தேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு

December 5, 2012
By

முதல் இந்தியர் புனிதர் ஆகிறார் !

மண்ணின் மைந்தர் புனிதராகிறார் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமர்க்களப் பிரச்சாரம்!

தேவசகாயம் பிள்ளை என்பவரை “புனிதர்” ஆக்குவதற்கான முதல் படியாக, அவரை “உயிர்த்தியாகி”” என்று போப்பாண்டவர் 2012-ம் வருடம் ஜூன் 28 அன்று அறிவித்தார். முன்னணிப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுடன் ஏதோ இந்த அறிவிப்பால் இந்திய பூமியே புனிதப்பட்டு விட்டதாக எழுதத் தொடங்கிவிட்டன.

இந்தப் புனிதப் பட்டமளிப்பு விழாவின் நோக்கம் என்ன? இந்த வரலாறு உண்மைதானா?

யார் “உயிர்த்தியாகி”” ஆகிறார்?

பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஐரோப்பாவில் சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் போப்பாண்டவருக்காக, மதமாற்றத்தில் ஈடுபட்டு நாட்டைப் பிடிக்கும் படையில் சேர்ந்து பின்னர் மரணமடைந்த ஓர் போர் வீரன் தான் இந்த உயிர்த்தியாகி என்கிறார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிரி டெர்டுலியன். “உயிர்த்தியாகத்தை மனமுவந்து புரியும் தியாகிகளின் தியாகமே, மற்ற மதத்தவர் கிறிஸ்துவராக மதம் மாறத் தூண்டுதலாக அமைகிறது.” என்று சொல்லும் அவர், “உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் ரத்தம்தான், சர்ச்சின் விதையாகும் என்கிறார் [Source: Christian Martyrs )

இந்தப் பட்டமளிப்பின் நோக்கம் மதமாற்றமே! இதை மீண்டும் உறுதிப் படுத்துகிறார் போப் இரண்டாம் ஜான் பால். உறுதிப் படுத்துவதுடன் நின்று விடவில்லை, இந்த உயிர்த்தியாகிகளே வாட்டிகனின் நாடு பிடிக்கும் போர் வீரர்கள் என்று பெருமைப் படுத்தவும் செய்கிறார்.

முதல் ஆயிரம் ஆண்டுகளின் சர்ச்சானது, உயிர்த்தியாகம் புரிந்த தியாகிகளின் உதிரத்தால் உருவானது” என்றும், உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது என்றும் சொல்லும் போப் ஜான் பால் II, இந்தப் பெயர் அறியாத, யாரெனத் தெரியாத படை வீரர்களுக்கான அங்கீகாரத்தை, இறைப் பணியாகவே ஏற்று நடத்த ஊக்குவிக்கிறார்.
(source: www.martyrdevasahayam.org retrieved on 30.11.2012 )

இதில் கவனிக்க வேண்டிய வாசகம் என்னவென்றால் “முகம் தெரியாத படைவீரர்கள்” (“unknown soldiers” ) என்பதுதான்.

இந்த ”வீரர்கள்” இருப்பது எந்தப் படை? இது யாருக்காகப் போரிடும் படை? எந்த நாட்டைப் பிடிக்கிறது? எந்தப் பண்பாட்டை இது அழிக்கிறது? இதன் நோக்கம்தான் என்ன? மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கும் ஒருவனை உயர்த்துவது சமயம். இந்த ஆன்ம நெறித் தத்துவத்தை ஏற்றால் அது சமயம். ஆனால், சமயம் என்ற போர்வையில் நாடு பிடிக்கும் இந்தக் கூட்டத்தை சமயத்துடன் ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

மேலும், முன்பின் அறியாத நாடுகளுக்குச் சென்று, அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, மிரட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயலும்போது இந்தப் “படை வீரர்கள்”” தன்மானமுள்ள மண்ணின் மைந்தர்களால் கொல்லப்படுவதுண்டு. அவ்வாறு கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களைத்தான் கிறிஸ்தவ நிறுவனங்கள் “உயிர்த்தியாகிகள்”” என்று முன் நிறுத்துகின்றன.

இதே போப் ஜான் பால் II, முதலாம் ஆயிரம் ஆண்டில் ஐரோப்பாவை மாற்றிவிட்டோம். இரண்டாவது ஆயிரமாண்டில் அமெரிக்காவை மாற்றினோம். நடக்கும் ஆயிரமாண்டில் ஆசியாவை மதம் மாற்றுவோம் என்று கொக்கரித்தது நினைவுகூரத் தக்கது. இந்த ஆன்ம அறுவடைக்காக கத்தோலிக்க சர்ச்சுக்கு டெர்டுலியன் பாதிரியார் சொன்னதுபோல், உயிர்த்தியாகிகள் தேவைப்படுகின்றனர். அதற்காக, கேரளா, தமிழகம், வட இலங்கை போன்ற பகுதிகளில் உயிர்த்தியாகிகள் உள்ளனரா என்று தோண்டியெடுக்கும் பணியில் சர்ச் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனை கோட்டார் மறைமாவட்டத்தினால் நிர்வகிக்கப்படும் வலைதளத்தில் கிறிஸ்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

“இந்த உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் நினைவுகளை மறவாதிருக்க, அவர்களின் சாகஸத்துக்கான சான்றுகளையும், தியாகம் குறித்த தரவுகளையும் பதிவுகளாக்குவதே உகந்த வழி என்று அவர் (போப் ஜான் பால் II ) கருதுகிறார். ”

(source: martyrdevasahayam.org retreived on 30.11.2012)

இந்தத் தோண்டுதலில் சிக்கியவர் தான் வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை. கிறிஸ்துவத் திருச்சபைகளுக்குச் சொந்தமான வலைதளத்தில் தேவசகாயம் பிள்ளையின் “வரலாறு”” பின்வருமாறு சொல்லப்படுகிறது:

தேவசகாயம் பிள்ளை 1712-ம் ஆண்டு உயர் ஜாதியான நாயர் சமுதாயத்தில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயரில் பிறந்தார். பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் பணியாற்றினார். அப்போது மார்த்தாண்டவர்ம ராஜாவின் தளபதியான டச்சுக்காரர் டிலனாயுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் கிறிஸ்தவத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1745ம் ஆண்டு வடக்கன்குளம் சர்ச்சில் பௌட்டாரி என்ற பாதிரியாரால் கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். கிறிஸ்துவராக மதம் மாறியதும் தேவசகாயம் பிள்ளை என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், ஜாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து தாழ்த்தப்பட்ட ஜாதியினருடனும் நெருங்கிப் பழகி, அந்த மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றினார். இதனைப் பொறுத்துக் கொள்ளாத பிராமணர், நாயர் போன்ற ஆதிக்க சாதியினர் மன்னரைத் தூண்டி விட்டு, தேவசகாயம் பிள்ளை மீது அடுக்கடுக்காகப் பல புகார்களைச் சுமத்தினர். இதன் விளைவாக தேவசகாயம் பிள்ளை 1749, பிப்ரவரி 23ம் தேதி கைது செய்யப்பட்டார். 1749 முதல் 1752 வரை மூன்றாண்டு காலம் தேவசகாயம் பிள்ளை பலவிதமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். பிறகு, நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் உள்ள ஆரல்வாய்மொழிக்கு அருகே காத்தாடி மலையில் மார்த்தாண்டவர்ம ராஜாவின் காவலர்களால் 1752ம் வருடம் ஜனவரி 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். ( martyrdevasahayam & cbci.in Retrieved on 30.11.2012)

இந்த வரலற்றை வெளிக்கொணர்வதின் பயன் என்ன? கோட்டார் மறைமாவட்ட வலைதளம் அதை பின் வருமாறு தெளிவு படுத்துகிறது.

“கடந்த 259 ஆண்டு காலத்தில், இந்த இறை சேவகர் (தேவசகாயம் பிள்ளை) தமிழ்நாடு, தெற்கு கேரளம், வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில், வழிபாட்டில், ஆன்மீகத்தில், பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக, அவரை அந்தப் பகுதிகளின் ‘பெயரறியாத, முகம் தெரியாத படைவீரர்களோடு’ சேர்க்க முடியாது. ஆனால், சர்ச்சால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், சர்ச்சின் அதிகாரப்பூர்வமான ஏற்பு நிலை இல்லாத சூழலிலும், இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை, சர்ச்சுக்கோ, சமுதாயத்துக்கோ பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியாது.”
(source: http://www.martyrdevasahayam.org retreived on 30.11.2012)

“இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை சர்ச்சுக்கோ சமுதாயத்துக்கோ பயனளிக்க” – அப்படி என்றால், தேவசகாயம் சர்ச்சுக்கான ஒரு வியாபாரப் பொருள். இதில் எந்த ஆன்மிக நோக்கமும் இல்லை என்பதை சர்ச்சே தெளிவு படுத்திவிட்டது.

எந்தப் பகுதிகளில் இவர் பயன்படுத்தப்படப் போகிறார்?

“தமிழ்நாடு,தெற்கு கேரளம்,வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில், வழிபாட்டில், ஆன்மீகத்தில், பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக” என்கிற பகுதி விளங்கி விட்டது, ஆனால் எப்படி என்று தெரியுமா?இதன் மூலம் எந்த பண்பாட்டு அடையாளத்தை அழிக்கப்போகிறார்கள் என்று தெரியுமா? இதற்கான பதிலை நாகர்கோவிலில் டிசம்பர் 2 , 2012அன்று தேவசகாயம் பிளையை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று அறிவித்த விழாவில் கிறிஸ்தவர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.

தேவசகாயம் பிள்ளை வேதசாட்சி நிலை அடைந்த ஜனவரி 14 ஆம் நாளை,தேவசகாயம் பிள்ளை திருவிழாவாகக் கொண்டாட,கார்டினல் அமடொ அனுமதி அளித்துள்ளார்.இதில் கவனிக்க வேண்டிய நாள்,ஜனவரி14.பெரும்பாலும் அன்றுதான்,தமிழகம்,வட இலங்கை மற்றும் தெற்கு கேரளத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டு தோரும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.சபரிமலை மகர ஜோதியும் அன்று தான் தோன்றுகிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புகளின் கூட்டமைப்பின் (CBCI) வலைதளம்,தேவசகாயம் பிள்ளை ஜனவரி14அல்லது15ல் கொல்லப்பட்டார் என்கிறது(cbci.in Retrieved on 30.11.2012).காரணம்,தை மாதப் பிறப்பு அவ்வப்போது ஜனவரி15ஆம் நாளும் வரும்.இதன் மூலம்,பொங்கல் பண்டிகைக்குள் ஊடுறுவி மதமாற்றம் செய்யும் திட்டம் தெளிவாகிறது.

பல கிறிஸ்தவப் பண்டிகைகள்,இவ்வாறு பல நாட்டு உள்ளூர் திருவிழாக்களை பின்பற்றி ஏற்பட்டவை. ஆனால் அந்தத் திருவிழாக்களின் காரணிகளும்,பண்பாட்டு அடையாளங்களும் இந்த கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு வரலாறே ஒரு சாட்சி.இந்த வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால்,இந்த தேவசகாயம் பிள்ளை திருவிழா,பொங்கலின் பாரம்பரியத்தை அழிக்க வந்த சூழ்ச்சி என தெளிவாகிறது.

மதமாற்றம் மட்டுமல்லாமல் இதில் புதைந்திருக்கும் அரசியல் நோக்கத்தையும் ஒளிவு மரைவில்லாமல் வெளிப்படையாக்குகிறது கோட்டார் மறை மாவட்ட இணையதளம். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

லூர்தில் ஜான் பால் II நிகழ்த்திய உரையின் போது, அவர் உலகெங்கும் பரவி வரும் புதிய வகை சமய ரீதியான கொடுமை குறித்துப் பேசினார். இது இந்தியாவில் இன்று உண்மையாக இருக்கிறது. ஹிந்து அடிப்படைவாதிகளால் இன்று, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சூழல் நிலவுகிறது, இவர்களை சில அரசியல் அமைப்புகள் தங்கள் அரசியல் லாபங்களுக்காக முழுமையாக ஆதரிக்கிறார்கள். இந்திய சர்ச் ஏற்கெனவே “கொடுமையை எதிர்நோக்கும் காலத்தை” சந்திப்பதைப் போல இருக்கிறது.”
(Source: www.martyrdevasahayam.org retreived on 30.11.2012)

அரசியலுடன் நின்றுவிடாமல், கிறிஸ்துவம் புகும் நாடுகளின் மண்ணின் வாசனைக்கேற்ப பல அவதாரங்களை எடுத்து, உள்நாட்டு மக்களை மதம் மாற்றி, அவர்கள் பண்பாட்டில் இருந்து அவர்களைப் பிரித்து, சர்ச்சின் ஆதிக்கத்தின் கீழ் அவர்களை கொண்டு வரும் சூழ்ச்சியானது இந்த தேவசகாயம் பிள்ளை உயிர்த்தியாக பட்டமளிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று கோட்டார் மறை மாவட்ட வலைதளம் தன் இயல்பை பின்வருமாறு வெளிக்காட்டுகிறது:

இந்த உயிர்த்தியாகத்தை இன்று பொருள் உள்ளதாக ஆக்கும் வேறு ஒரு விஷயம் என்னவென்றால், Ad Gentes சர்ச்சின் நோக்கத்தில் பாமர மக்கள் ஆற்ற வேண்டிய பங்குதான்! பாமர மக்கள் சர்ச்சை சார்ந்தவர்கள்” மட்டுமல்லர், உண்மையிலேயே, அவர்கள்தான் சர்ச்சும்கூட”. எனவேதான் பாமர மக்களின் கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்வது பற்றிப் பேசுவது, இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், உலகில், சர்ச்சின் இயல்பே மதத்தைப் பரப்புவது ! அதே போல சர்ச்சின் மத விரிவாக்கம் என்பது, சர்ச்சின் இயல்பான ஒன்றாகவே வெளிப்படுகிறது”.
(Source: www.martyrdevasahayam.org retreived on 30.11.2012)

இப்படி மதமாற்ற நோக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட இந்தப் பட்டமளிப்புகள் எல்லாம் ஏதோ ஒரு உண்மையான வரலாற்றின் அடிப்படையில்தான் உருவானது என்று பெருவாரியான அறிஞர்கள் நினைக்கக் கூடும். அதிலும் மண்ணின் மைந்தர், பாமரன், பாட்டாளி என்ற சொற்களையும் சேர்த்துவிட்டால், அந்தந்த ஊர்காரர்கள் பரவசமடைந்து விடுவார்கள்; உண்மையை அறிய நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்பது சர்ச்சுக்கு நன்றாகவே தெரிந்த விஷயம். ஆனால், ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மண்ணின் மைந்தரின் கதை உண்மைக்குப் புறம்பானது என்பது நமக்குத் தெரியவருகிறது.

புகழ்பெற்ற கேரள வரலாற்று ஆசிரியரான திரு. ஏ.ஸ்ரீதர மேனன் 20.1.2004 அன்று பயனிர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “மரண தண்டனையை விட்டுவிடுங்கள், திருவிதாங்கூர் வரலாற்றில் மதமாற்றத்தின் பெயரால் ஒரு சிறு தண்டனை வழங்கப்பட்டதாகக்கூட பதிவு செய்யப்படவில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதையே.” என்று ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக இருந்த திரு.எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள், நீலகண்டம்பிள்ளை என்ற பெயரிலோ தேவசகாயம்பிள்ளை என்ற பெயரிலோ மார்த்தாண்டவர்ம மகாராஜா காலத்தில் ஒரு ராணுவத் தளபதி இருந்ததில்லை என்று வாதிடுகிறார்.

திருவிதாங்கூர் வரலாற்றை எழுதிய திரு.நாகம் ஐயா, இந்தக் கதை நம்பும்படியாக இல்லை என்றும், மதம் மாறியவர்கள் அவர்கள் முன்னோர்களை குருமார்களாக சித்திரிக்கும் பழக்கம் நம் நாட்டில் வழக்கம்; அதனடிப்படையில்தான் இந்தக் கதை புனையப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். (Travancore Manual Vol II page 129-130, M.Nagam Aiya)

இந்தக் கதையில் கிறிஸ்துவர்கள் திருவிதாங்கூர் மன்னரால் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை நிலை நிறுத்த கற்பனையாளர்கள் பெருமுயற்சி எடுத்துள்ளனர். ஆனால், வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கிறது?

மதம் மாறியதற்காக தேவசகாயம்பிள்ளை மார்த்தாண்ட வர்ம ராஜாவால் கொல்லப்பட்டார் என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் மார்த்தாண்டவர்ம ராஜா, வரப்புழா சர்ச்சுக்கு வரியில்லா நிலம் கொடுத்து உதவினார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai)

டச்சுக்காரர் திலனாயால் கிறிஸ்துவத்தின்பால் தேவசகாயம்பிள்ளை ஈர்க்கப்பட்டார் என்று கிறிஸ்துவர்கள் கதை சொல்லுகின்றனர் . அந்த டச்சுக்காரர் திலனாய்க்காக கார்த்திகைத் திருநாள் மகராஜா உதயகிரிக் கோட்டை சர்ச்சைக் கட்டினார் என்றும் அந்த சர்ச் பாதிரிக்கு 100 பணம் மாதச் சம்பளமாகக் கொடுத்தார் என்றும் திரு. டி.கே.வேலுப்பிள்ளை திருவிதாங்கூர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai)

இந்த மன்னர்கள் மதத் துவேஷம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஐரோப்பிய கிறிஸ்துவர்களான மன்றோ அவர்களுக்குக் கொடுத்திருப்பார்களா?

நீலகண்டப் பிள்ளை மதமாறியதாகச் சொல்லப்பட்ட காலகட்டத்தில் கத்தோலிக்கர்களும், பிரட்ஸ்டண்ட்களும் ஐரோப்பாவிலும்,பிற பகுதிகளிலும் எப்படி மோதிக்கொண்டனர் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.

இந்த டச்சுக்காரர்கள் கொச்சி கோட்டையை கைப்பற்றியவுடன், வாஸ்கோடகாமாவை அடக்கம் செய்திருந்த “புனித அண்டோனியோ கத்தோலிக்க சர்ச்சை” “புனித ஃபிரான்ஸிஸ் பிராடஸ்டண்ட் சர்ச்” என்று மாற்றினர்.இன்றும் அந்த சர்ச் பிராட்ஸ்டண்ட் பிரிவான தென் இந்தியத் திருச்சபையின்(CSI)கீழ் உள்ளது.டச்சுக்காரரான டிலனாய் ஒரு பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர். இவரது உதயகிரி சர்ச்,பிராடஸ்டண்ட் சர்ச்சாகத் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது.மேலும்,டச்சுக்காரக்கள் அனைவரும் மதமாற்றத்தை அங்கீகரிக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர். இப்படியிருக்க, நீலகண்டப் பிள்ளையை டிலனாய் ஏன் ஞானஸ்நானத்திற்காக கத்தோலிக்க சபைக்கு அனுப்ப வேண்டும்?அதுவும் அரசரின் தளபதி!தளபதியால் மதமாற்றப்பட்டால் லாபம் உண்டு.அதிகாரமில்லாத சர்ச்சால் மாற்றப்பட்டால் உயர் ஜாதி நீலகண்டப் பிள்ளைக்கு என்ன லாபம்?

எனவே இந்த “தேவசகாயம் பிள்ளை” கதையைக் கட்டியவர்களுக்கு திருவிதாங்கூர் அரசியல்-சமூக சூழலும் தெரியாது,ஐரோப்பிய சூழலும் தெரியாது என்பது தெளிவாகிறது.

திருவிதாங்கூர் படையில் மார்த்தாண்ட வர்ம ராஜா காலத்தில் ஈழவர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இருந்தனர் என்று கர்னல் வில்க்ஸ் தெரிவித்ததை திரு. வேலுப்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார். (Travancore Manual, Vol-IV page 122, T.K.Veluppillai)

இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்துக்களுக்குச் சாதகமாகத்தான் எழுதுவார்கள், அதனால் இதை ஏற்க முடியாது, என்று கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் சொல்வதை மட்டும் வரலாறாக நாம் ஏற்க வேண்டுமாம்! இதுதானே கிறிஸ்துவர்களின் நியாயம்.

சரி… அவர்கள் நியாயத்துக்கே வருவோம். ஜூலை 2 , 1774ல் போப் கிளமண்ட் XIV திருவிதாங்கூர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், “திருவிதாங்கூரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர் மீது மன்னர் செலுத்திவரும் பரிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். (Travancore Manual vol-I page 387, M.Nagam Aiya),

போப் கிளமண்ட் XIV பொய் சொல்கிறாரா? போப் ஜான்பால் II பொய் சொல்கிறாரா? கோட்டார் மறைமாவட்டம் பொய் சொல்கிறதா? அல்லது தற்போதைய போப் பெனடிக்ட் பொய் சொல்கிறாரா?

தேவசகாயம் பிள்ளையை கிறிஸ்துவத்தின் பால் ஈர்த்த டிலனாய்க்காக, அஞ்சங்கோ தளபதியை எதிர்த்து மார்த்தாண்ட வர்மா மகாராஜா போர் தொடுத்தார்… என்ன காரணம் தெரியுமா? அஞ்சங்கோ தளபதியின் மகள் மீது டிலனாய் ஆசைப்பட்டு விட்டாராம். (Travancore Manual Vol II page 130, M.Nagam Aiya)

இப்படி உற்ற நண்பனாக இருந்த டிலனாயின் நண்பரை மதமாற்றக் குற்றத்துக்காக மார்த்தாண்ட வர்ம ராஜா கைது செய்து கொடுமைப் படுத்தி சுட்டுக் கொன்றாராம்.. இதை நாம் நம்ப வேண்டுமாம்!

இன்னும் சொல்லப்போனால் அந்த கிறிஸ்துவக் கதையில் டிலனாயுடன் தேவசகாயம் பிள்ளை நெருங்கிப் பழகுவதை மகாராஜாவின் அமைச்சரான ராமய்யன் தளவாய் விரும்பவில்லை என்றும், தேவசகாயம் பிள்ளை மீது ராமய்யன் தளவாயின் கோபத்துக்கு இது ஒரு காரணம் என்றும், அதனால் தான் ராமய்யன் தளவாயின் பழிவாங்கும் வெறி அதிகமானது என்றும் கிறிஸ்துவர்கள் தெருக்கூத்து நாடகத்தில் பாடி வருகிறார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை பொதுவாக ராஜதுரோகக் குற்றம், கொலை, வழிப்பறி போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. (Travancore Manual, Vol-IV page 77, T.K.Veluppillai).

இந்த அடிப்படையில் திரு.நாகம் ஐயா அவர்களின் திருவிதாங்கூர் சரித்திரத்தை நாம் கவனிக்க வேண்டும்.

நீலகண்டப் பிள்ளையின் மீது அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். இது, அவர் மதம் மாறிய சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். இந்த தண்டனைக்கும் மதம் மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. (Travancore Manual Vol-II page 130, M.Nagam Aiya)

இந்தக் குற்றச்சாட்டு மதமாற்றத்துடன் நின்றுவிட்டால் இத்துடன் நாமும் நின்றுவிடலாம். “கீழ் ஜாதியினருடன் அவர் பழகியதன் காரணமாகத்தான் மேல் ஜாதியினர் அவர் மீது வெறுப்புற்றனர், அதனால் இவர் கொல்லப்பட்டார்”” என்று ஒரு ஜாதி அரசியலும் இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளது.

ஜாதி பேசி ஹிந்து சமுதாயத்தைப் பிரித்து மதம் மாற்றும் தொடர் சூழ்ச்சியை இந்தக் கதையிலும் சர்ச்சு லாகவமாகப் புகுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏற்றார்போல் ஒரு போலியான ஆதாரம்கூட சர்ச்சால் காட்டப்படவில்லை. தீண்டாமை ஒழிப்பில் கத்தோலிக்க சர்ச்சின் சேவையை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் போப் கிரிகோரிXV யின் புல்லா ரொமனே செடிஸ் அன்டிஸ்டிடிஸ் (Bulla Romanae Sedis Antistitis) என்ற ஜனவரி 31, 1623 தேதியிட்ட ஆணையில் இந்திய சர்ச்சுகளில் ஜாதீய சம்பிரதாயங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
(ref: http://indiainteracts.wordpress.com/tag/christian-caste-system/ )

இது நீலகண்டப் பிள்ளை மதம் மாறுவதற்கு சுமார் 120 ஆண்டுகள் முன்புதான். இதுவரை இந்த ஆணை திரும்பப் பெறவோ மாற்றப்படவோ இல்லை. இதனால் இந்திய சர்சுகளில் இன்றும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. ஆட்டுக்காக ஓநாய் அழும் கதையைப் பார்த்தீர்களா? ஏன், இந்த தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதாக சொல்லப்பட்ட வடக்கன் குளத்திலேயே, வெள்ளாள கிறிஸ்துவர்களும் ஒடுக்கப்பட்ட கிறிஸ்துவர்களும் ஒரே சர்ச்சுக்குச் செல்லமாட்டோம் என்று சொல்லி தனித்தனியாக அமரவில்லையா? ஜாதீய வேறுபாடுகளை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டும் கிறிஸ்தவம், தேவசகாயம் பிள்ளையின் சொந்த சர்ச்சிலேயே இந்த நிலைமையை எப்படி அனுமதித்தது?

தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்! ஆவணமாக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும், முன்னுதாரணமாக வேண்டும்! எப்போது? அது தியாகமாக இருந்தால்! அது உண்மையாக இருந்தால்!

இங்கோ நடக்காத சம்பவம் ஒன்று, நடந்ததாகக் கதை கட்டப்பட்டு, அதற்கு சமுதாயச் சீர்திருத்தம் போன்ற சாயம் பூசப்பட்டு, அப்பாவிகளை நம்பவைத்து ஏமாற்ற ஒரு அக்மார்க் முத்திரையை வாடிகன் வழங்கியுள்ளது. (போப் வழங்கியுள்ளார்). ஒரு பொறுப்பான, பல மதங்கள் சுமூகமாக வாழுகின்ற நாட்டில் உள்நோக்கத்துடன் கட்டுக் கதைகளுக்கு வரலாற்று அங்கீகாரம் கொடுப்பது போப்புக்கு அழகா?

இந்தப் படைவீரர்களை “தியாகிகள்”” என்று கௌரவித்து ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும் ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும் அழிப்பது சமயமா? சாகசமா?

இந்தக் கேள்விகள் எல்லாம் போப்பிடம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கிறிஸ்துவப் படை வீரர் போப்பின் ஆட்சியை நிலைநாட்ட இறந்து போனால் அவர் உயிர்த்தியாகி. அதே படைவீரர் ஆக்கிரமிக்கும் நாடுகளில் உள்ளவர்களின் உயிரை எடுத்தால் அவர் புனிதர். இது தானே கிறிஸ்தவம்?

பாரதத்தில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தி பலவிதமான சித்ரவதைகளை மதம் மாற மறுப்பவர்களுக்கு அளிக்கும் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷன் (House of inquisition) நிறுவப்படவேண்டும் என்று கடிதம் எழுதியவர் ’புனித’ ஃபிரான்ஸிஸ் சேவியர், அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகளின் உயிரை பலிவாங்கிய கோவா ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷனை (Goa house of Inquisition) நிறுவ மன்னர் ஜான்-III க்கு 1545ல் கடிதம் எழுதியவர் ஃபிரான்ஸிஸ் சேவியர். (http://en.wikipedia.org/wiki/Goa_Inquisition ) இன்று ஃபிரான்ஸிஸ் சேவியர் புனிதர்! இவர் பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ஒரு தேவாலயம்! தமிழகத்தின் பிற பகுதியிலும் வட இலங்கையிலும் பல தேவாலயங்கள் !

இன்று இந்த தேவசகாயத்தைப் புனிதராக அறிவிக்க வேண்டும் என்று துடிப்பதும் இந்தக் கோட்டார் மறை மாவட்டமே. ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை! இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான அளவு இந்துக்கள், கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர்.

இன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட (?) கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச்.

இந்த கிறிஸ்துவ நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான்.

இந்த மாதிரியாகக் கட்டுக்கதைகளைப் புனைந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுவது சர்ச்சுக்கு கைவந்த கலை. தமிழ்நாட்டிலேயே இதற்கு சான்று உண்டு. மயிலைக் கடற்கரையில் வந்திறங்கிய புனித தாமஸ் கதைதான் அது. வரலாற்றில் இல்லாத “தாமஸ்”” என்கிற மனிதனை உருவாக்கி அவனை சென்னையில் தங்கவைத்து அவன் ஒரு பிராம்மணப் புரோகிதரால் கொல்லப்பட்டான் என்று கட்டுக்கதை புனைந்து, அவனுடைய எலும்புக்கூட்டின் ஒரு பகுதி இன்றைய சாந்தோம் தேவாலயத்தில் இருக்கிறது என்கிற புளுகுமூட்டைகளையும் அதில் சேர்த்து வைத்த கத்தோலிக்க சர்ச்சுக்கு தென் தமிழகத்தில் மற்றொரு கதை புனையவா தெரியாது?

பார்க்க:

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

 

”புனித தாமஸ்”” போன்ற புனைவுதான் “தேவசகாயம்”” வரலாறும். உண்மையில் சொல்லப்போனால் ஏசு என்று ஒருவர் இருந்ததற்கே இவர்களிடம் ஆதாரம் கிடையாது. அதனால் தான் தற்போதய போப் திரு பெனெடிக்ட், “ஏசுநாதர், நாம் நினைத்ததை விட சுமார் 200 முதல் 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்கலாம்” என்கிறார். அப்படியென்றால், ஏசு பிறப்பை சுமார் 2050 ஆண்டு என்ற அடிப்படையில் சர்ச்சால் நிரூபிக்கப்பட்ட சாகசங்கள் புளுகுமூட்டைகள்! ஆக, இவர்களுடைய மொத்த சரித்திரமே புனைவுதான்.

மூவேந்தரும் கடையேழு வள்ளல்களும் போற்றிப் பின்பற்றி வந்த மரபை அழித்தொழிக்கும் வாடிகன் படைவீரர்களுக்கு, நாடுபிடிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் பாராட்டும் விருதும் நம் தமிழகத்தில் நடைபெறுவது முறைதானா? இனவுணர்வைப் பற்றி வாய்கிழியப் பேசும் அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் இந்த இழி செயலுக்கு துணைபோவது சரிதானா?

தமிழ் மீதும் பண்பாடு மீதும் பற்றுள்ளவர்கள் இந்தப் புனிதப் புரட்டை முறியடிக்க அணிதிரள வேண்டும்!

Tags: , , , , , , , , , , ,

 

40 மறுமொழிகள் தேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு

 1. சோழன் on December 6, 2012 at 7:38 am

  மதமாற்ற கூட்டங்களுக்கு சூடு சுரணை, வெட்கம், மானம் எல்லாம் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.

  பொய்களை பேசி பொய்யில் வளர்ந்து பொய்யர்களை உயர்த்தி பொய்மையை பரப்பும் இந்த வைரஸ்கள் நீக்கப்பட வேண்டும். நமது நாட்டில் மட்டும் அல்ல. அயல் நாடுகளிலும் குறிப்பாக ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலும் இந்த வைரஸ்களில் இருந்த மக்களை காப்பாற்ற வேண்டும்.

  சரியான நேரத்தில் கட்டுரையை எழுதி பொய்யர்களின் முகத்திரையை கிழித்த கட்டுரை ஆசிரியருக்கு எனது நன்றிகள்.

 2. subramanian.s on December 6, 2012 at 9:15 am

  பொய், பொய், பொய், பொய் தவிர வேறில்லை. இந்த மதமாற்றிகள் ஹிந்து நடை முறை களை காப்பி அடித்து , அதனை நடைமுறை படுத்தி மக்களை மழுங்க செய்து தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிகொள்கிறார்கள். உதாரணம் அம்மாவசை முழுஇரவு ஜபம். இவர்கள் கையாளும் வார்த்தைகள் அனைத்தும் ஹிந்து நடைமுறைகளில் புனிதத்தன்மை வாய்த்த வார்த்தைகள். அதனை திருடி இவர்கள் வயறு வளர்கிறார்கள். உதாரணம் ஜபம், ஆரதனை, அபிஷேகம், போன்றன. இந்த திருடர்களை தோல் உரித்து மக்களிடம் காண்பிக்கவேண்டும. முதலில் இந்த புல் உருவிகள் மிகவும் சாந்தமாக நட்பாக ஆரம்பிப்பார்கள். பின் மூளை சலவை செய்ய முற்படுவார்கள், பின் மிரட்டி பயமுறுத்தி பணிய வைக்க முற்படுவார்கள். உதாரணம் ஒரு திருட்டு புரட்டு ஐ.ஏ.எஸ். உமாசங்கர். இவர்களை நிச்சியமாக தோல் உரித்து நம் பண்பாட்டை, தொன்மையை, கலாச்சாரத்தை காக்க ஹிந்து மக்களே திரண்டு வருர்வீர்.

 3. kannan on December 6, 2012 at 12:44 pm

  நாடு பிடிப்பதை வழக்கமாக கொண்டு செயல்படும் ஆங்கிலேயன் விட்டுச்சென்ற ஐந்தாம் படைகளும், அவர்களின் அடிவருடிகளான போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகளும் நடத்திய மற்றொரு நாடகம், யுக்தி இது. நமது பண்பாட்டை, பாரம்பரியத்தை நமது சந்ததிகளுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லி இந்த கேவலமான மதமாற்ற பேர்வழிகளின் சதியிலிருந்து நமது சந்ததிகளை காப்பாற்ற நாம் ஒவ்வருவரும் இன்றே ஹிந்து இயக்கங்களில் இணைந்து பணி செய்வோம். நமது தேசத்தையும், தெய்வீகத்தையும் காப்போம்.

 4. Neelakandan on December 6, 2012 at 1:18 pm

  the whole media showed the message that something great happened here… they projecting themselves like a savior. we should done some to protect our identity & culture

 5. அட அநியாயமே இந்த புனித சகாயம் வெறும் திருடனா!. இந்த புரட்டு கத்தோலிக்க மிசனரிகளுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா? ஜெயா தொலைக்காட்சியில் இரவு ஏழு அரை மணி செய்திக்கு முன்னால் இந்த புரட்டுக் கதையை இரண்டுமூன்று ஆண்டுகளாக காட்டினார்கள். அதைப்பார்த்தேன் ஒரு கிறிஸ்தவ நண்பரும் இந்த திருடனை பெரியவிசுவாசியாக கதை சொன்னார். நம்ப முடியவில்லை. அடேங்கப்பா மதமாற்றுவது ஒரு தொழிலாகவே செய்யும் இந்த கொலைபாதகப் புரட்டர்கள் எதையும் செய்வர். இவர்களை எதிர்கொள்ள வீரமும் விவேகமும் வேண்டும். நமது ஹிந்து சமுதாயம் இவற்றில் சழைத்தது அன்று என்பதை இந்தக்கட்டுறையாளரின் ஆணித்தனமான வாதங்கள் பறைசாற்றுகின்றன. ஸ்ரீ பாலகவுதமன் பாராட்டுக்கள்.
  சிவஸ்ரீ.

 6. vanthia thevan on December 7, 2012 at 12:54 am

  The following is the observation of Godrey Higgins, in his 1874 book titled An enquiry into the origin of langauages, nations and religion”.
  “There is in Geeta,(p.81) a sentiment which is peculiar to the religion of Brahma, and which (at least if the happiness of mankind in this world is to be considered one object or end of religion) places it above all others. Happy, indeed, would it have been for the world had the mohamedan and christian religions contained this most admirable and benevolent doctrine. The Deity speaks- “They who serve other Gods with a firm belief, in doing so, involuntarily worship me. I am he who partaheth of all worship,and I am their reward.” How admirable is this sentiment! How superior to the Jewish doctrine of a jealous God, improperly adopted by the Christians! and how true! True, at least, if benevolence, justice, and mercy are the attribute of the Creator. For peace and happiness of mankind in this world, it may safely be affirmed that, in all the Jewish, Christian and Mohamedan religions, there is no dogma of half so much importance, or which has been of the twentieth part of the utility, as this would have been, had it been taught in those religions.”

  As ususal, our great preachers will never pay attention to any observations like the above!

 7. R.SRINIVASAN (SEEMACHU) on December 7, 2012 at 9:00 am

  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

 8. seenuerode on December 7, 2012 at 10:17 am

  அட அநியாயமே இந்த புனித சகாயம் வெறும் திருடனா!

 9. Sundararajan on December 7, 2012 at 10:41 am

  இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் படைத்தவர்களாய் இருக்கிறார்களே. பொய்யை வரலற்றாக்கும் இவர்களின் சதியை முறியடிக்க வேண்டும்.
  இது ஒவ்வொரு ஹிந்துவும் அறிய வேண்டிய செய்தி.
  கட்டுரையின் ஆசிரியருக்கு மிக்க நன்றி.

  சுந்தரராஜன்

 10. Keerti on December 7, 2012 at 8:32 pm

  கிறுத்துவர்கள் ஆராதனை, ஜெபம் போன்ற வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் என்று அங்கலாய்க்கிறார். உண்மையில் இது ஒரு வகையில் நல்லது. இதன் மூலம் சிந்திக்க தெரிந்த கிருத்துவர்கள் தங்கள் வேர்களை அறிய இது போன்ற ஹிந்து மத சம்பந்தமான வார்த்தைகள் உதவக் கூடும்.

 11. T.Mayoorakiri sharma on December 8, 2012 at 8:04 am

  வேதசாட்சியாக அறிவிக்கப்பெற்ற ஜோசப் வாஸ் என்பவரின் விழா கத்தோலிக்க திருச்சபையால், ஜனவரி 16 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.. (தைப்பொங்கலை ஒட்டி)… இவர் இலங்கையில் போ பி. 18ஆம் நூற்றாண்டுகளில் புரட்டஸ்தாந்து திருச்சபையினரான ஒல்லாந்தரின் அடக்குமுறைகளினுள்ளும், கத்தோலிக்கப்பணிகளைச் செய்தவர்.. யாழ்ப்பாணத்தின் சில்லாலை என்ற ஊரை முழுமையாக, கத்தோலிக்க மக்களின் ஊராக மாற்றிய பெருமை இவருக்குரியது…
  http://en.wikipedia.org/wiki/Joseph_Vaz

  இது இப்படியிருக்க, தேவசகாயப் பிள்ளையும் புனிதராக்கப்பெற்றிருக்கிறார்.. அது போகட்டும், ஆனால், அவரது விழாவும் ஜனவரி 14 (தைப்பொங்கலுடன்) அறிவிக்க பட்டிருக்கிறது… இனி பொங்கல் விழா ‘புனித விழா’ தான் போலும் …?:) பொங்கலின் புனிதம் கண்டு தான் பயமாக இருக்கிறது..

 12. குபேந்திரன் on December 10, 2012 at 1:15 pm

  கீழ்த்தரமான தந்திரங்களினால் மிகப்பெரிய சாதனைகளை செய்யமுடியாது என ஸ்வாமி விவேகானந்தர் கூறியது நினைவில் வருகிறது. இந்து மதத்தை காக்க வேண்டியது நம் கடமை.

 13. கிருஷ்ணபிரஸாத் on December 13, 2012 at 2:10 pm

  நான் கிறித்தவர்களே வெளியிட்ட, நாகர்கோவில் நாஞ்சில் பதிப்பகம், ஆசிரியர் திரு. செல்வராஜ் அவர்களாக இருக்கலாம், வெகுநாட்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் வாங்கிப்படித்தது, தேவசகாயம் பற்றிய நூலில் அவர் தேக்குக் கடத்தியதாக சுட்டுக் கொல்லப்பட்டதாக திருவாதாங்கூர் அரசு ஆவணங்களில் உள்ளதாக படித்தேன்.

 14. கலவை வெங்கட் on December 14, 2012 at 12:31 pm

  உண்மையில் 99 சதவிகிதம் கிறிஸ்தவ உயிர் தியாகிகள் பட்டியலில் இடம்பெறுவோர் போலிகளே. மற்ற 1 சதவிகிதம் ரோமாபுரிக்கு எதிராக செயல்பட்டதால் மாண்டவர்கள். ரோமாபுரி அரசு யாரையும் மதத்திற்காக தொந்திரவு செய்ததில்லை. இதைப் பற்றி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளரான கென்னெத் ஹும்ப்ரேஸ் http://www.jesusneverexisted.com என்ற வலைதள த்தில் ஆதாரங்களோடு சுட்டியிருக்கிறார்.

  இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்வதிலிருந்து கிறிஸ்தவத்தில் நிஜம் பேசி ஈர்க்கும் வகையில் நல்ல போதனைகள் ஏதுமில்லை எனத் தெரிகிறது. மேலும், சிறிதும் மானமின்றி புளுகுவோரே வாடிகனில் போப்பாக பதவி வகிக்கிறார்கள் என்றும் தெரிகிறது. மிக முக்கியமாக, இதில் இந்திய கிறிஸ்தவர்களின் பங்கென்ன என்று கேட்கவேண்டும். பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களுக்கு தஞ்சமளித்து, சமத்துவ உரிமை அளித்த இந்துக்களுக்கு இதுதான் அவர்கள் நன்றி செலுத்தும் விதமா? “நன்றி மறப்பது நன்றன்று” என சொன்ன மகான் திருவள்ளுவர் வாக்கை அவர்கள் அறிந்து நடக்க வேண்டும். மேலும், இது போன்ற பொய்களால் மட்டுமே வளர்ந்து, நற்குணங்களை அழிக்கும் மதமாக இருத்தலால், திருவள்ளுவர் “நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்ற வாக்கு கிறிஸ்தவத்திற்குத் தொடர்புடையதாகவே இருக்கிறது. எனவே, தீமை பயக்கும் கிறிஸ்தவத்தை கிறிஸ்தவர்கள் மறத்தல் நன்று.

 15. உண்மை on December 14, 2012 at 1:35 pm

  இவர்கள் ஒரேயடியாக அமர்க்களம் பண்ணுவதன் காரணம் எளிது. வெளிநாடுகளில் கிறிஸ்தவத்தை விட்டு பலரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இங்குள்ள மிஷிநரிகளுக்கு தேனும் பாலும் கொட்டுகிறது வெளிநாட்டிலிருந்து. அதை வைத்துத் தான் பால் தினகரன், புளிச்ச மோர் தினகரன் என்று ஒவ்வொருவராக வரத்தொடங்கியிருக்கிறார்கள். இதில் சமீபத்திய காமெடியன் சாது செல்லப்பா, இவர் அய்யராயிருந்து மதம் மாறிவிட்டாராம், தற்கொலை செய்வதற்கு முன் பரிசுத்த ஆவியில் வேக வைத்த இட்லியை சாப்பிட்டு. இதில் லேட்டஸ்ட் காமெடி இந்தக் கூத்து. மதமாற்ற பெல்ட் என்று இந்தியாவில் கோவாவிலிருந்து போட்டு வருகிறார்களாம்.

  அதாவது சாமானிய வாழ்க்கைத் தட்டிலிருக்கும் மக்களுக்கு பணம், மூளைச் சலவை இதை செய்து மதமாற்றம் செய்வது. பின் நடுத்தர மக்களை சுரண்டுவது.

  இதுக்குஒரே வழி. வியாதியே போ போ என்று ஊளையிடுவதை விட்டு விட்டு நாம் வலிமை மிகுந்தவர்களாக வேண்டும் – அது ஒன்றே தீர்வு.

  (edited and published)

 16. Sathyanarayanan V on December 15, 2012 at 9:39 pm

  “மக்கள் தொலைக்காட்சி” யில் சில வருஷங்கள் முன் ஓர் புத்தக விமர்சனம் பார்த்தேன். அதில் விவாதிக்க பட்ட புத்தகம் “ஓர் அடியவரின் கதை” என்ற தலைப்பில் இந்த தேவசகம் பிள்ளை யின் வரலாறு ஆகும்.

  எப்படி இந்த மத மற்றும் தொழில் பெரும் முன் ஏற்பாட்டுடன் சர்ச்சல் செய்ய படுகின்றது என்று இப்போது எனக்கு புரிந்து.

 17. sanathanan srilanka on December 16, 2012 at 12:05 pm

  இந்த கும்பல் இலங்கை தீவின் பலபாகங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது .கிழக்கிலங்கையின் மட்டகளப்பு மாவட்டத்தில் பங்குத்தந்தையாக அதேமாவட்டத்தை சேர்ந்த ஒருவரை நியமித்தான் மூலம் காட்டிய கூத்தே பொறுக்கமுடியவில்லை .அது மட்டுமல்ல இம்மாவட்டதிலே சியோன் தேவாலயம் என்கின்றதொன்று உள்ளது .இதிலே உள்ள பஸ்டர் தொடக்கம் அனைவரும் இந்துவிலிருந்து மாறியவர்கள் ,இந்த பஸ்டர் வெளிநாடுகளிலிருந்து பணத்தை பெற்று தான்சொகுசாக வாழ்கின்றார் ,மதம் மாறியவர்களை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் பெறுகிறார் ,அது மட்டுமா இந்தியாவிலிருந்து ஒரு குரங்கு வருகிறது
  [ மோகன் c லாரேஷ் ] ,இவனுடன் காட்டும் கூத்து சகிக்கமுடியவில்லை .

 18. அம்ருதபுத்ரன் on December 18, 2012 at 4:56 am

  எப்பொழுது ஆட்டோ சங்கர் புனிதர் ஆக்கப் படுவார்? போப்புக்கே வெளிச்சம்.

 19. ஜோ. தமிழ்ச்செல்வன் on December 24, 2012 at 2:34 pm

  ”அருளாளர் தேவசகாயம் இனி புகழ் மாலை, ஜெபம் அனைத்துக்கும் தகுதி ஆனவர் ஆகிறார். அவருக்கு ஆலயங்கள் அமைக்கலாம். உலகக் கத்தோலிக்கத் திருச்சபையில் இறை உறவில் புனிதர்கள் வரிசையில் தற்போது தேவசகாயம் இணையவிருப்பது அந்த மகோன்னத தமிழருக்கான நற்பேறு!” என அறைகூவல் விடுத்தார் கோட்டாறு மறைமாவட்ட ரெமிஜியஸ். அப்ப ஆரல்வாய்மொழியில் இதுக்கு முன்பு அமைந்திருந்த கோவிலையும் வழிபாட்டையும் அசிங்கியம் என்கிறீங்களா? அக்கோவில் வருமானத்தில் சாப்பிட்ட ஆயரயும் சாமியாரையும் என்ன சொல்லுவீங்க? பீட்டர் ரெம்ஜியாஸ் கிட்ட கேட்டா, கோவில் கட்டி வழிபாடு நடத்தினாங்க? கொட்டில்பாடு கோவிலில் இருக்கிற புனிதருக்கு இன்னும் புனிதர் பட்டம் கொடுக்கல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? இவன்கிட்ட கேட்டிட்டா கும்பிடுறாங்க. தேவசகாயம் பிள்ளைக்கு முக்திபேறு பட்டம் கொடுக்கிறார்களாம். அவருக்கு புனிதர் பட்டம் ஏன் கிடைக்கவில்லை? அதற்கு அவர் தகுதியும் யோக்கியதையும் இல்லை, அப்படின்னு வச்சிக்கிடுமா? கோவில் தோறும் பணம் பிரீத்தீர்களே. எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது என்றும் எவ்வளவு ரோம் தேசத்திற்கு கொடுக்கப்பட்டது என்று கணக்கு காட்டவில்லையே ஏன்? புனிதர் பட்டம் கொடுக்க இன்னும் பணம் அதிகமாக கேட்கிறார்களா? என்னையா நடக்குது இங்க. ஆரல்வாய்மொழியில் போதுநிலையினரின் ஊர் நிர்வாகத்தை எப்படி அபகரித்து பங்குப் பேரவை நிறுவினீர்கள் என்று புத்தகம் எழுதத் தயாரா? ஊர் நிர்வாகத்தில் உள்ள ஏழு உறுப்பினர்கள் மந்திரவாதத்தில் மரித்துபோனார்களாம். செய்வினை செய்தவர்கள் யாரென்று யாருக்கேனும் விவரம் தெரியுமா? மறுமை காலத்தில் நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்களா அல்லது நரகத்தில் இருப்பீர்களா பார்க்கத்தானே போகிறோம். கொளதமன் எழுதிய கட்டுரையை படித்தீர்களா? இதுவொரு புனித புரட்டாம். பதில் கொடுக்கத் தயாரா?

 20. rama on December 24, 2012 at 4:46 pm

  PLEASE VISIT THE WEBSITE BY TYPING IN GOOGLE ” VATICAN FULL OF DEAD POPE BODIES ON DISPLAY ” WHICH CAN BE VIEWED IN YOUTUBE WHEREIN 91 POPES DEAD CORPSES ARE BURIED MOST OF THEM ARE IN GLASS COFFIN THAT CAN BE SEEN KEPT IN CRYPTS BELOW THE ST PETERS BASILLICA CHURCH , THE HEAD QUARTERS OF POPE IN VATICAN.
  ALSO ONE CAN SEE THE BODIES OF POPE EXHUMED AND REMOVED FOR BEATIFICATION TO CREDIT WITH ” SAINTHOOD’ FOR SOME SILLY MIRACLE ( JUST CURED SOME ILLNESS OF ONE LADY, THE POPE BODY WHO DIED IN 2005 WAS TAKEN OUT AS HE DID THIS ‘MIRACLE’ MOSTLY FALSE SINCE AS PER THE RULE – ONLY 5 YEARS AFTER THE DEATH OF PRIESTS AND POPE, THIS PROCESS OF BEATIFICATION CAN BE DONE. AFTER FIVE YEARS, WHO KNOWS WHAT MIRACLE. IN INDIA EVEN A SMALL SAGE DOES BIG MIRACLE.

  CHRISTIANITY IS THE RELIGION THAT DIGS THE DEAD BODIES, SINGING TO THE CORPSES
  AND WORSHIPING IT AND KISSING THE COFFIN AND KEEPING IT FOR DISPLAY TO THE PEOPLE.

  PL READ ALL THE COMMENTS BELOW THE PHOTOS OF DISPLAY – ALL THOSE COMMENTED ABUSE THIS RELIGIOUS BELIEF AND PRACTICES AFTER SEEING THE DEAD BODIES DISPLAY IN VATICAN CHURCH.

 21. sidharan on December 31, 2012 at 3:18 pm

  கிறிஸ்தவம் ஒரு மதமே அல்ல .
  அது சில நாடுகளாலும் கும்பல்களாலும் மற்ற நாடுகளையும், மக்களையும் அடிமைகளாக்க உபயோகப் படுத்தப்படும் ஒரு தந்திரமே.

  வேற்று மதத்தினரைக் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி பின் அவர்களுக்கும் அவர்களது தாய் கலாசாரத்தை சேர்ந்தவர்களுக்கும் சிண்டு முடிந்து விட்டு நாட்டை பிரிப்பதே இவர்களது கொள்கை..

  உதாரணம் கன்னியாகுமரி ,ஒரிசாவில் கந்தமால் , நாகலாந்து, திரிபுர, குஜராத்தில் டாங்க்ஸ் .

 22. sidharan on December 31, 2012 at 3:45 pm

  கிறிஸ்தவமே ஒரு காப்பரெட் நிறுவனம் போலத்தான் நடத்தப் படுகிறது.
  எப்படி ஒரு நிறுவனம் தனது கிளைகளை பல இடங்களில் நிறுவி வியாபாரத்தை பெருக்குகிறதோ அதே போல் சர்ச்சுகள் கட்டப் படுகின்றன. ஒரு கிறிஸ்தவன் கூட இல்லாத இடத்திலும் ஆளே இல்லாத இடத்திலும் சர்ச்சுகள் கட்டப் படுகின்றன,
  இதற்க்கு என்ன பொருள்? எதிர்காலத்தில் வியாபாரம் செய்ய இப்போதே சகயமாக ஒரு இடத்தை வாங்கி ஒரு கிளையை ஏற்படுத்தும் நிறுவனம் போலத்தான் .
  அதே சமயம் கிறிஸ்தவம் வெள்ளைக் கிறிஸ்தவ நாடுகளின் ஏஜெண்டாகவும் அறிவிக்கப்படாத கான்சலேட்டுகளாகவும் செயல் படுகிறது. .
  அந்தந்த நாடுகளில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொண்டு அவர்கள் மூலமாக சமூகத்தில் போராட்டங்களையும் ,சண்டைகளையும் தூண்டி விடுகிறது . நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படாதவாறு செய்கிறது .மக்கள் பிரிவுகளுக்கிடையே கலகம் விளைவித்து மோதலைத் தூண்டிவிடுகிறது.
  ஒரு இடத்தில் ஒரு கட்சி பலமாக இருந்தால் அதில் உள்ள ஒருவரை பணத்தாசை அல்லது அதிகார ஆசை காட்டி வெளியே இழுத்து கட்சியை உடைக்கின்றனர். இல்லையென்றால் புதுக் கட்சியை தொடங்க வைக்கின்றனர். இரண்டு கட்சிகள் இடையே உள்ள உறவை உடைக்கின்றனர் ( ஒரிசா பாஜக- பிஜு ஜனதா கட்சி )
  இதனால் அந்த நாட்டில் குழப்பமும், ஒரு நிலை அற்ற தன்மையும் ஏற்படுகிறது. அந்த நாட்டின் சக்தி முழுதும் வீணாகிறது . அதனால் அது முன்னேற முடியாமல் போகிறது. வெள்ளைக் கிறிஸ்தவ நாடுகளுக்கு தொடர்ந்து அடிமையாகவே இருக்கிறது. இதுதான் கிறிஸ்தவத்தின் குள்ள நரித்தனம்.
  இதை மிகப் பெரும்பாலான படித்த ஹிந்துக்கள் புரிந்து கொண்டால் நிலை மாறும்.

 23. sidharan on December 31, 2012 at 3:57 pm

  எந்த விதத்தில் இது ஹிந்து மதத்தை வளர்க்க உதவும் ?
  இதைப் படித்த பின் திமுக மற்ற ஹிந்து விரோதக் கட்சிகளின் பின்னால் ஓடுபவர்கள் கொஞ்சமாவது சித்தித்தால் , ஹிந்து ஆதரவுக் கட்சிக்கு ஆதரவு அளித்தால் ,அதன் பின்பு ஹிந்து துரோகிகளின் கொட்டம் அடங்கினால் , பின்பு ஹிந்து தர்மத்தின் பழைய மேன்மை நிலை நாட்டப் பட்டால் …………..
  ஹிந்து தர்மம் வளராவிட்டாலும் அழியாமல் காப்பற்றப் படும்!

 24. sidharan on January 3, 2013 at 9:02 pm

  கிறிஸ்தவத்தில் மனுஷனுக்கு அக்மார்க் முத்திரை குத்த எவ்வளவு வசதிதான வழி உள்ளது!
  இது ஒரு பக்கம் ;மற்றொரு பக்கம் அரசியல் துறையில் அமெரிக்க கிறிஸ்தவர்கள் (போர்ப்ஸ் பத்திரிகை ) சோனியாவை ‘உலகத்திலேயே இரண்டாவது வலிமையான தலைவி, மூன்றாவது வலிமையான தலைவி ‘என்றெல்லாம் முத்திரை குத்தி நம் நாட்டு மகளை ஏமாற்றி ‘சில்லறை’ அடிகின்றனர்
  இங்குள்ள சில்லறைக் கட்சிகளின் சில்லறைத் தலைவர்களும் இந்த சில்லரையின் பின் ஒளிந்து கொண்டு நன்றாக சில்லறை அடிக்கின்றனர் .

  இரா.ஸ்ரீதரன்

 25. jeyakumar on January 4, 2013 at 1:26 pm

  கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றவில்லை. மதம் பிடித்தவர்களின் மனம் மாற்ற வந்தவர்கள்.

 26. sidharan on January 5, 2013 at 8:41 am

  மிஷ ‘நரிகள் ‘ ஏன் பாகிஸ்தான், இரான் ,இராக் மக்களின் மனத்தை மாற்ற செல்வதில்லை ?
  ஏன் சீனாவுக்கும் கூட அவர்கள் போவதில்லையே
  அவர்கள் மனத்தையெல்லாம் மாற்ற வேண்டாமா?
  மிஷ நரிகள் ஏமாளிகளின் மனத்தை மட்டுமே மாற்றுவார்களோ ?

 27. வெள்ளை வாரணன் on January 12, 2013 at 9:06 am

  ஆபிரகாமிய மதத்தினர் ஒரே கொள்கை மற்றும் ஒரே நம்பிக்கை உடையவர்கள் என்பது போல, அவர்களின் பிரச்சார பீரங்கிகள் , பரிசுத்த ஆவிகள் நம் தமிழ் நாட்டில் பொய்ப்பிரச்சாரம் தொடர்ந்து செய்துவருகின்றனர். இஸ்லாம் ஆகட்டும் கிறித்தவம் ஆகட்டும் ஒரே மதம் என்று பலரும் நம்பவைக்கப்பட்டுள்ளனர். விக்கி யில் போய்ப்பார்த்தால், தலை சுற்றுகிறது. முக்கியமாக நாம் நினைக்கும் கத்தோலிக்க மற்றும் புரோடச்டண்டுகளுக்கு மட்டும் சுமார் ஐம்பது பக்கங்களுக்கு மேல் விவரங்கள் வருகின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன. பிரிவுகளின் எண்ணிக்கையை எண்ணினால் தலை சுற்றுகிறது. அதை இப்படியே இங்கு காப்பி செய்து பேஸ்ட் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அம்பது பக்கத்துக்கும் மேலே இருப்பதால் படிப்பது எல்லோருக்கும் சிரமம்.

  .முழு தகவல் பெறவிரும்புவோர் கீழ்க்கண்ட வலைத்தளத்துக்கு விக்கி யில் சென்று பார்க்கவும். http://en.wikipedia.org/wiki/List_of_Christian_denominations

  எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் மூத்த தெலுங்கு தமிழர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும்போது , இந்துக்களில் அனைத்து சாதியினரும் சேர்ந்து பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைத்தால் , அந்த விழாவில் தான் வந்து கலந்து கொள்ளத்தயார் சொன்னது என் நினைவுக்கு வந்தது. கிறித்தவ மற்றும் இசுலாமிய அன்பர்கள் நடத்தும் பண்டிகைகளில் கலந்து கொள்ளும்போது, இதேபோல ஷியா, சன்னி, போரா, அகமதியா, என்று அனைத்து இஸ்லாமியர்களும், கத்தோலிக், புரோடச்டன்ட், என்று விக்கியில் சொல்லியுள்ள பல ஆயிரக்கணக்கான பிரிவு கிறிஸ்தவர்களும் இணைந்து தங்கள் பண்டிகையை கொண்டாடுவதில்லையே. பின் அங்கு மட்டும் ஏனய்யா கஞ்சியும், அப்பமும் சாப்பிட செல்கிறீர்கள் ? இது தான் உங்கள் போலிப்பகுத்தறிவு நியாயமா ?

 28. Tamil on January 13, 2013 at 10:51 am

  //மிஷ ‘நரிகள் ‘ ஏன் பாகிஸ்தான், இரான் ,இராக் மக்களின் மனத்தை மாற்ற செல்வதில்லை ?
  ஏன் சீனாவுக்கும் கூட அவர்கள் போவதில்லையே
  அவர்கள் மனத்தையெல்லாம் மாற்ற வேண்டாமா?
  மிஷ நரிகள் ஏமாளிகளின் மனத்தை மட்டுமே மாற்றுவார்களோ ?//

  நல்ல கேள்விகள்.

  அவர்கள் பாகிஸ்தான், இரான் மற்றும் இராக்கு நாடுகளுக்கும் போனார்கள். பின்னர் அந்நந்த நாடுகள் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பின் இசுலாமிய நாடுகளாகின. எனவே திரும்பிவிட்டார்கள். எனினும் அவர்கள் விட்டுச்சென்ற பள்ளிகளும் சிலகிருத்துவர்களும் அங்கு இன்னும் இருக்கிறார்கள். கராய்ச்சியில் அப்பள்ளி ஒன்றில்தான் அதவானி படித்தார்.

  இதேபோல இராக்கிலும் இரானிலும் கிருத்துவர்கள் கொஞ்சம் இருக்கிறார்கள். சீனாவிலும் இப்படித்தான். அங்கு சென்றவர் சேவியர். அங்கும் இன்னும் கிருத்துவர்கள் உண்டு. சீனாவுக்கு நடுவில் உள்ள மெக்கே ஒரு சிறைய் பகுதி. முழுவதும் கத்தோலிக்க சீனர்கள். காரணம் அது போர்த்துக்கீசிய ஆதிக்கத்திலிருந்ததால். ஹாங்காங் சீனாவின் ஒருபகுதி. கிருத்துவர்கள் நிறைந்த நாடு.

  அங்கு சென்றதைப்போலத்தான் இந்தியாவுக்கும் வந்தார்கள். இந்தியாவும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது. ஆனால் இந்துக்குடியரசாகவில்லை. எனவே தொடர்ந்தார்கள்.

  ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். ஏன் ஏமாளிகள் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடையை நீங்கள் கண்டுபிடித்தால் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்.

  (ஏன் உங்கள் பெயர் இரா.ஸ்ரீதரன் என்று தமிழிலும் சிதரன் என்று ஆங்கிலத்திலும் எழுதப்படுகிறது ?)

 29. Tamil on January 13, 2013 at 10:52 am

  //மூத்த தெலுங்கு தமிழர்//

  Yaa…I have found out. He is Karunanidhi ! Correct?

 30. Tamil on January 13, 2013 at 11:03 am

  //ஹிந்து தர்மம் வளராவிட்டாலும் அழியாமல் காப்பற்றப் படும்!//

  ஹிந்து தர்மம் ஏன் வளரவேண்டும்? அப்படியே இருந்தால் என்ன தப்பு?

  மாற்றங்கள் வேண்டியது அதில் பூஜை புனஸ்காரங்கள் மற்றும் சில கோட்பாடுகள்,முக்கியமாக‌ சில குறும்பர்கள் எழுதிய சுமிருதிகள் இவைளில்தானே ஒழிய அடிப்படை தர்மத்தையே மாற்றிப்போட்டால் மதம் காணாமல் போகும். விவேகானந்தர் அதைத்தான் சொல்கிறார். அவர் வேதங்களை மாற்றச்சொல்லவில்லை. படித்தீர்களா பேட்டியை?

  படிக்கவும். தமிழ்.ஹிந்து.காமினர் விரும்பினால் மொழிபெயர்த்துப் போடுகிறேன்.

 31. Jose on January 16, 2013 at 11:18 am

  அன்பரே,
  தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ சமயத்துக்காகதான் இறந்தாரா என்பதில் பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும் இருந்தன என்பது உண்மைதான். ஆனால், ‘தேவசகாயம் பிள்ளை இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டதால் கொலை செய்யப்பட்டார்’ என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் இருப்பதால்தான் கத்தோலிக்கத் திருச்சபை அவரை அருளாளராக அறிவித்துள்ளது. தேவசகாயம் பிள்ளையை புனிதராக அறிவிப்பதால் கிறிஸ்தவ சமயத்தை பரப்ப முடியும் என்று நினைத்திருந்தால், ஆங்கிலேயர்கள் காலத்திலேயே திருச்சபை அதை செய்திருக்கும். மார்த்தாண்ட வர்மாவின் பெருமைகளைப் பற்றி இந்த கட்டுரையில் கூறியுள்ள நீங்கள், அவரது குணநலன்களைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. பதவியை காப்பாற்றி கொள்வதற்காக தனது குடும்பத்தினரையே கொலை செய்தவர் மார்த்தாண்ட வர்மா. அவர் டிலனாயுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டதும், அவருக்காக ஆலயம் கட்டிக் கொடுத்ததும் ராஜதந்திர நடவடிக்கைகள். கிறிஸ்தவ ஆலயத்துக்கு நிதி உதவி செய்ததும், இந்தியாவுக்குள் நுழைந்திருந்த கிறிஸ்தவ அரசுகளின் நன்மதிப்பை பெறுவதற்காகத்தான்.
  ஆனால், நீலகண்டன் பிள்ளையின் விவகாரம் வேறு: அவர் திருவிதாங்கூர் அரசவையில் பணியாற்றியவர். மார்த்தாண்ட வர்மா காலத்தில் உயர்ந்த சாதியில் பிறந்தவர்கள் கிறிஸ்தவ சமயத்தில் சேரக்கூடாது என்ற சட்டம் இருந்தது. அதை மீறி, நாயர் குலத்தைச் சேர்ந்த நீலகண்டன் பிள்ளை மதம் மாறியது மன்னருக்கு பிடிக்கவில்லை. மீண்டும் தாய் மதத்துக்கு திரும்புமாறு மன்னர் இட்ட கட்டளைக்கு நீலன்கண்டன் (தேவசகாயம்) பிள்ளை கீழ்ப்படியவில்லை. இதனால் தேவசகாயத்தை அவமானப்படுத்தும் வகையில் தண்டனைகள் கொடுத்தால், அவர் தனது கட்டளைக்கு பணிந்து இந்து மதத்துக்கு திரும்புவார் என்று மன்னர் நம்பினார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கொடுத்தும், தேவசகாயம் பிள்ளை மதம் மாறாததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தேவசகாயம் பிள்ளை மீதான மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் தனிப்பட்ட விரோதத்தால் நிகழ்ந்தது. இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை விடாமல், உயிர் துறக்கவும் துணிந்ததால் தேவசகாயம் பிள்ளை ‘மறைசாட்சி’ என்றும் ‘அருளாளர்’ என்றும் போற்றப்படுகிறார்.
  அது மட்டுமின்றி, தேவசகாயம் பிள்ளை மார்த்தாண்ட வர்மாவின் அரசவையில் பணியாற்றியதற்கான ஆதாரங்கள் நாகம் அய்யாவின் குற்றச்சாட்டிலேயே உள்ளன. அவர் “நீலகண்டப் பிள்ளையின் மீது அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம்” என்று யூகமாக கூறுவது, அக்காலத்திலேயே கிறிஸ்தவம் மீது சில இந்துக்கள் காட்டிய வெறுப்பை உணர்த்துகிறது. இப்பொழுதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் வலைதளத்தில் தெளிவாகிறது. பழந்தமிழருக்கு மதம் கிடையாது, அவர்கள் முன்னோர்களை மட்டுமே வழிபட்டார்கள் என்ற உண்மையே உங்களுக்கு தெரியவில்லை. உங்களுக்கு இயேசுவைப் பற்றியும், அவரது திருச்சபையைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கிறிஸ்தவத்தை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும்போது எதை வேண்டுமானாலும் கூறலாம். அதை நடுநிலையோடு அணுகிப் பாருங்கள், உண்மையை அறிந்து கொள்வீர்கள்.

 32. Rajaram on January 17, 2013 at 4:15 pm

  தேவசகாயம் பிள்ளை குறித்து சில கேள்விகள் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
  http://hayyram.blogspot.in/2013/01/blog-post_14.html

 33. sidharan on January 18, 2013 at 5:31 pm

  எப்படி இருந்தாலும் சில கிறிஸ்தவர்களைப் போல் புனைப் பெயருக்குள் ஒளிந்துகொள்ளவில்லை
  ஹிந்துக்கள் ‘ஏமாளிகள்’ என்பதம் அர்த்தம் முஸ்லீம்களைப் போல் ‘பத்வா’ கொடுப்பதில்லை என்பதுதான்

  அப்படிக் கொடுத்தால் ஹிந்துக்களை மதம் மாற்றத் துணிவார்களா?
  ஐரோப்பாவிலிருந்து சென்ற க்ரித்தவர்கள் வட அமெரிக்காவில் கோடிக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொன்றனர், ஸ்பானிஷ் கிறிஸ்தவர்கள் தென் அமெரிக்காவில் மாயா, இன்கா கலாசாரத்தை நிர்மூலமாக்கி , அவர்களின் நூல்களை எரித்து, கிறிஸ்தவத்தைப் பரப்பினர். அங்கு சர்ச் நாடுழலில் போதை மருந்து கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளது பழைய செய்தி.
  பெரிய பண பணபலத்தினால் பல ஆட்சிகளையே அங்குக் கவிழ்த்துள்ளனர்.

  ஆப்பிரிக்காவில் கேட்கவே வேண்டாம். கருப்பர்களை மிருகங்கள் போல் பிடித்துச் சென்று அமெரிக்காவில் அடிமைகளாக வைத்து வேலை வாங்கினர்.
  மேலும் அங்கு உள்ள ஏராளமான கனிம வளத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளை அடிக்கின்றனர். இந்த கொள்ளையில் முதலாளித்துவ நாடுகளின், மற்றும் பன்னாட்டு நிறுவனகளின் எடுபிடியாகவும் சர்ச் விளங்குகிறது.
  கருப்பர்களோ எழ்மையில் வாடுகின்றனர்.

 34. sidharan on January 18, 2013 at 5:49 pm

  சர்ச் பல நாடுகளில் பலவிதமான புரட்டுகளை முன்வைத்து அங்குள்ள மக்களை ஏமாற்றி மதம் மாற்றுகிறது. திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்ற அவர்களின் புரட்டு , நாம் அறியாததா?
  விட்டால் யாருக்காவது பொட்டியைக் கொடுத்து ராமரும், கிருஷ்ணரும் கிறிஸ்தவர்கள் , நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பைபிளை அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் கூட ‘ஆய்வுக் கட்டுரை’ யோ நூல்களோ எழுத வைக்கும்..
  இப்போது சபரிமலை யாத்திரை போல் இருமுடி கட்டாத குறையாக வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்ல ஏற்பாடு செய்கின்றனர்
  காவியும் உடுத்தியாகி விட்டது
  போகிற போக்கில் கோத்திரம் ,பெயர் , நட்சத்திரம் கேட்டு அர்ச்சனை செய்யப் போகிறார்கள்!
  அவ்வளவு மத வெறி!

 35. sidharan on January 20, 2013 at 8:17 am

  ‘உங்களுக்கு ஏசுவைப் பற்றியும் ‘திருச்சபை’யைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை’
  நல்ல நகைச்சுவை !

  தெரிந்துள்ளதால்தானே இதையெல்லாம் எழுத வேண்டியுள்ளது!
  இல்லையென்றால் இப்படிச் சொல்பவரைப் போல் என்றைக்கோ மாறியிருக்க மாட்டோமா?

 36. sidharan on January 26, 2013 at 7:57 pm

  அமெரிக்க சரித்திரத்தைப் பார்த்தால் சர்ச் எவ்வாறு ஆப்பிரிக்க கறுப்பர்களை அடிமைகளாக விற்கும், வாங்கும் வியாபாரத்தை ஆதரித்தது என்பதையும், அவர்களை எவ்வாறு இழிவு படுத்தியது என்பதையும் நாம் உணரலாம்
  பாப்திஸ்து , ப்ரெஸ்பைடீரியன், மேதடிஸ்டு , எபிஸ்கோபல் சர்ச்சுகளில் கருப்பர்களுக்கென்று தனி இடங்கள் (pews)ஒதுக்கப்ப்பட்டன .
  கருப்பர்கள் விலை கொடுத்தும் அந்த இருக்கைகளை வாங்க அனுமதி இல்லை .
  மேலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர்கள் வெள்ளையர்களின் இடத்தில் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள் .

 37. MEENATCHISUNDARAM on February 11, 2013 at 4:00 pm

  ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாதிக்கிட்டுதான் இருப்பாங்க .

 38. kingsleen.T on June 5, 2013 at 8:08 pm

  நண்பர்களே மதம் என்பது மனிதர்களை ஒன்றாக்க வேண்டும். எந்த ஒரு மதமும் மனிதர்களை பிரிக்க நினைத்தால் அது உண்மையான மதம் அல்ல. மதம் என்னுடய அறிவில் அது ஒரு தொழில் நுட்பம். ஆனால் கடவுள் என்பது மனிதர்களால் அறிந்த கொள்ள முடியாத ஒரு சக்தி. நாம் எல்லோரும் கண்களால் பார்க்கும் ஒரு கடவுள் நமது தாய் தந்தை அவர்கள் தனது பிள்ளைகள் சண்டை போடுவதை விரும்ப மாட்டார்கள் அதுபோல எந்த கடவுளும் தனது மக்கள் சண்டை போடுவதை விரும்ப மாட்டார்கள். மனிதர்களை கடவுளாக மதிப்பது தவறு ஆனால் நல்ல மனிதர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள் தவறான மனிதர்களும் எல்லா மதத்திலு இருக்கிறார்கள் எனவே மதம் பிடித்தவர்களாய் நாம் மதத்தின் பின்னே செல்ல வேண்டாம் மனிதர்களாய் கடவுளின் பின்னல் செல்வோம். ஒரே கடவுள் பல பெயர்களில் பல உருவத்தில் நாம் வணங்குகிறோம். எனவே மதம் என்னும் கொடிய நோயை உங்கள் மனதில் நீங்கள் விதைக்க வேண்டாம் நண்பர்களே எனக்கு ஹிந்து நண்பர்களும் இருக்கிறார்கள் கிறிஸ்துவ நண்பர்களும் இருக்கிறார்கள் முஸ்லிம் நண்பர்களும் இருக்கிறார்கள் எனவே மதம் என்பது உனக்காக மட்டுமே இன்னும் சொல்ல போனால் மதம் உன் மனைவியை போல உன்னோடு மட்டும் வைத்து கொள் உன்னோடு மட்டும் அவள் வாழவேண்டும் அவளை பற்றி நீ மற்றவர்களிடம் பேச கூடாது அது போல தான் உன்னுடைய மதமும் எனவே நல்ல மனிதர்களிடம் பழகுங்கள் மோசமான மனிதர்களிடம் பேசாதீர்கள். எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு மதம் ஒன்று நல்ல மனிதர்கள் ஒன்று கெட்ட மனிதர்கள். நல்ல மனிதர்கள் கடவுளின் மதம் கெட்ட மனிதர்கள் சாத்தானின் மதம். நீங்கள் யாரும் கடவுளுக்காக சண்டை போட வேண்டாம் ஏனெனில் கடவுளை விட நீங்கள் பலசாலிகள் அல்ல கடவுள் அரசியல் கட்சி நடத்தவில்லை நீங்கள் கடவுளுக்காக சண்டை போட்டவுடன் உங்களை சொர்க்கத்தில் அழைத்து கொள்ள. எந்த மதத்தில் இருந்தாலும் யாரை நீங்கள் கடவுளாக நினைத்தாலும் நல்ல மனிதர்களாக வாழ்ந்தால் நீங்கள் உண்மையான கடவுளை காணலாம். யாரேனும் புண்படுத்துவதாக இருந்தால் என்னை மன்னிக்கவும் நண்பர்களே. நானும் ஒரு கடவுளை நம்புகிறேன் அதைவிட மனிதர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். கடவுளை வணங்குகிறேன் மனிதர்களை மதிக்கிறேன் மதங்களை மதிக்கிறேன் மதவாதிகளை அடியோடு வெறுக்கிறேன் அது நான் பின்பற்றும் மதமாக இருந்தாலும் சரி பிற மதமாக இருந்தாலும் சரி.

 39. priyarani on May 17, 2015 at 5:10 pm

  praise the lord,
  pls forgive all from here. they don’t know what they are telling. may god bless all. have a good day

 40. ரவி சுந்தரம். on January 16, 2017 at 3:20 am

  இத்தனை ஆதாரங்களை வைத்திருக்கும் இந்த கட்டுரையாளர் அல்லது இயக்கம் இந்த சதிக் கெதிரான போரை இங்கு எழுதப்படும் கட்டுரைகளால் எதிர்க்க முடியாது. இந்த சதியை முறியடிக்க போரை அவர்கள் கூடாரத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கு அரசின் துணை இருந்தால் நன்று. இல்லையேல் தனிப்பட்ட முறையிலாவது இந்து சமய அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும். ஆதாரங்களை ஒரு மகஜராக போப்பிடமே கொண்டு செல்ல வேண்டும். இந்த கட்டு கதையின் அடிப்படையில் இந்தியாவில் இவர்கள் எந்த முன்னெடுப்பும் நடத்தாமல் இருக்க தேவைப்பட்டால் இத்தாலிய நீதி மன்றங்களிலும் இந்திய நீதி மன்றங்களிலும் வழக்கு தொடரப்பட வேண்டும். முடியுமா ? அவர்கள் ஒரு 5 நூற்றாண்டு போர் நடத்துகிறார்கள். நாம் அதற்கு தயாரா ?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*