இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)


ன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பாரினில் ஏதொரு நூல் இது போலே?

என்று மகாகவி பாரதியார் உபநிஷதங்களின் பெருமையை எடுத்துரைத்தார். தொன்மையான தத்துவ ஞான களஞ்சியமான உபநிஷதங்கள் இந்து ஞான மரபின் ஆதார நூல்களாகும். இந்த ஞானச் செல்வத்தினை வாராவாரம் தொலைக்காட்சித் தொடர் வடிவில் வழங்கும் ஒரு சீரிய முயற்சி “உபநிஷத் கங்கா“. இதன் முதல் பாகம் மார்ச்-11 அன்று தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அகில உலக சின்மயா மிஷன் அமைப்பின் தலைவரான சுவாமி தேஜோமயானந்தாவின் எண்ணத்தில், பழைய “சாணக்கியர்” தொடர் புகழ் சந்திரபிரகாஷ் த்விவேதியின் இயக்கத்தில், பல தேர்ந்த கலைஞர்களின் பங்களிப்புடன் நேர்த்தியாகாத் தயாரிக்கப் பட்டுள்ளது இந்தத் தொடர். வாராவாரம் ஞாயிறு காலை 10 மணிக்கு தூர்தர்ஷனில் வரும். இப்போதைக்கு ஹிந்தியில் வருகிறது. விரைவிலேயே மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒளிபரப்பாகும் என்று நம்புவோம். நசிகேதனையும், சத்யகாம ஜாபாலனையும், யாக்ஞியவல்கியரையும், மைத்ரேயியையும் ஞானத் தேடல்களின் பாதைகளின் ஊடாக இளைய தலைமுறையினருக்கு இந்தத் தொடர் அறிமுகப் படுத்தும் என்று எதிர்பார்ப்போம்.

மது பண்பாட்டில் ஒவ்வொரு மாதத்திலும் பண்டிகைக்கும் கோலாகலங்களுக்கும் குறைவிருக்காது. மார்ச்-7ம் தேதி மாசி மகம் வெகு விமர்சையாக தமிழகத்தின் எல்லா திருக்கோயில்களிலும் தலங்களிலும் கொண்டாடப் பட்டது. கும்பகோணம், திருச்செந்தூர், மன்னார்குடி என்று பற்பல கோயில்களில் மாசி மாதத் திருவிழாவும், தேரோட்டமும் களைகட்டியது.

தே மாசி மக பௌர்ணமி நாளில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தில் பெண்கள் கூடி ஊரெங்கும் பொங்கல் வைக்கும் திருவிழாவும் நடைபெற்றது. திரைப்பட நடிகையர், அரசியல்வாதிகள் வீட்டு மகளிர், உயர் அதிகாரிகள் தொடங்கி ஏழை எளிய கிராமத்துப் பெண்கள் வரை மூன்றரை லட்சம் பெண்கள் இதில் கலந்து கொண்டனர். உலகத்திலேயே அதிக அளவில் பெண்கள் மட்டுமே கூடி நடத்தும் நிகழ்வு என்று புகழ்பெற்ற திருவிழா இது. இந்த வருடம் இந்தத் திருவிழாவின் போது நடுத்தெருவில் பொங்கல் வைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு 1000 பெண்களை திருவனந்தபுரம் காவல்துறை கைது செய்து அவர்கள் மீது “தெருவில் பொங்கல் வைக்கக் கூடாது” என்ற தடை உத்தரவை மீறியதற்காக வழக்கும் பதிவு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிறகு முதலமைச்சர் உம்மன் சாண்டி தலையிட்டு கைது செய்யப் பட்ட பெண்கள் விடுவிக்கப் பட்டனர் என்று தெஹல்கா செய்திக் கட்டுரை கூறுகிறது.

செய்தி எழுதுவதும் கிறிஸ்துவர், அமைச்சரும் கிறிஸ்துவர், போலீஸும் கிறிஸ்துவர், முதலமைச்சரும் கிறிஸ்துவர். தொடர்ந்து காங்கிரஸுக்கு வாக்களிக்கும் கேரள இந்துக்களுக்கு நல்லா வேணும் என்று கொதிக்கிறார் கேரள நண்பர் ஒருவர்.

(நன்றி:  ‘தி இந்து’ நாளிதழ்)

பாகிஸ்தானி்ன்  சிந்த் மாகாணத்தில் இந்துப் பெண்களை  கடத்தி மதம் மாற்றுவது சமீபகாலங்களில்  மிகவும் அதிகரித்துள்ளதாக  பாகிஸ்தான்  மனித உரிமை கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.   சிறுமிகள்,  திருமணமான பெண்கள்  உட்பட 25-30  இந்துப் பெண்கள் ஒவ்வொரு  மாதமும் இவ்வாறு  கடத்தப் படுகிறார்கள்.   காரைக் கால் முதல்  கராச்சி வரை,  இஸ்லாமிய  ஆதிக்கம் அதிகரிக்கும் இடங்களில்  எல்லாம்  இத்தகைய  நிகழ்வுகள்  நடப்பது  ஏதோ  தற்செயல் அல்ல.  இந்துக்கள் மத்தியில் பீதியையும்   பாதுகாப்பின்மையையும்   திட்டமிட்டு   உருவாக்க இந்த வழிமுறை  இஸ்லாமிய  மதவெறியர்களால்  பயன்படுத்தப் படுகிறது   என்பது நிதர்சனம்.  பாதிக்கப் பட்ட  இந்துக்கள்  செய்து வரும்  போராட்டம்   ஆட்சியாளர்களிடையே  எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.

ங்களாதேசி  இந்துக்கள்  கடந்த பல பத்தாண்டுகளாக  தொடர்ந்து  படிப்படியாக திட்டமிட்டு  இன அழிப்பு  செய்யப் பட்டு வருவதன் சித்திரம்  உலக அரங்கில்  பெரிதாகப் பேசப் படாதது  பெரிய சோகம்.   பங்களாதேசின்  இஸ்லாமிய அரசே  இந்துக்கள்  மீதான  படுகொலை,  கற்பழிப்பு,  நில அபகரிப்பு,  கட்டாய  மதமாற்றம்  ஆகிய வன்முறைகளை  ஊக்குவி்த்து வருகிறது.   இந்த  உறைய வைக்கும் கொடுமையை  முதலில்  எழுத்தில் பதிவு செய்த  பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்-ரீன்  “இஸ்லாமுக்கு எதிராக” எழுதியதாக   குற்றம் சாட்டப் பட்டு   அவர் கொல்லப்பட வேண்டும் என்று   மௌல்விகள் ஏகமனதாக  ஃபத்வா  விதித்து,  அவர்  இப்போது  இந்தியாவுக்குள் உயிருக்கு பயந்து பாதுகாப்பான வீட்டுச் சிறையில் வாழ்ந்து  கொண்டிருப்பது   நாம் அறிந்த விஷயம்.   அண்மையில்  ரிச்சர்ட் பென்கின் என்ற அமெரிக்கர்   இந்த கொடுமைகள்  குறித்து   எழுதிய நூல் வெளிவந்திருக்கிறது.   A Quiet Case of Ethnic Cleansing: The Murder of Bangladesh’s Hindus   என்ற  இந்த  நூல்  கடந்த  பல பத்தாண்டுகளில் எப்படி லட்சக் கணக்கான  இந்துக்கள்  கொல்லப் பட்டுள்ளார்கள், கொடுமைகளுக்கு ஆட்பட்டுள்ளார்கள்  என்பதை ஆதாரபூர்வமான தகவல்களுடன்  விவரிக்கிறது.   பங்களாதேசின்   இஸ்லாமிய கட்சிகளும் ‘செக்யுலர்’ கட்சிகளும்  ஒன்றுக்கொன்று  சளைக்காமல்  இந்துக்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து வந்திருக்கின்றனர் என்பதை  இந்த நூல்  அம்பலப் படுத்துகிறது.   தி பயனீர்  இதழில்  வெளி வந்த  புத்தக விமர்சனம்  இங்கே. நூலாசிரியர்  ரிச்சர்ட் பென்கின் பல  ஆண்டுகளாக  பங்களாதேச  இந்துக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வருபவர்.  அகதிகளாகி விட்ட  இந்துக்களுக்கு உதவும்  சேவைப்பணிகளையும் செய்து வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே  உள்ள வடமங்கலம் கிராமத்தில்   3000 ஆண்டுகள்  பழைய அகழ்வுச் சின்னங்கள்  கிடைத்துள்ளன.   அங்கு கிடந்த  கற்குவியல் ஒரு  மிகப் பெரிய  ஆமை வடிவம் கொண்ட  நினைவுச் சின்னம்  என்று இது குறித்து ஆராய்ச்சி செய்து வரும்  டாக்டர் ராமகிருஷ்ண பிசிபட்டி  அவர்கள் கண்டறிந்துள்ளார்.  அதற்குள்  மேலும்  அகழ்வுகள் செய்போது   கிடைத்துள்ள  மேடை போன்ற அமைப்புக்கள் வேத வேள்வி  சடங்ககளுக்கு உரியதாக  இருக்கலாம்  என்றும்  அவர் கருத்து  தெரிவித்துள்ளார்.

சகஸ்தான் நாட்டைச் சேர்ந்த  ஒரு தம்பதியர் சமீபத்தில் கேரளத்தில் ஆலப்புழை  நகரில்  வேத மந்திரங்கள் முழங்க வேள்வித் தீ வளர்த்து மாலை மாற்றி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஹவாய் தீவில் உள்ள சைவ மடாலயத்தின் சீடர்களான இவர்கள் கல்யாணம் முடித்தவுடன் தமிழகத்தின் ஆலயங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

மெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் பல்கலைக் கழகத்தில்  அங்குள்ள இந்து மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து  இந்த வருடம் மகா சிவராத்திரி விழாவை மகிழ்ச்சியுடன்  கொண்டாடியதாக  பல்கலை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.   கூட்டு வழிபாட்டுக்காக ஒரு நிரந்தரமான அரங்கத்தையும்  பல்கலைக் கழகத்திற்குள்ளேயே உருவாக்க அங்குள்ள இந்து மாணவர் அமைப்பு முயன்று வருகிறதாம்.

பாரம்பரியம் மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி உயரமான கட்டடங்களும் சந்தேகத்திற்குரிய வணிக நிறுவனங்களும் மொய்த்து வருவது குறித்து பக்தர்களும், மதுரைக் காரர்கள் பலரும் கவலையுற்று வந்தனர். இதற்கான தீர்வு வருவதற்கான ஒரு ஒளிக்கீற்று சமீபத்தில் தென்பட்டுள்ளது.

“… இதை எல்லாம் தடுக்காவிட்டால், கோயிலுக்கு ஆபத்து வரலாம். நாங்கள் எடுத்த கணக்குப்படி மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் 770 கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கின்றன. 60 நாட்களுக்குள் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி இருக்கிறேன். அதோடு, அந்தக் கட்டங்களுக்கு அனுமதி கொடுத்த மாநகராட்சி அதிகாரிகளின் பட்டியலையும் கேட்டிருக்கிறேன்”

என்று மதுரை திட்டக் குழுமத்தின் தலைவரான கலெக்டர் சகாயம் கூறியிருப்பதாக ஜூனியர் விகடன் (14.03.2012) இதழ் கூறுகிறது.

” கிழக்கு கோபுர வாசலில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் ஒரு ஜவுளிக்கடை இருக்கிறது. இந்தக் கடைக்குக் கீழே அண்டர் கிரவுண்ட் தோண்டியதால்தான், கோயிலின் கிழக்கு சுற்றுச்சுவர் சரிந்தது. கோயிலைச் சுற்றிலுமே இப்படிப்பட்ட அத்துமீறல்கள் அதிகம் உள்ளன. கைவினைப் பொருட்கள் விற்பதாகக் கூறிக்கொண்டு வெளிமாநிலத்தவர்கள், குறிப் பாக காஷ்மீரிகள் சிலர் கோ யிலைச் சுற்றி கடைகள் அமைத்து இருப்பதன் திட்டம் என்னவென்று போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் விதிமீறல் கட்டடங்களை அப்புறப்படுத்தும் பொறுப்பை போலீஸ் உதவிக் கமிஷனர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அவரை, முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து, மதுரையை விட்டு தூக்கினார் என்ற தகவல் உள்ளது.”

என்றும் அந்த ரிப்போர்ட் கூறுகிறது. ஆக, அன்னை மீனாட்சியின் திருக்கோயிலைச் சுற்றி வளைப்பதில் அன்னிய மதத்தினருக்கு உள்ள முனைப்பும் இணைப்பும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இனியாவது மதுரை இந்துக்கள் விழித்துக் கொள்வார்களா?

கொசுறு:

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் கிறிஸ்தவ பாதிரிமார்கள், மத அதிகார பீடங்களின் பட்டியல் காங்கிரஸ் அரசின் ஊழல் பட்டியல் போல, குறைவில்லாமல் நீண்டு கொண்டே போகிறது.

சிறுமியை கற்பழித்த தெலுங்கு பாதிரியார் ஒருவர் ஆந்திராவில் இருந்து தலைமறைவாகியதாகக் கூறப்பட்டது. அவர் சிகாகோவில் ஜம்மென்று தனது புனித அருட்பணியை செய்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கண்டறியப் பட்டு அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு என்றும் இன்னொரு செய்தி.

மார்ச் மாத தொடக்கத்தில் பெங்களூரில் உள்ள சர்ச் ஆஃப் கிரைஸ்ட் என்ற கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் அனாதை இல்லத்தில் சிறைப்பட்டிருந்த 41 சிறுவர், சிறுமியரை காவல்துறை மீட்டது. அதை நடத்தி வந்த கிறிஸ்தவ அமைப்பாளர்கள் இந்தக் குழந்தைகளை மிகவும் வக்கிரமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைப் பற்றி செய்திவெளியிடும் தட்ஸ்தமிழ் இணையதளம் பெங்களூர் *ஆசிரமத்தில்* சித்ரவதைக்கு ஆளான 41 குழந்தைகள் மீட்பு என்று தலைப்பு வைக்கிறது. கிறிஸ்தவர்களின் குற்றம் பற்றிய செய்தியைக் கூட இந்து வெறுப்பு தொனியுடன் வெளியிடும் விஷமத் தனம்!

Tags: , , , , , , , , , , , , , ,

 

12 மறுமொழிகள் இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

 1. Ganesh on March 17, 2012 at 1:46 pm

  ஆசிரியரே, தமிழில் இக் கோவில் ஆற்றின் கால் பகவதி அம்மன் என்று பெயர். கிள்ளி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இக்கோவில்.

 2. பெருந்துறையான் on March 17, 2012 at 4:29 pm

  உலகின் எந்த ஒரு நாட்டில் முன்பைவிட ஹிந்துக்களின் இருப்பு சதவீதம் அதிகரித்திருக்கிறது? இந்தியாவில் ஹிந்து அல்லாதார் இருப்பு சதவீதம் முன்பைவிடக் குறைந்திருக்கிறதா?

  இந்த இரண்டு கேள்விகளையும் ஒரு உலகப் பொது அமைப்பின்முன் வைக்க வேண்டும். ஆய்வறிக்கை வெளியிடச் செய்ய வேண்டும். அப்போது தெரியும் இந்தியர்களின் விசால மனமும் மற்றவரின் குறுகிய நோக்கமும்.

  இந்தியச் சமயங்கள் சொல்பவை உயர்ந்த கருத்துக்கள்தான் என்பதற்கு இந்த அளவுகோல் போதும்.

 3. சிறிலங்கா இந்து on March 18, 2012 at 2:17 am

  இந்த வாரம் இந்து உலகம் பல விழிப்புணர்வை ஏற்படுத்தும் விடயங்களை கொண்டது. நன்றி.

  //பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துப் பெண்களை கடத்தி மதம் மாற்றுவது சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்துள்ளதாக//
  அரபு மதத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்று கொள்ளும்படி ஆசிய மக்களின் ஒரு பகுதியினர் முற்காலங்களில் எப்படி எல்லாம் கொடுமைபடுத்தபட்டு இருப்பார்கள் என்பதை விளங்கி கொள்ள முடிகிறது.

 4. Janagar on March 19, 2012 at 10:51 am

  ஆட்டுக்கால் ! ஆற்றுக்கால் என்பதே சரி.

 5. mani on March 19, 2012 at 6:27 pm

  The same thatstamil web site, unnessary dragging RSS in Tamil Elem Issue ie RSS not pporting US in Tamil Elem issue and also try to portrary RSS is terroist organisation.

  I condemn and wrote two or three comments , but not published. So, it is clearly revealed thatstamil website is pro-christian or muslim website running some missionary or by Gulf money.

 6. பொன்.முத்துக்குமார் on March 20, 2012 at 3:34 am

  Mr.Mani,

  Name of the editor of thatstamil.com is A.K.Khan. Doesn’t that answer your question ? 🙂

  Thanks
  Muthu

 7. Raja on March 20, 2012 at 7:53 am

  சிவ சேனா கூட தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ்ஸும், சுவாமியும் ஏன் இலங்கை அரசை ஆதரிக்கிறார்கள்?

 8. mani on March 20, 2012 at 6:20 pm

  Dear Muthu,

  Thanks lot for your information. Hereafter, we have to careful reading magazines. That Jhadist
  hided his name and publishing Tamil Magazine. That’s why, we can see many muslim comments as well as many castiest remarks against BJP even he cannot tolerate BJP came power in karnataka.

 9. சிறிலங்கா இந்து on March 20, 2012 at 9:18 pm

  அன்பின் Raja,
  ஆர்.எஸ்.எஸ்.மற்றும் திரு சுவாமிகளின் முடிவு, இந்துகளின் நலன் காக்கும் மகத்தான முடிவுகள்.உயர் மதிப்பிக்குரிய அவர்களுக்கு நன்றிகள்.

 10. Raja on March 21, 2012 at 7:22 am

  சிறிலங்கா இந்து,
  நீங்கள் கொஞ்சம் தெளிவாக கூறமுடியுமா? இலங்கை அரசு தமிழ் இந்துக்களுக்கு, செய்தவை கொடுமைகள் இல்லையா? யாரகவேயிருந்தாலும் போர் நடக்கையில் மனித உரிமை மீறப்படவில்லை என்கிறீர்களா?

 11. சிறிலங்கா இந்து on March 21, 2012 at 7:45 pm

  மனித உரிமை மீறல்கள்!!!!!
  ஆலயத்தின் உற்சவங்களில் கலந்து கொண்ட ஹிந்து சிறுவர்கள் சிறுமிகள் தொடக்கம் பாடசாலை செல்லும் ஹிந்து சிறுவர்கள் சிறுமிகள் வரை எல்ரிரிஈயால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டு ஆயுதப்பயிற்சி கொடுக்கபட்டு யுத்த முன்நிலைகளுக்கு அனுப்பபட்டு சாகடிக்கபட்டார்கள். இறுதி கட்ட போரில் மக்கள் மனித கேடயங்களாக்கபட்டு எல்ரிரிஈயால் பலி கொடுக்கபட்டார்கள். யுத்தம் என்றால் கொடுமையானது தான் எல்ரிரிஈக்கு மக்களின் மீது ஒரு துளி அக்கறை இருந்தால் இந்தியா கேட்டு கொண்டபடி தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்திருக்க வேண்டும் .பிச்சை காரர்கள், ஊனமுற்றோர்கள், விதவைகள் நிறைந்த ஹிந்து சமுதாயம் ஒன்றை எல்ரிரிஈ தனது நீண்ட கால யுத்த வெறியால் இலங்கையில் உருவாகியது. தமிழ் கல்வியாளர்கள், நற்சிந்தனையாளர்கள், சாதாரண மனிதர்களும் எல்ரிரிஈ யால் கொல்லபட்டனர். அப்போ மனித உரிமை பற்றி பேசாமல் யுத்த வெறியை ஊக்கி வித்தோர் இன்று ஹிந்துகள் மக்கள் தங்கள் விரும்பிய வாழ்கை வாழ தொடங்க முயற்ச்சிக்கையில் எல்ரிரிஈ அழிக்கபட்டதிற்க்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மனித உரிமை கையில் எடுக்கபட்டுள்ளது. இளஞர்களுக்கு கழுத்தில் சயனைட் குப்பியை கட்டி ராணுவத்திடம் பிடிபடும் போது சரணடைய கூடாது சயனைட் குப்பியை கடித்து சாக வேண்டும் என்று எல்ரிரிஈயால் உத்தரவிடப்பட்டு அநியாயமாக சாகடிக்கபட்டது வீரமான செயலாக தென் இந்தியாவின் ஒரு பகுதியில் பார்க்கபட்டது. அதே உத்தரவை பிறப்பித்த எல்ரிரிஈ பெரும் தலைகள் தாங்கள் மட்டும் குப்பி கடிக்க விரும்பாமல் சரணடைந்த போது கொல்லபட்டது மனித உரிமை மீறல் ஆகிவிட்டது. அகில உலகத்தின் இரட்சகன் அமெரிக்கா தான் என்ற எண்ணத்தை தமிழ் பேசுபவர்களிடம் ஆழமாக விதைப்பதில் அவர்கள் நன்றாக வெற்றி அடைந்துள்ளனர். இலங்கையில் சில இடங்களில் வெளிபடையாக சொல்லபட்டது நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவராக மாறியிருந்தால் அமெரிக்கா East Timor மாதிரி ஒரு நாடு எடுத்து தந்திருக்கும்.

 12. பெருந்துறையான் on March 25, 2012 at 7:43 am

  @ //சிறிலங்கா இந்து on March 21, 2012 at 7:45 pm//

  தாங்கள் விளக்கியுள்ள செய்திகள் தமிழகத்தில் யாதொரு அரசியல் கட்சியாலும் முன்வைக்கப்படுவதில்லை என்பது நானறிந்த உண்மை;நாடறிந்த உண்மை. வீரம் பற்றிய உங்கள் ஒப்பீடு மிக அருமை. இவற்றையெல்லாம் இங்கு எடுத்துச் சொன்னால் காதில் போட்டுக்கொள்ள ஆளே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

  அவதாரம் எடுத்து ஆண்டவன்தான் இத்தகைய கொடுமைகளுக்கு (தவறான பிரச்சாரங்களுக்கு) முடிவு கட்ட வேண்டும். சக்தியுள்ளவர்கள் உண்மை பேச மறுப்பதும் உண்மை சொல்ல முனைபவர்கள் மக்களிடத்தில் செல்வாகில்லாமல் இருப்பதும் ஒரு அவதாரத்தால்தான் மாற்றப்பட முடியும் என்று நினைக்கிறேன்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*