தாகார் விமானக் கடத்தலின் பொழுது பி ஜே பி தவறு செய்யவில்லையா? யார் எய்தது என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் தான். ஆனால் அப்படிக் கண்டு பிடிக்காதபடியால் அம்புகளுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது என்பது மூளையற்ற பேச்சு. சரி காங்கிரஸ் சதிகாரர்களின் ஆட்சிகளுக்கு இடையில் வந்த பி ஜே பி அரசு எய்தவர்களைக் கண்டு பிடித்துத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டியதுதானே? அவர்கள் ஆட்சியில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

ஆக இங்கு வில், அம்பு எல்லாம் திசை திருப்பும் பேச்சுக்கள். எந்தவொரு குற்றத்திலும் எய்தவன் இருக்கவே செய்வான். கசாப்பும் அப்சலும் மட்டும் என்ன தானாக முடிவு செய்து திட்டம் போட்டாத் தாக்கினார்கள்? அவர்களுக்குப் பின்னால் இந்திய தேச விரோதிகளும், பாக்கிஸ்தானின் ஐ எஸ் ஐயும் பிற பயங்கரவாத அமைப்புகளும் இருக்கத்தானே செய்தன? ஆக எய்தவனை விட்டு விட்டு அம்பை தண்டிக்கக் கூடாது என்ற தங்களின் அறிவு பூர்வமான தர்க்கம் கொண்டு அப்சலையும், கசாப்பையும் விடுதலை செய்து விடலாமா?

எந்தவொரு சதிச் செயலுக்குப் பின்னாலும் வெளி நாடுகளின் தூண்டுதல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதற்காக எய்தவனைப் பிடிக்கும் வரை அம்பை நோகக் கூடாது என்பது அறிவான பேச்சு அல்ல. அமெரிக்காவில் செப்டம்பர் பதினொன்றில் தாக்குதல் நடத்தினார்கள். அதை ஏற்பாடு செய்த சதிகாரர்கள் அரேபியாவிலும், பாக்கிஸ்தானிலும் இருந்துதான் செய்தார்கள் அவர்களுக்குப் பின்ணணியில் ஏகப் பட்ட சதிகள் இருந்தன. இருந்தாலும் பிடிபட்ட எவரையுமே அவர்களை எய்தவர்களை இயக்கியவர்களைப் பிடிக்கும் வரையிலும் தண்டிக்கக் கூடாது என்று அமெரிக்காவில் எவருமே சொல்லவில்லையே. தெளிவாக சிந்திக்கத் தெரிந்த எவராலும் இப்படிப் பட்ட ஒரு உளறலை அவிழ்த்து விட முடியாதே? பிடிபட்டவர்களுக்கு எல்லாம் கடும் தண்டனையை அமெரிக்கா அளித்துக் கொண்டுதானே இருக்கிறது? அதனால்தானே செப்டம்பர் 11க்குப் பிறகு மற்றொரு தாக்குதல் இன்று வரை அமெரிக்க மண்ணில் நிகழவில்லை?

அமெரிக்காவின் தவறுகளினால்தான் அமெரிக்காவின் மீதான தாக்குதலே நடந்தது. அதற்காக நாம் தவறு செய்து விட்டோம் ஆகவே இந்தத் தாக்குதலுக்கு நாம்தான் பொறுப்பு ஆகவே பிடிபட்டவர்களை மன்னித்து விட்டு விட் வேண்டும் என்று அமெரிக்காவில் எவரும் கோரியதில்லையே? ஆம் தவறுகள் நடந்து விட்டன. எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதை நாம் சொல்லலாம், நம் மக்கள் சொல்லலாம். ஆட்சியை மாற்றலாம் ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு எதிரி வந்து தாக்க அனுமதியோம் என்பதுதானே அமெரிக்காவின் நிலைப்பாடு? அப்படி உறுதியாகச் செயல் படும் சட்டங்களும் தண்டனைகளும் இருப்பதினால்தானே இன்று வரை அந்த அமெரிக்க மண்ணில் மற்றொரு தாக்குதல் நிகழவில்லை?

எந்தவொரு தலைவரின் கொலைக்குப் பின்னாலும், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னாலும் நிச்சயமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பின்ணணியில் ஏராளமான சதிகாரர்கள், நிதியுதவி செய்தவர்கள், திட்டமிட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் அனைவரும் பிடிபட்டுத் தண்டிக்கப் படும் வரையிலும் ஏற்கனவே பிடிபட்டவர்களைக் கைது செய்யக் கூடாது என்று சிந்திக்கத் தெரிந்த எவரும் சொல்ல மாட்டார்கள்.

ஏன் மரகதம் சந்திரசேகர் விசாரிக்கப்படவில்லை? ஏன் வேண்டுமென்றே கால தாமதம் செய்யப்பட்டு சிவராசனின் தற்கொலை அனுமதிக்கப்பட்டது? என்றெல்லாம் எழும் கேள்விகள் கேள்விகளாகவே உள்ளன.

அவற்றுக்கான பதில் இனி என்றென்றும் கிடைக்காதவாறு விடுதலைப் புலிகளும் கூடவே எண்ணிக்கை தெரியாத அளவு ஈழத் தமிழர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்.

அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களை காங்கிரஸ் ஆட்சியின் பின்னே வந்த பி ஜே பி அரசு அல்லவா கண்டு பிடித்திருக்க வேண்டும்? அவர்கள் ஆட்சியின் பொழுது என்ன கிழித்துக் கொண்டிருந்தார்கள்? அதைக் காரணமாகக் கொண்டு கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது என்பது ராஜாவும், கனிமொழியும் அருண் ஷோரியைக் காரணம் காட்டி தப்பிக்க முயல்வதை விடக் கேவலமான உத்தி. அதற்கான பதிலைக் கண்டு பிடியுங்கள். அன்று சிவராசன் தற்கொலை செய்வதை அனுமதித்த ராவின் தலைவர் பாஜ்பாய் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், கார்த்திகேயன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் இருவருமே அந்த முடிவை எடுத்தவர்கள். யாரைக் காப்பாற்ற அதைச் செய்தார்கள் என்று அவர்கள் இருவரையும் முட்டிக் முட்டி தட்டி பி ஜே பி காலத்தில் விசாரித்திருந்தால் உண்மையைக் கக்கியிருக்கப் போகிறார்கள். விசாரிக்காமல் தடுத்தது எது? யார் தடுத்தார்கள்? யாரைக் காப்பாற்ற வாஜ்பாயியும் அத்வானியும் அமைதி காத்தார்கள்? ஆனால் அதைக் காரணமாக வைத்து கண்டுபிடிக்கப் பட்ட குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தக் கூடாது.

அவைகள் எல்லாம் நியாயமான கேள்விகள்தான் மறுக்கவில்லை. மரகதம் சந்திரசேகர் மட்டும் அல்ல வை.கோ, கருணாநிதி என்று இன்னும் ஏராளமானவர்களை ராஜீவ் கொலையை விசாரித்த புலானாய்வுக் குழுவினர் விசாரிக்க அனுமதிக்கப் படவில்லை. இதை ராஜீவ் கொலையை விசாரித்த சி பி ஐ அதிகாரியான ரகோத்தமன் தனது ”ராஜீவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்” என்னும் நூலில் பல பக்கங்களில் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

குறிப்பாக அவரது தலைமை அதிகாரியான கார்த்திகேயன் தி மு க தலைவர் கருணாநிதி மற்றும் வை.கோபால்சாமி போன்றோரை விசாரிக்க அனுமதிக்க மறுத்ததன் மூலம் அவர்களைக் காப்பாற்றும் விதத்தில் அவர்களுக்கு ஆதரவாகச் செயல் பட்டவர் என்ற குற்றசாட்டை தன் உயர் அதிகாரி மீது நேரடியாகவே ரகோத்தமன் வைக்கிறார். முக்கியமாக ராஜீவ் கொலை செய்யப் படப் போகிறார் என்ற தகவல் கருணாநிதிக்கும், வை கோபால்சாமிக்கும் இன்னும் பல தி மு க பிரமுகர்களுக்கும் முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டும் என்று உறுதியான சந்தேகங்களை ரகோத்தமன் வைக்கிறார். ராஜீவ் கொலையான அதே நாளில் நடக்கவிருந்த தி மு க கூட்டத்தைக் கருணாநிதி ரத்து செய்திருப்பதும், வை.கோபால்சாமியின் பல பேச்சுகளும் அவரது பொய்களும் அவர்களுக்குத் தெரிந்தே இந்தப் படுகொலைகள் நடந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்துகின்றன என்றும் இருந்தாலும் புலன் விசாரணையின் தலைமை அதிகாரியான கார்த்திகேயனின் தலையீட்டால் தன்னாலும் தன் குழுவினராலும் இவர்களை விசாரிக்கவோ கைது செய்யவோ முடியவில்லை கார்த்திகேயன் தி மு க வினருக்கு ஆதரவாகச் செயல் பட்ட துரோகத்தைச் செய்து விட்டார் என்று ரகோத்தமன் கடுமையான குற்றசாட்டை வைக்கின்றார்.

இதே குற்றசாட்டுக்களை சிவராசனை கைது செய்யச் சென்ற கமாண்டோ படை அதிகாரியான மேஜர் ரவி பின்னர் தான் எடுத்த மலையாள சினிமாவான 20 ஹவர்ஸ் என்ற திரைப்படத்திலும் கடுமையாக வைக்கின்றார். மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தாருக்கும் கொலை செய்த தனு, சிவராசனுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்திருக்கலாம் என்ற தன் கண்டுபிடிப்புகளையும் மறைக்காமல் வைக்கின்றார். ஆக காங்கிரஸ்காரர்கள் மட்டும் அல்ல தி மு க வினருக்கும் இந்தக் கொலையாளிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் ஆனால் எந்தவொரு அரசியல்வாதியையும் விசாரிக்க தன் தலைமை அதிகாரி மறுத்து விட்டார் என்றும் ரகோத்தமன் குற்றம் சாட்டுகிறார். மரகதம் சந்திரசேகரை மட்டும் அல்ல கருணாநிதியையும், அவரது கும்பலையும், வை,கோபால்சாமியையும், தி க கும்பல்களில் பலரையும் விசாரித்தால் ஏன் இவர்களையெல்லாம் பாதுகாத்த சி பி ஐ உயர் அதிகாரியாக இருந்த கார்த்திகேயனையும், அப்பொழுதைய ராவின் டைரக்டரான பாஜ்பாயையும் விசாரித்தால் மட்டுமே இந்த கொலை வழக்கு முழுமை அடையும் என்பது உண்மையே. இந்த மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமானால் உங்களையெல்லாம் விசாரிக்க வேண்டி வரும் என்று மட்டும் இப்பொழுது சொல்லட்டும் இவர்களுக்கு மரண தண்டனையில் இருந்து விடுதலை கோரும் அனைவரும் ஓடி மறைந்து விடுவார்கள்.

ராஜீவ் கொலையாளிகளான சிவராசனையும் தனுவையும் உயிருடன் பிடிக்க கமோண்டோக்கள் தயார் நிலையில் இருந்த பொழுதும் கூட அவர்களை உயிருடன் பிடிக்க அனுமதியாமல் அவர்களுக்குப் பிடிவாதமாக அனுமதி கொடுக்க மறுத்து சிவராசனை தற்கொலை செய்ய தள்ளியுள்ளனர் அன்றைய புலனாய்வு தலைமை அதிகாரி கார்த்திகேயனும், ரா வின் தலைவரான பாஜ்பாய் என்பவரும். ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் கண்டு பிடிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இந்திய உளவு அமைப்பான ரா வுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இருந்த உறவு கண்டு பிடிக்கப் பட்டு விடும் என்ற அச்சித்தினாலேயே ரா சிவராசன் பிடிபடுவதை விரும்பவில்லை என்ற சந்தேகம் மற்றொரு ரா அதிகாரியான பி.ராமன் அவர்களின் மற்றொரு கட்டுரையைப் படிக்கும் பொழுது புரிபடுகிறது. நிச்சயமாக இந்தக் குற்றத்திற்காக கார்த்திகேயனும், பாஜ்பாயும் விசாரிக்கப் பட்டு அவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் நிச்சயம் தண்டிக்கப் படவே வேண்டும் ஆனால் அதற்காக கொலைக்கு உடந்தையாக இருந்து ஆதாரங்களுடன் பிடிபட்டவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் விட வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

இத்தனை சந்தேகங்கள் ஒரு புறம் இருப்பதினாலும் மாட்டிக் கொள்ளாமல் இன்னும் பலரும் இருப்பதினாலும் மட்டுமே கொலையில் உறுதியாகச் சம்பந்தப் பட்டவர்களை விடுதலை செய்து விட வேண்டும் என்று பேசுவது அபத்தமான ஒரு தர்க்கமாகும்.

நாளைக்கு குளவியார் வீட்டில் ஒரு களவு போகிறது என்று பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். களவு செய்தவனையும் களவு போன பொருட்களையும் போலீஸ்காரர்கள் பிடித்து விட்டார்கள் என்று நடக்க முடியாத ஒரு விஷயமும் நடந்து விட்டதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஆனால் களவு செய்ய திட்டம் போட்டுக் கொடுத்த கொள்ளையர்களின் தலைவன் ஒருவன் மட்டும் இன்னும் பிடிபடவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். குளவியார் அப்பொழுது அவனையும் பிடித்த பின்னால்தான் களவு போய் கண்டுபிடிக்கப் பட்ட தன் பொருட்களை வாங்கிக் கொள்வேன் என்று சொல்வாரா? ராஜீவ் கொலையாளிகளுக்கு இந்த அபத்தான காரணத்தை முன் வைத்து தண்டனை கொடுக்கக் கூடாது என்று சொல்லும் ஆதரவாளர்கள் எவரேனும் அவர்கள் வீட்டில் களவு போன பொருட்கள் பிடிபட்டால் அப்படிச் சொல்வார்களா? ஆக இவர்கள் சொந்தப் பொருள் என்றால் ஒரு நியாயம் ராஜீவ் கொலையாளிகளுக்கு மட்டும் வேறு நியாயமா? என்னே ஒரு இரட்டை வேடம்?

ஆக ஈழத்தமிழரின் கனவு அர்த்தமற்று சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதில் காங்கிரஸின் பங்கு என்ன என்பது தெளிவான ரகசியமாகிவிட்ட நிலையில், இந்த மூன்று தமிழர்களைக் கொல்வது மிக மோசமான வக்கிரம் மட்டுமேயான ஒருவித ரத்தவெறி.

மீண்டும் முட்டாள்தனமான வாதம். ஈழத்தமிழர்களின் கனவு அர்த்தமற்று சிதைக்கப் பட்டதற்கு காங்கிரஸ் மட்டுமா காரணம்? புலிகள், தமிழ் நாட்டுக் கட்சிகள், சிங்களர், காங்கிரஸ் என்று அனைத்துத் தரப்பினரும் முக்கியமாக விடுதலைப் புலிகள்தானே காரணம்? அதற்கான விடை தெரிவது இப்பொழுது முக்கியமல்ல. இந்தியாவிற்குள் ஒரு பயங்கரமான கொலை நடந்துள்ளது 20 பேர்கள் இறந்துள்ளனர். அதை வெளிநாட்டில் இருந்து வந்த தீவீரவாதிகள் நிகழ்த்தியுள்ளார்கள். இதை மீண்டும் மீண்டும் பல கோர்ட்டுகள் ஊர்ஜிதம் செய்து விட்டன. சந்தேகத்திற்கிடமின்றி கொலையில் பங்கு கொண்டவர்களுக்குத் தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. அதை நிறைவேற்றாமல் அது மோசமான வக்கிரம் என்று சொல்வதே வக்கிரமான மோசம்.

இவர்கள் மூவரும் தமிழர்களாக இல்லாமல் இருந்து சிங்களவர்களாக இருந்திருந்தால் கொல்லலாமா? அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்கக் கூடாது என்று சொல்லும் இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அவர்களை விட நீங்கள் எந்த அளவில் வேறு படுகிறீர்கள்? அவன் மதம் சார்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் நீங்கள் மொழி சார்ந்து கொலையாளிகளை ஆதரிக்கிறீர்கள். இந்தியாவின் மீது குண்டு போட்டு அப்பாவி மக்களைக் கொல்லும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள். அதன் படி அவர்கள் கொல்வது சரியே என்கிறார்கள். அதே போல ராஜீவ் மற்றும் அப்பாவி மக்களின் கொலைகளுக்குக் காரணமான கொலையாளிகளுக்கும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கொலைகாரனும், கொள்ளைக்காரனும் நியாயம் வைத்திருக்கிறார்கள். ஏன் கருணாநிதியும் கனிமொழியும் ராஜாத்தியும் ராஜாவும் கூட தங்கள் கொள்ளைகளை நியாயப் படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நாம் குண்டடி வாங்கி சாவோமே? நம்மைக் கொள்ளையடிப்பதை அனுமத்திப்போமே?

பயங்கரவாதம் எந்த அடிப்படையில் செய்யப் பட்டாலும் அதைக் கடுமையாக மறுப்பனே மனிதன். மத, இன, ஜாதி, மொழி பார்த்து ஆதரிப்பவனுக்கும் அந்தப் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது

ஆனால் அதே வேளையில் அப்பாவி ஈழத் தமிழர்களின் கொலைகளுக்கும் அவல நிலைகளுக்கும் காங்கிரஸ், தி மு க முதலான இந்திய அரசியல் கட்சிகள் பொறுப்பாக இருந்திருக்குமானால் அவர்களையும் ராஜ பக்சேவை விசாரிப்பது போலவே விசாரிக்க வேண்டும். ஆனால் அது முடியும் வரை எவருக்குமே தண்டனை அளிக்கக் கூடாது என்பது கூறுகெட்ட ஒரு கூற்று மட்டுமே. இதைப் போலவே இஸ்லாமியர்களாக இருப்பதினால் தண்டனை கொடுக்கக் கூடாது என்றும், கிறுஸ்துவராக இருந்தால் மன்னிக்க வேண்டும் என்று அந்தந்த மதத்தினரும் தெலுங்கு, மலையாள, இந்தி பேசுபவர்களாக இருந்தால் தண்டிக்கக் கூடாது என்று அந்தந்த மொழியினரும் கோடானு கோடி ஜாதியினர்களில் ஒருவராக இருப்பதினால் தண்டிக்கக் கூடாது என்று அந்தந்த ஜாதியினரும் கொடி பிடிக்க ஆரம்பித்தால் இந்தியாவில் சட்டம், போலீஸ், கோர்ட், தண்டனை எல்லாம் எதற்காக? எல்லோரையும் அவிழ்த்து விட்டு விடலாமே? போலீஸையும், கோர்ட்டையும், ராணுவத்தையும் கலைத்து விடலாமே? மன்மோகனும், சிதம்பரமும் பேசும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் பேச்சை விடக் கேவலமான ஒரு கருத்து மேற்படிக் கருத்து.

ஆனால், ராஜீவ் இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்பதைத் தாண்டி அவர் இந்திய தேசத்தின் சின்னம் அல்ல. அவர் ஒரு ஊழல் கறையும் மானுடப் பெருங்குற்றங்களின் கறையும் படிந்த ஒரு அரசியல்வாதி.

காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரித்த அமைப்பில் சக-பிரசிடெண்ட் ஆக இருந்தவர் ‘அன்னை’ சோனியா. அவர் மீது தேசத்துரோக குற்றத்துக்கான நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்துவிட்டு பிறகு பேரறிவாளன், முருகன், சாந்தன் குறித்து யோசிக்கலாமே.

இது அபத்தமான பேச்சு. முதலில் இந்தியாவின் எந்தப் பிரதமரும் அவர் முன்னாளோ, இந்நாளோ இந்திய தேசத்தின் ஒரு சின்னமே. அது 64 கோடி ஊழல் செய்த ராஜீவாக இருந்தாலும் லட்சம் கோடி ஊழல் செய்வதை வேடிக்கை பார்க்கும், அனுமதிக்கும் மன்மோகனாக இருந்தாலும் சரி, பெட்டிகளில் பணம் வாங்கிய நரசிம்மராவாக இருந்தாலும் சரி ஊழல் பெருச்சாளி தேவகவுடாவாக இருந்தாலும் சரி தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர்கள். அவர்களை நம் சட்டங்கள் விசாரித்து உரிய தண்டனை அளிப்பதே முறை. கருணாநிதியும், ஜெயலலிதாவும், எடியூரப்பாவும், ஜெயிலுக்குப் போகிறார்கள். அதற்காக அவர்கள் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் என்ற நிலை இல்லாமல் ஆகி விடாது. நரசிம்மராவே ஜெயிலுக்குப் போக இருந்தவர்தான். அவர்கள் தவறு செய்தால் நம் சட்டம் அவர்களை தண்டிக்க வேண்டும். அது போதாதாக இருப்பதினால்தான் அதில் குறைபாடுகள் உள்ளதால்தான் இன்று ஜன்லோக்பால் கேட்கிறார்கள்.

நாளைக்கு அதுவும் வரட்டும் குற்றம் செய்த நம் தலைவர்களை விசாரித்து உள்ளே போடுவோம். அதுதான் முறை. தவறு செய்த நம் தலைவர்களைக் கொல்லும் உரிமை நம் சட்டத்துக்கு மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி பிரபாகரனுக்கும் சிவராசனுக்கும் பேரறிவாளனுக்கும் அல்ல. அன்னை சோனியா மீது தாராளமாக தேசத் துரோகக் குற்றத்தைச் சாட்டலாம், விசாரிக்கலாம். அதற்கான தடைகள் பல இருந்தாலும் சுப்ரமணியன் சுவாமி அதற்கான நட்வடிக்கையை எடுத்துத்தான் வருகிறார். நாளைக்கு மன்மோகனுக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப் படலாம். மன்மோகன் சிங் குற்றவாளி என்ற உண்மை நிரூபிக்கப் பட்டு அவருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப் படலாம். அதற்கான தண்டனையை இந்திய மக்கள் அளிக்க வேண்டும், இந்தியச் சட்டம் அளிக்க வேண்டும், இந்திய கோர்ட்டுகள் அளிக்க வேண்டும். மன்மோகன் திருடன் என்பதற்காக அவருக்குத் தண்டனை கொடுத்த பின்னால்தான் ராஜாவுக்கும் கனிமொழிக்கும் அழகிரிக்கும் இன்னும் வீடுகளில் கொள்ளையடிக்கும் உள்ளூர் திருடர்களுக்கும் தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்பது அறிவில்லாத குதர்க்க வாதம் மட்டுமே.

அதே சமயம், எந்த பயங்கரவாத தாக்குதலும் கண்டனத்துக்குரியது என்ற முறையில் ராஜீவும் அவருடன் இறந்த பதினான்கு பேருடைய மரணங்களும் கண்டனத்துக்கும் அஞ்சலிக்கும் உரியதே.

ஆனால், அதற்கு மற்ற பயங்கரவாதச் செயல்களுக்கு இல்லாத ஒரு ஒளிவட்டத்தை அளித்து மூன்று அம்புகளின் அம்புகளை பெரும் இனப் பேரழிவுகளுக்கு பின்னர் தூக்கில் போடுவது தவறானது.

எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று பேரை தூக்கில் போடுவது அநியாயமானது.

நடந்தது ஒரு பயங்கரவாதச் செயல். நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப் பட்டிருக்கும் அச்சுறுத்தல். எப்படி அப்சல் குரு பாராளுமன்றத்தைத் தாக்கியது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப் பட்ட சவாலோ அதே போன்ற தீவீரவாதம் உடையதே ராஜீவின் கொலையும். ராஜீவுக்கு மக்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். அந்த அனுமதியைப் பயன் படுத்தி அவர் ஒரு முடிவு எடுக்கிறார். அது தவறான முடிவென்றால் அவருக்கு ஓட்டுப் போட்ட மக்களையும் அந்தப் பொறுப்புச் சாரும். அவர் எடுத்த முடிவு சரியோ தவறோ அது இந்திய அரசு எடுத்த முடிவு. அதற்கான தண்டனையை வெளிநாட்டினர் வந்து அளிக்க அனுமதிக்கவே முடியாது.

பெரும் இனப் பேரழிவு நடந்து விட்டது ஆகவே ராஜீவ் மற்றும் அப்பாவி மக்களின் கொலையில் நேரடியாகப் பங்கெடுத்த கொலையாளிகளை மன்னிக்க வேண்டும் என்று கேட்ப்பதே முட்டாள்த்தனமான ஒரு கேள்வி. ஹோலோகாஸ்ட்டின் பொழுது லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப் பட்டு விட்டார்கள் என்பதற்காக ஹோலோகாஸ்ட் நடந்து முடிந்தவுடன் சில யூதர்கள் சேர்ந்து ஒரு ஜெர்மனியின் அதிபரையோ, ஒரு போலந்து நாட்டின் பிரதமரையோ கொன்றார்கள் என்றால் அந்த யூதர்களுக்கு யாரும் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி விடப் போவதில்லை. அந்த நாட்டுச் சட்டப் படி உரிய தண்டனை வழங்கவே படும். சரி, நம் நாட்டு உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். காஷ்மீர் பண்டிட்டுகள் அழிக்கப் படுகிறார்கள். அதற்குக் கேடு கெட்ட காங்கிரஸ் அரசுகள் காரணமாக இருந்தன. அதனால் ஒரு மூன்று பண்டிட்டுகள் கிளம்பி ஒரு மன்மோகனையோ, ஒரு சிதம்பரத்தையோ கொன்றால், ஐயோ பாவம் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பண்டிட்டுகளைக் கொன்று விட்டார்கள், ஆகவே பரிதாபம் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த மூன்று கொலையாளி பண்டிட்டுகளை நாம் விட்டு விட வேண்டும் என்று யாராவது சொன்னால், எழுதினால் அவர்களது மனநிலை கேள்விக்குள்ளாக்கப் படுமா படாதா? மோசமான மனநோயாளி கூட வைக்கத் தயங்கும் வாதம் இது.

எப்படி அப்சலைத் தூக்கில் போடுவது அவசியமோ, முக்கியமோ அதை விட அவசியமும் முக்கியமும் வாய்ந்தது இந்த ராஜீவ் மற்றும் அப்பாவி மக்களைக் கொன்ற கொலையாளிகளுக்கு அளிக்கப் பட வேண்டிய மரண தண்டனையும் கூட. ராஜீவ் கொலை முதலில் நடந்தபடியால் காலக்கிரமப் படி கூட இவர்களுக்கே முதலில் தண்டனை அளிக்கப் பட வேண்டும். அப்படி அளித்தால்தான் இந்தியாவின் சட்டத்தில் அனைவருக்கும் நம்பிக்கை வரும். இல்லாவிட்டால் இந்துக்கள் என்றால் மன்னித்து விட்டு விடுகிறார்கள் என்ற அவநம்பிக்கை மைனாரிட்டியினருக்கு அரசின் மீது எழுந்து விடும். ஒரு நாட்டின் முன்னாள் தலைவரைக் கொன்றவர்களைக் கூட இந்திய அரசால் துணிந்து தண்டிக்க முடியவில்லை என்றால், ஒரு நாட்டின் பாராளுமன்றத்தையே தாக்கியவனைக் கூட இந்தக் கேடு கெட்ட அரசால் தண்டிக்க முடியவில்லை என்றால் இந்த அரசு நாளைக்கு எந்த எதிரியிடம் இருந்து மக்களைக் காப்பாற்றப் போகிறது? இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருந்தும், சீன அச்சுறுத்தல்களில் இருந்தும் இந்தியாவை யார் காப்பாற்றப் போகிறார்கள்? எப்படி காப்பாற்றப் போகிறார்கள்?

இது வரை குளவியார் எழுப்பிய கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்திருக்கிறேன். ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை கோரும் இன்னும் பல மனித உரிமைவாதிகளும், தனித் தமிழ் போராளிகளும், புலி ஆதரவாளர்களும் எழுப்புக் பல்வேறு கேள்விகளுக்கும் அவை எந்த அடிப்படையும் இல்லாத முட்டாள்த்தனமான வாதங்கள் என்பதையும் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

(தொடரும்)

34 Replies to “மரணதண்டனை அரசியல்கள் – 1”

  1. Pingback: Indli.com
  2. ஆசிரியர் அவர்களுக்கு.
    பிரித்து மேய்ந்து விட்டீர்கள், வரிக்கு வரி கட்டுரையின் தவறுகளை விளக்கி உள்ளீர்கள், சிறக்கட்டும் தங்கள் பணி.
    ஆனால் எப்படியோ இந்த மூவரும் தூக்கிலிருந்து விடுவிக்கபடுவர், பின்னர் முஸ்லிம்கள் அப்சல் மற்றும் கசாபை விடுவிக்க சொல்லி போராடினால் மட்டும் இங்கு எல்லோரும் கூக்குரலிடுவர் பாருங்கள். இவர்களை விடுவித்தால் அவர்களும் விடுவிக்க தகுதியானவர்களே,

    குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் குற்றவாளிகளே. இவர்களுக்கு ஒரு தண்டனையும் கிடையாது.
    ஏன் இந்திய குற்றபிரிவு சட்டமே தேவை இல்லாததாகி விடும் குற்றவாளிகளின் ஆதரவு கூட்டத்திர்கேற்ப மட்டும் தண்டனை அல்லது விடுதலை என அறிவித்து விடலாம்.

    என்ன இந்த பாரத நாட்டிற்கு வந்த சோதனை.வெட்கம் வெட்கம்? எப்படியோ பொழுது விடிந்ததும் இந்நாடே தீவிரவாதிகளுக்கு அடிமையாகிவிடாமல் காப்பாற்ற யார் வருவாரோ?

  3. அருமையான கட்டுரை, தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நிச்சியமாக தண்டிக்கப்பட வேண்டும். அவர் ஹிந்து என்பதற்காக விடுவிக்க வேண்டும் என்ற குளவியர் வாதம் முற்றிலும் தவறு. பொது சிவில் சட்டம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் ஹிந்து தவறு செய்தால் விடுவிக்க வேண்டும் என்று கோருவது நியாமா?

  4. தமிழ் ஹிந்து தளம் விவாதத்திற்குரிய இரு கட்டுரைகளையும் பதிப்பித்தது, ஆசிரியர் குழுவின் பரந்த மனப்பான்மையை காட்டுகிறது.

    வாழ்த்துக்கள்

    வாழ்க பாரதம் வெல்க பாரதம் …..
    நாஞ்சில் சுதீந்த்ரர்

  5. திரு. விஸ்வாமித்ரர் அவர்களுக்கு……

    குளவியாரின் மேற்படி கட்டுரையை படித்தபின் என் நெஞ்சில் குமுறிய எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தியுள்ளீர்கள்…..மிக அருமை…..நன்றி……

    குளவியாரின் கட்டுரையை தொடர்ந்து நான் எழுதிய பின்னூட்டங்களிலும் ,அதை தொடர்ந்து வாசகர்களுடன் மேற்கொண்ட விவாதங்களிலும் நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை எழுதியுள்ளேன்…..

    மீண்டும் நன்றி……வந்தே மாதரம்…….

  6. //கீழ்க்கோர்ட்டுகளில் விதிக்கப் படும் மரண தண்டனைகள் அதன் பின்னர் செஷன்ஸ் கோர்ட், ஹைக்கோர்ட், ஹைக்கோர்ட் பெஞ்ச், சுப்ரீம் கோர்ட், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், கருணை மனுக்கள், மத்திய மாநில அமைச்சரவைகளின் பரிந்துரைகள் என்பது போன்ற ஆயிரத்தெட்டுத் தடைகளைக் கடந்து அபூர்வமாக வெகு சிலருக்கே வழங்கப் படும் ஒரு அபூர்வமான தண்டனையாகும்//

    ஆரம்பமே தப்பு.மரண தண்டனை விதிப்பதற்கு கீழ் கோர்ட்டுகளுக்கு அதிகாரம் இல்லை; மாவட்ட அமர்வு நீதிபதி அந்தஸ்த்தில் இருக்கு செஷன்ஸ் நீதிபதிக்கே இந்த அதிகாரம் இருக்கிறது. மரண தண்டனை செஷன்ஸிலே விதிக்கப்பட்ட பின்பு பாதிக்கப்பட்டவர் அப்பீல் செய்யவில்லை என்றாலும் தானாகவே உயர் நீதிமன்றம் உச்ச நீதி மன்றம் இரண்டிற்கும் கன்பர்மேஷனுக்கு அந்த வழக்கு செல்லும்; விஸ்வாமித்திரர் கவனிக்க‌

  7. குளவியாரின் கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தக் கட்டுரையை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். கொண்டாடுகிறேன். ஆனால், குளவியாரின் கருத்தே என் கருத்தும்.

    இலங்கையில் அழிக்கப்படுபவர்களும் இந்தியர்கள்தான் என்ற உண்மையை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான், இலங்கைத் தமிழர்களும் நம்மை ஏற்றுக் கொள்வார்கள்.

    இலங்கைத் தமிழர்களும் இந்தியர்கள்தான் என்ற வரலாற்று உண்மையை ஏற்றுக் கொண்டதால்தான் இந்தியா எல்.டி.டி.ஈ என்ற அமைப்பை உருவாக்கியது.

    ஆம். எல்.டி.டி.ஈ என்பது இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க இந்தியாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றே சொல்லி விடலாம்.

    இந்திய விரோதிகளின் கையில் இந்திய அரசாட்சி போனபின்னர், இந்தியாவிற்கு எதிரானதாக இந்திய அரசு அமைப்புக்கள் சிலவும், அதன் விளைவாக இந்தியாவின் எதிரியாக எல்.டி.டி.ஈயும் மாற்றப்பட்டன. அதன் விளைவுகளில் ஒன்றுதான் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு.

    யாரை மன்னித்தால் ஒற்றுமை, அன்பு, நட்பு ஏற்பட வழி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

    யாரை மன்னித்தாலும், கொடூரங்களை மறந்தாலும், பரிவு காட்டினாலும், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் தேசத்திற்கும் மானுடத்திற்கும் தீமை என்பதைப் பார்க்க வேண்டும்.

    இந்த இரண்டிற்கும் இடையேயான வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால், நாடு போக வேண்டிய பாதை என்ன என்பதைப் புரிந்து கொண்டால், எல்லாரும் தீவிரவாதிகள், தீவிரவாதிகள் எல்லாரும் கொல்லப்பட வேண்டும் என்ற மட்டையடிப் புரிதல் விலகும்.

    நம்மை உதைத்தது நம் வீட்டுப் பச்சிளங் குழந்தையா அல்லது கொலை செய்ய வந்த அடியாளா என்பதையாவது புரிந்துகொள்ள வேண்டும்.

    ராஜிய நீதி என்பது வேறு. சுப்ரீம் கோர்ட் நீதி என்பது வேறு.

    தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு தரப்படும் என்பதுகூட கோர்ட் அளித்த தீர்ப்புத்தான். கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்பதாலேயே அந்தத் தீர்ப்பை விஸ்வாமித்திரா ஏற்றுக் கொள்வார் என்று தோன்றுகிறது. நான் ஏற்கவில்லை.

    ராஜிவ் கொலையாளிகளுக்கு உதவியதாகச் சொல்லப்படும் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களை ஆதரிப்பது போல நடிக்கும் அமைப்புக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான் லாபம். இந்தியாவிற்கு நட்டம்.

    இந்தியாவிற்கு நட்டம் விளைவிக்கக்கூடிய ஒன்றை ஒரு இந்து விரும்ப மாட்டான். ஆனால், இந்து சமூகத்தின் தற்போதைய பிரச்சினைகளான சாதிக் காழ்ப்பும் கிட்டப் பார்வையும் தவறான முடிவுகளை எடுக்கச் செய்து வருகிறது என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    இந்த மூவருக்குத் தூக்கு வழங்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டாலும், அப்சல் குரு உள்ளிட்ட மானுட விரோதிகளைத் தண்டிக்கும் வலுவோ, நீதியுணர்வோ இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

    இந்திய அரசியல்வாதிகளுக்கு உண்மையில் வலு இருந்தால், இந்த மூவரையும் மன்னிப்பார்கள். அஃப்சல் குரு, கசாப் உள்ளிட்ட வன்முறை மார்க்கத்தாருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.

    அந்த வலு இல்லாததால்தான் வேறுபட்ட இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒன்று என்று திரித்துப் பேசுகிறார்கள். அவர்களது திரித்தல்களுக்கு விஸ்வாமித்திரா உள்ளிட்ட எண்ணற்ற இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.

    விஸ்வாமித்திரா இவை போன்ற பல்வேறு காரணிகளை அலசுபவர். அவற்றை எல்லாம் அவர் தன் கவனத்தில் எடுத்துக்கொண்டால், அவரது தற்போதைய நிலை மாறும் வாய்ப்பு இருக்கிறது.

    எல்லோருக்குமான இப்பொதைய கேள்வி, இந்திய அரசாட்சியை வைரஸ் பீடித்தால் அந்த வியாதியின் விருப்பத்தை ஆதரிப்பீர்களா எதிர்ப்பீர்களா ?

    .

  8. திரு.விஸ்வாமித்திரா,
    அருமையான பதில். குளவியார் எழுதியது உணர்ச்சி வசத்தால் மட்டுமே!
    சில தமிழ் இனவாத குழுக்கள் 100, 200 பேர் சேர்ந்து அங்கங்கு தமிழ்
    நாட்டில் கூட்டம் போட்டு அதை சன் நியூஸ் காட்டி அதை குளவியார்
    பார்த்து சிரீயஸாக எடுத்துக் கொண்டதன் விளைவுதான் அந்த கட்டுரை.

    விடுதலைப் புலிகள் கொலைகாரர்கள், கொடும்பாவிகள், தீவிரவாதிகள்,
    கொலை வெறியர்கள். வட இலங்கை தமிழ் மக்கள் அனுபவித்த
    அவசியமில்லாத இன்னல்களுக்கு முதல் காரணமே அவர்கள்தான்!

    ராஜபக்சேவைப் பற்றி தமிழகத்தில் “போர் குற்றவாளி” என்ற ரீதியில்
    பலர் பேசுகிறார்கள். அதற்கு ஐ.நா சபையின் குழுவின் அறிக்கையை
    காரணமாக கூறுகிறார்கள்.
    அந்த குழுவின் அறிக்கையை மேம்போக்காக கூட படிக்காத தற்குறிகள்
    கூறுவதே செய்தியாகிறது. அந்த அறிக்கை 3 குழுக்களை
    படுகொலைகளுக்கு காரணமாக முன் நிறுத்துகிறது.
    (1)இலங்கை இராணுவம்.
    (2)விடுதலை புலிகள்
    (3)மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் விடுதலை புலிகளின் அபிமானிகள்
    தாதாகிரி செய்து அங்குள்ள தமிழர்களை மிரட்டி பணம் திரட்டியது.

    1ம் குழுவை மட்டும் காரணமாக பேசும் தமிழ்நாட்டு தலைவர்கள்
    2 மற்றும் 3ம் குழுக்களை ஏனோ மறந்து விடுகிறார்கள்.

    தமிழ் ஹிந்து குளவியாரின் கட்டுரையை வெளியிட்டிருக்கக் கூடாது.

  9. அருமையான தரமான வாதங்கள். இருந்தாலும் சார் – அப்சல்ககும் இந்த மூணு பேருக்கும் வித்தியாசம் இருக்குன்னு மனசு சொல்லுது சார். அதை ஒன்னும் பண்ண முடியாது போங்க.

  10. கட்டுரையை பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. தவறினைத் திருத்திய அட்வகேட் சந்திரமவுலீஸ்வரன் அவர்களுக்கும் நன்றி. நான் செஷன்ஸ் கோர்ட்டையும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டையும் குழப்பி விட்டேன். அதன் அர்த்தம் நீதி அடுக்குகளில் கீழேயுள்ள கோர்ட்டுகளில் ஆரம்பித்து சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் வரை சென்று உறுதிப் படுத்தப் பட்ட மரண தண்டனை என்பதே.

    மதுரைக்காரன் அவர்களே: அப்சல் குருவுக்கும் இந்த ராஜீவ் கொலையாளிகளுக்கும் நிச்சயம் கொள்கை அடிப்படையில் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அப்சல் குரு செய்தது ஜிஹாத். மத அடிப்படையிலான ஒரு பயங்கரவாதம். ராஜீவ் கொலையாளிகளுக்கு அது போன்ற மத அடிப்படையிலான நோக்கம் எதுவும் கிடையாது. அவர்கள் குறிக்கோள் ஒரு தனிநபர் கொலை மட்டுமே. கூட இருப்பவர்களையும் கொல்ல நேர்ந்தது அவர்களது நோக்கம் அல்ல அது தவிர்க்க முடியாத ஒரு விளைவு என்பதை அவர்கள் அறிவார்கள். இந்த ஒரு கொலைக்குப் பின்னால் அவர்கள் வேறு இந்தியர்களை கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். இருந்தாலும் சட்டத்தின் முன்பாக இருவரும் கொலையாளிகளே. அதில் ஏற்ற இறக்கம் இருக்க முடியாது. அதற்காக ஜிஹாதிகளைத் தவிர்த்த பிற கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்று சட்டத்தில் இல்லை. அப்சல் குரு அளவுக்கு இவர்கள் மூவரும் கொடூரமானவர்களோ, பயங்கரவாதிகளோ இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதற்காக அவர்களின் தண்டனைகளில் பாரபட்சம் காட்ட சட்டப் படி இடமில்லை

    விஸ்வாமித்ரா

  11. Enlightening, informative, cogent, fair and just arguments well presented without fear or bias. Grateful thanks for posting such intellectual pieces which are not exceeding limits of decency.

  12. //அப்சல் குருவுக்கும் இந்த ராஜீவ் கொலையாளிகளுக்கும் நிச்சயம் கொள்கை அடிப்படையில் வித்தியாசம் இருக்கவே செய்கிறது//.

    // ராஜீவ் கொலையாளிகளுக்கு அது போன்ற மத அடிப்படையிலான நோக்கம் எதுவும் கிடையாது.//

    //கூட இருப்பவர்களையும் கொல்ல நேர்ந்தது அவர்களது நோக்கம் அல்ல அது தவிர்க்க முடியாத ஒரு விளைவு என்பதை அவர்கள் அறிவார்கள்.//

    //அவர்கள் வேறு இந்தியர்களை கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர்.//

    //அப்சல் குரு அளவுக்கு இவர்கள் மூவரும் கொடூரமானவர்களோ, பயங்கரவாதிகளோ இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். //

    அவை அத்தனையும் ஒளிவீசும் உண்மைகள்.

    ஐயோ, விஸ்வாமித்ரா இப்படி தன் வாதங்களை தானே பலவீனமாக்கி சேம்சைடு கோல் போடுவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேற்கண்ட வாதங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவை. அடி ஆழத்திலிருந்து உண்மையாக பீறிட்டு வந்தவை.

    சும்மாவா சொன்னார்கள், தான் ஆடவில்லை என்றாலும் தன் சதை ஆடும் என்று.

    வாழ்க விஸ்வாமித்ரா!

  13. இந்த மூவர் மரண தண்டனை விஷயமாக முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முதல்வர் ஜெயல்லிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியதாக இணையத்தில் ஒரு தகவல் உலவுகிறது. அதில் மரண தண்டனை தவறு என்றும், மரணதண்டனையிலிருந்து மூவரைக் காப்பாற்றினால் இறைவன் அருள் புரிவான் தமிழினமே வாழ்த்தும் என்றெல்லாம் கிருஷ்ணய்யர் சொல்லியிருப்பதாகவும் தகவல் இருக்கிறது. ராஜீவின் குடும்பத்தினர் கொலையாளிகளை மன்னித்துவிட்டனர் ஆகவே அரசு மன்னிப்பதில் என்ன தவறு என்பது மூவர் ஆதரவாளர்களின் மற்றொரு கேள்வி. சம்பவத்தில் மாண்ட கோகிலவாணி என்கிற குழந்தை, அன்றைய செங்கை சரக டிஐஜி முகமது இக்பால் உள்ளிட்ட 9 காவலர்கள், சுதந்திரப் போராட்ட்த் தியாகி லீக் முனுசாமி, மற்றும் படுகாயமடைந்தும், நிரந்தர ஊனாமடைந்தும் பாதிக்கப்பட்ட பல “ஆம் அத்மிக்கள்” இந்தக் கொடியோரை மன்னித்தனரா? அந்த ஆம் ஆத்மிகளுக்கெல்லாம் காங்கிரசுக் கட்சியோ, சோனியா காந்தி குடும்பமோ என்ன செய்தனர்? ஒரு இரங்கல் கடிதம் கூட எழுதவில்லை. பொதுவாக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. தமிழர் நலன் என்று இந்த மூவருக்காக முழங்கும் சிலரும் இறந்து போன தமிழர்களின் மரணத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? மறப்போம் மன்னிபோம் என்பது வாதமானால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் சம்பந்தப்பட்ட மூவரும் மன்னிப்புக் கேட்டனரா?

    வாதத்திற்காக மட்டுமே கீழ்க்கண்ட விஷயத்தை எழுதுகிறேன்…

    பேரறிவாளன், முருகன், சாந்தன் மூன்று பேரும் தமிழர்கள் இவர்களிடம் இருப்பது உயிர்…தருமபுரி பேருந்து எரிப்பில் தூக்கு மேடையை எதிர்நோக்கியிருக்கும் தமிழர்களின் உயிர் என்ன *யிரா? அவர்களும் தாமாக அதைச் செய்யவில்லை. செய்யத் தூண்டியது யார் என்று கேட்டால் சன் டிவி முதலில் சம்பவ இடத்துக்கு விரைந்தது எப்படி… யார் தகவல் தந்தது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் வேண்டும். வைகோ நெடுமாறன் மற்றும் அணியினர் வைக்கும் லாஜிக்கின் படி பார்த்தால் தருமபுரி வழக்கும் equally complicated ஆன வழக்குத்தான்.

    23 பேரைக் கொன்றால் தூக்கில் போடக்கூடாது 3 பேரைக் கொன்றால் தூக்கில் போட்டால் தப்பில்லை என்கிற வாதம் சப்பையான சொத்தையான வாதம்.

  14. தமிழ் ஹிந்துவிற்கு க. வ கார்த்திகேயனின் வேண்டுகோள். நான் முன்பே குளவியின் கட்டுரையை விமர்சித்திருந்தேன். வரலாற்றை, நிகழ்வுகளை அதன் தொடர்புகளை மறந்து விவாதிக்க கூடாது என்பதற்கு இந்த தேசத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் கொல்லப்பட்ட தலைவர்களின் தவறுகள் குறித்து சிந்திக்க தவறுகிறோம் என்பதை தெளிவாக விளக்கியும் தமிழ் ஹிந்துவில் வெளியிடவில்லை. திரு. விஸ்வமித்ரா அவர்களுக்கு குளவியின் தவறு என்று முடிவே செய்துவிட்டு எழுதிய கட்டுரை! சில கேள்விகள், பதில் கிடைத்தால் மகிழ்வேன். கேள்விகளுக்கு முன்பு தமிழ் ஹிந்துவிற்கு வேண்டுகோள் முன்பு நான் எழுதியதை இங்காவது வெளியிட வேண்டுகிறேன்.

    விஸ்வமித்ரவிற்கு எனது கேள்விகள்.

    1 ) இங்கு கொலைக்கான மூளையை விட்டுவிட்டு அம்பைக்கூட இல்லை அம்பில் படிந்திருந்த தூசிகளுக்கு தண்டனை ஏன்?
    2 ) ஒருவேளை ராஜீவ் விடுதலை புலிகளாலேயே திட்டம் தீட்டி கொள்ளபட்டிருக்கடும் என்றாலும் கூட அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கவேண்டும் […] இதற்கு உங்களின் பதில் என்ன?
    3 ) நானும் நீங்களும் ஒருவேளை இங்கலாந்தில் பிறந்திருந்து அப்பொழுது பகத்சிங் நமது நாட்டை சேர்ந்த [..]ஒரு மூட சர்வாதிகாரியை கொன்றிருந்தால் நான் கட்டாயமாக பகத்சிங்கை ஆதரிதிருப்பேன் உங்களின் நிலைப்பாடு என்ன?
    4 ) உண்மையாகவே ராஜீவ் கொலை [..]வால் நிகழ்த்தப்பட்டது என்பதை மறுக்கிறீர்களா?
    5 ) பிஜேபி தவறை கண்டுபிடிக்கவில்லை என்பது உங்கள் குற்றச்சாட்டு அப்படியென்றால் நீதித்துறை பிஜேபி ஆட்சியில் மட்டுமே இயங்குகிறதா?
    வெறும் 5 ஆண்டுகள் ஆட்சிசெய்த பிஜேபிக்கு இதுசாத்தியமா? இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் நாடெங்கும் விரவிக்கிடைக்கையில் இவர்களுக்கு மட்டும் தண்டனை கொடுப்பது மிககீழ்தரமான செயல் என்பதை மறுகிறேர்களா?

    குளவியின் வாதம் இவர்கள் முதலில் ஹிந்துக்கள் என்பதாக இல்லை குளவி ராஜீவை தெளிவாக புரிந்து வைத்து எழுதப்பட்ட கட்டுரை அது. நான் தெளிவாக இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் விடுதலை புலிகளும் நமது தேசத்தை சேர்ந்த வீரமிகு விடுதலை போராளிகளும் சமமான மதிப்பையே பெறுவார்கள். ராஜீவ் கொலை ஒரு சதி இதில் இலங்கையும் சிங்களனும் பலனே அடைந்துள்ளார்கள் என்பதை விட இது இந்த தேசத்தின் மேல் தொடுக்கப்பட்ட போர் ஒத்திகை அதனால் தான் வாடிகனின் இஎஜென்ட் இந்தியாவின் அரசியலில் நேரடியாக இறங்கமுடிந்துள்ளது கிறிஸ்துவ விஷனரிகளின் செயல்பாடு [..]விற்கு முன் [..]விற்கு பின் என்று சிந்திக்க வேண்டும்.
    இது ஒன்றும் திருட்டு வழக்கல்ல திருடியவனை மரத்தில் கட்டிவைத்து அடிப்பதற்கு. இப்படி பட்ட தீர்ப்பு வழங்க நீதிமன்றம் தேவையே இல்லை
    சில அடியாட்கள் சில டாட்டா சுமோ அவர்களுக்கு கையில் ஆயுதம் இருந்தால் போதுமே.

    இவர்களுக்கு தூக்கு வழங்கபட்டால் ஹிந்துவை கொன்றதாகவும் ஆகாது குற்றவாளிகள் தண்டிக்க பட்டதாகவும் ஆகாது.

    வணக்கத்துடன்,
    க. வ. கார்த்திகேயன்.

    [Edited and published]

  15. இந்த மூவர் பற்றி விவாதம் தேவை இல்லை…தூக்கு தண்டனை அவசியமே.அதேபோன்று அப்சல் விசயத்திலும் மிகமிக அவசியமான ஒன்று… பயங்கரவாததிற்கு மனிதநேயம்,மாகாணம்,மதச்சாயம் பூசுவது நமது தேசத்திற்கு மிகக்கடுமையான விளைவைத்தரும்.மறக்காது நமது தர்மத்தின்,சட்டத்தின் ஆட்சி நடந்திட வழிகோலுவோம்… நன்றி… பாரத அன்னை வெல்க …

  16. இந்த மூவரும் சரி,மூவரின் கும்பலும் சரி,கும்பலை ஆதரிக்கும் அடிவருடிகளும் சரி என்றும் தமிழர்களாவோ,ஏன் தேசபக்தியோடோ,ஏன் அதைவிட மனிதர்களாகவோ இருந்தது இல்லை.இனியும் இருக்க போவதும் இல்லை.அப்படியிருக்க இவர்களை பற்றி ஏன் இந்த விவாதங்களும், அதற்கான அலங்காரங்களும்…. நமக்கு ஏன் இந்த சோதனை …எல்லாம் தலையெழுத்து?! நம் மண்ணின் மீதும் தர்மத்தின் மீதும் பக்தி இருக்கும் வரை வெள்ளையின் சூழ்ச்சியும்,பச்சையின் பயங்கரவாதமும்,சிகப்பின் தேசவிரோதமும், பாரத தேசத்தை அலைஅலையான ஆக்ரமிப்புக்களும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது.பாரத அன்னை வெல்க ….

  17. Viswamitra

    No sensible minded person would accept your views. This is the worst article I have come acrross in tamilhindu.

    I am shocked to note there are few other people of your calibre in India. None of you has deep knowledge in Tamils’ liberation struggle. If you have any problems with Dravidian parties or Chrisitians you have the liberty to deal with them but don’t drag Eelam tamils and their liberation struggle and write half baked incorrigible views.

    Do you know even in SriLanka there is no death penalty law.

    Please read all my comments appeared under the original article and the books I have mentioned in one of the comments befoe you write anything further on this topic.

  18. //
    “ஒரு நாட்டின் முன்னாள் தலைவரைக் கொன்றவர்களைக் கூட இந்திய அரசால் துணிந்து தண்டிக்க முடியவில்லை என்றால், ஒரு நாட்டின் பாராளுமன்றத்தையே தாக்கியவனைக் கூட இந்தக் கேடு கெட்ட அரசால் தண்டிக்க முடியவில்லை என்றால் இந்த அரசு நாளைக்கு எந்த எதிரியிடம் இருந்து மக்களைக் காப்பாற்றப் போகிறது? இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருந்தும், சீன அச்சுறுத்தல்களில் இருந்தும் இந்தியாவை யார் காப்பாற்றப் போகிறார்கள்? எப்படி காப்பாற்றப் போகிறார்கள்?”
    //

    மிக சிறந்த கேள்வி. யார் வேண்டும் என்றாலும் துணிவு இருந்தால் இதற்கு பதில் சொல்லிட்டு துக்கு தண்டனையை குறைக்க சொல்லி போராட்டம் செய்யலாம்.

    முட்டாளின் கூட்டம் முட்டாள் தனமான கோரிக்கை. நாம் ஏன் இதற்கு செவி சாய்க்க வேண்டும்?

  19. திரு.களிமிகு கணபதி அவர்களே…..

    குளவி விட்ட இடத்தில் இருந்து அபத்தத்தை நீங்கள் தொடர்கிறீர்கள்……

    குற்றவாளிகள் மூவரும் தங்களை எந்த இடத்திலும் ஹிந்துக்கள் என்று வெளிப்படுத்திகொண்டதே இல்லை. [ பேரறிவாளன் ஒரு கிறித்தவர்,திராவிடர் கழக உறுப்பினர் ]அவர்களே விரும்பாத ஹிந்து மதத்தை உங்களை போன்றவர்கள் மீண்டும் மீண்டும் திணிப்பது ஏன்?

    தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் யார் என்று பார்த்தால் பெரும்பாலும் ஹிந்து விரோதிகள் [ தி.க – பெரியார் தி.க குப்பைகள்,சத்யராஜ், மணிவண்ணன் , போன்றோர் ] அல்லது கிறித்தவர்கள் [சீமான், வைகோ ]. இவர்கள் என்றாவது இந்த மூவரையும் ஹிந்துக்கள் என்று சொன்னதுண்டா?

    இவர்களை விடுங்கள்.புலிகள் என்றாவது தங்கள் போராட்டத்தை ஹிந்து – பௌத்த போராகவெளிப்படுத்தியதுண்டா? தமிழ் – சிங்கள இனப்போராட்டமாக தானே சித்தரித்தார்கள்?

    // இலங்கையில் அழிக்கப்படுபவர்களும் இந்தியர்கள்தான் என்ற உண்மையை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.//

    நாம் ஏற்றுக்கொள்வது இருக்கட்டும். முதலில் ஈழத்தமிழர்கள் தங்களை இந்திய வம்சாவளியினராக நினைத்ததே இல்லை.வெள்ளையர் காலத்தில் தோட்ட வேலைக்காக கொண்டு செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்ட மலையக தமிழர்களை ,இவர்கள் தமிழர்களாக அல்ல மனிதர்களாக கூட மதித்ததில்லை.

    பிரேமதாசவுடன் தோள்மீது கைபோட்டுக்கொண்டு ” நாங்கள் சகோதரர்கள்,எங்கள் பிரச்சினையை நாங்கள் பேசித்தீர்த்துகொள்வோம், முதலில் இந்திய நாய்கள் வெளியேறவேண்டும் ” என்று கொக்கரித்தவர்கள் யார்?

    சரித்திரம் காட்டும் உண்மைகளை வசதியாக மறந்துவிடுவது உளற வேண்டுமானால் உதவியாக இருக்கலாம் , உண்மைகளை விளக்க உதவாது.

    இலங்கை தமிழர்கள் நன்றி மறந்தவர்கள்……இந்திய விரோதிகள்….இவர்களுக்கு நல்லது செய்ய நினைத்து நாம் பட்ட பாடு போதும்………..

  20. திரு. ஓகை நடராஜன் அவர்களே……

    // ஐயோ, விஸ்வாமித்ரா இப்படி தன் வாதங்களை தானே பலவீனமாக்கி சேம்சைடு கோல் போடுவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.//

    உண்மை……நானும் எதிர்பார்க்கவில்லை…….

    யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்……..

  21. ஓகையார் மற்றும் சரவணக்குமார் அவர்களுக்கு

    நீங்கள் எதை சேம் சைடு கோல் என்று கருதுகீறீர்கள் என்று எனக்கு எதுவும் புரியவில்லை. குழப்பமாக உள்ளது. நான் சொன்னதைச் சரியாகத்தான் படித்தீர்களா சரியாகத்தான் புரிந்து கொண்டீர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

    புரியவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை தெளிவாக்கி விடுகிறேன்

    1. நான் அப்சல் குரு போன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் ராஜீவ் கொலையாளிகளுக்கும் கொள்கை அளவில் இருக்கும் வித்தியாசங்களை மட்டுமே குறிப்பிட்டேன். எந்த இடத்திலும் ராஜீவ் கொலையாளிகளின் கொள்கையை ஆதரித்து விடவோ பரிதாபப் படவோ முயலவில்லை. அப்சல் குருவின் கொலைகள் மதம் சார்ந்தது அது ஜிஹாத் ராஜீவ் கொலையாளிகள் செய்த படுகொலை அரசியல் சார்ந்தது என்ற விளக்கத்தை மட்டுமே நான் இங்கு அளித்தேன் இதில் என்ன சேம் சைட் கோலைக் கண்டீர்கள் என்பது எனக்கு நிஜமாகவே புரியவில்லை

    2. நான் எந்த நிலையிலும் ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரவே இல்லை. கடுமையாக வலியுறுத்தவே செய்கிறேன். காரணம் எதுவாக இருப்பினும் சட்டத்தின் முன்னும் எனக்குத் தெரிந்த நியாய அநியாயத்தின் முன்பும் இருவர் செய்ததும் கொலையே இருவருக்குமே கட்டாயம் தண்டனை அளிக்கப் பட வேண்டும்

    3. பயங்கரவாதத்தில் பல வகை உண்டு அதில் ராஜீவ் கொலையாளிகள் அரசியல் காரணங்களுக்காகச் செய்திருக்கிறார்கள். நக்சல்களும் அது போலவே சித்தாந்தக் காரணங்களுக்காக கொலை செய்கிறார்கள். இஸ்லாமிய ஜிஹாதிகள் செய்வது அவர்களது மதத்தின் பெயரால். அதனால் அது மத பயங்கரவாதம் ராஜீவ் கொலையும் இலங்கையில் நடந்த படுகொலைகளும் அரசியல்/சித்தாந்தம் சார்ந்த பயங்கரவாதம். நான் இரண்டையும் ஏற்கவில்லை எந்த நிலையிலும் ஆதரிக்கவில்லை

    விளக்கம் போதுமா?

    விஸ்வாமித்ரா

  22. ரிஷி

    No sensible minded person would accept your views. This is the worst article I have come acrross in tamilhindu.

    அப்படியா, படித்து விட்டு கருத்துத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி. தமிழ் நாட்டிலேயே மோசமான கட்டுரை என்ற விருதை அளித்ததற்கும் என் நன்றிகள்

    I am shocked to note there are few other people of your calibre in India. None of you has deep knowledge in Tamils’ liberation struggle. If you have any problems with Dravidian parties or Chrisitians you have the liberty to deal with them but don’t drag Eelam tamils and their liberation struggle and write half baked incorrigible views.

    அப்படியா ? இதில் விடுதலைப் புலிகளைப் பற்றியோ ஈழ விடுதலைப் போரைப் பற்றியோ அதிகம் எதையும் முதலில் எழுதவேயில்லையே. இது என்ன மூளை அறுவை சிகிச்சையா அல்லது ராகெட் விஞ்ஞானமா ஆழமான அறிவு இல்லை என்று சொல்வதற்கு? தமிழ் நாட்டு அரசியலையும், விடுதலைப் புலிகளையும் கடந்த 30 ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்து வரும் எனக்கு உங்கள் பாடங்கள் எதுவும் அவசியம் கிடையாது.

    Do you know even in SriLanka there is no death penalty law.

    அப்படியா? ஸ்ரீலங்காவின் குற்ற புள்ளி விபரங்கள் பற்றியும் அப்படியே நீங்கள் எனக்குச் சொல்லலாமே. விடுதலைப் புலிகளின் குண்டு வெடிப்புக்களைத் தவிர ஸ்ரீலங்காவில் மாதம் எத்தனை கொலை, கொள்ளை, கற்பழிப்புக்கள், இனக் கலவரங்கள் நடக்கின்றன மக்களின் கல்வி அறிவு, பொது குடிமைப் பண்பு போன்ற புள்ளி விபரங்களையும் எனக்கு அப்படியே தர இயலுமா? அவற்றையெல்லாம் வைத்துத்தான் ஒரு நாட்டிற்கு மரண தண்டனை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். மற்றபடி ஸ்ரீலங்காவில் மரண தண்டனை இல்லை என்று பெருமையாகச் சொல்லும் நீங்கள் அவர்களின் ராணுவம் நேரடியாகக் கண்டவுடன் சுட்டுக் கொல்லும் தண்டனைகளை எல்லாம் ஒரு வேளை மரண தண்டனை லிஸ்டில் சேர்ப்பது இல்லை போலும். கோர்ட், வாய்தா, கருணை மனு, சட்ட சபைத் தீர்மானம், குளவியாரின் கட்டுரை போன்ற கண்றாவிகள் எல்லாம் இல்லாமல் நேரடியாக அவர்கள் தண்டனை அளிப்பதால் அவர்களுக்கு தனியாக மரண தண்டனை என்னும் நேர விரயம் தேவைப் படுவதில்லை. இந்தியாவில் அப்படி நிலமை இல்லையே. சைமன் நாடாரில் இருந்து குளவியார் வரை ஆயிரெத்த்தெட்டுத் தோலான் துருத்தி மனித உரிமைப் போராளிகள் கிளம்பி விடுகிறார்களே?

    Please read all my comments appeared under the original article and the books I have mentioned in one of the comments befoe you write anything further on this topic.

    உங்களைக் கேட்டு விட்டே, உத்திரவு பெற்றுக் கொண்டே அடுத்து எதையும் எழுதிக் கொள்கிறேன் ஐயா

    விஸ்வாமித்ரா

  23. கார்த்திகேயன் அவர்களுக்கு

    உங்கள் கேள்விகளுக்கான எனது பதில்கள் கீழே:

    விஸ்வமித்ரவிற்கு எனது கேள்விகள்.

    1 ) இங்கு கொலைக்கான மூளையை விட்டுவிட்டு அம்பைக்கூட இல்லை அம்பில் படிந்திருந்த தூசிகளுக்கு தண்டனை ஏன்?

    எப்படி நான் எழுதிய கட்டுரையை படிக்காமலேயே இப்படி அபத்தமாக பதில் கேள்வி கேட்க்க உங்களால் முடிகிறது? முதலில் கட்டுரையைப் படித்து விட்டு அதைப் புரிந்து கொண்டு கேள்வி கேட்டால் நம் இருவர் நேரமும் மிச்சமாகும். இந்தக் கேள்விக்கு மிக விரிவாக என் கட்டுரையிலேயே பதில் சொல்லியுள்ளேன். தயவு செய்து புரியும் வரை படிக்கவும்.

    2 ) ஒருவேளை ராஜீவ் விடுதலை புலிகளாலேயே திட்டம் தீட்டி கொள்ளபட்டிருக்கடும் என்றாலும் கூட அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கவேண்டும் […] இதற்கு உங்களின் பதில் என்ன?

    மன்னிக்கவும். எந்த விதமான தீவீரவாதத்திற்கும் என்னால் கிஞ்சித்தும் ஆதரவு தர முடியாது. ராஜீவ் கொலை விடுதலைப் புலிகளால் திட்டம் போட்டு மேற்கொள்ளப் பட்ட ஒரு தீவீரவாதமே. இதில் சம்பந்தப் பட்ட அனைவருக்கும் மரண தண்டனை இந்தியச் சட்டப் படி கட்டாயம் வழங்கப் பட வேண்டும் என்பதே என் கருத்து. இதைத்தானே இத்தாம் பெரிய கட்டுரையில் நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன் அதையெல்லாம் படிக்காமல் இப்படி கேள்வி கேட்டால் நான் எங்கு போய் முட்டிக் கொள்வது?

    3 ) நானும் நீங்களும் ஒருவேளை இங்கலாந்தில் பிறந்திருந்து அப்பொழுது பகத்சிங் நமது நாட்டை சேர்ந்த [..]ஒரு மூட சர்வாதிகாரியை கொன்றிருந்தால் நான் கட்டாயமாக பகத்சிங்கை ஆதரிதிருப்பேன் உங்களின் நிலைப்பாடு என்ன?

    அனுமானக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. பகத் சிங்கைப் பொருத்தவரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்தது. அப்பொழுது இந்தியாவை அந்நியர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் விதித்த சட்டங்களுக்கு எல்லாம் இந்தியர்கள் கட்டுப் பட வேண்டிய அவசியம் கிடையாது. அது வேறு சூழல், காலம், நிலமை. சுதந்திர இந்தியாவில் அப்படி ஒரு வேளை பகத் சிங் சுதந்திர இந்தியாவின் சட்டத்தை மீறி நடந்திருந்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இதை நான் இங்கிலாந்து என்று அல்ல செவ்வாய் கிரகத்தில் பிறந்திருந்தாலும் இதையேதான் அழுத்திச் சொல்லுவேன்.

    4 ) உண்மையாகவே ராஜீவ் கொலை [..]வால் நிகழ்த்தப்பட்டது என்பதை மறுக்கிறீர்களா?

    [..] அப்படி என்றால் என்னவோ?

    5 ) பிஜேபி தவறை கண்டுபிடிக்கவில்லை என்பது உங்கள் குற்றச்சாட்டு அப்படியென்றால் நீதித்துறை பிஜேபி ஆட்சியில் மட்டுமே இயங்குகிறதா?
    வெறும் 5 ஆண்டுகள் ஆட்சிசெய்த பிஜேபிக்கு இதுசாத்தியமா? இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் நாடெங்கும் விரவிக்கிடைக்கையில் இவர்களுக்கு மட்டும் தண்டனை கொடுப்பது மிககீழ்தரமான செயல் என்பதை மறுகிறேர்களா?

    இதற்கான பதிலையும் மிகத் தெளிவாக என் கட்டுரையில் அளித்திருக்கிறேன். தயவு செய்து மீண்டும் ஒரு முறை கட்டுரையைப் படித்து விட்டுக் கேட்டால் தன்யனாவேன். பி ஜே பி ஆட்சியில் தாராளமாக சதியில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடித்திருந்திருக்கலாம் அதற்கான முயற்சியை கூட அவர்கள் எடுக்கவில்லை. உங்கள் வீட்டில் கொள்ளையர் கொள்ளையடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் போலீசில் புகார் கொடுக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம் அப்பொழுது போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் நாடு முழுக்க விரவிக் கிடக்கிறார்கள் ஆகவே உங்கள் வீட்டைக் கொள்ளையடித்தவர்களை தேடுவதும் கைது செய்வதும் அநாவசியமான செயல் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? கொஞ்சமாவது மூளை கொண்டு சிந்திப்பவர்கள் இதைப் போன்ற அபத்தமான கேள்வியையெல்லாம் கேட்க்க மாட்டார்கள்

    விஸ்வாமித்ரா

  24. Mr விஸ்வாமித்ரா
    Kudos, great article. Also, great response to questions posted.Looking forward to your future articles.

  25. விஸ்வாமித்ரா,

    சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், இல்லை இல்லை சாடி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ஆனால் தண்டனையைப் பற்றி எனக்கு reservations உண்டு. கொலை செய்தவனுக்கும், கொலை செய்ய உடந்தையாக இருந்தவனுக்கும் சட்டப்படி வித்தியாசம் உண்டு. அப்படிப்பட்ட வித்தியாசங்கள் எல்லாம் நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றுவிட்டார்களா என்ற ஆத்திரத்தில் நீதிபதிகளால் கண்டுகொள்ளப்படாதது போலத் தெரிகிறது. அதுவும் மூவரில் ஒருவர் பாட்டரி மட்டும்தான் வாங்கிக் கொடுத்தாராம். துணை போனவர்களுக்கு 25 வருஷம் சிறை என்பது போதுமானதே. நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார், ஆனால் அவரோடு சேர்ந்து திட்டம் போட்ட கோபால் கோட்சேவுக்கு ஜெயில்தான் என்பது நினைவிருக்கலாம்.

  26. திரு. R.வ அவர்களே…….

    // அதுவும் மூவரில் ஒருவர் பாட்டரி மட்டும்தான் வாங்கிக் கொடுத்தாராம்.//

    இது ஒரு அபத்தமான வாதம்……..சலூன் கடையில் சவரம் செய்த பின் தூக்கி எறியப்பட்ட அரை பிளேடை வைத்துக்கூட ஒரு மனிதனை கொன்று விடலாம். அதற்காக அதை வைத்து ஒருவரை கொன்று விட்டால் அந்த குற்றவாளியை மன்னித்து விடுவீர்களா?

    இவர்கள் சொல்லும் பாட்டரி என்பது தனுவின் இடுப்பில் வைத்துக்கட்டப்பட்ட வெடிகுண்டை இயக்க பயன்படுவது.

    இப்போது அப்பாவி வேடம் போடும் பேரறிவாளன் , சிவராசன் யார், நளினி யார் ,இந்த பாட்டரி எதற்கு என்று தெரிந்துதான் வாங்கிக்கொடுத்தார்.

    இதுவரை உலகில் எந்த குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான் ?

  27. தலை வணங்குகிறேன். வாழ்க பாரதம். வெல்க நல்லோர் கருத்துக்கள்.
    நன்றி.

  28. @ Saravan Kumar

    //இவர்களை விடுங்கள்.புலிகள் என்றாவது தங்கள் போராட்டத்தை ஹிந்து – பௌத்த போராகவெளிப்படுத்தியதுண்டா? தமிழ் – சிங்கள இனப்போராட்டமாக தானே சித்தரித்தார்கள்? //

    இன்று ஈழத்தில் கோயில்களும், தேவாலயங்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டு புத்தவிகாரைகள் தோன்றிக் கொண்டு இருப்பதை தடுக்கும் இயக்கம் எதுவும் அங்கு இல்லை, சரவணன். சிங்கள பவுத்த மயமாக்கல் தொடர்ந்தால் ஒரு இனமே அடையாளம் இழந்து அழியும்.

  29. ஆர் வி

    நன்றி. உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் எனது அடுத்த பகுதிகளில் வருகிறது, இந்த விஷயம் குறித்து எழுப்பப் படும் அனைத்துக் கேள்விகளையும் ஒவ்வொன்றாக எடுத்து அலசி பதில் சொல்லியிருக்கிறேன். அவசியம் படியுங்கள்.

    காந்தி கொலையில் திட்டமிட்டவர்களுக்கும் அந்த வழக்குக்கும் இந்த வழக்குக்கும் பல் வேறு கால, இட, கொள்கை, பின்ணணி வேறுபாடுகள் உள்ளன. அதையெல்லாம் கணக்கில் கொண்டே தீர்ப்பு வழங்கப் படுகிறது. இரண்டையும் ஒப்பிட முடியாது. ஒன்றை வைத்து மற்றொன்றை நியாயப் படுத்துவதோ மறுப்பதோ கூடாது. இரண்டு குற்றங்களின் தன்மைகளும், சந்தர்ப்பங்களும், பின்ணணிகளும் வேறு பட்டவையும் கூட.

    விஸ்வாமித்ரா

  30. விஸ்வமித்ரா அவர்களே,

    உங்களால் எனது மிக எளிய கேள்விகளுக்கு ஏற்ற பதிலளிக்க இயலாமையை கண்டு வருந்துகிறேன்.

    1 ) நான் பகத்சிங் என்ற இந்திய போராளியை ஒப்பீடு செய்தது இலங்கை தமிழருடன் அதற்கு காரணம் இவ்விருவருமே அவரவர் தேசத்திற்கும் அவர்களின் மகளுக்குமான கிறிஸ்தவ மற்றும் சிங்கள மத மற்றும் இன வெறியர்களுக்கு எதிராக போரடியவர்களாகவே சரித்திரம் கூறுகிறது. எனவே இங்கு பகத்சிங்கும் விடுதலை புலிகளும் தீவிரவாதிகள் இல்லை.

    (((((அனுமானக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. பகத் சிங்கைப் பொருத்தவரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்தது. அப்பொழுது இந்தியாவை அந்நியர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் விதித்த சட்டங்களுக்கு எல்லாம் இந்தியர்கள் கட்டுப் பட வேண்டிய அவசியம் கிடையாது. அது வேறு சூழல், காலம், நிலமை. சுதந்திர இந்தியாவில் அப்படி ஒரு வேளை பகத் சிங் சுதந்திர இந்தியாவின் சட்டத்தை மீறி நடந்திருந்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இதை நான் இங்கிலாந்து என்று அல்ல செவ்வாய் கிரகத்தில் பிறந்திருந்தாலும் இதையேதான் அழுத்திச் சொல்லுவேன். ))))

    ஐயா, இது அனுமானமா. நான்கூட சொல்கிறேன் இலங்கையில் சிங்களன் என்ற பயங்கர வாதிகளுடன் போர்செய்யும் விடுதலை புலிகள் சிங்களர்களை ஒழித்தபின் அப்பாவிகளின் மீது போர்தொடுத்தால் நெற்றிகண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே…… நடப்பது என்ன? 30 ஆண்டுகாலம் நிகழ்வுகளை கவனிக்கும் உங்களுக்கும் தெளிவாக விலகவேண்டுமா?

    2 ) இங்கு கொலைக்கான மூளையை விட்டுவிட்டு அம்பைக்கூட இல்லை அம்பில் படிந்திருந்த தூசிகளுக்கு தண்டனை ஏன்? …………என்பதும் …………

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் நாடெங்கும் விரவிக்கிடைக்கையில் இவர்களுக்கு மட்டும் தண்டனை கொடுப்பது மிககீழ்தரமான செயல் என்பதை மறுகிறேர்களா? …………என்பதும் …………

    நீங்கள் கொடுக்கும் விளக்கம் ………..

    (((((பி ஜே பி ஆட்சியில் தாராளமாக சதியில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடித்திருந்திருக்கலாம் அதற்கான முயற்சியை கூட அவர்கள் எடுக்கவில்லை. உங்கள் வீட்டில் கொள்ளையர் கொள்ளையடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் போலீசில் புகார் கொடுக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம் அப்பொழுது போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் நாடு முழுக்க விரவிக் கிடக்கிறார்கள் ஆகவே உங்கள் வீட்டைக் கொள்ளையடித்தவர்களை தேடுவதும் கைது செய்வதும் அநாவசியமான செயல் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? கொஞ்சமாவது மூளை கொண்டு சிந்திப்பவர்கள் இதைப் போன்ற அபத்தமான கேள்வியையெல்லாம் கேட்க்க மாட்டார்கள்.))))

    உங்களுக்கே அபத்தமாக இல்லையா?

    இது என்ன திருட்டு குற்றமா எவன் திருடிநானோ அவனை மரத்தில் கட்டிவைத்து அடிப்பதற்கு. இப்படி பட்ட தீர்ப்பு வழங்க நீதிமன்றம் தேவையே இல்லை. கொலை குற்றத்திற்கு அதற்கேற்ற ஒப்புமை கூட உங்களால் கொடுக்க இயலவில்லையே????????????

    நான்கொடுக்கிறேன் …………

    2 a ) என்னை யாரோ கொன்றுவிட்டார்கள், கூலிப்படை கொன்றதாக வைத்துகொள்வோம். நீதிமன்றமும் காவல்துறையும் வழக்கம் போலவே கூளிபடையினரை தூக்கில் போட்டேவிற்றனர். இது தான் நீதியா??? வெட்கக்கேடு!!! கொள்வதற்கு மூளை யார்? தூண்டியவன் யார்? கொள்வதற்கான நோக்கம் என்ன? கொன்றதற்கான கைக்கூலி கொடுத்தது யார்? என்றெலாம் விலக்காது துப்புகெட்ட தண்டனை கொடுப்பதற்காகவா நீதிபதிகள்? சரி இதை ஏற்றுக்கொண்டு என்னை கொன்றவர்களை யாரோ எவரோ, கொன்றதிற்கு உதவியவன் தான் கிடைத்துவிட்டானே என்று விட்டுச்செல்லும் மானம்கெட்ட குடும்பத்தில் ஒருவன் பிறப்பான????? நான் என்ன ராஜீவின் குடும்பத்தவனா?

    2 b ) பிஜேபி அதன் கனவுகளில் ஒன்றான பசுவதை தடை சட்டத்தை கூட கொண்டுவரும் அளவிற்கு ஆதரவற்ற ஆட்சிசெய்துவந்தது இன்னும் சொல்லப்போனால் காங்கிரசின் கொடூர ஆட்சில் இருந்து மீள்வதற்கே அவர்களுக்கு ஐந்து வருடங்கள் போதவில்லை!!!! உங்களுக்கு மனசாட்சியே இல்லையா பிஜேபி பற்றி அபாண்டமாக பேச.

    2 c ) தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இவர்களுக்கு தண்டனை கொடுக்ககூடாது என்பதன் உள்ளர்த்தம் இவர்களை தூண்டியவர்களையும் இதனால் நேரடியாக பயன் அடைந்தவர்களையும் தெளிவாகவே தப்பவிட்டுள்ள மாண்புமிகு நீதிமன்றம் ஏன் இவர்களை மட்டும் தண்டிகின்றது?

    இவர்கள் தண்டிக்கப்படகூடாது என்பதின் உண்மை பொருள் இவர்கள் மட்டும் தண்டிக்கப்படகூடாது என்பதே மேலும் இவர்களுடன் சேர்ந்து —————-அவர்களும் தண்டிக்கப்படவேண்டும். அதுவரை இவர்களுக்கு தண்டனை கூடாது என்பது மட்டுமே அறிவுள்ள கருத்து இதைத்தான் வலியுறுத்துகிறோம்.

    வணக்கத்துடன்,
    க. வ. கார்த்திகேயன்.

  31. ////இவர்கள் தண்டிக்கப்படகூடாது என்பதின் உண்மை பொருள் இவர்கள் மட்டும் தண்டிக்கப்படகூடாது என்பதே மேலும் இவர்களுடன் சேர்ந்து —————-அவர்களும் தண்டிக்கப்படவேண்டும். அதுவரை இவர்களுக்கு தண்டனை கூடாது என்பது மட்டுமே அறிவுள்ள கருத்து இதைத்தான் வலியுறுத்துகிறோம்.

    வணக்கத்துடன்,
    க. வ. கார்த்திகேயன்.//////

    இப்போது விளங்குகிறது, சரியான நிலைப்பாடு.நீங்கள் மட்டுமே இவ்வாறு கூறுகிறீர்கள் ஆனால் இங்கு பெரும்பாலோர் இவர்களை விடுவிக்கவேண்டுமென கூறுவதுதான் ஏற்பில்லாதது.

  32. இந்த நிலைப்பாடு அவர்கள் எடுப்பதற்கு காரணம் இந்த வழக்கின் நெடிய பயணமும், குற்றவாளிகளின் வெவ்வேறு முகங்களும், நீதிமன்றத்தின் கையலகதனமும், மக்களுக்கேயான மறதியும், தெளிவான அரசியல் தொடர்பும் இன்னும் பலபல கரணங்கள் உள்ளன. இவர்களை காப்பற்றுங்கள் என்று கேட்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் யாரையும் சேர்த்து தண்டிக்க வேண்டுமோ அவர்களை தண்டிக்கவே முடியாது என்பது (இந்த தேசதில் அரசியல் புரட்சி இந்த தேசத்தின் கலாச்சார ரீதியில் நிகழாதவரை இது நடக்காது) மேலும் இந்த வழக்கில் இருந்து தப்பிதவர்களின் மேலுள்ள கோபம் நம்மை இவ்வாறே உளற வைக்கிறது.

    மேலும் இந்த இந்துஸ்தானத்தின் சமீபத்திய நோய்களான,
    ௧) சார்பின்மை
    ௨) நடுநிலைமை இவைகள்

    தர்மத்தை சார்ந்து சிந்திப்பது, தர்மத்தை சார்ந்துநிர்ப்பது.

    போன்ற நமக்கே உரிய உயர் பண்புகளை அழித்தே விட்டது.

    திரு. விஸ்வமித்ரா அவர்களே,

    இந்த கருத்துகளை கருத்தில் கொண்டு தங்களின் அடுத்த படைப்பை வெளியிட வேண்டுகிறேன்.

    வணக்கத்துடன்,
    க. வ. கார்த்திகேயன்

  33. விஸ்வாமித்திரருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். குற்றவாளிகளே இல்லையென்றால், காவலர்களும், அவர்களுக்கு ஆயுதங்களும், காவல் துறையும், நீதி மன்றங்களும் தேவையே இல்லையே. புராண இதிஹாச காலங்களிலேயே தர்மம் நிலை நாட்டப் படுவதற்காக தண்டனைகள் பலவாறாக அளிக்கப்பட்டிருக்கின்றன. கருட புராணம் என்று ஒன்று இருக்கிறது. ‘அன்னியன்’ தமிழ்ப் படத்திலும் அது சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இது ஒன்றும் ஹிந்துக்களுக்கு மட்டும் பொருந்தியது அல்ல. மக்கள் சமுதாயத்திற்கே பொருந்தியது. சிங்கப்பூரில் ‘டைகர் பாம் கார்டன்ஸ்’ என்று இருக்கிறது. அதில் ஒரு பாகத்தில் குற்றம் புரிபவர்களுக்கு இறந்தபின் சீன சிந்தாந்தப்படி என்ன ஆகும் என்று படங்களுடன் சிலைகளுடன் விபரமாக் விவரிக்கப்பட்டிருக்கின்றன். அப்பகுதிக்கு தைரியசாலிகள் மட்டும் சென்று பார்ப்பார்கள், அவ்வளவு பயங்கரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக களவோ கொலையே செய்ய எண்ணமிருந்தாலேலே என்ன தண்டனை என்று வருகிறது. இவற்றைப் பார்ப்பவர்கள் குலை நடுங்கி தீய எண்ணத்திலிருந்து கண்டிப்பாக வெளி வருவார்கள். நீதி மன்றங்களிலும், தண்டனை அளிப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும், அரசியலும் லஞ்சமும் குறுக்கிடும்போது தண்டனை என்பதே அர்த்தமற்றதாகிவிடுகிறது, குற்றவாளிகள் கொக்கரிக்கிறார்கள். அநீதி, அதர்மம், அராஜகம் அதிகரிக்கத்தானே செய்யும்? குழந்தைகள் தவறு செய்தாலே, கெட்டுப்போய்விடப் போகிறார்களே என்ற பயத்திலும், ஆதங்கத்திலும், அவர்களை கண்டிக்கும் நாம், ஏன் தண்டனையைப்பற்றி இவ்வளவு ‘அலர்ஜி’ அடைகிறோம்? சிங்கப்பூரில், கண்டிப்பும், எந்த குற்றத்திற்கும் உடன் தண்டனை கொடுப்பதால் தான் கட்டுப்பாட்டோடு, வளமிக்க திறன்மிக்க, செயல்பாடு மிக்க நாடாக பரிமளிக்கிறது, அளவில் இந்தியாவின் ஒரு புள்ளி போல் இருந்த்தாலும். ஆக, தண்டனை என்பது, குற்றத்தின் தீவிரத்திற்கு தகுந்தாற்போல் கண்டிப்பாக, உடனடியாக கொடுத்துத் தான் ஆகவேண்டும். அப்பொழுது தான், குற்றங்கள் குறையா விட்டாலும், அதிகரிக்காது என்பது என் கருத்து.

  34. அண்மையில் ராஜீவ் கொலைவழக்கில் புலனாய்வு செய்து , பேரறிவாளனின் வாக்குமூலத்தினை பதிவு செய்த திரு தியாகராஜன் என்ற ஒய்வு பெற்ற சி பி ஐ அலுவலரின் மனசாட்சி, 23-வது ஆண்டில் திடீரென்று விழித்துக்கொண்டது. இப்போதாவது விழித்த மனசாட்சிக்கு நமது நன்றிகள். ஆனால் அவரது மனசாட்சி விழித்து ஒரு புண்ணியமும் இல்லை. இந்த மனசாட்சி எப்படி விழித்து எழவைக்கப்பட்டது என்பதற்குள் நாம் செல்லவில்லை.

    பேரறிவாளன் ஒரு குற்றமும் செய்யவில்லை. ஒன்றும் தெரியாத அப்பாவி என்று அவரது தாயார் அடிக்கடி பத்திரிகைகளில் பேட்டி அளித்து வருகிறார். தாயின் அன்பும் கருணையும் ஈடு இல்லாத ஒரு விஷயம். ஏனெனில் தாய் என்பவள் தன்னுடைய உயிரைக்கொடுத்துக்கூட தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றிவிடுவாள் என்பதே உண்மை. அற்புதம் அம்மாள் தன் மகனை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் , அவர் ஒரு தாய் என்றமுறையில் பாராட்டப்பட வேண்டியவையே ஆகும். அவருடைய தாய் அன்புக்கு நாம் அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

    அதே சமயம், உணர்ச்சி வசப்படாமல் நாம் சிலவற்றை சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம். பேரறிவாளன் வாக்குமூலம் இந்திரா பெரோஸ் குடும்ப ஏவல் நாயான சி பி ஐ அமைப்பின் ஒரு அதிகாரியால் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு , நீதி மன்றம் அவருக்கு தண்டனை வழங்கவில்லை. தண்டனை வழங்கப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளன.

    இராஜீவ் மற்றும் 17 பேர் கொலையில் பேரறிவாளனின் பங்கு என்ன ?-

    1.வெடிகுண்டு தயாரிக்க ஒன்பது வோல்ட் பேட்டரி இருந்தால் , வீக் ஆகாமல் நல்லா ஸ்ட்ராங்காக செயல்படும் என்று சிவராசன் பேரறிவாளனிடம் கூறியுள்ளான்.

    2.பெல்ட் வெடிகுண்டு தயாரிக்க இந்த பேட்டரி மிக முக்கியம் என்பதும், பெல்ட் வெடிகுண்டுகள் யாரையோ கொல்லவோ, அல்லது ஏதோ நாச வேலைக்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதும், அதனால் அமைதிவழி செயல் ஒன்றும் செய்யமுடியாது என்பதும் பேரறிவாளனுக்கு தெரிந்திருந்தது.

    3.விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த முருகன் உட்பட பலருக்காக, ,அவர்களுக்கு தேவைப்பட்ட வகையிலான வேறு சில வகை பேட்டரிகளை இதே பேரறிவாளன் வாங்கியுள்ளார். தீவிரவாத செயலில் ஈடுபடாத மனிதராக இவர் இருந்திருந்தால் , இந்தபையனுக்கு எதற்கு இத்தகைய பேட்டரி ? இந்த பேட்டரியை பயன்படுத்தி இவன் வேறு ஏதாவது தொழிற்சாலைக்கு பயன்படுத்த வாங்கினானா ? என்ன தொழில் செய்தார் இந்த தம்பி ?

    4. வயர்லஸ் செட் இயக்க தேவையான 12- வோல்ட் பேட்டரியை பேரறிவாளன் சிவராசனுக்கு , மவுண்ட் ரோடில் உள்ள ஒரு கடையில் , ராஜன், மகாலிங்கபுரம் என்ற பொய் பெயர், மற்றும் பொய்முகவரியை கொடுத்து , வாங்கியிருக்கிறான். சதிசெயல் எதற்கோ உபயோகிக்கப்படும் என்று தெரிந்துதான் பேட்டரியை பொய் பெயரில் , பொய் முகவரி கொடுத்து இந்த தம்பி வாங்கினான் என்பது மிக தெளிவு. நேர்மையான செயலுக்கு வாங்குபவன் பொய் பெயரோ, பொய் முகவரியோ கொடுக்க தேவை இல்லை.

    5. ராஜீவ் மற்றும் 17-பேரை கொன்ற பொட்டைக் கண் சிவராசனுக்கு கவாசாகி பஜாஜ் பைக் வாங்கி கொடுத்துள்ளான் இந்த பேரறிவாளன். வாங்கிய பைக்கை டெலிவரி எடுத்ததோ பொட்டைக் கண் சிவராசன் தான்.

    6. இந்திய அமைதிப் படையை கேவலப்படுத்தி,” சைத்தானின் படை”- என்ற பெயரில் ஒரு புத்தகத்தை சென்னை மவுண்ட் ரோடில் உள்ள அச்சகத்தில் அச்சடித்து வாங்கி, ஆனால் இங்கிலாந்தில் உள்ள அச்சகத்தில் அச்சடித்தது போல, பொய்ப் பெயரைப்போட்டு , ஏமாற்றியுள்ளனர். இதெல்லாம் சதிகாரனின் செயல்களே ஆகும். இந்த அச்சிடும் கூலிக்கு பணம் கொடுத்தது பேரறிவாளன் தான். ஏனெனில் பேரறிவாளன் விடுதலைப்புலிகளின் தார்மீக ஆதரவாளர் மட்டுமல்ல. அவர்களின் சதி செயலுக்கு பல விதங்களில் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பது தெளிவு.

    7. இந்த இடத்தில் நம் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். பேரறிவாளன் போன்றோர் தங்கள் மூடத்தனமான செயல்களால்,, ராஜீவை மட்டும் கொல்லவில்லை, ராஜீவுடன் சேர்த்து 17- பேரை வானுலகுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வளவு பேரைக்கொன்ற கொடும்பாவிகளுக்கும், அவர்களுக்கு கைலாகு கொடுத்து , பலவிதங்களில் உடந்தையாக இருந்த பேரறிவாளன் போன்றோருக்கும் மன்னிப்புக் கொடுப்பது என்பது தவறு.

    8. இந்திய அமைதிப்படை வட இலங்கையில் ஏதேனும் தவறு இழைத்திருந்தால், அதனை ராணுவ கோர்ட்டில் புகார் செய்து, தவறு செய்த ஓரிரு ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து , ஒரு பாவமும் அறியாத 17- பேரை சதி செய்து கொன்றது மன்னிக்க முடியாத குற்றம். ஒட்டு மொத்தமாக இந்திய அமைதிப் படையை இழிவுபடுத்தி பிரச்சாரம் செய்தது, அதுவும் ஒரு இந்தியக்குடிமகன் செய்யக்கூடாத குற்றம் ஆகும்.

    9. சோனியா தலைமையிலான மன்மோகன்சிங்கின் டம்மி அரசு, அப்பாவி இலங்கை சிவிலியன் தமிழரை இலங்கை ராணுவம் அழிக்க துணைபோனது. அதற்காக இந்தியாவின் தலையாட்டி பொம்மை திருவாளர் மன்மோகன் சிங்கு மீதும், அவருக்கு ( அவனுக்கு என்று எழுதவேண்டும்- ஆனால் ஜனநாயக நாட்டில் நமது அரசியலமைப்பின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய பதவியை அலங்கரிக்கும் பொம்மையாக இவர் இருப்பதால் , சிறிது மரியாதையான சொற்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.) சொம்பு தூக்கி சேவை புரிந்த சில தமிழகத்து செருப்புக்களுக்கும் , வரும் பாராளுமன்ற தேர்தலில் வைக்க இருக்கிறோம் பெரிய ஆப்பு.

    10.துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு கலாசாரம் ஆகியவை அதை எடுப்போரையே அழித்துவிடும். விடுதலைப்புலிகள் அப்படித்தான் அழிந்தார்கள். தமிழகத்தில் வன்முறை பரவ அனுமதிக்க மாட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *