திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா

மே-27, 2012 (ஞாயிற்றுக் கிழமை) காலை 9-30 மணி தொடங்கி, இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி நடக்கிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் சி.நடராஜன் கலந்து கொள்கிறார்.

1960 மற்றும் 70களில் இந்திய அரசால் பரவலாக்கப் பட்ட “பசுமைப் புரட்சி” மிகப் பெருமளவில் நிலங்களை விவசாயத்திற்குக் கொண்டு வந்து, நவீன வேளாண் முறைகளையும் தொழில்நுட்பத்தையும் அறிமுகப் படுத்தி, உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய உதவியது. ஆனால், இதன் பக்க விளைபாக இந்தியா முழுவதிலும் பற்பல பிரதேசங்களில் காலகாலமாக பயிரிடப் பட்டுவந்த பாரம்பரியப் பயிர் ரகங்கள் அழிந்தன. அவை முறைப் படுத்தப் பட்டு குறைந்த அளவிலான ரகங்களாகச் சுருங்கின. நெற்பயிரில் மட்டுமே ஒரு லட்சம் பாரம்பரிய ரகங்கள் இந்தியா முழுவதும் இருந்ததாகக் கருதப் படுகிறது.

இவற்றில் சில பாரம்பரிய ரகங்கள் இயற்கை விவசாயிகளாலும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் இன்றும் அழியாமல் பாதுகாப்பப் பட்டு பயிரிடப் பட்டு வருகின்றன. இயற்கை விவசாய அமைப்புகளும் ஆர்வலர்களும் இதனை ஊக்குவித்து வருகின்றனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 63 வகையான பாரம்பரிய நெல்விதைகள் 3000 உழவர்களுக்கு வழங்கப் பட உள்ளது.

இடம்: இயற்கை விவசாய பயிற்சி & ஆராய்ச்சி மையம் (கிரியேட்), ஆதிரெங்கம் கிராமம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.

அழைப்பிதழ் கீழே. அனைவரும் வருக!

Tags: , , , , , , , , , ,

 

ஒரு மறுமொழி திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா

  1. சிவஸ்ரீ.விபூதிபூஷண் on May 22, 2012 at 11:03 am

    நல்ல்லதொரு முயற்சி. வெற்றிபெற வேண்டும். நம்முடைய பாரம்பரிய விதை வேளாண் தொழில் நுட்பம் ஆகியவற்றை மீட்டெடுக்கவேண்டும். வேளாண் பெருமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற்று மன்பயனுர வாழ்க.
    அன்புடன்
    விபூதிபூஷன்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*