ஹிந்து என்னும் சொல்

சொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

– மகாகவி பாரதி

பெங்களூரில் எங்கள் பகுதியில் சில வருடங்களாகவே ஒரு அறக்கட்டளை கிருஷ்ண ஜெயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.  சமூகசேவை, கலை நிகழ்ச்சிகள், சுயதொழில் வகுப்புகள் ஆகிய துறைகளில் இயங்கும் அறக்கட்டளை அது. விழா சமயத்தில் இசைக் கச்சேரிகள், பஜனைகள் ஆகிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடக்கும். இதற்காகவென்றே நேர்த்தியான ஒரு நல்ல கலையரங்கத்தையும் அந்த அமைப்பினர் உருவாக்கியுள்ளார்கள்.

இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தியின் போது பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சியையும், பஜனைப் பாடல்கள் போட்டியும் நடத்தலாம் என்று நானும் எனது நண்பர்கள் சிலரும் இணைந்து திட்டமிட்டோம். அறக்கட்டளை நடத்தும் விழா ஏற்கனவே பிரபலமாக இருப்பதால், அந்த அரங்கிலேயே அந்த நிகழ்ச்சிகளுடன் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்து, அந்த அமைப்பாளர்களை அணுகினோம். அமைப்பாளர்கள் எங்கள் ஆர்வத்தை சிலாகித்துப் பாராட்டி,  யோசனையை உடனடியாக ஏற்றுக் கொண்டார்கள். முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்றார்கள். அழைப்பிதழ் வரைவில் A Quiz on Hindu culture and heritage என்று என் நண்பன் எழுதினான். அதுவரை கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த அமைப்பாளர் கொஞ்சம் முகம் கறுத்தார். பதட்டமடைந்து, ”Indian culture என்று போடுங்க சார்” என்றார். ”Indian culture என்றால் அதில் பாலிவுட் சினிமா, பாங்கரா நடனம் எல்லாம் வந்து விடும் சார், மாணவர்கள் முற்றிலும் வேறு விதமான எதிர்பார்ப்புடன் வருவார்கள், குழப்பம் ஏற்படும். Hindu culture தான் ஏற்ற தலைப்பு” என்றான் என் நண்பன்.

அமைப்பாளர் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல ஆகியது. ”எந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்பீர்கள்?” என்றார். ”ராமாயணம், மகாபாரதம், கோயில்கள், புராணங்கள்…” என்று நான் பட்டியல் போட, ”விவேகானந்தர், நாராயண குரு, ராமானுஜர் போன்ற ஞானிகள், ஆயுர்வேதம், வேத கணிதம்..” என்று என் நண்பன் சேர்ந்து கொண்டான். “சரி, அது எல்லாவற்றையும் அப்படியே போடுங்களேன்” என்றார் அமைப்பாளர்.  “சார் அப்போ அழைப்பிதழே மூன்று பக்கத்துக்குப் போகும்” என்று புன்னகைத்தான் என் நண்பன். ”நீங்களும் நானும் ஹிந்து தானே சார், நீங்கள் இங்கு கொண்டாடிக் கொண்டிருப்பது கிருஷ்ண ஜெயந்தி என்ற ஹிந்துப் பண்டிகையைத் தானே .. “ என்று எங்கள் குழுவில் இருந்த இன்னொரு நண்பன் உணர்ச்சிகரமாகக் கேட்க ஆரம்பிக்க, ஆமாம் ஆமாம் என்று தலையசைத்தார் அமைப்பாளர்.. “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அப்படிப் போட்டால்…” என்று இழுத்தார்.

அப்போது தான் அங்கிருந்த விளம்பரப் பலகையைக் கவனித்தேன் “நன்கொடைகளுக்கு முழுமையான வருமான வரி விலக்கு..” என்றெல்லாம் நீளமாக எழுதியிருந்தது. நண்பர்களைக் கையமர்த்தினேன். ”சார்,  A Quiz on our glorious culture and heritage என்று போட்டு விடலாம்” என்றேன். ஏகமனதாக ஒத்துக் கொண்டார். எல்லாம் மங்களகரமாக முடிந்தது. இந்த தேசத்தின் போலி மதச்சார்பின்மைப் பாரம்பரியம் பூச்சாண்டி காட்டி அந்த அறக்கட்டளை நடத்துபவரை எந்த அளவு ”எச்சரிக்கையுடன்” நடந்து கொள்ள வைக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.

தான் ஹிந்து என்பதில் இவருக்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அதை வெளிப்படுத்த வேண்டுமா, எந்த வகையில் வெளிப்படுத்துவது என்பதில் சில தயக்கங்கள். ஆனால் ”நான் இந்துவா?” என்று கேள்வி கேட்டு ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியவருக்கு, அதிலேயே அடிப்படை சந்தேகம் இருந்திருக்கிறது. அந்த சந்தேகத்தையும் தெளிவிக்கும் வகையில் ஜெயமோகன் ஒரு அருமையான பதிலை அவருக்கு அளித்திருக்கிறார்.

********

பொதுவாக பலர் நினைப்பது போல, ஹிந்துக்கள் தங்களை “ஹிந்துக்களாக” உணரத் தொடங்கியது பிரிட்டிஷ் காலகட்டத்தில் தான் என்பது உண்மையல்ல.

வரலாற்று ரீதியாக, சிந்து நதிக்கு அப்பால் இருந்த பிரதேசத்தையும் அங்கு வாழும் மக்களையும், அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் குறிக்க, அந்த பூகோளப் பிரதேசத்திற்கு வெளியே இருந்த பண்டைய சுமேரியர், பாரசீகர், கிரேக்கர் ஆகிய மக்களால் தான் ஹிந்து என்ற பதம் முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது. ஆனால் இது அந்த அன்னிய மக்கள் உருவாக்கிய பதம் அல்ல. ரிக்வேத ரிஷிகள் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஸப்த ஸிந்து என்றே அழைத்தனர். அந்தச் சொல்லே ஹப்த ஹிந்து என்று பாரசீக மொழியில் உருமாற்றம் அடைந்தது.  சரஸ்வதி = ஹரஹ்வதி, அஸுர் = அஹுர் என்று பல சம்ஸ்கிருதச் சொற்கள் இதே ரீதியில் பண்டைய பாரசீக மொழியில் உருமாற்றம் பெற்றுள்ளன. இந்த சொல் உருமாற்றத்திற்கான அகச்சான்றுகள் நமது புராணங்களிலேயே உள்ளன.

சம்ஸ்கிருத பாஷை அன்னிய பிரதேசங்களில் அங்கு வாழ்வோரையும் இன்புறச் செய்யுமாறு ”யாவனீ”யாக, மிலேச்ச வாணி”யாக மாறுவது பற்றி பவிஷ்ய புராணம் இப்படிக் குறிப்பிடுகிறது-

சம்ஸ்க்ருதஸ்யைவ வாணீ  து பா⁴ரதம் வர்ஷமுஹ்யதாம் |
அன்யே க²ண்டே³ க³தா ஸைவ ம்லேச்சா² ஹ்யானந்தி³னோப⁴வன்  ||

ஜாதுஸ்தா²னே ஜைனசப்³த³: ஸப்தஸிந்து⁴ஸ் ததை²வ ச |
ஹப்தஹிந்து³ர் யாவனீ ச புனர்க்ஞேயா கு³ருண்டி³கா ||

(பவிஷ்ய புராணம், பிரதிஸர்கபர்வம், 5ம் அத்தியாயம்)

கிரேக்கர்கள், ஹூணர்கள், சகர்கள், டார்டார்கள், பலூச்சிகள் போன்று பாரதத்தின் வடமேற்கு எல்லைப் புறத்துக் குடியேறிகளும், தோற்கடிக்கப் பட்ட படையெடுப்பாளர்களும் இந்து சமுதாயத்தில் ஒன்றிணைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் (பொ.பி 1,2,3,4ம் நூற்றாண்டுகள்) மேற்கண்டது போன்ற சுலோகங்கள் புராணங்களில் காணக் கிடைக்கின்றன.  பின்னர் இஸ்லாமியப் படையெடுப்புகள் தொடங்கிய போது, ஹிந்துக்களாலேயே தங்களை, தங்களது வாழ்க்கை முறையை படையெடுப்பாளர்களான அன்னியரிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக ஹிந்து என்ற சொல் புழக்கத்தில் வந்தது.  பாரதத்தின் நிலப்பகுதியை ஹிந்துஸ்தானம் என்ற சொல்லால் பார்ஹஸ்பத்ய சாஸ்திரம் (பொ.பி 7ம் நூற்றாண்டு) என்ற நூல் குறிக்கிறது. இதே காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், ஹிந்து என்பதை சீன மொழியில் Yindu என்று உருமாற்றி பதிவு செய்துள்ளார். இன்று வரை சீனமொழியினர் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது. பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.  ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர்தாசர், குருநானக், தாதூ தயால், நாபா தாசர் ஆகிய பக்தி இயக்கக் கவிஞர்களின் பாடல்களில் ஹிந்து, துரக் ஆகிய சொற்கள் முறையே இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் பயின்று வந்துள்ளன. பாரதத்தின் கிழக்குப் பகுதியான வங்கத்தைச் சேர்ந்த தர்க்க சாஸ்திர நூல் ஒன்றில் “சிவ சிவா, அவன் ஹிந்துவும் அல்ல யவனனும் அல்ல” (சிவ சிவ ந ஹிந்துர் ந யவன:) என்ற சொற்றொடர் காணப் படுகிறது.

தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது விஜய நகர சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது. ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “ஹிந்துஸ்தான் பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன. இவரது ஆசியுடன் சத்ரபதி சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது. ”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் கவிராஜ பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.  தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே முதன் முதலில் ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது.

சீக்கிய குருமார்களின் பல பாடல்களில் தங்களது அற நெறியை ஹிந்து தர்மம் என்று குறிப்பிடுகின்றனர். குரு தேக்பகதூர் அவர்களை இஸ்லாமிய மத அதிகார வர்க்கம் அச்சுறுத்திய போது, அவர் “என்னுடையது ஹிந்து தர்மம்; உயிரினும் மேலாக இதை நேசிக்கிறேன்” (uttar bhanyo dharam ham hindu, ati priyako kima kare nikandu) என்று பதிலிறுத்தார். சீக்கிய மதத்தை வீரர்களின் திருக்கூட்டமாக மாற்றியமைத்து அதற்கு காலசா என்று பெயரிட்ட குரு கோவிந்த சிங் (1666 – 1708) அந்தப் பிரகடனத்தையே ஹிந்து என்ற சொல்லால் அலங்கரிக்கிறார் –

sakal jagat mein khAlsA panth gAje
jAge dharam hindu sakal bhaND bhAje

ஹிந்து தர்மம் வாழ்வதற்காகவும், பொய்மைகள் அனைத்தும் அழிவதற்காகவும்
உலகெங்கும் காலசா என்ற மார்க்கம் செழிக்கட்டும்

இவ்வாறு, 6ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும்  சமுதாயத்தையும் குறித்திருக்கிறது.  அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

பரம்பொருளைப் போன்றே வரம்பு கடந்த தங்கள் மதத்திற்கு இப்படி ஒரு பெயரிட்டு அழைப்பதை 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கூட பல இந்து சமயப் பெரியோர்களால், அறிஞர்களால் முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.  “ஹிந்து என்ற சொல்லை விட வைதிகன், வேதாந்தி போன்ற சொற்கள் பொருத்தமானவை” என்று சில உரைகளில் விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீஅரவிந்தர்,  திலகர், பாரதியார் ஆகியோரது உரைகளிலும் எழுத்துக்களிலும்  ஹிந்து யார்? ஹிந்து தர்மம் என்றால் என்ன?  போன்ற  பீடிகைகளும், விளக்கங்களும்  ஒரு சம்பிரதாயம் போலவே இடம்பெறும். டாக்டர் ராதா கிருஷ்ணன், காஞ்சி பரமாசாரியார்  உரைகளிலும் இத்தகைய பீடிகைகளைக் காணமுடியும். பல நூற்றாண்டுகளாக அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்டிருந்த இந்து சமுதாயம், பல்வேறு அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு ஆட்பட்டு, பின்னர் நவீன காலகட்டத்தில் தனக்குரிய பொது அடையாளத்தைத் தேடிக் கண்டடைவதில் உள்ள சிக்கல்களை சமன்வயப் படுத்தும் முயற்சியாகவே அந்தப் பீடிகைகள் அமைந்தன. நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சியின் ஊடாக, ஹிந்து என்ற அடையாளத்தை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த ஹிந்துக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  இன்று வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு  இவைகளை நாம் படிக்கும்போது தான் இந்த விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது.

ஒரு மனிதனுக்கு பெயர் என்று ஒன்று இருப்பது எதற்காக? பிறர் அழைப்பதற்காகத் தானே? தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கு அவனுக்குப் பெயர் அவசியமில்லையே.  உலகளவில் தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளுதல் என்ற அடிப்படையிலேயே நமது மதத்திற்கு ஹிந்து என்ற பெயர் உருவாயிற்று (ஆராய்ந்து பார்த்தால், எல்லா மதங்களுக்கும், தேசங்களுக்கும் பெயர்கள் இந்த வகையில் தான் உருவாகியுள்ளன, இந்து மதம் மட்டும் இதில் விதி விலக்கு அல்ல). ஆனால் அதனாலேயே அந்தப் பெயர் ஆசாரக் குறைவானதாகவோ, அல்லது ஒட்டாததாகவோ ஆகி விடாது. அப்படி எண்ணுவது ஒரு குருட்டுத் தனமான, நடைமுறைக்கு ஒவ்வாத தூய்மைவாதம் அன்றி வேறில்லை. மாறாக, வரலாற்றின் போக்கில் உருவாகி, வளர்ந்து, திரண்டு வந்த ஹிந்து என்ற பெயரே இயல்பானதும், வேர்கொண்டதும் ஆகும்.

*******

ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை (religion), கலாசாரத்தை (culture),  தத்துவ ஞான மரபை (philosophy), வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (civilization) குறிக்கிறது. இவற்றை ஒட்டுமொத்தமாகக் குறிக்க ஹிந்து என்ற சொல்லே மிகமிகப் பொருத்தமானதும் கூட. சனாதன தர்மம், வைதிக தர்மம், வேதாந்தம் போன்ற சொற்கள் தம்மளவில் குறுகலான பொருள் கொண்டவை.  தர்மம் என்ற பொதுச் சொல் மிகப் பரந்தது. இந்தியப் பரப்பில் தோன்றிய இந்து மதம், பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய நான்கையும் சேர்த்து தர்ம மதங்கள் (Dharmic religions) என்று குறிப்பிடும் வழக்கமும் சமீப காலத்தில் உருவாகி வருகிறது.

இது குறித்து Who is a Hindu என்ற புத்தகத்தில் கொய்ன்ராட் எல்ஸ்ட் மிக அருமையாக ஆராய்ந்திருக்கிறார். இப்புத்தகத்தில் எல்ஸ்ட் முன்வைக்கும் கருத்துக்கள் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை இங்கு தருகிறேன்.

– முதலில் ஹிந்து என்ற சொல்லுக்கு திலகர்,அரவிந்தர்,சாவர்க்கர் போன்ற சித்தாந்திகள் ஒவ்வொருவரும் தரும் வரையறைகளை அலசுகிறார். வைதீக இந்துமதம், புராண இந்துமதம் என்ற பகுப்பில் சமயக் கொள்கைகளை வகைப் படுத்துகிறார். இந்து சமூகத்தில் சாதியின் பங்கு குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும் வரலாற்றுப் பார்வையுடன் மதிப்பீடு செய்கிறார். தலித்கள் இந்துக்களே என்று அசைக்க முடியாத வாதங்களை முன்வைக்கிறார்.

– அடுத்து சட்டரீதியாக “ஹிந்து” என்பதன் வரையறை பற்றிப் பேசுகிறார். இந்தியாவின் இந்து சிவில் சட்டங்கள் இந்துக்களோடு கூட சமண,பௌத்த,சீக்கிய மதத்தவர்கள் விஷயத்திலும் அமுல் படுத்தப் படுகின்றன. இதன் பின்னணியையும், இந்து மதம் தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகளையும் பற்றி விவரிக்கிறார்.

–   பின்னர், ஹிந்து மத சீர்திருத்தவாதிகள் & அவர்களது இயக்கத்தினர் ஹிந்துக்களா? இந்தியாவின் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடிகள் இந்துக்களா? சமணர்கள், சீக்கியர்கள்,பௌத்தர்கள், அம்பேத்கார் உருவாக்கிய நவ-பௌத்தர்கள் ஆகியோர் ஹிந்துக்களா? என்று ஒவ்வொரு கேள்வியையும் எடுத்துக் கொண்டு தனித்தனி அத்தியாயங்களில் விரிவாக ஆராய்கிறார். ஒவ்வொன்றிலும் அவர் அளிக்கும் முடிவுகள் மிகவும் அறிவுபூர்வமாகவும், நடைமுறை அம்சங்களையும் கணக்கில் கொள்வதாகவும் உள்ளன.

– இந்துமதம் உலக அளவில் இன்றும் செழித்து வாழும் பாகன் (pagan) மதமா?  இந்துமதம் செமிட்டிம் மதங்கள் போல ஆக்கப் படுகிறதா? இந்துத்துவம் என்றால் என்ன என்பது குறித்த விவாதங்களுடன்  நூல்  நிறைவடைகிறது.

நூல் முழுவதையும் இணையத்திலேயே இங்கு படிக்கலாம்.

ஹிந்து மதம், ஹிந்து அடையாளம் பற்றி விவாதிக்க, புரிந்து கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கற்றுத் தெளிய வேண்டிய நூல் இது. ஆனால் நம் சூழலில் ஹிந்து அடையாளம் பற்றி விவாதிக்க வருபவர்கள் பொத்தாம் பொதுவான அவியல் கருத்துக்களை ஒரு குறுகிய தளத்தில் முன்வைப்பவர்களாக இருக்கிறார்களே அன்றி,  இது குறித்து ஏற்கனவே எழுதப் பட்டுள்ள காத்திரமான நூல்களைப் படித்து விட்டுப் பேசுவதில்லை என்பது துரதிர்ஷ்டமான விஷயம்.

”இங்கிருந்து தொடங்குவோம்” என்ற கட்டுரையில் ஜெயமோகன் எழுதுகிறார் –

இப்போது நாம் அடிக்கடிக் கேட்கும் ஒரு வரி உண்டு, இந்திய சிந்தனை என்று ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்று ஒன்று இல்லை. அதெல்லாம் வெள்ளைக்காரன் வந்து உருவாக்கியது. பல தளங்களில் இந்த கூச்சல் எழுந்துகொன்டே இருக்கிறது. இந்தக் குரல் பெரும்பாலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் தயாரிக்கப்பட்டு நமக்கு அனுப்பப்படுகிறது … இந்தக்குரலை எவர் எதிரொலி செய்கிறார்களோ அவர்களுக்கே இந்தியாவில் இன்று வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். அவர்களை மேலைநாட்டு பல்கலைகள் அழைத்து கௌரவிக்கும். பட்டங்களும் நிதிக்கொடைகளும் அளிக்கும்…

உண்மையில் அப்படித்தானா? உதாரணமாக இந்து ஞான மரபு என்ற ஒன்று எப்போதிருந்து இருக்கிறது?..  நமக்கு எப்போது முதல் நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போது முதல் இதற்கு ஒரு பாடத்திட்டம் [கரிக்குலம்] தெள்ளத்தெளிவாகவே கிடைக்கிறது. இருந்ந்தும் இப்படி ஒரு அமைப்பே இல்லை என்று நம்மிடம் வாதிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.

இந்த பாடத்கிட்டம் எல்லா இந்து ஞான வழிகளுக்கும் பொதுவானது. நீங்கள் திருவாவடுதுறை மடம் சென்று சைவம் கற்றாலும் சரி, அகோபிலம் சென்று வைணவம் கற்றாலும் சரி இதை கற்றாக வேண்டும். செவ்வியல் இலக்கியங்களை விடுங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் கூட அப்படித்தான். ஒரு கதாநாயகன் சகல கலா வல்லவன் என்றால் உடனே அவன் இந்த பாடத்திட்டத்தை கற்றவன் என்பார்கள். நீங்களே கேட்டிருக்கலாம். சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் – ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு!

அந்த பாடத்திட்டம் இதுதான்.

1. வேதங்கள்

2. மூன்று தத்துவங்கள்: அதாவது பிரஸ்தான திரயம். கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்.

3. ஆறு தரிசனங்கள்: சாங்கியம் யோகம் நியாயம் வைசேடிகம் பூர்வமீமாம்சம் உத்தர மீமாம்சம்

4 ஆறு மதங்கள்: சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணபத்யம் சௌரம்

இவற்றை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு நூல்வரிசையாக எண்ணிவிடக் கூடாது.. ஒன்றுக்கு இன்னொன்றுடன் உள்ள உறவும் முரண்பாடும் முக்கியமானவை…

இந்த கருத்துச் சட்டகம் (framework) ஒன்றும் புதியதல்ல, இது ஜெயமோகன் உருவாக்கியதல்ல (துரதிர்ஷ்டவசமாக, தமிழ்ச் சூழலில் முதல் முறையாக அதைப் படிக்கும் பலர் அப்படி நினைத்துக் கொள்வதைக் காண்கிறேன். தமிழகம் இந்து சமயக்கல்வியில் எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது). பௌத்த சமண மதங்களை வேதநெறி ஒன்றுதிரண்டு எதிர்கொண்ட காலத்திலேயே இந்தச் சட்டகம் உருவாகி விட்டது. பொ.பி ஏழாம் நூற்றாண்டில் அவதரித்த ஆதி சங்கரர் அதற்கு உறுதியான, தகர்க்க முடியாத அரண் அமைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது இந்து மத வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. முரணியக்கம் கொண்ட சமய நெறிகளையும், தரிசனங்களையும் தத்துவ ரீதியாக சமன்வயப் படுத்தியதே சங்கரரின் ஒப்புயர்வற்ற தத்துவ சிந்தனையின் சிறப்பியல்பு ஆகும்.

ஜப்பானிய கலைகள், அரசியல், சமூக சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் என்று அனைத்தையும் ஷிண்டோ,ஜென்,பௌத்த தத்துவங்களின் ஒளியிலேயே நாம் ஆழமாக புரிந்து கொள்ள முடியும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உதிரிகள் அல்ல. அதுபோலவே, இந்துப் பண்பாட்டின், வாழ்க்கையின் கூறுகள் அனைத்தையும் இந்து ஞான மரபு வழங்கும் தத்துவ அடித்தளத்தின் பார்வையில் நின்று நாம் விளக்க முடியும். ஆனால் இதைச் சொல்லும் போது  சில “பாமரர்கள்” தருவித்துக் கொண்ட அறியாமையினாலும்,  சில ”அறிவுஜீவிகள்” தாங்கள்  தருவித்துக் கொண்ட சித்தாந்த சட்டகங்களாலும் அதனை மறுக்கிறார்கள்.  இரண்டுக்கும் பின்னால் உள்ளவை உள்நோக்கங்கள் மட்டுமே என்பது தெளிவு.

சமயமும், வரலாறும், கலாசாரமும் என்ன சொல்கின்றன என்று பார்த்தோம்.

இன்றைய சூழலில் ஹிந்து அடையாளம் என்பதன் பொருள் என்ன?  அதன் தேவை என்ன?  ஹிந்துத்துவம்  இதில் எங்கே வருகிறது என்பது பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நாம்  ஹிந்துக்கள்.  ஹிந்து என்ற சொல்லைத் தப்பான அர்த்தத்தில் நான் பயன்படுத்தவில்லை. அல்லது அதற்கு ஏதாவது மோசமான பொருள் உண்டு என்று  நினைக்கிறவர்களின் கருத்தை நான் ஏற்கவுமில்லை. பழங்காலத்தில் அச்சொல் சிந்துவுக்கு மறுபுறம் வசிப்பவர்கள் என்று மட்டுமே பொருள்பட்டது.  இன்று நம்மை வெறுப்பவர்களில் பெரும்பாலானாவர்கள் அதற்குத் தவறான விளக்கம் தரலாம் என்றாலும் பெயரைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படவேண்டிய அவசியமில்லை.  ஹிந்து என்ற பெயர் உயர்ந்த லட்சியங்கள் அனைத்தையும், ஆத்மீகத் தொடர்புடைய அனைத்தையும் குறிக்கும் சொல்லாக விளங்குமா அல்லது நிந்தனைச் சொல்லாக, நசுக்குண்டவர்களை, உதவாக் கரைகளை, பாவிகளைக் குறிப்பதாக விளங்குமா என்பது நம்மைப் பொறுத்த விஷயமாகும்.  தற்பொழுது “ஹிந்து” என்ற சொல் இழிவான எதையாவது குறிப்பதாக விமர்சிக்கப் பட்டால், கவலைப் படவேண்டாம்.  எல்லா மொழிகளிலும் உள்ள எந்த ஒரு வார்த்தையைக் காட்டிலும் இதை உயர்ந்த பொருளுடையதாக ஆக்க நமது செயல் மூலம் முற்படுவோம்.

– சுவாமி விவேகானந்தர்,  1898ம் ஆண்டு லாகூரில் பேசியது.

(தொடரும்)

58 Replies to “ஹிந்து என்னும் சொல்”

  1. ஸ்ரீமான் ஜடாயு, சரியான சமயத்தில் தெளிவாக பகிர்ந்தளிக்கப்பட்ட தொகுப்பு இது என்றால் மிகையாகாது. வாதங்களின் உஷ்ணம் மேலிடுகையில் சமயம் மற்றும் ஜாதி போன்ற அடையாளங்கள் முன்னின்று ஹிந்து என்ற அடையாளம் மங்கும் போக்குகள் இத்தளத்தில் சமீபத்தியவை மட்டுமன்று. தொடரும் இந்த வ்யாசத்தில் பூஜ்ய ஸ்ரீ சாவர்க்கர் அவர்களின், https://www.savarkar.org/content/pdfs/en/essentials_of_hindutva.v001.pdf கருத்துகளும் விஷயத்திற்கு மேலதிக தெளிவு கொடுக்கும்.

  2. அன்புள்ள ஜடாயு,

    நீவிர் பல்லாண்டு வாழ்க. இதே போல மேலும் பல நல்ல கருத்தோவியங்களை தருவதற்கு எல்லாம் வல்ல சக்திதரன் ஆகிய மயிலேறும் பெருமான் உமக்கு அனைத்து நலன்களையும் அளிப்பான்.

  3. \\ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை (religion), கலாசாரத்தை (culture), தத்துவ ஞான மரபை (philosophy), வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (civilization) குறிக்கிறது. இவற்றை ஒட்டுமொத்தமாகக் குறிக்க ஹிந்து என்ற சொல்லே மிகமிகப் பொருத்தமானதும் கூட.\\

    அற்புதமான வரிகள். சரியான நேரத்தில் வழங்கப்பட்ட கட்டுரை. ஜடாயு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    கருத்து வேறுபாடுகள் நமக்குள் இருந்தாலும், அதை விலக்கி வைத்து விட்டு தன் நலம் பாராமல் செயல் பட வேண்டிய நேரம்.

    ஆப்பிரகாமிய மதம் இந்தியாவில் கால் வைத்ததே தன்னை அழித்து கொள்வதற்கு தான். நம் காலத்தில் வெற்றி பெற முடியாமல் இருந்தாலும், நமது அடுத்த சந்ததியினர் வெற்றி பெற தேவையான அனைத்து சூழ்நிலைகளையும் உருவாக்கி வைக்க வேண்டும்.

  4. @ ஜடாயு
    கீதை வாசிப்பின் போது உணர்ந்து கொண்ட விடயம் இந்துக்களின் புனித நூல் எது என கேட்டால் பிரஸ்தானத்திரயம் என்று கூற வேண்டும் என விளங்கி கொண்டேன்,(கீதை,பிரம்மசூத்திரம்,உபநிடதங்கள்\)…இங்கு இன்னும் சிறப்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது..
    என் மனதினுள் இருந்த நெடு நாள் குழப்பம் இன்று தீர்ந்தது,இஸ்லாமிய தொலைகாட்சிகளில் வரும் ஒரு பேச்சாளர் அடிக்கடி இந்து என்று ஒரு மதமே காணப்படவில்லை,அது அந்நியர்கள் இந்தியாவில் வாழ்ந்த அழைக்க பாவித்த வசனம் என கூறி வந்தார்.அதுவும் அப்பேச்சாளர் தான் பூகோளரீதியில் இந்து
    என்றும்,மத ரீதியில் முஸ்லிம் என்றும் கேலி பேசினார்.
    தற்போது தங்களின் கட்டுரையை வாசித்த பின்,அறியாமை துணைகொண்டு அறிவிலிகளாக இருக்கும் அவர்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது…..

    நன்றி,
    அன்புடன்
    கொழும்பு தமிழன்.
    ஜெய்ஹிந்த்

  5. திரு ஜடாயு அவர்களின் ”ஹிந்து என்ற சொல்” தொடர் கட்டுரை இன்றைய காலகட்டத்தில எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமாக விஷயம். கட்டுரை ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

    சமீபத்தில் திரு.அரவிந்தனது ”ஹிந்துத்துவம்” ஒரு எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை இரண்டாவது முறையாக படித்தேன். சொல்லவந்த செய்தியை பலரது சந்தேகங்கள் தெளிவுரும் வண்ணம் ரத்தின சுருக்கமாக பல தலைப்புகளில் விளக்கியுள்ள விதம் மிகவும் அருமை. இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிடவேண்டும் அப்பொழுதுதான் இந்த செய்தி மிகுதியான பாரதீயர்களையும் வெளிநாட்டிலுள்ள ஹிந்துக்களையும் சென்றடையும்.

    ஹிந்து என்றால் திருடன் என்று பாரசிகமொழியில் அர்தம் உள்ளது – ஹிந்து என்று சொல்லாதே இழிவை தேடிக் கொள்ளாதே – ஹிந்து மதம் வேறு தமிழர்கள் மதம் வேறு – ஹிந்து மதம் ஒரு பிராமிண ஆக்ரமிப்பு கூட்டம் இப்படி நமது திராவிட பகுத்தறிவு வீணர்கள் அற்பத்தனமாக பரப்பிய பல கோஷங்களாலும் அதற்கு மறைமுகமாக துணைபோன பல பிராமிண துவேஷ இந்துக்களாலும் இன்று குறிப்பாக தமிழகத்தில் தம்மை ஹிந்து என்று கூறிக்கொள்ளவே கூசும் அளவுக்கு மிலேச ஆக்ரமிப்பாளர்களும் போலி ஸெக்பூலரிசம் பேசுபவர்களும் நம் மனதில் வெறுப்பை வளர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    முஸ்லீம் பெயர்கள் பல ”அலி” என்று முடிவில் வரும் அவர்களில் ஒரு பிரிவை ”சுன்னி” என்று அழைக்கிறார்கள். இந்த சொற்களை தமிழில் அர்தப்படுத்தி அவர்களை கிண்டல் செய்ய இந்த மஞ்சள் துண்டுகாரருக்கு துணிவு இருக்கிறதா ? ஒரு மொழி சொல்லின் உச்சரிப்பை கொண்டு அதன் அர்த்த்த்தை வேறு மொழியில் தேடுவது அறிவீனம் தானே.

  6. அருமை அருமை
    அதைவிட சிறந்த சொல் எதுவும் இல்லை..
    உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள்…
    தொடர்தும் உங்கள் சேவை…
    அனைத்தும் பெருக ; அனைத்தும் பெருகவே
    -கதிரவன்

  7. 121 கோடி ஜனத்தொகை கொண்ட ஒரு பெரிய சந்தை பாரதம் (இந்தியா), இங்கு பொருட்கள் , கொள்கைகள் மற்றும் மதங்களை சுலபமாக சந்தை படுத்த முடியும் . அதனால் வியாபார யுக்தியில் பல விளம்பரங்களையும் பல அவதூறுகளையும் அள்ளி வீசிதான் வியாபாரம் செய்ய முடியும் , இதையே இன்று அமெரிக்க , சீன, இஸ்லாமிய , கிறித்தவ, கம்யுனிச மற்றும் நாத்திக வியாபாரிகள் கையாண்டு வருகிறார்கள் , சந்தனம் அல்லது ஹிந்து தர்மம் என்பது பாரத மக்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் சுதேசி கொள்கை , இந்த மக்களிடம் வேறு பொருட்களை சந்தை படுத்த ஹிந்து மதத்தின் பாரம்பரியம் மற்றும் புராதனத்தை திரித்து சந்தையை பிளவு படுத்த வேண்டும் , இதயே இன்று பல அரசியல்வாதிகளும் மேதைகள் என்று எண்ணி kolpavarkalum seithukondirrukiraarkal

  8. Vedam gopal,
    It is no use blaming mu.ka for this.
    When he blatantly said “hindu” means “thief”, did hindus protest?
    No.
    Did they stop voting for him?
    No.
    Not this instance alone, there are so many more such instances where he & his party have critcised & continue to criticise hinduism.
    As long as we keep quiet, he & his ilk will continue.

  9. ஹிந்து என்ற சொல் என்று உருவாகியதோ அதைப் பற்றிய அக்கறை எனக்கு இல்லை. இன்று அச்சொல் இமயம் முதல் குமரி வரை வாழும் ஒத்த பாரம்பரியத்தை உடைய நம்க்குப் பொது அடையாளமாக, ஒற்றுமைப்படுத்தப் பெரிதும் வேண்டப்படுகின்றது. இந்த தளத்தில் ஜடாயு மேல் சுடுகணைகள் பல பாய்ச்சப்படுவதக் கண்டு அவர் தம் தெளிவான கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளச் சோர்வடைவாரோ எனக் கலங்கியிருந்தேன். ஸ்திதப் பிரஞ்ஞராக இச்சிறந்த தொடரைத் தொடங்கியுள்ளார்.

    சுத்தாத்துவித சைவ சித்தாந்தியாகிய பாம்பன்சுவாமிகள் நம் நாட்டில் தோன்றிய பல்வகைக்கோட்பாடுகளைக் கைக்கொண்ட ஞானிகளை இந்து ஞானிகள் என்றும் நம் நாட்டை இந்து தேசம் என்றும் குறிப்பிடுகின்றார். “இவ்விந்து தேசமல்லாப் பிறதேசங்களிலும் தெய்வ வழிபாடுகள் உள்ளனவேனும் அவையெல்லாம் ஆன்மாவின்கட் புரியும் ஆன்மோபாசனையும் அவ்வழி ஆன்மாவத் தரிசித்தெய்தும் அனுபூதி ஞானமும் அல்லப் பகிர்முகத்தவாதலின் அத்திற ஞான முணர்த்தும் இத்தேச ஞானிகளை “இந்துஞானிகள்” என்றார். (பரிபூரணானந்தபோதம்) கொள்கை வேறுபாடு கருதாமல் அனைவரையும் இந்து ஞானிகள் என அவர் குறிப்பிவதைக் காண்க.

  10. “என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம்” என்றெழுதுகிறார் மலர்மன்னன்.

    ……சைவம், வன்முறை, சமாதானம். சாதிகள், அல்லது சாதிகளே வேண்டாம், பூஜைகள் புனஸ்காரங்கள், அல்லது ஒரே ஒரு பூவை எனக்குத்தந்தால் போதும் என்றார் கடவுள் (இச்சுலோகம் பகவத் கீதையிலிருந்து). கல்சாமியே வேணாம் போ என தயானந்த சரசுவதி போல, அல்லது நட்ட கல்லும் பேசுமோ? என நையாண்டி மேளம் வாசிக்கலாம். அல்லது அர்ச்சாவதாரத்தில் (தெய்வத்திருமேனிகளில்) மூழ்கி, ‘என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர-லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே! என்று பாசுரம் மழை பொழியலாம். எண்ணற்றக் கடவுளர்கள், அதே சமயம் வேதங்கள் ஒரே கடவுளைத்தான் சொல்கின்றன என்று வியாக்யானம் பண்ணித் திண்ணை வாசகர்களை அசத்தலாம். ஆக முரண்பாடுகள், முரண்பாடுகள், ஒரே முரண்பாடுகள். Conflicts all the way.

    பல்பொருள் அங்காடி. ஆச்சி சிக்கன் மசாலாவுக்குப் பக்கத்தில் மாம்பலம் ஐயர் சாம்பார் பொடி (இன்று சென்னையில் விற்கும் ஒரு மசாலா பிராண்டு) எஃது எவருக்கு வேண்டுமே அஃதை அங்கே வாங்கிக் கொள்ளலாம். U can get ot cheap if u r poor; u can get it expensively if u r rich. அடடே ஒன்றைச் சொல்ல மறந்துட்டேனே. அதான் நாத்திகனாகயிருந்தாலும் கமப்ர்டபுளா இந்துவா இருக்கலாம். இந்து என்றாலே திருடன் என்று சொல்லிவிட்டு நானும் இந்துதான் எங்கப்பா சொன்னாரு எனலாம். ராமர் ஒரு குடிகாரன் என்று சொல்லிவிட்டு அப்படித்தாங்க வால்மீகி எழுதி வைச்சிருக்காரு நான் என்ன பண்ணுவேன் ? என நைசாகப் பேசலாம். எல்லாருக்குமே எல்லா வழிகளிலும் வாய்ப்பாக வரும் மதம் இந்து மதம். எல்லாருக்கும் பொதுவான கடை. All things to all men.

    இப்படிப்பட்ட பலவிதமான வாய்ப்புக்களடங்கிய பல்பொருள் அங்காடியாக‌ இருப்பதனாலேயே இந்து மதம் இன்று வரைமட்டுமல்ல என்றுமே இருக்கும். தொன்மை எனவே இருக்கிறது என்பதெல்லாம் சுத்த கப்சா.
    -காவ்யா!

    https://puthu.thinnai.com/?p=5097#comment-1314

  11. ஹி என்ற சொல்லே தமிழில் இல்லை. பிறகு எப்படி ஹிந்து என்பது தமிழர்களின் தாய் மதம் ஆக முடியும்.???

  12. அன்பர் ஜடாயுவுக்கு, இந்தக் கட்டுரை எழுதியதற்கு மிக்க நன்றி. பல கேள்விகளுக்கு விடையளிப்பதாக உள்ளது. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  13. // Vidhya on November 3, 2011 at 5:42 pm
    ஹி என்ற சொல்லே தமிழில் இல்லை. பிறகு எப்படி ஹிந்து என்பது தமிழர்களின் தாய் மதம் ஆக முடியும்.??? //
    ஹி என்பது எழுத்து, சொல் இல்லை.
    அட அறிவுக் கொழுந்தே,
    ஸ தமிழ்ல இருக்கா? அப்ப கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை தமிழர்கள் பின்பற்றக் கூடாதா?
    ஜ தமிழ்ல இருக்கா? ஏன்னா சிலப்பதிகாரத்தை எழுதியவர் ஒரு ஜைனத் துறவி. திருக்குறளை எழுதியவரும் இன்னொரு ஜைனத் துறவி என்று பலர் சொல்கிறார்கள்.
    ஃப தமிழ்ல இருக்கா? ஃபோன், ஃபேன் எல்லாம் தமிழர்கள் பயன்படுத்தலாமா?
    ஹ தமிழ்ல இருக்கா? தமிழர்கள் ஹலோ சொல்லலாமா? ஹாலிவுட் படம் பார்க்கலாமா?
    சீரியசான், உருப்படியான ஒரு கட்டுரையில் வந்து இப்படி கேனத்தனமாக மறுமொழி போடும் இத்தகைய தமிழ்க் கொடுக்குகளுக்கு என்ன தண்டனை தரலாம்? சகிக்க முடியாத தனித்தமிழ் பேசும் நன்னன் போன்றவர்களுடன் ஒரு அறையில் நாலு நாள் அடைத்துப் போட்டு விடலாம் என்று தோன்றுகிறது :))

  14. கருத்துக் கூறும் அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    // பாம்பன்சுவாமிகள் நம் நாட்டில் தோன்றிய பல்வகைக்கோட்பாடுகளைக் கைக்கொண்ட ஞானிகளை இந்து ஞானிகள் என்றும் நம் நாட்டை இந்து தேசம் என்றும் குறிப்பிடுகின்றார். //

    முனைவர் ஐயா, அருமையான மேற்கோள். நன்றி. இதே போல, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளும் தமது படைப்புக்களில் இந்து என்ற சொல்லைக் குறிப்பிட்டுள்ளதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

  15. அரபு தேசத்தில் முகமது நபி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரபு தேசத்தில் வாழ்ந்தவர்கள் ஹிந்துக்களை மிகவும் மரியாதையுடன் கௌரவத்துடன் போற்றி வந்துள்ளனர். அரபு நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில அரபியக் கவிஞர்கள் மாநாடு நடைபெறும். மிக சிறந்த கவிதை தங்க தட்டில் பொறிக்கப்பட்டு இந்த மாநாட்டில் வைக்கப்படும் பின்பு இது மெக்காவில் உள்ள காபாவிற்கு பார்வைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வைக்கப்படும். இந்த ஆலயம் மக்கேசுவரம் என்று வரலாற்றில் அறியப்பட்டது. மஹேஸ்வரன் என்பது சிவநாமங்களில் ஒன்று என்பது நமக்கு தெரியும்.

    காபா சிவாலயத்தை முகமது நபி கைப்பற்றிய பின்னால் அந்த ஆலயத்தில் இருந்த விக்ரஹங்களை உடைக்கவும் அங்கிருந்த விலைமதிப்பற்ற பல நல்ல நூல்களையும் எரிக்கவும் செய்தார். ஆனால் சில அரபு கவிஞர்கள் அவரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டதால் ஒரு சில பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கவிதைகள் எரிக்கப்படாமல் விடப்பட்டன.

    பின்னர் வந்த கலஃபா ஹருன் அல் ரஷீத்” எரிக்கப்படாமல் விடப்பட்டக் கவிதைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். இந்த நூல் ”ஸைஅகுல்” எனப் பெயரிடப்பட்டது. இந்த நூலில் பகவான் மஹாதேவர் (சுவன்) ஹிந்து விக்ரமாதித்யா போன்ற சொற்கள் மிகவும் மரியாதையுடன் பக்தியுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூல் இஸ்தான்புல் (டர்கி) அரசு நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த நூலில் மிகவும் குறிப்பிடதக்க ஒரு கவிதை உள்ளது. இதை இயற்றியவர் முகமத நபிக்கு பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த ”லபிபின் அகதப் பின் துர்பா” என்ற கவிஞர் ஆவார். அந்த கவிதை –

    அயா முபார கேல் அரஜ் யூ ரௌயே நோஹா மிலன் ஹிந்தேவ
    அராத கல்லாஹ் மஜ்யோனஜ்ஜேல் ஜிகரதுன் (1)

    வஹல் தஜல்லீயதுன் எனானே ஸஹபீ அக அதுன் ஜிகரா
    வஹாஜே ஹீ யோனஜ்ஜேலுரஸுல் மிலன் ஹிந்த்துன் (2)

    யே குலுநல்லஹா ய அஹஜல் அரஜ அல்லமின் குல்லஹம்
    ஃபட்டப்யூ ஜிகரதுல் வத ஹக்குனா மஜம் யோபஜ்ஜேலதுன் (3)

    வா ஹோவ அல முஜ்ஜம் வாலயஜுரா மெஹல்லஹே தன ஜிலானா
    ஃபாய்நோமா யா அரவ்வய்யோ முத்தபீன் யோபஸ்ஸேரியோ நஜதுன் (4)

    வா இஸனேன் ஹுமாரிக் அதர் நாயிஹின்கா அகாவதுன் !
    வா அஸ்நத ஆல ருதன்வோஹோவா மஸா எர்அதுன் (5)
    (ஸை அருல் அகில் பக் – 157)

    இதன் அர்த்தம் புனித ஹிந்து பூமியே ! நீ பாக்யசாலி ! ஏனெனில் இறைவன் தன் பேரறிவை உனக்கன்றோ வழங்கியுள்ளான்.

    ஹிந்து ரிஷிகளின் மூலம் நான்கு வேதங்களாக வெளிப்பட்ட அவனது பேரறிவு உலகின் நான்கு திசைகளிலும் நான்கு தீபஸ்தம்பங்களாக சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றன.

    தனது பேரறிவு வெளிப்பட்டு விளங்கும் இந்த வேதங்களைப் பின்பற்றி வாழுமாறு மனித குலத்திற்கு இறைவன் ஆணையிட்டுள்ளான்.

    அறிவு களஞ்சியமான யஜுர் சாமம் ஆகியவை இறைவனின் வரப்பிரசாதம். ஆகையால் சகோதரர்களே அவற்றை பக்தியுடன் பாராயனம் செய்வீர். அவை மோக்ஷத்திற்கு வழிகாட்டுபவை.

    ரிக் அதர்வணம் ஆகிய இருவேதங்களும் சகோதரத்துவத்தை போதிக்கின்றன. இந்த வேதங்களால் தெளிவடைந்த யாரும் இருளை நோக்கித் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.

    முகம்மது நபி தோன்றுவதற்கு முன்னால் அரபு நாடுகளில் சிவ வழிபாடே நடைமுறையில் இருந்தது.

    (ஆதார புத்தகம் – ஹிந்து ஹிந்துவத்துவம் ஹிந்துராஷ்ட்ரம்-ஆர்.பி.வி.எஸ்.மணியன் )

  16. வித்யா

    உங்கள் பெயரில் இருக்கும் dh (vidhya) என்ற எழுத்து கூடாதான் தமிழில் இல்லை அப்புறம் நீங்கள் எப்படி தமிழச்சி ஆனீர்கள்

  17. சுவனப்ரியன்

    அல்லா ரெம்ப நல்லவர் அன்பாளர் அருளாளர் இதை ஒத்தக்காட்டி கயா வெட்டுவேன் – இது போல முரட்டு முரண்பாடுகள் இல்லாத வரை சரிதான்

  18. Dear Jadaayu, Wonderful article. But, the name “Hindu” is came into practise in teh early centuries
    i.e Indus Vally civilisation. This word “HINDU” or HINDUS is used by Persians who came to india before Sagans, romans, greeks and hoonaas.They couldn’t pronounce “C” for Sindhu hence pronounced as Hindus(the people lived in the banks of Sindhu i.e indus vally civilisation. The original Hindus are dravidians which has been proved by Archeologists, and historians. The word Hindu is nothing to do with Religion. Sanskrit language, as many people belived it is the language introduced by Dravidians to make scholars understand the Vedas. One more important thing is most of our Hindu religion people confuse themselves Hindutva and Hindu. Both are different.

  19. முகமது நபியின் பெரியப்பா ஓமர் பின் ஹாஸம் ஒரு கவிஞர் ஆவார். அவரது கவிதைகளில் ஹிந்த் மற்றும் ஹிந்துக்களைப் பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. மக்கள் அவரை ”அபுல் ஹகீம்” என்று மரியாதையோடு அழைத்தனர். இதற்குப் பொருள் “அறிவின் தந்தை” என்பதாகும். சில வக்கிரக புத்தி கொண்ட முஸ்லீம்கள் அவரை ”அபுல் ஜிஹல்” என்று அழைத்தனர். இதன் பொருள் ”அறியாமையின் தந்தை” என்பதாகும். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் அவரை முஸ்லீம்கள் வெறுத்தனர்.

    இஸ்லாமிய ஜிஹாத் போர் ஒன்றில் இந்த சிவ பக்தர் கொல்லப்பட்டார் !

    ”ஸை அருல் அகுல்” என்ற கவிதைத் தொகுப்பில் காணப்படும் இவரது கவிதை ஒன்று

    கஃபாவிக் ஜிகராமின் அலூமின் தப் அஸேரூ
    கலூபன் அமத்தூல் ஹவா வ தஜக்கரூ (1)

    வமத் ஜகேரிஹா ஊதன் எல்லா வத ஏ தில்வரா
    வலுகயானே ஜாத் அல்லாஹ் ஹே யௌம தப் அஸேரூ (2)

    வ அஹலோல்லாஹ் ஜெஹ் அரம்மன் மஹாதேவ ஓ
    மனாஜில் இலமுத்தினே மினஹம வஸயதுரூ (3)

    வ ஸஹவீ கேயாம் ஃபீ மகாமில் ஹிந்தே யௌமன்
    வயகூலன் லாதஹஜன் ஃப இத்ரக் தவஜ்ஜரூ (4)

    மஅஸ்ஸயரே அகலாகுன் ஹஸனன் குல்லஹும் (5)

    நஜமுன் அஜாஅத் ஹும்ம காபூல் ஹிந்து (6)

    இதன் பொருள் வருமாறு –

    எந்த மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் பாபச் செயல்களிலும் அதர்மத்திலும் கழித்துவிட்டானோ காம குரோதச் செயல்களால் வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டு விட்டானோ அவன் பச்சாதாபத்தோடு வாழ்வின் இறுதியில் நல்ல வழியில வர விரம்பினால் அவனுக்கு அது சாத்தியமாகுமா?

    சாத்தியமாகும் !!!!!!!!!

    அத்தகையவன் வாழ்வில் ஒருமுறை மனப்பூர்வமாக ஹ்ருதய சுத்தியோடு சிவனை தியானித்தால் உயர்ந்த ஆன்மிக நிலையை அடைவது உறுதி.

    ஓ இறைவா ! என் வாழ்நாள் முழுவதையும் நீ எடுத்துக்கொண்டு – எனக்கு ஹிந்து தேசத்தில் ஒரே ஒரு நாள் ஜீவிக்க அருள் புரிவாய். ஏன்னெல் அந்த மண்ணை அடைந்தவுடன் மனிதன் ஜீவன் முக்தனாவது நிச்சயம்.

    அந்த தேசத்தில (ஹிந்து தேசம்) யாத்திரை மேற்கொள்வதால் அனைத்துப் புண்ணிய கர்மாக்களின் பலனையும் ஒருவன் அடைவதோடு ஹிந்து மஹாபுருஷர்களின் சத்ஸங்கமும் கிடைத்து விடுகிறது.

    தில்லி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலயத்தில் (பிர்லா மந்திர) கீதா வாடிகாவில் மேலே கண்ட இரண்டு அரபுக் கவிதைகளும் அவற்றின் அர்த்தத்தோடு பொறிக்கப்பட்டுள்ளன.

  20. எனது மறுமொழி (ஆதார புத்தகம் – ஹிந்து ஹிந்துவத்துவம் ஹிந்துராஷ்ட்ரம்-ஆர்.பி.வி.எஸ்.மணியன் )

  21. //suvanappiriyan on November 3, 2011 at 4:34 pm //

    அன்பரே…
    தங்களை ஹிந்து என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைபவர்கள், சொல்லிக் கொள்ளத் தயங்காதவர்கள், ஏதோ ஒரு நடைமுறைக் காரணத்துக்காகச் சொல்லிக் கொள்பவர்கள், சொல்லிக்கொள்ளாதவர்கள், மறுப்பவர்கள், எதிர்ப்பவர்கள், இழித்தும் பழித்தும் கேலி பேசுபவர்கள்… என அத்தனைத் தரப்பாரின் நிலைகளையும் குறிப்பிட்டுக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்.

    நீங்கள் குழம்புவதால் மட்டுமே (ஹிந்து சமயத்தின்) தொன்மை கப்சாவாகிவிடாது.

    உங்களுக்கும் எங்கள் சகோதரர் என்கிற வகையில் உண்மைகள் விளங்கட்டும்.

  22. அன்புள்ள வேதம் கோபால் அவர்களுக்கு,

    காபாவில் உள்ள மகாதேவரைப் புகழ்ந்து எழுதப் பட்டுள்ள அராபியக் கவிதை என்றும் ஒன்று வழக்கமாக சில கட்டுரைகளில் கொடுக்கப் படும். அந்தக் “கவிதை”யை உலகெங்கும் உள்ள அராபிய நூல்கங்களில் தேடியும் அது கிடைக்கவில்லை என்று சீதாராம் கோயல் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் – https://tamilhindu.com/2011/08/kaaba-is-shiva-temple-analysis/

    இங்கு நீங்கள் அளித்துள்ள அராபியக் கவிதை எந்த அராபிய மூல நூலில் உள்ளது என்பதற்கான ஆதாரம் நீங்கள் சுட்டியுள்ள நூலில் ( ஹிந்து ஹிந்துவத்துவம் ஹிந்துராஷ்ட்ரம்) கண்டிப்பாகக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் உண்மைத் தன்மை முழுமையாக நிறுவப் படவில்லை என்றே பொருள். அத்தகைய சான்றுகளை பொதுத் தளங்களில், விவாதங்களில் வைக்காமல் இருப்பதே நல்லது.

    “ஹிந்த்” என்ற சொல்லை அராபியர் பொதுவாக இந்தியா/ஹிந்துமதம் தொடர்பான எல்லாவற்றையும் குறிக்க பயன்படுத்தினர். கணிதத்தை பழைய அராபிய மொழியில் ”ஹ்ந்தி சத்” (ஹிந்துக்களின் சாஸ்திரம்) என்றே அழைத்தனர். புளி என்ற உணவுப் பொருளை பாரசீக மொழியில் ”தாமர் ஏ ஹிந்தி” (இந்தியாவின் செடி) என்று அழைத்தனர். அது தான் மருவி ஆங்கிலத்தில் Tamarind ஆயிற்று. இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.

  23. திரு ஜடாயு
    இதன் ஆதாரம் ”ஸை அருல் அகில்” பக்கம் – 157 இந்த புத்தகம் இஸ்தான்புல் நூலகத்தில் இன்னும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றுதான் ஆதாரம் தந்துள்ளார். இதை என் மறுமொழியில் சொல்லியுள்ளேன். வேறு ஆதாரம் பற்றி நேரம் கிடைத்தால் இந்த புத்தக ஆசிரியருடன் பேசிவிட்டு பதில் சொல்கிறேன்.

  24. அருமை. மிக அதிகமாக ஆராட்சி செய்ய வேண்டிய விஷயம்.
    காபா ஒரு சாதாரண கோவில் இல்லை. ஆகம சாஸ்திரம் அறிந்த மஹா சிற்பிகள்
    மட்டுமே தற்போதைய நிலையில் இதை பற்றி உண்மையான கருத்து கூற முடியும்.
    காபா ஒரே ஒரு சிவனை மட்டும் கொண்ட கோவில் இல்லை, ஆதி காலங்களில் பஞ்சாகம தேவைகளை கொண்டே கோவில்கள் வடிவமைக்கப் பட்டன.

    முகமது நபி எல்லா விக்ரஹா ஹத்தி செய்தலும் ஒரே ஒரு தடயத்தை விட்டு விட்டார். அது கபாவிற்கு வெளியே உள்ள “ஆதமின் காலடி “. வைணவ ஆகமத்தில் அந்த இடம் ” பெரிய திருவடி ” இருக்கும் இடம்.

    இதை பற்றிய மேலும் விவரம் அறிய முயல்கிறேன்.

  25. திரு ஜடாயு
    நிங்கள் சொன்னதினால் உண்மை என்னவென்று அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள வலைதளங்களை ஒரு சுற்று சுற்றி விட்டேன். ஏதோ சில செய்திகள் கிடைத்துள்ளன ஆனால் அது உண்மைதான் என்று ஆதாரம் கிடைக்காததால் அது ஆதாரம் இல்லா தகவல் என்று ஏற்பது கடினமாக இருக்கிறது. நான் எனது முந்தய மறுமொழியில் சில அரேபிய கவிதைகள் பற்றிய செய்தி தில்லி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலயத்தில் (பிர்லா மந்திர) கீதா வாடிகாவில் அவற்றின் அர்த்தத்தோடு பொறிக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தேன். இது உண்மையாக இருக்கும் பொழுது ஏன் காபா சிவாலயமாக இருக்க வாய்பில்லை ? மேலே சொன்னது உண்மை இல்லை என்றால் லஷ்மி நாராயணர் கல்வெட்டை முஸ்லீம்கள் விட்டுவைப்பார்களா ?

    1.Was the Kaaba Originally a Hindu Temple? By P.N. Oak (Historian)
    2.Koen Raad Elst
    3.Dr.Radheshayam Brachmachari
    4.Stephen Knaap
    5.Sayar-ul-Okul

  26. //ஸ தமிழ்ல இருக்கா? அப்ப கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை தமிழர்கள் பின்பற்றக் கூடாதா?
    ஜ தமிழ்ல இருக்கா? ஏன்னா சிலப்பதிகாரத்தை எழுதியவர் ஒரு ஜைனத் துறவி. திருக்குறளை எழுதியவரும் இன்னொரு ஜைனத் துறவி என்று பலர் சொல்கிறார்கள்.
    ஃப தமிழ்ல இருக்கா? ஃபோன், ஃபேன் எல்லாம் தமிழர்கள் பயன்படுத்தலாமா?
    ஹ தமிழ்ல இருக்கா? தமிழர்கள் ஹலோ சொல்லலாமா? ஹாலிவுட் படம் பார்க்கலாமா?
    சீரியசான், உருப்படியான ஒரு கட்டுரையில் வந்து இப்படி கேனத்தனமாக மறுமொழி போடும் இத்தகைய தமிழ்க் கொடுக்குகளுக்கு என்ன தண்டனை தரலாம்?//
    நான் இங்கே தமிழர்கள் பயன் படுத்துவதை பற்றி எதுவும் சொல்லவில்லை. முதலில் புரிந்துகொண்ட பின்பு அதற்க்கு விளக்கம் கொடுங்கள். ஹி என்ற எழுத்து தமிழில் இல்லாத போது தமிழ் ஹிந்து எப்படி தமிழர்களின் தாய் மதம் ஆக முடியும் என்பதே எனது கேள்வி. ஃபோன், ஃபேன் இவைகள் தமிழ் சொல் என்றோ கிறிஸ்தவம் இஸ்லாம் இவர்கள் யாரும் தமிழ்தான் தங்களின் தாய் மதம் என்றோ சொல்லவில்லை. எனது கேள்விக்கு ethaavathu அறிவுபூர்வமான பதில் கொடுத்துவிட்டு பின்பு ennai arivukkolonthu endu neegal ealanam seivathil enakku ethum aatchebanai illai.

  27. ஃபோன், ஃபேன் இவைகள் தமிழ் சொல் என்றோ கிறிஸ்தவம் இஸ்லாம் இவர்கள் யாரும் தங்களது மதம்தான் தமிழர்களின் தாய் மதம் என்றோ சொல்லவில்லை. நாம் பிறரது பொருட்களை பயன்படுத்துவது வேறு அவர்களது பொருட்களை தனது பொருளாக பிறரிடம் சொல்வது வேறு. எனது கேள்விக்கு ஏதாவது அறிவுபூர்வமான பதில் கொடுத்துவிட்டு பின்பு என்னை அறிவுக்கொழுந்து என்று நீங்கள் ஏளனம் செய்வதில் எனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை.

  28. தமிழும் சமிஸ்கிரதமும் தமிழனின் இருகண்கள். தமிழ் தாய் என்றால் சமிஸ்கிரதம் தந்தை. தாயிர் சிறந்த கோவில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை – ஆயிரம் உறவில் பெறுமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் (அறிவின்) எல்லை. தமிழக சான்றோர்கள் மனஉவந்து பல சமிஸ்கிரத எழுத்துகளையும் சொல்லையும் தொன்றுதொட்டு உபயோகபடுத்தி வந்துள்ளனர். தன்னை பெற்றோரையே கலப்படம் என்று கூறுபவர்கள் அறிவீலிகளே.

  29. அறிவுபூர்வமான பதில் அவசியமில்லை,சாதாரண அறிவே போதும் தமிழர்களின் தாய்மதம் இந்து சமயம் என்பதை புரிந்து கொள்ள…..அகழ்வுகளில் கிடைப்பது இயேசுவின் 1000 வருட பழைய சிலையோ,அல்லது திருகுர்ஆணின் பிரதியோ அல்ல, இந்து கடவுளர்களின் சிலைகளே,

    ஆங்கிலம் முதல் உலகின் பல மொழிகள் மற்றைய மொழிகளின் கலப்பை கொண்டுள்ளது கண்கூடு.சிங்கள மொழி என்பதே 1000 வருடங்கள் முன்பு உருவாகிய ஒரு மொழி தான் .அதில் பல எழுத்துக்கள் ஆங்கிலம் கலந்தே எழுதபடுகிறது. தமிழில் கலந்த மற்ற மொழி சொற்களை தள்ளி விட்டு நீங்கள் கூறிய வசனங்களை எழுத முடியும் ….கைபேசி,மின்விசிறி போதுமா??????உச்சரிப்புக்காக ஹி யை உபயோகித்தால் அது மா பெரும் குற்றமோ ???
    இந்த வச்சுக்கோ…….தமிழ்இந்து

  30. அங்கும் இங்கும் சில இடங்களில் ஹிந்து என்ற வார்த்தை வந்ததை வைத்து, ஹிந்து மதம் தொன்று தொட்டு இருக்கிறது என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.. நீங்கள் குறிப்பிட்ட எல்லா ஆதாரங்களிலும் ஹிந்து என்ற வார்த்தை ஒரு மதமாக குறிப்பிடப்படவில்லை.. அது, மிலேச்சுகர்களிடமிருந்து வித்தியாசப்படுத்த பயன்படும் ஒரு வாத்தையாகவே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.. நீங்கள் தான் ஹிந்து மதம் என்று குறிப்பிட்டுக் கொள்கிறீர்கள்.. அது நன்றாகவே இந்த கட்டுரையில் தெரிகிறது..

    ஹிந்து என்ற வார்த்தையில் பிரச்சினையில்லை.. ஆனால், “ஹிந்து மதம்” என்று நீங்கள் மதம் என்ற வார்த்தையை பொடும்பொழுது, அதன் முழு பரிணாமமே மாறிவிடுகிறது.. அதுதான் இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை..

    மிலேச்சகர்கலிடமிருந்து வித்தியாசப்படுத்த, உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தையை, நீங்கள் ஒரு மதமாக நிறுவ முயற்சி செய்கிறீர்கள்.. அதற்காக, இருக்கின்ற எல்லா அடையாளங்களையும் அழிக்கிறீர்கள்.. எப்படியென்று விவரிக்கிறேன்.. மேலும் படியுங்கள்..

    முதலில், ஹிந்து மதம் என்பதற்கு ஒரு தன்னிலை விளக்கம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு விட்டது.. உதாரனமாக வெள்ளைக்கார பாணியில், ஹிந்து மதம், சம்த்துவத்தை போற்றும் மதம் என்று அவனுக்கு ரியாக்ஷனரியாக நாமளே ஏற்படுத்த்க் கொண்டோம்.. இதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது, சுவாமி விவேகானந்தர் என்ற ஃப்ரீ மாசானிக்.. (இது பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை)..

    பின்பு, இருக்கின்ற எல்லா கலாச்சாரங்களின் அடையாளங்களையும் இந்த செயற்கையான விளக்கத்துக்கு தகுந்த மாதிரி மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.. ஒரு மலை வாழ் மக்கள் குழு வேட்டையாடி கறி சாப்பிடும் வழக்கம் உண்டு.. ஆனால், அவர்கல் இந்துக்கள் என்று சொல்லி, இந்து மதம் அசைவத்தை ஆதரிப்பதில்லை என்ற செயற்கையான கொள்கையால், அந்த மலைவாழ் மக்கள் சைவர்களாக மாற்றப்படுகிறார்கள்..

    இப்படி, மிருக பலியிலிருந்து, பல விதமான பிரதேச கலாச்சாரங்கள் இப்படி சிதறடிக்கப்படுகின்றன..

    ஜெயமொகனின் கட்டுரையில், சுடலை மாடன் சாமியை, ஈஸ்வரனோடு சம்பந்தப்படுத்தும் வழக்கம் தான் நமது பாரம்பரியத்தில் உண்டு.. ஆனால், அந்த சமூக அடையாளத்தை மாற்றும் வழக்கம் இல்லை.. இந்து மதம் என்று சொல்லிக் கொண்டு, கிறித்துவர்களை போல, அடையாளத்தையே நீங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்..

    ஆதலால், என்னுடைய கேள்விகளை முன்வைத்து இந்த கட்டுரையில் ஒரு காரசாரமான விவாதத்தை ஆரம்பிக்கிறேன்….

    இந்து என்ற சொல் மதம் என்ற ரீதியில் எங்கு உப்யோகப்படுத்தப்பட்டிருக்கிறது..?

    இந்து என்ற மதம் இருந்திருக்குமேயேனால், சீகிகியர்கள் தங்கலை இந்து மதம் என்றே உருவாக்கியிருப்பார்கள்.. எதற்கு தனியாக சீக்கிய மதன் என்று வேறுபடுத்திக் காட்டுகிறார்கள்..

    சப்த சிந்து என்று நம் ரிஷிகள் நம்மளை அழியத்திருந்தார்களேயானால், நாம் அந்த வார்த்தையே உபயோகப்படுத்தலாமே.. எதற்கு மிலேச்சிக அடையாளத்தை தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்?

    சப்த சிந்து என்பது ஒரு மதம் என்ற பாணியில் நமது ரிஷிகள் உபயோகப்படுத்தியிருந்தார்களா?

    ஆக, ஜடாயு அவர்கள், வசமாக என்னிடம் மாட்டிக்கொண்டுவிட்டார்..

  31. /** ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு!
    **/

    ஆனால், ஹிந்து மதம் என்ற பாணியில் யாரும் சொல்ல வில்லையே.. ஆறு மதங்கள் என்று தெளிவாக சொல்லிவிட்டார்கள்.. சன்மதங்கள் தான் மதம் என்ற அடையாளத்துக்குள் வரும்.. இந்த் என்பது மதமல்ல..

  32. செந்தில்

    அனல் தெறிக்கும் கேள்விகள். மற்றவரை உருக்குலைக்கும் வாதங்கள் எனக்கு ரெம்ப பயமா இருக்கு.

    ஷன் மதங்கள் என்று எந்த வேத ஆகம நூலகளிலாவது இருக்க – அப்புறம் என்னத்துக்கு ஷன் மதம் என்று கூவி கூவி கத்துகிறீர்கள்.

    ஆறு தரிசனங்களும் தனி தனியாக தோன்றி ஒன்று சேர்க்கப்படும் போது – எல்லாத்துக்கும் செத்து ஒரு பேரு வெச்சா என்ன பிரச்சன?

    அதென்ன ஆறு தர்சனங்கல்ன்னு பேரு – கூட்டினா ஆறு வருதுன்னு யாருக்கும் தெரியாதா ? ஏதாவது ஒரு பேரு வெக்க ஆருன்னு வெச்சாங்களா – இந்த ஆறில் மூன்று கடவுளை கடுமையாக மறுக்கும் மதங்கள்.

    ஷன் மதங்கள் என்பதே வேடிக்கையானது – இதை ராம/ஐயப்ப பக்தர் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இதில் majority மதங்கள் ஒரு குடும்பத்திலிருந்து வருகிறது.

    காணபத்யம் என்ற மதம். இதை விட ஐயப்ப பக்தர்களே ஜாஸ்தி. சரி ஆறு மதத்துல இல்லாங்காட்டி ஐயப்ப பக்தர்கள எந்த லிஸ்ட்ல சேக்கறது. அட சாய் பாபா பகதர்கள எங்க சேக்கறது. இஸ்கான் காரர்களை எங்க சேக்கறது – அவங்க கிருஷ்ண பக்தர்கள் விஷ்ணு பக்தர்கள் அல்ல. (சிவா பக்தன் அல்லாமல் முற்க பக்தன் எப்படி இருக்கா முடியுமோ அப்படியே இதுவும் சாத்தியம்) – ஒரு ஆசார்யர் ஸ்ரீரங்க பக்தர் அரங்கனை பாடிய வாயால் குரங்கனை (திருப்பதி பாலாஜி) பாட மாட்டேன் என்றார் இவரை எந்த லிஸ்ட்ல சேப்பீங்க.

    இந்தியர்கள் இந்தியர்களோட பேசிக்கொண்டு இருக்கும் போது ஒட்டுமொத்த identity தேவை இல்லை. இன்று பல பரிமாணங்களில் பேச்சு (கை, வாய்) நடக்கும் பொழுது நாங்கெல்லாம் வேற எங்களுக்கு பேரை இல்லை முடிஞ்சா நீங்க எங்களோட பேசிப்பாருங்க நாங்க யாருன்னு கண்டுபிடிங்க பாப்போன்னு பேத்திக்கிட்டு இருப்பதை என்னான்னு சொல்ல.

    விவேகானதர் ராமகிருஷ்ணர் போன்ற தீர்க்க தரிசிகள் இல்லை என்றால் உங்களை எல்லாம் தனித்தனியாக ரௌண்டு கட்டி ஏசு விசுவாசி ஆக்கிருப்பங்க –

    வடகலை தொண்டியாபுரம் மாலோல ஸ்ரீவைஷ்ணவ கிறிஸ்தவர்கள் திருச்சபை
    தென்கலை பஹுகுடுமி ஸ்ரீவைஷ்ணவ கிறிஸ்தவர்கள் திருச்சபை
    புனித லூர்து வடமா திருச்சபை
    சுவாமி அய்யப்ப கிறிஸ்தவ இருமுடி திருசபை
    திருவீதிம்மான் திருசபை
    பாடி காட் முனிஸ்வரர் திரு சபை
    புனித வர்ஜின் எலுமிச்சை மேரி ஜபக் கூடம்

    செந்தில் சுவாமி இதுல ஏதாவது ஒரு திரு சபைல அல்லாலூயா பாடிக்கிட்டு இருப்பாரு

    //ஆக, ஜடாயு அவர்கள், வசமாக என்னிடம் மாட்டிக்கொண்டுவிட்டார்..//

    எனக்கு உங்கள நெனச்ச ரொம்பவே பாவமா இருக்கு

    ஜடாயு அவர்கள் இப்பதான் ஆர்வி என்ற அறிவு ஜீவிக்கிட்ட கரடியா கத்தி முடிச்சாரு இன்னும் அந்த அவதாரத்திலேருந்து மாறலன்னா உங்களுக்கு தான் ரெம்ப கஷ்டம்.

  33. /** ஷன் மதங்கள் என்று எந்த வேத ஆகம நூலகளிலாவது இருக்க – அப்புறம் என்னத்துக்கு ஷன் மதம் என்று கூவி கூவி கத்துகிறீர்கள்.
    **/
    ஆதி சங்கரர் சன் மதங்களை நிறுவும்பொழுது, எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து ஒரு பேர் வைத்திருக்கலாமே.. ஏன் வைக்கவில்லை? அவருக்கு ஒரு வேளை பேர் வைக்கத் தெரியவில்லையோ?

    சன் மதங்கள் என்று சொல்லும்பொழுதே, ஒவ்வொன்றும் தனித்தன்மையுடையது என்பது யதார்த்தம்.. இப்படி தனித்தன்மையுள்ள மதங்களை ஒன்று சேர்த்து இந்து என்ற வரையரைக்குள் கொண்டு வருவது, எந்த விதத்தில் நியாயம்.. அது கூட பரவாயில்லை.. எந்த மதத்தை ஆதி சங்கரர் தர்க்க ரீதியாக தோற்கடித்தாரோ, அந்த புத்த மதத்தையும் இந்து என்ற வரையரைக்குள் கொண்டுவந்து, எல்லாரும் எல்லாத்தையும் கும்பிட வேண்டும்னு சொல்றீங்க.. சைவமும், வைணமும் அன்றைய கிறித்துவமான சமண மத்த்தை தோற்கடித்தது.. நீங்கள் சமணத்தையும் இந்து என்று வரையறைக்குள் கொண்டு வந்து, இந்து என்ற நீங்கள் உருவாக்க நினைக்கும் பொது மதத்திற்காக, இருக்கின்ற எல்லா மதங்களையும் அழிக்கிறீர்கள்..

    இதை நான் ஏற்கனவே சொல்லியிருந்தாலும், இங்கு மறுபடியும் குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது..

    /** காணபத்யம் என்ற மதம். இதை விட ஐயப்ப பக்தர்களே ஜாஸ்தி. சரி ஆறு மதத்துல இல்லாங்காட்டி ஐயப்ப பக்தர்கள எந்த லிஸ்ட்ல சேக்கறது. அட சாய் பாபா பகதர்கள எங்க சேக்கறது. இஸ்கான் காரர்களை எங்க சேக்கறது – அவங்க கிருஷ்ண பக்தர்கள் விஷ்ணு பக்தர்கள் அல்ல.
    **/

    அவர்களையெல்லாம் அப்படியே விட வேண்டியதுதானே.. எதுக்கு கொண்டு போய் எதிலாவது சேர்க்க துடிக்கிறீர்கள்.. ஐயப்ப பக்தர் என்று ஒருவர் சொல்லிக் கொண்டால் போதாதா.. நீங்கள் ஏன் ஹிந்து என்ற அடையாளத்தை அவர்கள் மேல் திணிக்கிறீர்கள்.. ? அவர் என்ன தன்னை கிறித்துவ ஐயப்ப பக்தர் என்றா சொல்லப் போகிறார்?

    இஸ்கானின் குரு பிரபு பாதா, எந்த மதத்தை சேர்ந்தவர் என்று கூட உங்களுக்கு தெரியாதா?

    /** விவேகானதர் ராமகிருஷ்ணர் போன்ற தீர்க்க தரிசிகள் இல்லை என்றால் உங்களை எல்லாம் தனித்தனியாக ரௌண்டு கட்டி ஏசு விசுவாசி ஆக்கிருப்பங்க –
    **/
    நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்னு சொல்வாங்க.. விவேகானந்தரை பற்றி முக்கால்வாசி இந்துக்களுக்கு 20 வருடங்களுக்கு வரை எதுவும் தெரியாது.. அப்படியிருக்க அவர்கள் இல்லையென்றால் இன்னேரம் எல்லாரும் கிறித்துவர்களா மாறீயிருப்பாங்கன்னு சொல்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.. விவேகானந்தர் என்பவர் இல்லையென்றால் ராம்கிருஷ்ணர் என்பவர் வெளி உலகத்துக்கு தெரிந்திருக்காது..

    முதலில் உங்களது மாய உலகத்தில் இருந்து வெளியே வாருங்கள்.. இந்துத்துவ வாதிகள்தான் மக்களை கிருத்துவ மிஷனரிகளிடமிருந்து காப்பாற்றுகிறார்கல் என்ற போலியான எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள்..

    என்னுடைய முக்கியமான கேள்விக்கு இன்னும் யாரும் பதில் தரவில்லையே.. ஜடாயு, இந்த கட்டுரையில் குறிப்பிட்டவைகளில், எங்காவது ஒரு இடத்திலாவது, இந்து என்ற வார்த்தை மதம் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?

    என்னுடைய கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்..

  34. செந்தில்,

    விவாதம் செய்வதற்கு ஒன்று ஒரு முறைமை உள்ளது. இந்து ஞான மரபின் நியாய, தர்க்க சாஸ்திர நூல்களில் அது தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது. எல்லா அறிவார்ந்த விவாதங்களிலும், இரு தரப்புகளும் தங்கள் தோற்றுகைகளை (premise) வைக்க வேண்டும், ஒரு தரப்பின் தோற்றுகை முறியடிக்கப் பட்டால் விவாதம் அங்கே முடிந்து விட்டது, பிறகு பேச ஒன்றுமில்லை.

    இங்கு முதலில் இருந்தே நீங்கள் எந்த உருப்படியான தோற்றுகைகளையும் வைக்காமல், சில உதிரிக் கருத்துக்களை எடுத்து விட்டுக் கொண்டிருந்தீர்கள். அதிலிருந்து உங்கள் தரப்பை ஒருவாறாக உருவகித்து, அவற்றை எதிர்கொள்ளும் வாதங்கள் வைக்கப் படும் தோறும், உடனே அவற்றை அலட்சியம் செய்வது, அதிலிருந்து கழன்று கொள்வது, வேறு ஏதாவது சம்பந்தமில்லாமல் சொல்வது, இன்னும் சில வசைகளையும், காழ்ப்புகளையும் எடுத்து விடுவது- இப்படியே நீங்கள் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.

    இதோ இந்த மறுமொழிகளிலேயே பார்க்கீறேன்.

    // The same Koenraad Elst, had written a separate chapter on “Semitization of hinduism” ..
    https://voiceofdharma.com/books/wiah/ch5.htm
    It seems you had conveniently ignored it //

    ஹா! ”இந்துமதம் உலக அளவில் இன்றும் செழித்து வாழும் பாகன் (pagan) மதமா? இந்துமதம் செமிட்டிம் மதங்கள் போல ஆக்கப் படுகிறதா? இந்துத்துவம் என்றால் என்ன என்பது குறித்த விவாதங்களுடன் நூல் நிறைவடைகிறது” என்று இந்தக் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கீறேனே. அதைக் கூடப் பார்க்க உங்களுக்குப் பொறுமை இல்லை போலும். எல்ஸ்ட் ஹிந்து மதமே இல்லை என்று எங்கே சொல்கிறார்? அதன் இருப்பை ஏற்றுக் கொண்டு “செமிட்டிக் மதங்கள் போன்று ஆக்கப் படுகிறதா” என்ற விவாதத்தை மட்டுமே வைக்கிறார். அத்தியாயத்தின் தலைப்பை மட்டும் படிப்பதில் உள்ள அபாயம் இது.

    இதற்கு அடுத்த பகுதியையும் படியுங்கள். உங்கள் ஓட்டைப் பானை கோட்பாடுகள் பல அங்கும் உடைபடும்.

    நான் கூறிய தரவுகள் எதற்குள்ளும் செல்லாமல் “ஹிந்து என்பதை மதம் என்ற பொருளில் பழைய காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்களா?” என்று ஒரு சவடால் கேள்வி. உங்களது பிரசினை தான் என்ன? ஒரு ரிக்வேத ரிஷி ஒரு சூக்தத்தில் “இதோ நான் ஹிந்து என்ற சொல்லை உபயோகிக்கிறேன். இந்தப் பேரில் இந்த மதம் அழைக்கப் படும்” என்று பாடி வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் போல. அடடா எப்பேர்ப்பட்ட அற்புதமான வாதம்! இத்தகைய அறிவுச் சுடருக்கு முன் நான் மட்டுமல்ல, அக்னி தேவன் கூட நின்று விவாதம் செய்ய முடியாது.

    இந்தப் பாடலை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    என்றாவது, நீ முதலையின் வாயைத் திறந்து அதன் பல்லைப் பிடுங்கலாம்,
    கொந்தளிக்கும் கடலை ஒரு குட்டையைப் போலத் தாண்டி விடலாம்,
    நாகத்தை எடுத்துத் தலையில் அணியலாம்.
    ஆனால் பிடிவாதமுள்ள கருத்துக்குருடனுக்குப் புரியவைப்பது என்பது
    என்றுமே முடியாத காரியம்.

    – பர்த்ருஹரியின் நீதி சதகம்

  35. ஜடாயு அவர்களே

    //ஆனால் பிடிவாதமுள்ள கருத்துக்குருடனுக்குப் புரியவைப்பது என்பது//

    பர்த்ரு ஹரி சொன்னதை ஏன் குறித்து சொல்கிறீர்கள் அவர் சொன்னது
    ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்க ஜன சித்தமாராதயேத்

    கருத்து குருடன் என்பது நீங்கள் formality பார்த்து போனால் போகிறது நம்ம செந்தில் தானே என்று சொன்ன வார்த்தை பிரயோகம் போல இருக்கு – இதை எல்லாம் தட்டி விட்டுட்டு போவார் செந்தில்.

    கருத்துக் குருட்டுதனத்தோடு நின்று விட்டால் பரவா இல்லையே

    //
    விவேகானந்தரை பற்றி முக்கால்வாசி இந்துக்களுக்கு 20 வருடங்களுக்கு வரை எதுவும் தெரியாது..
    // (எதோ கருணாநிதி அரசு விவேகானந்தர் சிலையை கன்னியா குமாரியில் நிறுவிய பின் தான் விவேகானந்தர் புகழ் பரவியது என்கிற ரேஞ்சுல இருக்கு 🙂 செந்தில் உங்களது உள்ளக் கிடக்கையை [குமுறலை] எப்படி கண்டுபிடித்து விட்டேன் பார்த்தீர்களா )

    – அவர் காக்க வேண்டியது மௌனம் – ஏன் என்று பர்த்ரு ஹரியே சொல்கிறார் ஏழாவது ச்லோகத்த்தில்

    எப்பா தமிழ் ஹிந்து படிக்கற பொது மக்களே கேட்டுக்கங்கப்பா விவேகானந்தர் எல்லாம் சும்மானான்காட்டிக்கு செந்தில் தாம்பா எல்லாம்.

    சங்கரர் என்ற உண்மையான அத்வைத வேதாந்தி ஷேன் மதங்களை ஸ்தாபித்தார் என்றே வைத்துக் கொள்ளுவோம் – எங்கியுமே இல்லாத ஷண்மதங்களை அவர் எதற்கு ஸ்தாபித்தார் – ஏதாவது ஒரு இடத்தில் காணாபத்யம், குமார்யம், சௌர்யம் இருக்கிறதா என்று காட்ட சொல்லுங்கப்பா

    இப்படி ஒரு கேள்விக்கு உப கேள்வி அதென்ன ஷன் மதம் என்றால் எந்த கேள்வியையும் ஒழுங்கா புரிஞ்சுக்காம ஒரு வெத்து பதில்.

    இவர் தான் ஷன் மதங்கள் தான் எல்லாம் என்று சொன்னார் – அய்யா ஐயப்ப பக்தர்களுக்கு ஷன் மதங்களில் இடமில்லை – ஹிந்து மதத்தில் இடம் உள்ளதால் சந்தோசமாக சேர்ந்துகொண்டார்கள் என்று சொன்னால் அவர்களை தனியாக விடுங்கள் என்று எதோ சொல்கிறார்.

    பிரபு பாதரிடம் – ஸ்வாமின் நீர் ஷன் மதத்தில் ஒரு மதத்தை சேர்ந்தவர் என்றால் கடுப்பாகிடுவார் – ஏன் என்று சொல்ல வேண்டுமா.

    சங்கராசார்யாராய் பிடிக்காதவர்கள் ஷன் மத்தத்தை ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும் ? அதென்ன சேர்த்து ஷன் மதம் தனி தனியா விட்டுரப்டாதா

    (சங்கரர் ஏற்படுத்திய ஷன் மதங்களில் ஒன்றான வைணவத்தில் இருந்து கொண்டு ராமானுஜர் shankara பாஷ்யத்தை எதிர்த்து பாஷ்யம் செய்தார் என்பதை எண்ணிப் பார்க்கா சூப்பரா இருக்கு)

    சங்கராசார்யார் (உங்கள் சொல் படி) மதங்களை ஒழுங்கு படுத்தி ஷன் மதங்களை ச்தாபித்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆனால் விவேகானந்தரை ஏற்றுக் கொள்ளக் கூடாது

    Koenraad Elst அதே புத்தகத்தில் சொல்கிறார் (செந்தில் கட்டாயமாக படித்திருக்க மாட்டார்)

    உலகில் உள்ள பாகன் மக்கள் எல்லாம் ஹிந்துக்களை எதிர்ப்பார்த்து உள்ளனர் – ஹிந்துக்களின் எழுச்சியை போலவே பாகன் மக்கள் மத்தியிலும் உருவாக்க உதவுவார்கள் என்று – ஒரே அணியில் திரளச் செய்வார்கள் என்று !!! ஹிந்துக்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் (அது மாபெரும் சேவையாக இருக்கும் – இதை ஹிந்துக்களால் தான் செய்ய முடியும்)

    உலகில் செமேடிக் மதங்களின் சூழ்ச்சி அழிய வேண்டும் என்றால் இயர்கக்கஈகு அருகாமையில் இருக்கும் பாகன் மதமும் ஹிந்து மதமும் இயற்கையாக ஓரணியில் திரள வேண்டும். பிரான்சு நாட்டில் பாகன் நாடோடிகளை அரசு துன்புரித்திய பொது குரல் கொடுத்தது ஹிந்து இயக்கங்களே என்பதை அறிய கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கிறது.

  36. ஜடாயு,

    நாம் இங்கு நடத்துவது தத்துவார்த்த விவாதமல்ல.. நீங்கள் எழுதிய ஒரு கட்டுரைக்கு, நான் கேட்கும் கேள்விகள்.. நீங்கள் எழுதியது தவறு என்பது எனது நிலைப்பாடு.. அதற்குண்டான எனது விளக்கத்தையும் நான் கொடுத்துள்ளேன்..

    கொயென்ராட் எல்ஸ்ட் பற்றி நான் குறிப்பிட்ட என்னுடைய மறுமொழி, தவறுதான்.. நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு கருத்து, அவர் புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாக வந்ததில், நான் அவசரப்பட்டு இங்கே குறிப்பிட்டு விட்டேன்.. தவறை ஒத்துக் கொள்கிறேன்..

    முக்கியமான வாதத்திற்கு வருவோம்..

    ஹிந்து என்ற சொல் மதம் என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது நான் எனது வாதம்.. நீங்கள் குறிப்பிட்ட ஆதாரங்களே அதற்கு சாட்சி.. அதை நான் முந்தைய மறுமொழியில் விளக்கியிருந்தேன்.. நீங்கள் தகுந்த பதிலை இன்னும் தரவில்லை..

    முதலில் நீங்கள் குறிப்பிட்ட ரிக் வேதத்தில் எடுத்துக் கொள்வோம்.. அதில் ஹிந்து எந்த அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது? மதம் என்ற ஒரு கோட்பாடே, ரிக் வேத காலத்தில் கிடையாது.. அப்படியிருக்கும்பொழுது, மதம் என்ற அர்த்தம் எந்த விதத்திலும் வராது.. இதை நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.. ஹிந்து என்ற சொல், எங்கோ ஒரு இடத்தில் ரிக் வேதத்தில் வந்திருக்கிறது என்பதற்காக, “மதம்” என்ற வார்த்தையை பின்னால் போட்டு, “ஹிந்து மதம் அப்பொழுதிருந்தே இருக்கிறது” என்று முடிவுக்கு வருகிறீர்கள்..

    என்னுடைய நிலைப்பாடு இதற்கு மேல் எப்படி தெளிவாக எடுத்து வைப்பது என்று தெரியவில்லை… நீங்கள் தான் உங்கள் தரப்பை சொல்ல வேண்டும்.. மதம் என்ற அர்த்தம் எப்படி வந்தது என்று விளக்க வேண்டும்..

  37. செந்தில்,

    // ஹிந்து என்ற சொல், எங்கோ ஒரு இடத்தில் ரிக் வேதத்தில் வந்திருக்கிறது என்பதற்காக //

    ஐயோ ஐயோ அது காமெடி சார்:))) ”நீங்க அப்படி எதிர்ப்பார்ப்பீர்கள் போல” என்று எழுதினது கூட புரியலையா?

    6-7ம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் ஹிந்து என்ற சொல்லே சம்ஸ்கிருத இலக்கியங்களில் வருகிறது என்று இந்தக் கட்டுரையே சொல்கிறதே, பிறகு அது எப்படி ஐயா அது ரிக்வேதத்தில் வரும்? :((((

    உலகில் எந்த ஒரு சமூக, கலாசார, மத அடையாளமும் திடுதிப்பென்று ஒரே நாளிலா உருவாகும்? நூற்றாண்டுகளாகத் தொடரும் process அது. ஹிந்து மதம் விஷயத்தில் அது எப்படி நடந்திருக்கிறது என்பதைத் தானே ஐயா புளியைப் போட்டு விளக்கியிருக்கிறேன் இந்தக் கட்டுரையில்.

    Chrisitianity என்ற சொல் பைபிளில் இல்லை. அதனால் அது மதம் இல்லை என்று ஆகி விடுமா? இதைப் புரிந்து கொள்வதற்கு ராக்கெட் சயின்ஸ் தெரியவேண்டுமா என்ன?

    // உலகளவில் தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளுதல் என்ற அடிப்படையிலேயே நமது மதத்திற்கு ஹிந்து என்ற பெயர் உருவாயிற்று (ஆராய்ந்து பார்த்தால், எல்லா மதங்களுக்கும், தேசங்களுக்கும் பெயர்கள் இந்த வகையில் தான் உருவாகியுள்ளன, இந்து மதம் மட்டும் இதில் விதி விலக்கு அல்ல). ஆனால் அதனாலேயே அந்தப் பெயர் ஆசாரக் குறைவானதாகவோ, அல்லது ஒட்டாததாகவோ ஆகி விடாது. அப்படி எண்ணுவது ஒரு குருட்டுத் தனமான, நடைமுறைக்கு ஒவ்வாத தூய்மைவாதம் அன்றி வேறில்லை. மாறாக, வரலாற்றின் போக்கில் உருவாகி, வளர்ந்து, திரண்டு வந்த ஹிந்து என்ற பெயரே இயல்பானதும், வேர்கொண்டதும் ஆகும். //

    நீங்க இந்தக் கட்டுரையை முழுதாகப் படித்தீர்களா என்றே தெரியவில்லை. படித்து விட்டு கேள்வி கேளுங்க தலைவா. கொஞ்சம் கருணை காட்டுங்க, ப்ளீஸ்.

  38. இன்னொன்று.. இந்திய சிந்தனைப் படி மதம் என்ற சொல்லும் “ஞான மரபு” என்ற சொல்லும் ஒரே பொருளைத் தான் குறிக்கிறது. நவீன காலகட்டத்தில் தான் நாம் மதம் என்ற சொல்லை religion என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்துகிறோம், அவ்வளவே..

    இது பற்றி எனது இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளேன்:
    மதமெனும் பேய் – https://tamilhindu.com/2010/11/madham-enum-pey/

  39. /** 6-7ம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் ஹிந்து என்ற சொல்லே சம்ஸ்கிருத இலக்கியங்களில் வருகிறது என்று இந்தக் கட்டுரையே சொல்கிறதே, பிறகு அது எப்படி ஐயா அது ரிக்வேதத்தில் வரும்? 🙁 (((
    **/

    ஏன் இப்படி பிளேட்ட மாத்தறீங்க..

    நீங்கள் குறிப்பிட்ட சாராம்சம் இதுதான்..

    /** சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது
    **/

    6-7 ஆம் நூற்றாண்டில் சம்ஸ்கிருதத்தில் இருந்து மற்ற இந்திய மொழிகளுக்கு செல்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறீர்களே தவிர, சமஸ்கிருதத்திலேயே முதன் முதலில் அப்பொழுதுதான் வருகிறது என்று சொல்ல வில்லை.

    ஏன் இந்த முரண்பாடு? நீங்கள் எழுதிய கட்டுரை உங்களுக்கே நினைவில்லையோ?

    >>> ஜாதுஸ்தா²னே ஜைனசப்³த³: ஸப்தஸிந்து⁴ஸ் ததை²வ ச |
    >>>ஹப்தஹிந்து³ர் யாவனீ ச புனர்க்ஞேயா கு³ருண்டி³கா ||

    >>> ஜாதுஸ்தா²னே ஜைனசப்³த³: ஸப்தஸிந்து⁴ஸ் ததை²வ ச |
    >>>ஹப்தஹிந்து³ர் யாவனீ ச புனர்க்ஞேயா கு³ருண்டி³கா ||

    நீங்கள் உங்கள் கட்டுரையில் மேலே உள்ள ஸ்லோகத்தை பவிஷ்ய புராணத்தில் இருந்து எடுத்து குறிப்பிட்டுள்ளீர்கள்.. பவிஷ்ய புராணம், கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கு முன்னாளேலேயே எழுதப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.. அதிலேயே ஹிந்து என்ற சொல் வந்துள்ளது, என்று நீங்களே எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். அப்படியிருக்க, ஹிந்து என்ற சொல், 6-7 ஆம் நூற்றாண்டில்தான் வந்தது என்று குறிப்பிட்டதாக இப்பொழுது சொல்கிறீர்கள்.. உங்கள் கட்டுரையை நீங்களே கொஞ்சம் திரும்பி பாருங்கள்.

    (நான் பவிஷ்ய புராணத்தில் நீங்கள் குறிப்பிட்ட சுலோகத்தைதான் தவறுதலாக ரிக் வேதம் என்று குறிப்பிட்டுவிட்டேன்..)

    /** உலகில் எந்த ஒரு சமூக, கலாசார, மத அடையாளமும் திடுதிப்பென்று ஒரே நாளிலா உருவாகும்? நூற்றாண்டுகளாகத் தொடரும் process அது. ஹிந்து மதம் விஷயத்தில் அது எப்படி நடந்திருக்கிறது என்பதைத் தானே ஐயா புளியைப் போட்டு விளக்கியிருக்கிறேன் இந்தக் கட்டுரையில்.
    **/

    உலகில் இருக்கும் சமூகமும் கலாச்சாரமும் எதை நோக்கியும் சென்றதில்லை.. செல்வதுமில்லை.. ஐரோப்பா பகானிய கலாச்சாரங்கள், கிறித்துவ மதத்தை நோக்கி சென்று அதில் விருப்பத்துடன் ஐக்கியமாகிவிட்டதா என்ன? கிறித்துவ மதம், இந்த பகானிய மதங்களை அழித்து, அடையாளத்தை மாற்றி தன்னை நிறுவிக் கொண்டன..

    அதே போல தான், பாரதத்தில் இருந்த சமூகங்களும் கலாச்சாரங்களும், எந்த ஒரு பெரிய அடையாளத்தை நோக்கியும் செல்ல வில்லை.. ஆனால், நீங்கள் என்னவோ, எல்லா சமூகங்களும், கலாச்சாரங்களும், இந்து என்ற அடையாளத்துக்காக ஏங்கி இருந்த மாதிரியும், கடைசியில் அனைத்தும் கலந்து இந்து என்ற மதமாக உருமாறியதுமாக சொல்கிறீர்கள்..

    நீங்கள் சொல்வது பகுத்தறிவுக்கு எந்த விதத்திலும் ஒவ்வாதது என்று தான் நானும் இவ்வளவு நாளா கத்திக்கிட்டு இருக்கேன்.. கத்துவதோடு இல்லாமல், அதற்குண்டான விளக்கத்தையும் விலாவாரியாக கொடுத்துள்ளேன்..

    /** Chrisitianity என்ற சொல் பைபிளில் இல்லை. அதனால் அது மதம் இல்லை என்று ஆகி விடுமா? இதைப் புரிந்து கொள்வதற்கு ராக்கெட் சயின்ஸ் தெரியவேண்டுமா என்ன?
    **/

    கிறித்துவம் என்பது ஒரு மதம்.. மதம் என்ற வரையரை அதற்கு பொருந்தும்…. ஆனால் இந்து என்பது மதமா? கிறித்துவத்துக்கு பைபிள் இருக்கிறது.. ஹிந்து என்று நீங்கள் கற்பனை செய்து கொண்ட மதத்துக்கு எதுவுமே கிடையாது.. அது ஒரு பிராந்திய மக்களை குறிக்கும் சொல்.. எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறீர்கள்?

    கிறித்துவத்தை சைவத்தோடும் வைண்வத்தோடும் ஒப்பிடுவதுதான் சரியான முறை.. ஏன் இதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.. இந்து என்பது, ஜெயமோகன் சொல்வது போல ஒரு தொகுப்பு. அவ்வளவே.. அது தனித்து நிற்க கூடிய ஒரு மதமல்ல.. அது ஒரு மதமே கிடையாது..

    ஜடாயு என்பவர் ஆசா பாசமுள்ள ஒரு தனி மனிதன்.. ஆனால், தமிழ் ஹிந்து ஆசிரியர்கள் எல்லாரையும் சேர்த்து நிற்க வைத்தால அது ஒரு கூட்டம்.. அந்த கூட்டத்தையும் திரு. ஜடாயுவை போன்று மனிதனாக பாவித்தால் சரியாக இருக்குமா?

    செந்திலையும் (நான் தானுங்கோ) ஜடாயுவையும் ஒப்பீடு செய்யலாம்.. ஆனால் செந்திலையும் கூட்டத்தையும் ஒப்பீடு செய்ய முடியுமா?

    இந்த கேள்விக்கு ஜடாயு அவர்களின் பதிலை எதிர் பார்க்கிறேன்.. இதுவரை நீங்கள் தெளிவான பதிலை சொல்லவில்லை..

  40. //ஜடாயு என்பவர் ஆசா பாசமுள்ள ஒரு தனி மனிதன்.. ஆனால், தமிழ் ஹிந்து ஆசிரியர்கள் எல்லாரையும் சேர்த்து நிற்க வைத்தால அது ஒரு கூட்டம்.. அந்த கூட்டத்தையும் திரு. ஜடாயுவை போன்று மனிதனாக பாவித்தால் சரியாக இருக்குமா?
    //

    ரொம்ப சிரிச்சுட்டேன் இத படிச்சு 🙂

    செந்தில் வாழ்க உங்கள் சித்தம்

  41. திரு செந்தில்

    நீங்கள் இந்தியர் தானே ? உங்கள் வாழ்கையில் பல படிமங்களை பூர்திசெய்து இருப்பீர்கள். அதில் கேட்கப்படும் உங்கள் மதம் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லி வந்திருக்கிறீர்கள் ? இந்தியாவில் வாழ்ந்தவர்களை மிலேச மதங்கள் தோன்றுவதற்கு முன்னாலிருந்தே ஹிந்தக்கள் ஹிந்து சமுதாயத்தினர் என்று நாம்தான் அடையாளபடுத்தியுள்ளோம். அப்படிப்பட்ட அடையாளம் வேதநூல்களில் இல்லைதான். ஆனால் இந்த அடையாளம் நான்காம் நூற்றாண்டு முதல் பல புராணங்களிலும் சமிஸ்கிருத இலக்கியங்களிலும் சொல்லியிருப்பதற்கு சான்றுகள் கொட்டி கிடக்கின்றன. அதனால்தான் உலகத்தார் நம்மை ஹிந்து சமுதாயத்தினர் இங்கே வாழ்பவர்கள் ஹிந்துக்கள் என்றுதான் அழைத்துவந்துள்ளனர் என்பதையாவது ஒப்புக்கொள்வீர்களா ? இங்கே வாழ்ந்தவர்கள் பலதரப்பட்ட இயற்கை வழிபாட்டையும் முன்னோர்கள் வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் பின்பற்றுபவர்கள் என்பதை ஒத்துகொள்வீரா ? இதுதான் ஒருகாலத்தில் உலகெங்கிலும் பின்பற்றிவந்த பாகனிய வழிபாடு என்பதை ஏற்றுகொள்கிறீர்களா ? இந்த பாகனிய வழிபாட்டுமுறை கலாசாரம் தேசத்திற்கு தேசம் மாறி இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ? இந்தியாவில் பின்பற்றி வரும் கலாசார வழிபாட்டு முறை பல ஒற்றுமைகள் தவிற ஏதோ சில பழக்கங்கள் வேறுபட்டதுதான் என்பதை ஒத்துகொள்கிறீர்களா ? இப்படி பல ஒற்றுமை தன்மைகளை கொண்ட கலாசார பழக்கவழக்கங்களை தான் ஹிந்த்துவம் என்று கூறுகிறார்கள் என்பது தெரியுமா ?.

    மற்ற மிலேச மதங்கள் தோன்றாத வரையில் நம் வழிபாட்டு பன்முகதன்மைக்கு பெயர் தேவையில்லை. அதன் அவசியம் பிறகு ஏற்பட்டதால்தான் உலக மக்களும் ஏற்றுக்கொண்டு நம்மை அழைத்த ஹிந்து சமூதாயம் என்ற பெயராலேயே நாம் பின்பற்றும் வழிபாட்டு பழக்கவழங்கங்களுக்கு ஹிந்து மதம் என்பதை ஏற்றுக்கொண்டுடோம். இது மற்ற மதத்தவரை நம்மிடமிருந்து வேறுபடுத்தி காட்டவேண்டிய கட்டாயத்தினால் ஏற்பட்டதுதான். இப்படிப்பட்ட பன்முகதன்மை கொண்ட வழிபாடுகளை மிலேச மதங்களைபோல் ஒருமுக தன்மை கொண்டதாக ஆக்கமுயற்சிப்பது முற்றிலும் தவறுதான். அவ்வாறு செய்ய யாரும் முயர்சிப்பதாகக்கூட எனக்கு தெரியவில்லை. அதற்கு இந்து மதம் என்ற பெயரை ஏற்றுக்கொண்டது தான் காரணம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் சில எல்லை அம்மன் கோவில்களிலும் ஐயனார் கோவில்களிலும் மூல விக்ரகங்களும் அதையொட்டிய சில விக்கிரங்களும் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் இப்பொழுது வினாயகர் விக்கிரகம் நவகிரங்கள் ஆஞ்சநேயர் போன்றவையும் இங்கேயெல்லாம் பிரிஷ்டை செய்யப்பட்டுவருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. இதற்கெல்லாம் எந்த ஆகம விதிகளையும் பின்பற்றுவதாக்கூட தெரியவில்லை. இதனால் மூல விக்ரகத்தின் புகழ் குறைவதோடு அந்த வழிபாட்டை ஏற்படுத்திய குல குழுக்களின் பாரம்பரியம் பாதிக்கபடுகின்றதா என்பதையும் இந்துக்கள் யோசித்து செயல்படவேண்டும். அவர்களாகவே மாற்றிகொள்வதற்கு மனம் உவந்து வந்தாலும் நாம் அதை கட்டாயம் மறுக்கவேண்டும். இல்லையெனில் அதன் தனித்துவம் மெல்ல மறையத் தொடங்கும். இதுதானே உங்களின் குற்றசாட்டு ? இந்த குளருபடிகளுக்கெல்லாம் ஸெக்யூலர் என்று சொல்லிக்கொண்டு அரசாங்கம் வழிபாட்டு தலங்களில் தலையிlட்டு அதை ஒரு வியாபாரமாக மாற்றிக் கொண்டிருப்பது தான் காரணம் அன்றி பன்முக தன்மை கொண்ட இந்து மதம்மும் ஹிந்துத்வம் பேசுபவர்களும் அல்ல.

    நீங்கள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறீர்கள் அதற்கான விடையை மற்றவர்களிடம் எதிர்பார்த்து வாதம் செய்வதாகவே எனக்கு தோன்றுகிறது. இதற்கு மாற்று என்ன என்பதை பற்றி தங்களது கருத்துகளை ஒரு கட்டுரையாக உங்கள் தளத்தில் வெளியிடுங்கள் என்று கூறியும் அதை செய்யாமல் வர்ணாஸ்ரம தர்மம் என்று சாகடிக்கப்பட்ட ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

  42. முதலில் மதம் என்றால் என்ன ????ஆபிரகாமியம் கூறும் ஒரே தேவன் கோட்பாடு இருக்க வேண்டும்,அழுது வடிந்த முகமாய் மக்கள் இருக்க வேண்டும்,எல்லையற்றதாய் விரிவடையும் இப்பிரபஞ்சம் ஓர் தேவ தூதன் வருகையின் போது அழிவுற்று அத்தேவனை வணங்கிய மக்கள் மட்டும் காப்பாற்ற படுவர் என கூற வேண்டும்,ஏனைய அணைத்து சமூகமும் சாத்தன் என கருத வேண்டும்….இப்படி இப்படி இருந்தால் மதம் என ஒத்துகொள்விர்கள???

    இயேசு வரும் முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் எம்மதத்தை சேர்ந்தவர் என அழைக்கப்பட்டனர் ????இந்து எனும் சொல்லை பாவிப்பதில் என்ன தவறு உள்ளது ?? நமக்கு இருக்கும் அடையாளத்தை இவுலகில் பதிவுசெய்ய ஒரு பெயர் அவசியம் தேவை.இந்து மதம் பண்டைய இந்தியாதேசதில் தோன்றியது என்பது அனைவரும் அறிந்த உண்மை,அப்படி இருக்க இந்து மதத்திற்கு பாரததாயின் பெயருடன் தொடர்புடைய பெயர் இருப்பதில் என்ன தவறு?

    நன்றி
    கொழும்பு தமிழன்

  43. திரு செந்தில்
    //ஹிந்து என்பதை ஒரு பிராந்திய அடையாளமாக இருந்ததில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.//
    அப்படி என்றால் இந்த பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்தவர்களையும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் ஹிந்துக்கள் என்று அழைப்பதை ஏற்கீறீர்களா ? சரி என்றால் நீங்கள் ஒரு ஹிந்து அல்லவா. அதோடு அல்லாமல் இங்கேயே பிறந்து வளர்ந்து மதம் மாறி மறைந்தவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியரும் கிருஸ்துவரும் தான் ஹிந்து. இதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் சத்தியமாக ஏற்க்கபோவதில்லை. பின் எப்படி உங்களை அவர்களிடமிருந்து வேறு படுத்தி காட்டவேண்டும் என்பதை நீங்களே கூறுங்கள்.
    //நான் கேட்பதெல்லாம், இந்து மதம் என்று எப்படி இவர்கள் சொல்கிறார்கள்.. கேள்வி கேட்டால், இந்து மதம் என்பது, எல்லா மதங்களின் தொகுப்பு என்கிறார்கள்.. அந்த விளக்கமே சரியில்லை என்கிறேன்.. மதங்களின் தொகுப்பு, எப்படி தனி மதமாக மாற முடியும்? இதுக்கு இதுவரை யாரும் பதில் சொல்ல வில்லை..உதாரணம் சொல்ல வேண்டுமானால், ஆப்ரகாமிய மதங்கள் என்று நாம் அடிக்கடி சொல்கிறோம்.. அது, யூத மத கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட மதங்களின் தொகுப்பை குறிக்கும்.. ஆப்ரகாமிய மதம் என்று தனியாக ஏதாவது இருக்கிறதா? //
    அப்படி என்றால் ஹிந்து மதம் என்று நாம் அடிக்கடி சொல்கிறோமே அது வேத வைதீக கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட மதங்களின் தொகுப்பை குறிக்கும். ஹிந்து மதம் என்று தனியாக ஏதாவது இருக்கிறதா ? இல்லைதான் – இதை நீங்கள் ஏற்கிறீர்களா ? ஆதிசங்கரர் வாழ்தபோது வேத வைதீக கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு சுமார் 72 மதங்கள் இருந்த்தாகவும் அவற்றை சங்கரர் ஆறு மதமாக மாற்றினார் என்பதை ஏற்கிறீர்களா ? ஆம் என்றால் 72 தொகுப்பு மதங்களை 6 மதங்களாக மாற்றியது போல் அதே வேத வைதீக கோட்பாடுகளை உள்ளே வாங்கிய இந்த 6 மதங்களை ஒரு மதமாக ஏன் கருதக்கூடாது. அதைதான் இந்திய அரசாங்கம் செய்து உங்களை ஹிந்து மதத்தை சேர்நதவன் என்று அடையப்படுத்தியுள்ளது. இதில் ஜைன சீக்கிய புத்த மதத்தை சேர்த்துள்ளது. இல்லை இது தவறு எப்படித்தான் இருக்கவேண்டும் என்பதையாவது விளக்கி சொல்லுங்களேன்.

  44. என்னுடைய முகநூல் தளத்தில் தமிழ் ஹிந்து வலைதளத்தின் லிங்கை ஒரு நண்பர் அனுப்பி இருந்தார் அவருக்கு கோடி நன்றிகள்…! இந்த வலைத்தளத்தில் பார்த்தபிறகு என்னுள் பலவிதமான மாற்றங்களை நான் உணருகிறேன் .. நம் மதத்தின் பெருமைகளையும் ,சிறப்புகளையும் நான் எவ்வாறு என்னுடைய குழந்தைகளுக்கு புரியவைப்பது என்று விழி பிதுங்கி இருந்தேன். இனி எனக்கு அந்த கவலை இல்லை நன்றி தமிழ் ஹிந்து ..

  45. சிந்து என்ற ஒரு இடத்தின் / நிலப்பகுதியின் பெயர் பின்னர் ஹிந்து என்று தடம் புரண்டது எனில் அயலாரின் கண்ணில் “ஹிந்து” என்ற வார்த்தை ஒரு நாட்டை குறித்ததே தவிர அவர் பின்பற்றிய சமயத்தை அல்ல என்பது தெளிவு. அந்த ஹிந்து நாட்டில் மக்கள் எந்த சமயத்தை போற்றுகின்றார்கள் என்று வகைப் படுத்த இயலாத போது அயலான் அதை ‘Hindu Personal Law’ என்று எழுத போய் அதுவே பின்னாளில் ‘ஹிந்து மதமாக’ மாறியது என்பதுதான் உண்மை. அப்படியானால் “ஹிந்து மதம்” என்பது இடைச்சொருகளே. இதற்க்கு மாற்று கருத்து உண்டோ?

  46. ஹிந்து- என்பதற்கான விளக்கமாக என் மானசீக குருனாதர், தெய்வத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் விளக்கம். அஹிம்சை என்பது ஒரு உயிரை வதைப்பது. அதன் எதிர்ப்பதம்- ஹிம்சை. ஹிம்சை செய்யப்படுவதைக் கண்டு துக்கப் படுபவர் ஹிம்-துக். நாளடைவில், ஹிம்துக் என்பது மறுவி ஹிம்து, ஹிந்து, என்று கூறப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவில் இன்றும் இந்தியாவில் இருந்து வேலைக்குச் செல்லும் இந்துக்களை “ இந்த் ஹிந்தி” என்று வினவுகிறார்கள். இந்தக் கருத்தைப் பற்றி அன்பர்களின் விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  47. தமிழில் அல் என்றால் நிலவு எல் என்றால் சூரியன். இந்து என்றாலும் நிலவு என்றி பெயர் இந்துராணி யின் கணவன் இந்திரன் என்பது நிலவின் மற்றொரு பெயரே. இந்திர வணக்கம் இந்துயாவின் பழைய வழிபாடு, அந்த வழி பாட்டின் தொடக்குனர் மா அல்,மால், திருமால் எனப்பட்டார். இந்திர வணக்கமுடையவர்களை இந்துக்கள் எனப்பட்டனர். ஆதியில் கி மு 2500 வாக்கில் அப்போதுதான் நிலமாக மேலெழுந்த இப்போதைய சவுதி அரபி யாவில் இந்த இந்து மதமே அல் மதமாக சென்றது அல் என்பதே அல் லா எனப்பட்டு பிறை பர பார்த்து கொட்டும் மதமாய் இருந்தது. இந்த வேரில் சேர்ந்த வருண வழிபாடும் சூரியனை குறிக்கும் சக்கரமும் வாலியோன் வழிபாட்டை பலரமானாக சேர்ந்து திருமாலாக உருவெடுத்த மா வாணன் மகவிட்னுவாகி வைஷ்ணவம் என்று இன்று பின்பற்றிவறுகிறோம். காசுமீர் வராக துவரை ஆகிய பன்றி துவாரகையில் ஆண்ட சேர வழிவந்த வேளிர் அரசனே மகா விட்ணு.

  48. பழைய ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் அதன் தொடர்ச்சியை புதியமதம் என்று எப்படி கூரமுடியும்? இந்த வழியை உலகில் இசுரவேளரும் ஈசா வழியினரும் முகமது வழியினரும் பின்பற்றுவது போலவே இந்துக்களும் பழந் தொடர்ச்சியை பின்பருகிறவர்கள் இந்தியாவில் இந்துக்கள். இதில் குழப்பம் என்ன?

  49. இந்தக் கட்டுரையை நான் இப்பொழுதுதான் படித்தேன். நன்றாக இருக்கிறது என்பதைத் தவிர, இக்கட்டுரையைப் பற்றி நான் ஒரு கருத்தும் சொல்லப் போவதில்லை. இப்பொழுது திரு செந்தில் என் பதிலைப் படிக்கப் போகிறாரா என்றும் தெரியவில்லை.
    1. அவரது ‘ஷன் மதம்’ என்ற கேள்விக்குப் பதில் அளிப்பதற்குமுன் திரு ஜெயக்குமாருக்கு ஒரு குறிப்பு. வடமொழியில் ‘ஹிம்சை’ என்றால் ‘துன்புறுத்தல்’ என்று பொருள். ‘அஹிம்சை’ என்பது எதிர்மொழி. அதாவது, ‘துன்புறுத்தாமை’. என்று கொள்ள வேண்டும். யாரையும் துன்புறுத்தாமல் இருப்பது ‘ஹிந்து மதம்’ என்று உங்கள் குருநாதர் விளக்கினார் என்று பொருள் கொள்கிறேன். தாங்கள் ‘ஹிம்சை’ என்றல் ‘துன்புறுத்தாமை’ என்று எழுதியிருப்பது அவசரத்தினால் எனப்பட்ட ஒன்றோ என்று ஐயுறுகிறேன். அப்படி இல்லை என்றால், அருள் கூர்ந்து, அந்தச் சிறிய தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்.
    2. ma pari advavocate அவர்களே. நீங்கள் எழுதியிருப்பதற்கு எங்காவது சான்று இருந்தால், அதைத் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    3. இப்பொழுது “ஷன் மதத்தை” பற்றிய விவாதத்திற்கு வருவோம். ‘இந்து’ என்ற சொல் ‘சிந்து’ நதிக்கு அப்பால் உள்ளவர்களைக் குறித்தாலும் (வடமொழியின் ‘ஸ’ என்ற ஒலி பாரசீகத்தில் ‘ஹ’ என்று மாற்றப் பட்டது, ‘ஷ’ என்ற வடமொழி ஒலி தமிழில் ‘ட’ என்று மாற்றி ஒலிக்கப் படுவதைப் போல. உதாரமாக, ‘அஷ்ட’ என்ற சொல் தமிழில் ‘அட்ட’ என்று ஒலிக்கப்படுகிறது.) எனவே, சிந்துக்கள் என்பதைப் பாரசீகர்கள் ஹிந்துக்கள் என்று குறிப்பிட்டார்கள். அதே பகுதி, அங்கு வாழும் மக்களால் ‘பாரதம்’ என்று குறிப்பிடப்பட்டு வந்தது. இன்றும் இந்தியாவுக்கு, ‘பாரத்’ என்ற பெயரும் உண்டு. நாணயங்களில் இந்தியில் எழுதி இருப்பதைப் பாருங்கள்.
    2. கிறித்தவ மதத்திலும், இஸ்லாமிலும், பல பிரிவுகள் இருப்பது போல, இங்கும் இருக்கும் மதத்திலும், பல பிரிவுகள் இருக்கின்றன. வேதங்களிலும், உபநிடதங்களிலும் குறிப்பிடப்பட்ட பரம்பொருளை, சிவன், விஷ்ணு, கணபதி, சக்தி, குமரன், சூரியன் என்று அழைத்து வழிபட்டு வந்தனர். அந்த முக்கியமான ஆறு பிரிவுகளும், ஆதி சங்கரரால் (தமிழனாகிய ஆதி சங்கரரால்) “ஷன் மதங்கள்”, அதாவது “ஆறு சமயங்கள்” என்று குறிப்பிடப்பட்டன. “அத்வைதம்” (இரண்டற்றது, பரம் பொருளும், மற்ற உயிர்களும் ஒன்றே) என்ற தத்துவ விளக்கத்தை உபதேசித்த ஆதி சங்கரர், “ஸ்மார்த்தம்” என்ற கொள்கையை உண்டாக்கி, இந்த ஆறு பிரிவினரும், வேதங்களையும், உபநிடதங்களையுமே பின்பற்றுவதால், பரம்பொருளை “பிரம்மம்” (பிராமணனோ, அல்லது படைக்கும் கடவுளான ‘பிரமனோ (ப்ரஹ்மா) அல்ல) என்று குறிப்பிட்டாலும், தங்களுக்கு என்று ஒரு “விருப்பக் கடவுளை” (இஷ்ட தெய்வம்)த் ‘பிரம்ம’மாகத் தொழுது, ஸ்மார்த்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மடங்களை நிறுவினார். இதுதான் “ஷன் மதங்கள்” பற்றிய எளிய விளக்கம்.
    3. பாரதத்தில் இருந்த எல்லா சமயங்களுக்கும் வேத நூல்கள் ஒன்றுதான் (இங்கு நான் same sacraments என்ற அர்த்தத்தில்தான் குறிப்பிடுகிறேன்). எனவே பிரிவுகளான சமயங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதை நிறுத்தவே, ஆதி சங்கரர் அத்வைதக் கொள்கையை பரப்பினார்.
    4. பாரதத்தில் இருந்தால் பல்வேறு சமயங்களும் ஒரே பரம் பொருளைப் பலவாறாக அழைத்து வந்தன என்று நிரூபணம் செய்தோம். கிறித்தவ, இஸ்லாமிய சமயங்களுக்கு நிறுவனர்கள் (இயசு கிறிஸ்து, முஹம்மது நபி) இருப்பது போல, இந்து சமயத்திற்கு நிறுவனர் யாரும் கிடையாது. எனவே அதை சனாதன (ancient, eternal, பழைய, புராதன) சமயம் என்று அழைத்தார்கள். வேதங்களைப் பின்பற்றுவதால் ‘வைதிக’ சமயம் என்றும் சிலர் சொல்வார்கள். அதையே தற்போழுது இந்து சமயம் என்று குறிப்பிட்டு வருகிறோம். ஒரே ஆளை, தாய், மகன் என்றும், உடன் பிறப்புகள் “அண்ணன், தம்பி” என்றும், பிள்ளைகள் ‘அப்பா’ என்றும், பேரப்பிள்ளைகள் ‘தாத்தா” என்பது போலவும், ஒரே சமயமே, பல பெயர்களில் அழைக்கப் படுகிறது. இதற்காகத் தேவை இல்லாமல் விவாதம் செய்யாமல், நமது சமயத்தைப் புரிந்து கொள்வதில் திரு செந்தில் அவர்கள் தனது பொன்னான நேரத்தைச் செலவிட வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அவர் நாத்திகராக இருந்தாலும், இந்து சமயம் அவரைத் தன் குழந்தையாகவே ஏற்றுக் கொள்கிறது.
    ஓம் நமச்சிவாய!

  50. செங்கிருதச் சொல்லான சிந்துவிலிருந்து இந்து மறுவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[2][3]
    பிரகாஸ்பதி ஆகமத்தில்

    हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
    तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
    ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
    தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ..
    பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.[4][5]
    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

  51. இந்து என்பது சிந்து என்பதிலிருந்து வந்தது என்போரும் உண்டு. இந்து என்றால் வேத மொழியில் சந்திரன் அல்லது மதியை குறிக்கும். மதியுடையோர் அதாவது புத்திக் கூர்மை உடையோர் வாழும் நாடு என்றும் பொருள் உண்டு. சிவபிரான் இந்துசூடி அதாவது பிறைசூடி எனப்படுவான். எனவே, பிறைசூடியை வணங்கும் மக்கள் வாழ்ந்த பகுதி இந்து நாடு அல்லது இந்து தேசம் எனவும் பொருள் உண்டு.

  52. இந்து என்ற சொல் எந்த மொழிச் சொல் (என்னை பொறுத்த வரை அது தமிழ்ச்சொல் ,தமிழில் அதற்க்கு வேர் இருக்கிறது ,அதைத்தான் நான் மேலே குறிப்பிட்டு இருந்தேன் ) என்று முடிவுகட்டிவிட்டு பிறகு அதற்க்கு பொருள் விளக்கம் தருவதே சரியாக இருக்கும்.

  53. கி. பி 12 ஆம் நுற்றாண்டு ,ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்க சோழன் உலாவில், குலோத்துங்க சோழனை ” பொன் துவரை இந்து மரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த ” பொன் துவரை = பொன் நாட்டு இன்றைய துவாரசமுத்திரம் என்ற துவி அரையம் ஆண்ட ,இந்து மரபு = சந்திர குலத்தை சேர்ந்தவனும் , தாய்வழி அரசுரிமை பெற்று , மனுக்குலத்தை = மனு நீதி சோழ மரபை வாழ்விக்க வந்தவன் என்று பொருள் . இந்து மரபு என்பதே இந்து மதம் என்று இன்று நம்மால் கூரப்படுகிரது. வேள்வியில் பிறந்தவர்களாக (தடவினால் தோன்றியவர் ) குறைப்படும் வேளிர்கள் அனைவரும் இந்து மரபினர் ஆவார் .

  54. கி பி 5 ஆம் நுற்றாண்டு ,poolangkurichchi தமிழ் கல்வெட்டில் , “இந்து ” என்ற சொல் காணப்படுகிறது . அநேகமாய் இதுவே காலத்தால் முந்திய இந்து என்றசொல்லின் பதிவாக இருக்கும்.

  55. சிந்து என்றால் ஆறு என்று பொருள் ,இது ஒருனதிக்கான பெயர் அல்ல எல்லா நதிக்குமே யான பெயர் என்கிறார் ,ஆய்வாளர் ராகுல சங்கிருத்தியாயன்,அவர்தம் ரிக்குவேத கல ஆரியர்கள் நூல். சிந்து என்ற பெயர் சிந்துதல் என்பதடியாக வந்தது என்கின்றார் தமிழ் சொல்லாய்வு அறிஞர் பாவாணர். ஆகவே இந்து என்ற பெயருக்கும் சிந்து நதிக்கும் எந்த தொடர்பும் இல்லை . வின்ன மலை -விந்த(ன்)மலை-விந்தியமலை-விந்திரன் -இந்திரன்- இந்து -இந்துமதம் ,இந்து நாடு /இந்து ஸ்தானம் என்று பெயரை பெற்றது. விண்ண -விட்ணு -விட்டல்/ விஷ்ணு என்பதே இந்து என்பதற்கு அடிநாதம் ஆகும். இந்து மதம் தமிழர் மதம் ஆகும் .

  56. அன்பின் இனியவரே…. வணக்கங்கள்
    நான் இந்த வலைதளத்திற்க்கு புதியவன். என் கேள்விகளில் ஏதேனும் தவறிருந்தால் அதை மன்னித்து பதிலளிக்கவும்..

    என் கேள்வி உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும் எனது தேவையை நிறைவு செய்க.
    இந்துமதத்தின் அடிப்படை வேதங்களான ரிக், யஐூர் என்பவற்றில் கடவுள் உருவம் பற்றிய ஸ்லோகங்கள். வேதவரிகளை குறிப்பிட்டு அதன் விளக்கங்களை தெளிவு படுத்தவும். தயை கூர்ந்து இந்த உதவியை செய்யவும் என மன்றாடி கேட்டுகொள்கிறேன்.

    நன்றி

  57. தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்ற கருத்தை மறைமலை அடிகள் காலம் முதல் சிலர் கொண்டிருந்தாலும், அவர்கள் தமிழர் மதம் என்பதை என்னவென்று இன்றைய தேதி வரை வரையறுத்து சொல்ல வில்லை. சைவம் முற்றிலும் வேத வழியிலிருந்து விலகி நிற்கிறது என்று சொல்வதற்கும் முயற்சிதான் செய்கிறார்களே அன்றி அவர்களால் உறுதிப் படுத்த முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் தங்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொல்லிக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லாத போதும் அதை அவர்கள் அப்படி பதிவு செய்வதில்லை. அல்லது மாற்று மதங்களை ஏற்கவோ மதமற்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளவோ துணிவதும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *