பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2

<< முந்தைய பகுதி <<

எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கவும்,உற்பத்தியை பெருக்கவும் சில யோசனைகள்.

முன்முயற்சிகள்:

சர்க்கரை, எத்தனால் தயாரிப்புக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சர்க்கரை விற்பனை கட்டுப்பாடுகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் இருந்து முழுவிலக்கு அளித்து ,சர்க்கரை துறைகளுக்கும், எத்தனால் உற்பத்தி,விநியோகம்,ஆகியவற்றிற்கு தேவையான ஆய்வு நடவடிக்ககள்,மேம்பாடு இவற்றை கவனித்து மேலாண்மை செய்யவும், விவசாயிகளின் நலன் காக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தனியான தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையத்தை ட்ராய்,பிரசார்பாரதி போல அமைத்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம். கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது கரும்பு சாகுபடிக்கான முழுத் தொகையை கருத்தில் கொண்டு கரும்பு சாகுபடியாளரும், ஆலை நிர்வாகமும் வருவாய் பங்கீடு அடிப்படையில் சட்டப்பூர்வமாக குறைந்தபட்சம் 70 சதவீத வருவாய் பங்கீடாக ஒரே சீரான வயல் விலையாக அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு சர்க்கரை ஆலையும், கரும்பு பயிரிடுவோரும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கரும்பு பயிரிட்டு தர ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். கரும்பு சாகுபடிக்கான வங்கிக் கடன் இடுபொருள்கள் வழங்குதல், கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பரவலாக்கம், நோய் தாக்குதலை தடுத்தல், இயந்திர அறுவடை ஆகியவை ஆலை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடனும்,சிறந்த மேலாண்மை வழிகாட்டலுடன் உடனடியாக அமல் படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.இவற்றை மாவட்ட நிர்வாகங்கள்,மாநில அரசின் நேரடியான மேற்பார்வையிலும் விடலாம்.அடுத்த 5 ஆண்டுகளில் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நம் பயணத்தை இந்த மாற்றுஎரிபொருள் பயன்பாடுகள் சம்பந்தமாக நாம் எடுத்து வைக்க இதுவே தருணம்.வளர்ந்த நாடுகளை இது போன்ற விஷயத்தில் நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு முன்னேறலாம்.

இப்போது அமெரிக்காவில் ஓடும் அனைத்துவாகனங்களும் 10% எதனால் கலந்த கேசோலினை (எரிபொருள்) பயன்படுத்தி தான் ஓடுகின்றன. உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும் பிரேசில் நாடு பெட்ரோல் மற்றும் டீசலுடன் 85% எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை கட்டாயமாக்கி இருக்கிறது. பிரேசிலில்1980க்குப் பிறகு வடிவமைக்கப்பட்ட அனைத்து எஞ்ஜின்களும் 85 % எத்தனாலை கலந்து பயன்படுத்த தகுதியுள்ளவாறு தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அமெரிக்காவிலும், பிரேசிலிலும் உற்பத்தியாகும் Flex-fuel எஞ்ஜின்கள் பெட்ரோல், அல்லது எத்தனால், அல்லது இரண்டும் எந்த விகிதத்தில் வேண்டுமானாலும் கலந்து பயன்படுத்தும் விதத்தில் உருவாகின்றன. இந்தியாவிலும் இந்த நடைமுறையை பயன்படுத்தலாம்.2005க்கு பின் தயாரிக்கப்பட்ட இந்திய,மற்றும் இந்திய கூட்டு தயாரிப்பு இன்ஜின்கள் எத்தனால் கலந்த பெட்ரோலில் அதிக திறனுடன் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது,

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு மானியமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி “ப்ரையாரிக்ராஸ்” என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?

எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 25-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 25-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 25% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 35 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும்.

ராணுவத்துக்கு செலவழிக்கும் தொகையை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு தொகையை பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு அரசு ஆண்டுதோறும் செலவிடுகிறது, எத்தனால் உள் நாட்டிலேயே அபரிமிதமாக இருக்கிறது.அதை மாற்று எரிபொருளாக உபயோகித்தால் அபரிமிதமான அந்நிய செலாவணி மிச்சமாகும்,விவசாயியும் பயன்பெறுவர்,பெருவாரியான உள் நாட்டு வேலை வாய்ப்பும் உருவாகும். இதைச் செய்ய இந்த் தேசத்தின் நலனில் அக்கறையும் ,சுய சிந்தனையும்,அறிவும்,மன சாட்சியும் உள்ள தலைவர் இந்தியாவுக்குத் தேவை.அது நிச்சயம் மன்மோகனோ, ராகுலோ, சோனியாவோ அல்ல. எல்லாம் சரி இதில் மன்மோகன் எங்கே வருகிறார் அப்படினு தான கேட்கிறீர்கள்.

எத்தனால் பயன்பாடு:தடுக்கும் காரணிகள்

2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஒரு முன் வரைவை கொண்டு வந்து அரசு இதழிலும் வெளியிடுகிறது. THE GAZETTE OF INDIA: EXTRAORDINARY [PART I- SEC. I] MINISTRY OF PETROLEUM AND NATURAL GAS RESOLUTION

NEW DELHI, 3RD September, 2002
No. P-45018/28/2000-C. C. –

With a view to give boost to agriculture sector and reduce environmental pollution, Government of India have been examining for quite some time supply of ethanol-doped-petrol in the country. In order to ascertain financial and operational aspects of blending 5% ethanol with petrol as allowed in the specifications of Bureau of Indian Standards for petrol. Government had launched three pilot projects;

மேலும் இதற்காக ஒரு தனி தர மேம்பாடு ஆகியவற்றை நிர்ணயித்து IS 2796:1995 MOTOR GASOLINE SPECIFICATION(second revision) என்று ஒரு தர நிர்ணய விதிகளையும்,திருத்தி அமைக்கிறது. IS 1460:1997 என்ற தர நிர்ணய வரையறை டீசலுடன் மாற்று எரிபொருள் கலக்கப்டுவதற்கான தர நிபந்தனைகளை மறு வரையறை செய்து பட்டியலிடுகிறது. இதற்கான பணிகள் 1999 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நடந்து 2002ல் இறுதி வடிவம் பெற்றது. மேலும் 9 மாநிலங்களும்,4 யூனியன் பிரதேசங்களும் இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் தெரிவித்து அவற்றிற்கு முறையான அரசாணையும் வழங்கப்பட்டு அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. 2004 காங்கிரஸ் அரசு பதவியேற்ர சில மாதங்களில் இது சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் மூடு விழா நடத்தியது.கோஸோலின் திட்டத்திற்காக தனியாக அலுவலகம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த ஸ்ரீவத்ஸவா குழுவினர் நிர்வாக காரணங்களுக்காக வேறு வேலைகளில் பணிக்கப்பட்டனர்.

2006 வரை இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் ரிலையன்ஸ் நிறுவனம் லாபி செய்தது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் விற்றது எத்தனால் கலந்த பெட்ரோல் தான் என அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ள ஒரு அஃபிடவிட்டில் தெரிவித்துள்ளது. எஸ்ஸார் ஆயில், கெய்ர்ன் இந்தியா நிறுவனமும் அப்போதைய நிதியமைச்சரும் பொருளாதார அடியாளுமான சிவகங்கை சிதம்பரத்தின் மூலமாக மாற்று எரிபொருள் திட்டங்கள் இந்தியாவை உணவு பஞ்சத்தில் ஆழ்த்தும் என்று சொல்லி அந்த திட்டங்களுக்கு உரிய அனைத்து நிதியுதவிகளையும் மத்திய நிதிஅமைச்சகம் நிறுத்தியது. மேலும் டீசலுடன் காட்டாமணக்கை பயன்படுத்துவதன் மூலமாக இந்திய நிலங்கள் பாழ்படும் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி அதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள். 5% எத்தனால் கலந்த பெட்ரோலை உபயோகிக்க உத்தராஞ்சல்,சத்தீஸ்கர்,குஜராத் மாநிலங்கள் முன்வந்த போது மத்திய அரசு அதை புறக்கணித்தது.

இதில் மத்திய விவசாயத்துறை அமைச்சரான சுகர் லாபியின் தலைவருமான சரத் பவாரின் பங்கு பெருமளவிலானது ஏனென்றால் எத்தனாலுக்கு அதிகவிலையை விவசாயிகளுக்கு கொடுக்க ஆலை அதிபர்கள் தயாரில்லை. மதுபான லாபி ஆனது எத்தனால் அதிகப்படியாக எரிபொருளாக பயன்படுத்தப்படுமானால் எரிசாராயத்தின் விலை அதிகரித்து தங்கள் லாபம் குறையும் என்பதால் அதை தடுக்க அனைத்து தகிடு தத்தங்களையும் செய்தனர்.

2002 ல் அரசு தன் ஆணையை வெளியிட்ட பிறகு முதல் கட்டமாக ஜூலை 2003 க்குள்ளாக,9 மாநிலங்களில் இதை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.நிபுணர் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. எத்தனால் பயன்பாட்டை காலப்போக்கில் நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கவும்,இரண்டாவது கட்டமாக பயன்பாட்டை10 சதவீதத்திற்கு உயர்த்தவும்,மூன்றாவது கட்டமாக 20% க்கு உயர்த்தவும் திட்டங்கள் வகுக்க ஒரு கமிட்டி.உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் – எண்ணை கம்பெனிகளுக்குத்தான் விற்க வேண்டும். அப்படி வாங்கப்படும் எத்தனாலுக்கு எண்ணை கம்பெனிகள் லிட்டருக்கு என்ன விலை கொடுக்கலாம் என்பதை யோசித்து தீர்மானிக்க ஒரு கமிட்டி.

அப்படி உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கு உற்பத்தி வரி (excise duty) போடலாமா ?வேண்டாமா ?போடுவதாக இருந்தால் எவ்வளவு போடலாம்? என்பது குறித்து யோசித்து தீர்மானிக்க ஒரு கமிட்டி. கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்க எந்தெந்த வித இயந்திரங்களை தருவிக்கலாம் – எங்கிருந்து தருவிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்க ஒரு கமிட்டி .எத்தனாலை பெட்ரோல் -டீசலுடன் குறிப்பிட்ட சதவீதத்தில் கலக்க எண்ணை கம்பெனிகள் எந்த வகையான இயந்திரங்களை கையாளலாம் – எங்கிருந்து தருவிக்கலாம்,எண்ணை தயாரிப்பு நிறுவனங்களில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும் என்பது குறித்தெல்லாம் தீர்மானிக்க ஒரு கமிட்டி.

கடைசியாக, 2017 ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனால் கலந்த எரிபொருளை நாடு முழுவதும் கொண்டு வருவது என்று கொள்கை அளவில் தீர்மானிக்க விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் அவர்கள் தலைமையில் 7 அமைச்சர்கள் மற்றும் திட்டக்கமிஷனை உள்ளடக்கிய ஒரு கமிட்டி .உச்சகட்டமாக – 2007 ஜூன் 5ம் தேதி “உலக சுற்றுச்சூழல் தினத்தை” ஒட்டி, இந்தியாவிற்கு வருகை தந்திருந்த பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனெசியோ லுலாட சில்வாவிற்கு, திருமதி சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில் நமது மதிப்பிற்குரிய, செயல்வீரர் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மிக விரைவில் – இந்தியா 20% எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்தத் தொடங்கி – பசுமையான சூழலை உருவாக்கப் பாடுபடும் என்று உறுதி அளித்தார்.(இதைச் சொல்லி வெறும் 5 ஆண்டுகள் தான் ஆகின்றன!)

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்து,10 வருடங்களுக்கு முன்னதாக, செப்டம்பர் 2002 லேயே மத்திய அரசின் ஆணையும் (gazette notification) பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இன்று வரை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும்,எத்தனால் பயன்பாட்டில் காண முடியவில்லை.இத்தனை கமிட்டிகளும் சேர்ந்து இந்த 8 வருடத்தில் ஒரு 10 A4சீட் அளவு கூட ரிப்போர்ட் குடுக்க வில்லை. “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” சுயநலத்தை முன்னிறுத்தி இந்த நாட்டின் வளர்ச்சியை, இந்த நாட்டின் பொருளாதாரத்தை,மக்களின் மகிழ்ச்சியை, நல்வாழ்வை – கெடுக்கும் இந்த கேவலமான திறனற்ற,மக்களுக்கு பயன்படாத மத்திய காங்கிரஸ் அரசு என்ற சனி எப்போது ஒழிகிறதோ அன்று தான் இந்த நாட்டிற்கு விடிவு என்று ஒன்று உண்டு.

அந்நிய செலாவணி குறித்த அரசின் பொய்கள்

ஒரு பொருளை இறக்குமதி செய்ய அதிக அன்னிய செலவாணிக்கு தேவை இருக்கும் நிலையில் ,அன்னிய செல்வாணிக்கு எதிராக ரூபாய் சரியும் போது, அதிகம் விலைக்கொடுக்க வேண்டும், எனவே அன்னிய செலவாணியின் அளவை குறைக்க அது கொண்டு வாங்கும் பொருளின் அளவை குறைக்க வேண்டும், நேரடியாக இறக்குமதி அளவைக்குறைக்காமல் மக்களின் நுகர்வை குறைக்க செய்ய ஒரு எளிய வழி விலையேற்றம் அல்லது இறக்குமதியின் மீது அதிக வரி விதிப்பது ஆகும்.
சந்தையில் ஒரு பொருளின் டிமாண்ட் & சப்ளை நெகிழ்வுடன் (எலாஸ்டிக்) இருக்கும் எனில் விலை உயர்ந்தால் மக்கள் தாங்களாக நுகர்வை குறைப்பார்கள், எனவே இறக்குமதி குறையும், அதனால் டாலர் தேவை குறையும். இதனை மார்ஷல்-லென்னர் தியரி அடிப்படையில் செய்கிறார்கள்.
ஆனால் இந்தியாவைப்பொறுத்த வரையில் என்ன தான் விலை ஏறினாலும் நாம் பெட்ரோல் பயன்ப்பாட்டினை குறைப்பதில்லை, தங்கம் வாங்குவதையும் நிறுத்துவதில்லை, எனவே சப்ளை& டிமாண்ட் நெகிழ்வற்றது( இன் எலாஸ்டிக்).எனவே மார்ஷல்-லென்னர் தியரி அடிப்பட்டு விடும்.

ஆனாலும் மத்திய அரசு விலை ஏற்றினால் தேவை குறையும் ,மேலும் நட்டம் குறையும் என பிடிவாதமாக ஏற்றியது.அப்படியும் தேவை குறைவது போல தெரியவில்லை,எனவே எண்ணை நிறுவனங்களே சப்ளையை குறைக்க முடிவு செய்து விட்டது ,எனவே தான் தற்போது பெட்ரோல்/டீசல் இல்லை என பங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன.பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடாகவும் இருக்கிறது.

உண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,

டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.

அதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.

எனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்யப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன.

மேலதிக தகவலுக்கு:

https://203.134.203.24/orders/order5.pdf
https://petrofed.winwinhosting.net/upload/31Mar-1Apr10/Day%20I/Session%20III/1_U%20S%20Pandey.pdf
https://www.afdc.energy.gov/afdc/fuels/ethanol.html
https://slate.wvu.edu/r/download/37738

(முற்றும்)

6 Replies to “பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2”

  1. எத்தனால் பயன்பாடு வந்தால், இந்தியாவில் உள்ள விளைனிலங்கள் அனைத்தும் கரும்பு உற்பத்திக்கே பயன்படுத்தப்படும்.. மேலும், காடுகள் பல அழிக்கப்பட்டு, இந்த கரும்பு விவசாயம் மட்டுமே நடக்கும்..

    இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், வெறும் டெவலப்மன்ட் பிரச்சாரத்தை நம்பி இப்படி நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்..

    சனாதன தர்மம் என்பதே இயற்கையை பாதுகாப்பது தான்.. இப்பதி, இயற்கையை அழித்து மதிதனின் முடிவில்லா கன்ஸ்யூமரிசத்துக்கு தீனி போட விளைவது முரண்பாடாக இருக்கிறது..

  2. எத்தனால் உற்பத்திக்கு வழி விட்டால் விளைநிலங்கள் பறிபோகும் என்பது ஓரளவு உண்மைதான். இப்போதே தமிழ்நாட்டில் பாதிக்கு பாதி விளைநிலங்கள் வீட்டு மனைகளை உருமாறி தொலைக்காட்சி வாயிலாக நம்மை வாங்க அழைக்கின்றன.காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு காவிரி காயும் நாடாகத்தான்(தனஜ் மாவட்டம்) காட்சி அளிக்கிறது. ரியல் எஸ்டேட் குண்டர்களால் விளைநிலங்கள் கற்பிழந்து வருகின்றன என்றால் மிகையல்ல. எழுபதுகளின் இறுதியில் இருந்த தஞ்சை வள நாட்டுக்கும் இப்போதுள்ள தஞ்சைக்கும் உள்ள வேறுபாடு பசுமை போர்த்திய வயல்களினுடே செல்லும் சாலைகள் தற்போது லே அவுட்களுக்கு நடுவே செல்கின்றன.எனவே நெல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை கரும்பை போட்டு தஞ்சை மற்றும் தமிழக விவசாயிகள் கொஞ்சம் லாபம் பார்க்கட்டுமே.

  3. எத்தனால் உற்பத்திக்கு வழி விட்டால் விளைநிலங்கள் பறிபோகும் என்பது ஓரளவு உண்மைதான். இப்போதே தமிழ்நாட்டில் பாதிக்கு பாதி விளைநிலங்கள் வீட்டு மனைகளை உருமாறி தொலைக்காட்சி வாயிலாக நம்மை வாங்க அழைக்கின்றன.காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு காவிரி காயும் நாடாகத்தான்(தஞ்சை மாவட்டம்) காட்சி அளிக்கிறது. ரியல் எஸ்டேட் குண்டர்களால் விளைநிலங்கள் கற்பிழந்து வருகின்றன என்றால் மிகையல்ல. எழுபதுகளின் இறுதியில் இருந்த தஞ்சை வள நாட்டுக்கும் இப்போதுள்ள தஞ்சைக்கும் உள்ள வேறுபாடு பசுமை போர்த்திய வயல்களினுடே செல்லும் சாலைகள் தற்போது லே அவுட்களுக்கு நடுவே செல்கின்றன.எனவே நெல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை கரும்பை போட்டு தஞ்சை மற்றும் தமிழக விவசாயிகள் கொஞ்சம் லாபம் பார்க்கட்டுமே.

  4. இக்கட்டுரையின் பேசுபொருளுக்கு விளைநிலங்களைக் கரும்புக்குப் பயன்படுத்த ஆரம்பித்தால் விளை நிலங்கள் பறிபோகும், மேலும் காடுகள் அழியும் என்றொரு கருத்து இங்கே வைக்கப்பட்டிருக்கிறது. விளை நிலங்களைக் கரும்புக்குப் பயன்படுத்துவதால் எப்படி விளை நிலங்கள் பறிபோகும் என்று சொல்கிறார்கள்? விளைநிலங்கள் பயன்படுத்தப்படும் என்றுதானே சொல்லவேன்டும்? ஏராளமான புன்செய்ப் பயிர்கள் மூலமாகவும் எத்தனால் தயாரிக்கலாம் என்பதும் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறதே!

    பெட்ரோலுக்காக நாட்டிலிருந்து போகும் அந்நிய செலாவணி இந்திய விவசாயிக்குக் கிடைக்கும் என்கிற அடிப்படையிலிருந்து விலகாமல் இந்த யோசனையை அனுகினால் இது ஒரு வெல்வெல் சூழல் என்பது புரியும்.

  5. இங்கு மறுமொழி இட்டவர்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுதுகின்றனர்..

    எதனால் பயன்பாட்டிற்கு ஒரு எல்லையே கிடையாது.. எல்லாரும் கரும்பு போட்டு எரிபொருள் தயாரிக்கலாம் என்று அனுமதி கொடுத்தால், பின் இருக்கின்ற விளைநிலங்கள் எல்லாம் இதற்கே பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.. மானாவாரி நிலங்களை கூட போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி பயிர் செய்வார்கள்.. மேலும் காடுகளை அழித்து மேலும் மேலும் கரும்புக்கென்றே விவசாயம் பண்ணுவார்கள்..

    பிரிட்டிஷ்காரன் இங்கு வந்த பொழுது வங்காளத்தில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.. காரணம், உணவுப்பொருளுக்கு பதில், பிரிட்டிஷ் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு பருத்தியும், அவர்களின் ஓபியம் வர்த்தகத்துக்கும் பயிர் செய்ய வைத்தது.. எல்லாரும் காசு அதிகம் வருகிறது என்று பணப் பயிருக்கு மாறியதால் உணவுப்பஞ்சம் வந்தது..

    விவசாயத்தை தொழிற்சாலைக்கு விலை போக வைக்காதீர்கள்..

    மேலும் கரும்பு என்பது தண்ணீர் அதிகம் தேவைப்படுகிற பயிர்.. சொட்டு நீர் போட்டாலும், மற்ற பயிர்களை விட அதிகம் தண்ணீர் தேவை.. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் இப்படி பணப் பேராசையை காட்டி விவசாயத்தை அழிக்காதீர்கள்..

    இன்னொன்றையும் மனதில் வைக்க வேண்டும்.. மானாவாரி விவசாயமும் இன்று அவசியம் தேவைப்படுகின்ற ஒன்று.. சோளமும், கம்பும், ராகி, தினை போன்ற பயிர்களும் மனிதனுக்கு தேவை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *