முகப்பு » அனுபவம், சமூகம், நிகழ்வுகள், பொது

அமெரிக்காவிலும் ஆலமரம்

March 9, 2012
-  

மெரிக்க ஐக்கிய நாட்டின் வட கோடியில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு மாநிலம் மேரிலாண்ட். நாட்டின் தலைநகரமான வாஷிங்டனை ஒரு எல்லையாகக் கொண்டிருக்கும் இதில் லான்ஹம் என்ற சின்ன நகரில் இருக்கிறது சிவாவிஷ்ணு கோவில். வாஷிங்டனிலிருந்து பால்ட்டிமோர் நகருக்கும் செல்லும் சாலையில் 12-வது மைலில் பளீரென்ற வெண்ணிற ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவில் அமெரிக்காவில் மிகப் பிரசித்தி பெற்றது. 80களின் இறுதியில் மிகச் சிறிய அளவில் ஒரு வீட்டில் துவக்கப்பட்ட இது, இன்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு முக்கியக் கோவிலாக வளர்ந்திருக்கிறது. நாட்டின் தலைநகருக்கு அருகிலிருப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பல அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் வருகை தந்திருக்கிறார்கள்.

70 அடி ராஜகோபுரத்துடன் இந்தக் கோவிலை வடிவமைத்து நிர்மாணித்திருப்பவர் புகழ்பெற்ற டாக்டர் கணபதி ஸ்தபதிகள்.

மாமல்லபுரச்  சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்; கோவில் கட்டிடக் கலை நிபுணர்தமிழ்நாட்டிலிருப்பதைப் போலவே ஆகமவிதிகளின்படி அமைக்கப்பட்டிருக்கிறது இந்தக் கோவில். கோபுரத்தின் தளங்களில் தக்‌ஷிணாமூர்த்தி, வராஹர், சுதர்ஸன ஆழ்வார், சங்கர நாராயணர் போன்ற சிற்பங்கள் கம்பீரமாக இருந்தாலும் நம்மைக் கவர்வது காளையும் யானையும் ஒரே சிற்பத்தில் தெரியும் ரிஷபகுஞ்சரச் சிற்பம்தான். சிவபெருமானும் வெங்கடேசப் பெருமாளும் இரண்டு முக்கிய சன்னதிகளாகயிருந்தாலும் ஒரே ராஜ கோபுரத்துடன் இருக்கும் நுழைவாயில்

                           Sivaaya Vishnuroopaaya Siva Roopaaya Vishnave |

                           Sivascha Hridayam Vishnu Vishnoscha Hridayam Siva |

                           Abhedham Darshanam Gnyanam || 

என்ற வாசகங்களுடன் வரவேற்கிறது. நுழைவாயிலில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அந்த அழகான கதவுகளுக்கு அருகில் ஒருபுறம் கீதா உபதேசம், மறுபுறம் ஞான உபதேசம் சிற்பங்கள்.

ட்பிரகாரச் சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்சனேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகுந்த அழகோடு நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கப்பட்டுவருகிறது. படு சுத்தமான பளிங்குத் தரையில், குளிர்கால மாதலால் உட்கார்ந்து பிரார்த்திக்க வசதியாக கார்பெட்கள் இடப்பட்டிருக்கிறது; சன்னதிகளில் ஆப்பிளும், பாதாம் பருப்பும் தான் நைவேத்தியம். அர்ச்சனை, பூஜை கட்டணங்கள் உள்ளூர் பண மதிப்பிலேயே. சற்று அதிகம் தான். ஆனால் நம்ம கோவிலுக்குத்தானே என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.. திட்டமிட்ட அட்டவணையுடன் எல்லா கால அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறுகின்றன. இங்குள்ள ஐயப்பன் அமெரிக்கக் கோவில்களிலிருக்கும் ஐயப்ப ஸ்வாமிகளில் முதல்வர் என்பதால் பக்கத்து மாநிலங்களிலிருந்து இருமுடிகட்டி விரதமிருந்து வருகிறார்கள். நல்ல குளிரிலும் பல குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருப்பதும் அவர்கள் கோவிலுக்குள் நுழையும் முன் நீரில் கை கால் சுத்தம் செய்துகொள்வதும் பார்க்கச் சந்தோஷமாகயிருக்கிறது.

 

கோவிலின் தலைமை அர்ச்சகர் நாராயணச்சார். கர்நாடக மாநிலத்திலிருந்து வந்திருக்கும் இவர் இங்கு கடந்த 30 ஆண்டுகளாக இங்கிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் பேசும் இவரின் கீழ் 10 அர்ச்சகர்கள் சுழற்சி முறையில் எல்லா சன்னதிகளிலும் பூஜை செய்கிறார்கள். நாராயணச்சார் சம்ஸ்கிருத வித்வான், சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் ஏம் ஏ பட்டம் பெற்றவர். 2009இல் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ்ஸைப் போலத் தீபாவளிப் பண்டிகையும் கொண்டாட வேண்டும் என்ற அமெரிக்க வாழ் இந்தியர்களின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்ற போது அதைத் துவக்கி வைக்க அழைக்கப்பட்ட ஒரே இந்து அர்ச்சகர் இவர். அதிபர் ஒபாமா நாட்டின் வளர்ச்சிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசிய அந்த நிகழ்ச்சியில் இனி ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படும் என அறிவித்து அதற்கான அதிபரின் ஆணையையும் வெளியிடும் அந்த வெள்ளை மாளிகை விழாவில் புல் சூட்டிலிருக்கும் அத்தனை பேருக்கிடையில் வெண்பஞ்சகச்சத்தில் பளிச்சன்று நெற்றியில் திருமண்ணுடன் நாராயணச்சார் நிற்பதை YOU TUBEல் பார்க்கலாம்.  நாராயணச்சார் தனது கணிரென்ற குரலில்

ருளுலிருந்து ஓளியை நோக்கி என்ற பொருளில் சொல்லப்பட்ட

அஸதோ மா சத் கமய, தமஸோ மா ஜோதிர் கமய, ம்ருத்யோர்மா அம்ருதம் கமய, ஓம் சாந்தி சாந்தி சாந்தி ||

 असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय ।  ॐ शान्तिः शान्तिः शान्तिः ।।

ஸ்லோகத்தைச் சொல்ல அதிபர் ஒபாமா ஐந்து முக வெள்ளி விளக்கை மெழுகுதிரியினால் ஏற்றிய பின் தீபாவளி விழா துவங்குகிறது.. 200 வருடங்களாக கிறித்துவப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வைப் பதிவு செய்த பெருமை இவருடையது. ”என் வாழ்வின் சந்தோஷமான தருணம் அது” என்கிறார். இவருக்கு மட்டுமில்லை ஒவ்வொரு இந்துவுக்கும் தான்.

மது கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லகலாச்சார வளர்ச்சிக்கு உதவும் இடமாகவும் இருக்க வேண்டும் என்ற நமது மரபிற்கேற்ப இந்தக் கோவிலை நிர்வகிக்கும் SSVT டிரஸ்ட் அடுத்த தலைமுறைக்கும் இந்த ஆர்வம் தொடரப் பல பணிகளைச் செய்து வருகிறார்கள். இந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளைத் தவிர இசை நடன வகுப்புகளும் அதில் பயின்ற இளைஞர்களின் நிகழ்ச்சிகளும் மட்டுமில்லாமல்ஆன்மிக வகுப்புகள், செமினார்கள் என பலவற்றை நடத்துகிறார்கள். கோவிலை இன்னும் பெரிதாக்க வளர்ச்சித் திட்டங்கள்,நிதி ஆதாரங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வகைப் பணிகளை பெரிய நிறுவனங்களில் பதவிகளிலும்அமெரிக்க அரசுப் பணிகளிலும் இருக்கும் இதன் கெளரவ உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்கிறார்கள்.

து போல் அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் பல கோவில்கள் (குறைந்த பட்சம் இரண்டாவது) சிறப்பாக இயங்குகின்றன. சில கால் நூற்றாண்டையும் கடந்தவை. இன்னமும் புதிய கோவில்கள் பல எழும்பிக் கொண்டிருக்கின்றன.

ம் மதம் ஆலமரம் மாதிரி. யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம். அது தன் விழுதாலேயே தொடர்ந்து அழியாமல் வளர்ந்து கொண்டேயிருக்கும் எங்கேயிருந்தாலும் .நம்ம தெய்வங்களை விடாது பிரார்த்தித்தால் போதும்“ என்று ஒரு முறை பராமாச்சாரியார் சொன்னது இதைத்தானோ?

~~0~~

குறிச்சொற்கள்: , , , , , , ,

 

10 மறுமொழிகள் அமெரிக்காவிலும் ஆலமரம்

 1. ss on March 9, 2012 at 3:16 pm

  ஹை இதே இந்தியாவா இருந்தா எங்க மக்கள் சிக்குலர் கோஷம் போட்டு ஓட ஓட விரட்டிடுவாங்க.. பண்பாடு,கலாசாரம் ஆகியவற்றில் முன்னோடி எங்கள் மக்கள்… பகுதரிவுன்னா என்னனே தெரியாம வரட்டுவாதம் பேசி வெரட்டிவிடுவது தலையாய கடமையா வெச்சுருகோம். இங்க அப்டி பண்ணா அதிபராவது, ஆடுகுட்டியாவது மகனே செத்தான்….

 2. ss on March 9, 2012 at 3:17 pm

  ப்ளீஸ் நாங்களும் சிக்குலர் தான் ச்சே ச்சே செகுலர் தான்… மன்னிசிகிடுங்க

 3. பெருந்துறைப் பேராளன் on March 10, 2012 at 6:17 am

  அமெரிக்க வெள்ளை மாளிகையில் 200 வருடங்களாகக் கிறிஸ்துவப் பாடல்கள் மட்டும்தான் ஒலித்தன. இப்போது வேதமும் ஒலிக்கிறது. தீபாவளி கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி தரும் நல்லதொரு செய்தி.

  நமது கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; கலாச்சார வளர்ச்சிக்கு உரிய இடங்கள். கலை = அறிவு; ஆச்சாரம் = ஒழுக்கம். அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்க்கப் பயன்பட்ட இடங்கள். ஆனால், இன்று தமிழகத்தின் முக்காலே மூணு வீசம் கோயில்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள், கொஞ்ச நஞ்சம் மனிதர்களிடம் இருக்கும் ஒழுக்கத்தையும் அழித்தே ஆகவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு நடத்தப்படுபவை. வளரும் பிள்ளைகள் பாவம்.

  நம் சமயம் ஆலமரம் மாதிரி; தன் விழுதாலேயே தொடர்ந்து அழியாமல் வளர்ந்து கொண்டேயிருக்கும், எங்கேயிருந்தாலும். தெய்வத்தை விடாது பிரார்த்தித்தால் போதும். நல்லதே நடக்கும். எல்லோரும் இறைவனை அவரவர் மனதில் குடிகொள்ள வேண்டுவோமாக.

 4. arun on March 10, 2012 at 12:00 pm

  If the same thing happen in India (if they start with christian prayer r muslim ) most of u will start to boil know

 5. பெருந்துறையான் on March 10, 2012 at 3:32 pm

  200 வருடங்களாக கிறிஸ்துவப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வு…

  கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. கலாச்சார வளர்ச்சிக்கு உதவும் இடம்… கலை = அறிவு; ஆச்சாரம் = ஒழுங்கு. அறிவை விதைத்து ஒழுங்காக வளர்க்கும் இடம் கோயில்.

  நம் சமயம் ஆலமரம் மாதிரி. அது தன் விழுதாலேயே தொடர்ந்து அழியாமல் வளர்ந்து கொண்டேயிருக்கும். எங்கேயிருந்தாலும் கடவுளை விடாது பிரார்த்தித்தால் போதும்…

  இனி ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படும் என அறிவித்து அதற்கான அதிபரின் ஆணையையும் வெளியிடும் அந்த வெள்ளை மாளிகை விழா…

  இத்தனையும் மனத்துக்கு மகிழ்ச்சி தரும் அதே வேளை…

  நம் தமிழகத்தின் பல கோயில்களில் நடத்தப்படும் பல நிகழ்ச்சிகள் ‘கலாச்சாரத்தைச் சீரழிக்காமல் விடமாட்டோம்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடத்தப்படுவது வேதனை.

 6. Rajesh on March 10, 2012 at 4:31 pm

  All Hindus
  Must See the Following Site : http://richardarunachala.wordpress.com/

  All tamil Christians Must see the following site
  http://hinduvakanaaan.blogspot.in

 7. பெருந்துறையான் on March 16, 2012 at 8:48 pm

  @ //If the same thing happen in India (if they start with christian prayer r muslim ) most of u will start to boil know//

  Indians do not oppose Prayers Of Christianity or Islam in common places. Instead, we do not accept neglecting Hindu Prayers.Here is no boiling, etc.

 8. muktimagizhan on July 10, 2013 at 1:16 am

  படித்து மகிழ்ந்தேன்.
  ராஜ கோபுரத்துடன் இருக்கும் நுழைவாயில் தன்னில் அமைந்திருக்கும் வட மொழி வாசகம் நன்று. சின்ன வயதில் அம்மா சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது :
  அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு.

 9. க்ருஷ்ணகுமார் on July 10, 2013 at 12:19 pm

  க்ஷமிக்கவும்.

  ஹரியும் சிவனும் ஒண்ணு என்று சொல்லும் பரிபக்வம் உள்ளவர்களிடம் பரநிந்தனை என்பது இருக்கலாகாது.

  ஆகவே அந்த சொற்றொடர்

  அரியும் சிவனும் ஒண்ணு
  அரி யாதவன் வாயிலே மண்ணு

  என்ற படிக்கு புரிந்து கொளல் சாலத்தகும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*