நிலக்கரி மோசடி 1.86 லட்சம் கோடியல்ல 51 லட்சம் கோடி

ஜீரோ லாஸ் (Zero Loss)- என்று மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியால் வர்ணிக்கப்படும் இழப்பே இல்லாத நிலக்கரி ஒதுக்கீட்டை முழுமையாக அறிந்து கொண்டபின் நம் திருவாளர் தூய்மை மன்மோகன் சிங் அவர்களின் நேர்மையையும் கறைபடியாத தன்மையையும் காங்கிரஸ் கட்சியின் பரிசுத்த நிலையையும் புரிந்து கொள்ளலாம். நிலக்கரி உரிமம் வழங்கப்பட்டதன் உண்மை நிலை என்ன?

”இழப்பு கற்பனையானது” என்று சொல்லப்பட்ட 2g அலைக்கற்றை வழக்கில்தான் ஆ.ராசா 15 மாதம் சிறையில் ஜாமீன் கூட அளிக்கப்படாமல் இருந்தார். அனைத்து ஏல நடைமுறைகளும் விதிகளின்படியே நடந்தது. ஆ.ராசா உத்தமர் என்று சொன்னதன் அடுத்த நாளில்தான் கனிமொழி, ஆ.ராசா, சித்தார்த்தா பெகுரா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காங்கிரஸின் CBI-ஆல் கைதுசெய்யப்பட்டு ஜாமீன் வழங்காமல் திகார் சிறையை அலங்கரித்தனர். அப்போது பிரதமர், கபில் சிபல் மற்றும் மனிஷ் திவாரி மட்டும்தான் சொன்னார்கள். இப்போதோ தியாகத் திருவிளக்கு அன்னை சோனியாவே சொல்கிறார்; அணு விஞ்ஞானி நாராயாணசாமி சொல்கிறார்; வழக்கம் போல பிரதமர் இன்னபிற பலனடைந்தவர்களும் என் அப்பன் குதிருக்குள் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்கள். சிலர் இழப்பு இல்லை என்பதே 1.76 ஆயிரம் கோடி என்றால் பலர் இழப்பில்லை என்றால் எவ்வளவு பெரிய இழப்போ என்ற பயம் உண்மையா?

 

நிலக்கரி எனும் கருப்புத் தங்கம்

மெட்டமார்ஃபிக் வகை பாறைகளான கரிமப் படிவுகள், தாவர, விலங்குகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக புவியின் வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் கரிம படிவுகளாக மாறி பாறைகளாக நிலைகொண்டுள்ளன. நல்ல வெப்ப செயல்திறனுடன் இருக்கின்ற அவை நிலக்கரி என வகைப்படுத்தப்படுகிறது. இன்றைய எரிபொருள் சார்ந்துள்ள சமூக, பொருளாதார வாழ்வில் கரிம ஹைட்ரோ கார்பனை சார்ந்தே நம் அன்றாட வாழ்வு பெரும்பாலும் இயங்குகிறது. நம் அன்றாடப் பயன்பாட்டில் பெரும் பங்காற்றும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தேவைகளை பெருமளவு அதிகமாக பெட்ரோலை விட நிலக்கரியே தீர்த்துவைக்கிறது. ‘கரிமத் தங்கம்’ என்றும் ‘கருப்பு வைரம்’ என்றும் சொல்லப்படும் நிலக்கரி இந்தியாவில் பெருமளவு அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்குப் பயன்படுகிறது. தொழிற்கூடங்களில் மிக முக்கியமான எரிபொருளாகப் பயன்படுகிறது. நீராவி உருவாக்கத்துக்கும் கிராஃபைட் உருவாக்கத்துக்கும் பெரும்பான்மையாகப் பயன்படுகிறது. நிலக்கரி ஒரு மிக முக்கியமான காலக் கண்ணாடியும் கூட. நிலக்கரிப் படிமங்கள் மிக முக்கியமான நிலவியல் சான்றாவணங்களாகும். மிஸோசோயிக், பாலியோ லித்திக், ஜுராஸிக் கால உயிரினங்களை இனம் காண இயற்கை அன்னை நமக்குக் கொடுத்திருக்கும் தடயங்களாக இவை பயன்படுகின்றன. ஆனால் நம் எரிபொருள் தேவை எனபது மிக மிக அதிகமாக இருப்பதால் இவற்றை நாம் உபயோகிக்கப் போகிறோம். இதில் உள்ள கோக்கிங் கோல் என வகைப்படுத்தப்படும் அதிக எரிதிறன் உள்ள நிலக்கரியே நம் அனல் மின்சார நிலையங்களில் எரிபொருளாகப் பயன்பட்டு நமக்கான மின்சாரத்தைப் பெருமளவு அளிக்கிறது. இந்தியாவில் நமக்குக் கிடைக்கும் மின்சாரத்திற்காக 51% மேல் நாம் அனல் மின்சாரத்தை அதாவது நிலக்கரியையே சார்ந்திருக்கிறோம். நம் ஆற்றல் பயன்பாட்டில் பெரும் பங்கு வகிக்கும் இன்னொரு ஹைட்ரோகார்பன் பெட்ரோல், 35% வரை பங்களிக்கிறது. புனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவை 13%, அணு மின்சாரம் 1% அளவுக்கும் நம் ஆற்றல் தேவைகளில் பங்களிக்கின்றன. இவ்வளவு முக்கியமான கரிம எரிபொருள்களான நாட்டின் மிக முக்கியச் சொத்தான இயற்கை கனிம வளங்களை நாம் எப்படிக் கையாண்டு கொண்டு இருக்கிறோம் என்று பார்த்தால் அதிர்ச்சி அடைவதைத் தவிர வேறு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

 

நிலக்கரி துரப்பணம் (Coal Mining)

1774-ஆம் ஆண்டில் ராணி கஞ்ச் நிலக்கரி வயல்களில் இருந்து மேற்கு தாமோதர் நதிக்கரையின் வெட்டி எடுக்கப்பட்ட முதல் நிலக்கரியிலிருந்து 236 ஆண்டுகளாக இந்தியாவில் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டு வர்த்தகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 19-ஆம் நூற்றாண்டில் ரயில் தொடர் வண்டிகள் நிலக்கரியாலேயே இயக்கப்பட்டன. 1900-களில் நம் நிலக்கரி வெட்டி எடுக்கும் திறன் 6.12 மில்லியன் டன்னாக இருந்தது. சுதந்திர இந்தியாவில், நிலக்கரி எடுக்கும் நிறுவனங்கள் 1973-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு பொதுத்துறை நிறுவனங்கள் ஆக்கப்பட்டன. பிரச்சினை, முதல் உலக நாடுகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் நாடுகளின் நிலக்கரி தேவை அபரிமிதமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்பு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸின் தவறான அறிவியல், தொழில்நுட்பக் கொள்கைகளால் பாரதத்தின் பெரும்பாலான நிலக்கரி வயல்கள் கண்டடையப்படாமலும் புதிதாக மைனிங் செய்யப்படாமலும் இருக்கின்றன. இது அபரிமிதமான தேவை இருக்கும் முதல் உலக நாடுகள் கண்ணை உறுத்துகின்றன. எனவே இந்தியாவின் கனிம வளக் கொள்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவர சோவியத் ரஷ்யா மூலம் தொழில்நுட்ப உதவி அளிக்க முன்வருகின்றது. கூடவே நம் கனிம வளங்களைக் கொள்ளையடித்து, தன் பகாசுரப் பசியைத் தீர்த்துக்கொள்ள, கனிம வள ஏற்றுமதியை இந்தியா மேற்கொள்ள, மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவும் லாபி செய்கின்றன. ‘கோல் இந்தியா லிமிடெட்’ எனப் பெயர் மாற்றப்பட்டு எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருக்கையில், இந்திரா ஆட்சியை இழக்கிறார். நடுவில் தடை. பின்னர் இந்த விவகாரங்களில் இந்திய ஆட்சியாளர்களை இன்ஃபுளூயன்ஸ் செய்வதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் உளவாளிகளும் கைக்கூலிகளும் அனுப்பப்படுகிறார்கள். இவைகளை தலைமை ஏற்று நடத்த கைதேர்ந்த கே.ஜி.பி-யால் பயிற்றுவிக்கப்பட்டு, சி.ஐ.ஏவிற்கு டபுள் ஏஜெண்ட் ஆக செயல்படுகின்ற இத்தாலிய மாஃபியா கும்பலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டு முறையான பக்குவம், பயிற்சி அளிக்கப்பட்டு இந்திய அரசியல் அதிகாரக் குடும்பத்துக்குள் சாமர்த்தியமாக நுழைக்கப்படுகிறார் ஒரு அந்நிய “கை”. மீண்டும் ஆட்சிக்கட்டில் கைவசம் வந்த பிறகும் சில தடைகளை அந்நிய நாடுகள் சந்தித்ததால், தடையாக இருந்த இந்திரா அகற்றப்படுகிறார். ராஜீவ் சொன்னதைக் கேட்பார் என நம்பப்பட்டு, அவரும் கேட்காமல் போனதால் அகற்றப்பட்டு, அதன் பிறகு அதிகாரம் அயல் உளவாளிக்குக் கிடைக்கும் என நம்பப்பட்டு, பின்பு ஒரு சொன்னதை கேட்கும் சாமானியருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு நிழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது அயல்நாடுகளுக்கு ஆதரவாக அனைத்துச் சட்டங்களும் எழுதப்பட்டு, திருத்தப்பட்டு, வளைக்கப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையும் கொள்ளையடிக்க சாதகமாகக் கொண்டுவரப்பட்டது. இடையில் உளவாளியை அனுப்பிய ரஷ்யா சிதறுண்டு போய் கே.ஜி.பி என்பதே இல்லாத நிலையில் இன்னொரு எஜமானன் ஆன அமெரிக்கா இசைக்கு மட்டுமே ஆட வேண்டிய நிர்பந்தத்தில் முழு தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் உலக வங்கியின் பொருளாதார அடியாள்களாக இருந்தவர்களால் முழுமையாக அமல்படுத்தப்பட்டு யார் வேண்டுமானாலும் வந்து எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடித்துச் செல்லுங்கள் என்று திறந்து விடப்பட்டது. அதன் பிறகான கனிம வள ஊழல் வரலாற்றை இனி பார்க்கலாம்.

 

நிலக்கரி ஒதுக்கீடு 1993 – 2010

தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட 1991-க்குப் பிறகு 1993-2003க்கும் இடைப்பட்ட காலத்தில் 70 நிலக்கரிச் சுரங்க உரிமங்கள் காங்கிரஸ், தே.மு., தே.ஜ.கூ. ஆட்சியாளர்களால் ஒதுக்கப்பட்டது அதில் 52 காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவில் தொங்கிக்கொண்டிருந்த அரசாங்கங்களால் வழங்கப்பட்டவை. அதன் பிறகு 2004 பொதுத் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வருகிறது காங்கிரஸ். பின்னர் அது 2009 வரை 142 லைசன்ஸ்களை வாரி வழங்குகிறது. 2003-க்கு முன்னால் வழங்கப்பட்ட நிலக்கரி லைசன்ஸ் எல்லாமே திணிக்கப்பட்டதாகவே இருந்திருக்கின்றன; ஏனென்றால் நம் தொழில்நுட்ப வளர்ச்சியின்மை, சுரங்கத் தொழிலில் ஆள் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடு இவைகளால் இந்தியாவில் எடுக்கப்படும் நிலக்கரியின் விலை சர்வதேசச் சந்தையை விட 15% முதல் 20% வரை அதிகமாக இருந்துள்ளபடியால் இந்திய நிலக்கரிக்குத் தேவை குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால் 2003-க்கு பிறகு ஆசியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி சீனாவில் மிக அதிகமான கட்டுமானப் பணிகளையும், உள்கட்டமைப்பு சார்ந்த பணிகளையும் இணைப்பாக மிக அதிக ஆற்றல் தேவைப்பாட்டையும் ஏற்படுத்த, சீனா அசுர வேகத்தில் பிற நாடுகளில் இருந்து நிலக்கரி, இரும்புத்தாது உள்ளிட்ட கனிம வளங்களை வெளிச் சந்தையில வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது. 32–35 டாலராக இருந்த நிலக்கரியின் சந்தை மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி 220 டாலர் வரை சென்று பின்பு சராசரியாக 105-140 டாலர் என்ற அளவில் நிலைபெற்று இருந்தது. இதே காலகட்டத்தில் திறமையான பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தால் இந்தியப் பொருளாதாரம் வலுப்பெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆற்றல் தேவைகளை சீர் செய்யவும் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு முடிவுசெய்து நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த அதிகமான முதலீடுகளைச் செய்தது. இவை எல்லாம் சேர்ந்து நாட்டின் மொத்த ஆற்றல் உற்பத்தி தேவை, அதனால் ஏற்பட்ட நிலக்கரித் தேவையையும் அதிகரித்தது.

துரதிர்ஷ்டவசமாக, ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், கனிம வளத் தேவையைத் தன் சொந்தத் திருட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தி ஆதாயம் அடைவதோடு நாட்டின் இயற்கை வளங்களை வேதாந்தா ரிசோர்ஸ், ஆர்சிலர் மிட்டல் ஜிண்டால், டாடா, ரிலையன்ஸ், அதானி, போன்ற உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பங்கு வைத்தது. அப்போது, உள்நாட்டில் மின் உற்பத்தி செய்வதற்காக குறைந்த விலையில் வாங்கி, குறைந்த விலையில் அனல் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் இந்த நிறுவனங்களுக்கு நிலக்கரி கொடுக்கப்பட்டது. ஏற்றுமதிக்கு எந்த அனுமதியும் நிபந்தனையும் அதில் இல்லை. ஆனால் முறைகேடாக மிகக் குறைந்த விலையில்- அதாவது சந்தை விலையில் இருந்து 1000% வரை- அதாவது 10 மடங்கு விலை குறைவாகப் பெற்றுக்கொண்டு தங்களின் பங்குச் சந்தை மதிப்புகளை இந்த நிறுவனங்கள் உயர்த்திக்கொண்டும், தங்களின் கோல் ரிசர்வைக் காட்டி புதிய அந்நியக் கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டதல்லாமல் வேறெந்தப் பயனும் விளையவில்லை. குறைந்த விலையில் வாங்கும் நிலக்கரியிலிருந்து தயாராகும் மின்சாரத்தின் விலை 12 ரூபாய்கள்/யூனிட் என்ற அளவிலேயே வழங்கப்படுகிறது.

 

ஊழலின் கனபரிமாணம்

‘மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ள…’ என்று அடிக்கடி சொல்லப்படுகிறதே அது எவ்வளவு குறைவு என்றால் 2008-ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் coking coal-இன் ஆண்டு சராசரி விலை சுமாராக 230 அமெரிக்க டாலர்/ஒரு டன்னுக்கு (அதாவது 230 x 50 =11,500ரூபாய்கள்) என்று இருக்கும் போது சோனியாவின் காங்கிரஸ் அரசு அதை 1024 ரூபாய்/டன் என்ற அடிப்படையில் கொடுத்துள்ளது. ஏறத்தாழ 10% விலையில், இயற்கை வளம் சுரண்டி எடுக்கப்பட்டு தனி நபர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் லாபம் வரும் வகையில் திசைதிருப்பப்பட்டிருக்கிறது. அதிலும் எந்த நடைமுறையும் ஒழுங்காகப் பின்பற்றப்படாமல் சுண்டல், பொரிகடலை போல விநியோகித்துள்ளனர். உதாரணமாக சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் சுபோத் காந்த் சகாய் 05/02/2008 அன்று நம் உத்தமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் கொடுக்கிறார்; (காண்க பெட்டிச் செய்தி) அத்துடன் இணைக்கப்பட்டுள்ள SKS Ispat Ltd. என்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு- கம்பெனி அவருடைய சகோதரர் சுதிர் காந்த் சகாய் உடையது– அது தான் SKS Ispat- இரண்டு நிலக்கரிச் சுரங்க உரிமங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று. அன்றே அந்தக் கடிதம் ஸ்க்ரீனிங் கமிட்டிக்கு பிரதமர் அலுவலகத்தால் அனுப்பப்பட்டு, மறுநாளே (06/02/2008) இரண்டு உரிமங்களுக்கான அனுமதி, ஸ்க்ரீனிங் கமிட்டியால் அளிக்கப்படுகிறது. எவ்வளவு வேகம் என்று நாம் பிரமித்திருக்கும் வேலையில் நம் பிரதமர் சில நாள்களுக்கு முன்- பாராளுமன்றத்திலிருந்து வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களிடம் அழுத்தந்திருத்தமாகச் சொல்லி அழுதார்- அனைத்து உரிமங்களும், மிக நேர்மையான முறையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், அனைத்திற்கும் குறிப்பிட்ட காலத்தில் நிலக்கரி அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்கிற முறையில் ‘தான்’ பொறுப்பேற்பதாகவும்! மானமும், நேர்மையும் உண்மையாகவே உள்ள மனிதராக இருந்தால் (இதெல்லாம் இருந்தால் காங்கிரஸ் கட்சியில் அவர் இருப்பாரா?) மன்மோகன் இந்நேரம் ராஜினாமா அல்லவா செய்திருப்பார்!


இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஆஷிஷ் குப்தா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த IAS அதிகாரி இதற்கு முன் பிரதமர் அலுவலகத்தின் PMO office director ஆக இருந்தவர். அவர் நேரடியாக standing commitieக்கும் ministry of coal-க்கும் அமைச்சர் சகாய்யின் கடிதத்துடன் 05/02/2008 அன்று பரிந்துரை செய்கிறார். அமைச்சர் சுபோத காந்த் சகாய் அவர்கள் பரிந்துரை செய்துள்ள SKS Ispat Power Limited எனும் பொதுத்துறை நிறுவனத்தின் பிரமோட்டராகவும், மேஜர் ஷேர் ஹோல்டராகவும் இருப்பவர்கள் 2 பேர்; ஒருவர் அனில் குப்தா; இன்னொருவர் சுதிர் காந்த் சகாய். ஒரே வீட்டில், ஒரே தாய் தகப்பனுக்குப் பிறந்து வளர்ந்த இவரைத்தான் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், அவருடைய நிறுவனத்திற்கு தான் நிலக்கரி ஒதுக்கீடு செய்யச் சொல்லி கேட்கவில்லை என்றும் கூறி விட்டு, பின்னால் தான் ஒதுக்கச் சொன்னது நிஜம்தான் என்றும் ஆனால் sks ispat நிறுவனம் தன் தம்பியுடையது என்று தனக்குத் தெரியாது; அந்த நிறுவனத்தில் தன் தம்பிக்கு வெறும் 66% ஷேர் தான் இருக்கிறது என்றும், அவர் வெறும் CEO மற்றும் Directors of Chairpersons ஆக மட்டுமே இருக்கிறார். நானும் அவரும் அப்பாவி, என்னையே குற்றம் சொல்லும் பாஜக தான் குற்றவாளி என்கிறார். இவர் சொல்லும் நியாயத்தைக் கேட்பதற்கு முன்னால் 85% பங்குகள் இவரிடமும், இவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடமும் மட்டுமே இருந்ததை SEBI அனுமதியுடன் இவர் லிக்விடேட் செய்திருக்கிறார். 2008-இல் SEBI, 4 பங்குச்சந்தை புரோக்கிங் நிறுவனங்களைத் தடை செய்தது எதனால் என்றால் SKS நிறுவனத்திற்கு நிலக்கரி ஒதுக்கீடு கிடைத்துவிட்டது என்று பொய்யான தகவலைச் சொல்லி அதன் பங்கு விலையை ஏற்றியதாக. இதெல்லாம் ஜனவரி மாதத்தில் இதை 3 மாதங்கள் கழித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பங்கு வர்த்தகத் தரகர்கள் செபியின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடுக்கிறார்கள். அவர்களுடன் செபி காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறது. இதற்கிடையே சுதிப் தன் பங்குகளை விற்றதன் மூலமாக 1345 கோடி ரூபாய்களை ஆதாயமாகப் பெற்று அதற்கும் தான் ஆதாய வரி கட்டியிருக்கிறார். ஆனால் நிலக்கரி ஒதுக்கீட்டின் மூலம் எந்த ஆதாயத்தையும் தாங்கள் அடைய வில்லை என்று சாதிக்கிறார்கள். அது மட்டுமல்ல, சத்திஸ்கரில் 1100 மெகா வாட் அனல்மின் நிலையம் அமைப்போம் என்று பொய் வாக்குறுதி கொடுத்துதான் நிலக்கரி வயல்களைப் பெற்றார்கள்; ஆனால் இன்று வரை எதையும் ஆரம்பிக்கவில்லை. பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இதை எதிர்த்து  மே மாதம் 18-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் முரளிதரன் முன்னிலையில் வழக்கு எண் 7135/2008 மூலம் அது தனக்கு அதிக முன்னுரிமை கோரி இந்திய அரசை எதிர்த்து ஒரு வழக்கைத் தாக்கல் செய்கிறது. ஆச்சரியகரமாக இந்நிறுவனத்திற்கும் வழக்கறிஞர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஸ்வினி குமார். வழக்கைத் தொடுத்த பிரகாஷ் இண்டஸ்ட்ரி மேலதிக விபரங்களைக் கொடுக்காததால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கிறது. இதற்குள்ளாகவே பிரகாஷ் இண்டஸ்ட்ரிஸ்ஸும் SKS ispat-ம் Joint Venture-இல் பவர் பிளாண்ட் தொடங்க MOU கையெழுத்திட்டு மொத்தமுள்ள 38 கோல் பிளாக்குகளையும் இருவருமே பிணக்கில்லாமல் பிரித்து ஆளுக்கு 2000 கோடிகளில் லாபம் ஈட்டி நாட்டையும் மக்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். வழக்கு விபரத்தில் 8/33-இல் பிரகாஷ் இண்டஸ்ட்ரி சொல்வது- SKS என்பது சுபோத் காந்த சகாய்தான் என்று. ஆனால் அது சுதீப் காந்த் என்று மறுக்கிறது SKS நிறுவனம். யாரென்றே தெரியாது என்று மத்திய அமைச்சரால் சாதிக்கப்பட்ட அதே நிறுவனம் தான் SKS Ispat.

பிரதமரின் அலுவலகத்தில் இருந்து சுரங்க அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம்

வாழ்க காங்கிரஸ் கட்சியும் அதன் அப்பட்டமான முழு நீள பொய்களும். அதையும் உண்மை போலவே வெளியிடும் பத்திரிகைகளும்.

எல்லா நடவடிக்கைகளும் முறையாக ஸ்கிரீனிங் கமிட்டி மூலமாக மட்டுமே செய்யப்பட்டது, நான் அப்பாவி என்கிறாரே பிரதம திருடர்.. மன்னிக்கவும் பிரதம அமைச்சர் மன்மோகன், அந்த ஸ்கிரீனிங் கமிட்டியின் நடைமுறை அழகைப் பார்க்கலாம். அது செயல்படுவதற்கான நடைமுறைகள் வெளிப்படையாகவும் முறையாகவும் உருவாக்கப்படவில்லை. தனியாருக்கு நிலக்கரிச் சுரங்கங்களைக் (கோல் ப்ளாக்ஸ்) கொடுக்கும்போது, வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் சரியாக உருவாக்கப்படவில்லை. அதுதானே காங்கிரஸ் கட்சிக்கு சௌகரியம்! இந்த உரிமைகளை அளிப்பதற்காக, ‘ஸ்க்ரீனிங் கமிட்டி’ என்ற ஒரு பொம்மை கமிட்டி அமைக்கப்பட்டு, விண்ணப்பங்களைப் பரிசீலித்து, முடிவெடுக்கும் அதிகாரம் அந்தக் கமிட்டிக்கு அளிக்கப்பட்டது. (பெயரளவுக்குத்தான். முடிவுகளை எல்லாம் சோனியாதான் எடுப்பார்.) அதன் விளைவாக காங்கிரஸ் கொள்ளையர்களுக்கு வேண்டப்பட்ட தனிப்பட்ட தொழில் அதிபர்களுக்கு லைசென்சுகள் வாரிக் கொடுக்கப்பட்டன. இந்த லைசென்சுகளுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் நீண்ட நாட்களாக இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புகின்றனர். 2004-இல் நிலக்கரி அமைச்சகச் செயலாளர், ‘நிலக்கரிச் சுரங்கங்களுக்கான உரிமைகள் வெளிப்படையான விதிமுறைகளுடன் “பொது ஏல” அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்’ என்று ஓர் அலுவலகக் குறிப்பு எழுதுகிறார். இந்தக் குறிப்பு பரிசீலனைக்கு வரும் நேரத்தில்- பிரதமர் மன்மோகன் சிங்தான் இந்தத் துறைக்கு அமைச்சர்; அதற்கு முன்னர் நிலக்கரி அமைச்சராக இருந்த சிபு சோரன், கொலை வழக்கு காரணமாக ராஜினாமா செய்ய நேர்ந்ததால் பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரித் துறையையும் தானே வைத்துக் கொண்டார். மேலும் 2004 முதல் 2009 வரை மன்மோகன் சிங்தான் நிலக்கரி அமைச்சரும்!) இவர்களின் வெளிப்படையான ஏல நடைமுறையின் லட்சணத்தைப் பாருங்கள். உதாரணமாக மேலே சொன்ன சுபோத் காந்த் சகாய் என்கிற- திருட்டுத்தனத்தை ஒப்புக்கொண்ட உன்னத தலைவரின் விஷயம் ஒன்று போதாதா சாம்பிளுக்கு!   இந்திய நிலக்கரி வயல்களில் புதைந்திருக்கும் மொத்த நிலக்கரியின் அளவு 6282.5 கோடி டன்கள். இதைக் கொண்டு நாளொன்றுக்கு 1,50,000 மெகாவாட் வீதம் (இதுதான் இந்தியாவின் தற்போதைய மின்சார உற்பத்தி) அடுத்த 75 ஆண்டுகளுக்கு அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் 1700 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட வயல்கள் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கும், 1616.9 கோடி டன் இருப்பு கொண்ட வயல்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏல முறையில் தரப்பட்டிருக்கின்றன. மீதமுள்ளவை ஒதுக்கப்படுமுன் இந்தத் திருட்டுத்தனத்தை CAG வெளிக்கொண்டுவந்து விட்டது. உலகச்சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.11,500 என்று இருந்தபோது 1028.42 ரூபாய்கள் அதாவது கிலோ 1 ரூபாய் 2 (ஆமாம் 1.028 பைசா தான் ) பைசாவிற்குக் கொடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா மூலம் கொடுக்கப்படுகிறது. மார்ச் 2011 நிலவரப்படி நிலக்கரியின் இந்தியச் சந்தை விலையை வைத்துக் கணக்கிட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை. முதலில் சொன்னது, தனியார்களுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இப்போது வரை தாரை வார்க்கப்பட்டுள்ள 6282.5 மில்லியன் டன் அளவு நிலக்கரிக்கு (10,400 x 6282.5 = 65.33 லட்சம் கோடி இழப்பு) தனியார் முதலாளிகள் பெற்றுள்ள 1700 கோடி டன் நிலக்கரி இருப்பின் மதிப்பு 42 இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் என்று சி.பி.ஐ அதிகாரிகள் மதிப்பிடுவதாக கூறுகிறது இந்தியா டுடே (9.12.2011). இதன் மதிப்பு 51 இலட்சம் கோடி ரூபாய் என்பது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு. ஆனால் CAG  எந்தk கணக்கில் 1,86,000 கோடி ரூபாய் இழப்பு என்று சொல்லுகிறது என்று பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

 

சி.ஏ.ஜி யின் கணக்கு

CIL (Coal India Limited) எnனும் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் 2010-11-ல் ஒரு டன் நிலக்கரிக்கு சராசரியாக Rs 1,028.42 என்கிற அளவிற்கு விலை நிர்ணயம் செய்திருந்தது. இதில், அதன் உற்பத்திச் செலவு ஒரு டன்னுக்கு 583.00 துரப்பணத்திற்காகவும், சுமாராக 150 ரூபாய் வரை நிர்வாக, போக்குவரத்துச் செலவுகளுக்காகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, மீதியை (Rs 1,028.42 -583 + 150/- ) ஒரு டன்னுக்கு Rs 295.42 லாபம் என்று காட்டப்பட்டிருக்கிறது. தனியார் சுரங்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிலுள்ள நிலக்கரியின் மொத்த மதிப்பு சுமார் 6,282.5 மில்லியன் டன். அவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள இந்த நிலக்கரியின் (வெட்டி எடுக்கப்பட்ட மற்றும் வெட்டி எடுக்கப்படாத ) மொத்த லாப மதிப்பு Rs 295.42 x 6,282.5 = Rs 1,85,597.66 (அதாவது, கிட்டத்தட்ட 1.86 லட்சம் கோடிகள்) எவ்வளவு அயோக்கியத்தனமாக கணக்கிடப்பட்டிருக்கிறது என்பது தெரியும். இந்த நேரத்தில் சர்வதேச சந்தை மதிப்பு என்று ஒன்று இருக்கிறதே அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. சராசரி சந்தை மதிப்பு 11,500 என்று எடுத்துக்கொண்டால் இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கப்போகும் ஆதாயம் என்பது சுமாராக 66 லட்சம் கோடி ரூபாய்கள். உற்பத்திச் செலவை விற்பனை விலையில் கழித்து விட்டு வருவது தானே லாபம்? இதை அடிப்படையாகக் கொண்டுதான் 15 லட்சம் கோடியை உற்பத்தி செலவீனமாக எடுத்துக்கொண்டு பாஜகவின் ஹன்ஸ்ராஜ் ஆகிர் 51 லட்சம் கோடிக்கு ஊழல் செய்து நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்கிறார். முதன்முதலில் நிலக்கரிச் சுரங்க ஊழலை வெளிப்படுத்தி CAG- க்கு கடிதம் எழுதிய மகாராஷ்ட்டிராவின் எம்.பி யான ஆகிர்.  ஐ.மு.கூ 2-இல் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த ஸ்கிரீனிங் கமிட்டி மீட்டிங்கும் கூட்டப்படாமல் 35 லைசன்ஸ்கள் சும்மாவே தரப்படுகின்றன. இந்த நிலக்கரி வயல்களின் மதிப்பு மட்டும் சுமாராக 24 லட்சம் கோடி. மன்மோகன் சிங்கும் இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலுமே இந்த லைசன்ஸ்களை வழங்கிவிடுகிறார்கள், ஏனென்றால் மன்மோகன், ஜெய்ஸ்வாலின் பரம்பரை சொத்துதானே இந்தியாவின் நிலக்கரி, கனிம வள உரிமை என்பது. இவையெல்லாம் என்ன நிபந்தனையின் பேரில் கொடுக்கப்பட்டனவோ, அவை நிறைவேற்றப்பட்டுள்ளனவா?

நிலக்கரிச் சுரங்கங்களுக்கான உரிமை கொடுக்கப்படும்போது, அந்தத் தனியார் கம்பெனிகள் விரைவில் உற்பத்தியைத் துவங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நாட்டின் அதீதமான மின் தேவையையும், அதிகரிக்க வேண்டிய உள்கட்டுமானத் துறைக்கான மூலப்பொருட்களுக்காக சிமெண்ட், மற்றும் இரும்பு உற்பத்திக்கு அதிகப்படியான நிலக்கரி தேவை என்பதையும் கருத்தில் கொண்டுதான் இவ்வளவு கீழான விலைக்கு- அதாவது கிலோ 1.025 ரூபாய் (1 ரூபாய் 2.5 காசுகள்)விலைக்கு- நிலக்கரியை தனியாருக்கு வழங்க அரசு முன்வந்ததாகக் கூறப்பட்டது. (எழுதுகிற சிலேட் பென்சில் கூட 1.50 ரூபாய்,கம்மர் கட் 2.00 ரூபாய்,பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையை உபயோகிக்க 5.00 ரூபாய் கொடுக்க வேண்டுமே? என்றெல்லாம் உங்களுக்கு ரத்தம் கொதித்தால் அதற்கு மன்மோகன் சிங் என்ன செய்வார் பாவம். அவர் ஒரு திருவாளர் தூய்மை. அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்குள் நிலக்கரி உற்பத்தியை துவங்கி இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கம்பெனிகள் இன்னும் உற்பத்தியைத் துவங்கவே இல்லை. அதாவது எந்த நோக்கத்திற்காக (விரைவில் நிலக்கரி பயன்பாட்டிற்கு கிடைக்க வேண்டும்) அவை கொடுக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. இதில் பெரும்பாலான கம்பெனிகள் லைசென்சு வாங்கியதோடு சரி. வேறு எந்த முனைப்பையும் காட்டவில்லை. இதைத்தான் நிதியமைச்சர் பெருமையோடு சொன்னார்- “ஜீரோ லாஸ்” என்று. இந்தக் கேவலத்தைத்தான் தேர்தலில் திருட்டுத்தனமாக ஜெயித்ததாகச் சொல்லி பதவியில் இருக்கும் மத்திய நிதி அமைச்சர் பெருமையாக “நிலக்கரியை வெட்டி எடுத்து விற்றிருந்தால் தானே ‘அரசாங்கத்திற்கு இழப்பு’ என்று சொல்லலாம். இன்னும் கரி வளம் முழுவதும் வெட்டி எடுக்காத நிலையில், ‘அன்னை பூமியின் மடியில்’ தானே இருக்கிறது. இதை எப்படி நஷ்டம் என்று சொல்லலாம் என்று கேட்கிறார்! இதை துக்ளக் நாளிதழின் கார்ட்டூன் விளக்கும். (பார்க்கவும் துக்ளக் கார்ட்டூன்) விற்றது எப்படி உங்கள் கணக்கில் இருக்கும் என்று கேட்டால் கேணத்தனமாக சிரிக்கிறார் சிதம்பரம். ஆனால் பெரும்பாலான கம்பெனிகளின் ஷேர்மார்க்கெட் மதிப்பு லைசென்சு பெற்ற உடனேயே பல மடங்கு உயர்ந்து, அவற்றிற்கான லாபத்தை– சுரங்கம் தோண்டாமலே அந்த கம்பெனிகள் பார்த்து விட்டன. இத்தனை அவலங்களும்– Controller and Auditor General ரிப்போர்ட்டில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் இப்போது, “விதிகளை மீறிக் கொடுக்கப்பட்டுள்ள இந்த 142 உரிமங்களை ரத்து செய், இதற்கு பொறுப்பானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு” என்று சொன்னால்- நம் தியாகத் திருவிளக்கு அம்மையார் பொங்கி சண்டைக்கு வருகிறார். பிளாக்மெயில் செய்வீர்களா? என்று எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார். அரசாங்கம் நிலக்கரியை லாபமீட்டும் வகையினமாகக் கருதவில்லை என்பதால், அதிலிருந்து லாபம் சம்பாதிப்பது என்கிற கேள்வியே எழவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீண்டும் அதே ஆ.ராசாவின் குரல் ஒலிக்கிறதல்லவா? இந்த வார்த்தைகளின் பொருள் என்னவென்றால், இந்த நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் கூறுபோட்டு விற்பது மட்டும்தான் எங்கள் வேலை, இதில் லாப நட்டக் கணக்குப் பார்ப்பது எங்கள் வேலையில்லை என்பதுதான்.

“சுரங்க ஒதுக்கீட்டில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது”- என்று திரும்பத் திரும்ப ஒரே பொய்யை கூறி தப்பிக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. 29/11/2004 அன்று நிலக்கரிச் சுரங்க உரிமைகளை அளிக்கும் முறையை மாற்றி, புதிய விதிகளை ஏற்படுத்தினார்கள். ஏற்கெனவே இருந்த கடுமையான நிபந்தனைகளை மாற்றி, விண்ணப்பங்கள் நிலக்கரி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டாம் என்றும் அனைத்து விண்ணப்பங்களும் ஸ்க்ரீனிங் கமிட்டிக்கு நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஸ்க்ரீனிங் கமிட்டி சர்வ அதிகாரங்களும் கொண்ட கமிட்டியாக மாற்றப்பட்டது. விண்ணப்பங்களைப் பெறுபவர்களும் அவர்களே; பரிசீலிப்பவர்களும் அவர்களே; உறுதி செய்வதும், இறுதியாக ஒப்புதல் அளிப்பதும் அவர்களே. எந்தவிதமான Checks and Balances-உம் கிடையாது. இந்த ஸ்க்ரீனிங் கமிட்டி முடிவுகளுக்கு நிலக்கரித் துறை அமைச்சர் நம் மன்மோகன் தான் இறுதியாக (காங்கிரஸ் தலைமை கூறுகிற விதத்தில் தான்!) ஒப்புதல் அளிப்பார். ஸ்க்ரீனிங் கமிட்டியில்– நிலக்கரித் துறை செயலாளரைத் தவிர, இரும்பு, சிமெண்ட், மின்சார, சுரங்கத் துறை செயலாளர்களும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். விண்ணப்பதாரர்களுக்கு, ஏற்கெனவே இந்தத் துறையில் அனுபவமும் தகுதியும் இருக்க வேண்டும்; தகுந்த தொழில் முன்அனுபவமும் வேண்டும்; தேவையான நிதிவசதிகள் உடையவராக இருக்க வேண்டும்; உரிமம் கொடுத்தால், உடனடியாக நிலக்கரி உற்பத்தியில் ஈடுபடக்கூடியவராக இருக்க வேண்டும் என்று வெளியே சொல்லிக் கொள்ள பல நிபந்தனைகள். ஆனால், உண்மையில் நடந்தது என்ன?

விண்ணப்பங்களைச் சமர்பித்த நிறுவனங்களில் சிலவற்றுக்கு நிலக்கரிச் சுரங்கம் பற்றியோ நிலக்கரி பற்றியோ அனா ஆவன்னா கூட தெரியாது. ஆனால் அவர்கள் காங்கிரஸின் அரசுக்கு ஏதாவது வகையில் துணை நிற்பவர்கள்; கொள்ளையில் பங்கைச் சரியாகக் கொடுப்பவர்களாக பார்த்து தேசிய வளங்களை பங்கு வைக்கிறது காங்கிரஸ் அரசு. நிலக்கரி ஒதுக்கீட்டைக் கோரி விண்ணப்பித்த பிறகு அந்த துறைப்பக்கமே தலை வைக்காடவர்களுக்கு கூட, நேர்முக விளக்க கூட்டங்களுக்கு கூட வராத 17 நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த விளக்கக் கூட்டத்தில் தான் நிலக்கரி வயல்களைக் கோரிய நிறுவனங்கள் தமக்கு எத்தனை டன் நிலக்கரி தேவை உள்ளது, அதன் பயன்பாடு என்ன, தம்மிடம் எந்தவிதமான தொழில் நுட்பங்கள் உள்ளது, தமது மூலதன பலம் என்ன, இதற்கு முன் நிலக்கரி வெட்டுவதில் உள்ள அனுபவம் என்று சகலமும் விளக்க வேண்டும். ஆனால் மேற்படி தகுதிகள் எதுவுமில்லாத நிறுவனங்கள் இவ்வாறு பெற்ற ஒதுக்கீட்டின் மூலம் தமது பங்கு மதிப்பை பெருமளவு உயர த்திக்கொண்டும்,புதிய அந்நிய மூலதன முதலீட்டையும் பெற்றுக்கொண்டு நாட்டிற்கு வர வேண்டிய வருமானத்தை மடை மாற்றி சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டிருக்கிறது,என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இன்னும் காங்கிரஸ் கட்சி சொல்லுகிறது அனைத்தும் நேர்மையான வழியில் தான் நடந்தது என்று ….

பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், மத்திய பிரதேசம். 2006 வரை 800 கோடி ரூபாயை விற்றுக் கொள்முதலாகக் கொண்டிருந்த நிறுவனத்திற்கு சும்மா நிலக்கரி வயல் ஒதுக்கப்பட்ட பிறகு அதன் 27% லாப உயர்வு என்பது 2107 கோடியாக இருக்கிறது.  அந்த நிறுவனத்தின் 100% லாபம் என்பது சுமாராக 10,000 கோடியாக இருக்கிறது. இவர்களின் மொத்த விற்றுமுதலே 800 கோடி என்றால் மீதம் 9200 கோடி என்பது இவர்களுக்கு மறைமுகமாகக் கிடைத்த ஆதாயம்தானே? இதெல்லாம் வெள்ளைப்பணத்தில் சொல்லப்படும் கணக்கு மட்டுமே. கருப்பைக் கணக்கிட்டால் இன்னுமொரு 25000 கோடி தேறும். இன்னுமொரு உதாரணம் சஷி ரூயா, ரவிரூயா குழுமத்திற்கு சொந்தமான எஸ்ஸார் குழுமம் நவபாரத் பவருக்கு வழங்கப்பட்ட நிலக்கரி ஒதுக்கீட்டை– அதன் ஒரு சிறு பகுதியை வாங்கியதின் மூலமாக நவபாரத் பவர் அடைந்த லாபம் 3200 கோடி ரூபாய்கள். இது அலைக்கற்றை ஊழலைப் போல அனுமானமாகக் கூறப்படும் இழப்பல்ல. நிலக்கரியின் சந்தை விலையில், ஒரு டன் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு கோல் இந்தியா நிறுவனம் செய்யும் செலவைக் கழித்து, குறைந்தபட்சமாகக் கணக்கிட்டுத்தான் இந்தத் தொகையைக் கூறுவதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது. நிலக்கரி வயல்களை ஏலத்திற்கு விட்டிருந்தால் 10.67 இலட்சம் கோடி ரூபாய் இழப்பை அரசு தவிர்த்திருக்க முடியும் என்கிறது அறிக்கை. 2006-2009 ஆண்டில் நிலக்கரிச் சுரங்க உரிமம் வழங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை விசாரிக்க மத்தியக் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) மற்றும் மத்தியப் புலனாய்வு நிறுவனத்தைக் (சி.பி.ஐ) கேட்டுக் கொண்டுள்ளது. இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார், 2006-இல் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக இருந்து, 15 நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்தவர். எனவே இவரை சி.பி.ஐ. விசாரிக்குமா, நிலக்கரித் துறை அமைச்சரான பிரதமரை விசாரிக்குமா என்ற விடைதெரியாத கேள்விகள் எழுந்துள்ளன.

சி.பி.ஐ-இன் விசாரணை வலையத்தில் நிலக்கரி வயல்கள் நிறைந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ம.பி. ஆகிய மூன்று மாநிலங்களின் பா.ஜ.க. அமைச்சர்கள், நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், மத்திய அமைச்சகங்கள் ஆகியோரும் வருகிறார்கள். வலையை முடிந்தவரை அகலமாக விரித்துத் தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிறது காங்கிரஸ் அரசு. இன்னொருபுறம், மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 16 நிலக்கரி வயல்களை ஒதுக்கப் போவதாகக் கூறி, மாநிலக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு ஆசையும் காட்டி விலைபேசவும் முயற்சிக்கிறது. ஏப்ரல் 2005-இல் இரும்பு மற்றும் நிலக்கரிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (எதிர்க்கட்சியினரும் அடங்கியது) “சுரங்கங்களை ஒதுக்குவதற்கான முறை வகுக்கப்படும் வரை தனியாருக்குக் கொடுப்பதை நிறுத்தக் கோரியது. ஜனவரி 2006-இல் முதலீட்டுக் கமிஷன் ‘ஏலமுறையில் மட்டுமே நிலக்கரி வயல்கள் தரப்படவேண்டும்’ என்று வலியுறுத்தியது. 2006-இல் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் எழுப்பின. “சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் சட்டம், 1957-ஐத் திருத்தி, தனியார்மயமாக்கப்படும் நிலக்கரி வயல்களில் பழங்குடி மக்களுக்கும் பங்கு தரப்போகிறோம். இச்சட்டத் திருத்தம் நிறைவேறும்வரை தனியாருக்கு நிலக்கரி வயல்களைத் தரமாட்டோம்” என்று 2010-இல் நாடாளுமன்றத்தில் மன்மோகன் அரசு அறிவித்தது. 2012 இன்று வரை சட்டத்திருத்தம் நிறைவேறவில்லை.

2004-க்கு பிறகு கண்டறியப்பட்ட 6282.5 மில்லியன் டன் நிலக்கரி என்பது 148 லைசன்ஸ்கள் மூலம் ஏற்கெனவே சும்மா (throw away price) கொடுக்கப்பட்டு விட்டது. அதன் மூலம் நம் நாட்டிற்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய 51 லட்சம் கோடி ரூபாய் தனியார் முதலாளிகளுக்கும், காங்கிரஸ் கட்சியின் பினாமிகளுக்கும், அதிகார பீடங்களுக்கும் பங்கு வைக்கப்பட்டுவிட்டது. நம் இயற்கை வளம் அந்நிய சக்திகளிடம் கையளிக்கப்பட்டு விட்டது. 10,67,000 கோடி ஊழல் என்று சொன்ன- கொஞ்சமாவது நேர்மையாக நடக்கும் என்று நம்பப்பட்ட- CAG-ம் இழப்பைக் குறைத்துச் சொல்லி மக்கள் மனதில் இருக்கும் நம்பிக்கையை அமிலம் ஊற்றி அழித்து விட்டது. இனி காங்கிரஸ் திருடர்களின் சாமர்த்தியத்தை, திருட்டை மறைக்க அவர்களின் முழு திறமையையும் பயன்படுத்துவதை நாம் காணலாம். இத்தனையையும் தாண்டி மக்கள் என்கிற சாமானிய அப்பாவி மனிதர்கள், ‘நேர்மை, நியாயம் எல்லாம் இருந்தால் இவர்கள் ஒரு நாள் தூக்கில் ஏறுவார்கள்’ என்ற கற்பனையில் அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள்

இத்தனை அசிங்கங்கள் வெளிவந்தபோதும் நான் தூய்மையானவன் என்று சொல்ல நம் பிரதமர் மன்மோகன் எவ்வளவு நேர்மையானவராக இருக்க வேண்டும். தன் உறவினர்களுக்குக் கட்டணமே இல்லாமல் 8 நிலக்கரிச் சுரங்க உரிமை வாங்கிக்கொடுத்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் , தன் சொந்த நிறுவனத்திற்கு முறைகேடாக உரிமம் பெற்ற சுபோத் காந்த் சகாய்கள், கார்ப்ரேட் கயவர்கள், தாங்கள் சட்டத்தை மீறி எதுவும் செய்து விடவில்லை என்று சாதிப்பார்கள். மனிஷ் திவாரிகள், அம்பிகா சோனிகள், திக்விஜய் சிங்குகள் தங்களின் வாதத் திறமையாலும், மீடியா மேட்டிமைத்தனத்தாலும் நிலக்கரி என்ற ஒன்றே இந்தியாவில் இல்லை என்றுகூட நிருபித்து விடுவார்கள். நாமும் அடுத்த சென்சேசன் நியூஸிற்காகவும், வார இறுதி சினிமாவைப் பற்றியும் கவலைப்பட்டுக்கொண்டு மறந்து போவோம்.

ஆனால் காங்கிரஸ் கட்சி ஒன்றை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”.

17 Replies to “நிலக்கரி மோசடி 1.86 லட்சம் கோடியல்ல 51 லட்சம் கோடி”

  1. ” சிலர் இழப்பு இல்லை என்பதே 176 ஆயிரம் கோடி என்றால், பலர் இழப்பில்லை என்றால் எவ்வளவு பெரிய இழப்போ என்ற பயம் உண்மையா?”-

    ” சுதந்திரத்திற்குப் பின்பு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸின் தவறான அறிவியல், தொழில்நுட்பக் கொள்கைகளால் பாரதத்தின் பெரும்பாலான நிலக்கரி வயல்கள் கண்டடையப்படாமலும் புதிதாக மைனிங் செய்யப்படாமலும் இருக்கின்றன.”-

    சராசரி சந்தை மதிப்பு 11,500 என்று எடுத்துக்கொண்டால் இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கப்போகும் ஆதாயம் என்பது சுமாராக 66 லட்சம் கோடி ரூபாய்கள். உற்பத்திச் செலவை விற்பனை விலையில் கழித்து விட்டு வருவது தானே லாபம்? இதை அடிப்படையாகக் கொண்டுதான் 15 லட்சம் கோடியை உற்பத்தி செலவீனமாக எடுத்துக்கொண்டு பாஜகவின் ஹன்ஸ்ராஜ் ஆகிர் 51 லட்சம் கோடிக்கு ஊழல் செய்து நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்கிறார்.”-

    உண்மையை போட்டு உடைத்துவிட்டீர்கள் , வாழ்க பல்லாண்டு . உமக்கு இறைஅருள் பெருகட்டும். வீர ராஜமாணிக்கத்தின் ஆதாரப்பூர்வமான கட்டுரைக்கு , காங்கிரஸ் திருடர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? வாயில் கொழுக்கட்டை தான். துக்ளக் கார்டூனே வெள்ளிடை மலை.

  2. பா ஜ க வின் கரங்கள் இன்னும் வலுவடைய வேண்டும். அப்போதாவது ஊழல்கள் குறைந்து நாட்டுக்கு நன்மை ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
    நன்றி. வாழ்க பாரதம்!

  3. படிக்க படிக்க தலை சுற்றுகிறது ராஜமாணிக்கம் சார் ……….உண்மையில் இந்தியா ஏழை நாடல்ல போலும்…….சமுக நீதி என்ற பெயரில் கேடுகெட்ட சமுக நடைமுறைகள்,பாரம்பரியத்தை இழிவாக நினைக்கும் மக்கள்,ஓட்டுக்காக தார்மிகங்களை அடகு வைக்கும் கட்சிகள்…. நம்பிக்கை இழக்கிறேன் ராஜா சார்…….
    பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை

    நமஸ்காரம்
    Anantha Saithanyan

  4. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பலே கில்லாடிகள் ஆகி விட்டனர் காங்கிரஸ் கட்சியினர். பல அரசியல் கட்சி தலைவர்கள் இதை பார்த்து நிச்சயம் தங்கள் இயலாமையை பார்த்து வருந்துவது நிச்சயம். நூறு கோடி, ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி ஊழல்கள் என்ற நிலை மாறி லட்சக்கணக்கில் ஊழல் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. நிச்சயம் காங்கிரஸ் இதற்கும் பெருமை தேடும். லட்சக்கணக்கில் ஊழல் என்ற நிலை கொண்டு வந்து நமது தாய் திருநாட்டிற்கு பெருமைதேடி தந்தது தாமே என்று தம்பட்டம் அடித்து கொள்ள தவற மாட்டார்கள்.

  5. The frauds led by Sonia should be arrested and put in jail
    Their properties should be seized and made national assets

  6. பொருளாதாரத்தில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றுள்ள பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது சாயம் வெளுத்து விட்டது. ஆனாலும் சோனியா, கபில் சிப்பல், சிதம்பரம், சல்மான் குர்ஷீத், ஆகிய கொள்ளையர்களின் பிடியில் பாரத அன்னையின் புதல்வர்களான நாம் சிக்கித்தவிப்பதிலிருந்து குறைந்தது 2014 ஆம் ஆண்டுவரையில் விடுதலை இல்லை என்றே தோன்றுகிறது.

  7. இக்கட்டுரையில் விளக்கப்படும் நிலக்கரி ஊழலைக்குறித்து எழுதுவதற்கு முன், திரு. வீர. ராஜமாணிக்கம் அளிக்கும் அந்நிய உளவாளியைக் குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் பழங்காலத்திய தெலுங்கு மசாலா படங்களை நினைவு படுத்துகின்றன. தாய் இறந்த அதிர்ச்சியால் சோகத்துடன் அழுத அடுத்த கணம், கதாநாயகியுடன் “டூயட்” பாடும் கதாநாயகனைக் கண்டு சிரிப்பு வராதா?

    தமிழ் திரைப்படங்களில் வடிவேலுவின் காமெடி இல்லாத குறையை போக்கி விட்டது ராஜமாணிக்கத்தின் “Conspiracy Theory”.

    தமிழ் ஹிந்துவின் ஆசிரியர் குழுவிற்கு!
    நீங்கள் எப்பவுமே இப்படித்தானா! இல்லை இப்படித்தான் எப்பவுமேவா!
    யாராவது மறுமொழி எழுதினால் அனுமதிக்கலாம். கட்டுரையையே அனுமதிப்பதற்கு நிரம்பத்துணிவு வேண்டும்!

    திரு.நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்கு இணைய தளத்தின் மூலம் நேரடியாக பதலளித்தார். அதில், ஒரு பெண்மணி கேட்ட கேள்வி சுவாரஸியமானது. “உங்கள் மீது சுமத்தப்படும் அவதூறான வசைமொழிகளை இவ்வளவு சாமர்த்தியமாக எவ்வாறு உங்களால் கையாள முடிகிறது?”

    இக்கேள்விக்கு திரு.மோடி அவர்கள் அளித்த பதிலை அவசியம் ராஜமாணிக்கமும், ஆசிரியர் குழுவினரும் பார்க்க வேண்டும். (Youtubeல் இந்த பேட்டியின் முழு வடிவம் கிடைக்கிறது)

    திரு.மோடி அவர்கள் இரண்டு ஆங்கில வார்த்தைகளை எடுத்துக் கொண்டார். Criticism மற்றும் Allegation. பொது வாழ்க்கையில் வந்து விட்டபின் ஒவ்வொருவரும் Criticismஐ எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். நான் எல்லா Criticismக்கும் திறந்த
    மனதுடன் பதிலளித்தே வந்திருக்கிறேன். ஆனால் சிலர் Allegation என்னும் அளவில் வாய்க்கு வந்தபடி குற்றம் சுமத்துவதற்கு என்னிடம் பதிலில்லை.

    இத்தாலிய மாஃபியாவாம்! ட்ரெய்னிங்காம்! கே.ஜி.பியாம்! அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அட்ராரா சக்கை!

    ஆசிரியர் குழுவிற்கு கடைசியாக ஒரு கோரிக்கை!
    அமேரிக்காவில் வலது சாரிகளில் இதைவிட அதிகமாக “Conspiracy Theory”ஐ நம்பும் ஆட்கள் உண்டு. நிலவு Cheeseஆல் செய்யப்பட்டது! அவ்வப்பொழுது பூமிக்கு UFOக்கள் வந்து போகின்றன, இஸ்லாமிய தீவிரவாதிகள் வெள்ளை மாளிகைக்குள்
    ஆட்களை அனுப்பி பெரிய பதவிகளை பிடித்து விட்டனர், முஸ்லீம் தாய்மார்கள் அமேரிக்காவில் குழந்தை பெற்றுக் கொண்டு, 20 வருடங்கள் பாகிஸ்தானில் “ட்ரெய்னிங்க்” அளித்தபிறகு அமேரிக்காவிற்கு அனுப்பி குண்டு வைப்பார்கள்
    போன்றவை.

    இதைப் போன்ற “Conspiracy Theory”க்களை வெளியிட்டுக் கொண்டிருந்தால், நிதானமானவர்களை உங்களால் கவர முடியாது!

  8. I ACCEPT WITH BALAJI’S COMMENTS IN GENERAL.
    BUT SOME QUESTIONS ARE TO BE ANSWERED . NOT ALLEGATIONS; QUESTIONS.
    IN 1970S THERE WAS A 20 POINT AGREEMENT WITH USSR. WHO ACCOMPANIED INDRA GANDHI TO USSR AND ON WHAT CAPACITY?
    HOW MADAVA RAO SCINDIA DIED?
    WHY PEOPLE ARE NOT ACCEPTING MANEKA GANDHI AS INDRA /RAJIV GANDHI’S SUCCESSOR?
    THERE WAS A NEWS THAT RAJIV GANDHI’S ENTRY TO POLITICS WAS OPPOSED BY HIS FAMILY MEMBERS! IS IT TRUE?
    DURING NARASIMMA RAO’S PERIOD HOW MUCH TROUBLE HE GOT OUSIDE INTERFERENCE? HOW HE SURVIVED?
    CAN ANYBODY SAY THE WORTH OF ALL TRUSTS INDRA GANDHI FAMILY MAMBERS HODING>
    DURING NARASIMMARAO’S REGIME, SO MANY CONGRESS PEOPLE COMPLANED TO WHOM ABOUT THE PARTY AFFAIRS?
    HOW SEETHARAM KESARI WAS THROWN OUT FROM CONG PRESIDENT POST?
    DURING NDA REGION, THERE WAS NO NDA CHAIURMAN POST. WHAT IS THE NEED OF UOPA CHAIRMAN POST? ANY ACCOUBTABILTY FOR THE POST?
    WHAT IS THE IMPORTANCE OF RIOBERT VADHERA? SO MANY OF FAMILY MEMBERS DIED.
    IS NOT MYSTERIOUS?
    ANY TV CHANNELS / NEW PAPER REPORTES CAN APPROACH UPA CHAIRMAN FOR INTERVIEW? WHY?
    IN ANY TV CHANNELS / NEWS PAPERS ( NOT IN BLOGS) ANY ARTICLE IS APPEARING AGAINST UPA CHAIRMAN? WHY?
    STILL THERE ARE ARE SO MANY QUESTIONS UNANSWERED.
    IF ANYBODY DECIDES TO SUPPORT SOMEBODY BLINDLY, NO MEANING OF ASKING QUESTIONS. BUT WHEN WE THINK OUR COUNTRY IS IMPORTANT THAN INDIVIDUALS, NOBODY CAN PREVENT ASKING QUESTIONS.

    WHAT IS THE IMPORTANCE

  9. பாலாஜி அவர்களே……

    //தமிழ் திரைப்படங்களில் வடிவேலுவின் காமெடி இல்லாத குறையை போக்கி விட்டது ராஜமாணிக்கத்தின் “Conspiracy Theory”.//

    அப்படி எளிமையாக ஒடுக்கிவிட முடியாது…..நேரு குடுமபத்தை பொறுத்தவரை பல அரண்மனை ரகசியங்கள் வெளிவருவதில்லை….

    நேருவின் சபலங்கள் தொடங்கி, பெரோசுடனான இந்திராவின் மோதல், தீரேந்திர பிரம்மச்சாரி விவகாரம், சஞ்சய் காந்தி மரணம், மேனகாவுடனான மோதல் , தற்போது சோனியாவின் உடல்நிலை போன்ற பல விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன……சில மிஸ்ஸிங் லிங்குகளுக்கு நேரு குடும்பம் விளக்கம் அளிப்பதில்லை……

    சோனியா திருமணமாகி இருபது வருடங்கள் இந்திய குடியுரிமை வாங்காமல் இருந்தவர்.இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின்போது தன் குடும்பத்தை மட்டும் இத்தாலி அழைத்துசென்றவர்.[ ராஜீவ் ஒரு பைலட் .யுத்த காலத்தில் பைலட்கள் வெளிநாடு செல்லகூடாது என்பது விதி ] அவரது உறவினரான ஒட்டாவியோ குவாத்ரோட்சிக்கு வழங்கபட்ட வானளாவிய அதிகாரம் கேள்விக்கு உரியது…..[ [சுரங்கத்துறை கேபினட் அமைச்சரின் அலுவலகத்துக்குள் குவாத்ரொச்சி நுழைந்தால் அந்த அமைச்சர் எழுந்து நிற்பாராம்……]

    இந்திரா குடும்பத்துக்கு கே .ஜி.பி ,மாத சம்பளம் வழங்கிய விவகாரத்தை மித்ரோகின் ஆவணங்கள் வெளிப்படுத்திய பின்பும் அதை பற்றி மூச்சு கூட விடப்படவில்லை……

    ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் ,சோனியா இன்றைய வாழ்க்கையை கற்பனை கூட செய்திருக்க முடியாது….இன்று உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் அவரும் ஒருவர்……ராஜீவ் கொலையாளிகளில் நளினிக்கு மட்டும் சோனியா மன்னிப்பு அளித்தது ஏன்? நளினி இல்லாவிட்டால் ராஜீவின் கொலையே நடந்திருக்காது என்பதை அந்த வழக்கை கையாண்ட சி.பி ஐ அதிகாரி ரகோத்தமன் குறிப்பிடுகிறார்…….உண்மை அப்படி இருக்க வேலூர் சிறையில் அவரை பிரியங்கா ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும்…..அந்த சந்திப்பின் விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை.?

    காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவிக்கு , சோனியாவை எதிர்த்து போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாதா ஆறே மாதத்தில் மரணமடைந்தார்……சோனியாவின் போட்டியாளர்களாக கருதப்பட்ட ராஜேஷ் பைலட் , மாதவராவ் சிந்தியா இருவரும் அடுத்தடுத்த விபத்துகளில் பலியாயினர்……[ மூவரின் மகன்களும் தற்போது இணை அமைச்சர்கள்]
    ……..too much of a co – incidence …….

  10. அத்தனை பேரும் அசாதாரணமான முறையில் அல்லாமல் பாலாஜி சொல்வது போல இயற்கையாகவே ஹெலிகாப்டர் விபத்தில் நடுவானில் விபத்து ஏற்பட்டு இறந்து போகிறார்கள்,உரிய பங்கை கொடுக்க மறுத்த y.s.ராஜசேகர ரெட்டி வரை,

  11. சாேறா avargale miga sariyaga sonnanga . Soniya intha poruppil iruppathu naatin paathugapirke kedu

  12. Mr Balaji
    pl visit Mr Suramaniam swamy ‘s janatha party website. The questions and reply blogs are based on his observations.
    Starting from Sanjay , Rajiv, jitendra Prasad, Scindia, rajesh Pilot,The entire Vadera family except
    Robert and his italian mother have died mysteriously – the italian mafia call this as
    “vanishing into thin air” . Even Indira had died not totally because of bullets but because of delay in
    hospitalisation writes mr.subramanain swaamy. So what Rajamanickam has written is certainly not Vadivelu comedy

  13. சஞ்சய் காந்தி,மாதவ் ராவ் சிந்தியா,ஜிந்தால் (இவர் மகனும் m.p.),முன்னாள் இந்திய உளவுத்துறையை சேர்ந்த டோர்ஜி கந்து,சுரேந்தர் சிங்(பன்சி லால் மகன்),ராஜேஷ் பைலட் சோனியாவின் நட்பு வட்டத்தயோ, நேரடியான எதிரிகளோ,துரோகிகளோ என சோனியா நினைக்கும் எவருமே சாதாரண முறையில் மரணமடையவில்லை.

  14. what does Balaji say about the Q in Ardbo’s diary?

    Even a child knows it refers to Quttrocchi!

    And the fact that he is clsoe to Sonia family.

    Why did Manmohan singh government ( Surely with Sonia’s pressure) Interpol withdraw the Red corner Notice for the arrest of Quttrocchi and send a top CBI officer to London to defreeze his bank account in London?

    The very next day Quttrocchi withdrew 5 million pounds from his account and flew away.
    So this is not a conspiracy theory but cold facts.

    There are many more instances to prove that sonia is corrupt and dangerous.
    R.Sridharan

  15. THERE IS ONE CORRECTION IN MY LETTER. IT IS NOT 20 POINTS. IT IS 20 YEARS TREATY WITH RUSSIA. MY QUSTION TO BALAJI WAS WHO ACCOMPANIED WITH INDRA GANDHI AND ON WHAT CAPACITY.

  16. Naan migayum nantri solukiren tamizhhindu….
    Iduponra seidhi anaithu paamara makkalukkum seithiyaga senradaiya vendum.
    Kaankirasin aatchiil Iduponra nilakkari,2g spectrom,gas,tamizhagathin minsaara oozhal anaithaiyum eazhai paamara makkalukkum seithiyaga tv matrum newspaper vazhiyaga senradaiya udhayunkkal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *