வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?

ஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு இருந்தார்.

ங்கு வாழும் தாழ்த்தப்பட்டோரை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக் கடிதம் (12.12.1968) அனுப்பினார்.

தில் –

கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாளர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும் முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….

யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக் கோரச் சம்பவம் நடந்தே விட்டது!

டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில் போட்டுப் பூட்டிவிட்டார்கள்.

செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக அனுப்பி விட்டார்கள்.

முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.

கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200 பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.

ங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்! கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில் நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது. அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள் வீழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள் 13 பேருக்கு மேலிருக்கும்.

தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள்.

குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத் தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது. அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.

ற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!

ரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசினார்கள்!

ரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!

றந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!

றந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!

றந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!

வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீது இன்னொரு வழக்கு.

தீர்ப்பு என்ன தெரியுமா?

முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!

ன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைவாசம்!

ரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!

44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை.

தைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8 விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

தற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8 பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும் இல்லை.

தற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.

ந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள். மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’

க, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை. விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.

ந்த வரலாற்றுக் களங்கம்…

நியாய உள்ளம் படைத்தோரையெல்லாம் பதற வைத்த இந்தக் கொடூரம்…

மிழ்ச் சமுதாயத்திற்குள் இன்னும் நில பிரபுத்துவக் கொலைவெறி இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தப் படுபாதச்செயல் பற்றி ஈவேரா ஆற்றிய எதிர்வினை என்ன?

வேரா சொல்கிறார்:-

‘‘ந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இது ஜனநாயகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி பொன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்துவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரச நாயகமாகப் போக வேண்டும் அல்லது தனித் தமிழ்நாடு பிரித்துத் தரப்பட வேண்டும் அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வர வேண்டும். தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் – ஜான்சன்’’

மிழ்நாட்டையே நடுங்க வைத்த சம்வத்திற்கு ஈவேரா ஆற்றிய எதிர்வினை இதுமட்டுமே!

து எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

த்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?

ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற சாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கொடூரமாக நடத்திவருவது சாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட சாதி இந்துக்களையும் எதிர்க்கவில்லையே ஏன்? அதனால்தானே இந்த 44 உயிர்கள் எரிந்துபோனது?

வேரா கீழ்வெண்மணிக்குச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20-1-69)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.

‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’

கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!

கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

ச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.

பிராமணருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல் வரும்போது உற்சாகமாக தாழ்த்தப்பட்டோரை உசுப்பிவிடுவதற்காக ஆதரித்த ஈவேரா பிராமணரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதல் வரும்போது தாழ்த்தப்பட்டோரை ஆதரிக்க முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை பிராமணர்களே பிரதான எதிரி. பிராமணரல் லாதார் எதிரிகள் இல்லை. அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பிராமணரல்லாத உயர்சாதியினரைத் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரியாக கட்டமைத்துவிடக் கூடாது என்பதில் ஈவேரா எப்போதும் விழிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே சூத்திரர்கள் பக்கம்தான் இருந்தார் என்பதற்கு சரியான உதாரணமாகக் கீழ்வெண்மணிக் கொடூரத்தில் ஈவேராவின் எதிர்வினையை நாம் பார்க்கலாம்.

 

தொடர்புள்ள பிற பதிவுகள் :

18 Replies to “வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?”

  1. உண்மையில் பெரியார் பெரிய லக்கிதான். இவ்வளவு வெளிப்படையாக தனது நிலையை தெரிவித்தும் கூட ஜிங்சா போடா ஒரு கூட்டத்தை இன்றும் வைத்துள்ளார் என்பது வியப்பே. யோசிக்கவே மாட்டோம் என்பவர்களெல்லாம் எப்படித்தான் இவருக்கு தொண்டர்களாக கிடைத்தார்களோ

  2. வெங்கடேசன் அவர்களே, ஒரு மிகப்பெரிய கொடுமையை கண்ணால் பார்த்தது போல் இருந்தது. பணக்காரர்கள் பணக்காரர்களை விட்டுக்கொடுப்பதில்லை. ஈவேராவும் செல்வந்தர், அவர் சார்ந்த சொந்த ஜாதி மிராசுதாரர்களும் செல்வந்தர்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்துவிட்டார்கள் போலும். இந்த ஈவேராவை இன்னும் நம்புது இந்த தமிழக ஒலகம்!

    அரிய தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி!

  3. 1941-ஆம் ஆண்டில், இராசா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மிகப் பெருஞ்செலவில், மிக ஆடம்பரமான முறையில் செட்டி நாட்டிலும், அண்ணாமலை நகரிலும் கொண்டாடப்பட்டது. இரண்டு இடங்களிலும் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற பல்வேறு அரங்கங்களும், தான தருமங்களும் நடைபெற்றன.

    தான தருமங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்க்கே வழங்கப்பட்டன. அறுபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிகுறியாக பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது அடுக்கு, வீட்டு சாமான்கள், அறுபது அம்மி ஆட்டுக்கற்கள், அறுபது பசுமாடுகள் போன்ற இன்னபிறவற்றை இராசா சர் தானமாக வழங்கினார்.

    அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் விடுதலை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு நம்பிக்கையான மூடப்பழக்க வழக்கத்தைக் கண்டிக்கவேண்டும் என்பதோடு, பார்ப்பனரல்லாதான் இயக்கத்தைச் சார்ந்த இராசா சர் சமூகத் துறையில் பார்ப்பனர்க்கு அடிமைபோகும் தன்மையையும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும் என்ற எண்ணம் அறிஞர் அண்ணா அவர்கள் உள்ளத்தைக் குடைந்துகொண்டிருந்தது.

    அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று ஏபதுவது என்று அண்ணா அவர்கள் எண்ணினார்கள். இந்த எண்ணத்தைப் பெரியார் அவர்களிடம் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களுக்கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியாரிடத்தில் மிக்க சினம் பொங்கி எழுந்திருந்தது.

    இராசா சர் அறுபாதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு மிகக நிதி வழங்கியிருந்தார். விடுதலைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை. இது பெரியாருக்கு மிக்க சினத்தை மூட்டியது.

    எனவே அண்ணாவின் எண்ணத்தைப் பெரியாரும் ஆதரித்தார். யார் யாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறான். பார்ப்பனர்களுக்கு நன்கொடை தந்திருக்கிறான். பார்ப்பனர்களுக்கு இலட்சம் இலட்சமாக அள்ளித் தருகிறான் அவனை ஓயாமல் திட்டிக்கொண்டிருக்கிற தேசீயப் பத்திரிகைகளுக்கு நன்கொடை தந்திருக்கிறான். நாம் ஒரு பத்திரிகை வைத்து நடத்துகிறோம். தேவையானபொழுதெல்லாம் அவனுக்கு ஆதரவு தருகிறோம். அப்படி இருந்தாலும், நமது பத்திரிகையைக் கவனிக்காமல் இருக்கிறான் என்றால் என்ன நியாயம்? அவனது அடிமைத்தனத்தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும் கருத்துப்பட பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள்.

    அண்ணா அவர்களும் அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் ஒன்று தீட்டினார்கள். தலையங்கம் தீட்டி அச்சேற்றுவதற்குள்,

    எதிர்பாராதவிதமாக இராசா சர் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து விடுதலைக்கு என்று ரூ.1000 நன்கொடை செக் வந்து சேர்ந்தது. செக்கை எடுத்துக்கொண்டு பெரியார் அவர்கள் அண்ணாவிடம் வந்து பைத்தியக்காரன் இப்பொழுது ரூ.1000-க்குச் செக் அனுப்பியிருக்கிறான். கண்டித்துச் தலையங்கம் தீட்டிவிட்டீர்களா? என்று கேட்டார்.

    முன்பே எழுதிக்கொடுத்துவிட்டேன். அச்செறும் நிலையில் இருக்கிறது என்று அண்ணா கூறினார்கள். அவனைச் சாதாரணமாகப் பாராட்டி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள்.

    அண்ணா அவர்கள் அவரது போக்கைக் கண்டித்து நான் எழுதிவிட்டேன். பாராட்டி எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள்; நான் எழுதமாட்டேன் என்று உறுதியாக விடையிறுத்துவிட்டார்கள்.

    பெரியார் அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணா அவர்கள் பாராட்டி எழுத மறுத்துவிட்டார்கள். பிறகு அண்ணாவின் தலையங்கத்தை நிறுத்திவிட்டுப் பெரியாரே ஒன்று எழுதி வெளியிட்டார்கள்.

    டாக்டர். அண்ணா பரிமளம் (மன்றம்: 15.06.1956)

  4. //இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. //

    ஒருத்தன் வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு அதனால் கணவனுக்கு சரிவர குடும்பம் நடத்த தெரியவில்லை. அதனால் பக்கத்து வீட்டு கணவரோ, அடுத்த தெரு கணவரோ வந்து குடும்பத்தில் கும்மி அடிக்கட்டும். வீடும் நாடும் விளங்கிடும்!!!!!

    ம.வெங்கடேசன் உங்களுக்கு அனுபவமே போதாதுங்க சார். கீழ்வெண்மணி, இரட்டை குவளை முறை, மவுண்ட் ரோடு ல ட்ராபிக் ஜாம், தமிழ் நாட்டுல வெயில் ஜாஸ்தியா அடிக்கறது எல்லாத்துக்கும் பார்ப்பனர்களே காரணம். நீங்க இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்குதுங்க!!!!

  5. நாயரும்,நாயுடுவும்,ரெட்டியும் தமிழனிடம் தங்கள் சரக்கை விற்க கண்ட கொல்லைப்புற வழிதான் “தீராவிடம்” . இந்த கதையை இப்போது பெரும்பான்மை தமிழர்கள் தெரிந்துகொண்டுவிட்டதால் இவர்கள் கடையை மூட வேண்டிய தேவை வந்துவிட்டது. வெண்மணியில் திராவிடம் என்ன செய்தது? அதற்க்கு எப்போதும் சேரியை பற்றிய கவலை வந்ததே இல்லை. திராவிட வயலில் அறுவடை செய்தது எல்லாமே ஆதிக்க, பிற்படுத்தப்பட்டதாக கூறிக்கொண்ட சாதியினரே! தமிழனின் கண்ணைக்கட்ட இவர்கள் கண்ட வழி தான் பார்ப்பன பூச்சாண்டி. சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனின் கைக்கூலியாக சில மிதவாத காங்கிரசு பார்ப்பனர்களும், நீதிக்கட்சி கோமான்களும் , அடிமை அதிகாரத்தை ருசிப்பதற்காக குறுக்கு சால் ஓட்டிய கதை நாடறியும். சுதந்திர நாளை கறுப்பு நாளாக கொண்டாடி “குடுத்த காசுக்கு மேலாக கூவியதையும்” எல்லோரும் அறிவர்.
    பார்ப்பான் சொன்னதாக கதை விட்டுக்கொண்டு, சேரியில் இருப்பவனையும் , வலிமையற்ற பெரும்பான்மயானவனையும் -பிற ஆதிக்க சாதியினர் இன்று வரை தம் காலடியில் போட்டு நசுக்கத்தான் இந்த தீராவிடம் வழிகாட்டியுள்ளது. இதை எவ்வாறு மறுக்க முடியும்?

  6. மிராஸ்தார் கோபாலக்ருஷ்ண நாயுடுவை,மிராஸ்தார் ஈ.வே.ராமசாமி நாயுடு ஆதரித்ததில் வியபென்ன இருக்கிறது.ஈ.வே.ரா.சாமி தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பர் ஒன் பகைவர் என கடந்த காலத்தில் கருணாநிதியே எழுதியிருக்கிறார்.ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் ராபர்ட் க்ளைவை ஆற்காடு வீரர் என புகழ்ந்தது போல் நம்ம ஊர் திருடர் கழகத்தினர் ஈ.வே.ராவை வைக்கம் வீரர் என புகழ்ந்து தள்ளுகின்றனர்.ஊருக்கெல்லாம் ஜாதி மறுப்பு பேசிய ஈ.வே.ரா.குடும்பத்தில் ஒருவர் கூட கலப்பு திருமணம் செய்து கொண்டது கிடையாது.தங்களுடைய ஜாதியில் (பலிஜா)மட்டுமே திருமணம் செய்து கொண்டவர்கள்.தாழ்த்த பட்ட மக்களை கொடூரமாக ஒடுக்கியதில் பலிஜாக்களின் பங்கை ஈ. வே.ரா.ஒருபோதும் விமர்சித்ததில்லை.ஆனால்,ஒன்றுமில்லாத விசயங்களுக்கு அந்தணர்களை ஏசுவார்.தனது வாழ்நாளில் உருப்படியான எந்த ஒரு நல்ல காரியங்களுக்காகவும் ஈ.வே.ரா.போராடியதில்லை.பைசாவிற்கு பிரயோஜனமில்லாத ஹிந்தி எதிர்ப்பு,வடவர் (ஆரியர்)எதிர்ப்பு,அந்தண துவேசம்,ஹிந்துமத துவேசம்,என்று காலத்தை ஓட்டியவர்.இவரது மேற்படி பொழுதுபோக்கு கொள்கைகள் தற்காலத்தில் வேலைவெட்டி எதுவும் இல்லாத திருடர் கழகத்தினரை மட்டுமே கவரும்.சுயமரியாதையுள்ள எவரையும் கவராது.

  7. பிஸி மற்றும் ஓபிஸி கோட்டாக்காரர்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காகப் போராடியவர்தான் ரேஸிஸ்ட் ராமசாமி. அதிகப் பெரும்பான்மை சாதிகளானதால் அவர் பாப்புலர் ஆனார்.

    திராவிடர் கழகக் காரர்களைப் பொறுத்தவரை எஸ்.ஸி/எஸ்.டி. கோட்டாக்காரர்கள் வெறும் அடிமைகள். ஆனால், அவர்களை முன்னிறுத்தித் தங்களுக்குக் கோட்டா வாங்கிக்கொண்டு விடுவார்கள்.

    கோட்டா பிரச்சினைகளின்போது மட்டுமே எஸ்.ஸி/எஸ்.டி. வகுப்பினர் தேவைப் படுவார்கள். உபயோகப் படுத்திவிட்டுத் தூக்கி எறியப்படவே எஸ்.ஸி./எஸ்.டி. வகுப்பினர்.

    எப்போதும், ஆதிக்க சாதிகளால் இப்படித்தான் அவர்கள் ஏய்க்கப்பட்டு வருகிறார்கள்.

    .

  8. கீழ்வெண்மணி கொடூரம் மழுப்பபபட்டதில் இடதுசாரிகளின் பங்கு அசாத்தியமானது……

    அந்த பயங்கரத்தின் பின்னணியில் இருந்த சாதிவெறியை லாவகமாக மறைத்துவிட்டு அதை வெறும் வர்க்கப்போராட்டமாக திரித்துவிட்டனர்…..இன்றுவரை அப்படியே சாதித்தும் வருகின்றனர்…..அதன் சாதிய பின்னணியை கிளற முயன்ற திருமாவளவனை விரட்டியடித்து விட்டனர்…..

    கீழ் சாதிக்கார பசங்களுக்கு இவ்வளவுதூரம் ஆகிப்போச்சா ? என்ற [ இன்றும் நம்மில் பலர் அடிமனதில் இருக்கும் ]மேல்சாதிதிமிர்தான் அதற்கு முக்கிய காரணம்,…..அது வெறும் கூலி உயர்வு போராட்டத்திற்கான எதிர்வினை மட்டுமல்ல…..

    படுகொலை செய்யப்பட மக்களின் போராட்டத்தின் பின்னணியில் இடதுசாரிகள் இருந்தது உண்மை…..ஆனால் அதே காரணத்துக்காக அது மக்களின் நியாயமான எதிர்வினையை பெறவில்லை….[ கம்யூனிஸ்டுகளின் யோக்கியதை மக்களுக்கு தெரிந்ததால்]

    அன்றுமுதல் இன்றைய உத்தப்புரம் வரை இடதுசாரிகளின் குரல் மக்களிடம் எடுபடாததற்கு இதுவே காரணம் [ உத்தப்புரம் பிரச்சினைக்கு ஹிந்து இயக்கங்களால் சமரசம் ஏற்ப்பட்டது ]…..” கம்யூனிஸ்டுகள் கால் வைக்கும் இடம் விளங்காது ” என்பது மக்களின் நம்பிக்கை…..

  9. கீழ்வெண்மணி கொடுமை நடந்தபோது அதற்க்கு நீதி விசாரணை வேண்டாம் என்று சட்டமன்றத்தில் அறிவித்தனர் மார்க்சிஸ்டுகள்.

  10. ###தேசீயப் பத்திரிகைகளுக்கு மிகக நிதி வழங்கியிருந்தார். விடுதலைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை. இது பெரியாருக்கு மிக்க சினத்தை மூட்டியது.###
    அப்ப அதான் முக்கிய பிரச்சனை !! பெரிச பத்தி புரிஞ்சிக்க இது ஒண்னு போதும் !!

  11. .” கம்யூனிஸ்டுகள் கால் வைக்கும் இடம் விளங்காது ” என்பது மக்களின் நம்பிக்கை….. இது மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையும் ஆகும்.

    ௧. கம்யூனிசம் இயற்கைக்கு எதிரானது.

    ௨. மனித இயல்புகளுக்கு எதிரானது.

    ௩. மனித நேயத்துக்கு எதிரானது.

    ௪. மக்களாட்சிக்கு ( ஜனநாயகம்) எதிரானது.

    ௫.தனிமனித சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானது.

    ௬.ஒரு கட்சி எதேச்சாதிகாரத்துக்கு வழிவகுப்பது.

    ௭. உற்பத்தி பெருக்கத்துக்கு பல தடைகளை ஏற்படுத்தி , மனித வாழ்வை இருள்மயமாக்குவது.

    ௮. மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த எதிரி.

    கம்யூனிசம் உலகில் எங்கும் இனி தலை தூக்காது.

  12. Let us look at S. Gurusamy’s piece in Kudiarasu, the official organ of Periyar’s movement, condemning Gandhi’s fast against the proposal that untouchables should have a separate electorate.

    The article was titled, ‘Gandhi’s Suicide’ (quoted in S.V. Rajadurai and V. Geetha, p. 186). Gurusamy writes: ‘Near Devakottai Nadars and Maravars of your great Hindu religion are beating up Adi-Dravidars, attacking women for covering their breasts and setting fire to huts. Don’t you preach to them the greatness of your Hinduism?

    The Nadars, who were once treated as untouchable, (even as unseeable) have been involved in violence against untouchables in Tamil Nadu. But the devotees of Periyar hide this truth and instead claim that he fought for the untouchables in Vaikkom.

    Periyar never did anything for the untouchables with as much commitment as he worked to promote khadi in every nook and corner of Tamil Nadu or to cut 500 coconut trees from his land as part of the agitation against toddy drinking.

    When he spoke about the problems of untouchables, he equated those with problems faced by non-brahmins.

    Since he viewed the problem of untouchability as equivalent to the treatment of sudras by brahmins, he could say:‘There is no difference between ourselves and you in terms of our philosophy of social life.’ This same is the problem in temples too, he said, adding that the term ‘Sudra’ is more humiliating than the word ‘Pallar’ or ‘Parayar’. By saying this, he usurped from the untouchables even the position of victims.

    Instead of rising against the atrocities of caste Hindus, he took steps only to pacify them.

    Around the time Gurusamy wrote in Kudiarasu about Adi-Dravidas being beaten by Nadars and Maravars, Periyar justified their actions: ‘I am agitated to hear about the atrocities done to Adi-Dravidars by other castes. But, when I think of their actions, I also understand that they are not responsible for what they have done. They are doing this because of the faith they have in their religion; because of the idea of karma and fate, that is all.

    He even accused the untouchables, who rose against such atrocities, saying: ‘You think only at that moment – as great injustices and do not reflect on why it happens, what is the reason behind this, and what we can do to purge it. You are not ready to listen to those who take steps and join with them in their action.’

    Did he ever conduct a protest opposing the caste Hindus? Did he ever provide any help to the untouchables? Or did he at least create a crisis in the attitude of caste Hindus?

    ‘No’ is the only answer to all these questions that anyone who has a conscience will give.

  13. இக்கட்டுரை மூலம் ஈ.வெ. இராமசாமி என்பவர் எந்த விஷயத்திலும் ஞாயமாகவோ நேர்மையாகவோ நடந்துகொண்டவர் அல்லர் என்று நிரூபணமாகியுள்ளது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை (தமிழகத்துக்கு) வேண்டும். எது எப்படியானாலும், அக்கிரமமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இறை நீதி வழுவாது. இத்தகைய கொடூரங்கள் எந்தக் காரணத்தாலும் இந்திய மண்ணின் எந்தப் புள்ளியிலும் இனி நடக்கக் கூடாது. இறை அருளை நாடுவோம்.

  14. கீழ்வெண்மணி பிரசினையின் அடிநாதமே விவசாய கூலி , முதலில் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் பகுதியில் இருந்து மேல்சாதிகாரன் ஒருவனை கொன்றதுதான். இது வரலாற்றில் மறைக்கப்பட்டு இருக்கிறது. இது அவ்வூர் மக்களுக்கு நன்கு தெரியும்.

  15. இந்த பெரியார் யார் உண்மையில்? தமிழனே கிடையாது, அனைத்தும் திருட்டு தனம். இவரை பின்பற்றுபவர்கள் அனைவரும் நீதி நேர்மை நியாயம் என்ற வார்த்தைகளை அறியாதவர்கள். காசு பணம் ஒன்றே அவர்களின் பிரதானம்.பெரியாரின் அடிவருடிகளை பெரியாரே நம்பாமல் தான் மணியம்மையை திருமணம் செய்து மொத்த சொத்துக்களுக்கும் மணியம்மையை தனது தள்ளாத காலத்தில் நியமித்தார். ஏனென்றால் பாம்பின் கால் பாம்புஅறியும்.

  16. பெரியாரும் அவரை பின்பற்றுபவர்களும் ஊரை ஏமாற்றி பிழைக்கும் கும்பல். இந்த திருடர் கழகத்திற்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன எல்லாம் உழைப்பால் வந்ததா என்ன. கிறிஸ்தவ மிஷினரிகள் எப்படி மூளை சலவை செய்து மத மாற்றம் செய்வார்களோ அதே போல தான் பலரை ஏமாற்றி சொத்தை பிடுகிகொண்ட திருடர் கூட்டமே.

  17. படிப்பதற்கு அதிர்ச்சியாக உள்ள சம்வபம். ஆனால், இன்றும் கம்முநிச்டுகள் திராவிடர் கட்சிகுளடன் ஏன் கை கோர்கின்றனர்? ஹிந்து எதிர்ப்பு என்ற ஒரே கோட்பாட்டில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *