Monthly Archives: December 2011

தொடர், பிறமதங்கள்

[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]

[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]

"...மதம் என்பது நமது கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒரு பிணம் என்று நினைக்காதீர்கள். புத்தமதத்தைப் பொருத்தவரையில் நமது இந்திய நாடு அதற்கு அந்நியமல்ல. எனவே புத்த மதத்தை மிகச்சிறந்த முறையில் பின்பற்ற நாம் உறுதி பூண வேண்டும். மஹர் மக்கள் புத்தமதத்துக்கு அவக்கேட்டைக் கொண்டுவந்து விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் ஆளாகக்கூடாது. இது விஷயத்தில் நாம் உருக்கு உறுதியோடு இருக்க வேண்டும். இதனை நாம் சாதித்தோமானால் நம் தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம். செழித்தோங்குவோம். அதுமட்டுமல்ல உலகம் முழுவதற்குமே இந்த நற்பேறு கிட்டும். நீதி நிலைநாட்டப்பட்டா லொழிய உலகில் சமாதானம் நிலவாது...."

மேலும் »

நிகழ்வுகள், பொது

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)

ஆரிய திராவிட இனவாதக் கொள்கைகள் சிறிதும் ஆதாரமற்றவை என்று அறிவியல்பூர்வமாக நிறுவும் மேலும் வலுவான சான்றுகள்... அப்சல் குருவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்ற அவலத்தைச் சுட்டிக் காட்டி தியாகிகளின் குடும்பங்கள்... மதர் தெரசா என்று அழைக்கப் படும் அல்பேனிய நாட்டு கிருஸ்தவ முரட்டுப் பழமைவாதி குறித்த பிம்பங்களை உடைத்து, முகமூடியைக் கிழித்து அவர் ஒரு கிருஸ்தவ ஃபாசிஸ்ட் என்று நிரூபித்தவர். ... விதிமுறைகள் அமலானால் பள்ளிகளின் மீது சிறுபான்மையினரின் "அதிகாரம்" குறையும் என்றும் அதனால் இதனை எதிர்ப்பதாகவும்...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள், பிறமதங்கள்

சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடி வரும் சுப்பிரமணியன் சுவாமி பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் மதச்சார்பற்ற, இடது சாரிகள் என்பது ஒரு முரண்நகை. அண்மையில் டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். இது இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; விளைவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவர் நடத்தி வந்த வகுப்புகளை நிறுத்தியது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா...

மேலும் »

அனுபவம், ஆன்மிகம்

ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்

December 15, 2011
-
ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்

ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல...

மேலும் »

இலக்கியம், கவிதை, புத்தக விமர்சனம்

இரு வேறு நகரங்களின் கதை

இரு வேறு நகரங்களின் கதை

புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்....

மேலும் »

நிகழ்வுகள், பொது, பொருளாதாரம்

சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை

சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை

லோக்பால் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு ஆடிய நாடகம் இது. அடுத்ததாக, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடின்மை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு, தெலுங்கானா பிரச்னை உள்ளிட்ட பல சங்கடமான விஷயங்களிலிருந்து நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தைத் திசை திருப்ப இதை விட நல்ல உபாயம் வேறில்லை, எனவேதான் நாடாளுமன்றம் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை மக்களவையில் தான் வெளியிட வேண்டும் என்ற இலக்கணத்தை வேண்டுமென்றே மீறினார் முகர்ஜி.

மேலும் »

தொடர், பிறமதங்கள்

[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்

[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்

அ.மார்க்ஸ் எழுதிய ‘அம்பேத்கர் வாழ்வில்’ என்ற புத்தகத்தில் ஒரு மெகாபுளுகை எழுதியிருக்கிறார்... "... இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்களில் முதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது... முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்த பிட்சுகளைக் கொன்று குவித்தனர்... மறுபிறப்பில் எனக்கு முழுநம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக்காட்ட முடியும்... என்னுடைய மதமாற்றத்தால் இந்நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்.’’

மேலும் »

நேர்காணல், புத்தக விமர்சனம், வீடியோ

உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

உடையும் இந்தியா? – ஒரு  உரையாடல்

நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த "உடையும் இந்தியா?" நூல் வெளிவந்து விட்டது. அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தை செய்திருக்கிறார். நூல் குறித்து பத்ரி சேஷாத்ரியும் அரவிந்தனும் நிகழ்த்திய காரசாரமான உரையாடல் மூன்று பகுதிகளாக... ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின.. உலகளாவிய கிறிஸ்தவ மதமாற்ற வலை, "திராவிட கிறிஸ்தவம்" என்ற புரளி...தலித்களை இந்திய சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் சூழ்ச்சிகள். உலக அரசியலில் இந்தியாவை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதிவலைகள்....

மேலும் »

அறிவிப்புகள்

கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

விஷ்ணுபுரம் இலககிய வட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது (2011) மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப் பட இருக்கிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி கோவையில் நடக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவின் போது ஜெயமோகன் எழுதிய "பூக்கும் கருவேலம்" (பூமணி படைப்புகள் குறித்த விமர்சன நூல்) நூல் வெளியீடும் நடைபெறும்...

மேலும் »

கதைகள்

ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]

ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]

"..இதோ இந்த பொம்மைக்காரர் இருக்கிறாரே, இவரே பாரத மாதாவின் செல்வம்தான். இவர் போல இன்னும் எத்தனை எத்தனையோ ஐசுவரியங்கள் பாரதத் தாய்க்கு. விதவிதமான செல்வங்கள்! அதெப்படி ஏழையாகிவிடுவாள்? கங்கையையும் காவிரியையும் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போய்விட்டார்களா? பொன் விளைகிற பூமியையும் அப்படி விளைவிக்கிற கைகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? கலைகளயும் காவியங்களையும் அவற்றைப் படைக்கிறவர்களையும் கடத்திக்கொண்டா போய்விட்டார்கள்? மெய்ஞான, விஞ்ஞான மகிமைகளைப் பறித்துக் கொண்டார்களா? ..."

மேலும் »