காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

காங்கிரஸை ஆதரிக்கும் கருணாநிதியின் முடிவுக்குக்கான காரணங்களை அவரும், அவரின் அடிவருடிகளும் விவரிக்கிறார்கள்.

அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் சோனியாவின் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு என்று நம்பும் ஒன்றுக்கு தங்கள் நிபந்தனையற்ற ஆதரவை கருணாநிதி மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த அபரிமிதமான பரிசை அரசியல் சாணக்கியர் கருணாநிதி, தியாகத் திருவிளக்கு அம்மையாருக்கு தன் கிறிஸ்த்துமஸ், புத்தாண்டுப் பரிசாக வழங்கி அமெரிக்காவையும், அம்மையாரையும் ஒரே நேரத்தில் குஷிப்படுத்தி உள்ளார்.

கருணாநிதியின் கட்சியை– காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை– அதாவது சில நேரங்களில் சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்த நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவுக் கரத்தை மீண்டும் துடைத்துக் கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிரூபித்திருக்கும் கருணாநிதியின் ராஜதந்திரத்தை மன்னிக்க ”இராசதந்திர“, ” இனமான ” உணர்வு மிக்க நகர்வை, மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பனப் பதர்களும், மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிகின்றன.

சூடு சொரணையற்ற, மானங்கெட்ட, உப்பை உணவில் சேர்க்காத பிறவி என்று அவை வர்ணித்து வந்தாலும் அதை முறியடிக்க பெரியார் அன்றே சொன்னது போல இவை அனைத்துமே ஆரிய சதியை, ஒடுக்க நம் இனமான இளவல் கருணாநிதிவின் அபாரமான சாணக்கியத்தனத்தை பகடி செய்தாலும் இது எதையுமே காதில் வாங்கதது போல நடிக்கும் தம் அண்ணனின் சாதுர்யத்தை எப்படி மெச்சுவது என்பது புரியாமல் இருக்கிறார், மானமிகு வீரமணி அவர்கள்.

நம் தலைவரின் தேசபக்தியைப் புரிந்து கொள்ள ஈரேழு 14 லோகங்களிலும் வார்த்தை கிடையாது. 600-க்கும் மேற்பட்ட செம்மொழி வடிவங்களில் மெளனம் சாதிக்கும் (பிரதமர் என்று அடிக்கடி குறிப்பிடப்படும்) மன்மோகன்சிங்கே, நம் தலைவரின் தேசப்பற்றைக் கண்டு புளாகாங்கிதத்தோடு கண்ணில் நீர் சொறிய என்ன சொல்வது என்பது புரியாமல் மேலும் 5 மொழிகளில் மெளனம் சாதித்துக்கொண்டு நிற்கிறார். அனைத்துக் களேபரங்களும், இன்று காலை கருணாநிதி தேச நலன் கருதி (எந்த தேசத்தின் நலன் கருதி என்பதைச் சொல்லாமல் விட்டதை அரசியல் சாணக்கியத்தனம் என்றே பொருள் கொள்க.) அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தரும் மத்திய அரசின் கொள்கையை, தான் எதிர்த்தாலும், இந்த அரசு கவிழக்கூடாது என்பதற்காக தன் ஆதரவை அரசுக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்.

இது ஒன்றும், தான் திருவிளக்கு அம்மையாரின் மிரட்டல், பிளாக்மெயிலுக்கு பயந்தோ. இனமான இளவல் தம்பி ராசா இனி கோர்ட்டில் விசாரித்தால் கொள்ளையடித்ததில் கொடுத்த பங்கைப் பற்றியும், குடும்பம் அடித்த கொள்ளைகளைப் பற்றியும் கோர்ட்டில் சந்தி சிரிக்கச் செய்து விடுவேன் என செல்லமாய் சொல்லியதற்காகவோ, 2G-யை இன்னும் கொஞ்சமாய் தோண்டினால்கூட திருக்குவளை முன்னேற்ற கழகமும், திருட்டுத்தனமாய் ஆரம்பித்த சன், கலைஞர் டி.வி சாம்ராஜ்யங்களும் சரிந்து மீண்டும் திருட்டு ரயில் ஏறி திருவாரூருக்குச் செல்ல வேண்டுமோ என்பதற்காகவோ, பங்குப் பணத்தை பங்கம் வராமல் பங்கு வைத்த தன் மனைவி, துணைவி, இணைவி, இவர்கள் பெற்றெடுத்த குலக்கொழுந்துகள், அவர்கள் பெற்றெடுத்த வாரிசுகள் அனைவருடனும், தன் மொத்த சொத்தும் ஜப்தி செய்யப்பட்டு கம்பி எண்ணிக் களி தின்போம் என்பதற்காகவோ அல்ல; வெறும் தேச நலன் கருதியும் உழைக்கும் மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தான் இது போன்ற கடினமான முடிவை எடுத்துள்ளார் கருணாநிதி.

இதைப் புரிந்து கொள்ளாத அறிவிலிகள், பார்ப்பனக் கொடுக்குகள், குல்லுக பட்டரின் வாரிசுகள், பார்ப்பன அடிவருடிகள், ஆரிய சதி செய்யும் அரவக்கொடுக்குகள், தமிழ் பேசும் வல்லூறுகள் கருணாநிதியைக் கிண்டலும் கேலியும் செய்தாலும் அதைத் தாண்டியும் தியாகத் திருவிளக்கு அம்மையார் அவர்களுக்கு அடிபணிந்து சேவையாற்றுவார் நம் கலைஞர் என்பதை தெரிவிக்கிறார் கலைஞர் டீவி புகழ் சூனா பானா வீணா.

இது தொடர்பாக தப்பட்டை ஒலி நாளிதழில் தன் தம்பிக்கு ஒரு உணர்ச்சிமிகு கடிதம் எழுதுகிறார் கருணாநிதி –

“கழக உடன்பிறப்புக்களே, அந்நிய முதலீட்டை ஆதரிப்பதால் நாட்டில் வெறும் 30 கோடி குடும்பங்கள் மட்டும் தான் வாழ்வாதரத்தை இழந்து தெருவில் பிச்சை எடுத்து உண்ண வேண்டிய நிலை வரும். ஆனாலும் பாருங்கள் குலக்கொழுந்துகளே! அதிலும் 2 அல்லது 3 பார்ப்பனக் குடும்பங்களும் வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் என்பதற்காகவே தான் இதை இந்தக் கருணாநிதி ஆதரிக்கிறான். என் திராவிட இனக் கடவுள் பெரியாரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக 30 கோடி குடும்பங்களை என்ன இந்த தேசத்தையே சூறையாடுவான் இந்த கருணாநிதி. அதற்காக இரட்டை ஆயுள்தண்டனை என்ன, தூக்கு தண்டனையே ஆனாலும் ஏற்றுக்கொள்ள என் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களை வெளியிலிருந்து வழிநடத்த என் வாரிசுகள் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் என்னும் பெரும்சுமையை என் குடும்பமும், சிறை, மரண தண்டனைகள் இன்ன பிற சில்லறைக் கஷ்டங்களை என் தொண்டர்களும் பார்த்து கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியைப் பற்றி தெரியாத கயவர்களும், ஆரிய வந்தேறிகளும்தான் திருவிளக்கு அம்மையாரை அந்நிய ஆபத்து என வர்ணிக்கிறார்கள். தம்பி! அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா?

1,76,000 கோடி கொள்ளை அடிக்கச் சொன்னதோடு அல்லாமல் நம் பங்குப் பணத்தை 10% மேல் போட்டுக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், வெறும் 3 மாதத்திலேயே நம்மை எல்லாம் சிறையில் இருந்து விடுவித்ததோடு அல்லாமல் அப்படி ஒரு கொள்ளையே நடக்கவில்லை என்று சொல்லி 120 கோடி மக்களையும் நம்பவைத்திருக்கிறார். அவர் சாமர்த்தியம் யாருக்கு வரும்?. பெரியார், அண்ணா கூட ஆரிய மாயை, பார்ப்பன சதி என்றெல்லாம் ஜல்லியடித்து சித்தாந்தம், வெங்காயம் வெளக்குமாறு என்று சொல்லியே 2 கோடி மக்களை மட்டும்தான் ஏமாற்றி காதில் பூசுத்த முடிந்தது. ஆனால் அந்நிய அம்மையார் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தையே போலியாக நடத்தி ஃபோர்ஜரி செய்ய எப்படியெல்லாம் சதி செய்கிறார்! 120 கோடி மக்களை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைவருக்கும் காதில் பூ சுற்றும் கலை, வேறு யாருக்கு வரும்? நயவஞ்சகத்தைக் கூட எவ்வளவு நாகரிகமாகச் செய்கிறார் பாருங்கள்!! இவரோடு கூட்டணி வைத்தது நம் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் மட்டுமே சாத்தியம். இவருக்கு முன்னால் நம் திருட்டெல்லாம் ஒன்றுமே இல்லை.

இவரோடு கூட்டணி வைத்துக் கொள்ளையடிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? கூட்டணி வைத்திருப்பவர்களை பாராடா தம்பி, மாட்டுத்தீவனத்திலேயே பல ஆயிரம் கோடி திருடிய லல்லு பிரசாத்ஜி, தாஜ் காரிடர் கேஸில் 4000 கோடி திருடிய மாயாவதி அம்மையார். கொள்ளை, கொலையில் வல்ல சிபு சோரனார், சர்க்கரை ஊழல் புகழ் சரத் பவார்; தவிர சொந்தக் கட்சியில் உள்ள 206 பேருமே கடைந்தெடுத்த ஊழல்வாதிகள்தான். நாமும் தான் 1950-லிருந்து மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறோம். கொள்கை, கோட்பாடு, கடமை, கண்ணியம், தெருப்புழுதி என்று வாயில் வந்த வார்த்தை எல்லாம் சொல்லி விஞ்ஞானரீதியாகக் கொள்ளையடித்தாலும் பிச்சை காசு 100 கோடியைத் தாண்டமுடியவில்லை தாண்டவக்கோனே!. ஆனால் திருவிளக்கு அம்மையார் திருவிளையாடல்கள் எல்லாமே ஊழல் எல்லாமே 2G, 4G, காமன்வெல்த், நிலக்கரி ஊழல், ராணுவ ஆயுத பேர ஊழல் என்று லட்சம் கோடிகளுக்கு மேலான மெகா, மகா சைஸ்தான் தம்பி. பிரிட்டிஷ்காரன் 400 வருடங்களில் கொள்ளையடித்ததை விட அதிகமாக 8 வருடங்களில் கொள்ளையடிக்கும் அம்மணியின் கால் தூசுக்கு ஈடாவர்களா யாரேனும்? இல்லை இனியும் பிறக்கத்தான் முடியுமா சொல்லடா உடன்பிறப்பே!

பிரிட்டிஷ்காரன் 400 வருடங்கள் கூட்டமாக வந்திருந்தும் 1,50,000 தமிழ்- மன்னிக்க திரமிள, திராவிட மக்களைக் கூடக் கொல்லவில்லை. ஆனால் இத்தாலியத் திருவிளக்கு அம்மையார் ஒரே ஆண்டில் 1,50,000-க்கும் மேலான தமிழ் மக்களை துள்ளத் துடிக்க கொன்று ரசித்தார்களே, இந்தச் சாமர்த்தியமும் துணிவும் யாருக்கு வரும்? அதற்குக் கூட இருந்து கொடுவாள் பிடித்ததற்காக 40,000 கோடி செலவு என்று கணக்கு மட்டும் காண்பித்த சேது சமுத்திர திட்டத் தொகையையும் நமக்கே தாரைவார்த்த அந்த இத்தாலிய பால் வடியும் வதனத்தை பாராடா என் அன்பு தம்பி. அண்ணா அன்றே சொன்னார் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டர் என்று. .பாலிடால் போல வெள்ளையாய் இருக்கிறார் அம்மையார். 400 ரூபாய் கொடுத்தாலே நான் அவர்களுக்கு விசுவாசமாய் இருப்பேன். 40,000 கோடியை வீசி எறிந்த அந்த தியாகத் தாய்க்கு ஒரு பிரச்சினை என்றால் அமைதியாக இருக்கலாமா? வரலாறு நம்மை மன்னிக்குமா? புவியியல் நம்மை கவனிக்குமா? அறிவியல் தான் நம்மை அவிக்குமா?.

இதற்கு முன்னால் கூடத்தான் நாம் கூட்டணி வைத்திருந்தோமே காவி பண்டாரங்களோடு! ஒத்தை பைசாவிற்கு பெற மாட்டார்கள். பிரதம மந்திரி என்றுதான் பெயர் வாஜ்பாயிக்கு. கூரை வீடாக இருந்தாலும், கூழாக இருந்தாலும் குடித்து விட்டுப் படுத்து விடுவார். ஆடம்பரத்தின் அரிச்சுவடி கூட தெரியாதவர், கேட்டால் ‘ஸ்வயம் சேவக்’ என்று பெருமை வேறு பேசுவார். கிராம மக்களுக்குத் தொண்டாற்றினார் என்பதற்காக தானே வலிந்துபோய் பகுத்தறிவுக்கு பங்கம் விளைவிக்கும்படி சின்னதாய் என்ற பெண்ணின் காலில் விழுகிறார். யார் வேண்டுமானாலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச வேண்டுமானால் எப்பொழுது வேண்டுமானாலும் போய் பார்க்கலாமாம். கூடவே கன்னம் வைக்கும் கூட்டணித் திருடர்கள் மன்னிக்கவும் தலைவர்கள்கூட திருவிளக்கு அம்மையாரைப் பார்க்க முடியாது.

காவி பண்டாரக் கூட்டத்தில் இருந்து வந்த வாஜ்பாய், 30000 கொடுத்தால் தான் தொலைபேசி கிடைக்கும் என்று இருந்த கௌரவத்தை மாற்றி அனைவருக்கும் தொலைபேசியைக் கிடைக்கச் செய்து அதன் மரியாதையையே போக்கி விட்டார். கிராமப் பெண்கள் அடுப்பூதிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் தங்கு தடையில்லாமல் சிலிண்டர் கிடைக்க உத்தரவு இடுகிறார். இந்தியாவை இணைக்க சாலைகளை அதுவும் நான்கு வழி சாலைகளை அமைக்க உத்தரவு இடுகிறார். குழந்தைகள் கல்வி பெறுவதற்காகவும், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் சர்வ சிக்‌ஷ அபியான் என்று கொண்டுவர நிதி ஒதுக்குகிறார். அணுகுண்டு வெடித்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறார். சுதேசி தொழில் நுட்பத்தை வளர்க்கத் திட்டமிடுகிறார். சுய அறிவு இருப்பவர்கள், சூடு, சொரணை இருக்கிறவர்கள், ஊழல் செய்யாதவர்களுக்கு பதவி அளிக்கிறார். தேச எல்லைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார். மின்சார உற்பத்தியை பெருக்குகிறார். தொழில் துறையை பலப்படுத்துகிறார். ஊழலை அனுமதிப்பதே இல்லை.

எப்பொழுது பார்த்தாலும் மக்கள் முன்னேற்றம் தான் முக்கியமென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கும்பல் எல்லாம் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள்?. ஜனாதிபதியாவது தேறினாரா என்றால், இவர்கள் கொண்டு வந்த அப்துல் கலாம் உள்ளூர் ஊழலும் தெரியாமல் வெளிநாடு சுற்றுப்பயணமும் செய்யாமல் மாணவர்களிடம் பேசுகிறேன், உள்நாட்டை பார்க்கிறேன், வல்லரசாக்குகிறேன் என்று சொல்கிறவரைக் கொண்டு வந்து பதவில உட்கார வைத்தார்கள். இவர்களை எல்லாம் ஆதரிக்க வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயமாகப் போய்விட்டது,

என்னுடைய பதவியே போனாலும் திமுக ஆட்சி கேடு கெட்டதாக இருந்தால்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து, ஆட்சியை ஒரே ஓட்டில் இழந்ததால் வந்த வினை. நானெல்லாம் பதவி போகுமென்றால், பதவிக்கு ஒரு ஆபத்து வருமேயானால் பெற்ற பிள்ளையைக் கூட யாரென்று தெரியாது என்று தைரியமாகச் சொல்லுவேன். இந்த காவிக்கும்பல் என்னவென்றால் நீதி, நியாயம் தர்மம் என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். பண்டாரக் கும்பலின் துணை பிரதமரோ, பிரதமர் பதவியை சிபாரிசு செய்கிறார். செய்யாத ஊழலுக்காக குற்றம் சுமத்தியதற்கே பதவியை ராஜினாமா செய்கிறார். குற்றம் இல்லை என்று சொல்லும் வரை தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார். கேட்டால் சங்கம் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒழுக்கம் என்கிறார்கள். இவர்களோடு கூட்டுவைத்தால் விளங்குவோமா?

இதே நம் இத்தாலியத் திருவிளக்கு அம்மையாரை பார்! பெட்ரோல் விலையை மட்டும் 18 தடவை ஏற்றி இருக்கிறார். அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையையும் தாறுமாறாக ஏற்றி விடுகிறார். அமெரிக்கா அரசும், அதன் நிறுவனங்களின் நலனுக்காகவும் நம் மக்களைப் பிழிந்து எடுக்கிறார். நாட்டிற்கு கேடு தான் விளையும் ஆனால் தனக்கு 1,00,000 கோடி கமிஷன் கிடைக்கும் என்பதற்காக அபாயகரமான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு சாமானியர்களின் தலையெழுத்தை மாற்றுகிறார். சிலிண்டர் உபயோகப்படுத்தி மக்கள் ஆரோக்கியக் குறைபாடு அடையக்கூடாது என்பதற்காக வரலாறு காணாத வகையில் சிலிண்டர் விலையை 250% கூட்டி அதற்கும் ,ரேஷன் வைத்து வறுமையை எப்படி வளர்க்கிறார் பாருங்கள். 1947-லிருந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்து கொள்ளையடித்துச் சுரண்டி வருகிறது; என்றைக்காவது சாலை போட வேண்டும்,. பள்ளிக்குழந்தைகளின் கல்விக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று சிந்தித்தது உண்டா? எல்லையில்தான் பாதுகாப்பை பலப்படுத்தினால், பின் போர் எப்படி வரும்? பாதுகாப்புத் துறையில்தான் பின் எப்படிக் கொள்ளைஅடிப்பது?

குடிக்கிற தண்ணிருக்கு கூட வரி விதித்து மக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தி தன் அடிமை தாகத்தை தீர்த்துக்கொள்கிறார் அம்மையார். குடியரசுத் தலைவர் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு கூட எவ்வளவு ஊழல் மிகுந்த உத்தமர்களைத் தேர்வு செய்கிறார் பாருங்கள். ஊழலுக்காக எவ்வளவு கீழ்த்தரமாகவும் செயல்படுவேன் என்கிற உறுதிதான் இத்தாலிய அம்மையாரின் கவர்ச்சிக்குக் காரணம். எதிரிகளை எப்படி ஹெலிக்காப்டர் விபத்தில் கொல்வது என்பதை கலையாகப் பயின்றுள்ள அம்மையார் எங்கே? தன் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வைத்த ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த இடையூறும் பண்ணாத வாஜ்பாயி எங்கே? அட, இந்தப் பண்டார கும்பலின் அடுத்த பிரதமராவது ஊழல் செய்பவரா என்றால் அவரும் ஒழுக்கமானவராக இருக்கிறார். தேசத்தின் வளர்ச்சிக்காக எந்நேரமும் சிந்திப்பவராக இருக்கிறார். விடுமுறை தினங்களில் கூட ராணுவ வீரர்களோடு கழிக்கிறார்.

எல்லா பிரச்சினைகளையும் நேருக்கு நேர் சந்தித்து தர்மத்தின் படி நின்று தீர்க்கிறார். மோடியை பார்ப்பான் என்று திட்டி வெறுப்பை விதைக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. மனைவி, துணைவி, இணைவி, மகளிரணித் தலைவி பெற்ற மகளின் கூட படிக்கும் பிள்ளைகள் என்றாவது ஏதாவது தொடர்புகள் இருக்குமா என்றால் அதுவும் இல்லை? ”அவரும் பத்தினி இல்லை, நானும் உத்தமனில்லை” மாதிரியான ஆபாச அறுவெறுப்பு மேற்கோள்கள் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை!! இது போன்ற காவிப்பண்டாரங்களின் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மனதை இரும்பாக்கிக்கொண்டு, கண்ணின் மணியாம் கனிமொழியை வழக்கில் இருந்து விடுவிப்பதோடு 10,000 கோடியோ எவ்வளவோ அவர்கள் போடும் பிச்சைக் காசையும் வாங்கிக்கொண்டு, நம் தம்பி ராசா களி தின்றாலும் பரவாயில்லை என்று கண்ணீரோடு கழகம் இந்த முடிவை எடுக்கிறது.

சோனியா அம்மையார் நம் ஆதரவை எதற்காகக் கேட்கிறார்? பெற்ற தாயையும், பிறந்த பொன்னாட்டையும் தானே அடகு வைப்பதற்காகக் கேட்கிறார். அதற்கு பதிலாகத்தான் கற்றை, கற்றையாகப் பணம் தருகிறாரே? வேறு என்ன வேண்டும். கூட கொள்ளையடிக்க பதவி தருகிறார். கொள்ளையை மறைக்க அனைத்து தகிடுதத்தங்களையும் செய்கிறார். இதற்காக என்ன வேண்டுமானாலும் தரலாமே? பதவியையும், பணத்தையும் யார் எதற்காகக் கொடுத்தாலும் அதற்கு ஈடாக எதையாவது கொடுக்கத்தானே வேண்டும். அது பெற்ற தாயாக இருந்தால் என்ன? பெற்ற பிள்ளையாக இருந்தால் என்ன? அம்மா செண்ட்டிமெண்ட், தாய் நாடு செண்டிமெண்ட் எல்லாம் நம்மை கட்டிப்போட வந்த ஆரிய சதி என்று சொல்லி விட்டு வேறு வேலை பார்க்க போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். வெறும் 30 கோடி குடும்பங்கள் நாசமாகப் போகும் என்பதற்காக நமக்கு கிடைக்கும் பதவி, லஞ்சத்தை விட்டுக்கொடுக்க முடியுமா? இல்லை கனிமொழியைத்தான் திகாரில் தினமும் பொங்கலும் கெட்டிசட்னியும் தின்ன அனுப்ப முடியுமா? மதவாத சதியை முறியடிப்போம், திராவிடத் தமிழ் இனம் காப்போம்.

எனவே இனமானத் தம்பி இதையெல்லாம் நீ உணர்வில் இருத்தி சிறை செல்லவும், தூக்குக் கயிற்றை முத்தமிடவும் நீயும், உன் வாரிசுகளும் தயாராக வேண்டும். உங்களை ஆட்சி செய்ய நானும், என் வாரிசுகளும் தயாராக இருக்கிறோம் என்பதை அன்போடு கட்டளை இடுகிறான் உன் அண்ணன்.

அன்புடன்,
மு.கருணாநிதி

— என முடியும் கடிதத்தையும் வெளியிட்டு, தான் இந்த முடிவை நாட்டின் நலன் கருதியே எடுத்தேன் என்பதை தன் கரகர குரலில் கண்ணீர் வரப் படித்துக் காண்பித்து தன் தேச பக்தியை நிலை நிறுத்தினார். கருணாநிதி.

பத்திகளிலும், பத்திரிக்கைகளிலும் வரும் தன்னிலை விளக்கம்
(நன்றி முகனூல் நண்பர்கள்)

 1. பொருளாதார மேதை, குலாம் நபி ஆசாத் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் ஆபத்தையும், 2ஜி வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தால் கனிமொழிக்கு ஏற்படும் ஆபத்தையும் விரிவாக எடுத்துரைத்ததை அடுத்து, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தருவது என்று முடிவெடுத்தார்….
  (சஸ்பென்ஸ் ஓவர்!) – அன்பழகன் முகனூலில்
 2. நான் பார்ப்பனராக இல்லாமல் சூத்திரனாக பிறந்துவிட்டதால் தான் நான் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு கொடுத்ததை கண்டிக்கிறார்கள் – கருணாநிதி வெளியிடப்போகும் அறிக்கையில் இருந்து – த.முத்துகிருஷ்ணன்
 3. கருணாநிதி :
  நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கேட்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை இல்லை. காரணம் வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு மதவாத சக்திகள் என்ற காரணம். அதை போட்டுகொள்ளுங்கள்.வீரமணி : அப்படித்தான் அப்படித்தான் ராசா அதேதான்.
 4. அண்ணே..தலிவர் இப்படி பண்ணிட்டாரே..சஸ்பென்ஸ்ன்னு கூட சொன்னாரே..அதிரடியா ஏதாவது செய்வாருன்னு எதிர்பாத்தா இப்படி விழுந்து கிடக்காரே..?நேத்து ஒருத்தர் வந்துட்டு போனாரே..அவரு பேரு தான் குலாப் ஜாமுன்..ஆனா கொண்டுவந்தது அக்மார்க் திகார் களிடா…ஒண்ணும் பண்ண முடியாது..

  அண்ணே..மூணு மாசமா..நான் சும்மா இருக்காம பேஸ்புக்ல சில்லறை..கல்லறைன்னு எதிர்த்து கவிதை, கட்டுரைலாம் எழுதிட்டேண்ணே..இனி ஒரு பய மதிக்கமாட்டானே..

  அடேய்…நீ என்ன புதுசா..? பலகாலமா இதாண்டா நடக்குது..இதெல்லாம் எங்களுக்கு பழகிபோச்சு..போய் அதையெல்லாம் தேடி டெலிட் பண்ணிட்டு புதுசா சாதகமா பாயிண்ட்ஸ் ரெடி பண்ணு..போ..

  அண்ணே..எங்கப்பா மளிகைக்கடை வெச்சிருக்கார்ண்ணே..கொஞ்சம் சங்கடமா இருக்கு..

  சரி..நீ அப்ப கரண்டு, காவேரி பிரச்னையை பத்தி எழுது..இல்லன்னா “புல்லட் ராஜா”ன்னு ஒரு படம் வந்துருக்கு..இன்னும் இங்க யாரும் விமர்சனம் எழுதலை..நீ அதை எழுது..

  சரிண்ணே..யாருனா கலாய்ச்சா நீங்க வந்து சப்போர்ட் பண்ண மறந்துடாதீங்க..வரேன் — ராஜேஷ்

 5. அன்னிய முதலீடு: ஆட்சி கவிழாமல் இருக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு – தலிவர்..!!

  பின்குறிப்பு :படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை .:) – சுந்தர வடிவேல்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

29 மறுமொழிகள் காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

 1. அத்விகா on November 30, 2012 at 9:30 am

  அந்நிய நேரடி முதலீடு ( FDI ) சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதை எதிர்த்து, கருணாநிதி அவர்கள் அளித்துள்ள அந்தர் பல்டி கீழ் வருமாறு:-

  20 -09 -2012 – எப் டி ஐ -யை கண்டித்து நாடு தழுவிய பந்திற்கு திமுக ஆதரவு.

  01 -10 -2012 – திமுக செயற்குழு எப் டி ஐ க்கு எதிராக தீர்மானம்.

  01 -10 -2012 – எதிர்க்கட்சிகள் எப் டி ஐக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும்போது , திமுக அதனை ஆதரிக்கும் என்று கருணாநிதி அறிவிப்பு;

  14 -11 -2012 . நான் நூறு படங்களுக்கு கதை வசனம் எழுதினேன். எப் டி ஐ -யில் திமுகவின் நிலைப்பாடு சஸ்பென்சு . சஸ்பென்சு இருந்தால் தான் சினிமா ஜெயிக்கும். -கலைஞர் அறிவிப்பு.

  27 -11 -2012 .- மத வாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக , எப் டி ஐக்கு ஆதரவாக திமுக ஓட்டுப்போடும்- கருணாநிதி அறிவிப்பு.

  இவ்வளவு தெளிவான தலைவர் தமிழகத்துக்கு ஒரு வரப்பிரசாதம். அய்யகோ !

 2. Sarav on November 30, 2012 at 10:20 am

  First you see your dirty backside and come for commenting MK.

  For you MK is enemy just because he was one among those who talked about Tamil. For you people the word ‘TAMIL’ is enemy and hence MK is enemy … Better you change this web site address as TAMILHINDU politics.com

  If you are praying god you should not have any bad thinking about others. But this website does not deserve anything to say themselves as HINDUS…

 3. VGopalan on November 30, 2012 at 10:35 am

  சுயநல நோக்கோடு தனக்கு ஆதாயம் தரும் முடிவை எடுத்துவிட்டு, அந்த முடிவை நியாயப்படுத்தும் நோக்கில் சப்பைக்கட்டு கட்டுவதில் இவர் சமர்த்தர். ஏண்டா வேலைக்குப் போகவில்லை, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாய் என்று ஒரு சோம்பேரியைக் கேட்டால், அவன் வீட்டில் மனைவியைத் தனியாக விட்டுப் போக பயமாக இருக்கிறது; அடுத்த வீட்டு ஆண்பிள்ளை ஏதாவது செய்து விடுவான் என்று அப்பாவியும் நேர்மையாளனுமான ஒருவன் மீது பழி போட்டுவிட்டுத் தன் சோம்பேரி சுய நலத்தை மறைப்பவனைப் போல இந்த மனிதர் பேசுகிறார். இவர் எந்தவித அந்தர்பல்டியும், ஆகாய பல்டியும் அடித்து விட்டுப் போகட்டும்; அதை இந்த நாடு நன்கு அறியும், அதை நியாயப் படுத்த அநியாயமாக பாஜக மீது பழியைப் போடுவது கேவலம். பா.ஜ.க. ஆட்சியின் போது அவர்களுடைய மதவாதம் எப்படியெல்லாம் விளையாடியது என்பதை இவர் விலாவாரியாக விளக்க வேண்டும். மதவாதத்தால் இவரும், இவரைச் சார்ந்தவர்களும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள்; மக்கள் அடைந்த துன்பங்கள் என்ன என்பதையெல்லாம் இவர் பட்டியலிட வேண்டும். சும்மா வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பாஜக மீது குற்றச்சாட்டை வீசிவிட்டுத் தன் சுயநலப் போக்கை மறைக்கப் பார்த்தால் மக்கள் நம்ப மாட்டார்கள். இது 2012ஆம் ஆண்டு, 1949 அல்ல என்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.

 4. .சான்றோன் on November 30, 2012 at 12:12 pm

  உப்பைத்தொட்டு உரலை விழுங்கு என்பது சொலவடை…..அதுபோல மதவாதம் என்ற பூச்சாண்டியை காட்டிவிட்டால் எந்த அயோக்கியத்தனத்தையும் நியாயப்படுத்தலாம்…..ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு வரும் வரை கருணா போன்ற நரிகளுக்கு வாழ்வுதான்…..

 5. ராஜமாணிக்கம் on November 30, 2012 at 2:59 pm

  அத்விகா அவர்களே, நீங்கள் நாள் குறிப்பிட்டு நினைவுபடுத்துவதை பார்த்தால் ஏதோ கருணா,சொரணை பெற்று தன் நிலையை மாற்றிக்கொள்ளவோ, மறுபரீசிலனை செய்யவோ வாய்ப்பு இருக்கிறது என்பது போன்று நினைத்தாலே அது கருணாவை கேவலப்படுத்துவதாகஅவர் நினக்க கூடும், அவரை ஏதோ மனிதர் நீதி, நியாயம் , நேர்மை ,வெக்கம், மானம் உள்ள மனிதர் என்று நீங்கள் நினைப்பதே அவரை புண்படுத்தும் விதமாக இருக்கும் என்பதால் அதை நான் வன்மையாக அவர் சார்பாக கண்டிக்கிறேன். மானம் ,ஈனம்,இன உணர்வு,தேச பக்தி, மக்கள் நலன் போன்றவை மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் பசப்புகளை நம்புவது மக்கள் எனும் பதர்களின் தப்பு தானே தவிர அது கருணாவின் தப்பு அல்ல.

 6. ராஜமாணிக்கம் on November 30, 2012 at 3:04 pm

  அய்யா சரவ்..
  அவர்களே ,கேவலமான பிறவிகளுக்கும் எங்களுக்கும் என்ன சொத்து தகராறா? வாய்க்கால் வரப்பு தகராறா?இல்லை மாமன் ,மச்சான்,பங்காளி தகராறா? முன் ஜென்ம விரோதமா? 20 -09 -2012 – எப் டி ஐ -யை கண்டித்து நாடு தழுவிய பந்திற்கு திமுக ஆதரவு.

  01 -10 -2012 – திமுக செயற்குழு எப் டி ஐ க்கு எதிராக தீர்மானம்.

  01 -10 -2012 – எதிர்க்கட்சிகள் எப் டி ஐக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும்போது , திமுக அதனை ஆதரிக்கும் என்று கருணாநிதி அறிவிப்பு;

  14 -11 -2012 . நான் நூறு படங்களுக்கு கதை வசனம் எழுதினேன். எப் டி ஐ -யில் திமுகவின் நிலைப்பாடு சஸ்பென்சு . சஸ்பென்சு இருந்தால் தான் சினிமா ஜெயிக்கும். -கலைஞர் அறிவிப்பு.

  27 -11 -2012 .- மத வாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக , எப் டி ஐக்கு ஆதரவாக திமுக ஓட்டுப்போடும்- கருணாநிதி அறிவிப்பு.
  இதை விட கீழ்த்தரமாக தன் நிலையை மாற்றி மாற்றி பச்சோந்தி இனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் கருணாவை யாராவது எதாவது சொல்ல முடியுமா?

 7. ராஜமாணிக்கம் on November 30, 2012 at 3:10 pm

  6 ஆண்டுகள் மதவாத சக்திகள் என்ன ஆனார்கள் ? அப்போது கருணாவின் மருமகன் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் காலடியில் தானே இருந்தீர்கள் அப்போது உங்கள் உணர்ச்சி எங்கே அடகு வைக்கப்பட்டிருந்தது.உங்களின் ஆட்சியை கலைக்க முடியாது என்றதற்காக நன்றியுடன் நீங்கள் இருப்பீர்கள் என்று என்றுமே பாஜக நினைத்ததில்லை. ஆனாலும் உங்களிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?முரசொலி மாறனின் ஆஸ்பத்திரி செலவைக்கூட மத்திய அரசு தானே செய்தது. வெக்கமில்லாமல் அதன் பிறகு அவர்களை பண்டார பரதேசிகள் என்றீர்கள். உங்களின் பிறவி இயல்பு அப்படி. பன்றியிடமும், நாயிடமும் நாகரீகத்தையும் நன்றியுணர்வையும் எதிர்பார்ப்பது மிக மிக தவறு என்று எல்லாருக்கும் தெரியும்.

 8. kathiresan on November 30, 2012 at 3:12 pm

  மதவாதம் மதவாதம் என்று சொல்லுகிறாரே
  அவர் மனைவிகள் மட்டும் ஏன் தாலி குங்குமம் , பூ வைக்கிறார்கள்

 9. ராஜமாணிக்கம் on November 30, 2012 at 3:23 pm

  /”For you MK is enemy just because he was one among those who talked about Tamil. For you people the word ‘TAMIL’ is enemy and hence MK is enemy … ”/ முதலில் நீங்கள் எழுதிய கையை டெட்டால்,பினாயில் ஊற்றி கழுவுங்கள். முடிந்தால் இந்த சிந்தனை உதித்த் மூளையையும் கழுவுங்கள்.தமிழுக்கும் கருணாவுக்கும்,தமிழ் இனத்துக்கும் கருனாவுக்கும், நாகரீகத்திற்கும் கருணாவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒருவன் தமிழ் மொழி பேசுவதனாலும்,தமிழ் மக்களுக்கும் சேர்த்து துரோகமும்,வஞ்சகமும் பண்ணுவதாலேயே அவன் எல்லாம் தமிழன் என்ற அளவு கோளில் பார்க்கிறீர்களா? என்ன? கருணா தமிழ் இனத்தின் கருவை அறுத்த கயவன் முள்ளி வாய்க்காலில் கொத்து குண்டுகளில் மக்கள் இறக்கிறார்களே என்றதற்கு மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற கேடு கெட்ட கேவலமான வார்த்தைகளை சொன்ன அக்றிணை தானே அவர்.அவன் ,அந்த பன்னாடை,பரதேசி என்று எழுதவதற்கு முழு தகுதி அவருக்கு இருந்தாலும் அவரின் வயதின் காரணமாக அப்படி எழுத நாகரீகம் தடுக்கிறது.2g ஸ்பெக்ட்ரத்தில் நாடே காறித்துப்பிக்கொண்டிருந்த பொழுது நான் தமிழன் என்பதால் தான் என்றார்.இங்கே வந்து தம்பி ராசா ஒரு தலித் என்பதால்தான் அவர் பழி வாங்கப்படுகிறார் என்று பிலாக்கணம் வைத்தார். ஏன்பா நியாய வான்களே சந்தோலியா,பல்வா,ஆச்சார்யா,சித்தார்த்த பெகுரா அனைவருமே வா தலித்கள்? என்ன என்ன விதமாக மக்களை கோத்து விட முடியுமோ அப்படி எல்லாம் கோத்து விட்டு மக்களிடையே பிரிவினையையும் ,பிளவையும் தூண்டி விட்டு குளிர் காய்வதிலும் அடிக்கடி நிறம் மாறுவதிலும் கருணாவை யாரும் மிஞ்ச முடியாது. கருணாவோட செயல்களைப்பார்த்து நேற்று பிறந்த குழந்தை கூட காறி உமிழும். எங்களுக்கு அவர் மேல் வெறுப்பெல்லாம் இல்லை,இவரெல்லாம் பிறந்த இனத்தில் பிறந்து விட்டோமே என்ற அறுவெறுப்பும்,அசூயையும் தான் இருக்கிறது.

 10. Mithran on November 30, 2012 at 3:48 pm

  அற்புதமான கட்டுரை! வாழ்த்துக்கள்!

 11. Prasannasundhar N on November 30, 2012 at 4:17 pm

  Dear Mr. Raja Manikkam,

  Please dont degrade pigs and dogs….

 12. அத்விகா on November 30, 2012 at 6:44 pm

  ” கருணாவோட செயல்களைப்பார்த்து நேற்று பிறந்த குழந்தை கூட காறி உமிழும். எங்களுக்கு அவர் மேல் வெறுப்பெல்லாம் இல்லை,இவரெல்லாம் பிறந்த இனத்தில் பிறந்து விட்டோமே என்ற அறுவெறுப்பும்,அசூயையும் தான் இருக்கிறது.

  அன்புள்ள திரு .வீர.ராஜமாணிக்கம் ,

  கோடிக்கணக்கான மனிதர்களின் உள்ள உணர்ச்சிகளை எழுத்தில் அற்புதமாக வடித்துள்ளீர்கள். நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

 13. Keerti on November 30, 2012 at 8:01 pm

  From Facebook:

  அரசாங்கம் கவிழாமல் இருக்க வேண்டியது, சிறு வியாபாரிகள் செத்துப் போகாமல் இருக்க வேண்டியதை விட முக்கியமாக இருப்பது நம் நாட்டில் மட்டுமே

 14. பொன்.முத்துக்குமார் on November 30, 2012 at 9:32 pm

  // For you MK is enemy just because he was one among those who talked about Tamil. For you people the word ‘TAMIL’ is enemy and hence MK is enemy //

  Mr.Sarav, my humble request for you is to first realize what you’re talking about. He’s not opposed just b/c he talked about Tamil.

  And you know what, he only offered lip service to the Thamizh language and nothing more. Can you tell us from the bottom of your heart, what he did to growth and the development of the language other than mooting the hatred towards Hindi and used it for his own personal political agenda ?

  Come on friend, please wake up from your deep slumber.

 15. vanthia thevan on December 1, 2012 at 12:07 am

  திரு ராஜமாணிக்கம் அவர்களே, வாழ்த்துக்கள்! இந்தி ஒழிக காலத்திலிருந்து துக்ளக் பத்திரிக்கை துவக்கம் முதலும் இன்னும் பல காலகட்டங்களிலும் திரு முகவின் பலவாறு அவதாரங்களை நேர்முகமாகவும் பத்திக்கை வாயிலாகவும் படித்து பலமுறை நகைத்ததுண்டு. அனால் இன்று என்னை தரையில் புரண்டு சிரிக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டீர்கள். அதே நேரத்தில், இந்த மக்களின் அறியாமை என்னை அழவும் வைக்கிறது. சூரியன் வந்தால் பனி விலகும், இந்த திமுக கூவம் என்று எவ்வாறு வற்றும்?

 16. வெங்கட் சாமிநாதன் on December 1, 2012 at 11:28 am

  மறு வாழ்வுக்கு மாற்று இடம் கொடுத்து, வீடு கட்டிக் கொடுத்தாலும் கூவம் கரையில் இருக்கும் தன் குடிசைக்குத் திரும்பும் ஜனங்கள் இருக்கிறார்களா இல்லையா? அந்தச் சாக்கடையில் குடியிருக்கும் சாதகஙக்ள் அவர்களுக்குத் தெரியும். திக, திமுக, ஒரு முக்கால் சதவிகதம் அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆக இந்த எல்லா கண்ராவிகளும் ஒரே பட்டறையில் உருவான பண்டங்கள். காங்கிரஸை மறந்து விட்டேன். தமிழ்கம் முழ்தையும் இப்படி ஆக்கியாயிற்று. சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் பிரணாபுக்கும் கூட இந்த ஜீவன்கள தேவையாக இருக்கிறது. மதிக்கத் தோன்றுகிறது. அவர்களும் இதே அச்சில் உருவான பண்டங்கள். என்ன சொல்லி என்ன பயன்.? இருப்பினும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான் பயன் இல்லை. இருப்பினும் நாமும் மரத்துப் போகாமல் இருக்க வேண்டுமே?

  இதுவும் கூட இந்த மாதிரி மூடிய அமைப்புக்குள் தான் பரிமாறிக்கொள்ள முடியும். அதுவும் ஆபத்துக்குள்ளானது தான். 66-ஏ என ஒன்று இருக்கிறது.

  இன்னமும் அச்சில் வருவது தான் பரவலாக்கும். இல்லையெனில் இதெல்லாம் வாசல் கதவையும் ஜன்னல் கதவையும் சார்த்துக்கொண்டு நமக்குள் ர்கசியம் பேசுவது போலத்தான்.

  இருப்பினும் you are helping to preserve our sanity in tact, Thanks a lot. Please continue. Not many can command this language, this derisive outpouring and this treasure of details.

 17. Sankar on December 1, 2012 at 4:18 pm

  உங்களின் பதிவை படித்த பொது சிரிப்பு தான் வருகிறது. நீங்கள் கலைஞரை விமர்சிக்க வேண்டும் என்று இது போன்று கட்டு கதைகளை பதிவு செய்து இருகுயர்கள். அது உங்களின் குறுக்கு புத்தி. திமுக என்பது தமிழகத்தில் மிக பெரிய இயக்கம். உங்கள் கட்டுரை அதிமுக அதரவு நபர்களுக்கு தான் சந்தோசம் கொடுக்குமே தவிர ஒரு திமுக தொண்டனும் இதை பற்றி பெருசாக எடுத்து கொள்ள மாட்டன். உங்கள் கட்டுரை திமுக அனுதாபிகள் யாரும் விரும்ப மாட்டார்கள். நீங்கள் பிஜேபி மற்றும் அதிமுக ஆதரவு நபர் என்பது புரிகிறது.

 18. Sundararajan on December 1, 2012 at 5:56 pm

  மிக அருமை. என் மனதில் இருந்ததை உங்கள் வார்த்தைகளில் காண்கிறேன்.

 19. மாசி பெரியசாமி on December 2, 2012 at 7:27 am

  காங்கிரசை ஆதரிக்க குடும்ப தலைவர் கருணாவிற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.ஆனால், திமுக தலைவர் கருணாவுக்கு ஒரு காரணம் கூடஇல்லை. டூ ஜி வழக்கிலிருந்து மகளையும், இன்னும் பேரன்களையும் காப்பாற்ற காங்கிரசால் ஒரு உதவியும் செய்ய இயலாது. ஏனெனில், சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வை இருப்பதால், காங்கிரசு திருடர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பழைய பணக்காரர்களின் கம்பெனி அதிகாரிகளே மாட்டிக்கொண்டு கம்பி என்னும் போது, புது பணக்காரரான திருக்குவளை அவர்கள் நாற்பது ஆண்டு திரைக்கதை சஸ்பென்சுடன் இனிமேலாவது அரசியலை விட்டு ஒய்வு எடுத்து, தன்னுடைய அரசியல் வளர்ப்பான ஸ்டாலினிடம் கட்சித்தலைமை பொறுப்பை ஒப்படைத்து விட்டு விலகவேண்டும். அது மட்டுமே திமுக வுக்கு இவர் செய்யும் சரியான உதவியாக இருக்கும். கருணா அவர்கள் தலைமை பதவியில் நீடித்தால், கட்சியில் சகோதர சண்டைகளாலும், பேரங்கள் உட்பட பல வாரிசு மோதல்களாலும் மேலும், பிரச்சினைகள் பெருகி, இவர் கண்ணெதிரே திமுக அழியும். பாஜக மந்திரிசபையில் பல பதவிகளை பெற்று அனுபவித்துவிட்டு, பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் , பாஜகவை பண்டாரம், பரதேசி, மதவாதம், பாபர் கட்டிடம் என்று உளறுவது இவருக்கு எவ்விதத்திலும் நல்லதல்ல.

  காங்கிரசு என்னும் நச்சு பாம்பை விட்டு விலகி, தேர்தலுக்கு இரண்டு மாதம் முன்பு பாஜக கூட்டணியில் சேர்ந்தால் , வரும் 2014 -க்கு பிறகு அமைய இருக்கும் எதிர்க்கட்சிகள் அரசில் சில பதவிகளை பெறலாம். இல்லையெனில், திகார் களி நிச்சயம். ஏனெனில் காங்கிரஸ் 1947 – ஆம் வருடம் சுதந்திரம் அடைந்தபின்னர் , அறுபத்து ஐந்து வருட வரலாற்றில், அடுத்த தேர்தலில் இந்தியா முழுவதும் சேர்ந்து ஐம்பது இடம் கூட பிடிக்காமல் சின்னாபின்னமாக போகிறது. கலைஞர் புத்திசாலியா , இல்லை கழகத்தை அழிக்க வந்த நச்சுப்பாம்பா என்பதை காலம் தான் சொல்லும்.

 20. Kaushik on December 2, 2012 at 2:53 pm

  “தமிழ் ஹிந்து” விற்கும், இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?. எந்த விதத்தில் இந்த கட்டுரை “ஹிந்து மதத்தை” வளர்க்க உதவும்? கருணா நல்லவரா கெட்டவரா என்பதல்ல விஷயம். இந்த மாதிரி கட்டுரைகளால்தான் “ஹிந்து” என்று பெயர் தாங்கிய பல இனைய தள கட்டுரைகள் “பிராமண”, “மேட்டிமை”களுக்கு பிடிக்காதவர்களை வசை பாடும் தளமாக மாறியதற்கு காரணம்.

  இப்படி கேடுகேட்ட அரசியல் தலைவர்களை பற்றி ஏழுதி வீணடிக்காமல், உருப்படியாய், நம் மதத்தை எப்படி சீர்திருத்தலாம், மேட்டிமை மனம் கொண்டவர்களை திருத்தி, மற்றவர்களை இன்னும் எவ்வாறு மேலுக்கு கொண்டு வரலாம் என யோசியுங்கள் ..

 21. desa bakthan on December 4, 2012 at 11:07 pm

  கருணாநிதியின் அறிவிப்புகள்

  நேற்று : பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல அதனால் பா.ஜ.க.உடன் கூட்டணி வைக்கிறோம்.

  இன்று : மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வரகூடாது என்ற காரணத்தால் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

  நாளை : அந்நியர்கள் (சோனியா) ஆட்சிக்கு வரகூடாது என்ற காரணத்தால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

 22. desa bakthan on December 4, 2012 at 11:07 pm

  நேற்று : பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல அதனால் பா.ஜ.க.உடன் கூட்டணி வைக்கிறோம்.

  இன்று : மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வரகூடாது என்ற காரணத்தால் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

  நாளை : அந்நியர்கள் (சோனியா) ஆட்சிக்கு வரகூடாது என்ற காரணத்தால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

 23. appavi tamilan on December 5, 2012 at 8:26 pm

  அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக கருணாநிதியிடம் குலாம் நபி ஆசாத் எப்படி ஆதரவு கேட்டிருப்பார் என்று ஒரு கற்பனை.

  இடம் : கருணாநிதி வீடு : கூட்டத்தில் பங்கு பெறுபவர்கள் கருணாநிதி, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கனிமொழி.

  கருணாநிதி : வாங்க வாங்க குலாம் அஸ்ஸலாமு அழைக்கும்
  குலாம் நபி ஆசாத் : அழைக்கும் அஸ்ஸலாம்.
  கனிமொழி : வாங்க வாங்க மினிஸ்டர் (இந்தியில்)
  கருணாநிதி : என் மகளுக்கு ஹிந்தி ரொம்ப நல்லா தெரியும்
  குலாம் நபி ஆசாத்: முன்னாடி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினிங்களே
  கருணாநிதி : அது தமிழ்நாட்டு ஜனங்களுக்கு எங்க குடும்பத்துக்கு இல்லை.
  கனிமொழி : என் மகன் என்னைவிட நல்லா ஹிந்தி பேசுவான்.
  குலாம் நபி : இப்ப நிறைய தமிழர்கள் ஹிந்தி படிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.
  கருணாநிதி : அப்ப ஒரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த வேண்டியதுதான்.
  கனிமொழி : ஜனங்க இனி ஏமாறமாட்டாங்க அப்பா.
  கருணாநிதி : சொல்லுங்க குலாம் சோனியா அம்மையார் எப்படி இருக்காங்க.
  குலாம் நபி ஆசாத் : நல்லா இருக்காங்க. நேரடியா விசயத்துக்கு வர்றேன். அந்நிய
  நேரடி முதலீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பீங்களா
  மாட்டீங்களா? ஆதரவு கொடுக்கலன்னா 2G விவகாரத்தை கையிலெடுப்போம் என்ன சொல்றீங்க.
  கருணாநிதி : வேண்டாம் வேண்டாம் இந்திய மக்களா என் மகளா என்று யோசிக்கிறேன்.
  குலாம் நபி ஆசாத் : மக்களுக்கும் மகளுக்கும் நடுவுல ஒரே ஒரு “க்” தானே இருக்கே தைரியமா அதை தூக்கி போடுங்க.
  கனிமொழி : அமாம் அப்பா ஒரு “க்” தானே தூக்கி போட்டுடுங்க
  கருணாநிதி : ஓகே அன்னை சோனியாகிட்ட சொல்லிடுங்க. தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்ன்னு.
  குலாம் நபி ஆசாத் : good
  கனிமொழி : மக்களுக்கு என்ன சமாதானம் சொல்லபோறீங்க அப்பா.
  கருணாநிதி : இருக்கவே இருக்கு மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வரகூடாது என்ற காரணத்திற்காக மத்திய அரசுக்கு ஆதரவுன்னு.
  கனிமொழி : அப்பா இந்த காரணம் வேண்டாம்ப்பா மதவாத பா.ஜ.க.ன்னு சொல்லி சொல்லி போரடிச்சு போச்சு. வேற எதாவுது காரணம் சொல்லுங்கப்பா.
  கருணாநிதி : இதை தவிர வேற எந்த காரணமும் நம்ம கிட்ட இல்லை.
  குலாம் நபி : ok நான் கிளம்புறேன்.

  இத்துடன் கூட்டம் முடிந்தது. இந்த சந்திப்பு பற்றி.

  தி.க. ஜால்றாமணி (வீரமணி) : கலைஞர் தான் ஒரு அசைக்க முடியாத அரசியல் சாணக்கியர் என்று மீண்டும் நிருபித்துவிட்டார்.

  திருமாவளவன் : தமிழர்களின் வீரத்தை பற்றி மீண்டும் கலைஞர் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

 24. மாசி பெரியசாமி on December 7, 2012 at 8:00 pm

  இந்தியாவில் சில மாநிலங்கள் இருளில் மூழ்கி மின்சார தட்டுப்பாட்டினால் தவித்துக்கொண்டிருக்கும் போது, பாகிஸ்தானுக்கு மின்சாரம் சுமார் ஐயாயிரம் மெகாவாட்டுக்குமேல் வழங்கி உள்ள காங்கிரஸ் மற்றும் திமுக திருட்டு கும்பலின் மத்திய அரசு , ஒரு பேடித்தனமான விஷமிகள் கூட்டணி. இந்த விஷமிகளை , கொள்ளையர்களை நம் மக்கள் வரும் தேர்தலில் ஒழித்துக்கட்டுவார்கள்.

 25. உண்மைத்தமிழன் on December 8, 2012 at 10:45 pm

  தலை மறைவாக இருக்கும் பேரன் மற்றும் டூஜி புகழ் மகள் இருவரையும் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்து மூளை வறண்டு விட்டது திமுகவுக்கு. இந்த கட்சியால் நாட்டுக்கு ஒரு நன்மையையும் இல்லை. டெல்லியில் சில எம் பி க்களையும், சில மத்திய அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டுக்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டபோது, வாயை மூடி மௌனம் காத்த திமுக வுக்கு மக்கள் இனி சாட்டை அடி கொடுக்க இருக்கிறார்கள். வட மாநிலங்களின் உபரி மின்சாரத்தை தமிழகம் கொண்டுவரவிடாமல், திமுக தான் தடுக்கிறது என்பது, சிறுகுழந்தைக்கு கூட தெரிந்துவிட்டது. திருக்குவளை தீய சக்தி என்று எம் ஜி ஆரால் சரியாக அடையாளம் காட்டப்பட்ட மஞ்சள் துண்டார் , இனியாவது திருந்துவாரா ? இவர் திமுகவை அழிக்காமல் ஓயமாட்டார்.

 26. அத்விகா on December 21, 2012 at 8:57 pm

  1. திமுகவினர் தமிழக அரசின் கேபிள் டீவீ ஒழுங்காக செயல்படவிடாமல் தடுப்பதற்காக , டெல்லியில் இருந்து கொண்டு செட்டாப் பாக்ஸ் விஷயத்தில் எல்லா இடையூறுகளையும் செய்கின்றனர்.

  2. மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை எவ்வித காரணமும் இன்றி குறைத்து, ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் குறைந்து அவதிப்பட செய்துள்ளனர்.

  3. மத்திய அரசின் உபரி மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்காமல் , எல்லாவித தடைகளையும் ஏற்படுத்துகின்றனர்.

  4. சில்லறை வணிகத்தில் அன்னியமுதலீட்டை எதிர்த்து ஜம்பமாக அறிக்கை கொடுத்துவிட்டு, சோனியா காலடியில் விழுந்து கும்பிட்டு, லோக்சபாவில் வாக்கெடுப்பு வந்தபோது, அந்நிய முதலீட்டை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு வணிகர்களுக்கும் , அவர்களின் வயிற்றில் அடித்துள்ளனர்.

  5. இலங்கையில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களின் பிணந்தின்ற சோனியாவுக்கு பல்லக்கு தூக்கி, ஜால்ரா அடித்துவருகின்றனர்.

  திமுகவினருக்கு விரைவில் தமிழக மக்கள் அடிக்க இருக்கிறார்கள் கடைசி ஆப்பு.

  தமிழக மக்கள் இதை நன்றாக புரிந்துகொண்டு விட்டனர்.

 27. மாசி பெரியசாமி on January 19, 2013 at 8:26 am

  காமராஜரை தோற்கடிக்க பெரிய பணமுதலை யார் என்று பார்த்து , நாகர் கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் ரப்பர் தோட்ட முதலாளி டாக்டர் மத்தியாசை ஆதரித்து கடும் பிரச்சாரம் செய்த புண்ணியவான் கருணாநிதி.

  ஈழத்தமிழரை அழிக்க சோனியாவுக்கு உதவிக்கரம் கொடுத்த இனத்துரோகி கருணாநிதி. சர்க்காரியா , வீராணம், பூச்சி மருந்து, டூ ஜி, கிரானைட் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காங்கிரசுக்கு கால் கழுவி வாழ அவருக்கு பல குடும்பத்தேவைகள் உள்ளன. ஆனால் அவருடைய குடும்ப கட்சிக்கு ஓட்டு போட, தமிழகத்து தமிழனுக்கு எவ்வித தேவையும் இல்லை. இவர் தன்னை அடிக்கடி ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறார். கம்யூனிசம் சீனா மற்றும் ரஷ்யாவில் பல கோடிமக்களை கொலை செய்த இயக்கம். இவரும் அவர்களைப்போலவே, பல லட்சம் இலங்கை தமிழரையும் , உதயகுமார் போன்ற பலரை காலி செய்த பெருமையும் கொண்டவர் என்பதால் , ஒரு வகையில் கம்யூனிஸ்டு தான். ஏனென்றால் கம்யூனிஸ்டுகள் பிறரை சுரண்டி வாழ்பவர்கள். இவரும் அப்படித்தான்.

 28. A.Viswanathan on May 19, 2013 at 1:09 pm

  அன்பு இந்து நண்பர் திரு கௌசிக் அவர்கள் தனது மறுமொழியில் (தேதி 2.12.12) அரசியல் தலைவர்களை பற்றி எழுதி வீணடிக்காமல் நமது மதம் வளர முயற்சிக்கவேண்டும் என்று எழுதி உள்ளார்.
  ஒரு நிலத்தில் பயிர் வளர களைகளை பிடுங்கி எறியவேண்டும். முள்வேலி அமைக்கவேண்டும். வெறும் உரம் மட்டும் போட்டால் போதாது. உரைத்தால் களைகள் தான் வளுறம் பயிர் நாசம் ஆகும். கருணாநிதி ஒரு களை, அவனது போலி முகத்தை வெளிப்படுத்த அவன் போட்டு இருக்கும் முகமூடியினை கிழித்தேரியாவேண்டாமா? அவர் ஒரு வேடதாரி தான் என்பதை கீழே விளக்குகிறேன் படியுங்கள். இதையெல்லாம் மக்கள் படித்து உணர்ந்தால் தான் இப்படிபட்டவனா என்று காரி துப்புவார்கள். நம்மவர்கள் அந்த வேலையை செய்யாத காரணத்தால்தான் தி,க வினர் மற்றும் தி.மு.க.வினர் கொழுப்பெடுத்து பேசிவருகின்றனர்.. அவர் தமிழ் ஒன்றை வைத்துகொண்டு ஊரை ஏமாற்றி வருகின்றார்..
  1. விளம்பர பலகைகளில் இந்தி எழுத்துகளை தார் போட்டு அழித்த இவர்களின் சட்டை பைகளில் ரூபாய் நோட்டுகளில் இந்தி எழுத்துகள் இல்லையா? அவற்றை தார் வேண்டாம் pen ink கொண்டு அழித்திருக்கலாமே! மாட்டார்கள்! செய்தால் நோட்டு மாறாது. அடுத்தவனுக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படணும். தனக்கு நஷ்டம் ஏற்படுத்திக்கொள்ள பைத்தியமா பிடித்திரக்கு அவர்களுக்கு?
  2. இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க “3000 சீக்கியர்கள் படுகொலை” புகழ் காங்கிரஸ் உடன் கைகோர்த்து வேடிக்கை பார்த்து நின்ற கருணாநிதி இப்போது “தமிழா தமிழா என்னை கடலில் தூக்கி எறிந்தாலும் நான் உனக்கு கட்டுமரமாக உதவுவேன்” என்று சினிமா டயலாக் பேசுகிறார்.
  3. சில ஆண்டுகளுக்குமுன் முரசொலியில் கழக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி இருந்தார் அதில் “எனக்கு 2 நாட்களாக காய்ச்சல். ஒரு capsules எடுத்துக்கொண்டேன்” என்று எழுதி இருந்தார் capsule என்பது ஒரு ஆங்கில வார்த்தை. அது ஒரு புறமிருக்கட்டும். ஒரு capsules என்று பன்மையில் உள்ளது (குறிப்பு:: அவர் கைப்பட எழுதியதை போட்டோ நகல் எடுத்து அச்சடிக்கப்பட்டது. ஆகவே பிரிண்டிங் mistake என்று சொல்லி ஏமாற்றமுடியாது. இப்படிப்பட்டவர்தான் “முத்தமிழ் அறிஞர்” கேட்பதற்கே அசிங்கமாய் இருக்கிறது.
  4.தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று ஒரு கன்னடக்காரர் ஈ.வே.ரா. என்பவருக்கும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல்” என்று பாடிய பாரதிக்கும் சிலை அமைத்து இருக்கிறார் என்றால் இவர் என்ன கலைஞனா இல்லை கிறுக்கனா?
  5. இவரது அடிவருடிகள் இவரை “டாக்டர் கலைஞர்” என்றுதான் சொல்லுவார்களே அன்றி “பண்டாரகர் கலைஞர்” என்று சொல்லமாட்டார்கள். ஏன்? அங்கிலம் இனிக்கிறது. தமிழ் கசக்கிறதா?
  6. தமிழ் வார்த்தை “ஆதி திராவிடர்” என்பதற்கு பதிலாக dalit என்ற வார்த்தயை பயன்படுத்துகின்றனர். அது ஒரு sanskrit வார்த்தை என்று தெரியவில்லைபோலும். கோயிலில் வேண்டாம் என்று சொல்லபடுகிற வார்த்தை இவர்களின் வாயில் இருந்து மட்டும் வரலாமா?
  7, தமிழ் பெரும் நடிகன் சிவாஜி நடித்த முதல் படம் “பராசக்தி”. அதில் அவர் பேசிய முதல் வார்த்தை success என்ற ஆங்கில வார்த்தை . இதை எழுதிய புண்ணியவான் கருணாநிதி என்ற தமிழ் அறிஞர். success என்பதை வெற்றி என்று சொன்னால் தமிழர்களால் புரிந்துகொள்ளமுடியாதா?
  8. முரசொலியில் ராஜாஜி என்ற வார்த்தைக்கு பதிலாக இராசாசி என்றுதான் எழுதுவார்கள் அப்படியானால் ஸ்டாலின் என்ற வார்த்தையை இச்டாலின் என்று எழுதுவார்களோ?
  9. madras க்கு சென்னை என்று பேர் வைத்தவர் தான் மகனுக்கு அழகிரி என்று பேர் வைத்தார். கிரி என்பது வடமொழி. என்று தெரியாதா? கிரிவலம் என்றால் “மலை வலம்” என்று பொருள்.
  10. இவரின் பேரன்கள் நடத்தும் பட கம்பெனிகளுக்கு “Red gaint ” என்று அழகான் தமிழ் பேர் வைத்து இருகிறார்கள் பார்த்தீர்களா!
  11.கர்ம வீரர் தலைவர் காமராஜர் ரஷ்யா சென்றபோது எப்போதும் உடுத்தும் வேட்டி சட்டை அணிந்துசென்றார். கர்மம்பிடித்த தலைவர் கருணாநிதி அமெரிக்க சென்றபோது சூட்டு கோட்டு போட்டு சென்றார். அவர் தமிழனா? இவர் தமிழனா?
  12 பிறந்த நாளுக்கு cake வெட்டுவது தமிழர் பண்பாடா?
  13.ஆலயத்தில் தமிழில்தான் அர்ச்சனை பண்ணவேண்டும் என்று மதசார்பின்மை என்ற mask அணிந்திருக்கும் இவர்கள் mosque இல் தினம் 5 முறை தொழுகை நடத்த அழைப்பு விடுக்கிறார்களே அதை இனி தமிழில்தான் விடுக்கவேண்டும் என்று கூற guts இருக்கிறதா?
  14. இவரது குருநாதர் தனது பேரை கா.ந. அண்ணாதுரை என்றில்லாமல் C .N .அண்ணாதுரை என்று ஆங்கில initial ஐ வைத்துகொண்டது சரியா?
  15. உலக தமிழ் மாநாடு நடத்தியதால் தமிழ் வாழ்ந்ததா? இல்லை இவர் வாழ்ந்தாரா? இவர் குடும்பம் வழ்ந்தாதா?
  16 இதற்கெல்லாம் காரணம் என்ன? கருணாநிதியின் பூர்விகம் தமிழ்நாடு இல்லை என்பதுதான். அவர் இசை வேளாளர் குளத்தை சேர்ந்தவர். அந்த குளத்தின் அனைவரையும் ராஜ ராஜ சோழன் கலை பணிகளுக்காக தனது அரசாட்சி பகுதியில் குடி அமர்த்தினார். ஆந்திர மாநிலத்திலுள்ள கோதாவரி மாவட்டதிலுர்ந்து வந்தவர்கள்தான் கருணா வின் முன்னோர்கள். அப்படி இருக்க தமிழ் மீது எப்படி பற்று வரும்? தமிழ் என்பது அவருக்கு ஒரு வியாபார பொருள். அவ்வளவுதான்.
  17. கருணாநிதி செய்யும் நடிப்பு நாடகங்களை புட்டு புட்டு வைத்துவிட்டோம். இனியாவது மக்கள் திருந்தி மனம் மாறுவார்களா என்று பாப்போம். இல்லை என்றால் அவர்கள் தலை விதி என்று விட்டுவிடவேண்டியதுதான். A . viswanathan (குறிப்பு மேற்கண்ட எனது மறுமொழியில் சில தவறுகள் உள்ளன. எனக்கு தமிழ் தெரியாது என்று அர்த்தம் அல்ல computer இல் நான் illiterate என்பதே காரணம்)நன்றி வணக்கம்

 29. என்னார் on August 15, 2013 at 3:46 pm

  //பிரிட்டிஷ்காரன் 400 வருடங்கள் கூட்டமாக வந்திருந்தும் 1,50,000 தமிழ்- மன்னிக்க திரமிள, திராவிட மக்களைக் கூடக் கொல்லவில்லை. ஆனால் இத்தாலியத் திருவிளக்கு அம்மையார் ஒரே ஆண்டில் 1,50,000-க்கும் மேலான தமிழ் மக்களை துள்ளத் துடிக்க கொன்று ரசித்தார்களே, இந்தச் சாமர்த்தியமும் துணிவும் யாருக்கு வரும்? அதற்குக் கூட இருந்து கொடுவாள் பிடித்ததற்காக 40,000 கோடி செலவு//
  அய்யா வீர. ராஜமாணிக்கம் அவர்களே
  பிரிட்டிஷ்காரன் நல்லவனா? யார் கொன்றது ? இந்தியாவ? சிங்களன் நாட்டில் கூலி வேலைக்குப்போய் வேலை செய்தோமா கூலியை பெற்றோமா வாழ்ந்தோ என்றில்லாமல் அவனத நாட்டை ஆள நினைப்து முட்டாள் தனம் சண்டை செய்பவன் தனியாக செய்யவேண்டும் மக்களை கேடயமாக வைத்து சண்டையிட்டால் இப்படித்தான் ஆகும் இதை இந்தியா, அமெரிக்கா சொன்னதே இது தெரியாமல் மடையன் பிரபாகரன் செய்த மடத்தனம் நமது இந்தியாவை ஆண்ட வெள்ளையனை எப்படி வெளியேற்றினோம் எப்படி நெல்சன் மண்டேலா வென்றார், இலங்கையில் பிரபாரன் வென்றிருந்தால் தமிழகமும் தனிநாடு கேட்டு அவனுடன் இணை வழிதேடியிரப்பார்கள் அந்த படை கடல் வழியா தமிழகம் வந்து தமிழகத்தை நாசமாக்கியிருப்பார்கள் .இந்திய சுதந்திரபோராட்டத்தில் இந்தியனை நம்மவர்கள் கொன்றார்களா?
  பாக்கிஸ்தானின் வெறியாட்டம்
  /”267 நாட்கள் பாகிஸ்தானிய ராணுவம் பங்களாதேஷில் வெறியாட்டம் ஆடியது. டாக்காவில் மட்டும் 1,00,000 பங்களாதேஷிகள் கொல்லப்பட்டனர்.குல்னா மாவட்டத்தில் 1,50,000 பேரும்,ஜெசோரில் 75,000 பேரும்,கோமிலாவில் 95,000 பேரும் சிட்டகாங்கில் லட்சம் பேரும் கொல்லப்பட்டனர்.மொத்தமாக 18 மாவட்டங்களில் 12,47,000 ( 12.50 லட்சம்) பேர் கொல்லப்பட்டனர்.இது குறைந்த பட்ச கணக்குதான்.உண்மை கணக்கு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.”

  பாக்டுடே இந்த இன அழிப்பை பற்றி மேலும் கூறுவதாவது…

  “வங்கதேசத்தில் வாழ்ந்த 25 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் இந்த இன அழிப்பு நடந்தது.ஒப்பிட்டால் நாஜி தளபதி ரோமல் 3,00,000 பேரை மட்டுமே கொன்றான்.ஸ்டாலின்,மாவோ ஆகிய கொலைகார அரசுகள் கொன்று குவித்தவர்களைவிட அதிக படுகொலைகள் செய்த அரசாக -யாகியாகான் அரசு விளங்கியது..” என கண்ணீர் வடிக்கிறது பாக்டுடே.

  பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்துக்கு எல்லையே இல்லை.இதுவரை வரலாற்றில் நிகழ்ந்த கூட்ட கற்பழிப்புகளில் முதலிடம் வகிப்பது வங்கதேசத்தில் பாகிஸ்தானிய ராணுவம் நிகழ்த்திய கற்பழிப்புகள்தான் என ரேப் ஆப் நான்கிங் புத்தகத்தை எழுதிய ஐரிஸ் சாங் அதிர்ந்து போய் குறிப்பிடுகிறார்.ஜென்டெர்சைட் எனும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கும் இயக்கம் வங்கதேச கற்பழிப்புகளை பற்றி குறிப்பிடுவதாவது.

  “..கூட்டம் கூட்டமாக சேர்ந்து வங்கதேச பெண்களை கற்பழிப்பது,அதன் பின் கொலை செய்வது பாகிஸ்தானிய ராணுவத்துக்கு சகஜமாகிவிட்டது.வங்கதேசத்தில் அவர்கள் நடத்திய கற்பழிப்புக்கள் ஜெர்மனி ரஷ்யாவில் உலகப்போரின்போது நடத்தியதற்கு சற்றும் குறைந்ததல்ல.கிட்டத்தட்ட 4,00,000 பெண்கள் கூட்டமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டனர்.(2 அல்லது 3 லட்சம் என்றும் தகவல்கள் உண்டு)..”

  இந்த கற்பழிப்புகளுக்கு எந்த வயது வித்யாசமும்,மத பாகுபாடும் இல்லையாம்.8 வயது குழந்தை முதல் 75 வயது மூதாட்டி வரை இந்த வேட்டை நாய்களால் குதறப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஜென்டெர்சைட்.பெண்களை கற்பழிப்பதோடு நிறுத்தாமல் அவர்களை ராணுவ முகாமுக்கு தூக்கிப்போய் வேண்டும்போது மீண்டும்,மீண்டும் பலாத்காரம் செய்வது நடந்தது என கண்ணீர் வடிக்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு. /

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*