6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஃபிப்ரவரி 24 – வெள்ளிகிழமை அன்று மாலை, சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயங்கி வரும் ஓராசிரியர் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு விழா, சென்னையில் தி.நகர் வாணிமகால், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து வந்த நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ் விவரங்களை அப்படியே தருகிறோம். (பார்க்க: ஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை)

[gview file=”http://www.tamilhindu.com/wp-content/uploads/STS6thAnniv.pdf”]

Tags: , , , , , , , , , , , , , , ,

 

4 மறுமொழிகள் 6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

 1. ஸ்வாமி விவேகனந்தரின் திருப்பெயரால் விளங்கும் சேவை நிறுவனம் கிராமப்புறங்களில் கல்விப்பணியில் ஈடுபட்டுவருவது பாராட்டத்தக்கது. அதன் ஓராசிரியர் பள்ளித்திட்டம் பற்றிய விவரங்கள் தெரியவில்லை எனினும் ஒரு ஆசிரியர் ஒரு பள்ளிக்குப் போதாது அதனை அதிகரித்திட இந்த அமைப்பினர் முன்வர வேண்டுகிறேன்.
  விபூதிபூஷண்

 2. snkm on February 22, 2012 at 3:54 pm

  அனைவரும் கலந்து கொள்ள முடியுமா ?. அழைப்பிதழ் உள்ளவர்கள் தான் கலந்து கொள்ள முடியுமா?. நன்றி.
  வாழ்க பாரதம்.

 3. B.R.ஹரன் on February 24, 2012 at 8:30 am

  திரு.விபூதிபூஷன்! ஓராசிரியர் பள்ளிகள் நீங்கள் நினைப்பது போல் நகரங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்கள் போன்றவை கிடையாது. குக்கிராமங்களில் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மட்டுமே நடத்தப்படுபவை. வெறும் பாடத்திட்டங்கள் மட்டுமல்லாமல், பண்பாட்டுக் கல்வி, ஒழுக்கம், தேச பக்தி, உடற்பயிற்சி ஆகியவையும் சேர்த்தே கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் 20 முதல் 30 குழந்தைகள் தான் இருப்பர். அவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியர் அந்தக் குறிப்பிட்ட கிராமத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார். கோவில் வளாகத்திலோ, அல்லது சமூகக் கூடங்களிலோ இல்லையென்றால் மரத்தடியிலோ தான் நடத்தப்படுகின்றன. மாலை வேளையில் 5.30 முதல் 8.30 வரை நடக்கின்றன. மேலும் அதிக தகவல்களுக்கு மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள “ஓராசிரியர் பள்ளிகள் என்னும் உன்னத சேவை” என்னும் கட்டுரையைப் படியுங்கள். அவசியம் ஆண்டுவிழாவிற்கு வாருங்கள். மேலும் தெரிந்து கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கு உதவுங்கள். நன்றி.

 4. B.R.ஹரன் on February 24, 2012 at 8:32 am

  திரு.SNKM, பொது மக்கள் அனைவரும் வந்து விழாவில் கலந்து கொள்ளலாம். அவசியம் வாருங்கள். தங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். நன்றி.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey