இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)

லகெங்கும் தமிழ் ஹிந்துக்களின் பாரம்பரியப் பண்டிகையான திருக்கார்த்திகை தீபத் திருவிழா இல்லங்களிலும், கோயில்களிலும் பக்திப் பெருக்குடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் மகாதீபத் திருவிழாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மகாதீப விழாவை முன்னிட்டு இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரைச் சேர்ந்த சர்ஜோபீட்டர் லினி என்பவர் தலைமையிலான சிவபக்தர்கள் குழுவினர் நெய் காணிக்கையாக ரூ.5.25 லட்சத்தை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர். வருடாவருடம் இப்பண்டிகையில் கலந்து கொண்டு கிரிவலம் செய்யும் இந்தக் குழுவினர் கோயில் கலையரங்கில் பக்தி இசை நிகழ்ச்சியும் நடத்துகின்றனர்.

மிழகத்திலிருந்து சபரிமலை புனிதப் பயணம் சென்ற பக்தர்களின் வாகனங்கள் மீது கம்பம் பகுதியில் சில விஷமிகள் தாக்குதல் நடத்தியதால், பக்தர்கள் பயணம் தடைப்படுவது குறித்த செய்திகள் மனவருத்தம் அளிக்கின்றன. மண்டல பூஜை நேரத்தில் முல்லைப் பெரியாறு பிரசினையை வேண்டுமென்றே பெரிய அளவில் தூண்டி விட்டு கேரள-தமிழக மக்கள் இடையே உள்ள பாசப்பிணைப்பையும் நல்லுறவையும் கெடுக்கும் வகையில் கேரள கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதலைக் கண்டித்த கேரள இந்து அமைப்புகள் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியுள்ளன. கேரள மாநில அரசியல் முழுவதுமாக கிறிஸ்தவ, இஸ்லாமிய மத அதிகார சக்திகளின் பிடியில் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மேலும் மேலும் தமிழகத்தையும், தமிழர்களையும் எதிரிடையாக சித்தரித்து போராட்டங்களை அறிவித்து வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இந்த சந்தடியில் தமிழகத்தின் சில பகுதிகளில் பிரிவினைவாத எண்ணம் கொண்ட வன்முறைக் கும்பல்களின் நடவடிக்கைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், தமிழக அரசு கண்காணித்து உறுதியாக செயல்பட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.

ந்திராவின் பிரபல பத்திரிகையான ஆந்திர ஜோதி, அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் நடந்து வரும் கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்த விரிவான செய்திக் கட்டுரைகளை நவம்பர் 10 முதல் 16 வரை ஆறு நாட்கள் தொடராக வெளியிட்டது. இக்கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம் இப்போது வெளிவந்துள்ளது. ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மதமாற்ற வைரஸ் கிருமி எவ்வளவு தீவிரமாக ஊடுருவியுள்ளது என்பது குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் இவை. நடுநிலை செய்திப் பத்திரிகையான ஆந்திர ஜோதியின் இச்செயல் பாராட்டுக்குரியது.

டிச-3: தமிழகத்திலிருந்து கேரளத்தில் வெட்டுவதற்காக அடிமாடுகள், எருமைகள் கொண்டு செல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தி, கால்நடைச் செல்வங்களை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன்சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் வருகைப் பேராசிரியாக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென்று அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார். அவர் கற்பித்து வந்த பாடப் பிரிவுகளும் பாடத்திட்டத்தில் இருந்து அகற்றப் படுவதாக ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தெரிவித்தது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை முற்றிலுமாக அடக்குவது எப்படி? என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட மதத்தினரை அவமதிக்கும் கருத்துக்கள் உள்ளதாக பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள் மாணவர்களில் ஒரு சாரார் ஆட்சேபம் தெரிவித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. டாக்டர் சுவாமியை நீக்கியது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயல் என்று கூறி, அமெரிக்க கல்விப் புலங்களிலேயே அவருக்கான ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன.

ர்நாடக மாநில அரசு ஆக்கிரமிப்பு ரீதியான கிறிஸ்தவ மதமாற்றங்களைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாபெரும் பேரணியை ஹிந்து ஜாகரண வேதிகே என்ற அமைப்பு பெங்களூரில் டிசம்பர் 4-ம் தேதி நடத்தியது. பல இந்து சமயப் பிரிவுகளைச் சேர்ந்த துறவியரும், ஏராளமான பொதுக்களும் கலந்து கொண்டனர்.

சொசுறு:

தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை பேராசியர் அர்ஷத் ஆலம்,இந்தியப் பண்பாட்டுடன் இசைந்து அமைதியாக வாழ விரும்பும் இந்திய முஸ்லிம்களை சவுதி அரேபிய பணபலத்துடன் செயல்படும் வஹாபி இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு பிளவுபடுத்துவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள மதரசாக்கள் போன்ற அமைப்புகளை இந்த வஹாபி தீவிரவாத கோஷ்டியினர் கைப்பற்றுவத் கவலையளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

வாலிபர்களைத் தன்னோடு பாலுறவு கொள்ள வற்புறுத்திப் பலவந்தம் செய்தார் என்ற குற்றச் சாட்டின் காரணமாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரபல பாதிரியார் பிஷப் எட்டி லாங், தானே உருவாக்கிய மெகா சர்ச்சின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார். இதே போன்ற காரணங்களுக்காக உலகெங்கும் அடுத்தடுத்து குற்றம் சாட்டப் பட்டு கீழிறங்கும் கிறிஸ்தவ மதத் தலைவர்களின் நீண்ட பட்டியலில் இணைகிறார்!

Tags: , , , , , , , , ,

 

9 மறுமொழிகள் இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)

 1. snkm on December 10, 2011 at 2:17 pm

  பல வருடங்களாகவே கேரளத்து மக்களுக்கு சபரி மலை செல்லும் பக்தர்களைக் கண்டு வெறுப்பு வருகிறது, என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்தியாவில் இது ஒரு தனிக் குணம், ஒருவரால் நமக்கு நன்மை கிடைத்தால் அவர்களை வரவேற்போம்,இவர்கள் அனைவரையும் வெறுக்கக் கற்றுக் கொண்டு இவர்களின் மாநிலத்தை கடவுளின் தேசம் என்று பேசுவதில் அர்த்தம் என்ன?.நிற்க.
  முல்லைப் பெரியாறு பிரச்னை மட்டுமல்லாது இந்திய அரசுகள் ( மத்திய, மாநில )
  பலப் பிரச்னைகளில் சரியாக செயல் படுவது இல்லை.
  தமிழகத்தில் சிறப்பாக இயங்கி வருகின்ற பல தனியார் பள்ளிகள் மூடப் படும் நிலை தோன்றி உள்ளது. இதை தடுக்க வேண்டும். நன்றி.

 2. krishnamurthy on December 10, 2011 at 9:11 pm

  I AGREE THAT IT MAY BE A PLOT ON THE PART OF THE ‘ANTI-HINDU’ FORCES TO DISRUPT THE ONGOING AIYAPPA PILGRIMAGE, WHICH IS GOING STRONGER AND STRONGER EVERY YEAR, WITH OVER 20-25 LAKHS MAKING IT IN THE SEASON OF NOV-DEC-JAN. THEY STARTED THE CONTROVERSY OF THE KARNATAKA ACTRESS WHO CLAIMED TO HAVE TRAVELLED TO SABARIMALA AND EVEN TOUCHED THE HOLY VIGRAHA OF LORD AIYAPPA; THEN THERE WAS THE CONTROVERSY REGARDING ONE OF THE MAIN PRIESTS OF SABARIMALA, AND NOW THIS PROBLEM, WHICH IS SLOWLY SNOW-BALLING INTO A STATE-STATE CONFLICT. HOPE AND PRAY THAT WE HINDUS ON BOTH SIDES OF THE BORDER SEE ‘SENSE’ AND FIGHT AGAINST THE BAD ELEMENTS.

 3. T.Mayoorakiri sharma on December 10, 2011 at 10:18 pm

  இலங்கையிலிருந்து சபரிமலைக்கு யாத்திரை செய்கிற பல அன்பர்களும் இந்தப் பிரச்சினையால் என்ன செய்வது என்று தெரியாம குழம்பிப் போயிருக்கிறார்கள்.. இலங்கையிலிருந்து வந்தாலும், அவர்களும் பேசப் போவது தமிழ் தானே.. அதனால் தங்களுக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகிறார்கள்..

 4. T.Mayoorakiri sharma on December 10, 2011 at 10:19 pm

  இலங்கையிலிருந்து சபரிமலைக்கு யாத்திரை செய்கிற பல அன்பர்களும் இந்தப் பிரச்சினையால் என்ன செய்வது என்று தெரியாம குழம்பிப் போயிருக்கிறார்கள்..

  இலங்கையிலிருந்து வந்தாலும், அவர்களும் பேசப் போவது தமிழ் தானே.. அதனால் தங்களுக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகிறார்கள்..

 5. ramkumaran on December 11, 2011 at 4:25 am

  andhra jyothi article on conversion link is wrong, it is http://centreright.in/2011/12/andhra-jyothy-proselytizing-unlimited/

 6. jenil on December 12, 2011 at 2:09 pm

  Subramania Swamy is been removed because of his racist comments in DNA.. Are foreigners also racist idiots like u ????.

 7. க்ருஷ்ணகுமார் on December 13, 2011 at 3:52 pm

  கேரளத்து ஹிந்துக்கள் சபரிமலைக்கு வரும் தமிழக தர்சனார்த்திகளுக்கு இழைக்கப்படும் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது தொல்லை தரும் சக்திகள் எவை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்டுகிறது. இன்றைக்கும் பழனிமலைக்கு வரும் தர்சனார்த்திகளில் சரிபாதி கேரளத்தவர்களே.

  உத்தர பாரதத்தில் இருக்கும் காசி க்ஷேத்ரத்திற்கு ஹிந்துஸ்தானத்தின் இதர பாகங்களில் இருந்து பக்தர்கள் வருவதும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்கும் ராமேஸ்வரத்தின் ராமனாதர் ஆலயத்திற்கும் சபரிமலை ஐயப்ப ஸ்வாமி ஆலயத்திற்கும் ஹிந்துஸ்தானத்தின் மூலை முடுக்குகளிலிருந்து பக்தர்கள் லக்ஷக்கணக்கில் வருவது ஆஸேது ஹிமாசலம் கலாசாரத்தால் ஹிந்துக்களிடையே மிக உறுதியான பிணைப்பு இருக்கிறது என்பதைக்காட்டுகிறது. .

  ஹிந்துமதம் என்ற ரோஜாச் செடியில் மலர்ந்து மனம் குளிர்விக்கும் ரோஜா புஷ்பங்களே பல மொழிகள். அப்புஷ்பங்களூடே கையைக்குத்துபவையே மொழிவெறி என்ற முட்கள். ஹிந்துமதம் என்ற ஆதாரம் இருக்கும்வரையிலும் முட்களையும் மீறி விகஸிதமான புஷ்பங்கள் சோபிதமாக ஒருங்கே காட்சிதரும்.
  ஆதாரமான ஹிந்துமதம் இல்லாவிடில் ஆங்கே ரோஜாச்செடியிருக்காது வெறும் முட்களால் ஆன முட்புதர்களே மிஞ்சும். அதுவும் ஈரமின்றி பட்டுப்போகும் முட்புதர்களே. ஆப்ரஹாமிய மதத்தையும் மதவெறியையும் ஆதாரமாக வைத்து ஹிந்துஸ்தானத்தைப்பிளந்து உருவாக்கப்பட்ட பாகிஸ்தானம் பிறந்து இருபத்துநாலு ஆண்டுகளுக்குள் பாக்கி ஸ்தானம் மற்றும் பாங்க்ளாதேஷ் என வெறிமிக பிளக்கப்பட்டது இதை நிதர்சனமாக காட்டுகிறது.

  ஹிந்துக்கோவில்களுக்கு வரும் வேற்று மொழி பக்தர்களை மொழி என்ற பிணைக்கும் சக்தியை வடிவு நீக்கி அதை ஆயுதமாய் மாற்றி ஹிந்து சஹோதரர்களினூடே பிளவுகளை உருவாக்க விழையும் ஆப்ரஹாமிய சக்திகளை ஹிந்துஸ்தானம் முழுதிலும் உள்ள ஹிந்து சக்திகள் முளையிலேயே களையறுக்க வேண்டும்.

 8. Radhakrishnan on December 16, 2011 at 5:42 pm

  இதனுடன் இந்து மதத்திற்கு புதிதாக மனம் மாறி நம் தர்மத்திற்கு வந்து கொண்டிருபவர்கள் பற்றியும் அவர்களின் கருத்துக்களையும் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.நன்றி! “ஜெய் காளி “

 9. பெருந்துறையான் on December 18, 2011 at 5:34 pm

  //jenil on December 12, 2011 at 2:09 pm//
  இந்த நாட்டில் தானே நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்? //Are foreigners also racist idiots like u ?// என்று கேட்டிருக்கிறீர்களே! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் idiots-ல் நீங்களும் அடக்கமா இல்லையா என்று விளக்க வேண்டும். அப்படியே இந்தியர்களில் சிலர் idiots-ஆகவே இருந்தாலும் foreigners எல்லோரும் பரம பவித்திரர்களா என்ன? Racism என்று ஒரு அர்த்தமில்லாத வாதத்தைக் கிளப்பிவிட்டு, இந்தியாவைச் சிதறடிக்க எண்ணும் குறுங்க்கூட்டத்தினர் பட்டியலில் நீங்களும் இடம் பெறாமல், கொஞ்சம் சரியாக உண்மையை நோக்கிப் பயணித்தால், உலகின் எந்தெந்த நாடுகளில் இந்த Racism ஆட்டம் போடுகிறது எனப் புரியும். உங்களுக்கு அது புரிந்திட இறைவன் அருளட்டும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*