தாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி

துரையில் பாஜக-வின் தாமரை சங்கமம் (மே 10, 11) மிக வெற்றிகரமாக முடிந்தது பற்றி அனைவரும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் வேளையில், அந்த வெற்றியின் படிப்படியான திட்டமிடல் பற்றியும், அந்த வெற்றித்தேரை ஒவ்வொரு படிநிலைக்கும் கவனமாகவும், ஆழ்ந்த ரசனையோடும், தீவிர முனைப்போடும் கூடிய கடின உழைப்பினால் நிலைசேர்த்த எண்ணிலடங்காத் தொண்டர்களையும், மாவட்ட, மாநில நிர்வாகிகளையும் நன்றியுடன் நினைக்கும் முகமாகவே இந்தக் கட்டுரை.

பாஜகவின் 5 வது மாநில மாநாடு ‘தாமரை சங்கமம்‘ என்ற பெயரில் ஏப்ரல் 28, 29 ம் தேதிகளில் நடத்துவது என்றும், அதற்கு 3 லட்சத்திற்கு மேலான தொண்டர்களை அழைப்பது என்றும் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 6 மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு அதற்குரிய பொறுப்பு கட்சியின் மிக முக்கிய நிர்வாகியும், கர்மவீரரும் ஆன சுகுமாரன் நம்பியாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுகுமாரன் நம்பியார் சில நாட்களிலேயே இயற்கை எய்தினார்.

ஆனாலும், உயர்ந்த லட்சியங்கள், உன்னதமான எண்ணங்களுக்கு இயற்கையே கொடுக்கும் ஒரு விதமான சன்னதம் பெற்ற தன்மையை அன்னை பராசக்தி அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கினாள். மாநாட்டுப் பணிகள் மீண்டும் வேகம் பெற்று வளர்ச்சி பெறலாயிற்று. இடம் தேடி அலைந்தார்கள், திருச்சியிலா? கோவையிலா? தலைநகர் சென்னையிலா? என்று, அப்பொழுது கிடைத்தது தீர்வு. ஒரு கணமும் இமைக்காது மக்களை காக்கும் கயல்விழி மீனாட்சி அம்மனின் அருட் பெருங்கருணையால், அனனையின் ஆட்சியின் கீழ் உள்ள மதுரை மாநகரில் 65 ஏக்கர் நிலம் கிடைத்தது. பின்பு வேலை வேகம் பெற்றது.

மாநிலத் தலைவரின் உயர்ந்த லட்சியத்தை நிறைவேற்ற, பாரதிய ஜனதா தன்னையே தான் கண்டுணர, தன் பலம் உணர, இந்த மாநாடு தொண்டர்களுக்கு மேலும் ஒரு புதிய திறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்த மிகச்சிறந்த தளகர்த்தர்கள் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடி வியூகம் வகுத்தனர். அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு, சரவணப்பெருமாள், சுரேந்திரன். ஆகியோரின் தலைமையில் 40 வகையான தேவைகளை நிறைவேற்ற சிறப்பான செயல்திறனும், ஆற்றலும் உடைய தனித்துவம் நிரம்பிய படை வகுக்கப்பட்டு, பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்பட்டு, வேலைகள் தொடங்ககின.

அதே நேரத்தில் அமைப்பு ரீதியாக ஒவ்வொரு மாவட்ட அளவிலும், ஒன்றிய, கிளை அளவிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த மாநாட்டுக்கு புதிய உறுப்பினர்களை கொண்டுவர தனித்தனியாக உற்சாகப்படுத்தப்பட்டு, ஊக்கப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டமும் அவர்களே நிர்ணயித்த இலக்குகளை நோக்கி நகருமாறு உற்சாகப் படுத்தப்பட்டனர்.

இந்த ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கையிலேயே களத்தில் ஆற்றிட வேண்டிய பணிகளுக்கு சுரேந்திரன் அண்ணனும், சரவணப்பெருமாள் அண்ணாச்சியும் களத் தளகர்த்தர்களாக பொறுப்புகளை சிரமேற்கொண்டு தொடர விழைந்தனர். மாநிலத் தலைவர் மாநாடு நடப்பது கோடையில், ‘என் தொண்டர்கள் யாரும் வெயிலில் இருக்கக் கூடாது. எனவே அனைவரும் இளைப்பாறும் வகையிலே பந்தல் அமைக்க வேண்டும்’ என்றார். சரி என்றார்கள். அனைவருக்கும் உணவும் நீரும் அளிக்க வேண்டும் என்தரும் முடிவானது.

போதிய கழிப்பறை வசதி, தங்குமிடம், வாகன வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், ஒளி-ஒலி அமைப்புகள், அரங்க மேடை, வருபவர்களை வரவேற்பது, வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது, தலைவர்களை வரவேற்பது, அவர்களுக்குரிய ஏற்பாடுகள், பாதுகாப்பு, உணவு முதலியற்றை ஏற்படுத்துவது உள்ளிட்ட 40 தனித்தனி துறைகளுக்கு தனித்தனியான செயல்வீரர்களை அமர்த்தி அவர்களுக்குரிய படையை அவர்களே அமைத்துக்கொள்ளவும் சுதந்திரம் அளிக்கப்பட்டு திடமான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியான ஆலோசனைகள், புதிய, புதிய முயற்சிகள்; அனைவரின் கவனமும் ஒருங்கிணக்கப்பட்டு, கருமமே கண்ணாக உழைத்த நிர்வாகிகளும் செயல்வீரர்களும், திட்டங்களை களத்தில் முயல்கையில் எண்ணற்ற சவால்களையும், புதிய புதிய பிரச்சினைகளையும் எதிர்கொண்டனர்.

அவை அனைத்திற்கும் அன்னை அருளால் தங்கள் வாழ்க்கை அனுபவங்களிருந்தும், தொழில் முறைகள் கற்பித்த அனுபவங்களிலிருந்தும் தீவிரமாக சிந்தித்து புதிய தீர்வுகளை கண்டடைந்தார்கள். விளைவாக மகோன்னதமான பாஜக ஆட்சிக்கு கட்டியம் கூறும் முகமாக, கருத்தியல் ரீதியிலான வெற்றியை இந்த தாமரை சங்கமம் சாத்தியமாக்கியிருக்கிறது.

இன்னொரு முக்கிய நிகழ்வாக, மூத்தோர்களின் அறிவோடும், பரிவோடும் இளையோர்களால் திறம்பட முன்னேடுத்துச் செல்லப்படும் பாஜகவின் அறிவியல், தொழில்நுட்ப முன்நகர்வு, அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டு, ஏகோபித்த பெரும் பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

அறிவு, திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு, தேசபக்தி, தெய்வ பக்தி, தொழில்நுட்ப அறிவு, செயல்திறன், விடாமுயற்சி, காலத்தைக் கடந்த சிந்தனை, இறை அருள், மூத்தோர்கள் மற்றும் தேச பக்தர்களின் ஆசி – இந்த அனைத்தும் கூட்டு சேர்ந்தே இந்த மாபெரும் வெற்றியை தேடித் தந்துள்ளன.

பத்திரிகைகள், செய்தி சேனல்கள், விளம்பரங்கள் இவற்றை சரிபார்த்து செய்திக் குறிப்புகள் அமைக்கவும், மீடியா நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கவும், அவர்களுக்குரிய உதவிளை செய்யவும், ஒரு குழு கோவை எஸ்.ஆர்.சேகர் தலைமையிலும், சென்னை வானதி சீனிவாசனின் ஆலோசனையிலும் அமைக்கப்பட்டு செயலுக்கு வந்தது.

பயணங்கள் முடிவதில்லை..
– எஸ்.ஆர்.சேகர் (அகில இந்திய வர்த்தக அணி தலைவர், பாஜக)

பயணங்கள் முடிவதில்லை – இது ஏதோ பழைய திரைப்படத்தின் பெயர் போல இருக்கிறதல்லவா?

வாழ்க்கைத் தத்துவங்களின் வலிமையான கருத்தைச் சொல்லும் வார்த்தைகளை மாற்ற முடியாதல்லவா? இது பழசுதான் ஆனால் என்றும் இளமைதான்.. சரி விஷயத்துக்கு வருவோம்.

பாஜகவின் 5வது மாநில மாநாடு ‘தாமரை சங்கமம்’ தமிழக பாஜக வரலாற்றில் பல புதுமைகளை – பல முதன்முதலான விஷயங்களை செய்துள்ளது.

1. தமிழக பாஜக வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பல கோடி ருபாய் செலவில் நடத்தப்பட்ட முதல் மாநாடு.

2. ‘தகவல் தொழில்நுட்பம்’ ஒரு அரசியல் கட்சியால் அதிகமாகப் பயன்படுத்தபட்ட மாநாடு என்னும் பெருமை இதற்கே.

3. பிரமாண்டமான பந்தல்- ஒரே நேரத்தில் 1.50 லட்சம் பேர் அமரக்கூடியது என்பதும் முதல்முறை

4. தமிழகம் முழுதும் ஒரு ஊர்கூட பாக்கியில்லாமல் சுவர் வாசகம், பிளக்ஸ் போர்ட் வைத்து விளம்பரம் செய்ததுடன், அத்தனை ஊர்களிலிருந்தும் லட்சக் கணக்கில் திரண்ட தொண்டர் கூட்டம், அத்தனை செலவும் 100 சதம் தொண்டர்களின் கைக்காசே என்பதும் வித்தியாசம்.

5. போலீஸின் அதீத அத்துமீறலால் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட தொண்டர்கள் அத்தனைபேரும், குறைந்தபட்சம் 17 கி.மீ தூரம் நடந்தே மாநாட்டுப் பந்தலை அடைந்தனர். அந்தவகையில் லட்சக் கணக்கான தொண்டர்கள் அதிக தூரம் நடந்து, நடத்திய முதல் அரசியல் கட்சி மாநாடு என்னும் பெருமை பெறுகிறது.

6. ஒரு இடத்தில்கூட தள்ளுமுள்ளு, வாய்த்தகராறு, கைகலப்பு, பொருட்கள் காணாமல் போதல், என்ற எந்த அசம்பாவிதமும் இல்லை.

7. பேட்டரிகாரில் தேசியத் தலைவர் திரு கட்கரியை அழைத்து வந்த வித்தியாசம்.

8. ஊருக்குள் நுழையும் ஒருசில இடங்களில் போலீஸின் அத்துமீறல்களால் தடியடியால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டாலும் அமைதி காத்தது தமிழக அரசியல் வரலற்றில் முதல்முறை.

9. மிகப் பெரிய ‘எல்.இ.டி- ஸ்கிரீன்’ – எந்த இடத்திலிருந்தும் மேடையைப் பார்க்கும் பிரமாண்டம்..

10. கலை நிகழ்ச்சிகள் கண் கவர்ந்தன. மனங்கவர்ந்தன. கலாச்சாரப் பெருமையை பறைசாற்றின. குட்டிக் குழந்தைகளும் பங்குபெற்ற மெகா பரத நாட்டியம், மகிஷாசுரமர்த்தினி ஆட்டம் என ஒவ்வொன்றும், பிரமிக்கவைத்தது, கலை இலக்கிய அணி விஸ்வரூபம் எடுத்தது.

11. மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டது. மிகச்சரியாக செயல்படுத்த ஆவன செய்யப்பட்டது. தொடர்ந்து காற்றும் மழையும் மாறி மாறி தொண்டர்களின் செயல்பாடுகளுக்கு ‘செக்’ வைத்தது..

இவையெல்லாம் மீறி அன்னை மீனாட்சி அம்மன், மதுரகாளியின் அருளால், நம்மால் இயற்கையின் சீற்றத்தின் கஷ்டங்களை ஓரளவுக்குத் தான் கட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது. அதனால்தான் ‘ஓரளவு குறைகளும் கஷ்டங்களும்’ ஏற்பட்டிருக்கலாம்.

ஒருவேளை இயற்கை நமக்கு இடர்ப்பாடுகள் தராமல் இருந்திருந்தால், ‘துல்லியமாக திட்டமிடப்பட்டு அங்குலம் அங்குலமாக சிறப்பாக நடத்தப்பட்ட மாநாடு’ என்னும் முழுப் பெருமையைப் பெற்றிருப்போம்.

வாழ்க்கைப் பயணத்தில் சோதனைகள் வருவது சகஜம். அரசியல் கட்சியின் வாழ்விலும் சாதனை. சோதனைப் பயணங்கள் தொடர்கின்றன. இந்த மாநாடு தொடங்கிவைத்த நமது பயணம் முடியவில்லை. தொடரும்… மீண்டும் மீண்டும் மாபெரும் வெற்றிகளைக் குவிக்கும்.

மாநாட்டுத் திடல் நிர்வாகங்கள், களப்பணிகளுக்கு சரவணப்பெருமாள், சுரேந்திரன் ஆகியோர் தலைமை வகித்து, முன்னெடுத்துச் சென்றனர். உணவு பொறுப்புகள் திருச்சி சுப்ரமணியம் தலைமையில் திருவள்ளூர் பாஸ்கரன் முன்னிலையில் வழங்கப்பட்டு மிக சீராக களப்பணியாற்ற ஊக்குவிக்கப்பட்டனர்.

குடிநீர் வினியோகம் கோவை கல்யாண சுந்தரம் தலைமையிலும், மாநாட்டு சுகாதார ஏற்பாடுகள் தசரதன், ராம.கண்ணன் தலைமையிலும், வியூக முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டுப் பந்தலின் கட்டுமானப் பொறுப்புகள், அனைத்தும் காஞ்சிபுரம் மோகனராஜாவிடம் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஆலோசனைகளை மேஜர் கர்னல் சுந்தர் சீரிய ஆலோசனையோடும், பார்க்கிங், பராமரிப்புப் பணிகள் ஈரோடு பழனிசாமியும், மாநாட்டு வருகையாளர்களைப் பற்றிய பதிவை கோவை முருகானந்தமும், மின்சார ஏற்பாடு, வசதிகளை டால்பின் ஸ்ரீதரும், தங்கும் இடங்கள் தொடர்பாக அழகர்சாமியும், மாநாட்டு வரவேற்பறையை ஆதிசேஷனும், ஒருங்கிணைப்பை சேலம் ஆடிட்டர் ரமேஷும் பொறுப்பேற்றனர்.

சரவணப்பெருமாள், சுரேந்திரன் ஆகியோரின் உறுதுணையோடு அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்க மோகன்ராஜிலு தலைமையேற்று முன்னேற்றி கூட்டிச் சென்றார். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தள வியூகங்கள் முடிவுக்கு வந்து, சைனியங்கள் வேறு வேறு வகையில் வகைப்படுத்தப்பட்டு, அவர்களின் கடமைகள், பொறுப்புகள் பிரித்தளிக்கப்பட்டு ஆயத்தமாக பணியை துவக்கினார்கள் டிசம்பரில்.

இந்த மகத்தான வேள்வியை நடத்துபவர்களை மழை வடிவில் இயற்கை அன்னை சோதித்தாள்; நிதிப் பற்றாக்குறை வடிவில் திருமகள் சோதித்தாள்; அடிக்கடி இடையூறுகள் செய்து காவல் துறையினர் சோதித்தனர். ஆனாலும் அனைத்தையும் தாண்டி அன்னை மீனாட்சியின் கருணையால் எண்ணியதை எண்ணியாங்கு எய்தியது காவிப்படை.

காவிப்படையின் காவிய சாதனைக்கு உரிய தளகர்த்தர்களையும், அவர்களின் திறன்மிகு செயல்களையும் பற்றி இன்னும் நிறைய எழுத ஆசை தான் – தொடர்வேன்.

மேலும் புகைப்படங்கள் – இங்கே.

வீர. ராஜமாணிக்கம், தமிழக பாரதிய ஜனதா கட்சி – பொறியாளர் அணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர். தமிழ் ஹிந்து நேயர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர். தாமரை சங்கமத்தின் வெற்றிக்குப் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.

Tags: , , , , , , , , ,

 

15 மறுமொழிகள் தாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி

 1. தமிழன் on May 17, 2012 at 11:01 pm

  வாழ்க பாரதம். வளர்க பிஜேபி.

 2. K Sanckar on May 18, 2012 at 10:14 am

  This is mammoth Conference in the history of BJP, Tamilnadu in all respects. There is no comparison
  at all. No party in Tamilnadu can equally conduct this type of Conference, Very well disciplined delegates consisting of women and children walking 15 KMs due to Police undue action in the name of Security reached the venue of the conference on their own accord.to see and listen to their leaders. They are not at all hired crowd. Food, stay, toilet arrangements were up to to the mark. Exhibition, blood donation, health check up etc. are all distinctively new to any conference. so far conducted in Tamilnadu. There was no personal attack on any political party and BJP leaders’ speech was very noble and educative. Cultural shows were excellent.

 3. சோழன் on May 18, 2012 at 1:05 pm

  இந்த விழாவிற்கு நண்பர்களுடன் நானும் சென்று இருந்தேன். திட்டமிட்ட முறையில் காவல் துறை பல இலட்சம் மக்களை குறிப்பாக வயதான பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை கோடை கால 12 மணி வெயிலில் அநியாயமாக பல கிலோ மீட்டர் நடக்க வைத்தது அநியாயத்தின் உச்சம். இதே போன்று திராவிட கழகத்துகாரர்களை நடக்கவிட்டால் என்ன நடந்து இருக்கும். இது மட்டும் அல்ல பல இடங்களில் காவல் துறை அத்து மீறல்களை கண்டேன். இது போன்று திராவிட கழக மாநாட்டிலோ அல்லது இஸ்லாமிய மாநாடுகளிலோ செய்ய இவர்களுக்கு துணிவு இருக்கிறதா?

  ஹ்ம்ம்…. வேட்டை நரிகளிடம் தனது வீரத்தை காட்டதா காவல் துறை பசுமாடுகளிடம் வீரத்தை காட்டுகிறது. இதனால் அவமானம் பசுக்களுக்கு அல்ல…

 4. அத்விகா on May 18, 2012 at 6:25 pm

  பாஜக வை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள் என்பதே உண்மை. தமிழகத்தில் கடந்த தேர்தலில் காங்கிரசு கொள்ளையர்களுக்கு ஐந்து இடம் கிடைத்ததற்கு பாஜக தான் காரணம் என்ற உண்மை அரசியல்வாதிகளுக்கு புரிந்துவிட்டது. எனவே அவர்கள் பயப்படுவது சரியே.

  பாஜக ஓட்டுக்களை பிரிப்பதற்காக தமிழக முதல்வர் இந்துக்களுக்கு பெயரளவில் மானசரோவர் யாத்திரை மற்றும் முக்திநாத் போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை செல்வோருக்கு மான்யம் சிறுஅளவில் வழங்கி உள்ளார்.

  தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு தமிழக இந்துக்கள் சார்பில் நமது உளங்கனிந்த பாராட்டுக்கள்.

 5. shanmugavel on May 18, 2012 at 8:12 pm

  இந்த விழாவிற்கு நண்பர்களுடன் நானும் சென்று இருந்தேன்.

  தண்ணீர் இல்லை. உணவு இல்லை. இதற்காக அதிகமாக யாரும் வருத்தப்படவில்லை. ஆவலோடு வந்தவர்களில் பாதிபேரை மாநாட்டு பந்தளுக்குள்ளே அனுமதிக்கவில்லை என்பதுதான் வேதனையானது. இவ்வளவு தூரம் தொண்டர்களை, தாய்மார்களை, குழந்தைகளை பதினேழு கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்தது, மாநாட்டு பொறுப்பாளர்களின் குற்றமாக நான் நினைக்கிறேன்.

  மாநாட்டுக்கு வந்த தொண்டர்களை, காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை என்ற செய்தி மாநாட்டு பந்தலுக்குள் இருந்த எங்களுக்கெல்லாம் தெரியாமல் போய் விட்டது.

  “தலைவர்கள் மேடையில் இந்த செய்தியை அறிவித்திருந்தால், மாநாட்டு பந்தலுக்குள் இருந்தவர்கள் ‘உள்ளிருந்து வெளியில் செல்வதில்லை’ என்று அறிவிதிருப்போம்”. அதன்மூலம் அனைத்து தொண்டர்களும் மாநாட்டு பந்தலை அடைந்திருப்பார்கள்.

  எப்போதும் பணிந்தே போய்விட்ட நமக்கு போராட தைரியம் வருவதில்லை. சூழ்நிலை கைதியாகிரோமே தவிர, சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்ற தெரிவதில்லை.

  தலைவர்களின் பாதுகாப்புதான் காரணம் என்றால், யாரவது ஒரு தலைவரின் வருகையை நிறுத்திவிட்டு, ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் பேச வைத்திருக்கலாம். தொண்டர்கள் அனைவரும் மாநாட்டு பந்தலை அடைந்திருப்பர்களே!.

  “தொண்டர்கள்தனே முக்கியம். தலைவகள் இல்லை என்பது எனது கருத்து…”

  தலைவர்கள் கொஞ்சம் ப்ளான் பண்ணி வேலை செய்யணும்…

 6. shanmugavelerodu on May 18, 2012 at 8:14 pm

  நிறைய போட்டோ போடுங்க தலைவா…

 7. ஓகை நடராஜன் on May 19, 2012 at 7:23 am

  பிரமாண்டம்மான இந்த மாநாட்டை நடத்தி தமிழகத்தில் பாஜகவின் ஊக்கமான செயல்பாட்டை தமிழக மக்களுக்கும் அகில இந்திய தலைமைக்கும் எடுத்துக்காட்டிய பாஜகவினருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!

 8. T.Mayoorakiri sharma on May 19, 2012 at 7:28 am

  தாமரைக் கூடல் கூடல் மாநகரில் சிறப்பாக நடந்தது மகிழ்ச்சி தருகிறது..

 9. அடியவன் on May 20, 2012 at 6:30 am

  தமிழ்நாட்டில் அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்றால், எந்தக் கட்சியும், மதுரையை மையமாக வைத்து அரசியல் செய்தால்தான் முன்னுக்கு வர முடியும்.

  எம்.ஜி.ஆர் கட்சியை ஆரம்பித்தபோது அவருக்கு அதிக ஆதரவு மதுரைப் பகுதிகளில் இருந்ததுடன், திண்டுக்கல் இடைத் தேர்தல் அவருக்கு வரப் பிரசாதமாக அமைந்தது. மதுரையின் முக்கியத்துவத்தைச் சிறிது காலம் தாழ்ந்து புரிந்து கொண்டாலும் கூட கருணாநிதி தனது மகன் அழகிரியை அங்கேயே தங்கி இருக்கச் செய்து கட்சியைக் காப்பாற்றும் நிலை வந்தது.

  பா.ஜ.க தமிழ்நாட்டில் முன்னுக்கு வரவேண்டும் என்றால், கோவை, கன்னியாகுமரி இவற்றிலேயே முனைப்பாக இராமல் மதுரையில் முனைப்பாக இருக்கவேண்டும்.

  காஞ்சி ஆசாரியார் விஷயத்தில்கூட பா.ஜ.க தலைவர்கள் தில்லியில் உண்ணாவிரதம் இருக்காமல் மதுரையில் உண்ணாவிரதம் இருந்திருந்தால் இன்று பா.ஜ.க இன்னமும் கூட முன்னிலையில் இருந்திருக்கும். எந்தப் போராட்டம் ஆனாலும் அதை பா.ஜ.க மதுரையை முன்னிறுத்தி செய்தால் தமிழ்நாட்டில் அந்தப் போராட்டம் எடுபடும் என்பதுதான் நான் சொல்ல வரும் கருத்து.

 10. sridharan on May 20, 2012 at 11:51 am

  Congratulations to the dynamic,sincere,Nationalistic and dedicated BJP cadre.

  Let us carry this forward without let and work to bring BJP rule in Tamilnadu.
  R.Sridharan

 11. சோழன் on May 21, 2012 at 5:33 am

  \\தலைவர்களின் பாதுகாப்புதான் காரணம் என்றால், யாரவது ஒரு தலைவரின் வருகையை நிறுத்திவிட்டு, ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் பேச வைத்திருக்கலாம். தொண்டர்கள் அனைவரும் மாநாட்டு பந்தலை அடைந்திருப்பர்களே!.\\

  @ சன்முகவேல்,

  இது ஆளும் கட்சியின் திட்ட மிட்ட அடாவடி தனம். காவல் துறை ஆளும் கட்சியின் உருட்டளுக்கு அடி பணிந்தது என்று சொல்லாம். சில தொண்டர்களை இது மிக கடுமையாக எரிச்சலூட்டியது என்பது முற்றிலும் உண்மை.

 12. sanjay on May 21, 2012 at 11:43 am

  Nice to hear that the conference was a huge success.

  But will this translate into votes?

  HIndus do not vote enbloc like muslims & christians. There are many hundus who do not vote for the DMK bcos of its anti hindu stance. They however vote for the ADMK & not BJP.

  The reasons are :

  1. There are no charismatic leaders in the BJP at the state level.

  2. It is conceived by most people as being a north indian party.

 13. shanmugavelerodu on May 21, 2012 at 11:52 am

  இது ஆளும் கட்சியின் திட்ட மிட்ட அடாவடி தனம். காவல் துறை ஆளும் கட்சியின் உருட்டளுக்கு அடி பணிந்தது என்று சொல்லாம். சில தொண்டர்களை இது மிக கடுமையாக எரிச்சலூட்டியது என்பது முற்றிலும் உண்மை.

  @ சோழன்

  காவல்துறை ஆளும் கட்சிக்கு அடிமையாகலம். மாநாட்டுக்கு வந்திருந்த தேசபக்தர்கள் யாருக்கும் அடிமையாகமாட்டர்கள். நாம் போராடி இருக்கலாம். போராட்டம்தானே வெற்றியை தரும்.

 14. bala pattukottai on May 26, 2012 at 12:52 pm

  naanum

 15. Truth on May 30, 2012 at 5:03 pm

  மாநாடு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். ஆனால் பிஜேபி ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எடியூரப்பா மாதிரி அடாவடிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கிவிடும் துணிவு வேண்டும். இது நாட்டு மக்களிடையே அவர்களுக்கு ஒரு நன்மதிப்பைப் பெற்றுத் தரும். இங்கே ஒரு அன்பர் குறிப்பிட்டிருந்ததைப் போல, பிஜேபி என்பது ஒரு வடநாட்டுக் கட்சி என்ற மனப்பான்மை மக்களிடையே இருப்பது உண்மை. அதைப் போக்க தலைமை பண்புள்ள யாரேனும் தனிப்பட்ட நலனை விட்டு தேச நலனுக்காக முன் வர வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நரேந்திர மோடியைப் பிரதமராக்க வழி செய்ய வேண்டும். இத்திருநாட்டில் மக்களுக்கு இருக்கும் மிகப் பெரிய நம்பிக்கை மோடி. ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதல்ல குறிக்கோள். தேச நலன். அதுதான் தாரக மந்திரமாய் இருக்க வேண்டும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*