கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர் நமக்கு அனுப்பிய அழைப்பிதழை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு தமிழ் ஹிந்து தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நல்ல தமிழ் இலக்கிய ஆளுமைகளை உரிய நேரத்தில் கௌரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பிற்கு நமது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*****

விஷ்ணுபுரம் இலககிய வட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது (2011) மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப் பட இருக்கிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி கோவையில் நடக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவின் போது ஜெயமோகன் எழுதிய “பூக்கும் கருவேலம்” (பூமணி படைப்புகள் குறித்த விமர்சன நூல்) நூல் வெளியீடும் நடைபெறும். அழைப்பிதழ் கீழே. அனைவரும் வருக!

(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

Tags: , , , , , , ,

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*