பாரதி: மரபும் திரிபும் – 2

பாரதி: மரபும் திரிபும் –  பாகம் 1

(தொடர்ச்சி…)

எது முரண்பாடு?

முரண்பாடுகளின் தொடர்ச்சியில், காந்தியை, காந்தியத்தை கேலி செய்து,

‘உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடீ! கிளியே; செய்வதறியாரடி!’
-என்று கைகொட்டிச் சிரித்து கேலி செய்யும் பாரதி – மற்றொரு பாடலில்,

‘வாழ்கநீ; எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்; வாழ்க!’
– என்று வானுயர ‘கட்அவுட்’ வைத்துக் கைத்தட்டுகிறார்.

முரண்பாடுகள் என்பது, ‘கவிதாமனோபாவம்’ போலும்.

இப்படி வே.மதிமாறன் பாரதி மீது விமர்சனம் வைத்திருக்கிறார்.

-0-

‘மதிமாறனுக்கு காந்தி, காந்தியம் மீது எவ்வளவு பற்று! நினைத்தாலே புல்லரிக்கிறது! பாரதியின் முரண்பாட்டை எவ்வளவு துல்லியமாகத் தோலுரித்துக் காட்டிவிட்டார்.’

இப்படித்தான் நாமெல்லோரும் நினைத்திருப்போம். இந்த விமர்சனம் காந்தியத்தின்மீது உள்ள பற்றால் எழுந்தது அல்ல. பாரதியின் பார்ப்பனியம்(?) மீது; பாரதியை காந்தியத்தின் விரோதி என்பதைக் காட்ட; இவர்கள், இவரின் தலைவர் ஆகியோரெல்லாம் காந்தியத்தின் மீது கடும்தாக்குதலை நடத்தினால்கூட பொறுத்துக் கொள்வார். ஆனால் பாரதி விமர்சிக்கலாமா காந்தியத்தை? வந்ததே கோபம் மதிமாறனுக்கு. உடனே பேனாவை எடுத்தார். பார்த்தீர்களா பாரதி, காந்தியை, காந்தியத்தை விமர்சித்துவிட்டு, பின் அவரையே பாராட்டுகிறார் என்று நமக்கு விளக்குகிறார்.

உண்மையிலேயே மதிமாறனுக்கு ‘மதி’ உண்டா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் எது முரண்பாடு என்பது கூட பகுத்தறிவாளர் கோஷ்டி சேர்ந்தவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

இதில் ‘உப்பென்றும்’ பாட்டு 15.06.1907-இல் ‘இந்தியா’ பத்திரிகையில் வந்தது. அன்றைய காங்கிரஸ் கட்சியின் மிதவாதிகளிலும் அரசியல் வியாபாரம் செய்தவர்களைக் கேலி செய்து பாரதி பாடியது. காந்தியை, காந்தியத்தைப் பற்றியது அல்ல என்பதை அந்தக் கவிதையை முழுவதுமாகப் படிப்போர் உணரலாம்.

இந்தப் பாட்டு பாரதி எழுதிய  காலத்தில், காந்தியடிகள் இந்தியாவில் இல்லை. தென்னாப்பிரிக்காவில் அரசியல் பணியாற்றிக் கொண்டிருந்தார். மேலும் காந்தியடிகள் அப்போது இந்திய அரசியலில் பரவலாக அறியப்படாதவர் என்பது பலரால் அறியப்பட்ட செய்தி.  

பின்னர் வரும் ‘வாழ்க நீ எம்மான்’ பாட்டு 1919-க்குப் பின்னர் காந்தியடிகள் இந்திய அரசியலில் பிரபலமான பின்னர் பாரதியால் பாடப்பட்டது.

இதில் எங்கே முரண்பாடு வந்தது ‘மதி’கெட்ட மாறனுக்கு?        

-0-                              

எது முரண்பாடு என்பதை இப்போது ஆராய்வோம்.

ஈவேரா 1927 வரை மகாத்மா காந்தியை ஆதரித்தார்.

‘‘உலகிலேயே மிகப்பெரிய சீர்திருத்தக்காரரான மகாத்மா காந்தியடிகள் இந்து விதவைகள் பற்றி, அநேக சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் சென்ற ஆண்டு ‘நவஜீவன்’ பத்திரிகையில் மகாத்மா எழுதி இருக்கும் விஷயத்தைக் கவனித்தால், விதவைகளின் விடுதலை சம்பந்தமாய் மகாத்மா எவ்வளவு தூரம் உழைக்கிறார் என்று புலனாகும். அக்கட்டுரையில் ஒரு சில பாகமாவது…..”
— குடியரசு 22-8-1926

 

 ‘‘மகாத்மா காந்தியவர்களிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் அபிமானத்திலும் பக்தியிலும் நமது பக்தி எள்ளளவும் குறைந்ததல்ல வென்பதையும் தெரிவிப்பதோடு, மகாத்மாவைத் தமிழ்நாடு மக்களுக்கு அறிமுகப்படுத்தின அனேகருள் நாமும் ஒருவரென்றும், மகாத்மாவைப் பின்பற்றி வந்த விஷயத்திலும் இப்போது சிபாரிசுக்கு வருகிற எல்லோரையும்விட நாம் பின்பட்டவரல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’’
— குடியரசு 28-8-1927

 
1927-க்குப் பிறகு காந்தியை கடுமையான விமர்சனத்தால் துளைத்தெடுத்தார்.

‘‘தோழர் காந்தியின் முயற்சியெல்லாம் பார்ப்பனீயமும், பணக்காரத்தன்மையும் இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டும் என்பதேயாகும்.’’
— குடியரசு 23-7-1933

 
‘‘இந்திய தேசிய காங்கிரசும், காந்தியமும் அழிந்தொழிந்து போவது என்பது இந்திய ஏழை மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக ஏழை மக்கள் இயக்கத்திற்கே அதாவது, சமதர்ம உலகத்திற்கே பெரிய இலாபகரமான காரியமாகும்.’’
— குடியரசு 30-7-1933

 

“‘காந்தியாரின் விஷம்’ எல்லோரையும் அருந்தச் செய்து எல்லோரையும் கொல்லத்தக்க மாதிரியில் பூச்சுப் பூசப்பட்டிருக்கிறது என்பதோடு காந்தியாரை ‘மகாத்மா’வாக்கி பின் சந்ததிகளையும் கொல்லச் செய்யத்தக்கதாகும் என்று சொல்லலாம். ஆதலால் வைதீகப் பிரச்சாரத்தையும் சனாதனப் பிரச்சாரத்தையும் பகிஷ்கரிப்பதைவிட காந்தி பிரச்சாரத்தைப் பகிஷ்கரிக்க வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.”
— புரட்சி 10-12-1933


காந்தி வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கியவர், சமதர்மக் கொள்கைக்கு எதிரி என்றெல்லாம் விஷம் கக்கிய ஈவேரா, காந்தி இறந்தவுடன் திராவிட இயக்கத்தவர்களே திடுக்கிடும்படியான ஒரு வசனத்தை எழுதினார்.

“1. இந்தியாவுக்கு ‘ஹிந்துஸ்தான்’ என்கிற பெயருக்குப் பதிலாக ‘காந்திதேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடலாம்.

2. இந்துமதம் என்பதற்குப் பதிலாக ‘காந்திமதம்’ அல்லது காந்தினிசம்’ என்பதாக மாற்றப்படலாம்.

3…. கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக ‘காந்தி ஆண்டு’ என்று துவக்கலாம். இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான் புத்தர், கிறிஸ்து, முகமது முதலிய பெரியார்களுக்கு காந்தியார் ஒப்பானவராகவும், இன்றைய நிலைமைக்குத் தோன்றிய ஓர் சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும். உலக மக்களால் நன்கு மதிக்கப்படுவோம். இந்தியாவுக்கே சாபக்கேடு எது எது சொல்லிவரப்பட்டதோ அதெல்லாம் மறைந்துவிடும்.’’
— குடியரசு 14-2-1948

காந்தியைப் புகழ்ந்து இப்படி எழுதும்போதே ஈவேராவுக்குக் கூச்சமாகவும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல் இருந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, அரசியல் செய்ய வேண்டி இருக்கிறதே என்று அவரது மனம் அமைதிப்படுத்தியிருக்கும். அடுத்தப் பேச்சையும்  கவனியுங்கள்…

 ‘‘பேச வேண்டியது, சம்பிரதாயப்படி மாத்திரம் அல்லாமல் உண்மைப்படியும், கடமைப்படியும் பேச வேண்டியதாகும். காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும் திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்புமாகும். காந்தியார் கொலை திராவிட மக்களின் எல்லையற்ற ஆத்திரமும் இரத்தக்கொதிப்பும், திடுக்கிடும்படியான விறுவிறுப்பையும் கொள்ளத்தக்க காரியமாகும்.’’
— குடியரசு 15-5-1948

  
இப்படிப் புகழ்ந்து பேசியதோடு காந்தியாரை ஈவேரா விட்டிருந்தால்கூட பரவாயில்லை. மீண்டும் தன்னுடைய இரண்டாம் நிலைக்கே திரும்பினார்.

“காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும் திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்புமாகும்’’ என்று எழுதிய அதே கைதான் கீழே குறிப்பிடுவதையும் எழுதியது:

‘‘காந்திதான் நமது நாட்டை வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் ஒப்படைத்து, நம்மை அடிமையாக்கியதற்குக் காரணம். சாதி ஒழிப்புக்கு சாஸ்திரம், புராணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது போல – நாட்டுப் பிரிவினக்குக் காந்தி ஒழிய வேண்டும்.’’
— விடுதலை 22-8-1957

 இதில் ஈவேரா-வின் கொள்கை என்று எதைத் தீர்மானிப்பது?

முதலில் ஆதரிப்பது-

பின்பு எதிர்ப்பது-

எதிர்த்த காரணத்தையே மறைத்து ஆதரிப்பது-

பின்பு ஆதரித்த காரணத்தை மறைத்து எதிர்ப்பது-

எதுதான் அவருடைய கொள்கை?

முரண்பாடு பாரதியிடமா?

அல்லது ஈவேராவிடமா?

சொல்லுங்கள் தோழரே!

(தொடரும்..)

24 Replies to “பாரதி: மரபும் திரிபும் – 2”

  1. ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ பாட்டு எழுதப்பட்ட காலம் பற்றியோ, மகாத்மா காந்தி இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்த காலம் பற்றியோ, ‘வாழ்க நீ எம்மான்’ பாடல் பாடிய சென்னையில் காந்தியடிகளை பாரதி பார்த்த நிகழ்ச்சி பற்றியோ எதையும் அறியாத அரைவேக்காட்டு மனிதர்கள் புகழ்பெற்ற மனிதர்களை விமர்சிப்பது அயோக்கியத்தனம். இதை இனியும் தொடர விடக்கூடாது. யார் யாரைப் பற்றி விமர்சிப்பது என்ற வியவஸ்தை இல்லாமல் போய்விட்டது. மிக siRappaaka, ஆதார பூர்வமாக திரு வெங்கடேசன் கட்டுரையைக் கொண்டு செல்கிறார். இனி புகழ் பெற்ற மனிதர்களை இழிவு செய்யும் கட்டுரைகளை படிக்க வேண்டம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு பதில் சொல்லுவது வீண் வேலை.

  2. அபாரமான கட்டுரை. ம. வெங்கடேசன் வாழ்க!

  3. இப்போது தான் படிக்க ஆரம்பித்து அதற்குள் முடிந்து விட்டது போன்ற உணர்வு. அருமையான சொல்லாடல் மற்றும் எழுத்தின் வேகம்.

    உங்களது நுணுக்கமான ஆராய்ச்சி புல்லரிக்கச் செய்கிறது. தமிழ் ஹிந்து தளத்திற்கும் ஹிந்து மதத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் நீங்கள்.

    // உண்மையிலேயே மதிமாறனுக்கு ‘மதி’ உண்டா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. // அருமையான வரிகள்.

    துக்ளக் சத்யாவை வாசிப்பது போலவே உள்ளது உமது எழுதும் நடையும்.

    பழத்திற்குள் ஊசியை வைத்துக் கொடுத்தால் அது வஞ்சகம்
    ஊசிக்குள் மருந்தை வைத்துக் கொடுத்தால் அது மருத்துவம்.

    வஞ்சகத்தனத்தை அகற்ற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  4. ‘ஈ. வெ. இராமசாமி முன்னுக்குப்பின் முரண்பட்டு நின்றவர்’ என்று பலர் நன்கு அறிந்திருந்தாலும் அதை உறுதிப்படுத்த வரலாற்று ஞானமும் ஆதாரங்களைச் சேகரிக்கும் கடின உழைப்பும் மிக அவசியம். அது உங்களிடம் உள்ளது. நெஞ்சம் நிறைய மகிழ்ச்சி.

    கட்டுரையாளர் பாரதியைப் பற்றிக் கொடுத்துள்ள தகவல்கள் என்னும் அபத்தங்களுக்கு நேர்த்தியான பதிலடி கொடுத்துள்ளீர்கள்.நன்றிகள்.

    வெளி நாட்டார் கொண்டு வந்துள்ள patent right வாங்கும் முறையைப்போல, நம் நாட்டிலும் குறிப்பிட்ட சமயத்தை, ஜாதியை, தலைவரை… இன்ன பிறவற்றைஎல்லாம் நேர் விரோதமாக எதிர்த்து எழுதும் நேர்மையற்றவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் முறையைக் கொண்டுவர வேண்டும்.

    எவர் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவது… அந்த அக்கிரமச் செய்திகள் அப்பாவி மக்களைச் சென்று சேர்வது… பிறகு பதிலடி தரச் சிலர் உழைப்பது… இத்தகைய பதிலடிகள் அதே தரப்பு மக்களிடம் போய்ச் சேர்கிறதா இல்லையா என்று தெரியாமல் நாம் தவிப்பது…

    இந்த நிலை மாற, உரிமையுள்ள ஒரு அமைப்பு ரீதியான செயல்பாடு அவசியமாகிறது. சட்டப்படியே இந்தப் பிதற்றல்களை முறியடிக்க நடவடிக்கை வேண்டும்.

  5. தலைவர நீங்க மதிஇல்லாதவர்க்கு நல்ல பதில்.நன்றிகள். மேலும்

    நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    .

  6. துட்டுகாக துத்திரிகொண்டு செல்லும் இந்த மதிமாற கும்பல் மாறாது. துட்டு கொடுபவனை பிடித்து உதைத்தால் தன இந்த அசிங்கம் நிக்கும்

  7. ஒரு யுக புருஷனைப்பற்றி அபத்தமாக எழுத ஒரு மதிமாறன் போதும். ஆனால், அவர் எழுதிய பொய்களை உடைத்தெறிய , தகவல்களை சேகரித்து , அற்புதமாக எழுதிய திரு வெங்கடேசனுக்கு தமிழகமே கடமைப்பட்டுள்ளது. நன்றிகள் பல உரித்தாகுக. உங்களுக்கு இறைஅருள் மேலும் மேலும் பெருகட்டும்.

  8. நடக்கட்டும் நாட்டியம். பறக்கட்டும் பகுத்தறிவு.

  9. புட்டு புட்டு வைக்கிறது இதுதான். சபாஷ் அண்ணா….

  10. சிறப்பான பதிலடி என்று இங்கே குறிப்பிட்டுள்ள மறுமொழிகளை யானும் வழி மொழிந்து இக்கட்டுரையை போற்றுகின்றேன்..

  11. பாரதி யார்? என்பதை முழுமையாகப் படிக்காது அரைவேக்காட்டுத் தனமான மிகவும் சிறுபிள்ளைத் தனமான விதண்ட வாதங்களை புத்தகமாகவே வெளியிட்டு; இப்படி தான் எங்களது இயக்கமும் கொள்கையும், இயக்க வீரர்களின் லட்சணமும் என்று கடை விரித்து கூவி விற்கும் அந்த நபரை எண்ணி மிகவும் பரிதாபப் படுகிறேன்.

    அவன் என்னவெல்லாம் செய்தான் என்பதை தேடி படித்துப் பார்த்தால் அவன் யார்? ராமானுஜனா? ஆதி சங்கரனா? என்று நன்கு விளங்கும்…
    அடப் பாவிகளா! எப்படி இப்படியெல்லாம் பாரதியைத் தூற்ற எண்ணம் தோன்றியது????!!!!…

    அவன் ஒரு அவதாரப் புருஷன்… உலகையே உள்ளங்கையில் வைத்துப் பார்த்தவன்… மதி மாறிப் போன மதியிலிகளுக்கு ஒருபோதும் அவனைப் புரியாது….

    ஒருவேளை சிங்காரவேலர் எழுந்து வந்து சொன்னாலும் அவருக்கும் துரோகிப் பட்டம் கட்டி மீண்டும் கல்லறைக்கு அனுப்புவார்கள்…
    உங்களோடு இருந்து உழன்றும் ஒரு போதும் பாரதி தாசன் என்ற தனது பெயரை மாற்ற விரும்பாத கனக சுப்பு ரத்தினமே வந்து சொன்னாலும் அவரையும் மண்ணில் புதைக்கத் துணியும் மதியிலிகள்…. பலகாலம் சென்று செல்லம்மா பாரதியைப் பார்க்க நேர்ந்த பாரதி தாசன் சாஷ்டாங்கமாக பலரின் முன்பே அந்த அன்னையின் காலில் விழுந்து வணங்கி வரவேற்ற வரலாறு தெரிந்து இருந்தால் இந்த குருடர்கள் இப்படி மகாகவியை தூற்றும் கேவலமான செயலை செய்து இருக்க மாட்டார்கள்…

    அதிலும் பாரதியை விமர்சிக்க துணிந்தது தான் பெரும் நகைப்புக்கு உரியது… இவர்கள் தமிழில் எதுவுமே முழுவதுமாகப் படித்ததில்லை என்பது மட்டும் நன்கு விளங்குகிறது….

    கொடுமை இது போன்ற நபர்களை கடுமையாக எச்சரித்து இனியும் இப்படி துணியாது இருக்க தடுக்க வேண்டும் என்பதை விட பாரதியின் உலகப் பார்வையின் அருமையை, உயர்வை பட்டி தொட்டி எல்லாம் பரப்ப வேண்டும் அதை ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்தளவு செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம்… கட்டுரையும் எடுத்தாண்ட வாதக் கருத்துக்களும் அபாரம், அருமை. நன்றிகள் பல.

    வாழ்க வளர்க மகாகவி பாரதியின் புகழ்!!!

  12. மரியாதைக்குரிய திரு கோ.ஆலாசியம் எழுதியுள்ள பின்னூட்டம் சிறப்பான பதலடி. பாரதி தாசன் அறுபது ஆண்டுகளுக்கு முன் தினத்தந்தியில் எழுதியுள்ளதை படித்தால் தெரியும், அவர் தன குருநாதர் மீது வைத்திருந்த மரியாதை. அவர் சொல்கிறார், பாரதி ஒரு பார்ப்பனன், அவன் பெயரை உன்பெயரில் வைத்துக் கொள்ளாதே என்று எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நீ பார்ப்பானுக்கு அடிமையா என்கின்றனர். என் குருநாதர் ஐயருக்கு நான் அடிமைதான். எவன் சொன்னாலும் என் பெயரை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றார். ஒரு முறை பாரதி இறந்த தினத்தன்று திருச்சியில் திருலோக சீதாராம் அவருக்குத் தேவசம் செய்யும்போது செல்லம்மா பாரதி அங்கு வந்திருந்தார். செய்தி கேட்டு பாரதிதாசன் அவரைக் காண வந்திருந்தார். திருலோகம் வீட்டில் அவரைப் பார்த்ததும், அம்மா என்று சொல்லி அவர் முன் நமஸ்காரம் செய்தார். கூட வந்த தி.க.வினர், மொட்டை பாப்பாத்தி காலில் விழுகிறாரே என்றனர். அப்போது பாரதி தாசன் சொன்னார், அவர் என் தாய், ஐயர் என் குரு, உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் வெளியில் போங்கள், நான் என் தாய் காலில் விழுவேன் என்றார். அவர்கள் வாயை மூடிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியைத்தான் திரு ஆலாசியம் சொல்லுகிறார். திரு ஆலாசியம் போன்ற கற்றவர்களுக்கு உண்மைகள் நன்கு தெரியும். அரைவேக்காட்டு ஆசாமிகள்தான் பாரதியைக் கொச்சைப் படுத்த நினைக்கிறார்கள். திரு ஆலாசியம் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கிறேன். இந்த பின்னூட்டங்களைப் படிக்கும் சிலர் ஆலாசியம் ஒரு பிராமணர் என்று கூட நினைத்து அவர் அப்படித்தான் எழுதுவார் என்று சொல்லலாம். அவர் பிராமணர் இல்லை. அவர்களினும் மேம்பட்டவர். ஓர் பழைய ஆய்வு சொல்கிறது, தென்னிந்திய ஆச்சார சீலர்களில் ஆற்காடு முதலியார்களும், நெல்லை பிள்ளை மார்களுமே உயர்ந்தவர்கள் என்று. பாரதியைப் போற்றுபவர் எல்லோரும் பார்ப்பனர்கள் எனும் கற்பனையை விட்டுவிடட்டும்.

  13. கல்கிக்கு ஆரம்பத்தில் பாரதியை பிடிக்காது. படு மோசமாக விமர்சனம் செய்தார். அவர் எப்பேர்பட்ட எழுத்தாளர். ஆங்கில மோகத்துக்குள் கட்டுண்ட தமிழ்நாட்டு வீடுகளில் மீண்டும் தமிழை அறிமுக செய்த புரட்சி எழுத்தாளர். அவரின் கடுமையான தாக்குதல்களுக்கு பாரதி உள்ளானான். பாரதி விஷயத்தில் அவராலயே ஒண்ணையும் கழட்ட முடியவில்லை. இறுதியில் பாரதி மணிமண்டபத்திற்கு தன் ஆதரவை நல்கினார். இன்றோ பாரதியின் புகழ் மில்லியன் மடங்கு கூடிவிட்டது. இந்த மாதிரி துக்கடா விமர்சனங்களுக்கெல்லாம் நாம் பயப்பட தேவையில்லை. தன் கவிதையைப் போல், பாரதி சாஸ்வதமானவன்!!!!!

  14. 1907 ல் பாரதி யாரை திட்டி அந்த பாடல் எழுதினான்? எதனால்? காங்கிரஸ் பற்றியா? ஏன்?

    பெரியார் மாற்றி மாற்றி சொல்லுவதாக காtடும்போழுது சூழ்நிலையும் எழுத வேண்டாமா?

    வெங்கடேசன் அவர்கள் பாகம் 1 லும் , 2லும் பாரதி குறித்து எழுதுவது விட்டுவிட்டு பெரியார் பற்றி சாடுகிறார்.

    முதுலட்ச்மியை பற்றி ஏன் பாரதி பாடவில்லை என்றால் பாண்டிச்சேரியில் இருந்ததனால் என்று சமாளிக்கிரரே தவிர, மதிமாறனின் கேள்விக்கு பதில் இல்லை. மற்றவர்கள் ஏன் பேச வில்லை என்று திசை திருப்பல் வேறு.

    பெண் விடுதலை என்றாலே பாரதிதான் என்று ஏகபோக உரிமை கொண்டாடுபவர்களை நோக்கியே மதிமாறன் கேள்வி உள்ளது.

  15. @ kans on April 14, 2012 at 5:53 pm

    அ) //1907 ல் பாரதி யாரை திட்டி அந்த பாடல் எழுதினான்? எதனால்? காங்கிரஸ் பற்றியா? ஏன்?//

    \\’1907-இல் ‘இந்தியா’ பத்திரிகையில் வந்தது, அன்றைய காங்கிரஸ்கட்சியின் மிதவாதிகளிலும் அரசியல் வியாபாரம் செய்தவர்களைக் கேலி செய்து பாரதி பாடியது; காந்தியை, காந்தியத்தைப் பற்றியது அல்ல’, என்பதை அந்தக் கவிதையை முழுவதுமாகப் படிப்போர் உணரலாம்\\

    கட்டுரையாளர் தெளிவாகத் தந்துள்ள மேற்கண்ட சொற்றொடர்கள் உங்களுக்குப் புரியவில்லையா? புரிந்திருந்தால் உங்களின் மேற்காணும் கேள்வி வந்திருக்காதே..!

    ஆ) \\மதிமாறனின் இந்தப் புத்தகத்துக்கு மட்டுமே பதில் எழுதப்படுவது அல்ல இந்தக் கட்டுரைகளின் நோக்கம்\\

    என்னும் வரியை முதல் பாகத்திலேயே வெங்கடேசன் பதிவு செய்திருக்கிறார். எனவே, உங்களின்

    //…பாரதி குறித்து எழுதுவதை விட்டுவிட்டுப் பெரியார் பற்றிச் சாடுகிறார்// என்னும் கேள்வி அடிபட்டுப் போகிறது.

    இ) \\1912-இல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்து லட்சுமி அம்மையாரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஒரு சம்பவம் நடந்த உடனே எழுதினால்தான் உண்டு. அதன்பிறகு அது பழைய சம்பவங்களில் ஒன்றாகிவிடும். 1912-இல் தனக்கான பத்திரிகை ஒன்றையும் கொண்டிராத பாரதி, முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி எழுதாதது பாரதியின் குற்றமல்ல. அது ஒரு தற்செயலான நிகழ்வு.\\

    என்னும் கருத்து,

    //’முத்துலட்சுமியைப் பற்றி ஏன் பாரதி பாடவில்லை?’//

    என்னும் மதிமாறனின் கேள்விக்கு பதில் இல்லையோ..?

    கட்டுரையாளரின் பதிவுகளின் நேராக உங்கள் எந்த வினாவும் நிற்கவில்லை.

  16. பாரதியின் காலத்தில் காங்கிரசில் மிதவாதிகள், தீவிர வாதிகள் எனப் பிரிந்திருந்தனர். தீவிரவாதிகள் என்றால் இன்றைய பயங்கரவாதிகளைப் போல அல்ல. சுதந்திரம் பெறுவதிலும், ஆங்கிலேயர்களிடமிருந்து சிறுகச் சிறுக உரிமைகள் பெறுவதிலும் நிதானம் காட்டியதால் மிதவாதிகள் எனப் பெயர் பெற்றனர். ஆனால் திலகர் தலைமையில் அமைந்த “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவோம்” எனும் தீவிரமான குரல் கொடுத்ததால் அப்படிப் பெயர் பெற்றனர். பாரதி திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர். வ.உ.சி. போன்ற பலர் அப்படித்தான். ஆனால் தமிழ் நாட்டில் மிதவாதிகள் அதிகம். அவர்களைக் கிண்டல் செய்துதான் பாரதி இந்தப் பாடலைப் பாடினர். ஆயிரத்து தொள்ளயிரத்துப் பத்தொன்பதுக்குப் பிறகுதான் மகாத்மா காந்தி இந்திய அரசியலில் நுழைந்தார். அந்த ஆண்டுதான் சென்னையில் ராஜாஜி இல்லத்தில் காந்தியைப் பார்த்து கடற்கரைக் கூட்டத்துக்கு பாரதி அழைப்பு விடுத்தார். இவரைப் பார்த்ததுமே காந்திக்கு இவர் ஓர் அறிய பொக்கிஷம் என்பது புரிந்து விட்டது. தமிழ் நாட்டில் இவரை யாராவது பாதுகாக்க வேண்டுமென்று ராஜாஜியிடம் காந்தி சொன்னார். பாரதியைப் படிக்க வேண்டும். அவர் காலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர்தான் பாரதியைக் குறை சொல்ல முயற்சிக்க வேண்டும். ஏனோ தானோ என்று பாரதியை விமர்சித்து விட முடியாது.

  17. kans……… டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி தான் ரெட்டியாரே இல்ல, அவரும் பிராமணர் தான் அப்புடின்னு சொல்லறாரே…. நீர் ஏன்யா குழம்பிக்கொள்கிரீர்?

  18. கன்ஸ்,

    இப்படி லூசுதனமாக பேசுகிறீர்கள். எதற்காக முத்து லஷ்மி ரெட்டி என்ற ஆதிக்க சாதி இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பற்றி அவர் பேச வேண்டும்.

    மதிமாறனுக்கு தான் அறிவு இல்லை என்றால் உங்களுக்குமா?

    இவ்வளவு தெளிவாக வெங்கடேஷ் எழுதியும் உங்களுக்கு புரியவில்லை என்றால் அதற்கு கீழ் கண்ட ஏதேனும் ஒன்று தான் காரணமாக இருக்க இயலும்.

    (1) உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாது

    (2) பகுத்து ஆராயும் பகுத்தறிவு உங்களிடம் மிஸ்ஸிங்

  19. ஐயா செட்டி
    மனைவி இறந்த பிறகு குழந்தைகளை பார்த்து கொள்ள தேவதாசியை வீட்டில் வைத்து கொண்டார் என்பதற்கும்,திருமணம் செய்து கொண்டார் என்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு.அவருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்திலோ,பெயரோடு சேர்த்து கொள்வதற்கோ அனுமதி கிடையாது(நீதிமன்றங்களும் அவற்றை உறுதி படுத்தியுள்ளன )
    மதுரை ஷண்முக வடிவுவின் மகள் தான் சுப்புலட்சுமி
    அதே போல் சந்த்ரம்மாவின் மகள் தான் முத்துலட்சுமி .அதனால் தான் தீவிர வெறியோடு தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்காக போராடினார்.வேண்டுமானால் உங்கள் சாதி பெண்களை தேவதாசி ஆகுங்கள் என்று சத்தியமூர்த்தி ஐயரை பார்த்து சவால் விட்டார்கள் .அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயம் அல்ல எனபது முட்டாள்தனத்தின் உச்சம்

  20. @பூவண்ணன்.

    சட்டசபையில் சத்திய மூர்த்தி உடன் முத்துலட்சுமி அம்மையாரின் வாதங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தில் //முத்துலட்சுமி அம்மையார் நாராயணசாமி ஐயரின் மகள்.// என்ற தகவலை படித்த போது குழப்பமாக இருந்தது. உங்களுடைய பின்னூட்டங்களை படித்த பின் குழப்பம் நீங்கியது. தகவலுக்கும் தெளிவான விளக்கத்திற்கும் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *