இந்தியாவிலி​ருந்து வந்த ஆப்பிள்

அமெரிக்காவில் ஆரேகான் மாநிலத்தில் உள்ள ரீட்ஸ் பல்கலை கழகத்தில் (Reeds College – Portland, Oregon) பெற்றோரின் விருப்பத்திற்காக கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவனுக்கு படிப்பில் நாட்டமில்லை. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும், கம்யூட்டர்கள் பற்றிய அபார ஞானமும், நல்ல திட்டமிடும் திறனும் இருந்தாலும் கல்லூரி படிப்பு ஏனோ பிடிக்கவில்லை. வெளியேறி வேலைகள் தேடிகொண்டிருந்த அந்த இளைஞனுக்கு தீடிரென எழுந்த எண்ணம் ஆன்மீகத்தின் உலக தலைநகரான இந்தியாவிற்கு போகவேண்டும் என்பது.

அந்த இளைஞனுக்கு வார இறுதி நாட்களில் இலவச உணவு வழங்கி வந்தது ஹரே கிருஷ்ணா கோவில். அங்கு ஒரு நண்பர் குறிப்பிட்டுச் சொன்ன மகத்தான இந்திய பாபாவை சந்தித்து ஆன்மீக வாழக்கைக்கு வழிகேட்டு தீட்சை பெற்வேண்டும் என்பது அந்த இளைஞனுக்கு திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டிருந்த எண்ணம். தனக்கு பகுதி நேரவேலை தந்த கம்யூட்டர் நிறுவனத்திடம் தன் இந்திய பயணத்திற்கு உதவி செய்யும்படி கேட்கிறான். மறுத்த நிறுவன அதிபர் ஜெர்மனிக்கு போய் ஒரு வேலை செய்வதானால் இந்தியா அனுப்புவதாகச் சொல்லுகிறார்.

அந்த வாய்ப்பை ஏற்று, ஜெர்மனியில் வேலை செய்துமுடித்துவிட்டு, இந்திய பயணத்தில் நாட்டமும் ஆன்மீகத்தில் ஆர்வமும் இருந்த உடன் வந்த அமெரிக்க நண்பருடன் குருவைத்தேடி, தனது 19 வயதில் 1974ம் ஆண்டு இந்தியா வருகிறான். குருவின் ஆஸ்ரமம் எங்கே இருக்கிறது எனறு தெரியாமல் பல இடங்களை சுற்றிப் பார்த்தபின் நைனிடால் அருகே உள்ள நீம்கரோலி பாபாவின் கைநச்சி ஆஸ்ரமத்தை அடைகிறான். அங்கு அவன் அறிந்த அதிர்ந்த அதிர்ச்சியான விஷயம் அவன் தேடி வந்த பாபா சில வருடங்களுக்கு முன் கடவுளுடன் கலந்துவிட்டார் என்ற செய்தி.

ஏமாற்றமடைந்தாலும் அந்த சூழ் நிலை பிடித்திருந்ததால் அங்கு சில நாள் பாபாவுடன் வாழ்ந்த துறவிகளுடன் தங்கி பலரிடன் பேசுகிறான். அந்த கால கட்டத்தில் ஆன்மீக தேடல் என்ற பெயரில் ஹிப்பிக்களின் புதிய கலாசாரம் பரவிக் கொண்டிருந்த்த்து. அழுக்கான உடை, சீராக இல்லாத நீண்டமுடி, கிடைப்பதை சாப்பிடுவது, போதைப் பொருட்கள் என்று உலகின் பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்த இவர்களில் பலர் இந்தியாவிற்கு வந்து ஏதாவது ஒரு மடத்தில் சாமியார்களுடன் வாழ்வதும் பின்னர் தீட்சை பெற்று திரும்புவதும் நடந்து கொண்டிருந்தது. பல இடங்களில் இவர்களை ஏமாற்றி நம் ஆட்கள் பணம் பறிப்பதும் நடந்து கொண்டிருந்தது.

தானும் தன் நண்பரும் அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றும், உண்மையில் பாபாவை தேடி வந்ததையும், ஆன்மிக வாழக்கைக்காக அவரின் ஆசி வேண்டி வந்ததையும் ஆஸ்ரம வாழ்க்கையின் போது நெருக்கமான ஒரு துறவியிடம் பேசுகிறான். தந்தை யாரென்று சொல்லப்படாமல் தாயால் தத்து கொடுக்கபட்டதையும், அன்பாக வளர்த்த அவர்களின் ஆசைக்காக கல்லூரி போனதையும், படிக்க முடியாமல் போனதையும், தனக்கு சாதாரண மனித வாழக்கை பிடிக்காமல்தான் அங்கு வந்திருப்பதையும் சொல்லுகிறான்.

பொறுமையாகக் கேட்ட அந்தத் துறவி மறு நாள் சந்திக்கச் சொல்லுகிறார். மறுநாள் காலையில் “ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார். அந்த ஆஸ்ரமத்தில் பாபா இருக்கும்போது பார்க்க வருபவர்களுக்கு அவர் தருவது ஆப்பிள் தான். ஏமாற்றமடைந்த அந்த 1974ல் இளைஞன் அமெரிக்கா திரும்புகிறான்.

அந்த இளைஞன் தான் பின்னாளில் கணினித் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் (1955-2011). தமது முதல் கனவான புதிய வகையிலான கணினியை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல், இசை, தொலைபேசி, கணினி என்று மூன்று தொழில்நுட்பங்களையும் கையடக்க அளவில் உலகெங்கும் கொண்டு சென்ற ஐபாட், ஐபோன், ஐபேட் ஆகியவற்றையும் வடிவமைத்தது அவர் உருவாக்கி வழிநடத்திய நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் பெயர் ஆப்பிள். “இந்தியாவிற்கு ஸ்டீவ் செய்த ஆன்மீகப் பயணம் அவர் ஆப்பிளை துவங்க ஊக்கமளித்த முக்கிய காரணம்” என்கிறார் அவரது வாழக்கை சரிதத்தை அவர் அனுமதியுடன் எழுதிக் கொண்டிருக்கும் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வால்ட்டர் ஐசக்சன். புத்தகம் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கிற்து.

2011 அக்டோபர் 5ம் தேதி, இவர் மரணமடைந்த போது, உலகின் அத்தனை பெரிய தினசரிகளும் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக இவரது மரணச்செய்தியை வெளியிட்டு, தலையங்கள் எழுதி கெளரவித்திருந்தன. பல நாட்டு தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செய்தி அனுப்பியிருந்தனர். கைநச்சி மடத்தின் நிர்வாகி ஜோஷியும் அதில் அடக்கம். பாபவை தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தபோது மடத்திலிருந்தவர் இவர்.

1974ல் இந்தியாவில் இருந்து மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம் இருந்தது. இது அவரது பல செயல்களில் தெரிந்தது. உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே. படித்த புத்தகங்களில் பெரும்பாலானவை இந்து,பௌத்த ஞானம் தொடர்பானவை.

கடந்த 7 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடி தோற்றவரின் இறுதி நாட்கள் பற்றி வரும் செய்திகள் மனதைத் தொடுகின்றன. குடுமப்த்தினருடன் கழித்த அந்த நாட்களில் வீட்டின் பிராத்தனை அறையில் நீண்ட நேரம் செலவிட்டிருக்கிறார். பொதுவாக அமெரிக்கர்கள் வீட்டில் பிராத்தனை அறையிருக்காது. இவரது பிராத்தனை அறையில் கிருஷ்ணர் போன்ற இந்து கடவுள்களின் படங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரண இரங்கல் செய்தியில், “மாற்றி யோசிப்பதற்கான தைரியத்தையும் அதை செயல்படுத்தும் துணிவையும், உலகை மாற்ற் முடியும் என்ற தன்னம்பிக்கையையும், சாதிக்கும் திறமையையும் ஒருங்கே கொண்ட மிகப்பெரிய அமெரிக்க சாதனையாளர்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அமெரிக்கருக்கு அதை சாதிக்க இந்த இந்திய மண்ணும், இங்கு பிறந்த இந்து,பௌத்த மத தத்துவங்களும் உதவியிருக்கின்றன.

13 Replies to “இந்தியாவிலி​ருந்து வந்த ஆப்பிள்”

  1. ஸ்டீவ் ஜாப்ஸ் உடலை பிரிந்த போதும் அவரது ஆன்மா அவரை போன்ற துடிப்பும் தேடலும் உள்ள பிற நபர்களுக்கு நிச்சயம் வழிகாட்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  2. ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய ஹிந்து முகத்தை வெளிப்படுத்துகிற அற்புதமான கட்டுரை.. இக்கட்டுரை கட்டாயமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்யப்பெற வேண்டும். உலகமே ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்கிற போது, இக்கட்டுரை குறிப்பிடும் செய்தி மிக முக்கியமாகத் தெரிகிறது.. கட்டுரை தந்த ஆசிரியருக்கு மிக்க நன்றிகள்..

    கட்டுரையை உறுதிப்படுத்துகிற சான்றுகள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சொல்லப் பெற வேண்டியது, என்று கருதுகிறேன். படங்களும் அவ்வாறே.. கைநச்சி மடம் பற்றிய விவரங்களும் அறிய ஆவலாயிருக்கிறேன்.

    உண்மையில.. இக்கட்டுரையைப் படிக்கிற போது பிரமிப்பும்.. மகிழ்ச்ச்சியும்.. உண்டாகின்றன.. இக்கட்டுரை தகுந்த ஆதாரங்களுடன் உலகளாவிய மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

  3. உலகில் உயர்ந்த பண்பிதுவே
    உணர்த்திடுவோம் உலகினுக்கே ……….

  4. ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி அறிந்திராத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி சில தகவல்களை நகைச்சுவையாக https://pagadu.blogspot.com/2011/10/blog-post_06.html இந்த தளத்தில் இப்னு ஷகிர் அவர்கள் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்கள். படித்து இன்புறுங்கள்.

  5. Steve Jobs is undboubtably a great innovator of our times. But the irony is, when he died the whole world mourned. But the next week, another great person of our times died and no one noticed. Dennis Ritchie, the man who invented the programming languge ‘C’ and the OS ‘Unix’, which paved way for almost all technical breakthrough in the past two decades, died and there was not even a front page news. It was on ‘C’, people like Steve Jobs, Bill gates et al built their empire.

    https://economictimes.indiatimes.com/tech/software/dennis-ritchie-the-man-who-created-unix/articleshow/10395985.cms

  6. Nice Article, but few doubts

    1) Jobs came from America, Indian soil and Hinduism has given him such great life, why no one in India attained this position
    2) So many people would have come to that place before and after Jobs, why only one Jobs has achieved this position, why not others?

  7. Very funny. How much credit one can take of others success? Jobs india experience is entirely negative and he was disappointed with the ‘air of holiness’ that he expected and the actual ground reality.

    //Jobs came from America, Indian soil and Hinduism has given him such great life// His achievement has nothing or very little to do with india. Lets stop taking credit for others achievements.

    You may check the unbiased op.ed from the hindu. https://www.thehindu.com/opinion/op-ed/article2515312.ece

  8. @naveed,

    Then why does Steve jobs gave so,much of donations to “HARE KRISHNA”???? and not to Islamic Research foundation or other religious organization ????can you vomit your answer\????

  9. @ naveed:
    and more funny jokes on ibnu zakir’s blog…that;s on Mr.raja’s comment

  10. What Mr. Navneed said is true. Steve Jobs was NOT fascinated by India or its monks. It is true that he went to ISKCON because that is where he got free food, after a walk of about 7 miles.

    He did NOT name Apple because he got that fruit from one of the Swamiji’s. He named it based on the greatest discovery of Newton, the force of gravity discovered through the falling apple. His company’s old logo is just the same, falling Apple besides Newton. Steve said that Thomas Alwa Edison did much more than what a Babaji and Max Muller put together!

    Hindu Dharma does not need any such false glorification. The mere fact that computers stand today is because of the zero (0) invented by Indians. Such false gratifications is not at all necessary.

    @ கொழும்பு தமிழன்
    Please try to maintain some dignity when commenting back. If you have validity in your data, then clarify it for the betterment of all. Instead, using words based on your intellectual capability will only put you in to the limelight of ignorance. What Mr. Navneed said is true indeed.

    Why Steve didn’t donate for IRF? He is not known to have donated for Christian missionaries as well. Who knows the reason for why he did and why he didn’t? His guru was a Buddhist Monk who said that he has much greater work to be done than becoming a monk and NOT an Indian guru for your kind information. You can find this truth yourself with a little Googling. Steve is not known for his great humanitarian qualities either and is known to be an arrogant and pretty straight forward person, known to have parked his car often in the parking place of physically challenged. The cancer changed that attitude a bit where he was humbled by others.

  11. ஸ்டீவ் ஜாப்ஸ் தன் காதலியுடன் ஆப்பிள் தோட்டத்தில் அடிக்கடி சந்தித்து வந்ததால் அந்த ஞாபகத்திற்காக ஆப்பிள் என்று தன்னுடைய நிறுவனத்திற்கு பெயரிட்டதாக அவரை பற்றிய ஒரு புத்தகத்தில் படித்தேன்.

  12. ஆர்தர் ஆஸ்போர்ன் என்ற ஆங்கிலேய எழுத்தாளர் பகவான் ரமண மகரிஷியின் பக்தர். அவர் ரமணர் குறித்துப் பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். அவரது சுயசரிதை கூட ரமணாஸ்ரமத்தில்தான் கண்டெடுக்கப்பட்டது.

    அவரது புதல்வர் ஆடம் ஆஸ்போர்ன். தாய்லாந்தில் பிறந்து பலவருடங்கள் இந்தியாவில் ரமணாஸ்ரமத்திலேயே வளர்ந்தவர். பின்னாளில் அமெரிக்காவில் குடிபெயர்ந்த அவர் கம்ப்யூட்டர் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுப் பிரபலமானவர். இவரும் ரமண பக்தரே.

    இரண்டாம் உலகப் போரில் போர்க்கைதிகளாகப் பிடிபட்டு விடுதலையான ஜே.ஜே. ரீட் என்பவரும் இதே காலத்தில் ரமணாஸ்ரமத்தில் தஞ்சமானவர். ஹம்சானந்தா என்ற பெயரில் இந்துத் துறவியாக வாழ்ந்து மறைந்தவர். இப்படி வாழ்வின் விளிம்பு நிலைக்கு சென்றவர்கள் மன அமைதிக்காக வந்த இடம் இந்தியா. ஹம்ஸாந்தா எனது நண்பர். அவர் என்னிடம் ஆஸ்போர்ன், வாண்டர்லின்க் ஆகியோர் ரமண பக்தர்கள் என்றும், ஸ்டீவ் ஜாப்ஸ் ரமணாஸ்ரமம் வந்ததாகவும் அவர் ரமண பக்தர் என்றும் கூறி இருக்கிறார்.

    ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்த காரணம் ரமணாஸ்ரமம் வரவே. ரமணாஸ்ரமம் குறித்து அவருக்குச் சொன்னவர் வாண்டர்லிங்க் என்பவர், அவர் எழுதி இருப்பதை இங்கே காணலாம்.
    https://the-wanderling.com/steve_jobs.html

    ஆக, ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தது குறித்துப் பிறர் எழுதுவதில் / நவீத் கூறுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *