அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!

ஜீலை மாதம் 20ந் தேதி அசாமில் கோக்ரஜார் மாவட்டத்தில் தொடங்கிய வன்முறை ஐந்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது;. இந்த வன்முறையின் காரணமாக இதுவரை 50 பேர்கள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அசாமிலிருந்து வெளி வரும் ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்பதாக தெரிவிக்கின்றன. இன்னும் உயிருக்குப் போராடி வருபவர்களின் எண்ணிக்கை 200க்கு மேற்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. சுமார் 3 லட்சத்திற்கு அதிகமானவர்கள் தங்களது இருப்பிடங்களை காலி செய்துவிட்டு அரசின் தற்காலிக முகாம்களிலும், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலும் அடைக்கலம் புகுந்துள்ளார்கள். இந்த அவல நிலை ஏன் ஏற்பட்டது. அசாமில் வன்முறை நடப்பது இது முதல் முறையல்ல. இம்முறை நடந்த வன்முறையின் காரணமாக கோக்ரஜார், துப்ரி, பக்சா, சிராங் போன்ற போடோ பழங்குடியின மக்கள் வாழ்ந்த மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜீன் மாதம் 30ந் தேதி ஒருமுஸ்லீம் தச்சுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதும், இந்த கொலைக்கு காரணமானவர்கள் போடோ இனத்தவர்கள் என தவறான தகவலின் அடிப்படையில் போடோ இனத்தவரின் மீது குற்றச்சாட்டு சுமத்தி, இறந்து தச்சுத் தொழிலாளியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்ற போது நடத்த வன்முறையே, பின்னால் 50 பேர்கள் கொல்லப்படுவதற்கு காரணாக அமைந்தது.

முந்தைய கலவரங்கள்

ஏதோ ஜீலை 20ந் தேதி நடந்த கவலரத்தை கண்டு அசாமில் தற்போதுதான் கலவரம் நடப்பதாக பலர் பேசுவது வியப்பாக இருக்கிறது. 2012நடக்கும் இந்த வருடத்திலேயே பிப்ரவரி மாதம் 8ந் தேதி நடந்த மோதலில் 3பேர்களும், ஏப்ரல் மாதம் 20ந் தேதி ஐந்து பேர்களும், ஜீன் மாதம் 23ந் தேதி 4 பேர்களும் மிகப்பெரிய கலவரம் நடந்த ஜீலை மாதம் 13ந் தேதி மூன்று பேர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 1990ம் ஆண்டு மே மாதம் தொடங்கி 2012 ம் வருடம் ஜீலை மாதம் வரை ஆண்டு தோறும் அசாமில் கலவரங்கள் வெடிக்கும், இதன் காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்ட்டிருக்கிறார்கள். இதில் மிகவும் மோசமான வருடங்கள் 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு கால கட்டங்களில் நடந்த வன்முறையில் 125 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 2007-ம் ஆண்டில் 168 பேர்களும், 2008-ம் ஆண்டில் 192 பேர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வன்முறையும், கலவரமும் அசாமில் பிரிக்கப்பட முடியாத நிகழ்வாகும். இதற்கு காரணம் என்ன என்பதை பார்த்தால் சில விஷயங்கள் நமக்கு நன்கு புரியும்.

தற்போது நடைபெற்ற கலவரங்களை போலவே 1952, 1993, 1994 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் போடோ பழங்குடியினருக்கும், பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவி குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. மேற்படி ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்கள் பல மாதங்கள் நீடித்த வரலாறும் உண்டு.

தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த போடோ பழங்குடியினருக்கு 1993ல் நடந்த கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே, சுயாட்சி அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தும், கொடுத்த உறுதி மொழிபடி சுயாட்சி அந்தஸ்து வழங்கவில்லை. இதன் காரணமாக 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ந் தேதி கோக்ரஜார் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு போடோ பழங்குடியினருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தனியாக ஆளும் அதிகாரம் கொண்ட Bodoland Territorial Council என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. உருவாக்கப்பட்ட Bodoland Territorial Council அமைப்புக்கு எவ்வித அதிகாரமும் கொடுக்கவில்லை. ஆகவே மேற்படி அமைப்புக்கு எதிராக போடோ இயக்கத்தை வலுவிழக்க செய்ய போடோ சிறுபான்மையின மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள், தற்போதைய கலவரத்திற்கு இந்த அமைப்பினரே முக்கிய காரணமாவார்கள்.

ஊடுருபவர்களால் பிரச்சனை

இந்தியா பங்களா தேஷ் எல்லையில் பல ஓட்டைகள் இருப்பதால் லட்சக்கணக்கான பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் ஊடுருவுகிறார்கள். இவ்வாறு ஊடுருபவர்கள் அசாம் மாநிலத்தில் உள்ள எல்லைப் புற மாவட்ட மக்களுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு, உள்ளுர்வாசிகளை விரட்டக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள். இதன் காரணமாக இந்திய விடுதலைக்கு பின் மிகப் பெரிய போராட்டங்களை அசாம் மாணவர் அமைப்பு நடத்தியது. சுமார் ஆறு ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்தின் காரணமாக 1984ல் அசாமில் உள்ள அந்நியர்களை வெளியேற்றுவது சம்பந்தமான உடன்பாட்டை மத்திய அரசு மாணவர் அமைப்புடன் ஏற்படுத்தியது. 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், என்ன நோக்கத்திற்காக உடன்பாடு ஏற்பட்டதோ அந்த நோக்கம் அதாவது அசாம் மாநிலத்தில் உள்ள வெளிநாட்டவர்களை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கையை இது வரை எடுக்கவில்லை. 2005ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்தும் கூட, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஓட்டு வங்கிக்காக பங்களா தேஷ் இஸ்லாமியர்களை வெளியேற்ற தயக்கம் காட்டி வருகிறது. இந்த தயக்கம் தான் ஜீலை மாதம் 20ந் தேதி நடந்த கவலரத்தின் மூலக் காரணமாகும்.

1990ம் ஆண்டு வரை கோக்ரஜார் மற்றும் சிராங் மாவட்டங்களில் போடோ பழங்குடியினர் பெரும்பான்மையினராக இருந்தார்கள். ஆனால் 1990க்கு பின்னால் பங்காளதேஷ் நாட்டிலிருந்து மேற்கு வங்காளம் வழியாக அசாமில் ஊடுருவிய இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக மாறிவிட்டதின் காரணமாக மோதல்களும், கலவரங்களும் நடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பாக 2000-ம் ஆண்டிலிருந்து கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள Gossaigaon பகுதியில் திட்டமிட்ட ரீதியில் பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் ஊடுருவி தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசின் மூலமாக பெற்றுக் கொண்டார்கள். இந்த பகுதியில் உள்ள போடோ இனத்தவரின் நிலங்களை கைப்பற்றுவதும், விவசாயி நிலங்களில் கூலிக்கு அமர்த்தப்பட்ட அனைவரும் ஊடுருவிய இஸ்லாமியர்களை நியமித்ததாலும் இந்த கலவரம் தொடர்கதையாக இருப்பதாக பலர் தெரிவித்தார்கள். போடோ நிலப்பகுதிகளில் பிற அசாமியர்களும் , வங்காள முஸ்லீம்களும் வாழ்கின்றனர். இந்நிலையில் போடோ பழங்குடியின மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு இடையே மட்டுமே வன்முறையும், கலவரமும் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்கு கூட மத்திய மாநில அரசுகள் தயாராக இல்லை என்பது உண்மையாகும். ஏன் என்றால் ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களின் வாக்குகளை கொண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற ஆளும் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் சுய லாபத்திற்காகவே இந்த பிரச்னையை கண்டு கொள்வதில்லை.

1992ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ந் தேதி அன்றைய முதல்வர் ஹிதேஸ்வர் சைக்கியா அஸ்ஸாமில் 30 லட்சம் பங்களா தேஷ் முஸ்லீம்கள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளார்கள் என்றார். ஆனால் டெல்லியிலிருந்து என்ன உத்திரவு வந்ததோ தெரியவில்லை, இரண்டு தினங்கள் கழித்து ஏப்ரல் மாதம் 12ந் தேதி அஸ்ஸாமில் சட்ட விரோத பங்களா தேஷ்வாசிகள் எவரும் இல்லை என தெரிவித்தார். இரண்டு தினங்களுக்குள்; சட்டவிரோதமாக அஸ்ஸாமில் ஊடுருவிய 30 லட்சம் பங்களா தேஷ் வாசிகள் சட்டபூர்வ இந்திய குடிமக்களாக மாறிவிட்டார்கள். 2003ம் ஆண்டு அன்றைய ராணுவ அமைச்சர் பெர்ணான்டஸ் “ இரண்டு கோடி பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் சட்ட விரோதமாக இந்தியாவில் ஊடுருவி அஸ்ஸாமில் பெருவாரியான பகுதிகளில் குடியேறியுள்ளனர்” என்றார். இவரின் வார்த்தையை போலவே 2005ல் அஸ்ஸாம் மாநில ஆளுநர் திரு அஜய் சிங் “ தினசரி 6,000 பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் சட்ட விரோதமாக இந்தியாவில் ஊடுருவுகிறார்கள்” என்றார். 1992ல் பிரதம மந்திரி திரு.பி.வி.நரசிம்மராவ் “ சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவும் பங்களா தேஷ் மக்களால் இந்தியாவிற்கு தேசீய பிரச்னையாக மாறுகிறது, குறிப்பாக அஸ்ஸாமின் ஸ்திர தன்மை கேள்வி குறியாகிறது” என்றார். ஆனால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவும் பங்களா தேஷ் இஸ்லாமியர்களை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை. இந்த மெத்தன போக்கே தற்போதைய கலவரம் என்றால் மிகையாகாது.

கோக்ரஜார், துப்ரி, பக்சா, சிராங் மாவட்டங்களில் நடந்த கலவரம் பற்றிய இன்னும் சில செய்திகளை காண வேண்டும். வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களுக்கு செல்லும் வழி கோக்ரஜார் மாவட்டமாகும். இந்த மாவட்டத்தை போலவே துப்ரி மாவட்டமும் சட்ட விரோதமாக ஊடுருபவர்கள் பாதுகாப்பாக ஏழு மாநிலங்களில் ஊடுருவ வசதியான பகுதியாகும். இதன் காரணமாக 2001ல் அசாமில் உள்ள 22 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் 50 சதவீதம் இஸ்லாமியர்கள். 2012ல் 22 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிதத்திற்கு மேல் உயாந்துள்ளது என்றால் ஊடுருவியவர்களின் பங்கு எவ்வாறு உள்ளது என்பது புலனாகும். இது சம்பந்தமாக ரூபின் ஷர்மா என்பவர் விடுத்த கருத்து முக்கியமானதாகும் – “ 15 சதவீத பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதால், 15 சதவீத நிலப் பரப்பபை பங்களா தேஷ் நாட்டிடமிருந்து பெற வேண்டும்” (15% of Bangladeshis live in India illegally. It’s fair for India to demand 15% of Bangladesh land to be handed over) என்றார்.

அசாம் மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்ட லெப்டினட் ஜெனரல் எஸ்.கே. சின்ஹா 1998ம் ஆண்டு குடியரசு தலைவர் ஆர்.கே.நாராயணன் அவர்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைத்தார் “ பங்களா தேஷ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருபவர்களால், இந்தியாவின் உள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தாலாக அமைந்து விடும். ஆகவே ஊடுருவலை தடுத்து நிறுத்த வேண்டும் “ என்றார். ஆனால் இந்த நாட்டின் மதசார்ப்பற்றவர்களாக காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர்கள் ஆளுநர் சின்ஹாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசு தலைவரிடம் மனு கொடுத்தார்கள்.

ஊடுருவல் சம்பந்தமாக இந்தியாவின் சட்ட கமிஷன் தனது 175 வது அறிக்கையில் பங்களாதேஷ் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக ஊடுருபவர்களால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், உள்நாட்டு பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசு இயற்றிய Illegal Migrants Determination Tribunals Act சட்டம் அரசியல் சாஸனத்திற்கு புறம்பாக இருப்பதாக கூறி உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்ததது, இது சம்பந்தமாக உச்ச நீதிமன்ற கொடுத்த தீர்ப்பின் வாசகம் மிகவும் முக்கியமானதாகும். இந்திய அரசு சமர்பித்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் படி 1971-1991ம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 77.42 சதவீதம் உயர்வாகவும், இதே கால கட்டத்தில் அசாம் மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை உயர்வு 41.89 சதவீதமாக இருப்பதாகவும், இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயர்விற்கு ஊடுருவலே முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். (The Chart given above clearly indicates that Muslim population of Assam has shown a rise of 77.42%, in 1971-1991 , whereas Hindu population has risen by nearly 41.89% during the said period The growth of Muslim population has been emphasized in the previous paragraph to indicate the extent of illegal migration from Bangaladesh to Assam )

மேலும் இந்த தீர்ப்பில் இன்னும் சில குறிப்புகளை உச்ச நீதி மன்றம் அளித்துள்ளது – “There are three Districts in Assam , which has borders with Bangladesh viz. Karimganj, Cachar and Dhubri. All India percentage of decadal increase in population during 1981-1991 is 23.85% whereas the Border districts of Assam namely; Karmganj shows decadal increase of 42.08% Cachar district 47.59% , Dhubi district 56.57% . From the above it can be assumed that the infiltration of foreigners from Bangladesh contributed significantly to the sharp increase of population in Assam”.

ஊடகங்கள்:

ஆனால், ஜீலை மாதம் 20ந் தேதி கோக்ரஜார், மாவட்டத்தில் கலவரம் வெடித்தவுடன், இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானதாகவே வெளியிடப்பட்டன.

கலவரத்திற்கு உண்மையான காரணங்களை எடுத்து சொல்வதற்கு பதிலாக ஆளும் கட்சியினரை திருப்தி படுத்தும்விதமாகவே இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டார்கள். போடோ பழங்குடியின மக்களிடையே மோதல்கள் (ethnic clashes) என்று தலைப்பு செய்திகள் கொடுத்தார்கள். ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் உண்மை நிலையை அப்பட்டமாக காட்டின. ஐரோப்பிய ஊடகங்கள் “கோக்ரஜார் வன்முறையும் வங்க முஸ்லீம்களின் இடப்பெயர்ச்சியும்” (Kokrajhar violence is due to muslim Bengali migrants), Kokrajhar riot involves Muslim settlers போன்ற தலைப்புகளை அளித்தன. தாய்லாந்திலிருந்து வெளி வரும் பாங்காக் போஸ்ட் இதழின் தலைப்புகள் இப்படி இருந்தன – கோக்ரஜார் பகுதியில் உள்ள போடோ இன பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள் (Bodo women leaving homes in Kokrajhar), Rioting In Assam Underscores Deepening Crisis of ILLEGAL Migration from Bangladesh to India. இந்திய ஊடகங்கள் உண்மையை உரத்துச் சொல்வது என்ற தங்கள் நோக்கத்திலிருந்தும் தார்மீக நெறிமுறைகளிலிருந்தும் வழுவி, உண்மையை மறைக்கவும் திரிக்கவும் செய்தது வெட்கத்திற்குரிய விஷயம்.

அந்நிய நாடுகளின் திட்டம்

அசாம் மாநிலத்தின் மீது பாகிஸ்தானுக்கும், பங்களா தேஷ் நாட்டிற்கும் ஒரு கண் உண்டு என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். 1971ல் பங்களா தேஷ் நாடு உருவான போது பாகிஸ்தான் அதிபாராக இருந்த பூட்டோ கூறிய வார்த்தை மிகவும் கவனிக்க தக்கதாகும். “Our controversy with India is not on the problem of Kashmir only. In Assam, there are some muslim majority districts which should have been given to Pakistan at the time of Partition, these districts were wrongly included in India” பாகிஸ்தான் அதிபாராக இருந்த பூட்டோவின் கருத்துக்ளை தொடர்ந்து, பங்களா தேஷ் நாட்டின் முதல் பிரதமர் முஜிபுர் ரகுமான் கூறியதையும் நினைவுப்படுத்தி பார்த்தால், இரு நாடுகளும் அசாம் மாநிலத்தின் மீது ஒரு கண் வைத்திருந்தார்கள் என்பது நன்கு தெரிகிறது. முஜிபுர் ரகுமான் அவர்கள் கூறிய சில வார்த்தைகளை மட்டுமே தெரிந்து கொள்வது அவசியமாகும், “Assam abounds in good forests and beautiful scenes of nature. If some inhabitants of Bangladwsh migrate to Assam and settle there permanently, they will be very happy. Actually Assam should have been included in East Pakistan”. இந்த இருநாடுகளும் அசாமின் மீது ஒரு கண் வைத்திருந்தது தெரியும். ஆகவே திட்டமிட்ட ஊடுருவல் மூலம் இஸ்லாமியர்கள் அசாம் உட்பட வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் தங்களின் ஆதிக்கததை நிலை நிறுத்த முயலுகின்றார்கள், இதன் காரணமாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி கலவரங்கள் வெடிக்கின்றன.

தீர்வு என்ன?

ஆகவே அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் முழு அமைதி திரும்ப வேண்டுமானால், மைய அரசும், அசாம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களை வெளியேற்ற முயல வேண்டும். மேலும் எல்லைப் புறங்களில் அமைக்க வேண்டிய வேலிகளை காலதாமதம் இல்லாமல் அமைக்க வேண்டும். குஜராத், பஞ்சாப் மாநிலங்களின் எல்லை புறங்களின் நீளம் 202 கி.மீ தூரம், இந்த எல்லையில் வேலி அமைக்க 1988ல் துவங்கப்பட்டது, 1991ல் முடிக்கப்பட்டது. ஆனால் அசாம் மாநிலத்தின் எல்லையின் நீளம் 262 கி.மீ தூரம், 1985ல் வேலி அமைக்க திட்டமிடப்பட்டது, இன்று வரை இதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, இந்த திட்டம் எப்போது முழுமையடையும் என்பது கடவுளுக்கே வெளிச்சமாகும். பங்களாதேசில் இருந்து ஊடுருவும் இஸ்லாமியர்களால் தங்கள் அரசியல் அறுவடை நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை அசாமிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களீலும் வெடிக்கும் இத்தகைய கலவரங்களைக் கட்டுப்படுத்த இயலாது. உடுருவல்காரர்களை வெளியேற்றாமல் இருப்பது இந்திய அரசே இந்திய மக்களுக்கு புரியும் துரோகமாகும்.

அசாமில் அமைதி திரும்பச் செய்ய ஒரே வழி இந்திய அரசு தனது குடியுரிமைச் சட்டங்களைத் தனது நாட்டில் உறுதியுடன் செயல்படுத்துவதும், தனது எல்லைகளை இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்பதும் மட்டுமே.

10 Replies to “அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!”

  1. During the riots, the Assam CM, in an interveiw openly says, the riots have been happening for many years and he cannot do anything to control it. The inherent meaning is, he will not control it. It was shame on a person of such high office to talk so irresponsibly. India has no future as long as Congress party is alive.

  2. ஓட்டு பொறுக்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் உள்ளவரை இந்தியா தீவிரவாதிகளுக்கும் அந்நிய ஊடுருவல்காரர்களுக்கும் புகலிடமாக இருக்கும் .இந்திய பூர்வீக குடிமக்கள் வாழ்விடங்களை விட்டு அகதியாக திரிய வேண்டுயதுதான்

  3. ஒரு துணிச்சலான கட்டுரயை எழுதியதற்காக சரவணன் சார்க்கு நன்றி,

    அசாமில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட பல இடங்களில் பங்களாதேஷ் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் தென்தமிழ்நாட்டில் உள்ள சிறிய ஊரான கோவிலப்ட்டியில் கூட 22 பங்களாதேஷ் குடும்பங்கள் வாழ்வதாக 2005 ஆம் ஆண்டே ஒரு தகவல் வந்தது ,அதை தொடர்ந்து பல இடங்களில் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை நான் கண்டுருகிறேன்,அவர்களிடம் ரேஷன் கார்டு ,வாக்காளர் அட்டை ,ஓட்டுனர் ஒரிமம் என்று அத்தனையும் அரசு அலுவகங்களில் லஞ்சம் கொடுத்து வாங்கி வைத்திருகிறார்கள் இதற்கு உள்ளூர் முஸ்லிம்களும் அவர்களின் ஜாமத்தும் உடந்தை,எங்க சொல்ல இந்த கொடுமைய

    நமஸ்காரம்.
    Anantha saithanyan.

  4. இது பெரும் அதிர்ச்சியும் ,அபாயம் மான விஷயம் ,விசாகிருமிகளை ( அந்நிய பங்களாதேஷ் ) ஆரம்ப கடத்திலே( வெளியேற்றுவோம்) அழிப்பது நாட்டுக்கும்,நமக்கும் நல்லது. எல்லா மததவர்க்கும் ஒரே இந்திய சட்டம் என எற்படுததவரை நாடு நலம்பெராது.

  5. இந்த செக்யூலர் வியாதிகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையே செத்துவிட்டது. சுப்பிரமணியசாமி சொல்கிறார் நாங்களும் ஹிந்து முதாதையர்களின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளாத அன்னிய மதத்தவர்களுக்கு ஓட்டு உரிமை கூடாது என்று. நிலைமை அதையெல்லாம் கடந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக இந்த சிறுமான்மை அனைவருக்கும் அளித்துள்ள ஓட்டு உரிமையை பரித்தால் தான் இந்தியாவிற்கு வெடிமோஷ்சம்
    இல்லையேல் மதம் மாறவேண்டும் அல்லது வேறுநாட்டில் குடியேறவேண்டும் என்ற பரிதாப நிலையில் முன்றாம்தர குடிகளாக ஹிந்துக்கள் உள்ளனர் என்பதுதான் எதார்தம்.

  6. சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக நியாயத்துக்குப் புறம்பாக ஆதாய அரசியல் நடத்துவதில் இந்திய அரசியல் வாதிகள், குறிப்பாக காங்கிரஸ் காரர்கள் வல்லவர்கள். இந்த பாரத பூமியின் பூர்வீக மக்களின் நல்வாழ்க்கை பற்றியோ, பொதுவாக அனைத்துத் தரப்பினரின் சகஜ வாழ்வுக்காகவோ கவலைப் படாமல், யாரைக் குளிப்பாட்டினால் தங்களுக்கு ஆதாயம் என்பதை மட்டுமே கவனித்துச் செயல்படுவதில் காங்கிரஸ் காரர்கள் கில்லாடிகள். மிகக் கேவலமான இவர்களது செயல்பாடுகள் இந்திய மக்களை அழித்து ஒழித்துவிடும் என்பதில் ஐயமில்லை. காங்கிரஸ் என்று பூண்டோடு ஒழிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு விடிவுகாலம்.

  7. அஸ்ஸாம் கலவரத்துக்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் சர்க்கார்தான் என்பது அஸ்ஸாம் மக்கள் அனைவருக்குமே தெரியும் . அவர்கள் ஜாதி வாரியாக பிராந்தியம் வாரியாக மொழி வாரியாக பிரிந்து குறுகிய மனப்பான்மையுடன் ஓட்டுப் போடுவதால்தான் இந்தப் பிரச்சினையே.இப்போது இந்தப் பகுதிக்கு வந்த தொந்தரவு அடுத்த பகுதிக்கு வர நாட்கள் ஆகாது.அஸ்ஸாம் மட்டுமல்ல நமது நாடு முழுவதுமே இந்த நிலை வந்துகொண்டே இருக்கிறது.சுயநல அரசியல்வாதிகளால் நமது தேசம் மீண்டுமொரு அன்னியமத ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளது.முதலில் மக்கள் சுயமாக சிந்திக்க வேண்டும்.தேச பக்தியுள்ள அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் நலனை நாட்டின் நலனை எண்ணி அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பளித்தால்தான் நமது தேசம் காப்பாற்றப்படும்.
    ஈஸ்வரன்,பழனி.

  8. ஓட்டு பொறுக்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் உள்ளவரை இந்தியா தீவிரவாதிகளுக்கும் அந்நிய ஊடுருவல்காரர்களுக்கும் புகலிடமாக இருக்கும் .இந்திய பூர்வீக குடிமக்கள் வாழ்விடங்களை விட்டு அகதியாக திரிய வேண்டுயதுதான்

  9. பழங்குடிகள் உரிமைக்காக போராடுவதாக சொல்லும் மாவோயிஸ்டுகளும், பிற தலித் அமைப்புகளும் இந்த விஷயத்தில் சாதிக்கும் கள்ள மெளனம் கொடுமையானது. தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்படும்போது இடதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் அதை கண்டுகொள்வதில்லை.

  10. திரு.கந்தனின் கருத்து 100 சதவீதம் சரியானது….முஸ்லிம்கள் அசாமில் மட்டுமில்லாது மும்பையிலும் அதை தொடர்ந்து லக்னோ நகரத்திலும் கலவரத்தில் ஈடுபட்டனர் …ஆனால் அதை பற்றி பொம்மை பிரதமர் மன்மோகன் சிங்கோ இத்தாலிகாரி சோனியாவோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை…குஜராத் கலவரத்தை பற்றி பக்கம் பக்கமாக கருத்து வெளியிட்ட பத்திரிகைகள் கூட கள்ள மௌனம் சாதிப்பது….துரோகத்தின் உச்ச கட்டம்….முஸ்லிம்களோ அல்லது கிறிஸ்தவர்களோ ஒற்றுமையாக ஒரே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்கின்றனர்…..ஆனால் ஹிந்துக்கள் மட்டும் பல்வேறு கட்சிக்கு வாக்களிக்கின்றனர் …உண்மையில் ஹிந்துக்களுக்கு மானம் ரோஷம் கொஞ்சமாவது இருக்குமெனில் இனி வரும் 2014 நாடாளுமென்ற தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்து பா.ஜ.கவை வெற்றி பெற செய்வோம்….இல்லையெனில் இது போன்று வருத்தபடத்தான் முடியும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *