அயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்

டிசம்பர்-6, 2012 அன்று கேப்டன் நியூஸ் தொலைக் காட்சியின் “சொல் புதிது” நிகழ்ச்சியில் அயோத்தி “பிரசினை” குறித்து ஒரு விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் பால. கௌதமன் மற்றும் பேரா. ஜைனுலாபிதீன்.

அயோத்தி பிரசினை சட்டப் பிரசினையா மதப்பிரசினையா? அயோத்தியில் இருந்த பழமையான ஆலயம் இடிக்கப் பட்டதா என்பது குறித்து வரலாறும் அகழ்வாராய்ச்சியும் என்ன கூறுகிறது? இந்தப் பிரசினையில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் குறித்து பேசுகிறார்கள்.

ஒவ்வொரு பாயிண்டிலும், மிகவும் அருமையாகவும், ஆதார பூர்வமாகவும் பேசுகிறார் பால.கௌதமன். தேசபக்தி உணர்வுடனும், மிகுந்த மனித நேயத்துடனும் தனது வாதங்களை முன்வைக்கிறார்.

பாவம் அந்த இஸ்லாமிய பெரியவர். ஒருபுறம் அடிப்படைவாத இஸ்லாமிய மூளைச் சலவை, மறுபுறம் போலி மதச்சார்பின்மை வாதிகளின் பொய்கள் – இரண்டையும் மட்டுமே முழுமையாக நம்பி தன் கருத்துக்களை சொல்கிறார். இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் எங்கும் கோயில்களை இடித்ததே இல்லை என்கிறார். கீழே தோண்டியவுடன் தூண் கிடைத்தால் அது கோயிலாகி விடுமா என்று ரொம்ப அப்பாவியாக கேட்கிறார். ஸ்ரீராமர் கடவுளாக வணங்கப்பட்டதே கடந்த இருநூறு ஆண்டுகளாகத் தான் என்கிறார்.

அவரைப் பார்க்க பரிதாபமாகவும், பால.கௌதமனை பார்க்க பெருமையாகவும், இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் போலி மதச்சார்பின்மைகளை நினைத்தால் அருவருப்பாகவும் இருக்கிறது.

இந்த விவாதத்தின் வீடியோ பதிவு கீழே.

பாகம் – 1:

பாகம் – 2:

பாகம் – 3:

பாகம் – 4:

பாகம் – 5:

Tags: , , , , , , , , , , ,

 

14 மறுமொழிகள் அயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்

 1. Raja on December 10, 2012 at 4:02 pm

  Sabaash Gowthaman !

  Pity on that Muslim scholar who asks “Which Slokam in Aga Nanooru ?”
  He even does not know what is Aga Nanooru , being a Tamilian !!

 2. snkm on December 10, 2012 at 6:07 pm

  ஹிந்துக்களை முட்டாள்களாக ஆக்க செய்த மற்றுமொரு முயற்சி தோல்வியடைந்தது.
  மிகவும் முக்கியமான விஷயங்களை கவனிக்க மறுத்து விவாதம் புரிந்தால் எவ்வாறு மக்களுக்கு புரியும்.
  நன்றி தமிழ் ஹிந்துக்கு!
  நன்றி. வாழ்க பாரதம்!

 3. A.K.Chandramouli on December 10, 2012 at 6:37 pm

  விவாதத்தில் முஸ்லீம்களின் எல்லா கேள்விகளுமே அர்த்தமற்றவை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. ஹிந்து க்களிளும்கூட அரசியல் காரணங்களுக்காக பூசி மொழுகுபவர்கள் தெளிவாகப் பேசத்தொடங்க வேண்டும். தான் சார்ந்திருக்கும் கட்சிக்காக பேசாமல் சமுதாயத்திற்காக பேசத்தொடங்கினால் ஹிந்துக்களின் ஒருமித்த குரல் பிரச்சினைகளை தீர்க்க உதவும். கௌதமன் விவாதத்தை கையாண்ட விதம் அருமையாக இருந்தது.

 4. பூவண்ணன் on December 10, 2012 at 9:37 pm

  அன்புள்ள பிரசன்னகுமார்
  மூத்தவர் திருதராட்டினர்.அவர் கண் பார்வை இல்லாதவர் என்பதால் அரச பதவி மறுக்கபடுகிறது.பாண்டுவிர்க்கு செல்கிறது
  ஒரு சூழ்நிலையில் பாண்டு அதை துறக்க நேரிடும் போது ,அவர் பதவியை துறந்து காட்டில் வசிக்கும் போது தானே குந்திக்கு குழந்தைகள் பிறக்கின்றன .அப்படி இருக்கும் போது தர்மருக்கு எப்படி 16 வயது ஆகும்
  கண் பார்வை இல்லாததால் மறுக்கப்பட்ட பதவி மறுபடியும் கிடைக்கும்,ஆனால் சாதியால் விதுரருக்கு கண் பார்வை இருந்தாலும்,சிறந்தவராக இருந்தாலும் எக்காரணம் கொண்டும் கிடைக்காது எனபது எதை காட்டுகிறது.அக்காலத்தில் இருந்த சூழலை,கீழ் சாதியினரை நடத்திய நிலையை தானே
  அது தானே குற்றசாட்டு .அதற்க்கு மறுப்பு தானே இந்த கட்டுரை

  மகாபாரதம்,ராமாயணம் அக்கால மக்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் அற்புத காவியங்கள்.

  அது ஒரு குறைகளில்லாத காலம் என்று சாதிக்க வேண்டிய அவசியம் என்ன
  மனைவியை வைத்து சூதாடி ,தோற்று அவளை அவமானபடுத்தும் போதும் மூத்தவர்கள் கூட அமைதி காக்கும் நிலை பெண்ணடிமைதனத்தை,பெண்களின் இழி நிலையை பறைசாற்றுகிறது என்றால் தவறா
  மனைவியை கணவன் சூதாடி தோற்பான்.அதை ஏற்று கொண்டு மனைவி செல்ல வேண்டும் என்ற அடிமைநிலையில் தான் பெண்கள் இருந்தார்கள் என்று கூறினால் அது தவறு அப்போது பெண்கள் மிகவும் மதிக்கபட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டிய அவசியம் என்ன .
  இங்கே சாதிகளின் விஷயத்தில் அதை தானே செய்கிறோம்

 5. T.Mayoorakiri sharma on December 11, 2012 at 6:44 am

  இந்த விவாதத்தை சில நாட்களுக்கு முன்னரே பார்த்திருக்கிறேன்… பால.கௌதமன் அவர்கள் நகையுணர்வோடும், மிகவும் தெளிவான தமிழில் மிகச்சீராகவும்.. அழகாகவும் பேசி வந்திருப்பதைப் பார்க்கிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது..

  மொத்தத்தில் இந்த விவாதம் நிகழ்ச்சி அடிபப்டையில் ஏதாவது வெற்றி பெற்றது என்றால் அந்த வெற்றி பால.கௌதமன் அவர்களையே சாரும்.. அதே போல, விஷய அடிப்படையில் அயோத்தி மாநகரில் ஸ்ரீ ராமன் திருக்கோவிலையும் அறுதியிட்டு உரைக்க வல்ல ஒன்றாயும் இது அமைந்திருக்கிறது..

  பால. கௌதமன் அவர்கள் தொடர்ந்து இவ்வாறான, பல்வேறு விவாதங்களில் பங்கேற்று ‘மெய்பொருள் காட்ட” வாழ்த்துகின்றோம்..

 6. Satish on December 11, 2012 at 3:52 pm

  I visited Chidambaram last Sunday. I always used to think, when every year, the psedo seculars create a ruckus for the Dec 6th as a mourning day, why dont our VHP or Hindu Munnai atleast start mourning days when Chidambaram and Srirangam temples were erased to the ground by the muslims? The history is recorded and getting the exact date when these temples were destroyed is no big deal. it need not be a demonstration or mariyal or even gathering..just a notice on their website/magazines etc to create awareness that such things have happened in the past. Why our hindu organizations are not doing it?

 7. Prathip Perumal on December 11, 2012 at 10:04 pm

  வாழ்க பால.கௌதமன் போன்றோரின் தெளிவான அறிவு… ஒழிக, இந்திய முஸ்லிம்களின் முட்டாள்தனமும் அவர்களை ஏமாற்றும் போலி மதசார்ப்பின்மைவதிகளின் பித்தலாட்டமும் …

 8. K.Muturamakrishnan on December 12, 2012 at 4:24 am

  ஜைனலாப்தீன் இஸ்லாமிய சமுதாயத்திலேயே பிளவை ஏற்படுத்தி ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு உலா வருகிறார்.அந்த சமுதாயத்திற்குள் அவர்கள் சம்பந்தப்பட்ட மத சம்பிரதாயக் கருத்து மோதல்களில் வெல்லப்பட முடியாதவர் என்ற ‘இமேஜ்’ அவருக்கு உண்டு.

  இறைவனுக்கு உருவம் உண்டு என்ற கருத்தை வலியுறுத்தும் முஸ்லிம் பி.ஜே!!

  ‘யூ ட்யூபில்’ அவருடைய காணொலிகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. சுன்னத் செய்து கொண்டால் எய்ட்ஸ் வராது என்பது போன்ற அபத்தங்களை அள்ளித் தெளித்துள்ளார்.

  பால கவுதமனின் தெளிவான அணுகுமுறை பாராட்டுக்குரியது. அவருடைய ஆரோக்கியமான வாதத் திறமையை அவர் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்.

 9. Neelakandan on December 15, 2012 at 7:16 pm

  Hats off Mr. Gowthaman, Very detail replies and clarifications. Many of my classmates support these beguilers blindly without knowing the true and history of us and them. I have personally crossed these kind of questions putted against Mr. Gowthaman. I don t know how to confront them I really appreciate the efforts.

 10. மாசி பெரியசாமி on December 15, 2012 at 11:42 pm

  ” அது ஒரு குறைகளில்லாத காலம் என்று சாதிக்க வேண்டிய அவசியம் என்ன
  மனைவியை வைத்து சூதாடி ,தோற்று அவளை அவமானபடுத்தும் போதும் மூத்தவர்கள் கூட அமைதி காக்கும் நிலை பெண்ணடிமைதனத்தை,பெண்களின் இழி நிலையை பறைசாற்றுகிறது என்றால் தவறா மனைவியை கணவன் சூதாடி தோற்பான்.அதை ஏற்று கொண்டு மனைவி செல்ல வேண்டும் என்ற அடிமைநிலையில் தான் பெண்கள் இருந்தார்கள் என்று கூறினால் அது தவறு அப்போது பெண்கள் மிகவும் மதிக்கபட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டிய அவசியம் என்ன . “-

  அன்புள்ள பூவண்ணன்,

  ஊரில் ஒரு கணவன் தன் மனைவியை மிகவும் கொடுமைபடுத்தி சித்திரவதை செய்கிறான் என்றால் அது அந்த கணவனின் தவறே தவிர, எல்லா ஆண்களும் கொடுங்கோலர்கள் என்று விமரிசிப்பது போன்றது தங்கள் குற்றச்சாட்டு. தருமன் சூதாட்டத்தில் தன் மனைவியை சூதாடி தோற்றான் என்பது உண்மை என்றே கொண்டாலும் , அது தருமனின் தனிப்பட்ட தவறு தான். அதற்காக , இது பெண்களின் இழிநிலை என்று ஜெனரலைஸ் செய்வது தவறு. தருமன் ஒரு கேடு கெட்டவன், ஈனப்பிறவி என்று சொல்லுங்கள் . அதனை வரவேற்கலாம். ஆனால், அந்த நாய் செய்த தவறுக்காக ஊரிலுள்ள எல்லா ஆண்களையும் , பெண்ணடிமை செய்தார்கள் என்று சொல்லுவது எப்படி முறையாகும் ?

  அதே இதிகாசங்களில் தமயந்தி சுயம்வரம், சீதா சுயம்வரம் என்று ஏராளமான சுயம்வரங்கள் நடந்த வரலாறு சுட்டிக்காட்டப்படுகிறதே. ஆண்களுக்கு சுயவதுவை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை, இருந்ததாக எங்கும் சொல்லப்படவில்லை. இளவரசிகளையெல்லாம் வரவழைத்து, ஒரு பெரியமண்டபத்தில் அமரச்செய்து , தனக்கு பிடித்த அழகிய இளவரசி யார் என்று கண்டு, மாலை இட்டு , மணம் முடித்தார் இளவரசர் என்று நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் காணப்படுகிறதா? எனவே, ஆணுக்கு இல்லாத உரிமை பெண்ணுக்கு கொடுக்கப்பட்டது என்பது மட்டும் உங்களுக்கு ஏனய்யா மறந்து போகிறது ? எனவே, ஒரு தலைப்பட்சம் வேண்டாம். விமரிசனம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்களை விட அதிக உரிமை கொடுக்கப்பட்டது என்பதும் உண்மை. தருமனைப்போல சில பேடிகள் தங்கள் மனைவியை பிறர் அவமானப்படுத்தும் போது, பெட்டை போல இருந்தனர் என்பதும் உண்மை என்று கொள்ள வேண்டும். தருமனைப்போல ஊரில் வேறு எவரும் தன்னுடைய மனைவியை சூதாடி தோற்றதாக , வேறு எங்கும் வரலாறு/ புராணம்/ கதைகள் உள்ளதா ? இந்திய வரலாறு என்று நாம் இன்று படிப்பது வெள்ளையர்கள் எழுதிய பொய் பித்தலாட்டங்களின் உருவம் மட்டுமே. வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறியது ஒரு காலக்கட்டாயம் தான். அவர்களை நல்லவர்கள் போல சித்தரித்து, போகாதே போகாதே என்கணவா என்று ஒப்பாரி வைத்த கேடுகெட்ட இழிபிறவிகள் தமிழகத்தில் தான் இருந்தனர்.

  மகாபாரதத்தை முழுவதும் தாங்கள் படித்துள்ளீர்களா என்பதே எனக்கு ஐயமாக உள்ளது. ஏனெனில், சந்தனு மன்னனுக்கு மீனவப்பெண்ணின் மூலம் பிறந்த மகனுக்கு அரசுரிமை வேண்டும்என்று மீனவப்பெண்ணின் தந்தை கேட்டு, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது என்ற விவரம் அதே பாரதத்தில் தான் உள்ளது. அது என்ன பெண்ணடிமையா ? ஏனய்யா இப்படி பாரபட்சம் காட்டுகிறீர்கள் ? ஊரில் ஒருவன் செய்த தவறுக்கு ஊர்முழுவதும் தவறு செய்ததாக சொல்லலாமா ?

 11. ram kumar on January 6, 2013 at 10:31 pm

  இந்த தொலைக்காட்சி பெட்டியில் இருக்கும் குல்லா நண்பர் ஒரு தீவிரவாதிக்கு சமம்…இவரை வைத்து படம் எடுத்த கேப்டன் தொலைக்காட்சி ஒரு உருப்படாத சானல்.

 12. Manikandan on March 10, 2013 at 1:55 pm

  வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
  பல்வீழ் ஆலம் போல
  ஒலி அவிந்தன்று- அகநானூறு 70-வது பாடல்

 13. Dr.A.Anburaj on October 18, 2013 at 12:53 pm

  வீடியோவை காணவிரும்பினேன்.பார்க்க முடியவில்லை. வீடியோவை சரிசெய்ய வேண்டுகிறேன்.

 14. suryanarayanan on March 30, 2014 at 7:52 pm

  I live in France; three weeks ago, we visited ayodhya; felt so sad to see the conidtions there. i cant imagine one will keep jerusalem or mecca in this condition all due to the congress govt . in our own country, iwe felt so bad to vist Rama’s birth palce or even if u dont believe this, a temple with some 15 poloice checkposts; the whole city is very dirty; except teh nice resaturant near kanaka bhavan, where u get wonderful veg thali and the owner kept on serving us with hot chappathis not charging for the extras and allowed us to take rest there for a few housrs sicne kanakabhavan opens at 4pm and we were there at 2pm for lunch. not only this area, other places like Valmiki ashram, nandhi gramam near allahabad( actually we should call it Prayag or at least illahibad afteer deen ilahi of akbar and not allah-bad!!) also kept not well. and even the roads are so bad, thks to our clever taxi driver we managed to reach this place Sitamarhi where sita went tinside the earth!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*