அஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவரும் சங்கத்தின் மூத்த பிரச்சாரகருமான ஸ்ரீ.கு.சி.சுதர்சன்ஜி அவர்கள் ராய்ப்பூரில் 15 செப்டம்பர் 2012 காலை 6.30 மணி அளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது.81. வழக்கம் போல் காலையில் தனது நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பிராணாயாமம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் 2000 முதல் மார்ச் 2009 வரை 9 வருடங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்சங்கசாலக்காக (அகில பாரதத் தலைவர்) இருந்து வந்தார். உடல் நலக் குறைவு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகி அப்பொறுப்பினை டாக்டர் மோகன் பாகவத் அவர்களிடம் ஒப்படைத்தார்.

1931 ஜூன் 18 ஆம் தேதியன்று ராய்ப்பூரில் பிறந்தவர். மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற சாகர் பலகலைக்கழகத்தில் மின்னணு & தொலைதொடர்பு  பொறியியல் பிரிவில் பி.ஈ.ஹானர்ஸ் (B.E. Honours in Electronics & Communication) பட்டம் பெற்றவர். தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு தேசத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 1953 முதல் சங்கப் ப்ரச்சாரக்காக (முழு நேரத் தொண்டர்) தனது பணியைத் துவங்கினார்.

தனது 9வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகராக இருந்து வந்தவர். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் சமுதாயப் பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 1954 ஆம் வருடம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ப்ரசாரக்காக (முழு நேரத்தொண்டராக) தனது வேலையைத் துவக்கினார். துவக்கத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராய்கட், சாகர் மாவட்டங்களின் ஜில்லா ப்ரச்சாரக்காக பணிபுரிந்துள்ளார். 1964 ஆம் வருடம் மத்தியபாரதத்தின் ப்ராந்த ப்ரசாரக்காக பொறுப்பேற்று செயல் பட்டுள்ளார்.

1977 முதல் கௌஹாத்தியை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். சங்கத்தின் ஷாரீரிக் பிரமுகராகவும் (உடற்பயிற்சிப் பிரிவின் பொறுப்பாளர்) அதைத் தொடர்ந்து சங்கத்தின் அகில பாரத பௌத்திக் பிரமுக்காகவும் (சிந்தனைக் குழுவின் பொறுப்பாளர்) இருந்துள்ளார். 1990 முதல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத சஹ சர்கார்யவாஹ் ஆக (அகில பாரத இணைப் பொதுச் செயலாளராக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார். இறுதியில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 5 வது சர் சங்கசாலக்காக (அகில பாரதத் தலைவராக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா உட்பட மேலும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். சர்சங்க சாலக் பொறுப்பில் இருந்து விலகிய பிறகும் கூட நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து வந்தவர்.

மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். உண்மையில் அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே இருந்துவந்தார். சாதாரண பிரச்சனையில் இருந்து நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தையும் பற்றி ஆழமான, தெளிந்த கருத்தும் சிந்தனையும் கொண்டவர். நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஸ்வதேசி அணுகுமுறை மற்றும் சிந்தனையே தீர்வாகும் எனத் தீவிரப் பிரச்சாரம் செய்துவந்தவர். மிகத் தீவிரமாக சங்கத்தின் அன்றாட ஷாகா வேளையில் அதிக ஆர்வம் கொண்டவர். அதில் அதிக கவனம் செலுத்தி ஷாகா வருகின்ற சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுத்து வந்தவர்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பேட் என்கிற இடத்தில் இவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். ஆனாலும் இவரது மூதாதையர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ஆகும்.

வாழ்வே தவமாக தேச நலனுக்கும், இந்து ஒற்றுமைக்கும் பாடுபட்ட திரு சுதர்ஷன் அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி.

Tags: , , , , , ,

 

5 மறுமொழிகள் அஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி

 1. snkm on September 16, 2012 at 5:13 pm

  தேசம் தன்னலமில்லாத தலைவர்களை எதிர் நோக்கியுள்ளது. இவரின் இழப்பு தேசத்திற்கு பெரிய இழப்பாகும்.

 2. சேக்கிழான் on September 17, 2012 at 2:00 am

  மா.ஸ்ரீ. சுதர்சன் ஜிக்கு ப்ரணாம்!

  பதவியை பெரிதாகக் கருதும் இந்த உலகில், தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டவுடன் பதவி விலகி அடுத்த தலைவரிடம் பொறுப்பை ஒப்படைத்தவர் சுதர்சன் ஜி. மிகப் பெரும் சிந்தனையாளர். சங்கத்தின் சித்தாந்த சிற்பிகளில் முக்கியமானவர். அன்னாருடைய ஆன்மா நற்கதி அடைய வேண்டுமானால், அவர் கனவு கண்ட புகழோங்கிய பாரதம் அமைய வேண்டும். அதற்காகப் பாடுபட நாம் உறுதி ஏற்க வேண்டிய தருணம் இது.

  – சேக்கிழான்

 3. ஞானம் on September 17, 2012 at 11:38 am

  வார்த்தை கொண்டு சொல்ல இயலாது

  இந்த

  வாழ்க்கை நடையின்…..

  வழி காட்டுதலை………

 4. க்ருஷ்ணகுமார் on September 17, 2012 at 2:56 pm

  ஸ்ரீ சுதர்சன் ஜி அவர்கள் ஆன்மா சாந்தியடைய ஹிந்து ஒற்றுமைக்காகவும் அகண்ட ஹிந்துஸ்தானம் அமையவும் தொடர்ந்து பணியாற்றுவோம்.

  பாரத வந்தே மாதரம்

 5. sridharan on September 24, 2012 at 10:23 pm

  such souls are very rare.
  Only the Sangh parivar inculcates such selfless character in men and omen.
  May his sous merge with the Paramatman.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*