இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)

ரிய திராவிட இனவாதக் கொள்கைகள் சிறிதும் ஆதாரமற்றவை என்று அறிவியல்பூர்வமாக நிறுவும் மேலும் வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன என்று டி.என்.ஏ இதழில் வந்த செய்திக் குறிப்பு (டிச-10) தெரிவிக்கிறது. இந்திய மக்களை இன ரீதியாக வேறுபடுத்திக் காட்டும் குறியீடுகள் (markers) இந்திய மக்கள் தொகுதியில் டி.என்.ஏ அமைப்பில் இல்லை என்று உயிர் செல்கள் மற்றும் மரபணு குறித்த ஆய்வில் ஈடுபட்ட இந்திய மற்றும் பன்னாட்டு அறிவியல் நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது.

ட்டி: அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் வினிஸ் சபரி மலைக்கு மாலை அணிந்து வந்ததை கண்டு, மாணவன் மனம் புண்படும்படியாக ஐயப்ப சுவாமி குறித்து அவமதித்து பேசியதாக பள்ளி ஆசிரியை ஒருவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 45 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப் பட்ட ஆசிரியை மாணவர்களிடையே தொடர்ந்து கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்லாமிய பயங்கரவாதிகள் மாட்சிமை பொருந்திய இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி 10 ஆண்டுகள் கழிந்ததை டிசம்பர்-13 அன்று இந்தியா நினைவு கூர்ந்தது. அந்தத் தாக்குதலை முறியடிப்பதில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. சம்பந்தப் பட்ட தியாகிகளின் குடும்பங்கள் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்ற அவலத்தைச் சுட்டிக் காட்டி பல நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தனர். முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் இதே அவலத்தைச் சுட்டிக் காட்டி தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்த போது கூட அதை வெட்கமின்றிப் பார்த்திருந்த காங்கிரஸ் அரசு இப்போதும் அதையே செய்தது.

ரோடு, டிச.14: அம்மன் கோவில்களில் நகை திருடியதாக தமீம் அன்சாரி (45), அவருடைய மகள் பாத்திமா (16) ஆகியோரை பெருந்துறைப் போலீஸார் கைது செய்தனர். 120 கோவில்களில் அவர்கள் 4.5 கிலோ தங்க நகைகளைத் திருடியிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். வெறும் நகைக்காக மட்டும்தான் திருடினார்களா? இது ஒரு தனி நபர்களின் திருட்டு மட்டும் தானா போன்ற கேள்விகள் எழுகின்றன. கஜினி முகமதுகள் அழிவதேயில்லை.

ந்தியாவின் காங்கிரஸ் அரசுக்கும், அதன் தலைமைக்கும் எதிரான கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தும் ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களை தீவிரமாக கண்காணித்து அவற்றை முடக்க முயற்சி செய்யும் மத்திய அமைச்சர் கபில் சிபலின் அராஜக நடவடிக்கைகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இணையத்திலும் இது குறித்த ஜனநாயக ரீதியான மனுப்போடும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

பிரபல சிந்தனையாளரும் எழுத்தாளருமான கிறிஸ்தோஃபர் ஹிட்சென்ஸ் (1949-2011) டிசம்பர்-15 வியாழன் அன்று மரணமடைந்தார். இறக்கும் வரை உண்மையான நாத்திகராக வாழ்ந்தவர். மதர் தெரசா என்று அழைக்கப் படும் அல்பேனிய நாட்டு கிருஸ்தவ முரட்டுப் பழமைவாதி குறித்த பிம்பங்களை உடைத்து, முகமூடியைக் கிழித்து அவர் ஒரு கிருஸ்தவ ஃபாசிஸ்ட் என்று நிரூபித்தவர். சொற்களைப் போர் ஆயுதமாகவே பயன்படுத்தி கருத்துலகில் ஆயுதபாணியாக உலவி மரபுவாத இடது சாரிகளை உலுக்கி எடுத்தவர். நியூயார் டைம்ஸின் நினைவஞ்சலி அவரது சிந்தனையின் வீச்சுகளையும், வரம்புகளையும் தொட்டுக் காட்டுகிறது. அதர்மத்தை அடையாளம் காட்டிய அவருக்கு நமது அஞ்சலி.


கொசுறு:

த்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள விதிமுறைகளை எதிர்த்து “சிறுபான்மை பள்ளிகள் சார்பாக” மயிலாப்பூர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார் செபாஸ்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விதிமுறைகள் அமலானால் பள்ளிகளின் மீது சிறுபான்மையினரின் “அதிகாரம்” குறையும் என்றும் அதனால் இதனை எதிர்ப்பதாகவும் வெளிப்படையாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , , , , , , , , , , , , , , ,

 

3 மறுமொழிகள் இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)

 1. களிமிகு கணபதி on December 17, 2011 at 8:03 am

  //இஸ்லாமிய பயங்கரவாதிகள் “மாட்சிமை பொருந்திய” இந்திய பாராளுமன்றத்தின் மீது … //

  ha ha ha ha ha

  good joke !!

  please post such jokes frequently. 🙂

  .

 2. ramkumaran on December 17, 2011 at 8:17 pm

  latest news on friday

  child sex abuse by dutch catholic institutions comes to light

  http://www.bbc.co.uk/news/world-europe-16216174

 3. vedamgopal on December 19, 2011 at 8:09 am

  கோவா மாநிலத்தை சார்ந்த சேவியர் பின்டோ எனும் கிருஸ்துவ பாதிரி நவம்பர் 17ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆஸ்திரேலியா பாரதத்திற்கு யுரேனியம் அளிக்ககூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் நகலை அங்குள்ள எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதை ஆஸ்திரேலியா அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விஷயம். நம் நாட்டில் சோற்ற உண்டுகொண்டு நம் நாட்டிற்கு எதிராக செயல்படும் இந்த கேவல பாதரிகளை கண்டித்து அடக்காமல் நமது செக்யூலர் அரசும் ஊடகங்களும் மௌனம் சாதிக்கிறது. (தகவல் – விஜயபாரதம்)

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*