நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்

மாலிக் காஃபூர் படையெடுப்பை பற்றியும் அதன் மூலம் நமது கோயில்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன் என்பதை பற்றியும் பலர் அறிந்திருப்பீர்கள். தங்களது மதக் கடமையாக ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அந்த பேரழிவுகளையும், கொடுமைகளையும் அரங்கேற்றினார்கள் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

ஆனால் நமது கலாசாரத்தையும், சமயத்தையும் பாதுகாக்கும் பணிக்காகவே உருவாக்கப் பட்ட அரசுத் துறைகளே கோயில் பாரம்பரியத்தை திட்டமிட்டு சிதைக்கும் கொடுமை இப்போது பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. காந்தியின் பெயரை வைத்து கொண்டு காந்தியத்தை அழிக்கும் நேருவின் வம்சத்தை போல், அறத்தை காக்க நமது மன்னர்களாலும் சான்றோர்களாலும் உருவாக்கப்பட்ட கோயில்களை, அதே அறத்தின் பெயரால் கிறித்துவ பாதிரியார் பெற்றெடுத்த திராவிட இனவாத அரசியல் வியாதிகள் நமது கோயில்களை திட்டமிட்டு அழித்து கொண்டு இருக்கிறது. அந்த கொடியவர்களின் கொடுங்கோல் நிர்வாகவத்தில் நடந்த அநியாயங்கள் ஏராளம்.
ஐம்பொன் சிலைகளை வெளி நாட்டுக்கு கடத்தினார்கள். கோயில் நகைகளை வெளி நாட்டுக்கு கடத்தினார்கள். கற்சிலைகளை வெளி நாட்டுக்கு கடத்தினார்கள். தற்பொழுது கோயிலையே பெயர்த்தெடுத்து கடத்த ஆரம்பித்துவிட்டார்கள் இந்த திராவைகள்.

கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் நசியனூரில் தான் இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்து உள்ளது. நசியனூர் என்ற இந்த பழம் பெருமை வாய்ந்த தலம் ஈரோட்டில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் கோவை – சேலம் நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கிறது இந்த நசியனூர். திருதலத்தில் ஸ்ரீ முத்துமரகதவல்லி சமேத மூவேந்திர ஈஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஈஸ்வரன் கோயிலின் இடதுபுறம் கிழக்கு நோக்கி ஸ்ரீ பூதேவி நீதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் அருள்பாலிக்கிறார். இந்த பல ஆயிரம் வருட பழமையான கோயில் ஹிந்து சமய அறநிலை துறையின் கட்டுபாட்டில் உள்ளது. மூவேந்தர்களால் கட்டப்பட்ட இந்த சிறப்பு மிக்க புண்ணிய தலம் அற(மற்ற) நிலையத் துறையின் அகோர பசிக்கு இரையாக்கி கொண்டு இருக்கிறது.

பல கோடி மதிப்புள்ள புராதான பெருமை மிக்க கோயில் மண்டபம் (திருடுவதற்கு முன்பு):

எத்தனையோ சிற்பிகள் கடும் உழைப்பில் உருவான விலை மதிப்பற்ற நமது பாரம்பரிய சொத்து இன்று களவாடப்பட்ட நிலையில்….

இத்தோடு விட்டார்களா இந்த படுவாவிகள்? இல்லை. பல நூற்றாண்டுகள் கம்பீரமாக நின்ற எனது இறைவன் முருக பெருமானுக்கு கட்டப்பட்ட கோயிலையே மொத்தமாக கொள்ளை அடித்து உள்ளனர். தற்பொழுது அரை நூற்றாண்டுக்கு கூட தாங்காத வகையில் சிமெண்ட் கற்களை வைத்து ஒரு போலி மண்டபத்தை கட்டி கொண்டு இருக்கிறார்கள் –

இந்த மண்டபங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட லாரிகளில் அழகாக வெட்டி எடுக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள். வடிவேல் ஒரு படத்தில் “ என்னோட கிணற காணோங்க” என்று சொல்வார். ஆனால் இங்கு உண்மையாகவே ஒரு பெரிய மண்டபம் பகலில் ஊர் மக்களை ஏமாற்றி சுட சுட வெட்டி பார்சல் செய்து உள்ளனர். ஆனால் இது எல்லாம் எதுவுமே தெரியாதது போல் இந்த இந்து சமய அறநிலை துறையின் நிர்வாக அதிகாரி கண்ணை மூடி கொண்டு இருந்துள்ளார். எத்தனையோ ஏழைகள் கொண்டு வந்து போடும் ஊண்டியல் பணத்தில் வயிறு வளர்க்கும் இந்த அதிகாரிகள் கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் உண்ட வீட்டிற்கே துரோகம் செய்து உள்ளனர்.

இதற்கு பிறகும் இவர்களின் அரக்க தனம் குறையவில்லை. கோயில் தூண்களை சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில் ’SAND BLASTING’ (மணலை சிலைகள் மீது தண்ணீர் போல் பீச்சி அடித்தல்) என்ற தடை செய்யப்பட்ட தொழில் நுட்ப முறையில் எத்தனை கோடி கொடுத்தாலும் செய்ய முடியாத கலை நயம் மிக்க சிலைகள் மட்டும் கோயில் மதிர் சுவர்கள் மற்றும் பழங்காலத்து தரவுகளை மழுங்கடித்து உள்ளனர். இதை பற்றிய ஆதார படங்கள் கீழே உள்ளன.

SAND BLASTING செய்வதற்கு முன்பு இருந்த கோயில் சுவர்கள் (கல்வெட்டுகள் இரண்டாம் அடுக்கில் உள்ளது)

SAND BLASTING செய்த பின்பு பொலிவு இழந்த நிலையில் ஓட்டை ஒடிசல்களுடன் கோயில் சுவர்கள்

சீரழிக்கப்பட்ட கோயில் சுவர்கள், SANG BLASTING தாக்குதல் தாங்க முடியாமல் உடைந்து விழும் கோயில் சுவர்கள் –

வரம் கொடுத்தவன் தலையில் கையை வைத்த பஸ்மாசுரனை போல கோயில் கருவரையிலேயே இவர்கள் தங்கள் ஊழலை கொண்டு சென்று உள்ளனர். கோயிலின் ஆகம தர்மம் மற்றும் அதன் புணிதம் கெடுக்கும் வகையில் கோயில் கருவறைக்குள் தர்மத்தை மீறி இவர்கள் கல்லா கட்டுவதற்காக டைல்ஸ் ஒட்ட போகிறார்கள். இதற்கான ஆதார படங்கள் கீழே….

கோயில் கருவரை மண்டபம் மற்றும் அதில் போடப் போவதாக சொல்லப்படும் டைல்ஸ் –

இதை பற்றிய மேலும் பல்வேறு படங்களுக்கு இந்த இணைப்பில் சொடுக்கவும்.

இத்தனை அநியாயங்களும் இந்து சமய அறநிலை துறையால் நியமிக்கப்பட்ட பல ஆயிரம் சம்பளம் பெறும் கோயில் நிர்வாக அதிகாரியின் முன்னிலையிலேயே நடைபெற்று உள்ளது. இந்த கிராம மக்கள் அப்பாவிகள் இது குறித்து எந்த தகவலும் அறியாமல் அறநிலை துறை எதோ அவன் காசு போட்டு நல்லது செய்கிறான் என்ற நினைப்பில் இருந்து விட்டுள்ளனர்.

திருக்கோயில்களின் வருமானத்தை ஏற்கனவே இந்த அறநிலையத் துறை கூட்டம் தின்று வயிறு வளர்த்து கொண்டு இருக்க தற்பொழுது அது போதாது என்று சில திருடர்களுடன் சேர்ந்து கோயில்களையே புனர் அமைக்கிறேன் என்ற பெயரில் திருடி கொண்டு இருக்கிறது. இவர்கள் வழி தனி வழி. அதாவது கொள்ளையர்களிடம் கோயில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பிறகு அவர்களை கொள்ளை அடிக்க வைத்து அதில் பங்கு வாங்கி கொள்வார்கள். நாளை ஏதாவது பிரச்சனை என்றாலும் கூட அந்த கொள்ளை அடித்தவனை கை காட்டி விட்டு இவர்கள் எஸ்கேப் ஆகி விடுவார்கள். படித்தவர்கள் அல்லவா? அவ்வாறு தான் இருப்பார்கள். இவர்களின் இந்த கபட நாடகத்தை அறியாமல் பல அப்பாவி பொதுமக்கள் இவர்களிடம் ஏமாந்து விடுகிறார்கள். பொது மக்கள் பார்வையில் கோயில் புணர் நிர்மானம் செய்யபடுகிறது என்பது போல தான் தெரியும். உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் இவர்கள் திருட்டுதனம் என்னவென்று…

அதாவது பெரிய கோயில்களில் வரும் பல கோடி வருமானத்தை ஏழை ஹிந்துகளுக்கும் அழியும் நிலையில் இருக்கும் நமது பாரம்பரிய விவசாயம், கலைகள், தொழில் நுட்பங்கள், வனவாசிகள் போன்ற மக்களுக்கு கொடுக்காமல் கோயில்களை நிர்மானம் செய்தேன் என்ற பெயரில் பல கோடிகளை ஒதுக்குகிறார்கள். இதில் அவர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

புணர் நிர்மானம் செய்கிறேன் என்று வசூல் வேட்டை நடத்தி அதில் கொஞ்சம் விழுங்கி மீதியை காண்ட்ராக்ட் விட்டு விழுங்கி விடுகிறார்கள். அது மட்டும் இன்றி பல கோடி மதிப்புள்ள புராதாணம் மிக்க சிலைகளை மற்றும் தூண்களை சேதப்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறி அதை கோயில்களில் இருந்து நீக்கி விடுகிறார்கள். இவ்வாறு நீக்கப்பட்ட சிலைகள் எங்கு போகும் என்று நான் சொல்ல தேவையில்லை.

அது மட்டுமா? மார்பல் போடுகிறேன் டயல்ஸ் போடுகிறேன் என்ற பெயரில் திருகோயிலின் ஆகமத்தை கெடுத்து தெய்வ சக்திக்கு குந்தகம் ஏற்படுத்தி கோயிலின் புணிதத்தை போக்கி விடுகிறார்கள். பாரமரிக்கப்படாத பூமியில் கருவேல மரங்கள் முழைப்பது போல், தெய்வ சக்தி இல்லாத மனதில் ஆப்பிரகாமிய மதமாற்றம் என்ற தீய சக்தி உள்ளே நுழைந்து விடுகிறது. கோயிலுக்கு வருமானம் வந்தால் அதை ஆக்கிரமிக்க ஓடி வரும் தண்டல்காரர்கள் பல ஆயிரம் வருட பழமையான கோயில்களை மருந்துக்கு கூட கண்டு கொள்வது இல்லை.

இது குறித்து எத்தனையோ கடிதங்கள், முறையீடுகள், காவல் துறை விண்ணப்பங்கள் செய்தாயிற்று. ஆனால் இந்த கொள்ளை கூட்டத்திம் மீது யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் மற்றும் ஆணையர்க்கு மனுக்களும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த அதிகார மற்றும் நிழல் உலக சக்திமிக்க கூட்டத்தை எதிர்த்து காவல் துறையில் யாரும் புகார் கொடுக்கவும் முன்வரவில்லை. அதன் பிறகு பல கட்ட போராட்டத்திற்கு பின்பு நல் உள்ளம் கொண்ட ஒரு சிலரது முயற்சியால் லஷ்மி நாராயணன் என்ற வக்கீல் மூலம் காவல் துறையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இவ்வளவு நடந்தும் கோயில் பணத்தில் தனது வயிற்றை நிரப்பி கொள்ளும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2 இலட்சம் கோடி கொள்ளை போனதற்கே ஒரு ரியேக்ஷனும் காட்டாத அதிகாரிகள் உள்ள நாட்டில் இந்த இரண்டு கோடி மதிப்புள்ள மண்டபங்களுக்கா விசாரணை செய்ய போகிறார்கள்!!!! ஆனாலும் எனக்கு ஒரு கேள்வி இதே போன்ற ஒரு நிலை கிறித்துவ மடாலயங்களுக்கோ அல்லது இஸ்லாமி மசூதிகளுக்கோ ஏற்பட்டு இருந்தால் இந்த அரசு இதே நிலையை எடுக்குமா?

நம்மால் முடிந்த வரை இதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். இந்த கட்டுரையை தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள். இதை download செய்து உங்கள் அலுவலக மக்களுக்கு அனுப்புங்கள். இதை அடிப்படையாக வைத்து நீங்கள் நேரடியாக தமிழக அரசிற்கு மின்னஞ்சல் அனுப்பலாம். சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அறநிலை துறைக்கு ஆணையருக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் தொலை பேசி மூலமாகவோ, FAX மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு விண்ணப்பம் செய்யலாம். ஆந்திராவை சேர்ந்த அமெரிக்கா வாழ் மக்கள் இது போன்ற முறையில் பல கோயில்களை காப்பாற்றியுள்ளனர். ஆதலாம் நாமும் இந்த முறை கடைபிடித்து நமது பாரம்பரிய அடையாளத்தை காப்போம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் மின்னஞ்சல்:
Shri Dr. V K Shanmugam, I.A.S. Email ID: collrerd@nic.in & Ph no: +91 424 2266700

காவல் துறை உதவி ஆணையாளர்:
Thiru.S.Panneerselvam,I.P.S Erode SP, E mail ID: sperode@gmail.com, Ph no: 04242261100

இந்து சமய அறநிலை ஆணையர், சென்னை:
E mail ID: tn.endowments@gmail.com, Ph No: 044-28334817

(பின் குறிப்பு: உலகில் எந்த தொலை பேசி எண்ணை தேடினாலும் வலைதளத்தில் கிடைக்கும். ஆனால் இந்து சமய அறநிலை துறையின் எந்த ஒரு உயர் அதிகாரியின் பெயரோ, அலுவலக முகவரியோ அல்லது தொலைப்பேசி எண்ணோ உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது)

Tags: , , , , , , , , , ,

 

32 மறுமொழிகள் நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்

 1. muthukumar on April 27, 2012 at 6:22 pm

  இதை குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு ராஜகோபால் அவர்களுக்கு அனுப்பவும்.
  அதில் பிரசுரம் செய்தால் அது சுமார் பத்து லட்சம் பேரைச் சென்றடையும்.
  பனையூர் கோயில் இப்படித்தான் சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட இருந்ததை அவர் எதிர்த்து எழுதியவுடன் இப்போது விழிப்புணர்வு வந்துள்ளது.
  குமுதம் ஜோதிடத்தை வெறும் ஜோதிட வார இதழ் என நினைத்து விட வேண்டாம்.அது நம் மதத்திற்கு பெரும் சேவை செய்து வருகிறது.

 2. ramesh on April 27, 2012 at 10:00 pm

  நான் எழுத நினைத்தேன். அதற்குள் திரு முத்துக்குமார் எழுதிவிட்டார். பத்து லக்ஷம் பேரில் எல்லா முக்கியமானவர்களும் அடங்குவர். இந்த sand balsting கொடூரத்தால் சிறப்பங்கள் எல்லாம் சொறி சிரங்கு பிடித்ததுபோல் உள்ளன. அது தடை செய்யப்பட்டது. ஆனல் இவர்கள் chemical wash என்று கணக்கு எழுதி ( அது இதைவிட காஸ்ட்லி ஆனால் பாதுகாப்பானது. வாட்டர் ப்ளாஸ்ட் கூட பாதுகாப்பானதுதான். எல்லாம் ஊழலுக்கு காசு பார்க்க. ஆதீனங்கள் கூட எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.அவர்கள் கோவில்களிலும் இதே கதைதான். தயவு செய்து இதைப் படிப்பவர்கள் எப்படியாவது நம் கோவில்களைக் காப்பாற்றுங்கள். கல்வெட்டுக்கள், miniature எனப்படும் குறும் சிற்ப்பங்கள் இவற்றில் பல செய்திகள் உள்ளன. அனைத்தையும் இவர்கள் பாழ் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

 3. மிக சிறப்பான அவசியமான கட்டுரை.

 4. Kamaraj on April 28, 2012 at 5:12 am

  பாவம் … அவர்கள் தாம் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

 5. KS on April 28, 2012 at 8:03 am

  எழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் sand blasting கொடுமையைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இத்தகைய கல்வெட்டுகள், புராதன கோவில் மண்டபங்கள் போன்றவற்றை எப்படி பராமரிப்பது என்று தொல் பொருள் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் என்று எதுவும் இல்லையா? அதை விடுங்கள். இந்தக் கொடுமையை செய்பவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இருக்காதா?

  முத்துகுமார் சொல்வது போல இந்தக் கட்டுரையை குமுதம் ஜோதிடம் போன்ற ஜனரஞ்சக இதழ்களுக்கு எடுத்து செல்வது அவசியம். பொது மக்கள் இதனால் கோவில்களுக்கு ஏற்படும் ஈடு செய்ய இயலாத பாதிப்பை உணர்ந்தால் நூற்றில் ஒருவராவது இதனை எதிர்க்க / தடுக்க வருவார்கள்.

 6. கோமதி செட்டி on April 28, 2012 at 8:21 am

  காமராஜ்,

  அவர்கள் தெரியாமல் ஒன்றும் செய்யவில்லை. எல்லாவற்றையும் தெரிந்தே தான் செய்து இருக்கிறார்கள். கோயில் நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு சட்டம் தெரிந்து இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாதவர்கள் கோயில் நிர்வாக அதிகாரியாக ஆகவே முடியாது.

  அது மட்டும் அல்ல.. கோயில் என்பது சர்ச் அல்லது மசூதி போன்று வெறும் வழிபாட்டு தளம் அல்ல. அது நமது உயிர், நமது பண்பாட்டின் அடையாளம், வெறும் நகைகள் மட்டும் உள்ள பொக்கீஷம் அல்ல,

  கோயில் கொடி மரம் தொடங்கி, சிலைகள், தல மரம், குளங்கள், கோபுரங்கள், கொடுக்கப்படும் பிரசாதம், பசுக்கள், சோலைகள், இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் குறிப்பிட்ட பிரசாதம். அந்த கோயிலுக்கான சடங்குகள் என அனைத்துமே அந்த பகுதியை பாதுகாக்கும் சக்தி.

  அது மட்டும் அல்ல சமயபுரம், காட்டழகர் கோயில், மாரியம்மன் கோயில் என அனைத்தும் காடுகளில் இருக்க வேண்டிய கோயில்கள். ஆனால் இந்த பரதேசிகள் மரங்களை வெட்டி சிமெண்ட் கட்டிடங்களை கட்டி பணம் சம்பாதிக்கீறார்கள்.

  இன்னும் சொல்ல போனால் இது போன்ற கோயில் அழிப்புகளின் பின்புறம் வழிமையான ஆப்பிராகாமிய கை கூலிகள் இருக்கிறார்கள் என்பதை நான் முழுமையான நம்புகிறேன்.

  சிதம்பரம் கோயிலை அரசாங்கம் எடுக்க போராடியது கிறித்திவ மற்றும் இஸ்லாமிய ஜிஹாதிகள் கூட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது மட்டும் அல்ல கோயிலுக்குள் ஒரு ஜிஹாதி வக்கீல் அத்து மீறி கூட்டத்தோடு உள்ளே நுழைந்ததும் நாம் தொலைகாட்சியில் கண்டது தான். கேட்டால் தமிழில் வழிபாடு நடத்த அனுமதி இல்லை என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இதை பரப்ப கிறித்துவ மீடியா வேறு..

  சிதம்பரம் கோயிலில் தினமும் மாலை 90 நிமிடங்கள் தேவாரப்பாடல் கோயில் முழுக்க கேட்கும் வகையில் ஒலிக்கப்படுகிறது. சமஸ்க்ருத மந்திரங்களை விட தேவாரப்பாடல் தான் அதிக நேரம் ஒலிக்கப்படுகிறது. ஆனால் சொல்வதோ தமிழில் பாட அனுமதிக்கவில்லை என்று…

  இதில் காமெடி என்னவென்றால் அங்கு ஓதுவார் என்று சொல்லு கொள்பவன் திமுக அரசியல் வியாதியின் முன்னாள் வாகன ஓட்டி. ஏன் அவர் ஓதுவார் ஆக முடியாத என்று கேட்கலாம். அந்த ஆளுக்கு ஒழுங்காக தேவாரத்தில் ஒரு பத்து பாடல்கள் கூட பாட தெரியாது.

  திருமாவளவன், அவனுடன் சேர்ந்து கோயில் தீவிரவாதம் செய்த கூட்டம் அந்த போலி ஓதுவாரை வைத்து பொது மேடையில் தேவாரப்பாடலை பாட சொல்லுங்கள்.

  அது சரி.. சம்பவத்திற்கு பிறகு அதாவது கோயிலை அறநிலை துறை எடுத்து கொண்ட பின்பு இந்த கூட்டம் எங்கு போனது… ஏன் தேவாரப்பாடலை இந்த போலி ஒதுவாரோ அல்லது திருமாவளவன் கூட்டமோ வந்து பாடவில்லை…

  சதாம் உசேன் அணு ஆயுதத்தை வைத்து இருக்கிறான் என்று சொல்லி ஆப்பிரகாமிய கூட்டம் ஈராக்கை ஆக்கிரமித்து விட்டது. பல ஆண்டுகள் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் இதை காரணம் காட்டி ஆக்கிரமித்தாயிற்று. பெட்ரோலையும் திருடி ஆயிற்று… அந்த சம்பவத்திற்கும் கோயிலை களவாட்டிய அறநிலை துறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

  இவ்வளவு திருட்டு வேலைகளை செய்யும் அறநிலை துறைகாரகள் அப்பாவிகள் அல்ல. என்னை பொருத்தவரை கோயிலை அழிக்கும் தீவிரவாதி கும்பல்.

 7. Keerthi on April 28, 2012 at 8:34 am

  கோமதி செட்டி, ஒரு மசூதியின் மீதோ, சர்ச்சின் மீதோ ஏதேனும் பிரச்சனை எழுந்தால் அந்த சமுதாய மக்கள் பொங்கி எழுகிறார்கள். கோவிலில் கை வைத்தால் இந்துக்கள் அதனை கண்டுகொள்வதே இல்லை. ராமரையும், பிள்ளையாரையும் செருப்பால் அடித்த போது யார் எதிர்த்தனர்? இதனை ஏன் என்று சற்று சிந்தித்துப் பார்க்கவும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ஆபிரகாமியம் என்று பேசக் கூடாது.

 8. ramesh on April 28, 2012 at 2:30 pm

  subject திசை மாறுகிறது. கோவில் பாதுகாப்புதான் முக்கியம். அதற்கு வழி வகை பற்றிப் பேசுவோம். ஏன் நீங்கள் ஒரு நாளைக் குறிப்பிட்டு – ஒரு மனுவை ஊர்வலமாக எடுத்துச் சென்று அற நிலையத் துறையிடம் ஒரு மனு கொடுக்கக் கூடாது. ஏன்இதை ஒரு கலாச்சார பண்பாடு ஊர்வலமாக – சொல்வதுபோல் எழுத்தாளர், மரபு சார் நிறுவனங்கள், சரித்திர ஆர்வலர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மனு கொடுக்கக் கூடாது. சேர்ந்து சென்றாலே ஒரு பயம் எல்லாருக்கும் வரும்

 9. கோமதி செட்டி on April 28, 2012 at 6:14 pm

  கீர்த்தி அவர்களே,

  இந்த கட்டுரை இந்து சமய அறநிலை துறை என்ன தமிழக அரசினால் உருவாக்கப்பட்ட அமைப்பில் பணி புரியும் அரசு அதிகாரிகளினால் ஹிந்து சமுதாயத்திற்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பை பற்றியது.

  எனது பின்னூட்டம் இந்த அறநிலை துறை எவ்வாறு ஒரு ரௌடி போல் செயல்பட்டு அரசியல் மற்றும் மாற்று மதத்தினர் உதவியோடு கோயில்களை களவாடுகிறார்கள் என்பதை பற்றியது.

  இதில் ஹிந்து சமுதாயம் பொருப்புடன் இருக்கிறதா இல்லையா என்பது கேள்வி அல்ல.

  இந்திய அரசியல் சட்டபடி தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை சரிவர செய்யாத ஒட்டு மொத்த ஒரு துறையை பற்றியது.

  கடமையை செய்ய தவறியதோடு மட்டும் அல்லாமல் தான் ஒரு அரசு ஊழியர் என்பதையும் மறந்து மத உணர்வுகளை புண்படுத்தி களவு போனதற்கு உடந்தையாக இருந்த ஒரு பொறுப்பற்ற அறநிலை துறை அதிகாரி பற்றிய கட்டுரை.

  இந்த கோயிலில் நடந்த கொள்ளை ஹிந்து சமுதாயத்திற்கு மட்டும் இழப்பு அல்ல.. இது ஒட்டு மொத்த இந்தியாவிற்கான இழப்பு…

  இதை நான் சொல்லவில்லை. இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது.

  ” It shall be the duty of every citizen of India to value and preserve the rich heritage of
  our composite culture” – Article 51 A (F) of the Constitution of India.”

 10. A.K.Chandramouli on April 28, 2012 at 9:49 pm

  கோமதி செட்டி அவர்களே உங்கள் கட்டுரையை விட பின்னூட்டங்கள் காரமாக உள்ளன. நடந்த விஷயத்தின் ஆத்தங்கத்தை உணர வேண்டும். இது போன்ற விஷயங்கள் நடந்த பின்னும் உள்ளூர் மக்கள் எழுச்சி யுற்றால் ஈரோட்டில் கிடைத்தது போன்ற வெற்றி கிடைக்கும். ஹிந்து மக்களின் எழுச்சிதான் இன்றைய தேவை.

 11. g ranganaathan on April 28, 2012 at 10:28 pm

  கோயில் நிர்வாக அதிகாரி என்பவர் உண்டியல் பணத்துக்குதான் பொறுப்பு. வருமானம் அற்ற கோயில்களுக்கு அங்குள்ள பட்டரோ குருக்களோ தான் பொறுப்பு. திருப்பணி செய்ய வேண்டுமானால் பணம் (அ)மற நிலையத்துறை கொடுக்காது அதற்கு உபயதாரர்களை தேடி அலையவேண்டும். வெறும் ஒரு சதவீத நிர்வாக அலுவலர்களே உண்மையான ஈடு பாட்டோடு கோயில் நிர்வாகங்களை கவனிக்கின்றனர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பர். அதே போல் நல்ல நிர்வாக அலுவலர் அமைவதும் அந்தக் கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனின் “ஜாதக பலமே””. இந்தக் கட்டுரையை படிக்கும் போது மனது கொதிக்கிறது. ஆனால் நம் ஹிந்து மகா ஜனங்கள் என்ன தாலிபானா உடனே துப்பாக்கியை தூக்குவதற்கு? தீதும் நன்றும் பிறர் தர வாரா! என்பது துல்லியமான உண்மை. எப்பொழுது தமிழ் பெருங்குடி மக்கள் கேடு கேட்ட கழகங்களின் பின்னர் செல்ல ஆரம்பித்தனரோ அன்றே இதுபோன்ற கொள்ளைகள் அரங்கேறத் துவங்கிவிட்டன. ஒரு வித்தியாசம் தமிழி(ஈ)னத் தலைவரின் ஆட்சியில் தலைவிரித்தாடும் தமிழ் அம்மா(!) ஆட்சியில் திரைமறைவில் நடக்கும். கோயில் மடைப்பள்ளியில் மசால் வடை தோசை ஆர்டர் பண்ணிய அதிகாரிகளும் அறங் காவலர்களும்(?) இந்த தமிழ் கூறும் நல்லுலகில் உண்டு.

 12. g ranganaathan on April 28, 2012 at 10:34 pm

  கம்யுனிஸ்ட் கேரளத்தில் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளுக்கு கோயில் நடைமுறைகள் ஆகமங்கள் பற்றிய அறிவு அதிகமிருக்கிறது. விதிமுறை மீறல்கள் அவ்வளவாக கிடையாது என்பது எனது அனுபவம்.

 13. கோமதி செட்டி on April 29, 2012 at 9:34 am

  \\கோயில் நிர்வாக அதிகாரி என்பவர் உண்டியல் பணத்துக்குதான் பொறுப்பு. வருமானம் அற்ற கோயில்களுக்கு அங்குள்ள பட்டரோ குருக்களோ தான் பொறுப்பு.\\

  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அறநிலை துறை பொருத்தவரை பணம் தான் முக்கியம். அவர்கள் கோயிலை வகைப்படுத்தியதே பணத்தை அடிப்படையாக வைத்து தான். பாடல் பெற்ற ஸ்தலம் என்றோ, பாசுரம் பெற்ற ஸ்தலம் என்றோ வகை படுத்துவது கிடையாது.

  தாங்கள் சொன்னதில் ஒரு சிறு திருத்தம். அறநிலை துறை பிற கோயில்களில் உள்ள பணத்தை எடுத்து புதிய கோயில்களுக்கு திருப்பணி செய்கிறார்கள்.

  அது மட்டும் அல்ல. புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். அதாவது ஆதிவாசி மற்றும் தலித் கோயில் புணர் நிர்மானத்திற்கு 500000
  உதவி தொகை…

  வனவாசிகளின் வழிபாட்டிற்கு முதலில் தேவை வனம். அதுவே இவர்கள் வெட்டி நாசம் செய்கிறார்கள். அதன் பின்பு இவர்கள் பணம் எதற்கு?

  அடுத்து உண்மையில் இவர்கள் பணம் கோயில்களுக்கு உதவி தொகையாக போனால் நல்லது தான். ஆனால் இவர்கள் உதவி செய்கிறேன் என்ற பெயரில் பாரம்பரிய கோயில்களில் டையல்ஸ் மற்றும் விளக்குகளை போட்டு ஏதோ ஜவுளி கடை பொம்மை போன்று வைத்து இருக்கிறார்கள்.

  பொதுவாக கிராம புற பகுதிகளில் (தலித் கோயில்களையும் சேர்த்து) உள்ள தெய்வங்கள் சக்தி வாய்ந்த உக்கர தெய்வங்கள், அந்த கோயில்களின் சாங்கியத்திற்கு முதல் தேவை சிமெண்ட் கட்டிடமோ அல்லது மின்சாரமோ கிடையாது. அந்த கோயில் உள்ள இடம், இயற்கை சூழல், நீர் இருப்பு மற்றும் தெய்வ சக்தி மிக்க வனங்கள். ஆனால் அதை எல்லாம் பாதுகாக்காமல் வெறும் சிமெண்ட் கட்டிடத்தை கட்டி கொடுத்து என்ன பயன்.

  கிழிந்த ஆடை அணிந்து இருந்தாலும் உயிர் இருக்கும் உடலுக்கு தான் மதிப்பு

  தங்க நகைகள் பூட்டி பட்டு சட்டை போட்டாலும் உயிர் அற்ற உடல் மதிப்பானது கிடையாது.

  இவர்களின் இது போன்ற நடவடிக்கையால் பல நேரங்களில் அம்மன் கோயிலை விட்டு சென்று விடுகிறாள். அது மட்டும் அல்ல இது போன்ற தவறான செய்கையினால் பல தீயவிசயங்களும் நடக்கின்றன. இது எனது நேரடி அனுபவம்.

 14. சோழன் on April 29, 2012 at 9:46 am

  சரியான நேரத்தில் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை

  \\கோயில் மடைப்பள்ளியில் மசால் வடை தோசை ஆர்டர் பண்ணிய அதிகாரிகளும் அறங் காவலர்களும்(?) இந்த தமிழ் கூறும் நல்லுலகில் உண்டு.\\

  இது போன்ற விசயத்தை நான் கூட கேள்வி பட்டேன்.

  சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிவன் கோயிலில் நிர்வாகத்தில் இருந்த மூதேவியின் சகோதரி பெயர் கொண்ட ஒரு பெண் மடப்பள்ளியில் இறைவனுக்கு பிரசாதம் படைக்கப்படும் முன்பு ருசி பார்ப்பாளாம். இதை கேள்வி கேட்க சக்தி அற்ற நிலையில் அதை இறைவனுக்கு படைக்காமல் சிவாச்சாரியார்கள் ஓரமாக வைத்து விடுவார்களாம். இது பல நாட்கள் நடந்து கொண்டு இருந்ததாம்.

 15. பூவண்ணன் on April 29, 2012 at 11:54 am

  பத்ரிநாத் முதல் இந்திய எல்லையில் உள்ள கோவில்கள் வரை சென்றவன் என்ற முறையில் தமிழகத்தில் தான் பெருமளவு கோவில்கள் நல்ல நிலைமையில் புராதன நிலையில் இருக்கின்றன என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்
  பத்ரிநாத் கோவிலில் உள்ள வெந்நீர் ஊற்று சிமெண்ட் தொட்டி போல கட்டப்பட்டு கண்ணுக்கே தெரியாது.கோவிலில் மூலவருக்கு 20 அடி அருகில் வரை கடைகள் உண்டு.ஜோஷிமத்தில் உள்ள ஆதிசங்கரர் த்யானம் செய்த கோவில்,குகை எல்லாம் டைல் ஒட்டி புது கோயில் போல தான் உள்ளது
  ஸ்ரீநகரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட கோவிலின் நிலையம் அதே தான்.
  அருகிலுள்ள ஆந்திரத்தில் ஸ்ரீகுர்மம் போன்ற புராதன ஆமை வடிவ மூலவர் கோவிலிலும்(அந்த கோவிலில் ஆமைகள் வளர்க்கபடுகின்றன )கருவறை உள்ளே கூட அனைவருக்கும் அனுமதி தரும் ஒரே தென்னிந்திய கோவில் டைலிங் வேலை பெரும்பாலும் முடிந்து விட்டது.ஆயிரகணக்கான வருட பழமையான ஓவியங்களின் முன்னே புது ஓவியங்கள் வைத்து பழையவற்றை அழித்து விட்டனர்.
  எல்லா சாதியினரும் கோவில்களின் அறங்காவலர் /SO ஆவதை பார்த்து வரும் வயிற்ரேரிச்சலே இந்த கட்டுரை.எங்கோ ஓரிரு இடத்தில நடக்கும் தவறுகளை மொத்த அறநிலைய துறையின் தவறாக காட்டுவது சரியல்ல.
  அரசு அறநிலைய துறையை கையில் எடுக்காத மாநிலங்களில் அவை எந்த சாதிகளின் கையில் இருக்கிறது/அங்கு வேலைகளுக்கு இருக்கும் தீண்டாமை/அன்னதானம் கூட சாதி பார்த்து தனித்தனியாக நடப்பதை பார்த்தால் அறநிலைய துறையின் பயன்கள் புரியும்

 16. g ranganaathan on April 29, 2012 at 3:48 pm

  பூவண்ணன் அவர்களே ! எல்லா சாதியினரும் அறங்காவலர்கள் ஆவதில் இங்கு ஒன்றும் யாருக்கும் ஆட்சேபனை இல்லை ஆனால் பதவியை வைத்துக்கொண்டு செய்யும் அதிகார வரம்பு மீறல் இங்கு நிறைய. சாராபாய் நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை விட்டு விட்டு பெற்றோருடன் இருக்கவேண்டும் என்று ஒருவர் அறநிலையத்துறையில் கோயில் நிர்வாக அலுவலர் ஆனார். நேர்மையாக செயல்பட்டார். விதிமீறல்களுக்கு இடம் இல்லாமல் செயல்பட்டார். கோயில் அர்ச்சகர்கள் நல்ல காலம் பிறந்தது என்று நினைத்தனர். ஆனால் அரசியல் செல்வாக்கும் சாதிச் செல்வாக்கும் அவரை இடம் மாற்றியது. அதில் ஈடுபட்டவர்கள் அந்தணர்களோ மற்ற உயர்சாதியினரோ அல்ல. ஆகம விதிகளை அறியாததாலேயே உபயதாரர்கள் தலையை தடவி எல்லா இடத்திலும் டைல்ஸ் போட்டு தெருமுனை டீக்கடை போல ஆக்கிவிடுகின்றனர். இதில் கமிஷன் கண்றாவிகளும் உண்டு. வயிற்றெரிச்சல் கட்டுரை என்பது சரிதான். அறநிலையத் துறை பெயருக்கேற்றவாறு இருந்தால் இந்தக் கட்டுரைக்கே அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ள சாதாரண மூளையிருந்தால் போதும். நம் மாநிலத்தில் சரியாக உள்ளதா என்பதுதான் விவாதத்துக்குரியது. மற்ற மாநிலங்களை பற்றி கவலைப்பட அங்கு அறிவுஜீவிகள் நிறையவே உள்ளனர்.

 17. ramesh on April 29, 2012 at 10:37 pm

  புகழ் பெற்ற தக்கோலம் உட்பட பல கோவில்களில் இந்த சண்ட ப்லச்டிங்/டைல்ஸ் அக்கிரமம் நடக்கிறது

 18. கோமதி செட்டி on April 29, 2012 at 10:50 pm

  பூவண்ணன்,

  அடுத்து நீங்கள் சொன்ன கோயில்களுக்கு எல்லாம் நானும் சென்று இருக்கிறேன். அந்த கோயில்கள் இந்த அளவுக்கு சிதைந்து போனதற்கு முக்கிய காரணம் 250 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜிஹாதி கூட்டம் தான் என்பது அடிப்படை வரலாற்று அறிவு இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த விசயம்,

  செக்யூலர் வியாதியான காங்கிரஸ் கட்சி செய்த அநியாயத்திலும் பல கோயில்கள் சிதலமடைந்து விட்டன. அடுத்து ஆந்திர கோயில்கள் அனைத்து ஆந்திர அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமான விசயம்.

  \\இந்த கட்டுரை.எங்கோ ஓரிரு இடத்தில நடக்கும் தவறுகளை மொத்த அறநிலைய துறையின் தவறாக காட்டுவது சரியல்ல\\

  ஒரு கோயிலையே எடுத்து திருடி இருக்கிறார்கள். இது அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் உள்ள விசயமா? உங்கள் வீட்டில் திருடன் புகுந்து உள்ளே உள்ளவற்றை எல்லாம் திருடினால் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக திருடுகிறார்கள் என்று விட்டுவிடுவீர்களா?

  கோயில் ஹிந்துகளின் சொத்து அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். சாதி சண்டைகள் ஏதேனும் ஏற்பட்டாலும் அதை நாங்களே பேசி சரி செய்து கொள்வோம், நடுவில் பஞ்சாயத்து செய்ய எந்த ஆப்பிரகாமிய அடிவருடியும் எங்களுக்கு தேவையில்லை…

  நான் எழுதிய தலைப்பு என்ன? நீங்கள் சொல்லும் விசயம் என்ன? இங்கு எந்த இடத்திலும் நான் சாதியை பற்றி பேசவில்லை. சாதியை பற்றிய விவாதத்திற்கு தனி தலைப்பு உள்ளது, அதில் வாருங்கள் தாராளமாக விவாதிக்கலாம்.

 19. குமரன் on April 30, 2012 at 7:51 am

  தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?

  http://atheismtemples.wordpress.com/2012/03/24/temple-looting-land-grabbing-idols-smuggling-jewels-stealing/

 20. ramesh on April 30, 2012 at 1:02 pm

  தமிழ் ஹிந்து வலைத்தளத்தின் மிகப்பெரிய பிரச்சினயியே அவர்கள் எதையும் முழுமையாகச் செய்யமாட்டீர்கள். இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை விட்டுவிட்டு பழைய பல்லவிக்கே போய் விட்டீர்கள். இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் சென்று அர நிலையத்துறைக்கு செல்வோமா? ஏதேனும் ஒரு தொலைபேசி என் கொடுங்கள். நாம் ஒன்றிணைவோம். அதைவிட்டுவிட்டு வேறு எல்லாம் பேசுகிறீர்கள்.

 21. பூவண்ணன் on April 30, 2012 at 2:16 pm

  கோயில் ஹிந்துகளின் சொத்து அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். சாதி சண்டைகள் ஏதேனும் ஏற்பட்டாலும் அதை நாங்களே பேசி சரி செய்து கொள்வோம், நடுவில் பஞ்சாயத்து செய்ய எந்த ஆப்பிரகாமிய அடிவருடியும் எங்களுக்கு தேவையில்லை…

  அறநிலையதுறையை உருவாகியது யார்.மக்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசு தானே.நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றால் யார் அந்த நாங்கள்.யார் ஹிந்து என்று யார் முடிவு செய்வது.நீங்கள் தூற்றும் ஆபிரகாமிய அடிவருடிகளுக்கு தான் அதிக ஆதரவிருக்கிறது ,செய்க்கிறார்கள் என்பதை மறந்து விட்டீர்களா
  ஒட்டுமொத்தமாக அறநிலைய துறையை குறை சொன்னதால் எழுதிய பதில் அது.பத்ரிநாத் கோவிலுக்கு எந்த ஜிஹாதி வந்தது.ஹிந்து அமைப்புகளின் கீழ் இருக்கும் கோவில்களில்(ஸ்ரீநகரில் இருக்கும் கோவில் ராஜ பரமபரையை சேர்ந்த கரன் சிங் தலைமையிலான ஹிந்து குழுவிடம் தான் உள்ளது)கடந்த சில ஆண்டுகளில் நடக்கும் முட்டாள்தனமான புதுப்பித்தல் பணிகளை பற்றி கூறினால் 250 வருடத்திற்கு முன் நடந்தது என்று கூறுவதை என்ன என்று சொல்வது.
  பணம் செலவழித்து பல முட்டாள்கள் பழைமையின் விலை புரியாமல் செய்யும் முட்டாள்தனம் மற்ற மாநிலங்களில் வெகு அதிகம்.வடிவேலு ஒரு படத்தில் 200 வருட கடிகாரத்தை உடைத்து விட்டாயே என்றவுடன் அப்பாடா நல்ல வேலை நான் கூட புதிதோ என்று நினைத்தேன் என்பதை போல.பழமை வாய்ந்த திருவந்திபுரம் கோவிலில் புராதன சிற்பங்களின் மேல் பத்தாவது,பனிரெண்டாவது தேர்வு எண்களை எழுதுவது யார்.ஒரு சிறு இடம் கூட விடாமல் கோவில் முழுவதும் அப்படி செய்வது பக்தர்கள்.கோவில் குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் .ஷாம்பூ கவர்கள் ,கங்கையில் உடல்களை தூக்கி போடுவது போன்றவற்றை செய்வது யார்.
  தங்க பொற்கோவிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னதானம் சாப்பிட்டாலும் ,வழிபட்டாலும் கோவில் சுத்தமாக இருப்பதற்கு காரணம் பக்தர்கள்.அவர்களை போல மாறினால் தான் கோவில்கள் பொலிவோடு விளங்கும்.தமிழக பக்தர்கள் மற்ற மாநில பக்தர்களை விட சற்று மேல் என்பதால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நம் கோவில்கள் பரவாயில்லை.
  கோவில்களின் புதுப்பித்தலுக்கு உதவும் கோவிலின் பெயரை விட உபயம் என்று பெயரை பெரிதாக விளம்பரபடுத்தும் மக்களின் மனநிலை தான் நடக்கும் குளறுபடிகளுக்கு முழுகாரணம்.

 22. ramesh on April 30, 2012 at 4:11 pm

  முதல் முறையாக நானும் பூவண்ணன் சாரும் ஒத்துப் போகப் போகிறோம். கடந்த வருடம் என் ஆராய்ச்சிக்காக திருவெரும்பூர் கோவிலில் சிற்பபங்களை பதிவு செய்து கொண்டிருந்தேன். இந்தக் கோவில் தொல்லியல் துறை வசம் இருக்கிறது. அப்போது உள்ளூர் பக்தர்கள் சிலர் என்னிடம் இதை எப்படியாவது தொல்லியல் துறையிடம் இருந்து எடுத்துவிட வேண்டும் என்றார்கள். நான் ஏன் எனக் கேட்டபோது – கோவில் develop ஆக வேண்டும் என்றார்கள். develop ஆ என்றால் – ஆமாம் – இங்க எல்லாம் பெயிண்ட் அடித்து – டைல்ஸ் ஒட்டி – லைட் போட்டு என்று அடிக்கினார்கள். நான் ஐயா இது ஒன்றும் செய்யாமலே ஆதித்த சோழன் காலம் முதல் 1100 வருஷமா அப்படியே இருக்கு. நீங்க ஒன்ணும் பண்ணாமலே இன்னும் 1000 வருஷம் நிக்கும்னு சொன்னேன். இந்த திருப்பணி பைத்தியமும் குறையணும். ஆனானப்பட்ட ராஜராஜன், ராஜேந்திரன், சுந்தரபாண்டியன், கிருஷ்ணதேவ ராயன் எல்லாம் இந்த கல்லு தரையில நின்னானுங்க.. நம்ம நிக்க மார்ப்ளும், டைல்சும் வேணுமா? அதுவும் நெறய கோவில்ல tiles போட்டதால நாம மேலயும் -கருவறைல சாமி கீழையும் இருக்கும்.

 23. கோமதி செட்டி on April 30, 2012 at 4:17 pm

  பூவண்ணன்,

  அசட்டுதனமான பதில். காஷ்மீரில் ஹிந்துகள் வாழ்வாதரமே நாசமாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு கோயில்களின் நிலை கேட்கவே தேவையில்லை.

  நீங்கள் தெரிந்து தான் பேசுகிறீர்களா? இல்லை எதோ உளற வேண்டும் என்று உளறீ கொட்டி கொண்டு இருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

  தற்பொழுது கொள்ளை போன பல கோடி மதிப்புள்ள கலை பொக்கிஷத்தை மீட்க மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அறநிலை துறை அதிகாரிகளுக்கு சட்டப்படி தண்டனை தர வேண்டியே இந்த பதிவு எழுதப்பட்டது.

  காஷ்மீரில் குண்களை வைத்தே மக்கள் கொல்லப்படுகிறார்கள், நமது ஊரில் கத்தியால் தானே குத்த செய்கிறார்கள். அதனால் அதற்கு இது எவ்வளவோ மேல் என்ற விதத்தில் சொல்வதோடு மட்டும் இன்றி அதற்கு ஆதரவும் தருவது போல் உள்ளது.

  அடுத்து பல கோடி அளவிளான பணம் அரசு ஊழியர்களுக்கு சம்மளமாக கோயில்களில் இருந்து கொடுக்கப்படுகிறது.

  இந்திய மற்றும் அறநிலை துறை சட்டப்படி கோயில்களை பாதுகாப்பது அறநிலை துறை அதிகாரிகளின் கடமை.

  மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது இங்கு கேள்வி அல்ல… கொடுத்த காசுக்கு ஊழியர்கள் வேலை செய்கிறார்களா என்பது தான் கேள்வி..

  மீண்டும் மீண்டும் விவாதத்தை திசை திருப்பவது நடந்த பல கோடி மதிப்பிலான சொத்துகள் கொள்ளை போனதை ஆதரிப்பது போல் உள்ளது.

  \\தங்க பொற்கோவிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னதானம் சாப்பிட்டாலும் ,வழிபட்டாலும் கோவில் சுத்தமாக இருப்பதற்கு காரணம் பக்தர்கள்.\\

  நீங்கள் ஏன் இஸ்கான், சாய்பாபா, மேல்மருவத்தூர், பிள்ளையார் பட்டி, ஜக்கி வாசுதேவ் போன்ற தளங்களுக்கு சென்றது இல்லையா?

  அந்த கோயில்கள் எல்லாம் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன். மேல் மருவத்தூர் எத்தனை அற்புதமாக பராமரிக்கபடுகிறது.

  \\.கோவில் குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் .ஷாம்பூ கவர்கள் ,கங்கையில் உடல்களை தூக்கி போடுவது போன்றவற்றை செய்வது யார்.\\

  இதை எல்லாம் கண்கானித்து பராமரிக்க தான் பல கோடி சம்மளத்தில் இவர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்கள். கொடுத்த சம்பளத்திற்கு வேலை பார்க்காமல் தூங்கும் வெட்கங்கெட்ட அறநிலை துறை அதிகாரிகளுக்கு நீங்கள் நன்றாக சாமரம் வீசுகிறீர்கள்.

 24. தமிழன் on April 30, 2012 at 10:33 pm

  @கோமதி செட்டி,
  பாஷ் கோமதி செட்டி…. I am with you

 25. Ramki on May 1, 2012 at 7:49 pm

  நன்றி கோமதி செட்டி! தங்கள் கருத்துகளுக்கு தலை வணகுகிறேன்

  பூவண்ணனையெல்லாம் பொருட்டாகக் கொள்ளாதீர்கள்

 26. srinivasan on May 9, 2012 at 11:26 am

  மசூதிகளையும், சர்ச்சுகளையும் இது போல் செய்தால் அந்த மதத்தை சார்ந்த மக்கள் விடுவார்களா என்று ஒருவர் கேட்டார், மசூதிகளோ, சார்சுகளோ அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, இந்து கோவில்கள் மட்டுமே அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஏனென்றால் இந்துக்கள் மட்டுமே இளிச்ச வாயர்கள்.

 27. srinivasan on May 9, 2012 at 11:29 am

  பூவண்ணன் போன்றவர்கள் உண்மை புரியாமல், அல்லது புரியாதது போல் பேசுகிறார்கள், அறநிலைய துறை அதிகாரிகளுக்கு என்ன தெரியும்? ஆகமம் தெரியுமா? ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ள நடைமுறை தெரியுமா? கோவிலில் குவியும் காணிக்கைகளை கொள்ளை அடிக்க தான் தெரியும்.

 28. sangeetha on May 28, 2012 at 10:05 pm

  Respected madam,
  i m living in nasiyanur. first of all i said thanks for publishing this report.As a people of nasiyanur i said,”religious people of nasiyanur only has the awareness of this problem, then only the problem will solved.the problem solved only by the struggle not by nonviolent………..”

 29. சேக்கிழான் on July 20, 2012 at 4:59 am

  தினமணி செய்தி
  ————————-

  800 ஆண்டுக்கு முந்தைய கோவிலின் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டதா?
  ——————————————————————————————————————-
  பழம்பெரும் பொக்கிஷத்துக்கு ஆகம விதி பெயரில் ஆபத்து
  —————————————————————————————
  -பீ.ஜெபலின் ஜான்-

  ஈரோடு, ஜூலை 17: ஈரோடு அருகே நசியனூரில் உள்ள அருள்மிகு மூவேந்தர் ஆதிநாராயணப் பெருமாள் கோவிலில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  ஈரோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சேலம்- கோவை 4 வழிச்சாலைக்கு அருகே உள்ள நசியனூரில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ முத்து மரகதவல்லி சமேத மூவேந்திர ஈஸ்வரர், ஈஸ்வரன் கோவிலின் இடதுபுறம் கிழக்கு நோக்கி, பூதேவி-ஸ்ரீதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் சன்னிதானங்கள் உள்ளன.

  இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மூவேந்தர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் புராதனப் பெருமைமிக்க சிலைகள், மண்டபங்கள் உள்ளன. சன்னிதானங்களில் உள்ள சுவர்கள், மண்டபங்களில் உள்ள தூண்களில் பழங்கால வரலாற்றுச் சம்பவங்கள், கோவில் தொடர்பான தகவல்கள் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.ண்

  இக்கோவிலில் சீரமைப்பு என்ற பெயரில் பழம்பெருமை வாய்ந்த 16 தூண்களைக் கொண்ட மண்டபம் இடிக்கப்பட்டுவிட்டதாகவும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், சிலைகள் இந்து சமய அறநிலையத்துறையால் தடை செய்யப்பட்ட “சேண்ட் பிளாஸ்டிங்’ (மணலை தண்ணீர் போலப் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் முறை) முறையில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோவில் புனரமைப்பு என்ற பெயரில் புராதனச் சின்னங்களை அழிப்பது எந்த வகையில் நியாயம் என்பது பக்தர்களின் நியாயமான கேள்வி.

  இதுகுறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட செயல் தலைவரும், வழக்குரைஞருமான லட்சுமண நாராயணன் கூறியது:

  கங்கை குல காராள வம்ச நாட்டுக் கவுண்டர்கள், காணியாள வெள்ளாளக் கவுண்டர்களில் 6 குலத்தினர் ஆகியோருக்குச் சொந்தமானது இக்கோவில். இங்கிருந்த தெப்பக்குளத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே மூடிவிட்டனர். இப்போது கோவிலைப் புனரமைப்பதாக பெயருக்கு அனுமதி பெற்றுவிட்டு கோவிலில் இருந்த பழமையான 16 கால் மண்டபத்தை இடித்துவிட்டு, கான்கிரீட் மண்டபத்தைக் கட்டி வருகின்றனர்.

  இதில் இருந்த 16 தூண்களையும், ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த ஒரு இடைத்தரகர் மூலமாக ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் தெரிவித்ததும், அந்த 16 தூண்களுக்குப் பதிலாக வேறு தூண்களைக் கொண்டுவந்து வைத்துள்ளனர். கோவில் வளாகத்தில்தான் புதைத்து வைத்திருந்ததாக இப்போது தவறான தகவல்களைக் கூறுகின்றனர்.

  சேண்ட் பிளாஸ்டிங்குக்குப் பதிலாக தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. அதைப் பயன்படுத்தி கோவில் சிலைகள், மதில் சுவர்கள், கல் தூண்களை சுத்தப்படுத்தியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல் புராதனச் சின்னங்களை சேதமுறச் செய்திருப்பது மிகப்பெரிய குற்றம் என்றார்.

  இதுகுறித்து, தேசிய சிந்தனைக் கழக மாநில இணை அமைப்பாளர் ஆ.சரவணன் கூறியது:

  கோவிலில் பழமையான கல் மண்டபத்தை அகற்றிவிட்டு, கான்கிரீட் மண்டபம் கட்டுவதால் கோவிலின் பழமை மாறியுள்ளது. பக்தர்களின் குற்றச்சாட்டு குறித்து இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். ஆகம விதிக்கு மாறாக இருக்கிறதா என்பதை ஆகம விதிகள் தெரிந்த குழுவை அமைத்துத்தான் மாற்றி அமைக்க வேண்டும். கல் தூண்களை மண்ணில் புதைக்க வேண்டிய அவசியம் என்ன? அறநிலையத் துறை முழு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். கோவில் மண்டபத்தை இடித்தது மிகப்பெரிய தவறு என்றார்.

  ‘6 பேருக்கு நோட்டீஸ்’

  இதுகுறித்து, இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலரும், இக்கோவிலின் தக்காருமான எம்.அருள்குமார் கூறியது:

  ஏற்கெனவே இருந்த கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ரங்கசாமி தலைமையிலான குழுவினர் 23.9.2008-ல் அறநிலையத் துறையில் அனுமதி பெற்று இக்கோவில் புனரமைப்புப் பணியை நடத்தி வந்தனர். நான் தக்காராக பதவியேற்றப் பின்னர் கோவில் சீரமைப்புப் பணியில் சேண்ட் பிளாஸ்டிங் முறை பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அதை நிறுத்த உத்தரவிடப்பட்டது. 16 கால் மண்டபம் நான் பதவி ஏற்கும்முன்பே இடிக்கப்பட்டுவிட்டது. இது, மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் இடித்ததாக கோவில் அறங்காவலர் குழுவினர் தெரிவித்தனர்.

  கோவில் ஆகம விதிப்படி சுவாமி சன்னிதானம் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ, அதே திசையில்தான் கோவில் மண்டபமும் இருக்க வேண்டும். ஆனால், இங்கு ஈஸ்வர சுவாமி சன்னிதானம் மேற்கு நோக்கி உள்ளது. அதே நேரத்தில் மண்டபம் தெற்கு நோக்கி இருந்தது. இதனால், ஆகம விதிப்படி மண்டபத்தை இப்போது மேற்கு நோக்கி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

  கோவிலில் கிரானைட் கற்கள் பதிக்க சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிரானைட் என்பது இயற்கையான கல் என்பதால் அதைப் பயன்படுத்தி வருகிறோம்.

  கோவிலில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இப்புகார் தொடர்பாக 6 பேருக்கு 1.6.2012-ல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் கொடுத்த விளக்கத்தை அறிக்கையாகத் தயாரித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன் என்றார்.

  நன்றி:தினமணி (18.7.2012)
  தகவல்: சேக்கிழான்

 30. Raj Priyan on August 13, 2012 at 8:33 pm

  கல்தோன்றி மண் தோன்றா
  காலத்தே முன் தோன்றிய
  மூத்த தமிழ்.

  இச்சிறப்பை காக்கும் எவரையும்
  எம்பெருமான் ஈசனாரும்
  அகத்திய மாமுனிவரும்
  துணை நின்று காத்தருள் வார்கள் !

 31. Nasiyanur on November 17, 2014 at 11:17 pm

  இந்த செய்தியின் நம்பகத் தன்மை பற்றிய ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா???

 32. நசியனுரான் on June 24, 2019 at 8:23 pm

  இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காணி கோயில் என்கிறார்களே! இங்கேயே இப்படி நடந்துள்ளதா?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*