பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை

குத்தறிவைக் குத்தகைக்கு வாங்கிய திராவிட தலைவர்கள் உடையும் இந்தியா? என்ற நூலை பற்றி விமர்சனம் செய்கிறேன் என்ற பேரில் பேராசிரியர் பட்டத்தை வாங்கிய பலரை வைத்து ஒரு கூட்டத்தை கூட்டியது (பார்க்க: உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு , உடையும் வீரமணி – பாகம் 2). நான் கூட எதோ அறிவு பூர்வமாக பேசுவார்கள் நமது ஆதாரங்களை உடைத்து விடுவார்கள் என்று நினைத்தேன். கடைசியில் அது ஒரு திராவிட அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு மூன்றாம் கட்ட தலைவர்கள் பேச்சை போன்று இருந்ததை கண்டு சிரிப்பதா அல்லது இப்படியும் தன் மண்ணிற்கே துரோகம் செய்கிறார்களே என்று அழுவதா? இந்த பதிவு குமரி கண்டம் என்ற விசயத்தை அடிப்படையாக வைத்து இருந்தாலும் உடையும் இந்தியா பற்றிய திராவிட தலைவர்கள் செய்த ‘வடிவேலு காமெடி’யை பற்றி என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

எடுத்தவுடன் ஒரு செண்டிமென்ட் பேச்சு…. “ஐயா இல்லை அம்மா இல்லை என்ற நோக்கத்திலே அவர்கள் ஆட்டம் போட தொடங்கி இருக்கிறார்கள் அவர்கள்”… அதனால் இந்த புத்தகத்தை பற்றி கண்டிப்பாக விமர்சனம் செய்ய வேண்டும் என்று வீரமணி சொன்னாராம்….இதை படித்து விட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது. பெரியார் என்ன டிராகுலாவா? பார்த்து பயப்படுவதற்கு…. உலக தீவிரவாதி ஒஸாமாவையே கிழித்து தொங்க விடும் காலத்தில் ராமசாமி என்ற கன்னட ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு அரசியல் ப்ரோக்கரை பார்த்து நாம் பயந்து விடுவோமா? இவர் ஆதிக்க சாதி என்றவுடன் எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. ஒரு முறை இவர் காசிக்கு போனாராம் யாரும் இவருக்கு பிராமணன் இல்லை என்ற காரணத்தால் சாப்பாடு போடவில்லையாம். ஏன் இவர் உழைத்து சாப்பிடவில்லை அடுத்தவனிடம் ஏன் பிச்சை எடுத்தார் என்று எந்த பகுத்தறிவாதியும் கேட்கவே இல்லை. ஏன் என்றால் பகுத்தறிவு மூளை அப்படி தான் வேலை செய்யும். ஒரு கடைந்து எடுத்த உழைக்காத கஞ்சனை ஆதிக்க சாதிகாரனை தான் பெரியார் என்று சொல்கிறார்கள். தமிழ் ஒரு உதவாக்கரை, தமிழன் ஒரு முட்டாள் என்று சொல்பவன் தமிழினம் காப்பவன்.

தமிழ் தெய்வ மொழி! தெய்வத் தமிழ்! என்று சைவ வைணவ பெரியவர்கள் போற்றி பாதுகாத்தால் அவர்கள் தமிழின துரோகிகள்! ஆரியர்கள்!! எனக்கு புரியாத விசயம் தமிழை கேவலமான மொழி என்று எந்த பிராமணன் சொன்னான் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. இது நாள் வரை சங்க இலக்கிய மற்றும் கல்வெட்டு துறைகளிலும் இலக்கிய ஆய்வுகளிலும் மற்ற தமிழ் சாதிகளை விட பார்ப்பனர்களின் பங்கு அதிகம். சரி எவனோ ஒரு அரைவேக்காடு தமிழைப் பற்றி தவறாகவே சொல்லிவிட்டான் என்றே வைத்து கொள்வோம். சொன்னவன் என்ன ஹிந்து முன்னனி தலைவரா, RSS தலைவரா, பாஜக பொது செயலாளரா இல்லை சாதி சங்க தலைவரா? திக காரர்கள் சம்ஸ்க்ருத மொழியை செத்த மொழி என்று சொல்லும் பொழுது சமஸ்க்ருதத்தை தாய் மொழியாக கொண்டவன் அவ்வாறு தான் பேசுவான். மொழி எவ்வாறு உருவானது, சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழ் வந்ததா? இல்லை தமிழின் மூலம் சம்ஸ்க்ருதம் உருவானாதா என்பது எல்லாம் கண்டுபிடிக்க முடியாத விசயம். இரண்டும் சேர்ந்தே வளர்ந்தது என்பது என்னை போன்ற சராசரி மக்கள் முழுமையாக நம்புகின்றனர். திக போன்ற நுனிப்புல் மேய்பவர்கள் தான் இப்படி மொழியை அடிப்படையாக கொண்டு பேசி கொண்டு இருக்கிறார்கள். சரி மீண்டும் மாநாடு விசயத்திற்கு செல்வோம்.

இது தவிர இதில் கலந்து கொண்ட திராவிட பேராசிரியர்கள் பெயரை கேட்க வேண்டுமே… ராமசாமி, ஜானகி, ஜெகதீசன், கருணாந்தம்… டிசம்பரை திசம்பர் என்று எழுதும் அதிபுத்திசாலிகள் வைத்துள்ள பெயர்களை பார்த்தாலே தெரிகிறது இவர்களின் போலி திராவிட கொள்கை. கன்னியாகுமரிக்கு தெற்கே குமரி கண்டம் என்ற தமிழர்களின் நகரம் ஒன்று பல காலங்களுக்கு முன்னால் இருந்தது. அது கடலில் 2000 வருடங்களுக்கு முன்பு மூழ்கிவிட்டது என்ற பொய்யான கதையை இனவாத கோட்பாட்டிற்காக பரப்பினார்கள் என்றும் உடையும் இந்தியா புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து தி.க கூட்டிய கூட்டத்தில், பேராசிரியர் பட்டத்தை வாங்கிய ஒருவரின் பேச்சு முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. அவர் “Ancient Tamil Civilization“ என்ற புத்தகத்தில் குமரி கண்டம் பற்றி விரிவாக எழுதபோகிறாராம். ஒரு அரசியல்வாதி மாதிரி பேசும் ஒருவர் எப்படி இது போன்ற புத்தகத்தை எழுதுவார் என்று ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம். ஏமாந்த முதுநிலை மாணவர்கள் மட்டும் டாக்டரேட் பட்டம் பெற வேண்டி பலர் இருப்பார்கள். அவர்கள் இருக்கும் பொழுது இவர்கள் புத்தகம் ‘எழுதித் தள்ளுவதற்கு’ என்ன பஞ்சம்! எனக்கு புரியாத புதிர் என்னவென்றால் சம்ஸ்க்ருதத்தில் குமரி கண்டம் பற்றி இருக்கிறது என்று கலர் கலராக வால்மீகி இராமயணத்தையும் வியாச பாரதத்தையும் சிலப்பதிகாரத்தையும் இழுத்தது தான். அதில் இருக்கிறது இதில் இருக்கிறது என்று சொல்கிறாரே தவிர என்னமாதிரி இருக்கிறது என்று சொல்லவேயில்லை. ஒரு நிலப்பகுதியை இனமாக மாற்றிய இவர்களுக்கு ஒரு வார்த்தை கண்டமாக மாற்றுவதா கஷ்டம்! கலர் கலராக படம் ஓட்ட வேண்டியது தான். பாரதத்தில் என்ன GPS ல் இருப்பது போல் முப்பரிமாண அளவீடுகளாக கொடுக்கப்பட்டுள்ளது?

குமரி கண்டம் என்பது வரலாற்று திரிப்பு என்று சொன்னவுடன் காலில் வெந்நீர் கொட்டியது போல் அலறுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. சரி கன்னியா குமரியை கன்னி மேரி என மாற்று என்று மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் செயல்படும் சில மிசநரிகள் போராட்டம் மற்றும் கலவரத்தை செய்யும் பொழுது எங்கே போனார்கள் இந்த குமரி கண்ட கதையை மீட்கும் போராளிகள்…ஒரு வேளை இதற்கு பெயர் தான் பகுத்தறிவோ?

பேராசிரியர் பட்டத்தை வாங்கிய அவர் மேலும் கூறியதாவது, என்னிடம் குமரி கண்டத்தின் சேட்டிலைட் மேப் உள்ளது. யார் வேண்டுமானாலும் என்னிடம் வந்து பெற்றுகொள்ளலாம். “வாங்க நான் படம் காட்றேன்! படம்!” என்று கூறுகிறார். ஒரு பேராசிரியர் பேசும் முறையா இது?

எதற்கு எடுத்தாலும் நாங்கள் அறிவியலை தான் நம்புகிறோம். மூடநம்பிக்கையை நம்புவதில்லை என்று சொல்கிறார்கள். மேடம் க்யூரியில் இருந்து கலாம் வரை எத்தனையோ இறை நம்பிக்கை கொண்ட விஞ்ஞானிகள் பல அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர். ஆனால் பகுத்தறிவு பேசும் சில கழிவுகள் நன்றாக மேடை பேச்சில் மட்டும் திறமையை வளர்த்து கொண்டு மக்களை ஏமாற்றுவதிலும் அடுத்தவரை கேவலப்படுத்துவதிலும் தான் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். சரி குமரி கண்டத்தினை பற்றி மிக தெளிவான பார்வையை உடையும் இந்தியா புத்தகத்தில் (பக்கம் 112) கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை பற்றிய ஒரு சிறு குறிப்பை மட்டும் இங்கு எழுதப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் உலகின் மிக குறைந்த விலையில் கார் தயாரித்த உடன் எல்லா நிறுவனங்களும் மிக குறைந்த விலையில் கார்களை தயாரிக்கத் தொடங்கின. மோட்டார் வாகன உற்பத்தியில் டாடாவின் சாதனை ஒரு மைல் கல் என்று சொன்னால் அது மிகையல்ல… அதே போல தான் டார்வின் 1850 களில் வெளியிட்ட பரிணாம வளர்ச்சி புத்தகம் விலங்கியல் துறையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது. அவர் தாக்கம் மற்றவர்களையும் நன்றாக கவ்வி கொண்டது. பிலிப் லட்லீ என்ற விலங்கியல் துறை பேராசிரியர் மடகாஸ்கர் மற்றும் இந்திய நிலப்பகுதிகளில் உள்ள விலங்குகள் ஒரே தன்மை கொண்டவை அதனால் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவிற்கு இடையே ஒரு மிக பெரிய நிலப்பகுதி இருக்க வேண்டும் என்று நம்பினார். (நிற்க: 18 நுற்றாண்டில் தற்பொழுது உள்ளது போல் அதி நவீன கருவிகளோ பூமியின் தட்டுகள் பற்றிய அறிவியலோஅல்லது மரபியல் வளர்ச்சியோ இல்லை). அவர் கருத்தாக்கத்தை அப்படியே தனக்கு சாதகமாக உருவாக்கி கொண்ட ஒரு பாட்டி தான் பெட்ரோவ்னா. இவர் தான் இந்த டுபாக்கூர் நிலத்தை அதாவது லெமூரியாவை தமிழர்களின் நாகரீக பண்டைய நகராக கிறித்துவ மிசநரிகளிடம் பரப்பினார்.

Petrovna

இந்த பெட்ரோவ்னாவும் அவருடைய பிரம்மஞான சபையும் (Theosophical Society) இலங்கை வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள ஒன்று. ஏன் என்றால் இவர்கள் தான் சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமை உடைக்க முதல் ஆப்பை செருகியவர்கள். அந்த ஆரிய இனவாத ஆப்பு தான் பின்னாளில் மேற்கத்தியர்களால் உபயோகப்படுத்தப்பட்டு பல இலட்சம் மக்கள் இறக்கக் காரணமாக அமைந்தது. சரி மீண்டும் மேப்புக்கு வருவோம்.

என்னுடைய அறிவுக்கு உட்பட்டு தமிழ் மொழியின் எந்த இடத்திலும் குமரி கண்டம் என்ற வார்த்தை இருந்ததாக தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் குமரிக் கோடு என்ற ஒரு வார்த்தை தான் இருந்ததாக கேள்வி பட்டு உள்ளேன். திருசெங்கோடு என்ற ஒன்று கூட தான் உள்ளது. உடனே அது திருசெங் கண்டம் என்று சொல்வார்களா பகுத்தறிவை குத்தகைக்கு எடுத்தவர்கள்? தேவநேயன் என்பவர் தான் இந்த லெமூரியா அதாவது குமரிக் கண்டத்தை பிரபலப்படுத்தியவர் என்று சொல்லாம். இவர் என்ன சொல்கிறார் என்றால், இந்த குமரிக் கண்டம் 50000 வருடங்களுக்கு முன்பு இருந்ததாம். அது தான் தமிழனின் பாரம்பரிய பூமியாம்… இதை அவர் எப்படி கண்டு பிடித்தார்? அவர் மரபியல் வல்லுனரா? புவியியல் பேராசிரியரா? இதை நிறுபிக்க அவர் தொல்லியல் ஆய்வை செய்தாரா அல்லது வேறு எதேனும் தடையங்களை கண்டுபிடித்தாரா? இவை அனைத்திற்கும் இல்லை என்ற பதில் தான் வரும். பிறகு எப்படி எற்று கொள்வது என்று நீங்கள் கேட்டால் விரமணி & கோ உடனடியாக உங்கள் பகுத்தறிவு லைசன்ஸை கேன்ஸல் செய்துவிடும். இது ஒன்றும் புதிது அல்ல. பல காலமாக ஆரிய திராவிட கட்டுகதைகளை எப்படி பரப்புகிறார்களோ அது போலவே இந்த குமரி கண்ட கதையை பரப்புகிறார்கள்.

செயற்கைக் கோள் படத்திற்கு வருவோம். ஏதோ 20 ஆம் நுற்றாண்டில் மக்களை ஏமாற்றி ஆட்சியில் உடகார்ந்து கொண்டு கொள்ளை அடித்தாயிற்று. ஆனால் 21 ஆம் நுற்றாண்டிலும் மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கும் பகுத்தறிவுகளின் தைரியத்தை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

அரசியல் கட்சிகள் எல்லாம் நாங்கள் அதை செய்தோம் இதை செய்தோம், எங்கள் ஆட்சியில் தான் பாலாறும் தேனாறும் ஓடியது என்று சொல்வார்கள். அவர்கள் பேச்சுக்கும் நமது ஐந்து அறிவு பகுத்தறிவு சிங்கங்களுக்கும் பெரிதாக எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. சரமாரியாக பொய் பேசுவார்கள். இதற்கு ஆதாரம் என்ற பெயரில் ஒரு புத்தகத்தின் பெயரை கூறி அதில் பக்கம் 133 ல் இது போல உள்ளது என்று சொல்வார்கள் அவ்வளவு தான். இப்படி தான் ஒருவன் எழுதிய புளுகு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு பல புத்தகங்களை எழுதுவார்கள். இது இவர்களுக்கு மேற்கத்திய கிறித்துவ இறையியல் கற்று கொடுத்த வித்தை. பெட்ரோவ்னா பாட்டி சொன்னதை காப்பி அடித்த தேவநேயன் எழுதிய விசயத்தையே இவரும் சொல்ல போகிறார்.

கீழே உள்ள வரைபடத்தில் கடல் நீர் மட்டம் கடந்த பல ஆயிரம் வருடங்களாக எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை பற்றி காட்டுகிறது. இதை பற்றி நாசா விஞ்ஞானிகள் கட்டுரை கூட இங்கே கொடுத்து உள்ளேன். கடந்த 40000 ஆண்டுகளில் உலகில் கடலின் நீர் மட்டம் 140 மீட்டர் அளவில் உயர்ந்து உள்ளது. சரி இதற்கும் நமது கட்டுரைக்கும் பெரிய சம்மந்தம் உள்ளது. கீழே உள்ள வரைபடத்தில் ஹிந்து மஹா சமுத்திரத்தின் கடல் ஆழம் கொடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சொல்லும் குமரி கண்டம் என்ற உலகம் சராசரியாக 3000 மீட்டர் கடலுக்கு அடியில் உள்ளது. எதோ 500 மீட்டருக்கு அடியில் இருக்கிறது என்று சொன்னால் கூட எதோ ஏற்று கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால் 3 கிலோ மீட்டர் அழத்தில் உள்ள ஒரு இடத்தில் தான் இவர்கள் சொல்லும் திராவிட மூதாதையர்கள் வாழ்ந்தார்களா? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வது போல திராவிட இனவாதம் என்பதே பொய். அதில் இருப்பவர்கள் பேசும் பேச்சில் மட்டும் என்ன உணமையை எதிர் பார்க்க முடியும். இவர்களை பார்க்கும் பொழுது “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது.


இந்த பேராசிரியர் பட்டத்தை வாங்கியவர் பேச்சை கேட்ட பின்பு தான் எனக்கு புரிகிறது தமிழ் நாடு பல்கலை கழகங்கள் ஏன் இந்த அளவுக்கு ஊழலும் நிர்வாகச் சீர் கேடும் நிறைந்து இருக்கிறது என்று… கடைசியாக கீழே உள்ள படத்தைப் பாருங்கள்… முதலில் இந்த புத்தகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அதிபுத்திசாலிகள் வள்ளுவர் கிறித்துவத்தின் தாக்கத்தால் தான் திருக்குறள் எழுதினார் என்று சொல்லும் பொழுது எங்கு சென்றார்கள்?

அது சரி திராவிடர்கள் தென் பகுதியில் வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார்கள். அதே சமயம் வடக்கே சிந்து கங்கை சமவெளியும் இந்த திராவிட பாரம்பரியம் என்று சொல்கிறார்கள், அது சரி காணும் கலாச்சாரம் எல்லாம் தான் உருவாக்கியது என்று சொல்லும் மேற்கத்தியர்கள் பெற்ற குழந்தை தானே திராவிட இனவாதம் அவர்களிடம் இதை தவிர வேறு எதை எதிர் பார்க்க இயலும்?

கடைசியாக..பெட்ரோவ்னா பாட்டி லெமூரியன் மக்கள் எப்படி இருந்தார்கள் என்று ஒரு விசயத்தை சொல்கிறார். அதன் படி ஒரு படமும் வலை தளத்தில் உள்ளது.

ஒரு வேலை இந்த படத்தில் இருப்பவர் தான் திராவிட பகுத்தறிவாளர்கள் தங்கள் மூதாதையர்களாக நினைக்கிறார்களோ? கடைசியில் திராவிட வட போச்சே?

Tags: , , , , , , , , , , , ,

 

26 மறுமொழிகள் பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை

 1. களிமிகு கணபதி on February 6, 2012 at 1:43 pm

  :))) !!

  கலக்கல் ! 🙂

  ஆனால், வழக்கத்திற்கு மாறாக திக தலைவரான வீரமணியின் பல கேள்விகள் நியாயமானவையாக எனக்குப் பட்டன. அவைகளுக்குப் பக்குவமான முறையில் பதில் சொல்ல வேண்டிய கடமை இந்துத்துவர்களுக்கு இருக்கிறது.

  இந்துக்கள் என்பதால் தமிழர்கள் உலகெங்கும் அழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் தமிழர்களின் நலனுக்காகத் திறந்த மனத்துடன் திராவிடர் கழகம் உரையாட வருவது தமிழ் இனத்தைக் காக்கும்.

  .

 2. vedamgopal on February 6, 2012 at 4:57 pm

  // அது சரி திராவிடர்கள் தென்பகுதியில் (குமரிகண்டத்தில்) வாழ்ந்தார்கள் அதேசமயம் இந்த சிந்து கங்கை சமவெளியும் இந்த திராவிடபாரம்பரியம் என்கிறார்கள். // . சொன்னால் தெரிந்து கொள்ளவேண்டும் அல்லது சுயமாக சிந்தித்து தெரிந்துகொள்ளவேண்டும். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே போலி திராவிட இனத்தார் ஏதும் அறியாரடி ஞான தங்கமே.
  லெமுரியர் படம்மும் ”வடை போச்சே” – சூபர் – . மேலும் லேமுரியர்கள் 7 அடி உயரம் இருந்தார்களாம். அவர்கள் கை காலைவிட நிளமானது. அவர்கள் நெற்றியில் மூன்றாம் கண் போல் ஒரு புடைப்பு காணப்பட்டது. உடையும் இந்தியாவில் புத்தகத்தில் படித்தது
  தமிழர்களின் தொன்மத்தை அறிய கடலில் மூழ்கிய நிலபரப்பை பற்றிய அரசியல் நோக்கமில்லா ஆராய்ச்சி கண்டிப்பாக வரவேற்க தக்கதே. இந்த தளத்திற்கு சென்றால் நிறைய செய்திகளை பார்க்கலாம். ( Jayshreesaranathan.blog )

 3. Cetr_yudh on February 6, 2012 at 8:26 pm

  “இந்துக்கள் என்பதால் தமிழர்கள் உலகெங்கும் அழிக்கப்பட்டு வருகிறார்கள்”……
  …சரிதான்…

 4. சோழன் on February 6, 2012 at 9:56 pm

  @ களிமிகு கணபதி,

  ஒரு சிறு திருத்தம். அவர்கள் ஹிந்துகள் என்பதால் அழிக்கபடவில்லை. ஆப்பிரகாமியர்களாக மதம் மாறாததால் அவர்கள் அழிக்கபடுகிறார்கள். அதாவது ஹிந்துகளுக்கு மட்டும் அல்ல, பிற இயற்கை வழிபாட்டுகளை கொண்டவர்களுக்கும் இது தான் நடக்கிறது. அடுத்தவனை அழிக்க வேண்டும் என்று நினைப்பவன் தானாக அழிவான். ஆதலால் ஆப்பிரகாமிய மதம் தானாக அழியும்….

 5. parthasarathy on February 7, 2012 at 8:26 am

  நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.விளரி என்ற ஆயுதம் இன்றைய புமாரங்,இது ஆஸ்திரேலியாவிலும் தென் தமிழ்naaட்டிலும் மட்டுமே உள்ளது.

 6. A.K.Chandramouli on February 7, 2012 at 8:35 am

  ‘உடையும் இந்தியா ‘ புத்தகம் அறிவு ஜீவிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் ஓடிப்ப போய்விடாமல் இருக்க அவர்களை சேர்த்து நடத்திய கூட்டம் ஒரு கேலிக் கூத்து.

 7. ஜெயக்குமார் on February 7, 2012 at 12:09 pm

  தமிழர்களின் மறதியும், அறியாமையுமே தி.க கும்பல்களின் பலம். அதை நம்பியே இதுவரை அவர்கள் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. மக்கள் விழித்துக்கொள்ளும்வரை இவர்களின் கல்லா நிறைந்து கொண்டுதானிருக்கும். ”பகுத்தறிந்து” நாத்திகனாக இருந்து அதைவிட அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் வேறு மதத்திற்கு மாறுபவர்கள்தான் இவர்களின் கொ.ப.செ கள். இன்றைக்கு ஹிந்துக்கள் மீது வீசப்படும் அவதூறுகளுக்கு தமிழ் ஹிந்துவின் இந்த சளைக்காத பதிலடி இந்துக்களுக்கே விழிப்புனர்வை ஏற்படுத்துகிறது ஏன்றால் அது மிகையில்லை. ”திராவிட மாயை”யில் ஆரம்பித்து இன்று ”உடையும் இந்தியா?’ வரை தொடர்ந்து போலிகளை கண்டு ஏமாறாமல் தமிழ் ஹிந்துக்களை காத்து வரும் தமிழ் ஹிந்துவுக்கு நன்றி.

 8. மயில் வாகனன் on February 7, 2012 at 2:00 pm

  திரு கோமதிச் செட்டி அவர்களே..!

  தந்தை பெரியார் என்று பலரால் அழைக்கப் படுபவர் பல நேரங்களில் தரமற்ற விதத்தில் சொற்களைப் பயன்படுத்தியிருப்பது உங்கள் கட்டுரையைப் படிக்கும்போது புரிகிறது.

  இருந்தாலும் பதிலுரைகளில் ஒருமையைப் பயன்படுத்துவதை நாம் தவிர்க்கலாம்.

  இருள் இருப்பதால்தான் ஞாயிறின் ஒளி முதன்மை பெறுகிறது.

  நிறையப் பொய்களை அவிழ்த்துவிட்டு இவர்கள் உதவி செய்வதால்தான் சரியான பதிலடியை உங்களால் தர முடிகிறது.

  இவர்கள் தந்துகொண்டிருக்கிற வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுவோம்.

 9. கோமதி செட்டி on February 7, 2012 at 9:29 pm

  @ மயில் வாகனன் அவர்களுக்கு,

  \\இருந்தாலும் பதிலுரைகளில் ஒருமையைப் பயன்படுத்துவதை நாம் தவிர்க்கலாம்\\

  தங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.

 10. g ranganaathan on February 7, 2012 at 10:22 pm

  நான் பள்ளி சென்ற காலத்தில் தஞ்சாவூரில் ராமசாமி நாயக்கரின் சிலை திறப்பு விழா நடந்தது. மூடநம்பிக்கை என்று இந்து மதக்கடவுள்களின் சிலை வழிபாட்டை சாடியவரின் சிலை திறப்பு எதற்கு என்று கேட்டு எனது தமிழ் ஆசிரியரின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டேன். கேள்வி கேட்பது என்பது இந்துமத பாரம்பர்யம் ஆனால் கேள்வி கேட்டால் வசை மாரி பொழிவது திராவிடப் பாரம்பர்யம்

 11. ssrinivas on February 8, 2012 at 1:32 am

  வீரமணி வெத்துவேட்டு வெங்காய ராமசாமி கும்பலால் இந்து மதத்தை அசைக்கமுடியாது திராவிடம் என்பதே கட்டுக்கதை

 12. Sarav on February 8, 2012 at 10:14 am

  “எனக்கு புரியாத விசயம் தமிழை கேவலமான மொழி என்று எந்த பிராமணன் சொன்னான் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. ” You fool, then why they are not allowing Tamil language in few temples? There is no proof that GOD has asked only Samskrit should be use in his court.

 13. சரவணன் .V. on February 8, 2012 at 11:42 am

  சுருக்கமான சரியான கட்டுரை.
  டைனசாரை வாக் அழைத்துப் போகும் நம் மூதாதை [ இன்னா ஸ்டைல்!!!] படத்துக்கும் அந்த இணைப்புக்கு மிக நன்றி.
  இராவணன் மற்றும் சூர்பனகை நம் மூதாதை என்று வேறு சொல்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
  கல் தோன்றி மண் தோன்றா என்று சொல்லி சொல்லியே ஓரிரண்டு தலைமுறைகளை கிறுக்காக்கி விட்டார்கள். தற்போதைய தலைமுறை இந்த வடை ஊசிபோனது என்று புரிந்து கொண்டு விட்டது
  புதிதாக அவர்கள் ஏதாவது யோசித்தாக வேண்டும் .
  சரவணன்

 14. super thinker on February 8, 2012 at 3:56 pm

  Saruv,
  Then, why sanskirt using karnataka,Andra pradesh and kerala. I donot understand there is no any agitation coming from there.

  Sanskrit is language of dharamic religions(shiva,vaishinva,buddha, Jain,sikh) relgions. mind it.

 15. குமரன் on February 8, 2012 at 4:33 pm

  // தேவநேயன் என்பவர் தான் இந்த லெமூரியா அதாவது குமரிக் கண்டத்தை பிரபலப்படுத்தியவர் என்று சொல்லாம். இவர் என்ன சொல்கிறார் என்றால், இந்த குமரிக் கண்டம் 50000 வருடங்களுக்கு முன்பு இருந்ததாம். அது தான் தமிழனின் பாரம்பரிய பூமியாம்… இதை அவர் எப்படி கண்டு பிடித்தார்? அவர் மரபியல் வல்லுனரா? புவியியல் பேராசிரியரா? இதை நிறுபிக்க அவர் தொல்லியல் ஆய்வை செய்தாரா அல்லது வேறு எதேனும் தடையங்களை கண்டுபிடித்தாரா? இவை அனைத்திற்கும் இல்லை என்ற பதில் தான் வரும். //

  நீங்கள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தோன்றுகிறது. தமிழகத்தில் தமிழின் தொன்மை குறித்து யாரேனும் பேசவேண்டும் என்றால் அதற்கான முழுத்தகுதியும் கொண்டிருந்த மொழியியல் ஆய்வாளர், அறிஞர். ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எழுதிய திரு.குணா மேற்கோள் காட்டும் குரு. திராவிடவாதிகளில் ஒருவராக நீங்கள் நினைத்திருப்பின் அது தவறு.

  பஃறுளியாறும், பன்மலையடுக்கக் குமரிக் கோடும் கடல் கொண்டது என சிலப்பதிகாரம் கூறும். கடல்கொண்ட முதல் சங்ககால மன்னர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யாரிடம் யாகப் பொறுப்பினைக் கொடுத்தார் என திராவிடவாதிகளிடம் கேட்டால் ஆரியப் படையெடுப்புக் கொள்கை மண்ணைக்கவ்வும்.

  டெக்டோனிக் நிகழ்வுகளில் 4 கி.மீ தாழ்ச்சியும், 8 கி,மீ (எவெரஸ்ட்) உயர்ச்சியும் சர்வ சாதாரணம். ஆரியம் பெரிது, தமிழ் பெரிது என்று, ஆய்வுகளை ஒதுக்கிவிட்டு உணர்வுரீதியாக வாதாடுவதால் பயனேதும் இல்லை. ஆரியமும், தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கும் கருணை செய்தானே என்னும் திருமூலர் வார்த்தைகள் இரு மொழிகளின் தொன்மையைக் காட்டுவதை நோக்கவேண்டுகிறேன்.

 16. சோழன் on February 8, 2012 at 9:05 pm

  சராவ்

  \\You fool, then why they are not allowing Tamil language in few temples? There is no proof that GOD has asked only Samskrit should be use in his court\\

  இது தங்கள் முட்டாள் தனத்தை காட்டுகிறது. கோயில்கள் தமிழ் நாட்டிற்கு மட்டும் பொதுவல்ல. அனைத்து பாரத மக்களுக்கும் பொதுவானது. அதனாலேயே அனைத்து மாநிலங்களிலும் சம்ஸ்கிரிதம் உபயோகப்படுத்தபடுகிறது.

  தேவாராமும் பாசுரங்களும் தெரியாதா ஒரு ஆப்பிரகாமிய அடிமை என்பது தங்கள் மறுமொழிகளில் இருந்தே தெரிகிறது.

 17. gobi on February 9, 2012 at 9:06 am

  / ஒரு முறை இவர் காசிக்கு போனாராம் யாரும் இவருக்கு பிராமணன் இல்லை என்ற காரணத்தால் சாப்பாடு போடவில்லையாம். ஏன் இவர் உழைத்துசாப்பிடவில்லை அடுத்தவனிடம் ஏன்பிச்சை எடுத்தார் என்று எந்த பகுத்தறிவாதியும் கேட்கவே இல்லை/piramanargal ellorum kaasiel pitchai eduthaargala??

 18. சோழன் on February 9, 2012 at 1:18 pm

  \\piramanargal ellorum kaasiel pitchai eduthaargala?\\

  இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு கோயில் பணிகளுக்கு சம்பளம் என்ற பெயரில் கொடுக்கிறார்கள். அந்த காலத்தில் இந்த தொழிலை செய்த அந்தகனர்களுக்கு பிச்சை என்ற பெயரில் கொடுத்தார்கள்….

 19. சோழன் on February 9, 2012 at 1:26 pm

  \\டெக்டோனிக் நிகழ்வுகளில் 4 கி.மீ தாழ்ச்சியும், 8 கி,மீ (எவெரஸ்ட்) உயர்ச்சியும் சர்வ சாதாரணம்\\

  இதற்கான ஆதாரங்கள் / ஆய்வு கட்டுரைகள் ஏதும் இருந்தால் தயவு செய்து அனுப்புங்கள்.

 20. க்ருஷ்ணகுமார் on February 9, 2012 at 3:16 pm

  \\\\\\\\\\\You fool, then why they are not allowing Tamil language in few temples? There is no proof that GOD has asked only Samskrit should be use in his court\\\\\\\\\\\

  நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்து நாளை காணாமல் போகும் காளான்கள் போன்று அவ்வப்போது தோன்றி மறையும் ( வசை பொழிவதை உத்தேசமாய்க்கொண்டு) பல கருத்துப்பதிவாளர்களின் கருத்துக்களில் மட்டில்லா வசைகள் – fool, குடிகேடி (காந்தி பற்றிய வ்யாசத்தில்). மறுமொழிகளை மட்டுறுத்தலுக்குப் பின் வெளியிடுகையில் வசை மொழிகளை நீக்கி பதிவு செய்யலாமே. எத்தனையோ உத்தரங்கள் திருத்தப்பட்டு பதிவு செய்யப்படுகையில் வசை தவிர்த்து பதிவு செய்யப்பெறும் உத்தரங்கள் சம்பாஷணத்தரத்தை உயர்த்துவதாக இருக்கும். வசை பொழி பதிவாளர்களை எச்சரிக்கவாவது செய்யலாமே.

 21. VGopalan on February 9, 2012 at 7:09 pm

  g ranganaathan on February 7, 2012 at 10:22 pm
  நான் பள்ளி சென்ற காலத்தில் தஞ்சாவூரில் ராமசாமி நாயக்கரின் சிலை திறப்பு விழா நடந்தது. மூடநம்பிக்கை என்று இந்து மதக்கடவுள்களின் சிலை வழிபாட்டை சாடியவரின் சிலை திறப்பு எதற்கு என்று கேட்டு எனது தமிழ் ஆசிரியரின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டேன். கேள்வி கேட்பது என்பது இந்துமத பாரம்பர்யம் ஆனால் கேள்வி கேட்டால் வசை மாரி பொழிவது திராவிடப் பாரம்பர்யம்//

  நீங்கள் படித்தது வீரராகவா பள்ளியா? ஆசிரியர் தொல்காப்பியனா?

 22. மயில் வாகனன் on February 10, 2012 at 8:41 pm

  //Sarav on February 8, 2012 at 10:14 am//

  எதற்காக இந்த வலைத் தளத்தில் நீங்கள் ‘முட்டாள்’ என்கிற பொருள் தரும் ஆங்கிலப் பதத்தைப் பயன்படுத்திட வேண்டும்? தமிழிலே பதில் கூட எழுதிடத் தயாரில்லாத நீங்களெல்லாம் ஏன் தான் தமிழ்ப் பற்றாளர் என்னும் போர்வையில் சம்ஸ்கிருத எதிர்ப்பு வெறியைக் காட்டுகிறீர்களோ!

  ஒரு கோயில் உருவாகும்போது என்ன வழி முறைகளைக் கையாண்டு நித்திய பூஜைகளை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டதோ அந்த வழிமுறைகளைக் கையாள்வதை நீங்கள் ஏன் மறுக்க வேண்டும்? அப்படிப்பட்ட கோயில் உருவாவதை ஏற்றுக்கொண்ட பலரால்தானே அது உருவாகியிருக்கிறது?

  தவிர, தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் வழி வழிபாடு செய்வதற்கு என்று ஒரு கோயில் உருவாவதை யாரும் தடுக்கவில்லையே இந்த நாட்டில். நீங்களும் பக்தியுடன் போய் எந்தக் கோயிலிலும் இறைவனை அழகுத் தமிழில் வழிபட எந்தத் தடையும் இல்லையே.

  தமிழ் வழிபாடு என்னும் போர்வையில் வேத முழக்கத்தை வேரறுக்க வேண்டும் என்று அலைவது தான் பெரும் தவறு. முதலில் தமிழ் ஹிந்து தளத்தில் நீங்கள் முழுமையான் ஆங்கில மறுமொழிகளை எழுதுவதைத் தவிர்த்துவிட்டு, அதன் பின்னர் தமிழ் வழி வழிபாடியற்றுவதைப் பற்றிச் சிலாகியுங்கள்.

 23. கே ஆர் பி on February 16, 2012 at 12:00 pm

  பிராமணர்கள் பிக்ஷை எடுத்துத்துத்தான உண்ண வேண்டும் என்பது மனு நீதி சாஸ்திரம் சொல்கிறது. அவர்கள் தங்களக்கென்று பொருளீட்டவும் கூடாது. இதுதான் சுருக்கம். எனவே இப்போதைய சமூகத்தில் பிராமணர்களின் நிலை தூய பிராமணர் என சொல்லிக் கொள்வதற்கு பொருத்தமானதல்ல. நானும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவனே!

  காலந்தோறும் ஏற்பட்டு வரும் மாற்றம் மூல சாஸ்திரங்களையும், வழிமுறைகளையும் ஒற்றியே ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. திராவிட ஃபாசிஸ்டுகள் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். லெமூரியா கண்டம் பற்றி ஆராய முடியும் என்றால்தான் உண்மைகள் வெளிவரும். ராணா ஆஃப் கட்சில் எப்படி ஆராய்கிறார்களோ அதைப் போன்றதொரு ஆராய்ச்சியை செய்தால்தான் உண்டு.

 24. Ganesh on March 1, 2012 at 7:28 pm

  லேமுரியர்கள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் இனம் ஆகும், மேலும் அவர்கள் Hermaprodites , தானாகவே கரு உற்பத்தி செய்யும் திறன் உடையவை, மேலும் அவர்கள் உடல் உறவு கண்டுபிடித்தார்கள் அதனால் அழிந்தார்கள். மேலும் டைனசார் வீட்டில் வளர்த்தார்கள்.
  என்று பெட்ரோவ்னா நம்பினார்.
  இப்பொழுது நம்பூவீர்களா இதை, எவளோ பகுத்தறிவு பாருங்கள்
  கோமதி செட்டி அவர்களே இதை நீங்கள் நம்பாமல் விட்டால், பகுத்தறிவு உங்களை பார்த்து செரிக்கும் :)))

 25. vedamgopal on March 3, 2012 at 9:48 am

  சமீபத்தில் எனது புத்தக சேமிப்பை கிளரிய பொழுது கண்ணதாசனின் ”கடல் கொண்டு தென்நாடு” என்ற நாவல் கண்ணில் பட்டது. ஏற்கனவே படித்திருந்தாலும் அவை பல மறந்து விட்டது. அதில் நான் கோடிட்டு வைத்த சில பத்திகள் முன்னுரையிலிருந்து மட்டுமே.
  லெமூமோரியா என்றாலும் குமரிகண்டம் என்றாலும் ஒன்றே.. அங்கே ஒடிய முக்கியமான ஆறு ப.ஃறுளி. அங்கே சிற்றிலகளைக் கட்டிக் கொண்டு குடீயேறிவிட்ட கிரேச்கத்து மகைனியர்கள் தென் அமெரிக்க மாயர்கள் எதிப்தியர்கள். இவர்களை யவனர்கள் என்று அழைப்பர். இன்றைய இந்தோநேஷியாவின் பழைய பெயர் ”முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்”. அது அன்று குமரிகண்டத்தை ஒட்டியே இருந்தது.
  லெமூரியா வாழ்க்கை காலம் நடுக் கற்காலமாகும். தினோஸாரியா லெமூரியாவின் மிக பெரிய உயிராகும். அது 100 அடிக்குமேல் நீளமுள்ளது. அங்கே கம்பளி யானைகள் கடற்பாம்புகள் அதிகம். லெமூரியாவில் மிகுதியாய் உறைந்த நில உயிர் வகை ”லெமூர்” என்பதாகும். இது மனிதரது தோற்றம் கொண்ட ஒருவகை குரங்கினம். இதில் பல வகைகள் இருந்தன. சில இடங்களில் தற்காலிக மனிதர்களை போல் உயரமாக 6 அடி வளர்ந்திருந்தன. இதற்கு நீண்ட வால் உண்டு. ஆனால் மற்றவகைகளில் அது மனிதரை ஒத்திருந்தது. ஆனால் இதிலிருந்து மனித இனம் தோன்றவில்லை. மனித இனம் தனியாக படைக்கப்பட்டது. காட்டு வாழ்கையிலிருந்து கூட்டு வாழ்கைகும் நாட்டு வாழ்கைக்கும் திரும்பிய ஒரு சமுதாயம் அது. தாய் தகப்பன் பங்காளி மாமன் என்ற உறவு முறைகள் தெளிவாகாமல் இருந்தகாலம். லெமூரியாவை ஆண்டவர்கள் பாண்டியர்கள்.
  லெமூரியா கண்டத்தின் முதல் தலை நகரம் தென் மதுரை. அதை கடல் கொண்ட பிறகுதான் கபாடபுரம் தலைநகரமாயிற்று. அதுவும் கடல் கொண்ட பிறகுதான் சிறிது காலம் மணவூரும் பிறகு இன்றைய மதுரையும் தலைநகரமாயின. இது கற்பனை கதை என்றாலும் இதில் நான் சொல்லப்போகும் பலவற்றிற்கு ஆராய்சி சான்றுகள் உள்ளன.
  இது ஒரு காதல் நாவல் மிகவும் செக்ஸியாக ரசிக்கதக்க வகையி்ல் எழுதியுள்ளார். ஆனால் அவர் சித்தரிக்கும் கதா பாத்திரங்களும் நிகழ்வுகளும் மக்கள் மிகுந்த நாகரிக பண்பாடுகள் அடையவில்லை என்பது தெரியும். அப்படி இருக்கையில் நாவலில் முதல் சங்கம் கடை சங்கம் நடந்ததையும் அதில் கதாபாத்திரங்கள் பங்கேற்றதையும் கூறுகிறார். கற்பனை கதை என்றாலும் இது ஏற்புடையது அல்ல.

 26. ராம் on January 18, 2018 at 6:55 pm

  குமரிக்குத் தெற்கே நில ஆழம் குறைவு என்பதுவே, குமரிக்கண்டம் (இலெமூரியா) இல்லை என்பதற்கான ஆக்கச்சிறந்த மறுப்பா?

  பேசியவர்களின் பேச்சில் தரம் இல்லை என்று எழுதும் நீங்கள் உங்கள் எழுத்தில் திராவிடயிலாளருக்தகு தரம் குறைந்த அடைமொழிகள் கொடுத்து எழுதுவதேன்? வசைமொழிகளை நீங்கள் பயன்படுத்தும் நீங்களும் விசைகளை பெற்றுத்தான் ஆகவேண்டும்.

  குமரிகோடு என்ற சொல் இருப்பதாக கேள்வி மட்டும் பட்டிருக்கும் நீங்கள், ‘பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும்’ – ஐ ஒரு ஊராக கற்பனை செய்வது உங்கள் வாதத்திற்கு வலிமை கூட்ட மட்டுமே என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.

  இந்த ஆழம் தொடர்பான கேள்வி நீங்கள் மட்டுமல்ல, உங்களைப்போன்ற எதிர்ப்பாளர்கள் பலரும் கேட்கும் ஒரே கேள்வி.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*