பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1

பெட்ரோல் 50 ரூபாயா? அதுவும் ஒரு லிட்டர் 100கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்குமா? இது நிஜமா?இதுல எங்க மன்மோகன் சிங் வந்து சதி பண்றார்னு தலையை பிய்த்துக்கொள்ளும் நண்பர்களே, படியுங்கள் மேலே.

“பெட்ரோலிய பொருட்களின் சர்வ தேச விலை அதிகரித்து விட்டது.”
“டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பாதாளத்துக்கு சென்று விட்டது.”
“எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன”
“வீட்டு சிலிண்டர்,கேரசின்னுக்கு கொடுக்கும் மானியங்களால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.”
“கச்சா எண்ணெய்யின் விலையை opec நாடுகள் தான் நிர்ணயிக்கின்றன – மத்திய அரசின் கையில் எதுவும் இல்லை”

மணி சங்கர அய்யர், முரளி தியோரா, ஜெய்பால் ரெட்டி கடந்த 8 ஆண்டுகளில் மேற்கண்ட வசனத்தை இவர்கள் எல்லாரும் முழங்கி இருக்கிறார்கள். காற்புள்ளி,அரை புள்ளி மாறாமல். ஆனால் உண்மை நிலைமைக்கும், இந்த பித்தலாட்ட மக்கள் விரோத காங்கிரஸ் அரசின் கூற்றுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பது பால் குடிக்கும் குழந்தைக்கு கூட தெரிந்து,தெளிந்து விட்ட இந்த சூழலில், பெட்ரோலிய வளம் தொடர்ச்சியாக, மிக வேகமாக அருகி வரும் இன்றைய நாளில் பெருகி வரும் பெட்ரோலிய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு என்ன? அந்த தீர்வு எட்டப்பட்டு விட்டதா? அப்படியாயின் அதை செயல் படுத்துவதில் என்ன தயக்கம்? இதில் நம் மன்னாரு மன்மோகன் எங்கே வருகிறார்? தியாகத் திரு விளக்கு சோனியா எங்கே சதி செய்கிறார்? எண்ணெய் நிறுவனங்களின் சதி என்ன? தனியார் நிறுவனங்களின் லாபி இதில் எங்கே இருக்கிறது?

லிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும், விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும் தாண்டி எரிபொருள் தீர்ந்து போய்விட்டால் என்ன என்பது போன்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நலனில், நல்வாழ்வில் வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற நல்லதெல்லாம் இந்திய மக்களுக்கு ஏற்படும் அப்படினு தெரிஞ்சாலே ,மக்கள் நல்லாயிருந்துடுவாங்க அப்படிங்கற ஒரு கருதுகோள் போதுமே காங்கிரஸ் அரசு இதை தடுத்து நிறுத்த. நம்ம மன்னாரும், தியாக திரு விளக்கும் அதை கெடுத்து, குட்டி சுவராக்கி நாட்டை எப்பவும் கேவலமான பிச்சைக்காரன் நிலைமையில் வைத்திருப்பதற்கு குறுக்கே நிற்கும் எதையும் இவர்களால் தாங்க முடியாது என்ற அரிச்சுவடி உண்மையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்கள். பெட்ரோல் 50 ரூபாயா? எப்படி?

எத்தனால் (CH3CH2OH)etoh என்றும் அறியப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 25-85% வரை கலந்து விற்பதன் மூலமாக நமக்கு பெருமளவு பணம் மிச்சமாகும். எத்தனால் சேர்க்கப்பட்ட பெட்ரோலியம் அதிகப்படியான ஆக்ஸிஜனை சுற்றுப்புறத்தில் வெளியிடுகிறது. மாசு படிந்த கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. எனவே இது ஒரு சுற்றுச்சூழல் நேசமான(eco-friendly) ஒரு செயல். எத்தனால் என்பது விவசாய பொருட்களில் இருந்து பெறப்படும் ஒரு வகையான ஹைட்ரோகார்பன், ஆல்கஹால் வகையை சார்ந்தது. ஆகச்சிறந்த மாற்றாக இது நிச்சயமாக இருக்கும். இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப்பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தும்போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது, கரும் புகை வெளிப்பாடு குறைந்து, ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது. இது பற்றி சொல்கின்ற, எழுதுகின்ற விஷயங்கள் எதுவும் புதிதல்ல – விஞ்ஞானிகளின் எதிர்காலக் கனவும் அல்ல.ஏற்கெனவே சில நாடுகளில் நடைமுறைக்கு வந்து அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நடைமுறையில் மிகச்சுலபமாக கொண்டு வரக்கூடிய ஒரு முறை தான்.

“எத்தனால்” இது கரும்பு, மக்காசோளம், உருளைகிழங்கு, குச்சிக்கிழங்கு, சில வகையான பாசிகளில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது.இதை பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம். பெட்ரோலுடன் குறிப்பிட விகிதத்திலும் கலந்து உபயோகிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரொலை விட சிறந்தது என்றே சொல்லாம். அதுமட்டுமல்லாது இதன் விலையோ மிக குறைவு. மொலாசஸ் எனப்படும் நெடியடைய கழிவுகளிலிருந்தும் இதனை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பெருமளவு குறைக்கலாம். நம் நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு இதனால் பெருமளவு பொருளாதார பயன்கள் கிடைக்கவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் உள்ள வாய்ப்பை மத்திய காங்கிரஸ் அரசு மறுப்ப்பதாகவே கொள்ள வேண்டி இருக்கிறது.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும். உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை – 100 கிலோ; சக்கை – 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் – 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி – 50 கிலோ.
எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.

ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.

இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ. மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும். தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன். இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

இந்தியாவில் கரும்பு உற்பத்திக்கு பஞ்சமே இல்லை.அபரிமிதமான உற்பத்தி காரணமாக தகுந்த விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடுகிறார்கள்.இங்கு கரும்பானது, சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை.கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும்,அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு பயன்படுத்தவும் துவங்கினால் உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்ட கரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும் என்பதால் சர்க்கரை விலை கணிசமாக குறையும். கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும். இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையோடு, உபபொருளாக எத்தனாலும் தயாரிக்க வேண்டி இருப்பதால், அதன் பொருட்டு அதிக நபர்களுக்கு வேலை கிடைக்கும். எத்தனாலை உற்பத்தி செய்ய, கையாள, மற்ற இடங்களுக்கு அனுப்ப, எண்ணை நிறுவனங்களில் இவற்றை கலந்து புதிய சதவீதத்தில் எரிபொருளை உற்பத்தி செய்ய – என்று ஏகப்பட்ட புதிய தொழில்களும்,வேலைகளும் உருவாகும்.பெட்ரோலின் விலையில் 4ல் 1 பங்கு விலைக்கு எத்தனால் கிடைக்கும் என்பதால் பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறையும். கச்சா எண்ணை இறக்குமதி பெரும் அளவில் குறையும்.இதனால் பெரும் அளவில் டாலர் – அந்நியச் செலாவணி மிச்சமாகும். டாலர் கையிருப்பு அதிகம் ஆவதால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.

எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் எத்தனால் உற்பத்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது.100% எத்தனால் அல்லது மெத்தனால் கொண்டும் வாகனங்களை இயக்க முடியும். நாம் நாட்டில் குடிக்க மட்டுமே பயன்ப்படுகிறது, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாக பயன்ப்படுகிறது. ஆனால் நிலையை நாம் மனது வைத்தால் உடனடியாக மாற்றலாம்.

8 Replies to “பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1”

  1. அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள்.

  2. நல்ல விஷயம் தான்.. இதே போல் அமெரிக்க வில் ஏற்கனவே பெட்ரோல் உக்கு மாற்று கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக படிக்கிறோம்.. அனால் ஒரு சந்தேஹம்.. இதில் காங்கிரஸ் மேல் மட்டும் குற்ரம் சொல்வது நியாயமா .. BJP ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்படி எந்த திட்டத்தையும் ஊக்கபடுதியதகவோ அல்லது BJP மத்திய தலைவர்கள் இது போல் விஷயத்தை பார்லிமென்ட் இல் பேசியதாக வோ தெரியவில்லையே..

  3. காங்கிரஸ் அரசு ஒரு சமூக விரோத அரசு. சமூக நலனில் அக்கறை சிறிதும் இல்லாத இந்த அரசு ஒழியும் நாள் இந்தியா முழுவதும் ஒரு புதிய தீபாவளி ஆகும்.
    காங்கிரஸ் = ஊழல், நாட்டு விரோதம், & ஜனநாயக விரோதம். காங்கிரசு பேயை விரட்டினால் , பெட்ரோல் விலை ஐம்பதுக்கும் கீழே குறையும்.

  4. பிரேசில் காடுகளை பெருவாரியாக அழித்து விலை நிலங்களைப் பெருக்கி எண்ணெய் வளத்தைப் பெருக்குகிறது. இது சூழலைப் பாதிப்பதை பற்றி கவலைகொள்ளவில்லை. உணவு இறக்குமதி செய்யும் நாடன்று
    இது இந்தியாவில் கைக் கொள்ளப்படுமானால் … முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. (மணல் அள்ளுவதை மாதிரியாகக் கொள்ளுங்கள்)
    பெட்ரோலியப் பொருட்களில் நடைபெறும் கலப்படங்களுக்கு மத்தியில் இந்த முயற்சி சண்முகம் போன்ற மேலும் நேர்மையான இளைஞர்களை நாமிழக்க வழிவகுக்கும்.
    உணவுப் உற்பத்தியில் பங்கு கேட்கும் இம்முயற்சிக்கு பல நாடுகள் அதிருப்தியை பிரேசிலுக்குத் தெரிவித்துள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று.

  5. கரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே

  6. இந்தியஎட்டப்பனால்இந்தியனுக்குஎட்டா மல்இருக்கிறது “எத்தனால்”—அதுஇந்தியனுக்குஎட்டவேண்டும் ”’கரும்பைக்பிளிந்து எத்தனால்லாகிடுவீரே! எத்தனாலில்”வாகனம் ஓட்டிமகிழ்வீரே…! [விவசாயின் ] ஓட்டியவயிறை நிமிர்த்திடுவீரே! இந்தியனின்பரசைக்காப்பீரே! இந்தியஆளும்கு ழுவே இதைஉணர்வீரோ…….!?

  7. அருமையான கட்டுரை.
    மதுவுக்கு பயன்படுத்தும் எத்தனாலை வாகனத்துக்கு பயன்படுத்த சொன்னால் எப்படி. 380 மிலி அதிலும் பாதி தண்ணீர் கலந்து விற்றால் 80 ரூபாய் கிடைக்கிறது. அதை விட்டு 35 ரூபாய்க்கு ஒர லிட்டர் எத்தனாலை விற்பதா? கடவுளே!!!!!!!!!!!

  8. எத்தனால் எப்படி தயாரிக்கலம் என்று விழக்கம் தாறுகள் ….

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *