[பாகம் -23] இஸ்லாமியர்கள் செய்த புறச்சமயிகள், கோயில்கள், கலாசார அழிப்பு – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 23-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

 

அம்பேத்கர் கூறுகிறார்:

‘‘யுவான் சுவாங் வந்த காலத்தில் பஞ்சாப் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானமும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததென்பதும், அக்காலத்தில் இப்பகுதிகளில் வேத மதமும் புத்த மதமும் மட்டுமே நிலவின என்பதும் உண்மைதான். ஆனால் யுவான் சுவாங் தம் நாட்டுக்குத் திரும்பியதற்குப் பிந்தைய காலத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்துள்ளன என்பதையும் நோக்க வேண்டாமா?

இக்கால இடைவெளியில் நிகழ்ந்தனவற்றுள் முக்கியமானவை, வடமேற்கு எல்லை வழியாகக் கூட்டமாய் வந்த முஸ்லீம் படையெடுப்புகளே. இவற்றுள் முதல் படையெடுப்பு கி.பி.711-இல் முகமது பின் காசிம் தலைமையில் நடைபெற்றது, அப்போது அரேபியர்கள் சிந்து மாநிலத்தை வென்று தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். பாக்தாத்தில் ஆட்சிபுரிந்த கலீபாவின் ஆணைப்படி நிகழ்ந்த இப்படையெடுப்பு, நிலையான ஆட்சிக்கு வழிகோலவில்லை, தொலைதுரத்திலிருந்து நேரடியாக ஆளுவதில் உள்ள சிரமங்களால் இவ்வாட்சி கி.பி.ஒன்பதாம் நுற்றாண்டின் மத்தியில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குப் பின்னர் கி.பி.1001-இல் இருந்து தொடர்ச்சியாக, பல கடும் படையெடுப்புகளை கஜினி முகமது நடத்தினார். இவர் 1030-ஆம் ஆண்டு இறந்தார். ஆனால் முப்பதாண்டு காலக் குறுகிய இடைவெளியில் 17 முறை படையெடுத்தார். இவரையடுத்து 1173-ஆம் ஆண்டு முதல் கோரி முகமதுவின் படையெடுப்புகள் தொடங்கின, இவர் கி.பி.1206-இல் கொல்லப்பட்டார், கஜினி முகமதுவின் 30 ஆண்டுகாலப் படையெடுப்புகளும் இந்தியாவைக் கடுமையாக பாதித்தன. இதனைத் தொடர்ந்து செங்கிஸ்கான் தலைமையில் மொகாலாயக் கூட்டங்களில் படையெடுப்பு தொடங்கியது, 1221-இல் நிகழ்ந்த முதல் படையெடுப்பில் இந்தியாவின் எல்லையைத் தாக்கிவிட்டு நாட்டில் நுழையாமல் அவர்கள் திரும்பி விட்டனர். இருபதாண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் படையெடுப்பின் போது லாகூர்வரை வந்து வீழ்த்தினர். இப்படையெடுப்புகளில் 1398-இல் நிகந்த தைமூரின் படையெடுப்பே மிகப் பயங்கரமானது. பின்னர் 1526-இல் பாபரின் படையெடுப்பு நிகழ்ந்தது. இத்தகைய படையெடுப்புகள் பாபருடன் நின்றுவிடவில்லை. இரு நுற்றாண்டுகளூக்குப் பின்னர் மேலும் இரண்டு கடுமையான படையெடுப்புகளை இந்தியா எதிர்கொள்ள நேர்ந்தது. 1738-ஆம் ஆண்டில் நாதிர்ஷா அப்தாலியின் படையெடுப்பின்போது பானிப்பட்டில் மராட்டியர்கள் ஒடுக்கப்பட்டனர், இதையடுத்து முஸ்லீம் ஆதிக்கத்திற்கெதிரான இந்துகளின் எழூச்சி மீண்டும் தலைதூக்கவொண்ணா வகையில் முற்றுமாக வேரறுக்கப்பட்டது.

இம்முஸ்லீம் படையெடுப்புகள் நாடு பிடிக்கவும் கொள்ளயடிக்கவும் மட்டுமே நடத்தப்படவில்லை. வேறு முக்கியமானதோர் நோக்கத்தின் அடிப்படையிலும் இவை நிகழ்ந்தன. சிந்து மாநிலத்தின் துறைமுகமான தேபூலுக்கருகில் கைப்பற்றபட்ட கப்பலொன்றைச் சிந்துவின் அரசர் தாகீர் திருப்பித் தர மறுத்ததற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே முகமது பின் காசிமின் படையெடுப்பு நிகழ்ந்தது. எனினும் பல தெய்வ, உருவ வழிபாடுகளை மேற்கொண்டிருந்த இந்திய நாட்டைத் தாக்கி, வென்று, முஸ்லீம் மதத்தை இங்கு நிறுவுதலும் அவர்களது குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது. முகமுது பின் காசிம் உறஜ்ஜாஜுக்கு விடுத்த மடல் ஒன்றில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தாகீர் அரசரின் மருமகனும் படை வீரர்களும் முக்கிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். புறச்சமயிகள் பலர் மாறினர்; மாறாதோர் கொல்லப்பட்டனர். விக்கிரக வழிபாட்டுக் கோயில்களுக்குப் பதிலாக மசூதிகளும் வழிபாட்டிடங்களும் நிறுவப்பட்டு உரியகாலங்களில் குத்பா ஓதிவழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலையும் மாலையும் தக்பீரும் எல்லாம் வல்ல இறைவனின் புகழும் முழங்கின்றன.

சிந்து அரசின் தலையோடு அனுப்பப்பட்ட இக்கடிதத்துக்குப் பதிலாக உறஜ்ஜாஜ் எழுதியதாவது:

“பகைவர், நண்பர் என்ற வேறுபாடோ உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடோ காட்டாமல் மக்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும். புறச்சமயிகளுக்கு இடங்கொடாதீர், அவர்களது தலையை வெட்டுக என இறைவன் கூறுகிறார். இறைவனின் இவ்வாணையை உணர்க, அதன்படி எதிரிகளுக்குத் தாராளமாகப் பாதுகாப்பளித்துக் கொண்டே போனால் உமது பணிநீளுமென்பதையுணர்ந்து நம்மைச் சாராத எதிரிகளுக்குச் சற்றும் இடங்கொடாதிருப்பீராக.”
 

முகமது கஜினியும் தமது பலபடையெடுப்புகளை, புனிதப் போர்களாகவே கருதினார். இவரது வரலாற்றாசிரியரான அல்உத்பி இவரது படையெடுப்புகளைக் குறித்து எழுதுவதாவது:

“அவர் உருவ வழிபாட்டுக் கோயில்களை அழித்து இஸ்லாத்தை நிறுவினார். நகரங்களைக் கைப்பற்றி மூட நம்பிக்கையும் உருவ வழிபாடும் கொண்ட ஈனர்களைக் கொன்று முஸ்லீம்களுக்குத் திருப்தியளித்தார். தாய்நாடு திரும்பி இஸ்லாத்துக்காகத் தாம் பெற்ற வெற்றிகளை விவரித்ததுடன் ஆண்டுக்கொரு முறை இந்தியா மீது புனிதப் போரை மேற்கொள்வதாகவும் உறுதிபூண்டார்.”

 

முகமதுகோரியும் தமது இந்தியப் படையெடுப்புகளைப் புனிதப் போர்களாகவே கருதினார். அவரது வரலாற்றாசிரியரான ஹசன் நிசாமி, படையெடுப்புகளைக் குறித்துக் கூறுவதாவது:

“அவர் பலதெய்வ வழிபாடு, உருவவழிபாடு எனும் முட்புதர்களைத் தமது வாள்கொண்டு களைந்து இந்திய நாட்டைப் புறச்சமய அழுக்கு நீக்கித் துய்மைப்படுத்தினார். அவரது அரசாணை வீச்சின் உத்வேகம் ஒரு கோயிலைக் கூட விட்டு வைக்கவில்லை.”
 

தமது இந்தியப் படையெடுப்பின் நோக்கம் குறித்துத் தைமூர் தமது நாட்டுக் குறிப்புகளில் எழுதியுள்ளதாவது:

“(இறைவனின் ஆசியும் அருளும் தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிறைவாகப் பெற்ற) முகமது நபியவர்களின் ஆணைப்படி, புறச்சமயிகளைப் போரில் வென்று மெய்யான நம்பிக்கையின் பாதைக்கு அவர்களை மாற்றுவதே எனது இந்தியப் படையெடுப்பின் நோக்கம். நம்பிக்கையின்மை, பலதெய்வ வழிபாடு போன்ற அழுக்குகளையும் கோயில்களையும் வழிபாட்டுச் சிலைகளையும் அழிப்பதன் மூலம் களைந்து அந்நாட்டைத் துய்மைப்படுத்துவதில் இறைவனின் நம்பிக்கைக்குத் துணைவர்களாகவும் படைஞர்களாகவும் செயல்படுவோம்.”
 

முஸ்லீம்களின் இத்தைகைய படையெடுப்புகளில் பல முஸ்லீம்களுக்கிடையிலான போர்களும் நிகழ்ந்துள்ளன என்னும் உண்மையை, முஸ்லீம் படையெடுப்புகள் என இவற்றைக் கருதுவதன் மூலம் மறந்துவிடுகிறோம். ஆனால் படையெடுத்து வந்தவர்கள் தார்த்தாரியர், ஆப்கானியர், மங்கோலியர் எனப் பல்வேறு இனத்தவர்கள் என்பதே மெய். கஜினி முகமது தார்த்தாரியர், கோரி முகமது ஆப்கானியர், தைமூர் மங்கோலியர், பாபர் தார்த்தாரியர், நாதிர்ஷாவும் அகமதுஷா அப்தலியும் ஆப்கானியர். இந்தியப் படையெடுப்புகளில், தார்த்தாரியரை அழிக்க ஆப்கானியர் நடத்திய படையெடுப்புகளும் தார்த்தாரியரையும் ஆப்கானியரையும் அழிக்க மங்கோலியர் நடத்திய படையெடுப்புகளும் அடங்கும். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் அனைவரையும் சமய சகோதரத்துவ அன்பால் பிணைக்கப்பட்ட, ஒரே குடும்பத்தவராய்க் கருதுதல் கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் கடும் பகைவர்களாக விளங்கி மாற்றாரைப் பூண்டோடு அழிக்கும் போர்களை நடத்தியுள்ளனர். இவ்வாறு தமக்கிடையே பலபோர்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் கூட, இந்து மத நம்பிக்கையை ஒழிக்கும் நோக்கத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருந்தனர் என்பதை நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இந்திய வரலாற்றுப் போக்கினை ஆராயும்போது, படையெடுப்பாளர்களின் அடிப்படை நோக்கமே, அவர்கள் கையாண்ட முறைகளைவிடப் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

படையெடுப்பில் வென்ற காசிம் முகம்மதுவின் முதல் சமயச் செயலே தேபூல் நகரில் சிறைப்பிடிக்கப்பட்ட பார்ப்பனர்கள் அனைவரையும் சுன்னத் செய்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தியதே ஆகும். இத்தகைய பலவந்த மதமாற்றத்திற்கு வலுவான எதிர்ப்பு காட்டப்பட்டதால் 17 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர், ஏனையோர், பெண்கள், குழந்தைகள் உட்பட, அடிமைகளாக்கப்பட்டனர். மேலும், இந்துக் கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கிடைத்த கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கை அரசாங்கத்துக்கு ஒதுக்கி, மீதியைப் படையினரே பங்குபோட்டுக் கொண்டனர்.

கஜினி முகம்மது தொடக்கத்திலிருந்தே இந்துக்களின் உள்ளங்களில் பீதியைத் தோற்றுவிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டனர். கி.பி.1001-இல் ஜெய்பால் அரசர் தோற்கடிக்கப்பட்டபோது அவரை அடிமைத்தளையுடன் வீதிகளில் இழுத்துவந்து அவர் அவமானப்படுவதை அரசரது படைத்தலைவர்களும், மகன்களுமே காணச்செய்தார், இதன்வழி புறச்சமயிகளின் பூமியில் இஸ்லாத்தைப் பற்றிய அச்சம் கொடிகட்டிப் பறந்திடுவதையே அவர் விரும்பினார்.

புறச்சமயிகளைக் கொன்றழிப்பது (கஜினி) முகம்மதுவுக்குத் தனியானதோர் இன்பமாகவே இருந்தது. கி.பி.1019-இல் சந்தராய் நகரின்மீது நடந்த படையெடுப்பில் ஏராளமான புறச்சமயிகள் கொல்லப்பட்டனர். முஸ்லீம்கள் கொள்ளைப் பொருள்களோடு எளிதில் திருப்தியடைந்து விடுவதில்லை. சூரியனையும் தீயையும் வணங்கும் புறச்சமயிகளைக் கொன்றுகுவிக்கும் வெறியே கொள்ளை நாட்டத்தைவிட அவர்களிடம் மிகுதியாக இருந்தது. முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள், இந்துப் படைகளைச் சேர்ந்த யானைகள் அப்படைகளிலிருந்து விலகி இஸ்லாத்தின் சேவைக்காக முஸ்லீம் படைகளுடன் சேர்ந்து வருவதாகக்கூட எழுதியுள்ளனர்.

அடிக்கடி நிகழ்ந்த சமயப் படுகொலைகளால் இந்துக்களின் உள்நாட்டுப் பண்பாடும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக,

முகமது பக்தியார் கில்ஜி, பீகாரை வென்றபோது நிகழ்ந்தவற்றைப் பற்றி தபாகுத்-இ-நசிரி இவ்வாறு எழுதுகிறார்:

“வெற்றியாளர்கள் ஏராளமான செல்வங்களைக் கைப்பற்றினர். அங்கு வாழ்ந்தவர்கள் பலர் மொட்டையடித்திருந்த பார்ப்பனர்கள். அவர்கள் யாவரும் கொல்லப்பட்டனர். கல்வியில் சிறந்து விளங்கிய அந்நகரில் ஏராளமான நூல்கள் கிடைத்தன, ஆனால் கோட்டை கைப்பற்றப்பட்டபோது படிப்பறிவுடையோர் யாவரும் கொல்லப்பட்டு விட்டதால் அந்நூல்களின் பொருளை அறிந்து சொல்ல யாரும் கிடைக்கவில்லை.”


 

இப்படையெடுப்பு பற்றிய சான்றுகளைத் தொகுத்துரைக்க முற்படும் டாக்டர் டைடஸ் பின்வருமாறு கூறுகிறார்:

“முந்தைய பேரரசின் (அக்பரின்) ஆட்சிக்காலத்தின்போதே, புறச்சமயிகள் தமது சமயத் தலைமைப்பீடமான காசியில் பல கோயில்களைக் கட்டத்தொடங்கினர். அவை பணிமுற்றுப்பெறா நிலையில் உள்ளனவென வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். புறச்சமயிகள் அவற்றைக் கட்டிமுடிப்பதில் ஆர்வம் காட்டினர். (இஸ்லாம்) நம்பிக்கையின் காவலரான பேரரசர் காசியில் மட்டுமன்றி, தமதாட்சிக்குட்பட்ட ஏனைய இடங்கள் அனைத்திலும் கோயில்களை அழிக்க ஆணையிட்டார். காசி மாவட்டத்தில் 76 கோயில்கள் இடிக்கப்பட்டதாக அலகாபாத் மாநில நிர்வாகம் தெரிவிக்கிறது.”

 

உருவ வழிபாட்டை முற்றுமாக அழிக்கும் இறுதி முயற்சியை அவுரங்கசீப் எடுத்துக்கொண்டார். இந்துக் கோயில்களையும் மா அதிர்இஆலம்கரி என்ற நூலின் ஆசிரியர் பின்வருமாறு விவரிக்கிறார்:

“தத்தா, மூல்தான், காசி ஆகிய மாநிலங்களில்- குறிப்பாகக் காசியில்- முட்டாள் பார்ப்பனர்கள் மூடத்தனமான நூல்களைப் பள்ளிகளில் கற்பித்து வருகிறார்கள் என்ற செய்தி. கி.பி.1669 ஏப்ரலில் அவுரங்கசீப்புக்கு எட்டியது, முஸ்லீம்களும் கூட இப்பள்ளிகளுக்குச் செல்கின்றனர் எனவும் அவர் அறிந்தார். மார்க்க நெறியாளரான பேரரசர் புறச்சமயிகளின் கோயில்களைக் கடும் நடவடிக்கைகொண்டு ஒடுக்கவேண்டுமென மாநில ஆளுநர்களுக்கு ஆணை பிறப்பித்தார். உருவ வழிபாட்டுப் போதனையும், கடைப்பிடிப்பும் முற்றுமாக நிறுத்தப்பட வேண்டுமென அவரது ஆணை கூறியது…… காசி விசுவநாதர் ஆலயம் தகர்த்தழிக்கப்பட்டதென அரசு அதிகாரிகள் மாமன்னருக்குத் தகவல் அனுப்பினர்.”

 

டாக்டர் டைடஸ் மேலும் வருணிப்பதாவது…

“முகமது, தைமூர் போன்ற படையெடுப்பாளர்கள் புறச்சமயிகளை நயத்தாலும் பயத்தாலும் மதமாற்றம் செய்வதைவிடத் தமது சமயப் போர்வாள் கொண்டு உருவ உடைப்பு, கொலை, கொள்ளை, பிடிபட்டவர்களை அடிமைகளாக்குதல் போன்ற செயல்களிலேயே நாட்டம் கொணடிருந்தனர். ஆனால் நிலையான ஆட்சியாளர்களாக ஆள முற்பட்டோருக்கு, மதமாற்றம் அவசரத் தேவையாயிற்று. நாடு முழுமைக்குமான சமயமாக இஸ்லாத்தை நிறுவுதல் அரசின் அடிப்படைக் கொள்கையாய் உருவெடுத்தது.

முகமதுவைப் போலவே, ஆயிரம் கோயில்களை அழித்தவர் என்று பெரும்பெயரெடுத்த குத்புதீன், பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அடிக்கடி பலவந்தமான மதமாற்றத்தைத் தூண்டியிருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சியைச் கூறலாம். அவர் (அலிகாரில்) கி.பி.1194-இல் கோயிலை நெருங்கியபோது விவேகமும் புத்திக்கூர்மையும் கொண்ட படைவீரர்கள் இஸ்லாத்தைத் தழுவினர், ஏனையோர் வாள் வீச்சில் உயிர் இழந்தனர்.”
 

கடுமையான நடவடிக்கைகள் மூலமாக மதமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கு மேலும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. பிரோஸ்ஷா (கி.பி.1351-1388)-வின் ஆட்சிக்காலத்தில் நடந்த பரிதாபகரமான நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டுவோம், டெல்லியைச் சேர்ந்த முதிய பார்ப்பனர் ஒருவர் தமது வீட்டில் சிலைகளை வைத்து வழிபடுவதாகவும் முஸ்லீம் பெண்களை மதமாற்றத்திற்குத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அவர் வரவழைக்கப்பட்டு நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மூத்தோர்கள் கொண்ட அவைமுன் நிறுத்தப்பட்டார். இது குறித்துச் சட்டம் தெளிவாக இருப்பதாகக் கூறி, அவர் முஸ்லீமாக மாறவேண்டும், அல்லது எரிக்கப்படவேண்டும் என்று அவை தீர்ப்பளித்தது. மெய்யான சமயமும் சரியான நெறியும் தெளிவுறுத்தப்பட்டும்கூட, அவற்றை அவர் ஏற்க மறுத்ததால், சுல்தானின் ஆணைப்படி உயிருடன் எரிக்கப்பட்டதுடன், சுல்தானின் கடுமையான சட்டங்களையும், அவற்றைச் செயல்படுத்துவதில் அவர் காட்டும் உறுதியையும், அவரது ஆணைகள் சிறிதளவும் வழுவாது நிறைவேற்றப்படுமென்பதையும் நோக்குக என்ற எசசரிக்கையும் விடுக்கப்பட்டது.

 

கோயில்களை அழிப்பதுடன், இந்துக்களை அடிமைகளாக்குவதும் கஜினி முகமதுவின் கொள்கையாக இருந்தது. இதுபற்றி டாக்டர் டைடஸ் கூறுவதாவது:

“இந்தியாவில் இஸ்லாம் நுழைய முற்பட்ட காலத்தின் தொடக்கக் கட்டத்தில் புறச்சமயிகளைக் கொன்றுகுவித்து, கோயில்களை அழித்ததுடன் நிற்காமல் தோல்வியுற்ற மக்களில் பலர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதையும் காண்கிறோம். இப்படையெடுப்புகளில் படைத்தலைவர்களுக்கும் பிறபடை வீரர்கள் யாவருக்கும் கொள்ளையில பங்கு என்பது அவர்களைப் பெரிதும் கவரும் ஓர் அம்சமாக விளங்கியது. புறச்சமயிகளைக் கொன்றுகுவித்தல், கோயில்களை அழித்தல், அடிமைகளைக் கைப்பற்றுதல், மக்களின் வீடுகளில், குறிப்பாகக் கோயில் பூசாரிகளின் வீடுகளில் கொள்ளையடித்தல் ஆகியவையே முகமதுவின் படையெடுப்புகளுக்கு முக்கிய நோக்கங்களாய்த் தோன்றுகின்றன. அவரது படையெடுப்புகளின்போது ஒரு சமயம், அழகிய ஆடவர் மகளிர் சுமார் 5 லட்சம் பேர் அடிமைப்படுத்தப்பட்டு, கஜினிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.”

 

பின்னர், கி.பி.1017-இல் கனோஜியை முகமது கைப்பற்றியபோது அளவிறந்த செல்வத்துடன், எண்ணமுயன்றோர் விரல் சோர்வுறும் அளவுக்கு ஏராளமான கைதிகளையும் கொண்டு சென்றார். அவரது கி.பி.1019-ஆம் ஆண்டுப் படையெடுப்புக்குப் பிறகு கஜினியிலும் மத்திய ஆசியாவிலும் இந்திய அடிமைகள் எவ்வாறு மலிந்திருந்தனர் என்பதை அக்கால வரலாற்றாசிரியர் கூற்றாகக் காண்போம்… “

(தொடரும்…) 

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20 தொடங்கி 21,22-ஆம் பகுதிகளில்  இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம், அதனால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இந்தியாவின் பாதுகாப்பு, இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்கான கீழ்ப்படியாமைக் குணம் ஆகியவை குறித்து அம்பேத்கர் தீவிரமாக முன்வைக்கும்  கருத்துகளைப்  பார்த்துவருகிறோம்… 

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22

7 Replies to “[பாகம் -23] இஸ்லாமியர்கள் செய்த புறச்சமயிகள், கோயில்கள், கலாசார அழிப்பு – அம்பேத்கர்”

  1. முஹம்மது என்ற கொடுமைக்கார மனிதானால் உருவாகப்பட்ட இஸ்லாம் என்ற துர்மார்க்கம் உலகில் பல கலாசார அழிவுகளுக்கு விதையாக இருந்தது. இந்தியா மற்றும் இந்துக்களை அது எப்போழுதும் அழிக்க துடிக்கிறது. அதில் அது முழமையாக
    வெற்றி பெற முடியவில்லை. முஹம்மதுவின் உண்மையான கொடூர கோர முகம் தற்பொழுது உலகெங்கும் கிழிய தொடங்கிவிட்டது. Thanks For Internet and GOD

  2. @ வெங்கடேசன் ,

    அருமையான பதிவு,இஸ்லாமிய வலைபதிவுகளிலும்,பல்லுடங்களிலும் இஸ்லாமியம் அமைதியின் மார்க்கமாகவும்,வாழும்கலயாகவும் காண்பிக்கபடுகிறது.
    அத்துடன் இந்தியாவின் பலமுக்கிய சரித்திர கட்டிடங்கள் இஸ்லாமிய ஆட்சிகாலத்திலேயே கட்டப்பட்டதாம்.இஸ்லாமியம் இல்லா விட்டால் இந்திய இன்னும் ஆதிமனிதன் காடாக தான் நீடீத்திருக்கும் என்ற வகையில் பரப்புரைகள் கட்டவிழ்த்து விடபடுகின்றன.உ+ம்:சமாதான டிவி !!!!! இஸ்லாம் வந்திருக்க விடின் ராஜராஜசோழன் பெரிய கோவிலை கட்டி இருக்க மாட்டானா?(அ) கரிகாலனுக்கு கல்லணையை கட்டிகொடுக்க இஸ்லாமிய பொறியிலாளர் எவரும் உதவி செய்தனரா???

    அத்துடன் மொகலயார்கள் இந்தியாவிற்கு வந்து நடாத்திய வேட்டைகளை,இந்தியாவை சுத்திகரிப்பதட்காக செய்த ஒரு புனித காரியமாக உருவகபடுதுகின்றனர்.ஆனால் தாஜ்மஹால் கட்டப்பட்டது ஒரு புராதன சிவன்கோவிலின் மேல் என்பதை முஸ்லிம் கொடுங்கோலர்கள் பூசிமறைத்து விட்டனர்,அதனால் தான் இன்றுவரை தாஜ்மஹாலின் அடித்தளம் “பிரவேசதடை பிரதேசமாக” உள்ளது.தற்போதைய மதசார்பற்ற அரசும் இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.
    உலகமக்கள் அனைவரும் சகோதரர்கள் என கூறும் முகமதியர்களின் மறுமுகம் இக்கட்டுரை மூலம் வெளிக்கொணர பட்டுள்ளது ,,

    //முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள், இந்துப் படைகளைச் சேர்ந்த யானைகள் அப்படைகளிலிருந்து விலகி இஸ்லாத்தின் சேவைக்காக முஸ்லீம் படைகளுடன் சேர்ந்து வருவதாகக்கூட எழுதியுள்ளனர்.//
    உருப்படியான ஆன்மிகதத்துவங்கள்,அன்பு,பெண்களை மதித்தல்,பிற உயிர்கள் மீதும் அன்பு கொள்ளுதல் போன்ற அமைதிவாழ்க்கையின் அடையாளங்கள் எதுவும் அற்ற இவர்களிடம் யானைகள் தாமகவே வந்து சேர்கின்றனவாம்…இவர்களின் கோட்பாட்டின் படிதான் மனிதன் தவிர ஏனைய உயிர்கள் அனைத்திற்கும் சுயமாக சிந்திக்க தெரியாதே,பின் இறைவன் என்ன “யானைக்குட்டி செல்லங்களா,முஸ்லிம் படைக்கு போங்கடா நு ஆணை இட்டாரா? பட்டது,கோவில் யானைகளை களவாடி படைக்கு சேர்த்து விட்டு அதற்கும் புது கதை சேர்க்கின்றனர் .

  3. அம்பேத்கார் பெயரை வைத்துக்கொண்டு ஹிந்து சமுதாயதிலிருந்துஹரிஜன சகோத்கர்களை பிரிப்பதற்காக முஸ்லீம்களோடு சேர்ந்துகொண்டு செயல்படும் தேசதுரோக கும்பலை மக்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் இந்த கட்டுரை அமைந்துள்ளது. புத்தக வடிவில் வெளிக்கொண்டு வந்தால் தலித் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு கொடுத்து புரிய வைக்க முயலாம்.

  4. சிறந்த கட்டுரை, அருமையான ஆதாரங்கள், சரியாக சொன்னதுபோல, இன்டர்நெட் வலை மிக சிற்பக உண்மைகளை அள்ளி கொடுகிறது. இலங்கை கொழும்பு தமிழன் கூறியது போல, “தாஜ்மஹால் ஒரு இந்து கோவில்” என்ற தொடர் கட்டுரை குமுதம் வார இதழில் எண்பதுகளில் பல வரங்கள் வந்தது, நானும் படித்து இருக்கிறேன் அதில் தாஜ்மஹாலின் கற்கள் மற்றும் மரத்தின் அறிவியல் பூர்வமாக அறைந்து முடிவெடுக்க பட்ட வயதை கொண்டு அது இஸ்லாமியர் காலத்துக்கு முந்தியது என்று ஆதரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதன தொடர் கட்டுரையை தொடர்ந்து மற்றுமொரு இஸ்லாமியர் அதற்கு மறுப்பு தெரிவித்து தொடர் கட்டுரை எழுதினர் அதையும் குமுதம் இதழ் பிரசுரித்தது, அனால் அதில் சரம் இருந்ததாக நினைவில்லை, அந்த கட்டுரையை “தமிழ் ஹிந்து” வலை பிரசுரித்தல் சிற்பக இருக்கும்.

  5. //இக்கால இடைவெளியில் நிகழ்ந்தனவற்றுள் முக்கியமானவை, வடமேற்கு எல்லை வழியாகக் கூட்டமாய் வந்த முஸ்லீம் படையெடுப்புகளே. இவற்றுள் முதல் படையெடுப்பு கி.பி.711-இல் முகமது பின் காசிம் தலைமையில் நடைபெற்றது//
    இவர்கள் நாசகாரிகள் .

  6. அருமையான கட்டரை டாக்டர் டைடஸ் எந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் எந்த பக்கத்தில் எழுதியுள்ளர் என்பதையும். அந்த பக்கம் இருந்தால் அதை பிரதியையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் இது பொய்யுரைக்கப்பட்ட வரலாறாகும் மேலும் டாக்டர் டைடஸ் இப்படி ஒரு பதிவை தனது புத்தகத்தில் பதியவில்லை என்றாகும்

  7. இதுவே உண்மை

    தாகீர் என்பவர் சிந்துப் பகுதியை ஆண்ட ஒரு மன்னர். சிந்துவின் மீது பலர் படையெடுத்தனர். இப்படையெடுப்பின் நோக்கம் தங்கள் நாட்டின் எல்லையை விரிவாக்குவது அல்ல, பழி வாங்குதலே ஆகும். தேபால் துறைமுகத்தில் கடற்கொள்ளையர்கள், இலங்கையிலிருந்து வந்து கொண்டிருந்த கப்பல்களைக் கொள்ளையடித்தனர். இஸ்லாமிய பெண்டிரையும், அரேபியக் குழந்தைகளையும் சிறைபிடித்தனர். குற்றவாளிகளைத் தண்டிக்க சிந்துவின் அரசர் தாகீரை ஈராக் ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆனால் சிந்துவின் அரசர் தாகீர் தம் பொறுப்பைத் தட்டிக் கழித்தார். இதனால் அரேபியரின் ஆளுநர் ஆத்திரமுற்றார். அவர் அனுப்பிய மூன்று தளபதிகளைத் தாகீர் தோற்கடித்தார். மூன்றாவது படையெடுப்பிற்கு முகமது பின் காசிம் தலைமை ஏற்று வந்தார். முன்னேறி வரும் படையைத் தடுக்க தாகீர் எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. தாகீரின் படைகள் வீரத்துடன் போரிட்டாலும் தோல்வியைத் தழுவினர். தேபால் நகரை முகமது பின் காசிம் வென்றதன் மூலம் தேபாலை அரேபியர்கள் கைப்பற்றினர். அரேபிய ஆளுநரின் கீழ் தேபால் வந்தது. பிராமணாபாத்தில் தாகீர் நிறுத்தப்பட்டார். பிராமணாபாத்திலிருந்து முகமதுவைச் சந்திக்க தாகீர் மேவார் சென்றார். தாகீர் யானையின் மீது இருந்தபோது அம்புத்தாக்குதலுக்கு ஆளாகி விழுந்தார். மீண்டு எழுந்து, குதிரை மீது அமர்ந்தார். எனினும் அவரது படை குழப்பத்தில் தப்பி ஓடியது.

    சிந்துப் பெண்டிருக்கு தாகீரின் மனைவி இராணிபாய் தலைமை ஏற்றார். வீரத்துடன் இராணிபாய் எதிர்த்து நின்றார். அயலவர் கரங்களில் விழாமலிருக்க, எதிர்த்து நிற்க இயலாத போது தீக்குளித்தார்.

    தாகீரின் மகன் ஜெய்சிங் சித்சூருக்குத் தப்பினார். தலைநகர் ஆலரைத் தாகீரின் மற்றொரு மகன் உறுதியாக நின்று காத்தார். ஆனால் எதிர்ப்பு பலன் அளிக்காத போது அதனை விட்டுவிட்டுச் சென்றார். இதனால் நகரத்தில் செல்வங்களையும், விலை மதிப்புடையவற்றையும் முகமது கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *