இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)

சென்னை: தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார். திருச்சி, திருவாரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள சில முக்கியக் கோவில்கள் இதனால்  பயன்பெரும் என்று  எதிர்பார்க்கப் படுகிறது.

ஹிந்துமதம் தங்கள் ஆன்மீக விடுதலைக்கு வழிகாட்டுகிறது  என்று  கூறும்  இந்த வெளிநாட்டவர்கள்  புனித  நகரமான ஹரித்வாருக்கு வந்து கொண்டே  இருக்கிறார்கள்.  குறிப்பாக ரஷ்யர்கள்  இந்து தத்துவங்கள் மற்றும் தியான,யோகப் பயிற்சிகளை ஆர்வத்துடன்  கற்றுக் கொள்கிறார்கள்   –  டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி  (பக்கத்தில் சம்பந்தமே இல்லாமல் சிலுவை படம்!!)

செக் குடியரசு  (Czech Republic)  நாட்டில்  குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்களில்  ஜிப்சிக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும்  கருத்துக்கள்  உள்ளன  என்று  ஹிந்துக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   உலகெங்கும் ஒடுக்கப் படும் சமுதாயங்களின் மீது  பரிவு  காட்டுவதாக  தர்மத்தின் குரல் எப்பொதும் இருந்து  வருகிறது.

யோகம், ஹாரி பாட்டர்  கதைகள்  ஆகியவை தீயவை, என்று  கத்தோலிக்க சபையின் தலைமை பேயோட்டி  தீர்ப்பு சொல்லியுள்ளார்.    யோகப் பயிற்சிகளை செய்வதும்,  ஹாரி பாட்டர் நூல்களைப் படிப்பதும்  சாத்தானிய தன்மை கொண்டவை என்றும்   இவர் கூறுகிறார்.

ணிப்பூர்: காங்கிரஸ் தலைவர்கள் சுற்றுலா விழாவை திறந்து வைப்பதற்கு வருவதற்கு சற்று முன்னர் வெடித்த குண்டில் ஒருவர் பலியானார்.  இதனை மணிப்பூர் கிறிஸ்துவ பயங்கரவாதிகள் அமைப்பு வைத்ததாக காவல்துறை வட்டாரங்கள் சந்தேகப்படுகின்றன.

ள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு, அணு உலை எதிர்ப்புக் குழுவை சேர்ந்தோர் என அடையாளப்படுத்திக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததால்,  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அணு  உலை எதிர்ப்புக் குழுக்கள்  அனைத்தும்  கிறிஸ்தவ சர்ச்சுகளாலும் பாதிரிகளாலும் இயக்கப் பட்டு  வருகின்றன என்பது உலகமறிந்த விஷயம்.

பாகிஸ்தானில் எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை.  எங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று  தில்லிக்கு அருகில்உ ள்ள ஒரு முகாமில் தஞ்சமடைந்துள்ள 146  இந்துக்கள் இந்திய அரசிடம் கோரியுள்ளனர்.   இவர்கள் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.  ஒவ்வொரு நாளும்  எங்கள் குழந்தைகள் கடத்தப் பட்டு  பலவந்தமாக இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யப் படுவார்களோ என்ற பயத்துடனேயே அங்கு  வாழ்ந்தோம். திரும்பிப்போவது கனவிலும்  சாத்தியமில்லை  என்று  பதைபதைக்கிறார் ஒரு பெண்மணி.

லேசிய தமிழ் ஹிந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து இந்திய மக்கள் தெரிந்திருக்க வேண்டும் என கருதிய மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில்  பா.ஜ.க தலைவர்களை சந்தித்து  அங்குள்ள நிலவரம் பற்றியும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் தெரிவித்தனர்.

கொசுறு:

லங்கை: மதர்  தெரசாவின்  மிஷனரிஸ் ஆஃப் சாரிடிஸ்  நடத்தும் அனாதைகள் இல்லத்தில் குழந்தைகளை 10,000  அமெரிக்க டாலர் வீதம்  விற்றதாக  குற்றம் சாட்டப்பட்டு   அந்த இல்லத்தின் தலைவியான பெண் பாதிரியார் (இந்திய குடிமகள்)  கைது செய்யப் பட்டார்.

[வாரா வாரம் தொடரும்]

Tags: , , , , , , ,

 

9 மறுமொழிகள் இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)

 1. கு. சுரேஷ் on December 3, 2011 at 7:24 am

  ஒரு நல்ல ஆரம்பம், தொடரட்டும் இந்த வெற்றி பயணம்

 2. komathi cheety on December 3, 2011 at 9:43 am

  இது போன்ற ஒன்றை தமிழ் ஹிந்துவில் நீண்ட நாளாக எதிர் பார்த்து கொண்டு இருந்தேன். இதனை
  எப்பொழுதும் பார்க்கும் வகையில் தனியாக ஒரு மைய வலை தளத்திலேயே வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

  இது தவிர கிழ் உள்ள வலைத்தளத்தில் நாடு முழுவதும் நடக்கும் அப்ரகாமிய மத மற்றும் செமி ஆபிரகாமிய மதமான கம்யுனிச பயங்கரவாதிகளின் அறிய மானுட செயல்கள் வருகின்றன. மாதா மாதம்….. மிக தெளிவான புள்ளி விவரங்களுடன் கூடிய தகவல்கள் இங்கு கிடைக்கும். இதை நடத்துவது பஞ்சாப்பில் தீவிரவாதத்தை அழித்த கில் என்பது குறிப்பிடத்தக்கது

  http://www.satp.org/satporgtp/sair/index.htm

  நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள்.

 3. களிமிகு கணபதி on December 3, 2011 at 12:07 pm

  அருமையான யோசனை ! அருமையான வடிவமைப்பு !

  கொசுறு ஐடியா சூப்பர் ! 🙂

 4. கொழும்பு தமிழன் on December 3, 2011 at 1:39 pm

  நன்றி ,

  இவ்வளவு நாட்களாக வரலாற்றை மேற்கோள் காட்டி ஆபிராஹமிய மதங்களின் உண்மை தோற்றத்தை வெளிக்கொண்டு வந்த தமிழ்இந்து தற்போது நடைமுறை உலகை கைக்கொண்டு அவர்களின் முதலை முகத்தை தோலுரித்து காட்டும் நற்பணியை தொடங்கியுள்ளது வரவேற்புக்குரியது….

  இன்னும் சிறப்பாக கூற வேண்டு எனில் வரலாறு மற்றும் ஆன்மீக நூல்களை அடிப்படையாக கொண்டு வாதிடும் போது பிற மதத்தவர் பிதற்றும் வார்த்தைகளான “திரிபு படுத்தப்பட்டு விட்டது” ” அது பழைய ஏற்பாடு” “அதற்கு முந்தைய காலம் அனைத்தும் சாத்தனின் காலம் ஆகையால் அப்பாவ சின்னங்களை அழித்துவிட்டோம்” “இது சாத்தனின் வேலை” போன்ற எந்த வசனமும் இத்தொடரின் மேல் அவர்களால் திணிக்க பட முடியாது …

  வெற்றி வேல்
  கொழும்பு தமிழன்

 5. க்ருஷ்ணகுமார் on December 3, 2011 at 5:55 pm

  நல்ல துவக்கம். வாரா வாரம் உலகத்தில் ஹிந்துக்கள் பற்றிய செய்தியையும் தவிர ஹிந்துக்களுக்கு சாதக மற்றும் பாதகமான ஆப்ரஹாமியர் சம்பந்தமான செய்திகளையும் தொகுத்து கொடுங்கள்.

 6. snkm on December 4, 2011 at 3:08 pm

  இனியாவது ஹிந்துக்கள் விழித்துக் கொண்டு ஒன்று பட்டு போராட வேண்டும்.

 7. raj on December 6, 2011 at 4:34 am

  உங்கள் தளத்தில் Facebook “like ” பட்டன் இருந்தால் நல்லா இருக்கும் .FB இல் கூடிய வாசகர்களை பெறமுடியும்.(share பட்டனை விட போல் )

 8. GowriShanker on December 6, 2011 at 10:06 pm

  நெத்தியடி. மிக மிக அருமை.

 9. sivohum on December 8, 2011 at 9:38 pm

  நம்பிக்கை மதம் அழியும் ,அனுபவ தர்மம் வெற்றிபெறும் .ஜெய் ஹிந்துத்வா

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*