தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]

“தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை- புள்ளிவிவரங்களோடு இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பது பற்றிய விரிவான குறிப்புகளுடன்”

“Broad Daylight Robbery Committed by the Tamilnadu HR & CE Department proven with facts and figures- How Hindus are cheated – A detailed study.”

என்று தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் இந்த நூல் 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவர உள்ளது.

தொகுப்பு:

“ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ” அ.கிருஷ்ணமாசார்யர்.

ஸ்ரீமான் T.R. ரமேஷ்.

 

இந்துசமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இந்துக்களை ஏமாற்றும் வண்ணம் பல்வேறு வகையில் அமைந்துள்ளன. கடவுளைக் காட்சிப்பொருளாக்கி அவனைக் கண்ணால் கண்டுகளிப்பதற்குக் கட்டணம் வசூலிக்கும் அவலம் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் காணப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கூடும் சபரிமலையிலோ, குருவாயூரிலோ கட்டண தரிசனம் என்ற பேச்சிற்கே இடமில்லை.

உண்டியலில் போடப்படும் காணிக்கைகள் ஆராதனத்திற்கும், கோயில் நலத்திட்டங்களுக்கோ, ஏழை இந்துக்களின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கோ பயன்கொள்ளப்படாமல் அரசாங்கத்தின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேருந்து நிலையம் அமைத்தல், பொதுக்கழிப்பிடம் கட்டுதல், பொதுச்சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு செலவழிக்கப்படுகின்றன. இதனால் கோயில் விழாக்களுக்கும், பூஜைகள் நடத்துவதற்கும் உபயதாரர்களிடம் அவர்களுடைய நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு “உபயம்” என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுபோன்ற இன்னும் பல்வேறு அவலங்கள் எவை என்பது பற்றிய கண்ணோட்டமே இந்த வெளியீடு.

 

கீழ்காணும் இந்துக்கள் பெரும்பான்மையாக அறியாத, அறியவேண்டிய தகவல்கள்–

  • தமிழர் நாகரிகத்தின் தனிச்சிறப்புத் திருக்கோயில்கள். இன்று கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. இந்துக்களின் அறியாமை, அலட்சியம், ஆட்சியாளர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் இந்துமதக் கொள்கை, உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள், கோயிலைப் பாதுகாக்க வேண்டிய தக்கார்களும் அறங்காவலர்களும், ஊழலின் ஊற்றுக் கண்களாக விளங்குதல் போன்ற பல காரணிகளே இந்த இழிநிலைக்குக் காரணம்
  • அறநிலையத்துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா? சட்டங்களும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்.
  • பொதுக்கோயில் என்று ஒன்றுமே கிடையாது. பொதுக் கோயில்களை நிர்வகிக்க எங்களுக்கு உரிமை இருக்கின்றது என்பது இந்தத்துறையின் வெற்று வாதங்களில் ஒன்று. எல்லாத் தரப்பு இந்துக்களும் வரும் கோயில்  இந்துக்களின் கோயிலே அன்றி பொதுக் கோயில் அன்று. எவ்வாறு பிற மத வழிபாட்டுத் தலங்களை அரசு நிர்வகிப்பதில்லையோ அது போன்றே இந்துக்களின் கோயில்களையும் நிர்வகிக்கக் கூடாது.
  • கோயில் நிர்வாகிகள் (அறங்காவலர்கள்) பெரும் தவறு செய்திருந்தால் மட்டுமே, நேர்மையான விசாரணை செய்த பின்பு, அவசியம் இருந்தால் மட்டுமே செயல் அலுவலரை (Executive Officer) ஆணையர் நியமனம் செய்ய முடியும். (இதுவும் சட்டப்படி உள்ள உரிமையாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். நியாயப்படி பார்த்தால்  மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் கை வைக்காத அரசு இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மட்டும் எப்படி எடுத்துக் கொள்ளலாம்?)
  • ஆணையர், அவ்வாறு நியமனம் செய்யப்படும் செயல் அலுவலருக்கு கோயிலின் சொத்துக்களை நிர்வகிக்க மட்டுமே அதிகாரங்கள் வழங்க முடியும். கோயிலை நிர்வாகம் செய்ய அதிகாரம் அளிக்க முடியாது. அளிக்கக் கூடாது.
  • நிர்வாகம் தவிர மத நம்பிக்கை, வழிபாடு, திருவிழா, கும்பாபிஷேகம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் தலையிட இந்தத் துறைக்கு அதிகாரம் கிடையாது.
  • செயல் அலுவலரின் அலுவலகம் கோயிலுக்குள் இருக்கக் கூடாது
  • அறநிலையத் துறை அதிகாரிகள், செயல் அலுவலர்கள் ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை.
  • அர்ச்சனைக் கட்டணம், தரிசனக் கட்டணம் முதலியவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை.
  • பிரஸாதக் கடைகளோ வேறு கடைகள் நடத்தவோ, அவற்றை நடத்த ஏலம் விடவோ அதிகாரம் கிடையாது
  • தக்க காரணங்களுக்காக நிர்வாகத்தைத் தான் எடுத்துக்கொண்டாலும் அதைத் தொடர்ந்து தானே வைத்திராமல் 3-லிருந்து 5 ஆண்டுகளுக்குள் சீர்திருத்தித் திருப்பித் தந்துவிடவேண்டும்.
  • இந்துக்கள் கோயிலுக்கு செலுத்தும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் குறைந்தபட்சம் 16 ரூபாய், அதன் நிர்வாகச் செலவுக்காக அரசுக்குப் போகிறது. இந்துக்களின்மேல் அறிவிக்கப்படாத ஆனால் திணிக்கப்பட்ட ஜஸியா வரி. இந்த வகையில் மட்டுமே இந்துக் கோயில்கள், அரசைப் பொருத்தவரை, ஒரு பொன்முட்டையிடும் வாத்து.
  • 40 சதவிகிதம் வரை சம்பளத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அர்ச்சகர்களுக்கும் ஓதுவார்களுக்கும் அரசு நிர்ணயித்த சம்பளம்கூட வழங்கப்படாமை..
  • திருக்கோயிலின் நிலங்களை விற்பதற்கு இந்தத் துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
  • அறங்காவலருக்கான தகுதியாக “நான் ஒரு இந்து” என்று சொல்லிக்கொண்டால் போதும். மற்றபடி ரவுடியாகவோ கொலைக்குற்றம் சாட்டப்பட்டவராகவும்கூட இருக்கலாம் என்கிற அவலமும் வரலாறும்.
  • திருமடங்கள், ஆதீனங்கள் இவற்றை நிர்வகிக்க, அதிகாரம் செய்ய, மேற்பார்வையிட அதிகாரம் கிடையாது.
  • நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் தன்னைக் கட்டுப்படுத்தாது என்ற எண்ணம் கொண்ட இந்துசமய அறநிலையத் துறையின் சில நிகழ்வுகள்- சிதம்பரம் சபாநாயகர் கோயில் வழக்கு, முல்கிபேட்டை கோயில் குறித்த மேல்முறையீட்டு போன்றவை..
  • “ஷிரூர் மடம்” வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம்..
  • 1959ஆம் வருட “இந்துசமய அறநிலையத் துறை மற்றும் அறக்கட்டளைகள் சட்டம்” என்னும் இந்துக்களை சீரழிக்கும் மாபெரும் மோசடிகளின் விவரங்கள்..
  • கோயில்களை அபகரிக்க இத்துறை செய்யும் ஏமாற்றுவேலைகளின் விவரமான பட்டியல்..
  • Gold Card System என்னும் மாபெரும் மோசடி
  • சொகுசுக் கார் தொடங்கி கோயில் தொடர்பில்லாத பணிகளுக்கு(அட்டூழியங்களுக்கு) செய்யப்படும் பணவிரயங்கள்.
  • உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் பலமுறை தங்கள் தீர்ப்புகளின்மூலம் தெளிவுபடுத்தியுள்ள முடிவுகளும் அவற்றைப் பின்பற்றாத, இந்துசமய அறமில்லாத துறையின் அத்துமீறல்களும்…
  • “திருடனும் தலையாரியும் ஒன்றானல் விடிய விடியக் கொள்ளை அடிக்கலாம்” என்ற பழமொழியை நன்கு அறிந்துவைத்திருக்கும் அறக்கட்டளைத் துறையின் நிர்வாகச் சீர்கேடுகள்..
  • சொத்துக்களை அபகரித்துக்கொண்டே ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் உற்சவர் சிலைகளை ‘ஜீவப்பிரதிஷ்டை’ என்ற பெயரில் அன்ன ஆகார, ஆராதனைகளில்லாமல் சிறைவைத்திருப்பது..
  • தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கே ‘தண்ணி’காட்டும் சாமர்த்தியம், தகிடுதத்தங்கள்..

இப்படிப் பல விபரங்களோடு நவம்பரில் வெளியாகிறது இந்நூல்.

 

இந்தப் புத்தகம் குறித்த முன்னோட்டம்  பிடிஎஃப் கோப்பாக இங்கே கிடைக்கும்.

 

கிடைக்குமிடம்:

திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்புப் பேரவை,
214, கீழ உத்தர வீதி,
திருவரங்கம்,
திருச்சி – 620 006.
தொலைபேசி எண்:  (0431) 2434398

8 Replies to “தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]”

  1. அனைவரும் அறிந்து இருக்க வேண்டிய தகவல். இந்த தகவல்களை தொகுத்து வழங்கிய மக்களுக்கு எனது நன்றிகள்.

    தற்பொழுது அறநிலை துறை தனது உச்சகட்ட அயோக்கிய தனத்தை செய்ய தொடங்கி உள்ளது. அதாவது கோயில் நிலங்களை எல்லாம் எடுத்து அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பது. இவர்களை விட ஒரு பகற் கொள்ளையர்களை ஊரில் காண முடியாது.

    ஒரு புறம் அன்னதானம் செய்கிறேன் பேர் வழி என்று சொல்லி ஊரை ஏமாற்றுவது.

    ஆனால் மறுபுறம் கோயில் பிரசாதத்தை விற்பது. என்ன ஒரு காமெடியான விசயம்.

    அரசாங்க பணத்தை எடுத்து பொது மக்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி கோயில் சொத்தை வைத்து மாநகராட்சிக்கு, வளர்ச்சி திட்டத்துக்கு உபயோகப்படுத்துவது,

    மறுபுறம் அரசாங்க பணத்தை அதாவது மக்கள் வரிப்பணத்தை எடுத்து இஸ்லாமியர்கள் அரேமியாவுக்கு செல்ல ஹச் என்ற பெயரில் பணத்தை கொடுப்பது, அது மட்டுமா இலவச டிவி, விசிறி,.,,, இன்னும் என்னவோ சொல்லி கொண்டு போகலாம்.

    ஒருபுறம் அனைவருக்கு கோயில் அனைவருக்கு பொது. ஹிந்து கோயில் பொது சொத்து என்று சொல்வது.

    மறுபுறம் காசு கொடுப்பவனுக்கு முதல் அனுமதி, காசு இல்லாதவனுக்கு கடைசி அனுமதி.

    கோயிலில் நிர்வாகத்தை மேம்படுத்த கோயிலை எடுக்கிறேன் என்று சொல்லி கொண்டு கோயிலை தனது கையில் எடுக்கும் அரசாங்கத்தின் நிர்வாக இலட்சனம் என்ன என்பதை மதுரையில் நடந்துள்ள கனிம வள சுரண்டலே போதுமானது.

    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கோயிலை பாதுகாத்த நமக்கு ஊழல் பெருச்சாளிகள் நிர்வாக உதவி எதற்கு? இந்த பெருச்சாளிகளை கோயிலில் இருந்து விரட்டும் வரைக்கும் ஹிந்துக்களுக்கு விடிவு காலம் இல்லை.

  2. வணக்கம். நூல்வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!
    1) நீங்கள் சொல்வது போல, மற்ற மதங்களின் வழிபாட்டுத்தல வருமானங்களை அரசு நிர்வகிப்பதில்லை. எனவே, கோயில் நிர்வாகத்துக்கு தனியார் அமைப்பு தேவை. ஆனால், பல சிற்றரசர்கள்/தொண்டர் யாருமில்லை என்ற அவலம் நம் நாட்டில் பொதுவானது, பூனைக்கு யார் மணி கட்டப்போகிறார்கள்?
    2) மற்றபடி, கோயில்களில் சீரமைப்பு என்பது அறிவியல் முன்னேற்றத்தோடேயே அமைய வேண்டியது. 1960களில் என் தந்தையார் திருவரங்கம் கோயிலில், அரசு ஆணையின் மூலம் நிர்வாக ஆணையராக இருந்த காலங்களில் (ஆண்டு சரியாக இருக்கலாம்/என் தந்தை இப்போது மறைந்துவிட்டார்) தான் கோயில் கருவறையைச் சுற்றி மின்தொடர்பு, வழிபாட்டு நேரத்தை அட்டவணைப்படுத்தல், சொத்துகளை நேர்ப்படுத்தல், கட்டணச்சீட்டு முறை இவற்றை அங்கே அறிமுகப்படுத்தினார். அதுவரை சகோதரி சமயபுரத்தாளின் வருமானத்தில் வாழ்ந்து வந்த அரங்கர் இன்று உண்மையிலேயே அரங்கராசர்.

    எல்லாச் சீர்திருத்தங்களும் தவறல்ல. ‘வழுவல, காலவகை’. மேற்கூறிய சீர்திருத்தங்களை முறைப்படுத்த எவ்வளவு எதிர்ப்புகள் வந்தன, எவ்வாறு அவற்றைக் கையாண்டார் என்பனவற்றை எங்களோடு பேசியிருக்கிறார் தந்தை. அவர் எடுத்த முடிவுகள் அனைத்துமே கோயிலின் எதிர்கால நலனைக் கொண்டு எடுத்தவை என்று சொல்லியிருக்கிறார். அடுத்த கட்டச் சீர்திருத்தங்கள் தாம் வராமல் போய்விட்டன என்று தான் நான் நினைக்கிறேன்.

  3. அத்வைதி அவர்களுக்கு அன்பான மறுமொழி,

    1970 களிலும், தங்கள் தந்தையார் செயல் அலுவலராக இருந்த போதும் இப்பொழுது உள்ளன போலவே பற்பல நில புலன்களும் சிறப்பான கட்டளைகளும் இருந்தன. திருவரங்கன் என்றுமே அரசராக தான் இருக்கிறார். உங்கள் தந்தை காலத்தில் நிலக் குத்தகை, வேறு சொத்துகளின் வருமானங்களும் நிலுவை இன்றி நிர்வாகத்தால் பெறப்பட்டனவா? கட்டளைகள் ஒழுங்காக நிறைவேற்ற பெற்றனவா?

    ஆம் என விடை அளித்தல் உங்களாலும் உங்கள் தந்தையாராலும் அறம் நிலை அற்ற துறையாலும் இயலாத செயல். கோயில் சொத்துக்களின் வருமானம் ஒழுங்காக பெற பட்டால் உண்டியல்களும் தேவை இல்லை. அதர்ம தர்சன கட்டணங்களும் தேவை இல்லை. வருகின்ற வருமானத்தை வைத்து கோயில் நிர்வாகத்தை சிறப்பான நிர்வாகம் என்று சொல்வதை முதலில் நாம் மாற்றிகொள்வோம்

  4. என் தமழக அரசு சர்ச், மசுதிகளை தன்வசம் எடுப்பது இல்லை

  5. சர்ச்சுக்களையும் மசூதிகளையும் அரசு எடுக்காத காரணம் எடுத்தால் பலத்த எதிர்ப்பு அவர்களிடமிருந்து கிளம்பும். தமிழகத்திலிருந்து மட்டுமன்றி இந்தியா முழவதுமிருந்து. அவர்களிடையே அப்படிப்பட்ட ஒற்றுமை.

    அதே வேளையில் இந்துக்கள் சிதறிக் கிடக்கிறார்கள். அதன் காரணங்களை ஆராய நீங்களெல்லாரும் பயப்படுகிறீர்கள். இத்தளத்தில் பூணுல் பற்றி நான் எழுதியதற்கு எதிர்ப்பு பார்ப்ப்னர்களில் சிலரிடமிருந்தும் அவர்களை ஒட்டுமொத்தமாக ஆதரிக்கும் சிலரிடமிருந்து மட்டுமே கிளம்புகிறது. கிருஸ்ணகுமார், பிரசன்னா எழுதியவற்றைப்படியுங்கள். மற்ற இந்துக்கள் ‘அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் ஜாதிப்பழக்கம், நமக்கென்ன” என்று சொல்லிவிட்டு வாளாவிருந்து விடுவார்கள்.

    மேலேயுள்ள கட்டுரையில் போடப்பட்ட படமொன்றில் பட்டரைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு செல்லும் வழக்கம் ஆதரிக்கப்படுகிறது. இது ரொமப் ரொம்ப பழமைவாதிகளால் மட்டுமே ஆதரிக்கப்படும். ஒரு மோசமான பழக்கம். கட்டுரை ஆதரிக்கச்சொல்லும் காரணம் பழமையான வழக்கம் விடக்கூடாதென்பதுதான். பாலிய விவாஹமும் உடன்கட்டை ஏறலும் விதவைகளுக்கு மொட்டை போடலும் பழமையான வழக்கங்கள்தேனே. வைத்துக்கொண்டாலென்ன?

    ஒற்றுமையை குலைக்கும் பழக்கங்களை ஆதரிக்காதீர். சாதிகளை ஆதரிக்காதீர். பல குறுக்கு வழிகளில் சாதிகளை உள்ளே விட்டு ஆதரிக்கத் துடிக்க ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது. இவர்களே இந்துமதத்தின் உண்மையான எதிர்கள். இந்துக்களிடையே ஒற்றுமையைக் குலைப்பவர்களை கண்டுகொண்டு அவர்களை வில்க்கல் நன்று.

    மோசமான பழக்கங்கள் விடும்போது அனைவரும் வருவார்கள். இந்து என்ற ஒரு முகம் கிடைக்கும். அப்போது இந்துக்கோயில்களை அரசு நெருங்காது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு.

    கூழுக்குமாசை, மீசைக்குமாசையென்றால் ஒன்றுமே நடக்காது. இல்லாவிட்டால், ஹிந்துமதத்தை வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மிசுநோரிகளுக்கும் முல்லாக்களுக்குமே பின்னூட்டம் போடுவோரில் பலர் உதவிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு போட்ட நான் சுட்டிய சித்திரத்தை அவர்கள் தள்ங்களில் போடலாம். இங்கு சாதிப்பழக்கத்தை இந்துமதப்பழக்கமென்று ஆதரிக்கும் பின்னூட்டங்களை எடுத்துப்போட்டால் போச்சு. பின்னூட்டக்காரர்கள் ஒருவேளை இப்படி சிந்திக்காமல் அறியாமையில் எழுதுகிறார்கள் எனச்சொல்லலாம். அவ்வளவுதான்.

    என் இந்தப்பின்னூட்டம் வெளியிடப்படவில்லையென்றால் அப்படிப்பட்ட பின்னூட்டக்காரர்களுக்கு மட்டுமே தமிழ் ஹிந்து.காம் ஆதரவளித்து அவர்கள் வழி செல்கிறது என்று எழுதுவதை நிறுத்திவிடுவேன். உங்களுக்கில்லாத அக்கறை எனக்கெதற்கு?

    வரவில்லையென்றால் குட் பை.
    வந்தால் மீண்டும் எழுதுவேன்.

  6. வணக்கம். இந்து அறத் துறை அமச்சு செய்திகளைப் படித்தேன். எங்கள் நாடு இஸ்லாமிய சமயத்தை அதிகாரபூர்வ மதமாக் கொண்ட நாடு. 1906ஆம் ஆண்டில் முகம்ம்பதிய இந்து அற்வாரியம் போன்ற அமைப்பு அமைகப்பட்டது ஐயாயிரம் கோயில் உள்ள நாட்டில் அறவாரியத்தில் 4 நான்கு கோயிக மட்டும் இடம் பெற்றுள்ளன். தற்சமயம் முகம்மதியர் என்ற சொல் நீக்கப்பட்டுவிட்டது. சுதந்திரத்திற்குப் பின் இஸ்லாம் அதிகார பூர்வமான் சமயாகும்.
    இங்குள்ள் ஆலயங்களில் பெரும்பாலானவை எழ்ழை மக்க்ளால் நடத்தப்படுபவை, பெரும்பாலான் மக்கள் அற்வாரியத்தின் செயல்பாடுகளை அறியாமல் இருக்கின்றனர். புதிய அறவாரியம் மைக்கப்பட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அமையுமானால், தற்சமயம் உள்ள ,அத நல் இணக்கத்திற் உற்று ஏற்படலாம். எனவே தயவுசெய்து அறவாறியத்தின் செயல்பாடுகள் குறித்து (நன்மை-தீமை) குறித்து விளக்கம் அளிக்கவுதெரிந்துகொள்ள விழகிறேன் உதவி செய்யுங்கள்
    அன்புடன்
    கருணாகரன் குமரன்

  7. அறநிலையத்துறை சட்டம், அதனால் நம் கோயில்களுக்கும் ஹிந்து சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள், இந்த துறையின் தோற்றம், செய்யும் தவறுகள் என்று அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும் பகிரவும்.
    கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கு போராடும் ஹிந்து சகோதரர்கள் அனைவருக்கும் இந்த லிங்கை கட்டாயம் அனுப்பவும். பொதுமக்களுக்கு அறநிலையத்துறையால் கோயில்களின் பாரம்பரியம், சொத்துக்கள் எல்லாம் எப்படி அழிந்து வணிக மையங்களாக மாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்க இந்த வீடியோ கட்டாயம் உதவும்.

    https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

    *கோயில்களை சர்க்கார் அறநிலையாத்துறை என்னும் துறை மூலம் ஆக்கிரமித்து கோயில் சொத்துக்களை “கவனிக்கிறது”. இதுபோல அரசாங்கம் சர்ச்களையோ, மசூதிகளையோ சுரண்டுவதில்லை. ஏன் கோயில்களுக்கு மட்டும் இந்த சாபம்?

    *கோயில் சொத்துக்களை சரிவர பராமரிக்காமல், அவற்றை அரசு வேலைகளுக்கும் அரசியல்வாதிகள் வேலைக்கும் விற்று பயன்படுத்துகிறார்கள்! அக்கிரமங்களின் உச்சம் இது. கோயில் ரெஜிஸ்டர் என்னும் புஸ்தகம் பேணப்பட வேண்டும். அதில் கோயில் சொத்துக்கள் பற்றி விவரங்கள் இருக்க வேண்டும். எந்த கோயிலிலும் அறநிலையாத்துறை முறையாக பராமரிப்பதோ பேணுவதோ இல்லை. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

    *இந்த அறநிலையாத்துறை மதசார்பற்ற அரசால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாரபட்சமாக நடத்தும் கொடுமை ஆகும்.

    *அறநிலையாத்துறைக்கு கோயில் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. கோயில் பூஜை முறைகளையோ, விழாக்கலையோ, பிற பணிகளையோ கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

    *கோயிலுக்குள் பலகாரக் கடையை “பிரசாதக்கடை” என்னும் பேரில் நடத்துவது தவறு மட்டுமல்ல அசிங்கமும் ஆகும்.

    *கோயிலுக்குள் ஆகம விரோதமாக பழைய அமைப்புகளை சிதைப்பது புதிய கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய குற்றம். குறிப்பாக அறநிலையாத்துறை அதிகாரிகளுக்கு கோயிலுக்குள் அலுவலகம் இருக்கவே கூடாது.

    *அறநிலையாத்துறை கோயிலுக்கு ஒரு வேலைக்காரர்கள். அவ்வளவே. கோயிலை தங்கள் இஷ்டம் போல எடுத்துக் கொள்ள முடியாது. நிர்வாகம் சரியில்லை என்று சட்டப்படி நிரூபித்து கோயிலை எடுத்தாலும் அதிகபட்சம் மூண்டு முதல் ஐந்து வருடத்துக்குள் மீண்டும் நிர்வாகத்தை ஒப்படைத்து கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

    இதுபோல, இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த அறநிலையாத்துறை பற்றி உள்ளது. அனைவரும் இந்த அறநிலையாத்துறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட லிங்கில் அறநிலையாத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கோயிலில் கருத்து வேறுபாடு என்று அறநிலையாத்துறையை உள்ளே கொண்டு வந்து விடுபவர் அந்த கடவுளுக்கே துரோகம் செய்தவனாவார். அப்படி செய்பவர் கோயிலை இடித்து கோயில் சொத்தை தின்றவர்கள் என்ன ஆவார்களோ அதே நிலைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அந்த புத்தகத்தின் வீடியோ இணைப்பு:https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

  8. அறநிலைய ஆய்வுகுகளுக்கு வணக்கம்
    என் ஊர் அரசர்குளம் கீழ்பாதி இங்கே சிவன் ஆலயம் நீண்ட வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது இக்கோயிலின் சிலை அறுக்கப் பட்டு திருடப்பட்டும் இருக்கிறது இதுநாள் வரையில் அறநிலையத்துறை கண்டு கொள்ள வில்லை.இந்த கோயிலின் சொத்துக்கள் ஏராளம் உள்ளது ஆனால் இந்த சொத்துக்களால் இந்த கோயிலுக்கு எந்த பயனும் இல்லை இந்த சொத்துக்களை அனுபவிப்பவர்கள் கோயிக்கு எந்த உதவியும் செய்வது இல்லை இந்த கோயிலை பழுது பார்க்க வேண்டும் என்று யாராவது கேட்டால் அதற்கு சிலர் தடையாக இருக்கிறார்கள் சிலர் கோயில் சொத்தில் வீடுகட்டியும் இருக்கிறார்கள் மற்ற மதத்தவர் இதை அறநிலையத்துறை தலையிட்டு கோயிலை மீட்டு பாதுகாக்கவும் இப்படிக்கு சிவன் பக்தர்கள் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *