இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…


து என்னவோ தெரியவில்லை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வெளிவந்த நாள் முதலாகவே அந்தக் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட பலரும் வசமாகச் சிக்குவதும், பிறகு கூட்டுக் கொள்ளையர்கள் ஒருங்கிணைந்து அதை மறைக்க முயற்சிப்பதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது. இந்தத் தொடர்கதையில் இப்போதைக்குக் கடைசி அத்தியாயம் ப.சி. சம்பந்தப்பட்ட முகர்ஜி அமைச்சகக் கடிதம்.
 
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மோசடி வித்தைகளைக் கையாண்டு அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய தமிழகத்தின் ஆ.ராசாவும், அவருக்கு உறுதுணையாக இருந்த கனிமொழியும் திகார் சிறைக்குள் சென்று பல மாதங்கள் ஆகி விட்டன. இந்த மோசடி நடந்த போது  கைகட்டி வேடிக்கை பார்த்த, மோசடியை ஊக்குவித்த அதில் தாங்களும் லாபம் கண்ட காங்கிரஸ் கும்பல்கள் இப்போது திமுகவைச் சிக்க வைத்து விட்டு வக்கணை பேசிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்களுக்குக் கைமாறிய பணத்தில் பெரும்பகுதி காங்கிரஸ் தலைமைக்கே சென்றிருப்பதாக் இவ்வழக்கை ஆரம்பத்தில் இருந்து முடுக்கிவிடும் சுப்ரமணியம் சாமி குற்றம் சாட்டுகிறார். ஆனால் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய திமுக தலைவரோ, ‘ஏதாவது பேசப்போக, மகள் மீதான வழக்கை மேலும் வலுப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில்’  அமைதி காக்கிறார். இந்த நிலையில் தான் கூட்டணிக்குள் குத்து வெட்டு என்ற நிலை மாறி, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த புகார்க்கணைகள் வலம் வரத்துவங்கியுள்ளன. அதில் பிரதானமானது, பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் 2011, மார்ச் 25-ல் பிரதமர் மன்மோஹன் சிங்கத்துக்கு எழுதிய கடிதம். “ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்த போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஏல முறையைக் கடைப்பிடித்திருந்தால் இந்த முறைகேட்டைத் தவிர்த்திருக்கலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஒருவரால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ந்தக் கடித விவகாரம் வெளியானவுடனேயே, எதிர்பார்த்தது போலவே “ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சி.யிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்; ப.சி. விலக வேண்டும்” என்ற கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டன. வழக்கம்போல, “ப.சி. எனது நம்பிக்கைக்குரிய அமைச்சர். அவர் தவறு செய்திருக்க மாட்டார்” என்று பிலாக்கணம் பாடினார் பிரதமர்.  இக்கடிதத்துக்குப் பொறுப்பான முகர்ஜியோ, “இவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் கருத்துத் தெரிவிக்க முடியாது” என்று நழுவினார். இக்கடிதம் வெளியானபோது, அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர், அங்கிருந்தபடியே ப.சிக்கு “நான் வரும் வரை எந்த அவசர முடிவும்(?) எடுத்து விட வேண்டாம்” என்று வேண்டுகோள் வேறு விடுத்தார்!
 
து மட்டுமல்ல, அமெரிக்காவிலேயே இது குறித்த பல சுற்றுப் பேச்சுக்களை வெற்றிகரமாக நடத்தினார் பிரதமர். ஐ.நா சபைக் கூட்டத்துக்குச் சென்றிருந்த பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட அமைச்சர்களுடன் இவ்விஷயத்தை எவ்வாறு கையாள்வது என்று முன்னோட்டமே அங்கு நடத்தப்பட்டது. ஆனால் இக்கடிதத்தை முகர்ஜி சார்ந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் ஏன் எழுதினார் என்ற கேள்வியை யாரும் எழுப்பவே இல்லை. 
 
டந்த ஜூன் மாதம் நிதி அமைச்சக அறைகளில் பல இடங்களில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பதிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார் பிரணாப் முகர்ஜி. இதைச் செய்தது யார் ( இது முகர்ஜிக்கே தெரியும் ) என்று அறிய விசாரணை நடத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமருக்குப் பிரணாப் எழுதிய கடிதத்தில் , ‘என்னுடைய நிதி அமைச்சக அலுவலகத்தின் முக்கியமான இடங்களில் மொத்தம் 16 ரகசியக் கண்காணிப்பு மற்றும் ஒட்டுக் கேட்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. என்னுடைய அலுவலகம், எனது ஆலோசகர் அலுவலகம், எனது தனிச்செயலாளர் மனோஜ் பாண்டே அலுவலுகம், நான் பயன்படுத்தும் இரண்டு கருத்தரங்கு அறைகள் ஆகியவற்றில் கருவிகள் உள்ளன’  என அதில் தெரிவித்திருந்தார். 
 
பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அவ்வாறு ஒட்டப்பட்டவை எல்லாமே ‘பபுள்கம் தான் என்ற அற்புதக் கண்டுபிடிப்பைப் புலனாய்வு அமைப்புக்கள் வெளிப்படுத்தி, முகர்ஜி புகாரை மூடி மறைத்தன.  உண்மையில் இந்த பபுள்கம் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகமே தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் சிதம்பர ரகசியம். 
 
ப்போதும் இதே போலப் பிரதமர் அவசரக் கூட்டங்களை நடத்தி விவகாரம் வெடிக்காமல் பார்த்துக் கொண்டார். இப்போது ப.சியைக் குற்றம் சாட்டும் கடிதம் வெளியாகி இருப்பது இவ்விரு அமைச்சகங்கள் இடையிலான மோதல் மறைமுகமாக நடந்து வருவதை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ப.சி., காங்கிரஸ் தலைவி சோனியாவின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர் என்பதும் சோனியாவுக்கு முகர்ஜி மீது எப்போதும் சந்தேகம் உண்டு என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை. காங்கிரஸ் அமைச்சரவையில் உண்மையிலேயே நாட்டுப்பற்றுக் கொண்ட அமைச்சர்கள் என்று சொன்னால் பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோரை மட்டுமே சொல்ல முடியும். இதர அமைச்சர்கள் பலரும் அவரவர் அளவுக்குச் சுருட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆக, ஸ்பெக்ட்ரம் ஊழலை ரகசியமாகக் கண்காணிக்கும் பணியில் பிரணாப் முகர்ஜி ஈடுபடுவதாக, ஊழலில் தொடர்புடையோர் அச்சமடைவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதனால்தான் அவரது அலுவலகத்தில் உளவுக் கருவிகள் பொருத்தப்பட்டன. 
 
தற்கு முன்னதாகவே, ‘நிதி அமைச்சர் ஒப்புதலுடன்’ என்ற குறிப்புடன், ‘அதிரகசியமான கடிதம்’ என்ற தலைப்பில், நிதி அமைச்சக அதிகாரிகள் இந்தக் கடிதத்தைப் பிரதமருக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்தக் கடிதம் உண்மை எதனையும் சொல்லவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குக் காரணமான ஆ.ராசா பல ஆண்டுகளாகவே இதைத் தான் தொடர்ந்து கூறி வருகிறார். ” நான் எந்த முடிவையும் தனியே எடுக்கவில்லை. அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோஹன் சிங் ஆகியோருடன் ஆலோசித்த பிறகே ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற 2003-ம் ஆண்டு நடைமுறையைத் தொடர்ந்தேன்” – என்பதுதான் ராசாவின் வாதமாக இருந்து வருகிறது. 
 
சென்ற வாரம் ( செப்.26 ) ஸ்பெக்ட்ரம் வழக்கு தில்லி நீதிமன்றத்தில் வந்த போது, “இவ்வழக்கில் இப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும்” என்று ராசாவின் வழக்கறிஞர் வாதாடியது குறிப்பிடத்தக்கது. ராசா, கனிமொழி மீது அரசுக்கு நம்பிகைத் துரோகம் இழைத்ததாக பல புதிய பிரிவுகளில் புதிய வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு(சி.பி.ஐ.) பதிவு செய்துள்ள நிலையில், தங்களை மட்டும் சிக்க வைக்க நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க ராசா தயாராகி வருவது தெரிகிறது. 
 
தி.மு.க.வின் மற்றொரு முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மீதும், ஏர்செல் விவகாரத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று  சி.பி.ஐ. அறிவித்திருக்கிறது ( செப்.28 ). மொத்தத்தில் காங்கிரஸ் ஆதரவு இருந்தால் அளவுக்கு மீறி ஆட்டம் போட்டவர்கள் இப்போது சிக்கலுக்கு உள்ளாவது நன்கு புரிகிறது. ஆனால் தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்களின் முறைகேடுகளுக்குத் துணையாக இருந்த சிதம்பரம், மன்மோகன் சிங், கபில் சிபல் ஆகியோர் இப்போதும் ‘புனிதர்’களாக நடமாடுகிறார்கள். அவர்களிடம்தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. சி.பி.ஐ. அவர்களது கரங்களில் பொம்மையாக இயங்குகிறது. இவர்கள் அனைவரையும் ஆட்டுவிக்கும் சோனியாவுக்கோ, வெளிநாடுகளில் அவரது குடும்பத்தினர், உறவினர் பெயர்களில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்த ரகசியங்கள் அம்பலமாகிவிடக் கூடாதே என்பது தான் கவலை. 
 
ந்நிலையில், உச்சநீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும்தான் ஒரே நம்பிக்கையாக உள்ளன. அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தனியொரு ஆளாகக் கண்காணித்த புதுப்புது ஆதாரங்களை வெளிப்படுத்திவரும் சுப்பிரமணியம் சாமியின் பணிகள் பெரும் தேச சேவை. கறுப்புப்பணமோ, ஸ்பெக்ட்ரம் மோசடியோ, அமைச்சகங்களுக்குள் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்களோ, எதுவாயினும் சாமி வெளிப்படுத்தும் ஆதாரங்கள் அவ்வப்போது வழக்கின் திசைகளை நிர்மாணிப்பவையாக இருந்து வருகின்றன. உண்மையில் இதை சி.பி.ஐ. செய்திருக்க வேண்டும். ஆனால் வேட்டைநாய்கள் என்றும் எஜமானனுக்கே விசுவாசமானவை என்பதை சி.பி.ஐ. தனது தகிடுதத்தங்களால் நிரூபித்து வருகிறது. 
 
நாடாளுமன்றத்தில் ‘பணத்துக்கு வாக்கு’ விவகாரத்தில் முக்கியக் குற்றவாளிகளான காங்கிரஸ் தலைவர்களும், அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்த எம்.பிக்களும் அதிகாரத்தின் சுவையை ருசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ஊழலை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய பா.ஜ.க முன்னாள் எம்.பிக்களும் அத்வானியின் செயலாளர் குல்கர்னியும் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். இதுதான் சி.பி.ஐயின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டும் சான்று. இப்படிப்பட்ட நிலையில், முகர்ஜி அமைச்சக அதிகாரிகள் எழுதிய கடிதத்தை முக்கிய வழக்கு ஆவணமாக சி.பி.ஐ. கருதப் போவதில்லை.  ‘அக்கடிதத்தில் ஆபத்தான எதுவும் இல்லை’ என்று பிரதமரே சொல்லிவிட்ட பிறகு சி.பி.ஐ என்ன செய்துவிட முடியும்? 
 
கவேதான் மத்திய அரசு ஆணவத்துடன் நடந்து கொள்கிறது. நீதிமன்றம் கண்டித்த பின் நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் இந்த அரசின் இதுவரையிலான நடைமுறையாக இருந்துள்ளது. அதே நடைமுறை இக்கடித விவகாரத்திலும் தொடர்கிறது. ஆயினும், ஊடகங்களில் வெளியான சேதிகள் மத்திய அரசின் நம்பகத்தன்மையைக் குலைத்து விட்டன. இவ்விவகாரத்தில் பதில் அளிக்கப்படாத பல கேள்விகள் எழுந்துள்ளன.
  1. 2007-ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 2011-ல் பிரதமருக்கு மத்திய அமைச்சக அதிகாரிகள் கடிதம் எழுத வேண்டிய காரணம் என்ன? இதற்கு முகர்ஜி அனுமதி அளித்தது ஏன்?
  2. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒருவர் இக்கடிதத்தைப் பெற்றது எப்படி? அவருக்கு இக்கடிதம் குறித்த தகவலை அளித்தது யார்?
  3. ஸ்பெக்ட்ரம் மோசடியில் அரசுக்கு இழப்பே ஏற்படவில்லை என்று பிரதமர், ப.சி. முகர்ஜி, சிபல் எனப்பலரும் பலமுறை கூறிவந்த நிலையில், இப்போது  இக்கடிதம் கூறும் உண்மையை அரசு ஏன் மறைக்கிறது?
  4. ராசா,  கனிமொழி, தயாநிதி வரிசையில், ப.சியையும் சேர்க்கச் சில தொழில் நிறுவனங்கள் நடத்திய சதியா இது? அல்லது மத்திய அமைச்சர்களுக்குள் உண்மையாகவே பனிப்போர் நடக்கிறதா? 
  5. ராசா கூறி வந்த அதே வாக்குமூலத்தைத் தான் நிதி அமைச்சகக் கடிதம் உறுதிப்படுத்துகிறது. இப்போதும் தி.மு.க. ஏன் இதைப் பெரிது படுத்தாமல் அமைதி காக்கிறது ? இதனை ஊடகங்களும் ஏன் ஒப்பிடாமல் மௌனம் சாதிக்கின்றன?
  6. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ‘கலைஞர் டி.விக்குப் பணம் பட்டுவாடா’ என்ற திசையில் மட்டுமே சி.பி.ஐ வழக்கைத் தொடர்வது ஏன்? கடைசியில் அந்த வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறி ஒட்டு மொத்தமாக ஸ்பெக்ட்ரம் வழக்கைப் புதைக்க அரசு திட்டமிடுகிறதா? அதற்காகவே தி.மு.க தலைமை பொறுமை காக்கிறதா?
  7. ராசா மீது தற்போது சுமத்தப்படும் நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டு, வழக்கைக் கண்காணிப்பவர்களைத் திசை திருப்ப நடத்தப்படும் நாடகமா? ஒருவேளை பிரதமருடனும், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடனும் தான் ரகசிய உரையாடல்களையும் அப்போது எடுக்கப்பட்ட அரசு முடிவுகளையும் ஆ.ராசா நீதிமன்றத்தில் கூறாமல் இருக்கவே இவ்வாறு மிரட்டல் விடுக்கப் படுகிறதா? 
மேற்கண்ட கேள்விகளுக்கு நியாயம்னான பதில் தேவை. இவற்றுக்குப் பதில் அளிக்கும் நிலையில் காங்கிரஸ் கூட்டணி அரசு இல்லை. எனவேதான், கடிதம் எழுதிய அமைச்சகத்தின் அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ப.சி.யையும் ஒருங்கே அமரச் செய்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இறுதியில் இவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியும் அளித்திருக்கிறார்கள் ( செப்.29 ). இவ்வாறு கடிதம் எழுதுவது வழக்கமான நடைமுறைதானாம்! நாமும் நம்பித்தான் ஆகவேண்டும். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது மெய்தானே?
 
2008, டிசம்பரில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளிவரத் துவங்கிய சில நாட்களில், தி.மு.க. குடும்பத்தில் ஏற்பட்ட அசாதாரணப் பிணைப்புக் குறித்துத் தமிழகம் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு கருத்துக் கணிப்புக்காக மூன்று தினகரன் ஊழியர் உயிரிழக்கக் காரணமான வன்முறை நிகழ்ந்ததையும் தி.மு.கவினர் அல்லாதார் மறந்திருக்க முடியாது. அப்போது தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்டு மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியும் பிடுங்கப்பட்ட தயாநிதி மாறன் பல சகுனி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவரது அண்ணன் கலாநிதியும் சன் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி தி.மு.க. எதிர்ப்பில் இறங்கினார்.
 
தையடுத்தே கலைஞர் தொலைக்காட்சி துவங்கப்பட்டது. ராசாவும் கனிமொழியும் திகார் சிறை செல்ல ‘நாள்’ குறிக்கப்பட்டதும் அப்போதுதான். இரு தரப்பிலும் மாறி மாறிக் குற்றச்சாட்டுகள் புற்றீசலாகக் கிளம்பி வந்த நிலையில், தயாநிதிக்குச் ‘செக்’ வைக்க ராசாவால் கிளப்பிவிடப்பட்டது. ( அண்மையில் எஸ்.குருமூர்த்தியால் அம்பலப்படுத்தப்பட்ட ) பி.எஸ்.என்.எல்  பிரத்யேக எக்ஸ்சேஞ்ச் மோசடி. நிலமையின் விபரீதத்தை உணர்ந்த கருணாநிதி அமைதிக் கொடிபிடிக்க, மாறன் குடும்பமும், அழகிரி, ஸ்டாலின் குடும்பங்களும் ஒன்றாகக் கூடிக் கும்மியடித்தன. அந்த நாள் வேண்டுமானால் பலருக்கு மறந்திருக்கக் கூடும். அதை மட்டும் இப்போது நினைவு படுத்திக்கொள்ளுங்கள். 
 
யாநிதிக்குப் பிறகு அதே துறையின் அமைச்சரான ராசாதான் ஸ்பெக்ட்ரம் ஊழலை நிகழ்த்தியதாக வழக்கு உள்ளது. அதற்கான தகவல்களை தயாநிதி கசிய விட்டதன் காரணமாகவே அவசர அவசரமாக ஒட்டு வேலைகள் அப்போது செய்யப்பட்டன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் கிடைத்த பல்லாயிரம் கோடி பணம் அப்போது பங்கிடப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டதுண்டு. அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த தி.மு.க தலைவர் கூறிய வார்த்தைகள் கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டியவை.

ரு குடும்பங்களும் இணைந்து விட்டன. இனி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை ” என்று கருணாநிதி பட்டவர்த்தனமாகவே கூறினார். அது மட்டுமல்ல, இந்த இணைப்பால், “இதயம் இனித்தது; கண்கள் பனித்தன ” என்றும் செப்பி மகிழ்ந்தார் கருணாநிதி. இப்போது மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் மோதலைக் கைவிட்டுக் கைகுலுக்கி இருப்பதும் கூட கருணாநிதியின் கண்களைப் பனிக்கச் செய்யலாம். தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம் – ப.சி., சிபல், சிங், முகர்ஜியின் கண்களைப் போல.  
 
ப்படி இதயம் இனித்தவர்களின் கதை இப்போது எப்படி இருக்கிறது என்பதை மட்டும் சற்றே திரும்பிப் பார்ப்பது, மோசடிகளை மறைக்கும் முகமூடிகளுக்கு நல்லது;எல்லாவற்றையும் ‘சாமி’ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. 
 
 
-0-O-o-

17 Replies to “இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…”

  1. Pingback: Indli.com
  2. அன்புள்ள சேக்கிழான் ,

    டூ ஜி ஊழலுடன் சோனியா கட்சியும் புதைபடும். திருடர்கள் வீட்டிலும் அலுவலகங்களிலும் நாலு வருடம் கழித்து மத்திய புலனாய்வு அமைப்பு ரெய்டு நடத்துவதை பார்த்து, குப்பனும் சுப்பனும் வாய் விட்டு சிரிக்கிறார்கள்.

    எந்த திருடனும் திருட்டு சொத்தை தன்னுடைய வீட்டிலேயே வைத்திருக்க மாட்டான். சோனியாவுக்கு தெரிந்தது கூட, சோனியாவின் கைப்பாவை சி பி ஐ க்கு தெரியவில்லையே? நாடே சிரிக்கிறது. டூ ஜி பணம் மஞ்சளாரின் குடும்பமும், இத்தாலி குடும்பமும் சேர்ந்து அடித்த கொள்ளை. இதில் ராசா மட்டும் என்ன பாவம் செய்தார். இரண்டு இட்டலி சாப்பிட்டவனுக்கு எட்டு மாசம் சிறை என்றால் இவர்கள் அடித்த முழுக்கொல்லைக்கும் அறிவாலய குடும்பமும், இத்தாலி குடும்பமும் ஆயுள் முழுதும் சிறையில் கழிக்க வேண்டியது தான்.

    மஞ்சளாரின் இறுதி காலத்தில், காங்கிரசும் தன்னுடன் சேர்ந்து அழிவதை கண்டு ரசித்து, தன்னுடைய பழைய விரோதங்களுக்கு ஒரு வடிகாலாக கொள்வார்.

  3. ஊழல் மட்டுமே இவர்களால் வந்த தீமை அல்ல.

    குடிப்பழக்கம் இல்லாத ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்த புண்ணியவான்கள் இவர்களே.

    மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை ஆக அமைவது ஆராய்ச்சி அறிவு மற்றும் அதனை மற்றவரிடையே பகிர்வதும் ஆகும். பகிர்வதற்கு தேவை தகவல் தொடர்பு. தகவல் தொடர்புக்கு தேவை பல மொழிகளில் அடிப்படை அறிவு. அந்த அடிப்படை அறிவு உருவாகாமல் தடுத்தது இந்த சமூக விரோதிகளே.

    உலகிலேயே தமிழ் மட்டுமே காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன கன்னடரை, தமிழர் தலைவன் என்று வெட்கமின்றி சுமந்த அசிங்கங்கள்.

    இவர்கள் இதயமும், கண்களும் இனிமேல் எப்போதும் இனிக்கா, பனிக்கா.

  4. டூ ஜி ஊழலில் இரண்டு லட்சம் கோடி அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டு கணக்குபிள்ளை பசியும் உடந்தை என்று ரகசியம் வெளியே வந்துவிட்டது. எனவே அறிவாலய கொள்ளைக்கு செட்டிநாட்டு பிள்ளையும் அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்துள்ளார் என்பது பலருக்கும் அதிர்ச்சிதான். காங்கிரசுக்கு கருமாதி செய்ய கூட தமிழகத்தில் இனி ஆள் இல்லை. இவ்வளவு நட்டம் ஏற்படுத்த ஒரு நிதி அமைச்சர் தேவையா? ஊழல் ராசாக்களும், ஊழல் கனிகளும் நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும்.

    ஊழல் செய்யும் மந்திரிமார்களை கட்டுப்படுத்த முடியாத அசிங்கம் பிடித்த மன்மோகன் சிங்கு உடனடியாக பதவி விலகட்டும். இல்லையென்றால், அடுத்த தேர்தலில் தமிழ் நாட்டில் மட்டுமல்ல , இந்தியா முழுவதுமே காங்கிரசுக் கொள்ளையர்களுக்கு மக்கள் சங்கு ஊதிவிடுவார்கள்.

  5. ஒரு வழியாக தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தது. கூட்டணிமூலம் ஆதாயம் பெற்றுவந்த சில உதிரிகள் மக்களால் உதறி எறியப்பட்டனர். பங்கு கேட்டு முக்கிய கட்சிகளிடம் பிச்சை எடுத்து வாழ்ந்த சோனியா குடும்ப கட்சி, பாமக, விசி போன்ற குழுக்களை மக்கள் ஓரங்கட்டி அனுப்பிவிட்டனர்.

    கூட்டணி இன்றி தனித்தே வெல்லுமளவுக்கு , எம் ஜி ஆர் கட்சிதான் பெரிய கட்சி என்பதும் தெளிவாகி உள்ளது.டூஜி நாயகர்களான மத்திய ஆளுங்கட்சியும், அதன் லாலி பாடியான திமுகவும் விரைவில் அரசியல் அரங்கிலிருந்து மக்களால் விரட்டப்படுவார்கள்.

  6. “தி.மு.க.,வை துவக்கி வைத்தார் அண்ணாதுரை. அதை, வளரச் செய்தார் எம்.ஜி.ஆர்., அக்கட்சியை இருந்த இடம் தெரியாமல், மறைய வைத்தார் கருணாநிதி’ என, வரலாறு எழுதுவர் . இதுவே காலத்தின் தீர்ப்பு. அவர் கண்ணுக்கு முன்னே இது நடைபெறும்.

    தமிழகத்தில் புதிய எதிர்க்கட்சி ஒன்று விரைவில் தோன்றும்.

  7. இன்று திங்கள் கிழமை உச்ச நீதி மன்றத்தின் முன்னர் வரும் டூ ஜி ஜாமீன் வழக்கில் , ரிலையன்ஸ் ,போன்ற சில கம்பெனிகளின் அதிகாரிகளை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்க போவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

    நமது கேள்வி என்னவெனில் :-

    இந்த வழக்கில் பணம் கொடுத்தோர் மற்றும் பணம் வாங்கியோர் என்று இரு பிரிவினர் உள்ளனர். லஞ்சப்பணத்தை கலைஞர் டி வீ குடும்பம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பணம் வாங்கியதாக சொல்லப்படும் இயக்குனர் கனியின் ஜாமீன் மனுவை எதிர்க்காத சிபிஐ பணம் கொடுத்த கம்பெனி அதிகாரிகளை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்க போவதாக சொல்வது எப்படி என்று தெரியவில்லை.

    லஞ்சம் வாங்குபவருக்கு அதிக தண்டனையும், லஞ்சம் கொடுப்பவருக்கு குறைவான தண்டனையும் இருப்பது சரி. லஞ்சம் வாங்குபவருக்கு குறைவான தண்டனையும், லஞ்சம் கொடுத்தவருக்கு அதிக தண்டனையும் கொடுப்பது முறை ஆக இருக்க முடியாது.

    சிபிஐ தடுமாறுவது நன்கு தெரிகிறது .

    கந்த சஷ்டி

  8. கழகத்தை காட்டி கொடுத்துவிட்டார்கள் என்கிறார் பெரியவர் இன்றைய செய்தியில். மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம். நீங்கள் தான் சுத்த சுயம்பிரகாசர் ஆயிற்றே. ஏனய்யா தாங்கள் பயப்பட வேண்டும்?

    டூ ஜியில் தொடர்புடையோரை ( கனி மற்றும் ராசா மற்றும் ஏனையோர் ) நார்கோ அனலிசிஸ் சோதனை செய்து , பிரைன் மேப்பிங் மூலம் கொள்ளை பணம் எங்கே போனது என்று கண்டுபிடித்து மீட்கவேண்டும்.

    இவ்வளவு பெரிய கொள்ளை அடித்துவிட்டு எந்த மூஞ்சியுடன் பொதுமக்கள் முன்னர் நடமாடுகிறார்களோ தெரியவில்லை?

    இந்து பத்திரிகையில் உதவி அல்லது துணை ஆசிரியர் ஆக இருந்த ஒரு பெண்மணி அதுவும் பட்டமேற்படிப்பு படித்தவர் , இருநூற்று பதினாலு கோடி ரூபாய்க்கு ,( தன் மகள் இல்லை என்று நீதிமன்றத்தில் சொன்ன பெரியவரின் பேச்சை கேட்டு) ,தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று யார் காதில் பூச்சூட பார்க்கிறார்? இந்து பத்திரிகையில் வேலை பார்ப்பவர்கள் பெயரை கெடுப்பதற்கு இவரை போன்றோர் போதும்.

  9. வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க தயார் என்று கனிமொழி பத்திரிக்கையாளர்கட்கு செய்தி வழங்கியுள்ளார்.

    இவரின் தந்தை ஆட்சிக்காலத்தில் அரசு மருத்துவ மனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லாததால் , மாவட்ட மருத்துவ மனைகளிலேயே பாம்புக்கடி போன்ற விஷக்கடியால் பல ஏழை மக்கள் இறந்துள்ளனர்.

    அரசு கஜானாவிற்கு போகவேண்டிய பணத்தை கொள்ளைடிக்கும் அரசியல் வாதிகள் ( ஊழல் மூலம்), பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய மருத்துவ , சுகாதார வசதிகளில் குறைபாடுகள் ஏற்படுத்துவதன்மூலம் , பல ஏழைகளின் இன்னுயிரை மறைமுகமாக பறிக்க , ஒரு முக்கிய காரணமாக அமைகின்றனர்.

    டூஜி பணம் எங்கே போனது, என்ற விவரங்களை ஆ ராசாவும் , மு க கனிமொழியும் நீதிமன்றத்தில் உள்ளது உள்ளபடி , உண்மைகளை தெரிவித்து, அவர்கள் செலவு செய்ததுபோக மிச்சம் உள்ள பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து மன்னிப்பு பெறுவதே நல்லது. உண்மையை மூடி மறைத்து, தங்கள் உற்றார் உறவினரை காப்பாற்றுவதற்காக முயன்றால் , ஆயுள் தண்டனை பெற்று திகாரிலேயே நிரந்தர வாசம் செய்ய வேண்டியது தான்.

    ஜெயலலிதா டான்சி நிலத்தை அரசுக்கே திருப்பி ஒப்படைத்து, வழக்கில் விடுதலை பெற்றதுபோல, ஆ ராசா , மு க கனிமொழி இருவரும், லஞ்சப்பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுதலை பெறுவதே நல்லது. இல்லையென்றால், குடும்பம் முழுவதும் களி திங்க வேண்டியதுதான். சிந்திப்பார்களா?

  10. மகன் :- :அப்பா ஊழலுக்கு எதிராக எல்லோரும் இப்போது சற்று அதிகமாக கூப்பாடு போடுகிறார்களே அது ஏனப்பா ? ஊழல் செய்யாமல் அரசியல் வாதிகள் எப்படி வாழ முடியும்? நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் தான் , ஊழலை ப்பற்றி அதிகம் கத்துகிறார்கள் போலும்.

    ஊழலை செய்யாமல், கட்சி நடத்த எப்படி பணம் கிடைக்கும் ? அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு அழைத்து வரப்படும் ஆட்களுக்கு சாப்பாடு, மற்றும் மினரல் வாட்டர் ,டாக்டர் ( குவாட்டர் ) போன்றவை எப்படி கொடுக்கமுடியும்? இவ்வளவு செலவுகள் இருக்கும் போது , ஊழல் பண்ணாதே என்றால் என்ன நியாயம்?

    அப்பா:- நீ சொல்வதுபோல, அரசியல் கட்சிகளை நடத்த பணம் தேவைப்படுகிறது என்பது உண்மைதான்.இதற்காக அரசியல் தொழில் புரிவோர் , பலரிடமும் அன்பளிப்பாகவும், மிரட்டியும் பணம் பெறுகிறார்கள். ஆனால், வசூலிக்கும் பணத்தை தங்கள் கட்சிக்கணக்கில் சேர்ப்பது கிடையாது. கட்சி செலவுகள் போக, மிச்சம் பார்த்து தங்கள் சொந்தத்துக்கு எடுத்து , சொத்து சேர்க்கிறார்கள்.

    அதுபோக, காங்கிரசைப்போல, அகில இந்திய ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்கும் கட்சிகள், தாங்கள் கொள்ளைஅடித்த அரசுப்பணம் மற்றும் லஞ்சப்பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டுபோய் , திருட்டு வங்கிகளில் பதுக்கி விடுகிறார்கள். சுவிஸ் வங்கிகளில் இதுபோன்ற டெபாசிட் கோரப்படாமல் ஏராளம் உள்ளது.( வாரிசின்றி இறந்ததாலும், வாரிசுக்கு சொல்லாது , திடீரென்று விபத்துக்கள் மற்றும் கொலை மூலம் இறந்ததாலும்)

    அரசியல் தொழில் செய்வோர் ஒரு வீடு, ஒரு கார் என்று வைத்திருக்கும் அளவில் குறைந்த சொத்து சேர்த்தால் , அதைப்பற்றி யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால், அரசியல் தொழில் செய்வோர் நாட்டையே சுருட்டி, பல கோடிக்கணக்கில் சொத்து வாகுகிரார்கள். அரசியலில் வாரிசாக தங்கள் குடும்ப உறவுகளை , பழைய மன்னராட்சி முறையில் , முன்னிலைப்படுத்துகிறார்கள்.

    மகன்கள் , மகள் , பேரன்கள், என்று ஊழல் சலுகை பெறுவோர் எண்ணிக்கை நீளுகிறது. ஊழல் செய்ய திட்டமிட்டு, நாட்டையே சுருட்டி வெளிநாட்டில் முதலீடு செய்கிறார்கள் . எனவே, அரசுக்கு வரவேண்டிய வரிப்பணம் குறைந்து, மக்களுக்கு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக மருந்து கொடுக்ககூட அரசால் முடிவதில்லை. பல மாவட்ட மருத்துவ மனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் கூட இல்லாமல் மக்கள் பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு சிகிச்சை இன்றி இறக்கிறார்கள்.

    தங்கள் ஊழலை மறைக்க, மொழி, மத, ஜாதி சண்டைகளை உருவாக்கி, அதில் குளிர் காய்கிறார்கள். இவை தவிர, தேசவிரோத செயல்களை வளர்த்து விடுகிறார்கள்.மக்களை ஒற்றுமை படுத்தாமல், வெள்ளையர்களை போலவே, பிரித்து ஆளுகிறார்கள்.( divide and rule ). எனவே இந்த காங்கிரசு கொள்ளையர்களும், அவர்களின் கூட்டணி டூஜி, ஆதர்ஷ், விளையாட்டு கொள்ளையர்களும் , சிறைக்கு அனுப்பப்படும் வரை , இதுபோன்ற போராட்டங்கள் மறையாது.

  11. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அரசியல், சினிமா ,பத்திரிகை என்று அடாவடி அதிகமானதால் குடும்பக்கழக்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டது. அதை இனி சீர் திருத்தவேண்டுமானால், மஞ்சள் அந்த கட்சியிலிருந்து ஒதுங்கி, தன் குடும்ப உறுப்பினர்களையும் அரசியலிலிருந்து விளக்கிவைத்தால் தான் உருப்படும். ஆனால் மஞ்சளின் கட்டுப்பாட்டில் இன்று அவருடைய வீடு கூட இல்லை. கட்சியும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. கட்சியின் நீண்ட கால தொண்டர்கள் கட்சியைவிட்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னமும், காங்கிரசு என்ற சனியனுடன் கள்ள காதல் செய்யும் கருணாநிதி , கழகத்தை மீண்டும் உயிர்க்காதவாறு கருவறுத்து வருகிறார். வாழ்க அவர் தொண்டு.

  12. டூஜி ஊழலின் மத்திய மற்றும் மாநில குடும்பங்கள் கூண்டிலேற்றி திகார் சிறைச்சாலையில் கம்பிஎன்னும் வரை நாட்டில் நீதி கிடைக்காது.

    குட்டி ஊழல் மன்னர்கள் எல்லோரும் என்னய்யா நாங்கள் டூ ஜி அளவுக்கா கொள்ளை அடித்துவிட்டோம் என்று சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள்.

    இன்றைய செய்திதாளில் மூவாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்துள்ளது. இனிமேல் இதுபோல, சிறுதொகைகளை லஞ்சம் வாங்குவோரை உலகு மதிக்காது. டூ ஜியை மிஞ்சினால் தான் மதிப்பார்கள். சொந்த குடும்ப பகை காரணமாக , குடும்ப தொலைக்காட்சிக்காக இவ்வளவு பெரிய ஊழல் செய்த கருணா குடும்பம், அதற்கு உடந்தையாயிருந்த இத்தாலி குடும்பம் இரண்டும் நாட்டை விட்டே விரட்டப்படவேண்டும். ஏனெனில் இவர்களின் லஞ்சப்பணம் தான் உள்நாட்டில் முதலீடு செய்யாமல், வெளிநாடுகளுக்கு போய்விட்டதே. எனவே இந்த கொள்ளையர்களும், இந்தியாவை விட்டு வெளியேறுவது நல்லது. இந்த நாடு தப்பிக்கும்.

  13. மூன்று லட்சம் லஞ்சம் வாங்கிய சுக்ராமுக்கு அஞ்சு வருடம் கடுங்காவல் தண்டனை என்றால், இருநூற்று பதினாலு கோடி கனி/ சரத் /கலைஞர் டி வீ மற்றும் ஒரு லட்சத்து எழுபத்தாராயிரம் கோடி ஆ இராசா ஆகியோருக்கு என்ன ஆகப்போகிறதோ? வயிற்றை கலக்குகிறது.

    எண்பத்தாறு வயது சுக்ராமுக்கே , நீதிமன்றம் எவ்வித கருணையும் காட்டவில்லை. இவர்கள் கதி?
    சிவகடாட்சம்

  14. திரு ஆ ராசா , முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் நீதிமன்ற வளாகத்திலேயே அளித்துள்ள பேட்டியில், தான் வாயை திறந்தால் இன்னும் பலர் சிறைக்கு செல்வார்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே, இவர் சி பி ஐ விசாரணையில் முழு உண்மையையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. சி பி ஐ தன் கடமையை சரிவர செய்யவில்லை என்பது வெள்ளிடைமலையாக தெரிகிறது. நம் நாட்டு அரசுக்கு சேரவேண்டிய பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றவாளிகளை ஆ ராசா மூடி மறைக்கிறார். இது ஒரு தேசத்துரோகம் ஆகும்.

    எனவே, மாண்புமிகு உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட்டு, இந்த வழக்கில் ுற்றம்சுமத்தப்பட்டுள்ள அனைத்து நபர்களையும், நார்கோ அனலிசிஸ் மற்றும் பிரைன் மேப்பிங் சோதனை ( NARCO ANALYSIS AND BRAIN MAPPING TEST) செய்ய உத்தரவு போட்டு , உடனடியாக உண்மையை கண்டுபிடிக்கவேண்டும். இல்லையென்றால், உள்ளே போக வேண்டியவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு, ராசாவை ஜெயிலுக்குள்ளேயோ, அல்லது கோர்ட்டுக்கு வரும் போதோ, அல்லது சிறைக்கு திரும்பும்போதோ போட்டு தள்ளிவிட்டு , கேசை மூடிவிடுவார்கள். எனவே, இதனை உடனடியாக செய்யாவிட்டால், இந்த கேசுக்கு பாலூற்ற வேண்டியது தான்.

    மயில்வாகனன்

  15. முல்லை பெரியாறு விவகாரத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது : முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம்; முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக 1998ம் ஆண்டு நாள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தேன்; அந்த வழக்கில் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அணையின் நீர் தேக்கும் உயரத்தை 124 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; இதனை எதிர்த்து இதுவரை யாரும் தடை வாங்கவில்லை; அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தற்போது அணை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது; இதே போன்று கூடங்குளம் அணுமின் நிலையம் வர கூடாது என சிலர் பிரச்னை செய்து வருகின்றனர். முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; தமிழக, கேரள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது; சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு
    தேவையற்றது; அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்; 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எந்த அளவிற்கு குற்றம் செய்துள்ளாரோ அதே அளவிற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் செய்துள்ளார். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

    இதற்கு மூத்த தமிழறிஞர் பதில் அளிப்பாரா?

  16. ராஜ்ய சபா தேர்தலில் மீண்டும் தன் மகளை எப்படியாவது நிறுத்தி , பல கோடிகளை அள்ளித்தெளித்து , ராஜசபா எம் பி ஆக்கிவிடமுடியுமா என்று மஞ்சளார் விளையாடி வருகிறார். தன்னுடைய மகளை நிறுத்தாமல் , கட்சியில் வேறு யாரையாவது நிறுத்தி இருந்தால் , கட்சியில் உள்ள இவர் குடும்பத்தை சேராதவர்கள் சிறிது ஈடுபாடு காட்டி எதிர்காலத்திலாவது கட்சியை வளர்ப்பார்கள் . இப்போதும் தன்னுடைய மகளையே முன்னிறுத்துவதால், திமுகவுக்கு ஆழமான குழியை வெட்டிவிட்டார் பெரியவர். எப்படிப்பார்த்தாலும் திமுக அழிவது நாட்டுக்கே நல்லது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *