நிர்வாண சுகதாயினி

தலைப்பில் கண்ட சொற்றொடர் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. அதைக் கண்டதும், அருகிலிருந்த என் நண்பனிடம் ஓர் ஏளனச் சிரிப்பு.

“அம்பிகையின் வழிபாட்டில் சற்று வித்தியாசமான பொருளைத் தருகிறதே மேற்கொண்ட சொற்கள் புரியவில்லையா உனக்கு?” அதன் பொருளை யதார்த்தமாகக் கொண்டு என்னைக் கேட்டான்.

விடையளிக்க சற்று அவகாசம் கேட்டு வீடு திரும்பினேன். ஏதோ கூட (ரகசிய) அர்த்தம் இருக்கும் எனப் புலப்பட்டது. கண்ணை மூடி சிந்தனைக் குதிரையைத் தட்டி விட்டேன். வினாக்களும் விடைகளுமாகப் பொறி தட்டியது, வெளிச்சம் தெரிந்தது, உளறல் தொடங்கிவிட்டது.

ஸஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் பெயர்களின் (நாமாக்களின்) தொகுப்பு. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று முழங்குகிற நேரத்தில் அம்மைக்கு ஆயிரம் பெயர் வேண்டுமோ?

மோகம் மிகுந்த அந்தரங்க வேளைகளில், அன்புச் செல்வங்களைக் கொஞ்சுகிற காலத்தில், ஆத்ம நண்பர்களுடன் அளவளாவுகிற நேரத்தில், நாம் எத்தனையோ சொற்களை உதிர்க்கிறோம் அவையனைத்தும் பொருள் பொதிந்தவைதானா? அகராதியில் அவற்றின் பொருள் கிடைக்குமா? பொருளற்றவையே பல. அதே போல இறைவியை ஆராதிப்பவன் பக்திப் பரவசப்பட்ட உன்மத்த நிலையில் எத்தனையோ பெயர்களை உச்சரித்திருக்கலாம். அவற்றுள் பொருள் பொதிந்தவைகளின் தொகுப்பே ஸஹஸ்ரநாமம் எனப் பெயர் பெற்றிருக்கலாம். நம்மால் கட்டுப்படுத்த முடியாத, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வேதாந்தத்தில் அதை ‘வஸ்து‘ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். கடவுள் என்கிறோம்; உள்ளங்களைக் கடந்தவர் எனப் பொருள் கொள்கிறோம்; வெவ்வேறு பெயர் சொல்லி அழைக்கிறோம். ஆனால் அதே சமயம், இறைவன் என்பவர் பொதுவானவர் என்பதையும் உணருகிறோம். பிற சமயங்கள் தாம் வழிபடும் கடவுள் அல்லது இறைத்தூதர் ஒருவர்தான் கடவுள் என்றும் தம் வழிபாடு ஒன்றுதான் சிறந்தது என்றும் அறைகூவல் விடுக்கும்போது, இந்து சமயம் மட்டும்தான் அனைத்து மதத்தினரையும் ஒன்றாக ஏற்று, வழிபாடுவகை வேறுபட்டாலும் குறிக்கோள்-தெய்வம் ஒன்று என்பதை வலியுறுத்துகிறது. இதை சகிப்புத்தன்மை ( Religious Tollerence) என்று கூறுகிறோம். “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்துகிறோம்.

வழி தவறிவிட்டோம் போல் உள்ளதே? மீண்டும் ஆயிரம் பெயர்களுக்குச் செல்வோமா? நம் முன்னோர்கள் சொன்னார்கள்- “இறைவன் பெயரை மீண்டும் மீண்டும் சொல், நாமஜபம் செய், வழிபடு”. ஆகவே நாமும் சொல்கிறோம். காலப்போக்கில் இந்த நாமாவளி மனப்பாடமாக மாறிவிடுகிறது. பிற வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் இந்தப் பெயர்களை நமது உதடுகள் முணுமுணுக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம். தனியாகவோ, கூட்டாகவோ நாம சங்கீர்த்தனம் செய்கிறோம். இந்தப் பெயர்களின் அதிர்வு எல்லா இடங்களிலும் ஏற்படுகிறது; இப்படிச் சொல்லும்போது ஒரு முறையாவது ஒரு பெயரையாவது முழுமனதுடன் ஈடுபாட்டுடன் சொல்ல மாட்டோமா என்பது ஓர் அல்ப ஆசைதான்.

தொடர்ந்து உச்சரிப்பதால் ஏற்படும் அதிர்வுகள் நல்லதொரு சூழலை உருவாக்குகின்றன. நல்ல எண்ணங்கள் நல்ல சொற்களாக வெளிப்படுகின்றன. நல்ல செயலாகப் பரிணமிக்கின்றன. தீயவை அகலுகின்றன. நம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற பிரபஞ்ச அதிர்வுகள் (கடவுளரும்) அப்படியே ஆகட்டும் என வாழ்த்துகின்றன. இந்த நேரத்தில் “உள்ளத்தில் ஒளியுண்டாயின்” என்ற பாரதியின் வாக்கு நினைவில் ஊஞ்சலாடுகிறது. நிருபமா (உவமைக்கு அப்பாற்பட்டவள்) மற்றும் நிர்வாண சுகதாயினி – அம்பிகையின் பிறிதொரு பெயர். நம்முடைய தலைப்பிற்கு மீண்டும் வருவோம். நிர்வாணம் என்பது ஆடையற்ற நிலைதான்; ஆனால் இந்த நிலை நம்முடைய உடல் என்ற எண்ணமிருந்தால்தானே! கவனம் அனைத்தும் பரம் பொருளைப் பற்றிய சிந்தனையாக இருக்குமாயின் ‘உடல்‘ பொருளற்றதாக அல்பமாக மாறிவிடுகிறது. ஆண்-பெண் பேதம் அற்றுவிடுகிறது. “பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறமும் தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பமும்” – பரவசம் ஊட்டுகிறது. “விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவி போல” அனைத்தும் கடந்த நிலை உருவாகிறது. “அஹம் பிரம்மாஸ்மி”, “சிவோஹம்” என்று கூச்சலிடத் தோன்றுகிறது. மொத்தத்தில் நிர்வாணம் அர்த்தமற்றுப் போகிறது.

இதற்குச் சான்றாக வாழ்ந்த பெரியவர் ஒருவர். நிர்வாணமாக வீதியில் சென்ற அவரைக் கண்டு சினமுற்ற மன்னன் வாளை வீசுகிறான். வெட்டுண்ட கரம் வீதியில் (மண்ணில்) துடிதுடிக்கிறது. ஆனால் விரைந்து செல்லுகிறார் துறவி. அவர் யார்? நினைவிற்கு வரவில்லையா? அவர்தாம் புன்னைநல்லூர் மாரியம்மனை உருவாக்கியவர் “சர்வம் பிரம்மமயம் ரேரே” என்று அறைகூவியவர் அவரே “சதாசிவ பிரம்மேந்திரர்”.

இதே நிர்வாண நிலையை பெளத்தமும் மகா நிர்வாணம் என்று போதிக்கிறது. சமணத்திலும் நிர்வாண சாதுக்கள் உள்ளனரே! நம்மிடையே எத்தனையோ அவதூதர்களும், திகம்பரர்களும் இன்னும் உள்ளனரே? “ஆசை அறுமின்” என்பார் திருமூலர். உடல் சார்ந்த பற்றற்ற நிலை ஏற்படும்போது தெய்வ சிந்தனை நீக்கி பிறிதொரு எண்ணம் ஏற்படாதபோது உண்டாகும் சுகமே அலாதிதானே! உடல் அழியக்கூடியது; ஆத்மா (பிரம்மம்) அழியாதது என்பது முழுமையாக உணரப்படுகிறது. “நிர்வாண சுகதாயினி” என்பதன் பொருளும் தெளிவாகிறது. இதையேதான் “பற்றற்று அனுபவி” என ஈசாவாஸ்யமும் அறிவுறுத்துகிறது போலும்.

தெளிவு பிறந்து விட்டது. விளக்கம் தந்திட உவகையுடன் நண்பன் வீடு நோக்கி விரைந்தேன்.

17 Replies to “நிர்வாண சுகதாயினி”

  1. // நிர்வாணம் என்பது ஆடையற்ற நிலைதான் //

    இல்லை. தற்போதைய பேச்சுவழக்குத் தமிழில் “நிர்வாணம்” என்ற சொல்லுக்கு “ஆடையற்ற நிலை” என்ற பொருள் தமிழில் ஏனோ இப்போது வழங்கி வரப்படுகிறது. “நிர்வாணம்” என்ற வடமொழிச் சொல் வடமொழியில் “ஆடையில்லாத நிலை” என்ற பொருளில் வராது. இதற்கு ‘முக்தி நிலை’ அல்லது liberation என்று தான் பொருள்.

    மானியர் வில்லியம்ஸ் சமஸ்கிருதம்-ஆங்கில அகராதியிலிருந்து:

    3 nirvANa mfn. blown or put out , extinguished (as a lamp or fire) , set (as the sun) , calmed , quieted , tamed (cf. %{a-nirv-}) , dead , deceased (lit. having the fire of life extinguished) , lost , disappeared MBh. Ka1v. &c. ; immersed , plunged L. ; immovable L. ; %{-bhUyiSTha} mfn. nearly extinguished) , or vanished Kum. ii , 53 ; n. blowing out , extinction , cessation , setting , vanishing , disappearance (%{-NaM-kR} , to make away with anything i.e. not to keep one’s promise) ; extinction of the flame of life , dissolution , death or final emancipation from matter and re-union with the Supreme Spirit MBh. &c. &c. ; (with Buddhists and Jainas) absolute extinction or annihilation (= %{zUnya} L.) of individual existence or of all desires and passions MWB. 137139 &c. ; perfect calm or repose or happiness , highest bliss or beatitude MBh. Ka1v. &c. ; N. of an Upanishad ; instructing in sciences L. ; bathing of an elephant L. ; the post to which an elephant is tied Gal. ; offering oblations (for 1. %{nir-vApaNa} ?) L. ; %{-kara} m. `” causing extinction of all sense of individuality “‘ , a partic. Sama1dhi Ka1ran2d2. ; %{-kANDa} m. or n. N. of wk. ; %{-tantra} see %{bRhan-nirvANat-} and %{mahA-n-} ; %{-da} mfn. bestowing final beatitude MBh. ; %{-dazaka} n. N. of wk. ; %{-dIkSita} m. N. of a grammarian Cat. ; %{-dhAtu} m. the region of Nirva1n2a Vajracch. Ka1ran2d2. ; %{-purANa} n. offering oblations to the dead Ra1jat. ; %{-prakaraNa} n. N. of wk. ; %{-priyA} f. N. of a Gandharvi1 Ka1ran2d2. ; %{-maNDapa} m. N. of a temple , Skandap. ; %{-mantra} n. N. of a mystical formula Cat. ; %{-maya} mf(%{I})n. full of bliss VP. ; %{-mastaka} m. liberation , deliverance W. ; %{-yoga-paTala-stotra} and %{-yogo7ttara} n. N. of wks. ; %{-ruci} m. pl. `” delighting in final beatitude “‘N. of a class of deities under the 11th Manu BhP. (cf. %{nirmANa-rati}) ; %{-lakSaNa} mfn. having complete bliss as its characteristic mark MW. ; %{-SaTka} n. N. of a Stotra ; %{-saMcodana} m. a partic. Sama1dhi , Ka1ran2d. ; %{-sUtra} n. N. of partic. Buddh. Su1tras ; %{-No7paniSad} f. N. of an Upanishad.

    ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பகவத் கீதையில் ‘நிர்வாணம்’ என்று வரும் இடங்களின் பொருள்:

    nirvana

    nirvāṇa-paramām — cessation of material existence; BG 6.15
    nirvāṇa — salvation; SB 1.16.23
    nirvāṇa-ātman — O embodiment of nirvāṇa; SB 3.25.29
    brahma-nirvāṇa — in brahmānanda; SB 4.6.39
    avasita-karma-nirvāṇa-avasaraḥ — Mahārāja Bharata who ascertained the moment of the end of his royal opulence; SB 5.7.8
    nirvāṇa — of liberation; SB 6.4.27-28
    brahma-nirvāṇa — connected with the Supreme Brahman, the Absolute Truth; SB 7.7.37
    nirvāṇa-sukha — of transcendental happiness; SB 7.10.49
    kaivalya-nirvāṇa-sukha — of liberation and transcendental bliss; SB 7.15.76
    nirvāṇa — for one completely freed from material activities; SB 8.3.11
    nirvāṇa-sukha-arṇavāya — unto the ocean of eternal bliss, beyond material existence; SB 8.6.8
    nirvāṇa-sukha-saṃvidā — by transcendental bliss, putting an end to material existence; SB 9.7.25-26

    (நன்றி: https://vedabase.net/n/nirvana)

    தமிழில் பேச்சுவழக்கில் ஏனோ பல வடமொழிச் சொற்களைத் தவறான பொருளில் உபயோகித்து வருகிறோம்.

    இன்னொரு உதாரணம்: “பிரமாதம்” என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் உள்ள பொருள்:

    m. intoxication RV. MBh. ; madness , insanity L. ; negligence , carelessness about (abl. or comp.) Kaus3. Mn. MBh. &c. ; an error , mistake W. ; a partic. high number L. ; %{-cArin} mfn. acting in a careless manner Ka1ran2d2. ; %{-pATha} m. a wrong reading S3am2k. ; %{-vat} mfn. = %{-mAdin} L.

  2. தமிழக வரலாற்றில் சமணர்கள் வல்லாதிக்கம் செலுத்திய காலம் இருக்கிறது. அந்த வரலாற்று அடிப்படையில் இந்தச் சொல்லின் தற்போதைய பொருள் ஏற்பட்டு இருக்கக் கூடும்.

    “துறத்தல்” என்பதற்கான செம்மொழிச் சொற்களில் பிரபலமான ஒன்று “நிர்வாண”.

    ஜைனர்களின் ஒரு பிரிவு “திகம்பரர்கள்”. “ஆகாயத்தை ஆடை”யாக அணிந்த துறவிகள் அப்பிரிவில் உண்டு.

    ஆடையை நிர்வாணித்தவர்கள் அதாவது ஆடையைத் துறந்தவர்கள் பலரைச் சமணர் வல்லாதிக்கத்தின்போது தமிழகம் கண்டது. எனவே, ஆடையற்ற நிலைக்கு நிர்வாணம் என்ற பெயர் வழக்கில் மருவி விட்டது.

    இதேபோல, தரையில் அமர்வதற்கான தற்போதைய பழகுமொழிச் சொல் “சப்பணம்” போடுதல். சமண முனிவர்கள் அமர்ந்த நிலையில் இருப்பதைக் கண்ட தமிழர்கள், அந்த உட்காரும் நிலைக்கு, அந்த ஆசனத்திற்கு, “சமணம்” என்று பெயர் கொடுத்தார்கள். அது மருவி “சப்பணம்” என்றாகியது.

    இந்தக் கட்டுரை இது போன்ற வார்த்தைகளின் வரலாற்றுக் காரணிகளை ஆராயத் தூண்டுதலாக அமையட்டும்.

    .

  3. அருணகிரிப் பெருமான் ‘ ப்ரமாதம்’ என்ற சொல்லை பயம், அல்லது அபாயம் என்ற பொருளில், “மரணப்ரமாதம் எமக்கில்லையாம்” (கந்தரலங்கார 21)என்று ஆண்டுள்ளார். தவறு, குற்றம் எனும் பொருளிலும் இச் சொல் ஆளப்பட்டு வருகின்றது. ‘இது ஒன்னும் ப்ரமாதமில்லை’ என்று பேசுவது உலக வழக்கிலும் உண்டு.

  4. கட்டுரை ஆசிரியரின் மையக் கருத்தின்மேல் எனக்குப் பூரண உடன்பாடு உண்டு. ஆடையற்ற நிலையை வெறுக்கும் மனப்பாங்கு இந்தியருக்குக் கிடையாது. அது முழுக்க முழுக்க ஆபிரகாமியக் கலாச்சாரம் சேர்ந்தது.

    ஆடைகளும், அலங்காரங்களும்தான் காமத்தைத் தூண்டும். மூடிய பதார்த்தத்தின் மேல் கவர்ச்சியும், கிளர்ச்சிகளும் உருவாகும். ஆபிரகாமியப் பூசாரிகள் அரசியல்வாதிகள். உடலை மூடுவதன் மூலம் கவர்ச்சிகளைக் கிளர்ச்சிகளை ஒரு புறம் உருவாக்கினர். மறுபுறம் அவற்றைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் விதித்த சுயநலச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என விதித்தனர். இந்தச் சட்டங்களின் மூலம் ஆபிரகாமியப் பூசாரிகளின் செல்வாக்கும், வளமையும் பெருகியது.

    இந்த ஆபிரகாமியம் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் கலாச்சாரம் என்ற பெயரில் மனோவியாதிகளையும் பரப்பியது. அதனால்தான், நாம் கோட், சூட், ஷூ போட்டுக்கொண்டு வெயில் காலத்தில் நம் மனோவியாதிகளோடு, உடல் வியாதிகளையும் வரவழைத்துக் கொள்கிறோம்.

    ஆடையற்ற இடங்களில் காமம் இயல்பான குறைந்த அளவில், ஆரோக்கியமாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆடையற்றோருக்கான வசிப்பிடங்களை ஆய்வு செய்தவர்கள் இதைத் தெரிவிக்கிறார்கள்.

    ஆடைகள் காமத்தை மறைக்கப் பயன்படும் என்று நம்பும் இடங்களில்தான் கட்டுக்கடங்காத காமவெறியும், மனப்பேதலிப்பால் உருவாகும் உறவுமுறைகளும் அதிகம் இருக்கின்றன என்பதும் ஆய்வு முடிவுகள் சொல்லும் உண்மை.

    நகரங்களில் இருந்து மிகவும் விலகி இருக்கும் இந்திய கிராமங்களில் ஆடையற்ற நிலையும், காமமும் ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை. உதாரணமாக, அத்தகைய கிராமங்களில் வயதான பெண்கள் எண்ணை தேய்த்துக் குளிக்கும் நாட்களில், ஆடையற்ற நிலையில் திண்ணைகளில் எண்ணை ஊறக் காத்திருப்பதைக் கண்டிருக்கிறேன்.

    .

  5. ‘நிர்வாண சுகதாயிநி’ எனும் திருநாமத்திற்கு ‘இன்னதென்று வர்ணிக்க முடியாத சுகமாகிய முத்தியைக் கொடுப்பவள்’ என்று பொருள்.
    ‘பாண’, ‘வாண’ என்ற பதங்கள் இரண்டும் ஒன்றே. ‘ஏதத்பாணம் அவஷ்டப்ய’ என்ற சுருதி வாக்யத்தில் வரும் பாண என்ற பதமசச்னது சரீரத்தைக் குறிக்கும் என்று வேதாந்திகள் சொல்வார்கள். அதேமாதிரி ‘கீர்வாண’ என்பதில் வரும் வாண என்ற பதமானது சரீரத்தைக் குறிக்கும் என்று மீமாம்ஸகர்கள் சொல்லுவார்கள். ஆகவே, ‘நிர்வாண’ என்றால் சரீரமில்லாதது, அதாவது இன்னது என்பதாகக் குறிப்பிடமுடியாதது என்று அத்தம். மோக்ஷம் ஒன்றுதான் நிர்வாண சுகமானதால் அதனை அருளுபவள் ‘நிர்வாண சுகதாயினி’எனப் போற்றப்பட்டாள்.
    இது நிர்வாணம் என்பதற்கு ஆன்றோர்கள் கொண்ட பொருள்

  6. சிவநெறியில் குரு அருளும் தீக்கைகள் மூன்றில் உயர்ந்தது, நிர்வாண தீக்கை.நிருவாணதீக்கையாஅவது, பாசபந்தம் அனைத்தையும் நீக்கிச் சிவபெருமானுடைய திருவடியை அடையும்படிச் செய்யுந் தீக்கையாம். நிருவாணம் – மோக்ஷ்ம், ஓய்வு. நிர் – முற்றாக. வா- கெடுதல். நம் விகுதி இவ்வாறு இச்சொல்லுக்குப் பொருளும் பகுபதப் பொருளும் கூறுவதுண்டு..

  7. \\\\\\நிர்வாணம் என்பது ஆடையற்ற நிலைதான்; \\\\\\

    நிர்வாணம் என்பது முக்திநிலை என்று ஸ்ரீ கந்தர்வர்ன் தெளிவு படுத்தியுள்ளார்.

    \\\\இதே நிர்வாண நிலையை பெளத்தமும் மகா நிர்வாணம் என்று போதிக்கிறது. சமணத்திலும் நிர்வாண சாதுக்கள் உள்ளனரே! நம்மிடையே எத்தனையோ அவதூதர்களும், திகம்பரர்களும் இன்னும் உள்ளனரே?\\\\\

    மேலே ஜின சாதுக்களில் ஒரு வகையினரான திகம்பரர்களைப்பற்றிய ப்ரஸ்தாபம் பற்றி. ஜின சாதுக்களை ஸ்வேதாம்பரர் மற்றும் திகம்பரர் என இருவகையினராய் ப்ரதானமாய் அறிகிறோம். இதில் அணியும் “அம்பரத்தை” (ஆடையை) அலகீட்டாக வைத்து அறியப்படும் வித்யாசம் “ஸ்வேதாம்பர” மற்றும் “திகம்பர”. ஸ்வேதாம்பர என்றால் (ஸ்வேத – வெள்ளை அம்பர – ஆடை) வெண்மையான ஆடை அணிபவர் என்ற படிக்கு “திகம்பர” என்பதிலும் அம்பர என்ற சப்தத்தால் அவரும் ஆடை அணிபவரே. (திக் – திசை அம்பர – ஆடை) திசைகளையே ஆடையாய் அணிபவர் என்பதே சரி. நம்மைப்போல் ப்ராக்ருதிக வஸ்துக்களால் ஆடை அணியாது திக்குகளையே ஆடையாய் அணிபவர்கள் திகம்பர சாதுக்கள் என்று அறிய வேண்டுமே அன்றி ஆடையே அணியாதவர்கள் என திகம்பர சாதுக்களை அறியலாகாது என எனது ஜின நண்பர்கள் சொன்ன தகவல்.

    மேலும் “லலிதா சஹஸ்ரநாமம்” என்பது சாக்தர்களுக்கு முக்யமான நூல். இதன் தத்வார்த்தங்களை ஸ்ரீ வித்யா உபாசகர்களான சாக்தர்களின் வழிமுறைகளை ஒட்டியே அறிய முற்படுவது நன்று. ஸம்ப்ரதாயமாய் அன்றி அகராதிகளின் வழியே அறியமுற்படுவதன் மூலம் மேலோட்டமான அர்த்தங்கள் கிட்டலாமேயன்றி தத்வார்த்தங்கள் அறிய முடியாது என்பது சான்றோர் வாக்கு.

    உதாரணமாக நான் இந்த விஷயத்தை உணர்ந்ததை பின்னர் பகிர்கிறேன்.

  8. நன்றி. தொடரட்டும் பல கருத்துக்களின் தொகுப்பு. வாழ்க பாரதம்.

  9. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் ஆவது. இறைவன் நாமங்களை சொல்லும் போது அந்த இறை நம்மிடம் உள்ள ஆத்மவேதான் என்ற அத்வைத எண்ணத்துடன் கூறினால் வார்த்தைகளுக்கு அகராதி அர்த்தம் கொடுக்கும் பழக்கம் நிற்கும். இது சாத்யமா என்றால் விட முயற்சி செய்து பார்த்தால் தான் உணர முடியும்

  10. Please ban this Kalimiku Ganapathi from posting any comments in this site. He is supporting nakedness and promoting immorality.

  11. “Please ban this Kalimiku Ganapathi from posting any comments in this site. He is supporting nakedness and promoting immorality.”

    சீரியசான இந்த தளத்தில் இப்படி சிரிப்புக்காட்டும் நபர்களுக்கு பரிசுத்திட்டம் ஏதும் அறிவிக்காத தமிழ்ஹிந்து தளத்தினரை வன்மையாகக்கண்டிக்கிறேன்.

  12. While I undoubtedly do appreciate Sri S.J.THOMPSON’S participation and welcome his comments, may I suggest to him to exercise restraint as this forum is for free expression of everybody’s views and opinion and to contribute to to its richness and add to the wealth of knowledge/information. If something written is unpalatable the options are 1) to refute and repudiate in a decent and polite manner with supporting facts or 2)to ignore such a posting. I do hope that this posting is taken in the spirit in which it is written.

    Pranams to all.

  13. \\\\\\\\If something written is unpalatable the options are 1) to refute and repudiate in a decent and polite manner with supporting facts or 2)to ignore such a posting. I do hope that this posting is taken in the spirit in which it is written.\\\\\\\\

    welcome, Shri.Kuppuswamy ji, thats in true spirits. Mr.Thomson, may be you might not have read thoughtful comments of Sh.Kalimigu Ganapathy. Sure, I have differences of opinion on some of his comments. But that does not permit me to agree with your personalised attack on one of our esteemed contributors. If you say his comment is in bad taste, I am sorry to say that your comment is worse in taste. And Sh.Kuppuswamy, I feel the reply in the instance by Sh.KG is given in good spirits.

  14. திரு. தாம்சன் அவர்களின் கருத்து நம் “களிமிகு கணபதியின்” கூற்றை மெய் என நிரூபிக்கிறது.

    திரு.க்ருஷ்ணகுமார் குறிப்பிட்டது போல் ஜின சாதுக்கள் திக்கையே ஆடையாக அணிபவர்கள். தமிழை தாய் மொழியாக கொண்ட என் ஜைன நண்பரும், தமிழ் ஹிந்துவின் ரசிகருமான திரு.வர்த்தமானன் அவர்களும் இதையேதான் கூறினார். உடல் மேல் பற்றை விட்டொழிதவர்கள் அவர்கள். நமக்குதான் மானம், அவமானம் எல்லாம். துறவிகள் எல்லாவற்றையும் துறப்பவர்கள்.
    மேலும், நம் ஹிந்து மதத்திலும் அவதூதர்களை காண்கிறோம். அவர்களின் அற்புதங்களை உணர்ந்துள்ளோம். ஸ்ரீ கணபதி குறிப்பிட்டுள்ளது போல் “ஆபிரகாம்ய” மதங்களால் ஆன்ம ஈடுபாட்டை புரிந்து கொள்வது கடினம். அதனால்தான் அவை புண்ணிய பூமியாம் “பாரதத்தில் ” தோன்றவில்லை.

    -ஆர். டி. வர்மன்

  15. ஒரு நல்லக் கட்டுரை அனால் பல நல்ல மறுமொழிகள். நிர்வாணம் என்பதற்கு ஆடையற்ற நிலை அன்று மாறாக விடுதலை அல்லது மோட்சம் என்பதே சரியான விளக்கம் என்று சொன்ன ஸ்ரீ கந்தர்வன் நன்கு சொன்னார்.
    இன்னும் அழுத்தமாக ஐயா முத்துக்குமாரசுவாமி அவர்கள்
    ‘நிர்வாண சுகதாயிநி’ எனும் திருநாமத்திற்கு ‘இன்னதென்று வர்ணிக்க முடியாத சுகமாகிய முத்தியைக் கொடுப்பவள்’ என்று பொருள்.
    அதைவிட நிர்வாணம் என்னும் பதத்திற்கு நிர்வாண தீக்ஷை என்கிற சைவத்தில் வழங்கப்படும் தீக்கை யை எடுத்துக்காட்டி விளக்கம் தந்திருப்பது.
    “நிருவாணதீக்கையாவது, பாசபந்தம் அனைத்தையும் நீக்கிச் சிவபெருமானுடைய திருவடியை அடையும்படிச் செய்யுந் தீக்கையாம்”.

    ஆக நிர்வாண சுகதாயினி ஆகிய அன்னை பராசக்தி முக்தியை அருளுகின்றாள் அப்படி அருளுகின்ற குருவாகவும் விளங்குகின்றாள் வருகின்றாள். இறைவனை குருவாகக் கொள்கின்றார்கள் சைவர் அதுபோல் சாக்தரும் அவ்விரைவனுக்கே அன்னை குருவாகின்றாள் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *