உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்

மதுரை மாவட்டம் எழுமலைக்கு அருகில் உள்ளது உத்தப்புரம் கிராமம். எழுமலை இதன் தாய்கிராமம். 18 பட்டி கிராமங்களுக்கும் எழுமலை தாய்கிராமம்.

உத்தப்புரத்தில் பிள்ளைமார்கள், அரிசனங்கள், முத்தரையர்கள் மற்றும் சில ஜாதியினரும் வசித்து வருகிறார்கள். உத்தப்புரம் கிராமத்தில் அருள்மிகு முத்தாலம்மன் – மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அரசமரம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருதரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்தது.

இது குறித்து 1989, 1990-ல் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தில் 6 பேர் பலியாயினர். பின்னர் எழுமலையில் வைத்து இரு சமுதாயப் பெரியோர்களும் முன்னாள் MLA தவமணித்தேவர் (ஃபார்வர்டு பிளாக்) எழுமலை பண்ணையார் S.A.நடராஜன் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் முன்னிலையில் வைத்து அமைதியான சூழ்நிலை நிலவப்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு சமுதாயத்தினரிடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.

இரு தரப்பிலும் வன்முறை, கொள்ளை, தகராறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்புடன் வாழத்  ‘தடுப்புச்சுவர்’ இருதரப்பினர் சம்மதத்துடன் கட்டப்பட்டது. அரசமரம், முத்தாலம்மன் கோயில் பிள்ளைமார்களுக்கு உரியது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதற்கு இருதரப்பிலும் கடுமையான விரதம் இருந்து அரசமர வழிபாடு, முத்தாலம்மன் கோயில் வழிபாடு சம்பந்தமாகச் ‘சத்தியம்’ செய்து கொண்டனர். அதிலிருந்து இருதரப்பினருக்கும் தண்ணீர், உணவு என்று எந்தப் புழக்கமும் கிடையாது.

இந்த நிலையில் தான் தாழ்த்தப்பட்டவர்களால் ஓரங்கட்டப்பட்ட மா.கம்யூ கட்சி தங்களை அரசியல் ரீதியாக வளர்த்துக்கொள்வதற்காக உத்தப்புரம் பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கினர்.

இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டு கட்டிய தடுப்புச் சுவருக்கு ‘தீண்டாமைச் சுவர்’ என்று பெயரிட்டு, ‘இதில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது, இதில் உயிர்பலி உண்டாகும், அரிசனங்களை மேல்சாதிப் பிள்ளைமார் நசுக்குகிறார்கள்’ என்று பேசி அமைதியைக் குலைத்தனர்.அமைதியை விரும்பாத சில ஆங்கிலப் பத்திரிகைகள், மீடியாக்களும் முயற்சி செய்தன.

‘தீண்டாமைச் சுவர்’ என்று பெயரிடப்பட்ட சுவரை இடிக்க வேண்டும் என்று கம்யூ. பிரகாஷ் காரத் டெல்லியிருந்து உத்தப்புரம் வந்தார். உத்தப்புரம் வந்தவர் அரிசன மக்கள் வாழும் பகுதி மக்களை சந்தித்துவிட்டு பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த யாரையும் சந்தித்துப் பேசாதது மா.கம்யூ கட்சி இப்பிரச்சினையில் குளிர்காய நினைத்ததை தெள்ளத் தெளிவாக்கியது.

முந்தைய திமுக அரசால் தீண்டாமைச் சுவர் என்று பெயரிடப்பட்ட சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.  இந்த அரசு தங்களுக்கு விரோதமாக செயல்படுவதாகக் கண்டித்து ‘பிள்ளைமார்கள்’ ஊரைக் காலி செய்து விட்டுக் குடும்பத்துடன் ‘தாழையூத்து’ மலையில் சென்று தஞ்சமடைந்தனர். ரேசன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்தனர். பின்னர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி. சண்முகம் பிள்ளைமார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஊருக்கு அழைத்து வந்தார். திமுக அரசு கொடுத்த உறுதிமொழியை கிடப்பில் போட்டது. உத்தப்புரத்தை ‘உத்தமபுரமாக’ மாறும் என்று வாய்ஜாலம் காட்டி கருணாநிதி சட்டசபையில் பேசினார்.

உத்தப்புரத்திற்குப் பார்வையிட வந்த பாஜ தலைவர்கள், ஃபார்வர்டு பிளாக், இ.கம்யூ. தா.பாண்டியன், இந்து இயக்க பிரமுகர்கள் இருதரப்பினரையும் சந்தித்துக்  குறைகளை கேட்டனர்.

இந்நிலையில் பிள்ளைமார்கள் முத்தாலம்மன் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்திட முயற்சி செய்கையில் அரிசனங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க,  கோயிலுக்கு ஜனவரியில் பூட்டு போடப்பட்டது. 144 தடை உத்தரவும் அமுல்படுத்தப்பட்டது.

பின்னர் கோயில் பூட்டப்பட்ட  நிலையில் மா.கம்யூ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆலயப்பிரவேசம் செய்யப் போவதாக அறிவித்து ஒரு அரசியல் கூத்து நடத்தி நாடகமாடினர். பின்னர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு அரிசனப் பகுதி இளைஞர்கள் பேனர் வைக்கவும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.

இதில் இரு தரப்பிலும் பெண்கள், இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தவர்கள் மதுரையில் தங்கிக் கையெழுத்திட்டனர்.

அப்போது திரு.கே.ஆதிமூலம் (ஆவின் முன்னாள் பொது மேலாளர்) அவர்கள் உத்தப்புரம் அரிசன மக்களுக்கு உதவிகள் செய்தார். இவருடைய தந்தைக்கு உத்தப்புரத்தில் உறவுகள் உண்டு. நல்லதும் செய்திருக்கிறார். அவர் உத்தப்புரம் அரிசன தலைவர்கள் திரு.கே.பொன்னையா, திரு.சங்கரலிங்கம் போன்றவர்களிடம் எத்தனை நாளைக்கு இப்படி கலவரம், கோர்ட், கேஸ் என அலையப்போறீங்க, தாய்மார்கள் இவ்வளவு கஷ்டப்படணுமா? நிம்மதியாக வாழ வேணாமா? என்று பேசி ஏதாவது சமாதானமா வாழ நீங்க ஒத்துழைச்சா என்ன? என்று கேட்டுள்ளார். அவர்களும் இதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் என்ற போது திரு.ஆதிமூலம் அரசியல் கட்சி (கம்யூ.கட்சி) தலையீடு இல்லாமல் இருந்தால் எனது நண்பர் – சின்மயா சோமசுந்தரம் (வி.எச்.பி – மதுரை மாவட்ட பொறுப்பாளர்) இவர் மூலம் பிள்ளைமார் தரப்பில் பேசி சமாதான முயற்சியில் ஈடுபடலாம் என்றுள்ளார். திரு.பொன்னையா மா.கம்யூ கட்சியினரிடம் பேசியபோது கட்சி தலையிடாது. சமாதான முயற்சிக்கு முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி உள்ளனர்.

K.ஆதிமூலம், சின்மயா சோமசுந்தரம் ஆகிய இருவரும் உத்தப்புரம் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முயற்சிக்கிறார்கள் என்பதை மாவட்ட S.P, A.D.S.P. அறிந்து இவர்களின் முயற்சிக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

மாவட்டக் காவல்துறை பிள்ளை, அரிசன சமூகத் தலைவர்களை அழைத்துப் பேசி சில சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அரிசனங்களிடம் எங்களுக்குத் தீண்டாமை என்பது கிடையாது. ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம். அரிசனங்கள் சாமி தரிசனம் செய்வதை வரவேற்கிறோம். மேலும் கோயிலுக்கு பட்டா கொடுத்தல், சாக்கடை வசதி, பஸ் நிழற் குடை போன்றவை சம்பந்தமாகவும் உடன்படிக்கை கையெழுத்து ஆனது.

பின்னர் திரு.ஆதிமூலம், திரு சின்மயா சோமசுந்தரம் ஆகியோர் 8-11-2011 அன்று வந்து எழுமலை பண்ணையார் S.A.நடராஜதேவர், பொன்.கருணாநிதி ஆகியோரிடம் கலந்து பேசி உத்தப்புரத்தில் அமைதி திரும்பிட நீங்கள் எங்களோடு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

9-ம் தேதி இரவு உத்தப்புரம் பிள்ளைமார் தரப்பினரைச் சந்திக்கச் சென்ற திரு.சின்மயா சோமசுந்தரம், திரு.ஆதிமூலம், திரு பொன்.கருணாநிதி, இராம.ரவிக்குமார் (இந்து முன்னணியின் முக்கியப் பிரமுகர், இந்து முன்னணியின் முன்னாள் முழு நேர ஊழியர்) உத்தப்புரம் பிரச்சினை, ஏற்படும் கஷ்டம், நிம்மதியற்ற வாழ்க்கை, காலச்சூழ்நிலை போன்ற பல விஷயங்களை எடுத்துக் கூறிய போது நமக்குள் தீண்டாமை இல்லை என்பதை வெளிக்காட்டும் விதமாக அரிசனங்கள் சாமி தரிசனம் செய்ய உதவ வேண்டும். நாம் விட்டுக் கொடுத்து நேசபாசத்தை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சால்வை, துண்டு அணிவித்து கௌரவித்து அனுப்பினர். பிள்ளைமார் தரப்பு இளைஞர்கள் பெரும்பாலும் ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

10-11-2011 அன்று காலையிலேயே வந்துவிட்ட திருஆதிமூலம், சின்மயா, பண்ணையார் நடராசன், பொன்.கருணாநிதி, A.D.S.P. மயில்வாகனன் பிள்ளைமார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 12 மணி அளவில் அரசமரத்தில் ஆந்தை கத்தியது. இது நல்ல சகுனம். முத்தாலம்மன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றனர் பெரியோர்கள்.

மதியம் 3 மணிக்கு ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தலாம் என முடிவானவுடன் மாவட்ட S.P. அஸ்ராகர்க், உத்தப்புரம் வந்தார்.

முத்தாலம்மன் கோயில் முன்பாக அரிசனங்களை வரவேற்க எழுமலை பண்ணையார் S.A.நடராசன், பொன்.கருணாநிதி, திருசேதுபிள்ளை, ராஜாமணிபிள்ளை மற்றும் இளைஞர்கள் பலரும் தயாராக இருக்க, திரு.ஆதிமூலம், சின்மயா, திரு.இராம.இரவிக்குமார், திரு.மு.பொன்னையா, சங்கரலிங்கம் உட்பட 11 ஆண்கள், 4 பெண்கள் பூஜை பொருட்களுடன் முத்தாலம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தனர். சரியாக 3.15க்கு முத்தாலம்மன் கோயில் முன்பாக வரவேற்புக் கொடுத்து S.A.நடராஜன், பொன்.கருணாநிதி ஆகியோர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

முத்தாலம்மன் கோயில் பூசாரி பாண்டிமுருகன் சிறப்புப் பூஜை, தீபாராதனை காட்டினார். இந்தத் தீபாராதனை மரியாதை அரிசன மக்களுக்கு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்து வெளிவந்தவர்கள் S.P, A.D.S.P. ஆகியோரைக் கௌரவித்து நன்றி தெரிவித்தனர்.

ஆலய நுழைவு நாளன்று உத்தப்புரம் வந்திருந்த திரு.அண்ணாதுரை (கம்யூ எம்எல்ஏ) தங்கராஜ் (மா.செயலர்) பொன்னுதாய் (மாதர்சங்கம்) மற்றும் சிலர் ஆலய வழிபாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பொன்னையா இரு சமுதாயத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்ப்பு ஏற்பட்டது. கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தபோது பெருவாரியான வரவேற்புக்  கொடுத்தனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிவரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ்வோம். முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்திட முழு ஒத்துழைப்புக் கொடுப்போம். அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ இரு சமுதாய மக்களும் வாழப்  பாடுபடுவோம் என்றார். மாவட்ட S.P. அஸ்ராகர்க் கூறுகையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த ஆலய நுழைவுப் பிரச்சினையின் தீர்வுக்கு  இரு சமூகப்  பெரியோர்கள் அளித்த ஒத்துழைப்பே காரணம். தற்போது உத்தப்புரத்தில் முழு அமைதியும், மகிழ்ச்சியும் நிலவுகிறது. இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றார்.

பண்ணையார் S.P.நடராஜன் கூறியதாவது, ஊரில் அமைதி ஏற்பட வேண்டும், தீண்டாமையை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதன் வெளிப்பாடாக எங்களின் நேசபாசத்தை வெளிப்படுத்தி உள்ளோம். இதற்கான முயற்சியில் வெற்றிபெற்று உள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றோம். தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். ‘இது முடிவல்ல, முடிவின் தொடக்கம்’ என்றார்.

‘இந்த ஊர் கலவரம் காரணமாக இரு தரப்பிலும் 2600 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இரு தரப்பிலும் பேசி கோர்ட் மூலம் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் வாபஸ் பெறப்படும். உத்தப்புரம் மக்களின் பாதுகாப்பு, நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் போலீசாரின் செயல்பாடுகள் இருக்கும்’ என்றார் எஸ்பி.

எது எப்படியோ! 70 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாதிருந்ததாலும்,அரசு நடுநிலையோடு செயல்பட்டதாலும் இந்து ஆன்மீகப் பெரியோர்கள், அமைதியை விரும்பும் இளைஞர்களாலும் உத்தப்புரம் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. கட்சிகளைக் கடந்து உறவுகளே வென்றது. அந்த முத்தாலம்மன் அருளாலும் இது நடந்தது.

தமிழக அரசு இரு தரப்பு மக்களுக்கும் பாரபட்சமின்றி உரிய நிவாரணம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். மாவட்ட காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை பூரண ஒத்துழைப்பு நல்கிட முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். அப்படி நடந்தால் உத்தப்புரம் உண்மையில் உத்தமபுரமாக மாறி ஒரு முன்மாதிரியான கிராமமாக மாறிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

குறிப்பு :
18 பட்டி கிராம மக்களால் வழிபாடு நடத்தப்படும் முத்தாலம்மன் சாமி தாய் கிராமமான எழுமலையில் திருவிழா நடத்தப்படும்போது விழாக்கோலம் பூண்டிருக்கும்.

‘முத்தாலம்மன்’ பறையர்களின் தெய்வம்.

வழிபாட்டு உரிமை – கம்பளத்து நாயக்கர்

மற்ற ஜாதியினர் திருவிழா கொண்டாடுவது எழுமலையில் இன்றும் தொடர்கிறது.

திருவிழா கொண்டாட ‘சாமி சாட்டுதல்’ (நாள் குறித்து சொல்வது) பறையர் சமுதாயத்தை சார்ந்த பெரியோர்கள். முதல் மரியாதை பெரிய வீட்டு நாயக்கருக்கு.

உத்தப்புரம் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்ற ஆடிட்டர் முருகேசன் அவர்களின் மனைவி திருமதி.கலாவள்ளி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அரிசன தலைவர் திரு.பொன்னையா அவருக்கு ஆடிட்டர் முருகேசன், எஸ்ஏ.நடராஜன், பொன்.கருணாநிதி, பெரியவீட்டு நாயக்கர் மற்றும் ஊர் பெரியோர்கள் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.

திருமதி கலாவள்ளி அவர்கள் விபத்தில் சிக்கி கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தேவையான பி பாசிடிவ் ரத்தவகை கிடைத்திட எஸ்பி அஸ்ராகர்க் ஏற்பாடு செய்தார். அரிசன தலைவர்கள் சங்கரலிங்கம், பொன்னையா ஆகியோர் நலம் விசாரிக்க கோவை சென்று வந்தனர்.

அரசு சமாதான முயற்சிக்கு பாடுபட்ட பெரியோர்களுக்கு சமூக நல்லிணக்க விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்.

32 Replies to “உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்”

  1. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும். இந்த பி.ஜே.பி,ஹிந்து முன்னணி போன்றவைகள் தடைசெய்யப்படவேண்டும். இதே மாதிரி போனால் இவர்களை எப்படி கிறிஸ்துவர்களாக மாற்றுவது , இந்தியாவை எப்படி துண்டாடுவது. சோனியா எப்போ ப்ரதமர் ஆவது. இது சிறுபாண்மையினருக்கு எதிரான செயல். ஆசைப்பட்டு மதம் மாறுபவர்களை தடுக்கும் போக்கிரித்தனம். கிறிஸ்துவர்களே வாருங்கள் போராட்டம் நடத்தலாம்.

  2. இந்த அவமானச் சின்னம் பற்றி முதன்முதலில் போராடத் துணிந்த கம்யூனிசத் தோழர்களுக்கு ரெட் சல்யூட் !!

    பிரச்சினையை ஆரம்பித்தது பிள்ளைமார்களா, தலித்துகளா என்று தீயசிந்தனைக்கு இடம் தராமல், இரு சமூகத்திலும் உள்ள நல்லவர்கள் முடித்து வைத்தார்கள் என்ற நற்சிந்தனையை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    ஏனெனில், பிரச்சினையை முதலில் யார் ஆரம்பித்தார்கள் என்பதைவிட முதலில் யார் முடித்து வைக்கிறார்கள் என்பது முக்கியம். அவர்களே மதிப்புக்கு உரியவர்கள்.

    இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிய இந்து முன்னணி முயன்றதை மனமுவந்து பாராட்டுகிறேன். தீண்டாமைச் சுவர் என்பது இந்து தர்மத்தின் மேல் போடப்பட்ட அவமானம் என்பதை இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் “அனைவரும்” முழுமையாக உணரும் நாள் வரும் என்று நம்புகிறேன்.

    இந்து முன்னணி நல்ல முயற்சி எடுக்கும்போது அதற்குத் தடை எதுவும் செய்யாமல், ஒதுங்கி நின்று ஒத்துழைத்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரு இந்துத்துவவாதியாக, இரண்டு மடங்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

    இந்து முன்னணித் தலைவர்கள் மட்டுமல்லாது, மார்க்ஸிஸ்ட் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், இருசமுதாயத் தலைவர்களும் நல்லிணக்க விருதிற்குத் தகுதியானவர்களே.

    ஆனால், நல்லிணக்கம் வேண்டும் என்ற புரிதல் தோன்றியது, விருதைவிட மதிப்பு வாய்ந்தது. அந்த நற்சிந்தனைக்கு முன் விருதுகளுக்கு மதிப்பில்லை.

    இக்கருத்தை ஏற்றுக்கொள்ள உடனடியாக மனம் இடம்தராமல் போகலாம். ஆனால், யார் மனதில் இக்கருத்துக்கு இடம் கிடைக்கிறதோ அவர்களிடமே இந்துத்துவம் வாழ்கிறது.

    இது புரியாவிட்டால், பிரச்சினையின் அடையாளமாக இருந்தது அரசமரம் என்பது மாறி விருது என்றாகிவிடும் ஆபத்து இருக்கிறது.

    இனி இரு சமுதாயத்தினரும் ஒருவருக்கு மற்றொருவர் தரும் மரியாதை லட்சம் விருதுகளுக்குச் சமம்.

    உத்தப்புரத்தை ஒரு ராலேகான் சிந்தியாக மாற்ற இரு சமூகத்தாருக்கும் வாழ்த்துக்கள் !

    .

  3. பாவம், இதில் பிரச்சனையில் குளிர் காய நினைத்து எத்தனை டாலர்களை கிறித்துவ மிஷினரிகள் செலவு செய்தார்களோ, கடையில் வியாபாரம் திவாலாகி போனது தான் மிச்சம். இனி வேறு இடத்தில் தான் கடையை மத மாற்ற வியாபாரத்தை தொடங்க வேண்டும்…

  4. ஆஹா ,

    மிஷனரிகள் அடிக்கடி கத்தி கூப்பாடு போடும் சாதீய பிரச்சனையை,இது போன்று அறவழியில் நாம் தீர்த்து கொள்வோமாயின்…”நாளை நமதாகும்,வாழ்வு வளமாகும்”
    மற்றும் நானும் ஒரு பிள்ளைமார் தான்,ஆனால் இங்கேயே பிறந்து வளர்ந்து விட்டதால் குலமக்கள்,ஊர்தெய்வம்,திருவிழா,பிறசமூக ஒற்றுமை இது போன்ற எந்த விடயங்களும் நான் அறிந்தது இல்லை.இக்கட்டுரை உத்தபுரம் தற்போதைய நிலையை நேரடியாக உணர்வதான களிப்பை எனக்கு அளிக்கிறது

  5. இந்த பி.ஜே.பி,ஹிந்து முன்னணி போன்றவைகள் தடைசெய்யப்படவேண்டும்.

    சும்மா வேற்று கூச்சல் கூட்டம் போடறது, சாதியை ஒழிக்க போறோமென்று சொல்லி நாடகம் போடுறது சரிஇல்லை….

    மனதளவில் செயல்பட்டால் மட்டுமே இது தீர்வாக அமையும்………

    தாழ்ந்த ஜாதியுடன் ஒரு குவளையில் தண்ணீர் குடிக்க நான் ரெடி நீங்க ரெடி யா…???

  6. ஹிந்து, ஹிந்தி, இந்தியா இந்தமூன்றையுமே ஏற்றுக்கொள்ளாத ஒரு கும்பல் தீவிரமாக வேலை செய்து கொண்டுள்ளது. இவர்களது வேலையே ஹிந்து சமுதாயத்தை சிதைப்பதுதான். இது நடைபெற விடக்கூ டாது.

  7. என்ன கம்யுநிச்டிக்கு நன்றி.கஷ்டப்பட்டவன் ஒருதான் கூலி சாபிடறவன் இன்னொருதவனா?.மிகபெரும் காரியத்தை எந்த அரசியல் பலாபலன் கருதாமல் சங்க நண்பர்கள் செய்துள்ளனர்.இதிலிருந்து தெரிவது கள பணியில் உண்மையில் இருப்பவர்கள் சங்க அன்பர்களே.இதனை நாள் இருத்த மாயை அனா களப்பணி செய்பவர்கள் கம்யுநிச்ட்கலேய் என்ற வாதம் உடைந்தது.மிகபெரும் வரலாற்று திருப்புமுனைக்கு அடிகோலும் மிக பெரும் செயல் இது.எவ்வளவு பேர் கேட்டு இருப்பார்கள் சங்கம் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று.பாருங்கடா டேய்.இதாண்ட ஹிந்து சக்தி.

    இறைவன் இதில் இடுப்பட சங்க அன்பர்களுக்கு நல்ல பலன் தருவானாக.

  8. அனைவருக்கும் மகிழ்ச்சியே….

    ஆனால் அந்த பகுதியிலிருந்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். திரு.களிமிகு கணபதி சொல்வது போல் அது தீண்டாமை சுவர் அல்ல. பிரச்சினை வராமல் இருக்க இரு தரப்பார் சம்மதத்துடன் கட்டப்பட்ட பாதுகாப்பு சுவரே. தீண்டாமை மற்ற பகுதியில் இருப்பதை விட எங்கள் பகுதியில் குறைவே. காரணம் அனைத்து ஜாதியினருக்கும் நிலம் உள்ளது, அனைவருக்கும் பொதுவான வறட்சி, கல்வி அறிவில் எந்த சமூகமும் குறைந்தது அல்ல. தாழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் சமூகத்தவரும் அனைத்து வசதி வாய்ப்புக்கலோடுதான் வாழ்ந்து வருகின்றனர், கோவில் வழிபாடும் பெரும்பாலும் பொதுவானதுதான்.
    நீங்கள் ஓவராக உணர்ச்சிவசப்பட்டது போல் கம்யுனிஸ்டுகள் இல்லை,

    எங்கள் பிராந்தியத்திலே எனக்கு 20 வயது வரை அங்கு தான் நான் வசித்துவந்தேன், (இன்னும் என் சொந்தம், சொத்து எல்லாம் அங்கெ தான் உள்ளது) – – கம்யுனிஸ்ட் கட்சியை பற்றி யாரும் கேள்வி பட்டது கூட கிடையாது, அவர்கள் தூண்டிவிட்டு குளிர்காயுமளவு எங்கள் பகுதியில் இதுவரை எந்த பிரச்சினைகளும் இல்லை .அவர்களுக்கு எந்த அடித்தளமும் இல்லை.
    இதை ஒரு வாய்ப்பாக எண்ணினர், ஆனால் ரிவேர்ஸ் ஆக போய் அனைத்து சமூக மக்களின் கோபமும் அவர்கள் மேலே திரும்பிவிட்டது. அதனால் தான் இந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட அவர்களின் பாரம்பர்ய தொகுதி சேடபட்டி உள்ளடங்கிய (மறுசீரமைக்கப்பட்ட) உசிலை தொகுதியை கூட்டணி கட்ச்சியான பார்வர்ட் ப்ளாக் கிற்கு ஒதுக்கி விட்டது. அந்த வேட்பாளர் திரு. கதிரவன் மீது உள்ள அனுதாபத்தால் அவரும் வென்று விட்டார்.
    காரத் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் உண்மையான நேசம் கொண்டிருந்தால் கேரளாவிற்கோ, மே. வங்கத்திற்கோ போய் தாரளமாக போராடலாம். சுமூகமாக வாழும் எங்களை விட்டு விடட்டும்.
    இனியாவது நாம் ஒற்றுமையுடன் இருப்போம், இல்லாவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகளை தேடி , தூண்டி தங்களை வளர்க்கும் கும்பலிடம் சிக்கி’ பிறருக்கு’ அடிமையாகும் சரித்திரம் மீண்டும் வரவே செய்யும். ஜாக்கிரதை …

  9. //பிரச்சினை வராமல் இருக்க இரு தரப்பார் சம்மதத்துடன் கட்டப்பட்ட பாதுகாப்பு சுவரே. //

    சாதி என்பது இந்துக்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் வரையில்தான் அதற்கு மதிப்பு. இந்துக்களுக்கு இடையே சுவற்றை எழுப்பினால், அது சந்தேகம் இல்லாமல் அவமானச் சின்னம்.

    ஒற்றுமையைக் கொணர்ந்தவர்கள் எவராயினும் பாராட்டத் தகுந்தவர்கள்.

    .

  10. ரவி, இந்த விருது சமாசாரம் வேண்டாம்; இது நமக்கு நாமே செய்து கொண்ட உதவி; விருது விரோதத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். மீண்டும் அடியைப்புடிடா பாரத பட்டா.

    நல்லது எல்லோருடைய நல்ல புத்தியாலும் நடந்துள்ளது; மகிழ்ச்சி; முத்தாலமனுக்கு நன்றி.

  11. இந்த நல்ல செய்தியை தந்த அண்ணன் இராம. ரவிக்குமார் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி.

    கு. சுரேஷ்

  12. \\இந்துக்களுக்கு இடையே சுவற்றை எழுப்பினால், அது சந்தேகம் இல்லாமல் அவமானச் சின்னம்\\

    சுவரை அவமான சின்னம் என்று சொல்வது தேவையற்றது.

    சுவர் கட்டப்பட்ட காலத்தில் இது தேவைப்பட்டது. இரு தரப்பினரும் சேர்ந்து கட்டிய சுவர் தான். இப்பொழுது அது தேவை இல்லை அவ்வளவு தான்.

    இதில் பெரிதாக அவமானமாக நினைக்கவோ வேதனைபடவோ ஒன்றும் இல்லை.

    காலத்திற்கு ஒவ்வாத விசயங்கள் நீக்கபட வேண்டியவையே.

    இது நாள் வரை இந்த சுவற்றிற்கு தலித் முலாம் பூசிய கம்யூனிஸ பக்கிகள் மூஞ்சில் கரியை பூசிய சம்மந்தப்பட்ட சாதியனருக்கு வாழ்த்துக்க்ளை தெரிவித்து கொள்கிறேன் 🙂

  13. சமுதாயத்தில் பல்வேறு தளங்களில் இந்து இயக்கங்கள் வேலை செய்தலும், இது போன்ற சிக்கல் நிறைந்த பிரட்சினைகளில் வெற்றி கண்பதுதான், இயக்க தொண்டர்களுக்கும், சமுதாயத்திற்கும் நம்பிக்கையை உருவாக்கும். மீட்டியாக்களில் இன்னும் இந்த செய்தி பெரிதாக வர வேண்டும்.

    முயற்சி செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் இறைவனின் திருவருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்…

  14. மிகவும் நல்ல கட்டுரை.. நடைமுறையில்.. ஏற்பட்டுள்ள வெற்றியை விளக்க வல்ல இது போன்ற கட்டுரைகள் இன்னும் அதிகம் வெளிவர வேண்டும்.. கட்டுரைகள் அதிகம் வர வேண்டும் என்றால், அதற்கு முன் இது போல ஹிந்துக்களிடையே ஒற்றுமையை விளைவிக்கிற நிகழ்ச்சிகள் பல இடங்களிலும் மிகவும் உற்சாகமாக நடைபெற வேண்டும்.

  15. யாரப்பா இந்த தமிழ் அண்ணா. ஆர் எஸ் எஸ் நிகழ்சிகளை சென்று பாருங்கள். சவால் எல்லாம் விட வேண்டாம். சாதாரணமாகவே எல்லோரும் எல்லார் வீடுகளிலும் சாப்பிடுவார்கள். நான் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் சாப்பிட்டேன் என்று தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். இது போன்ற வாய் பேச்சு கும்பலிலிருந்து இளைஞர்கள் வெளியே வர வேண்டும்.

  16. அருமையான பதில் சந்திரமௌளீ.

    .

  17. இந்த முயற்சிக்கு பாடுபட்ட அனைவருக்கும் பாரத மாதாவின் வாழ்த்துக்கள் கிடைக்கட்டும்.ஹிந்துஸ்தானம் புவியில் பெருமைப்படும் அளவிற்கு விளங்க பிரார்த்திப்போம் .ஜைஹிந்த்

  18. அடுத்து என்ன.. பறையர்களுக்கும் பிள்ளைமார்களுக்கும் கல்யாணம் நடத்த வேண்டியதுதான் பாக்கி.. அதையும் இந்து முன்னனியினர் செய்து, ஹிந்து ஒற்றுமையை கொண்டுவருவார்கள்.. பின்பு, பிள்ளைமார் என்று சொன்னாலே வேற்றுமை வந்துவிடும், அப்படியேல்லாம் கூடாது என்று “பிள்ளைமார்” என்ற வார்த்தைக்கு தடா..

    மறுபடியும், ஒரு கிராம பிரச்சினையை, எப்படி, இந்துதுவ சாயத்தில், இந்த கட்டுரை வெளிவந்திருக்கிறது என்று நீங்களே பாருங்கள்..

    அதுசரி.. முத்தாலம்மனுக்கும் இந்துதுவ வாதிகளுக்கும் என்ன சம்பந்தம்.. சென்னை நரகத்தில் உட்கார்ந்து கொண்டு, வாய் கிழிய பேசுபவர்கள் இந்த கடவுளை பற்றி கேள்விப்பட்டிருப்பார்களா? ஆனால், எல்லா அம்மனும் ஹிந்து தெய்வம்.. அது மட்டும் போதும்.. ஒவ்வொரு அம்மனுக்கும் பூஜை முறையில் இருந்து, ஊர் திருவிழா வரை ஒவ்வொரு விதமாக இருக்கும்.. அதை பத்தி தெரிஞ்சுக்க இந்த் இந்துத்துவ வாதிகளுக்கு ஏதேனும் ஆர்வம் உள்ளதா? ம்ஹூம்.. முத்தாலம்மன் ஒரு ஹிந்து தெய்வம்.. அது மட்டும் போதும்.. மத்ததெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. சர்ச்சில் எல்லாரும் யேசுவை கும்பிட்டா போதும் ங்கற மாதிரி, எல்லாரும் அம்மனுக்கு முன்னாடி வந்து வணங்கினா போதும்.. அந்த அம்மனுக்கு எந்த மாதிரி பூஜை செய்யனும்ங்கறதெல்லாம் தேவையில்லாதது.. அதன் உள்ளர்த்தம், இன்னும் தேவையில்லாதது..

    இந்த மனப்பானமையில் தான் பெரும்பாலான இந்துத்துவ சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள்.. அதுதான், நமது பிரச்சினையின் மூல காரணம்..

    இந்து முத்தாலம்மன் விஷயத்த்துக்கு வருவோம்.. முத்தாலம்மன் பறையர்களின் தெய்வம் என்று எதை வைத்து சொல்கிறார் இந்த கட்டுரையின் ஆசிரியர்? பறையர்களின் தெய்வம் என்று சொல்லும்போது, அவர் எந்த அர்த்தத்தில் சொல்கிறார்?

    பொதுவாக, தமிழ் நாட்டில், மாரியம்மன், பகவதியம்மன், போன்ற தெய்வங்களெல்லாம் கிராம தேவதைகள்.. கிராம தேவதைகள் என்பது எல்லாருக்கும் பொதுவாக இருக்கிற தெய்வம்.. காலனியாதிக்கத்திற்கு முன்னாடி, ஒவ்வொரு ஊரிலும் வெள்ளாளர்கள் தான் ஊர்த்தலைவரா இருப்பாங்க.. அவர்களுடைய வாழ்க்கை முறை பிராமனர்களுக்கு அடுத்த படியா பல கட்டுப்பாடுகளுடன் இருக்கும்.. அதனால தான், மற்ற எல்லா ஜாதியினரும் அவர்களை மதிக்கிறாங்க.. இன்னைக்கும் அந்த மரியாதை கொஞ்சமாவது இருக்கும்.. காரணம், பிள்ளைமார்கள் வலிமையானவர்கள் என்பதால் அல்ல.. அவர்கள் தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், உயர்ந்த வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்களாகவும் இருப்பது தான்.. அப்படி இல்லையென்றால், மற்ற சமூகத்தவர்க் காறித் துப்புவர்.. அதற்கு பயந்தே வெள்ளாளர்கள் தன்னுடைய் ஆச்சார் நியமங்களை கடைபிடிப்பார்கள்.. (இன்று இருக்கிர மாதிரி, நீ எப்படி என்னை அசிங்கப்படுத்தலாம் என்று வம்புக்கு போகமாட்டார்கள்.. அது அந்த ஊரில் (உத்தப்புரத்தில்_ இருக்கும் பறையர் பெரியவர்களுக்கு நன்றாகவே தெரியும் )

    இந்த வாழ்க்கை முறையால், அவர்கள் தலைமை பொறுப்பு கிடைக்கிறது.. ஊரில் பிரச்சினை தீர்த்து வைப்பது முதல், ஊர் நிர்வாகம் வரை, அவர்கள் முன்னின்று நடத்துவார்கள்.. அவர்களுக்கு உறுதுணையாக பறையர்கள் இருப்பார்கள்.. இது தான் காலணியாதிக்கத்திற்கு முன்னால் இருந்த நிலவரம்.. சொல்லப் போனால், 30-40 வருடங்களுக்கு முன் வரை கூட இப்படி தான் இருந்தது..

    60-70 களில், கிராம சுயராஜ்ஜியத்தை திட்டமிட்டே ஒழித்தார்கள், இந்த அரசியல் வாதிகள்.. பஞ்சாயத்து ராஜ் என்ற சட்டம் கொண்டுவந்து, பாரம்பரியமாக முறையாக நடந்த பஞ்சாயத்தை, அரசியல் கேலிக்கூத்தாக்கினார்கள்.. மணியக்காரர்கள் பரம்பரையாக வெள்ளாளர்களிடம் இருக்கும்.. தோட்டி முறை, பறையர்களிடம் இருக்கும்.. இன்னைக்கு, இரண்டு பதவிகளுமே, அந்தந்த சாதிகளிடம் இருந்து பிடுங்கப்பட்டு, ஏலம் விடப்பட்டுள்ளது.. ஊருக்கே சம்பந்தம் இல்லாதவனெல்லாம், VAO பரிட்சை எழுதி, ஊருக்குள் வந்து பன்னாட்டு பண்றான்.. வெள்ளாளர்களும், பறையர்களும், இன்ன பிற ஜாதிகளும் அவனுடைய அதிகார வரம்புக்குள் வந்து, தன்னுடைய நிலையை இழந்தார்கள். முன்பு கிராம நிர்வாகம் அவர்களிடம் இருந்ததால், எல்லா ஜாதியினரும் சேர்ந்து கூடும் பஞ்சாயத்தாக இருந்தது.. ஒவ்வொரு ஜாதியும் மற்ற சாதியினருடன் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்தனர்.. வெள்ளாளர்கள், தன் ஊர் பறையர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.. மற்ற ஊர்க்காரன் வந்து தன்னுடைய ஊர் பறையரை தாக்கினால், எதிர்த்து கேள்வி கேட்பார்கள் (அது தன் சாதிக்காரனாகவே இருந்தாலும்).. அதே போல, மற்ற ஊர் பறையர் வந்து இங்கே வம்பு செய்தால், உள்ளூர் பறையர்கள் கேள்வி கேட்பார்கள்.. ஏனா, கிராம சுயராஜ்ஜியத்தில், இருவருக்கும் பங்கு இருந்தது.. ஆனால், அரசாங்கம், இந்த சுயராஜ்ஜியத்தை பிடுங்கின பின்பு, எல்லாரும், அரசாங்கத்துக்கு அடிமைகளாக மாறினர்.. அங்கே சமூகத்துக்குள் இருந்த நல்லிணக்கம் தானாக உடைந்தது.. ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்த நிலை மாறி, எல்லா ஜாதிய்னரும் அரசாங்கத்திடம் கேயந்தும் நிலை வந்த போது, அதிகார போட்டி வருகின்றது..

    அதுதான் இன்று எல்லா கிராமத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.. இந்த அடிப்படை விஷயங்களை எந்த பொந்துதுவவாதிகளும் இதுவரை கண்டு கொண்டதில்லை.. தெரிந்து கொள்ள முயற்சி செய்ததும் இல்லை.. ஒவ்வொரு ஜாதியையும் வெறும் ஜனக் கூட்டமாக பார்க்கிறார்களே தவிர, அவர்களுக்குள் எந்த மாதிரியான ஒற்றுமை முன்னால் இருந்தது என்று யாரும் யோசிப்பதில்லை..

    இந்த கட்டுரையிலேயே, வழிபாட்டு உரிமை கம்பளத்து நாயக்கருக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.. அப்பறம் எப்படி முத்தாலம்மன் பறையர்களின் தெய்வம் ஆனது? கம்பளத்து நாயக்கர்கள் வந்து அவர்களிடம் பிடுங்கிக் கொண்டார்கள் என்று சொல்வார்களா? இந்த கேள்விக்கும் இங்கு இருக்கும் எந்த ஹிந்துத்துவவாதிகளுக்காவது விளக்கம் தெரியுமா? வாய்ப்பில்லை..

    ஒவ்வொரு கிராமத்திலும், மக்கள் சேர்ந்து அந்த ஊர் கிராம தலைவரை முதன்மையாக வைத்து வழிபாடு நடத்துவார்கள்.. எப்பொழுதுமே முதல் பூஜை ஆட்சியாளர்களுக்கு வழங்கப்படும்.. அவர்கள் முன்னிலையில் ஊரே சேர்ந்து திருவிழா கொண்டாடும்.. நாயக்கர் ஆட்சிக் காலத்தில், அவர்களை முதன்மையாக வைத்து ஊர் மக்கள் திருவிழா கொண்டாடியிருப்பார்கள்.. அந்த பாரம்பரியம்தான் இன்று வரை தொடர்கிறது.. முன்பு ஆட்சியாளர்களாக இருந்த நாயக்கர்கள், தேவர்கள், காலனியாதிக்கத்தில், இந்த் இந்துதுவவாதிகள் கேவலமாக பார்க்கும் நிலைக்கு தாழ்ந்திருக்கலாம்.. ஆனால், அவர்களின் கோயில் பூஜை உரிமை, வரலாற்று தொடர்புடையது..

    ஆகையால், இந்து முன்னனியினருக்கும், மற்ற சமாதான புறாக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது இதுதான்.. கம்யுனிஸ்ட்காரன் கூப்பாடு போடுறான் என்பதற்காக, கோயில் நியமங்களையும், பாரம்பரியத்தையும் மாற்றாதீர்கள்.. கோயில் என்பது எல்லாரும் இஷ்டத்துக்கு சென்று வழிபடு சத்திரம் அல்ல.. அது ஒரு சர்ச மாதிரி வெறும் வழிபாடு செய்யும் இடமும் அல்ல.. ஒவ்வொரு கோயிலும், அந்தந்த தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் இடம்.. அது தெய்வத்தின் இடம்.. அந்த இடத்திற்கு என்ன மரியாதையும், சானித்யமும் இருக்க வேண்டுமோ, அதை கடைபிடிக்க வேண்டும்.. அரிச்சனங்களாக இருந்தாலும் இல்லை இந்த பொந்துதுவவாதிகளாக இருந்தாலும், இல்லை, அந்த கம்யுனிஸ்ட்களாக இருந்தாலும் சரி.. யார் உள்ளே போக முடியும் என்பது நாம் இஷ்டத்துக்கு முடிவு செய்யக் கூடியது அல்ல..

    முத்தாலம்மன் கோயில், பிள்ளைமர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. அந்த சாமியை பறையர்கள் கும்பிட வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.. சொல்லவும் முடியாது.. ஆனால் பிள்ளைமார்களுக்கு அந்த கொயிலில் மீது இருக்கும் நிர்வாக உரிமையை பறிக்கும்பொழுதுதான் பிரச்சினை வருகிறது.. நான் எப்படி வேண்டுமானாலும் போவேன்.. நீ கேட்கக்கூடாது என்று கம்யுனிஸ்ட்காரர்கள் சொல்லும்போதுதான் பிரச்சினை வருகிறது..

    அப்புறம், இந்துத்துவாதிகள், என்னமோ அவர்கள்தான் ஒற்றுமையை நிலை நாட்ட வருவது போல கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம்.. ராஜீவ் மல்ஹொத்ரா, தன்னுடைய சமீத்திய புத்தகத்தில் சொல்லியிருந்த மாதிரி, ஏற்கனவே அந்த கிராமத்தில் எல்லா ஜாதியினரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.. அந்த கொயில் திருவிழாக்களில் ஒவ்வொரு ஜாதிக்கும் இருக்கும் முறையிலேயே இது தெளிவாகத் தெரியும்.. முதல் மரியாதை பெரிய வீட்டு நாயக்கருக்கு (எல்லா நாயக்கருக்கும் கிடையாது.. பெரிய வீட்டு நாயக்கர் என்பவர், முன்பு அந்த பகுதியை ஆட்சி செய்த வம்சாவளியை சேர்ந்தவராக இருப்பார்).. சாமி சாட்டுதல் பறையர்களுக்கு.. அது போல ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதாவது ஒரு உரிமை இருக்கும்.
    இதுதான், நம்மிடையே இருக்கும் ஒற்றுமை..
    ஆனால், இதை பத்தி எதையும் தெரிந்து கொள்ளாமல், அல்லது, கருத்தில் கொள்ளாமல், எல்லா ஜாதி மக்களையும் ஓரே இடத்தில் போட்டு கலந்து விடுவதுதான் ஒற்றுமை என்ற பாணியில் இந்துதுவவாதிகள் சென்று கொண்டிருக்கிறார்கள்..

  19. /** சாதி என்பது இந்துக்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் வரையில்தான் அதற்கு மதிப்பு. இந்துக்களுக்கு இடையே சுவற்றை எழுப்பினால், அது சந்தேகம் இல்லாமல் அவமானச் சின்னம்.
    **/

    திரு. கலிமிகு கணபதி.. இப்படி சொல்வதற்கு, உங்களுக்கு என்ன அதிகாரம்.. உங்கள் இந்துதுவத்துக்கு சாதி என்பது பிடிக்கவில்லையென்றால், தயவு செய்து, இந்து மதத்தில் ஜாதிகளுக்கு இடமில்லை என்று சொல்லி விடுங்கள்.. அதை விட்டு, அவமானம் கிவமானம் என்றெல்லாம் எதுக்கு இந்த பீடிகை?

    எல்லாரும் ஒற்றுமையாக வாழவில்லையென்றால், உடனே ஜாதியை உடைத்து அழித்து விடுவீர்களா?

    ஒரு குடும்பத்துக்குள்ளேயே அடிக்கடி சண்டை வருவது சகஜம்.. உடனே நீங்கள், குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. இல்லையென்றால் குடும்பமே இருக்க கூடாதுன்னு சொல்வீங்களா?

    இந்த மாதிரி ஒரு சிந்தனை யாதிக்க முறையில் நீங்கள் பேசுவதால் தான் இந்து இன்ற ஒரு அடையாளத்தையே நான் எதிர்த்துக் கொண்டிருக்கிறேன்.. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம்முடைய கலாச்சார பண்புகளை விட்டு, வேற்றுமையை கண்டாலே பயம் என்னும் போக்கில் நீங்கள் போய் கொண்டிருக்கிறீர்கள்.. கமல் படத்தில் வருவது போல, வேற்றுமைய கண்டால் பயம்.. வேற்றுமை ஃபோபியா ..

    பறையர்களும், பிள்ளைமார்களும், தாங்கள் இந்துக்கள் என்று உங்களிடம் வந்து சொன்னார்களா? நீங்களாகத்தானே அவர்களை இந்துக்கள் என்று முத்திரை குத்தினீர்கள்.. சொல்லப் போனால், அது கூட வெள்ளக்காரன் குடுத்த முத்திரை.. அதை நீங்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அவர்களிடம் போய் இந்துக்களாக இருக்க விருப்பமா என்று கருத்து கேட்டீர்களா?

    அப்படி இல்லாதபொழுது, பிள்ளைமார்களுக்கும், பறையர்களுக்கும் பிரச்சினை வந்த ஒரே காரணத்திற்காக ஜாதியே வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு உங்கள் சித்தாந்த வெறி இருக்கிறது..

  20. செந்தில்,

    இந்துத்துவம் இல்லாத இந்து மதம் பிணம்.

    பிணத்தைக் கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷம் கொண்டாடுவது உங்கள் விருப்பம். காதல்கள் பலவகை.

    .

  21. செந்தில் சார்,
    ஜாதி பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்? சாதி பிரிவுகளை ஆதரிக்கிறீரா?
    சாதிக்கொரு சாமி என்ற தங்கள் வரிகள் சற்று குழப்புகிறதே? அப்படி இருப்பின் ஒவோர் சாதியையும் ஒரு மதமாக கருத வேண்டும் என்கிறீரா? எல்லா சாமிகளின் வழிபாட்டுக்கிடையிலும் ஓர் இணைப்பு உள்ளதை நீங்கள் மறுக்கமுடியுமா? எல்லா வாழிபடுகளும் ஒரு தொகுப்பினுள் வருவதை நீங்கள் எர்பிர்களா? இல்லையா? உங்களுக்கு பிடிக்காத இந்து என்ற வார்த்தையை தூக்கி எரிந்து விடுவோம் ஆனால் எல்லாவற்றுக்கும் இடையேயான ஒற்றுமையை ஏன் மறுக்கிறீர்கள்.
    கிறித்தவம் போல் இஸ்லாம் போல் ஒரே தெய்வத்தை மட்டுமே ஒரு பிரிவினர் வணங்க வேண்டுமா?
    இந்திய தமிழக இந்துக்கள் (உங்களுக்கு பிடிக்காது ) செல்வத்தை வேண்டி லட்சுமியையும் கல்வி வேண்டி சரஸ்வதியும் போகிற வழியில் ஊர் தெய்வமான காளி மாரி அம்மனையும் முனி அய்யனாரையும் காப்பாத்து சைன்னு கையெடுத்து கும்பிடுகிறார்கள், எல்லாருமே பிள்ளையாரை வணங்கித்தான் எந்த வழிபாட்டையும் ஆரம்பிக்கிறார்கள். (இதுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் என்ன சம்பந்தம் )
    திருவண்ணாமலைக்கும் திருப்பதிக்கும் எல்லா ஜாதி காரங்களும் வந்து சாமி குபிடுறாங்க (இதுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் என்ன சம்பந்தம் )
    செந்தில் சார் நம்ம ஆளுங்க எல்லோரிடமும் ஆன்மிகத்தில் நம்மை அறியாமல் இயற்கையாகவே எந்த இந்துத்துவவாதியின் தலையீடும் இன்றி ஒரு ஒற்றுமை ஆன்மிக மற்றும் வாழ்க்கை முறைகளில் அமைந்துள்ளது.

  22. @திராவிடன்

    /** ஜாதி பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்? சாதி பிரிவுகளை ஆதரிக்கிறீரா?
    சாதிக்கொரு சாமி என்ற தங்கள் வரிகள் சற்று குழப்புகிறதே? அப்படி இருப்பின் ஒவோர் சாதியையும் ஒரு மதமாக கருத வேண்டும் என்கிறீரா?
    **/

    ஜாதி என்பது, பாரதிய சமுதாயத்தின் அடித்தளம்.. (Foundation) .. ஒரு கட்டடம் எப்படி செங்கல்களாக கட்டப்பட்டுள்ளதோ, அப்படி, பாரதிய சமுதாயத்துக்கு ஜாதி என்பது செங்கல் போல.. (Building Block).. இந்த உண்மை பெரும்பாலான நகரத்து மக்களுக்கு புரிவதில்லை.. ஜாதி கேவலம், ஜாதி ஒழிய வேண்டும் என்று பாடப்புத்தகத்தில் படித்து படித்து, தன்னையறியாமல் ஒரு வேறுப்பு எல்லாரிடமும் பதிந்துள்ளது.. அது தான், நமது ஒவ்வொரு மக்களையும், நமது சமுதாயத்திற்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறது.. ( By Indoctrinated beliefs, the indian people are made hostile to their own society).. இதற்கு, இந்துதுவ சிந்தனையாளர்களும் விதி விலக்கல்ல.. உங்கள் மறு மொழியில், அந்த நிலை தெளிவாக தெரிகிறது..

    நமது பாரதிய சமுதாய அமைப்பு முறையில், பல்வேறு கட்டங்கள் இருக்கிறது.. குலம்/கோத்ரம் என்பது அதன் அடிப்படை.. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு குல தெய்வம் இருக்கிறது.. அந்த குல தெய்வம் தான், நமது மக்களின் முதல் தெய்வம்.. ( Primary God).. இந்த குல தெய்வம், காளியம்மனாகவோ, செல்லியம்மனகவோ, அய்யனாராகவோ இருக்கும்.. அந்த குல தெய்வமும், குல தெய்வ கோயிலும் அந்த கோத்திரத்தாருக்கு மட்டுமே உரியதாகும்.. இது எல்லா ஜாதிக்கும் பொருந்தும்.. அரிசனங்கள் உட்பட..

    உடனே உங்களுக்கு, சந்தேகம் வருகிறது.. ஜாதிக்கொரு சாமினா, அப்புறம், எல்லாருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமை இல்லமல் போய்விடும் என்ற பயம்.. அது தேவையில்லாதது… குல தெய்வம் என்பது, உள்ளூர் பாரம்பரியத்தை வைத்தும், அந்த பகுதிக்குரிய தெய்வாம்சத்தை வைத்தும், இன்னும் பிற காரணங்கள் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படுவது.. அது நமது பாரம்பரியத்தில் முதல் படினிலை.. இந்த குல தெய்வங்கல் அனைத்தும் அம்மனின் சொரூபமாகவோ, ஈஸ்வரனைன் அம்சமாகவோ, இல்லை விஷ்ணுவின் அவதாரமாகவோ தான் பார்க்கப்படுகிறது.. Unity is achieved, by relating gods with one another, and NOT in every one worshipping same god..

    அதனால் உங்கள் பயம் தேவையில்லாதது.. பயப்படுவதை விட்டுவிட்டு, ஒவ்வொரு பிரதேசத்தின் பாரம்பரியத்தையும் உள்ளது உள்ளது போல பாருங்கள்.. உங்களுக்கு பல விஷயங்கள் புரியும்..

    ஒவ்வொரு சாதியும் ஒரு மதமா? ஆம் என்றே சொல்வேன்.. ஒரு மதத்தின் குணனலங்கள் என்பது, கடவுள், மற்றும் அதை சார்ந்த சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறை.. இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்பொழுது, ஒவ்வொரு சாதியும் ஒரு மினி மதம் என்றே சொல்லலாம்..

    Please read the book “Castes of Mind” by Nicholas Dirks —
    https://deepblue.lib.umich.edu/handle/2027.42/51135

    his another paper :
    https://deepblue.lib.umich.edu/handle/2027.42/51136

    /** எல்லா சாமிகளின் வழிபாட்டுக்கிடையிலும் ஓர் இணைப்பு உள்ளதை நீங்கள் மறுக்கமுடியுமா? எல்லா வாழிபடுகளும் ஒரு தொகுப்பினுள் வருவதை நீங்கள் எர்பிர்களா?
    **/

    இதைத்தானே நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.. எல்லா சாதிக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது.. அந்த இணைப்பை அறிந்து கொள்ள எந்த முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டு.. இந்து ஒற்றுமை என்ற வெத்து காரணத்தை வைத்துக் கொண்டு, இருக்கின்ற ஜாதியையே அழிக்க முயற்சிக்கிறார்கள்..

    எல்லா வழிபாடும் ஒரு தொகுப்பினுள் வருகிறது என்பதையும் நான் மறுக்கவில்லை.. ஆனால் எப்படி ஒரு தொகுப்பு தனி மதமாகும் என்பதுதான் எனது கேள்வி.. இன்றைக்கு என்ன நடக்கிறது என்றால், இந்து என்பதை ஒரு தொகுப்பாக பார்க்காமல், செமிட்டிக் மதங்கள் போல ஒரு தனி மதமாக நிறுவ பார்க்கிறார்கள்.. அதற்கு தொகுப்பில் இருக்கும் தனி தனி வழிபாட்டு முறையின் அடையாளத்தை அழிக்க முற்படுகிறார்கள்.. அதைதான் நான் இங்கு எதிர்க்கிறேன்..

    /** உங்களுக்கு பிடிக்காத இந்து என்ற வார்த்தையை தூக்கி எரிந்து விடுவோம் ஆனால் எல்லாவற்றுக்கும் இடையேயான ஒற்றுமையை ஏன் மறுக்கிறீர்கள்.
    **/
    நான் மறுக்கவில்லை.. இந்த தளத்தில் இருக்கும் இந்துதுவவாதிகள் தான் மறுக்கிறார்கள்.. அதை நான் முந்தைய நீண்ட பதிவில் விளக்கியிருக்கிறேன்.. எப்படி, பறையருக்கும் பிள்ளைமார்களுக்கும் மற்ற சாதிய்னருக்கும் ஏற்கனவே ஒற்றுமை இருந்தது என்பதை நான் எடுத்து காட்டியிருக்கிறேன்.. ஆனால், இந்த இந்துதுவ வாதிகள், தங்களை சமாதான புறாவாக நினைத்துக் கொண்டு, இவர்கள் தான் ஒற்றுமையை ஏற்படுத்துவது போல நினைத்துக் கொள்கிறார்கள்.. இவர்களின் வாதம் என்னவென்றால் இந்துக்களின் ஒற்றுமைக்கு ஜாதிகள் தடையாக இருக்கிறது.. அது தவறு என்பது எனது வாதம்..

    /**
    கிறித்தவம் போல் இஸ்லாம் போல் ஒரே தெய்வத்தை மட்டுமே ஒரு பிரிவினர் வணங்க வேண்டுமா?
    **/

    ஒவ்வொரு பிரிவினரும் அவர்கள் குல தெய்வத்தை தான் முதலில் வணங்க வேண்டும்.. பின்பு அவர்கள் இஷ்ட தெய்வம் என்று எந்த தெய்வத்தையும் வணங்கலாம்.. உங்களுடைய குல தெய்வம் என்ன என்பதை முதலில் பாருங்கள்..

    கிறித்துவத்தை போட்டு இங்கு குழப்பி கொள்ளாதீர்கள்.. நான் குல தெய்வத்தை மட்டுமே கும்பிடுவேன்.. வேறு எந்த தெய்வத்தையும் கும்பிட மாட்டேன் என்று யாரும் இங்கு சொல்லவில்லை

    /** செந்தில் சார் நம்ம ஆளுங்க எல்லோரிடமும் ஆன்மிகத்தில் நம்மை அறியாமல் இயற்கையாகவே எந்த இந்துத்துவவாதியின் தலையீடும் இன்றி ஒரு ஒற்றுமை ஆன்மிக மற்றும் வாழ்க்கை முறைகளில் அமைந்துள்ளது.
    **/

    அதைதான் நானும் சொல்கிறேன்.. இந்த இந்துதுவம் போய் தான் அந்தந்த பாரம்பரியத்தை குழப்புகிறது.. ரெண்டாவது, ஆன்மிகம் தனித்து நிலைப்பதில்லை.. நமது வாழ்க்கை முறையில் கலந்திருக்கிறது.. நமது வாழ்க்கை முறை, நமது சுற்றுப்புறத்தை வைத்து அமைகிறது.. நமது சுற்றுப்புறம் இன்று எவ்வாறு இருக்கிறது என்று நீங்களே எண்ணிப்பாருங்கள்..

    நமது கலாச்சாரம் இயற்கையோடு இணைந்து இருப்பது.. மேற்கத்திய நகரத்தில் இருந்து கொண்டு எப்படி நமது ஆன்மிகத்தை இவர்கள் வளர்ப்பார்கள்.. ஆனால் இந்த இந்துதுவவாதிகள், நகரங்கள் தான் வேண்டும்.. கிராமங்கள் பிற்படுத்தப்பட்ட்வர்களின் கூடாரம் என்று நம்புகிறவர்கள்.. பல பேர், கிராமங்கள் தான் இந்தியாவை பின்னோக்கி தள்ளுகிறது என்று சொல்கிறார்கள்

    கிராமங்களை அழித்துவிட்டு இவர்கள் எந்த ஆன்மிகத்தை நிறுவப்போகிறார்கள்.. கிராமங்களை அழிக்கும் இந்துதுவத்துக்கும் நமது ஆன்மிகத்தும் என்ன தொடர்பு? வழிபாடு என்பது மட்டுமே வாழ்க்கை.. மற்றதெல்லாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது இவர்களின் நிலைப்பாடு..

  23. செந்தில் ஒரே ஒரு கருத்தையே சொல்லி வருகிறார்: ஆதி காலத்திலிருந்து மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே இன்றும் வாழ வேண்டும். அவ்வாழ்க்கையை யாரும் சிதைக்க்க்கூடாதென்பதே இவரின் அழுத்தம் திருத்தமான கருத்தாகும். இக்கருத்தை நான் வாதிக்கப்போவதில்லை. ஏனெனில் இக்கருத்துச் சரியென்று பல தத்துவஞானிகள் சொல்லியிருக்கின்றனர். சரிதான்.

    என்ன பிரச்சினை இந்தக்கருத்தில் என்றால், இது ஒரு கற்பனை உலகத்தை உண்மையென இன்னும் நம்பி சொல்லப்படும் கருத்தாகும். அமேசான் காடுகளிலோயோ, இந்தோனிசிய காடுகளிலேயோ, அல்லது அருகிலுள்ள நிகோபார் காடுகளிலோயோ வசிக்கும் ஆதிகுடிகள் இன்றும் நாம் வாழும் உலகத்துக்கு வரவில்லை. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று அந்தந்த பிரதேசங்களை தம்நாட்டுடன் வைத்துக்கொண்டிருக்கும் அரசுகள் செய்தும் சொல்லியும் தடுத்தும் வருகின்றன. இது தற்காலச்சிந்தனை. போன நூற்றாண்டில் அப்படி நினைக்கவில்லை. வெள்ளைக்காரன் தடாலடியாக நுழைந்து அவர்களின் தொல்கலாச்சாரத்தை அழித்தான்.

    எனவேதான், கார் நிகோபார் இந்தியாவாக இருந்தாலும் அரசு அங்கு நுழையவில்லை. அந்த ஆதிக்குடிகள் எவரையும் தம்முடன் வந்து போக விரும்பவில்லை, அரசு அவர்கள் உணர்ச்சிகளை மதிக்கிறது.
    இப்போது மதுரை மாவட்டத்திற்கு வருவோம். இம்மாவட்டத்தில் கணிசமான பகுதி மேற்குத் தொடர்ச்சிமலைகளுக்குப் பக்கத்தில்தான். தேனி மாவட்டம் முழுவதுமே மலைகள்; அருவிகள், காடுகள். இம்மாவட்ட மக்கள் இன்னும் பலவிடங்களில் தங்கள் பழைய வழக்கங்களை விடவில்லை. அதே வேளையில் அவர்களில் இன்றைய தலைமுறைகள் மாறிக்கொண்டு வருகிறார்கள். ஊடகங்கள், தற்காலக்கல்வி, இவை பழைய வாழ்க்கையை புதியவாழ்க்கையோடு ஒப்பீடு செய்ய வைக்கிறது. புதிய வாழ்க்கையைத்தான் இளைய தலைமுறை விரும்புகிறது.
    ஆக, கன ஜோராக மாறிக்கொண்டு வருகின்றபடியால், உத்தபுரம் ஒரு வினோத உலகமாக வெளியில் தெரிகிறது. மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இக்காலத்தில் இப்படியும் ஒரு ஊரா ? இதே போல மதுரை மாவட்ட பெண் சிசுக்கொலைகள், ஜாதிக் கலவரங்கள் போன்றவை – “இக்கால வெளியுலகம்” என்ற பிரிசத்தின் வழியாகப் பார்க்கப்படுகின்றபடியால், மெல்லமெல்ல அம்மக்களும் தங்களை மாற்றித்தான் தீரவேண்டும் எனற நிலைக்கு உந்தப்படுகிறார்கள். இதற்கு பிறர் வந்துதான் செய்ய வேண்டுமென்பது இல்லை. தானாகவே நிகழும் மாற்றங்கள் இவை. பழையன கழிதல் காலத்தில் கட்டாயம். இன்றில்லாவிட்டால் நாளை நடந்தே தீரும். மதுரை மாவட்டத்து குக்கிராமங்களிலிருந்தெல்லாம் அமெரிக்கா செல்கிறார்கள் இளைஞர்கள். பெண்கள் மதுரை, சென்னை, போன்ற பெரும்பட்டணங்களுக்குச் செல்கிறார்கள். வெளியில் சென்று உள்ளே வந்தவர்கள், நாம் எப்படி வாழ்ந்து வருகிறோம். வெளியுலகம் எப்படி வாழ்கிறது என்று உணர்கிறார்கள். சாமிக்காகச் சண்டையென்பது மாபெரும் வியப்பாக மலைக்கவைக்கிறது.
    இப்படிப்பட்ட மாறுதல்கள் நடக்கும்போது, இந்துமதம் செந்தில் சொன்ன மாதிரி பழைமையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்துமா? இல்லை, காலத்துகேட்ப தன்னை மெல்லமெல்ல மாற்றிக்கொள்ளுமா? என்ற கேள்விக்கு செந்தில் பதில் சொன்னால் செம ஜாலியாக இருக்கும் !

  24. @கருமுத்து,

    உங்கள் கருத்து, நீங்கள் எந்தளவு மாய உலகத்தில் வாழ்கிறீர்கள் என்பதை காட்டுகின்றது..

    /** செந்தில் ஒரே ஒரு கருத்தையே சொல்லி வருகிறார்: ஆதி காலத்திலிருந்து மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே இன்றும் வாழ வேண்டும்.
    **/

    ஆதி காலம் என்பது உங்கள் அகராதியில் என்ன? கிராமங்கள் எல்லாம் ஆதி காலத்து மனிதர்கள் வாழும் இடமாக் நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது உங்கள் பதிவில் தெளிவாக தெரிகிறது.. உத்தபுரத்தில் இருக்கும் மக்கள் எல்லாரும் ஆதிவாசிகள் வாழும் வாழ்க்கையை வாழ்ப்வர்களா.. இல்லை, நீங்கள் வாழும் மேற்கத்திய நகர வாழ்க்கையை வாழாதவர்கள் எல்லரும் ஆதிவாசிகளா?

    நான் சொல்ல வந்த கருத்து எதையும் நீங்கள் இதுவரை புரிந்து கொள்ளவில்லை என்பது தெரிகிறது..

    /** இது ஒரு கற்பனை உலகத்தை உண்மையென இன்னும் நம்பி சொல்லப்படும் கருத்தாகும். அமேசான் காடுகளிலோயோ, இந்தோனிசிய காடுகளிலேயோ, அல்லது அருகிலுள்ள நிகோபார் காடுகளிலோயோ வசிக்கும் ஆதிகுடிகள் இன்றும் நாம் வாழும் உலகத்துக்கு வரவில்லை.
    **/
    அமேசான் காடுகளில் இருக்கும் ஆதிவாசிகளுக்கும், உத்தப்புரத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கை முறைய்க்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நீங்கள், யார் கற்பனை உலகத்தில் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்..

    /** இம்மாவட்டத்தில் கணிசமான பகுதி மேற்குத் தொடர்ச்சிமலைகளுக்குப் பக்கத்தில்தான். தேனி மாவட்டம் முழுவதுமே மலைகள்; அருவிகள், காடுகள். இம்மாவட்ட மக்கள் இன்னும் பலவிடங்களில் தங்கள் பழைய வழக்கங்களை விடவில்லை.
    **/

    மலைப்பகுதி.. அருவி.. காடுகள்.. இவையெல்லாம் உங்கள் அகராதியில் ஆதிவாசிகள் வாழும் இடங்கள்..
    அது சரி.. பழைய வழக்கங்கலை ஏன் இவர்கள் விடவேண்டும் என நினைக்கிறீர்கள்..

    /** அதே வேளையில் அவர்களில் இன்றைய தலைமுறைகள் மாறிக்கொண்டு வருகிறார்கள். **/

    எந்த மாதிரி மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் சொல்ல வில்லையே.. அதை விட முக்கியம், இந்த மாற்றம் திட்டமிட்டு திணிக்கப்படுகிற ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா?

    /** ஊடகங்கள், தற்காலக்கல்வி, இவை பழைய வாழ்க்கையை புதியவாழ்க்கையோடு ஒப்பீடு செய்ய வைக்கிறது. புதிய வாழ்க்கையைத்தான் இளைய தலைமுறை விரும்புகிறது.
    **/
    புதிய வாழ்க்கை என்பது என்னவென்று சொல்லுங்களேன்.. அப்புறம் இளைஞர்கள் அதை விரும்புவது சரியா தப்பா என்று பார்ப்போம்.. இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்பதாலயே அந்த மாற்றம் சரியாகி விடாது..

    /** ஆக, கன ஜோராக மாறிக்கொண்டு வருகின்றபடியால், உத்தபுரம் ஒரு வினோத உலகமாக வெளியில் தெரிகிறது. மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இக்காலத்தில் இப்படியும் ஒரு ஊரா ?
    **/
    மதுரையை சுற்றி இருக்கும் மக்களுக்கு இது வினோதமாக தெரிவதில்லை.. கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் இது வினோதமாக தெரிவதில்லை.. யாருக்கு தெரிகிறது என்றால், நகரத்தில் (குறிப்பாக சென்னை) இருப்பவர்களுக்கு வேண்டுமானால் வினோதமாக தெரியலாம்.. அவர்களை பொறுத்தவரை, டி.வி யில் காட்டாத எதுவுமே வினோதம்தான்.. இயற்கையே வினோதம்தான் அவர்களுக்கு.. ஏனென்றால், கட்டடங்கள், தார் ரோடு, ட்ரேயின், ஏரொப்ளேன், கடல்.. இவைகலை தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது.. அரிசி எந்த மரத்தில் விளையும் என்று கேட்பவர்கள் அவர்கள் ( சிரிக்காதீங்க சார்.. உண்மையிலேயே இப்படி கேட்டிருக்கிறார்கள்)

    ஆகவே, யாருக்கு யார் வினோதம் என்பதை நாம் இந்த விவாதத்தில் முடிவு செய்வோம்..

  25. /** மதுரை மாவட்டத்து குக்கிராமங்களிலிருந்தெல்லாம் அமெரிக்கா செல்கிறார்கள் இளைஞர்கள். பெண்கள் மதுரை, சென்னை, போன்ற பெரும்பட்டணங்களுக்குச் செல்கிறார்கள். வெளியில் சென்று உள்ளே வந்தவர்கள், நாம் எப்படி வாழ்ந்து வருகிறோம். வெளியுலகம் எப்படி வாழ்கிறது என்று உணர்கிறார்கள். சாமிக்காகச் சண்டையென்பது மாபெரும் வியப்பாக மலைக்கவைக்கிறது.
    **/

    அதுதான் பிரச்சினை.. குக்கிராமத்தில் இருந்து வெளியில் செல்பவர்கள், திரும்ப வந்து தன் கிராம வாழ்க்கை கேவலம் என்று நினைக்க வைப்பதுதான் பிரச்சினை.. அவர்களுக்கு தெரியவில்லை.. அமெரிக்கா, ஐரோப்பாவில் வாழும் மக்கள் அவர்கள் சொந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று.. ஜெர்மனியில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்தானும், தன்னுடைய பாரம்பரிய வாழ்க்கையே வாழ்கிறான்.. அது போல, சுவீடன், நார்வே, மற்றும் இன்னும் நிறைய ஐரோப்பா நாடுகளிலும் அப்படியே.. அவனுடைய லோக்கல் வாழ்க்கையே வாழ்கிறான்..
    ஃப்ரான்சில் காபரே டான்ஸை இன்னும் நடத்துகிறார்கள்.. ஸ்பேயினில், விபச்சாரம் இன்னும் தேசிய தொழிலாக இருக்கிறது.. ரோட்டோரத்தில் நடக்கும்.. ரஷ்யாவிலும் அதுவே.. பிரிட்டனில், அவர்களின் லோக்கல் பட்ட சாராயமான ஸ்காட்ச் விஸ்கி பிரபலம்.. அவர்கள் அரசாங்கமும் அதை ஆதரிக்கிறது.. அவர்களுடைய உள்ளுர் வாழ்க்கை முறையையே வாழ்கிறார்கள்.. ஹாலோவீன் திருவிழாவில் இன்னமும், தண்ணியடித்து, அரைகுறை ஆடையுடன், ஆடிப்பாடி வருகிறார்கள்.. அதுக்காக அவர்கள் கேவலப்படுவது இல்லை..

    சரி.. அமெரிக்காவிற்கு வருவோம்.. அவர்களுக்கு எந்த ஒரு நாகரிகமும் இல்லை.. இருந்தாலும், அவரவர் உள்ளூர் நிலவரத்துகேற்ப, அவர்கள் வாழ்கிறார்கல்.. நியுயார்க் நகரத்தை பார்த்து, அரிசோனா மக்கள் வாழ்வதில்லை.. கலிபோர்னியாவை பார்த்து, மிச்சிகன் மக்கள் வாழ்வதில்லை..

    ஆனால், இந்தியாவில் தான், கிராமத்தில் இருப்பவர்கள் பழமைவாதிகள் என்று, ஆங்கிலம் படித்து நகரத்திற்கு சென்றவர்கள் கேவலமாக் பார்க்கும் நிலை இருக்கிறது.. அது கூட பரவாயில்லை.. கிராமத்தானை முன்னேற்ற வேண்டும், என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொருவரும் இறங்கியிருக்கிறார்கள்.. அந்த மாதிரி செய்வது முற்போக்கானது என்ற நம்பிக்கை ஆழ பதிந்து இருக்கிறது..

    கிராமத்தில் கிடா வெட்டி சாமி கும்பிடுவது கேவலமாக படுகிறது.. தாளம் தம்பட்டை அடித்துக்கொண்டு, கிராம மக்கள் தேர்த்திருவிழா தூக்குவது கேவலமாக தெரிகிறது.. அந்த திருவிழாவில் இரண்டு தரப்புக்கு சண்டை வந்துவிட்டால், உடனே இவர்கள் அவர்களை பார்க்கும் பார்வை இருக்கிறதே.. என்னமோ நகரத்தில் சண்டையே வராத மாதிரியும், கிராமத்தான் மட்டும்தான் சண்டை பொடுவது மாதிரியும் உடும் பில்ட் அப்.. அப்பப்பா.. சகிக்க முடியாது

    இந்த மாதிரி காலனிய மனனிலை தான் நம்முடைய கலாச்சார் சீரழிவின் உண்மையான காரணம்.. Francois Gautier அவர்கள் 5 வருடத்துக்கு முன்னாடியே இந்த மாதிரி போக்கை சாடியிருந்தார்.. ஆனால் இன்னமும் அது அப்படியே தான் தொடர்கிறது.. கருமுத்து போன்றவர்கள் அதற்கு உதாரணம்.

  26. சரி.. கருமுத்து சொல்வது போல வெளியில் (அதாவது, சென்னை போன்ற மெட்ரோவில் இருப்பவர்கள் எந்த மாதிரி வாழ்க்கை வாழ்கிறார்கள்?

    தினமும் எழுந்தவுடன், பில்டர் காபி.. பால் எங்கிருந்து கிடைக்கிறது?? பக்கத்தில் இருக்கும் ஆவின் கடையில்.. அவ்வளவுதான் இவர்களுக்கு தெரியும்.. அந்த ஒரு லிட்டர் பாலுக்காக, உத்தப்புரம் மாதிரி கிராமத்தில் இருக்கு ஒரு விவசாயி எவ்வளவு கஷ்டப்படுவான் என்பதெல்லாம் இவர்களுக்கு தேவையில்லை.. குறைந்த பட்சம், அவன் கிராமத்தில் பாடுபட்டு பால் உற்பத்தி பண்ணினால் தான் இங்கு ஆவினில் கிடைக்கும் என்ற அடிப்படை ஞானம் கூட இருக்குமா என்றால், கேள்விக்குறிதான்..

    சரி.. அடுத்து, சோத்துக்கு என்னடா பண்ணுவ? அதான் பக்கத்தில் அரிசி மண்டி இருக்கே.. பணம் கொடுத்தா அவனே கொண்டுவந்து போட்டுட்டு போவான்.. இப்பொழுது ரிலையன்ஸ் ஃப்ரெஷ் இன்னும் தரமா கொடுப்பான்.. சரி.. அது எங்கிருந்து உற்பத்தி ஆகுது?? அதெல்லாம் எதுக்கு.. எவனோ ஒருத்தம் தயார் பண்றான்.. காசு கொடுத்தா எங்கிருந்தாலும் கொண்டு வந்து தருவதற்கு வியாபாரிங்க இருக்காங்க..

    அடுத்து, காய் கறி.. பக்கத்தில் இருக்கும் யாராவது ஒரு செரிப்பகுதி அம்மா கூவி கூவி விக்கும்.. அது கிட்ட பேரம் பேசி வாங்கிக்கலாம்.. அதுக்கும் இப்போ ரிலையன்ஸ் ஃப்ரெஷ்.. போனா, எல்லா காய்கறியும் கிடைக்கும்.. மொத்தமா வாங்கிக்கலாம்…

    அவ்வளவு தான்.. இதுதான் கருமுத்து காட்டும் வெளியில் இருப்பவர்கள் வாழும் வாழ்க்கை.. இவர்கள் வாழும் வாழ்க்கைக்கு தேவையானதெல்லாம், கிராமத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது… பாலிலிருந்து, அரிசியிலிருந்து, பருப்பிலிருந்து வெங்காயத்திலிருந்து, கிராமத்தில் இருப்பவர்கள் தான் விவசாயம் பண்ணி அனுப்புகிறார்கள்.. ஆனால், அந்த கிராமத்தான், இவர்களை பொருத்தவரையில் பழமைவாதி.. முட்டாள். சிறிய விஷயங்களுக்கெல்லாம் அடித்து கொள்பவர்கள்.. அவர்களை முன்னேற்றுவது இந்த மாதிரி நகரத்து ஆட்களின் தெய்வீக கடமை..

    சரி.. எப்படி முன்னேற்றுவது?? கிராமத்தான் கிராமத்தில் இருக்கும் வரை பழமைவாதத்திலேயேதான் ஊறிக் கிடப்பான்.. அவனை படிக்க வைத்து, நகரத்துகு கொண்டு வந்து தெரு தெருவா ஃபைல தூக்கிகிட்டு அலைய விடு.. அதுதான் உண்மையான் முன்னேற்றம்.. எவனோ ஒருவன், கார்ப்பரேன் கம்பெனி வைத்திருப்பான்.. அவனிடம் போய் குமாஸ்தா வேலைக்கு சேர்.. மாதம் 5000 சம்பளமா இருந்தாலும் பரவாயில்லை.. பிற்பாடு வாழ்க்கையில் இன்னும் நிறைய சம்பாதித்து முன்னேறலாம்.. காசு சம்பாதிச்சாதான் முன்னேற்றம்.. எவ்வளவுக்கு அதிகமா சம்பாதிக்கிறமோ அவ்வளவு முன்னேற்றம்..

    இதுதான் கருமுத்து சொல்லும் வெளியில் இருக்கும் மாக்களின் மாடர்ன் வாழ்க்கை.. புதிய வாழ்க்கை.. இதை வாழாதவர்கள் முட்டாள்கள்.. ஆதி வாசிகள்.. பழமைவாதிகள்..

    உத்தப்புறம் போன்ற கிராமத்தில் இருப்பவர்கள் இந்த புதிய வாழ்க்கை வாழ்வது தான் முன்னேற்றம்..

    சரி.. இபப்டி, கிராமத்தான் எல்லாம் டவுனுக்கு வந்து குமாஸ்தா வாழ்க்கை வாழ வந்துட்டா, யாருய்யா விவசாயம் பண்ணுவா? கேட்டா, நாம் ஆதிக்க சக்திகள்.. ஏன்.. நீ மட்டும்தான் சொகுசா டவுனுல இருப்பயா.. அவனுக்கெல்லாம் அந்த உரிமை கிடையாதா? டிஸ்கிரிமினேஷன் போபியா..

    சரியா.. அவன டவுனுக்கு கொண்டுவந்துடுவோம்.. ஆனால், அப்புறம் நாம் சோத்துக்கு என்ன பண்ணுவோம்..? அத பத்தி நீ ஏன் கவல படற?? அரிசி மண்டி கடைக்காரன் எங்காவது இருந்து கொண்டு வருவான்.. அதை நாம் வாங்கிக்கிலாம்.. எதுக்கு ஒரு விவசாயி கிராமத்தில் கஷ்டப்படணும்..

    இப்படிதான், பெரும்பாலான “புதிய வாழ்க்கை” மக்களின் குறிகிய மனப்பான்மை.. இதில், இந்துதுவ வாதிகளும் அடக்கம்.. இவர்களை எதுத்துதான் என்னுடைய “தர்ம யுத்தம்” !!!!!! 🙂 🙂 தொடர்ந்து கொண்டிருக்கிறது..

    இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஒண்ணு மட்டும் புரிய மாட்டேங்குது.. எங்க போனாலும் அங்கேயும் விவசாயி தான் வெள்ளாமை பண்ணுவான்.. அவன் வெள்ளாமை பண்ணனும்னா, அவன் கஷ்டப்பட்டுதான் ஆகனும்.. அவன் மட்டும் இல்ல.. அவனை சார்ந்த விவசாயம் சார்ந்த மற்ற சமூகத்தவனும் இருக்கணும்.. பறையர், நாடார், வண்ணார், நாவிதன்.. இப்படி, கிராமத்தில் ஒரு பல குடிகள் சேர்ந்து விவ்சாயம் செய்வதால்தான், டவுன்ல இருக்கவங்க நிம்மதியா சாப்பிடறாங்க..

    அதை விட முக்கியமான விஷயம், இந்த விவசாயிகள் அனைவரும் தங்களுக்கும் உணவு உற்பத்தி பண்ணிக்கொண்டு, டவுனுல இருக்கவங்களுக்கும் அனுப்புறாங்க.. இந்தியாவுல, இன்னைக்கும் 70 சதவிகித மக்கள் கிராமபுறங்கள்ல இருக்காங்க.. அந்த 70 சதவிகித மக்களும் தங்களுக்கு தேவையான உணவை அவங்களே தயார் செய்துக்குறாங்க.. மீதி இருக்கிற 30 % பேர் தான், கிராம மக்களின் உழைப்பை உறிஞ்சி சாப்பிடறாங்க…

    எப்படி?? டாலர் விலைய இவங்க இஷ்டப்படி நிர்ணயித்து, உணவு விலைய இவங்க வசதிக்கு குறைத்து, கிராம மக்களை அடிமைபடுத்தி வைத்திருக்கிறார்கள்.. சென்னை, மற்றும் பல நகரங்கள், ஏற்றுமதி நம்பித்தான் ஓடுது.. ஏற்றுமதி, டாலர் விலை அதிகமா இருக்கறதாலத்தான் சாத்தியமாகுது.. ஒரு டாலர் = ஒரு ரூபா ங்கற நிலை இருந்தா, எந்த கிராமத்தானும் நகரங்கள் நோக்கி வரமாட்டான்..

    ஆகையால, இந்துதுவவாதிகளுக்கும் நான் சொல்வது இதுதான்.. மதம் மட்டுமே வாழ்க்கையாகாது.. ஒரு சமூகத்தின் கட்டமைப்பும், அதன் பொருளாதார முறையும், மதத்தை விட முக்கியம்.. அதை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்.. பிற்பாடு மதம் பற்றி தானாக் நமக்கு புரிந்துவிடும்..

  27. அச்சோ செந்தில் போச்சு உங்களுக்கு ஹிந்துத்வா தீட்டு வந்துபுடுத்து

    ஹிந்துத்வா வாதிகளான சங்ககாரர்களின் பேச்சு மாதிரின்ன உங்க பேச்சு இருக்கு – அவுக தான் இது மாதிரி integral humanism, swadesi என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

  28. அன்பார்ந்த ஸ்ரீ செந்தில், இந்த தேசத்தின் பற்பல ஜாதிகளும் குல வழக்கங்களும் போற்றி பாதுகாக்கப்படவேண்டியவை என்ற தங்கள் அபிப்ராயம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஹிந்துத்வவாதிகள் ராப்பகலாக பாடுபடுவது ஜாதிபேதங்களை ஒழிக்கவேயன்றி அறவே ஜாதிகளை ஒழிக்க அல்ல என்பது என் புரிதல். ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டியவை என ஹிந்துத்வவாதிகள் சொல்வதாக தெரியவில்லையே. ஹிந்து ஹிந்துத்வம் போன்ற வார்த்தைகள் தங்களுக்கு கசப்பானவை என தெரிகிறது. அதற்காக “ஹ” எடுத்து விட்டு “பொ” ப்ரயோகிப்பது கண்யக்குறைவாக உள்ளது.

    பரஸ்பர அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது உத்தப்புரம் காண்பிப்பது. ஹிந்து இயக்கங்கள் ஜாதிகளிடையே பரஸ்பர அன்பிற்கு பாடு படுதலில் என்ன தவறு? பற்பல ஜாதியினரிடையே பரஸ்பர அன்பு நிலைத்திருப்பது ஒட்டுமொத்த சமூஹம் அமைதியாய் வாழவும் க்ராமங்களும் நகரங்களும் தேசமும் வளர்ச்சியடைய வழி வகுக்கும் என்பது திண்ணம்.

    சொல்லொணாத் துன்பத்திற்கு ஆட்பட்டு வாழ வழியில்லாது புண்ய ஸ்தலங்களை தரிசிக்க என்ற வ்யாஜத்தில் பாகிஸ்தானில் இருந்து ஹிந்துஸ்தானம் வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்துக்குடும்பங்கள் சரணார்த்திகளாக தில்லி நகரில் “மஞ்சு கா திலா” என்ற இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். “Headlines Today” தவிற வேறு எந்த தொலைக்காட்சிகளும் இவர்களைப்பற்றி ஒளிபரப்பியதாக தெரியவில்லை. ஆடு, மாடு, வீடு மற்றும் அசையும் அசையா சொத்துக்களை போட்டது போட்ட படி பஞ்சாபின் “அடாரி” எல்லை தாண்டி வந்துள்ள இவர்கள் தங்கள் பெண்களை பலவந்தமாக பாகிஸ்தானியர் இஸ்லாமுக்கு மதமாற்றுவதாகவும் மறுப்பவர்களை பலாத்காரம் செய்வதாகவும் கொடுமைகளுக்கு ஆட்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆண் பிள்ளைகளை பள்ளிகளில் படிக்க வைக்க இயலா நிலைமை. காரணம் இஸ்லாமிய கெடுபிடி. பார்க்க சுட்டி https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=2062.

    காந்தியவாத அரசியல் வாதிகளோ, இவர்களை ஹிந்துஸ்தானத்தில் சேர்த்தால் பாகிஸ்தானத்திலிருந்து வெள்ளம் போல் இஸ்லாமியரல்லாத மக்கள் ஹிந்துஸ்தானத்தில் தஞ்சம் புகுவர்; ஆகவே இவர்களுக்கு புத்திமதி சொல்லி பாகிஸ்தான் அனுப்ப வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர். ஹிந்துஸ்தானத்திலும் உலகமெங்கும் ஹிந்து என்ற காரணத்திற்காக அவதிக்குள்ளாகும் மக்களுக்காக யார் பாடுபட முடியும் என்ற கேள்வி எழுகிறது. பதில் – ஹிந்து இயக்கங்கள்.

    1980களில் அயோத்தியில் ராமர் கோவில் பூட்டுக்கள் திறக்க வேண்டி ஹிந்து இயக்கங்கள் பாடு பட்டன். அப்போது “ஹிந்து இன்றே ஒன்று படு” என்ற பாடல் ஹிந்துஸ்தானமெங்கும் பற்பல பாஷைகளில் தேசமெங்கும் பாடப்பட்டது (ஹிந்தியில் “ஹிந்து ஹிந்து ஏக் ரஹே – இது இன்று இணையத்தில் கிடைக்கப்பெறுகிறது; தமிழ்ப்பாடல் கிடைக்கவில்லை). முப்பது வருஷங்களாகிறது. முப்பதென்ன முன்னூறு வருஷங்களானாலும் நினைவிலிருத்தப்பட வேண்டிய பாடல் எனத்தெரிகிறது.

    எப்போதாவது அவகாசம் கிடைக்குமாயின் ஜம்மு, காஷ்மீரம் மற்றும் லத்தாக் ப்ராந்தியத்தில் உள்ள ஏதேனும் க்ராமத்திற்கோ அல்லது நகரத்திற்கோ வந்து பாருங்கள். ஹிந்து என்ற சொல்லின் பரிமாணங்களை உணர்வு பூர்வமாக அறிவீர்கள். வெய்யிலின் அருமை நிழலில் தெரியாது அல்லவா.

  29. @sarang,

    /** ஹிந்துத்வா வாதிகளான சங்ககாரர்களின் பேச்சு மாதிரின்ன உங்க பேச்சு இருக்கு – அவுக தான் இது மாதிரி integral humanism, swadesi என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
    **/

    நான் பேசுவது யதார்த்தம்.. அவர்கள் பேசுவது “பதார்த்தம்”.. 🙂 🙂

  30. /** ஹிந்து இயக்கங்கள் ஜாதிகளிடையே பரஸ்பர அன்பிற்கு பாடு படுதலில் என்ன தவறு? **/

    ஜாதிகளுக்கிடையே பரஸ்பரம் அன்பு காலம் காலமாக இருக்கிறது.. ஒரு பறையர் உணவு இல்லாமல் இருந்தால், பிள்ளைமார் சோறு போடுவார்கள்.. சாகட்டும் என்று வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. உதவி என்று கேட்டு வரும்போது, மறுக்காமல் பிள்ளைமார்கள் செய்வார்கள்.. ஆனால், இதெல்லாம் இந்துதுவாதிகளுக்கு அன்பாக தெரிவதில்லை.. கிறித்துவ பாதிரியார் மாதிரி தெனொழுக பேசினால் மட்டுமே அன்பு என்று நீங்கள் நினைப்பதுதான் பிரச்சினை..

    நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.. எந்த ஜாதியும், இன்னொரு ஜாதி முற்றாக அழிந்து போகட்டும் என்று நினைப்பது இல்லை..

    (Edited and published)

  31. @senthil ஜாதி எப்போது இருந்து நமது சமுதாயத்தில் இறுதி வருகிறது, என்பதை விளக்க முடியுமா??? என் செட்டியார் தான் வணிகம் செய்ய முடியுமா!!!!!!!!இன்று வணிகத்தில் நாடார் சமுதாயமே அதிகளவில் ஈடுபட்டு வருகிறது. ஏன் ஒரு பறையர் கோவிலை நிர்வகிக்க முடியாத இல்லை கூடாதா? ஏன் ஒரு பிள்ளைமார் சாக்கடை அள்ள கூடாதா?

    எல்லோரும் மனிதர்கள் என்பதை நினைவில் வைத்து பதில் எழுதவும்

    அன்புடன்
    சின்னவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *