கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி

ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப் பட்ட கொடுமையை யூதர்கள் மறக்கவேயில்லை தங்கள் சந்ததியினருக்கு ஏராளமான சினிமாக்கள், டிராமாக்கள், ஆவணங்கள், மியூசியங்கள், புத்தகங்கள், நாவல்கள் மூலமாக மீண்டும் மீண்டும் மீண்டும் மிக அழுத்தமாக நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். வருங்கால யூதச் சந்ததியினர் தங்கள் முன்னோர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை மறந்து போனால் அவற்றை அலட்சியமாக நினைத்துத் தங்களை எதிர்காலத்தில் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் அதே கொடுமை நாளைக்கு அவர்களுக்கும் நிகழலாம் என்று எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள் யூதர்கள். வரலாற்றை மறப்பவர்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகளையே செய்வார்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டேயிருப்பார்கள்.

இஸ்ரேல் உருவான பிறகு அதனது விளையாட்டு வீரர்களைக் கொன்ற பயங்கரவாதிகளை விரட்டிச் சென்று அவர்கள் உலகின் எந்த மூலையில் எந்தப் பொந்தில் பதுங்கி இருந்தாலும் தேடிச் சென்று தன் வீரர்களுக்கு நீதி வழங்கிய துணிவான நாடு இஸ்ரேல். ஜெர்மனியின் ஹிட்லரின் கோர விளையாட்டுக்குக் கொடூரமாகப் பலியான கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்களின் படுகொலைக்குக் காரணமாக அரக்கர்களை அந்தப் படுகொலைகள் நடந்து, உலகப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்னாலும் கூடத் தொடர்ந்து தேடிச் சென்று அவர்களைப் பிடித்துத் தண்டித்து இறந்த உயிர்களுக்குப் பதில் சொன்ன ஒரு நாடு இஸ்ரேல்.

அப்படி ஒரு நாஜி போர்க்குற்றவாளியை, அவன் அர்ஜென்டினாவில் ஒளிந்திருக்கும் இடத்திற்கே சென்று, அர்ஜென்டினா அரசின் உதவியின்றியே அவனை இஸ்ரேலுக்குக் கடத்தி வந்து நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த கதையே தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் திரைப்படம் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். தொடர்ந்து சில சுவாரசியமான காட்சிகள், படமாக்கப் பட்ட விதம் குறித்து பார்ப்போம்.

இத்திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்டிருந்த படமாக இருந்தாலும் கூட, நாஜி போர்க்குற்றவாளி ஐக்மேனைத் தேடிக் கண்டுபிடிப்பதும் பின்னர் அவனை தந்திரமாக இஸ்ரேல் விமானத்தில் கடத்திக் கொண்டு வருவதும் மிகப் பிரமாதமாகப் படமாக்கப் பட்டுள்ளது. ஐக்மேனை ரகசிய இடத்தில் வைத்து மொசாட் ஏஜெண்டுகள் விசாரணை செய்கிறார்கள். விசாரணை செய்யும் ஏஜெண்டான மைக்கேல் ஒருவர் மட்டுமே ஆய்ஸ்விச் நகரத்தில் இந்த ஐக்மான் யூதர்களைக் கொல்வதற்கான பணியில் இருந்ததை நேரடியாகப் பார்த்த சாட்சி. அவரிடமே அவனைக் கடத்தி விசாரிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. தனது இளம் சகோதரனை அந்தப் படுகொலையில் இழந்த மைக்கேல் மிகுந்த மன உளைச்சலுடன் ஐக்மானிடம் விசாரணை நடத்த நேருகிறது. ஒரு உயிரையாவது ஒரே ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவேயில்லையா என்று கேட்கிறார்.

அடால்ஃப் ஐக்மான் எந்தவுத உணர்ச்சியிமில்லாத ஒரு மிருகம் போலப் பதில் சொல்கிறான். விசாரணை செய்யும் பொழுது அவன் இரக்கமேயில்லாமல் தன் பங்களிப்பை விவரிக்கிறான். அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் ஏஜெண்ட் அவனுக்கு முகத்தில் ஷேவ் செய்து கொண்டிருக்கிறாள். கத்தியால் ஒரே வெட்டு வெட்டியிருக்க முடியும். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு பாதியில் வெளியேறுகிறாள். விசாரணை செய்யும் ஏஜெண்ட் கை விலங்கால் அவனை கழுத்தை நெரித்துக் கொல்ல நினைக்கிறான், உணவில் விஷம் கலந்து கொல்ல நினைக்கிறார்கள், நிச்சயம் அர்ஜெண்டினா அரசு அவனைத் தப்பிக்க வைத்து விடும் அதற்குப் பதிலாகக் கொன்று விடலாம் என்று ஏஜெண்டுகள் நினைக்கிறார்கள். இருந்தாலும் பென் குரியன் அவனை உயிருடன் பிடித்துக் கொண்டு வந்து விசாரணை செய்து உலகத்திற்கு யூதர்கள் மீது நடந்த கொடூரங்களை உணரச் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

தலைவரின் சொல்லுக்குக் கட்டுப் பட்டு அவனைக் கொல்லாமல் அவனுக்கு உபச்சாரம் செய்ய வேண்டி வருகிறது. அனைத்து ஏஜெண்டுகளும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் எந்த நேரத்திலும் அர்ஜெண்டைனா போலீஸிடம் மாட்டிக் கொள்ள நேரும் இக்கட்டான நிலையிலும் தத்தளிக்கிறார்கள். அர்ஜெண்டினாவின் முக்கியமான அதிகாரிகள் நாசி ஜெர்மானியர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதிலும் கடத்தப் பட்ட ஐக்மேனைத் தேடி மீட்பதிலும் குறியாக இருக்கிறார்கள். இந்த சம்பவங்களையெல்லாம் தொகுத்து மிகுந்த நுட்பமான தகவல்களுடன் ஒரு நாவலாகப் பதிக்கிறார் இந்த ஆப்பரேஷனைத் தலைமையேற்று நடத்திய மொசாட் தலைவர்களில் ஒருவரான ஐஷர் ஹரல். அவர் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் மார்டின் பால்சாம் என்ற நடிகரும் ஏஜெண்ட் மைக்கேலாக நடிக்கும் டோபோல் என்ற நடிகரும் மிக உணர்ச்சிபூர்வமாக அந்தப் பாத்திரமாகவே மாறியுள்ளார்கள். படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய நடிகர்களுக்கும் ஹோலோகாஸ்டின் முழு விபரீதமும் கொடுமையும் முழுமையாக உணர்ந்தவர்களாதினால் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்கள்.

மொசாட் அனுப்பும் ஏஜெண்ட் மைக்கேலின் வசனங்கள் கூர்மையானவை. டோபோல் என்ற நடிகர் பிரமாதமாக அதைச் செய்திருக்கிறார். இவரை பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து விட்டது. ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ரோஜர் மூருக்கு உதவி செய்பவராக வருவார். எளிதில் மறக்க முடியாத ஒரு கவர்ச்சிகரமான முகம். மைக்கேலின் உதவி ஏஜெண்ட் தனக்கு இந்த ஆப்பரேஷனில் உடன்பாடு இல்லை என்றும் நம்மால் வரலாற்றைத் திருப்ப முடியாது என்றும் பழசை மறந்து விட்டு நாம் வாழ வேண்டும் என்றும் கோழையாக மனம் தளர்ந்து தன்னை விட்டு விடுமாறு கோருகிறான். மைக்கேல் அவனுக்கு இந்த ஐக்மேனை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் ஏன் தண்டிக்க வேண்டும் ஏன் நாம் வரலாற்று சோகத்தை மறக்கக் கூடாது என்பதை விளக்குகிறார்.

அந்த மொசாட் ஏஜெண்ட் மைக்கேல் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைதையையும் நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மக்களும் எழுதி வைத்து மனனம் செய்ய வேண்டிய வரிகள். அந்த உணர்வு இஸ்ரேலில் பென் குரியனிடமிருந்து, கோல்டா மெயரிடமிருந்து கடைசி கட்ட குடிமகன் வரை நிலவுவதால்தான் அந்தச் சிறிய நாடு இன்று நிமிர்ந்து நிற்க முடிகிறது. மிகப் பெரிய மக்கள் தொகையும் பரந்து விரிந்த நிலப்பரப்பும் இருந்தும் சுயமரியாதை இழந்து நிற்கும் இந்தியாவை இன்று சிறிய பங்களாதேசம் கூட மதிக்காததில் அதிசயம் இல்லை.

இந்தியா கடந்த 1300 வருடங்களாக காட்டுமிராண்டிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளது. இஸ்லாமியப் படையெடுப்புக்களினாலும் ஐரோப்பிய ஆதிக்க வெறி நாடுகளின் படையெடுப்பகளினாலும் தந்திரமான நுழைவுகளினாலும் இந்தியா தொடர்ந்து கடுமையாக பாதிக்கப் பட்டு வந்திருக்கிறது, துண்டாடப் பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்வமும் கலாச்சாரமும் கலை வளங்களும் தொடர்ந்து சூறையாடப் பட்டுக் கொள்ளை போயிருக்கிறது.

கொடூரமான பஞ்ச காலங்களிலும் கூட இந்திய மக்கள் உணவின்றி பஞ்சத்தில் கொத்துக் கொத்தாக இறந்த பொழுதும் பிரிட்டன் தன் படைகளுக்கும் மக்களுக்கும் இந்தியாவின் தானியங்களைக் கொள்ளையடித்துக் கடத்திச் சென்று கொழுத்திருக்கிறது, இன்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கும் செல்வ நிலைக்கும் அடித்தளமே இந்தியாவில் இருந்து அடிக்கப் பட்டக் கொள்ளைகளும் சுரண்டல்களுமே ஆதாரமாக விளங்குகின்றது.

இது வரலாறு.

அந்த வரலாற்றை நாம் ஒழுங்காக நினைவு படுத்திக் கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை. போலி மதச்சார்பின்மைவாதிகளினாலும் பொய்யான மழுங்கடிக்கப் பட்ட வரலாறே நமக்குப் பள்ளி கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. நாம் கொள்ளையடிக்கப் பட்ட சூறையாடப் பட்ட வரலாறு நமக்கு போதிக்கப் படவில்லை. நம் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், சினிமாக்காரர்களும், வரலாற்று அறிஞர்களும், பல்கலைக் கழகங்களும், சினிமாக்களும், நாவல்களும், இலக்கியமும், கலையும்,அருங்காட்சியகங்களும் இந்தியாவின் மீதான 1300 ஆண்டுகளுக்கும் மேலான தாக்குதல்களை போதிய அளவில் நமக்குச் சொல்லவேயில்லை. உரிய விதத்தில் பதியவில்லை.

ஆகவே வரலாற்று கொடுமைகளை மறந்து போன இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளையே எந்தவிதமான பொது வரலாற்று அறிவும் இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே தவறுகளையே இழைத்து வருகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் சுரண்டல்களைப் புரிந்து கொள்ளாத தவறினாலேயே ஒரு இத்தாலிய பெண்மணியிடம் இந்தியாவின் ஆளும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை. அவுரங்கசீப் பற்றிய கண்காட்சியைக் கூட நம்மால் நடத்த முடிவதில்லை. சென்னையில் அவுரங்க சீப் பற்றிய ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்த முயன்ற கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் (குறிப்பாக ராதா ராஜன் என்ற சமூக சேவகர்) போலீசாராலும் ஆர்காட்டு நவாப்பாலும் மிரட்டப் பட்டு அந்தக் கண்காட்சியை நடத்த விடாமல் தடுக்கப் பட்டனர்.

அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.

இந்தோ சீனி பாய் பாய் என்ற முட்டாள்தனத்தின் விளைவாக சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி இந்தியாவின் பகுதிகளை இழக்க நேர்ந்த வரலாற்றை நாம் அறியாமல் போனால் எதிர்காலத்தில் அதே தாக்குதலை சீனா இந்தியா மீது நிகழ்த்தும். ஆனால் நமது கம்யுனிஸ்டுகளும், தி ஹிந்து போன்ற ஊடகங்களும் அந்த வரலாற்றை நம்மிடமிருந்து மறைக்கவும் சீனாவுக்குத் துதிபாடவும் செய்கிறார்கள். அவர்களை நம்பி நம் வரலாற்றை நம் மக்கள் அறியாமல் போனால் மீண்டும் மீண்டும் அழியப் போவது இந்தியாவும் அதன் மக்களுமே. இஸ்ரேலிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் எவ்வளவோ உள்ளன. இந்த சினிமாவும் அவற்றில் ஒன்று. வரலாற்றை அறியாதவன் வரலாற்றுத் தவறுகளினாலேயே அழிக்கப் படுவான்.

அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.

ஆகவே வரலாற்றின் மாபெரும் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம் அதற்கான விலையை மீண்டும் மீண்டும் கொடுத்து வருகிறோம் இருந்தும் இன்று வரை நமக்கு புத்தி வரவில்லை. இது யார் கொடுத்த சாபம்? ஏனிந்த இழி நிலை இந்தியர்களுக்கு?

சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!

18 Replies to “கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2”

  1. விஸ்வாமித்திரரின் ஆதங்கம் புரிகிறது…..ஆனால் என்ன செய்வது? நாம்தான் மதச்சார்பின்மை என்ற பெயரில் காயடிக்கப்படுகிறோமே ? உடன்பிறந்தே கொல்லும் திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள் போன்றோரை சமாளிப்பதே பெரும் பாடாக இருக்கிறதே?

    பெருந்தன்மைக்கும் கோழைத்தனத்துக்கும் நூலளவே வேறுபாடு என்பது நமக்கு எப்போது புரியப்போகிறது ? நம் லட்சணத்துக்கு ஏற்றவாறுதானே நம்தலைவர்களும் இருப்பார்கள்?

    நெட்டை மரங்களென நிற்கும் மன்மோகன் ,எஸ்.எம்.கிருஷ்ணா , சிதம்பரம் போன்றோரின் பெட்டை புலம்பல்களை கேட்பதற்குத்தானே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது?

  2. AMR of kumdam jothidam has written a very similar article regarding about indian history on this weeks issue. Please read it also. We have to let our children know our past histories. Stop them from watching cinema. And read them amar chitra books about our histories.

    A very emotional article….

  3. திரு.விஸ்வாமித்திராவின் இரு கட்டுரைகளும் மிகுந்த வேதனையையும் துக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. ஹிந்துக்கள் எல்லோரும் இப்படி கோழையாக இருப்பதற்கு நிச்சயம் வெட்கபடவேண்டும். புத்தரினால் நம் மக்கள் ஷத்திரிய தர்மத்தை கொஞ் கொஞ்சமாக தொலைத்து பல அன்நியர்கள் உள்ள புக நாமே வழி செய்து கொடுத்தோம். காடடிக்கொடுத்தல் கூட்டிகொடுத்தல் என்று பாரத ரத்தத்தில் இல்லாத குணங்களை கற்றுக்கொண்டோம். புத்தர் முற்றும் துறந்து காவிஉடுத்தி சன்நியாசியாக வேண்டும் என்றா்.. பின் வந்த மஹாவீரர் காவியே வேண்டாம் கோமணம் போதும் என்றார். இஸ்லாமியரும் வெள்ளயரும் நம் நாட்டில் செய்த படுகொலைகள் mjpfஉலக சரித்திரத்திலேயே மிகவும் அதிகமானது. அதேபோல் இவர்கள் அடித்த கொள்ளையும் இஸ்லாமியர்கள் அழித்த கோவில்களும் கணக்கில் அடங்காதவை. பின்பு வந்த காந்தி அளவுக்கு மீறிய அஹிம்சையை போதித்து எளிதில் பெறவேண்டிய சுதந்திரத்தை காலம் கடந்து பெற்றோம். அதைவிட கொடுமை காந்தி வளர்த்துவிட்ட இஸ்லாமிய பாசம். பின்பு வந்த சிறுபான்மையிஸமும் செக்யூலரிஸமும் கொஞ்ம் நெஞசம் ஒட்டிக்கொண்டிருந்த ரோஷத்தையும் மழுங்கடித்து விட்டது. இத்தனை கொடுமைகளையும் பார்த்துகொண்டு நாம் கண்மூடி வாய்பேசாத ஜடங்களாக தான் இருக்கின்றோம்.
    இன்று சென்னையில் ஒரு இஸ்லாமிய கூட்டத்தின் போஸ்டரை காண நேர்ந்து. அதில் திப்பு சுல்தான் சுதந்திர போரில் உபயோகித்த பீரங்கிகள் என்ற படம் காணப்பட்டது. இப்ப்டி சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமியருக்கு மாநிலத்தில் ஏழு சதவிகித இடஒதுக்கிடும் மத்தியில் 10 சதவிகித இட ஒதுக்கீடும் வேண்டுமாம். அதை பற்றி பேசும் கூட்டத்தை பற்றிய அறிவிப்பு இது. இப்படியே போனால் ஹிந்துக்கள் மதம் மாறவேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்பதுதான் யதார்த நிலை. நமது முன்னோர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டவர்களை நாம் தண்டிக்காவிடில் நாமும் ரத்த வெள்ளத்தில் மிதக்கவேண்டியது தான்.

  4. சில சமயம் வெட்டி வேலை என்று தெரிந்தாலும் எழுதியாக வேண்டி இருக்கிறது. // நமது முன்னோர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டவர்களை நாம் தண்டிக்காவிடில் நாமும் ரத்த வெள்ளத்தில் மிதக்கவேண்டியது தான். // என்று வேதம் கோபால் எழுதுகிறார்.

    1. நமது முன்னோர்களை கொடுமைப்படுத்தியவர்களை நாம் தண்டிக்காவிடில்… என்று ஈ.வெ. ராமசாமியும் வீரமணியும் கருணாநிதியும் பேசுவதை வேதம் கோபாலோ, மற்றவர்களோ, தமிழ் ஹிந்து தளமோ ஆதரிக்கிறீர்களா?
    2. பேரிலிருந்து வேதம் கோபால் ஒரு ஆண் என்று யூகிக்கிறேன். நமது முன்னோர்களை ஏறக்குறைய அடிமையாக வைத்திருந்தவர்களை நாம் தண்டிக்காவிடில் என்று உங்கள் மனைவியோ, அம்மாவோ, சகோதரிகளோ, மகள்களோ, பக்கத்து வீட்டுப் பெண்களோ உங்களை அடிக்கக் கிளம்பினால் பேசாமல் கன்னத்தைக் காட்டிக் கொண்டிருப்பீர்களா?
    3. எல்லாம் கிடக்கட்டும், அலாவுதீன் கில்ஜியை எப்படி தண்டிக்கப் போகிறீர்கள்?

  5. காஷ்மீர் பண்டிட்கள் விரட்டபட்டபோதும் அதன் பின்னரும் நமது வானொலி நிலையங்கள் செய்தியில் பாகிஸ்தான் பெயரைச் சொல்லத் துணிவில்லாமல் அண்டைநாட்டின் பயங்கரவாத தூண்டுதல்களை கண்டிப்பதாக கதைவிட்டுகொண்டிருந்தது. மானம் கேட்ட ஊடகங்கள் ஹிந்து அடிப்படைவாதத்தை பாடுபொருளாக்கி இஸ்லாமிய படு பயங்கரவாதத்தை கண்டிக்க துணிவில்லாமல் டாக் ஷோ நடத்தின. இஸ்ரேல் பெயரை சொன்னால் அரபு நாடுகள் கோபம் கொள்ளும் என்று டில்லி அரசாங்கம் பெட்டைத்தனமாய் நின்றது.

  6. திரு.ஆர்.வி. அவர்களே எனது மறுமொழி கடைசி வாசகம் தவறானதுதான். அதை தமிழ் ஹிந்து எடிட் செய்து இவ்வாறு எழுதவும் நமது முன்னோர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கவைத்த கொடியவர்களின் சரித்திரத்தை மறைப்பது மிகவும் தவறானது. இத்தோடு நில்லாமல் அவர்களை உத்தமர்களாக சித்தரித்து சரித்திரம் எழுதுவது சினிமாபடம் எடுப்பது போன்றவற்றை நிச்சயம் கண்டிக்கவேண்டும். தீவிரவாதத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள கைதிகளின் தண்டனையை நிறைவேற்றாவிடில் தீவிரவாதம் தொடருமேயன்றி குறையாது. அது சரி பலமுறை நீங்கள் கட்டுரையை பற்றிய தங்கள் கருத்தை கூறுவதைவிட மற்றவர் கூறிய கருத்து நடையில் குற்றம் காண்பது என்ற ஒரு பாணியை கையாளுவதை தொடர்ந்து செய்கிறீர்கள். அதற்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

  7. வேதம் கோபால் கூறியதை ஏற்று கொள்ள முடியாது, அதே சமயம் ஈ.வெ.ரா கூட்டம் கூறுவதையும் இதையும் ஒப்பிட முடியாது. அந்த கூட்டம் வரலாற்றை திரித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதே ஒரு வெறுப்பை உண்டாக்கிவிட்டனர். இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீது நடத்தியது வரலாறு. ஆனால் அதற்கு இன்று உள்ள அனைத்து இஸ்லாமியர்களை குற்றம் கூற முடியாது. நாம் குற்றம் சொல்ல வேண்டியது, நமது அரசியல்வாதிகளையும் அவர்களை நம்பும் மக்களையும் தான்

  8. வேதம் கோபால், // எனது மறுமொழி கடைசி வாசகம் தவறானதுதான் // உங்கள் போன்றவர்களின் நேர்மையும் பெருந்தன்மையும்தான் தமிழ் ஹிந்து தளத்தின் பலம். சின்னத் தவறைக் கூட ஒத்துக் கொள்ளாமல் வெட்டி வாதம் செய்பவர்களைக் கண்டு களைத்துப் போயிருக்கும் என் போன்றவர்களுக்கு உங்கள் அணுகுமுறை புத்துணர்ச்சி தருகிறது. வாழ்த்துக்கள்!

  9. அன்பானவர்களே
    எமது சிவபூமியான ஈழத்தில் ஒரு இனப்பேரழிவையே ஏற்படுத்திய அரசின் தலைவர்கள் இன்று இந்தியாஉட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் உலா வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் வேத நிந்தனை செய்துழல்கின்றவர் என்று சம்பந்தரால் நிந்திக்கப்பட்ட பௌத்த பிக்குகளுக்கு தமிழ் நாட்டில் இடம் கொடுக்கிறார்கள். அது மட்டுமன்று.தமிழர்கள் வாழ்கின்ற கரையோரப்பகுதிகள் எல்லாம் சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாளடைவில் இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கே பேராபத்தாய் முடியும். ஏற்கனவே சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வேரோட துவங்கியுள்ளது.தமிழக இந்துப்பெருமக்களே சிந்தியுங்கள்.அதிவிரைவாக செயல்படுங்கள்.நன்றி.

  10. அருமையான பதிவு. மறுமொழி இடுபவர்கள் நமது வீடுகளில் நமது குழன்தைகளுக்கு நம் நாட்டின் சரியான சரித்திரம் கற்பிக்க வேண்டும். தொடர்ந்து நமது பகுதிகளில் இந்தப் பணியை பரவலாக செய்ய வேண்டும். இதை சீரிய சாக எடுத்துக் கொள்வோம்

  11. Even though Hitler is very cruel fellow, he said that those who didn’t know thier HIstory are bliend even they have eye sight and duff even though they hearing capacity.

    Here,in hindus,we forget our history. our people are all watching movies, TV serials and joking. awareness less among Hindus.

    But, Muslims , most of the people did not watch movies, TV serials and had religious eduction where as Hindus not having religious eduction.

    I never seen any muslim drunkred and fallen on streets. only Hindus or some chirstians are drunkard and fallen on streets.

    If anythings says about Hindusiam, then politcians and news papers crying fundamentalisam growing among Hindus.

    waste of grieving about incidents. Like Muslims and chirstians , we create vote bank. Then only all problem fully solved.

  12. Recently I read one book by N.S.Rajaram “ A Hindu view of the world” available with Ramakrishan Library –Mylapore (294.5) Very good book one must read. Given below some points translated and given in tamil.
    அரசியல் என்பது ஷத்திரிய குணம் கொண்டவர்கள் கையில் இருக்கவேண்டும். ஆனால் இன்று அது தான் வாழ்ந்தால் போதும் என்ற பச்சோந்தி சுயநலவாதிகளின் ஆக்ரமிப்பு கூடாரமாக மாறிவிட்டது. வலது சாரி போக்கு இல்லாவிட்டால் மூளை செயல் இழந்ததாகவே கொள்ளப்படும். பாரத்தில் எல்லாமே கீப் லெப்ட் தான் எனற விதி எழுதப்பட்டுள்ளது. அரசியலில் ஷத்திரிய பலம், வேகம் என்றால் தேகபலம் கொண்டு தாக்குவது அல்ல. மனோ பலத்துடன் தற்காலிக தீர்வுகளை சொல்லி பிரச்சனைகளிலிருந்து விலகாமல் ஒருவருக்கு இதனால் தங்களது பெயர் புகழ் குந்தகப்படும் என்று எண்ணாமல் சமுகத்தின் நீண்டகால எதிர்விளைவுகளை சிந்தித்து உருதியான முடிவு எடுக்கவேண்டும்.
    ஒத்துபோதல் விட்டுக்கொடுத்தல் என்பன தேவைதான் இது பிரச்சனைகளின் திவிரத்தை பொறுத்து எடுக்கவேண்டிய முடிவு. ஆனால் நிரந்தரமாக எல்லா பிரச்சனைகளுக்கும் இதுதான் கொள்கை என்ற தீர்மானத்தில் சுதந்திர பாரதம் இன்றுவரை செயல் பட்டு பெரும்பான்மை ஹிந்துகளை கோழைகளாக மாற்றியுள்ளது. இதனால் பிரச்சனைகள் தீராமல் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. இப்படி தீவிரமாகவே இருந்தால்தான் அவர்களது சுயதேவைகளை நிறைவேற்றிக்கொண்டு தொடர்ந்து பதவி வகிக்கலாம். இப்படி ஆரிய தர்மமான ஷத்திரிய குணம் இல்லாதவர்கள் கையில நாடு இருந்தால் அதர்மம் தான் தலைவிரித்தாடும்.
    Cont…

  13. முதலில் நாம் சுதந்திரம் பெற்றதும் நேரு தன்நம்பிக்கை இல்லாமல் மௌன்ட்பாட்டனையே கவர்னர் ஜெனரலாக பதவி வகிக்கும் படி வற்புறுத்தினார். இதனால் நாடு பிரிந்தது. தன் பிணத்தின் மீதுதான் நாடு பிரியமுடியும் என்று சவால்விட்ட காந்தி உயிரோடு இருக்கும் பொழுதே அதை பார்ததோடு மட்டும் அல்லாமல் இங்கிருந்து இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடவேண்டும் என்ற அம்பேத்கர் முதல் பல தலைவர்களின் வற்புறுத்துதலுக்கு செவி சாய்காமல் அவர்களை கட்டி தழுவினார். அதன் பலனை நாம் இன்று வரை அனுபவித்து வருகிறோம். பாக்கிஸ்தான் காஷ்மீரை தாக்கிய பொழுது தீம்மையா என்ற மேஜர் தீரத்துடன் நம்பிக்கையுடன் ஆக்கிரம்மிப்பாளர்களை விரட்டிக் கொண்டிருக்கையில் மௌன்ட்பாட்டன் அறிவுறுத்ததினால் சண்டையை பாதியில் நிறுத்தியதோடு நில்லாமல் சர்தார் படேல் மற்றும் பல தலைவரிகளின் பேச்சை மீறி பிரச்சனையை ஐ.நா. சபைக்கு கொண்டு சென்றனர். இன்று வரை இது தீராத தலைவலியாக உள்ளது. 1962 இல் இதேமாதிரி சைனாவின் ஆக்ரமிப்பின்போது கிருஷ்னமேனனின் தூண்டுதலினால் நமக்கு வான்வழி தாக்குதல் கொண்டு சீனர்களை விரட்டும் பலம் இருந்தும் அதைசெய்யாமல் சமாதானம் என்றுகூறி பிடித்த எல்லைகளை மீட்காமல் பஞ்ச்சீலம் என்ற உடன்பாட்டை ஏற்ப்படுத்தி அது இன்றுவரை ஒரு எல்லை பிரச்சனையாக உருவெடுத்து வந்துள்ளது.
    cont..

  14. இப்படி மறந்துவிட்ட சரித்திரத்தை நினைவு படுத்துவதும் மறைக்கப்பட்டுள்ள சரித்திர நிகழ்வுகளை வெளி கொண்டுவருவதும் உத்மர் வேஷம் போடும் போலிகளை மக்கள் மன்றத்தில் நிறுத்த முடியும். சமீபத்தில் (Gautier FrancoisFfff) என்பவர் பூனாவில் இந்திய உண்மை சரித்திர நிகழ்வுகளை பற்றிய விளக்கங்களோடு கூடிய வரை படங்கள் நிறைந்த (museum) ஒன்றை மீகுந்த பொருள் செலவில் கட்டிக்கொண்டிருக்கிறார். இவர் பிரான்சில் பிறந்து இந்தியாவை தாயகமாக கொண்டவர். அவர் வலைதளத்திலிருந்து சில செய்திகள் எனது அடுத்த பதில் உரையில். இந்திய அரசாங்கமே செய்யவேண்டிய ஒன்றை கட்டபொம்மன் வ.வு.சி ஜான்சி ராணி வீர சிவாஜி என்று திரைபடங்கள் எடுத்த நாம் இப்பொழுது அக்பர் ஔரங்கசீப் பாபர் தீப்சுல்தான் என்று நாட்டை சூரையாடியவர்களை உத்மராக சித்தரித்து படம் எடுத்து கொண்டிருக்கிறோம். வாழ்க ஸெக்யூலரிசம் ?
    cont…

  15. எனது மறுமொழியின் இந்தவரியை இப்படி படிக்கவும். இந்திய அரசாங்கமே செய்யவேண்டிய ஒன்றை இந்தியாவில் பிறக்காத ஒருவர் செய்கிறார்
    cont….

  16. India has been largely maligned by distorted information and misrepresentation. No records or schoolbooks have a correct account of the Hindu Kush genocide, where millions were slaughtered. Exactly how many were killed isn’t known but that was India’s holocaust. Yet everyone knows about the Jewish Holocaust,” said Gautier. “India’s history, falsely propagated by the British, Christian missionaries, and western media, has made me realize that we need to show Hindu civilization in its correct and true context. For the sake of our children and the generations to come, and the world!”
    The first exhibit to be set up will honor the life and times of Chhatrapati Shivaji Maharaj. India’s rich cultural heritage will be portrayed through the Vedas. The museum will document and exhibit the various invasions from Alexander the Great to the Arabs, the Goa Inquisition, the ongoing massacre of thousands of Kashmiri Hindus by Muslim terrorists, the persecution of the Syrian Christians, Buddhism’s rise and decline, India past and current. Highlighted too, will be India’s glorious contribution of yoga and Ayurveda to the world community.
    “The museum will be there for our children, for them to know that regardless of the fact that the British broke the backbone of our agricultural system and caused the deaths of millions of Indians from famine, and despite the Muslim onslaught, India prevailed and remains prosperous,” added Gautier, a practicing Hindu who was spiritually influenced by the writings of Sri Aurobindo.(1872-1950). He has since joined forces with spiritual leader Sri Sri Ravi Shankar, who supports him in his quest for the truth about India’s past. Gautier estimated that it would take several years till completion of the museum.

  17. #/ஹிந்துக்கள் எல்லோரும் இப்படி கோழையாக இருப்பதற்கு நிச்சயம் வெட்கபடவேண்டும்#/

    ஹிந்துக்கள் கோழைகள் அல்ல வேதம் கோபால் சார்,ஒரு ஜாதி கலவரம் வந்தால் இதே கோழைகள் என்ன ஆட்டம் போடுகிரர்க்கள் என்பதை பாருங்கள், நாம் கோழைகள் அல்ல ஆனால் நமது வீரமும் கோபமும் வேறு வகைகளில் திசை திருப்பபடுள்ளது ஜாதிகழலும் கட்சிகளாலும் கோமாளி சினிமா நடிகர்களாலும் நாம் திசை திருப்பபட்டுள்ளோம் , இந்த பாலைவன கட்டுமிரண்டிகளுக்கே இவ்வள்ளவு இர்ருக்குன்னா ,ஆண்டாண்டு காலமாக இந்த தேசத்தை கட்டியாண்ட விர வம்சவழிகளான நம்மக்கு எவுல்லோ இர்ருக்கும் நம்மை வழி நடத்தி செல்ல நல்ல COMMANDING GENERALS தேவை அவ்வளவுதான்

    நமஸ்காரம்
    Anantha Saithanyan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *