இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16

கோப முகத்துடனும், தூசியைக் கிளப்பும் வண்ணம் கால்களை உதைத்துக் கொண்டும் லக்ஷ்மணன் கிஷ்கிந்தா நோக்கி நடந்த நடையிலிருந்தே ஏதோ வேண்டாதது நடக்கலாம் என்று யூகித்த வானரர்கள் ஒதுங்கி நின்று அவனுக்கு வழி விட்டனர். குடித்துக்கொண்டும், அரசவையில் பேசிச் சிரித்துக்கொண்டும் அரண்மனையில் சிங்காதனத்தில் வீற்றிருந்த சுக்ரீவனுக்கு, லக்ஷ்மணன் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டதாக இளவரசன் அங்கதன் தெரிவித்தான். இதற்குள் விவரங்களைத் தெரிந்துகொண்ட அமைச்சர் அனுமானும் சுக்ரீவனை அமைதியாக இருக்குமாறும், லக்ஷ்மணன் கோபத்தைத் தூண்டிவிடாதவாறு பேசுமாறும், அவன் கோபத்திற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்குமாதலால் மன்னிக்க வேண்டிக்கேட்கவும் சொல்கிறான். மழைக்காலம் முடிந்தும் முன்பு அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சீதையைத் தேடும் வேலையை ஆரம்பிக்காது சுக்ரீவன் மந்த கதியில் இருப்பதாகவும் அனுமன் சொன்னான். கோட்டை வாயிலில் வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தும் கதவு திறக்கப்படாமல் இருக்கவே, பொறுமை இழந்த லக்ஷ்மணன் கோபத்தில் வில்லை எடுத்து அதன் நாண்களை முறுக்கி ஓசையைக் கிளப்பினான். அந்த சத்தத்தைக் கேட்ட சுக்ரீவனுக்கு வந்திருப்பவரின் நிலைமை புரிந்துவிட்டது.

View More இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16