ஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்

2004ல் ஆட்சியில் அமர்ந்த தினத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் மேல் ஊழலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.  இந்த ஆட்சியின் சிறப்பே ஊழலில் திளைத்த அரசு என்றால் மிகையாகாது.  ஆட்சிக்கு வந்ததிலிருந்து பரிசுத்த மனிதராக காட்சியளித்த திருவாளர் மன்மோகன் சிங்  நாளாக நாளாக பரிதாபத்திற்குறிய மனிதராக காட்சியளிக்கிறார்.  பொருளாதார நிபுணராக தன்னை அடையாளம் காட்டியவர் தற்போது ஊழலின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறார்.  தவறுகளை கண்டு பிடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியின் மீது பழியை போடுவதில் குறியாக இருக்கிறார்கள். அவ்வாறு பழி போடும் விவகாரம் ஹெலிகாப்டர் ஊழல்.

heli01

ஹெலிகாப்டர் ஊழல்

2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ந் தேதி இந்திய அரசு இத்தாலியைச் சேர்ந்த ஆயுத தளவாட நிறுவனமான பின்மெக்கானிக்காவின் (finmeccanica ) துணை நிறுவனம்  அகஸ்டா வெஸ்ட் லேண்ட்(augusta west land ) என்பதுடன்  முக்கிய பிரமுகர்கள் பயனம் செய்யும் வகையில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.  இதுவரை இந்த நிறுவனம் இந்திய அரசுக்கு மூன்று ஹெலிகாப்டர்களை மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள 9 ஹெலிகாப்டர்கள் வரும் 2014-ல் வழங்க உள்ளது.  இந்நிலையில் இந்த நிறுவனம் ஒப்பந்தத்தை முடித்து கொடுப்பதற்காக மொத்த தொகையில் 10 சதவீதம் கமிஷன் அதாவது ரூ362 கோடி இடைத் தரகருக்கு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்தக் குற்றச்சாட்டு ஒரு வருடங்களுக்கு முன்பே இத்தாலியில் எழுந்தது.குற்றச்சாட்டு சம்பந்தமாக இத்தாலிய அரசு விசாரணைக்கு உத்திரவிட்டது மட்டுமில்லாமல், முக்கிய குற்றவாளிகளை கைதும் செய்துள்ளது.
பாஜ.க மீது குற்றச்சாட்டு
எப்போதும் போல் ஹெலிகாப்டர் ஊழல் வெளியே வந்தவுடன், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மேற்படி ஒப்பந்தம் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் போடப்பட்டது. கமிஷன் கொடுக்கப்பட்டதும் அவர்களின் ஆட்சியில் என திசை திருப்ப முயலுகின்றார்கள்.  ஆனால் உண்மையிலேயே இந்த ஒப்பந்தம் எப்போது போடப்பட்டது என்பதை பார்த்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அவலட்சணம் நன்கு தெரியும்.  இந்த ஒப்பந்தம் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அகஸ்டா வெஸ்ட்லாந்து  நிறுவனத்திற்கு சாதகமாக விதி முறைகளை திருத்தியது என்றும் , இதன் காரணமாகவே வாங்கப்பட்டது என்றும் வெளியே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  ஆனால் உண்மையை மறைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் வி.ஐ.பிகள் பயனம் செய்யும் ஹெலிகாப்டர்களின் பறக்கும் உயரம் 18,000 அடி என்பதை 15,000 அடி என மாற்றி அமைக்கப்பட்டது என்பது உண்மை .

heli02

ஆனால் இந்த ஒப்பந்தம் முடிவானது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும்.  18,000 அடி உயரத்தில் பறக்க வேண்டும் என்ற நியதியை சிறப்பு அதிரடி படையினர் மாற்றினாலும், அகஸ்டா வெஸ்ட்லாந்து நிறுவனத்திற்கு ஏற்றமாதிரி மாற்றங்களை விமானப் படைத் தலைவர் 2006-2007-ல் மாற்றங்கள் செய்து கொடுத்தார் என வெஸ்ட்லாந்து ஏஜென்ட்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.  இதில் முன்னாள் விமானப் படை தளபதி தியாகி இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக நான் எவரையும் சந்திக்கவில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தாலும், அவரை( விமானப் படைத் தளபதி தியாகியை) ஏழு முறை சந்தித்தாக நீதி மன்றத்தில் புரோக்கர்கள் தெரிவித்துள்ளார்கள்.  இத் தருணத்தில் முன்னாள விமானப் படை தளபதி திரு.பி.வி.நாயக் தெரிவித்த கருத்து முக்கியமானதாகும். ‘ (i think all the IAF deals are very transparent . all procurement is signed  through ministry of defence…. .)    இந்தக் கருத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் 8 ஹெலிகாப்டர்கள் மட்டும் வாங்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.  இந்த முடிவை மாற்றி  3.1.2006ந் தேதி 12 ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது. எதற்காக மேலும் நான்கு ஹெலிகாப்டர்கள் வாங்க முயன்றார்கள் என்பதற்கு சரியான விளக்கம் கொடுக்கவில்லை.  27.9.2006ந் தேதி திட்ட கோரிக்கையை முன் வைத்து 6 நிறுவனங்களுக்கு கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.  இதில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தார்கள். M/S Sikorshy, USA (S-92 helicopter), M/s Agusta Westland, UK(EH-101 helicopter), M/s Rosoboronexport, Russia (Mi 172 helicopter) ஆகிய மூன்று நிறுவனங்கள்.   இதில் M/s Rosoboronexport, Russia (Mi 172 helicopter) என்ற நிறுவனம் அரசு கேட்ட தகவல்களை கொடுக்க தவறியதால் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற இரண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன.
heli03அரசின் தொழில் நுட்ப மதிப்பீடு குழுவானது (Technical Evaluation Committee) தொழில் நுட்ப அடிப்படையில் இரண்டு நிறுவனங்களின் ஹெலிகாப்டர்களையும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரின் ஆலோசனையின் படி ஆய்வு செய்யப்பட்டது.  2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் M/S Sikorshy, USA (s-92helicopter ) என்ற நிறுவனத்தின் ஹெலிப்டரும் , M/s Agusta Westland, UK(EH-101 helicopter என்ற நிறுவனத்தின் ஹெலிகாப்டர் 16.1.2008ந் தேதி ரு.மு.  விலும் சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனை நடத்திய போது சிறப்பு அதிரடி படையின் பொறுப்பாளர்களின் முன்னிலையில் நடந்தது.  2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கள ஆய்வு குழுவானது தனது அறிக்கையை ராணுவ அமைச்சகத்திடம் கொடுத்தது. இந்த அறிக்கையில் .  M/s Agusta Westland, UK(EH-101 helicopter  என்ற நிறுவனத்தின் ஹெலிகாப்டர் வாங்கலாம் என்ற பரிந்துரையையும் செய்தது . ஆகவே அரசின் பல்வேறு அமைப்புகள் சோதனை செய்த பின் வாங்க பரிந்துரை செய்த போது மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லை என்பதை மறந்து விட்டு பழி சுமத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி பொய் பேசி வருகிறது.
6.8.2008-ம் தேதி தொழில் நுட்ப மேற்பார்வை குழுவானது பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையிலும், Technical Oversight Committee என்கின்ற கட்டமைப்பு சம்பந்தமான அறிக்கையின் அடிப்படையிலும்  அகஸ்டா வெஸ்ட்லாந்து நிறுவனத்தின் ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் அரசானாது ஒப்பந்த பேச்சு வார்த்தை குழு (Contract Negotiation Committee ) அமைத்து, 19.9.2008ந் தேதி முதல் 21.1.2009ந் தேதி வரை நடந்திய பேச்சு வார்தையின் இறுதியில்  பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  18.1.2010ந் தேதி அமைச்சரவை குழு இந்தக் ஒப்பந்தத்திற்கு அனுமதி கொடுத்து, இராணுவ அமைச்சரவை 8.2.2010ந் தேதி அகஸ்டா வெஸ்ட்லாந்து நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அனுமதி அளித்தது.   ஆகவே நடைமுறைகள் அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைபெற்றது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல் ஆட்சியின் இறுதியில் கையெழுத்தாகியது என்பதையும் மறந்து விட்டு மனிஷ் திவாரி போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது குற்றச்சாட்டை சுமத்துவதின் பின்னணி என்ன என்பது தெரியவில்லை.?

heli04
ஆகவே மத்தயில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, 2ஜி அலைகற்றை ஊழல் . நிலக்கரி ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல் போல் இந்த ஊழலையும் முடி மறைக்க முயலுகிறது. 2010-ல் இந்த முறைகேடு சம்பந்தமாக பல இதழ்களில் செய்திகள் வந்தன, பாதுகாப்பு அமைச்சர் உடனே அமைச்சக உள் விசாரனைக்கு உத்திரவிட்டார்.  சில நாட்களுக்குள்ளகவே விசாரனை முடிந்தது என்றும்,எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.  இதனிடையே ஓரு ஆண்டுக்கு முன்பே அதாவது 2012-ல் இது பற்றி செய்திகள் வெளிவந்த போது குறிப்பாக 28.2.2012ந் தேதி ஹிந்து பத்திரிக்கையில் இது சம்பந்தமாக ஒரு கட்டுரை வெளிவந்த போது,அரசானாது அகஸ்டா வெஸ்டலாந்து நிறுவனம் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என நற்சான்றிதழ் கொடுத்தது ஏன் என்பது தெரியவில்லை. ஆனால் இத்தாலிய அரசு இந்தக் முறைகேடு சம்பந்தமாக சிலரை கைது செய்து விசாரனை நடத்தியவுடன்,பாதுகாப்பு துறை அமைச்சர் விசாரனைக்கு உத்திரவிடுவதும்,குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் பழைய பல்லவியை பாடுவது வெடிக்கையாக உள்ளது.  வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்தியில் இந்தியாவின் முதன்மை குடும்பத்தின் தொடர்பு இருப்பதாக வெளி வருவதும் பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும்.

Tags: , , , , , , , , , , , , , ,

 

6 மறுமொழிகள் ஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்

 1. பொன்.முத்துக்குமார் on February 19, 2013 at 3:57 am

  “பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் வி.ஐ.பிகள் பயனம் செய்யும் ஹெலிகாப்டர்களின் பறக்கும் உயரம் 18,000 அடி என்பதை 15,000 அடி என மாற்றி அமைக்கப்பட்டது என்பது உண்மை.”

  இந்த மாற்றத்தை செய்திருக்காவிட்டால் இந்த நிறுவனம் ஒப்பந்தத்திற்கான தகுதியே பெற்றிருக்க முடியாது என்று படித்தேன்.

 2. srkuppuwamy on February 19, 2013 at 6:02 am

  It is high time that somebody -preferably a person of repute and standing-takes initiative to compile a concise handbook of the scams/scandals during the period of UPA I & II and publish in all languages of this land for wider circulation and to educate the people to make make them aware of all their commissions and omissions before the parli. election which may happen well before 2014.

 3. chandramoulee on February 19, 2013 at 12:51 pm

  திரு குப்புசுவாமி அவர்களின் எண்ணத்தை வழிமொழிகிறேன் ,அவர் சொல்லுவதுபோல் எல்லா scamகளையும் தமிழ்ப்படுத்தி பொதுஜனங்களுக்கு வினியோகிக்க வேண்டும்

 4. kalaattaa kanthasamy on February 19, 2013 at 11:44 pm

  திரு முத்துகுமார் அவர்களே, உயரத்தடையை நீக்காமல் இருந்திருந்தால் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தகுதி பெற்றதாக அமைந்திருக்கும். பன்முக விண்ணப்பங்களை கோர வேண்டி, உயரத்தடை 15000ஆக மாற்றப்பட்டது. ஆக, ஒரு நன்நோக்கத்தை தன நோக்கமாக மாற்றி பணத்தை கொள்ளையடித்த பெருமை ஆளும் கட்சியையே சாரும்.

 5. Anantha Saithanyan on February 24, 2013 at 1:36 pm

  சரவணன் சார்,

  வரவர இந்த ஊழல்களெல்லாம் எதோ ராசிபலன் மாதிரி ஆகிவிட்டது தினதோறும் செய்திகளில் எதாவது ஒரு புது ஊழல்களை பற்றி செய்திகள் வருது ………இப்பெல்லாம் எல்லார்க்கும் இது மரத்து போச்சு எரியிற வீட்ல கெடச்ச வரைக்கும் லபாம்னு எல்லாரும் எதாவது செஞ்சு சீக்கிரமே பணம் சம்பாதிக்கணும்னு முடிவு பண்ணிடாணுக உழைப்பு மேல இருந்த நம்பிக்கையெல்லாம் போச்சு ………….. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

  நமஸ்காரம்.
  அனந்த சைதன்யன்.

 6. vijayasamundeeswari nagasundaram on March 23, 2013 at 2:05 pm

  முதலில் எனக்கு முழு விவரம் புரியவில்லை என்றாலும் பேரை தியாகி என்று வைத்துக் கொண்டு இந்த மாதிரி நடந்து கொண்டு இருக்கிறாரே மனிதன் என்று ஒரு உறுத்தல்.

  இத்தாலி, ஹெலிஹப்டோர் ஊழல் விவரத்தை வெளியிட மறுப்பதாகவும் கப்பல் வீரர்கள் மீனவர்களை கொன்ற வழக்குக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் தகவல்.

  இது எல்லாவற்றிற்கும் மேலாக சோனியா காந்தி அவர்கள் இத்தாலி நாட்டை சார்ந்தவர் என்பதுவும் இதில் ஒரு முடிச்சு.

  பல்வேறு நாள் இதழ்கள் மூலம் அறிந்தது

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*