இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

இந்து முஸ்லீம் கலவரங்கள்

உத்திர பிரதேசத்தில் பற்றி எரியும் பூமியாக காட்சியளிப்பது அயோத்தி மட்டுமில்லாமல், காசி, மதுராவும் பற்றி எரியும் பூமியாகும். உத்திர பிரதேசத்தில் நடக்கும் வகுப்புக் கலவரங்கள் அனைத்தும் இந்த நகரங்களைச் சுற்றியே நடக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வகுப்புக் கலவரங்கள் தொடர்கதையாகவே மாறிவிட்டன. நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் உத்திர பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெருமளவில் பெற்று ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதி கட்சிதேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின் படி, பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என கைது செய்யப்பட்டு , பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்கப் படுவார்கள் என கொடுக்கப்பட்டது. இந்தக் வாக்குறுதியின் படி ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதி கட்சி, சிறையில் இருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய இஸ்லாமியர்களை விடுவிக்க போகிறார்கள் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடந்த கலவரம் 2012ல் நடந்த மதுரா கலவரமாகும்.

உத்திர பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேருவதற்கு முன்பே இந்து முஸ்லீம் கலவரங்கள் மாநிலத்தில் பல நகரங்களில் நடந்துள்ளது. ஆகவே இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு, இன கலவரங்கள் முன்னோட்டமாக கருதப்பட்டது. இந்த இன கலவரத்தில் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டர்களோ அங்கே மட்டுமே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது. 1972ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ந் தேதி Nonari எனுமிடத்தில் சில இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து அருகில் உள்ள இந்து தலித் தலைவரை கொலை செய்து விட்டார்கள். இதன் காரணமாக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடாந்து Sajni நகரில் டிசம்பர் மாதம் 12ந் தேதி இந்துப் பெண்மணி ஒருத்தியை இஸ்லாமியர்கள் சிலர் மானபங்கப்படுத்தியதின் காரணமாக கலவரம் வெடித்தது. 1977ம் ஆண்டு அக்டோபர் மாதம் வாரணாசியில் உள்ள ஆங்கிலோ பெங்காலி கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள நெசவாளர் காலனியில் ஏற்பட்ட பிரச்சனையில், இரு சமூகத்தினிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர்களுக்கு கத்தி குத்து ஏற்பட்டது, சிலர் இறந்துவிட்டார்கள். இந்த சம்பவத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறி மீண்டும் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் ஊர்வலமாக சென்ற இந்துக்கள் மீது, இஸ்லாமியர்கள் கல், மற்றும் ஆயுதங்களால் தாக்கினார்கள்.

5.4.1969 அன்று அலிகார் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர்கள் கொல்லப்பட்டார்கள் பலர் காயமடைந்தார்கள். 1978ம் ஆண்டு அக்டோபர் மாதம் அலிகாரில் ஒரு இந்துவை சில இஸ்லாமியர்கள் கொலை செய்துவிட்டார்கள், கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி இந்துக்கள் ஊர்வலமாக சென்றார்கள். ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதயில் சென்ற போது ஒரு கட்சியின் அலுவலகத்திலிருந்து இஸ்லாமியர்கள் கல் வீசி தாக்குதல்களை நடத்தினார்கள். இந்த தாக்குதல்களிலும், மற்றும் கலவரம் அதிகமானதாலும் 30 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 1980 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொரதாபாத் நகரில் ஈத் தொழுகையின் போது, போடப்பட்ட பந்தல் சரிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள், இந்த சம்பவத்தில் தொழுகையின் போது, பன்றி ஒன்று கூட்டத்தில் புகுந்ததை, தடுக்கத் தவறிய காவல் துறையினர் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்களை நடத்தி கலவரத்திற்கு வித்திட்டார்கள்.

1982ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீரட் நகரில் உள்ள பதட்டம் நிறைந்த Shahghasa பகுதியில் இரண்டு வழிபாட்டு தலங்கள் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டது, ஒன்று சிவா ஆலயம் மற்றது இஸ்லாமியர்கள் நமாஸ் செய்யும் இடம்( Bazaar) இரண்டும் பக்கத்திலிருந்ததால் பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக நடைபெற்ற கலவரத்தில் 12 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 30க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இந்தக் கலவரத்தின் போது உத்திரப் பிரதேச தேர்தல் நேரம் என்பதால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக டெல்லி இமாம் களத்தில் குதித்தார், இதனால் கலவரம் மேலும் பரவியது.

22.5.1987ல் மீரட் நகரில் உள்ள ஹசீம்புரா எனும் நகரில் நடந்த கலவரம், மிகவும் மோசமான கலவரமாகும். இரண்டு மாதங்கள் வரை நகரில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கபட்டது. 350க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பொருட் சேதம் நிகழந்த கலவரமாகும். ஏப்ரல் மாதம் 2001ல் கான்பூரில் நகரில் நடந்த கலவரம், பேரேலியில் 2.3.2010ல் நடந்த கலவரம், பிப்ரவரி மாதம் 2011ல் மொராதாபாத்தில் நடந்த கலவரம் போன்று தொடர்ச்சியாக வகுப்பு கலவரங்கள் நடந்த மாநிலம் உத்திரபிரதேசமாகும்.

1990-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அத்வானியின் ரத யாத்திரை லக்னோ வந்த போது ஏற்பட்ட கலவரத்தில் 33 பேர்கள் கொல்லப்பட்டார்கள். பல நாட்களுக்கு லக்னோ நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதே ஆண்டு நவம்பர் மாதம் ஆக்ராவில் அத்வானியின் ரத யாத்திரைக்கு முன்பு பல இடங்களில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தாக்கப்பட்டார்கள், இந்தக் தாக்குதல் சம்பவத்தின் காரணமாக கலவரம் வெடித்தது, 31 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 70க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். வகுப்புக் கலவரங்கள் ஒதே ஆண்டில் மூன்று முறை நடந்த நகரம் கான்பூர் ஆகும். எனவே, வகுப்புக் கலவரங்கள் தொடர்ச்சியாக நடந்த மாநிலங்களில் முதன்மையான மாநிலம் உத்திர பிரதேசமாகும். இவ்வாறு நடந்த வகுப்புக் கலவரங்களே பின்னாளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு ஏதுவாக அமைந்ததது என்றால் அது மிகையாகாது.

வாரணாசி குண்டு வெடிப்பு

இந்துக்களின் புனிதத் தலங்களில் மிகவும் முக்கியமானதும், இந்துக்களின் நம்பிக்கைக்குரிய தலங்களில் முதன்மையானதுமான வாரணாசியில் 7.3.2006ந் தேதி குண்டு வெடிப்பு நடந்தது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நாள் செவ்வாய் கிழமையாகும். இந்தக் கிழமையில் மாலை நேரத்தில் அதிக அளவில் இந்துக்கள் அதிக அளவில், கங்கை நதியின் கரையில் நடக்கும் ஆராதனை என்கின்ற முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிந்தே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. 7.3.2006ந் தேதி செவ்வாய் கிழமை மாலை 6.30மணிக்கு முதல் குண்டு வெடிப்பு சங்கட மோச்சான் ஹனுமான் கோயில் (Sankat Mochan Hanuman Temple)அருகில் வெடித்தது, இந்த கோயில் காசி ஹிந்து பல்கலைகழத்திற்கு அருகே உள்ளது. முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணித்துளிகளில் இரண்டாவது குண்டு வெடிப்பு வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் அறையில் நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களை தொடர்ந்து. உத்திர பிரதேச காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் வெடிக்காத ஆறு குண்டுகள் நகரில் பல்வேறு பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள், 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.

வழக்கம் போல் மத்திய மாநில அரசுகள் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஏற்கனவே தயாரித்த அறிக்கையை படித்து விட்டு, வழக்கம் போல் கொடுக்கும் நஷ்ட ஈடுத் தொகையை அறிவித்து, தங்களது கடமை முடிந்து விட்டதாக கருதி னார்கள். ஆனால் உண்மையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? ஊடகங்களும், அரசின் உளவு பிரிவுகளும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை நடத்திய அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பின் காஷ்மீர் மாநிலத்தில் அப்துல்லா ஜாப்பர் (Abdullah Jabbar) என்பவர் மீடியக்களுக்கு பேட்டி கொடுத்த போது “ இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எனும் பெயரில் இஸ்லாமியர்களை கைது செய்து கொடுமை படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் இன்னும் பல நகரங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடைபெறும்.” ஏன தெரிவித்தான்.

குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பே 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாரணாசியில் காவல்துறையினர் லஷ்கர்-இ-தொய்பாவின் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்தார்கள். மேலும் இதே தேதியில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டாh. 4.3.2006ந் தேதி இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வருகை தந்த போது, வாரணாசியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்பாட்டத்தில் இந்து முஸ்லீம்களிடையே நடந்த வகுப்புக் கலவரத்தை அடக்க நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நால்வரும் இஸ்லாமியர்கள ஆவார்கள் ; ஆகவே இந்த சம்பவங்களுக்கு பழி வாங்குவதற்காகவே நடத்திய குண்டு வெடிப்பு என்ற காரணங்களையும் சில அமைப்புகள் தெரிவித்தன.

2004ம் ஆண்டு வரை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கம் அரசியல்வாதிகள் மீதும், அரசாங்க நிறுவனங்கள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடந்து வந்தன. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்டது, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியது, பல்வேறு பகுதிகளில் அரசியல்வாதிகள் மீது நடத்திய தாக்குதல், ஆனால் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் தங்களது தாக்குதல் திட்டத்தை மாற்றி இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும், உள்ளுர் மக்களிடம் அதிக அளவு அச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற புதிய சித்தாந்தத்தின் அடிப்படையில் தங்களது திட்டங்களை மாற்றி அமைத்தார்கள். இந்தத் திட்டத்தின் படி வாரணாசியில் நடத்திய குண்டு வெடிப்பு ஐந்தாவது சம்பவமாகும்.

7.3.2006ந் தேதி நடந்த குண்டு வெடிப்பிற்குக் காரணமானவர்கள் என காவல் துறையினர் பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த மூன்று தீவிரவாதிகளும், இந்தியாவை சார்ந்த ஐந்து இஸ்லாமியர்களும் திட்டமிட்டு நடத்தினார்கள் என அறிவித்தனர். பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தக் ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி அமைப்பைச் சார்ந்தக் மூவரும், வெடி குண்டுகளை தயாரித்து கொடுத்தார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். வெடி குண்டு தயாரித்தவர்கள் பஸிருதீன் என்கின்ற பஸீர், முஸ்தாபிஸ், ஷக்காரியா (Bashiruddin, Mustafiz, Zakaria ) என்ற இவர்கள் தங்களது பணி முடிந்தவுடன், கள்ளத் தனமாக பங்களாதேஷ்க்குத் திரும்பி விட்டதாகவும் உளவுத் துறையினர் தெரிவித்தார்கள். உத்திர பிரதேசத்தின் வடக்கு பிராந்திய ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமியாவின் கமான்டரான வாலியுள்ள (Walilullah) கொடுத்த வாக்குமூலத்தில், 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கும். 2002ல் குஜராத்தில் நடந்த வகுப்பு கலவரத்திற்கும் காரணமானவர்கள் மீது பழி வாங்கவதற்காகவே நடத்தப்பட்ட தாக்குதல் என்றான்

7.3.2006 ந் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை போலவே 7.12.2010ந் தேதியும் வாரணாசியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தக் சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்தது, 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள், காயமடைந்தவர்களில் வெளிநாட்டு பயனியும் ஒருவராவார். பால் கொண்டு செல்லும் வாகனத்தின் உள்ளே வைக்கப்பட்ட குண்டு (improvised explosive device )வெடிப்பின் காரணமாக நடந்தது. இந்த சம்பவம் கூட செவ்வாய் கிழமை மாலை கங்கை நதிக்கு ஆராதணை நடக்கும் போது நடந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மறைமுகமாக இந்தியன் முஜாஹ_தின் அமைப்பினர் பொறுப்பு ஏற்றனர். ஏன் என்றால் 6.12.2010ந் தேதியே 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் நடந்த சம்பவத்திற்குத் தீர்வு இன்னும் எட்டவில்லை, என்பதை நினைவு படுத்துவதற்கு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறும் என இ-மெயில் ஊடகங்களுக்கு அனுப்பட்டது. இமெயில் வாசகங்கள் தொடர் இஸ்லாமிய பங்கரவாத தாக்குதல் திட்டங்கள் தங்கள் வசம் இருப்பதாக, மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்கள்.

Warning of More Attacks on Hindu Holy Places : “ Our memories are still fresh and our hearts still bleeding over every Muslim brother and sister who was hacked to death after the demolition of Babri masjid, Indian history is decorated with countless state-sponsored terror and state-managed riots. Indeed very martyr enlivens the Ummah. We will not budge until very inch of the Masjid is regained and lives of our martyrs avenged. We will strike terror in the hearts and minds of these idol worshippers until the mountain of injustice is undone. We will leave no stone unturned come what may till the anger of believer’s hearts is removed and a Magnificent Masjid is built ant same spot. We fully aware of your preparations of the Babri Masjid site for the construction of grand temple over the corpses of our martyrs all over the country. The Indian Mujahideen warn these filthy Hindu zealots that even if a Grand Temple of Gold is built over the Babir Masjid we will destroy it at all costs. Remember It was a Masjid, It is a Masjid, and It will always remain a Masjid. At this juncture Muslims are silent due to their state of affairs. We hereby invite all our Muslim brethren to never be weak hearted over the designs of these idolators and urge them to strengthen their faith in Allah and unite for the cause of Islam. Surely, victory is awaiting us. Be assured that Indian Mujahideen the sons of Mohmud Ghazni. Muhammd Ghori, Qutb-ul-din Aibak, Firuz Shah Tughlaq and Aurangzeb have resolved that none of your Mandirs will remain safe until and unless all our occupied Masjids through out India are returned back to the Muslims with honour”

மேற்படி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்ட இ-மெயிலில் இந்த பயங்கரவாதிகள் தங்களை கஜினி முகமது, கோரி முகமது, ஔரங்கசீப் ஆகிய படையெடுப்பாளர்களின், ஆக்கிரமிப்பாளர்களின், கொடுங்கோலர்களின் வாரிசுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர். விக்கிர ஆராதனையாளர்கள் அனைவரையும் ஒழிப்போம் என்றும் எழுதியுள்ளனர். அரசு மற்றும் உளவுத் துறைகளின் எல்லா நடவடிக்கைகளையும் மீறியும் இத்தகைய குழுக்கள் இந்தியாவில் சுதந்திரமாக செயல்படக் கூடிய சூழல் உள்ளது என்றால், வருங்காலத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதம் ஒரு தொடர்கதையாகவே நீடிக்கும். அதை எல்லாவகையிலும் முறியடிப்பதற்கான தயார் நிலையிலேயே இந்தியா எப்போதும் இருக்க வேண்டும்.

மீண்டும் அடுத்த கட்டுரையில், உத்திர பிரதேசத்தில் நடந்த சில குண்டு வெடிப்பு சம்பவங்களும், அதன் காரண கர்த்தாக்களையும் பார்ப்போம்.

(தொடரும்)

8 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19”

  1. ungalin sevai nattukku thevai vanagam 26.10.2012 ilayankudiel bjp arpattathil pukuntha muslim napargal payankara thkuthal seithullargal avargalai tamilaga arasu kaidhu seyavendum

  2. காங்கிரஸ் ஒழியும் வரை இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதமும், சர்ச்சின் குள்ளநரித்தனங்களும் ஒழியாது.
    இந்துக்களின் துன்பங்களும், அவதிகளும்.அவமானங்களும்,ஓரவஞ்சனைக்கு ஆளாவதும் ஒழியாது.
    ‘ராணித் தேனியை’ விரட்டினால் தேன் கூடு காலியாகும்.
    மக்கள் இந்துக்களாக ஓட்டுப் போட வேண்டும்
    முஸ்லிம்களுக்கு தனி நாடு பிரித்துக் கொடுத்த பின்னரும் இங்கு அவர்களுக்கு அளவுக்கு மீறிய செல்லம் கொடுத்து ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளை ஒழிக்க வேண்டும்
    இல்லை என்றால் இந்துக்கள் கதை பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவ பெருமான் கதைதான்!

  3. Let us give spiritual education to all youngsters. Atleast BJP ruling states should be implemented the same first. When I spoke with our younger generation, they are not even aware about neither our spirituality nor our ‘real history’. Once people know our culture, meaning of rituals, past history, real freedom fightors and etc they will get true national devotion. Those people voting for our (BJP) party. Let us make ‘Hindu vote bank’. Then only pseudo secularist parties consider us also a ‘man’. Since, Christians & muslims have been voting as per their bishop / imam instruction. In our case… Let us do proper ground work to create Hindu vote bank. Automatically everythings will get solved. .

  4. மேற்குவங்க மாநில போலி வாக்காளர் அட்டையுடன் 48 வங்காளதேசத்தினர் கைது
    Mumbai சனிக்கிழமை, நவம்பர் 10, 2:36 AM IST

    மும்பை, நவ.10-

    மும்பை நகரில் கட்டிட வேலை, ஓட்டல் வேலைகளில் ஏராளமான வங்காளதேசத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலர், ‘விசா’ காலம் முடிந்த பின்னரும் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.

    இந்த ஆண்டில் மட்டும் இதைப்போல சட்டவிரோதமாக தங்கியுள்ள 1121 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 250 பேர் வங்காளதேசத்துக்கு திரும்பி அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

    இந்நிலையில், மும்பையின் வதாலா பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டிட வேலை செய்யும் 2200 பணியாளர்களிடம் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தங்கியிருந்த 48 வங்காளதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சிலர், 150 ரூபாய் செலவில் மேற்கு வங்காள மாநிலத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கும் திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு வேலை கொடுத்த 4 ஒப்பந்தக்காரர்களும் கைதாகியுள்ளனர்.

    மேலும், இதைப்போன்ற அதிரடி சோதனைகளை நடத்த மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.-”

    காங்கிரஸ் அரசு ஒழிந்தால் தான், இப்படி வெளிநாட்டு நாய்கள் நம் நாட்டில் புகுந்து தீவிரவாத செயல்களை செய்வதை ஓரளவுக்காவது தடுக்க முடியும். இவர்கள் அனைவரும் வேலை கிடைக்காதபோது, எங்கு வெடிகுண்டு வைக்கலாம் என்று ஜிஹாதிய அழிப்பு/நாசகார வேலைகளில் இறங்குகின்றனர்.

  5. பயங்கரவாதிளின் கொட்டத்தை அடக்க இயற்றப்பட்ட போடா சட்டத்தை ஒழித்த சோனியா நினைப்பது என்ன?
    ஹிந்துக்களின் உயிர் கிள்ளுக் கீரை என்றா?

    உலகம் எங்கும் பல நாடுகளில் பயங்கர வாதிகளை அடக்க தீவிர சட்டங்களை இயற்றி உள்ளனர்
    ஆனால் சோனியா காங்கிரஸ் முஸ்லீம்களின் மொத்த வோட்டுக்காக ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.’
    ‘எவ்வளவு ஹிந்துக்கள் வேண்டுமானாலும் சாகட்டும். அவர்கள் சொரணை கேட்டவர்கள்
    எங்களுக்கு உங்கள் மொத்த வோட்டுக்களையும் போட்டு விடுங்கள்’ என்று சொல்லாமல் சொல்லி விட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *